கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? (Post No.7151)

RUBY STONE

Written by S Nagarajan


swami_48@yahoo.com

Date: 29 OCTOBER 2019

Time  in London – 5-12 am

Post No. 7151

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

மாலைமலர் 26-10-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?

ச.நாகராஜன்

RUBY NECKLACE

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

         -ஆலயமணி படத்தில் கவிஞர் கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் கேட்கும் கேள்விக்கு யாராலாவது மறுத்துப் பேச முடியுமா?

ஆம், கல்லெல்லாம் மாணிக்கக் கல் ஆகாது.

மாணிக்கத்தின் குணாதிசயங்களும் பலன்களும்!

ரூபி (Ruby) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மாணிக்கம் நவரத்தினங்களுள் அற்புதமான ஒரு ரத்தினம்.

ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுடன் தொடர்பு கொண்ட ரத்தினம் இது. எண் கணிதத்தில் ஒன்று என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டதும் இதுவே தான்!

சூரிய காந்த மணி,கெம்பு, சீயம் என்று அழைக்கப்படும் இந்தக் கல் சூரியன் தரும் பிரகாசம், புகழ், மேன்மை, வெற்றி ஆகியவற்றை தரும்!

சூரியன் ஒரு ஜாதகத்தில் ஐந்து மற்றும் ஒன்பது ஸ்தானங்களில் இருக்கும் போது மாணிக்கம் அணிவது சிறந்த மேன்மையை ஜாதகருக்குத் தரும்.

மாணிக்கத்தில் எந்த மாணிக்கத்தை அணிவது என்ற கேள்விக்கு பல காலமாகச் சொல்லும் பதிலைத் தான் இன்றும் சொல்ல முடியும்! பர்மாவிலிருந்து கிடைக்கும் சிவப்பு வண்ண மாணிக்கம் மிகவும் சிறந்தது.

மாணிக்கம் வைரத்திற்கு அடுத்தபடி மிகவும் கடினமானது.

பிரடரிச் மோ என்ற ஜெர்மானிய அறிஞர் ஒவ்வொரு கல்லுக்கும் உள்ள கடினத்தன்மையை வரையறுத்தார். அவர் கூறும் அளவு அவரது பெயாராலே மோ அலகு எனக் கூறப்படுகிறது.

இதன் படி மிகவும் கடினமான வைரம் 10 என்ற அலகைப் பெறுகிறது. அதற்கு அடுத்தபடியாக 9 என்ற மோ அலகைப் பெறுவது மாணிக்கம்.

மாணிக்கத்தின் ஒப்படர்த்தி 3.99லிருந்து 4.05 வரை இருக்கும். இதன் ஒளி விலகல் எண் 1.756 ஆகும்.

பலவித நிற வேறுபாடுகள் கொண்ட மாணிக்கம் கிடைக்கப்பெறுகின்றன. 

புறா ரத்த வண்ணம் எனப்படும் (Piegeon Blood Red) மாணிக்கமே மதிப்பு மிக்கது, அணிவதற்கு ஏற்றது.

கண்களில் நோய் உள்ளவர்கள் மாணிக்கம் அணிந்தால் அந்த நோய்கள் விலகும்.

உடலின் வலிமை கூடும்.வீரிய விருத்தி உண்டாகும்.

ஆயுளைக் கூட்டும்.

மனதிற்கு சாந்தியைத் தரும்.

அதிகாரத்தைக் குறிக்கும் கல் என்பதால் பழைய காலத்தில் மன்னர்கள் இதை அணிவது வழக்கம். இன்றைய நாட்களில் தலைமை அதிகாரி (CEO) க்கு உரிய கல் இது.

ARGENTINA’S PRESIDENT WITH HER RUBY NECKLACE

தலைமை பீடத்தில் இல்லாதவர் இதை அணிந்தாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். அரசியலிலும் ஏற்றம் தரும் கல் இது.

வைத்திய சாஸ்திரங்களில் மாணிக்கத்தின் பெருமை பலவாறாகப் புகழப்படுகிறது.

பதார்த்த குணசிந்தாமணி என்ற புகழ்பெற்ற பண்டைய வைத்திய நூல் இதைப் பற்றிக் கூறும் போது,

‘சுர ரோகம் சன்னிகளின் தோஷம் அதிதாகம்

உரமான மேகம் ஒழியும் – திரமாக

ஊணிக்கொள் நேத்திரநோய் ஓடும் அரவீன்ற

மாணிக்கத்தால் வசியமாம்’ என்று கூறுகிறது.

இதன் பொருள் ; சுர நோய் தீரும். அதி தாகம், மேக நோய் ஒழியும். கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் போகும். வசியம் உண்டாகும்.

பண்டைய நாகரிகங்களில் மாணிக்கம்!

பண்டைய நாகரிகங்களில் எகிப்திய நாகரிகம் உள்ளிட்ட நாகரிகத்தில் இது செய்வினை மற்றும் தீய சக்திகளிடமிருந்து காத்துக் கொள்ள அணியப்பட்டது. மாணிக்கத்தை நனைத்து விட்டு அந்த நீரை வயிற்று வியாதிகளுக்கு அருந்துமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தினர். அத்தோடு இதன் பொடியை ரத்த சம்பந்தமான நோய்கள் தீர்க்கவும் இதர மருந்துப் பொருள்களுடன் சேர்ந்து பயன்படுத்தினர்.

எப்போது முதல் முறையாக அணிவது?

சுக்ல பக்ஷ ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய ஹோரையில் இதை அணிவது நலம்.

தங்கம் அல்லது தாமிரத்தால் செய்யப்பட்ட மோதிரத்தில் இதைப் பதித்து அணியலாம்.

முதல் முறை அணியும் போது பாலில் இதை அமிழ்த்திப் பின்னர் நீரால் அலம்பி விட்டு அணிதல் வேண்டும்.

நான்கு வகை நல்ல மாணிக்கக் கற்கள்!

மிகப் பழைய நூலான ரஸ ஜல நிதி மாணிக்கத்தைப் பற்றிய ஏராளமான விவரங்களைத் தருகிறது:

மாணிக்கம் நான்கு வகைப்படும் 1) பத்மராகம் 2) குருவிந்தஜா 3)சௌகந்திகா 4) நீல காந்தி

இதில் தாமரை வண்ணத்தில் (வெள்ளையுடன் கூடிய சிவப்பு வண்ணம்) கண்ணுக்கு விருந்தாகும் ஒளி பொருந்திய ஒளி ஊடுருவும்  வட்ட வடிவமான மிருதுவான ஆனால் கனமான மாணிக்கமே சிறந்தது.இதுவே பத்மராகம்.

கோரண்டம் (Corundum) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது சம்ஸ்கிருதத்தில் குருவிந்தம் என அழைக்கப்படுகிறது.

லலிதாம்பிகையின் தலையில் அணியப்பட்டுள்ள கிரீடம் குருவிந்தத்தால் ஆனது என்பதிலிருந்தே இதன் சிறப்பை அறியலாம். செக்கச் செவேலென இருக்கும் அழகிய கல் இது.

சௌகந்திகம் மஞ்சள் கலந்த சிவப்பு வண்ணத்துடன் இருக்கும்.

