Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பதினெட்டாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் அலெக்சாண்டர் போப் (ALEXANDER POPE ). அவர் நக்கல், கேலி செய்யும் விமர்சனங்களை எழுதுவதில் வல்லவர். போப்பின் காலம் (AGE OF POPE) என்று 1700ம் ஆண்டுகளை அழைக்கும் அளவுக்கு அவர் புகழ் மேலோங்கியது.
போப் (POPE) , லண்டனில் ஒரு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார்.பி ரிட்டன் கத்தோலிக்க மதத்தை ஆதரிக்காத நாடு. இதனால் போப் நினைத்த இடத்தில் வசிக்க முடியாது. எல்லா பள்ளிகளிலும் சேர முடியாது . விரும்பிய செயல்களைச் செய்யவும் இயலாது கஷ்டப்பட்டார். அவருக்கு நல்ல கல்வி அமையவில்லை. தொடர்ச்சியாகப் படிக்கவும் முடியவில்லை. nஆயினும் அவர் சொந்த முயற்சியில் லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு , இத்தாலிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.
இளம் வயதில் அவர் முதுகில் , தண்டுவடத்தைப் பாதிக்கும் ஒரு தொற்றுநோய் தாக்கியதால் அவருக்கு கூன் (HUNCH BACK) விழுந்தது. அவர் வளர்ச்சி குன்றியதோடு உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டது. ஒரு பக்கம் இப்படி ஏற்பட்ட பாதிப்பு, மறுபக்கம் அவருக்கு வேறு வகையில் உதவியது. முழு கவனத்தையும் படிப்பிலும் கவிதை எழுதுவதிலும் செலவிட்டார்.
23 வயதுக்கு முன்னரே எழுதத் துவங்கினார். ஒரு நகைச் சுவை (AN ESSAY ON CRITICISM )கவிதையையும் எழுதி வெளியிட்டார்.
அதில் அவர் எழுதிய “கொஞ்சம் படிப்பது பெரிய ஆபத்து (A LITTLE LEARNING IS A DANGEROUS THING) ஆகும்”– என்ற புகழ்பெற்ற வாக்கியம் பொன்மொழியாக அமைந்தது .இதில் தாக்குண்ட விமர்சகர்களும் எழுத்தாளர்களும் சினந்து எழுந்தனர். “டேய், கூன் முதுகுத் தவளையே!” (HUNCH BACKED TOAD) என்று அவரை ஏசினர். இதற்குப் பின்னரும் போப் சளைக்கவில்லை. அவருக்கு மிகவும் புகழ் சம்பாதித்துக் கொடுத்த ‘தி ரேப் ஆப் தி லாக்’ (THE RAPE OF THE LOCK) கவிதையை வெளியிட்டார். இது கிண்டலும் கேலியும் நக்கலும் பகடியும் நிறைந்த படைப்பு. ஒரு இளம் பெண்ணின் அழகிய முடியை ஒருவன் திருடிய பின்னர் தொடுக்கப்படும் வழக்கு பற்றியது இது. அக்கால ஆடம்பரப் பித்தர்களை ஏசும் கவிதை இது.
1715- 1726 இடைப்பட்ட ஆண்டுகளில் கிரேக்க, லத்தீன் மொழி இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஹோமரின் இலியட் (Iliad of Homer) காவியம் இதில் ஒன்றாகும். பின்னர் அங்கத, சிலேடைச் செய்யுட்களை எழுதினார். இதில் முக்கியமானது ‘தி டன்ஸியாட்’ (THE DUNCIAD). மோசமான விமர்சகர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகளைத் தாக்கும் படைப்பு இது .
போப்-பின்
பிறந்த தேதி மே 21, 1688
இறந்த தேதி – மே 30, 1744
வாழ்ந்த ஆண்டுகள் – 56
படைப்புகள்…..
1711 – AN ESSAY ON CRITICISM
1712 – THE RAPE OF THE LOCK
1728-35 – MORAL ESSAYS
1733-34- AN ESSAY ON MAN
1733- 38- IMITATIONS OF HORACE
1735 – OF THE CHARACTERS OF WOMEN
TAGS– கூன் முதுகுக் கவிஞர், அலெக்சாண்டர் போப், ALEXANDER POPE, RAPE OF THE LOCK
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சூர்தாஸர் அவதரித்த கிராமம் உரிய பெயரைப் பெறுகிறது!
ச.நாகராஜன்
16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகான் சூர்தாஸர். இரு கண்களை இழந்த போதும் இடைவிடாமல் இறைவனைப் போற்றிப் பாடினார். ஊனக் கண்ணை இழந்த அவர் ஞானக் கண்ணைப் பெற்றார். இறைவன் அருளால் ஊனக் கண்களில் ஒளி பெற்று இறை தரிசனத்தையும் பெற்றார். 1478ஆம் ஆண்டு பிறந்த சூர்தாஸர் 1581ல் இறைவனுடன் ஒன்றினார். விரஜ மொழியில் பக்தி இலக்கியத்தைப் படைத்த இவர் மதுராவில் உள்ள பராசௌலி கிராமத்தில் இறுதிக் காலத்தில் வாழ்ந்து வந்தார். முகலாயப் படையெடுப்பை ஒட்டி இந்த கிராமம் மஹமத்பூர் என்று பெயரிடப்பட்டது.
இன்றைய உத்தரபிரதேசத்தை ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதல்வரான யோகி ஆதித்ய நாத் பண்டைய பழம் பெரும் பாரம்பரியத்தை கொண்ட ஊர்களை, அவை பெயர் மாற்றப்பட்டிருப்பின், மீண்டும் புகழோங்கிய பழைய பெயரைக் கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கிறார்.
அதையொட்டி அவர் அதிகாரபூர்வமாக கெஜட் வெளியீட்டில் மஹமத்பூரை பராசௌலியாக மாற்றியுள்ளார். பராசௌலி பராசர முனிவர் வாழ்ந்த இடம் என்று கூறப்படுகிறது.
பொதுமக்களின் நீண்டநாளைய வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டு விட்டதால் அங்கு ஒரே மகிழ்ச்சி. சூர்தாஸ் ப்ராஜ் ராஸ்தாலி விகாஸ் சமிதியின் செயலாளர் ஹரி பாபு கௌசிக், “ 1982ஆம் ஆண்டிலிருந்தே இந்த பெயர் மாற்றத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் யோகி ஆட்சிக்கு வந்த பின்னரேயே இது செயல்படுத்தப்பட்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். பராசௌலி கோவர்தனில் உள்ள ஒரு கிராமம். இங்கு ஏராளமான பக்தர்கள் சூர்தாஸரின் சமாதிக்கு வந்து வணங்குகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள வீடுகளின் சுவர்களில் சூர்தாஸரின் பாடல்கள் எழுதப்பட்டிருப்பது சாதாரணமான காட்சியாகும்.
மாவட்ட மாஜிஸ்ட் ரேட் நவ்நீத் சிங் சஹால், “2019இல் பிரேரிக்கப்பட்ட இந்த வேண்டுகோள் உத்தரபிரதேச அரசினால் அங்கீகரிக்கப்பட்டு சென்ற மாதத்தில் ( மார்ச் 2021இல்) கெஜட் அறிவிப்பும் வெளியிடப்பட்டு விட்டது” என்றார்.
(செய்தியின் ஆங்கில வடிவத்தைக் கீழே காணலாம்.)
யோகி ஆதித்ய நாத் அரசுப் பொறுப்பை ஏற்றவுடன் அலஹாபாத் ப்ரயாக் ராஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதே போல ஃபஜியாபாத் அயோத்யா ஆனது; முகல்சராய் தீன் தயாள் உபாத்யாயா நகர் ஆனது. ஆக்ராவில் உள்ள முகல் மியூஸியம், சத்ரபதி சிவாஜி மஹராஜின் பெயரைக் கொண்டு விளங்குகிறது!
