Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
FRANCESCO PETRARCH
(1304 – 1374)
காதல் கவிதைகள் எழுதி புகழ்பெற்றவர் இதாலிய கவிஞர் பெட்ரார்க். லாராவுக்கு (POEMS TO LAURA) இவர் எழுதிய கவிதை மிகவும் புகழ்பெற்றவை. பழைய பாணியையும் மறுமலர்ச்சி (RENAISAANCE) காலத்தில் தோன்றிய புதிய பாணியையும் கலந்து எழுதியது இவரது தனிச்சிறப்பு.
இதாலியின் TUSCANY வட்டாரத்தில் AREZZO என்னுமிடத்தில் இவர் பிறந்தார். இவருடைய குடும்பம் பிளாரன்ஸ் நகரில் வாழ்ந்தாலும் மாற்றுக்கட்சியை ஆதரித்த காரணத்தால் வெளியேற்றப்பட்டனர். பெட்ரார்க்கின் தந்தையும் தாத்தாவும் வழக்குரைஞர்கள். அதே வழியில் இவரையும் சட்டம் பயில்வதற்காக மான்டிபெல்லியர் (MONTEPELLER UNIVERSITY) பல்கலைகழத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் அவருக்கு சட்டம் பிடிக்கவில்லை. படிப்பை நிறுத்திவிட்டு சர்ச்சில் சேர்ந்தார் (MINOR ORDERS IN THE CHURCH)
இது நடந்த சிறிது காலத்தில் அவர் லாரா என்னும் பெண்ணைச் சந்தித்தார். அவரது வாழ்க்கையையே இது மாற்றிவிட்டது. ஆனால் LAURA DE NOVES ஏற்கனவே திருமணமானவர். இருந்தபோதிலும் அவரை எண்ணி பெட்ரார்க் பல கவிதைகளை எழுதினார். இந்தக் காதல் கவிதைகளை ஏராளமானோர் ரசித்துப் படித்தனர்.
அவர் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஹங்கேரி ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.
32 வயதில் அவருக்கு கவலை அதிகமாகி மனநலம் குன்றினார். மாற்றான் மனைவியின் மீது தான் காதல் கொண்டு கவிதை எழுதியது தவறு என்று மனசாட்சி உறுத்தியது. இந்த மனப்போராட்டம் அவரை மனநோயில் (NERVOUS BREAKDOWN) ஆழ்த்தியது.
1348ஆம் ஆண்டில் பிளேக் (Plague) என்னும் கொள்ளைநோய் இதாலியில் பரவியது. லாராவும் அந்த நோய்க்கு பலியானார். பெட்ரார்க் துயரத்தில் மூழ்கினார். முறை தவறிய காதலுக்கு கடவுள் வழங்கிய தண்டனைதான் இது என்று கருதிய அவர் ரோமாபுரிக்கு (ROME) யாத்திரை சென்றார்.
ரோமிலிருந்து பிளாரன்ஸ் சென்ற அவர் இதாலிய பெருங்கவிஞர் பொக்காஸியோவை சந்தித்தார். அவர்கள் வாழ்நாள் முழுதும் இணைபிரியா நண்பர்களாயினர்.
பெட்ரார்க்கிற்கு GIOVANNIA VISCONTI தூதர் பதவி கொடுத்தனர்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வைணவ அமுதத் துளிகள்
கூரத்தாழ்வானின் பண்பு நலம்!
ச.நாகராஜன்
வைணவ ஆசார்யர்களில் உயர்ந்த இடத்தைப் பெறுபவர் கூரத்தாழ்வான். அவரைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் அவரது உயர்ந்த பண்பைப் பறை சாற்றும்.
இறைவனிடமிருந்து விலகி நிற்கும் மனிதர்கள் மீது கூட பெரும் மகான்களுக்கு எல்லையற்ற கருணை உண்டு. ஒரு நாள் கூரத்தாழ்வான் தன் வழியில் சென்று கொண்டிருந்த போது ஒரு பாம்பு தவளை ஒன்றைப் பிடித்து விழுங்குவதைப் பார்த்தார். தவளை ஓலக் குரலில் கத்திக் கொண்டிருந்தது.
இந்தத் தவளையானது யாருக்குத் தனது ஓலக் குரலை அனுப்பிக் கொண்டிருக்கிறது? யார் வந்து இதன் மரண ஓலத்தைக் கேட்டு காப்பாற்றப் போகிறார்? இவ்வாறு எண்ணிப் பெருமூச்சு விட்ட அவர் மயங்கி விழுந்தார்.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் நான்காம் பத்தில் ஒன்பதாம் பகுதியில் முதல் பாசுரத்தில் நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க எண்ணாரத்ன துயர் விளைக்கும் இவையென்ன உலகியற்கை என்று கூறுகிறார்.
இந்தப் பத்துப் பாடல்களில் நம்மாழ்வார் உலக இயற்கையில் வெறுப்புற்று திருவடி சேர்க்குமாறு எம்பெருமானை வேண்டுகிறார்.
இதை விளக்கும் பகுதியில் கூரத்தாழ்வானைப் பற்றிய இந்த சம்பவம் குறிப்பிடப்படுகிறது.
பகவத் விஷயம் தொகுதி 4 பக்கம் 1960-61இல் இதைக் காணலாம்.
அடுத்து இன்னொரு சம்பவம். கருணையே உருக் கொண்டவர் கூரத்தாழ்வான் என்பதை எடுத்துக் காட்டுகிறது இது.
ஸ்ரீரங்கத்தில் காவேரி ஆற்றில் ஒரு பெண்மணி தனது பானைகளில் நீரை நிரப்பிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்தப் பானைகளை அவள் தலையில் தூக்கி வைத்து உதவி செய்ய அங்கு யாரும் இல்லை. இதைப் பார்த்த கூரத்தாழ்வான் உடனே அந்தப் பானைகளைத் தூக்கி அந்தப் பெண்மணியின் தலையில் வைத்தார். தான் உயர்ந்த ஜாதி, அந்தப் பெண்மணி தன்னை விட கீழ் ஜாதி என்றெல்லாம் அவர் பாகுபாடு பார்க்கவில்லை. உதவி செய்வதே தன் கடமை என கருணையின் உருவமாக அவர் வாழ்ந்து வந்ததை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
இதுவும் ‘நண்ணாதார்’ எனத் தொடங்கும் பாசுர விளக்கமாகவே அமைகிறது. (திருவாய்மொழி 4-9-1)
அவர் வாழ்வில் நடந்த இன்னொரு சம்பவம் இது.
கூரத்தாழ்வானுக்கு பராசர பட்டர், வேத வியாஸ பட்டர் என இரு மகன்கள் உண்டு. ஒரு நாள் அவரது மனைவி ஆண்டாள் மகன்களுக்கு திருமண வயது வந்தும் கூட அவர் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லையே என வருந்தி தன் வருத்தத்தை அவரிடம் கூறினார்.
“அப்படியா? நாளைக்கே நான் கோவிலுக்குச் செல்லும் போது பிள்ளைகளை அங்கு கூட்டிக் கொண்டு வா” என்றார் கூரத்தாழ்வான். மனைவி ஆண்டாள் அப்படியே செய்தார். அரங்கன் முன்னால் நின்ற கூரத்தாழ்வான், “ இதோ, பிள்ளைகள் கல்யாணம் ஆக வேண்டிய வயதுக்கு வந்து விட்டனர் என்கின்றனர்.” என்றார்.