நீல கங்கா நதியிலிருந்து கிடைப்பது நீல காந்தி. சிவப்புடன் நீல வண்ணம் உள்ளிருந்து ஒளிர இரண்டு வண்ணமும் கலந்த கல் இது.

இந்த நான்கு வகைகளும் அதன் தரத்தின் படி மேலே வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

குறைபாடுகள் எவை?

மாணிக்கத்தில் உள்ள குறைகள் பின் வருமாறு:

துளைகள் உள்ளது, அழகில்லாமல் இருப்பது, ஒளியில்லாமல் இருப்பது, கரடுமுரடாக இருப்பது, ஓளி புகாத தன்மையுடன் இருப்பது, தட்டையாக இருப்பது, மிகவும் லேசாக இருப்பது, வடிவமைப்பில் ஒழுங்கற்ற தன்மையுடன் இருப்பது.

இவையிருப்பின் அந்தக் கல்லை வாங்கக் கூடாது.

ஒரு மாணிக்கத்தில் இரு வேறு ஒளிகள் அதன் இரு வேறு பக்கங்களிலிருந்து வந்தால் அது அழிவைத் தரும். வாங்கக் கூடாது.

காகத்தின் கால் போல உள்ள தோற்றம் அளிக்கும் மாணிக்கம் தோல்வியைத் தரும்.

விரிசல் இருப்பின் அதை அணிந்தால் ஆயுதங்களால் காயம் ஏற்படும்.

மாணிக்கத்தின் உள்ளே சிறு கூழாங்கல் இருப்பின் நண்பர்கள் அழிவர்; மாடு உள்ளிட்ட கால்நடைகள் அழிந்து படும்.

மாணிக்கத்தின் உள்ளே பால் போன்ற ஒரு பூச்சு இருப்பின் அதை அணியக் கூடாது. அது துன்பத்தைத் தரும்.

தேனின் நிறத்தைப் போல இருக்கும் மாணிக்கமும் அணிவதற்குத் தக்கதல்ல. இதை அணிந்தால் ஆயுள் குறையும். துரதிர்ஷ்டம் வரும். புகழ் குறையும்.

 ஒளி இல்லாத மாணிக்கம் பண இழப்பை உண்டாக்கும்.

புகை போன்ற வண்ணம் உடைய கல் மின்னலினால் விபத்தை ஏற்படுத்தும்.

இவை எல்லாம் ரஸ ஜல நிதி தரும் அறிவுரை!

PICTURE
 OF RUBY EAR RINGS

நல்ல மாணிக்கம் எது?

அருமையான மாணிக்கக் கல்லை எப்படி அறிவது?

சூரிய ஒளி அதன் மேல் படப்பட சுற்றுப்புறம் எல்லாம் பிரகாசிக்கும்.

இளங்காலை நேரத்தில் உதய சூரியனின் கிரணங்கள் பட்டவுடன் சிவப்பு ஜூவாலை போன்ற ஒளியை எந்தக் கல் கக்குகிறதோ அது சிறந்தது.

தூரத்திலிருந்து பார்க்கும் போது சிவப்புத் தீ போல ஜொலிப்பது வம்ச காந்தி என்று அழைக்கப்படுகிறது. அது உடனடியாக செல்வத்தைத் தரும்.

 இருளில் ஒரு மாணிக்கத்தை வைத்தால் அது தன் ஒளியால் சுற்றுப்புறத்தில் ஒளியைத் தருமாயின் அது நல்ல கல்லாகும்.

கடவுளுக்குக் கூடக் கிடைக்காத மாணிக்கம் அல்லது கடவுளரே ஆவலுடன் விரும்பி ஏற்கும் மாணிக்கம் எது எனில். அதை ஒரு தாமரை மலரின் உள்ளே வைத்தவுடன் அது விகசித்து உடனே இதழ் விரித்து மலரும். அதுவே அற்புதமான மாணிக்கக் கல்!

மாணிக்கத்தின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?

இரண்டு கேரட் சாதாரணமாக அணியப்படுகிறது.

RUBY STAMP FROM VIETNAM

பிரபலமான மாணிக்கக் கற்கள்!

இது வரை உலகம் கண்ட புகழ் பெற்ற மாணிக்கக் கற்கள் வருமாறு:

ப்ளாக் ப்ரின்ஸின் ரூபி (Black Prince’s Ruby)

தைமூர் ரூபி (Timur Ruby)

ரோஸர் ரீவ்ஸ் ஸ்டார் ரூபி (Rosser Reeves Star Ruby)

எட்வர்ட்ஸ் ரூபி (Edwardes Ruby)

உலகின் பிரபலமான நடிகையும் பேரழகியுமான எலிஸபத் டெய்லர் 1968 ஆம் ஆண்டு ஒரு மாணிக்கம் பதித்த மோதிரத்தை அணிந்தார். அது உலகினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

அதன் எடை 8.24 கேரட். அது 2011இல் 42 லட்சம் டாலருக்கு  ஏலத்தில் எடுக்கப்பட்டது. (ஒரு டாலரின் இன்றைய ரூபாய் மதிப்பு 70) அதாவது ஒரு கேரட்டின் விலை சுமார் ஐந்து லட்சம் டாலர்!

உலகின் அதிக எடையுள்ள ரூபி ஹோப் ரூபியாகும். இதன் எடை 32.08 கேரட்.

RUBY FROM THAILAND

மாணிக்கம் கிடைக்கும் இடங்கள்!

பர்மாவைத் தவிர அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் மாணிக்கம் கிடைக்கிறது.

ஒரு முக்கியமான விஷயம், நமது தமிழ்நாட்டில் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மாணிக்கம் உள்ளிட்ட பல கற்கள் உள்ளன.

ரத்தினக் கலையில் நிபுணர்களாக உள்ள வல்லார் இந்தப் பகுதியில் ஆய்வு நடத்தினால் தமிழகம் மாணிக்க நாடாக ஆகி விடும்.

சிலம்பில் மாணிக்கம்!

தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரம் மாணிக்கத்தையும் முத்தையும் மையமாகக் கொண்டு முடிகிறது.

பாண்டிமாதேவி என் பொற்சிலம்பில் முத்துப் பரல்கள் உள்ளது என்று கூற கண்ணகி தன் காற்சிலம்பை உடைத்துக் காண்பிக்க அதிலிருந்து மாணிக்கப் பரல்கள் தெறித்து விழுந்தன.

“கண்ணகி அணிமணிக் காற்சிலம்பு உடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே” என அழகுற அந்தக் காட்சியை அமைக்கிறார் இளங்கோவடிகள்.

கண்ணகியின் மாணிக்கக் கற்கள் மன்னனின் வாயில் தெறிக்க, மதுரை பற்றி எரிந்ததையும் பின்னர் நடந்ததையும் அனைவரும் அறிவர்.

மாணிக்கம் இல்லாத இலக்கியம் ஒளி இல்லாத இலக்கியம்.

ஆங்கில இலக்கியத்தில் ரால்ஃப் வால்டோ எமர்ஸன் உள்ளிட்ட கவிஞர்கள் மாணிக்கத்தைத் தங்கள் கவிதையில் இழைத்துள்ளனர்.