இதே போல ஆக்ராவையும், வரலாற்றை நன்கு ஆய்வு செய்து அதன் பெயரை அக்ராவன் என மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெயர் மாற்றம் நடக்கும் என்றே நம்பலாம்!
ஜெய் சூர்தாஸ்!
Mathura, Apr 8, 2021 (PTI) The Uttar Pradesh government has renamed Mathura’s Mahmudpur village as Parasauli, an official said on Thursday.
Confirming it, District Magistrate Navneet Singh Chahal said a gazette notification has been issued, renaming the village in Goverdhan tehsil.
The village is associated with Bhakti saint Surdas, who had spent over seven decades here, an office-bearer of Surdas Braj Ras Sthali Vikas Samiti said here, adding that they have been demanding a change in the name since 1982.
Narrating the history of the village, another office-bearer of the Samiti said the village was named Parasauli as noted sage Parashar was born here.
Lord Krishna and his divine consort Radha took part in a ‘Raslila’ for uninterrupted six months in the Chandra Sarovar area of the village, the office-bearer added.
***
tags– சூர்தாஸர், கிராமம் , parasauli, surdas village,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
It is amazing to see the continuity of our customs from the days of the Rig Veda to this day. Not many Hindu scholars noticed or not documented those customs. I don’t expect Western Buffoons to list them because Max Muller gang is not only Anti Hindu but also could not understand many of the customs said in mantras. Most of them including Max Muller never visited India nor seen a true Vedic Hindu.
Rigveda contains over 1000 hymns in which we come across over 10000 mantras . One will be amazed and flabbergasted to see the way the seers address the Gods. I have just finished reading two out of Ten Mandalas(Books) in the Rig Veda.
Let me tell you the points I have noted.
Everyone knows that this is the Oldest Religious Book in the world.
Most of you know that this is the Oldest Anthology in the world. Several thousands of years after the Rigveda, Tamils also made anthologies like this. Tamil books themselves are 2200 years old!!
Most amazing thing in the Vedas is the Mudra or Signature they use in the Rig veda. I used to wonder how come the great Tamil saint Tiru Jnana Sambandar put his name in every decad 1400 years ago and how come 900 years after him the great Carnatic music composer Sri Purandaradasa used the same style and revived it. Many of the hymns in the Veda have the names of the Seers who sang them e.g. Agastya, Grtsamada, Bhargava,Visvamitra. All the Carnatic music composers used the technique. We see Thyagaraja’s name in his Krtis and Guruguha for Muthuswami Dikshitar krtis. Dikshitar used Guru Guha , perhaps following Agastya. He also used Mana’s son and in few his own name ‘Agastya
Before Purandaradasa, Jeyadeva also placed his name in every Ashtapathi. It continued with Kabir Mirabai and the latest Tamil composers of 20th century.
Until this day this Rig Vedic custom is followed.
Xxx
Dharba Grass
All the Brahmin priests leave the house with a bundle or bunch of Dharba grass. Every Brahmin use it in their day today rituals. As a Brahmin I use it at least once a month. Most amazing thing is the way the Vedic seers used it on the banks of River Yamuna, Ganga, Sindhu and Sarasvati is followed by me in London on the banks of the River Thamasa, that is Thames.
All the Vedic Rishis or seers invoke the gods to sit on the Dharba grass spread before them. I do the same to invoke my departed forefathers every New Moon day what is called Amavasya. Apart from 12 new moon days and 12 first days of every Hindu month, Hindus are supposed to this Tarpana 70 more days. I invoke the departed souls from my father’s side and from my mother’s side in the Dharba grass on a plate. Then we do it with mantras and Sesamum seeds and the water.
So this Dharba grass business is being continued for several thousands of years.
Amazing thing about this Dharba business is, it is in 2000 year old Sangam Tamil literature too!!
xxx
Let me tell you more amazing things. In Carnatic and Hindustani songs we have Pallavi.
Refrain (Pallavi) is part of the compositions. That is the opening lines or sentences are used after each stanza. This custom or style is started by the Vedic Rishis. Bards like Homer and Sangam age Tamil poets also used refrains. We see it in Bharati’s Tamil poems too.
But the oldest refrains are found in the Rigveda. Some times all the stanzas/ mantras finish with the same word s or lines. Sometimes a particular Rishi finish all his compositions with the same stanza/ Mantra.
The wonder of wonders is like Visvamitra of Rig Veda, Tamil saint, The Boy wonder, Tiru Jnana Sambandar, also composed 11 stanzas and the finishing has the same message like the previous decads. Though we call it decads they have 10+1=11.
Jnana Sambandar, the boy saint, who changed Tamil Nadu completely within 16 years of his life, mentioned Rig Veda in many of his Pathikams / decads. No wonder he followed Visvamitra.
Look at the beauty in his name. Visvamitra means ‘Friend of the World’. And the very first hymn was sung by Madhu chandas which means Mr Honey Poetry or honey poems.
Vedas are full of positive words. They address all the Gods as Friends and address their colleagues Comrades. I don’t know whether there is any Index book that gives the information of the number of times each word is used. They use the similes ‘God please help me like a friend helping another friend’.
‘God please shower me good things like a father showers his love and affection on his children’.
Mother, father, brother, sister, friend and cow and calf are used thousands of times. I don’t find it in Sangam Tamil literature that many times. Even ten fingers are called ‘10 sisters’, because they help you like a sister.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
மர்மக் கதை மன்னன்; உலகில் முதல் துப்பறியும் கதை எழுதிய ‘போ’ (Post.9763)
உலகில் முதலில் ஆங்கிலத்தில் துப்பறியும் கதை (DETECTIVE STORY ) எழுதியவர் அமெரிக்க கதாசிரியர் எட்கர் ஆலன் போ (EDGAR ALLAN POE) என்பவராவார்.
பயங்கரக் கதைகள் மற்றும் பயங்கரக் கவிதைகள் எழுதுவதில் முன்னனியில் நின்றவர் 19-ஆம் நூற்றாண்டின் அமெரிக்க எழுத்தாளர் எட்கர் ஆலன் போ.
போ- வுக்கு மூன்று வயது ஆனபோதே தாய் தந்தையரை இழந்தார். இதனால் அவரை அமெரிக்காவில் வர்ஜினியா ரிச்மண்டிலுள்ள ஒரு பணக்கார புகையிலை வணிகர் வளர்த்து வந்தார். ஆனால் போ- வுக்கு அது குடும்ப சூழ்நிலையைத் தரவில்லை.. போ- வும் மோசமாக நடந்து கொண்டார். படிப்பில் கவனம் செலுத்தாமல் கவிதைகள் எழுதுவதில் முனைப்பு காட்டினார். இதுவும் வளர்ப்புத் தந்தைக்குப் பிடிக்கவில்லை. இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
***
பிறந்த தேதி -19-1-1809
இறந்த தேதி -7-10-1849
வாழ்ந்த ஆண்டுகள்-40
***
போ – வின் படைப்புகள்
1833 – MANUSCRIPT FOUND IN A BOTTLE
1839- THE FALL OF THE HOUSE OF USHER
1840- TALES OF THE GROTESQUE AND ARABESQUE
1841 – THE MURDERS IN THE RUE MORGUE
1843 – THE GOLD BUG
1845 THE RAVEN AND OTHER POEMS
1845 -THE PIT AND THE PENDULUM
1845 -TALES
1849 -ANNABEL LEE
***
சூதாட்டம் மூலம் பெரும் கடனாளியாகிய போ, 1827ல் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற நேரிட்டது. 1831-ம் ஆண்டில் வெஸ்ட்பாயின்ட் மிலிட்டரி அகாடமி, இவரை கல்வி நிறுவனத்திலிருந்தே வெளியே தள்ளியது.
