Questions and Answers: Where can I get books on the Vedas? (Post No.3770)

Written by by London swaminathan

 

Date: 29 March 2017

 

Time uploaded in London:- 21-07

 

Post No. 3770

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

Every day I get at least one e mail asking for some details about Hinduism, Tamil Names, Word meaning and availability of books; some are personal questions which I cant share; If it is for book review I send the enquiries to my brother S Nagarajan, who writes regular book reviews. If it is regarding some astrological questions or predictions, I send it to my eldest brother S Srinivasan who does it free of cost. Since my brothers are in India they can give them quick reply in person or by phone or by email.

 

Here are a few recent questions and my answers; they may be useful to others:

Dear sir,

 

I read your articles in google, really very useful.

 

I need Atharvana Veda book in Tamil, pls help me.

 

I went to many shops, but not available.

 

Please give me the address for the book

xxxx

 

My quick reply

 

Books on Vedas in Tamil are very few and difficult to get. If you contact

 

Jayalakshmi Indological Book House  

 

Book store in Chennai, India

AddressShop No.6, Appar Swamy Koil Street,, Opp. Sanskrit College, Mylapore, Chennai, Tamil Nadu 600004, India

Phone+91 44 2499 0539

 

She will get them for you or tell you whether they are out of print

 

For any book on Indology, Hinduism, Sanskrit in English and Tamil, she is the best; she will provide you details.

 

1).Tamil Maran’s book on Atharvana Veda is good.

 

2).Anuragam has published one booklet on each Veda in Tamil.

 

3).Kumtham Bhakti gave a booklet each for all the Vedas some years ago.

 

xxx

 

Question on V Sahasranama

 

This Is XYZ from Dibrugarh, Assam currently I am working as

XYZ. I came to know about you through Tamil

Brahmin website. I daily recite Vishnu Sahasranamam. I am very much

eager to Know any particular slokas there to excel in studies,

research, career growth, Success etc.

 

 

My quick reply:–

 

Dear XXXX
Glad to know that you recite Vishnu Sahsranama everyday.

If you are very keen to achieve great grades and success in your studies.

please recite couplets 19 and 27

 

Sloka 19

beginning MAHABUDDHIR MAHAAVEERYA MAHAASAKTHIR……………..MAHADHRIDHRUTH

 

Sloka 27

ASANKHYEYO APRAME-YAATHMAA…………………………………….. SIDDHI SAADHANAHA

 

All the Best.

Good luck in all your endeavours.

xxxx

 

Respected Swami ji,

one thing kept me worried is about the correct pronunciation
of the slokas. I was following M.S Subbalaksmi and Sooryagayatri. I
was going through the English PDF of VS but I encountered several
mistakes in spelling for eg XXXXXXXXXXX
My question is if I make wrong pronunciation any of the slokas due to
this difference in spelling will it affect its efficacy?

 

MY Quick reply
God is Karunamurthy (FULL OF MERCY)

God just smiles at us when we do mistakes like a mother smiles at her childrens’ mistakes and enjoys. (So God wont punish us for wrong pronunciation)
But it is always good to follow correct pronunciation so that is kept intact for the future generations.
I follow MS Subbulakshmi on audio and Ramakrishna Mutt, Mylapore, Chennai book for written version.

 

Just follow that one which you think is correct or follow MS

 

xxxx

 

Some typical questions received:

Can you get me XYZ book from the British Library?

I want to name my child XYZ. Is it a Tamil name?

Can you give me some ghost stories? We want to make a feature film?

Can you give me some verses from Sangam literature portraying Navarasam ( Nie sentiments) for a dance performance?

Are there any sex boosting medicines in our scriptures?

Can you give some names about water for my business?

 

Hundreds of people have asked: Where can I sell my old Indian currency notes? You wrote that one rupee and two rupees currency fetch thousands of rupees. ( I have answered this question umpteen times.)

 

Questions on Astrology:

When will I my sufferings end?

When will I get married?

When will I get a child?

 

xxx

If you are not bored yet, read the following: –

Respected Swami ji,

Are the UFOs time travellers?

Regards, S S

 

xxxx
uncle

I just found this on Wikipedia about shenbagam (flower).

there is lots of differing opinion on it

my priest told he says its most auspicious to Siva however

another devotee told no, don’t offer it….

even in the Wikipedia article it strangely says

he can’t resist a devotee who offers him shenbagam however

it is not to be offered….it is very strange uncle. see below….

a devotee……………………

 

 

If you are a publisher or author and you want your book reviewed in our blogs please contact me at swami_48@yahoo.com

 

–Subham–

அதிசயங்கள் நிறைந்த ஆகம நூல் (Post No.3762)

be376-siva2bwith2bsnake

Written by London swaminathan

Date: 27 March 2017

Time uploaded in London:- 14-53

Post No. 3762

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

இருபத்தெட்டு சைவ ஆகம நூல்களில் பத்தாவது இடத்தில் நிற்கும் ஆகம நூல் – சுப்ரபேதாகமம். அதன் புதிய பதிப்பு வெளிவரப்போகிறது என்று திரு கல்யாண சுந்தர சிவாச்சார்யார் சொன்னவுடனே அது பற்றி அறிய ஆவல் எழுந்தது. ஆகமம் என்றவுடனே ஏதோ சிவாச்சார்யார்களுக்கும் பட்டாச்சார்யாக்களுக்குமே பயன்படும் என்று நினைத்து பெரும்பாலோர் படிக்காமல் விட்டு விடுவார்கள். அது மட்டுமல்ல இது பற்றிய எந்தக் கட்டுரை அல்லது நூலை எடுத்தாலும் பாமர மக்களுக்குப் புரியாத, அறிஞர்களுக்கு மட்டுமே புரியும் (jargon) சொற்றொடர்களுடன் இருக்கும்.

கோவில் பூஜா விதிகளையும், அமைப்பு விதிகளையும் மட்டும் கூறும் நூல் என்று நானும் கருதி வாளாவிருந்தேன். ஆனால் சிவாச்சார்யா ரிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்தபோது அவர் கூறிய விஷயங்கள் என்னை வியப்புக்குள்ளாக் கியது.
இதோ லண்டனில் வசிக்கும், திருச்சியைச் சேர்ந்த, சிவாகம விஷாரதா, வியாகரண சிரோன்மணி திரு எம்,என்.கல்யாண சுந்தர சிவாச்சார்யார் (Mr M N Kalyanasundara Sivacharyar, M.A. (Sanskrit) அளித்த பதில்களின் சுருக்கம்:-

1.இது எவ்வளவு பெரிய நூல்?

நாங்கள் வெளியிடும் வடிவில் இது 480 பக்கங்களுக்கு மேல் வரும். சுப்ரபேதாகமம் என்னும் நூலில் 4583 ஸ்லோகங்கள் இருக்கின்றன. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்களும் இதில் இருப்பது இதன் சிறப்பு.
யோக பாதத்தில் 3 படலம், 321 ஸ்லோகங்கள்
சரியாபாதத்தில் 12 படலம், 794 ஸ்லோகங்கள்
கிரியா பாதத்தில் 56 படலம், 3117 ஸ்லோகங்கள்
ஞான பாதத்தில் 3 படலம், 351 ஸ்லோகங்கள்-
இருக்கின்றன.

174a2-siva2bganga

2.இதற்கு முன் யாரும் வெளியிடவில்லையா? நீங்கள் ஏன் இப்பணியை எடுத்துக்கொண்டீர்கள்?

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் திரு அழகப்ப முதலியார் வெளியிட்டுள்ளார். ஆனால் அதில் சில பிழைகளும் , சில விட்டுப்போன பகுதிகளும் இருந்தன. அவைகளை நிறைவும் செய்யும் முகத்தான், நாங்கள் இப்பணியை மேற்கொண்டோம். பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்ட ஓலைச் சுவடிகளின் உதவியுடன் இதைச் செய்தோம்.
வேதாகம அகாடமியின் சார்பில் இது செய்யப்பட்டாலும் என்னுடன் மேலும் மூன்று பேர் சேர்ந்து இதில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மாதங்களுக்கு தினமும் நவீன தகவல் தொடர்பு வசதிகள் மூலம் தொடர்பு கொண்டு இப்பணியை முடித்தோம்.

3.இதிலுள்ள இலக்கிய நயங்கள் என்ன?
பேழை (பேலா), சுள்ளி என்ற சொற்கள் வடமொழி ஸ்லோகங்களில் அப்படியே உள்ளன. நாம் சுண்டைக்காய் அளவு, கடுக்காய் அளவு என்று சொல்வோம் இதில் ‘’முத்து அளவு’’ (சுக்திகா முக்தம்) என்று சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு புதுமை. நாம் ‘நொடிப்பொழுது’, ‘கண் இமைக்கும் நேர’த்துக்குள் என்று சொல்வோம். இந்த நூலில் இமைப் பொழுதையும் நான்காகப் பிரித்துள்ளனர்!

கண் இமைக்கும் நேரம்= 4 துடி
2 துடி =ஒரு லவம்
2 லவம்= நிமிஷம்

((இன்று நாம் நிமிஷம் என்பதை வேறு கால அளவாக — 60 வினாடிகள் — உபயோகிக்கிறோம்))

மனித சரீரத்தில் தேவர்களும் , பரமேஸ்வரனும் ”விளையாடுகின்றனர்” என்றும் இந்நூல் கூறும்.
ஒவ்வொரு உறுப்பும் அவரவர் விரல் போல மூன்று மடங்கு என்றும் (3 அங்குலி) என்றும் சொல்கிறது.
மனிதனுடைய வயது 100 என்றும் சொல்கிறது.

( இவை அனைத்தும் ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள். விஞ்ஞானமுறைப்படி ஆராய்ந்து பார்க்க இந்நூலில் நிறைய விஷயங்கள் உள்ளன)

4. பூகோள, சரித்திர விஷயங்கள் உள்ளனவா?

ஞான பாதத்தில், ஏழு கடல், ஏழு த்வீபங்கள் (தீவு) வருணனைகள் உள்ளன. மற்ற புராணங்களில் உள்ளது போலன்றி கடலின் அளவு, தீவுகளின் இருப்பிடம் முதலியவற்றையும் இந்நூலில் காணலாம்.

5.உடல் ஆரோக்கியம், அமைப்பு பற்றி என்ன சொல்கிறார்கள்?
மிக வியப்பான விஷயம் கருவின் வளர்ச்சி பற்றியதாகும். தாயின் கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்கு எப்பொழுது என்ன உறுப்புகள் வளர்கின்றன, அவற்றின் அளவு என்ன என்று கூட இந்த ஆகமம் சொல்கிறது. உடலில் ஓடும் 72,000 நாடிகள் பற்றிய விவரங்கள் உள்ளன.

6. தாவரவியல் பற்றி ஏதேனும் இருக்கிறதா?

பூஜைக்கு உபயோகிக்க, கலசத்துக்கடியில் போட ஐந்து வகை நெல்களைச் சொல்கிறது. அதில் ஒரு அரிசி கருப்பு அரிசி.

பூஜைக்கான பழம், பூ, இலை வகைகள் என்னென்ன என்ற ஸ்லோகங்களும் இடம் பெற்றுள்ளன.

2cc36-nataraja252c2bg2bk2bc2bpuram

7.இன்னொரு இடத்தில்,
ஈஸ்வரனில் ஆயிரத்தில் ஒரு பகுதி ருத்ரன்;
ஈஸ்வரனில் கோடியில் ஒரு பகுதி விஷ்ணு;
அதே போல பிரம்மாவும்; என்றும் எழுதப்பட்டுள்ளது.
பகவத் கீதை போலவே சாத்வீக, ராஜச குணங்களுடைய மனிதர்கள் பற்றியும் வருணிக்கின்றனர்.

8.நல்ல உவமைகள், பழமொழிகள் ஏதேனும் உளதோ?

இருக்கிறது. சிவனும் சக்தியும் நெருப்பும் அதிலுள்ள சூடும் போல என்று சொல்லப்பட்டுள்ளது
(நான்:- அட! ஜகத்துக்கே பெற்றோர்கள் போன்ற பார்வதி பரமேஸ்வரனை ‘’சொல்லும் பொருளும் போல இணைபிரிக்க முடியாதவர்கள்’’ என்று காளிதாசன் வருணித்துள்ளான். தீயும் சூடும் என்று சொல்வதும் அழகாக இருக்கிறது)

உடல்தான் அழியும்; ஆத்மா அழியாது என்பதை விளக்க ‘கட’ நாசம் ( பானையின் அழிவு) என்ற உவமை சொல்லப்பட்டுளது. பல வகை வடிவப் பானைகளில் காற்று இருந்தாலும் அந்தப் பானையை உடைத்தால், பானையிலுள்ள காற்று பரவெளியில் கலப்பது போல, ஆன்மாவும் கலந்துவிடும்; உட லுக்குத் தான் அழிவு.

இன்னொரு உவமை பெருங்காயப் பெட்டியிலுள்ள வாசனைபோல, நம்முடைய கர்மங்களின் வாசனை தொடரும் என்றும் சொல்லியிருக்கிறது.

8.எண்களைச் சொல்கையில் ஒன்று முதல் பரார்த்தம் வரை சொல்லி யிருக்கிறார்கள்:-

ஒன்று முதல் மிகப்பெரிய எண் வரை எளிதில் நினைவு வைத்துக்கொள்ள ஒரு அருமையான ஸ்லோகமும் இதில் அடக்கம்:

தேவானாம் வக்ஷ்யதே கால: துட்யாதி ப்ரளயாந்தக:
துடி லவ நிமிஷஸ்ச காஷ்டா சைவ கலா ததா
க்ஷணம் முஹூர்த்தம் கடிகா சந்திர்யாம: அஹர்நிஸி திவச:
பக்ஷ மாசௌ ச ருதுஸ்து அயன வத்சரா: யுக
மன்வந்தரௌ கல்ப மஹாகல்பம் ப்ரளயஸ்ததா

மனிதர்கள்- தேவர்களின் கால வேறுபாடும் விளக்கப்பட்டிருக்கிறது.

