இந்துக்கள் பாம்புகளை கும்பிடுவது ஏன்? விஞ்ஞான விளக்கம் (Post No.5293)

Written by London swaminathan

Date: 6 August 2018

 

Time uploaded in London – 9-51 AM  (British Summer Time)

 

Post No. 5293

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

இந்த ஆண்டு (2018) ஆகஸ்ட் 15ம் தேதி நாக பஞ்சமி வருகிறது. நாடு முழுதும் இந்துக்கள் பாம்புகளைக் கும்பிடுவார்கள்.

நாக பஞ்சமி என்றால் என்ன?

எப்போது?

ஏன் பாம்புகளை வழிபட வேண்டும்?

இது பற்றிய இரண்டு கதைகள் என்ன?

கொஞ்சம் ஆராய்சி செய்வோமா?

 

சில பகுதிகளில் நாக பஞ்சமியை ஒரு மாதம் வரை கொண்டாடுகிறார்கள். ஆடி மாத பஞ்சமியிலிருந்து ஆவணி சுக்ல பக்ஷ பஞ்சமி வரை கொண்டாடுகிறார்கள்.

 

நாக பஞ்சமி தினத்தன்று என்ன செய்வார்கள்?

பாம்புகளை வழிபடுவார்கள்;

 

பாம்புப் புற்றுகளில் பால் வார்ப்பார்கள்

 

பாம்பு, பறவைகளின் படங்களை சுவர்களிலும் கோலங்களிலும் வரைவார்கள்.

 

பருப்பு, கோதுமைகளை அரைத்து அதில் புல்லை முக்கி பாம்பு போல செய்வார்கள். அத்தோடு இனிப்புகளைப் பாம்புப் புற்றுகளில் இடுவார்கள்.

 

மானஸா தேவி என்னும் நாக தேவதையை வழிபடுவார்கள்

 

நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வழக்கம் இருக்கிறது

 

இது பற்றி இரண்டு கதைகள் உண்டு

ஒரு பிராஹ்மணப் பையனை பாம்பு கடித்து விட்டது. அவனைக் காப்பாற்ற அவனது இரண்டு சஹோதரிகளும் மானஸாதேவியை வழிபட்டனர். அந்தப் பையனுக்கு மீண்டும் உயிர் வந்தது. அவனும் சஹோதரிகளுக்கு விருந்து வைத்தான் ஆகையால் இது சஹோதர-சஹோதரி விருந்து நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

 

இரண்டாவது சம்பவம்

 

சந்த் என்ற வணிகனுக்கு மானஸா தேவி மேல் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. அவனது ஒவ்வொரு குழந்தையும் பாம்பு கடித்து இறந்தபோதும் அவன் வழிபட மறுத்தான். மீண்டும் ஒரு மகன் பிறந்தான்.

அந்த மகனுக்கு கல்யாண நாள் நிச்சயிக்கப்பட்டது. அந்த தினத்தில் மானஸா தேவி அந்த வணிகனுக்குப் பாடம் கற்பிக்க அந்த மணமகனைக் கடித்தாள்; அதாவது பாம்பு கடித்து அந்த மணமகன் இறந்தான்.

 

ஆனால் புது மணப்பெண், அந்த சடலத்தை எரிக்க வேண்டாம் என்று சொல்லி விரதம் இருந்தாள். அவளும் உடல் இளைத்து எலும்புக்கூடாகும் தருணத்தில் மானஸா தேவி மனம் இறங்கி அருள் பாலித்தாள். பிண மகன் மீண்டும் மணமகன் ஆனான். வணிகன் பெயர் சந்த். மணமகனை மீட்ட கற்புக்கரஸியின் பெயர் வெஹுலா.

 

இப்படி நாடு முழுதும் பாம்புக்கடி மரணங்களும் அவர்கள் மீண்டு வந்த அற்புதங்களும் உண்டு. நாயன்மார் ஆழ்வார் கதைகளிலும் பாம்புக் கதைகள் இருக்கின்றன. இவற்றைத் தனியே எழுதியுள்ளேன்.

 

நாக பஞ்சமி மூலம் இந்துக்கள் எப்படி இயற்கையைப் பாதுகாக்கிறார்கள், போற்றுகிறார்கள் என்று இப்பொழுது வெளிநாட்டினரும் புகழத் துவங்கி விட்டார்கள்; அறிவியல் ரீதியில் பார்த்தால் பெரும்பாலான பாம்புகள் விஷமற்றவை. மக்களின் பயமும் பீதியும் வெளியாட்களின் பிரச்சனையும் தான் சிக்கலை உருவாக்குகிறது. மேலும் பாம்புகள் மனிதனின் எதிரிகள் அல்ல;  தானாக வந்து எவரையும் தாக்குவதில்லை. அதைத் தாக்கும்போதோ மிதிக்கும்போதோ அவை தற்காப்புக்காகத் திருப்பித் தாக்குகின்றன. குழந்தைகளும் பாம்புகளும் விளையாடும் படங்களைப் பார்க்கிறோம்; ஏனெனில் அவை நண்பனுக்கு நண்பன்; எதிரிக்கு எதிரி.

 

150 ஆண்டுகளுக்கு முன் வெளியான வெள்ளைக்காரர் புஸ்தகங்களில் சில படங்கள் இருக்கும்;

 

காளி கோவிலில் குழந்தைகளைப் பலி கொடுக்கும் படம்

பெண்களை, கணவனின் சிதையில் தூக்கி எறியும் படம்

மரங்களையும் பாம்புகளையும் பெண்கள் வழிபடும் படம்

 

இப்பொழுதும் இவைகள் பழைய புஸ்தகங்களிலும் பத்திரிக்கைகளிலும் உள. நான் அடிக்கடி லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியிலும் லண்டன் யுனிவெர்ஸிட்டி லைப்ரரியிலும் பார்த்துப் பார்த்துச் சிரிப்பேன்;

 

இவை எல்லாம் உண்மையில் நடந்திருந்தால் இன்று இந்துக்களே உலகில் இருந்திருக்க மாட்டார்கள். கோடியில் ஒன்று நடந்தது உண்மைதான். இன்று மேலை நாடுகளில் இதைவிடக் கூடுதல் கொடுமைகள் நடப்பதை லண்டனில் பத்திரிக்கைகளில் தினமும் படிக்கிறோம்.

 

ஏனைய விஷயங்களை புறத்தே ஒதுக்கி வைத்து விட்டு பாம்பு வழிபாடு பற்றி மட்டும் பார்ப்போம்.

 

உலகில்  அறிவியல் அடிப்படையில் அமைந்த மதம் இந்து மதம்; எல்லாப் பண்டிகைகளுக்கும் அறிவியல் விளக்கம் உண்டு.

இந்தியா ஒரு விவசாய நாடு. மக்களின் மிகப்பெரிய தொழில் விவசாயம்.

உழுதுண்டூ வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர் (குறள் 1033)

உழவர்களே  தன்னுரிமையோடு வாழ்வார்கள்; மற்றெல்லோரும் பிறர் முன்னால் கைகட்டி, வாய் புதைத்து வாழ்பவர்கள்; இயல்பாகவே உழவர் பின்னால் செல்பவர்கள்.

 

விவசாய உற்பத்தி குறைந்தால் பஞ்சம் வெடிக்கும்; அராஜகம் பிறக்கும் ஆகையால் விவசாய உற்பத்தியைப் பாதுகாப்பது அவசியம்.

எலிகள் மூலம் ஏற்படும் சேதம் மிக மிக அதிகம். அதோடு பூச்சிகளும் சேதம் விளைவிக்கும். இவைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது பாம்புகளே (Vital link in the food production chain) .

 

ஆதிகாலத்தில் வீட்டுக்குள் பாம்புகளைக் கண்டாலும் கூட அவைகளைக் கொல்ல மாட்டார்கள். பானைக்குள் அல்லது பெ ட் டிக்குள் பிடித்து வயற்காட்டில் விட்டு விடுவார்கள் அல்லது பாம்புப் பிடாரனை அழைத்து அவன் கையில் அந்தப் பணியை ஒப்படைப்பர்.

வயல் வெளிக்குள் நடந்து செல்வோரும் இரவில் ஒத்தையடிப் பாதையில் வருவோரும் கைகளைத் தட்டிக்கொண்டே வருவர் பாம்புகள் விலகி ஓடி விடும்! (பாம்புகளுக்கு காதுகள் உண்டா? அவைகளால் கேட்க முடியுமா என்பதை வேறு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கிவிட்டேன்; அதன் விஞ்ஞான விளக்கத்தை கட்செவி (கண்ணே செவி/காது) என்னும் ஆய்வுக் கட்டுரையில் காண்க)

ஆக எலிகளைக் கொல்ல பாம்புகள் உரிய அளவில் இருக்க வேண்டும் என்பது இந்துக்கள் அறிந்த உண்மை.

 

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி; ஆனால் நல்லோர் அவையில் புகுந்த பாம்புகளையும் அவர்கள் கொல்ல மாட்டார்கள் என்று ஸம்ஸ்க்ருத, தமிழ்ப் பாடல்கள் சொல்லும். ஆக பாம்புகளின் மீதுள்ள பயத்தை எப்படிப் போக்குவது?

குறிப்பாக பெண்களும் சிறுவர்களும் பயப்படுவர். ஆண்டு தோறும் பண்டிகை நடத்தி நாக பஞ்சமி கொண்டாடுவதன் மூலமும் வெள்ளிக் கிழமைதோறும் புற்றிலுள்ள பாம்புகளுக்குப் பால் வார்ப்பதன் மூலமும், நாக பஞ்சமி தினத்தன்று பாம்பு படங்களைக் கோலம் வரைபடம் ஆகியவற்றில் வரைவதன் மூலமும், கோவில் தோறும் நாகர் சிலைகளை வைப்பதன் மூலமும் மக்களை உளவியல் ரீதியில் (psychologically prepared)  இந்துக்கள் தயார்படுத்த்தினர்.

பாம்புகளைக் கட்டித் தழுவுங்கள்; கொஞ்சிக் குலவுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை; அதை அவஸியமின்றி அடித்துக் கொன்று அழிக்காதீர்கள்; அவைகளையும் இயற்கை எனும் சங்கிலியில் ஒரு வளையம் என்பதை உணருங்கள்.