தமிழில் மாணிக்கத்தின் பெருமையைச் சுட்டிக் காட்டும் நூற்றுக் கணக்கான பாடல்கள் உள்ளன.

பெரியாழ்வார்,

“மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி

ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்”

என்று வர்ணிப்பதிலிருந்து ஆரம்பித்தால் மாணிக்கப் பட்டியல் நீளும்.

அருளாளர்கள் அனைவரும் மாணிக்கமே என இறைவனை அறைகூவி அழைக்கும் போது மாணிக்கத்தின் உண்மையான மதிப்பு தெரிய வருகிறது, இல்லையா?

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, என்ன?!

****

அனைவரும் போற்றும் 500 வயது மரம் ! (Post No.7124)

Major Oak, Robin hood Tree

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 22 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-42 am
Post No. 7124

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

1992ம் ஆண்டில் நான் வாரம் தோறும் தினமணி பத்திரிக்கையில் எழுதி வந்த உலகப் பலகணி ப்குதியிலிருந்து மேலும் ஒரு கட்டுரை.

அனைவரும் போற்றும் 500  வயது மரம் ! published in Dinamani on 6-9-1992; written by S Swaminathan from London

இது போல நாமும் புகழ்பெற்ற மரங்களை, குறிப்பாகத் தமிழ் நாட்டுக் கோவில் தல மரங்களப் பாதுகாக்க வேண்டும். மதுரை, காஞ்சீபுரம் போன்ற இடங்களில் பாதுகாத்து வைக்கப்பட்ட பட்டுப் போன மரங்களை விஞ்ஞான முறையில் கார்பன் டேட்டிங் செய்து முடிவுகளை வெளியிட வேண்டும்.

புத்தரின் போதி/ அரச மரம் உலகப் புகழ் பெற்றுவிட்டது. ஆனால் புகழ்பெறாத பெரிய ஆலமரங்கள், நம்மாழ்வாரின் புளிய மரம், தான்ஸேனின் புளிய மரம், கட்டபொம்மனின் தூக்கு மரம் முதலியவற்றையும் சுற்றுலாத் தலங்கள் ஆக்க வேண்டும்.

மேலும் புகழ்பெற்ற மரங்கள் பற்றித் தபால் தலைகள் வெளியிட வேண்டும்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட மரத்துக்கு அடியில், போகும் வரும் யாத்ரீகர்கள் ஒரு சிறு கல்லைப் போட்டு மரியாதை செய்வர் என்று எழுதப்பட்ட, 100 ஆண்டுக்கு முந்தைய புஸ்தகத்தை பேஸ் புக்கில் வெளியிட்டேன். இப்பொழுது அந்த இடம் இருந்தால் , அதையெல்லாம் மரியாதைக்குரிய சின்னங்களாக மாற்ற வேண்டும்.

என்னிடமே  பிரிட்டனின் புகழ்பெற்ற மரங்கள் பற்றிய நூலும் மாதம் தோறும் வெளியாகும் மரங்கள் பற்றிய பத்திரிக்கையும் உள்ளன. இது போல மரம் அறிவு பெருகி “மரத்தடியர்கள்”  அதிகரிக்க வேண்டும்.

மரத்தடியர்கள் = மரத்துக்கு அடியில் வசிப்போர்! வானப் ப்ரஸ்தர்கள்; புத்தர், நம்மாழ்வார் போன்ற ஞானிகள்.

மரங்கள் பற்றி எனது பிளாக்கில் 20, 30 கட்டுரைகள் உள. படித்து இன்புறுக.

Following is from Daily Mail (Nov.14, 2014)

The Major Oak in Nottinghamshire’s Sherwood Forest was a clear winner in a public vote run by the Woodland Trust.

It claimed 2,317 votes or 18 per cent of the 13,000 cast in just eight days earlier this month.

The Major Oak is said to be where Robin Hood and his Merry Men slept when not stealing from the rich and giving to the poor.

It gets its name from Major Hayman Rooke, an 18th century historian, who described it in 1790.

But it is thought to have stood within what is now Nottinghamshire County Council’s Sherwood Forest Country Park for up to 1,000 years.

It boasts a girth of 33ft, a spread of 92 ft, weighs 23 tons and each year produces up to 150,000 acorns.

Its nearest rivals were two other ancient oaks – Old Knobbley in Mistley, Essex, and the Ickwell Oak in Ickwell, Bedfordshire. 

7 branched Palmyra Tree, Kallal
Tamarind Tree of Nammalvar
Picture by Lalgudi Veda
Tree Worship in Varanasi
Sangu/ Conch Katha Perumal Temple
Save Our Trees; Dont cut them.
Tansen
Tansen’s Famous Tamarind Tree

–subham–

தமிழ் WORD SEARCH / குறுக்கெழுத்துப் போட்டி (Post No.7114)

WRITTEN BY London Swminathan
swami_48@yahoo.com

Date: 19 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 18-58
Post No. 7114

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.


அட
இந்த ஒன்பது தெரியாதவர் யார்விலைதான் அதிகம்.

குறுக்கும் நெடுக்குமாகப் போங்கள்கொஞ்சம் வளைந்தும்நெளிந்தும் பாருங்களேன்.

ANSWERS–

நவரத்தினங்கள் :– வை  ம்நீலம்மர கதம்மாணி க்கம்முத்து,

பவ ளம்கோமேதகம்புஷ்  ரா கம்,  வைடூர் யம்

–subham–

அதிசய பாலைவனத் தாவரம்(Post No.7105)

WRITTEN BY london Swaminathan
swami_48@yahoo.com

Date: 17 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 15-05
Post No. 7105

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

1992ன் ஆண்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில். தினமணிப் பத்திரிக்கையில் ‘உலகப் பலகணி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தேன். இதோ 31-5-1992ல் வெளியான 4 கட்டுரைகளின் பறவைக் கண் பார்வை (Bird’s Eye View) . ஆனால் காலத்தினாலும் சுவை குன்றாத கட்டுரை ‘அதிசய பாலைவனத் தாவரம்’. அதை மட்டும் பெரிது படுத்திக் காட்டுகிறேன். பழைய குப்பைகளை  (Old Paper Cuttings) தூக்கி எறிந்துவருகிறேன். பயனுள்ள விஷயத்தை மட்டும் பகிர்வேன்

இதன் இருப்பிடம்- அமெரிக்கா;

இதன் பெயர் – சாயுவாரோ:

இதன் எடை – 11 டன். அதாவது இரண்டு யானை எடை.

இதன் வயது – 200 ஆண்டுக்கு மேல்!

