Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
பாக்யா
16-9-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பதினாறாம் கட்டுரை :அத்தியாயம் 432
ஐஸன்ஹோவர் பாக்ஸ்!
ச.நாகராஜன்
“எது முக்கியமோ அது பல சமயங்களிலும் அவசரமாக இருப்பதில்லை.
அவசரமாக இருப்பதோ சில சமயங்களில் மட்டுமே முக்கியமானதாக இருக்கிறது” – ஐஸன்ஹோவர் – அமெரிக்காவின் 34வது
ஜனாதிபதி
அவசரமான வேலைகள்
அவசரமில்லாத வேலைகள்
செய்
தானே செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிடு. உடனடியாகச்
செய்
முடிவெடு
உடல் பயிற்சி, குடும்பத்துடன் இருத்தல், நீண்ட காலத்
திட்டங்களை வகுத்தல் ஆகியவற்றைப் பட்டியலிடு. முடிவெடு
பிரித்து விடு
அடுத்தவர்கள் செய்யக் கூடிய வேலைகளைப் பட்டியலிடு.
உரிய நபர்களிடம் பிரித்துக் கொடு
நீக்கி விடு
வெட்டி அரட்டை, தேவையற்ற டி.வி. நிகழ்ச்சிகளை இனம்
கண்டு அவற்றை நீக்கி விடு
உலகத்திலேயே பெருமைக்குரிய வேலை எது? உலகத்திலேயே கஷ்டமான
வேலை எது? இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான். அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பது
தான் அது. காலையில் எழுந்ததிலிருந்து உலகப் பிரச்சினைகள் அனைத்தும் வரிசையாக
வரும். அனைத்திற்கும் சரியான தீர்வுகளை உடனுக்குடன் வழங்க வேண்டும்! போரை
உண்டாக்குவதா, அல்லது சமாதானத்தை நிலை நிறுத்துவதா இரண்டிற்கும் அவரே பொறுப்பு.
அவர் ஒரே ஒரு பட்டனை அமுக்கினால் போதும் அணு ஆயுதப் போர் உருவாகும்!
இருநூறு வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில்
உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வரும் ஜனாதிபதி பதவியை ஏற்பது என்பது
சாதாரணமானதல்ல, அவரே முப்படைகளுக்கும் தலைவர்.
இப்படிப்பட்ட பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றி உலகப்
புகழைப் பெற்றவர் ஜனாதிபதி ஐஸன்ஹோவர். (தோற்றம் 14-10-1890 மறைவு 28-3-1969) .
1953ஆம் ஆண்டு முதல் 1961 முடிய அமெரிக்காவின் 34வது ஜனாதிபதியாகப் பதவி வகித்த
அவர் காலத்தில் தான் விண்வெளிப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. தென்கொரியப் போர்
நடந்தது. மத்திய கிழக்கு உடன்படிக்கை உருவானது. சீனப் பிரச்சினை ஏற்பட்டது.
இவற்றை எல்லாம் அவர் எப்படி சமாளித்தார்? இதற்கு விடை அவர்
தனக்காகவே உருவாக்கிக் கொண்ட ஐஸன்ஹோவர் பாக்ஸ் தான். இந்த வெற்றிக்கான பெட்டியை
அனைவருமே பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தப் பெட்டியில் நான்கு பகுதிகள் உண்டு.
அர்ஜெண்ட் என்ற அவசரமான பாகத்தில் இரண்டு பகுதிகள் உண்டு.
செய் அல்லது அடுத்தவருக்குப் பிரித்து விடு. (Do and Delegate). அடுத்து அவசரம் இல்லாதது என்ற
பாகத்திலும் இரு பகுதிகள் உண்டு. முடிவெடு அல்லது வேண்டாம் என்று நீக்கி விடு (Decide
and Delete).ஆக இப்படி மொத்தம் நான்கு பகுதிகள் அந்தப் பெட்டியில் உண்டு.
தானே செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் ‘செய்’ என்ற
பகுதியில் இடம் பெறும். ஜனாதிபதி தயாரித்துப் பேச வேண்டிய முக்கிய உரையைத்
தயாரிப்பது அல்லது பேட்டி கொடுப்பது போன்றவை இதில் வரும்.