உடனே பெருமாள், “ இந்த விஷ்யம் என்னுடைய சொந்த விஷயம். பையன்களுக்குச் சரியான துணை கிடைக்கும் படி நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
மறுநாளே நல்லகுடியிலிருந்து பிறந்த ஒரு பெண்ணின் தந்தையார் வந்து மணம் பேசித் தன் பெண்ணை பட்டருக்குத் தாரை வார்த்துத் தந்தார்.
இந்த சம்பவத்தை பகவத் விஷயம் ஐந்தாம் தொகுதியில் நிறைந்தவன் என்ற பாசுர விளக்கத்தில் காணலாம். திருவாய்மொழி 5-5-7இல் ‘நிறைந்தவன் பழி நம் குடிக்கு இவன் என்று அன்னை காண கொடான்’ என்று வரும் பாடலைக் காண்க.
பகவத் விஷயம் அரிய விஷயங்களை எளிய நடையில் சுவைபடச் சொல்லும் ஒரு நூல்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதத்தின் ஆயிரத்துக்கும் மேலான கவிதைகளில் ஒன்றை மட்டுமே நாம் படித்து ரசித்து, சுவைத்து வருகிறோம். அந்தக் கவிதை 1-112 (RV. 1-112) அதாவது முதல் மண்டலத்தில் 112 ஆவது பாடல்/ துதி. குத்ச ஆங்கீரசன் என்ற ரிஷி இந்தப் பாடலைக் ‘கண்டுபிடித்தார்’. அதாவது ரேடியோ அலைகள் போல அவர் காதில் விழுந்தது. அதில் அவர் பல அற்புத சம்பவங்களையும் வரலாற்றுத் துணுக்குகளையும் நம் முன் வைக்கிறார். ரிக் வேதத்தை மொழிபெயர்த்த அல்லது விமர்சித்த 20க்கும் மேற்பட்ட கோமாளிகளுக்கு அர்த்தம் புரியாமல் பேந்தப் பேந்த முழிக்கின்றனர். கிரிப்பித் (Ralph T H Griffith) போன்றோர் எனக்குப் புரியவில்லை என்கின்றனர். மாக்ஸ்முல்லர் (Max Muller gang) கும்பலைச் சேர்ந்தோர் ஆரிய- திராவிட இன வெறியைத் தூண்டிவிடுகின்றனர் . இப்படி மாக்ஸ் முல்லர் தூபம் போட்டதால் அதே நாட்டைச் சேர்ந்த அடால்ப் ஹிட்லர் (Adolph Hitler) நானும் ஆரியனே , ஆரியரல்லாத அத்தனை போரையும் ஒழிப்பேன், ஒடுக்குவேன் என்று புறப்பட்டு மெயின் கெம்ப் (Mein Kampf) என்ற தனது சுயசரிதையில் அப்பட்டமாக எழுதினான். அப்படிப்பட்ட கொடுங்கோலனை உருவாக்கியது மாக்ஸ் முல்லர் கும்பல்.
****
இந்தத் துதியில் உள்ள 25 மந்திரங்களில் மீதமுள்ளதைக் காண்போம்
மந்திரம் 16 (1-112-16)
சாயு, அத்ரி, மநு , ஸ்யூம ரச்மி என்ற நால்வர் பெயர்கள் இந்த மந்திரத்தில் வருகிறது.
மநுவை ராஜ ரிஷி என்றும் அவருக்கு தனியங்களைப் பயிரிடும் முறையை அஸ்வினி தேவர்கள் எனப்படும் இரட்டையர் கற்பித்ததாகவும் சாயனர் சொல்கிறார்.
ஸ்யூம ரஸ்மியின் பகைவர்கள் மீது அஸ்வினியர் அம்பு மழை பெய்து அவரைக் காப்பாற்றியதாக மந்திரம் செப்புகிறது. இவரையும் ராஜா ரிஷி என்கிறார் சாயனர். அவர் பாடிய/ ‘கேட்ட’ கவிதையும் ரிக் வேதத்தில் உளது. சாயு என்பவரின் வறட்டுப் பசுவை அஸ்வினி தேவர்கள் பால் சுரக்க வைத்ததாக இதே கவிதையின் மூன்றாவது மந்திர விளக்கத்தில் கண்டோம்.
எனது கருத்து
மநு என்பவருக்கு அஸ்வினியர் விவசாய, சாகுபடி முறைகளைக் கற்பித்ததாக சாயனர் உரைக்கிறார். வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று சொல்லி 25 வெள்ளைக்கார பயல்கள் ஜோக் அடித்திருக்கிறான். நூற்றுக் கணக்கான விவசாய குறிப்புகள் வேதத்தில் உளது.
பல்வேறு மனுக்களின் பெயர்கள் ரிக் வேதத்தின் பத்து புஸ்தகங்களில்/மண்டலங்களில் காணக்கிடக்கிறது. மனு ஸ்ம்ருதிக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை எவரும் பிரஸ்தாபிப்பது இல்லை. உண்மையில் முதல் மநு ஸ்ம்ருதி ரிக் வேத காலத்தைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும். ஏனெனில் அதில் பெருகி ஓடும் சரஸ்வதி நதி பற்றிய குறிப்பு வருகிறது. மனுதான் உலகை பெரு வெள்ளம் (Deluge) , அதாவது பிரளயம் ஏற்பட்டபோது காப்பாற்றினார் என்பதும் பின்னொரு பாடலில் வருகிறது. ஆக இது உலகிலுள்ள எல்லா இலக்கியங்களிலும் வருவதால், இது முக்கியக் குறிப்பு ஆகும். இவர்களில் இருவரை ராஜ ரிஷிகள் என்று உரைகாரர்கள் செப்புவதால் அக்கால அரசர்கள் என்பதும் தெளிவாகிறது. மனுவின் பெயர் சத்ய விரதன், அவன் திராவிட தேச அரசன் என்று பிற்கால புராணங்களில் (மச்ச புராணம்) வருவதால் , தமிழர்களுக்கும் இக்குறிப்பு உதவும். “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி” என்பதை உண்மையென நிரூபிக்க உதவலாம்.
அத்ரி மகரிஷி பற்றி முன்னரே ஒரு மந்திரத்தில் கண்டுவிட்டோம். பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்தில் மனித குல மூதாதையர்களான ஏழு ரிஷிகளின் பெயர்களையும் சொல்லுவார்கள் . அதில் முதல் பெயர் அத்ரி. அந்த ஏழு பேரும் அதே வரிசையில் 2700 ஆண்டுகளுக்கு முன் உருவான உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தில் (அஷ்டாத்யாயீ) இருக்கும் அதிசயத்தை முன் ஒரு கட்டுரையில் தொட்டுக் காட்டினேன்.
***
மந்திரம் 17
இதில் இரண்டு முக்கியச் செய்திகள் வருகின்றன .
பதர்வான், சர்யாத என்ற இரண்டு பெயர்களில் வைவஸ்வத மனுவின் புதல்வன் சர்யாதா என்று உரைகாரர் செப்புவர். பிராமணர்கள் செய்யும் பூஜைகளில் சடங்குகளில் பிரம்மாண்டமான காலக் கணக்குகளைச் சொல்லி, உலகின் இந்தப் பகுதியில் இந்தச் சடங்கைச் செய்கிறேன் என்ற google map கூகுள் மேப்/ போன்ற பூகோள விஷயங்களையும் சொல்லுவார்கள். அதன்படி நாம் இப்போது பூமியில் இருப்பது வைவஸ்வத மனுவின் காலமாகும்.
