Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
கடந்த 67 ஆண்டுகளில் 300 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறும் பாதைகளில் இறந்து போயினர். இதில் 100 பேருடைய சடலங்கள் இன்று வரை கிடைத்தில என்றும் இது நேபாள அரசுக்கு கவலை தருகிறது என்றும் 2019 ம் ஆண்டு மே மாதம் வெளியான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக் கட்டுரை கூறுகிறது. இப் போது இமயப்பனி , புவி வெப்பம் காரணமாக வேகமாக உருகத் துவங்கியதால் பல சடலங்கள் வெளிப்படலாம். ஒரு ஷெர்பா, தான் போகும் வழியில் மூன்று சடலங்களைக் கண்டதாகப் பேட்டி கொடுத்துள்ளார். நான் 1992ல் தினமணி கதிரில் எழுதிய கட்டுரையில் ஒரு சடலமும் அருகில் ஒரு டயரி (Diary) யும் கண்டு எடுக்கப்பட்டது பற்றி எழுதினேன். அக்கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
நான் தினமணிக் கதிரில் 1992ம் ஆண்டு டிசம்பரில் பார்சி மத மக்கள், இறந்த பின்னர் சடலங்களை கழுகுகளுக்கு இரை யாகப் போடுவது பற்றி எழுதிய கட்டுரை இது. மொத்தத்தில் அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்பதால் இது பெரிய பிரச்சனையாக உருவெடுக்கவில்லை.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
tamilandvedas.com › tag › வேப்ப-மரம்
வேப்ப மரம் | Tamil and Vedas
16 Oct 2015 – எச்சரிக்கை: இது மருத்துவக் கட்டுரை அல்ல;. ஆன்மீகக் கட்டுரை!!! Compiled by london swaminathan. Post No.2248. Date: 16 October 2015. Time uploaded in London: 13-26.
tamilandvedas.com › tag › அஸ்வத்த
அஸ்வத்த | Tamil and Vedas
வேத காலத்தில் பிப்பலாடன் (அரச மரம்) என்ற பெயரில் ரிஷி முனிவர்கள் … நாகை மாவட்டம் திருவாவடுதுறையில் உள்ள வேப்ப மரம் ஒன்றின் …
tamilandvedas.com › tag › ஐயவி
ஐயவி | Tamil and Vedas
வேப்ப மர இலைகளை வீட்டில் சொருக வேண்டும். 2.வெண் (ஐயவி) கடுகைப் புகைக்க வேண்டும். 3.வெண் கடுகை (ஐயவி) நெய்யுடன் கலந்து அப்ப …
tamilandvedas.com › tag › neem-tree
neem tree | Tamil and Vedas
Bodhi Tree | Tamil and Vedas · https://tamilandvedas.com/tag/bodhi-tree/. Tamils have been using Neem (Veppa Maram in Tamil வேப்ப மரம்) for ages to stop the virus of small pox. If one takes it from young age in the prescribed …
tamilandvedas.com › tag › truth-test
swamiindology.blogspot.com › post-no2667
புளியமரத்தில் … – Swami’s Indology Blog
27 Mar 2016 – புளியமரத்தில் பேய்கள் வசிப்பது ஏன்? ஒரு ஆராய்ச்சிக் … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). புளியமர2. நானும் என் …
tamilandvedas.com › tag › பேய்கள்-பற்…
பேய்கள் பற்றி | Tamil and Vedas
புளிய மரத்துக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம் என்று ஆராயப் புகுந்தபோது புளியமரம், பேய்கள் பற்றி மேலும் சில சுவையான விஷயங்கள் …
கொங்குமண்டலத்தில் உள்ள கஞ்சமலையில் ஏராளமான வியத்தகும் மூலிகைகள் உள்ளன. இவற்றில் நரை திரை போக்கி வயோதிகரை வாலிபராக்கும் மூலிகையும் ஒன்று.
தான் குமரனாக விரும்பிய வயோதிகரான மூலன் என்ற ஒரு அந்தணர் இதை அடைய விரும்பினார்.
கஞ்சமலையின் உள்ள கருங்காட்டினுள் சென்று மூலிகையை தேடலாம் என்று நினைத்த அவர் தன் மாணாக்கனிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார்.