பல்வேறு வேலைகளுக்கான சரியான நபர்களை இனம் காண பேட்டியை
எடுப்பது, அவர்களைத் தேர்ந்தெடுப்பது, ஜனாதிபதியின் வேலைகளைத் தரம் பிரித்து நேரம்
ஒதுக்குவது போன்றவை உதவியாளர்களால் செய்ய முடியும். அதை உரிய நபர்களிடம்
ஒப்படைப்பது ‘பிரித்து விடு’என்ற
பகுதியில் இடம் பெறும்.
இரண்டாம் பாகத்தில் அவசரம் இல்லாதது என்பதில் எப்போது உடல்
பயிற்சி செய்ய வேண்டும், குடும்பத்தினருடன் எப்போது நேரத்தைச் செலவழிக்கலாம்,
நீண்ட கால உத்தியாக நாட்டிற்காக என்னென்ன திட்டங்களைத் தீட்டி பயன்பெறச் செய்யலாம்
என்பன போன்றவை இடம் பெறும். இவை பற்றி உரிய முடிவெடுக்க வேண்டும்; முடிவெடுத்ததை
நிறைவேற்ற வேண்டும்.
அவசரம் இல்லாதது என்பதில் உள்ள நீக்கி விடு என்ற பகுதியில்
டி.வி பார்ப்பது, தேவையற்ற தபால்களைப் பார்ப்பது, வெட்டி அரட்டை அடிப்பது
போன்றவற்றை இனம் கண்டு அவற்றை நீக்கி விட வேண்டும்.
இப்படி ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு அன்றாடம் இந்த
‘அஞ்சறைப் பெட்டியில்’ (
கடுகு, ஜீரகம், மிளகு, மஞ்சள், வெந்தயம் போடும் அஞ்சறைப் பெட்டி போல இருந்தாலும்
இது நான்கு உள்ளறைகளைக் கொண்டதால் இதை நான்கறைப் பெட்டி என்றே சொல்லலாம்)
செய்யவேண்டியவற்றை அவர் குறித்து வைத்துக் கொண்டார். வெற்றியும் பெற்றார்.ஏராளமான
வேலைகளைச் செய்யும் பொறுப்பில் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த ஐஸன்ஹோவர் பாக்ஸ்
உத்தியை தனக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்படி தனக்கென ஒரு முன்னேற்றப் பாதைக்கான உத்தியைப் பல
வெற்றியாளர்களும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவின் சிறந்த சிந்தனையாளரும், விஞ்ஞானியும்,
அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவருமான (Founding father) பெஞ்சமின்
ஃபிராங்ளின் நேரத்தைப் பொன் போல மதித்தவர். அவர் தனக்கென ஒரு உத்தியை
உருவாக்கிக்கொண்டார். இதை பெஞ்சமின் ஃப்ராங்க்ளினின் 13 பண்புகள் திட்டம் (Franklin’s
13 Virtues System) என்று சொல்லலாம்.
தனது குணாதிசயத்தை அனைவரும் மெச்சும் வண்ணம் உருவாக்கிக்கொள்ள அவர் 13 பண்புகளை இனம் கண்டு ஒவ்வொரு வாரமும் ஒரு பண்பை வளர்ப்பதில் கவனம் செலுத்தி அதில் தவறினால் ஏன் தவறினோம், எத்தனை முறை தவறினோம் என்பதை அன்றாடம் இரவில் மதிப்பீடு செய்து தன்னை மேம்படுத்திக் கொண்டார். ஒரு வருடத்தின் 52 வாரங்களில் 13 வாரங்கள் என்பது நான்கு முறை வரும் என்பதால் இப்படி நான்கு முறை அவர் தன்னை மதிப்பீடு செய்து கொண்டார்; உயர்ந்தார்!
அந்த 13 பண்புகளின் பட்டியல் இதோ:
1) மிதமாக இருத்தல் (Temperance) உண்பதிலிருந்து எதிலும்
அளவுடன் இரு. 2) மௌனம் (Silence) மற்றவருக்கும்
உனக்கும் பயனளிக்காத சொல் எதையும் பேசாதே
3) ஒழுங்கு முறை (Order) எதிலும்
ஒரு ஒழுங்கைக் கடைப்பிடி; அது அதை அதனதன் இடத்தில் வை. ஒவ்வொன்றிற்கும் உரிய
நேரத்தை ஒதுக்கு
4) உறுதி எடுத்தல் (Resolution) எது
எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய உறுதி பூண்; உறுதி பூண்டதை செய்து முடி.
