பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து? (Post No.5890)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 6 JANUARY 2019
GMT Time uploaded in London 7-07 am
Post No. 5890
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

tags-  பந்திக்கு முந்து, உடுக்கை இழந்தவன்

பல்லக்குத் தூக்கியும் பல்லக்கில் ஏறியவனும்! (Post No.5778)

Written by S Nagarajan

Date: 14 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 25 am


Post No. 5778

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 8

பல்லக்குத் தூக்கியும் பல்லக்கில் ஏறியவனும்!

ச.நாகராஜன்

பொழுது புலர்ந்தது. மக்கள் வெள்ளம் திரண்டது. சபை ஆரம்பித்தது.

கூட்டத்தினருள் ஒருவர் எழுந்து கேட்டார்ர் :

எல்லா உயிர்களும் சமமா? சமம் எனில் ஏன் உலகில் இத்தனை வேற்றுமை?

வள்ளுவர் முழங்கினார்:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான்

கேள்வி கேட்டவர் இதைக் கேட்டுத் தொடர்ந்தார்: “தாங்கள் எல்லா உயிர்களும் பிறப்பால் சமம் தான்; ஆனால் செய்யும் தொழில்களால் உயர்வு தாழ்வை அடையும் என்கிறீர்கள். கர்மம் தான் காரணம் எனில் அதை எப்படி அறிவது? எடுத்துக்காட்டு ஒன்றைச் சொல்ல முடியுமா, நாங்கள் தெளிவை அடைவதற்கு? வள்ளுவர் சிரித்தவாறே கூறினார்:

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

இதைத் தனியாக வேறு மெய்ப்பிக்க வேண்டுமா என்ன? இதற்கு நூல்களே தேவை இல்லை. பல்லக்குத் தூக்கிச் செல்பவனையும் அதில் அமர்ந்திருப்பவனையும் பார்த்தால் தெரியவில்லையா என்ன?

அனைவரும் எளிய இந்த விளக்கத்தினால் மகிழ்ந்தனர். அன்றாடம் காணும் பல்லக்கு மூலம் கர்ம வினை பற்றிய ரகசியத்தை அறிந்தனர்.

அறம் யாது? மகளிர் பக்கத்திலிருந்து ஒரு இனிய குரல் ஒலித்தது.

வள்ளுவர் கூறினார்:

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்

இன் சொலினதே அறம்

முகம் விரும்பும் தன்மையைக் காட்ட வேண்டும். இனிது பார்க்க வேண்டும்.உள்ளம் கலந்த இனிய சொற்களைப் பேச வேண்டும். இது அறம்!

அப்படியானால் சொல் எப்படி இருக்க வேண்டும்?

வள்ளுவர் உடனடியாகக் கூறினார்:

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்  

சொற்களில் பயனுடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும். பயனிலாச் சொற்களைச் சொல்லக் கூடாது.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து 

இன்னுமொரு சொல் சொல்கின்ற சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருக்கும்படி பார்த்து ஒரு சொல்லைச் சொல்ல வேண்டும்.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங்கு இல் 

ஒரு சொல்லின் திறத்தை உணர வேண்டும். பின்னர் அதைச் சொல்ல வேண்டும். அத்தகைய சொல்லைச் சொல்லும் சொல்வன்மையை விடச் சிறந்ததான அறமும் பொருளும் இல்லை.

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்

சொல்லின் தொகுதி அறிந்த தூய்மையாளர், பேசும் இடத்தில் அவையின் தன்மை அறிந்து அதற்கு ஏற்றதான சொற்களைச் சொல்ல வேண்டும்.

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்   

சொற்களின் தன்மை அறிந்து ஆராய்ந்த நன்மை உடையவர், சபையின் தன்மையை நன்கு ஆராய வேண்டும். அதற்குத் தக சொல்ல வேண்டியதை உணர்ந்து சொல்ல வேண்டும்.

வள்ளுவர் கூறக் கூற புலவர்கள் அவர் கூறியதன் பொருளை உடனுக்குடன் விரித்துரைத்தனர். சொல் பற்றிய சொற்கள் இத்தனையா!

மக்கள் ஆரவாரம் செய்தனர். ஒரு புலவர் எழுந்து கேட்டார்;

சொல்லுக என்று சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள்; சொல்லக் கூடாதது?

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று 

சான்றோராக இருந்தாலும் சரி நயனில்லாதவற்றைச் சொல்லினும் சொல்லட்டும்; ஆனால் பயனற்ற சொற்களை ஒரு போதும் சொல்லக் கூடாது.

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க

நன்குசலச் சொல்லு வார் 

நல்ல அறிஞர்கள் கூடியுள்ள சபையில் நல்ல பொருளை மனதில் பதியும்படி சொல்லக் கூடிய திறன் உடையவர், அறிவில்லாதவரின் சபையில் மறந்தும் கூடப் பேசி விடக் கூடாது.

காதலின் தன்மை யாது? -ஒரு இளைஞன் கேட்டான். அனைவரும் வள்ளுவரை ஆவலுடன் பார்க்க அவர் கூறினார்.

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு

நல்லாண்மை என்னும் புணை 

பெண்ணிடம் உள்ள நாணம், ஆணிடம் உள்ள ஆண்மை ஆகிய தோணிகளை காமம் என்னும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன என புலவர் ஒருவர் விரித்துக் கூற அனைவரும் கரை சேர்வது எப்படியாம் என்று சிரித்தவாறே கேட்டனர்.

காமம் அப்படிப்பட்ட பெரும் புனலா? இன்னொருவர் கேட்டார்.

வள்ளுவர் சிரித்தவாறே கூறினார்:

காமக் கடல் மன்னும் உண்டே அது நீந்தும்

ஏமப் புணை மன்னும் இல்  

காமம் என்பது ஒரு பெருங்கடலே தான். அதை நீந்திக் கடந்து கரை சேர்வதற்கான தோணி தான் இல்லை! அனைவரும் தீராக் காதலின் தன்மையை அறிந்து ரசித்தனர். சபையில் கலகலப்பு உண்டானது.

ஐயனே, கடலைச் சொல்லி விட்டீர்கள், காமத்திற்காக! ஊருணியும் கேணியும் எங்கு வரும்? எதற்கு உவமையாகும்?

வள்ளுவர் கூறினார்:

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறிவாளன் திரு  

ஊருக்கு உதவுகின்ற பெரிய உள்ளம் கொண்ட பேரறிவாளியின் செல்வமானது, ஊரார் அனைவருக்கும் உபயோகமாகும் நீர் நிறைந்த குளம் போல – ஊருணி போல ஆகும்.

ஆஹா, தேவைக்குத் தக அவரவருக்கு வேண்டியது போல எடுக்க தன்னை அர்ப்பணிக்கும் ஊருணி போல அல்லவா நல்ல உள்ளம் கொண்ட ஒருவனின் செல்வம்! அனைவரும் தமது ஊரில் உள்ள பேரறிவாளிகளுக்கு மனதால் நன்றி கூறினர்.

அடுத்து வள்ளுவர் கூறினார்:


தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு 

மணலில் அமைந்துள்ள கேணியில் தோண்டத் தோண்டத் தோண்டிய அளவு நீர் ஊறும். அது போல மக்கள் தாம் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

ஆஹா, கடல், புணை, ஊருணி, கேணி ஆகிய அனைத்தையும் வைத்து எத்தனை ரகசியங்களை விளக்குகிறார் வள்ளுவர் என மக்கள் மெய் சிலிர்த்தனர்.

கூட்டத்தில் பருத்த உடலுடன் இருந்த ஒருவர் எழுந்திருக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்தார். இவருக்கு என்ன ரகசியம் அறிய வேண்டியிருக்கிறது என அனைவரும் அவரைப் பார்க்க, ‘இந்த உடம்பைப் பேணிக் காப்பது எப்படி ஐயனே! நெடுநாள் வாழ ஆசை தான்!’ என்றார்.

