
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 8 AUGUST 2019
British Summer Time uploaded in London – 6-49 am
Post No. 6744
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஹெல்த்கேர் ஆகஸ்ட் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
புதிய பகுதி
புத்தகச் சுருக்கம் : All about Good Health by Dr Christian Barnard, C.Northcote Parkinson, M.K. Rustomji 187 pages
ஆரோக்கியம் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்! – 1
தமிழில் தருபவர் : ச.நாகராஜன்
நூலாசிரியர்கள் பற்றி :-
Dr Christian Barnard உலகின் தலைசிறந்த டாக்டர். The Body Machine என்ற அவரது புத்தகம் மூன்று லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி இருக்கிறது. உலகில் முதல் இதய மாற்று நடவு சிகிச்சையைச் செய்தவர் இவரே. (Heart Transplant operation) C.Northcote Parkinson உலகின் தலைசிறந்த மருத்துவ புத்தகங்களை எழுதியவர். ஒவ்வொரு புத்தகமும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன.
M.K. Rustomji ஆரோக்கியம் பற்றி எளிமையாக விளக்குபவர் என்பதால் உலகளாவிய அளவில் பிரபலமானவர். இந்தப் புத்தகம அவரது ஒன்பதாவது புத்தகம். நிர்வாக இயல் பற்றியும் அவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.அதில் ஒன்று திரைப்படமாகப் பிடிக்கப்பட்டு இந்திய அரசாங்கத்தின் பரிசையும் பெற்றது.
நூல் sex, Psyvhology, Food, Ecercise, Physiology, General என்ற ஆறு பகுதிகளைக் கொண்டது.
முக்கிய விஷயங்கள் இங்கு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. முழு நூலையும் வாசித்துப் பயன் பெறலாம்.
- SEX
தூக்கம் போல பாலியல் உறவும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு விஷயம்.
பாலியல் உறவில் திருப்தி அடையாத ஒரு பெண்மணியுடன் வாழ்க்கை வாழ்வது மிகவும் கஷ்டம். பாலியல் உறவில் 50%க்கு மேல் பெண்கள் உச்சகட்ட இன்பத்தை அனுபவித்ததில்லை என்பதை ஆய்வு செய்த உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாலியல் உறவில் எந்த ஒரு தோற்ற நிலையும் (Pose and Posture) மோசமானதில்லை
உறவை அடிக்கடி கொள்ளலாமா?
இது ஆணின் ஆண்மை வீரியத்தையும் வயதையும் பொறுத்த ஒரு விஷயம். பெண்களால் அடிக்கடி உறவு கொள்ள முடியும். ஆனால் ஒரு வயதுக்கு மேல் – 45 வயதுக்கு மேல் – இதில் ஆர்வம் பலருக்கும் போய் விடுகிறது.
ஒரு முறை உறவு கொள்வது என்பது 15 முதல் 20 வரை உள்ள press-upக்குச் சமமானது. இதய சம்பந்தமான நோய் உள்ளவர்கள் சீரான உடல்பயிற்சி மேற்கொள்ளல் அவசியம்.
சீரான இடைவெளியில் உறவு கொள்வது ஆரோக்கியத்தைத் தருகிறது; ஆயுளையும் நீட்டிக்கிறது.
ஆண்மையற்ற தன்மை என்பது பெரும்பாலும் உளவியல் ரீதியிலான ஒன்று.
அதிகமாக மது அருந்துவது பாலியல் உறவுக்கு தீங்கு பயக்கும் ஒன்று; இது ஆண்மையற்ற தன்மையை உருவாக்குவது.
“பாலியல் உறவு கொள்ளுங்கள்; இதயத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான ஒரு இரவு இயற்கையின் இயல்பான தூக்கம் தரும் மருந்து” என்று பிரபல அமெரிக்க பாலியல் நிபுணரான டாக்டர் யூஜின் ஷெய்மேன் (Dr Eugene Scheimann) கூறுகிறார்.
எந்த ஒரு வயதும் பாலியல் உறவுக்கு ஒரு தடையில்லை.
2. PSYCHOLOGY
How to overcome tension and stress
மன இறுக்கமும் மன அழுத்தமும் 50 சதவிகித நோய்க்குக் காரணமாக அமைகின்றன. கவலை நரம்பு மண்டலத்திற்குப் பெரும் தீங்கை உண்டாக்குகிறது.
மன இறுக்கம் அதிகமாகும் போது சில ஹார்மோன்கள் அதிகமாக உடலில் சுரக்கிறது. Blood sugar அதிகமாகிறது.
மன இறுக்கம்,மன அழுத்தத்தை எப்படிப் போக்குவது?
முதலில் அது ஏன் ஏற்படுகிறது என்ற காரணத்தை அறிய வேண்டும். காரணத்தை அறிந்த பின் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் கவலையை மனம் விட்டுப் பேசுவதிலேயே பாதிப் பேருக்கு பல நோய்கள் போய் விடுகின்றன.
சிறு சிறு விஷயங்களையும் கூட மனம் திறந்து பாராட்டுவது, அன்பு பாராட்டுவது, மரியாதை தருவது போன்றவை உடலையும் மனதையும் சீராக வைக்க உதவுபவை.
இளமையான மனத்தை எப்போதும் கொண்டிருப்பது உடலையும் இளமையுடன் வைத்திருக்கும். பெர்னார்ட் ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், சாமர்செட் மாம், மைக்கேல் ஆஞ்சலோ, வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் இதற்கு உதாரணம்.