5) சிக்கனமாய் இரு (Frugality) உனக்கும்
மற்றவருக்கும் பயனற்றது என்றால் அதற்காகச் செல்வழிக்காதே; எதையும் வீணாக்காதே
6) உழைப்பு (Industry) நேரத்தை
வீணாக்காதே. பயனுள்ள எதாவது ஒன்றில் ஈடுபடு; தேவையற்ற செயல்களை இனம் கண்டு அவற்றை
நீக்கு 7)நேர்மை (Sincerety) எதிலும்
நேர்மையாக இரு. செய்வதைச் சொல்; சொன்னதைச் செய்; எவரையும் ஏமாற்றாதே
9) எதிலும் எல்லை மீறாதே (Moderation) எதிலும்
அளவோடிரு; எல்லை தாண்டிப் போகாதே. உனக்கு ஏற்படும் காயங்களைப் பொறு; தேவைக்கு மேல்
வருத்தப்படாதே.
10) சுத்தம் (Cleanliness) எதிலும்
சுத்தமாயிரு.உடல், உடை, இருப்பிடம் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்
11) சாந்தம் (Tranquility) சிறு
பிரச்சினைகளால் மனம் தளராதே. தவிர்க்கக் கூடிய பிரச்சினைகள், தவிர்க்க முடியாத
விபத்துக்களில் அமைதியைக் கடைப்பிடி.
12) தூய்மை (Chastity) செக்ஸ் உறவை சந்ததி
உருவாக்கவும், உடல்நலத்தைப் பேணும் வகையிலும் மட்டுமே கொள். உனக்கோ மற்றவருக்கு
ஊறு விளைவிக்கும் வகையிலோ அல்லது உன் மதிப்பையோ, மற்றவர் மதிப்பையோ கெடுக்கும்
விதத்தில் அதைக் கொள்ளாதே.
13) எளிமை (Humility) இயேசு,
சாக்ரடீஸ் போல இரு.
இதற்கான
வாராந்திர அட்டை ஒன்றைத் தயார் செய்து அவர் தன்னை தினமும் மதிப்பீடு செய்து
ஒவ்வொரு குணத்திலும் உயர்ந்து கொண்டே சென்றார்.
இந்த 13 குணங்களை ஒவ்வொருவரும் தனக்குத் தக தனக்கு வேண்டிய
குணாதிசய திட்டமாக மாற்றிக் கொள்ளவும் செய்யலாம். உதாரணமாக ஃப்ராங்க் பெட்கர் (Frank
Bettger) என்ற விற்பனையாளர் தனக்கு வேண்டியபடி இதை மாற்றி அமைத்து
உலகின் நம்பர் ஒன் சேல்ஸ்மேன் என்ற உயர்நிலையை அடைந்தார்.
இப்படி ஒவ்வொரு வெற்றியாளரும் எதனால் வெற்றி பெற்றார்
என்பதைத் தெரிந்து கொண்டு நாமும் அதை அப்படியே கடைப்பிடிக்கலாம்; அல்லது அவர்களது
உத்தியைத் தெரிந்து கொண்டு நமக்கு உகந்த முறையில் மாற்றிக் கொள்ளலாம்.
இப்படி முன்னோர் காட்டிய வெற்றிப்பாதையில் பீடு நடை போட்டு
வெற்றி பெற்றோர் ஏராளம்.
முயற்சியும் முனைப்புமே முக்கியம்.
வெற்றி பெறலாமே!
அறிவியல் அறிஞர் வாழ்வில்
.. ..
ப்ளூடோ
கிரகத்தைச் சுற்றி வரும் உப கிரகத்தை 1978ஆம் ஆண்டு கண்டுபிடித்தவர் அமெரிக்க
வானவியல் நிபுணரான ஜேம்ஸ் கிறிஸ்டி (James Christie) என்பவர்.
ஒரு நாள் கிறிஸ்டி தன்னிடம் குவிந்து கிடந்த ப்ளூடோ கிரகம் பற்றிய தனது பழைய
போட்டோக்களை எடுத்து உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். அவை தப்பாக
எடுக்கப்பட்ட போட்டோக்கள் என்று அவரால் ஒதுக்கி வைக்கப்பட்டவை. ஏனெனில் அந்த
கிரகம் ஒரு பக்கத்தில் நீண்டு விரிந்தது போலத் தோற்றமளித்ததால் அது போட்டோ
எடுக்கப்பட்ட போது நடந்த தவறு என்று அவர் நினைத்திருந்தார்.