24 வயதில் அவர் எழுதிய பாட்டிலில் கண்ட எழுத்து MANUSCRIPT FOUND IN A BOTTLE என்னும் சிறுகதை வெற்றி அடைந்து பரிசையும் பெற்றது . பின்னர் பல பத்திரிகைகளில் பணியாற்றினார். ஆயினும் எதிலும் நிலைத்து நிற்க முடியவில்லை. இவருடைய அதீத குடிப் பழக்கத்தினால் ஒவ்வொரு நிர்வாகமும் அவரை வெளியே அனுப்பியது.
இதற்கு நேர் மாறாக அவர் இயற்றிய கதைகளும் கவிதைகளும் பெரும் புகழ் ஈட்டித் தந்தன. 31 வய தல் கதைத் தொகுப்பினை வெளியிட்டார். அதற்குப் பின்னர் அவர் எழுதிய THE MURDERS IN THE RUE MORGUE
(ரூ மார்க்கில் படுகொலைகள்) என்ற புஸ்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதும் அந்த கொலைக் கதைதான் உலகின் முதல் துப்பறியும் கதை (Detective Story) என்று கருதப்படுகிறது
இப்படி மர்மக்கதை எழுதினாலும் அவருக்கு பேய், பிசாசுகள் என்றால் பயம் ;மரணம் குறித்தும் பயந்தார். இப்போது வரும் பயங்கரக் கதைகள், மர்மக் கதைகள், குற்றம் பற்றிய கதைகள் அனைத்திலும் போ -வின் ஒரு அம்சத்தையாவது காணலாம். அந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தினார். வருங்கால மர்மக் கதைகளுக்கு போ அஸ்திவாரம் இட்டார் என்றால் மிகையில்லை .
போ எழுதிய கதைகள் திரைப்படத்திலும் டெலிவிஷன் தொடர்களிலும் இடம்பெற்றன . சில கதைகள் முழு அளவிலும் மற்றவற்றில் சில அம்சங்களையும் காணலாம். ‘ஹவுஸ் ஆப் அஷர்’ என்ற கதை திரைப்படமாகியது. ‘பேய்பிடித்த அரண்மனை’ என்ற இவரது கவிதைத் தலைப்பு ஒரு திரைப்படத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது; போவின் கதை, கவிதைத் தொகுப்பு வசனங்களை மேலும் பல டெலிவிஷன் தொடர்களிலும் கையாண்டனர்
-SUBHAM-
–subham–
மர்மக் கதை மன்னன், முதல் துப்பறியும் கதை, எட்கர் ஆலன் போ
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
அற்புதமானபக்த மீராபாய் சரித்திரம்
லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 21-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.
பிருந்தாவனம், கிரிதர கோபாலன், பக்த மீராபாய் – ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த சொற்கள் இவை. பக்திக்கான இலக்கணமாக வாழ்ந்தவர் பக்த மீராபாய். அவரது சரித்திரம் அற்புதமான ஒன்று!
அந்த நாளும் வந்திடாதோ, பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ என்று இன்றும் கூட நாம் கேட்கும் அருமையான பாடலை பாரத ரத்னா திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில் கேட்கும் போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.
காற்றினிலே வரும் கீதம்! கண்கள் பனித்திட பொங்கும் கீதம்!! கல்லும் கனியும் கீதம்! பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம், பண்ணொளி பொங்கிடும் கீதம்! காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோகன கீதம், நெஞ்சினிலே, நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி நினைவழிக்கும் கீதம், சுனை வண்டுடன் சோலைக் குயிலும் மனங்குவிந்திடவும் வானவெளிதனில் தாரா கணங்கள் தயங்கி நின்றிடவும், ஆ.. என் சொல்வேன் மாயப்பிள்ளை வேய்ங்குழல் பொழி கீதம், நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான், காலமெல்லாம், காலமெல்லாம், அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம், காற்றினிலே வரும் கீதம்!
அருமையான இந்தப் பாடல் 1945ஆம் ஆண்டு வெளி வந்த பக்த மீரா படத்தில் வரும் பாடல். எம்.எஸ். சுப்புலட்சுமியின் இனிய குரல் ஒரு புறம் இருக்க, இதை அருமையாக எழுதியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.இசை அமைத்தவர் டி.எஸ்.வெங்கட்ராமன் அவர்கள்.
பக்த மீராவின் அற்புதமான உணர்வுகளை நம்மிடையேயும் எழுப்பிய அமர வரிகள் இவை. கிருஷ்ண பக்தியில் தோய்ந்து தனது பாடல்களால் நம்மையும் அதில் தோயச் செய்யும் பக்த மீராபாயின் 1500க்கும் மேற்பட்ட பாடல்கள் பக்தி இலக்கியத்தில் தனி ஒரு சிறப்பான இடத்தைப் பெறுபவையாகும்.
ஜோத்பூர் அரசை நிர்மாணித்தவர் ராவ் ஜோதா. அவரது மகன் ராவ்தூதா. அவரது இளைய மகன் தான் ரத்தன் சிங் ரதோர். அவருக்கும் வீரகுமாரிக்கும்
1498ஆம் ஆண்டு குர்கி என்ற கிராமத்தில் ராஜபுதனத்து இளவரசியான மீராபாய் பிறந்தார். மிஹிரா (மீரா) என்ற சொல்லுக்கு சூரிய சந்திர தேஜஸ் கொண்டவர் என்று பொருள். மீராபாயின் சரியான வரலாறு நமக்குக் கிடைக்காத நிலையில், மீராவின் இளமைப் பருவம் பற்றியும் அந்தப் பருவத்தில் அவருக்கு எப்படி கிருஷ்ணரிடம் ஈர்ப்பு ஏற்பட்டது என்பது பற்றியும் ஏராளமான செய்திகள் உண்டு. முதல் செய்தி அவரது இளமைப் பருவத்தில் அவருக்குக் கிடைத்த கிருஷ்ணர் பொம்மையை வைத்து அவர் விளையாடும் போது அவரது அம்மா அது தெய்வீகத் தோற்றம் என்றும் அதைக் கண்டபடி வைத்து விளையாடக் கூடாது என்றும் சொல்ல உடனே அளப்பரிய மதிப்பும் அன்பும் அவருக்கு கிருஷ்ணர் பால் ஏற்பட்டது என்று கூறுகிறது.
இன்னொரு செய்தி, அவரது இளமைப் பருவத்தில் அவரது இல்லத்திற்கு வந்த ரூப கோஸ்வாமி என்ற சாது அவருக்கு ஒரு சிறிய கிருஷ்ண விக்ரஹத்தை அளிக்க அதன் பால் பக்தியும் பிரேமையும் அவருக்கு ஏற்பட்டது என்று கூறுகிறது. குழந்தை வளர்ந்த போது ஒரு கல்யாண ஊர்வலம் வர, அதை மாடத்திலிருந்து பார்த்த மீரா குதிரை மீது அமர்ந்து வரும் மாப்பிள்ளையைப் பார்த்துப் பின்னர், எனக்கு மாப்பிள்ளை யார் என்று அவரது அம்மாவிடம் கேட்க அவரோ, உனக்கு கிருஷ்ண பகவானே தான் மணமகன் என்று கூற, மீரா தனக்கு கிருஷ்ணனையே மணாளனாக வரித்தாள் என்று ஒரு வரலாறும் உண்டு.