மேலும் படியுங்கள்

சாக்லெட் நாடு பெல்ஜியம்! (Post No.7097)

  சாக்லெட் நாடு பெல்ஜியம்! (Post No.7097)     Written by  S Nagarajan
swami_48@yahoo.com
Date: 15 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 14-19
Post No. 7097

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
  ச.நாகராஜன்     கோகுலம் கதிர் அக்டோபர் 2019 இதழில் உலக உலா பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை!     பெல்ஜியத்திற்கும் தமிழுக்கும் ஒரு தொடர்பு உண்டு. பெல்ஜியம் அறத்திற்காகப் போராடி வீழ்ந்த போது அதைப் பாராட்டிக் கவலைப்படாதே என்று சொன்னது ஒரு தமிழ்க் கவிதை தான்! பாடியவர் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார். ‘பெல்ஜியத்திற்கு வாழ்த்து’ என்ற தலைப்பில் கவிதை புனைந்த பாரதியார் ஆரம்பத்திலேயே அற்புதமாக பெல்ஜியத்தை இப்படிப் புகழ்ந்தார்:     “அறத்தினால் வீழ்ந்து விட்டாய்; 
  அன்னியன் வலிய னாகி
மறத்தினால் வந்து செய்த 
  வன்மையைப் பொறுத்தல் செய்யாய்
முறத்தினால் புலியைக் தாக்கும் 
  மொய்வரைக் குறப்பெண் போலத்
திறத்தினால் எளியை யாகிச் 
  செய்கையால் உயர்ந்து நின்றாய்” இந்தப் பாட்டின் பின்னணி என்ன?   மிகப் பெரும் பழைய சரித்திரத்தைக் கொண்ட பெல்ஜியம் 1830இல் சுதந்திரம் பெற்றது. அதற்கு முன்னால் ஜூலியஸ் சீஸர் அங்கு வந்த போது அதன் பெயர் பெல்கே. 1839இல் பிரிட்டனுடன் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கையின் படி அதன் மீது யாரேனும் வலியப் போர் தொடுத்தால் பிரிட்டன் உதவிக்கு வரும் என்ற ஷரத்து ஏற்பட்டது. போரை விரும்பாத பெல்ஜியம் தனது நடுநிலைத் தன்மையை எப்போதுமே உறுதிப் படுத்தி வந்தது.     1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி திடீரென்று ஜெர்மானியப் படை பெல்ஜியத்தின் வழியே தன் படை செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றது. 3ஆம் தேதி இதை பெல்ஜியம் உறுதியாக மறுத்தது. 4ஆம் தேதி ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது போர் தொடுத்தது. அன்று தான் முதலாம் உலகப் போர் தொடங்கியது. அதன் விளைவு பெரும் விபரீதத்தில் பெல்ஜியத்தை அழிக்கும் அளவு சென்றது. The Rape of Belgium -பெல்ஜியத்தின் கற்பழிப்பு என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுமளவு அந்த தேசம் பாதிக்கப்பட்டது. அறத்திற்கென தலை நிமிர்ந்து நின்று, ஜெர்மனியின் படையை உள்ளே வரக் கூடாது என்று துணிந்து சொல்லி அதன் விளைவாக அல்லல் பட்ட நாட்டை வியப்புடன் பார்த்துத் தான் மஹாகவி இந்தப் பாடலைப் புனைந்தார்..     முறத்தினால் புலியை விரட்டி செய்கையால் உயர்ந்து நின்ற புறநானூற்றுத் தமிழ்ப் பெண்ணை உவமையாகக் காட்டி ‘முறத்தினால் புலியைக் தாக்கும் 
  மொய்வரைக் குறப்பெண் போலத்  திறத்தினால் எளியையாகிச் 
  செய்கையால் உயர்ந்து நின்றாய்” என்று பாராட்டினார். பாரதியாரின் அருமையான முழுப் பாடலையும் படித்தால் பெல்ஜியத்தின் பெருமை விளங்கி விடும்.   ‘லீஜ் போர்’ எனப்படும் Battle of Liege  லீஜ் நகரில் தொடங்கி பல  இடங்களுக்குப் பரவியது. போர், போர், போர்!   அந்தப் போரில் அடிபட்டுத் துவண்டு மீண்டும் எழுந்து இன்று கம்பீரமாக நிற்கும்  பெல்ஜியம்.இன்று உலகின் பணக்கார நாடுகளில் இருபதாவது இடத்தை வகிக்கிறது. மக்கள் இயல்பாகப் பழகும் தன்மை உடையவர்கள். இதன் தலைநகரான ப்ரஸ்ஸல்ஸின் (Brussels) தெற்கே உள்ள வாட்டர்லூ நகரில் தான் நெப்போலியன் தோல்வியுற்றான்.   இதே ப்ரஸ்ஸல்ஸில் தான் வாஷிங்டனில் இருக்கும் அளவு பல நாடுகளின் ராஜதந்திரிகள் இன்று உள்ளனர். வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் உலகின் எந்த நகரில் ஏராளமாக உள்ளனர் என்று கேட்டால் ப்ரஸ்ஸல்ஸ் என்ற பதிலே வரும். அப்படிப்பட்ட புகழைக் கொண்டது ப்ரஸ்ஸல்ஸ்!      உலகின் முதல் இரு செய்தித்தாள்களை 1605இல் அச்சிட்டது பெல்ஜியம் தான்! டச்சு, ப்ரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மூன்று மொழிகளை அதிகாரபூர்வ மொழிகளாகக் கொண்டுள்ளது பெல்ஜியம்.     உலகின் எல்லா நாடுகளின் நகர்களிலும் – சென்னை உட்பட – ஓய்வெடுக்க என இயங்கும் – Spas – ஸ்பாக்கள் அந்தப் பெயரைக் கொள்ளக் காரணம் பெல்ஜியமே. பெல்ஜிய நகரான ஸ்பாவிலிருந்து உருவானவையே இந்த ஸ்பாக்கள்! ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பு என்று எடுத்துக் கொண்டாலும் கூட உலகின் அதிக கோட்டைகளைக் கொண்டதும் பெல்ஜியமே. குழந்தை இல்லையா, அதிகம் வருமானவரி செலுத்த வேண்டும். உலகின் அதிக வருமானவரி இவர்களுக்குத் தான்!     பொழுது போக்கு அம்சங்களும் விளையாட்டுக்களும் அதிகம் உள்ள இந்த நாட்டில் தான் டின் டின் போன்ற பல காமிக் புத்தகங்கள் உருவாயின. அகில உலக கால்பந்தாட்டப் போட்டியும் 1904இல் ப்ரஸ்ஸல்ஸில் தான் முதன் முதலில் நடந்தது.     இந்தக் குட்டி நாடு ஒரு முறை தனது அரசை அமைக்க, அனைத்துக் கட்சிகளும் 541 நாட்கள் ஆலோசனை நடத்தவும் இன்னும் ஒரு 200 நாட்களை 65 நிர்வாக வேலைப் பொறுப்புக்கான நபர்களை நியமிக்கவும் எடுத்துக் கொண்டது அதிசயமே! இப்போது இங்கு ஓட்டுப் போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 1953இல் டி.வி. நிகழ்ச்சிகளைத் தொடங்கியது பெல்ஜியம். 97 சதவிகிதம் வீடுகளில் கேபிள் டி.வி. உண்டு. நம் தமிழ்நாட்டுப் பெண்மணிகள் போலவே சீரியல்களுக்கு இங்குள்ள பெண்களும் அடிமைகள்.     முக்கியமான சீரியல் முடிந்த பிறகு தான் சாப்பாடு – இங்குள்ளது போலவே! பெண்களுக்குப் பிடித்த இன்னொரு விஷயமான வைரத்தின் உலகத் தலைநகரமான அன்ட்வெர்ப்பும் பெல்ஜியத்தில் தான் உள்ளது. பெல்ஜியம் கண்ணாடி என்றால் கேட்கவே வேண்டாம். பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம்பளத்தில் இங்கு வேறுபாடே இல்லை. சமத்துவமான சம்பளம் தான்!   உலகில் ஆயிரக்கணக்கில் சுவையான உணவு வகைகளை அறிமுகப்படுத்துவதும் பெல்ஜியமே!   நமது காமராஜரை நினைவு படுத்தும் படி அனைவரும் படிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட இந்த நாட்டில் 18 வயது வரை கல்வி என்பது அனைவருக்கும் கட்டாயமான ஒன்று.     குளிர் மிகுந்த நாட்களில் நாம் பேசினாலே புகை வரும். அப்படி ஒரு நடுக்கும் குளிர். தொழிலகமெல்லாம் நன்கு அடைக்கப்பட்ட கட்டிடங்களில் வெப்பமூட்டும் சாதனங்கள் பொருத்தப்பட்டே இயங்குகின்றன. தொழிலாளிகள் ஜாலியாக ரிலாக்ஸாக, ஆனால் திறம்பட, கொடுத்த வேலையை குறித்த நேரத்தில் தரத்துடன் முடிக்கின்றனர்.     பெல்ஜியம் பெண்களின் நாடு மட்டுமல்ல; குழந்தைகளுக்கும் பிடித்த நாடு. ஏனெனில் இங்கு தான் வருடத்திற்கு 2,20,000 டன்கள் சாக்லட் உற்பத்தியாகிறது. ப்ரஸ்ஸல்ஸில் உள்ள பன்னாட்டு விமானநிலையத்தில் தான் உலகில் அதிக அளவு சாக்லட் விற்பனை ஆகிறது.     பெல்ஜியம் பீருக்கு ஏகப்பட்ட டிமாண்ட் உண்டு. 800 வகையான பீர்கள் இங்கு தயாராகின்றன. சில பீர் பிரியர்களோ, இது தப்பு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பீர்கள் இங்கு தயாராகின்றன என்கின்றனர். ஒவ்வொரு பீரின் வகைக்கும் தக்கபடி ஒவ்வொரு வகையான பாட்டில் தயாரிக்கப்படுகிறது!   டுமாரோலேண்ட் என்ற இடத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் எலக்ட்ரானிக் இசை மற்றும் நடனத் திருவிழா உலகினரைப் பெருமளவில் கவர்கிறது; அத்தோடு பெல்ஜியத்திற்கு திருவிழாக்களின் நாடு என்ற செல்லப் பெயரும் உண்டு! ஏனெனில் அன்றாடம் தெருக்களிலும் அரங்கங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும்.     உலகின் முதல் லாட்டரிச் சீட்டை அறிமுகப்படுத்தியதும் பெல்ஜியமே. ஆனால் இந்த லாட்டரியில் கிடைக்கும் நிதியை ஏழைகளுக்குக் கொடுக்கவே அது லாட்டரியை நடத்தியது!     இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டைத் தயாரித்த அமெரிக்கா அதில் எந்த நாட்டு யுரேனியத்தைப் பயன்படுத்தியது தெரியுமா? சமாதானத்தை என்றும் நிலை நிறுத்த விரும்பும் பெல்ஜியத்திலிருந்து வந்த யுரேனியத்தைத் தான்! காங்கோ அதன் காலனியாக இருந்த போது பெல்ஜியம் தரவழைத்தது இந்த யுரேனியம்.   இங்குள்ள எஞ்ஜினியர்கள் திறமைசாலிகள். ஆகவே தான் உலகின் பெரிய கட்டிடமான  பர்ஜ் துபாய் கட்டிடத்தைக் கட்ட துபாய் தேர்ந்தெடுத்த நான்கு கம்பெனிகளுள் பெல்ஜியம் கம்பெனியும் ஒன்றாக அமைந்தது.   இங்குள்ள நீதி மன்றம் போல பெரிய அளவிலான கட்டிடம் கொண்ட ஒன்று உலகிலே எங்குமே இல்லை. 26000 சதுர மீட்டர் பரப்புள்ள கட்டிடம் நீதியை நிலை நாட்டுவதில் குறியாக உள்ளது.     ஐரோப்பாவின் யூரோ கரன்ஸியை முன் வைத்தது முதன் முதலில் பெல்ஜியம் தான். அது மட்டுமல்ல, அதற்கான யூரோ சின்னத்தை – € – வடிவமைத்துத் தந்ததும் அது தான்!     இந்த நாட்டைப் பற்றி ஒரு வரி சொல் என்று சின்னக் குழந்தையைக் கேட்டால் கூட அது சொல்லும் – சாக்லெட் நாடு என்று! ***  