அனைவரும் சிரிக்க வள்ளுவர் புன்முறுவலுடன் கூறினார்:

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு 

சித்த மருத்துவர் ஒருவர் எழுந்து உண்ட உணவு செரித்த பின்னரே அடுத்த வேளை உணவை அளவு அறிந்து சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எளிய ரகசியமே உடம்பை அடைந்தோர் அதை நெடுங்காலம் பேணி வைத்திருக்க வைக்கும் வழி என்று நெடுநாள் வாழ வைக்கும் ரகசியத்தை வள்ளுவர் கூறிய படி கூறினார்.

‘இன்னும் எவற்றை அளவறிந்து செய்ய வேண்டும் ஐயனே!’

கேள்வி எழுந்தவுடன் ஐயன் பதில் கூறலானார்:

ஆற்றின் அளவறிந்து ஈக அது பொருள்

போற்றி வழங்கு நெறி  

பிறருக்கு வழங்கும் போது எவ்வளவு கொடுக்க முடியும் என்ற அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை வளமாக இருப்பது போலத் தோன்றி இல்லாமல் போய் விடும். ஆகவே அளவறிந்து கொடுக்கவும்.

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்ச

மாற்றங் கொடுத்தற் பொருட்டு  

சபையிலே ஒன்றைக் கேட்கும் போது அஞ்சாமல் விடை கூறத் தக்க அளவு அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

புலவர்களின் விளக்க உரையைக் கேட்டு மக்கள் மகிழ்ந்து கொண்டிருந்த சமயம் ஒரு வயதானவர் எழுந்தார்:

ஐயனே! பயிர்த் தொழில் செய்து வாழ்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

இதுவரை இல்லாத அளவு வள்ளுவர் முகத்தில் மகிழ்ச்சி தோன்றியது.

கரங்களைக் கூப்பினார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர் 

உழுகின்ற வேளாண்மைத் தொழிலைச் செய்து வாழ்பவர்களே வாழ்கின்றவர்கள். ஏனைய அனைவரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவர்கள் தாம்!

அனைவரும் உழவுத் தொழிலின் மகிமையையும் அதற்கு வள்ளுவர் தரும் முக்கியத்துவத்தையும் அறிந்து வியந்தனர். கதிரவன் சாயும் நேரம் வரவே, பிரிய மனமின்றி அனைவரும் பிரிந்தனர்.

***

இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்

972,37,93,,200,645,644,711,712,  197,719, 1134,1164, 215,396,943,477, 725,33

அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் நிறைவடைகிறது.

Tags–பல்லக்குத் தூக்கி

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த 100 கேள்விகள்! – 2 (Post No.5705)

 

Written by S Nagarajan

Date: 27 November 2018

GMT Time uploaded in London –6- 04 am
Post No. 5705

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 2

ச.நாகராஜன்

பாண்டிய மன்னன் மேடையின் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பந்தலைப் பார்த்தான்; மகிழ்ந்தான்.

முதல் நாள் கூட்டம் கலைய ஆரம்பித்தவுடன் மஹாராணி குறிப்பால் மன்னனை அருகில் அழைத்தாள்.

காலையில் சபை ஆரம்பிக்கும் போது இருந்த மக்கள் எண்ணிக்கை மாலையில் எப்படி இருந்தது பார்த்தீர்களா? – ராணியின் கேள்வி மன்னனைச் சிந்திக்க வைத்தது.

பல் மடங்கு பெருகி இருந்தது. வள்ளுவரை அருகில் வந்து தரிசித்து வணக்கம் சொல்வதிலேயே பெரும்பொழுது சென்று விட்டது.

நாளை என்ன ஆகும்? கூட்டம் பெருகுமல்லவா? அவர்கள் நன்கு அமர்ந்திருக்க சரியான பந்தல், நீர் பந்தல் ஆகியவற்றை அமைக்க வேண்டாமா? – ராணியின் கேள்வியால் மகிழ்ந்த மன்னன் உடனடியாக அமைச்சரையும் தளபதியையும் அழைத்தான்.

“நாளை இன்றைய தினத்தை விட பன்மடங்காக மக்கள் திரளுவர். எத்தனை தச்சர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்! அலங்காரப் பந்தல் பெரிதாக வேண்டாமா!”

அமைச்சர் தானும் அதையே நினைத்ததாகக் கூறி ராணியின் மதியூகத்தை எண்ணி வியந்தார்.

அடுத்த சில மணி நேரங்களில் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

மயன் கூட அமைக்க முடியாத மாபெரும் பந்தல். ஆங்காங்கு தண்ணீர்ப் பந்தல்.

ராணியார் இரவு முழுவதும் பந்தல் அமைப்பை மேற்பார்வையிட்டார். ஒரு சமயம் ஒரு செம்பில் நீர் கொண்டுவரச் சொல்லி அதை மேலிருந்து ஊற்றச் சொல்லி பந்தலில் அமர்ந்தார். ஒரு சொட்டு நீர் கூட கீழே சொட்டவில்லை. ராணியாரின் கவனத்தையும் அக்கறையையும் கண்ட தச்சர்கள் இன்னும் சாந்துப் பூச்சுக் கலவையை நிதானமாகப் பூசி தண்ணீர் விழாத படியும், சூரிய ஒளி ஆங்காங்கு பிரகாசமாக ஜொலிக்கும் படியும் பந்தலை நிர்மாணித்தனர்.

மறுநாள் வள்ளுவர் வந்தார்; பந்தலைப் பார்த்தார்; புன்முறுவல் பூத்தார்.

மக்களோ பிரமித்தனர்.

மகானுக்கு ஏற்ற மரியாதை!

புலவர் குழாம் ஒரு புறமும் அரசவை உறுப்பினர் ஒரு புறமும் மகளிரும் ஆண்களும் அவரவர் இடத்திலும் அமர்ந்தனர்.

புலவர் குழாத்தில் ஒரு புலவர், வள்ளுவரை எப்படி மாட்டி விடலாம் என்ற எண்ணம் கொண்டவர், தனது சாதுரியத்தை முதலிலேயே காட்ட எண்ணினார். முதல் கேள்வியிலேயே வள்ளுவரைத்  திணற வைத்தால் அந்த வித்வத் சதஸ் என்னும் அறிவுக் கூட்டம் சீக்கிரமே முடியுமல்லவா?

பவ்யமாக வள்ளுவரை நோக்கினார்: “பெருமானே, ஆமையைப் பற்றிக் கூறி அதனால் என்ன கற்க முடியும் என்று சொல்லுங்களேன்!

கூட்டத்தினர் கொல்லென்று சிரித்தனர்.

அந்தப் புலவரின் புலனுக்கடங்கா சேஷ்டைகள் ஊரிலுள்ள அனைவருக்கும் தெரியும். இப்படி இடக்காகக் கேட்கிறாரே!

ஆமைக்கும் வள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்.

மன்னன் கூடத் திடுக்கிட்டான். பெரிய புலவர் வாய்த்துடுக்காக இப்படிக் கேட்கலாமா?

யாரும் யோசித்து முடிக்குமுன்னரே பளீரென்று வள்ளுவர் வினவினார்:

“நீவீர் எந்த ஆமையைப் பற்றிக் கேட்கிறீர்? பிறனில் விழையாமை,அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, கள்ளாமை,  வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை,  நிலையாமை,

கல்லாமை,சிற்றினஞ்சேராமை,  பொச்சாவாமை,  வெருவந்த செய்யாமை, இடுக்கணழியாமை,  அவையஞ்சாமை,  பெரியாரைப் பிழையாமை,  கள்ளுண்ணாமை,  பிரிவாற்றாமை !” கடகடவென்று வள்ளுவர் அடுக்கிக் கொண்டே போனார்.