துரதிர்ஷ்டவசமாக மீராவின் தாயார் அவரது இளம் வயதிலேயே இறந்தார். அவரது தந்தையோ காலத்தின் நிர்பந்தத்தால் மகத்தான போர்களில் ஈடுபட வேண்டியதாயிற்று. ஆகவே இளம் ராஜகுமாரியான மீரா, தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர்க்கப்படுவதற்காக ஜெய்பூரிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்தா (Medta) என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டார். 1516ஆம் ஆண்டு அவருக்கு 18 வயது ஆனது. சிசோதயா வம்சத்தைச் சேர்ந்த சித்தோர்கர் இளவரசனுடன் அவரது திருமணம் நிச்சயிக்கப்பட்டது.. அப்போது முஸ்லீம் படையெடுப்பு ஆரம்பித்திருந்தது. ஆகவே அவர்களை வலுவாக எதிர்க்க ராஜபுதனத்தின் இரு வம்சங்கள் இணைவதற்குச் சாதகமாக இரு வமிசத்தாரும் கூடி இந்த முடிவை எடுத்தனர். வரலாற்றுச் செய்தியின் படி இந்த திருமணத்திற்கு முன்னம் மீரா தனது கிருஷ்ண பொம்மையை மணக்கும் சடங்குகளைச் செய்து கொண்டார். அவரது கணவரின் பெயர் ராணா கும்பா எனப்படும் போஜராஜன் (Bhojaraj). மீரா அரசவம்சத்தின் குல தெய்வமான துளஜ பவானியையோ சிவபிரானையோ வணங்க மறுத்தார். இதனால் புகுந்த வீட்டில் ஒரு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
ஒரு நாள் மீராவின் அறையில் அவரது பேச்சுக் குரலும் உற்சாகமான சிரிப்பலையும் எழ அவரது கணவன் சந்தேகம் மொண்டு அறையை வலிமையுடன் தள்ளித் திறந்து பார்க்க, உள்ளே மீரா தனது கிருஷ்ண விக்ரஹத்தின் முன்னர் கிரிதர கோபாலனுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து திகைத்தான். இந்தத் திருமணம் மூன்று ஆண்டுகள் தான் நிலைத்தது. தனது உண்மையான கணவன் கிருஷ்ணரே என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார். அவரது புகுந்த வீட்டார் அவரை பயத்துடன் பார்த்தனர். ஏனெனில் ராஜபுத்திர பழக்க வழக்கங்கள் எதையும் அவர் பின்பற்றவில்லை; மறுத்து விட்டார். மாறாக கோவில்களுக்குச் செல்வது, பாடுவது, ஆடுவது என்று இருந்ததோடு அந்தஸ்து, ஜாதி வேறுபாடின்றி அனைவருடனும் சர்வ சாதாரணமாகப் பழகி வந்தார். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ரவிதாஸ் என்பவரை அவர் குருவாகவும் கொண்டார். இதனால் வெறுப்புற்ற அவரது புகுந்த வீட்டார் அவரைக் கொல்ல பல முயற்சிகள் எடுத்தனர். அவரது மைத்துனரும் நாத்தனாரும் அவருக்கு எதிராகக் கிளம்பினர்.
முதல் முயற்சியாக அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை கிருஷ்ண நிவேதனம் செய்யப்பட்ட அமிர்தமாக அவர் அருந்த அவரை அந்த விஷம் ஒன்றும் செய்யவில்லை. அடுத்து ஒரு நஞ்சு கக்கும் பாம்பை மலர்க்கூடையில் வைத்து அவரிடம் தந்தனர். அவர் கூடையைத் திறந்த போது பாம்புக்கு பதிலாக மலர் மாலை ஒன்று இருந்தது. பின்னர் ஒரு முள் படுக்கையை அவருக்குத் தர அதிலும் அவர் படுத்தார். ஆனால் முட்கள் ரோஜா மலர்களாக மாறி இருந்தன. அவருக்குத் தீங்கு எதுவும் ஏற்படவில்லை. அவரது தந்தையும் இறந்து விட 1527ஆம் ஆண்டு வாக்கில் மீராபாய் தனது அரண்மனையை விட்டு வெளியேறினார். ஸ்தலம் ஸ்தலமாகச் சென்றார். அங்கெல்லாம் இறைவனின் நாமத்தை விரஜ மொழியில் இனிய பாடல்களால் பாடி நர்த்தனம் செய்து பக்திப் பரவசத்தை அனைவருக்கும் ஊட்டினார்.
Merrabai temple at ChittorgarhMerta in Rajasthan, where Meera lived.
கொலை முயற்சியிலிருந்து மீள்வதற்காக தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்த அவர் அங்கு சில காலம் வாழ்ந்தார். சதுர்புஜி (Chaterbhuji) ஆலயத்திற்குச் செல்ல ஆரம்பித்தார். அந்த ஆலயத்தில் இன்றும் மீராபாயின் பெயர் சொல்லப்படுகிறது. பின்னர் அவர் பிருந்தாவனம் சென்றார். கௌடிய வைஷ்ணவ பிரிவைச் சேர்ந்த, தனக்கு சிறுமியாக இருந்த போது கிருஷ்ண விக்ரஹத்தைத் தந்த ரூப கோஸ்வாமியை சந்திக்க அவர் முயன்றார். ரூப கோஸ்வாமியோ அவர் ஒரு பெண் என்பதால் அவரைச் சநதிக்க மறுத்தார். மீராவோ கிருஷ்ணர் ஒருவரே ஆண் மகன் என்றும் இதர அனைவரும் கோபியரே என்றும் வாதிட்டார். ரூப கோஸ்வாமி தனது தவறை உணர்ந்து அவரைச் சந்தித்தார்.
பின்னர் மீராபாய் குஜராத் மாநிலத்தில் உள்ள த்வாரகாவிற்குச் சென்றார். அங்கு ராணாசோர் (Ranachor) கோவிலில் இறைவனை தரிசித்தார். ஆனால் இடைவிடாது தொடர்ந்த இந்து-முஸ்லீம் போர்களினால் அவருக்கு ஏராளமான தொந்தரவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. 1535இல் சித்தூர் தோற்கடிக்கப்பட்டது. ஆகவே அரச குலத்தில் பிறந்த மகளிர் எரியும் நெருப்பில் கும்பல் கும்பலாக நுழைந்தனர். மீராவோ தான் கிரிதர கோபாலனுக்கு ஆட்பட்டு விட்டதால் நெருப்பில் புக வேண்டியதில்லை என்று தனது நிலையைத் தெளிவாக எடுத்துரைத்தார். இந்த நிலையில் மேவார் அரச குடும்பத்தினர் மீராபாயை மீண்டும் வருமாறு ஒரு விசேஷ தூதரை அனுப்பி வேண்டினர். அவர் மறுத்தார். தங்களின் முந்தைய செயலுக்கு வருத்தம் கொண்டிருந்த அரச குடும்பத்தினர் மீராபாய் திரும்பி வரும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர்.