முதலையைக் கொலுசினால் கன்னத்தில் உதைத்த பெண்! (Post No.7095)

Written by  S. Nagarajan
swami_48@yahoo.com

Date: 14 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 13-36
Post No. 7095

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

தமிழ் இன்பம்

முதலையைக் கொலுசினால் கன்னத்தில் உதைத்த பெண்! (Post No.7095)

ச.நாகராஜன்

குலோத்துங்க சோழன் சிறந்த தமிழ்ப் புலவன். புலவர்களை ஆதரித்த மாபெரும் மன்னவன். ஒட்டக்கூத்தர் அவனது அரசவைப் புலவர்.

ஒட்டக்கூத்தர் பால் அவனுக்குப் பெரும் மரியாதை உண்டு.

ஒரு நாள் குலோத்துங்கன் ஒரு செய்தியைக் கேட்டான். அதிசயமான செய்தி.

ஒரு பெண் தன் சோர நாயகனைக் காண விரும்பினாள். அவன் இருப்பதோ அக்கரை. இவள் இருப்பதோ இக்கரை.

ஆனால் காம வெப்பம் தாங்கவில்லை இளம் பெண்ணுக்கு.

அவனை உடனே சந்திக்க விரும்பினாள்.

ஆனால் நீர் வெள்ளம் பெருக்கோடியது. என்ன செய்வது. துணிந்தாள்.

நீரில் மிதந்தோடும் ஒரு பிணத்தைப் பிடித்தாள். அதைத் தெப்பமாகக் கொண்டு அக்கரை சேர்ந்தாள்.

தன் காதலனொடு கூடி மகிழ்ந்தாள்.

பின்னர் இக்கரை வர வேண்டுமே! நீந்தி வர ஆரம்பித்தாள்.

அவளது காலை ஒரு முதலை பிடித்துக் கொண்டது.

தன் காலில் இருந்த கொலுசினால் அதன் கன்னத்தில் ஓங்கி உதைத்தாள்.

முதலைப் பிடியிலிருந்து மீண்டு வந்தாள்.

இந்த செய்தியைக் கேட்ட குலோத்துங்கன் ஒட்டக்கூத்தரை வினவ அவர் பாடிய கண்டசுத்தி இது:

கரண்டகண் டத்தொனிக் கஞ்சிய மான்கருங் கங்குலிலே

திரண்ட வெள்ளத்திற் பிணமீது சென்றனள் செர்ந்தவளை

அரண்டலின் பங்கொடி மீளக்கராப் பற்றவங் கொலுசால்

குரண்டி கன்னத்தி  லுதைத்தனன் காணங்கு லோத்துங்கனே

பொருள் : அம் குலோத்துங்கனே – அழகிய குலொத்துங்க அரசனே!