ஆனால் உன்னிப்பாக அவற்றை இப்போது கவனித்துக் கொண்டிருந்த
அவருக்கு மின்னல் போல ஒரு கருத்துத் தோன்றியது. அந்த நீண்டு கிடந்த பகுதி
உண்மையில் அதைச் சுற்றி வரும் சந்திரன் என்றும் அது சற்று மறைவாக இருந்ததானால் ஒரு
பகுதி மட்டும் போட்டோவில் விழுந்து அப்படி கிரகத்தை நீட்டித்துக்
காண்பித்திருக்கிறது என்றும் அவர் புரிந்து கொண்டார். பிறகென்ன?
மீண்டும் நன்கு ஆராய்ந்ததில் அவரது ஆய்வின் முடிவில் அவரது
கருத்து உறுதியானது; ப்ளூடோ கிரகத்தைச் சுற்றி வரும் புது சந்திரன்
கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு சரான் (Charon) என்று
பெயர் சூட்டப்பட்டது. கிரேக்க புராணத்தில் ஸ்டிக்ஸ் (Styx) என்ற
நதியின் வழியே ஆன்மாக்களை ஹேடஸ் (Hades) என்ற
இடத்திற்கு இட்டுச் செல்லும் படகுக்காரனின் பெயர் தான் சரான். ஆனால் இந்தப் பெயர்
தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம் கிறிஸ்டியின் மனைவியின் பெயர் சார்லின் (Charlene). அவரைக்
கௌரவிக்கும் வண்ணம் சரான் என்ற இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு ப்ளூடோ
கிரகத்தைச் சுற்றி வரும் அந்தச் சந்திரனுக்குப் பெயராகச் சூட்டப்பட்டது.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
The oldest
book in the world is Rig Veda if we accept the date of Herman Jacobi and Bala
Gangadhara Tilak who independently dated Rig Veda between 4000 and 6000 BCE on
the basis of astronomical references in the Rig Veda.
BARC carbon
dating of underground water in the Sarasvati River basin and NASA’s images of dry
beds of Sarasvati river also scientifically proved a date around or before 2000
BCE for the Rig Veda.
The Aitareya
Brahmana and the Aitareya Aranyaka of the RV have some references to a teacher
named ‘Mr.Gold tooth’ – Hiranya Dant. Keith and Macdonell in their 1912
publication of the two volume Vedic Index also noticed it and wrote that it was
a reference to gold tooth. In spite of this, encyclopaedias mentioned Etruscans
were the first in fixing golden teeth.
Gold was
widely used in India which is proved by the innumerable references in the Vedic
literature. Keith and Macdonell point out rich Vedic Hindus have Gold cups, ear
rings, neck plates, gold tooth, coins etc.
Even
Herodotus mentioned about the mysterious ‘Giant Ants’ entering the ground to
pick up gold in India. He mistook the name of term for miners as Giant Ants.
Indians are very familiar with Fish people (matsya desa) sugarcane people
(Ikshvakus), Kumba karnas, Lamba Karnas etc. Poor Herodotus didn’t know it.
Following
pages were taken from Vedic Index. Hindus must rewrite the history of science.
NISKADANTA – DENTAL – DENTISTRYJATA RUPA = GOLDCANDRA = GOLD
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
பாக்யா 1-9-19
இதழில் அறிவியல் துளிகள் பகுதியில்
வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பதினைந்தாம் கட்டுரை – அத்தியாயம் 431
ஜப்பானியப் பெண்மணியான மாரி காண்டோ சந்தோஷம் அடைவதற்கான
வழிமுறையைக் காண்பித்துப் புகழ் பெற்ற நிலையில், இன்னொரு பெண்மணி பழக்கவழக்கத்தை
நல்ல விதமாக மாற்றினால் சந்தோஷம் அடையலாம் என்கிறார்.
சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நம் கையில் தான்
இருக்கிறது, வாரீர், அது சுலபமானதும் கூட என்கிறார் அமெரிக்கப் பெண்மணியான க்ரெட்சென்
ரூபின் (Gretchen Rubin)
இவரது பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பல லட்சம் பிரதிகள்
விற்பனையாகி விட்டன; முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இவரது முக்கியமான புகழ்பெற்ற இரு புத்தகங்கள் : The Four
Tendencies, Better Than Before ஆகியவை.