 

மக்கள் பிரமித்தனர்!

“இவற்றில் எந்த ஆமையைப் பற்றி அறிய ஆசை?”

வள்ளுவரின் கூர்மையான கேள்வியைக் கேட்டு மக்கள் அனைவரும் ஆஹா ஆஹா என்று கூவினர். சிலரோ நாவல் நாவல் என்று கத்தினர்.

கேள்வி கேட்ட புலவர் நடுநடுங்கிப் போனார்!

இடக்கான கேள்வியைக் கேட்டதற்கு நொந்து போய் மென்று விழுங்கி, “நான்கு கால்களால் நிலத்திலும் நீரிலும் செல்லும் ஜந்து …” என்று தட்டுத் தடுமாறிக் கூறி அமர்ந்தார்.

வள்ளுவர் பளீரென்று கூறினார்:

ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து.

மக்கள் கரங்களைத் தட்டிப் பாராட்ட, புலவர்கள் அதற்கு விரிவுரை கூற கேள்வி கேட்டவர் வெட்கித் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

அவருக்கு ஏற்ற பதில்! இனியாவது ஆணவம் பிடித்து அலையாமல் கண்,காது, மூக்கு, நாக்கு, உடல்  ஆகியவற்றை அடக்கி அவர் வாழ்வாரா என மன்னன் எண்ணினான்.

அந்தப் புலவர் பிறகு எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்பதை மக்கள் வரும் நாட்களில் அறிந்தனர்.

அடுத்து பந்தலில் ஒரு கோடியில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு மெலிந்தவர் எழுந்தார்.

புலவர்கள் முகம் சுளித்தனர். படைவீரர்கள் துணுக்குற்றனர். அவர் மன்னனின் தேரை ஓட்டும் சாரதி.

“ஐயனே! தேரை வைத்து ஒரு கூற்றை உங்கள் வாயிலாகக் கேட்க ஆசைப்படுகிறேன்”.

‘தேரில் என்ன இருக்கிறது? இவன் எல்லாம் ஒரு ஆள்’, என்று சிறுமையாக அவரை நோக்கிப் பலரும் பார்க்க வள்ளுவர் கூர்மையாகக் கூறினார்:

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.

இவன் பெரியவன், இவன் சிறியவன் என்று தோற்றத்தை வைத்து எடை போடாதே, உருளும் தேருக்கு அச்சாணி அல்லவா முக்கியம், அது போல தோற்றத்தால் எளிமையாக இருப்பினும் அவர்கள் முக்கியமான விஷயத்திற்கு அச்சாணி போன்றவர்கள்!

மன்னன் எழுந்து பாண்டிய நாட்டிலேயே விரைவாகத் தேர் ஓட்ட வல்லவன் அவன் என்று கூறி அவனது பெயரும் நளனே என்று கூறி மகிழ்ச்சியுடன் அமர்ந்தான்.

அனைவரும் இந்தப் புகழுரையைக் கேட்டு மகிழ்ந்து கரங்களைத் தட்ட நளனோ வெட்கத்தால் அனைவரையும் வணங்கி அமர்ந்தார். நளன் எப்படி தேரை விரைவாக ஓட்ட வல்லவன் என்பதைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் கூறப்பட்ட நள தமயந்தி சரித்திரத்தை அனைவரும் அறிந்தவர்கல் ஆதலால் அவர்கள் பெருமையுடன் மன்னனின் தேர்ப்பாகனான நளனைப் பார்த்தார்கள்.

வள்ளுவர் தொடர்ந்தார்:

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.

மன்னனையும் மந்திரியையும் அவர் பார்த்துக் கூறிய வார்த்தைகளால் இடம் அறிந்து எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்பதை அவர் கூறுகிறார் என மக்கள் புரிந்து கொண்டனர். வலிய சக்கரங்களை உடைய நெடுந்தேர் கடலில் ஓடாது. அதே போல பெரிய கப்பலாக இருந்தாலும் அது நிலத்தில் ஓடாது.

கேள்வியைக் கேட்டு வாழ்வியல் ரகசியத்தை அறியச் செய்த தேர்ப்பாகனை அனைவரும் பாராட்ட கூட்டத்தில் வறியவராக இருந்த ஒருவர் எழுந்தார்.

“ஐயனே! நெடுந்தொலைவிலிருந்து வந்துள்ளேன். எங்கள் ஊர்களில் மழையே பெய்யவில்லையே! என்ன செய்வது?”

என்று மெலிந்த குரலில் கேட்டார்.

அவரது கேள்வியைக் கேட்ட வள்ளுவர் மஹாராணியைப் பார்த்துக் கூறினார்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

மஹாராணி வள்ளுவர் தன்னை நோக்கிக் கூறியதைக் கேட்டவுடன் ஆசனத்திலிருந்து எழுந்தாள்.

“அடடா, இப்படி மழையின்மையால் நீங்கள் வருந்துவது எனக்குத் தெரியாதே” என்று கூவி விட்டு வானை நோக்கிக் கைகளை உயர்த்தினாள் “வருண பகவானே! என் குடி மக்களுக்கு இப்படி ஒரு இடரா? மழையைப் பொழியுங்கள். பெய்க மழை” எனக் கூவி மனமுருக வேண்டினாள்.’அடுத்த சில கணங்களில் நிகழ்ந்தது அற்புதம்.

வானம் இருண்டது. மேகம் திரண்டது. வள்ளுவர் புன்முறுவல் பூத்த முகத்துடன் வானைப் பார்க்க ஒரு துளி பூமியில் விழுந்தது.

பின்னர் வந்தது அடைமழை.

மக்கள் ‘ஹாஹா’வென்று  பத்தினி தேவி ராணியின் சொல் பலித்தது என்று மகிழ கேள்வி கேட்டவரோ ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்.

மழை நின்றது.

ராணியை அடுத்து மன்னன் எழுந்தான். தன் செங்கோலைக் கையில் ஏந்தி வானை நோக்கினான்.

“வருண தேவரே! நாடெங்கும் பெய்க மழை!” என்று கூவி வேண்டினான்.

அடுத்து இன்னொரு மழை தொடர்ந்தது.

அனைவரும் அதிசயிக்க பந்தலிலொ ஒரு சொட்டு நீர் கூட விழவில்லை. மக்கள் பந்தல் நிர்மாணிப்பை சிலாகித்துத் தமக்குள் பேசிக் கொண்டனர்.

பெரிதாகப் பெய்த மழை ஓய்ந்தது.

புலவர் கூட்டத்தின் அருகில் அமர்ந்திருந்த வேதம் ஓதும் அந்தணர்கள் உடனே எழுந்தனர். வருண ஜபத்தை ஆரம்பித்தனர். அடடா! அதிசயம் இன்னொரு மழை தொடர்ந்தது.

புலவர்கள் பெருமையுடன் உரக்க மக்களைப் பார்த்துச் சொன்னார்கள் :

வேதம் ஓதும் வேதியர்க் கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக் கோர் மழை

மாதர் கற்புடை மங்கையர்க் கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே.

ஆனால் மாதம் மும்மாரி பெய்வதற்குப் பதிலாக இன்றே ஒரே தினத்தில் மும்மாரி பெய்து விட்டது! இது உலகம் காணா அதிசயம்!

அனைவரும் ஆஹா என்று கூவி மகிழ்ந்தனர்.

வள்ளுவர் அகம் மலர்ந்து முகம் மலர்ந்து அனைவரையும் ஆசிர்வதித்தார்.

அன்றைய நிகழ்ச்சிகள் முடிவுக்கு வர மக்கள் பலவாறாக அன்று நடந்த அதிசயங்களை எண்ணிப் பேசியவாறே நடந்து சென்றனர்!

நாளை பெருங் கூட்டம் அல்லவா கூடப் போகிறது!!