அவர் வெளியே சென்ற சமயம் அவரது மாணாக்கன் உலையில் இருந்த சோறை ஒரு கருநெல்லிக் கோலால் கிளறினான். குச்சி கறுப்பாக இருந்ததால் உலையில் இருந்த சோறு அனைத்தும் கறுப்பாயிற்று. சமைத்த சாதம் இப்படிக் கறுப்பாகி விட்டதே, குரு வந்தால் கோபிப்பாரே என்று சீடன் பயந்தான்.
நிறம் மாறிய அன்னத்தைத் தானே சாப்பிட்டு விட்டு வேறு புதிதாக அன்னத்தைச் சமைத்து வைத்தான்.
அந்த கறுப்பு அன்னத்தைப் புசித்ததால் சீடன் நரை திரை நீங்கி இளமை எய்தினான்.
தனது குருவுக்குப் பயந்து அவன் ஒளிந்து கொண்டான்.
மலை மீதிலிருந்து இறங்கி வந்த மூலன் தன் சீடன் எங்கே என்று தேடி, உரக்கக் கூவினான். நீ எங்கே இருக்கிறாய் என்ற குருவின் குரலைக் கேட்ட சீடன் அவர் முன்னே வந்து நின்றான். அவன் யார் என்று தெரியாத குரு அவனை யார் என்று கேட்க அவனோ நான் தான் உங்கள் சீடன் என்று சொல்ல அவர் வியந்து போனார்.
எப்படி இப்படி ஆனாய் என்று அவர் கேட்க சமைத்த சாதம் கறுப்பான சம்பவத்தைக் கூறினான்.
அந்தக் குச்சி எங்கே என்று கேட்டார் குரு.
அதை முறித்து அடுப்பில் வைத்து எரித்து விட்டேன் என்றான் சீடன்.
ஒரு கணம் திகைத்துப் போனார் குரு.
பின்னர் ஒரு யோசனை செய்தார். அவன் வாயில் விரலை விட்டு அவன் உண்ட சாதத்தைக் கக்க வைத்தார். அதைத் தான் எடுத்து உண்டார்.
அவரும் வாலிபர் ஆனார்.
இந்த அரிய சம்பவத்தைக் கொங்கு மண்டல சதகம் தன் 69வது பாடலில் கூறிப் போற்றுகிறது.
உலை வைத்துச் சமைத்துச் சாப்பிட்டுத் தன் உருவம் மாறி விட்டதால் சீடனுடைய முன் உருவம் தெரியாமல் நரைதிரை நீங்கி இருக்கக் கண்ட அவனது சற்குரு, (உண்மை அறிந்து) தன் சீடன் அருந்தியிருந்த உணவைக் கக்கச் செய்து அதைத் தானும் அருந்தி குமரன் ஆனதுவும் கொங்கு மண்டலமேயாம்.
இந்த வரலாறைக் கரபுரநாதர் புராணம் கஞ்சமலைச் சருக்கத்தில் இப்படி விவரிக்கிறது:
கரபுரநாதர் புராணம்
அந்தமா ணாக்கன் றன்னை யடுகைநீ செய்யென் றோதி
புந்தியின் மருந்து தேடிப் போயின னயலிற் சீட
னுய்ந்திடக் கருநெல் லிக்கொம் பொன்றினா வனந் துழாவ
வெந்தனங் கரிபோ லாக வெருவியன் னத்தை யுண்டான்
நரைதிரை மாறி மேனி நடந்தவீ ரெட்டாண் டேபோற்
புரையிலா வழகு பெற்றுப் புடமிடு பொன்போ லானான்.
துழாவிய கொம்பெங் கென்றான் சுல்லியிற் போட்டே னென்ன
வழாதுநீ யுண்ட சோற்றை வாயினிற் கக்கென் றோத
விழாத சோ றதனைக் கக்க மிச்சிலைக் குருவு முண்டான்
றொழாரெவ ரிவர்க டம்ப்பைச் சுந்தரப் பால ரானார்
கஞ்சமலைச் சருக்கம்
இப்படிப்பட்ட அரிய மூலிகைகள் இருப்பது பற்றி வியத்தகும் நல்ல பாடல்கள் மூலமாக அல்லவோ அறிய முடிகிற!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
லண்டனில் இருந்து வெளியாகும் மெட்ரோ பத்திரிகை அறிவியல் கேள்வி பதில் பகுதியில் தேன் ஏன் கெடுவதில்லை? என்ற கேள்விக்கு பதில் சொல்லகிறது.
