மூளை நன்கு செயல்பட உடல்பயிற்சி (5391)

WRITTEN BY S NAGARAJAN

Date: 4  SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-17 AM (British Summer Time)

 

Post No. 5391

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

திருநெல்வேலியிலிருந்து ஆர்.சி.ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் வெளிவரும் ஆரோக்கிய மேம்பாட்டு மாத இதழ் ஹெல்த்கேர். இதில் ஜூலை 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. தொடர்பு மின்னஞ்சல் editor@tamilhealthcare.com

மூளை நன்கு செயல்பட எவ்வளவு நேரம் உடல்பயிற்சி செய்ய வேண்டும் ?

மூலம் : கிறிஸ்டோபர் வாஞ்செக்

தமிழாக்கம் : ச.நாகராஜன்

அனைவருக்குமே உள்ள கவலை வயதாக ஆக, மூளையின் செயல்பாடு குறைந்து கொண்டே வருகிறதே, ஞாபகமறதி அதிகமாகிறதே, உடலின் அவயவங்கள் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறதே என்பன போன்றவை தாம்!

நன்கு உடல்பயிற்சி செய்யுங்கள் என்பது பொதுவான அறிவுரை.

யோகா, தாய்-சி போன்றவற்றையும் பலரும் பரிந்துரை செய்கின்றனர்.

எதைச் செய்வது, எவ்வளவு நேரம் செய்வது என்பதில் ஒரே குழப்பம்.

 

தினசரி செய்யுங்கள் என்கின்றனர் சிலர். வாரத்திற்கு இவ்வளவு மணி நேரம் என்கின்றனர் சிலர்.

இப்படிச் செய்ய முடியாதவர்கள் கவலைப்படுகின்றனர்.

கவலை போக்கும் விதமாக இப்போது நல்ல செய்தி வந்துள்ளது.

 

ஆறு மாத காலத்தில் 52 மணி நேரம் உடல் பயிற்சி செய்தால் போதும் என்கிறது நவீன மருத்துவ ஆய்வு ஒன்று! இது மூளையை நன்கு செயல்படுத்த உதவும் என்கிறது ஆய்வு முடிவு!

பொதுவாக உடல்பயிற்சியானது, சிந்தனையாற்றலை நன்கு தூண்டி விடும்; உடலையும் மனதையும் பண்படுத்த உதவும்; மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்; அல்லது மூளை செயலிழப்பைத் தடுக்கும் என்பன போன்றவற்றை ஆய்வு முடிவுகள் அறிவித்துள்ளன!

 

நியூராலஜி கிளினிகல் ப்ராக்டீஸ் என்ற பத்திரிகையில் 30-5-2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை அகில உலக ஆய்வு ஒன்றை விரிவாக வெளியிட்டிருக்கிறது.

 

நடைப்பயிற்சி, ஓட்டம், வெயிட் தூக்குதல், யோகா, தாய்-சி எல்லாமே நலம் பயப்பவையே! இதில் எதைச் செய்தாலும் ஆறு மாதத்தில் 52 மணி நேரம் செய்தால் போதும்!

“இந்த 52 மணி நேரத்தையும் கூட உங்களுக்கு உகந்த முறையில் பிரித்துக் கொள்ளலாம். இப்போது ஒரு மணி நேரம்; பின்னால் இன்னொரு மணி நேரம் என்று” என்கிறார் ஆய்வைச் செய்த மியாமி மில்லர் ஸ்கூல் ஆஃப் மெடிசின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜாய்ஸ் கோமஸ் -ஆஸ்மான் (Joyce Gomes-Osman) என்னும் நியூரோஸயிண்டிஸ்ட் பெண்மணி.

 

இது அனைவருக்கும் பெரிய ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். தினசரி ஒரு மணி நேரம் என்பது போன்ற கடுமையான விதி முறைகள் தேவை இல்லை.

 

குறைந்த தீவிரம் உடையவை யோகாவும் தாய்-சியும்.

அதிக தீவிரப் பயிற்சி என்பது வலுவை அதிகரிக்கும் கடினமான பயிற்சிகளும் ஏரோபிக் பயிற்சிகளும். இவை இரண்டுமே பலனளிக்கின்றன என்கிறார் கோமஸ்.

உடல் பயிற்சி சம்பந்தமாக முன்னர் செய்யப்பட்ட 100 ஆய்வுகளை இந்தப் புதிய ஆய்வு ஆராய்ந்தது. இதில் பங்கு கொண்டவர்கள் மூளை செயல்பாடு பற்றிய ஆய்வுக்கு உட்பட்டவர்கள். மொத்தம் 11000 பேர்கள் இவற்றில் பங்கு கொண்டனர். அவர்களின் சராசரி வயது 73!

ஆய்வு தந்த முடிவின் பொதுவான அம்சம் எந்த முறையில் உடல் பயிற்சி செய்யப்பட்டாலும் ஆறு மாதங்களில் 52 மணி நேரம் செய்தால் அவை மூளை சிந்தனையாற்றலைக் கூர்மைப் படுத்துகின்றன என்பதே!

இந்த 52 மணி நேரத்திற்குக் குறைவாகச் செய்யப்பட்ட பயிற்சிகள் நல்ல முடிவுகளைத் தரவில்லை என்பதே ஆய்வு தரும் செய்தி!

உடல் பயிற்சி சிகிச்சை முறையைத் தருகின்ற நியூரோ ஸயிண்டிஸ்ட் என்ற முறையில் கோமஸ், “என்னுடைய நோயாளிகளுக்கு ஒரு சரியான டோஸை தர ஆசைப்பட்டேன், இப்போது தான் அது சாத்தியமாகி இருக்கிறது” என்கிறார்.

 

 

“இன்னும் அதிக செயல்பாட்டுடன் இருங்கள் என்று பொதுவாக நாங்கள் கூறி விடுகிறோம் எங்களிடம் சிகிச்சை பெற வருபவர்களிடம். ஆனால் அதன் அர்த்தம் என்ன? அவருக்கு தினமும் 30 நிமிடப் பயிற்சி தேவையா? அல்லது ஒரு மணி நேரம் தேவையா? எந்த விதமான உடல் பயிற்சி வேண்டும் என்பதைச் சொல்ல முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது தெளிவாக 52 மணி நேர லட்சியத்தை முன் வைக்க முடிகிறது” என்கிறார் அவர் முத்தாய்ப்பாக!

 

இதய நோயாளிகளுக்கு அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்த இதுவே வழி!