இந்த மந்திரத்தில் மிகவும் சுவையான பெயர் பதர்வான் ; சாயனர் ஒன்று சொல்ல, நமது கலாசாரமே தெரியாத வெள்ளைக்கார பயல்கள் உளறு , உளறு என்று உளறிக் கொட்டியதை இம்மந்திரத்தின் விளக்க உரையில் காணலாம் .
பதர்வான் என்பது ஒரு ராஜ ரிஷியின் பெயர் என்கிறார் சாயனர்.
“இல்லை, இல்லை இது ஒரு பறக்கும் குதிரை என்கிறார் பென்பீ (Benfie)” . “இல்லை, இல்லை , இது எரியும் கோட்டையை அஸ்வினி தேவர்கள் ஐதரன் அல்லது மேகப் பொழிவு மூலம் காப்பாற்றிய சொல்” என்கிறார் லுட்விக் (Ludwig) . 4 வேதங்களிலும் இது போல வெள்ளைக்காரப் பயல்கள் ‘ஜோக்’ Joke அடித்த வண்ணம் இருக்கின்றனர். படிப்பதற்கே ஒரே தமாஷ்தான்!!!
இங்கு ஒரு முக்கிய இலக்கண விஷயம் வருகிறது. ‘ந’ இல்லை என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து ‘நோ’ No என்ற ஆங்கிலச் சொல் ‘நைன், ந’ என்ற வட இந்திய மொழிச் சொற்கள் வந்ததை நாம் அறிவோம். ஆனால் வேதத்தில் ‘இல்லை’ என்ற பொருளுடன் ‘போல’ என்ற அர்த்தமும் உண்டாம். சாயனர் இங்கே ‘போல’ என்ற உவமை உருபாக ‘ந’ வை மொழி பெயர்த்து இருக்கிறார். தமிழிலும் இவ்வாறு இரு பொருள் உண்டு. ‘வாரா’ என்றால் சங்க காலத்தில் ‘வந்த’ என்று பொருள். தற்காலத்தில் ‘வராத’ என்ற பொருள். இது போல ‘நந்தா’ என்ற சொல்லுக்கும் இரு வேறு பொருள் உண்டு. 1935-ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகரா தியின் 2040 பக்கங்களையும் புரட்டினால் ஒரு தமிழ்ச் சொல்லுக்கு இவ்வளவு அர்த்தமா என்று வியப்போம். நேற்று வந்த தமிழுக்கே இவ்வளவு பொருள் என்றால் அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த வேதங்களுக்கு எவ்வளவு பொருள் இருக்கும்? யாரே வேதத்துக்கு பொருள் சொல்ல முடியும்?
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
JOHN MILTON
(1608 – 1674)
ஆங்கிலக் கவிஞர்களில் புகழ் பெற்றவர் ஜான் மில்டன். இவர் கவிஞர் மட்டுமல்ல – நாடக ஆசிரியர் – கட்டுரையாளரும் கூட. இவருடைய பெரிய படைப்பு சுவர்க்க நஷ்டம் (PARADSE LOST)
இளம் வயதிலேயே இவருக்கு ஒரு ஆர்வம். ஆங்கிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய கவிதை எழுத வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார். இருந்தபோதிலும் இந்தப் பணியில் ஈடுபட முடியாதவாறு எத்தனையோ கவர்ச்சிகள் அவரை திசைமாற்றின.
20 ஆண்டுக்காலம் அரசியல் சூழலில் சிக்கிக் கொண்டார். ஆங்கில நாட்டின் உள்நாட்டுப்போரில் (CIVIL WAR) இவர் வட்டத் தலைவர்களை ஆதரித்து பல துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். பின்னர் ஆலிவ் கிராம்வெல் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராகச் சேர்ந்தார்.
மில்டனுக்கு 35 வயதில் திருமணம் நடந்தது. அப்போது மணமகளுக்கு வயது 17. மில்டனுடன் அவரால் வாழமுடியவில்லை. மில்டன் ஒரு சிடுமூஞ்சி என்று அவர் எண்ணினார். ஒரே மாதத்தில் கணவனை விட்டு ஓடிவிட்டார். அந்தக் காலத்தில் விவாகரத்து – மணமுறிவு (DIVORCE) என்பது அரிது. இருந்தும் மில்டன் மணமுறிவை நாடினார். மணமுறிவை ஆதரித்து ஒரு புத்தகமும் எழுதினார். இது அவர்டைய புகழைக் குறைத்தது. ஆனால் அவருடைய மனைவி அவரிடமே திரும்பி வந்தார். 1652இல் அவருக்கு 28 வயதானபோது இறந்தார். நான்கு ஆண்டுகளுக்குப்பின் மில்டன் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். அந்த மனைவியும் 1658இல் இறந்தார்.
RESTORATION காலத்தில் அவர் தலைமறைவாக வாழநேரிட்டது. அவருடைய நண்பரான மார்வெல் (MARVELL) தலையிட்டு அவருக்கு மன்னிப்பு வாங்கித் தந்தார். அப்போது அவர் கண்பார்வை மங்கியது.
மில்டன் அதிகமாகப் படிக்கக்கூடியவர். வாழ்நாள் முழுவதிலும் இரவுநேரத்தில் கண்விழித்துப் படித்தார். (மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலம் அது) இது பிற்காலத்தில் அவரது கண்பார்வையையே பறித்துவிட்டது.
கிட்டத்தட்ட 50 வயதானபோதுதான் அவர் PARADISE LOST எழுதத் துவங்கினார். அதைத் தொடர்ந்து சுவர்க்க மீட்சி PARADISE REGAINED என்ற கவிதையையும் SAMSON AGONISTES என்ற நாடகத்தையும் எழுதினார். அவர் இறக்கும்போது அவரது கண்பார்வை முழுதும் இழந்த நிலையில் இருந்தார்.
ஜான் மில்டன் லண்டனிலுள்ள செயின்ட் பால் பள்ளியில் (ST PAUL’S SCHOOL) பயின்றார். 17ஆவது வயதில் கேம்பிரிட்ஜில் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு THE LADY சீமாட்டி என்று பட்டப்பெயர். இளமையில் அவ்வளவு அழகாகவும் மென்மையாகவும் இருந்தார்!
3 Apr 2020 — இதோ அந்தப் பாடல் – tamilandvedas.com, swamiindology.blogspot.com. “குக்கூ … இதை ஆங்கிலக் கவிஞன் ஜான்மில்டன் இப்படிப் பாடுகிறான்–. The scythe of …
xxxxxxxxxxxxxxxxxxxxxx
tags- ஜான் மில்டன் , சுவர்க்க இழப்பு, சுவர்க்க மீட்சி
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
என்ன பேசுவது என்று திகைத்த ஸ்வாமி விவேகானந்தர்!
ச.நாகராஜன்
1
இன்று நாம் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றிய பல அரிய தகவல்களைப் பெறப் பெரிதும் காரணமாக இருப்பவர் ம (M) என்று அழைக்கப்படும் மஹேந்திர நாத் குப்தா தான்!
அவர் ஒருமுறை பரமஹம்ஸரைப் பற்றி இப்படிக் கூறினார் தன் சிஷ்யரான ஸ்வாமி நித்யாத்மநந்தாவிடம்:
தாகூர் (ராமகிருஷ்ண பரமஹம்ஸரை ‘ம’ இப்படித் தான் குறிப்பிடுவார்) உயிருடன் இருந்த சமயம் நடந்த நிகழ்ச்சி இது. ஒரு நாள் நான் பதூர் பகன் (Badur Bagan) செல்லும் வழியில், வித்யாசாகர் மஹாஷய் வீட்டின் முன்னால் மயங்கி விழுந்து விட்டேன். எனது நிலையைக் கண்ட அக்கம்பக்கத்தார் விரைந்து வந்து என்னைத் தூக்கி ஒரு வண்டியில் வைத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். இதைக் கேள்விப்பட்ட பரமஹம்ஸர் எனக்கு இந்த மருத்துவ பரிந்துரையை (Prescription) அருளினார்: “சில நாட்கள் நன்றாக உறங்கு. எனக்கு அருகில் வராதே. என்னிடம் வந்து எனது சொற்களைக் கேட்டால் இன்னும் உன் நிலையை அது மோசமாக்கி விடும். எவ்வளவு பாலை அருந்த முடியுமோ, எவ்வளவு ஜீரணமாகுமோ அந்த அளவுக்கு அருந்து.”