மூடி வைக்கப்பட்ட பாண்டங்களில் தேன் (Honey) இருந்தால் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை. எகிப்திய கல்லறைகளில் தேன் கண்டுபிடிக்கப்பட்டது. அது கெடவில்லை. Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
தேன் கெடாமல் இருப்பதற்குக் காரணம் தேநீக்கள் அதை செய்யும் முறையே.
தேனீக்களில் , பூக்களுக்குச் சென்று தேனை சேகரித்துக் கொண்டுவரும் ஒரு பிரிவு (Forager Bees) உண்டு. அவை .அதை தொழிலாளர் பிரிவு தேநீக்களிடம் (Worker Bees) அளிக்கும்
தொழிலாளர் பிரிவு தேனீக்கள் அதை குடிக்கும்; கொப்பளிக்கும் ; இவ்வாறு பலமுறை செய்து கொண்டே இருக்கும் . இதனால் அந்தத் தேனில் உள்ள நீர்சசத்து குறைந்துவிடும். இப்படி ச் செய்கையில் அவற்றின் வயிற்றில் உள்ள என்சைம் தேனில் இருக்கும் குளுக்கோஸ் என்னும் சர்க்கரைச் சத்தை குளுகோனிக் அமிலமாக (Gluconic Acid) மாற்றிவிடும் தென் இவ்வாறு அமில ச் சத்துடன் ஆக்கப்படும்போது ஹைட்ரஜன் பெராக்ஸைட் (Hydrogen Peroxide) என்ற வாயுவும் உற்பத்தியாகும் . அதுமட்டுமல்ல . தேன் அட்டைகளின் அறைகளில் தேனை வைத்து தனது சிறகுகளால் விசிரிக் கொண்டே இருக்கும். இதனால் தண்ணீர் சத்து மேலும் ஆவியாகும் .மொத்தத்தில் அமிலத் தன்மையும் நீரின்மையும் இதைக் கெடாமல் பாத்து காக்கிறது. உணவுப் பண்டங்களைக் கெட்டுப்போக ச் செய்யும் பாக்டீ ரியாக்கள் இந்த சூழ்நிலையில் வாழ முடியாது . ஹைட்ரஜன் பெராக் ஸைட் வாயுவுக்கும் பாக்டிரீயா (Anti bacterial) கிருமிகளைக் கொள்ளும் சக்தி உண்டு . ஆகையால் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தேன் , பல ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை . Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
rock honey bees
எனது கருத்து
சமணர்கள் தேன் சாப்பிடமாட்டார்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு தேனீக்கள் உருவாக்கும் தேன் நமக்கானதல்ல . அவைகளுக்கானதே ;மேலும் இது பிராணிகளை வதை செய்வதாகும் என்பது அவர்கள் கருத்து. இந்துக்கள் வேத காலம் முதலே மது பர்க்கம் என்ற பெயரில் பாலையும் தேனையும் சேர்த்துக் கொடுத்து உபசரித்தனர்; பைபிளிலும் சரி, சம்ஸ்க்ருத -தமிழ் இலக்கியங்களிலும் சரி; ஒரு நாட்டின் செழிப்பை வருணித்துச் சொல்கையில் ‘அங்கு பாலும் தேனும் ஆறாக ஓடிற்று’ என்பர்.
ஆனால் சமணர்கள் பால் பொருட்களை பயன்படுத்துவர். கன்றுகளுக்கு எஞ்சியது போக மீதியுள்ள பாலை மட்டும் இந்துக்களும் சமணர்களும் பயன்படுத்துவர். Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜாதிக்கொடுமை
Honey bottles in my kitchen in London.