க்ரெட்சென் மிஸௌரியில் உள்ள கான்ஸாஸ் நகரில் 1965ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் 14ஆம் தேதி பிறந்தார். இளமையிலிருந்தே ஒருவரின் பழக்கவழக்கங்கள்
அவர் வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஆராய ஆரம்பித்தார்.
சட்டம் படித்து பிரபல நீதிபதி ஒருவரிடம் வேலை பார்த்த அவர் பழக்க வழக்கங்களைப்
பற்றிய தனது கண்டுபிடிப்புகளை புத்தக வடிவில் தந்ததோடு அதற்கான கருத்தரங்கம்,
பயிற்சி உள்ளிட்டவற்றை நடத்த ஆரம்பித்தார். மக்கள் ஆவலுடன் அவர் சொல்வதைக்
கேட்டுத் தங்களுக்கு உதவாத பழக்கங்களை உதறி விட்டுத் தங்களை மாற்றிக் கொள்ள
ஆரம்பித்தனர்.
மனிதனின் அன்றாட வாழ்க்கை 40 விழுக்காடு பழக்கத்தின்
அடிப்படையிலேயே அமைகிறது என்கிறார் க்ரெட்சென்.
மனிதர்கள் ஒருவர் போல இன்னொருவர் இல்லை; ஆக இவர்கள் தங்களை
மாற்றிக் கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால் முதலில்
தாங்கள் எந்த வகையைச் சேர்ந்தவ்ர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கிறார் க்ரெட்சென்.
UPHOLDER
(திட்டமிட்டு உயர்பவர்)
இந்த வகை மனிதர்களுக்கு தாங்கள் என்ன செய்யப்போகிறோம் எப்போது
செய்யப் போகிறோம் என்ற திட்டம் மிகவும் முக்கியம். காலை முதல் இரவு வரை, திங்கள்
முதல் ஞாயிறு வரை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய திடமான திட்டம் கொண்ட
இவர்களுக்குச் சற்று தூண்டுதல் தேவை.
தங்களது உள்ளார்ந்த விருப்பங்களை
நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றால் இவர்கள் எப்படியாவது உந்தப் பட வேண்டும்.
தங்களின் செயல்பாடுகளை இவர்கள் அவ்வப்பொழுது மதிப்பீடு செய்து கொண்டே
இருப்பார்கள். இவர்கள் வெற்றி பெற ஒரு சிறந்த உத்தி இவர்கள் இன்னொருவருடன் கூட்டு
சேர்வது தான். அடிக்கடி கூட்டாளியால் உந்தப்பட உந்தப்பட இவர்கள் முன்னேறலாம்.
தங்கள் வாழ்க்கை சிறப்பதைக் கண்டு ஆனந்தம் அடையலாம்.
QUESTIONER
(கேள்வி கேட்பவர்)
எதையும் கேள்வி கேட்டுத் தெளிந்து கொண்ட பின்னரே செயலைச் செய்ய
முற்படும் இவர்களுக்கு எதிலும் தெளிவு தேவை. எதைச் செய்ய வேண்டும், எதற்காகச்
செய்ய வேண்டும் – இது தெரியாவிட்டால் இவர்கள் ஒன்றையும் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கான
சரியான உத்தி மேற்பார்வையிடல் (Monitoring) தான்!
தனக்குத் தானே கூட இவர்கள் அவ்வப்பொழுது தங்களைச் சரி பார்த்துக் கொண்டால்
இவர்களுக்கு அமைவது சந்தோஷமான வாழ்க்கையே. எதிலிருந்தும் தப்பிக்கும் வழியைப்
பார்ப்பது இவர்கள் பழக்கம்; அதைக் கண்காணித்து அலசி ஆராய்ந்தால் போதும் இவர்கள்
தங்களது கெட்ட பழக்க வழக்கங்களை விட்டுவிட்டு வெற்றி பெறலாம்.
உடல் பயிற்சி செய்வது அவசியம் தான், எனக்கும் அது
பிடிக்கும்; ஆனால் வெளியில் ஒரே குளிராக இருக்கிறதே – இது தான் இவர்களின் தப்பிக்க
முயலும் வழி. இதை உன்னிப்பாகப் பார்த்துத் தவிர்த்தால் இவர்கள் வெற்றி நிச்சயம்.