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட் பாக்களின் எண்கள் : 126, 667, 496, 55

-தொடரும்

TAGS- பாண்டியன்,100 கேள்விகள்! – 2

***  subham ******

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த 100 கேள்விகள்! (Post No.5701)

 

Written by S Nagarajan

Date: 26 November 2018

GMT Time uploaded in London –6- 08 am
Post No. 5701

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்!

ச.நாகராஜன்

பாண்டிய மன்னன் கம்பீரமாக வீற்றிருந்தான். அருகிலே அமைச்சர்களும், தளபதியும், ஒற்றர் தலைவரும் நின்றிருந்தனர்.

‘என்ன செய்தி?’ என அமைச்சரை நோக்கி மன்னன் கேட்க, அவர் ஒற்றர் தலைவரை நோக்கித் தலையை அசைத்தார்.

“ மன்னரே! நல்ல செய்தி தான்! வள்ளுவர் தனது தவத்தை முடித்துக் கொண்டு பாண்டிய நாடு நோக்கி வந்து கொண்டிருக்கிறார்!”

ஆஹா என மன்னன் துள்ளிக் குதித்தான். அமைச்சர் புன்முறுவல் பூத்தார்.

“அமைச்சரே! தெய்வப்புலவரின் திருப்பாதங்கள் இந்த சங்கம் வளர்க்கும் மதுரையில் பதியப் போகிறதா! உடனே கிளம்புவோம்! அவரை உரிய முறைப்படி வரவேற்போம். ராணியிடம் செய்தி தெரிவியுங்கள். மகளிரும் வருவர்”- பாண்டியனின் உற்சாகமான ஆணையை ஆமோதித்த அமைச்சர் குறுகுறுவென்று பாண்டியனைப் பார்த்தார்.

பாண்டியன் : “தங்கள் பார்வையில் ஏதோ ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறதே!”

அமைச்சர் : ஆம் மன்னா! தெய்வப்புலவரின் வருகையைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களிடம் அவர் தவத்தின் பயனையும் அவர் உற்றுணர்ந்த அறிவையும் கொண்டு சேர்க்க வேண்டும். இது மன்னராகிய தங்களின் கடமையாக நான் நினைக்கிறேன்.

பாண்டியன்: அருமை! அருமை! அப்படியே செய்வோம்.  எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. மக்களிடம் – ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, வாழ்வியல் மர்மங்களில் அவர்களுக்குத் தோன்றும் சந்தேகங்களை எழுதி அரண்மனையில் சேர்க்கச் சொல்லுங்கள்; புலவர்களை விட்டு விடாதீர்கள்; அவர்களுக்குத் தெய்வப்புலவரின் புலமையின் மீதும் சந்தேகம்; அவருக்கு நாம் காட்டும் மரியாதையின் மீதும் பொறாமை! ஆகவே அவர்கள் அறிவுத் தெளிவு பெற இதுவே சரியான சந்தர்ப்பம். வந்து சேரும் கேள்விகளில் தலையாய நூறு கேள்விகளை – அவை ரகசியங்களை விளக்கச் சொல்லும் கேள்விகளாக, என்றும் எல்லோருக்கும், அதாவது மனித குலத்திற்கே பயன்படுபவையாக இருத்தல் வேண்டும். கேள்விகளை நாமே தேர்ந்தெடுப்போம். என்ன சொல்கிறீர்கள்!

அமைச்சர்: உத்தரவு மன்னா! தங்களின் அறிவும் முடிவும் மக்களை எப்போதுமே மேம்படுத்துவதாக அல்லவா அமைகிறது!

*

மன்னரின் வரவேற்பை வள்ளுவப்பிரான் மனமுவந்து ஏற்றுக் கொண்டார். பாண்டியனை செங்கொல் தவறாது அரசாளச் செய்யும் அன்னை மீனாட்சியைத் தரிசித்தார்.

அம்மன் கோவில் அருகே உள்ள பூங்காவனத்தில் மக்கள் கூட்டம் – ஆயிரக் கணக்கில் திரண்டிருந்தனர்.

மகளிர் ஒரு பாலும் ஆண்கள் மறு புறமும் சீராய் அமர்ந்திருக்க பெரிய மேடையில் சிறப்பான ஆசனத்தில் வள்ளுவப் பிரான் அமர்ந்திருந்தார். அவருக்குக் கீழே ஆசனங்களில் மன்னரும், மஹாராணியும், அமைச்சரும், தளபதியும், முக்கிய அரசவை பிரமுகர்களும் அமர்ந்திருக்க மன்னருரும் ராணியும் வள்ளுவருக்குப் பாதபூஜை செய்து மகிழ்ந்தனர்; மக்கள் கரம் தட்டிப் பாராட்டி மகிழ்ந்தன்ர்; பக்தியுடன் வள்ளுவரை வணங்கினர்.

*

சபை ஆரம்பித்தது. மன்னர் வள்ளுவரை நோக்கி, “வாழ்வியல் மர்மங்களை, அரிய இரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இங்கே பல்லாயிரக் கணக்கானோர் கூடி உள்ளனர். அவர்கள் கேள்விகளோ எண்ணற்றவை. அவற்றில் தலையாய நூறு கேள்விகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

தேர்ந்தெடுத்தவர்களிடமே அந்தக் கேள்விகளைக் கேட்கச் சொல்லி விட்டோம். ஆரம்பிக்கலாமா சபையை?

வள்ளுவர் சொற்களில் சிக்கனமானவர். அவர் வாயிலிருந்து வரும் தமிழெல்லாம் அமிர்தம். தலையை அசைத்தார்.

ஆங்காங்கு அமர்ந்திருந்த மக்களும் மேடையின் அருகிலே அமர்ந்திருந்து இடக்காகக்  கேட்கும் புலவர்கள் உள்ளிட்டோரும் கற்றோரும் மற்றோரும் அமர்ந்திருக்க முதல் கேள்வியே அற்புத இரகசியத்திற்கான கேள்வியாக அமைந்தது.

சாமானியர் ஒருவர் எழுந்தார்: “வள்ளுவப் பிரானே! நீடு வாழ வேண்டும் என்பதே  மக்கள் அனைவரது ஆசையும்! அதற்கு என்ன செய்ய வேண்டும்?

அனைவரும் ஆவலுடன் அவரைப் பார்க்க அவர் கூறினார்:

மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்

கூட்டம் ஆரவாரித்தது. மன்னன் தன் சிரம் வாழ்த்தி மதுரைச் சொக்கரையும் அன்னை மீனாட்சியையும் நினைந்து உருகினான்.மஹாராணியோ கண்ணீர் திவலை சொட்ட பிரார்த்தித்தாள்.

அடுத்த கேள்வி புயலென வந்தது.”வள்ளுவரே! எங்கும் துன்பம்; எனக்கு எப்போதும் துன்பம்; துன்பம் நீங்க வழி என்ன?”

வள்ளுவர் கூறினார்: “வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல”

ஒரு பிரமுகர் எழுந்தார் : ஐயனே! என்னிடம் இல்லாத செல்வம் இல்லை; இல்லாத ஆடை, அணி, ஆபரணங்கள், உணவு வகைகள், தோட்டங்கள், மணிகள், ரத்தினங்கள் இல்லை. ஆனால் என்னால் ஒரு பிடி உணவைக் கூட ஏற்க முடியவில்லையே! உடல் வியாதி வருத்துகிறதே! காரணம் என்ன?

வள்ளுவர் கூறினார் :

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

அருகிலிருந்த புலவர்களில் ஒருவர் கர்மவினை பற்றி விளக்கி வள்ளுவரின் சொற்களின் ஆழத்தை விரித்து எடுத்துரைத்தார்.

மக்கள், தம் தம் வினைகளே எதற்கும் காரணமாக அமைவதை வள்ளுவர் எடுத்துரைத்த பாங்கினைக் கண்டு வியந்தனர்.