ஜாதிகளைக் கண்டுபிடித்தது ஆரியரா திராவிடர்களா என்ற சர்சசையை வரலாற்று ஆசிரியர்கள் விவாதிப்பது உண்டு .உண்மையில் சொல்லப் போனால் அதைக் கண்டுபிடித்து இன்று வரை நடைமுறைப் படுத்துவது தேனீக்களே! ராஜா -ராணி வம்ச பரம்பரை ஆட்சிக்கும் அதுவே காரணம் போலும். தொழிலாள ர்களை வேலைக்கு வாங்கி சுக போகமாக வாழ்கிறது ராணித் தேனி . போகட்டும் . அவைகள் பின்பற்றும் ஜாதிக்கொடுமைக்கு கை மேல் கிடைத்த பலன்!! மனிதர்கள் அத்தனை தேனையும் திருடிக் குடித்து விடுகிறார்கள் ! Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
அன் பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் (ப்பாள் ) ? என்றான் வள்ளுவப் பெருந்தகை. இந்த அன்பு உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் உண்டு என்பதை பஞ்ச தந்திரக் கதைகளும். சங்க இலக்கியக் காட்சிகளும் காட்டுகின்றன.நேற்றைய பிரிட்டிஷ் பத்திரிகைகள் வெளியிட்ட ஒரு செய்தி மேலும் இரண்டு சமபவங்களை நினைவுபடுத்தின. 1. நான் பள்ளிப் பருவத்தில் 1960-களில் படித்த ‘தேக்கடி ராஜா’ கதை (இணைப்பைப் பாருங்கள்) மற்றொன்று உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய நாய். இப்போது டோக்கியோவில் சிலையால் புகழ் பெற்றுவரும் நாய். இது தவிர மாதாகோவிலுக்கு வந்த நாய், சங்கராசார்ய மடத்தில் இருந்த நாய், மஹாபாரதத்தில் பாண்டவர்களைத் தொடர்ந்து வந்த நாய், ரிக் வேதத்தில் உள்ள சரமா நாய், அதை கிரேக்கர்கள் ஹெர்மஸ் என்று காப்பியடித்த நாய் என்று ஏராளமான மிருகங்களின் கதைகளை இந்த ‘பிளாக்’கில் படிக்கலாம். இது தவிர சிவன் மூலம் முக்தி பெற்ற மிருகங்களின் கதைகளையும் கொடுத்தேன்.
புதுக் கதையை மட்டும் எழுதுகிறேன் …..
இங்கிலாந்தின் தென் மேற்கு மூலையில் உள்ளது டெவன் பிராந்தியம். அதில் உள்ள டார்ட்போர்ட் அருகில் கிங்ஸ்வேர் (Kingswear near Dartford in Devon, England) என்னும் இடத்தில் கடலில் 20 டால்பின்கள் (Dolphins) கரையை நோக்கி நீந்தி வந்தன. அவை அங்கே சோகத்துடன் தத்தளித்துக் கொண்டு இருந்தன. ஒன்றிரண்டு டால்பின்களை அரிதே காணும் மக்களுக்கு இது வியப்பாக இருந்தது. பின்னர்தான் விஷயம் புரிந்தது. அதற்கு முதல் நாளன்று கடற்கரை தடுப்புச்சுவர் அருகில் ஒரு குட்டி டால்பின் இறந்து கிடந்தது. தலையில் இரண்டு வெடிகுண்டுக்கு காயங்கள் இருந்தன.
செத்துப்போன தனது குழந்தையைத் தேடி அதன் தாயாரும் தகப்பனும் நண்பர்கள் உறவினர்கள் புடை சூழ அந்தக் கடற்கரைக்கு வந்ததாகப் பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.
டால்பின்களும் திமிங்கிலங்களளும் குட்டி போட்டு பால் கொடுக்கும் கடல் வாழ் பிராணிகள் (Mammals). மீன் போல தோன்றினாலும் மீன் வகையை சேர்ந்தவை அல்ல. டால்பின்களின் மூளை மிகப்பெரியவை. மனிதர்களை போல குடும்பத்துடனும் உறவினர்களுடனும் கூட்டாக வாழும் பிராணி வகை. உலகம் முழுதும் டால்பின்களை பற்றி நிறைய கதைகள் உண்டு. கிரேக்க நாட்டுச சிறுவனை டால்பின் ஏற்றி சென்று காப்பாற்றிய கதை முதல் இன்று வரை பல சம்பவங்கள்.