 

பாம்புகளை அழித்தால் வயல் வெளியில் எலிகள் பெருகும்; எலிகள் பெருகினால் உணவு உற்பத்தி குறையும்.

 

வாழ்க நாக பஞ்சமி; வளர்க நாகங்கள் (புற்றுக்குள் மட்டும்)!!!

–subham–

 

தமிழில் ஒட்டக மர்மம்!- PART 1 (Post No.5290)

RESEARCH ARTICLE Written by London swaminathan

Date: 5 August 2018

 

Time uploaded in London – 14-03  (British Summer Time)

 

Post No. 5290

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஒட்டக ஆராய்ச்சியில் வரும் விஷயங்கள்

 

ரிக்வேதத்தில் ஒட்டகம்

பாணினியின் இலக்கண நூலில் ஒட்டகம்

பைபிளில் ஒட்டகம்

சங்க இலக்கியத்தில் ஒட்டகம்

தொல்காப்பியத்தில் ஒட்டகம்

சிலப்பதிகாரத்தில் ஒட்டகம்??

காளிதாசனில் ஒட்டகம்

ஸம்ஸ்க்ருதக் கதை  நூல்களில் ஒட்டகம்

அமர கோஷத்தில் ஒட்டகம்

மஹாபாரதத்தில் ஒட்டகம்

மனு ஸ்ம்ருதியில் ஒட்டகம்

சிந்து சமவெளியில் ஒட்டகம்

அகராதி, நிகண்டுக்களில் ஒட்டகம்

ஒட்டக வாஹனம்

எனது முடிபு

 

கட்டுரை இரண்டு பகுதிகளாக வருகின்றது; இதோ முதல் பகுதி:-

சங்க இலக்கியத்தில் சிறுபாணாற்றுப் படையிலும் அக நானூற்றிலும், ஒட்டகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஒட்டகம் என்பது பாலைவன மிருகம். மேலும் உஷ் ட் ர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லே இப்படி ஒட்டை, ஒட்டகம் என்று மருவியது.

 

சிறுபாணாற்றுப்படை சங்க காலத்தின் முடிவில் தோன்றிய நூல். ஆகவே பொது ஆண்டு 300 முதல் 400-க்குள் இருக்கலாம். பிற்கால இலக்கியத்திலும் கூட ஒட்டகம் பற்றிய குறிப்புகள் சிலவே.

 

பனி நீர்ப்படுவின் பட்டினம் படரின்

ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன

வீங்கு திரை கொணர்ந்த விரைமர விறகின்

1153-155 சிறு பாணாற்றுப்படை

 

பொருள்

கடல் நீர் அலைகள் எயிற்பாட்டினக் கரையில் அகில் கட்டைகளைக் கொண்டுவந்து ஒதுக்கின. அக்கட்டைகள் ஒட்டகம் உறங்குவது போலக் காட்சி தந்தன.

 

 

தொல்காப்பியத்தில் ஒட்டகம் வருகிறது

 

சூத்திரம் 1517

‘ஒட்டகம் அவற்றொடு ஒருவழி நிலையும்………………….’

ஒட்டகத்தின் குட்டியையும் கன்று எனலாம்

 

சூத்திரம் 1552

‘ஒட்டகம், குதிரை, கழுதை, மரை இவை

பெட்டை என்னும் பெயர்க் கொடைக்கு உரிய’

ஒட்டகம், குதிரை, கழுதை, மரைமான் ஆகியவற்றின் பெண்பால்- பெட்டை என்ற பெயர் பெறும். அதாவது ஒட்டகப் பெட்டை என்றால் அது பெண் ஒட்டகம்.

 

ஆக தொல்காப்பியர் காலத்திலேயே ‘உஷ்ட்ற’ என்பது தமிழில் ஒட்டகம் ஆகிவிட்டது.

XXX

 

அகநானூற்றில் ஒட்டகம்

முள் தின்றதா? எலும்பு தின்றதா?

 

அகநானூற்றில் மருதன் இளநாகனார் பாடிய பாடலில்

“குறும்பொறை உணங்கும் ததர் வெள் என்பு

கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்

கல்நெடுங் கவலைய கானம் நீந்தி,

அம்மா அரிவை ஒழிய– அகம்.245

 

இந்த வரிகளின் பொருள்

 

பாறையில் உதிர்ந்து கிடக்கும் இலவ மலர்கள் காய்ந்து எலும்புகள் போலக் காட்சி தரும். அவைகளை ஒட்டகங்கள் சாப்பிட்டுப் பசியைத் தீர்த்துக்கொள்ளும்.

 

இந்தப் பாடல் வரிகளை ஒட்டகம் எலும்பு சாப்பிட்டதாக் கொண்டோரும் உண்டு. ஆனால் ஒட்டகங்கள் சாக பட்சினிகள்; அவை எலும்பு தின்னாது.

 

ஆக எலும்பு போலக் காய்ந்த பூக்கள் அல்லது பூக்களைத் தாங்கிய , காய்ந்த சுள்ளிகள் என்றே கொள்ளல் வேண்டும்.

அகநானூறு, சிறுபாணாற்றுப் படை, தொல்காப்பியம் ஆகியவற்றில் ஒட்டகம் வருவதால் அக்காலத்தில் பாலைவனப் பகுதி மிருகமான ஒட்டகம் தமிழகம் வந்தது என்று கொள்ளவேண்டும். இல்லாவிடில் அதற்குத் தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பியர் இடம் தந்திருக்க மாட்டார்!

XXXX

 

கோவேறுக் கழுதையில் கோவலன்

 

சிலப்பதிகாரத்தில் கோவலன் அத்திரி மீது சவாரி செய்ததாக ஒரு செய்தி உண்டு; அத்திரி என்றால் கழுதை, ஒட்டகம் என்று இரு பொருள் உண்டு. கோவலன் போன்ற பெரிய வணிகன் கழுதை மேல் சவாரி செய்தான் என்பதை விட ஒட்டகத்தின் மீது சென்றான் என்று பொருள் கொள்வது பொருந்தும்

 

பூம்புகாரில் பௌர்ணமி நாளன்று நடந்தது என்ன?

 

வான வண்கையன் அத்திரி ஏற

மான் அமர் நோக்கியும் வையம் ஏறிக்

கோடி பல அடுக்கிய கொழிநிதிக் குப்பை………………………

 

–கடலாடு காதை, சிலப்பதிகாரம்

 

பொருள்

வானத்து மழைபோல வழங்கும் கைகளை உடைய கோவலன், கோவேறுக் கழுதையின் மீது ஏறிக்கொண்டான்; மான் போன்ற பார்வையுடைய மாதவி மூடு வண்டியில் ஏறிக்கொண்டாள்; கோடிக் கணக்கான பொருள் உடைய வணிகரின் மாட வீதிகளைக் கடந்து சென்றனர்.

 

இதில் அத்திரி என்பதைக் கழுதை என்று உரைகாரர்கள் வியாக்கியானம் செய்த போதும் அத்திரி என்பதற்கு ஒட்டகம் என்றும் பொருள் உண்டு. ஆக கோவலன் ஒட்டகம் மீது ஏறிக் கடலாடச் சென்றான் என்றும் பொருள் சொல்ல முடியும்.

 

மதுரையில் ஒட்டக பவனி

 

மதுரை மீனாட்சி கோவிலில் சுவாமியும் அம்மனும் பவனி வருகையில் ஒட்டகம் யானை டமாரம் (முரசு) ஏந்திய மாடு முதலில் பவனி வரும் அவைகளுக்குப் பின்னர் சுந்தரேசரும் மீனாட்சி அம்மனும் பவனி வருவர்.

 

எருது ஒட்டகம், எருமை ஆகியவற்றுக்கும் திமில் இருந்தாலும் திமில் உள்ள மிருகம் என்றால் அது ஒட்டகத்தையே குறிக்கும். மாடு, ஆடு ஆகியவற்றுக்குக் கொம்புகள் இருந்தாலும் கொம்பு மிருகம் என்றால் அது காண்டா மிருகத்தையே குறிப்பது போல!

 

அகராதி, நிகண்டுக்களில்

ஒட்டகத்தின் தமிழ் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்

ஒட்டகம், ஒட்டை, அத்திரி, இரவணம், கனகதம், தாசோகம், நெடுங்கழுத்தன், உஷ் ட் ர,  க்ரமேல (இதிலிருந்து கேமல் CAMEL என்ற ஆங்கிலச் சொல் வந்தது; அராபிய மொழியில் கமல், கமலா என்று இருப்பதால்  அங்கிருந்தும் ஸம்ஸ்க்ருத்ததுக்கு வந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது.)

 

அமர கோசம் என்னும் புகழ் பெற்ற ஸம்ஸ்க்ருத நிகண்டில்

பெண் ஒட்டகத்துக்கு உஷ்ட்ரி கா (ம்ருத்தாண்டே) என்ற பெயர் உள்ளது

க்ரமேல, மய, மஹாங்காஹா, கரபஹ, தீர்க்கக்ரீவ, த்விகுடஹ, சரபஹ என்ற பெயர்கள் உள்ளன.

தமிழில் தாசேரம், நெடுங்கோணி, அயவனம், கூன்புறம் என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இவைகளில் பெரும்பாலானவை ஸம்ஸ்க்ருதப் பெயர்களே!

குட்டியாக இருந்தால்

கரபாஹா, ஸ்யுஹு, ஸ்ருல்லகா, தாரவைஹி, பாத பந்தனைஹி என்றும் உள்ளது.

 

TO BE CONTINUED………………………….

 

–SUBHAM–

இயற்கை வளத்தைப் பாதுகாப்போம்! (Post No.5279)

Written by S NAGARAJAN

Date: 2 August 2018

 

Time uploaded in London – 5-48 am    (British Summer Time)

 

Post No. 5279

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலையில் ஒலிபரப்பிய சுற்றுப்புறச் சூழல் உரைகளில் நான்காவது உரை

இயற்கை வளத்தைப் பாதுகாப்போம்!

இயற்கை வளத்தை இடையறாது மனிதன் அழித்து வருவதால் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவும், குடிநீரும் பற்றாக்குறையாக் இருக்கும் இழிநிலை ஏற்பட்டுள்ளது.

