63 நாயன்மார்களில் எட்டாவது நாயன்மாராக இடம் பெற்று போற்றப்படுபவர்
எறிபத்த நாயனார்.
இவர் கரூரைச் சேர்ந்தவர்.
இவரைப் போற்றி கொங்கு மண்டல சதகத்தில் 27வது பாடலாக இடம் பெறும்
பாடல் இது :
நதிசூடும் வேணிக் கருவூர்ப் பசுபதி நம்பருக்குப்
புதுமாலை கட்டுஞ்ச் சிவகாமி யாண்டவன் போந்தெருவின்
மிதமீறிப் பூவினைச் சிந்துகை யான்விறன் மீறவெட்டி
மதயானை யைக்கொன் றெழுப்பிய துங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் : கரூர்ப் பசுபதி ஈஸ்வரருக்காக மாலை கட்டும்
திருத்தொண்டினை மேற்கொண்டிருந்தவர் சிவகாமி ஆண்டவர். அவர் பூக்கூடையைப் பிடுங்கி எறிந்த
யானையைக் கொன்று பின்னர் எழுப்பியதும் கொங்கு மண்டலமே.
அருமையான திருவிளையாடல் ஒன்றைக் கூறும் பாடல் இது.
எறிபத்தர் என்பவர் கரூரில் வாழ்ந்து வந்த சிவனடியார். அடியார்களுக்கு
ஆபத்து வந்தால் அதற்குக் காரணமாக இருந்தவர்களை வெட்டுகின்ற கொள்கையைக் கடைப்பிடித்து
வந்தவர் அவர். ஒரு நாள் சிவகாமி ஆண்டவர் என்பவர் பூக்களை எடுத்துக் கொண்டு தெருவழியே
வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த நாட்டை
ஆளும் புகழ்ச் சோழனாரது பட்டத்து யானை மதம் கொண்டு அபூக்கூடையைப் பிடுங்கித்
தூர எறிந்தது. இதனைக் கண்ட எறிபத்தர் அந்த யானையையும் கூட வந்த பாகர்களையும் கொன்றார்.
இவரது அன்பின் திறத்தைக் கண்ட புகழ்ச் சோழனார் சிவனடியார்க்குத்
தீங்கு செய்த யானையை வளர்த்தது தான் தானே என மனம் நொந்து தன்னையும் அல்லவோ அவர் கொல்ல
வேண்டும் என்று எண்ணினார். எறிபத்தரிடம் தன் வாளைக் கொடுத்துத் தன்னைக் கொல்லுமாறு
வேண்டினார். ‘ஆஹா! சிறந்த பக்தியுள்ள சோழனாரைக் கொல்லும் தீங்கை அல்லவோ இழைக்க வேண்டி
இருக்கிறது’ என்று பதைபதைத்த எறிபத்தர் தன் கழுத்தை அவ்வாளால் அறுக்க முயன்றார்.
இதைக் கண்ட புகழ்ச் சோழனார் மனம் நடுங்கி எறிபத்தரின் கையையும் வாளையும் பிடித்துக்
கொண்டார்.
அப்போது ஆகாயத்திலிருந்து அசரீரி – ஆகாயவாணி – ஒன்று எழுந்தது.
அதன் படி இறந்த யானையும் பாகர்களும் உயிர்பெற்று எழுந்தனர்.
சிவபெருமானின் இந்த அருள் விளையாட்டைக் கண்டு மக்கள் பக்திப்
பரவசம் எய்தினர்.
அப்படிப்பட்ட எறிபத்த நாயனார் வாழ்ந்து யானை உயிர்ப்பிக்கப்பட்டது
கொங்கு மண்டலத்திலேயே என்று புகழ்கிறது கொங்கு மண்டல சதகம்.
இவ்வரலாறைக் கூறும் திருத்தொண்டர் புராண சாரத்தில் வரும் பாடல்
இது:
ஆல்
இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 7-3-2019 அன்று காலை சுற்றுப்புறச்
சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
நதிகளைக் காப்போம்!
ச.நாகராஜன்
லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக அமைவது இந்திய நாட்டில்
ஓடும் நதிகளே.
கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி,
தாமிரபரணி, வைகை என ஏராளமான நதிகள் ஆங்காங்கே வாழும் மக்களின் ஜீவாதாரமாகத் திகழ்கின்றன.
ஆனால் இப்படிப்ப்ட நதிகளின் நீரை அசுத்தமாக்குவதும், ஆற்றில்
உள்ள மணலைச் சுரண்டி அள்ளி நதியின் ஜீவ ஓட்டத்தைத் தடைப்படுத்துவதும் நாளுக்கு நாள்
அதிகமாகி வருவது வருத்தமூட்டும் ஒரு விஷயம்!
தூய்மைக்கே தூய்மை தரும் நதி என நமது பண்டைய இலக்கியங்கள் புகழும்
கங்கை நதி ஐந்து மாநிலங்கள் வழியே சுமார் 2525 கிலோமீட்டர் பாய்ந்து ஓடி 50 கோடிக்கும்
மேற்பட்ட மக்களுக்குக் காலம் காலமாகப் பயனை அள்ளி வழங்கும் ஒரு நதியாகும்.
கங்கோத்ரியில் சிறு துளியாகத் துளிர்த்து பெரும் ஜீவநதியாக உருமாறும்
இந்த நதியின் இன்றைய நிலை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கங்கோத்ரியில் இதன் தூய்மை கெடவில்லை.
பின்னர் ஹரித்வாரை அடையும் போது கங்கை நீர் நல்ல நிலையில் இருக்கிறது.
அதன் பின்னர் தொழில் நகரமான கான்பூரில் கங்கை நீர் அசுத்தமாகி
விடுகிறது. அங்கு நீரை சுத்தப்படுத்தி நன்னீராக்கும் அவசியம் ஏற்படுகிறது.
கங்கை, யமுனை, மறைந்து அந்தர்வாஹினியாக ஓடும் சரஸ்வதி ஆகிய மூன்று
நதிகளும் சங்கமிக்கும் அலஹாபாத்திலோ கங்கை நீர் கலங்கலாக இருக்கிறது.
வாரணாசி என புகழப்படும் புனித ஸ்தலத்தில் குளிப்பதற்குத் தகுதியான
நீர் என்றாலும் கூட அசுத்தத்துடனேயே இன்று பாய்கிறது.
அடுத்து பாட்னா போன்ற பகுதிகளில் குளிப்பதற்கும் குடிப்பதற்கும்
தகுதியற்ற நிலையை உடையதாக இருப்பதால் வாடர் ட்ரீட்மெண்ட் எனப்படும் நன்னீராக்கும் பணி
தேவைப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு நதியாக ஆய்வு செய்து பார்த்தால் மனிதனால் மட்டுமே
இப்படிப்பட்ட இயற்கைச் செல்வங்கள்
அசுத்தமாக்கப்படுவது தெரிய வரும். பெரும்பாலான தொழிற்சாலைக்
கழிவுகள் உள்ளிட்ட அசுத்தங்கள் தூய்மையான நீரைக் கெடுப்பதால் இந்த நதிகளில் வாழும்
ஆமை மீன் உள்ளிட்ட உயிரினங்களும் இறந்து படுகின்றன.
ஆகவே நதிக்கரையோரம் வாழும் மக்கள் புனித நதிகளைக் காக்கும் உறுதி
மொழியை எடுத்துக் கொண்டு அவற்றைக் காக்க வேண்டியது இன்றைய இன்றியமையாத அவசியமான தேவை;
அவசரமான தேவையும் கூட என்றே சொல்லலாம்!
2 days ago – அலெக்ஸாண்டர் பாதி! ஆல்கஹால் பாதி! (Post No.6162). Written by … friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) …
பர்த்ரு ஹரியின் நீதி சதகத்தைத் தொடர்ந்து காண்போம்; இதோ பாடல் 52, 53,54
அறநெறிகளையும், விதி முறைகளையும் காற்றில்
பறக்கவிட்டுவிட்டு,
கடந்தகால
தவறுகளை மறந்துவிட்டு, நல்லது
அனைத்துக்கும் எதிரே நிற்கும், குருட்டு அதிர்ஷ்டத்தில் பணம் சேர்த்த, அகந்தைமிக்க ஒருவன் அருகில் வசிப்பவன்
எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்?