பரமஹம்ஸரின் சொற்கள் வலிமை வாய்ந்தவை என்பதை விளக்க அவர் தன் சிஷ்யரிடம் கூறிய வார்த்தைகள் இவை.
2
ஸ்வாமி விவேகானந்தருக்கும் பரமஹம்ஸரின் வார்த்தைகள் எவ்வளவு வலிமை வாய்ந்தவை என்பது தெரியும். சில சமயம் அடுத்து என்ன செய்வது என்று அவர் திகைத்தால் வழி காட்டுதல் பரமஹம்ஸரிடமிருந்து தானே வரும்.
ஸ்வாமிஜியின் சீடரான மன்மதநாத் கங்குலி ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். ஒரு நாள் சம்பாஷணையின் போது ஸ்வாமிஜியே இந்தச் சம்பவத்தை அவரிடம் விவரித்தார்.
ஸ்வாமிஜி ஊர் உராகச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்த சமயம் அது. எல்லா விஷயங்களையும் அவர் பேசிக் கொண்டே வந்தார். ஒரு நாள் அவருக்கு மறுநாள் ஆற்ற வேண்டிய சொற்பொழிவில் எதைப் பற்றிப் பேசுவது என்று தெரியவில்லை. சொன்னதையே திருப்பிச் சொல்லவும் அவருக்குப் பிடிக்கவில்லை. இப்படி ஒரு அவலநிலைக்குத் தன்னை தள்ளி விட்டதற்காக அவர் குருநாதர் ராமகிருஷ்ணரை நொந்து கொண்டார். திடீரென்று அவர் தன்னுடன் பேசுவதை அவர் கேட்டார். கண்களை மூடிக் கொண்டார் ஸ்வாமிஜி. ராமகிருஷ்ணரின் திருவுருவம் தெரியவில்லை. ஆனால் குரல் மட்டும் நன்கு கேட்டது. ‘நீ இதைப் பற்றிப் பேசு; இதோ இது பற்றி…. கவலைப்படாதே’ என்றெல்லாம் அவர் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு ஒரே ஆச்சரியம். எனக்கு மறுநாள் பேச வேண்டிய விஷயங்கள் அனைத்தும் கிடைத்து விட்டன. ஆனால் அதை விட இன்னொரு பெரிய ஆச்சரியம் எனக்குக் காத்திருந்தது. மறு நாள் காலை நான் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்து அறையில் இருந்தவர் என்னைச் சந்தித்தார்.
அவர், “நேற்று உங்களுடன் யார் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசியது ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. ஏனெனில் அவர் எனக்குப் புரியாத வேறு ஏதோ ஒரு மொழியில் பேசிக் கொண்டிருந்தார்!” என்றார்.
என்னிடம் ராமகிருஷ்ணர் பேசிக் கொண்டிருந்தது வங்க மொழியில்! எனக்கு ஒரே ஆச்சரியம், அந்த மனிதரும் இந்தப் பேச்சை எப்படிக் கேட்டார் என்பது தான்!
இதைத் தொடர்ந்து ராமகிருஷ்ணரைப் பற்றி இன்னும் பல அரிய தகவல்களை அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
இப்படி தனது நினைவுகளை மன்மதநாத் கங்குலி பகிர்ந்து கொண்டதை, வேதாந்த கேசரி ஆங்கிலப் பத்திரிகை 1960ஆம் வருடம் ஜனவரி, ஏப்ரல் இதழ்களில் வெளியிட்டது.
ஆதாரம் : 1. M- The Apostle and the Evangelist by Swami NItyatmananda – Vol 1 P 10
2. Remniscences of Swami Vivekananda – Manmatha Nath Ganguli P-343
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
This is the third part of the article.
There are 25 mantras in the hymn 1-112 of Rigveda.
Mantra 12
Here we get some interesting details about a river called Rasaa.
In the same mandala we saw River Sindhu is helped by God for a good flow. So naturally we expect River Rasa is also helped by the Vedic Gods. But Max muller and gang gives a new interpretation.
“The Rasaa known to the Zoroastrians as the Ranha, was originally the name of a real river, but when the Aryas moved away from it into the Punjab, it assumed a mythical character, and became a kind of Okeanos surrounding the extreme limits of the Earth”, says Max muller.
This is said through out the Vedas by all the white skinned foreign translators. From Mahatma Gandhi to Ambedkar every one rejected Aryan- Dravidian theory. Kanchi Paramacharya, a great linguistic scholar, clearly say Zoroaster migrated from Saurashtra region of Gujarat. Since Zend Avesta is dated around 800 BCE, Vedic Hindus migrated to Iran and named one River as Rasa.
Greek Okeanos also came after 800 BCE. More over Okeanos is Oceanus which means the ocean around the land. All Tamil and Sanskrit poems describe earth as wearing ocean as clothes. Hindu poets always say ‘earth surrounded by water’.
Max muller gang tries to put the cart before the horse.
Mantra 13
Here we come across a reference to eclipse.
Asvins are said to compass the Sun in order to save him from eclipse. Vedic Hindus were very much conscious of astronomical events. This gives support to my interpretation of ‘wolf catching quail’ as solar eclipse.
Mandhata and Bharadvaja are referred to here. Both of them received help from the Asvins.
This will help us to pinpoint the date of these hymns. Scholars believe that the first mandala is the latest part of the Rigveda. They also believe that it took at least 500 years for the composition of 1000 plus hymns . Internal evidence also points out in this direction.
Mandhata was the son of Yuvanasva. Mandhata’s son is Purukutsa. Since all these names occur in the first and tenth mandalas, we may say they were added by Vyasa around 3150 BCE. Mandhata was 12th king in the Solar dynasty while Rama was 62nd in the line. This will give us a rough idea of the time of Mandhata. 1250 years lapsed between Mandhata and Rama.
Both these are important for Tamils as well. Bharadvaja who figures in Ramayana was associated with ‘Aindram’ grammar. Tolkappiar was an expert in it . Chola kings claim that Sibi Chakravarthy and Mandhata were their forefathers. Through out Sangam Tamil literature and Silapaadikaram we see this north -western origin of Cholas.
It is amazing to see so many names in one hymn. Kutsa angiras was the first one to give us a full list of kings. He is the first historian in the world.
Another interesting detail about Bharadvaja is the word means ‘a country’ and ‘a crow or a black bird’.
Mantra 14
Here we come across more kings of Vedic India.
Trsadasyu, Athithigwa, Divodasa and Kesojum are found in this mantra .
Sayana says Divodasa had the titles Kesojum and Athithiva.
I want to point out the suffix Daasa and Dasyu in two kings names.
They are all great Vedic kings.
Sambara was killed by both Indra and Divodasa. We see another Sambara killed by Dasaratha with the help of Kaikeyi.
Trsadasyu was a great philanthropist, friend of the Devas. He shattered the forts of his enemies.