நிலைமை சிக்கலானது. மீராபாய் தர்மசங்கடத்திற்கு உள்ளானார். அவருக்கு அங்கு செல்லப் பிடிக்கவில்லை. அவர் திரும்பிச் செல்லவில்லை என்றால் அனைவரின் இறப்பிற்கும் அவரே காரணம் ஆவார். இதற்குத் தீர்வு தான் என்ன? கிருஷ்ணரையே கேட்டு விடலாம் என்று அவர் கிருஷ்ண விக்ரஹத்திடம் சென்று முறையிட்டார். இதற்கு அருமையான தீர்வு ஒன்றை கிருஷ்ணர் அருளினார். ஆம், அவர் மீராவைத் தன்னுள் ஐக்கியம் செய்து கொண்டார். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒளிப்பிழம்பாக மாறிய மீரா அவர் போற்றி வந்த கிரிதர கோபாலனுடன் ஒன்றினார். அதற்கு அடையாளமாக அவர் அணிந்திருந்த புடவை மட்டும் கிருஷ்ண விக்ரஹத்தைச் சுற்றிப் படர்ந்திருந்தது! 1547ஆம் ஆண்டு வாக்கில் இது நிகழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அதாவது அப்போது மீராபாய்க்கு வயது 49. மீரா ஸ்ம்ருதி ஸன்ஸ்தான் என்ற அமைப்பு சித்தோர்கரில் இப்போது இயங்கி வருகிறது. ஆண்டு தோறும் மீராபாய் பிறந்த சரத் பூர்ணிமா அன்று மீரா மஹோத்ஸவத்தை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது.
மீராவின் கீதங்கள் இன்று வரை நாடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ராதையின் மறு அவதாரமாகவே மக்கள் மீராபாயைப் போற்றி வருகின்றனர்.
மீராவின் வாழ்க்கை நாரத பக்தி சூத்திரம் சொல்லும் பக்தி இலக்கணத்திற்கு ஒரு அழகான சான்றாகும்.
பக்தி என்பது என்ன, அது சாதகரை எங்கு கொண்டு விடும் என்பதைச் சொல்கையில் நாரதர் தத் சிந்தனம், தத் வாக்யம், தத் அவலோக்யம், தத் பரம் என்ற சூத்திரத்தை அருள்கிறார்.
முதலில் தத் சிந்தனம் -அதைப் பற்றியே சிந்திக்க வேண்டும்; பின்னர் தத் வாக்யம் – அதைப் பற்றியே பேச வேண்டும், பின்னர் தத் அவலோக்யம் – அதைச் சொல்லும் சத்சங்கத்தினருடையே மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் தத் பரம் -அதுவாகவே ஆகி விடலாம்! இதுவே நாரதர் அருளும் பக்தி சூத்ரம்!
மீரா கிரிதரனையே சிந்தித்தாள்; அவனைப் பற்றி மட்டுமே அல்லும் பகலும் பேசினாள்; அவனைப் போற்றுபவருடனேயே ஆடினாள், பாடினாள், சகவாசம் கொண்டாள், இதனால் இறுதியில் அவனாகவே ஆனாள். ஜோதியாக மாறி அவனுள்ளேயே புகுந்தாள்!
விஷத்திலிருந்து தப்பித்தது, சதிக்கு உடன்படாமல் இருந்தது உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கான அகச்சான்றுகள் அவரது கீதங்களிலிருந்தே நமக்குக் கிடைத்துள்ளன.
ஒரு இரு வரிப் பாடல் இது. தோஹா என்று இதைச் சொல்வது வழக்கம்
மீரா ஜன்மி மேட்தே, பரநாயீ சித்தோட்!
ஹரி பஜன் ப்ரதா பசே, பயி சகல சீதீ சிர மோர்!
மீரா தான் தனியாக இருப்பதை கிரிதர கோபாலனுக்கு உணர்த்தி அவனை அழைக்கும் கீதம்:
கண்ணனுக்கு எனது நமஸ்காரங்கள் மயிலிறகு கொண்ட மகுடம் சூடியவன் அவன்! நெற்றியிலே அழகுத் திலகம். காதைச் சுற்றிச் சுருண்டோடும் கேசம், மதுர உதடுகள்! அடடா!
அவன் தனது வேய்ங்குழலைக் கரத்தில் ஏந்துகிறான். வாயில் வைத்து புல்லாங்குழலை இசைக்கிறான்! அவனது ராதையை மயக்குகிறான். இதோ இந்தக் காட்சி மீராவைக் கொள்ளை கொள்கிறதே! இதோ மோஹனக் காட்சி, அவன் கோவர்த்தன கிரியைத் தூக்கிய காட்சி!
இப்படி ஏராளமானவை மீராபாய் பாடிய பாடல்கள்!
பாரத ரத்னா திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட ஏராளமான அருமையான இசைக் கலைஞர்களின் வாயிலாக இந்தப் பாடல்களை யூ டியூப் உள்ளிட்ட சாதனங்கள் மூலம் தினமும் கேட்கலாம். மெய் மறக்கலாம். கிருஷ்ண பக்தியில் திளைக்கலாம்.
மீராவின் நாமம் போற்றுவோம்; அவர் வழியில் கிருஷ்ண பக்தியில் திளைப்போம்; கிருஷ்ணரையே அடைவோமாக. நன்றி, வணக்கம்!
***
கேட்க வேண்டிய பாடல்கள் :-
கிரிதர கோபாலா (2 நிமி 47 விநாடி)
பிருந்தாவனத்தில் கண்ணன் 4 நிமிடம் 56 விநாடி
Index
பக்த மீரா :- பிறப்பு, மறைவு, ராஜபுதன இளவரசி, கிருஷ்ண பக்தி ஏற்பட காரணங்கள், திருமணம், ரூப கோஸ்வாமி சந்திப்பு, துவாரகையில் கிருஷ்ணனுடன் ஒளி மயமாக ஒன்றுதல், மீரா கீதங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஜூன் 20-ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் ராணி ஸ்ரீனிவாசன் Rani Srinivasan
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம், நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது ராணி ஸ்ரீனிவாசன் Rani Srinivasan
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். Xxxx
கங்கை நதியில் மரப்பெட்டியில் மிதந்து வந்த பெண் குழந்தை– அரசே தத்தெடுப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.
மகாபாரதத்தில் குந்தி தேவி, தனது குழந்தையை கூடையில் வைத்து நதியில் மிதக்க விட்டுவிடுவார். நதியில் மிதந்து வரும் குழந்தையை வேறு ஒரு தம்பதி வளர்ப்பார்கள். இதுபோன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியில் ஓடும் கங்கை நதியில் கரையோரம் படகில் குலுசவுத்ரி என்பவர் சென்று கொண்டிருந்தபோது குழந்தை அழும் சத்தம் கேட்டது. அப்போது அங்கு ஒரு மரப்பெட்டி ஆற்றில் மிதந்தபடி வந்தது.
உடனே அப்பகுதி மக்கள் மரப்பெட்டியை மீட்டு திறந்து பார்த்தபோது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்குழந்தை பிறந்து 20 நாட்களே இருக்கும்.
அழகாக வடிவமைக்கப்பட்ட அந்த மரப்பெட்டியில் சிவப்பு நிற துணியில் குழந்தை சுற்றப்பட்டு இருந்தது. மேலும் காளிதேவியின் புகைப்படமும் வைக்கப்பட்டு இருந்தது.
அக்குழந்தையை தானே வளர்ப்பதாக கூறி படகுக்காரர் தனது வீட்டுக்கு கொண்டு சென்று விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர்
இதற்கிடையே கங்கை நதியில் மிதந்து வந்த குழந்தையை அரசே தத்தெடுப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார். குழந்தைக்கான வளர்ப்பு செலவு, வீடு உள்பட அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
குழந்தையை கண்டெடுத்த படகுக்காரரிடமே அந்த குழந்தை வளர்க்க ஒப்படைக்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கங்கை நதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதால் குழந்தைக்கு கங்கா என்று பெயரிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, “குழந்தை தண்ணீரில் தவறி விழுந்ததாக தெரியவில்லை. மரப்பெட்டியை முழுமையாக தயார் செய்து நதியில் மிதக்க விட்டுள்ளனர். அந்த மரப்பெட்டியை புதிதாக வாங்கி இருக்கிறார்கள். குழந்தையின் உடல்நிலையை ஆஸ்பத்திரியில் பரிசோதித்து பார்த்தோம். குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்றனர்.
xxx
காஷ்மீரில் பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு பூமி பூஜை: திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு
காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில் பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 62 ஏக்கர் நிலத்தை காஷ்மீர் அரசு 40 ஆண்டு குத்தகைக்கு வழங்கி உள்ளது.