 

டாக்டர் டக்ளஸ் ஷார் என்பவர் ஓஹையோ ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் வெக்ஸ்னர் மெடிகல் மையத்தில் உள்ள மூளை செயல்பாடு மற்றும் நினைவுத் திறன் குறைப்பாடு பற்றிய மையத்திற்கு டைரக்டர். அவரும் இந்த ஆய்வு முடிவை ஏற்றுள்ளார். “மூளை செயல்திறனுடன் இயங்க உடல் பயிற்சி இன்றியமையாதது என்பதே முக்கிய செய்தி. நீண்ட கால அடிப்படையில் அதைச் செய்யவேண்டும். அவ்வளவு தான்” என்கிறார் அவர்.

 

ஷார் மேலும் கூறுகையில், “ உடல் பயிற்சியின் போது மூளையானது நன்கு செயலூக்கம் செய்யப்படுகிறது. நமது தசைகளை எப்படிக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்பதை நாம் கற்க வேண்டும். ஆகவே பயிற்சிகளின் போது அதிக கவனம் தேவை. ‘use it or lose it’ – பயிற்சியைச் செய்யுங்கள்; அல்லது பலனை இழந்து விடுங்கள் என்பதே தாரக மந்திரம் என்கிறார்.

 

அத்தோடு தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே இருந்து யாருடனும் பழகாமல் இருப்பது பயனளிக்காது என்றும் அவர் கூறுகிறார்,

பிரேஸில், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள், உடல் பயிற்சியானது மூளையின் செயல்பாட்டு வேகம், திட்டமிடுதல், கவனம் கொள்ளுதல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது என்கின்றனர். பொதுவாக வயதாக ஆக, இவைதான் அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் பிரச்சினை என்பதால் இந்த ஆய்வின் முடிவு ஒரு வரபிரசாதமே.

இனி ஆறு மாதத்தில் 52 மணி நேர பயிற்சி என்பதை மேற்கொள்வோம். செயல்பாட்டுடன் கூடிய முளையால் உடல் இயக்கம் கொண்டு நலம் பெறுவோம்.

 

***

மூலம் : கிறிஸ்டோபர் வாஞ்செக்

தமிழாக்கம் : ச.நாகராஜன்

நன்றி : லைவ் ஸயின்ஸ்

 

 

கொலைகார மூலகம் (THALLIUM) பற்றிய சுவையான தகவல்கள்! (Post No.5390)

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

swami_48@yahoo.com

Date: 3 September 2018

 

Time uploaded in London – 8-43 am (British Summer Time)

 

Post No. 5390

 

 

கொலைகார மூலகம் (THALLIUM) பற்றிய சுவையான தகவல்கள்! (Post No.5390)

 

 

உலகில் கண்டறியப்பட்டுள்ள நூற்றுக்கும் மேலான மூலகங்களில் ஒன்று தால்லியம் (THALLIUM) . இது கொலை வழக்குகளில் அடிபட்டதாலும், துப்பறியும் நாவல் புகழ் ‘அகதா கிறிஸ்டி’ நாவல்களில் அடிக்கடி தலைக் காட்டியதாலும் புகழ் பெற்றுவிட்டது.

 

இது ஒரு உலோகம். வெள்ளியை விட  அதிகம் கிடைக்கும்  உலோகம். இதன் பிறப்பே சர்ச்சைக்குரியது. அட! கர்ணன் போன்றோரின் பிறப்பில்தான் சர்ச்சை என்று நினைத்தால் ஒரு மூலகத்தின் பிறப்பிலுமா சர்ச்சை?

 

ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி சோதனைச் சாலையில் சல்ப்யூரிக் அ மிலக் குடுவையில் பச்சைக் கோட்டைக் கண்டார். ஆஹா, இது ஒரு புதிய பொருள் இதற்குத் தல்லியம் என்ற திருநாமாத்தைச் சூட்டுவோம் என்று கருதி நாமகரண சடங்கையும் நடத்தி விட்டார். அவர் பெயர் வில்லியம் க்ரூக்ஸ் WILLIAM CROOKES (1832-1919). இது 1861-இல் நடந்தது.

 

ஆனால் ப்ரான்ஸ் நாட்டில், 1862-இல் கிளாட் அகஸ்ட் லாமி CALUDE AUGUST LAMY (1820-1878) இதற்கும் ஒரு படி மேலே சென்று தால்லியத்தை வடிகட்டி, உலோகக் கட்டியாக செய்து, லண்டனில் உள்ள ஒரு கண்காட்சிக்கும் அனுப்பி விட்டார். அந்தக் கமிட்டி அவரைப் பாராட்டி ஒரு பதக்கமும் கொடுத்து விட்டது. பிரஞ்சு அகாடமி இவர்தான் இந்த மூலகத்தின் கண்டு பிடிப்பாளர் என்று அறிவித்துவிட்டது

 

 

ஒரிஜினல் விஞ்ஞானிக்கு வந்ததே கோபம்! அவருடைய விஞ்ஞான சஞ்சிகை மூலம் விட்டு விளாசினார். ஒவ்வொரு இதழிலும் பிய்த்துக் குதறினார். போகப் போக அது பிரான்ஸ்- பிரிட்டன் ‘ரசாயன’ யுத்தமாகப் பரிணமித்தது. “வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு , கொடுத்த மெடலை  வாபஸ் வாங்கு” என்ற கோஷம் பெரிதானது

 

நமக்கு வேண்டாமப்பா, இந்த வம்பு என்று சர்வதேச கண்காட்சிக் கமிட்டி அவருக்கும் ஒரு பதக்கத்தைக் கொடுத்தது.

இனித்தான் சுவையான கதைகள்!

 

விஷம் வைத்து ஆட்களைத் தீர்த்துக் கட்டுவோர், அந்த சடலத்தை எரித்துவிட்டால், கொலைத் தடயம் மறைந்து விடும் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். பிரிட்டனில் கிரஹாம் யங் என்பவர், ஒரு கொலை வழக்கில் வகையாகச் சிக்கிக் கொண்டார். அவரால் கொலை செய்யப்பட்ட (BOB EGLE) பாப் ஈகிள் என்பவரின் சடலத்தை எரித்த சாம்பல் கிடைத்தது . அதை ஆராய்ந்ததில் தால்லியம் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது. இது குற்றம் தொடர்பான (FORENSIC SCIENCE) தடய அறிவியலில் ஒரு புதிய மைல் கல்லாக விளங்குகிறது. ஒரு சோதனையின் பெயர் அடாமிக் அப்ஸார்ப்ஷன் ஸ்பெக்ட் றோமெட்ரி . இந்த சோதனை நடத்தப்பட்ட போது, எந்த ஒரு சடலத்தை எரித்தாலும் காணப்படும் அளவுக்கும் மேலாக அந்த சாம்பலில் தால்லியம் இருந்தது தெரிந்தது. அவர் விஷம் வைத்துக் கொன்றது உறுதியானது.