Mantra 15
Here we get some interesting information about a drinker named Vamra. He was the son of Vikanasa. He was drinking different things.
Westerners interpreted ‘drinking’ as sucking the moisture from the earth.
Vedic seers always speak in secret, coded language
Wilson and Benfie say it is not Drinking, but getting rid of moisture.
Upastuta, Kali, Vyasva, Prithi are others mentioned here.
Vyasva means Horseless.
Kali (Black) is seen in another hymn.
Upastuta, according to Sayana, is an epithet of Vamra.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதம் முதல் மண்டலத்திலுள்ள 112 ஆவது பாடலிலுள்ள 25 மந்திரங்கள் பற்றிய அதிசயச் செய்திகளைத் தொடர்ந்து காண்போம்
மந்திரம் 11-ல் (RV. 1-112-11) வணிகர்களின் பெயர்களும் உள்ளன . தீர்க்கஸ்ரவஸ், அவ்சிஜன் . இது தவிர கக்ஷிவான் என்பவருக்கு அஸ்வினி தேவர்கள் இருவரும் உதவிய செய்தி உளது; இவர்கள் அனைவரும் வணிகர்கள் .
மந்திரம் 12 (RV. 1-112-12)
இதில் மாக்ஸ்முல்லர் கும்பல் அதன் முழு கைவரிசையைக் காட்டுகிறது. ‘ரஸா’ என்னும் நதி பற்றி இந்த மந்திரம் பேசுகிறது. இதை ரான்ஹா என்று சொராஷ்ட்ரர் (ZOROASTER) குறிப்பிடுவதாகவும் ஈரானிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் அதை கற்பனை நதியாக மாற்றிவிட்டதாகவும் எழுதிவைத்துள்ளது. சொராஷ்டிரர் நூல் ZEND AVESTA – பார்சி மத வேத புஸ்தகம்- ரிக் வேதத்துக்கு மிகவும் பிற்பட்டது என்பது தெரிந்தும் இப்படி இந்தக் கும்பல் தொடர்ந்து விஷம் கக்கி வருகிறது- ரிக் வேதம் முழுதும்!
உண்மை என்ன வென்றால் ரஸா எனும் நதியை இரானுக்குச் சென்றோரும் பயன்படுத்தினர். காஞ்சி பரமாசார்யார் போன்ற பெரியோர்கள் ஸொராஷ்டிரர், SAURASHTRA AREA OF GUJARAT சவுராஷ்டிரா தேசத்தில் இருந்துசென்றவர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அது மட்டுமல்லாமல் மாக்ஸ்முல்லர் கும்பல், மேலும் ஒருபடி சென்று, அதை கிரேக்கர்கள் குறிப்பிடும் ஓசியானோஸ் (OKEANOS= OCEANOS= OCEAN) என்னும் உலகைச் சுற்றி ஓடும் நீரைக் குறிக்கும் என்றும் எழுதி இருக்கிறது . உண்மையில் கிரேக்க இலக்கியம் மிகவும் பிற்பட்டது என்பதை எல்லா என்சைக்ளோபீடியாக்களும் எழுதிவைத்துள்ளன. அப்படி இருக்கையில் வேண்டுமென்றே குழப்புவதற்காக இப்படி ஒரு ஒப்புமை.
இந்த மந்திரத்தில் மூன்று அதிசயச் செய்திகள் உள்ளான.
முன்னர் சிந்து நதியில் நீர்ப்பெருக்கை உண்டாக்கியவர்கள் அஸ்வினி தேவர்கள் என்று சொன்னது போல, இங்கு ரஸா நதியிலும் தண்ணீரை ஓடவைப்பது அஸ்வினிகள்தான் என்கிறார் கவி
அடுத்த செய்தி ‘குதிரை இல்லாத தேரை’ வெற்றியடைய வைத்த அதிசயம். இது மறை பொருளுள்ள வாசகம் என்பது என் கருத்து.
மூன்றாவது செய்தி ‘த்ரிசோகன்’ என்பவன் பசுக்களை மீட்டு ஓட்டிவந்த செய்தி. அசோகன் என்பது போல த்ரிசோகன் ஒரு பெயர்! இவர் யார், என்ன என்பது பற்றி மேலும் செய்திகள் இல்லை.
இப்படி ஏராளமான செய்திகளை ஒரே பாட்டில் அடுக்குகிறார் குத்ச ஆங்கிரசன். ஆகையால் இவரே உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்.
மந்திரம் 13
இந்த மந்திரம் ‘மாந்தாதா’ என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. பல மாந்தாதாக்கள் உண்டு. ஒருவர் சூரிய குல மன்னன். யுவனாஸ்வனின் மகன். எட்டாவது மணடலத்திலும் இவர் பெயர் வருகிறது அவருடைய மகன் புருகுத்சன் அவர் பெயரும் ரிக் வேதத்தில் வருகிறது. இவர்கள் வடமேற்கு இந்தியாவிலிருந்து தமிழ் நாட்டில் குடியேறிய சோழர்களின் மூதாதையர். சிலப்பதிகாரத்திலும் புறநானுற்றிலும் சிபி -புறா கதை மூலம் சோழர்கள் தங்கள் வடமேற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதை தம்பட்டம் அடிக்கிக்கின்றனர். சோழர்கள் தமிழர்களா? என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் முன்னரே இது பற்றி எழுதியுள்ளேன். ஆக மாந்தாதா காலத்தைக் கணக்கிட்டால் ரிக் வேதத்தின் கடைசி பகுதியான முதல் மண்டலத்தின் காலத்தை அறியலாம். ரிக்வேத தொகுப்பு 500 ஆண்டுக்கு காலத்தில் உருவான கவிதைகள் என்பது ஒரு சாரார் கருத்து.
சூரிய குலத்தில் ராமபிரான் 62 ஆவது மன்னர். மாந்தாதா 12ஆவது மன்னர். 50 தலைமுறை இடைவெளி. அதாவது ராம பிரானுக்கு 1250 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர். ஆக முக்கிய வரலாற்றுச் செய்தி இங்கே கிடைக்கிறது .
பாரத்வாஜர் பெயரும் வருகிறது. இது ஒரு கோத்திர பெயர். ராமாயணத்திலும் பாரத்வாஜர் வருகிறார் . ஆகையால் எந்த பாரத்வாஜர் என்பதைச் சொல்வதற்கில்லை . பாரத்வஜர் ஐந்திர இலக்கணத்துடன் தொடர்புடையவர். மிகப்பழைய ரிஷிகளில் ஒருவர். மேலும் பாரத்வஜ என்பது ஒரு நாட்டையும், காக்கை என்ற பறவையையும் குறிக்கும் சொல்.
மந்திரம் 14
இதில் மேலும் பல மன்னர்களின் பெயர்கள் உள்ளன.அதிதிக்வ , திவோதாஸ , த்ரஸாதஸ்யூ .
சம்பரன் என்ற அசுரனை திவோதாசனும் இந்திரனும் கொன்றபோது உதவியவர்கள் அஸ்வினி தேவர்கள். திவோதாஸன் , அசுரர்களுக்குப் பயந்து தண்ணீரில் ஒளிந்து இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. பல போர்களில் வெற்றி அடைந்தவன் த்ரஸ தஸ்யூ ; நிறைய பொருள்களை வாரி வழங்கியவன். தேவர்களால் விரும்பப்பட்டவன். இவனைப் பற்றி மேலும் ஐந்து ஆறு பாடல்களில் தகவல் கிடைக்கிறது .
இங்கே வரும் அதிதிக்வம் , கசோஜும் என்பன திவோதாசனின் அடைமொழி, பட்டப்பெயர்கள் என்கிறார் சாயனர்.