அந்த நிலத்தில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா கலந்து கொண்டார். அடிக்கல் நாட்டியதை குறிக்கும் கல்வெட்டை அவர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கவர்னர் மனோஜ் சின்கா பேசியதாவது:-
மாதா வைஷ்ணோ தேவி மண்ணில் ஏழுமலையான் கோவில் அமைய வேண்டும் என்ற காஷ்மீர் மற்றும் வடஇந்திய மக்களின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய தேவஸ்தானத்துக்கு நன்றி. இந்த நாள், காஷ்மீருக்கு வரலாற்று சிறப்புமிக்க, பெருமைக்குரிய நாள்.
கோவில் கட்டி முடித்த பிறகு, இது ஆன்மிக சுற்றுலா தலமாக உருவெடுக்கும். முக்கிய பூசாரிகள், மேற்பார்வையாளர்களை தவிர மற்றவர்கள் உள்ளூர் மக்களாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினாா்.
மத்திய மந்திரிகள் ஜிதேந்திர சிங், கிஷன் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ரூ.33 கோடியே 22 லட்சம் செலவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படுகிறது. 18 மாதங்களில் கட்டுமான பணி நிறைவடைகிறது. வேதபாடசாலை, விடுதி, திருமண மண்டபம், பக்தர்கள் தங்குமிடம், ஊழியர் குடியிருப்பு, வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் அந்த வளாகத்தில் அமைய உள்ளன.
xxxx
திருச்சி மலைக்கோட்டை உள்ளிட்ட 5 கோவில்களில் ‘ரோப்கார்’ வசதிக்கு நேரடி ஆய்வு
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஜூன் 16ம் தேதி திருச்சி வருகை தந்தார். பின்னர் அவர், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவருக்கு கோவில் குருக்கள் ராமநாதன், பிரபு ஆகியோர் தலைமையில் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகரை தரிசனம் செய்த அவர் பின்னர், தாயுமானவர் சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். தொடர்ந்து மலைக்கோட்டைக்கு சென்று மூலவர் உச்சிப்பிள்ளையாரை வழிபட்டார். இந்த ஆய்வின்போது மலைக்கோட்டை கோவிலை மேம்படுத்துவது தொடர்பாகவும், ‘ரோப்கார்’ திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. ஆய்வுக்கு பின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சோழிங்கநல்லூர் நரசிம்மர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருநீர்மலை கோவில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், திருத்தணி முருகன் கோவில் ஆகிய 5 கோவில்களில் ‘ரோப் கார்’ அமைப்பதற்கு முதல்-அமைச்சர் ஆய்வு பணி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மலைக்கோட்டையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோப்கார் வசதி ஏற்படுத்த ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.
மீதி உள்ள கோவில்களிலும் ஆய்வு முடித்த பின்னர் இதன் அறிக்கைகள் முதல்-அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்படும். இத்திட்டங்கள் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டவை. இடையில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தமிழகத்தில் சைவம், வைணவம் என 6 ஆகம பள்ளிகள் இருக்கிறது. அதை புனரமைத்து மீண்டும் செயல்படுத்த தயாராக இருக்கிறோம். இந்த பள்ளிகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வருவதை பொறுத்து ஆகம பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.
இந்து கோவில்கள் தொடர்பான குறைகளை பதிவிட தனி செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 1,600 மனுக்கள் வந்துள்ளன. அதற்கென்று தனியாக ஒரு குழு அமைத்து வாரந்தோறும் ஆணையர் தலைமையில் பரிசீலனை செய்து ஏற்கப்படும் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்து குறைகள் தீர்க்கப்படும். தமிழகத்தில் இன்னும் ஒருவாரத்திற்குள் நோய்த்தொற்று விரட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, அச்சம் விலகும் நிலையில் கோவில்கள் விரைவில் திறக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டுக்கு விடப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார் xxxx
சிவசங்கர் பாபா டில்லியில் கைது
பள்ளி மாணவியரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சிவசங்கர் பாபா டில்லியில் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ளது ‘சுஷில் ஹரி இன்டர் நேஷனல்’ பள்ளி. அதை நடத்தி வரும் சிவசங்கர் பாபா என்பவர் அங்கேயே ஆசிரமும் அமைத்துள்ளார். அவர் தான் நடத்தும் பள்ளியில் படிக்கும் மாணவியரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கேளம்பாக்கம் சாமியார் சிவசங்கர் பாபா மீது ‘போக்சோ’ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றன
இந்நிலையில், உடல்நலக்குறைவு எனக்கூறி உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டார். இதனால், டி.எஸ்.பி. குணவர்மன் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் எஸ்.ஐ. ஸ்டீபன் ஆகியோர் டேராடூன் விரைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிவசங்கர் பாபா, சிபிசிஐடி போலீசார் வருவதை அறிந்து, அங்கிருந்து தப்பியோடினார். டில்லியின் காசியாபாத்தில் பதுங்கி இருந்த அவரை டில்லி போலீசார் கைது செய்து சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இவ்வழக்கில் சென்னையைச் சேர்ந்த சுஷ்மிதா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர் .
xxx
ராமர் கோவில் கட்டுவதில் முறைகேடு ஏற்பட்டதாக புகார்:
அயோத்தியில் ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ. 18 கோடிக்கு வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அறக்கட்டளையின் கீழ் 70 ஏக்கர் நிலம் உள்ளது.
ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை ஒட்டி 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலம் உடனடியாக ரூ. 18.5 கோடிக்கு ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளது என்றும்
பத்திரப்பதிவுகளும் மற்றும் முத்திரைதாள்களும் மோசடி நடந்ததற்கு சான்று ஆவணங்களாக இருக்கின்றன என்றும் சில நிமிடங்களில் நிலத்தின் விலை மதிப்பு பல கோடி ரூபாய் அதிகரிப்பதற்கு மோசடியே காரணம் என்றும் சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ராமர் கோவில் விவகாரம் அரசியல் கட்சிகளின் வியூகங்களில் ஒன்றாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
அயோத்தியில் நிலம் மோசடி குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மீ கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. நிலம் மோசடியில் அயோத்தி மாநகர மேயர் மற்றும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
குற்றச்சாட்டை மறுத்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரும் அறக்கட்டளையின் செயலாளருமான சம்பத் ராய், அரசியல் நோக்கத்திற்காக குற்றஞ்சாட்டப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார். அயோத்தியில் வளர்ச்சி பணிகளை உத்தரப் பிரதேச அரசு துவக்கி உள்ளதால் நிலத்தின் விலை மதிப்பு உயர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். xxx
மண்டைக்காடு பகவதி கோவிலில் துணை தேவதை; தேவபிரசன்னத்தில் கண்டுபிடிப்பு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் துணை தேவதை மண்ணில் புதைந்திருப்பது தேவபிரசன்னம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டது.
பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சில நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கேரள மாநிலம் வயநாடு ஜோதிடர் ஸ்ரீநாத், ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணுநம்பூதிரி ஆகியோர் தேவபிரசன்னம் நடத்தினர்.