 

நாம் சுவாசிக்கும் காற்றும், உண்ணும் உணவும், நம்மை நோய்களிலிருந்து காக்கும் அரிய வகை மூலிகைகளும், உயிர் வாழ இன்றியமையாத நீரும்,  தாவர வளமும் விலங்கு வளமும் இல்லாமல் இருக்காது. ஆக ஒன்றை ஒன்று சார்ந்த தாவர மற்றும் விலங்கு வளம் காக்கப்பட வேண்டியது சுற்றுப்புறச் சூழலின் சமச்சீர்த்தன்மைக்கு இன்றியமையாதது.

 

பண்டாக்கள் (Pandas) மட்டுமே மூங்கில் தளிர்களை உண்ணும். சீனாவில் மூங்கில் காடுகள் அழிக்கப்படவே அங்கு பண்டா இனமே இல்லாமல் போனது. சீனாவில் காடுகள் அழிக்கப்பட்டபோது புலிகள் வாழ இடமில்லாமல் அவை தவிக்க ஆரம்பித்தன. அவற்றை பெருமளவில் மக்கள் கொன்று குவித்தனர். தப்பிப் பிழைத்த புலிகள், ஆப்பிரிக்க காடுகளுக்கு அனுப்பப்படவே அவை அங்கு மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தன. ஆகவே காட்டு வளம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை அனைவரும் உணர முடியும்.

 

பயோடைவர்ஸிடி எனப்படும் உயிரினவகை வேறுபாட்டில் ஏற்படும் இழப்பு பல்வேறு அபாயங்களை ஏற்படுத்தும். ஆசியா பசிப்பிகில் இன்று மிக அதிக அளவில் இருக்கும் மீன் வகைகள் 2048இல் ஒன்று கூட இருக்காது; அமெரிக்காவில் குடிநீர் தட்டுப்பாடு, ஐரோப்பாவில் 42% சதவிகிதம் உயிரினங்களின் இழப்பு ஆகியவை இயற்கை வளத்திற்கு மனிதன் ஏற்படுத்திய கேட்டினால் உருவானவையே.

பிரான்ஸில் பறவை இனங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

 

உயிரினவகை வேறுபாடு பற்றிய ஒரு ஆய்வு நூறு நாடுகளைச் சேர்ந்த 550 நிபுணர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. ஆய்வை முடிக்க மூன்று வருடங்கள் ஆயின. 129 நாடுகளின் அரசுகளினால் அங்கீகரிக்கப்பட்ட உயிரின வகை வேறுபாடு பற்றிய அறிக்கை உலகளாவிய விதத்தில் செயல்படுத்தும் ஒரு செயல் திட்டத்திற்கான அடிப்படை விஷயங்களை முன் வைக்கிறது.

 

பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருவதற்கான முக்கிய காரணம் வேட்டையாடுதலே. சீதோஷ்ண நிலை மாறுதல், உலகம் வெப்பமயமாதல், விஷ வாயுக்கள் மற்றும் அபாயகரமான நச்சுப் பொருள்கள் ஆகியவையும் இதர பல காரணங்களாகும்.

 

350 கோடி வருடங்களாக பல்வேறு ஜீவராசிகள் பூமியில் இருந்து வந்துள்ளன. அவற்றில் 95 விழுக்காடு இன்று இல்லாமல் போய் விட்டன. உலகளாவிய விதத்தில் இப்படி பல்வகை உயிரினங்கள் இல்லாமல் போவது சாதாரண காலத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது.

 

ஆகவே மிருக மற்றும் தாவர வகைகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும்.

 

***

 

அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்போம்! (Post No.5270)

Written by S NAGARAJAN

 

Date: 30 JULY 2018

 

Time uploaded in London –   68-49 am (British Summer Time)

 

Post No. 5270

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சென்னை வானொலி நிலையம் ஏ அலை வரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலை 6.55 மணிக்கு சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய ஒலிபரப்பில் இடம் பெற்ற மூன்றாவது கட்டுரை!

அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்போம்!

நவீன் தொழில்நுட்பம் வளர்ந்து உலகமே சுருங்கி விட்ட நிலையில் மனிதகுலத்தின் வளர்ச்சியை மட்டுமே மனிதர்கள் எண்ணாமல் உலகளாவிய பல்லுயிர் சமுதாயத்தில் தாங்களும் ஒரு அங்கமே என்று எண்ணி செயல்பட வேண்டும்.

 

பூமியில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களில் மனித இனமும் ஒன்று என்ற எண்ணத்துடன் மிருக இனங்கள், பறவை இனங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றைக் காத்து அவற்றுடன் இணக்கமாக வாழ்ந்து சுற்றுப்புறச் சூழலை சிறப்பாகப் பேணிக் காக்க வேண்டியது மனிதனின் கடமை.

 

ஆனால் இன்றைய நிலையில் தேனிக்கள் மற்றும் சிட்டுக்குருவியிலிருந்து பல உயிரினங்கள் வேகமாக அழிந்து பட்டு வருகின்றன. பல்வேறு உயிர்களும் ஒன்றுடன் ஒன்று இணக்கமாக வாழ்ந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும்.

 

சீதோஷ்ண நிலை மாறுதல், கடல் மட்டம் உயர்தல், விண்கற்கள் மோதுதல், மனித ஜனத்தொகை வெகு வேகமாக அதிகரித்து வருதல், சுற்றுப்புறச் சூழ்நிலை கேடு, உலகம் வெப்பமயமாதல், அரிய உயிரினங்களை வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பல மிருக, பறவையினங்கள் அருகி வருகின்றன.

 

இயற்கை சீற்றங்களினாலும் இப்படிப்பட்ட உயிரினங்கள் சில சமயம் அழிந்து பட்டாலும் மனிதனின் செயல்பாடுகளே இவை பெருமளவு அழியக் காரணம் என்பது வெளிப்படையான உண்மை.

 

பழைய காலத்தை விட நூறு மடங்கு அதிகமாக இவை அழிகின்றன என்பது வருத்தமூட்டும் ஒரு உண்மை. இது இன்னும் பத்து மடங்கு அதிகமாகும் என்பது நிபுணர்களின் கருத்து.

 

இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் வாழும் பெங்குயின்கள் வேகமாக அழிந்து வருகின்றன. உலகம் வெப்பமயமாதலும், நீரின் உஷ்ணநிலை நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும் உணவுக்கு வழியின்றி இவை தவிக்கின்றன

 

அடுத்து இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் வாழும் டுனா (BigeyeTuna) வகை மீன்கள் அருகி வருகின்றன. இவை வணிக ரீதியில் விற்கப்படுபவை. இவற்றைத் தொடர்ந்து வேட்டையாடிப் பிடிப்பதால் இவற்றின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. கடலின் சுற்றுப்புறச் சூழலுக்கு இன்றியமையாத இந்த மீன்கள் அருகி வருவது சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் கேட்டை விளைவிக்கும்.

 

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இந்தியாவின் வட பகுதியிலும் நேப்பாளத்திலும் காணப்படும் அரிய வகை மிருகம். இவற்றை வேட்டையாடுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவை வசிக்கும் பகுதிகளில் சுற்றுப்புறச்சூழல் சமச்சீருடன் இருக்க இவையே காரணமாகும். இவை மறைந்தால் பல உயிரினங்களும் சேர்ந்து மறையும்.

 

கலபாகாஸ் தீவில் காணப்படும் பெரிய ஆமை, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான்,சிலி ஆகிய நாடுகளின் கடற்புரங்களில் வாழும் பெரிய வெள்ளைச் சுறா உள்ளிட்டவை அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் மிகவும் அருகி வருகின்றன.

 

ஆர்க்டிக் பகுதிகளில் வாழும் துருவக் கரடிகள் உலகம் வெப்பமயமாகும் அபாயத்தால் அழிந்து வருகின்றன. இவற்றைத் தொடர்ந்து வேட்டையாடுவது தடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் இவற்றைப் பார்ப்பது இயலாது. ஆப்பிரிக்காவிற்கே பெருமை தேடித் தரும் ஆப்பிரிக்க யானைகள் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மனிதர்கள் காட்டுப் பகுதியை குடியிருப்பாக ஆக்குவதாலும், வேட்டையாடுவதாலும் இவற்றின் எண்ணிக்கை வேகமாக  குறைந்து வருகிறது.

 

இந்த அரிய உயிரினங்களை மனித இனம் பாதுகாத்தால் மட்டுமே அவை அழியாமல் இருக்கும்; அத்துடன் சுற்றுப்புறச் சூழல் சிறப்பானதாகவும் அமையும்.

***

இமய மலை ரஹஸியங்கள்! (Post No.5240)

WRITTEN by London swaminathan

Date: 20 JULY 2018

 

Time uploaded in London – 18-29  (British Summer Time)

 

Post No. 5240

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

இமயமலை முழுதும் ரஹஸியங்கள், மர்மங்கள் இருக்கின்றன!

 

அமர்நாத்தில் ஒரு குகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய பனிக்கட்டி லிங்கம் உருவாகும்; இது ஒரு இயற்கை நிகழ்வு என்றாலும் இப்படி பனி லிங்கமாகக் காட்சி தருவது மக்களின் பக்தி உணர்வை தூண்டி விடுகிறது. காஷ்மீரில் உள்ள முகமது நபியின் தலை (HAIR) முடியும், இதாலியில் டூரின் (TURIN) நகரில் உள்ள ஏசு மீது போர்த்திய ஆடையும் லட்சக் கணகான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்குமானால் அதிசயமாக உருவாகி மறையும் பனி லிங்கம் ஈர்க்காதா?

பிரம்ம கமலம் எனப்படும் அபூர்வ மலர்!!

நந்த தேவி என்னும் மிகப் பெரிய மலைச் சிகரம்!!

உலகிலேயே உயரமான எவரெஸ்ட்!!