என் கருத்து
இரண்டு மன்னர்கள் பெயர்களில் ‘தாச’, ‘தஸ்யூ’ என்ற சொற்கள் வருவதைக் கவனிக்கவும். பிற்காலத்தில் நாம் காளி ‘தாச’ன் முதலிய பெயர்களைக் காண்கிறோம். தஸ்யூ என்ற பின்னொட்டு அந்த மன்னன் தஸ்யூக்களை வென்றதால் வந்திருக்கலாம்.
தசரதன் தோற்கடித்த அரக்கனின் பெயரும் சம்பரன் . மேலும் பல சம்பரன்களும் புராணத்தில் உள்ளன.
மந்திரம் 15
இங்கே வரும் 3 பெயர்களும் சுவையான செய்திகளைத் தருகின்றன.
இது குடிப்பழக்கம் அல்ல; பூமியிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையென்று பல பாஷ்யக்காரர்கள் சொல்லுவதாக வில்சன் எழுதியுள்ளார். இந்திரன்தான் வம்ரன் என்கிறார் பென்பீ . விபிபாண என்ற சொல்லுக்கு நிறைய குடிப்பவர், வெவ்வேறு குடிப்பவர் என்று பொருள்.
உபஸ்த்துத என்பது தனிப் பெயர் அல்ல; வம்ரனின் அடைமொழி; அதாவது எல்லோராலும் போற்றப்படும் என்று பொருள் என்பார் சாயனர்
கலி என்பவரைப் பற்றி பத்தாவது மண்டலத்திலும் பாடல் இருக்கிறது இவர் ஒரு ரிஷி என்றும் மனைவியை அடைந்த போது இளமையை மீண்டும் பெற, அஸ்வினியர் உதவினர் என்றும் உரை சொல்லும். ப்ருதி வ்யஸ்வ என்ற இரண்டு பெயர்களும் ஒரே ரிஷியைக் குறிக்கும் என்கிறார் சாயனர். ‘வ்யஸ்வ’ என்றால் ‘குதிரைகளற்ற’ என்பது பொருள். அவர்களை வெல்ல வைத்தவர் அஸ்வினி தேவர்கள்
அஸ்வினி தேவர்களை சுருக்கமாக கடவுள் என்ற சொல்லால் குறித்துவிடலாம். அவ்வளவு புகழ்மாலை!!!
tags- உலகின், முதல் வரலாற்று ஆசிரியர், ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 3
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
THOMAS MANN
(1875 – 195)
தாமஸ் மான் ஜெர்மனியைச் சேர்ந்த நாவலாசிரியர். சிறுகதை எழுத்தாளர்.
ஜெர்மனியிலுள்ள லூபெக் (LUBECK) நகரில் பிறந்தார். அவருடைய தந்தை பெரும் பணக்காரர். ஆகவே மானின் இளமைக்காலம் மகிழ்ச்சியான பருவமாகக் கழிந்தது. இளம் வயதில் தந்தை திடீரென்று இறக்கவே குடும்பத்தின் சூழ்நிலை தலைகீழாக மாறியது. வறுமை வாட்டியது.
தனது தந்தை எப்படி பணக்காரர் ஆனார் என்பதை அடிப்படையாக வைத்து அவர் முதல் நாவலை BUDDEN BROOKS எழுதினார். மானுக்கு 25 வயதானபோது இந்தப் புதினம் வெளியானது. இது ஜெர்மானிய மொழியில் ஒரு சிறந்த நாவல். இதற்கடுத்த நாவலை அவர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் எழுதினார். அந்த நாவலின் பெயர் THE MAGIC MOUNTAIN ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவர் சிறுகதைகளை எழுதினார்.
மாயாஜால மலை (THE MAGIC MOUNTAIN) என்ற புதினம் இவருக்கு அக்காலத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாவலாசிரியர் என்ற புகழைத் தந்தது. ஒரு மலைமீதுள்ள மனநோய் மருத்துவமனையில் வாழ்பவர்கள் உலகத்தை எப்படி கண்ணோட்டமிட்டார்கள் என்பதை விளக்கும் கதையாகும். இந்த உலகில் வாழ்பவர்களை அவர்கள் கடவுள்களாகக் காண்கிறார்கள்.
இந்த நாவல் எழுதிப் புகழ் பெற்றவுடன் 1929-இல் மானுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
1933ஆம் ஆண்டில் இவர் இன்னுமொரு நாவலை எழுதினார். பழங்கால எகிப்தை கதை நடைபெறும் இடமாக வைத்து எழுதப்பட்டாலும் இக்கால மனிதர்களின் வாழ்க்கை குறித்த எதிரொலியாக இருந்தது இந்த நாவல். இந்த நாவலின் தலைப்பு JOSEPH AND HIS BRETHEREN
மானின் எழுத்துக்களுக்களிடையே இழையோடிய ஒரு கருத்து – தனிமனிதனின் சுதந்திரத்திற்கும் அரசின் கொடுகோன்மைக்கும் இடைப்பட்ட மோதலாகும். நாஜி (NAZI) இயக்கத்தின் போக்கை அவர் முன்கூட்டியே உணர்ந்திருந்தார். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஜெர்மனியிலிருந்து அமெரிக்கவுக்கு குடியேறினார். அங்குதான் அவரது முக்கிய படைப்பான DR FAUSTUS உருவானது. இந்த நாவல், ஜெர்மனியைப் பிடித்த பைத்தியத்தையும் அது எப்படிப் போரில் நுழைந்தது என்பதையும் விளக்கும் உருவகமாக (ALLEGORICAL) அமைக்கப் பட்டிருந்தது. போர் முடிந்த பின் ஜெர்மனிக்குத் திரும்பிய MANN இறுதிநாட்களை சுவிட்சர்லாந்தில் (SWITZERLAND) கழித்தார்.
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
இன்று ஒரு நன்னாள். வைகாசி மூலம் திருஞானசம்பந்தரின் குருபூஜை தினம். அதையொட்டி சிவஞான சிந்தனை கொள்ளும் நன்னாள் இது.
சயமிகுத்தரு கரைமுருக்கிய தமிழ்பயிற்றிய நாவன்
வியலியற்றிரு மருகலிற்கொடு விடமழித்தருள் நீதன்
கயலுடைப்புனல் வயல்வளத்தரு கழுமலப்பதி நாதன்
இயலுடைக்கழல் தொழநினைப்பவர் இருவினைத்துயர் போமே
என்று கூறி ஆளுடையபிள்ளையார் திருவடி போற்றி வணங்குகிறேன்.
பல்வேறு சிக்கல்கள் நினைந்த மனித வாழ்க்கை என்னும் கடலில் நீந்திக் கரை ஏறுவது என்பது மலைப்பான ஒரு விஷயம். இதைச் சுலபமாக்க அருளாளர்கள் தோணி போல வந்து உதவி அருள் புரிகின்றனர்.
அந்த வகையில் தமிழையே தன் உடலாகக் கொண்ட தமிழாகரன் திருஞானசம்பந்தர் தமிழால் பாடி உலக மக்கள் அனைவருக்குமே ஒரு அற்புதமான நல்வழியைக் காட்டுகிறார்.
பாஸிடிவ் திங்கிங் என்று இன்றைய நவீன அறிவியல் உலகம் கூறிக் கூறி மகிழ்கிறதே அந்த ஆக்கபூர்வமான சிந்தனையை அன்றே தந்து அருளியவர் அவர்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலைக்
கண்ணின் நல்லஃது உறும் கழுமல வள நகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
என்ன ஒரு அற்புதமான இறை சிந்தனை! மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்,சிவபிரானை எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இல்லை!