9.ருத்ராக்ஷ மஹிமையை விளக்குகையில் ஒரு பெரிய செய்தி வருகிறது.
தர்பையைவிட மணிகளை வைத்து ஜபிப்பது பெரிது; மணிகளைவிட முத்து வைத்து ஜபிப்பது மேலும் பலன் தரும். அதைவிடப் பலன் தருவது தாமரை மணி. ருத்ராக்ஷத்தின் மஹிமையோ அளவிடற்கரியது.

இதிலுள்ள 75 படலங்களில் இப்படிச் சுவையான பல செய்திகள் உள்ளன. எல்லா ஆகமங்களிலும் உள்ள பூஜாக் க்ரம விஷயங்களோடு இவைகளும் இருக்கின்றன. ஆகையால் இது அனைவரும் படித்து இன்புறுவதற்கான ஒரு நூல் என்றால் அது மிகை யில்லை.

—Subham—

மஹாபாரதம் படிக்க முடியவில்லையா? இதோ ஒரே மூச்சில் பாரதம்! (Post No.3756)

Written by London swaminathan

 

Date: 25 March 2017

 

Time uploaded in London:- 15-59

 

Post No. 3756

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

உலகிலேயே மிகப் பெரிய சமய நூல் மஹாபாரதம். ஒரு லட்சம் ஸ்லோகங்கள்; இரண்டு லட்சம் வரிகள்! இதை எழுதும் கட்டுரையாளரும் அதை ஸ்லோகம் ஸ்லோகமாக, வரி வரியாக, முழுதும் படித்தபாடில்லை. ஆனால் இங்குமங்கும் கேட்டும், படித்தும் ஓரளவுக்கு முழு பாரதம் தெரிந்ததாக ‘’ஒரு நினைப்பு’’. அவ்வளவுதான்! அட, மஹாபாரதத்தில் எத்தனை பர்வங்கள் (அத்தியாயங்கள்) இருக்கின்றன? , அதில் கீதை எங்கே வருகிறது? அதில் பெரியது எது? சிறியது எது? ஒவ்வொன்றிலும் என்ன முக்கியம் என்றாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

 

முதலில் 18 பர்வங்களின் பெயர்கள்

 

  1. ஆதிபர்வம்      
  2. சபாபர்வம்   
  3. வனபர்வம்    
  4. விராடபர்வம்                 
  5. உத்யோகபர்வம்                
  6. பீஷ்மபர்வம்                           
  7. துரோணபர்வம்                      
  8. கர்ணபர்வம்               
  9. சல்யபர்வம்                        
  10. சௌப்திகபர்வம்                 
  11. ஸ்த்ரீபர்வம்                       
  12. சாந்திபர்வம்                       
  13. அநுசாஸனபர்வம்                    
  14. அஸ்வமேதிகபர்வம்             
  15. ஆஸ்ரமவாசிகபர்வம்                    
  16. மௌஸலபர்வம்                 
  17. மஹாப்ரஸ்தானிக பர்வம்       

18 ஸ்வர்காரோஹண பர்வம்      

 

 

     

((மொத்தம்        1923  அத்தியாயங்கள்    84224 ஸ்லோகங்கள் +

 ஹரிவம்சம் –12000 ஸ்லோகங்கள்;

 மொத்தம்                 96244 ஸ்லோகங்கள்))

 

 

 

முதல் பர்வம் எது?

ஆதி பர்வம் 

கடைசி பர்வம் எது?

ஸ்வர்காரோஹண பர்வம்   

பெரிய பர்வம் எது?

வனபர்வம் 269 அத்தியாயங்கள் 11664 ஸ்லோகங்கள்

 

சிறிய பர்வம் எது?

மஹா ப்ரஸ்தானிக பர்வம் 3 அத்தியாயங்கள் 123 ஸ்லோகங்கள்

 

பகவத் கீதை உள்ள  பர்வம் எது?

பீஷ்ம பர்வம் 

விஷ்ணு சஹஸ்ரநாமம் உள்ள பர்வம் எது?

அநுசாஸன பர்வம்                    

 

இனி ஒவ்வொரு பர்வத்திலும் உள்ள விஷயங்களின் சாராம்சத்தை மட்டும் காண்போம்:–

1.ஆதி பர்வம்

 

சந்திர வம்சத்தின் தோற்றம்

பஞ்ச பாண்டவர், கௌரவர்கள் பிறப்பு

இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே

வெவ்வேறு இடங்களில் இருந்து அரசு செலுத்தியது  – ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

2.ஸபா பர்வம்

தர்மபுத்ரனின்/யுதிஷ்டிரரின் தலைநகரில் அற்புதமான வகையில்

அமைக்கப்பட்ட சபையின் வருணனை;

அவருடைய ராஜசூய யாக வைபவம்;

இதனால் துரியோதணர் பொறாமை அடைந்தது;

பாண்டவர்களைச் சூதாட்டத்துக்கு அழைத்து, சகுனியின்

உதவியுடன் பாண்டவர்களைத் தோற்கடித்தது;

பண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்யவேண்டும்; 13 ஆவது ஆண்டு மறைவாக வசிக்கவேண்டும் என்று விதித்தது;

பின்னர் திரும்பி வந்தவுடன் ராஜ்யத்தைக் கொடுப்பேன் என்று துரியோதனன் சொன்னது  – ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

 

3.வன/ ஆரண்ய பர்வம்

பாண்டவர்கள் வனவாசம் செய்தது (காட்டில் வசித்தது);

மார்கண்டேய மகரிஷி முதலியோரிடமிருந்து தரும சாத்திரங்களை

அறிந்தது;

அர்ஜுனன் தவம் செய்து, பரமசிவனிடமிருந்து பாசுபத அஸ்திரம் பெற்றது;

இந்திர லோகம் சென்று சிலகாலம் வாசம் செய்தது — ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

4.விராட பர்வம்

வனவாசம் முடிந்தவுடன் 13ஆவது ஆண்டில் மறைவாக வாழ்வதற்காக

விராட ராஜன் தேசத்தில் வெவ்வேறு வடிவத்தில் வேலை செய்தது;

திரவுபதியிடம் வாலாட்டிய  கீசகனைக் கொன்றது;

 

துர்யோதன சகோதர்கள், பாண்டவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல்

திணறியது — ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

 

5.உத்தியோக பர்வம்

துரியோதனன் சொன்னபடியே 13 ஆண்டுகள் இருந்தபடியால்

தனது ராஜ்யத்தைத் திருப்பித் தரவேண்டும் என்று பாண்டவர்கள் தூது அனுப்பியது;

ராஜ்யத்தைத் தர மறுத்ததும், பாண்டவர்கள் சார்பில் கிருஷ்ணனே தூது சென்றது;

துரியோதனன் ஊசி முனை நிலமும் தர மறுத்ததால்,

கிருஷ்ணன், போருக்கான ஆயத்தங்களைச் செய்தது  — ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

6.பீஷ்ம பர்வம்

பீஷ்மர் தலைமையில் துரியோதனன் படைகள் பத்து

நாட்களுக்கு யுத்தம் செய்தது;

அதற்கு முன்பாக அர்ஜுனன் , சொந்தக்காரர்களைக் கொல்ல

மாட்டேன் என்று சொல்லி யுத்தம் செய்ய மறுத்தது; உடனே கிருஷ்ணன், பகவத் கீதை உபதேசம் செய்து, வீரனின் கடமை போர் செய்வது என்பதை உணர்த்தியது — ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

7.துரோண பர்வம்

பத்தாம் நாளன்று பீஷ்மர் வீழ்ந்தவுடன் , துரோணர் படைத் தளபதியாகப் பதவி ஏற்று யுத்தம் செய்தது;

15-ஆம் நாளன்று தருமபுத்திரர் வாயால் ஒரு பொய்ச் செய்தி

வந்தவுடன் துரோணர் கொல்லப்பட்டது – ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

8.கர்ண பர்வம்

துரோணரின் வீழ்ச்சிக்குப் பின்னர், கர்ணன் படைத்தலைவராகப் பதவி ஏற்று போர் செய்த்தது;

17-ஆவது நாள் மாலையில் அர்ஜுனனின் அம்புக்கு கர்ணன் பலியானது;

தன்னுடைய அண்ணன் கர்ணன் என்று அறிந்து தருமபுத்திரன் துக்கப்பட்டது– ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

 

9.சல்லிய பர்வம்

கடைசி நாளான 18-ஆவது நாள், சல்யன் படைத் தலைமை ஏற்று போர் செய்தது;

அவன் இறந்தவுடன், துரியோதனனும், பீமனும் கதாயுத யுத்தம் செய்தது;

கிருஷ்ணனின் குறிப்பால் துரியோதனன் தொடையில் அடித்து அவனை பீமன் வீழ்த்தியது– ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

10.ஸௌப்திக பர்வம்

துரோணரின் மகன் அசுவத்தாமன், ஒரு மரத்தில் காகங்களை, இரவு

நேரத்தில் ஆந்தைகள் வஞ்சகமாகக் கொன்றதைப் பார்த்து, அதே போல,பாண்டவர் படை வீட்டில் புகுந்து பாண்டவர்களின் குழந்தைகளையும், மற்ற வீரர்களையும் வஞ்சகமாகக் கொன்றது;

பாண்டவர், அவனை அவமானப்படுத்தி விரட்டியது;

கிருஷ்ணனின் முன்யோஜனையால் பாண்டவ சகோதர்கள் உயிர் பிழைத்தது — ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

11.ஸ்த்ரீ பர்வம்

18-நாள் கோர யுத்தத்தில் உயிர் நீத்த வீரர்களின் மனைவியர் அழுது ஒப்பாரி வைத்தது;

பாண்டவர்களும் மற்றவர்களும் , இறந்துபோன உறவினருக்கு நீர்க்கடன் (தர்ப்பணம்) செய்தது ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

12.சாந்தி பர்வம்

பத்தாவது நாள் யுத்தத்தில் காயமடைந்த பீஷ்மர், தனது தவ வலிமையால், உத்தராயண புண்யகாலத்தில் இறப்போம் என்று அம்புப் படுக்கையில் காத்திருந்தது.

அப்பொழுது யுத்தம் காரணமாக மன அமைதி இழந்திருந்த, தருமபுத்திரனுக்கு (யுதிஷ்டிரனுக்கு) சாந்தி ஏற்பட தருமம் தொடர்பான விஷயங்களைப் பீஷ்மர் போதித்தார். அவை அடங்கிய பகுதி இது.

 

13.அநுசாஸன பர்வம்

சாந்தி பர்வ விஷயங்களைக் கேட்டும் மன அமைதி அடையாத தருமனுக்கு மேலும் பல தருமங்களை பீஷ்மர் உபதேசித்தது- ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

 

14.அஸ்வமேதபர்வம்

தர்ம்புத்ரர் அஸ்வமேத யாகம் செய்தது;

கீதையில் சொன்ன விஷயங்களை மறந்த அர்ஜுனனுக்கு

பகவான் கிருஷ்ணர் அநுகீதா ரூபமாக மீண்டும் உபதேசித்தது– ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

15.ஆசிரமவாஸ பர்வம்

துர்யோதனனின் தாய் தந்தையரான காந்தாரியும், திருதராஷ்டிரனும் விதுரர் உபதேசத்தால் வைராக்யம் அடைந்தனர்;

போர் நிகழ்ந்த குருக்ஷேத்திரத்துக்கு அருகில் பர்ணசாலை (ஓலைக் குடிசை) அமைத்து, தியானம் செய்துகொண்டு உயிர் துறந்தது– ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

16.மௌசல பர்வம்

ஒரு ரிஷியின் சாபத்தால், யாதவர்கள்  சமுத்திரக் கரையில் முளத்திருந்த கோரைப் புற்களைப் பிடுங்கி சண்டையிடவே அவை பயங்கர ஆயுதங்களாக மாறி யாதவ குலம் அழிந்தது;

கிருஷ்ணர், ஒரு வேடனால் கொல்லப்பட்டு வைகுண்டம் ஏகியது– ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

17.மஹா பிரஸ்தான பர்வம்

கிருஷ்ண பகவான் வைகுண்டம் ஏகியதை அறிந்தவுடன், கலியுகம் துவங்கியதை அறிந்த தருமர், தனது தம்பிமார்கள், திரவுபதி சகிதம், வட திசையிலுள்ள மேரு மலையை நோக்கிப் பயணம் செய்தது; அவர்களுடன் ஒரு நாயும் தொடர்ந்து பயணம் செய்தது; ஒவ்வொரு பாண்டவராய் உயிர் துறந்தும் நாயும் தருமனு மட்டும் தொடர்ந்து நடந்து சென்றது– ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

 

18.ஸ்வர்கரோஹண பர்வம்

தரும புத்ரர் (தருமன்/ யுதிஷ்டிடன்) யுத்த காலத்தில் ஒரே ஒரு பொய் சொன்னதற்காக நரகம் வழியாக அழைத்துச் செல்லப்பட்டு அதைக் காணும்படி செய்தது;

நாய் வடிவில் வந்தது தரும தேவதை என்று அறிந்தது;

தருமபுத்ரர் சுவர்க்கத்தில் தனது உறவினர்களைக் கண்டு மகிழ்ந்தது

ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.

 

மஹாபாரதம் முற்றும்

 

–SUBHAM–

Old Articles on Mahabharata from my blogs:–

Following articles are written by London swaminathan

1.மஹாபாரதத்தில் ஒரு அதிசய பறவை

கட்டுரை எண்:–1141 தேதி:– ஜூலை 1, 2014.

2.இறந்த பின்னும் வாழ்கிறோம்: அறிவியல் ஆராய்ச்சி அளிக்கும் உண்மை!! (Post No.2917) Date: 24 June 2016

3.மஹாபாரதப் போர் நடந்ததா? எப்போது நடந்தது?
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1384; தேதி நவம்பர் 2, 2014.