சவாசனம் போன்ற ஆசனம் கவலையைப் போக்கும். மனதிற்கும் உடலுக்குமான பயிற்சி இது.
அவ்வப்பொழுது ஓய்வான நேரத்தை உருவாக்கிக் கொண்டு எப்போதும் உழலும் வாழ்க்கையிலிருந்து ஒரு ஓய்வை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
நிகழ்காலத்தில் வாழ்வது என்பது இன்னொரு உத்தி. நாளை என்ன நடக்கப் போகிறதோ என்று கவலைப்படுவதை விட்டு விட்டு இன்றைய பொழுதின் மீது கவனம் செலுத்தல் வேண்டும்.
மருத்துவம் சம்பந்தமாக சில தவறான விஷயங்கள் உண்மை போலக் கூறப்படுகின்றன. அவற்றில் சில
நீச்சலுக்கு முன்னர் உணவை உட்கொள்ளக் கூடாது. இது தவறு. மிதமான உணவுக்குப் பின்னர் கூட நீந்தலாம்.
வயது அதிகமாகும் போது எடை கூடினால் பரவாயில்லை. இது தவறு. 21 வயதில் என்ன உடல் எடை இருந்ததோ அதை சீராக வைத்திருப்பதே ஆரோக்கியத்திற்கு உகந்த ஒன்று.
சற்று கூட நேரம் தூங்குவது நல்லது. இது தவறு. தேவையான அளவு தூக்கம் போதும்.
உடல் பயிற்சி செய்யும் பெண்மணிகள் தங்கள் பெண்மைத் தன்மையை இழக்கின்றனர். இந்த நம்பிக்கை தவறு. உடல் பயிற்சி ஆரோக்கியத்தை உறுதி செய்து ஓய்வான தன்மையையும் அளிக்கிறது.
நீரிழிவு நோய்க்கு சிறுநீர பரிசோதனையை மேற்கொள்ளல் அவசியம்.
இரத்த அழுத்த சோதனை இதய நிலை பற்றி அறிய உதவும்;
அதிக கொழுப்புச் சத்துக்கும் இது உதவும்.
மத்திய வயதை அடைந்த பெண்கள் தங்கள் மார்பகங்களைச் சீரான இடைவெளியில் சோதித்துக் கொள்வது அவசியம். மார்பகப் புற்று நோய் இருக்கிறதா, கட்டி உள்ளதா என்பதைச் சோதித்துக் கொள்வது நல்லது. ஏனெனில் வலி இல்லாமல் இருந்தாலும் கூட இவை இருக்கும் அபாயம் உண்டு என்பதால் தான்!
ஆழ்மனதின் சக்தி (The power of Subconscious mind) அபாரமானது. தீர்க்க முடியாத சில பிரச்சினைகளை அதனிடம் விடுவது நல்லது. உறக்கத்தின் போது அது வேலை செய்து பிரச்சினைகளைத் தீர்க்கும் தீர்வுகளை நீங்கள் எழுந்திருக்கும் போது அது உங்களுக்கு வழங்கும்!

- FOOD
பாக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளும், குளிர்பானங்களும் தேவையற்றவை; பல சமயங்களில் தீங்கு பயப்பவை. சமச்சீர் உணவே ஆரோக்கியத்திற்குப் போதுமானது.
ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு உண்ண வேண்டும்? எப்பொழுது உண்ண வேண்டும். பொதுவாகச் சொல்லப் போனால் பெரும்பாலானவர்கள் தேவைக்கு அதிகமாகவே உண்கிறார்கள். பொதுவான விதி – பசி எடுத்தவுடன் உண்ணுங்கள் என்பது தான்!
இன்னொரு அருமையான விதி : குறைவான அளவே உண்ணுங்கள்;பல முறை கூட உண்ணலாம். ஓரிரு முறை சாப்பிட்டு வயிறைத் தேவைக்கு அதிகமாகச் சுமக்க வைப்பதை விட இது மேலானது.
சரியாகச் சமைக்காததே பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.
இந்தியர்களின் வீட்டில் உள்ள உணவில் சப்பாத்தி, அரிசி, பருப்பு வகைகள், கறிகாய்கள் உள்ளன. இதுவே போதுமானது. சில சமயங்களில் மட்டும் விடமின்கள் தேவைப் படலாம். ஆன்ட்டி பயாடிக்ஸ் மாத்திரைகள் சாப்பிடும் போது சில சமயங்களில் விடமின் B தேவைப்படலாம்.
உடல் பயிற்சியானது உடல் நலமாக இருக்கும் உணவை எப்போதும் ஒருவருக்கு நல்கும்.
எடுத்துக்காட்டாக, ஒரு சிறிய ரொட்டித் துண்டு 40 நிமிட நேர கடும் பயிற்சியைத் தேவைக்குள்ளாக்குகிறது. ஆகவே உடல் எடையைச் சீராக வைத்திருக்கவும், அதிக எடை ஏற்படாமல் இருக்கவும் உடல் பயிற்சி எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணரலாம்.
High Fibre Diet – அதிக பைபர் அடங்கிய உணவு ஏராளமான நன்மைகளைத் தருகிறது. இது சீராக மலத்தைக் கழிக்க உதவுகிறது. கோலன் கான்ஸரை – பெருங்குடலில் புற்றுநோய் வரும் அபாயத்தைத் தடுக்கிறது. ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.
*** அடுத்த இதழில் முடியும்


































