இப்படிக் கூறி அருள் பாலிப்பவர் 385 பதிகங்களிலே 4169 பாடல்களிலே நமக்கு உற்ற வழியைத் தருகிறார். அவர் பாடிய பதிகங்களின் எண்ணிக்கை குறித்து நம்பியாண்டார் நம்பி,
“பன்னு தமிழ்ப் பதினாறாயிரம் நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் என்று கூறி அவர் பதினாறாயிரம் பனுவல் பாடிய செய்தியைக் கூறுகிறார். ஆனால் நமக்குக் கிடைத்த பொக்கிஷமான 385 பதிகங்களை ஓர்ந்து கற்று ஓதினாலே போதும் அறம். பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு நற்பேறுகளும் யாதும் ஓர் குறைவு இன்றிக் கிடைக்கும்.
‘ஓது, உன்னை அது நன்னெறிக்கு உய்க்கும்’ என்று அவர் கூறுகிறார்.
எதை ஓதுவது, எப்படி ஓதுவது என்று நாம் புரியாமல் அவரிடம் அருள் பாலிக்குமாறு வேண்டும் போது மிக சுலபமாக அஞ்செழுத்தை – பஞ்சாக்ஷரத்தைத் தருகிறார். எப்படி ஓத வேண்டும் என்று அழகுறச் சொல்கிறார்.
காதல் ஆகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
அனந்தா வை வேதா: – வேதங்கள் அனந்தம். அதை முற்றிலுமாகக் கற்றவர் யாரும் இல்லை. ஆனால் அதன் சாரம் நமசிவாய எனும் நாமம், என்ற பெரும் ரகசியத்தை, உண்மை மெய்ப்பொருளை அவர் தந்து விடுகிறார். அதை உள்ளம் உவந்து ஏற்று காதல் கொண்டு கசிந்து கண்ணீர் மல்கி, உள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து சொல்க என்று கூறுகிறார்.
அப்படிக் கூறினால் கொரானா உட்பட்ட எந்த இடர் வந்தாலும் போய் விடும் என்பது அவரது ஆணை.
ஆணை நமதே என்று அவர் நான்கு பாடல்களில் ஆணையிடுகிறார். அனைவருக்குமான நன்மைக்கு ஆணையிடும் அதிகாரம் படைத்தவர் யார்? இறைவனே அப்படி ஆணை இட முடியும். திருஞானசம்பந்தர் முருகனின் திரு அவதாரமே என்பதால் தான் அதிகாரபூர்வமாக அருளுடன் ஆணை இடுகிறார் இப்படி.
அஷ்ட கிரகங்களின் சேர்க்கை வந்த போது உலகமே அஞ்சி நடுங்கியது. அதைப் போக்க கோளறு பதிகமான வேயுறு தோளிபங்கன் பதிகத்தை உச்சரித்தோம்; பயத்திலிருந்து மீண்டோம். அந்தப் பதிகத்தில் நல்ல என்ற வார்த்தை மட்டும் 41 தடவை வருகிறது. நாளும் கோளும் இடியும் மின்னலும், கொலை யானை கேழல் கொடுநாகமொடு கரடி உள்ளிட்ட தீமை அனைத்தும் நீங்கி வருகாலமான பலவும் அலைகடல் மேரு நல்ல நல்ல நல்லவையாகவே அமையும் என்று கூறி ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே என்கிறார்.
நம்மை வம்மின் வாருங்கள் என்று கூவி அழைத்து இறையை நினைமின் என்று கூறி அருளுகிறார். அப்படி
மூரல் வெண்மதி சூடும் முடி உடை
வீரன் மேவிய வேற்காடு
வாரம் ஆய் வழிபாடு நினைந்தவர்
சேர்வர் செய் கழல் திண்ணமே என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.
இப்படி பொருளும் அருளும் கை கூடும் இது திண்ணம் என்று அவர் ஆறு இடங்களில் உறுதிபடக் கூறுகிறார்.
சேர்வர் செய்கழல் திண்ணமே, தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே,சிந்தை செய்வார் வினை ஆயின தேய்வது திண்ணமே, சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே,புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே என இப்படி உறுதி கூறுதல் இறைவனின் திரு அவதாரத்தைத் தவிர வேறு யாரால் தான் முடியும்?
இறைவன் அணோரணியான் மஹதோ மஹீயான். அணுவுக்கு அணு, பெரிதுக்கும் பெரிதானவன் என்ற வேத சாரத்தைப் பல நூறு பாடல்களில் பிழிந்து தருகிறார் அவர்.
நுண்மைக்கும் நுண்மையான இறைவனை லாபரட்டரியில் சோதனைக்குட்படுத்திக் கண்டுபிடித்து விட முடியுமா? கடவுளின் படைப்புத் தொழில் தனக்குத் தெரிந்து விட்டதாகவும் தன்னால் ஒரு மனிதனைப் படைக்கவும் முடியும் என்றும் சவால் விட்டார் ஒரு விஞ்ஞானி. கடவுளிடம் சென்ற அவர், கடவுளே! நீங்கள் படைத்தது போதும். உங்கள் உதவி எங்களுக்குத் தேவையில்லை. நாங்களே மனிதனைக் கூடப் படைத்து விடுவோம் என்றார். புன்சிரிப்புடன், கடவுள் அப்படியா! சரி செய், எங்கே ஒருவனைப் படைத்து காண்பியேன் என்றார். விஞ்ஞானி பெரு மகிழ்ச்சியுடன் கீழே இருந்த மண்ணை எடுத்தார், தன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்க! கடவுள் சொன்னார் உடனே” அப்பனே! அது கூடாது, நீ உனது மண்ணை, நீ படைத்த மண்ணை எடுத்து உன் வேலையை ஆரம்பி என்றார். விஞ்ஞானி வெட்கித் தலை குனிந்தார்.
ஞான சம்பந்தர், சிவபிரான் உள்ளம் உருகுவார்க்கு உள்ளேயே இருப்பவன் என்கிறார். கள்ளமிலா நெஞ்சம் உடையவர் மட்டும் அவனைக் காணலாம் என்கிறார்.
ஏனையோருக்கு அவர் ஒரு எச்சரிக்கையே தருகிறார் இப்படி:
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர் விட்டு உளன் எங்கள் ஜோதி
மா துக்கம் நீங்கல் உறுவீர் மனம் பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே
தர்க்கம், அடுக்கு மொழி – LOGIC and REASONING இங்கே உதவாது அப்பா, மனம் ஒன்றி வாழ்மின், இறைவனையே வந்து பற்றுங்கள் என்கிறார்.
நம்பிக்கை இல்லாதவர்களையும், அவருக்கு இடர் விளைவித்தவர்களையும் அவர் எதிர்கொண்ட விதம் தனி. உலகத்தோர்க்கு அவர் காட்டிய அற்புதங்கள் பல. திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தாம் அருளிய திருக்களிற்றுப்படியார் என்ற நூலில் அவற்றைத் தொகுத்துத் தருகிறார் இப்படி:
என்புக்கு உயிர் கொடுத்தல், ஈங்கிவைதாம் ஓங்கு புகழ்த்
தென்புகலி வேந்தன் செயல்.