இன்னொருவர் எழுந்தார் :”ஐயனே! அவர் செல்வம் இருந்தும் உண்ண வகையின்றித் தவிப்பதை எடுத்துரைத்தார். இன்றும் நாளையும் எனக்கு உதவும் உணவுக்குப் பஞ்சமில்லாத ஒரு நல்ல துய்க்கும் சேமிப்பு உபாயத்தைச் சொல்லி அருள்வீர்களாக!

வள்ளுவர் அருளினார் : அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி.

புலவர்களில் ஒருவர் ஆஹா என்று கூவி வைப்புழி என்றால் பிற்காலத்தில் பலனைத் தரும் ஒரு சேமிப்பு உத்தரவாதம் என்று கூவி மகிழ்ந்தார்.

கூட்டத்தில் இருவர் ஒரே சமயத்தில் எழுந்தனர்:

“ஐயனே! இந்த உலகத்தில் வியக்கத் தகாதது ஏதாவது உண்டா?”

அதே சமயத்தில் இன்னொருவர், “ஐயனே! கூட இருந்தே குழி பறிக்கிறார்களே, அதைச் செய்யலாமா? என்றார்.

முதல்வரை நோக்கி வள்ளுவர் கூறினார்: வியவற்க எஞ்ஞான்றும் தன்னை

அடுத்தவரை நோக்கிக் கூறினார்: நயவற்க நன்றி பயவா வினை.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

வள்ளுவரின் சீரிய சொற்களுக்கு பண்டிதர்களும், புலவர்களும் பல்வேறு மேற்கொள்களைக் காட்டிப் பேசி மக்களுக்கு உத்வேகம் ஊட்டினர்.

மக்கள் மகிழ்ந்தனர்.

செய்தி நாடெங்கும் பரவ, எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் திரள் மீனாட்சி அம்மன் திருவாலயத்தை நோக்கி வர ஆரம்பித்தது.

மறுநாள் தன் முயற்சி அனைத்தையும் கொண்டு படைவீரர்களை அழைத்து அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் செய்தான் பாண்டியன்; இதை மேற்பார்வை

பார்த்தவர் மஹாராணி.

அடுத்த நாள் சபை ஆரம்பித்தது!

–      தொடரும்

இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட் பாக்களின் எண்கள் 3,4,377,226,439,110

Tags– 100 கேள்விகள்

xxxx subham xxx

திருக்குறளில் ஸ்ரீ தேவி, மூதேவி (Post No.5671)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 17 November 2018

GMT Time uploaded in London –17.24
Post No. 5671

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Jyeshta picture, posted by Lalgudi Veda

திருவள்ளுவர் தீவிர இந்து. ஆரம்பத்திலேயே பகவான் பெயருடன் குறளை ஆரம்பிக்கிறார். அது மட்டுமல்ல; அவர் காலத்திலேயே வாழ்ந்த ஒரு புலவர் அவரைத் திருவள்ளுவ மாலையில் பாராட்டுகையில், நல்லவேளையாக இதைப் பாடினீர்களே; இவ்வளவு காலமாக வேதம் போன்ற ஒரு ஸம்ஸ்க்ருத நூல் தமிழில் இல்லையே என்று கவலைப் பட்டேன். நீர் தமிழ் வேதத்தைப்பாடி அந்தக் குறையை நிவர்த்தி செய்துவிட்டீர்’ என்று பாராட்டுகிறார். அவர் கொடுத்த பெயர்தான் தமிழ் வேதம்= தமிழ் மறை.

திருக்குறளில் இந்திரன் என்னும் வேத கால தமிழ்க் கடவுளின் பெயர் வருவதை எல்லோரும் அறிவர். இந்திரனையும் வருணனையும் தமிழ்க் கடவுள் என்று தொல்காப்பியம் செப்பும். இன்னும் ஒரு குறளில் வேந்தன் என்றும் இந்திரனைக் குறிப்பிடுகிறார். அடி அளந்தான் என்று வாமன/ த்ரிவிக்ரம அவதாரத்தை ஒரு குறளில் பாடுகிறார். பல் மாயக் கள்வன் என்று கண்ண பிரானை மறைமுகமாக ஒரு குறளில் பாடிப் பரவுகிறார்.

JYESHTA DEVI POSTED BY  LALGUDI VEDA

தேவ லோகம் (புத்தேள் உலகு), தேவர்கள் (அமரர்), அமிழ்தம் (அம்ருத), ஏழுபிறப்பு (எழுமை), அணங்கு (அப்ஸரஸ் அழகிகள்), வேள்வி (யாகம்), பிராமணாள் (அறு தொழிலோர், பார்ப்பான்,அந்தணர்), யமன் (கூற்றுவன்) ,பிரம்மா (உலகு இயற்றினான்),மஹா லக்ஷ்மி (திரு)— பற்றி அதிகாரத்துக்கு அதிகாரம் பாடிப் போற்றுகிறரர்; பிரம்மா, கூற்றுவன் (யம தர்மன்), தேவர் போன்றோரை சில இடங்களில் கோபத்தில் ஏசுகிறார்.

திருக்குறளைப் படிக்கையில் இவர் ‘பக்கா ஹிந்துத்வா’ பேர்வழி என்பது தெரிகிறது. ஏனெனில் அதர்மம் செய்வோருக்கு மரணதண் டனை கொடுப்பது பற்றி இரண்டு குறள்களில் ஆதரவு தெரிவிக்கிறார். கருமிகள் கையை முறுக்கி முகவாய்க் கட்டையில் ஒரு குத்து விட்டு பணம் பறி என்கிறார். இது எல்லாம் பலருக்கும் தெரிந்த விஷயமே. முதல் குறளை ஸம்ஸ்க்ருதத்தில் துவக்கி கடைசி குறளை  ஸம்ஸ்க்ருதத்தில் முடித்து தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒன்றே என்றும் காட்டினார். ஒரு அதிகாரம் கூட   ஸம்ஸ்க்ருதச் சொல் இல்லாமல் பாடக்கூடாது என்ற பாலிஸியையும் கடைப் பிடித்தார்.

மநு தர்ம நூல், காம சாஸ்திரம், பகவத் கீதை ஆகியவற்றை அழகியகு றள்களில் வடித்துக் கொடுக்கிறார். கடந்த நூற்றாண்டில் இவ்வளவற்றையும் பலரும் பதின்மர் உறை கொண்டு பறை சாற்றிவிட்டனர்.

ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஸ்ரீதேவியைப் பாடிய– திருமகளைப் பாடிய — திருவள்ளுவர் மூதேவியையும் பாடி இருக்கிறார் என்பதாகும்.

இதோ  திருமகள் பற்றிப் பாடிய குறள்கள்

179, 519, 617, 920

அறனறிந்துவெஃகா அறுவுடையார்ச் சேரும்

திறன் அறிந்தாங்கே திரு-179

பிறர் பொருளை மனதிலும் நாடாதவன் வீட்டுக்கு லக்ஷ்மீ தானாகவே போவாள்

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு – 519

உண்மையாக உழைப்பவனை , ஒருவன் தப்பாக எடை போட்டால்,லக்ஷ்மீ (செல்வம்) அவனை விட்டுப் போய்விடுவாள்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திரு நீக்கப்பட்டார் தொடர்பு – 920

விலைமாதர், கள், சூதாட்டம்-இவை மூன்றும் திருமகளால் கைவிடப்பட்டாரின் அடையாளங்கள்..

இங்கு ஒரு இயல்பான சந்தேகம் எழும்; ‘திரு’ என்பதை எல்லாம் செல்வம் என்று பொருள் கொண்டால் லக்ஷ்மி என்ற இந்துக் கடவுள் மறைந்து போவாளே! என்று.