 

அகதா கிறிஸ்டியின்  ‘ஆகாத’ நாவல்

அகதா கிறிஸ்டியை (AGATHA CHRISTE) அறியாத ஆங்கிலப் புதினப் பிரியர்கள் கிடையாது. அவர் 1961ஆம் ஆண்டில் தி பேல் ஹார்ஸ்(THE PALE HORSE) என்ற ஒரு துப்பறியும் நவீனத்தை வெளியிட்டார். அதில் தால்லியம் விஷக் கொலை வருகிறது. ஆனால் அப்படிப்பட்ட தடயத்தை எ[ப்படி திசை திருப்பிவிட முடியும் என்றும் எழுதி இருந்தார். அந்தக் கதையில் மந்திர தந்திர சாபங்கள்தான் (MAGIC CURSES) ஆளைக் கொன்றது என்ற பாணியில் கதைப்போக்கு இருந்தது.

 

1980 முதல் 1990 ஆண்டுகளில் இராக் நாடு, தனது அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்ட தாலியத்தைப் பயன்படுத்தியதாக மேலை நாடுகள் செப்புகின்றன. இது இயற்கையில் ஆட்கள் இறந்தது போலவும் காட்டவும் உதவும்.

 

கிரஹாம் யங் என்ன செய்தார்?

இவர் இங்கிலாந்தில் ஹார்ட்போர்ட்ஷைரில் பொவிங்டன் என்ற ஊரில் வேலை பார்த்தார். தொழிற்சாலையில் சக ஊழியர்களின் ‘காப்பி’யில் தால்லியம் சல்பேட் (THALLIUM SULFATE) என்ற ரசாயனத்தைக் கலந்தார். பல ஊழியர்கள் நோயால் வருந்தினர். இருவர் இறந்தனர். ‘ஏனைய்யா! உமது தொழிற்சாலையில் இந்தக் கோரம் ? என்று வினவியபோது, ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற பழமொழிக்கு இணங்க அவரே தன்னைக் காட்டிவிட்டார். ‘ஒருவேளை தால்லியம் காரணமாக இருக்கலாம்’ என்று உளறிவிட்டார்.

(நுணல்= தவளை)

பின்னர் டாக்டர்கள் பரிசோதனையில் அவர்கள் தால்லியத்தால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப் பட்டது.

 

யங் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆயுள் தண்டனை 1972-ல் பெற்றார்.   1990-ல் தற்கொலை செய்துகொண்டார்.  இதில் துயரம் என்னவென்றால், அவர் ஏற்கனவே குடும்பத்தினருக்கு விஷம் வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, மன நோய்க்கான மருந்தைச் சாப்பிட்டவர். மனநோய் மருந்துகள் நன்றாக வேலை செய்கிறது என்று டாக்டர்கள் பகர்ந்தவுடன் அவர் விடுதலை செய்ய்ப்பட்டிருந்தார் அதற்குப் பின்னர்தான் பெரிய கொலை வழக்கு!

 

ஆனால் தால்லியம் ரசாயன விஷத்தால் இறந்த எல்லாவற்றையும் கொலை என்றும் கருதிவிடக்கூடாது.  1987ம் ஆண்டில் கயானா ( (GUYANA, தென் அமெரிக்கா) நாட்டில் 44 பேர் மர்மமாக இறந்தனர். நுற்றுக் கணக்கானோர் நோயில் வீழ்ந்தனர். அவர்கள் குடித்தது வெறும் பசுவின் பால். பின்னர் ஆராய்ந்ததில் கரும்புத் தோட்டத்தில் எலிகளைக் கொல்ல வைக்கப்பட்ட தால்லியம் கலந்த வெல்லக் கட்டிகளை அந்த பசுக்கள் மேய்ந்தது கண்டறியப்பட்டது. அதன் உடலில் ஏறியவிஷம் பாலில் கலந்து அப்பாவிகளைத் தப்பாகக் கொன்றது. தப்பாமல்  கொன்றது.

 

குறி வைத்தது எலியை; கொடுத்ததோ மனித பலியை!

 

தால்லியம், எலி மருந்து, கண்ணாடித் தொழிற்சாலை  ஆகியவற்றில் பயன்படுகிறது அதன் ஐஸடோப் (ISOTOPE) இருதய நோய்ப் பரிசோதனைகளில் பயன்படுகிறது. ஒரு காலத்தில் தலையில் ஏற்படும் புழுக்களைக் கொல்லவும் (RINGWORMS IN SCALP) பயன்பட்டது. தலை முடியை உதிர வைத்தால்தான் தலையில் சிகிச்சை தரமுடியும் . தால்லியம் கலந்த ரசாயனப் பொருட்கள் அதைச் சுலபமாக செய்து முடித்தமையால் அதற்கு ‘முடி சூடும் பெருமை’ கிடைத்தது.

 

1930களில் தாலியம் அஸிடேட் ரசாயனத்தை முகத்தில் வளரும் முடியை அகற்றவும் பயன்படுத்தினர்.

 

‘தலை மயிரும் தால்லியமும்’– கதை முடிந்தது!

வேதியியல் பயிலும் மாணவர்களுக்கு உதவும் குறிப்புகள்:

Chemical symbol TI
Atomic number 81
Atomic weight 204.3833
Melting point 304 C
Boiling point 1457 C

 

–சுபம்–

 

நிழல் அதிசயம்- ஹிந்து விஞ்ஞானம் (Post No.5386)

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

swami_48@yahoo.com

Date: 2 September 2018

 

Time uploaded in London – 7-08 am (British Summer Time)

 

Post No. 5386

 

இந்துக்கள் ஏராளமான வழிகளில் எதிர்காலத்தை அறிவர். காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994), ரிக் வேத பண்டிதர் கூத்தனூர் சிங்கார சுப்ரமண்ய சா ஸ்திரிகளை அழைத்து தன் கையில் அக்ஷதையைப் போடச் சொல்லி, அதை எண்ணி, தானெவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் என்று கண்டு பிடித்ததை முன்னர் எழுதியுள்ளேன்.