சுருக்கமாக
டோக்கியோ நாய் ஹசிகோ தனது இறந்து போன எஜமானரைக் காண ஒன்பது ஆண்டுகளுக்கு நாள் தோறும் , அவர் வந்து இறங்கும் ரயில் நிலையத்துக்கு வந்து சென்றது.
தேக்கடி ராஜா கதை இறந்து போன யானைத் தலைவனுக்கு நள்ளிரவில், நடுக் காட்டில், பௌர்ணமி இரவில் நூற்றுக்கணக்காண யானைகள அஞ்சலி செய்த கதை. இது நான் பள்ளிக்கூடத்தில் இருக்குபோது பத்திரிகையில் தொடராக வந்து எல்லோரையும் அசத்திய கதை- 50 ஆண்டுகளுக்குப் பின்னர் லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியில் மீண்டும் படித்தேன். டால்பின் செய்தி வந்தவுடன் அதுவும் நினைவுக்கு வந்தது.
OLD ARTICLES IN THE BLOG
tamilandvedas.com › 2013/01/19 › வேத-நா…
வேத நாயும் மாதா கோவில் …
19 Jan 2013 – வேத நாயும் மாதா கோவில் நாயும் … பூர்வ ஜன்மத்தில் ஒரு மடத்தின்/ கல்வி நிறுவனத்தின் தலைவர் தாம் என்றும் அப்போது …
tamilandvedas.com › 2015/07/12 › செய்நன…
செய்நன்றி:- நன்றியுள்ள … – Tamil and Vedas
12 Jul 2015 – செய்நன்றி:- நன்றியுள்ள யானையும், குடிகாரப் பாம்பும்! … நன்றியுள்ள பிராணிகள் பற்றி நிறையவே படித்து இருக்கிறோம்.
2 Aug 2012 – Believe it or not it happened in Africa very recently. … The meaning of the word Gajendra Moksha is Gaja=elephant, Indra= the leader or the …
பூமியில் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கில் விண்கற்கள் விழுகின்றன. காற்றில் எரிந்தது போ க பூமியில் விழும் கற்களே டன் கணக்கில் என்பர் விஞ்ஞானிகள்
விண்கற்களில் அதிக அளவு இரும்பும் நிக்கலும் இருப்பதால் இதை கத்திகள் செய்ய நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். இது துருப்பிடிக்காததால் இதை பெரு நாட்டு பழங்குடி மக்கள் வெள்ளி என்று கருதினர். 2200 ஆண்டுகளுக்கு முன்னர் சீனா பைதுங் என்ற பெயரில் நிக்கல்-துத்தநாக கலப்பு தாதுவை ஏற்றுமதி செய்த்தது. பைதுங் என்றால் வெள்ளை நிற தாமிரம் என்று பொருள் . தாமிரச் சுரங்கங்களில் கிடைத்த கலவை ஒன்றை ஜெர்மானியர்கள் பேய்த் தாமிரம் என்று அழைத்தனர். அதைக் கண்ணாடிக்கு பச் சை வர்ணம் ஏற்ற மட்டுமே பயன்படுத்த முடிந்ததால் இந்த அவப்பெயர். நிக்கல் என்பது என்ன என்ற வாதப் பிரதிவாதங்களை முடிவுக்குக் கொண்டு வந்தவர் டோர்பெர்ன் பெர்க்மான் ஆவார். 1775ம் ஆண்டில் இது தனி மூலகம் என்று அவர் அறிவித்தார்.