OBLIGER
(சொன்னால் கேட்பவர்)
இந்த வகை மனிதர்கள் கணக்குக் காட்டும் பொறுப்புடமை என்ற
பழக்கத்தை மேற்கொண்டால் அவர்களின் வாழ்க்கை மாறும். கெட்ட பழக்கத்திலிருந்து
மீண்டு வர கடமை பற்றிய பொறுப்புணர்வு தேவை. எந்த காரியத்தை எப்போது முடிக்க
வேண்டும், அதற்கு உதவுபவர் யார், மருத்துவரா, பயிற்சியாளரா, அல்லது நண்பர்களா, (ஏன்
குழந்தைகளாகக் கூட இருக்கலாம்) – அவர்களை இனம் கண்டு இவர்கள் முன்னேறலாம்.
தங்களுக்காக இல்லாதது போலவும் மற்றவர்களுக்காக செய்வது போலவும் இவர்கள்
சொல்வார்கள் – குழந்தை பிறக்கட்டும் பார், சிகரட் பிடிப்பதை நிறுத்தி விடுவேன்! -இது
இவர்களின் போக்கு.
இவர்களுக்கு
கண்காணிப்பும் மேற்பார்வையும் தேவை. இவர்களைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதை
முக்கியமாகக் கவனிக்க வேண்டும். நல்ல நட்பு, நல்ல சுற்றத்தார் என்ற வட்டத்தை
அமைத்துக் கொண்டால் போதும் வெற்றிகரமான சந்தோஷ வாழ்க்கை இவர்களுக்கு அமைவது
நிச்சயம். இவர்களுக்கு ஊக்குவிக்க அவ்வப்பொழுது ஒரு பாராட்டு விருந்து தேவை.
REBEL
(புரட்சியாளர்)
எதிலும் புரட்சியை விரும்பும் இவர்களின் முதல் ஆசை தன்னை
அனைவரும் மதிக்க வேண்டும் என்பது தான். எதிலும் தெளிவு தேவை என்பதால் எதற்காக, ஏன்
என்ற கேள்விகளுக்கு இவர்கள் விடை கண்டால் போதும், செயல் பட ஆரம்பிப்பார்கள்.
எதையாவது செய்யச் சொன்னால் அதற்கு உடனே மறுப்பு தெரிவிக்கும் சுபாவத்தை இயல்பாகவே
கொண்டிருக்கும் இவர்களுக்கு, திட்டமிடல், கணக்குக் காட்டல் உள்ளிட்ட எதுவும்
வேலைக்கு ஆகாது. எதையும் வித்தியாசமாகச் செய்ய விரும்பும் இவர்களுக்கு காரண காரியத்துடன்
எதையும் விளக்கினால் தங்கள் பழக்க
வழக்கங்களை மாற்றிக் கொண்டு இவர்கள் வெற்றி பெறுவார்கள்.
இனி பிடிவாதமாக நம்மை ஆட்டிப் படைக்கும் கெட்ட
பழக்கங்களிலிருந்து எப்படி விடுபடுவது என்பதையும் நன்கு ஆராய்ந்து 21 உத்திகளை
க்ரெட்சென் நமக்கு வழங்குகிறார்.
நான்கு வகை மனிதர்களில் நாம் எந்த வகை என்பதை நமக்கு நாமே
கேட்டுத் தெரிந்து கொண்டால் இந்த உத்திகளில் நாம் முன்னேறுவதற்கான வழிகளைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
சந்தோஷமான வாழ்க்கைக்கு அடிப்படையானவை நல்ல பழக்க வழக்கங்களே.
அவற்றைக் கைக்கொள்வதற்கான உத்திகளில் முக்கியமான சில:
முதலில் நான்கு வகை
மனிதர்களில் நீங்கள் எந்த வகை என்பதைக் கண்டுபிடியுங்கள்.