மயிலாப்பூரிலே பூம்பாவை என்ற இறந்த பெண்ணின் எலும்புகளை ஒன்று சேர்த்து உருவமாக்கி உயிர் கொடுத்தார். சமணரை வாதில் வெல்ல மதுரையில் இறைவனின் திருவுள்ளக் குறிப்பை அறிந்தார். ஆண்பனையைப் பெண்பனையாக்கிக் காட்டினார். உலவாக் கிழி பேறு பெற்றார் திருப்பூந்தராயில். பிரமபுரத்திலே இறைவி தந்த ஞானப்பாலை உண்டு, சிவபிரான் அம்பிகை தரிசனம் கண்டு தோடுடைய செவியன் என்று பாடினார். தம்மை சிறு பாலகன் என்று பயந்த மங்கையர்க்கரசியாரைத் தேற்றினார். சமணரை வாதில் வென்றார். ஆற்றின் போக்கை எதிர்த்துச் சென்ற ஏட்டை திருவேடகத்தில் தங்கப் பாடினார். தீயிலிட்ட ஏடு இன்ன ஏதுவால் பச்சையாய் இருக்குமெனப் பாடினார். தோணியில் இருந்த காட்சியைத் திருவீழிமிழலையில் கண்டார். பொன் தாளம், முத்துச் சிவிகை பேறு பெற்றார். மறைக்கதவம் அடைக்கப் பாடினார். திருநல்லூர்ப் பெருமணத்து இறைவனிடம் முக்திப் பேறு வேண்டினார். தன்னுடன் இருந்த அனைவரையும் ஜோதியில் கலக்குமாறு வழி நடத்திச் சென்று முக்தி பெறச் செய்தார்! சம்பந்தரின் அற்புதங்கள் சொல்லால் விளக்க முடியாதவை. அவரது பதிகங்களிலே ஏராளமான புராணச் செய்திகளையும் வரலாற்றுப் பதிவுகளையும் பார்க்க முடிகிறது.
இயல் இசை நாடக நற்றமிழை தெய்வத் தமிழ் ஆக்கி புதிய உயரத்திற்கு ஏற்றினார் அவர். முதல் மூன்று திருமுறைகளில் உள்ள ஏராளமான சொற்றொடர்களும், கருத்துக்களும், இயற்கை வர்ணனைகளும் படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.
தமிழின் வலிமையைக் காட்ட அவர் பாடிய பாடல்கள் ஏராளம். ஒரே ஒரு பாடலை மட்டும் இங்கு பார்ப்போம்.
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயா நீ மாமாயா
இதன் அருமையான பொருளைப் பார்ப்போம்:
யாம் ஆமா – ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுள் என்றால் அது பொருந்துமா? பொருந்தாது!
மா மாயா நீ – கரியனவாகிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!
தேவாரத் தலங்கள் என்றப் பேற்றைப் பெறும் வகையில் ஏராளமான தலங்களுக்குச் சென்று இசையுடன் அவர் பதிகங்களைப் பாடினார்.
அவர் பாடலில் இடம் பெற்ற, ஆனால் அவர் செல்லாத தலங்கள், அதாவது வைப்புத் தலங்களும் ஏராளம்.
திருஞானசம்பந்தரின் தேவாரத்தைப் பாடிப் பரவிய கவிஞர்கள், அறிஞர்கள், மகான்கள் தங்கள் வியப்பை நிறையப் பாடல்களில் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவருக்குத் தந்த புகழாரங்கள் ஒரு கலைக் களஞ்சியம் அளவு பெரியவை. சில புராணக் கூற்றுகளையும் புலவர் தம் கூற்றுக்களையும் பார்ப்போம். அமுதக் கவி பொழி சிறுவன் இது கூர்ம புராணம். அருளும்சொல் பனவன் இது பேரூர்ப் புராணம். கழுமலப் பேரொளி இது சுழியல் புராணம். காழி ஞானப்பிள்ளை இது பட்டீசுவர புராணம். பண்டித ஞானாசாரியன் இது திருவையாற்றுப் புராணம். மணிச்சிவிகை ஏறினான் இது குற்றாலத்துப் புராணம். நான்மறையவன் இது சிவபுண்ணியத் தெளிவு.
அருட்பிரகாச வள்ளலார் தெள்ளமுதாம் சிவகுருவே, உத்தம சுத்த சற்குருவே என்கிறார். ஒட்டக்கூத்தர் திருஞானசம்பந்தரை பரசமயக் கோளரி என்றும், வைதிக ராஜ சிங்கம், வைதிக வாரணம் என்றும் இன்னும் பலபடியாகவும் பரவிப் புகழ்கிறார்.
அருணகிரிநாதரோ முருகனே ஞானசம்பந்தர் என்ற இரகசியத்தை மிகத் தெளிவாக உலகினருக்கு அறிவிக்கிறார், பல இடங்களில்! உதாரணத்திற்கு திருத்தணிகைத் திருப்புகழிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்.
பொறியுடைச் செழியன் வெப்பு ஒழிதரப்
பறிதலைப் பொறியிலிச் சமணர் அத்தனை பேரும்
பொடிபடச் சிவமணப் பொடி பரப்பிய திருப்
புகலியில் கவுணியப் புலவோனே.
இந்த குருபூஜை நன்னாளில் நமக்கு ஒரு பெரிய பொறுப்பு இருப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். காலம் காலமாக பன்னிரு திருமுறைகளையும் பாதுகாத்து ஓதி அவற்றை நமக்கு நம் முன்னோர்கள் தந்துள்ளனர். அவற்றை அப்படியே இனி வரும் தலைமுறையினருக்குத் தரும் பெரிய பொறுப்பை உணர்ந்து இந்த குருபூஜை நன்னாளில் நமது உள்ளார்ந்த பக்தி உணர்வை அர்ப்பணித்து திருஞானசம்பந்தரை வழிபடுகிறோம்.
சைவ ஆகமம் 28இல் ஒன்றாகிய காரணாகமத்தில் 141ஆம் படலமான மகோற்சவப் படலத்தில் மூன்று ஸ்லோகங்கள் திருஞானசம்பந்தரை எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றிய விதிகளை வகுத்துக் கூறுவதைக் காணலாம்.அம்சுமதாகமும் விரிவாக வழிமுறைகளைக் கூறுகிறது. ஓதுவாரை அழைத்து ஞானசம்பந்தரின் பதிகங்களைப் பாடச் செய்ய வேண்டும்,பாற்சோறு நிவேதனம் செய்து அந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்க வேண்டும். ஓதுவார் உள்ளிட்ட நல்ல சொற்பொழிவாளர்கள் மூலம் சம்பந்தரின் வரலாற்றை அனைவருக்கும் வழங்க வேண்டும். ஓதுவாருக்கு ஆடை முதலியன வழங்கி கௌரவிக்க வேண்டும். இப்படிப் பல நெறிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. அந்த வழியிலே, இந்த நன்னாளிலே
காலத்திற்கேற்றபடி, உலகளாவிய அளவில் திருஞானசம்பந்தரின் குருபூஜை நாளை இணையம் வழியே எடுத்துச் சென்றது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வாகும். பல பெரியோர்கள், ஆதீனங்கள் அருளுரை வழங்கியது பெரும் பேறாகும். வரும் தலைமுறையை எண்ணி இப்படிப்பட அரும் செயல்களை அயராத முயற்சியுடன் செய்து வரும் லண்டன் ஸ்ரீ கல்யாண சுந்தர சிவாசாரியார் பெரிதும் போற்றுதலுக்கு உரியவர். அவருக்கும், இதில் கலந்து கொள்ளும் பெரியோர்கள்,தாய்க்குலத்தோர், பக்தர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறி அமைகிறேன். சேக்கிழார் வழியில் திருஞானசம்பந்தரின் பாதமலரில் சிரம் தாழ்த்தி நமஸ்காரம் செய்கிறேன்.