 

புறநானூறு புகழும் காஞ்சன ச்ருங்கம் (பொற்கோட்டு இமயம்; இதைப் புலவர்கள் அப்படியே தமிழ்ப் படுத்திவிட்டனர்)

 

பனி மனிதன் எனப்படும் யேட்டி (YETI= SNOWMAN)

 

அதிசயம் நிகழும் மானஸரோவர் ஏரி; கங்கை, பிரம்மபுத்ரா, சிந்து ஆகிய மாபெரும் புனித நதிகள் புறப்படும் இடம் அருகருகே உள்ளன.

 

மணம் பரப்பும் கஸ்தூரி மான்!!

காஷ்மீரின் குங்குமப் பூ!!

புத்த சந்யாசிகள் வாழும் மலைக் குகைகள்!!

 

உபநிஷத முனிவர்கள் வாழ்ந்த அடர்ந்த கானகங்கள்!!

 

கிரேட் இண்டியன் பஸ்டார்ட் (GREAT INDIAN BUSTARD) எனப்படும் உயர்ந்த கொக்கு வகை!!

சைபீரியாவிலிருந்து குடியேறும் ரஷ்யப் பறவைகள்!

அரிய பெரிய வனவிலங்குகள்!

ஆர்க்கிடுகள் (ORCHIDS) எனப்படும் அபூர்வ மலர்கள்!

நேபாளத்தில் குமாரி எனப்படும் வாழும் சிறுமி!

எண்ணற்ற கோவில்கள்- கேதார் நாத்,பத்ரி நாத், கைலாஷ், வைஷ்ணவி தேவி குகைக் கோயில், பாதாள புவனேஷ்வர், ரிஷி கேஷ், ஹரித்வார்!!!

இப்படி நூற்றுக் கணக்கில் அடுக்கலாம். ஒரு சில விஷயங்களை மட்டும் இன்று காண்போம்.

XXX

32 சாமுத்ரிகா லக்ஷணம்!

நேபாள நாட்டில் குமாரி என்னும் ஒரு இளம் பெண், கடவுளின் அம்சம் உள்ளவராகத் தேர்ந்தெடுக்கப்பட் டு வழிபடப்படுகிறார். 32 சாமுத்ரிகா லக்ஷணங்கள் உடைய ஒரு சிறுமி இப்படிக் குமாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் பருவம் எய்திவிட்டால் அவர் மீதுள்ள தெய்வாம்சம் போய்விட்டது எனப் பொருள்; வேறு ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவாள். முன்னொரு காலத்தில் திரைக்குப் பின்னால் கடவுள் இருப்பதாக எண்ணி நேபாள மன்னர்கள் ஆட்சி செய்தனர். ஒரு மன்னருக்கு ஆர்வம் தாங்கவில்லை. திரைக்குப் பின்னால் இருப்பது தேவியா இல்லையா என்ற புதிருக்கு விடை காண திரையைத் திறந்தார். பின்னால் இருந்த இறைவிக்குக் கோபம் வரவே என்மீது சந்தேகப் பட்டாயா? இனிமேல் நீயே ஒரு சிறுமியைத் தேர்ந்து எடுத்து அவளைக் கண்ணால் பார்த்துக்கொள். நான் அவள் மூலம் உனக்கு அருள் புரிவேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

 

மன்னருக்கும் சந்தோஷம்! கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல இருக்கிறது என்று குமாரியைத் தேர்ந்தெடுக்கும் பழக்கம் நடை முறைக்கு வந்தது. நேபாள மன்னர்கள் அந்தச் சிறுமியிடம் ஆசி பெறுவது நடைமுறை.

 

தேர்ந்தெடுக்கப்படும் சிறுமிக்கு மென் தோல், சீரான பல் வரிசை, அழகிய கரு முடி, கரு விழி, சரியான விரல்கள், ரேகைகள் முதலிய இருக்கிறதா என்று இதற்கான பெண்கள் சோதிப்பர்.

 

இந்தியாவில் கன்யா ஸ்த்ரீக்களை இந்துக்கள் வழிபடுவது தென்னாட்டிலும் உண்டு. ஆயினும் அவை ஒரு சில விழா நாட்களில் மட்டும்தான்; நேபாளம் போல நிரந்தரமாக அல்ல.

நந்த தேவி ரஹஸியம்

 

இந்தியாவில் உள்ள இரண்டாவது பெரிய சிகரம் நந்த தேவி; இது ஒரு இறைவியின் பெயர். வரம் தரும் தேவி என்பது இதன் பொருள். தங்கச் சிகரம் என்று அழைக்கப்படும் பொற்கோட்டு இமயம் ‘’காஞ்சன ச்ருங்கம்’’ (KANJENJUNGA) இதை விட உயரமானது. நந்த தேவியின் உயரம் 25 643’.

நந்த தேவி பற்றிப் பல சுவையான கதைகள் உண்டு; இந்த சிகரத்தின் உச்சியில் அவ்வப்போது புகை கிளம்புமாம்; இதை தேவியின் சமையல் அறை என்று மலைவாழ் மக்கள் அழைப்பர். ஒரு வேளை புகை போன்ற மேகமாகவும் இருக்கலாம்.

 

ஆயினும் மலையில், குகையில், நீரில் தெய்வங்கள் உறையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை; சங்கத் தமிழ் இலக்கியம் முழுதும் பல்வேறு அணங்குகள் பற்றிப் புலவர் பெருமக்கள் பாடிச் சென்றுள்ளனர்.

 

பிரிட்டனைச் சேர்ந்த கொள்ளைக்காரர்கள்— வெள்ளைக்காரர்கள் நமது நாட்டை ஆண்ட காலத்தே, ஒருவர் நந்த தேவி சிகரம் அருகே இருந்த அலுவலகத்தை அல்மோரா என்னும் இடத்துக்கு மாற்றினார். அவருக்கு திடீர் என்று கண் குருடாகிவிட்டது. பனி வெளிச்சத்தால் இப்படி ஆவதுண்டாம். மக்கள் அனைவரும் தேவியின் கோபத்தை எடுத்துரைத்து மன்னிப்புக் கேட்க சொன்னவுடன் அவரும் அப்படியே செய்தார். பின்னர் கண் பார்வை வந்தது.

கதை ஒரு புறம் இருக்கட்டும்; இந்துக்கள் எதையுமே தெய்வம் என்று நினைப்பதால்  அதை அமெரிக்கர்கள் பிரிட்டானியர்கள் போல துஷ்பிரயோகம் செய்ய மாட்டார்கள். மலைக்கும் மடுவுக்கும், ஏரிக்கும் குளத்துக்கும் பூஜை போடுவார்கள். இதனால் இயற்கையும் மக்களை, தான் பெற்ற பிள்ளை போல பாசத்துடன் வளர்த்து அருள் சுரந்தது (அந்தக் காலத்தில்).

 

XXX

அருணாசலப் பிரதேச வாஞ்சோ பழங்குடி மக்கள் கிராமத்துக்குக் கிராமம் நடைபெறும் சண்டையில் கொல்லப்பட்டவர்களின் மண்டை  ஓடுகளைப் பரிசு பொருளாக வைத்துக்கொள்ளுவர். மலைஜாதி மக்களின் தலைவன் வீட்டில் மண்டை ஓடுகள் காட்சிக்கு வைக்கப்படும்; இவர்கள் புலிகளின் நகம், மனிதனின் நகங்கள் பற்களை அணிவர். சங்கத் தமிழ் நூல்களிலும் பற்களை அணியும், புலி நகம் அணியும் பழக்கம் பாடப்பட்டுள்ளது

picture of praying rocks.

பெரிய பிராத்தனை செய்யும் கற்களை வழிபடும் மலைகள் என்று அழைப்பர்

–சுபம்–

காதல் முக்கோணத்தில் சிக்கிய புலவன்/அரசன்! (Post No.5214)

பர்த்ருஹரி, தனது முன்னாள் மனைவியைச் சந்திக்கும் ஓவியம்

Written by London swaminathan

 

Date: 13 JULY 2018

 

Time uploaded in London – 7-42 am  (British Summer Time)

 

Post No. 5214

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்?

 

வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஒழிந்தே நிட்டையிலே

ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம்?”– —பத்ரகிரியார் புலம்பல்

 

பர்த்ருஹரி என்ற பெயரில் புலவர்களும் அரசர்களும் இலக்கிய வித்தகர்களும் இருந்தனர். விக்ரமாதித்தன் என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்தனர். பத்ரகிரியார் என்ற தமிழ் சித்தரும் பர்த்ருஹரியும் ஒரே கதை உடையவர்கள் அவருடன் பட்டினத்தாரும் சம்பந்தப்படுத்தப் படுகிறார்; ஒரே குழப்பம்!!! ஆனால் இதற்குள் ஒரு சுவையான கதை இருக்கிறது!

 

முதலில் கதையைப் படித்துவிட்டு ஆராய்ச்சியைத் தொடர்வோம்.

 

உஜ்ஜைனி நகரத்தில் பர்த்ருஹரி என்று ஒரு அரசர் இருந்தார். அவரை ஒரு பிராஹ்மணன் சந்தித்து ஒரு அற்புத பழத்தைக் கொடுத்து இதைச் சாப்பிடுவோர் நீண்ட காலம் வாழ்வர் என்றார்.

 

பர்துருஹரியின் பல மனைவியரில் இளையவர்தான் அவரது மனதைக் கவர்ந்த பேரழகி; அவள் பெயர் பிங்களா. ஆகையால் அன்புக் காதலி பிங்களாவுக்கு அந்தப் பழத்தைக் கொடுத்து “அன்பே! ஆருயிரே! தேனே! கற்கண்டே! இதை சாப்பிட்டவர் நீண்ட காலம் வாழ்வர் என்று ஒரு பெரியவர் சொன்னார். என் இதய ராணியான உனக்காக இதைக் கொண்டு வந்தேன்” என்று பகர்ந்தார்.

அவர் நாதா! உங்கள் அன்பே உலகில் பெரியது என்று சொல்லி, அதை ஒளித்து வைத்து, அவளது கள்ளலக் காதலன் போலீஸ் அதிகாரி மஹிபாலனுக்கு அளித்தாள். அவனுக்கோ பிங்களாவை விட ஒரு பேரழகி காதலி இருந்தாள் அவள் பெயர் லாகா.