4.மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது!-பகுதி1; கட்டுரை எண் 934 தேதி 26 மார்ச் 2014

  1. பகுதி 2: – மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம்கிடைத்தது!; கட்டுரை எண் 935 தேதி 26 மார்ச் 2014

6.கருமிகளை கடலில் தள்ளுக! மஹாபாரதம் அறிவுரை!! (Post No.2774); Date: 2 May 2016

7.நாம் எல்லோரும் நட்சத்திரங்கள் !!
கட்டுரை எண்:– 1242: தேதி 19 ஆகஸ்ட் 2014.

8.Stars are Gods! We are Stars!!

Post No 1241; Dated 18th August 2014.

9.நால்வகைப் படைகள்: மகாபாரதம்- தமிழ் இலக்கிய ஒற்றுமை!!

கட்டுரை எண்:-1231; தேதி 13 ஆகஸ்ட் 2014.

10.Medical Science solves Ten Mysteries in the Mahabharata !

Post No. 933 Date 26th March 2014

11.PANDU- TIGER AMONG MEN! (Post No.3697) Date: 6 March 2017

12.Sex Secrets! Satyabhama boldly asks Draupadi in Mahabharata!!

Post No.2220; Date: 6   October 2015

13.Draupadi and Tamil Heroines;17 May 2012

14.Four Wings of Hindu Army: Blow to Aryan- Dravidian Theory!;Post No.1230 ; Dated 13th August 2014.

15.Strange Bird Stories in Mahabharata!

Research Article no. 1711; dated 12 March 2015

16.One Minute Mahabharata! One Minute Bhagavatha!! 27 March 2015

17.ஒரு நிமிட ராமாயணம், பாகவதம்மஹாபாரதம்!; 28 March 2015

18.Yellow clad Krishna and Blue Clad Balarama! 2 October 2014

19.பீதாம்பரதாரியும் நீலாம்பரதாரியும், மதுப் ப்ரியனும் மாது ப்ரியனும்; கட்டுரை எண்:1324; தேதி:– 3 அக்டோபர் 2014.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Following articles are written by S Nagarajan

1.ஒரு லட்சம் ஸ்லோகங்கள், 2314 அத்தியாயங்கள் கொண்ட உலகின் மிகப் பெரும் நூல் மஹாபாரதம்

written by S NAGARAJAN; Date: 17th  September 2015; Post No: 2165

2.MEMORY QUEEN DRAUPADI; Written by S Nagarajan

Research Article No. 1689; Dated 4 March 2015.

3.நேராகப் படித்தால் ராமாயணம்; தலைகீழாகப் படித்தால் மஹாபாரதம்!  by S Nagarajan; Post No.1104; dated 13th June 2014.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 

Please read also London waminathan’s articles on CONCEPT OF TIME:

TIME TRAVEL by TWO TAMIL SAINTS, posted on 14-2-2012

Do Hindus believe in ETs and Alien Worlds?, posted on 28-1-2012

Is Brahmastra a Nuclear Weapon?, posted on 5 June 2011

Hindus Future Predictions Part 1 (posted 20 May 2012)

Hindus Future Predictions Part 2 (Posted on 20 May 2012)

Five Beautiful Stories on Hindu Concept of Time; Article No.1869; Dated 16 May 2015.

Einstein’s Hindu Connection!; Article No.2017; Date : 25  July 2014

–Subham–

 

 

ராமாயணம் படித்தால் சாபம் தீரும்! ராமாயண அதிசயங்கள்! (Post No.3753)

 

Written by London swaminathan

 

Date: 24 March 2017

 

Time uploaded in London:- 20-41

 

Post No. 3753

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உலகில் ராமாயணம் போல தொடர்ந்து எழுதப்பட்ட இதிஹாசம் வேறு எதுவும் கிடையாது. சுமார் 3000 ராமாயணங்கள் இருப்பதால் எண்ணிக்கை விஷயத்திலும் இதற்கே முதலிடம்.

 

சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டதாக வெளிநாட்டு ஆராய்ச்சியளர் செப்புவர். ஆனால் இதுதான் ஆதி காவியம், “சோகத்திலிருந்து பிறந்ததே ஸ்லோகம்” என்று இந்துக்கள் பகர்வர். காதல் புரியும் பறவைகளில் ஒன்றை, ஒரு வேடன் அடித்து வீழ்த்த, அதைப் பார்த்த வால்மீகியின் உணர்ச்சி கொந்தளிக்க, அந்த சோகத்தில் உருவானது ஸ்லோகம் (செய்யுள்).

ராஜதரங்கிணி என்ற வரலாற்று நூலில் கல்ஹணர் என்ற புலவர் ஒரு சுவையான விஷயத்தைச் சொல்கிறார். அசோகனுக்குப் பின்னர் காஷ்மீரை ஆண்ட இரண்டாவது தாமோதரன், திவச தினத்தன்று குளிக்கப் போனபோது பசியுடன் இருந்த சில பிராமணர்கள் உணவு படைத்துவிட்டுச் செல்லும்படி கோரினராம். விடஸ்தா நதியில் குளித்த பின்னரே அவ்வாறு செய்வேன் என்று அரசன் சொல்லவும், பிராமணர்கள், விதஸ்தா நதியை அவனுக்கு முன்னால் கொண்டு வந்தனராம். அதனை அவன் மாயத் தோற்றம், உண்மயல்ல என்று சொல்லி நிராகரிக்கவே, பிரமணர்கள் அவனைப் பாம்பாகப் போகும் படி சபித்தனர். அவன் வருந்தவே, ஒரே நாளில் ராமாயணம் முழுவதையும் கேட்டால் இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறலாம் என்று அவர்கள் சாப விமோசனம் கொடுத்தனர். இந்த தாமோதரன் ஹுஸ்கர், ஜுஸ்கர், கனிஷ்கர் முதலிய மன்னர்களுக்கு முன் — 2200 ஆண்டுகளுக்கு முன் —வாழ்ந்தவன்..

2500 ஆண்டுகளுக்கு முன்னரே ராமாயணம் தென் குமரி வரை பரவிவிட்டது. புத்தமத்த ஜாதகக் கதைகளில் தசரத ஜாதகம் முதலியன    இருப்பதும் , சங்கத் தமிழ் நூலான புறநானூற்றில் வால்மீகி சொல்லாத 2 கதைகள் இருப்பதும்,  காதா சபத சதியில் கோதவரி நதிக்கரையில் ஒரு வீட்டில் ராமாயண  ஓவியம் இருப்பதாகப் பாடி இருப்பதும் இதன் பழமைக்கு சான்று பகரும். ஆழ்வார் பாடல்களில் பல புதிய விஷயங்கள் உள்ளன. வால்மீகி என்ற பெயரில் புறநானூற்றுக் கவிஞர், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளார்!

 

ராமாயணம் பற்றிய மற்றொரு அதிசயம் சமண ராமாயணம், பௌத்த ராமாயணமென்று எல்லோரும் ராமன் கதை பாடி மகிழ்ந்தனர்.

 

ராமாயணம் பற்றிய மற்றொரு அதிசயம், நிறைய மொழிகளில் இதை இயற்றி இருப்பதாகும்.தென்கிழக்கு ஆசிய மொழிகளிலும் கூட ராமன் கதை உண்டு.

 

பல ராமாயணங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் அது பற்றிய குறிப்புகள் உள. மஹா ராமாயணம் மூன்றரை லட்சம் ஸ்லோகங்கள் உடையது. இப்போதுள்ள இதிஹாசங்களில், நூல்களில் உலகில் மிகப் பெரியது மஹாபாரதம்- அதில்கூட ஒரு லட்சம் ஸ்லோகம்தான்!

 

நாரதர் எழுதிய சம்வ்ரத ராமாயணம் 24,000, லோமசர் எழுதிய லோமச ராமாயணம் 32,000 ஸ்லோகங்களைக் கொண்டவை. 60, 000 ஸ்லோகங்களுக்கு மேலக உடைய இரண்டு ராமாயணங்கள் இருந்தனவாம்..

 

சமண ராமாயணம் பிராக்ருத மொழியிலும், பௌத்த ராமாயணங்கள் பாலி மொழியிலும், இந்து ராமாயணங்கள் சம்ஸ்கிருத, தமிழ் மொழிகளிலும் இருந்தன.

 

ப உ ம சரிய (பதும சரிதம்) என்ற சமண ராமாயண த்தை விமல சூரி என்பவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதியதாக ச் சொல்லுவர்– அதில் 118 பருவங்கள் உள்ளன. ராவணனின் 10 தலை, கும்பகர்ணனின் ஆறுமாத தூக்கம் முதலியன பொய் என்று இதன் ஆசிரியர் அப்போதே எழுதியுள்ளார்

 

பௌத்தர்களின் ஜாதக் கதையான தசரத ஜாதகத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் ஒரே மாதிரியான பல ஸ்லோகங்கள் இருக்கின்றன. அக்காலத்திலேயே ராமன் கதை பற்றிப் பல பொதுவான விஷயங்கள் உலவி வந்தது இதனால் தெரிகிறது

 

பழமைக்கு உவமைச்  சான்று

சம்ஸ்கிருதத்தில் உவமைகள் இல்லாத காவியங்கள் குறைவு. வால்மீகி  ராமாயணத்தில் 3462 உவமைகள் இருப்பதாக அந்த உவமைகளைத் தொகுத்தளித்த ஆராய்ச்சியாளர் எம்.எம்.பாடக் கூறுகிறார்.

சீதையை விஷப் பாம்புக்கு ஒப்பிடுவது, இந்திர த்வஜம் போல அவன் வீழ்ந்தான் என்று உவமிப்பது முதலியன வால்மீகியின் பழமையை காட்டுகிறது ஏனெனில் பிற்காலத்தில் பாம்பை தீய விஷயங்களுக்கு மட்டுமே உவமை கூறினர்; இந்திர விழாவில் இந்திர த்வஜ கம்பத்தை அடித்துச் சாய்க்கும் உவமை எல்லாம் பிற்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை.

 

சுந்தர காண்டத்தில் 19 ஆவது அத்தியாயத்தில் தொடர்ந்து 30 உவமைகள் வருகின்றன. இது ஒரு புதுமை.

உவமைகள் பற்றி ஆராய்ந்த அறிஞர் இதில் குறைந்தது 13 வகை உவமைகள் இருப்பதாகப் பட்டியல் தருகிறார்.

3462 உவமைகளில்

2240 பூர்ண வாக்யா ச்ரௌதி

548 தர்மலுப்தா சமாசக

257 சமாசக பூர்ண ஆர்த்தி

174 தர்ம வசக லுப்தா பூர்ணா உவமை வகைகள் என்பார்.

 

 

வால்மீகி குறைந்தது 200 வகை தாவரங்களையும், 135 வகை ஆயுதங்களையும் குறிப்பிடுகிறார்.

 

எனது பழைய கட்டுரை:

வால்மீகி ராமாயணத்தில் 3462 உவமைகள்! கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்; ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1491; தேதி 16 டிசம்பர், 2014.

 

–Subham–

 

எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி … (Post No.3751)

Written by S NAGARAJAN

 

Date: 24 March 2017

 

Time uploaded in London:-  5-56 am

 

 

Post No.3751

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

புத்தக மதிப்புரை

 

எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி …

 

by ச.நாகராஜன்

 

மதுரை யாதவர் கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள திரு எம்.சுப்பையா தாஸ் அவர்கள் எழுதியுள்ள ‘எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி..’ என்ற நூல் அளக்கமுடியா விஷயங்களை கணிதக் கோல் வைத்து அளந்து காண்பிக்கிறது.

 

சூத்திரத்திற்கு அப்பால் இருக்கும் விளக்க முடியாத ஆன்மீக விஷயங்களை நம்மை கணித சூத்திரங்கள் மூலம் வழி நடத்திக் கொண்டு சென்று விளக்குகிறது.

 

கணிதத்திற்கு ஆன்மீகத்திற்கும் காலம் காலமாகத் தொடர்பு உண்டு. காலமும் கணக்கும் நீத்த காரணனனை கணிதம் மூலம் விளக்கியவர் லாகூரில் கணிதப் பேராசிரியராக வேலை பார்த்த சுவாமி ராமதீர்த்தர். அவரது எட்டு தொகுதிகள் கொண்ட இன் தி வுட்ஸ் ஆஃப் காட் ரியலைசேஷன் (In the Woods of God Realisation) நூலில் கணிதம் மூலமாக அவர் விளக்கும் வேதாந்த விஷயங்கள் மிகவும் சுவை பயப்பவை.

அதே போல கணித மேதை ராமானுஜனின் பிரசித்தி பெற்ற வாக்கியமான், “An equation for me has no meaning unless it represents a thought of God” என்பதிலிருந்து கணிதமே கடவுள்; கணிதத்தின் மூலம் கடவுளைக் காணலாம் என்பது நிதரிசனமாகப் புலனாகிறது.

 

 

இந்த அடிப்படையில் கணிதப் பேராசிரியர் ஒருவர் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு 147 பக்கம் அடங்கிய நூலில் மூன்று பிரிவுகளில் 18 அத்தியாயங்களில் அற்புதமான விஷயங்களை விளக்குகிறார். ஆறு அத்தியாயங்களில் கணித சூத்திரங்களும் விளக்கங்களும் நர்த்தனம் புரிகின்றன!

மாண்டூக்ய உபநிடதத்தில் மூன்று பரிமாண உலகமும் நான்கு பரிமாண உலகமும் சுட்டிக் காட்டப்படுவதை நூலாசிரியர் நன்கு விளக்குகிறார்.

 

 

நமது ரிஷிகள் எதையும் உள்ளுணர்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். தங்கள் தவ வலிமையால் அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் கண்டவர்கள் அவர்கள்.