தீ விபத்திற்கு அம்மனே காரணம். தினப்படி நிவேதனத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். தந்திரிக்குரிய மரியாதைகள் தரப்பட வேண்டும். நாகர் சன்னதியின் கூரை அகற்றப்பட வேண்டும். அம்மனுக்கு மாதம் ஒரு நாள் மூன்று வேளை பிராமண பூஜை நடத்த வேண்டும். கொடிமரத்தை சுற்றி பலிக்கல் அமைக்க வேண்டும்.
மூலஸ்தான கூரை அமைக்கும் போது பலா மரத்தின் தடிகளை பயன்படுத்த வேண்டும். மாதம் ஒரு நாள் தேவசம்போர்டு சார்பில் தங்க தேரில் தேவியை அமர்த்தி பவனியாக வரவேண்டும். இவ்வாறு பிரசன்னம் பார்த்தவர்கள் கூறினர்.
கோவிலில் தேவியுடன் ஒரு யக்ஷி -துணை தேவதை தெரிவதாகவும், அதற்கும் சன்னதி அமைத்து பூஜை நடத்த வேண்டும் என்றும் பிரசன்னம் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவ்வாறு இல்லை என தேவசம்போர்டு அதிகாரிகள் மறுத்தனர். அந்த சிலை இருக்கும் இடத்தை பிரசன்னம் பார்த்தவர்கள் கூறினர். அங்கு மண்ணுக்குள் தோண்டியபோது சிலை இருந்தது. சிலை வெளியே எடுக்கப்பட்டது. சன்னதி அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது xxx
சிவகங்கையில் கோயில் நிலம் மீட்பு
சிவகங்கையில், மாஜி அமைச்சர் பாஸ்கரனின் பினாமி எனக்கூறப்படுபவர் ஆக்கிரமித்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 11 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
சிவகங்கையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கவுரி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம், தஞ்சாவூர் – பைபாஸ் சாலையில் உள்ள காஞ்சிராங்கால் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் கோயில் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்பதில் முக்கிய கவனம் செலுத்துவோம் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தார். இதன்படி சென்னை வடபழநி கோயிலுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டன. அடுத்து அடுத்து தமிழகத்தில் பல்வேறு கோயில்களின் சொத்துக்கள் மீட்கப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது. xxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் ராணி ஸ்ரீனிவாசன் நன்றி, வணக்கம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Compiled from popular newspapers of India
Read by SUJATHA RENGANATHAN .
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
Read by SUJATHA RENGANATHAN . Xxx
BALAJI TEMPLE IN JAMMU
With the allotment of land in this village by the Jammu administration, Tirumala Tirupati Devasthanam (TTD) has commenced the construction of Sri Venkateswara temple
The foundation laying ceremony was held last week in the presence of Jammu and Kashmir Lieutenant Governor Manoj Sinha, Union Minister of State for Home G. Kishan Reddy, TTD Chairman Y.V. Subba Reddy and Executive Officer K.S. Jawahar Reddy and others.
The sacred kalasams were brought to Yagashala by Subba Reddy and Jawahar Reddy. They performed Abhishekam to the stone kept in the construction area.
This was followed by Silanyasa Puja, Chaturveda Parayanam, Navagraha Stotra Parayanam, Maha Vishnu Puja and then the stone was consecrated in the ground and special puja was performed, the TTD said.
Later, the Jammu Lt. Governor was apprised of the plan of the upcoming temple and other amenities.
The temple is coming up on 62 acres of land at a cost of Rs 33.22 crore.
The temple will be managed by TTD. The construction is likely to be completed in 18 months. xxx
Daughter of Ganga’: Newborn girl found in wooden box floating in river
The box carrying the infant was found by a local boatman, Gullu Chaudhary. Uttar Pradesh CM Yogi Adityanath praised the boatman and said the government will make arrangements for the upbringing of the child. A new born girl was found in a wooden box floating in the river at Ghazipur with a piece of paper that proclaimed her as the “daughter of the Ganga”, according to a PTI report.
The box carrying the infant was found by a local boatman, Gullu Chaudhary, who carried the girl home. Besides the baby, the box contained a picture of goddess Durga, a horoscope and incense sticks.
After the matter was brought to the attention of the police, the child was admitted to the district hospital.
The state government will take care of the 21-day-old baby girl, found in a wooden box floating in river Ganga in Ghazipur district on June 14. The baby has been kept in a special neonatal care unit of the Government women’s hospital in Ghazipur before being sent to a shelter home.
Chief Minister Yogi Adityanath, who took note of the recovery of the baby girl on Wednesday, announced that the government will bear the cost of her nurturing and also provide benefits of government schemes, including a house, to the boatman who had rescued her. xxx
Mantralaya Vrundavana Darshan from June 22
Devotees would be allowed to have the ‘Darshan’ of Shri Raghavendra Swami Vrundavana at Mantralaya from June 22, the Mutt manager Venkatesh JOSHI SAID MANTHALAYA IS IN ANDHRA PRADESH. There are regular bus service from the major South Indian cities, like Bangalore, Mangalore, Chennai, Mysore, Hyderabad, Tirupati and Bellary. Mantralaya is located at 595 kms from Chennai and 690 kms from Mumbai. xxx
Ram temple trust slams allegations of fraud
In a statement issued around midnight on Sunday, the Ram Janma Bhumi Trust said, the current sellers had a registered agreement years ago at a price, and after the ‘bainama’ (sale deed) on March 18, they sold it to the Trust.
The statement, signed by Trust secretary Champat Rai, said, “After the Supreme Court order, a lot of people started coming to Ayodhya to purchase land, and as the UP government is also purchasing a lot of land for development works, the land price increased suddenly. The land on which discussion has started is very close to the railway station and therefore, is at a very important location. All the land purchased by the Trust is purchased at a price much lower than the market price.”
Earlier Aam Axmi Party MP Sanjay Singh had claimed earlier on Sunday that the stamp papers for the first purchase were bought at 5.11 p.m., and for the second at 5.22 p.m. and, in between, the price of the land had increased manifold.
He demanded a probe by the CBI or ED as it concerns religious beliefs of crores of people.
At another press conference in Ayodhya, Samajwadi Party leader and former MLA, Pawan Pandey, also raised similar questions, “A piece of land was bought for Rs 2 crore in which trustees were witnesses. Did the land start giving out gold that it was bought for Rs 18.5 crore, barely a few minutes later.” Trustee Anil Mishra is the witness along with Mayor Rishikesh Upadhyay, in the deal.
The Trust statement, however, said the propaganda by political people on the issue was misleading. “The concerned person is political and the matter is politically motivated,” it said.
xxxx
Sexual misconduct case: Shiva Shankar Baba arrested near Delhi
Shiva Shankar Baba was produced before the magistrate in Chengalpattu district and remanded in judicial custody for 15 days. Meanwhile the CB-CID police have requested one-week custody for inquiry. Shiva Shankar Baba who absconded after police registered a case for sexually abusing school children, was arrested by the CB-CID in Delhi on Wednesday. During the court hearing at the Mahila Court, his supporters and those against him raised slogans. “Before things escalated we removed them from the premises. Shiva Shankar Baba was brought to Chennai on Wednesday night and was kept in police custody until Thursday morning,” said a source. Three cases were registered against Shiva Shankar Baba, founder of the school, from which several alumni complained of sexual abuse. He was booked under various sections of IPC, Pocso Act and Tamil Nadu Prohibition of Harassment of Women Act by Mahabalipuram All Women police. One more person by nam Sushmita was arrested by police in connection with the case. She is said to have helpd Baba in this affair. xxxx
TN to float global tender for rope car service in 5 temples: HR and CE Minister
A series of studies have been ordered and a global tender would be called for introducing rope car service in five temples in the state, said HR&CE Minister PK Sekar Babu here on Wednesday. The move comes after the Chief Minister sought a feasibility report in this regard, the Minister said.