கரண்டம் – நீர்க்காக்கையின்

கண்டத் தொனிக்கு – குரல் ஓசைக்கு

அஞ்சிய – பயந்த

மான் – பெண்ணானவள்

கருங் கங்குலிலே – கருமையாகிய இருள் படர்ந்த இராக்காலத்தில்

திரண்ட வெள்ளத்தில் – பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில்

பிணமீது சென்றனள் – பிணத்தைத் தெப்பமாகக் கொண்டு சென்றால்

சேர்ந்தவளை – சோரநாயகனைக் கூடி

அரண்ட இன்பம் கொடு – வெருட்சியாகிய இன்பத்தை அனுபவித்து

மீள – மீண்டு வரும் போது

கரா பற்ற – அவளது காலை ஒரு முதலை பற்ற

அம் கொலுசால் – அழகிய தன் காலில் அணிந்த கொலுசினால்

குரண்ட கன்னத்தில் உதைத்தனள் –  திரைந்த கன்னத்தில் உதைத்தாள்

பாடலைக் கேட்ட மன்னன் மகிழ்ந்தான்.

ஒருநாள் இருவரும் பயணம் மேற்கொண்ட போது ஒட்டக்கூத்தர் சோழனைப் புகழ்ந்து பாட ஆரம்பித்தார்.

இரண்டு அடிகளை முடித்தவுடன் கையை அசைத்து அவரை நிறுத்திய குலோத்துங்கள் மீதி இரண்டு அடிகளைத் தானே பாடி பாடலை முடித்தான்.

பாடல் இது தான்:

ஆடுங் கடைமணி நாவசையா மகில மெங்கும்

நீடுங் குடையைத் தரித்தபிரா னிந்த நீணிலத்தில்

பாடும் புலவர் புகழொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்

சூடுங்கு லோத்துங்க சோழனென்றே யென்னைச் சொல்லுவரே.

பொருள் : ஒட்டக்கூத்தர் பாடியது:

ஆடும் கடைமணி நாவசையாமல் – அசையும் இயல்புள்ளதான மணியானது நாவசையாமல்

அகிலம் எங்கும்  – உலகம் எங்கும்

நீடுங் குடையைத் தரித்த பிரான் – பெரிய குடையைத் தரித்து நிழலைச் செய்கின்ற பெருமான்

இங்கு அவரை நிறுத்திய குலோத்துங்கன் தான் பாட ஆரம்பித்தான் பொருள் கெடாமல்!

நீணிலத்தில் – இந்தப் பெரிய நிலத்தில்

புலவர் பாடும் புகழ் – புலவர் புகழ்ந்து பாடும்

ஒட்டக்கூத்தன் பதாம்புயத்தை – ஒட்டக்கூத்தரின் திருவடித் தாமரையை

சூடும் – சிரசில் அணிகின்ற

குலோத்துங்க சோழன் என்றே என்னைச் சொல்லுவரே – குலோத்துங்க சோழன் என்று என்னைச் சொல்லுவர்.

ஒட்டக்கூத்தர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இருக்குமா என்ன?

****

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே….. (Post No.7094)

Written by London Swaminathan
swami_48@yahoo.com

Date: 14 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-45 am
Post No. 7094

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

சந்துல தானா சிந்துகள் பாடி
தந்திரம் பண்ணாதே
நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே
பறிக்க எண்ணாதே

போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா
போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே

ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்
சலசலக்கையிலே
என் மனம் தொட்டு ஏக்கமும்பட்டு
என்னமோ பண்ணுதே

சித்திரப் பட்டு சேலையைக் கண்டு
உனக்கு பிரியமா
நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்
எனக்குப் புரியுமா

போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா
போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே

செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்
சம்மதப்பட்டுக்கனும்
தாளமும் தட்டி மேளமும் கொட்டி
தாலியைக் கட்டிக்கனும்

(குங்குமப் பூவே)

YashikushiAug 22, 2010

உலகில் 25 கோடி குண்டர்கள்! (Post No.7087)

Written  by London swaminathan
swami_48@yahoo.com

Date: 12 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 8-47 am
Post No. 7087

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.


‘த வீக்’ ‘THE WEEK’ என்னும் லண்டன் வாரப் பத்திரிக்கை அக்டோபர் 12, 2019 இதழில் ஒரு திடுக்கிடும் செய்தியை வெளியிட்டுள்ளது. இன்னும் பத்தே ஆண்டுகளில் உலகில் உடல் பருத்த, குண்டுக் குழந்தைகள் (OBESE)  எண்ணிக்கை 25 கோடியைத் தாண்டி விடுமாம். இப்பொழுது குண்டர்களின் எண்ணிக்கை 15 கோடிதான்!

உலக உடற்பருமன் சம்மேளனம் (WORLD OBESITY FEDERATION)  கூறும் ஆரூடம் இது. 

2030ம் ஆண்டில் — அதாவது இன்னும் 11 ஆண்டுக்குப் பின்னர்…..

பிரிட்டனில் பிறக்கும் குழந்தைகளில் 12 சதவிகிதம் குண்டுகள்!

பிளாஸ்டிக் நுண் துகள்களை நாம் கண்ணால் காண முடியாது. பெரிய மைராஸ்கோப் மூலமே காண முடியும்.

XXX SUBHAM XXX

அஷ்ட சரஸ்வதி, அஷ்ட சக்தி (Post No.7075)

Sarasvati in Kurdoli

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 9 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-15 am
Post No. 7075

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Indra on Airavata
Agni on goat, picture by Lalgudi Veda
Mount Kailash, Abode of Lord Shiva
pictures by Radhika Balakrishnan

செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 1 (Post No7071)

blue diamond

WRITTEN by S Nagarajan

swami_48@yahoo.com
Date: 8 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 11-17 am
Post No. 7071

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

மாலைமலர் 5-10-2019 இதழில் சென்னைப் பதிப்பில் வெளியாகியுள்ள கட்டுரை
செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 1