உடலில் நமது இதயம் இடப்பக்கம் இருப்பதை நாம் உணர்கிறோம். அவ்ர்கள் ஆன்மீக இதயம் வலப்பக்கத்தில் உள்ளது என்று கூறுகின்றனர்.

 

 

இதை ஆசிரியர் விளக்கும் போது சமீப காலத்தில் திருவண்ணாமலையில் வாழ்ந்து அரிய உபதேசங்களை அருளிய பகவான் ரமண மஹ்ரிஷியும் இதை அடிக்கடி கூறியுள்ளதையும் இதை அவர் தனது அனுபவத்தின் மூலமாக உணர்ந்து நமக்கு அருளியிருபப்தையும் நாம் அறிந்து பிரமிக்கிறோம்.

 

 

நான்காவது பரிமாணம் என்பது ஒரு அதிசயமான விஷயம். இதைப் பற்றி மேலை நாட்டு அறிஞர்களும் ஆராய்ந்து பல நூல்களை இயற்றியுள்ளனர். குறிப்பிட்த்தகுந்த பல புத்தகங்களில் ஜே.டபிள்யூ. டன் (1875-1949) எழுதிய “An Ezperiment with Time” குறிப்பிடத்தகுந்த ஒன்று. ஆங்கிலத்தில் உள்ள இது போன்ற புத்தகங்கள் தமிழில் இல்லை என்ற குறையைப் போக்கும் விதத்தில் நூலாசிரியர் சுப்பையா தாஸ் சில எளிய சித்திரங்கள் மூலம் நான்காம் பரிமாணத்தை விளக்குகிறார்.

 

நானோ வினாடியில் பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்கள் அந்த குறிப்பிட்ட நானோ வினாடியில் மட்டும் நமது மூன்று பரிமாண உலகில் நடக்கும்.

 

இந்தச் செயல்கள் நடந்து முடிந்தவுடன்  செயல்கள் அனைத்தும் நான்காம் பரிமாண உலகில் ஒரு குறிப்பிட்ட பதிவகத்தில் சேமித்து வைக்கப்படும்.

 

ஆகாம்யம்,சஞ்சிதம், பிராரப்தம் ஆகிய மூன்று க்ர்ம அல்லது எண்ணத் தொகுப்புகளை ஆசிரியர் அழகுற மூன்று பக்க முக்கோணத்தின் மூலம் விளக்குகிறார்.

 

பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்தால் மிஞ்சுவது பூரணம் என்பதை கணித மூலம் ஆசிரியர் அழகுற விளக்குகிறார்.

 

பிரபஞ்ச ஒடுக்கம், பிரபஞ்ச வெடிப்பு போன்ற அறிவியல் விஷய்ங்களை ஆன்மீக ரீதியில் ஆசிரியர் விளக்குகிறார்.

 

சனி கிரகத்தின் வடதுருவ பகுதியில் அறுகோண வடிவ அடையாளத்தை தங்கள் ஞானக்கண்ணால் கண்டுணர்ந்த முனிவர்கள் அதை சனீஸ்வரன் கோவிலின் மேற்கூரையில் பொறிக்கச் செய்தனர். நாஸா அனுப்பிய காஸினி விண்கலம் இந்த அறுகோண அமைப்பை போட்டோ எடுத்து அனுப்பியிருப்பதால் முனிவர்களின் அபூர்வ ஆற்றல் உறுதி செய்யப்படுகிறது.

 

 

இது போல ஓம் என்ற பிரணவத்தின் அற்புத ஆற்றலையும் ஆசிரியர் அழகுற விளக்குகிறார்.

 

ஸ்ரீ சத்யசாயிபாபாவின் அழகான முத்திரை வாக்கியங்களையும் அவர் தெய்வீக வாழ்வில் ஒரு சிறு பெண்ணுக்கு அவர் அருளால் விளைந்த அற்புத சம்பவத்தையும் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். இது எல்லையற்ற அபூர்வமான ஆற்றலையும் அவதார மஹிமையையும் விளக்க சுவையாகப்  பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

 

காலம் மற்றும் வெளி, காரண- காரியம் இவற்றிற்கு உட்பட்ட மனிதன் இதை  மீறி வெளி வருவதற்கு ஆன்மீக வாழ்வில் அடியெடுத்து வைத்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆசிரியர் கூறும் செய்தி.

 

 

இந்த அரிய குறிக்கோளை அடைய இறை தத்துவத்தை உணர வேண்டும்.அதை கணிதம் மூலம் விளங்கிக் கொள்ள்லாம் என்பதை இந்தக் கணிதப் பேராசிரியர் சுவையுடன் கூறுகிறார்,

நூலுக்கு யாதவர் கல்லூரியின் முன்னாள் செயலர் திரு பன்னீர்செல்வம் அழகான் மதிப்புரையைத் தந்துள்ளார்.

நூலின் இறுதியில் மேற்கோள் நூல்கள் பட்டியலும் கலைச்சொற்கள் விளக்கமும் தரப்பட்டுள்ளன.

 

அழகுற அச்சிடப்பட்டுள்ள இந்த் புத்தகம் கிடைக்கும் இடம்:

 

THAASU PUBLICATIONS

14, II CROSS STREET,

VISHWANATHAPURAM

MADURAI 625014

TAMILNADU

INDIA

PHONE 0452 2641945

Email subdoss2014@gmail.com

 

நூலின் விலை ரூ 150/ (147 பக்கங்கள்)

 

கணிதம் மூலம் கடவுளை விளக்கும் ஆசிரியருக்கு எமது பாராட்டுக்கள்.

***

மதுரை ஆயிரங்கால் மண்டபம் – ஒலியியல் அதிசயம்! (Post No.3745)

1000 Pillar Mandap at Madurai Temple

Written by S NAGARAJAN

 

Date: 22 March 2017

 

Time uploaded in London:-  7-02 am

 

 

Post No.3745

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

10-3-2017 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் – ஒலியியல் அதிசயம்!

 

by ச.நாகராஜன்

 

 

நம்முடைய ஆலயங்களில் நமது முன்னோர்கள் பல அதிச்ய தொழில்நுட்ப அதிசயங்களைச் செய்துள்ளனர் என்பதை ந்வீன அறிவியல் கருவிகளின் மூலம் ஆராயும் போது தெரிய வருகிறது.

 

 

மதுரையில் பழங்காலந்தொட்டு இருந்து வரும் மீனாட்சி அம்மன் கோவில் அதிசயங்களையெல்லாம் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஒரு மாபெரும் அதிசயமாகும்.

அவற்றில் ஒரு அதிசயம் ஆயிரங்கால் மண்டபம்.

ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருடன் இருந்தாலும் கூட இதில் இருப்பது 985 தூண்கள் மட்டுமே!

இந்த மண்டபத்தின் தூண்கள் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் ஒரே வரிசையில் அமைந்திருக்கும் படி அமைக்கப்பட்டிருப்பது ஒரு பெரும் அதிசயம்.

 

1983ஆம் ஆண்டு மதுரையின் பிரபல இ.என்.டி (தொண்டை காது மூக்கு மருத்துவ நிபுணர்) மருத்துவ நிபுணரான காமேஸ்வரன் ஒரு பெரும் குழுவுடன் இந்த மண்டபத்தை நவீன கருவிகளுடன் ஆராய்ந்தார்.

 

இந்த மண்டபத்தில் ஒலியைக் கட்டுப்படுத்தும் அற்புத கட்டிட உத்தி பயன்படுத்தப்பட்டிருப்பதை தன் ஆய்வின்  முடிவில் அவர் கண்டு பிடித்தார்.

முழுக் கோவிலுமே மிகுந்த ஜன சந்தடியுட்ன இருந்தாலும் கூட எப்போதாவது ஒரு முறை தான் 80 டெசிபல் என்ற அளவை எட்டுகிறது என்பது அவரது ஆய்வின் முடிவு.

1000 Pillar Mandapam at Madurai Temple

 

ஒரு அமைதியான் அறை அல்லது சூழலில் 40 டெசிபல் என்ற அளவில் ஒலி இருக்கும். ஜன சந்தடியுள்ள இடங்களில் 80 முதல் 85 டெசிபல் என்ற அளவில் ஒலியின் அளவு இருக்கும். ஒரு ஜெட் விமானம் மேலெழும்பும் போது விமான நிலையங்களில் 100 டெசிபல் என்ற அளவில் ஒலி இருக்கும்.

 

சாலையின் அருகே மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அஷ்ட சக்தி மண்டபத்திலேயே 40 டெசிபல் தான் ஒலியின் அளவு இருக்கிறது!

 

இந்த குறைந்த அளவு ஒலி சிற்பிகளால் கோவிலுள் வருபவர்கள் அமைதியாக வழிபாடு ந்டத்தவும் தியானம் செய்யவும் வசதியாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது,

ஒரு நாளைக்கு சுமார் 5000 முதல் 6000 பேர்கள் வரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். இதில் உச்ச கட்ட அளவாக ஒலியின் அளவு  70 முதல் 80 டெசிபலே இருக்கிறது.

 

 

இது எதைச் சுட்டிக்காட்டுகிறது என்றால் சிற்பிகள் ஒலி இயலில் மிகவும் தேர்ந்த நிபுணர்கள் என்பதைக் காட்டுகிறது.

இங்குள்ள பாலிஷ் செய்யப்படாத தூண்கள், ஆங்காங்கு அமைக்கப்பட்டிருக்கும் சாளரக் க்ட்டமைப்புகள், காற்று துவாரங்கள், மணடபத்தைச் சுற்றி திறம்பட அமைக்கப்பட்டிருக்கும் திறந்த வெளிகள் இவை யனைத்தும் ஒலியைக் கட்டுக்குள் வைப்பதற்கான அதிச்ய உத்திகளாகும்.

இந்த அமைப்புகளை நேர்த்தியான வடிவமைப்பின் அம்சமாக ஆக்கி அழகுடன் விஞ்ஞானத்தையும் இணைத்த சிற்பிகளின் அறிவு ஆச்சரியகரமான ஒன்று.

 

 

இப்போது நவீன் கட்டிடங்களில் ஒலியைக் கட்டுப்படுத்த செய்யப்படும் ஏற்பாடுகள் கட்டிடத்தின் அழகைக் குலைத்து கூரையிலிருந்து ஆங்காங்கே கீழே தொங்க விடப்படும் பல் அமைப்புகளைக் கொண்டுள்ளன.

 

ஆனால் ஆயிரங்கால்  மண்டபத்திலோ அழகுடன அறிவியல் இணைகிறது. ஒவ்வொரு தூணும் சுமார் 12 அடி உயரம் உள்ளது. ஒவ்வொரு தூணும் ஒரு வித வடிவமைப்பு கொண்டுள்ளது. ஒன்றில் சதுர அமைப்பு, ஒன்றில் ஒரு தேவதை, இன்னொன்றில் யாளி, இன்னொன்றில் ஆலயத்திற்கு சேவை செய்த குடும்பத்தின் உறுப்பினரில் ஒருவர் என்று சிறபம் அமைக்கப்பட்டிருப்பது ஒரு சிறந்த உத்தியாகும்.

 

ஒரே அளவுள்ள தூண்கள் கணிதவியலின் அளவுப்படி சரியான் இடங்களில் துல்லியமாக நிறுவப்பட்டுள்ளன.

இந்த அத்தனை அம்சங்களும் சேர்ந்தே இதை ஒலியியல் அதிசயத்தின் உச்சகட்ட மண்டபமாக ஆக்கியுள்ளது.

 

இந்த மண்டபத்தின் மையத்தில் வீற்றிருக்கும் ஒருவரை மண்டபத்தின் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் அவரை ஒரு தூணும் மறைக்காது என்பது பெரிய அதிசயம். வெவ்வேறு அகலம் மற்றும் நீளமுடைய 16 பகுதிகள் இந்தத் தூண்களைக் கொண்டு நேர்த்தியுடன் அமைக்கப்பட்டவையாக இருப்பதால் மண்டபமே உலகின் தலை சிறந்த அதிசய மண்டபமாக ஆகும் பெருமையைப் பெறுகிறது.

 

 

இந்த மண்டபத்தை ஆராய்ந்த தெரஸ் மேரி என்ற கிறிஸ்தவ கன்யா ஸ்தீரி தனது ஆய்வுக் கட்டுரையை பிரான்ஸிலுள்ள சார்ன்போர்ன் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.

 

அவரை இந்தக் கட்டுரையாசிரியர் 38 ஆண்டுகளுக்கு முன்பு தினமணி கதிர் இதழுக்காகப் பேட்டி கண்ட போது இதன் அதிச்யங்களை ஒன்றன் பின் ஒன்றாக விவரித்து இது போன்ற ஒரு அதிசயத்தைத் தான் கண்டதில்லை என்றும் அதனாலேயே ஈர்க்கப்பட்டு இந்த ஆயிரங்கால் மண்டபத்தை ஆராய்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

பல அதிசயங்களைக் கொண்டு ஆன்மீகத்துடன் அறிவியலை இணக்கும் இந்த மண்டபம் தமிழர்களின் கட்டிடக்கலையைச் சுட்டிக் காட்டி தலை நிமிர வைக்கும் மண்டபம் என்றால் அதில் சந்தேகம் இல்லை!