 

நாடி ஜோதிடம் உண்மை என்றும் இதை நாஸா (NASA, USA) விஞ்ஞானிகள் ஆராய வேண்டும் என்றும் எழுதினேன். நூற்றுக்கு 90 சதவிகித நாடி ஜோதிடர்கள் பித்தலாட்டக் காரர்கள் என்ற போதிலும், கையின் அமைப்பைப் பார்த்தே ஒருவர் பிறந்த வருடம், இடம்  முதலியவற்றைக் கண்டுபிடிக்கும் விஷயம் நாடி ஜோதிடத்தில் இருப்பதை எழுதினேன்.

 

பெரிய சைவ ஆசார்யர்களும் கூட புத்தகத்தில் நூலை நுழைத்து (ROPE OR THREAD ASTROLOGY)  அந்தப் பக்கத்தில் வரும் செய்தியைக் கொண்டு, குழந்தை பிறக்கும் என்று சொன்ன செய்தியை ஒரு கட்டுரையில் தந்தேன்.

ஒற்றைத்த் தும்மல் ;போட்டால் ஆகாது; இரட்டைத் தும்மல் கேட்டால் காரியம் சித்திக்கும் என்பதை அறிவோம்.

 

மீனாட்சி கோவில் போன்ற இடங்களி வரையப்பட்ட தாமரை போன்ற சிற்பத்தில் கைவைத்து காரியம் கைகூடுமா என்று கண்டு பிடிப்பது பற்றியும் எழுதினேன்.

 

கிளி ஜோதிடம், பஞ்சபக்ஷி சாத்திரம், வராஹமிஹிரரின் கருங்குருவி ஜோதிடம், பல்லி சொல்லுக்குப் பலன், ஸீதாராம சக்ரம், எண் ஜோதிடம், கை ரேகை ஜோதிடம், ஜாதக ஜோதிடம், முகத்தைப் பார்த்து சொல்லும் (FACE READING) ஜோதிடம், குற வஞ்சி குறி சொல்லுதல், சாமி ஆடுவோர் குறி சொல்லுதல்– வெற்றிலையில் மாயக் கறுப்பு மை தடவி பார்த்தல்— இப்படி எண்ணற்ற வகைகளைத் தந்தேன்.

 

நேற்று மூச்சுக் காற்று ஓடும் திசையை வைத்து நீங்களே ஆரூடம் சொல்லலாம் என்று எழுதினேன்

இப்போது இன்னும் ஒரு அதிசயச் செய்தியக் காண்போம்

கீழ்கண்ட தகவல் பிரபஞ்ச உற்பத்தி என்னும் 1900ம் ஆண்டு நூலில் உளது. விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்த பார்ப்பது அவஸியம்.

 

முனிசாமி முதலியார் 1900ல் வெளியிட்ட பிரபஞ்ச உற்பத்தி நூலில்

சாயா தெரிசனக் குறிப்பு

 

“ஆகாயத்தில் மேக மறைவுகளில்லாமல் பரிசுத்தமாய் வெய்யில் காணும்போது, பூமியில் மேடு பள்ளம் இல்லாத இடத்தில் நின்று கொண்டு, தன்னுடைடைய நிழல் ஐந்து அடி முதல் பத்து அடி நீளத்திற்கு உட்பட்ட தருணத்தில்,  த்னது நிழலின் முகமாக பார்த்தபடி நின்று, , அந்த நிழலின் கை, கால், தலை, கழுத்து இவ்வுறுப்புகளில் ஒன்றை கண் சிமிட்டாமல், கால் அல்லது அரை நாழிகை மட்டும் பார்த்து (ஒரு நாழிகை 24 நிமிடம்), அப்படியே ஆகாயத்தை நோக்கிப் பார்க்கவும்.

 

ஆகாயத்தில் அவன் உருவம் தோன்றும். அவ்வுருவமானது பொன் நிறமாக இருந்தால் அவனுக்கு செல்வம் வரும்.  வெண்மையாக இருந்தால் பிராண பயமில்லை; ஆயுள் வளரும். செம்மை நிறமாகில் மனக்குறை, சஞ்சலம், அபாண்டம் சம்பவிக்கும். கருமையாகில் தேக நலன் கெடும். அன்றியும் அவ்வுருவில் கை அல்லது  காலாவது தோன்றாமல் இருந்தால் ஆறு மாதத்தில் மரணம் உண்டாம். இதுவுமன்றி தலையே தோன்றாமல் கவந்தமாய் தோன்றினால்  மூன்று மாதத்தில் மரணம்.

 

இம்மதிரியாய் சந்திரனிலும் பார்ப்பதுண்டு.

இதற்கு ‘சாயா புருஷ தரிசனம் என்று சொல்லுவார்கள்.

 

இச்சாயா தெரிசனத்தை இடைவிடாமல் 12 வருஷம் பார்த்துக் கொண்டு வந்தால் தன் முன் நிற்கும் நிழல் தன்னுடன் பேசும். அப்படிப் பேசும் பருவம் நேரிடுங்கால்,  அதன் முகாந்திரமாய் அட்ட மா சித்தும் (அஷ்ட மஹா சித்தி) பெறலாகும். பெருவதன்றிப் பின்னும் சில நாட்களில் தன்னிழல் உருவமாகித் தன்னுடனே  திரியும். படுத்தால் தானும் படுக்கும் எழுந்தால் தானும் எழும்பும்; அன்றியும் இவனுக்கு நேரிடும் நன்மை தீமைகளை முன்னதாக தெரிவிக்கும். இன்னும் அநேக அற்புதங்களை விளைவிக்கும் என்று  பெரியோர் சொல்லுகிறார்கள்”.