ச.நாகராஜன்

உங்கள் கையிலோ அல்லது கழுத்திலோ காதிலோ, மூக்கிலோ வைர நகை அணிந்திருக்கிறீர்களா?
அப்படியானால் சுமார் நூறு கோடி அல்லது இருநூறு கோடி ஏன் முன்னூறு கோடி வருடம் பழமையான ஒரு அற்புதப் பொருளை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்ற உண்மையை அறிவீர்களா?
ஆம், வைரங்கள் மிக மிகப் பழமையானவை. அதன் அற்புதங்கள் சொல்லி மாளாதவை.
பூமியின் அடியில் மிக மிக ஆழத்தில் வைரங்கள் உருவாகின்றன.
வைரம் என்பது சுத்த கார்பன் தான். ஆம், உங்கள் கையில் நீங்கள் வைத்திருக்கும் பென்சிலின் முனையில் இருக்கிறதே லெட் பென்சில், அதில் இருக்கும் கிராபைட் போன்றது தான் அது!
ஆனால் அது வெப்பத்தினாலும் அழுத்தத்தினாலும் உருமாறி வைரம் ஆகிறது.பூமியின் ஆழத்திலிருந்து மேல்புறத்திற்கு அது வரும் சரித்திரம் மகத்தானது.
சுமார் 3000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தான் வைரம் முதன் முதலாகத் தோண்டி எடுக்கப்பட்டது.
ஆனால் இப்போதோ உலகின் 80 சதவிகித வைரத்தை ஆஸ்திரேலியா,ஜைரே, போஸ்ட்வானா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய நான்கு நாடுகள் தான் வழங்குகின்றன.
தென் ஆப்பிரிக்கா ஐந்தாவது இடத்தை வகிக்கிறது. நமீபியா, அங்கோலா உள்ளிட்ட பல நாடுகள் அடுத்த இடங்களை வகிக்கின்றன.
ஒரு அதிசயமான உண்மை, இது வரை, இவ்வளவு காலத்தில் நாம் தோண்டி எடுத்த வைரம் சுமார் 350 டன்கள் தான்!
ஆனால் அதை விட அதிசயமான உண்மை சுமார் 250 டன் தாதுப் பொருளை எடுத்தால் தான் ஒரு காரட் பாலிஷான ஜெம் க்வாலிடி என்று சொல்லப்படும் தரம் வாய்ந்த நவரத்னங்களில் ஒன்றான வைரத்தைப் பெற முடியும்.
ஒரு காரட் என்பது 200 மில்லி கிராம். 250 டன் தாதுப் பொருளிலிருந்து வெறும் 200 மில்லி கிராம்!
உலகிலேயே கடினமானது வைரம். வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்.


6900 டிகிரி பாரன்ஹீட் என்ற வெப்ப நிலையில் தான் அது உருகும். அதாவது இரும்பை உருக்கக்கூடிய உஷ்ண நிலையைப் போல இரண்டரை மடங்கு அதிகம் இது.
வைரத்தை அணிவதால் என்ன பயன்?
சுருக்கமான விடை என்ன பயன் தான் இல்லை?
சகல சௌபாக்கியமும் கை கூடும்.
செல்வ வளம் பெருகும்.
ஆரோக்கியம் மேம்படும். தாம்பத்ய உறவிற்கான சக்தி கூடும் (செக்ஸ் பவர் கூடும்)
காதலின் சின்னம் வைரம்.
அந்தஸ்தின் சின்னம் வைரம். பெருமிதத்தைக் கூட்டும்.
மதிப்பைக் கூட்டும்.
எதிரிகள் ஒழிவர். வெற்றியே கிடைக்கும்.
துர்தேவதைகள் அண்டா. செய்வினையைப் போக்கும்.
கண் திருஷ்டி நீங்கும். இன்ன பிற நன்மைகள் ஏற்படும்.
அதனால் தான் மாமன்னர்கள் தவறாது வைரத்தை அணிந்திருப்பது வழக்கமாக இருந்தது. வலிமை, தைரியம், வெல்ல முடியாத் தன்மை ஆகியவற்றின் ஆதாரம் வைரம் என அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.
கிரேக்கர்கள் வானிலிருந்து விழுந்த நட்சத்திரத்தின் துளிகள் வைரத் துகள்கள் என நம்பினர்.
டயமண்ட் என்ற வார்த்தையே கிரேக்க மொழியில் உள்ள அடாமஸ் என்ற வார்த்தையிலிருந்து தோன்றியது. வெல்ல முடியாத, என்றும் நிலைத்திருக்கும் காதலைக் குறிக்கும் வார்த்தை இது.
மன்னர்கள் இதை அணிந்து வந்த போதிலும் எங்கேஜ்மெண்ட் ரிங் என்பது 1477இல் தான் தோன்றியது.
ஆஸ்திரியாவின் மன்னன் ஆர்ச்ட்யூக் மாக்ஸ்மிலியன் பர்கண்டியைச் சேர்ந்த மேரியை மணம் செய்ய நிச்சயித்த போது நிச்சயதார்த்தப் பரிசாக ஒரு வைர மோதிரத்தைத் தந்தான். அன்றிலிருந்து தான் இந்த வைர மோதிரத்தை மணமகளுக்கு அணிவிக்கும் வழக்கம் தோன்றியது.
ஒரு பெண்ணின் இடது கையின் மூன்றாவது விரலில் இது அணிவிக்கப்படுவதற்கான காரணம் மிகப் பழைய கால எகிப்திய கலாசாரத்தை வைத்துத் தான்.
காதலின் நரம்பு இந்த விரலிலிருந்து நேரடியாக இதயத்திற்குச் செல்கிறது என அவர்கள் நம்பினர்.
ஆகவே காதலும் அன்பும் நிலைத்திக்க இந்த விரலில் மோதிரத்தை அணிவிப்பது பழக்கமானது.


மன்மதனின் (அம்பு அல்லது) பாணங்களின் நுனியில் வைரம் பதிந்திருப்பதாகப் பழைய நாகரிகத்தினர் நம்பினர்.
ஒரு வைரம் நம் கையிலே வந்து சேர நான்கு கண்டங்களை அது கடக்க வேண்டி இருக்கிறது. அது மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான நிபுணர்கள் அதைச் சரியாக உருவாக்கிய பின்னரே அணியத்தக்க விதத்தில் அது நம்மை வந்து அடைகிறது.
ஆண்களும் பெண்களும் அணிவதற்கான தரமுடைய வைரம் வேறு; தொழிலகத்தில் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப் படும் வைரம் வேறு.
பழைய காலத்தில் வைரம் செயற்கையாக ஒரு போதும் உருவாக்கப்பட முடியாது என்ற கருத்து நிலவியது.
ஆனால் அறிவியல் வளர வளர செயற்கையாக வைரத்தை உருவாக்க முடியும் என்ற நிலை உருவானது. 1955ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிந்தடிக் டயமண்ட் எனப்படும் செயற்கை வைரம் உருவாக்கப்பட்டதை அதிகாரபூர்வ அறிவிப்பால் உலகம் உணர்ந்தது.
இந்த நிலையில் நிஜ வைரம் எது, செயற்கை வைரம் எது என்பதை நன்கு அறிந்த பின்னரே அதை வாங்க வேண்டும்.
பழைய செய்யுள் ஒன்று கூறுவது இது : உலகில் ஏராளமான எலுமிச்சை மரங்களைப் பார்க்க முடிகிறது. ஆனால் சந்தன மரத்தை அரிதாகவே பார்க்க முடியும். அது போல பூமியில் ஏராளமான கற்களைப் பார்க்கிறோம். ஆனால் நல்ல வைரம் கிடைப்பது அரிது. (வஜ்ர மணி துர்லபம்)
சாஸ்திரங்கள் கூறும் பலன்களும் நன்மைகளும் நிஜ வைரத்திற்குத் தான்; போலிக்கு இல்லை.