***                                                                (ஆங்கிலத்தில் இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையை அவரே மொழியாக்கம் செய்து தரப்பட்டுள்ள கட்டுரை இது)

 

xxxx

 

 1000 Pillar Mandap at Hanumakonda

 

ஆயிரங்கால் மண்டபத்தை ஆராய்ந்தவர்

 

by ச.நாகராஜன்

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார் ஒரு பிரெஞ்சுப் பெண்மணி என்றால் ஆச்சரியமாயில்லை? இந்தச் சிறப்புக்குரியவர் மதுரை காமராஜ் பலக்லைக் கழகத்தில் பிரெஞ்சுத்துறைத் தலைவி சிஸ்டர் தெரஸ் மேரி ஆவார். கிறிஸ்துவ ‘நன்’னுக்கே உரிய தூய எளிமையான வெண்ணிற ஆடை, சிரித்த முகம்; குழந்தைகள் போல பால் பொங்கி நிற்கும்; அன்பை விளக்கும் இனிய மெல்லிய குரல். சிறிது நேரம்  பேசினாலும் நட்பிற்கு நிரந்தரப் பாலம் வகுக்கும் பண்பு. ஆழ்ந்த அறிவுடன் கூடிய அடக்கம். இவர் தான் தெரஸ் மேரி.

 

கிறிஸ்துவ மதத்தின் சாரம் பிரெஞ்சு தேசத்து சர்ச்சுகளில் சிற்பமாகவும் சித்திரமாகவும் இருப்பதை ஊன்றிக் கவனித்த இவர் இந்து  மதத்தின் சாரம் ஆலயங்களின் சிற்பத்திலும் சித்திரத்திலும் இருப்பதைக் கண்டார். மீனாட்சி அம்மன் கோவிலுள்ள ஆயிரங்கால் மண்பத்தை அணு அணுவாக ஆராய்ந்து இருநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களுடைய ஆராய்ச்சி உரை ஒன்றை எழுதி பாரிஸிலுள்ள சார்போர்ன் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்து டாக்டரேட் பட்டத்தைப் பெற்றார்.

1000 Pillar temple at Moodbidri

“மண்டபம் சைவ, வைணவத்தின் மொத்தக் களஞ்சியமாக விளங்குகிறது. பல தூண்கள் பூர்த்தி செய்யப்படாமலும் சிறபங்கள் இல்லாமலும் இருக்கின்றன. இருக்கும் சிற்பங்களோ ஏராளமான புராண சம்ப்வங்களை விளக்கிக் காட்டுகின்றன” என்று கூறிய அவர் சிவனுடைய திருவிளையாடல்கள் அற்புதங்களை அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதை முக்கியமாகக் கூறுகிறார்.

 

 

1966-ல் இந்தியா வந்த இவர் முதலில் திருச்சியிலும் நாகர்கோவிலிலும் ஹோலி கிராஸ் கல்லூரியில் வேலை பார்த்து விட்டுப் பின்னர் மதுரை பல்கலைக் கழகப் பிரெஞ்சுத் துறைக்கு வந்ஹார். பிரெஞ்சு கற்றுக் கொடுப்பதில் மறக்க முடியாதவராக ஒரு  மாணவியைக் குறிப்பிடுகிறார் இவர். இந்துமதி என்ற அந்த மாணவி பிரெஞ்சு மொழியில் இருந்த ஒரு துணைப்பாட நூல் முழுவதையும் மனப்பாடமாக எந்த வரியிலிருந்து கேட்டாலும் ஒப்பிப்பாராம்.. அபாரமான அவரது நினைவுத் திறனை இவரால் இன்னமும் வியக்காமல் இருக்க  முடியவில்லை.

 

 

மதர் தெரஸாவைச் சந்தித்த சம்பவம் இவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. மதுரை பாத்திமாக் கல்லூரியில் மதர் தெரஸா பேசுகையில், பங்களா தேஷில் சேவை புரிய வருமாறு அறைகூவல் விடுத்தார். அவரது பேச்சைப் போற்றச் சென்ற இவரிடம் , “நீங்கள் பங்களாதேஷ் வர வேண்டாம்” என்று கூறி விட்டார் மதர் தெரஸா. காரணம்? “நீங்கள் அங்கு வந்தால் சேவை புரிய இரண்டு கரங்களே எனக்குக் கிடைக்கும். ஆனால் இந்தப் பல்கலைக் கழகப் பொறுப்பினாலோ இந்தச் சேவை உணர்வை உங்களிடமிருந்து பலர் பெறும் போது பல நூறு சேவைக் கரங்கள் உருவாகும். ஆகவே தான் பங்களா தேஷ் வர வேண்டாம் என்கிறேன்” என்றாராம் தெரஸா. “அவர்து இந்தப் பதிலால் எனது பணியை ஒரு புது நோக்கிலே காண – உணர என்னால் முடிந்தது: என்கிறார் இவர்.

 

 

“கடவுளிடம் அர்ப்பணிக்கும் மனப்பான்மையுடன் கூடிய சேவையின் மூலம் மத் எல்லையைக் க்டந்து நாம் ஒருவரை ஒருவர் நெருங்குகிறோம். இதுவே வாழ்க்கையில் நான் கற்ற பாடம்” என்று கூறும் இவர் கீதை உபநிடதத்தை ந்ன்கு படித்திருக்கிறார்.

 

ஆண்டுக்கு ஒரு முறை அனாதைக் குழந்தைகளுக்கு ஒரு பெரிய முகாம் நடத்தி அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்த முயற்சி செய்யும் இவருக்கு ஒரே ஒரு ஆசை – “குழந்தைகளுக்கான கிராமம்” ஒன்றை உருவாக்க வேண்டும் எனப்து தான்.

 

 

தையலும், இசையும் இவரது பொழுதுபோக்குகள். லத்தின், தமிழ் (கொஞ்ச்சம் கொஞ்ச்சம் தெரியும்) ஆங்கிலம் உட்படப் பல மொழிகள் அறிந்தவர் இவர் ஆயிரங்கால் மண்டப ஆய்வுரையை பிரெஞ்சு இலக்கியத்திற்கு அளித்த 51 வயதான இப் பெண்மணி ஒரு ‘குழந்தைகள் கிராமத்தை’ உருவாக்க எண்ணும் குழந்தை உள்ளம் கொண்டவராக இருப்பதை அறிந்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

பேட்டி : கிருஷ்ணபிரகாஷ்

Mayan 1000 Pillar Temple in Mexico

 

கட்டுரை பிறந்த கதை

 

22-9-78 தினமணி கதிர் இதழில் முதல் பக்கத்தில் வெளியான இந்தக் கட்டுரை எழுதப்பட்ட விதத்தை இங்கு நினைவு கூர்கிறேன்.

 

1978இல் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பகுதி நேரப் படிப்புகள் தல்லாகுளம் தாண்டி புதூர் சாலையில் இருந்த ஒரு வளாகத்தில் மாலை நேரத்தில் நடை பெற்று வந்தன. அதில் பிரெஞ்சு மொழி படித்து வந்த எனது இளைய சகோதரர் திரு சுவாமிநாதன் என்னிடம் தெரஸ் மேரியைப் பற்றிக் கூற அவரைக் காண ஆவல் எழுந்தது.

 

அந்தச் சமயம் தினமணி கதிர ஆசிரியப் பொறுப்பில் இருந்த திரு கே.ஆர்.வாசுதேவன் (தற்போதைய அ.தி.மு.க ராஜ்ய சபா எம்.பி. டாக்டர் மைத்ரேயன் இவரது புதல்வர்) எனது இல்லத்திற்கு வந்தார். அவர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு என்னிடம், “இதை ஒரு பேட்டிக் கட்டுரையாக அனுப்பேன்” என்றார்.

 

 

தெரஸ்மேரி அவர்களை ஒரு நாள் மாலை நேரத்தில் சந்தித்து ஆயிரங்கால் மண்டபத்தின் பெருமையை விரிவாக அறிந்து கொண்டேன்.

 

பேட்டிக் கட்டுரை வெளியான் பின்னர் சில நாட்கள் கழித்து மகிழ்வுடன் அவர் தந்த ஃஃபீட் பேக் : இந்தக் கட்டுரையைப் பார்த்து விட்டு ஹிந்து உள்ளிட்ட பல பத்திரிகைகள் அவரைப் பேட்டி கண்டனவாம். : .

 

பேட்டிக் கட்டுரை எனது புனைபெயரில் வெளியானது.

 

xxxxx

 

1000 Pillar Mandap at Chichenitza, Mexico

Previous Articles on 1000 Pillar Mandap and Madurai Meenakshi Temple in my blogs:-

 

1).Vedic Origin of Thousand Pillar Halls in Indian and Mayan Culture!; posted on 5 July 2014

2).Acoustic Marvel of Madurai Temple; posted on 12 May 2013

3).Musical Pillars in Hindu Temples; posted on 12 May 2013

4).The Wonder that is Madurai Meenakshi Temple; posted on 29 September 2013

 5).Madurai Temple Photos; posted on 31 May 2013

6).MADURAI TEMPLE VAHANA PICTURES; posted on 2 June 2013

7).21 லிட்டர் கொழுக்கட்டை எதற்காக?; posted on 30 May 2013

8).Tirupparangkundram Temple Pictures; posted on 31 May 2013

9).உலக அதிசயம்: 1000 கால் மண்டபம் !! posted on 6 July 2014

 

10).Who is Dhananjayan? posted on 12 January 2013 (about Madurai temple)

 

11).Thousand Pillar Hall – An Acoustic Marvel in Madurai Meenakshi Temple(Post No.3632); posted on 13 February 2017

 

–SUBHAM–

அதிசய புத்த துறவி ஸு யுன்! முடிவுரை Part – 39 (Post No.3739)

Written by S NAGARAJAN

 

Date: 20 March 2017

 

Time uploaded in London:-  5-56 am

 

 

Post No.3739

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 39

ச.நாகராஜன்

 

முடிவுரை

 

நூறு வயது வாழ்ந்த பெரியோரின் வரிசையில் காஞ்சி பரமாசார்யர் மஹா பெரியவாள், பண்டிட் சாத்வலேகர், யோகி ஸ்ரீ கிருஷ்ணமாசார்யா, அரவிந்த மஹரிஷியின் சீடரான நிரோத்பரன் ஆகியோரைப் பற்றி எழுதி முடித்தவுடன் அடுத்து 120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி மாஸ்டர் ஸு யுன் பற்றி எழுத முனைந்தேன்.

 

Empty Cloud  என்ற நூலை அவர் எழுதியுள்ளார். அது அவரது அற்புதமான சுய சரிதம். அது 320 பக்கங்கள் கொண்ட பெரிய நூல்..

 

ஏராளமான அருமையான புத்த மத நூல்களை எனக்கு இலவசமாக தபால் செலவையும் தாமே ஏற்று அனுப்பி வரும் பெரிய புத்த மத தர்ம நிறுவனம்

 

The Corporate Body of the Buddha Educational Foundation

Taipei, Taiwan.

 

Xu Yun (Picture from Wikipedia,thanks.)

இந்த நிறுவனம் வெளியிடும் புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது, இந்த நிறுவனம் தான் எனக்கு ‘எம்ப்டி க்ளௌட்’ புத்தக்கத்தையும் அனுப்பி உதவியது.

 

 

இவர்களுக்கு வெறும் வார்த்தையால் நன்றி என்று சொல்வது மட்டும் போதுமா? என் உளமார்ந்த அன்பும் வணக்கமும் கலந்த ந்ன்றியினை இங்கு பதிவு செய்கிறேன்.

 

இந்தப் பெரியாரின் சரிதத்தை ஒரு கட்டுரையில் தருவது தான் முதலில் எனது எண்ணமாக இருந்தது. .ஆனால் எழுத எழ்த இது இந்த 39வது அத்தியாயம் வரை நீண்டு விட்டது.

இது புத்தரின் கருணையே.

 

இந்தத் தமிழாக்கம் பெரிய புத்தகத்தின் சொல்லுக்குச் சொல், வரிக்கு வரியான தமிழாக்கம் அல்ல இது. திரண்ட சுருக்கம் என்றே சொல்லலாம். பல நீண்ட சொற்பொழிவுகளை இங்கு சேர்க்கவில்லை.

நெருடலான மொழிபெயர்ப்பு பற்றி ஒரு வார்த்தை.

சீன நகர்களின் பெயர்கள், சீன பெரியோரின் பெயர்கள். புத்த மத கலாசாரம் சம்பந்தமான் கலைச் சொற்களை ஆகியவற்றை அப்படியே எழுதியதால், படிப்பதில் சிரமம் இருக்கலாம். சம்பிரதாயமான புத்த தம்ம கலைச் சொற்கள் ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்டவை. அதன் விளக்கம் புத்த தர்மத்தைப் பற்றி ஆழ்ந்து படித்த்வர்களாலேயே நன்கு உணர முடியும்.

என்றாலும் இந்த வார்த்தைகள் தமிழ் அன்பர்களிடையே ஒரு ஆர்வத்தைத் தூண்டி விட்டு அவற்றைப் பற்றி மேலும் அறிய அவர்களை ஊக்குவிக்கும் என்றே நம்புகிறேன்,

 

புத்தமதம், ஜென், கோயன்கள் பற்றி பல கட்டுரைகளை எழுத தைவான் புத்தகங்களும் எனது சேகரிப்பில் உள்ள இதர புத்த மத நூல்களுமே காரணம்.

 

யோக வாசிஷ்டம் உள்ளிட்ட ஆழ்ந்த அத்வைதக் க்ருத்துக்கள் அடங்கிய நூல்களில் அதிகம் ஈடுபாடுள்ள எனக்கு சூன்ய வாத  கொள்கையை உடைய புத்தமத நூல்களின் மீதும் புத்த தர்ம ஆசார்யர்களின் மீதும் எப்படி ஈடுபாடு வந்தது எப்படி என்ற கேள்விக்கு எனது எளிமையான பதில் ஒன்று உண்டு.

 

எதையும் ஆராய்ந்து பார்த்து ஒத்துக் கொள் என்கிறது புத்த மதம்.