இந்துக்கள் மட்டுமே நம்பும் ‘முகடி’ என்னும் மூதேவியை (ஜேஷ்டா தேவி) அவர் மேலும் இரண்டு குறள்களில் வைத்துப் பாடியதும் பதின்மரின் உறையும் திரு என்பது லக்ஷ்மியையும், முகடி என்பது மூதேவியையுமே குறிக்கும் என்பதைத் தெளிவாக்கும்.

இதோ முகடிக் குறள்கள்

617, 936

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளாள் தாமரையினாள்- 617

சோம்பல் உள்ளவனிடத்தில் மூதேவியும், சுறுச்சுறுப்பானவர் இடத்தில் தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மியும் வாழ்வதாக சான்றோர்கள் பகர்வர்.

அகடரார் அல்லல் உழப்பர் சூதென்னும்

முகடியால் மூடப்பட்டார் -936

சூதாட்டம் என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், சோற்றுக்கே வழியின்றித் தவிப்பர்

இப்படி மூதேவியையும் திருமகளையும் ஒப்பிட்டுப் பாடுவதால் திருவள்ளுவன் தெய்வீக ஹிந்து என்பதும் தெளிவுபடும்.

Tags– ஸ்ரீ தேவி, மூதேவி, திருவள்ளுவர்

–சுபம்–

மறைந்திருக்கும் குறள் எவை? (Post No.5645)

Written  by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 9 November 2018

GMT Time uploaded in London –19-27
Post No. 5645

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கீழேயுள்ள கட்டத்தில் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தின் கீழ் உள்ள இரண்டு திருக்குறள்கள் இருக்கின்றன. கண்டு பிடியுங்கள். சொற்கள் முழுதாக இருக்கும். பிரிக்கப்படவில்லை. உலகு என்று ஒரு சொல் இருக்குமானால் அது உலகு என்றே வரிசைப்பட இருக்கும்.

 

ANSWER:–

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு (1)

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்

நற்றாள் தொழார் எனின் (2)

–SUBHAM–

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது-பர்த்ருஹரி (Post No.5623)

WRITTEN BY S  SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 4 November 2018

GMT Time uploaded in London – 6-09 am

Post No. 5623

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

நீதி சதகத்தில் 23 ஸ்லோகங்களைக் கண்டோம். மேலும் தொடர்வோம். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது தமிழ்ப் பழமொழி. சிங்கம் பசித்தாலும் புல்லைத் தின்னாது — என்பது  பர்த்ருஹரி மொழி!

பர்த்ருஹரி 24,25,26,27

இந்த நான்கு பாடல்களிலும் மேன்மக்களுக்கும் கீழ்மக்களுக்கும் உள்ள வேறுபாடுகளைக் காட்டுகிறார். கீழ் மக்கள் நாய் போன்றவர்கள். மேல் மக்களோ சிங்கம் ,யானை போன்றோர். ஒரு லட்சியத்தை அடைய உயர்ந்த உத்திகளை மட்டுமே பயன்படுத்துவர். இதைத் தமிழ்ப் புலவர்களும் அழகாக பாடி வைத்துள்ளனர். அவைகளை ஒப்பிட்டுச் சுவைப்போம்.

ஜயந்தி தே ஸுக்ருதினோ ரஸஸித்தாஹா கவீஸ்வராஹா

நாஸ்தி யேஷாம் யச: காயே ஜராமரணஜம் பயம்-1-24

ஆழ்ந்த கல்விகற்ற, நவ ரசங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் புலவர்களின் புகழ் என்றும் குன்றாது. அப்பேற்பட்ட புலவர்கள் என்றும் வெல்வர்.

அவர்களுடைய புகழ் அழியும் என்ற பயமே இல்லை.

जयन्ति ते सुकृतिनो
रससिद्धाः कवीश्वराः ।
नास्ति येषां यशःकाये
जरामरणजं भयम् ॥ 1.24 ॥

‘கவி’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்குப் புலவர் என்ற பொருளும்  நெடுநோக்குடைய அறிஞர் என்றும் பொருளும்  உண்டு. உண்மையில் வேத காலக் கவிஞர்கள் அப்படித்தான் இருந்தனர்.

xxxxx

சிங்கம் புல்லைத் தின்னுமா?

க்ஷுத்க்ஷாமோஅபி ஜராக்ருசோபி சிதிலப்ராணோபி கஷ்டாம் தசா

மாபன்னோபி விபன்னதீதிரபிப்ராணேஷு நஸ்யஸ்வபி

மத்தேபேந்த்ர விபின்னகும்பபிசிதக்ராஸைகபத்தஸ்ப்ருஹஹ

கிம் ஜீர்ணம் த்ருணமத்தி மானமஹதாமக்ரேஸரஹ கேஸரீ 1-25

சிங்கத்துக்கு பசியால் வாட்டம்; ஆனால் கிழடு; உடலில் பலம் குன்றிவிட்டது; உடல் ஊனம்; பலஹீனம்; மனத் தளர்ச்சி; காம்பீர்யம் போய் மரணப் படுக்கையில் இருந்தாலும் மதம்பிடித்த யானையின் மீது பாய்ந்து அதை உண்ணவே எண்ணும். அப்பேற்பட்டவர்களே மஹத்தான சாதனையாளர். சிங்கம் என்றாவது புல்லைத் தின்னுமா?

क्षुत्क्षामो‌உपि जराकृशो‌உपि शिथिलप्राणो‌உपि कष्टां दशाम्
आपन्नो‌உपि विपन्नदीधितिरिति प्राणेषु नश्यत्स्वपि ।
मत्तेभेन्द्रविभिन्नकुम्भपिशितग्रासैकबद्धस्पृहः
किं जीर्णं तृणम् अत्ति मानमहताम् अग्रेसरः केसरी ॥ 1.29 ॥

xxx

 

ஸ்வல்பஸ்னாயுவஸாவ சேஷமலினம் நிர்மாம்ஸமப்யஸ்திகோஹோ

ஸ்வா லப்த்வா பரிதோஷமேதி ந ச தத்தஸ்ய  க்ஷுதாசாந்தயே

ஸிம்ஹோ ஜம்புகமங்கமாகதமபி  த்யக்த்வா நிஹந்தி த்விபம்

ஸர்வஹ க்ருச்ரகதோபி வாஞ்சந்தி ஜனஹ ஸத்வானுரூபம் பலம் 1-26

சதைப்பற்று இல்லாத எலும்பைக் கண்டாலும் நாய் சந்தோஷப்படும்; ஆயினும் அது அதன் பசியைத் தீர்க்காது. சிங்கமோ தன் பிடியில் ஒரு முயலே சிக்கினாலும் அதை விட்டுவிட்டு பலம் பொருந்திய யானையயே கொல்ல விழையும். பெரியவர்கள் தங்கள் பெருமைக்கேற்ற செயலைச் செய்தே குறிக்கோளை அடைவர்.

கோப்பெருஞ்சோழன் செப்புவது

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால் உயர்ந்த தேட்டத்து உயர்ந்திசினோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்…………….

–புறம் 214, கோப்பெருஞ்சோழன்

யானை வேட்டைக்குப் போனவன் யானையை பெறலாம். ஆனால் குறும்பூழ் பறவையைப் பிடிக்கப் போனவன் வெறும் கையுடனும் வரக்கூடும்; ஆகையால் உயர்ந்த குறிக்கோளுடன் செல்க.