 

“உலகிலேயே நீதான் அழகி” என்று சொல்லி அவளை ஏமாற்றிவிட்டு, அதை லாகாவிடம் கொடுத்தான். அவளுக்கோ மன்னர் மீதூ தீராக் காதல்! ஆறாக் காதல்! ஆகையால் அந்தப் பழத்தைக் கொண்டு வந்து

பர்த்ருகிரியாரே நீர்தான் என் இதய ராஜா; இது ஒரு அற்புத பழம். இதை ஒரு பெரியவர் எனக்குக் கொடுத்தார். இதைச் சாப்பிட்டவர் நீண்ட காலம் வாழ்வர் என்று சொல்லி பர்த்ருஹரியிடம் கொடுத்தாள்.

 

அவர் நொந்து போனார்; வெந்து போனார்; உளவாளிகள் மூலம் முக்கோணக் காதலை அறிந்தார். இந்த உலகில் நிலைத்தது காமமும் அல்ல; நமது உயிரும் அல்ல என்ற ஞானோதயம் பிறந்தது; தனது

சஹோதரனான விக்ரமாதித்யனிடம்  ஆட்சியை ஒப்படைத்து துறவியானார்.

 

இவர்தான் புகழ் பெற்ற 300 ஸம்ஸ்க்ருதப் பாடல் இயற்றிய பர்த்ருஹரியா என்பது அறிஞர்கள் விவாதிக்கும் விஷயம் ஆகும். அந்த பர்த்ருஹரி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் நீதி சதகம் 100, ச்ருங்கார சதகம் 100, வைராக்ய சதகம் 100 என்று 300 பாடல்களை ஸம்ஸ்க்ருதத்தில் மழைபோலப் பொழிந்து உலகப் புகழ் பெற்றவர்.

 

இது தவிர வாக்படீயம் முதலிய இலக்கண நூல்களை இயற்றிவர் ஒருவரும் உளர். ஆக  காலத்தால் வேறுபட்ட பர்த்ருஹரிக்கள் யார் யார், அவர்தான் பத்ர்கிரியார் எனப்படும் தமிழ் சித்தரா என்று காலாகாலமாக அறிஞர் பெருமக்கள் விவாதித்து வருகின்றனர்.பல விக்ரமாதித்யன்கள்; பல பர்த்ருஹரிக்கள்; கொஞ்சம் குழப்பம்தான்.

 

எது எப்படியாகிலும் சுவையான கதையுடன் ‘வாழ்க்கை நிலையாமை’ பற்றிய செய்தியும் கிடைக்கிறது. ‘வாழ்க்கை நிலையாமை’ பற்றிப் பாடாத தமிழ்ப் புலவரோ ஸம்ஸ்க்ருதப் புலவரோ இல்லை.

xxx

பர்த்ருஹரி, தனது முன்னாள் மனைவியைச் சந்திக்கும் ஓவியம்

 

நாட்டுப் புற பாடல்களில் பர்த்ருஹரி

வட இந்தியா முழுதும், குறிப்பாக ராஜஸ்தான், சட்டிஸ்கர் முதலிய மாநிலங்களில் பிச்சை எடுக்கும் ஆண்டிப் பண்டாரங்கள் இந்த பர்த்ருஹரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டே வருவர். அவரது பெயர் துறவியானவுடன் கோபிசந்த் ஆனது. அவர் கோரக்நாதர் என்பவரின் சீடர் என்றும் செப்புவர்

 

தமிழ் பத்ர கிரியாருக்கு பட்டினத்தார் குரு; வட இந்திய பர்த்ருஹரிக்கு குரு– கோரக் நாத். 500 ஆண்டுக் கால இடைவெளியில் பல பர்த்ருஹரிக்கள் இருந்தாலும் சுவை குறையாமல் பாடிச் சென்றுவிட்டனர்.

 

XXXX

தமிழ் சித்தர் பத்ரகிரியார்

பத்ரகிரியார் ஒரு புகழ் பெற்ற சித்தர். அவர் ஒரு அரசனாக இருந்ததாகவும் பட்டினத்தார் அவரை துறவியாக மாற்றியதாகவும்

ஒரு வரலாறு உண்டு. அவர் எழுதியது பத்ரகிரியார் புலம்பல் எனப்படும்.  சில இடங்களில் திருமூலரின் தாக்கம் தெரியும். இது ஒரு தத்துவப் பாடல் ஆகும்.  இவரது பார்வை ஏனைய சித்தர்களைப் போலத்தான். இவர் சிவ வாக்கியர் போல ஜாதிகளில் நம்பிக்கை அற்றவர்.  சம்த்துவத்தைப் போற்றும், ஜாதிகளை  எதிர்க்கும் கபிலர் அகவலை பத்ரகிரியாரும் குறிப்பிடுவார். அதே போல பத்திரகிரியாரை பிற்காலத்தில், ராமலிங்க சுவாமிகள் முதலானோர் பாடல்களில் போற்றுவர்.

 

இவரது காலம் பட்டினத்தார் காலமாகிய பத்தாம் நூற்றாண்டு ஆகும்.

 

பத்ரகிரியார் பாடலில் சில சுவையான பகுதிகள்

 

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்?

 

வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஒழிந்தே நிட்டையிலே

ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம்?

 

ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொல்படியே

சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?

 

ஆசாரம் நேயம் அநுஷ்டானமும் மறந்து

பேசா மெய்ஞ்ஞான நிலை பெற்றிருப்பது எக்காலம்?

 

மனத்தை வில்லாக்கி வான் பொறியை நாணாக்கி

எனது அறிவை அம்பாக்கி எய்வது இனி எக்காலம்?

 

கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தால் போல்

உடலில் ஒளித்த சிவம் ஒளிசெய்வது எக்காலம்?

 

–பத்ரகிரியார் புலம்பல்

ஓவியங்கள்

நாடுப்புறப் பாடல்களில் மட்டுமின்றி ஓவியங்களிலும் பர்த்ருஹரியின் தாக்கத்தைக் காணலாம்.

 

மொகலாயர் கால ஓவியங்களில் பர்த்ருஹரி பிச்சை எடுக்கும் காலத்தில் தனது பழைய மனைவியைச் சந்தித்த ஓவியமும் உளது.

 

-subham–

விஞ்ஞான விளக்கம்- பிரம்ம முகூர்த்தம்-2 (Post No.5175)

Written by London swaminathan

 

Date: 3 JULY 2018

 

Time uploaded in London –   11-19 am (British Summer Time)

 

Post No. 5175

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்

புன்மை இருட்கணம் போயின யாவும்

எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி

எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி

 

பாரதியாரின் திருப்பள்ளி எழுச்சி

நேற்றைய கட்டுரையில் பிரம்ம முஹூர்த்தம் பற்றிய தமிழ்ப் பாடல்களைக் கொடுத்தேன். இன்று சில ஸம்ஸ்க்ருத பாடல்களையும் காண்போம்.

 

எல்லா சங்கராச்சார்ய, சாது, சந்யாஸி மடங்களில் அனைவரும் அதிகாலை4-30 மணிக்கு எழுந்து அனுஷ்டானங்களைத் தொடர்கின்றனர். நாடு முழுக்க ஆர். எஸ்.எஸ் காரர்கள் நடத்தும் முகாம்களில் எல்லோரையும் 4-30 மணிக்கு எழுப்பி விடுகிறார்கள். இந்த நேரத்தில் மனம் மிகத் தெளிவாக இருக்கும். படித்ததும், செய்யும் பயிற்சியும் பன்மடங்கு பலன் தரும்.

விஹாங்க யோகம் என்பதை பரப்பிவரும் சத்குரு தரம் சந்திர தேவ்ஜி, அதிகாலையில் எழுந்திருப்பதோடு பிரஹ்ம முஹூர்த்தத்தின் சிறப்பையும் எடுத்துக்காட்டியுள்ளார் அமிர்த வேளை எனப்படும் நேரத்தில் மனதும் தூய்மையாக இருக்கிறது. வெளியிலுள்ள புறச்சூழலும் தூய்மையாக இருக்கிறது; இதனால் புத்துணர்வு பிறக்கிறது. எதையும் எளிதாகச் செய்ய முடிகிறது என்கிறார்.

 

இதை அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.

மனிதர்கள் நல்ல ஆரோக்கியமாக வாழ உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள் சில வகை ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இதில் ஒன்று பிளாஸ்மா கார்டிசால் (PLASMA CORTISOL). இது மன உளைச்சல், மன வடு ஆகியவற்றிலிருந்து விடுபட உதவி செய்கிறது ஏ.ஸி.டி.எச். (ACTH) என்பதன் செல்வாக்கில் ADRENAL அ ட் ரினல் கார்டெக்ஸிலிருந்து இது சுரக்கும். இந்த ஏ.ஸி.டி.எச். காலையில் அதிகமும் மாலையில் குறைவாகவும் சுரப்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால் காலையில் படிக்கக்கூடிய விஷயங்களை அதிகம் நினைவு வைத்துக் கொள்ள முடியும்.

 

ஆயுர்வேத கணக்குப்படி காலை நேரம் வாத கட்டுப்பாட்டிலுள்ள நேரம் (வாதம், பித்தம், கபம் என்பன மூன்று வகை தோஷங்கள் அல்லது குணங்கள்)

 

சுவாமி நித்யானஎந்தாவும் பிரஹ்ம முஹூர்த்த்தின் சிறப்பை விதந்து ஓதுகிறார்.

 

பிரஹ்ம முஹுர்த்தே உத்திஷ்டதேத் ஸ்வஸ்தே ரக்ஷார்த்தம் ஆயுஷே

தத்ர ஸர்வதா சாந்த்யர்த்தம் ஸ்மரேச்ச மதுசூதனம்

-அஷ்டாங்க ஹ்ருதயம்

 

பொருள்; ஒவ்வொருவரும் பிரஹ்ம  முஹூர்த்தத்தில் எழுந்திருப்பதானால் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமான வாழ்வையும் அமைதியையும் பெறலாம். மது சூதனனையும் சிந்திப்பாயாக

ஆயுர்வேத கணக்குப்படி

மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை- கப ஆதிக்கம்

இரவு 10 மணி முதல் இரவு 2 மணிவரை- பித்த ஆதிக்கம்

இரவு 2 மணி முதல் காலை 6 மணிவரை- வாத ஆதிக்கம்

வாதத்தின் ஆதிக்க காலமே யோகப் பயிற்சிகளுக்குச் சிறந்தது.