கெட்டவர்கள்
பற்றி தீ நட்புஎன்னும் அதிகாரத்தில் வள்ளுவர் அழகாகச்
சொல்லுவார்:-
சொல்லும்
செயலும் வெவ்வேறாக இருப்பவர்களுடன் தொடர்பே வைத்துக்கொள்ளக்கூடாது; அது கன்aவிலும் துன்பம் தரும்- 819
கனவினும்
இன்னாது மன்னோ வினை வேறு
சொல்வேறுபட்டார்
தொடர்பு-819
Xxxxxxxxxxxxxxxxxxx
பாடல்
53
காலையில்
நிழல் நீளமாக விழும்; நேரம்
செல்லச் செல்ல குறுகிக் கொண்டே போகும்;
பிற்பகலில்
விழும் நிழல் சின்னதாக இருக்கும் ஆனால் நேரம் ஆக ஆக வளர்ந்துகொண்டே போகும்;
இதே
போலத்தான் தீயோர் தொடர்பும் நல்லோர் தொடர்பும்.
आरम्भगुर्वी क्षयिणी क्रमेण
लघ्वी पुरा वृद्धिमती च पश्चात् ।
दिनस्य पूर्वार्धपरार्धभिन्ना
छायेव मैत्री खलसज्जनानाम् ॥ 1.53 ॥
ஆரம்பகுர்வீக்ஷயிணீ
க்ரமேண
லக்வீபுரா
வ்ருத்திமதீச பஸ்சாத்
தினஸ்ய
பூர்வதர்பரார்தபின்னா
சாயேவ
மைத்ரீ கல ஸஜ்ஜனானாம்
இந்திய
தத்துவஞான கருத்துக்களை 2500 ஆண்டுகளுக்கு
முன்னர் கிரேக்க நாட்டில் வெளியிட்ட பிதகோரஸின் ஐந்து முக்கியக் கொள்கைகளில் ஒன்று
மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான குணங்கள் நட்பும் அடக்கமும்தான் என்பதாகும்.
தமிழ்
நூல்களும் நட்புறவை,
குறிப்பாக
நல்ல நண்பர் உறவை,
மிகவும்
வலியுறுத்துகின்றன. பர்த்ருஹரி நிழல் உவமையைப் பயன்படுத்தினார்.
திருவள்ளுவர்
தமிழ் வேதமான திருக்குறளில் பிறை நிலவு
உவமையைப் பயன் படுத்துகிறார்:-
நிறை
நீர நிரவர் கேண்மை பிறைமதிப்
பின்
நீர பேதையார் நட்பு – குறள் 782
அறிவுடையார்
நட்பு வளர்பிறை போல நாளுக்கு நாள் வளரும்; அறிவில்லாதார் நட்பு, தேய் பிறை நிலவு போல நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டே போகும் என்று
திருவள்ளுவர் சொல்வார்.
Xxxxxxxxxxxxxxxxx
பாடல் 54
மான், மீன், நல்லோன் ஆகியோர் புல், தண்ணீர், திருப்தி ஆகியவற்றின் மூலமே சந்தோஷம்
அடைகின்றனர் (ஆயினும் அவர்களுக்கும் எதிரிகள் உண்டு). வேடனும், மீனவனும், தீயோனும் காரணமில்லாமல் அவர்களிடம்
விரோதம் பாராட்டுகின்றனர்.
மிருகங்கள், பறவைகளைக்கொண்டு நீதி போதிப்பது பாகவத காலத்தில்
இருந்து திருவள்ளுவர் காலம் வரை இருக்கிறது.பர்த்ருஹரியும் காரணமின்றி பகைமை பாராட்டுவதை
விளக்க அந்த உத்தியைப்பயன்படுத்துகிறார்.
காக்கை போல கரைந்து உண்ணுதல்,நாய் போல நன்றி செலுத்துதல் என்பன அடிக்கடி வரும். ஆனால் பர்த்ருஹரி வே றுகோணத்தில் இருந்து பார்க்கிறார்.