स्वल्पस्नायुवसावशेषमलिनं निर्मांसम् अप्यस्थि गोः
श्वा लब्ध्वा परितोषम् एति न तु तत्तस्य क्षुधाशान्तये ।
सिंहो जम्बुकम् अङ्कम् आगतम् अपि त्यक्त्वा निहन्ति द्विपं
सर्वः कृच्छ्रगतो‌உपि वाञ्छन्ति जनः सत्त्वानुरूपं फलम् ॥ ॥

xxxxx

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

லாங்கூலசாலநமதஸ்சரணாவபாதம்

பூமௌ நிபத்ய வதனோதரதர்சனம் ச

ஸ்வாபிண்டதஸ்ய  குருதே கஜபுங்கவஸ்து

தீரம் விலோகயதி சாடுசதைஸ்ச புங்தே- 27

நாய் வாலை ஆட்டும்; எவன் ரொட்டித் துண்டுபோட்டாலும் அவன் காலடியில் விழும். அது கீழே புரண்டு வயிற்றையும் வாயையும் காட்டி மேலும் உணவு பெற முயலும். ஆனால் பெரிய பலம் மிக்க யானையோ இனிமையான வார்த்தைகள் சொல்லி அழைத்தாலும்கூட உணவைப் பற்றி கவலைப்படுவதுமில்லை; அதை ஏற்பதுமில்லை.

लाङ्गूलचालनम् अधश्चरणावपातं
भूमौ निपत्य वदनोदरदर्शनं च ।
श्वा पिण्डदस्य कुरुते गजपुङ्गवस्तु
धीरं विलोकयति चाटुशतैश्च भुङ्क्ते ॥ 27॥

வள்ளவனும் கண்ணனும் புகல்வது யாதெனின்

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – குறள் 596

உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.

xxxxx   subham   xxx

வள்ளுவரின் சகோதரி அவ்வையார் (Post No.5590)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 October 2018

Time uploaded in London – 16-49

(British Summer Time)

Post No. 5590

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அவ்வையார், திருவள்ளுவர் ஆகியோர் சகோதர, சகோதரிகள் என்றும், எழுவராகப் பிர்றந்தவர்கள் என்றும் 75 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எல்லாப் புத்தகங்களிலும் உள்ளது. உண்மையோ பொய்யோ, அந்தக் காலத்தில் இந்தப் புத்தககங்கள் பள்ளிக்கூட சிலபஸிலும் இருந்தது.

ஏற்கனவே சில செய்திகளை இங்கு வெளியிட்டுள்ளேன். இப்பொழுது பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டுபிடித்த 100 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு புத்தகம் இதோ:–

புஸ்தகத்தின் பெயர் பன்னிரு புலவர் சரித்திர ஸாரம்

ஆசிரியர்- திவான் பஹாதூர் வி.கிருஷ்ணமாச்சாரியார்

ஆண்டு-1906

இத்தகைய செய்திகளை ஒளிக்காது, மறைக்காது எல்லோருக்குமளித்து , ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோரைக் கொண்டு, காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து துணிபுகளை வெளியிடுவதே நனி சிறந்தது.

 

 

 

 

old articles

திருவள்ளுவர் யார் | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about திருவள்ளுவர் யார் written by Tamil and Vedas

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532) | Tamil and …

tamilandvedas.com/2016/02/12…

–subham—

அவ்வையாரின் சகோதரன் திருவள்ளுவன் (Post No.5589)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 October 2018

Time uploaded in London – 16-30

(British Summer Time)

Post No. 5589

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அவ்வையார், திருவள்ளுவர் ஆகியோர் சகோதர, சகோதரிகள் என்றும், எழுவராகப் பிர்றந்தவர்கள் என்றும் 75 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எல்லாப் புத்தகங்களிலும் உள்ளது. உண்மையோ பொய்யோ, அந்தக் காலத்தில் இந்தப் புத்தககங்கள் பள்ளிக்கூட சிலபஸிலும் இருந்தது.

ஏற்கனவே சில செய்திகளை இங்கு வெளியிட்டுள்ளேன். இப்பொழுது பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டுபிடித்த 100 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு புத்தகம் இதோ:–

புஸ்தகத்தின் பெயர் பன்னிரு புலவர் சரித்திர ஸாரம்

ஆசிரியர்- திவான் பஹாதூர் வி.கிருஷ்ணமாச்சாரியார்

ஆண்டு-1906

இத்தகைய செய்திகளை ஒளிக்காது, மறைக்காது எல்லோருக்குமளித்து , ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோரைக் கொண்டு, காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து துணிபுகளை வெளியிடுவதே நனி சிறந்தது.

 

 

 

 

 

 

–subham–

வள்ளுவனை மிஞ்சிவிட்டான் பர்த்ருஹரி! (Post No.5574)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 22 October 2018

Time uploaded in London – 8-33 AM

(British Summer Time)

Post No. 5574

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வள்ளுவனை மிஞ்சிவிட்டான் பர்த்ருஹரி! (Post No.5574)

உலகப் புகழ் பெற்றவன் தமிழ்ப் புலவன் வள்ளுவன். 2660 வரிகளில் 133 விஷயங்களை அலசி ஆராய்ந்து விட்டான்.  அவன் ‘பக்கா’ ஹிந்து என்பதால் தர்ம, அர்த்த, காம என்ற அதே வரிசையில் திருக்குறளை முப்பாலாக வகுத்தான். நாலாவது விஷயமான மோக்ஷம் என்பதை துறவறவியலில் வைத்துவிட்டான். அவன் இரண்டு அடிகளில் சொன்ன விஷயங்களை பர்த்ருஹரி ஒரே வரியில் சொல்கிறார்.

நீதி சதகத்தில் 100 ஸ்லோகங்கள் உண்டு . அவர் யாத்த சிருங்கார சதகம், வைராக்ய சதகத்தில் மேலும் 200 பாடல்கள் இருக்கின்றன. வள்ளுவன் 1330 அருங்குறள்களில் செப்பியதை பர்த்ருஹரி 300 பாடல்களில் செப்பிவிட்டான்.  இருந்தபோதிலும் குறளுக்குத் தனிச் சிறப்பு உண்டு.

பர்த்ருஹரியின் மூன்று பாடல்களைக் குறளுடன் ஒப்பிடுவோம்

பர்த்ருஹரியின் நீதி சதகத்தில் 21, 22, 23 பாடல்களைக் காண்போம்

பாடல் 21-ன் பொருள்

மன்னிக்கும் குணம் உள்ளவனுக்கு கவசம் எதற்கு?

கோபம் உள்ளவனுக்கு எதிரிகள் எதற்கு?

ஒருவனுக்கு அறிவு இருந்தால் தீயதை எரிக்க தீ எதற்கு?

உண்மை நண்பன் இருந்தால் மருந்து தேவையா?

தன்னைச் சுற்றிலும் கெட்டவர்கள் இருந்தால் பாம்புகள் எதற்கு?

நல்ல விவேகம் இருந்தால் பணம் எதற்கு?

நல்ல குணங்கள் இருந்தால் ஆபரணங்கள் எதற்கு?

கவிதையை ரசிக்கத் தெரிந்துவிட்டால் அவனுக்கு ராஜ்யம், அரசாட்சி எதற்கு?

மன்னிக்கும் குணம்–

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல்- 314

உனக்கு துன்பம் விளைவித்தவர்க்கு நன்மைகள் பல செய்து அவர்கள் வெட்கப்படும்படி செய்க; அவர் செய்த கெடுதிகளையும் மறக்க.

தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்

என் குற்றமாகும் இறைக்கு- குறள் 436

தன்னுடைய குற்றத்தை ஆராய்ந்துவிட்டு, மற்றவர் குற்றத்தை

ஆராய்க; இதில் என்ன கஷ்டம்?