 

சீக்கியர்களும் பௌத்தர்களும்

 

சீக்கியர்கள் ஒரு நாளை எட்டு, ‘மூன்று மணிக்கூறு’களாக (8×3 = 24) பிரித்து அதி காலை மூன்று மணி நேரமே சிறந்தது என்பர்.

பௌத்தர்கள் இந்து தர்மம் சொன்ன யோகத்தையே பின்பற்றுவதால் அதிகாலையில் எழுந்தே பயிற்சி செய்வர்.

இஸ்லாமும் முதல் பிரார்த்தனை அறைகூவலை சூர்யோதயத்துக்கு முன்பாகவே செய்கிறது.

 

இந்துக்களின் கணக்குப்படி

ஒரு நாழிகை என்பது 24 நிமிஷம்;

ஒரு நாளில் 60 நாழிகைகள்;

ஒரு முஹூர்த்தம் என்பது 48 நிமிஷங்கள்.

 

கட்டுரையாளர்,—- ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா அவர்கள் செய்துவந்த கணபதி ஹோமங்களுக்குச் செல்வதுண்டு. அவர் வாழ்நாள் முழுதும் சூர்யோதயத்துக்கு முன்னால் – கிட்டத்தட்ட காலை 5 மணி அளவில் ஹோமத்தை முடித்து விடுவார். அந்த நெய்ப்புகை மணம் காற்று ம

ண்டலத்தையும் மனதையும் தூய்மைப் படுத்தும்

 

 

இவ்வாறு பல பலன்களைத் தரும் பிரஹ்ம முஹூர்த்ததில் படிப்பது மாணவர்களுக்கு நன்மை பயக்கும். இதற்கு முதல் படியாக இரவு ஒன்பது மணிக்குத் தூங்கச் செல்ல வேண்டும். அதற்கு முதல் படியாக டெலிவிஷன், மொபைல் போனை அணைத்துவிட்டு புஸ்தகம் வாசிக்கத் துவங்க வேண்டும். நித்திரை தேவி நம்மை ஆட்கொள்வது நிச்சயம். காலை 4 மணிக்கு படுக்கையிலிருந்து துள்ளி எழலாம்! இது எனது 20, 30 ஆண்டு அனுபவம். இரவுச் சாப்பாட்டை இரவு 7 மணிக்குள் முடித்தால்தான் தூக்கமும் வரும்; நேரம் கழித்துச் சாப்பிட்டு உடனே உறங்கப் போனால் ‘துக்கம்’ வரும் தூக்கம் வராது; அனுபவ உண்மை.

பிரஹ்ம முஹூர்த்தம் வாழ்க!

Previous Article:

பிரம்ம முகூர்த்தம்- வைகறை துயில் எழு- அவ்வையார் -Part 1(Post No.5172)

 

–சுபம்–

இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 1 (Post No.5159)

Written by S NAGARAJAN

 

Date: 29 JUNE 2018

 

Time uploaded in London –   6-35 AM (British Summer Time)

 

Post No. 5159

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 29-6-18 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பதினேழாம்) கட்டுரை

இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 1

.நாகராஜன்

 

ஜப்பானில் லட்சக்கணக்கானோர் காலையில் படுக்கையிலிருந்து இகிகை-கொள்கையுடன் (Ikigai) எழுந்திருக்கின்றனர்.

இகிகை என்றால் “உயிருடன் இருப்பதற்கான காரணம்” என்ற கொள்கையாகும். அப்படியே மொழி பெயர்ப்பது என்றால் “நீ காலையில் விழித்தெழுவதற்கான காரணம்” என்று சொல்லலாம்.

எதற்காக வாழ்கிறோம் என்ற நம்பிக்கையும்  வாழ்க்கை என்பதற்கு நாம் தரும் மதிப்புகளுமே இகிகை.

இகிகை எதையும் உங்களிடம் வலியச் சுமத்தாது. வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் மதிப்புகள் சுயமாகவே எழும்.

 

ஜப்பானில் உள்ள ஓகினாவா தீவில் தான் இகிகை தோன்றியது. அங்கு தான் உலகில் நூறு வயதை எட்டிய ஏராளமானோர் இருக்கின்றனர். நூறு வயது வாழ்வை அடைய இகிகை தான் காரணமா?

 

உலகில் நூறு வயதை எட்டியோரைப் பற்றி ஆராய்ந்து டான் ப்யூட்னர் என்பவர் ப்ளூ ஜோன்ஸ்: லெஸன்ஸ் ஆன் லிவிங் லாங்கர் ஃப்ரம் தி பீப்பிள் ஹூ ஹாவ் லிவ்ட் லாங்கஸ்ட் (Dan Buettner : Blue Zones: Lessons on Living Longer from the people Who’ve Lived the Longest) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் நூறு ஆண்டு வாழ இகிகை தான் காரணம் என நம்புகிறார்.

 

ப்யூட்னர் தனது புத்தகத்தில் வலியுறுத்தும் ஒரு முக்கிய விஷயம் இகிகை என்பது ஓகினாவா தீவில் உள்ளவர்களுக்காக மட்டுமே உள்ள ஒன்று அல்ல என்பது தான். நீடித்து 100 வயது வாழும் சார்டினா மற்றும் நிகோயா தீபகற்பத்தில் வாழ்பவர்களும் கூட இந்தக் கொள்கையைப் பின்பற்றுபவர்களே, இகிகை என்ற வார்த்தையால் அதை அவர்கள் குறிப்பிடுவதில்லை”  என்கிறார் அவர்.

 

இகிகை என்பது மூன்று விஷயங்களைக் கொண்டது.

  • நீங்கள் உங்கள் வாழ்க்கை என்பதற்குத் தரும் ஆதாரமான மதிப்புகள் 2) நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்கள் 3) நீங்கள் சிறந்து விளங்கும் விஷயங்கள். இவை இணைவது தான் உங்களின் இகிகை.

 

உங்கள் குறிக்கோளை நீங்கள் வாழ்க்கையில் இழந்து விட்டால் அது மிகவும் மோசமான விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது என்பது பல ஆய்வுகளின் முடிவுகள்.

 

அமெரிக்க பழங்கால இதிகாச ஆராய்ச்சியாளரான ஜோஸப் காம்பெல், “நான் எனது மாணவர்களிடம் வலியுறுத்தும் ஒரு விஷயம்; உனக்கு அளிக்கப்பட்ட வரங்களைப் பின்பற்று; அவை என்ன என்று கண்டுபிடி; அப்படியே அதைப் பின்பற்று” என்கிறார்.

 

உங்களுக்கு இயல்பாக அமைந்த திறமைகள் தான் உங்களுக்கு (இறைவனால் ) அளிக்கப்பட்ட வரங்கள்!

ஹெக்டர் கார்சியா என்பவர் இகிகை; தி ஜபானீஸ் சீக்ரட் டு  எ லாங் அண்ட் ஹாப்பி லைஃப் என்ற புத்தகத்தின் இணை எழுத்தாளர். (Hector Garcia, Co-author : Ikigai: The Japanese Secret to a Long and Happy Life).

 

“மனிதகுலம் தோன்றியதிலிருந்து பார்த்தால் பொதுவாக பணத்தின் பின்னால் ஓடுவதே வழக்கமாக இருக்கிறது. ஆனால் சிலரோ பணத்திற்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் அதை விட பெரிய விஷயங்களுக்கு ஆசைப்படுகின்றனர். வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்கான இந்த விஷயத்திற்கு ஏராளமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு குறிப்பிடப்படுகின்றன” என்கிறார் அவர்.

உங்களுக்கு உங்களின் இகிகை- ஐக் கண்டுபிடிக்க ஆவலாக இருக்கிறதா?

அதற்கு நான்கு முக்கிய விஷயங்கள் உள்ளன:

  • நீங்கள் எதை மிக மிக அதிகமாக விரும்புகிறீர்கள்? (வெறித்தனமான ஆசை என்கிறோமே அது தான்)
  • உலகத்தின் தேவை என்ன? ( அதற்கான உங்களது பணி)
  • நீங்கள் எதில் மிகவும் சிறந்து விளங்குகிறீர்கள்? (உங்களது திறமை)
  • எந்தப் பணியில் நீங்கள் சம்பாதிக்க முடியும்? (உங்கள் தொழில்)

 

இந்த நான்கும் இணைந்தது தான் உங்களது இகிகை!

இதை மட்டும் நீங்கள் கண்டுபிடித்து விட்டால் சந்தோஷமாக நீண்ட காலம் நீங்கள் வாழலாம்.அதாவது உங்கள் இகிகை-ஐ கண்டுபிடிப்பது உங்களின் முதல் காரியமாக இருக்க வேண்டும்!

அதை எப்படிக் கண்டுபிடிப்பது?

 

 

நான்கு கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்:

  • எதை நான் விரும்புகிறேன்?
  • எதில் நான் சிறந்து விளங்குகிறேன்?
  • இப்போது எந்த வேலையில் எனக்குப் பணம் கிடைக்கிறது?
  • உலகத்தின் இன்றைய தேவை என்ன?

இந்த நான்கையும் இணைத்து உங்களின் இகிகை எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

 

 

அதன் வழியில் உங்களின் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளுங்கள். நீண்டகாலம் அமைதியாக சந்தோஷமாக வாழலாம். இது தான் ஜப்பானிய ரகசியம்!

ஹெக்டர் கார்சியா மற்றும் ஃப்ரான்செஸ்க் மிரல்லெஸ் ஆகியோர் (Hector Garcia & Francesc Miralles : Ikigai – The Japanese Secret to a Long and Happy Life) இகிகை பற்றிய தங்கள் நூலில் இகிகைக்காக பத்து விதிகளைத் தொகுத்துத் தந்துள்ளனர்.