இந்திய நூல்களுள் அக்னி புராணம், கருட புராணம், ரஸ ஜல நிதி போன்றவை அற்புதமாக நவரத்தினங்களைப் பற்றியும் அதை அணிவதால் ஏற்படும் பலன்களையும் விரித்துரைக்கின்றன.
நல்ல தரமான வைரத்தை அணியும் போது நல்ல பலன்கள் ஏற்படுவது போல தோஷமான வைரத்தை அணிவதால் சொல்லொணாத் துன்பங்கள் ஏற்படுகின்றன.
பழைய காலத்தில் வைர வியாபாரியிடமிருந்து வைரத்தை வாங்கும் போது அதை ஓரிரு நாட்கள் வீட்டில் வைத்திருந்து பார்க்க வியாபாரி அனுமதிப்பது வழக்கம். பூஜை அறையிலோ அல்லது தலையணையின் அடியிலோ வைப்பது வழக்கம். ஓரிரு நாட்களுக்குள் நன்மை வரும் அல்லது தீமை தோன்றும்.
அதைப் பொறுத்து வைரத்தை வாங்குவர். இன்றோ கையில் பணம் . பின்னரே வைரத்தை வெளியில் எடுத்துத் தருவர். (பணத்தைப் பெற்றவர் போலி வைரத்தைத் தந்து விட்டுப் போய்விடக் கூடாது; அதே சமயம் வைரத்தை வாங்கி வீட்டில் வைத்திருப்பவர் அது சரியில்லை என்று சொல்லி அவர் தந்த நிஜ வைரத்தை வைத்துக் கொண்டு போலி வைரம் ஒன்றை விற்பவரிடம் தந்து விடக் கூடாது.)
நல்ல வைரம் என்ன செய்யும் என்பதற்கு வெற்றி பெற்ற மாமன்னர்களின் சரித்திரமே சான்று. தோஷமுள்ள வைரங்கள் என்ன செய்யும் என்பதற்கு துயரமான வரலாறே சான்று.
உலகின் தலையாய வைரங்கள் பத்தைப் பட்டியலிடலாம்.


1) கோஹினூர் வைரம்
2) கலினன் ( The Cullinan)
3) தி ஸ்டார் ஆப் ஆப்பிரிக்கா (The Star of Africa)
4) தி எக்ஸெல்சியர் (The Excelsior)
5) தி க்ரேட் முகல் (The Great Mogul)
6) தி ஆர்லாஃப் (The Orloff)
7) தி ஐடல்’ஸ் ஐ (The Idol’s Eye)
8) தி ரீஜெண்ட் (The Regent)
9) தி ப்ளூ ஹோப் (The Blue Hope)
10) தி சான்ஸி (The Sancy)
ஒரு நல்ல வைரத்தை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதற்கு விடை 4 ‘C’க்களின் அடிப்படையில் தேர்ந்தெடுங்கள் என்பது தான்.
1) கேரட் எடை (Carat Weight)
2) தெளிவு (Clarity)
3) நிறம்(Colour)
4) வெட்டு (Cut)
இந்த நான்கையும் விட முக்கியமான C ஒன்று உண்டு. அது தான் வைரத்தை விற்பனை செய்பவருக்கும் அதை வாங்குபவருக்கும் இடையே இருக்கும் நம்பிக்கை – Confidence.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நேருக்கு நேர் கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டுச் சரியான பதில்களை நீங்கள் பெற்றால் வைரத்தை வாங்குவது சுலபமான ஒரு விஷயம் ஆகி விடும்.
கேரட் எடை : ஒரு கேரட் என்பது ஒரு கிராமில் ஐந்தில் ஒரு பங்கு. அதாவது 200 மில்லிகிராம். இது இன்னும் 100 பாயிண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது. 25 பாயிண்டுகள் கால் கேரட் எனக் குறிப்பிடப்படுகிறது.


தெளிவு : வைரத்தில் உள்ள தோஷங்களை இனம் காண்பது அரிது. தக்க நிபுணர் மட்டுமே அதைக் காண முடியும். வைரத்தில் உள்ள கீறல்கள், கோடுகள், வடுக்கள், கொப்புளங்கள் ஆகியவை இருந்தால் அது நன்மை பயக்காது. குற்றமற்ற தோஷமில்லாத வைரத்தின் கிரேடு GIA எனப்படுகிறது. ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெரிக்காவினால் தரச் சான்றிதழ் தரப்பட்டது என்பதையே இது குறிக்கிறது.
நிறம் : வைரம் பலதரப்பட்ட நிறங்களில் கிடைக்கிறது. நிச்சயதார்த்த மோதிரங்களில் மணப்பெண் விரும்பும் டிசைன் மற்றும் நிறம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மஞ்சள், பழுப்பு, நீலம், சாம்பல் போன்ற வண்ணங்களில் வைரம் கிடைக்கிறது.
வெட்டு : பட்டை தீட்டிய வைரத்தின் ஜொலிஜொலிப்பே தனி தான். வெட்டு என்பது நிபுணர்களால் நிர்ணயிக்கப்பட்டு குறிப்பிட்ட இடத்தில் வெட்டப்பட்டு பட்டை தீட்டப்படுகிறது. பொதுவாக ஒரு வைரத்தில் 58 வெட்டுக்கள் இருக்கும்.


மேலே கண்ட இந்த நான்கு ‘C’க்கள் பற்றி நம்பிக்கை வாய்ந்த நிபுணரின் கருத்தே இறுதியானது.
அவர் வைரம் பற்றிக் கணிப்பதில் வல்லவராக இருந்தாலும் கூட நமது நலனில் அக்கறையுள்ள நல்லவராகவும் இருப்பது அவசியம்.
ஜோதிட சாஸ்திரத்தில் வைரம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. சுக்ரனுக்குரியது வைரம். எண் கணிதத்தில் சுக்ரனின் எண் 6. ஆகவே ஆறுக்கும் வைரத்திற்கும் சம்பந்தம் உண்டு.
ஒரு கேரட் வைரத்தின் விலை என்ன? இதற்கு பதில் சொல்வது கஷ்டம். தரத்தையும் அதன் ஜொலிஜொலிப்பு, வெட்டுக்கள், தோஷமற்ற தன்மை, நிறம் போன்ற அனைத்தையும் வைத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.


ஒரு கேரட் இயற்கையான வைரம் இரண்டு லட்சத்திலிருந்து இருபது லட்சம் வரை ரூபாய் வரை இருக்கலாம் என்று சொன்னால் பிரமிப்பையே அடைகிறோம்.
அமெரிக்கர்கள் நிச்சயதார்த்த மோதிரம் வாங்க சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் செலவழிக்கிறார்கள்.
இரண்டு மாத சம்பள விதி என்று ஒன்று இருக்கிறது. அதன் படி தனது வருவாயில் இரண்டு மாத சம்பளத் தொகைக்கு ஈடான விலையில் நிச்சயதார்த்த மோதிரத்தை ஒரு அமெரிக்கர் வாங்குகிறார்.


இப்படி உலகின் பல நாடுகளிலும் அவரவர் வசதிக்குத் தக வைரத்தை பல்வேறு ஆபரணங்களில் பல்வேறு வடிவமைப்பில் செய்து அணிகின்றனர்.
காதலின் பரிசாக ஒரு வைர நகையை மனைவிக்கோ அல்லது காதலிக்கோ வாங்கிக் கொடுத்து விட்டால் அதில் தோன்றும் மகிச்சியே தனி தானே!


அடுத்து வைரங்களின் வரலாற்றைத் தொடர்வோம்.