கோபம் பற்றி வள்ளுவன்

சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனம் என்னும்

ஏமப் புணையைச் சுடும்- 306

சேர்ந்தாரைக் கொல்லி= ஆஸ்ரயாசஹ

கோபப்பட்டவனை கோபம் என்னும் நெருப்பே அழித்துவிடும்; அவனுக்குத் துணையாக நின்றாரையும் அழித்துவிடும் (நெருப்பு போல)

உண்மை நண்பன்

ஒருவன் ஆடை திடீரென நழுவினாலோ, காற்றில் பறந்தாலோ, கிழிந்தாலோ ஒருவனின் கைகள் எவ்வளவு விரைவாக உடற் பகுதிகளை மறைக்க தன்னிச்சையாகச் செல்லுமோ அவ்வளவு விரைவாக, கஷ்டகாலத்தில் உதவுபவனே உண்மை நண்பன் என்பதை வள்ளுவன் காட்டுவது போல வேறு எவரும் காட்டியதில்லை.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு (குறள் 788)

கெட்டவர்களும் பாம்பும் பற்றி வள்ளுவன்,

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்பொடு உடனுறைந்தற்று- 890

ஒரே கருத்து இல்லாதவருடன் வாழ்தல், குடிசையில் பாம்புடன் வசிப்பது போலாகும்

எது செல்வம்?

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்-443

ஒருவன் அடையக்கூடிய செல்வங்களுள் தலையாய

செல்வம் அறிவில் சிறந்த பெரியார்கள் சூழ இருப்பதேயாகும்.

க்ஷாந்திஸ் சேத் கவசேன கிம் கிம் அரிபிஹி அஸ்தி சேத தேஹினாம்

ஞாதிஸ்சேத் அநலேன கிம் யதி சுஹ்ருத்திவ்யௌஷதம் கிம் பலம்

கிம் ஸர்ப்பையதி  துர்ஜனாஹா கிம் உதனைர்வித்யா அனவத்யா யதி

வ்ரீடா சேத் கிமு பூஷணைஹி ஸுகவிதா யத்யஸ்தி ராஜ்ய்ரேன கிம் 1-21

क्षान्तिश्चेत्कवचेन किं किम् अरिभिः क्रोधो‌உस्ति चेद्देहिनां
ज्ञातिश्चेदनलेन किं यदि सुहृद्दिव्यौषधं किं फलम् ।
किं सर्पैर्यदि दुर्जनाः किम् उ धनैर्विद्या‌உनवद्या यदि
व्रीडा चेत्किम् उ भूषणैः सुकविता यद्यस्ति राज्येन किम् ॥ 1.21 ॥

xxxx

 

பாடல் 22-ன் பொருள்

ஒருவன் உறவினர்களிடத்தில் மரியாதை காட்ட வேண்டும்;

வேலைக்காரர்களிடம் அன்பாக இருக்க வேண்டும்;

புனிதர்களின் உறவுக்கு ஏங்க வேண்டும்;

ஆட்சியாளரின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்;

கற்றோரிடம் பணிவுடன் இருக்க வேண்டும்;

எதிரிகளிடத்தில் வீரத்தைக் காட்ட வேண்டும்;

முதியோரிடம் சகிப்புத் தன்மை இருக்க வேண்டும்;

மனைவியிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்;

மனிதர்களின் திறமை, விவேகம், தந்திரம் மூலம்தான்

நல்ல சமுதாயம் வேரூன்றி நிற்கிறது

எல்லோரிடமும் அன்பு காட்டுதல்—

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு- 80

அன்பு இருக்கும் உடல் உயிருள்ள உடல்; அது இல்லாவிட்டால் அது பிணம் ( தோல் போற்றிய எலும்புக்கூடு)

பெரியார் துணைக்கு ஏங்கு—

உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்-442

இருக்கும் துன்பத்தைப் போக்கி, இனி துன்பம் வராமல் காக்கும் அறிவிற் சிறந்த பெரியோரை பேணுக

 

தாக்ஷிண்யம் ஸ்வஜனே தயா பரிஜனே சாட்யம் ஸதா துர்ஜனே

ப்ரீதிஹி ஸாது ஜனே நயோ ந்ருப ஜனே வித்வத் ஜனே ச ஆர்ஜவம்

சௌர்யம் சத்ரு ஜனே க்ஷமா குரு ஜனே காந்தா ஜனே த்ருஷ்டதா

யேசைவம் புருஷாஹா கலாஸு குசலாஸ்தேஷ்வேவ லோகஸ்திதிஹி-1-22

दाक्षिण्यं स्वजने दया परिजने शाठ्यं सदा दुर्जने
प्रीतिः साधुजने नयो नृपजने विद्वज्जने चार्जवम् ।
शौर्यं शत्रुजने क्षमा गुरुजने कान्ताजने धृष्टता
ये चैवं पुरुषाः कलासु कुशलास्तेष्वेव लोकस्थितिः ॥ 1.22 ॥

xxxx

பாடல் 23-ன் பொருள்

புனிதர்களின், அறிவாளிகளின் தோழமையானது ஒருவனின் அறியாமையையும் அறிவின்மையையும் நீக்கும்;

மந்த புத்தியை  விலக்கும்; சுயமரியாதையை  அதிகரிக்கும்; பாபங்களைப் போக்கும்; மனத்தில் மகிழ்ச்சியை எழுப்பும்; உற்சாகத்தை உயர்த்தும்; சமுதாயத்தில் புகழை  ஈட்டித் தரும்; புனிதர்களின் கூட்டுறவால் கிடைக்காதது ஏதேனும் உண்டோ? செப்புக.

ஆதிசங்கரரும் பஜகோவிந்தம் என்னும் துதியில் நல்லோர் சஹவாசம் முக்தி நிலைக்கு இட்டும் செல்லும் என்கிறார்:–

சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்

நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி – பஜகோவிந்தம்.

திருவள்ளுவரும் சத்சங்கத்தின் பெருமையை, தொண்டர்தம் கூட்டை, ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் (குறள் 416)

கொஞ்சமாவது நல்லது கேளுங்கள்; அது உங்களுக்குப் பயன்படுகிறபோது நல்ல பெருமையைக் கொண்டுவரும் – என்கிறார்.

இன்னொரு குறளில் சறுக்கி விழும் நிலத்தில் நடக்கும்போது பயன்படும் ஊன்றுகோல் போல (walking stick வாக்கிங் ஸ்டிக்), புராண இதிஹாசச் சொற்பொழிவுகள் பயன்படும் என்பார்:

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் – குறள் 415

ஜாட்யம் தியோ ஹரதி ஸிஞ்சதி வாசி ஸத்யம்

மானோன்னதிம் திஸதி பாபம் அபாகரோதி

சேதஹ ப்ரஸாதயதி திஷு தனோதி கீர்த்திம்

ஸத்ஸங்கதிஹி கதய கிம் ந கரோதி பும்ஸாம் 1-23

जाड्यं धियो हरति सिञ्चति वाचि सत्यं
मानोन्नतिं दिशति पापम् अपाकरोति ।
चेतः प्रसादयति दिक्षु तनोति कीर्तिं
सत्सङ्गतिः कथय किं न करोति पुंसाम् ॥ 1.23 ॥

FROM MY EARLIER POST……………………..

அவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே! இனியது எது?’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:

“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது !
அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது ! அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது! அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”

பொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே! அதாவது அவர்களைப் பின்பற்றுவதே!

இதையே வாக்குண்டாம் என்ற பாடலில் மேலும் தெளிவாகச் சொல்கிறார்:

“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)

இம்மையில் சுவர்க்கம்
நற்குணன் உடைய வேந்தை
நயந்து சேவித்தல் ஒன்று;
பொற்பு உடை மகளிரொடு
பொருந்தியே வாழ்தல் ஒன்று;
பற்பலரோடு நன்னூல்
பகர்ந்து வாசித்தல் ஒன்று;
சொற்பெறும் இவைகள் மூன்றும்
இம்மையில் சுவர்க்கம் தானே! —(விவேக சிந்தாமணி)

மூன்று வகை சொர்க்கலோக இன்பங்களில் ‘வாசகர் வட்டமும்’ ஒன்று. அந்த வாசகர்கள் நன்னூலை வாசித்து , விவாதித்து பகிர்ந்து கொள்வராம்; அதாவது சத் சங்கம்!

–subham–