 

XXX

இவற்றையெல்லாம் அறிவியல் ரீதியில் ஆராய பணம் வேண்டும். மேலை நாட்டு மருத்துவக் கம்பெனிகள் புதிய மருந்துகளைச் சோதிக்க பெரிய ஆராய்ச்சி அமைப்புகள் வைத்துள்ளன. தனிப்பட்ட முறையில் செய்யும் ஆராய்ச்சிகளையும் விலைக்கு வாங்கி தாங்களும் அதை மெய்யெனக் கண்டு பிடித்து, மருந்து மாத்திரைகளைத் தயாரித்து கோடி கோடியாச் சம்பாதிக்கின்றனர். நம்மிடம் பணம் இருந்தால் நாமும் முறையான ஆராய்ச்சிகளைச் செய்து முடிவுகளை வெளியிடலாம. பல ஊர்களில் தல மரங்கள் (ஸ்தல வ்ருக்ஷங்கள்) இத்தனை ஆயிரம் ஆண்டுப் பழமை என்றெலாமெழுதி வைக்கின்றனர். தற்காலக் கருவிகளைக் கொண்டு இவற்றின் வயதை எளிதில் காணாலாம். புத்தரின் பல் (TOOTH) என்று கண்டி முதலான இடங்களில் வைத்துள்ளனர் . அதை அறிவியல் முறையில் ஆராய்ந்து வயதைக் கண்டு பிடிக்கலாம். புத்தர் வாழ்ந்ததாக கூறப்படும் ஆண்டுகளில் 600 ஆண்டுகள் வரை வேறுபாடுள்ளது. ஒரு தரப்பினர் சொல்லுவது போல அவர் கி.மு 1400 வாக்கில் வாழ்ந்தார் என்று நிரூபிக்கப்பட்டால் இந்திய வரலாறே தலைக் கீழாக மாறும். ஆராய்ச்சி செய்ய மனமும் பணமும் தேவை!

–சுபம்–

ஆச்சரியம் ஆனால் உண்மை; நீங்கள் நினைப்பதைக் “கேட்கலாம்”! (Post No.5382)

WRITTEN BY S NAGARAJAN

Date: 1  SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-55 AM (British Summer Time)

 

Post No. 5382

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 31-8-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்திஆறாம்) கட்டுரை

 

ஆச்சரியம் ஆனால் உண்மை; நீங்கள் நினைப்பதைக்கேட்கலாம்!

 

.நாகராஜன்

 

ஆச்சரியம் ஆனால் உண்மை! நாளுக்கு நாள் வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் எதுவும் சாத்தியம்! நீங்கள் மனதில் நினைப்பதை உங்களால் கேட்க முடியும்!

 

இதற்கான ஒரு சாதனத்தை உருவாக்கியவர் இந்திய வமிசாவளியினரில் ஒருவர். பெயர் ஆர்னவ் கபுர்.இவரைப் பற்றி உலகப் பத்திரிகைகள் அனைத்தும் புகழ்ந்து தள்ளுகிறது.

 

அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம் ஐ டி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது) புதுமை சாதனங்களை உருவாக்குவதில் முதலிடம் பெற்ற ஒன்று. இதில் மீடியா லேப் என்று ஒரு பிரிவு சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அங்கு எதிர்காலம் உருவாக்கப்படுகிறது.

 

 

ஆறு மாடிக் கட்டிடத்தில் உள்ள மீடியா லேபில் 230 ஆய்வு மாணவர்கள் இருக்கின்றனர். அவர்கள் கலை, எஞ்சினியரிங், உயிரியல், இயற்பியல், குறியீடு ஆகிய துறைகளில் தங்கள் ஆய்வைச் செய்கின்றனர்.

 

இன்று நாம் காணும் டச் ஸ்கிரீன், தானியங்கி காரை ஓட்டுவிக்கும் ஆணைகள் போன்றவை இங்கு உருவாக்கப்பட்டவை தான்.

 

பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள் என்று பிறரால் எள்ளி நகையாடப்படும் எண்ணங்களை செயல்படுத்த விரும்புவோரின் களம் இது.

 

இன்று நாம் கூகிளில் எந்த இடத்தைப் பற்றிக் கேட்டாலும் பதில் பெறுகிறோமே, அது 1979இல் மீடியா லேபில் உருவானது தான்!

மூவி மேப் என்ற பெயரில் அன்று அது உருவாக்கப்பட, இன்று ஒவ்வொரு சந்து பொந்தையும் கூகிளில் நாம் காண்கிறோம்!

 

மிகப் பெரிய சோதனைக் கூடமான இதில் பாலைவனத்தில் பயிர் வளர்ப்பது எப்படி, கனவுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது எப்படி, மனித மூளையை இண்டர்நெட்டுடன் இணைப்பது எப்படி போன்றவை ஆராயப்படுகின்றன.

 

கேட்டால் சிரிப்போம்; ஆனால் இவை மெய்ப்பிக்கப்படும் போது ஆவென்று வாயைப் பிளந்து ஆச்சரியப்படுவோம். இதை அறிவியல் உலகம் ‘எதிர்காலம் உருவாக்கப்படும் தொழிற்சாலை’ என்று செல்லமாகக் குறிப்பிடுகிறது!

மீடியா லேப்பில் ஒரு ஆய்வு மாணவராக இருக்கும் ஆர்னவ் கபுருக்கு மனம் நினைப்பதைக் ‘கேட்டால்’ என்ன என்று தோன்றியது.

 

விளைவு : ஆல்டர் ஈகோ என்ற சாதனம் அவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இது காதில் சொருகி வைக்கப்படும். ஒரு ஒலாவை அல்லது ஊபரை வரவழைக்க வேண்டுமென்றால் நீங்கள் அதை நினைத்தாலே போதும். அது ஓலா அல்லது ஊபருக்கு சொல்லப்பட்டு கார் உங்களை வந்து அடையும்!

 

இதை யூ டியூபில் அவர் சமீபத்தில் செய்து காண்பித்த போது உலகமே அயர்ந்து போனது. நீங்களும் இந்த யூ டியூப் டெமோவைப் பார்க்கலாம் (Arnav Kapoor’s Alter Ego YouTube video).

எதை கபுர் நினைத்தாலும் ஆல்டர் ஈகோ அவர் பேசாமல் இருக்கும் போதே அதைச் செய்து விடுகிறது.

 

இயந்திரமும் மனித மனமும் இணையும் காலம் தொடங்கி விட்டது என்கிறார் அவர்.

 

 

 

அவரை 60 நிமிடங்கள் என்ற தொடருக்காக பேட்டி கண்ட ஸ்காட் பெல்லி அதிசய அனுபவத்தை அடைந்தார்.

‘நீங்கள் உங்களுக்குள்ளாக பேசும் போதே உங்கள் மூளை எலக்ட் ரிகல் சிக்னல்களை உங்கள் குரல் நாண்களுக்கு அனுப்புகிறது. அந்த சிக்னல்களை நீங்கள் எடுத்து ஒருவர் என்ன பேச நினைக்கிறார்’ என்பதைக் கண்டு பிடிக்க முடியும் என்கிறார் ஆர்னவ்.