இதனாலேயே அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு (அம்பேத்கர் என்ற ‘அ’வில் ஆரம்பித்து ‘ஜ’ வழியே சென்றால் ஆயிரக்கணக்கான பெயர்களைப் பட்டியலிடலாம்) உள்ளிட்ட சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள், நாத்திகர்களாகவும் ஆக முடியாமல் ஆத்திகர்களாகவும் ஆக முடியாமல் இடைப்பட்ட நிலையில் இருக்கும் அக்னாஸ்டிக்கள், உள்ளிட்ட ஏராளமானோர் அறிவால் எதையும் ஆராய்ந்து பார்க்கத் தூண்டும் புத்தரின் உபதேசங்களால் கவரப்படுகின்றனர்,

 

அருணகிரிநாதர் திருப்புகழில்,

 

“அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே

என முருகனைப் பற்றிப் பாடுகிறார்.

 

அறிவால் அறிதலையும் புத்தரின் மீதான பக்தியையும் புத்த தர்மம் வலியுறுத்துகிறது..

 

இப்படி அறிவு வழியே பக்தியுடன் சரியாகச் சிந்திப்பவர்கள் இறுதியில் சரியான, இறுதியான பேரறிவை அடைந்தே தீருவர் என்பது நமது அறநூல்களின் முடிபு

 

ஆகவே புத்தமத நூல்களும் அதைப் பின்பற்றும் பெரியோர்களின் சரிதமும் கூட ஒரே உண்மையை அடையும் வழிகளுள் ஒன்றே!

 

தவறாமல் புத்த மத நூல்களை நான் படிக்க இன்னும் ஒரு காரணமும் உண்டு.

இந்து மதத்தின் முக்கிய கொள்கையான கர்மா மற்றும் மறு பிறப்பு உள்ளிட்ட அடிப்படைக் கொள்கைகளை வலியுறுத்தும் மதம் புத்த மதம். சீலமே அடிப்படை என்கிறது புத்த மதம். இதுவே இந்து மத தத்துவமும் கூட.

 

ஆகவே இதைப் படிப்பதிலும் புத்தரின் அறவுரைகளைப் பின்பற்றுவதிலும் யாருக்கும் எந்த வித சிக்கலும் உருவாகாது.

சீலத்திற்கு பிரபஞ்சமே அடி பணியும்.

 

 

பிறந்த நாட்டிலேயே அழிந்து ஒழிந்த கம்யூனிஸ்டு கொள்கை சீனாவில் அடியெடுத்து வைத்தவுடன் கம்யூனிஸ்டு குண்டர்களால் சீனா சீரழிந்ததையும் மாஸ்ட்ர் ஸு யுன்னின் வரலாறில் காணலாம்.

 

புத்தரின் கருணையால் கம்யூனிஸம் அழிந்து பட்டு அஹிம்சை வழியே சீனா அறப்பண்புகளைப் பெற்று  பாரதத்துடன் பழைய நாட்களில் கொண்டிருந்த பெரும் நட்புடன் மீண்டும் இணக்கமாக செய்லப்டும் அற்புதமான் நாட்கள் வந்தே தீரும்.

 

அதை அருளுமாறு புத்தரை இறைஞ்சுகிறேன்.

 

 

இந்த நெடுந்தொடரை http://www.tamilandvedas.comஇல் வெளியிட்ட திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

இதைப் படித்த அனைத்து வாசகர்களுக்கும் புத்தரின் அருள் உரித்தாகுக;

 

புத்தம் சரணம் கச்சாமி!

ச.நாகராஜன்

பெங்களூரு

12-3-2017

துர்முகி வருடம் மாசி மாதம் 28ஆம் நாள்  –  பௌர்ணமி தினம்

முற்றும்

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 38 (Post No.3737)

Written by S NAGARAJAN

 

Date: 19 March 2017

 

Time uploaded in London:-  6-23 am

 

 

Post No.3737

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 38

ச.நாகராஜன்

 

120ஆம் வயது – (13-10-1959)

மாஸ்டர் ஸு யுன்னின் மஹா நிர்வாணம்!

ஸு யுன்னுக்கு இப்போது வயது 120.  வசந்த காலம் வந்தது.மாஸ்டர் ஸு யுன்னின் 120வது பிறந்த நாளும் வந்தது. சீனாவிலுள்ள அனைத்து ஆலயங்கள் மற்றும் மடாலயங்களில் உள்ள மாஸ்டரின் சீடர்களுக்கும் மக்களுக்கும் ஒரே மகிழ்ச்சி.

பழைய காலத்தில் வாழ்ந்த மாஸ்டர் ஜாவோ ஜோவு இதே போல 120 ஆண்டுகள் (778-897) வாழ்ந்தவர்

சீடர்கள் மிக பிரமாதமாக பிரம்மாண்டமான் அளவில் பிறந்த தின கொண்டாட்டம் கொண்டாட விரும்பினர் இதை அறிந்த ஸு யுன் அனைவருக்கும் இப்படி பதில் எழுதினார்:

‘நான் எவ்வளவு நாள் வாழப்போகிறேன் என்று எனக்கே தெரியாது. இருந்த போதிலும் உபாசகர் வூ ஜிங் ஸாய் எனது பிறந்த நாளை ஒட்டி வாழ்த்துக்களை அனுப்பி உள்ளார். அவருக்கு நான் நன்றி தெரிவித்து இது போல செய்ய வேண்டாம் என்று வேண்டிக் கொண்டேன்.

எனது பூர்வ கர்மாக்கள் எனக்கு இந்தப் பிறவி முழுவதும் ஏராளமான துன்பங்களைத் தந்துள்ளன. காற்றில் அலைக்கழிக்கப்படும் மெழுகுவர்த்தி போல நான் இருக்கிறேன். இதை நினைக்கும் போது ஒரு சாதனையும் செய்யாத என்னை நினைத்து நானே வெட்கப்படுகிறேன்.

நூறு ஆண்டுக்கால உலகத் துயரங்கள் ஒரு கனவு போல; ஒரு மாயை போலத் தான்!; அதன் மீது பற்றுக் கொள்ள உகந்தது அல்ல. மேலும் பிறப்பானது இறப்பிற்கு வழி வகுக்கிறது. ஆகவே ஒருவன் டாவோ மீது தன் மனதைச் செலுத்த வேண்டும்.

என்னால் எப்படி இந்த (பிறந்த நாள் என்னும்) உலகியல் சடங்கில் ஈடுபட முடியும்? உங்களின் அன்பிற்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து எழும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் கூட நான் எனது தாயின் அகால மரணம் பற்றி வருந்திக் கொண்டிருக்கிறேன்.

 

தயவு செய்து எனது பாவத்தை அதிகரிக்கச் செய்யும் பயனற்ற பிறந்த நாள் கொண்டாடும் திட்டத்தைக் கை விடுங்கள்.”

மூன்றாம் மாதம் ‘பூல் ஆஃப் தி பிரைட் மூன்’ மற்றும் ஸ்தூப வேலைகள் முடிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அவர் தானே நேரில் நின்று அவற்றை முடிவு பெறச் செய்ய முனைந்தார். சில மாதங்களில் அவை முடிவுற்றன

1956ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாஸ்டரின் சீடரான பிக்ஷுணி திருமதி ஜான் வாங்கும் அவரது கணவரும் கனடாவில் பெரிய வர்த்தகருமான ஜான் லி வூவும் பிரதான ஹாலைக் கட்டுவதற்காக நிதி அளிக்க விரும்பினர். ஆனால் அது முடிந்து விட்டதால் ஒரு ஸ்தூபம் அமைக்கவும் லியூ யுன் –அதாவது மாஸ்டரைக் குறிக்கும் பெயர் அது – என்று அழைக்கப்படும் சான் தியான மண்டபம் ஒன்றையும் அமைக்க விரும்பினர். இதன் மூலம் மாஸ்டர் உலகில் இன்னும் இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

மாஸ்டரோ நான் ஹுவா மற்றும் யுன் மென்னில் ஸ்தூபங்கள் அமைக்கப்பட்டு விட்டன. ஜென் ருவுக்கும் அது போல ஒரு ஸ்தூபம் அமைக்க வேண்டும். மாஸ்டர்கள் மற்றும் ம்டாலயத் தலைவர்கள் எங்கெல்லாம் புதைக்கப்பட்டார்களோ அவர்களின் எச்சங்களை இங்கு கொண்டு வந்து ஸ்தூபத்தை முழுமையாக்கி சீடர்கள் அனைவரும் அங்கு வந்து தங்கள் அஞ்சலியைச் செலுத்தும் வண்ணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஜான் லி ஏற்கனவே 10000 ஹாங்காங் டாலர் அளித்திருந்தார். இப்போது இன்னும் 50000 ஹாங்காங் டாலர் (மொத்தம் 10000 கனடிய டாலர்கள்) அளிக்க முன் வந்தார்.

மாஸ்டர் அதை மனமுவந்து ஏற்றார்.1956 இல் ஸ்தூப வேலைகள் ஆரம்பித்தன.1959ஆம் ஆண்டு ஏழாம் மாதம் அது நிறைவுற்றது.

இதுவே மாஸ்டர் ஸு யுன்னின் இறுதியான் பணியாக அமைந்தது.

 

அதே மாதம் கனடாவைச் சேர்ந்த உபாசகர் வாங் ஷெங் ஜியும் ஹாங்காங்கைச் சேர்ந்த ஜெங் குவான் பியும் க்ஷிதிகர்ப போதிசத்வர் சிலையை அவரது 120வது பிற்ந்த நாளை ஒட்டி அமைக்க வேண்டும் என்று விரும்பினர்.

இதை ஏற்றுக்கொண்ட மாஸ்டர் உடனடியாக இரண்டு சிலைகளை இரண்டே மாதங்களில் செய்து பெல் டவரில் ஒன்றையும் ஸ்தூபத்தில் இன்னொன்றையும் பிரதிஷ்டை செய்தார்.

இந்த இரண்டு சிலைகளே அவர் கடைசியாக பிரதிஷ்டை செய்தவை ஆகும்.

மூன்றாம் மாதத்திலிருந்து நாளுக்கு நாள் அவர் உடல் நிலை நலிவடைந்து வந்தது. ஏழாம் மாதம் அவருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டது. எதையும் சாப்பிட முடியாத நிலையில் சிறிது கஞ்சி மட்டுமே அவர் உட்கொண்டார்.

பீஜிங் அரசு மாஸ்டரின் நிலையை அறிந்து ஒரு டாக்டரை அவரிடம் அனுப்புமாறு உத்தரவிட்டது. ஆனால் மாஸ்டர் அதை வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

புவியுடனான எனது தொடர்பு ஒரு  முடிவுக்கு வந்து விட்டது என்றார் அவர்.

அவர் உடல்நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து அனைத்து சீடர்களும அவரது பசுந்தொழுவத்தில் ஒரு நாள் குழுமினர்

அப்போது அவர், ‘நம்மிடையே ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாலேயே நாம் அனைவரும் இங்கு ஒன்றாக இணைந்துள்ளோம். இந்த ம்டாலயங்களை எனக்குப் பின்னர் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். நான் இறந்த பிறகு என்னை மஞ்சள் ஆடை அணிவித்து சவப்பெட்டியில் வைத்து ஒரு நாள் கழித்து மலையின் அடிவாரத்தில் பசுந்தொழுவத்தின் மேற்குப் ப்குதியில் எரியூட்டுங்கள். பிறகு எனது சாம்பலுடன் சர்க்கரை, மாவு, எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து ஒன்பது உருண்டைகளைச் செய்து உயிரினங்கள அனைத்திற்குமாக அவற்றை ஓடும் நதியில் எறிந்து விடுங்கள்.இந்த உதவியை எனக்குச் செய்தீர்களானால் நான் உங்களுக்கு மிகவும் நன்றி உடைய்வனாக இருப்பேன்” என்றார்.

அவர்கள் அனைவரும் மாஸ்டருக்கு அன்பு மொழிகளைக் கூறினர். தர்மம் பற்றிய மூன்று கதா கீதங்களை இசைத்தனர்.

எட்டாம் மாதம அவரது பிறந்த நாளை ஒட்டி அனைவரும் வந்து அவரை தரிசித்து பாராட்டுகளை நல்கினர்.

அக்டோபர் மாதம் நிலைமை மோசமடைந்தது.

அக்டோபர்மாதம் ஏழாம் தேதி மார்ஷல் லி ஜெ ஷென் மறைந்ததாக ஒரு தந்தி வந்தது. அதைக் கேட்ட மாஸ்டர், “லி, எனக்கு முன்னதாக ஏன் சென்றீர்கள்? நானும் போக வேண்டும்” என்றார்.

இதைக் கேட்ட சீடர்கள் அனைவரும் வருந்தினர்.

 

அக்டோபர் 12ஆம் நாள் மாஸ்ட்ர் புத்தரின் சிலையை இன்னொரு அறைக்குக் கொண்டு செல்லப் பணித்தார். இந்த  அசாதாரணமான் உத்தரவைக் கேட்ட மடாலயத் தலைவர் உள்ளிட்டோர் அவரிடம் வந்து இன்னும் சில காலம் அவர் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.

“ஏன் இந்த உலகியல் நோக்கைக் கொண்டுள்ளீர்கள்? எனக்காக பிரதான ஹாலில் புத்தரின் நாமத்தை உச்சரியுங்கள்” என்றார் மாஸ்டர்.

அவரது இறுதி உத்தரவையும் ஆசையையும் கூறுமாறு அனைவரும் வேண்ட மாஸ்டர் கூறினார்:

“ சில தினங்களுக்கு முன்னர் நான் இறந்த பின்னர் என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறினேன். ஆகவே திருப்பி அதைச் சொல்ல வேண்டியதில்லை. க்டைசி வார்த்தைகள் வேண்டும் என்றால் சொல்கிறேன்,கேளுங்கள்.

சீலத்தைக் கடைப்பிடியுங்கள்; ஆசை, கோபம் முட்டாள்தனம் ஆகியவற்றை ஒழிக்க தியானம், பிரக்ஞா செய்யுங்கள்”

ஒரு கணம் கழித்து அவர், “உலகம் முழுமைக்கும் மனிதர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய பயமற்ற நிலையை உருவாக்க நல்ல எண்ணத்தையும் நல்ல மனத்தையும் மேம்படுத்துங்கள்” என்றார்.