இப்பொழுது பூமியில் கிடைக்கும் நிக்கலி ன் பெரும்பகுதி ஆகாயத்தில் இருந்து விழுந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுவர். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவின் ஒண்டாரியோவின் சட்பரி (Sudbury, Ontario, Canada) பகுதியில் ஒரு பிரம்மாண்டமான விண் கல் (மலை) விழுந்தது. இங்கு 20 கோடி டன் நிக்கல் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்; விண்ணிலிருந்து வந்த மலை மோதிய வேகத்தில் பூமிக்கடியில் இருந்த நிக்கல் குழம்பும் வெளியேறி யி ருக்கலாம். பூமியின் மத்திய பாகத்தில் இரும்பும் நிக்கலும் சேர்ந்த திரவம் கொதித்துக்கொண்டே இருக்கிறது . கனடாவில் 1905 ஆம் ஆண்டு முதல் 17,000 ஓட்டைகள் போட்டு நிக்கல், தாமிரம் முதலியன எடுத்துவருகின்றனர்.
பொருளாதார உபயோகங்கள்
நிக்கலுக்கும் கந்தகத்துக்கும் இடையே ஒருவித காதல் உண்டு. இதனால் நிக்கல் சல்பைடு தாதுவிலிருந்து அதிகமாக நிக்கல் எடுக்கப்படுகிறது. கனடாவின் ஒண்டாரியோ சுரங்கம் மட்டுமே உலகின் 30 சதவிகித நிக்கலை உற்பத்தி செய்கிறது. இது தவிர அமெரிக்கா , ரஷ்யா, தென் ஆப்ரிக்காவும் அதிக அளவில் நிக்கல் எடுக்கின்றன.
உலகில் தோண்டி எடுக்கப்படும் நிக்கலில் பாதி ஸ்டெயின்லஸ் ஸ்டீல் செய்யப் பயன்படுகிறது. எவர் சில்வர் என்று நாம் அழைக்கும் இதை இருபதாம் நூற் றாண்டில் ஒரே நேரத்தில் ஜெர்மனியும் இங்கிலாந்தும் கண்டுபிடித்தன . காசுகள், நாணயங்கள் செய்யவும் பெரும்பகுதி பயன்படுகிறது. அமெரிக்காவில் ஒரு காசின் பெயர் நிக்கல்.. 1865ல் செய்த இந்தக் காசில் — 5 சென்ட் நாணயத்தில்– 25 சதம் நிக்கல் ஆகும்.
இனி அதிகம் பயன்படும் நிக்கல் கலப்பு உலோகங்களைக் காண்போம்.
இன் வார் — 64 சத இரும்பு 34 சத நிக்கல் – மீட்டர்கள், கடிகாரத்தின் உட்பகுதிகள் , அளக்க உதவும் டேப்புகள் செய்ய உதவுகிறது. கா ரணம் – வெப்பத்திலும் விரிவடையாத குணம் உடையது.
நிக்ரோம் – நிக்கலும் 22 சத க்ரோமியமும் – டோஸ்டர், மின்சார அடுப்புகளில் பயன்படுகிறது.
ஒவ்வொன்றிலும் வேறு சில உலோகங்களும் தேவைக்கேற்ப இடம்பெறும்.
நிக்கல்-காட்மியம் பாட்டரிகள் மீண்டும் மீண்டும் சார்ஜ் ஏற்றி பயன்படுத்தப் படுகின்றன. பெயிண்டுகள், மார்ஜரின் (கிரியா ஊக்கியாக ) முதலியன தயாரிக்கும் இடங்களில் இது உபயோகப்படுகிறது.
பூமியிலுள்ள நிக்கல் எல்லாம் மையப் பகுதியில் கொதித்துக் கொண்டு இருக்கும் திரவக் குழம்பில் இருப்பதால் நாம் அதை எடுக்க இயலாது. இப்போது நாம் எடுப்பதெல்லாம் விண்வெளியில் இருந்து விழுந்த பாறைகளில் இருப்பதுதான். கடலிலும் 800 கோடி டன் கரைந்து கிடக்கிறது.
நிக்கல் ஆராய்சசி நீடிக்கிறது. சில வகைத் தாவரங்கள் நிலத்திலுள்ள நிக்கலை உறிஞ்சியும் உயிர்வாழ்வதால் நிக்கல் மண்டிய நிலங்களில் இவற்றை வளர்த்து நிக்கல் விஷத்தை வெளியேற்றலாமா என்றும் முயன்று வருகின்றனர்.
You must be logged in to post a comment.