 

இந்த சிக்னலை பெறுகின்ற சாதனத்தைத் தான் வடிவமைத்துள்ளார் ஆர்னவ்.

பேசாமல் இருக்கும் போதே இந்த சிக்னல்கள் பெறப்பட்டு அவை ஒரு கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படுகின்றன. உடனடியாக நினைத்தது செயல்படுத்தப்படுகிறது.

 

எடுத்துக்காட்டாக சில கேள்விகளை ஸ்காட் பெல்லி கேட்டார்:

ஸ்காட்: 45689 என்ற எண்ணை 67 ஆல் வகுத்தால் வருவது?

ஆர்னவ் மனதிற்குள்ளாக இந்தக் கேள்வியைக் கேட்டு கணினிக்கு அனுப்புகிறார். பின்னர் மண்டைஓட்டின் வழியே கணினி அனுப்பும் அதிர்வுகளை உட்காதில் கேட்கிறார். விடையைச் சொல்கிறார்.

 

ஆர்னவ் : விடை 681.925

 

ஸ்காட் : மிகச் சரியான விடை. பல்கேரியாவில் உள்ள பெரிய நகர் எது? அதன் ஜனத்தொகை என்ன?

 

ஆர்னவ் மனதிற்குள்ளாக இதை எண்ணி அவர் சாதனம் மூலமாகக் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறார்.

ஆர்னவ் : சோபியா 12.10 லட்சம் ஜனத்தொகை

ஸ்காட் : அட, இண்டர்நெட்டே உங்கள் தலைக்குள் இருக்கும் போல் இருக்கிறதே!

 

ஆர்னவ்: ஆம், அதைப் பெறத்தான் இந்த சாதனம்.

இப்படித் தொடரும் கேள்விகளும் பதில்களும் நம்மை வியக்க வைக்கின்றன.

 

இந்த மீடியா லேபிற்கு நிதி எப்படி வந்து சேருகிறது? இதில் 90 நிறுவனங்கள் இணைந்து நிதி உதவியை அளிக்கின்றன.  உலகின் மிகப் பெரிய விளையாட்டு சாதனம் தயாரிக்கும் லெகோ, தோஷிபா, ஜெனரல் எலக்ட்ரிக் போன்ற பிரம்மாண்டமான நிறுவனங்கள் நிதியை அள்ளித் தருகின்றன. மீடியா லேப் 302 அதிசயக் கண்டுபிடிப்புகளுக்கான பேடண்ட் உரிமைகளைப் பெற்றுள்ளது! மீடியா லேப் தரும் நவீன கண்டுபிடிப்புகள் கேட்கவே நம்ப முடியாதவை.

 

எடுத்துக்காட்டாக பெட்டிக்குள் பயிர் வளர்ப்பது ஒன்று. பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்டவை. அந்தப் பயிர்கள் ஆனந்தமாக வளர்கிறதாம். வருடத்திற்கு ஐந்து அறுவடை நிச்சயம்!

நம்ப முடியாத இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் நாளைய உலகை மாற்றப் போவது நிச்சயம்

 

ஆர்னவ் கபுரின் உங்கள் எண்ணத்தின் படி பேசாமலேயே ஆணையிட்டு எதையும் செய்ய முடியும் என்பதும் இதில் ஒன்று.

அவரது யூடியூப் காட்சியைத் தான் பாருங்களேன், ஒரு முறை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ….

 

ரொபாட் இயலில் மிகப் பெரிய விஞ்ஞானியான கெவின் வார்விக் ரொபாட்டுகளைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வருகிறார்.ஸ்டீபன் ஹாகிங்கும் இதையே சொல்லி வந்தார். இவர்கள் இருவரும் சொல்வதை மெய்ப்பிப்பது போல ஒரு சம்பவம் நடந்து விட்டது.

 

ஃபேஸ்புக்கின் ஆய்வுப் பிரிவு இரண்டு ரொபாட்டுகளைச் செய்தது. இவை ஒன்றுக்கொன்று பேசும் வல்லமை படைத்தவை. ஆகவே இதற்கு சாட்பாட்ஸ் (Chatbots) என்று பெயர். ரொபாட்டுகளின் பெயர் ஆலிஸ் மற்றும் பாப். (Alice and Bob).

 

இவைகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட பாஷை கடினமாக இருக்கிறது என்று எண்ணிய இவை தமக்கு எளிதான ஒரு பாஷையை தாமே உருவாக்கிக் கொண்டு பேச ஆரம்பித்து விட்டன.

 

இவைகள் பேசிக் கொண்டது விஞ்ஞானிகளுக்குப் புரியவில்லை.

அரண்டு போன விஞ்ஞானிகள் திகைத்தனர். இவை பேசுவது என்ன என்று தெரியாமல், ஏதேனும் ஏடாகூடமாக அவை திட்டம் போட்டால்!

 

அவ்வளவு தான், சோதனையையே ஃபேஸ்புக் நிறுத்தி விட்டது.

இது அபாயமானது என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்து கொண்டனர்.

 

கெவின் வார்விக்கோ, “இது ஒரு முக்கியமான மைல்கல். ரொபாட் அபாயகரமானவை அல்ல என்று எவரெவர் நினைத்தார்களோ அவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு நல்ல பாடம். அவை என்ன பேசுகின்றன என்று நமக்குத் தெரியவில்லை. அவை இயங்கக்கூடியவையாக இருந்து ராணுவ ரொபாட்டாக இருந்தால், விளைவு ஆபத்தான ஒன்றாகும். இது தான் உலகின் பதிவு செய்யப்பட்ட ரொபாட்டுகளின் முதல் சம்பாஷணை! அவை நமது கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது என்று நாம் நினைத்தாலும் அவை என்ன பேசின என்பது நமக்குத் தெரியவே தெரியாது. ஜாக்கிரதை, ஸ்டீபன் ஹாகிங்கும் நானும் இது பற்றி பலமுறை எச்சரித்து விட்டோம்” என்கிறார்.

ஃபேஸ்புக் நிறுத்தி விட்ட சோதனை உலகில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது!