 

 

  • எப்பொதும் செயலூக்கத்துடன் இருங்கள். ரிடையர் ஆகாதீர்கள்.
  • மிக மிக அவசரம் என்பதை விட்டு விடுங்கள்; சற்று மெதுவாக நிதானமாக வாழ்க்கையைக் கொண்டு செலுத்துங்கள்.
  • 80 சதவிகிதம் வயிறு நிறைந்தவுடன் போதும் என்று சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்
  • நல்ல நண்பர்களை உங்களைச் சுற்றி இருக்க விடுங்கள்.
  • உங்கள் உடலை நல்ல உடல் பயிற்சியைத் தினசரி செய்வதன் மூலம் கட்டுக்கோப்புடன் அழகாக வைத்திருங்கள்.
  • புன்சிரிப்புடன் உங்களைச் சுற்றி இருக்கும் அனைவரையும் அரவணையுங்கள்
  • இயற்கையுடன் ஒன்றுங்கள்.
  • நமது நாளை ஜொலிக்க வைக்கும் எதற்கும், நமது வாழ்க்கையை உயிர்ப்புடன் வாழ வைக்கும் எதற்கும் நன்றி தெரிவியுங்கள்.
  • நிகழ்காலத்தில் – இந்தக் கணத்தில் வாழுங்கள்

10) உங்கள் இகிகை படி வாழுங்கள்!

இன்னும் இகிகை பற்றிச் சற்றுப் பார்ப்போம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

..

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டு வீசப்பட்டது. அணுகுண்டையும் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனையும் சம்பந்தப்படுத்தி அவர் தான் அணுகுண்டு வெடிக்கக் காரணம் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவர் நேரடியாக அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபடவில்லை.

 

 

ஹிட்லர் மின்னல் வேகத்தில் ஆக்கிரமித்து நாடுகளைக் கைப்பற்றும் சமயத்தில் ஜெர்மனியில் அணுகுண்டு தயாரிக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதைப் பற்றிக் கவலைப்பட்ட லியோ ஜிலார்ட் மற்றும் யூஜின் விக்னர் (Leo Szilard and Eugene Wigner) ஆகிய விஞ்ஞானிகள் எதாவது செய்ய வேண்டுமென நினைத்தனர். ஜிலார்ட் அமெரிக்க ஜனாதிபதியான ருஸ்வெல்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதி அதில் ஐன்ஸ்டீனையும் கையெழுத்திடச் செய்தார். ஜிலார்டுக்கு அதிகாரவர்க்கத்திடம் செல்வாக்கு இல்லை என்பதே இதற்குக் காரணம்.

 

 

அணுகுண்டு சோதனை வெற்றி பெற்றது.

அணுகுண்டுகள் போடப்பட்டு இரண்டாவது உலக மகா யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது.

 

அணுகுண்டு போடப்பட்ட பின்னர் ஒரு வருடம் ஐன்ஸ்டீன் அதைப் பற்றிய கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஒரு வருடம் கழித்து நியூயார்க் டைம்ஸ் அவரது கருத்தாக, “ரூஸ்வெல்ட் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர் அணுகுண்டு போட அனுமதித்திருக்க மாட்டார்” என்பதை வெளியிட்டது.

 

 

ஐன்ஸ்டீன் பின்னர், “நான் அணுகுண்டை ஜப்பானுக்கு எதிராகப் பயன்படுத்துவதை எப்போதுமே எதிர்த்து வந்தேன்” என்று கூறினார்.

1954, நவம்பரில், ஐன்ஸ்டீன் இறப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் அவர் அணுகுண்டு தயாரிப்பு பற்றிய தனது முத்தாய்ப்பான கருத்தை இப்படிச் சொன்னார்: “ நான் எனது வாழ்க்கையில் ஒரு பெரிய தவறைச் செய்தேன். ரூஸ்வெல்ட்டிற்கான கடிதத்தில் அணுகுண்டு தயாரிக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்து கையெழுத்திட்டது தான் அது. ஆனால் அதிலும் ஒரு நியாயம் இருந்தது, ஜெர்மானியர்கள் அதை செய்யும் அபாயம் இருந்தது.”

(“I made one great mistake in my life… when I signed the letter to President Roosevelt recommending that atom bombs be made; but there was some justification – the danger that the Germans would make them.”)

ஐன்ஸ்டீன் செய்த தவறு என்று அவரே ஒத்துக் கொண்டது அணுகுண்டு தயாரிப்பு பற்றித் தான்!

***

 

பாண்டிய இளவரசிகள் சென்ற கப்பல் கவிழ்ந்த போது! (Post No.5064)

Written by London Swaminathan 

 

Date: 31 May 2018

 

Time uploaded in London – 20-46

 

Post No. 5064

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

பாண்டிய இளவரசிகள் சென்ற கப்பல் கவிழ்ந்த  போது! (Post No.5064)

பழங்கால இந்தியாவில் கடல் வாணிபம் எப்படி நடந்தது என்ற சுவையான தகவல்களை பழைய நூல்கள் தருகின்றன. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் பாண்டிய இளவரசி மீனாட்சியையும் சூர சேனப் பெண்மணி காஞ்சன மாலையையும் தொடர்பு

படுத்திப் பேசுவதைக் காணலாம்; சூரசேனர் என்பது வட இந்தியப் பகுதியில் வாழ்ந்த மக்கள். துவாரகை (குஜராத்) முதல்- மதுரா வரை ( உத்தரப் பிரதேசம்) ஆண்ட இனம்.  இதை புராணம் என்று ஒதுக்கிவிடலாம். பிற்கால நூல்களிலும் இத்தகைய தொடர்பு நீடித்து வந்தது  சமண மத நூல்களில் காணக்கிடக்கிறது.

(தெற்கிலிருந்து வடக்கே போன பிராமணர்களை அந்தந்த தேசத்தின் பெயர் சொல்லி அழைப்பர்; திராவிட தேசத்திலிருந்து சென்ற பிராஹ்மணர்களை திரவிட் (கிரிக்கெட் வீரரின் பெயர் த்ரவிட்) என்றும் பாண்டிய தேசத்திலிருந்து போன பிராஹ்மணர்களை பாண்டே, பாண்ட்யா (குஜராத்தி பிராஹ்மணர்) என்றும், தெலுங்க தேச பிராஹ்மணர்களை ‘தில்லான்’ (த்ரிலிங்க=தெலுங்க தேச) என்றும் அழைப்பர்.

 

ஆவஸ்யகா சூர்ணி என்ற சமண மத நூல் சில சுவையான விஷயங்களைச் சொல்கிறது:-

மதுரை நகரிலிருந்து சௌராஷ்டிரத்துக்கு  வழக்கமான கப்பல் போக்குவரத்து உண்டு; மதுரை மன்னன் பாண்டுசேனனின் (பாண்டிய மன்னன்) இரண்டு மகள்கள் அந்தக் கப்பலில் சௌராஷ்டிரத்துக்கு சென்று கொண்டிருந்தனர். இடையிலே புயல் வீசி கப்பல் கவிழத் துவங்கியது. உடனே கப்பலைக் காப்பாற்ற எல்லோரும் கந்தனையும் ருத்ரனையும் (சிவன்) பிராத்தித்தார்கள் என்று ஒரு குறிப்பு இருக்கிறது.

 

 

இப்போதைய மதுரையில் கடல் கிடையாது; 60,70 மைல்களுக்கு அப்பால்தான் கடல் உண்டு. கிருஷ்ணர் இருந்த மதுராவிலும் கடல் கிடையாது. ஆக இவர்கள் சொல்லுவது கடல் கொண்ட, இரண்டாவது தமிழ்ச் சங்கம் இருந்த தென் மதுரையாகவே இருக்க வேண்டும்; பாண்டு சேனன் என்பது பாண்டிய மன்னனின் திரிபே; மேலும் அவர்கள் முருகனையும் (கந்த) சிவனையும் (ருத்ர) கும்பிட்டது தமிழர்கள் என்பதைக் காட்டுகிறது. இதற்குப் புறநானூற்றில் நக்கீரர் பாடிய பாடலே சான்று; ஒரே புற நானூற்றுப் பாடலில் சிவன், முருகன் எல்லோரையும் போற்றுகிறார் நக்கீரர்.

 

இந்த நூல் 16 வகை கடற்காற்றுகளைப் பற்றி பேசுகிறது. அவையாவன

 

1.ப்ராசீன வாத (கீழைக் காற்று)

2.உதீசீன வாத (வாடைக் காற்று)

3.தக்ஷினாத்ய வாத (தென்றல் காற்று)

4.உத்தர பௌரஸ்த்ய ( எதிர்க்காற்று)

5.சத்வசுக (எல்லாத் திசைகளிலும் வீசும் காற்று)

6.தட்சிண பூர்வ துங்கார (தென்கிழக்கில் வீசும் புயல்)

7.அபர தக்ஷிண பீஜாபா (தெ. மே. திசைக் காற்று)

8.அபர பீஜாப (மேலைக் காற்று)

9.அபரோத்தர கர்ஜப (வ.மே. திசைக் காற்று)

10.உத்தர சத்வசுக

11.தக்ஷிண சத்வசுக

12.பூர்வ துங்கார

13.தக்ஷிண பீஜாப

14.பஸ்சிம பீஜாப

  1. பஸ்சிம கர்ஜப
  2. உத்தர கர்ஜப

 

இவ்வளவு வகையான பிரிவினைகள் இருப்பதால் இந்துக்கள் அல்லது பொதுவில் இந்தியர்கள் கடல் வாணிபத்திலும் கப்பல் போக்குவரத்திலும் வேறு எவரையும் சார்ந்து இருக்கவில்லை என்பது வெள்ளிடை மலையென விளங்கும். பதினாறு வகைக் காற்றுகளுக்கு தனிதனி ஸம்ஸ்க்ருதப் பெயர்களைத் தந்துள்ளனர்.

 

இந்தியா ஒரு விவசாய நாடு; பருவக் காற்று மழை நாடு; அதனால்தான் உலக மஹா கவி காளிதாசன் ஆறு பருவ காலங்கள் பற்றி ‘ருது சம்ஹாரம்’ எனும் நூலை இயற்றினான. மேக தூதம் என்னும் காவியத்தில் மத்தியப் பிரதேச உஜ்ஜைனி நகரிலிருந்து இமயமலை வரை பருவக் காற்று அடித்துச் செல்லும் மேகத்தின் காட்சிகளைப் பாடுகிறான். மேலும் சாகுந்தல நாடகத்தில் ஏழு வகை மேகங்கள் பற்றியும் பாடுகிறான்

காளிதாசன் சாகுந்தல நாடகத்தில் வானத்திலுள்ள ஏழு வகைக் காற்று மண்டலங்கள் பற்றியும் பேசுகிறான்.