After inspecting the Rock Fort Uchchi Pillayar Temple here, Sekar Babu said the Chief Minister ordered for an inspection to establish rope car facility at Sholinghur, Tiruchengode, Tirumoorthimalai, Malaikkottai and Tiruttani temples. “There is a feasibility to have rope car facility in Rock Fort Uchchi Pillayar Temple and after conducting inspection in other temples, a report would be submitted to the Chief Minister after which a global tender would be called for the purpose,” the Minister said.
Stating that as many as 1,200 petitions on various issues have been received by the HR&CE Department so far, the Minister said that a special team would be formed to resolve the grievances.
He also said that the training centres would be renovated soon and aspirants from all caste would be allowed for archakars training. The Minister added that the temples would soon be opened for the devotees. xxxx
Six sets of copper plates unearthed at Srisailam temple in a rare discovery
In a major historic significance to the temple development, Srisailam authorities have unearthed 21 copper plates dating back to the 16th century or earlier, during excavations at Ghanta Matham on Sunday.
K.S. Rama Rao, the executive officer of Sri Brhamaramaba Mallikarjuna Swami Temple, said the plates were found containing Nandi Nagari script in Sanskrit and a few were also in Telugu/ Kannada languages.
Chenna Reddy, Dean of Archeology at Telugu University campus in Srisailam, who was also Director of Archeology and Museums, said, “Just found 6 sets of copper plates (18 leaves) during the course of renovation work in Ganṭa-maṭham at Śrīśailam, carried out by the temple authorities. Out of 6 copper plate sets, 4 sets are written in Sanskrit language and Nandi-Nāgarī script and other 2 plates are in Telugu language and script. All the plates can be assigned between 14th-16th century C.E.”
He further said that the latest findings add to the historic significance of the Srisailam temple as it was patronised by Reddy Kings, Kakatiyas, and Vijayanagara Empire in the medieval period. Kondaveeti Reddy Rajulu were credited with building the steps to the Pathala Ganga which added religious significance to bathing in the Krishna River near Srisailam.
Rama Rao said that the renovation activities at Ghanta Matham yielded many priceless treasures and the works were going on. The latest find of 21 copper plates would add to the historic links the temple had with the Vijayanagara Empire, he said. He said the copper plates would be sent to labs to decipher the script and preserve the same for posterity. xxx
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
ரோமானிய பழங் கவிஞர் ஹோரஸ்
மேலை உலகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பழங் கவிஞர்களில் (Latin Language Poets) சிறப்பிடம் பெறுபவர் ஹோரஸ் HORACE . இத்தாலி நாட்டின் தென் பகுதியில் உள்ள வெனுசியாவில் (VENUSIA) அவர் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு அடிமை (Slave). பொருள் கொடுத்து அடிமைத் தளை யிலிருந்து விடுபட்டார். ‘தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல்’ என்பதைக் கருத்திற்கொண்டு மகனுடைய கல்விக்காக ரோம் நகருக்குச் சென்றார். அங்கே ஹோரஸ் கல்வி கற்ற பின்னர் அந்தக் காலத்தில் புகழ் மிகு கிரேக்க அகாடமியில் கற்பதற்காக ஏதென்ஸ் ATHENS நகரத்துப் போனார்.
பிறந்த தேதி – டிசம்பர் 8, கி.மு.65
இறந்த தேதி- நவம்பர் 27, கி.மு 8
வாழ்ந்த ஆண்டுகள் – 56
படைப்புகள் – LATIN கவிதைத் தொகுப்புகள்
கி.மு ஆண்டுகள்
35- சடைர்ஸ் – முதல் புஸ்தகம் SATIRES BOOK I
30 – சடைர்ஸ் – இரண்டாம் புஸ்தகம் SATIRES BOOK II
30- எபோட்ஸ் EPODES
23 – ஓட்ஸ் (1,2,3 தொகுப்புகள்) ODES- BOOK I, II, III
20 – எபிஸ்டில்ஸ் /கடிதங்கள் – முதல் புஸ்தகம் EPISTLES BOOK I
14- எபிஸ்டில்ஸ் /கடிதங்கள் – இரண்டாம் புஸ்தகம் EPISTLES BOOK II
14- ஓட்ஸ் (நாலாவது தொகுப்பு) ODES BOOK IV
8- ஆர்ட்ஸ் பொயட்டிகா / கவிதைக் கலை ARTS POETICA / ART OF POETRY
கி.மு 44ல் ஜூலியஸ் சீஸர் படுகொலை நடந்த நாளில் ஹோரஸ் , அகாடமியில் படித்துக் கொண்டு இருந்தார். ரோமானிய சாம்ராஜ்யம் அதிபயங்கர குழப்பத்தில் வீழ்ந்தது. ஸீஸர் படுகொலையில் ஈடுபட்டவர் ப்ரூட்டஸ் (Brutus) . அவர் அமைத்த படையில் ஹோரஸ் சேர்ந்தார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பரூட்டஸை அகஸ்டஸ் சீசர் மற்றும் மார்க் ஆன்டனி தோற்கடித்தனர்.
ஹோரசுக்கு பெருத்த ஏமாற்றம்; சொல்லொணா வருத்தம். அவரது தந்தையும் இறந்த நிலையில் புதிய ஆட்சியாளர்கள் ஹோரசின் சொத்துக்களை அபகரித்தனர்.. ஒரு சின்ன வேலையில் சேர்ந்த ஹோரஸ் பணம் வேண்டும் என்பதற்காக, கிடைத்த நேரத்தில் கவிதைகளை எழுதத் தொடங்கினார். அவருடைய கவிதைகளின் அழகைக் கண்டு வியந்த அக்காலத்தின் மிகப்பெரிய கவிஞர் வர்ஜில் (Virgil) , ஹோரஸை மெசினஸ் MAECENAS என்ற பணக்கார வள்ளலிடம் அறிமுகப்படுத்தினார் அவர் கம்பனை சடையப்ப வள்ளல் ஆதரித்தது போல ஹோரஸை ஆதரித்தார்.
முப்பதே வயதில் ஹோரஸ் , சடைர்ஸ் SATIRES என்ற அங்கதச் செய்யுளை இயற்றினார். ஐந்தே ஆண்டுகளில் அத்தொகுப்பின் இரண்டாபவது தொ குதியை வெளியிட்டார் . அத்தோடு எபோட்ஸ்(Epodes) என்ற கவிதைத் தொகுப்பும் வெளியானது ;வள்ளல் மெசினஸ் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இத்தாலியிலுள்ள அவரது பண்ணை ஒன்றை ஹோரசுக்கு அளித்தார். இது ரோம் நகரிலிருந்து தொலைவில் இருந்ததால் ஹோரசசுக்கு நிம்மதி கிடைக்கும் என்று வள்ளல் நினைத்தார். அ ந்த அமைதியான சூழ்நிலையில் ஹோரசும் அருமையான இசைக் கவிதைகளை (ஓட்ஸ்) இயற்றினார் ODES / ஓட்ஸ் என்னும் பாணியில் 88 கவிதைகளின் தொகுப்பு அது
ODES/ ஓட்ஸ் என்பன ஏதேனும் ஒரு பொருளையோ பிராணி, பறவை ஆகியவற்றையோ நோக்கிப் பாடும் “கூவி அழைக்கும் மகிழ்ச்சிப் பாட்டு” ஆகும்.
வர்ஜில் இறந்த பின்னர் அவருக்கு அடுத்த புகழ் பெற்ற லத்தின் மொழிப் (Latin Poet) புலவர் இவர்தான்.