குறிப்பு : முன்பொரு முறை பாக்யா வாசகர்களுக்கு தன் கையெழுத்திட்ட போட்டோவை அனுப்பி கெவின் வார்விக் வாழ்த்துக்கள் கூறியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

***

 

 

ஆருடம் சொல்ல ஆசையா? (Post No.5381)

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

swami_48@yahoo.com

Date: 31 August 2018

 

Time uploaded in London – 20-44 (British Summer Time)

 

Post No. 5381

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

இந்துக்களின் அதிசய மூச்சு சாஸ்திரம்

 

நமது மூக்கில் இரண்டு துளைகள் உள்ளன. அதில் மூச்சு மாறி மாறி ஓடும். இதை நாம் கவனிப்பதே இல்லை. எப்போதாவது ஜலதோஷத்தில் மூக்கு அடைத்துக் கொண்டால் அப்போது மட்டுமே, எந்த துவாரத்தின் வழியாக மூச்சு ஓடுகிறதோ அந்த வழியாக விடுகிறோம்.

 

வலது துவாரம் வழியாக மூச்சு விடும்போது அதை சூரியகலை என்பர். இடது துவாரம் வழியாக முச்சு விடும்போது அதை சந்திரகலை என்பர். சிலநேரங்களில் இரண்டு துவாரம் வழியாகவும் மூச்சு சென்று வரும்; இதை சுழுமுனை என்பர்.

இந்த மூச்சு சாஸ்திரத்தை நன்கு கவனித்த பெரியோர்கள் சாதாரண மனிதனுக்கு மூச்சு எப்படி ஓடுகிறது என்று கண்டுபிடித்து எழுதி வைத்துள்ளனர். இதைப் பற்றி மேலை நாட்டு மருத்துவ நூல்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

 

காலை ஆறு மணி முதல் எட்டு மணி வரையிலும் சூரிய கலை எனப்படும் வலது நாசித் துவாரம் வழியாக மூச்சு வெளியேறும்; உள்ளே வரும். எட்டு மணி முதல் பத்து மணிவரை மூக்கின் இடது துளை வழியாக- அதாவது சந்திர கலை வழியாக மூச்சு விடுவோம். இப்படி இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மாறி மாறி ஓடும்.

சூரிய கலையை பிங்கலை என்றும் சொல்வர்.

சூரிய கலையில் செய்யக்கூடிய காரியங்கள் என்ன என்று பழைய நூல்கள் கூறும்:–

கல்வி கற்றல்

மந்திரம் ஓதுதல் துவக்கம்

வாஹனம் ஓட்டக் கற்றல்

சித்திரப் படமெழுதல்

ஸ்நானம்/ குளியல்

சொற்பொழிவாற்றுதல்

தான தருமம்

வேட்டை யாடல்

பெண்களுடன் சம்போகம்

மோகனம், ஸ்தம்பனம், உச்சாடனம்

புத்தாடை அணிதல் (நூதன வஸ்திராபரணம்)

வடக்கு, கிழக்கு திசையில் பிரயாணம்

 

 

 

சந்திர கலை எனப்படும் இடது துவரம் வழியாக நாம் மூச்சு விடும்போது செய்ய வேண்டிய செயல்கள்

தெற்கு, மேற்கு திசையில் பிரயாணம் செய்தல்

யுத்தம் செய்தல்

உபநயனம்

கிரஹப் ப்ரவேசம்

விதை விதைத்தல்

மருந்து சாப்பிடுதல்

சாந்தி கழித்தல்

விவாகம்

யோக அப்யாஸம்

வெளிநாட்டுப் பயணம்

கடவுள் சிலை நிர்மாணித்தல்

அலங்காரம்

 

இந்த நேரங்களில் இந்தக் காரியங்களைச் செய்வது 100 சதவிகித பலன் தரும் என்பது நம்பிக்கை.

ஆருடம் சொல்ல ஆசையா?

 

மூச்சு சாஸ்திரத்தைப் பயின்றால் நீங்களும் ஆரூடம் சொல்லலாம். ஆனால் மனம் , மொழி, மெய் ஆகியவற்றில் சுத்தம் வேண்டும்; அல்லது ஜோதிடம் சொல்லியே சிக்கலில் மாட்டிக் கொள்வோம். ஏனெனில் நாம் சொல்வது பலிக்காது; அப்படிப் பலித்தாலும் அதுவே நம்மை சிக்கலில்  மாட்டிவிடும். ஆகையால் வினைத் தூய்மை இல்லாதோர் விலகி நிற்க.

யாராவது ஒருவர் உங்களிடம் வந்து நான் கார் வாங்கலாமா, வீடு வாங்கலாமா, அல்லது அதைச் செய்யலாமா, இதைச் செய்யலாமா என்று கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள். தேர்தலில் வெற்றி  கிடைக்குமா, போட்டி போடலாமா என்றெல்லாம் கேடதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்கள் மூக்கின் வலது துவாரத்தின் வழியாக மூச்சு ஓடி, அவரும் அதே பக்கத்தில் நின்று உங்களை எது கேட்டாலும் ஜயம்/ வெற்றி என்று சொல்லலாம்.

 

இது சூரிய குறி எனப்படும்

 

சந்திர குறி என்றால் என்ன?

சந்திர கலை பூரணமாய் நடக்கும்போது– அதாவது இடது துளை வழியாக மூச்சு ஓடுகையில் ஒருவர் வந்து அதே பக்கத்தில் நின்று கேள்வி கேட்டால் அந்தக் காரியம் தடை இன்றி நிறைவேறும் என்று செப்பலாம்.

 

மூக்கின் இரண்டு துளைகள் வழியாகவும் மூச்சு ஓடினால் அதை சுழும்,,,,,,,,,,,,,,,னை என்பர். அந்த நேரத்தில் ஒருவர் வந்து கேட்டால் அவர் வெற்றி பெறமாட்டார். காணாமற்போன பொருள் கிடைக்குமா என்று கேட்டாலும் அது கிடைக்காது என்று சொல்லிவிடலாம்.

 

மூச்சு ஓடும் பக்கம் பூரண பக்கம்

மூச்சு ஓடாத பக்கம் சூன்யம் எனப்படும்.

நமக்கு வேண்டாதவர் வந்தால், எதிரிகள் வந்தால், அவர்களை சூன்ய பக்கத்தில் நிற்க வைத்து, நிறை வேறாது என்று சொல்லலாம். வாதங்களில் அவரைத் தோற்கடித்து விடலாம்.

 

மூச்சு சாஸ்திரத்தில் இன்னும் பல அதிசயங்கள் உண்டு; அவற்றைப் பின்னர் காண்போம்.