மனைவியைக் கொன்ற பிராஹ்மணன்!

 

‘குவலய மாலா’ என்னும் நூலில் ஒரு சுவையான சம்பவம் வருகிறது.

குவலய மாலா நூலை உத்யோதண என்பவர் கி.பி.779ல் இயற்றினார்.

ஒரு ஏழைப் பிராஹ்மணன் பிழைப்பு தேடி ஒரு கழைக் கூத்தாடி, பாணர்கள் கூட்டத்தைப் பின் தொடர்ந்து வருகிறான். அவனுடன் அவன் மனைவி, மகன்களும் வருகின்றனர். ஒரு கிராமத்தில் கழைக் கூத்தாடிகள் கூடாரம் அடித்துத் தங்கி வித்தைகளைச் செய்து காட்டினர். அவன் மனைவியும் ஆசையோடு அதைப் பார்க்க வந்தாள். அவன் ஆத்திர ப்பட்டு அவளைத் தவறாக நினைத்து கொன்று விடுகிறான். பின்னர் ஆத்திரத்தில் அறிவு கெட்டுப் போய்விட்டேனே என்று அழுது புரண்டு தானும் மனைவியின் சிதைத் தீயில் பாய்கிறான்.

 

எல்லோரும் அவனை எரியும் நெருப்பிலிருந்து மீட்டு பண்டிதர் சபைக்கு அழைத்துச் செல்கின்றனர். அவன் பாவ  மன்னிப்புப் பரிகாரம் என்ன என்று கேட்ட போது எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறி புண்ய தலங்களுக்க்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்று சொன்னார்கள்; அதோடு அவனிடமுள்ள கொஞ்ச நஞ்சத்தையும் தானம் செய் வேண்டும் என்றனர். (அவனும் அவ்வாறே செய்தான்)

 

இது போன்று கழைக் கூத்தாடிகள் கிராம ,கிராமமாகச் சென்று வியாபாரம் செய்தது முதலிய பல செய்திகள் அக்காலத்தின் போக்குவரத்து வசதிகளைக் காட்டுகின்றது.

 

சுபம்—

ரமணரின் கருணை மழை! (Post No.5031)

Written by S NAGARAJAN

 

Date: 21 MAY 2018

 

Time uploaded in London –  6-33 AM   (British Summer Time)

 

Post No. 5031

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ரமண தரிசனம்

அனைவருக்கும் சமமான ரமணரின் கருணை மழை!

 

ச.நாகராஜன்

1

பகவான் ரமண மஹரிஷியிடம் பக்தர் ஒருவர் வந்தார்.

அவர் கேட்டார்: கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் தானே!

ரமணர் : ஆமாம்.

பக்தர் : அவரது கருணையும் அனைவருக்கும் பொதுவானது தானே!

ரமணர் : ஆமாம்

பக்தர் : அப்படியானால் அவர் எனக்கு மட்டும் ஏன் கருணை காட்ட மாட்டேன் என்கிறார்.எப்பொழுதும் துன்பம் தானே எனக்கு வருகிறது.

ரமணர் : நீ பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்திருக்கிறாயே. அதை நிமிர்த்தி வைத்தால் தானே கருணை மழை பொங்கித் ததும்பும்!

 

பக்தர் புரிந்து கொண்டார். இறைவன் அனைவருக்கும் சமமான கருணையைத் தான் பொழிகிறார். அதை ஏற்க நாம் தயாராக – பாத்திரத்தைத் திறந்து வைத்து – இருக்க வேண்டும்.

மனதைத் தூய்மையாக, ஏற்கக்கூடிய பக்குவ நிலையில் வைக்க வேண்டும்.

அத்துடன் பாத்திரம் சிறிய அளவா, அண்டாவா அல்லது மிகப் பெரியதா என்பதையும் நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

இறைவனின் கருணை மழையைப் போலவே பகவான் ரமணரின் கருணை மழையும் அனைவருக்கும் பொதுவானது.

 

2

பகவானிடம் அருளாசி பெற பாரதத்தின் முதல் ராஷ்ட்ரபதி பாபு ராஜேந்திர பிரசாத் வந்தார். அருளாசி பெற்றார்.

ராஜாஜி வந்தார். மகாகவி பாரதியார் வந்தார். ஏராளமான துறவிகள், பேராசிரியர்கள் வந்தனர். ரமண தரிசனத்தால் பெரும் பேறு பெற்றனர்.

அனைவர் மீதும் அவரது கருணை மழை சமமாக இருந்தது.

உயர்தட்டில் இருந்தவர்களுக்குத் தான் அவரது கருணை என்பது இல்லை; ஏழையாக, சாமானியராக, எழுத்தறிவில்லாதவராக இருந்தாலும் கூட அவர்களுக்கும் அவர் பொது தான்; அவர்கள் மீதும் அவரது கருணை அளப்பரியதாக இருந்தது.

ஒரு சம்பவம்.

பூவன் என்ற ஆட்டிடையனின் ஆடு தொலைந்து விட்டது. ஒரே கவலை. மூன்று நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. ஆடு கர்ப்பமாக வேறு இருந்தது. அவனுக்கு நம்பிக்கையே போய் விட்டது. காட்டு மிருகங்கள் அதை அடித்துத் தின்று விட்டதோ!

ஒரு நாள் ஆசிரமம் வழியே சென்று கொண்டிருந்த அவன் பகவானைப் பார்க்க, அவர் அவனை எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். பூவன் தனது ஆடு தொலைந்த விஷயத்தைச் சொன்னான். பகவான் வழக்கம் போலப் பேசாமல் இருந்தார். பிறகு அவனிடம் சில கற்களைத் தூக்கத் தனக்கு உதவுமாறு கேட்டார். அவனும் சந்தோஷமாக அந்த வேலையைச் செய்தான். அந்தப் பணி முடிந்ததும் பகவான், “இந்தப் பக்கமாகப் போ” என்று ஒரு வழியைச் சுட்டிக் காட்டினார். “அங்கு உன் ஆட்டை வழியில் காண்பாய்” என்றார் அவர். அதே மாதிரி தனது ஆட்டை இரண்டு குட்டிகளுடன் அவன் கண்டான்!

பூவன், “என்ன அற்புதமான பகவான் இவர்! அவரது வார்த்தைகளின் சக்தியைப் பாருங்கள். என்னப் போன்ற ஒரு ஏழையைக் கூட அவர் மறக்கமாட்டார். எனது பையன் மாணிக்கத்தைக் கூட அவர் அன்புடன் நினைவு வைத்துக் கேட்கிறார். பெரியவர்கள் எப்போதுமே அப்படித்தான்.  கோடையில் பசுக்களைப் பார்க்கும் சிறு பணியை அவருக்காகச் செய்வதில் எனக்கு சந்தோஷம்.” என்றான்.

 

முனகல வெங்கடராமையா தொகுத்திருக்கும் அற்புத நூலான

Talks with Sri Ramana Maharshi  என்ற நூலில் 16 டிசம்பர் 1936 தேதியிட்ட பதிவு இது: (ஆங்கில மூலத்தை அப்படியே கீழே காணலாம்.)

 

Poovan, a shepherd, says that he knows Sri Bhagavan since thirty

years ago, the days of Virupakshi cave. He used at times to supply

milk to the visitors in those days.

Some six years ago he had lost a sheep, for which he was searching

for three days. The sheep was pregnant and he had lost all hopes of

recovering her, because he thought that she had been set upon by

wild animals. He was one day passing by the Asramam, when Sri

Bhagavan saw him and enquired how he was. The man replied that

he was looking out for a lost sheep. Sri Bhagavan kept quiet, as is

usual with Him. Then He told the shepherd to help in lifting some

stones, which he did with great pleasure. After the work was finished,

Sri Bhagavan told him: “Go this way”, pointing the footpath towards

the town. “You will find the stray sheep on the way”. So he did and

found the lost sheep with two little lambs.

 

He now says, “What a Bhagavan is this! Look at the force of his

words! He is great! He never forgets even a poor man like me. He

remembers my son Manikkam also with kindness. Such are the great

ones! I am happy when I do any little work for Him, such as looking

to the cows when they are in heat.

 

3

இதே போல பகவானுக்கு பௌர்ணமி தோறும் க்ஷவரம் செய்ய வரும் நடேசனும் அவர் பால் அதீத பக்தி கொண்டவர். பகவானுக்கு நமஸ்காரம் செய்து விட்டுத் தான் அவர் தன் வேலையைத் தொடங்குவார். ஒரு நாள் மலையில் வழியில் பார்த்த பகவானை அவர் நமஸ்காரம் செய்ய, “இங்கு எதற்கு? என்றார்.

என்ன அற்புதமான குறிப்பு!

பௌர்ணமி தோறும் கோசாலையில் க்ஷவரம் செய்ய வரும் போது செய்யும் நமஸ்காரமே போதுமே என்று கருணையுடன் குறிப்பால் உணர்த்த அவர் கூறிய அன்புச் சொற்கள் அது.

இன்னொரு முறை நடேசன் அவசரமாக செல்ல வேண்டிய ஒரு தருணத்தில், அவன் போக வேண்டும்; ஆனால் சாப்பிட்டிருக்க மாட்டானே என்றார் பகவான்.

குறிப்பறிந்த தொண்டர் உடனடியாக சமையலறைக்குச் சென்று நடேசனுக்கு உணவு கொண்டு வந்தார்.

தழுதழுத்த குரலில் சொன்னார் நடேசன்: “பகவானுக்கு அனைவருமே சமம் தான். பொதுவாக அனைவரும் உண்ட பின்னரே நாங்கள் உண்பது வழக்கம். இன்று பாருங்கள், பகவானின் கருணையை! என்றார்.

எந்த வித பேதமுமின்றி பொழிவதே இறைவனின் கருணை.

அந்த அவதாரமாக வந்த பகவானுக்கும் அதே கருணை இருப்பது இயல்பு தானே!

***