 

அக்டோபர் மாதம் 13ஆம் நாள் அவரது உதவியாளர்கள் அவரை தியான நிலையில் அமர்ந்திருக்கக் கண்டனர்.. அவரது கன்னங்கள் சிவப்பாக இருந்தன. நடுப்பகலில் அவர் படுக்கையிலிருந்து கீழே இறங்குவதை அவர்கள் பார்த்தனர்,

அவர் கீழே விழுந்து விடக் கூடாது என்று உதவியாளர்கள் உள்ளே நுழைய மாஸ்டர் கூறினார்: “எனது கனவில் பசுந்தொழுவம் ஆடி அசைந்து இடிந்து விழுவதைக் கண்டேன். புத்தா பாலம் உடைவதைப் பார்த்தேன். நதி ஓடுவது நின்று விட்டது”

12.30 மணிக்கு அவர் கூறினார்: “நீங்கள் பல காலம் என்னுடன் இருந்துள்ளீர்கள். உங்களது துன்பம் கண்டு நான் மிகவும் நெகிழ்கிறேன். எங்கு சென்றாலும் சங்க ஆடையை பத்திரமாகப் பாதுகாத்து வாருங்கள். சீலத்தைக் கடைப்பிடியுங்கள்” என்றார்.

மணி 1.45. சீடர்கள் மாஸ்டரைப் பார்த்த போது அவர் வலது பக்கம் சாய்ந்திருந்தார். அனைத்தும் முடிந்து விட்டது என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.

உடனே ஏராளமானோர் அங்கு குழுமினர்.

18ஆம் நாளன்று அவர் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது.

19ஆம் நாளன்று எரியூட்டப்பட்டது.

அந்தச் சமயத்தில் சுற்றியிருந்த இடமெங்கும் நறுமணமுள்ள காற்று வீசியதை அனைவரும் உணர்ந்தனர்.

வெள்ளைப் புகை வானத்தை நோக்கி விரைந்தது.

சாம்பலிலிருந்து ஐந்து வண்ணங்களில் நூறு பெரிய மற்றும் எண்ணற்ற சிறிய எச்சங்கள் காணப்பட்டன. அனைத்தும் தூய்மையாக இருந்தன. ஒளியுடன் விகசித்தன.

 

21ஆம் நாளன்று சாம்பல் ஸ்தூபத்தில் வைக்கபப்ட்டது.

மாஸ்டர் ஸு யுன் 120 ஆண்டுகள் வாழ்ந்து தர்ம வயதான 101ஆம் வயதில் மறைந்தார்.

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

ச்ங்கம் சரணம் கச்சாமி

(அடுத்த கட்டுரை முடிவுரை: அத்துடன் இந்தத் தொடர் முற்றும். இந்தக் கட்டுரையை முடிக்கும் போது திடீரென்று அருகில் உள்ள ஆலயத்தின் மணியோசை அடிப்பதைக் கேட்டு வியப்புறுகிறேன். ஏனெனில் மாலையில் இந்த நேரத்தில் சாதாரணமாக மணி ஒலிக்காது. இன்று அர்த்தமுள்ள மணியோசை ஒலிக்கிறது.)

****

 

 

 

சுமேரிய நாகரீகத்தில் கங்கை நதியும் கைலாஷ் பர்வதமும்! (Post No.3732)

Research Article Written by London swaminathan

 

Date: 17 March 2017

 

Time uploaded in London:- 21-11

 

Post No. 3732

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சுமேரிய நாகரீகத்தில் நீர் மற்றும் மலை பற்றிய தெய்வப் படங்களைப் பார்த்தாலோ, அவை பற்றி படித்தாலோ உடனே நினைவுக்கு வருவது கங்கை நதியும் கைலாஷ் பர்வதமும்தான். ரிக் வேதத்தில் நீர் என்பதைக் குறிப்பதற்குள்ள சொற்களை இவர்கள் பயன்படுத்தியதும் தெரிகிறது! இதோ சில சுவையான விஷயங்கள்:–

 

சம்ஸ்கிருதத்தில் தண்ணீருக்கு ஆபஹ,  அபாம் (நபத்), தோயம் என்றெல்லாம் சொற்கள் உண்டு. கங்கை என்பதை அவர்கள் எங்கை (ENKI) என்று மாற்றி நீர் தேவதைக்குச் சூட்டினர். ஆபஹ என்பதை அப்சு(APSU) என்று மாற்றி கடல் தேவதைக்குச் சூட்டினர். தோயம் என்பதை இயா (EA) என்று மாற்றி நீர்த் தேவதைக்குச் சூட்டினர். கைலாஷ் என்பதை லகாஷ் (LAGASH) என்று மாற்றினர்.

தேவாரம் திருமந்திரம் முதலிய பக்தி இலக்கியத்தில் ஆபஹ என்ற சொல்லை அப்பு என்றுதான் தமிழ்ப் படுத்துவர். பிரெஞ்சு மொழியில் கூட தண்ணீருக்கு யூ (EAU) என்றுதான் பெயர். எழுதும்போது இயௌ என்று எழுதுவர்.

 

பகீரதன் தவம் செய்து கங்கையைக் கொண்டு வந்ததும், சிவன் தலையிலிருந்து கங்கை பொங்கி வருவதும் நாம் அறிந்த கதைகள். இந்தக் காட்சிகளை அவர்கள் அப்படியே மெசபொடோமியாவின் (இராக் நாடு) டைக்ரிஸ், யூப்ரடீஸ் நதிகளுக்குப் பயன்படுத்தினர். நாம் எப்படி இந்தியாவிலுள்ள எல்லா நதிகளிலும், புனித நாட்களில்  கங்கை பாய்கிறது என்று சொல்கிறோமோ அதைப் போல அவர்களும் டைக்ரீஸ் யூப்ரடீஸ் நதிகளில் எங்கை (ENKI) என்னும் தெய்வம் இனிய நீரைக் கொட்டுகிறது என்று எழுதி வைத்துள்ளனர்.

புனித நாட்களில் எல்லா நதிகளிலும் கங்கை பாய்வதாக இந்துக்கள் நம்புகின்றனர். தீபாவளி நாளன்று எங்கு குளித்தாலும் அது கங்கைக் குளியலுக்குச் சமம். இதனால்தான் தீபாவளி நாளன்று “கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று கேட்கின்றனர்.

 

நாடு முழுதும்  நடக்கும் மினி (Mini Kumba Mela) கும்ப மேளவின்போது அந்த ஊரில் கங்கை பாய்வதாக ஐதீகம்.

 

கங்கை நீர் எல்லா வீடுகளிலும் ஒரு சொம்பில் இருக்கும் இதைப் புனிதப்படுத்தவும், தீட்டுக் கழிக்கவும், சுத்திகரிக்கவும் இந்துக்கள் பயன்படுத்துவர்.

 

சுமேரியாவில் கிடைத்த சிலிண்டர் முத்திரைகளில் கங்கை நீர் பூமிக்கு வரும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. இதை கங்கை என்றோ அல்லது கங்கை வரும் காட்சியியைக் காப்பி அடித்து பயன்படுத்தியதாகவும் சொல்லலாம்.

எங்கை என்னும் நதி புனிதமானது என்றும் தூய்மையானது என்றும் களிமண் வடிவப் பலகைகளில் எழுதப்பட்டுள்ளது. கங்கையின் மகள் பெயர் நான்ஷி (NANSHE) என்று சொல்லி அவளுக்கு வருடம் தோறும் எரிப்டு (Eribdu) என்ற இடத்தில் விழா எடுக்கின்றனர்.  இது நாம் செய்யும் கங்கா ஆரத்தி, கங்கா மாதா விழா போன்றது. நதிகளின் தோற்றுவாயிலிருந்து படகுப் பேரணி புறப்படும்.

 

சிலிண்டர் முத்திரைகளில்,  சில படங்களில் ஒரு சொம்பு இருக்கும் அதிலிருந்து நீர் பாய்வது போலவும் காட்டப்பட்டிருக்கும். அகஸ்த்ய மகரிஷியின் கமண்டலத்திருந்து காவிரி நதி பாய்ந்ததாக நாம் கூறும் கதையை ஒத்திருக்கும் இது.

 

சுமேரியர்கள், இந்துக்களைப் போலவே நதிகளைக் கடவுளராகவே கருதினர்

 

இவையெல்லாம் மற்றொரு பெரிய வரலாற்று உண்மையையும் தெரிவிக்கிறது. அதாவது, அவர்கள் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் என்பதும் அதுவும் சரஸ்வதி நதி, நிலத்துக்கடியில் மறைந்த பின்னர் (அந்தர்வாஹினி) இந்தியாவை விட்டு வெளியேறியவர்கள் என்றும் தெரிகிறது. அது எப்படி?

 

 

இந்தியாவின் நடுவிலுள்ள மத்தியப் பிரதேச காடு மலை குகைகளில் பிம்பேட்கா (Bhimbetka Cave Paintings) முதலிய இடங்களில் 40,000 ஆண்டுகள் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைவிடப் பழமையான 50,000 ஆண்டுக்கு முந்தைய ஓவியங்கள் கிடைத்திருப்பதையும் அண்மைக்காலத்தில் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. ஆகவே இந்திய நாகரீகம் இங்கே தோன்றி இங்கேயே  வளர்ந்து உலகம் முழுதும் சென்றது உறுதியாகிறது.

 

இந்துக்கள் எங்கு குடியேறினாலும் அங்குள்ள நதிகளுக்குக் கங்கை என்று பெயர் சூட்டிவிடுவர். இலங்கையில் ஏராளமான நதிகளுக்கு கங்கை என்று பெயர். அசோக மாமன்னன், கப்பலில் கங்கை நீரை இலங்கைக்கு அனுப்பிவைத்தான். தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மீகாங் (மா கங்கா = கங்கை அன்னை), மத்திய ஆப்பிரிக்காவின் காடுகளுக்கிடையே ஓடும் காங்கோ (கங்கா) முதலிய பல நதிகள் கங்கையின் பெயரைத் தாங்கி இன்றும் ஓடுகின்றன.

 

சுமார் கி.மு.2000 ஆண்டு வாக்கில் பெரிய பூகம்பம், நிலச்சரிவு ஏற்பட்டு சரஸ்வதி நதி மறைந்தது. அத்துடன் அந்த நதிக்கரையில் தோன்றிய ஹரப்பா நாகரீகமும் மறைந்தது. அதையடுத்து ஏற்பட்ட வறட்சி, வெள்ளம் காரணமாக மக்கள் இந்தியாவுக்கு வெளியே செல்லத் துவங்கினர்.

அண்மைக் காலத்தில் நடந்த மரபியல் ஆராய்ச்சி, சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் ஐரோப்பாவில் குடியேறியதையும் காட்டுகிறது. சரஸ்வதி நதியை ரிக்   வேதம் போற்றுகிறது. இது மறைந்த பின்னரே கங்கை நதி அந்த இடத்தைப் பிடித்தது. ரிக் வேதத்தின் காலம், சிந்து வெளிக்கு (ஹரப்பா நாகரீகம்) முந்தையது என்பதை அண்மைக் காலத்தில் கிரேக்க மொழி இயல் அறிஞர் நிகலஸ் கஜானாஸ் நிரூபித்துள்ளார். அவரது மொழி இயல் ஆய்வின்படி ரிக் வேதம் கி.மு.3300க்கு முந்தையது. அதற்கு முன் ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும், ரிக் வேதம் கி.மு 4500 க்கு முந்தையது என்பதை வானியல் குறிப்புகளை வைத்து முடிவு செய்தனர்.

 

ஆக சுமேரியர்கள் கங்கை நதிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத் திருப்பதால் இவர்கள் புராண கால இஞ்சினீயர் பகீரதனுக்கு பிற்பாடு இந்தியாவிலிருந்து வெளியேறியவர்கள் என்றும் கொள்ளலாம். இமய மலை பூகம்பத்தால் அடைபட்டு திசை மாறி வீணான கங்கை நீரை திசைதிருப்பும் மாபெரும் எஞ்சினீயரிங்/ பொறி இயல் அற்புதத்தைச் செய்தவர் பகீரதன். உலகின் முதல் சிவில் எஞ்சினீயர்.

 

சுமேரியாவிலும், எகிப்திலும் கி.மு 3000 முதல் முறையான அரசுகள் இருப்பதைக் காண்கிறோம். பல வருடங்களில் அலை அலையாக இந்துக்கள் குடியேறி இருக்கலாம். ஆனால் பெருமளவு குடியேற்றம் சரஸ்வதி நதி மறைந்து,  கங்கை அந்த இடத்தைப் பிடித்த காலத்தில்தான் நடந்தது என்றும் கருதலாம்.

 

இனி கங்கை- எங்கை (GANGA=ENKI) பற்றி மேலும் சில சுவையான செய்திகளைக் காண்போம்.

 

மெசபொடோமிய புராணக் கதைகளில் படைப்புத் தெய்வம் என்றும் மனித இனத்தைக் காக்கும் தெய்வம் என்றும் எழுதியுள்ளனர். காலப்போக்கில் பல உள்ளூர் தெய்வங்களுடன் பல கதைகள் கலக்கும்போது எல்லாவற்றையும் ஒரே தெய்வத்தின்பேரில் ஏற்றி விடுவர். இதை இப்போதைய இந்து மதத்திலும் காணலாம். வட      இந்தியர்களுக்கு முருகனுக்கு வள்ளி என்ற ஒரு பெண்ணும் மனைவி என்பது தெரியாது. தென்னிந்தியர்களுக்கு ஆஞ்சநேயரின் மனைவி பற்றி தெரியாது;  வட இந்தியாவில் அவர் பிரம்மசாரி அல்ல!