எது உங்களுக்கு உதவும் வழி
என்பதை நிர்ணயித்துக் கொள்ளுங்கள் (அடுத்தவருக்கு உதவும் ஒரு வழி உங்களுக்கு உதவ
வேண்டும் என்பதில்லை)
பழக்க வழக்கங்களை அன்றாடம்
மேற்பார்வையிடுங்கள்
நல்ல பழக்கங்களுக்கான
அஸ்திவாரம் அமையுங்கள்
அதற்கான திட்டத்தை வகுத்துக்
கொள்ளுங்கள் (‘புரட்சியாளர்களுக்கு’ இது
உதவாது)
கணக்குக் காட்டும் பொறுப்பை
– கடமைப் பொறுப்பை கடைப்பிடியுங்கள் (‘சொன்னால் கேட்பவருக்கு’ இது
சந்தோஷமாக இருக்கும்)
பழக்கவழக்க மாற்றத்தை
மேற்கொள்ளும் முதல் வாய்ப்பைப் பாருங்கள்; அதைப் பயன்படுத்துங்கள். தொடர்ந்து
வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்
தப்பிக்க வழியைக்
கண்டுபிடிக்கும் மனப்பான்மை பற்றி கவனத்தோடு இருங்கள்
உங்கள் கவனத்தைச் சிதற விடுபவை எவை என்பதைக்
கண்டு பிடித்து அவற்றின் மீது கவனமாக இருங்கள்
மாறிய வாழ்க்கை முறை
சந்தோஷத்தைத் தருவதாக இருப்பின் உடனடியாக உங்களுக்கு நீங்களே ஒரு பாராட்டு
விருந்தை அளித்துக் கொள்ள மறவாதீர்கள். தொடர்ந்து முன்னேறுங்கள்
உங்களுக்கு உதவும்
கூட்டாளியுடன் சேருங்கள்
எதிலும் தெளிவாக இருங்கள்
உங்களின் தனி அடையாளத்தை
உறுதிப் படுத்துங்கள்
தேவையற்ற பழக்கங்களை அகற்ற ஒரு தினசரி டயரி கூட
ஏற்படுத்திக் கொண்டு நமது முன்னேற்றத்தைப் பதிவு செய்து வரலாம்.
ஆயிரக்கணக்கானவர்கள் உலகெங்கும் இந்த உத்திகளால் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் போது நம்மால் முடியாதா என்ன?
அறிவியல் அறிஞர் வாழ்வில்
.. ..
ஆடிஸம் (Autism)
என்னும் தன் பித்த நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர் பிரபல
அறிவியல் பெண்மணியான டெம்பிள் க்ராண்டின் (Temple
Grandin). 1947, ஆகஸ்ட் 29ஆம் தேதி பிறந்த இவருக்கு வயது
72. சிறு குழந்தைகளில் சில குழந்தைகள், தங்கள் கற்பனை உலகில் வாழ்ந்து தன் பித்த
நோயினால் மன இறுக்கத்தைக் கொள்வதைக் கண்டு கொண்ட இவர் அதைப் போக்க தன் 17ஆம்
வயதிலேயே ஹக் மெஷின் (Hug Machine) எனும்
அழுத்தம் கொடுத்து அணைக்கும் ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தார்.
ஒரு நாள் மாட்டுத்
தொழுவத்தில் மாடுகளுக்கு ஊசி போடும் போது அவைகளை இப்படி அழுத்தம் கொடுத்து அணைத்து
அவைகளின் இறுக்கத்தைப் போக்கும் வழிமுறையைக் கண்டார். ஏன், அதை மனிதர்களுக்கும்
பயன்படுத்தக் கூடாது என்று நினைத்த டெம்பிள் தனது புது சாதனத்தைக் கண்டு
பிடித்தார். இன்று ஆடிஸம் நோயினால் பாதிக்கப்படுவோருக்கு இந்த சாதனம் பெரிதும்
பயன்படுகிறது. இவரைப் பற்றிய Temple Grandin என்ற திரைப்படம்
புகழ் பெற்ற ஒன்று. 2010இல் டைம் பத்திரிகை உலகின் சிந்தனைப் போக்கை மாற்ற வல்ல
நூறு பேரில் இவரையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது. விலங்கியலில் மிகவும் புகழ்
பெற்ற இவரின் இன்றைய சொத்து மதிப்பு 10 லட்சம் டாலர்கள்! ‘Calling
All Minds’ என்ற இவரது புத்தகம் மிகவும் புகழ் பெற்ற
ஒன்று. ஆடிஸம் நோயினால் பாதிக்கப்பட்டோரைச் சுற்றி இருப்பவர்கள் படும் மன வேதனை
சொல்லி மாளாத ஒன்று. அவர்களுக்கு ஆடிஸம் நோயைப் போக்க என்ன செய்ய வேண்டும்
என்பதைக் கற்பித்த இவர் உலகின் தலை சிறந்த மனிதாபிமானியாகக் கருதப்படுகிறார்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.