 

முடிவுரை:

கங்கை, கைலாஷ் போன்ற சொற்கள், கங்கை இறங்கிவரும் காட்சி கொண்ட சிலிண்டர் முத்திரைகள், நதிகளின் தெய்வீகதன்மை, புனிதத் தன்மை, தூய்மை பற்றிய சுமேரிய நம்பிக்கைகள் ஆகியன,  சுமேரியர்களும் இந்தியாவிலிருந்து போனவர்களே என்பதை உறிதிப்படுத்தும்.

 

–subham–

 

 

.

ரிக் வேதத்தில் பழமையான மண்டலம் எது? (Post No.3713)

Compiled by London swaminathan

 

Date: 11 March 2017

 

Time uploaded in London:- 7-40 am

 

Post No. 3713

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மஹாபாரதத்தை எழுதிய வேத வியாசர் வேதங்களை நான்காகப் பிரித்தார். ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் மிகப் பழையது ரிக் வேதம். இதை வியாசர் பிரித்து வகுத்தது கி.மு..3102-க்கு முன் — அதாவது கலியுகம் துவங்குவதற்கு முன்பு—. ரிக் வேதம்தான் உலகில் பழமையான நூல். உலகின் முதல் கவிதைத் தொகுப்பு. இதை ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் ஆகியோர் கி.மு 4500 க்கு முந்தையது என்று வானியல் குறிப்புகளைக் கொண்டு நிரூபித்தனர். இன்று வரை உலகில் எவரும் அது தவறு என்று காட்ட முடியவில்லை.

 

இப்போது பன்மொழி வித்தகரும் கிரேக்க நாட்டு அறிஞருமான நிகலஸ் கஜானாஸ் எழுதிய புத்தகத்தில் இது கி.மு. 3300 க்கு முந்தையது என்று மொழியியல் ரீதியில் நிரூபித்து இருக்கிறார். முதலில் ரிக்வேதத்துக்கு கி.மு.1200 என்று சொன்ன மாக்ஸ்முல்லரும் அந்தர்பல்டி அடித்து ரிக்வேதத்தின் காலத்தை எவருமே கணிக்க முடியாது. அது கி.மு.5000 ஆகக் கூட இருக்கலாம் என்று சொன்னதை அறிஞர் உலகம் நன்கு அறியும்.

 

ரிக் வேத மந்திரங்கள் ‘’இயற்றப்பட்ட’’ (not composed) கவிதைகள் அன்று. அவை ‘’கேட்கப்பட்ட’’ (heard) துதிகள். அதாவது ரிஷி முனிவர்கள் தியானத்தின் போது — நாம் ரேடியோ அலைவரிசைக்கேற்ப ஸ்டேஷன்களின் ஒலிபரப்பைக் கேட்பது போல — தெய்வீக அலைவரிசியில் கேட்ட – கண்டுபிடித்த (found) — மந்திரங்கள். இதனால் ரிஷிகளுக்கு மந்திர த்ருஷ்டா — மந்திரங்களை மனக் கண்ணில் பார்த்தவர்கள்/கண்டுபிடி த்தவர்கள் என்றும், வேதங்களுக்கு ச்ருதி (கேள்வி/கேட்கப்பட்டவை) என்றும் அறிஞர்கள் பெயரிட்டுள்ளனர்.

 

ரிக் வேதம் என்பதே உலக மஹா அதிசயம் — உலகில் இவ்வளவு பிரம்மாண்டமான கவிதைத் தொகுப்பை (anthology) எவரும் 6000 வருடங்களுக்கு மேல் அட்சரம் மாறாமல் வாய்ச் சொல் மூலம் பரப்பியதும் (word of mouth) இல்லை – எழுதப்பட்ட இலக்கியங்களில் இதற்கு இணையான சமய இலக்கியமும் இல்லை- உலகில் வெளியான கவிதைத் தொகுப்புகளில் இதை மிஞ்சிய கவிதைத் தொகுப்பும் இல்லை. ஜில்காமேஷ் (Gilgamesh) போன்ற இலக்கியத்தில் – அல்லது எகிப்து நாட்டுப் பிரமிடுகளின் (Pyramid Texts) சுவர்களில், மரணப் புத்தகத்தில் (Book of Dead) காணப்படும் சாதாரண புராணக் கதைகள் போலன்றி- மிக உயரிய கருத்துக்களைக் கொண்டுள்ளது எல்லோரும் வாழ்க, இன்புற்று வாழ்க என்ற கடைசி மந்திரத்துடன் முடிகிறது ரிக் வேதம்!

உலகில் முதல் முதலில் நானூறுக்கும் மேலான    கவிஞர்களின் (Over 400 poets) பட்டியலைக் கொடுத்ததும் இன்டெக்ஸ் (Index) போட்டதும் (அணுக்ரமணி) ரிக் வேதத்தொகுப்புதான் இதைப் பிற்காலத்தில் தமிழ்ச்  சங்க இலக்கியத்தைத் தொகுத்தவர்கள் அப்படியே பின்பற்றியுள்ளனர் என்பது என் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ரிக்வேதத்தில் பெயர் தெரியாத ரிஷிகளின் (anonymous) கவிதைகளுக்கு அதில் உள்ள ஒரு வரியையே (line or expression) கவிஞரின் பெயராகக் கொடுப்பர். இதை அப்படியே தமிழ்க் கவிதைத் தொகுப்பாளரும் பின்பற்றினர்—(தேய்புரிக்கயிறு, செம்புலப்பெயல் நீரார்) —(இது பற்றி முன்னரே விரிவாக எழுதியுள்ளேன்)

 

 

பத்து மண்டலங்கள்

 

ரிக்வேதம் பழமையான நூல் மட்டுமல்ல. மிகப் பெரிய கவிதைத் தொகுப்பும் கூட. இதில் 1028 துதிகள் (சூக்தம்) உள்ளன. அவற்றில் பத்தாயிரத்துக்கும் மேலான மந்திரங்கள் இருக்கின்றன. இதை பத்து மண்டலங்களாகப் பிரித்தனர். அதில் முதல் மண்டலமும், பத்தாவது மண்டலமும் பல உதிரி மந்திரங்களின் தொகுப்பு. பொதுவாக அறிஞர்கள் இதை பிற்காலப் பகுதியாகவும் இடைப்பட்ட மண்டலங்களை ( 2 முதல் 9 வரை) பழைய பகுதி என்றும் கருதுவர்.

 

(எனது கருத்து: முதல் மண்டலத்திலும் பத்தாவது மண்டலத்திலும் உள்ள அத்தனை பாடல்களும் புதியன அல்ல. அவறில்தான் கல்யாண மந்திரங்களும், இறுதிச் சடங்கு மந்திரங்களும் உள்ளன. எல்லாவற்றையும் பாடி முடித்தபின்னர் கல்யாணம் பற்றியும், மரணம் பற்றியும் பாடிநர் என்பது கேலிக்குரியது. ஆனால் இம்மண்டலங்களில் பல புதிய பாடல்கள் இருப்பது உண்மையே)

 

 

இடைப்பட்ட எட்டு மண்டலங்களில் 2 முதல் 7 வரை குடும்ப மண்டலங்கள் (Family Mandalas). அதாவது ஒவ்வொரு ரிஷியின் பரம்பரையிலும் வந்த ரிஷிகளின் பாடலகளை வியாசர் அழகாகத் தொகுத்து வைத்திருக்கிறார். இதில் எது பழையது? என்பது நீண்ட காலமாக ஆராயப்படும் விஷயம். அண்மைக் காலத்தில் தலகரி (Shrikant G. Talageri) என்ற அறிஞர் எது பழையது என்ற வரிசைக் கிரமத்தை அளித்துள்ளர். அதை நிகலஸ் (Nicholas Kazanas) ஏற்றுக் கொண்டு வேறு சில விஷயங்களையும் முன்வைக்கிறார். அது என்ன?

 

தலகரியின் ஆராய்ச்சியில் கண்ட வரிசை

 

மிகப்பழைய மண்டலங்கள் — 6, 3, 7

 

நடு மண்டலம் – 4, 2 (+ முதல் மண்டலத்தின் சில பாடல்கள்)

 

இதற்கடுத்தது – 5 (+ முதல் மண்டலத்தின் சில பாடல்கள்)

 

கடைசி – 1, 8, 9

 

புதியது – 10

 

துதிகளில் வரும் மன்னர்களின் பெயர்கள், ரிஷிகளின் குடும்பம் ஆகியவற்றைக் கொண்டு தலகரி இவ்வாறு வரிசைப்படுத்தினார்.

இது பற்றி நிகலஸின் கருத்துரை:

 

தலகரி  கூறுவதைக் கொண்டுமட்டும் எதையும் உறுதிபடச் சொல்வதற்கில்லை. ஏனெனில் பழைய கவிஞர்கள் பயன்படுத்திய சொற்களை, வரிகளை, கற்பனைகளை, உவமைகளைப் பிற்காலப் புலவர்களும் Imitate காப்பி அடிக்கலாம்.

 

கிரேக்க மொழியில் உள்ள ஆர்பிக் (orphic hymns)  பாடல்கள் முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டன. ஆயினும் அவற்றின் பாணி style மிகப் பழைய பாடல்களை ஒத்து இருக்கின்றன. இதை எனக்கு முன்னரே ஹாப்கின்ஸ் (E W Hopkins) அவர்களே 1896 ஆம் ஆண்டில் சுட்டிக் காட்டிவிட்டார். புக ழ்பெற்ற பழங்கால புலவர்களின் பெயரகளைப் பிற்காலத்தவர் வைக்கக்கூடும்.

 

(தமிழிலும் இத்தகைய குழப்பம் உண்டு. பல அவ்வையார்கள், பல பரணர்கள், பல கபிலர்கள் உண்டு. சிலர் பல நக்கீரர்கள் உண்டு என்றும் கருதுவர்!)

 

பல ரிஷிகளின் பெயர்கள், அதிலுள்ள கடவுளின் பெயர்களில் உள்ளன

 

10-158 (கடவுள் காற்றுதேவன்; கவிஞர் காற்றாடி/வாதாயன)

10-158 (கடவுள்- சூர்ய தேவன்; கவிஞர் சூர்யக் கண்ணன்/சக்ஷுஸ் சூர்ய)

10-14 (யமன்; கவிஞர் யமன்)

9-107 (சப்தரிஷி; சப்தரிஷி )

8.27.8 (வைவஸ்வத மனு வைவஸ்வத மனு; )

 

(நான் முன்ன்ரே குறிப்பிட்டது போல சங்கத் தமிழ் கவிதைத் தொ குப்பாளர்களும் பெயர் தெரியாத புலவர்களுக்கு அவர் சொன்ன வாசகங்களையே பெயராகச் சூட்டிவிட்டனர். இப்படி 20 க்கும் மேலான விநோதப் புலவர் பெயர்களை நான் முன்னரே பட்டியலிட்டுள்ளேன்)

 

ஐதரேய பிராமணம் என்னும் நூலே ரிக்வேதப் புத்தகத்தில் கீழ்கண்ட பாடலகள் பிற் சேர்க்கை என்று சொல்கிறது:

3-30, 31, 34, 36, 38, 48

 

(பிற்சேர்க்கை என்றால் எவ்வளவு காலத்துக்குப் பின் என்று யாரும் சொல்லவில்லை. நிகலஸின் கருத்துப்படி வேதங்கள் கி.மு.3300; அதாவது சிந்துவெளி நாகரீகத்துக்கு முன் என்று அவரே தெளிவாகச் சொல்கிறார்)

 

ஆனால் தலகரி சொல்லுவது போல இவ்வளவு பாடல்களும் 2000 ஆண்டுக் கால வீச்சில் பாடப்பட்டவை என்பதை நான் ஏற்கமாட்டேன். மொழியியல் ரீதியில் பழைய பாடலுக்கும் புதிய பாடல்களுக்கும் வேறுபாடு இருப்பது உண்மையே. ஆயினும் இவ்வளவு கால இடைவெளி இருக்காது.

(எனது கருத்து: தமிழ் சங்க இலக்கியத்தின் 2000 பாடல்கள் — சுமார் 30,000 வரிகள்— உருவாக சுமார் 400 ஆண்டுகள் ஆயிற்று. நான் மொழியியல்  ரீதியில் மூன்று தமிழ் சங்க காலக் கணக்கீடு தவறு என்று முன்னரே காட்டி இருக்கிறேன். சங்க இலக்கியத்தில் மூன்று தமிழ் சங்கங்களின் சில புலவர் பாடல் இருப்பதால் மூன்று தமிழ் சங்ககங்களும் 300, 400 ஆண்டு இடைவெளிக்குள் தான் இருந்திருக்க வேண்டும் என்று காட்டியுள்ளேன். இதே போல தொல் காப்பியத்தின் காலம், திருக்குறளின் காலம் என்பனவற்றையும் மொழியியல் ரீதியில் அணுகி எழுதியுள்ளேன்)

 

ரிக்வேதம் கி.மு.3300க்கு முன் முடிக்கப்பட்டிருக்கும். நான் சொல்லும் கால வரிசை:-

முற்கால மண்டலங்கள் – 3, 6. 7

நடுக் கால மண்டலங்கள் – 2, 4

கடைசி  மண்டலங்கள் – 5,1,8,9, 10

 

என்று நிகலஸ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

 

தமிழ் மொழி பற்றிக் கதைக்கும், பிதற்றும் பேர்வழிகள் உலக மொழிகளை மற்றவர்கள் எப்படி அறிவியல் ரீதியில் அணுகுகிறார்கள் என்பதைப் பயிலுதல் நலம் பயக்கும். தமிழும் சம்ஸ்கிருதமும் அறியாதோர், பிற மொழிகளின் இலக்கியம் பற்றிப் படிக்காதோர் — முதலில் அறிவை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்.

(Source:- Vedic and Indo-European Studies by Nicholas Kazanas, Aditya Prakashan, New Delhi, year 2015)

 

–சுபம்–