 

-சுபம்–

புறச் சூழல் விழிப்புணர்ச்சி அதிகரிக்கிறது! (Post No.5379)

WRITTEN BY S NAGARAJAN

Date: 31 August 2018

 

Time uploaded in London – 9-18 AM (British Summer Time)

 

Post No. 5379

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

சென்னை வானொலி நிலையம் அலை வரிசையில் 21-7-2108 முதல் 31-7-2018 முடிய தினமும் காலையில் ஒலிபரப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் இடம் பெற்ற பத்தாவது உரை.

 

விழிப்புணர்ச்சி அதிகரிக்கிறது!

 

உலகெங்கும் சுற்றுப்புறச் சூழலைக் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

பல நாடுகளில் புதிய தலைவர்கள் அரசுப் பொறுப்பை ஏற்றுள்ளனர். கிரீஸ், ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள் வெப்பநிலை உயர்வைத் தடுக்கும் தங்களது இலக்கை அடைந்து விட்டன. சீனா தனது நான்கு இலக்குகளில் ஒன்றை அடைந்து விட்டது. 50 நாடுகள் 2050ஆம் ஆண்டிற்குள் 100 சதவிகித தூய்மையை சுற்றுப்புறச் சூழலில் ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளன.

 

 

பாரிஸில் கூடிய க்ளைமேட் அக்கார்ட் எனப்படும் சீதோஷ்ண நிலை ஒப்பந்தம்,  நியூயார்க்கில் ஏற்பட்ட காடுகள் பற்றிய பிரகடனம் ஆகியவை நல்லதொரு நம்பிக்கையை உலக மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன.

நமது நாட்டில் புதிய விழிப்புணர்வுடன் மக்கள் செயல்பட ஆரம்பித்துள்ளனர். க்ளீன் இந்தியா மூவ்மெண்ட் எனப்படும் ஸ்வச்ச பாரத் அபிக்யான் (Swachh Bharat Abhiyan) என்ற திட்டத்தை பாரத அரசு தொடங்கியுள்ளது. இதன்படி சாலைகள், தெருக்கள்,சந்துகளில் சேரும் குப்பைகள் அகற்றப்பட்டு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும். கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு கிராம மக்களுக்கு மேம்பட்ட ஆரோக்கிய நல்வாழ்வு அளிக்கப்படும். 2014ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி துவங்கப்பட்ட இந்தத் திட்டம் நாடெங்கும் நற்பயன்களை அளித்து வருகிறது

 

சூரிய ஆற்றலின் பயன்பாடு உலகெங்கும் அதிகரித்து வருகிறது.

 

பெட்ரோல், டீஸலைத் தவிர்த்து சூரிய சக்தியாலும், மின் சக்தியாலும் இயங்கும் கார்கள், பஸ்கள், லாரிகள் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

 

மண்வளத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அற்புதமான இந்த வளத்தினால் தான் விவசாயம் செழிக்கிறது. உணவு தானியங்கள் விளைகின்றன.உலகம் இயங்குகிறது. இந்த வளமே நீரை வடிகட்டிக் குடிநீராக்கித் தருகிறது. பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆக மண்வளத்தைச் சீராக்கி மேம்படுத்தினால் உற்பத்தி பெருகும், சுற்றுப்புறச் சூழல் பெரிதும் மேம்படும் என்பதால் விவசாயப் பெருமக்களும் விஞ்ஞானிகளும் இணைந்து மண்வளத்தை மேம்படுத்தும் அரிய பணிகளில் இறங்கியுள்ளனர்.

 

நமது அரிய பூமியில் இந்த சமீப விழிப்புணர்வு எதிர்கால சந்ததியினருக்கும் உதவக் கூடிய ஒரு பெரிய வரபிரசாதமாகும்.

ஆக பல்வேறு துறைகளிலும் இளைய சமுதாயத்தினரிடம் ஏற்பட்டுள்ள இந்த வரவேற்கத்தக்க மாறுதலில் அவர்களுடன் அனைவரும் இணைந்து உலகை மாசற்ற சுற்றுப்புறச் சூழல் கொண்ட ஒன்றாக ஆக்குவோமாக!

***

 

குழந்தை பிறக்க செலீனீயம் வேண்டும்! (Post No.5374)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date: 29 August 2018

 

Time uploaded in London – 16-59 (British Summer Time)

 

Post No. 5374

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

மிருகங்கள் குடி போதையில் தள்ளாடுவது ஏன்?

மார்க்கோ போலோ கண்ட அதிசயம் என்ன?

ஆண்கள் விந்துக்களின் வீரியம் குறைவது ஏன்?

உடலும் வாயும் உள்ளிப்பூண்டு (GARLIC) மணம் கமழ்ந்தது ஏன்?

தரை பெயரிலும், சந்திரன் பெயரிலும் மூலகம் தோன்றியது ஏன்?

ட்யூனா (TUNA) மீன்களை மக்கள் அதிகம் வாங்குவது ஏன்?

 

WARNING எச்சரிக்கை– எந்த ஒரு மருத்துவக் கட்டுரையைப் படித்துவிட்டும் நீங்களாக எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. டாக்டர்களைக் கலந்தாலோசித்து மருந்து சாப்பிடுங்கள்; எங்கள் லண்டனில் கூட போலி டாக்டர்களை அவ்வப்போது பிடித்து வருகின்றனர். மேலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பதை நினவிற் கொள்க.

 

செலீனியம் (SELENIUM) என்றால் என்ன?

 

உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மூலகங்களில் இதுவுமொன்று.

 

மூலகம் (ELEMENT) என்றால் என்ன?

அதுதான் மூலப் பொருள். இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய 115-க்கும் மேலான பொருள்கள். இரும்பு, தங்கம், வெள்ளி, வைரம்(கார்பன்), ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் — முதலியன.

 

இனி செலீனியம் பற்றிய சுவையான செய்திகளைக் காண்போம். ஆண்களின் விந்துக்கள் குறைந்தால் பெண்கள் ‘கர்ப்பம்’   தரிப்பது கடினம். இது ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட விஷயம். செலீனியம் அதிகமுள்ள உணவுப் பொருட்களை ஆண்களுக்குக் கொடுத்துப் பார்த்தார்கள். உடனே விந்துக்களின் வீரியம் அதிகரித்தது.

 

பொதுவாக மாமிசப் பொருட்களிலும், ட்யூனா (TUNA) மீன் வகைகளிலும் இது உள்ளது. ஆனால் உடலுக்குத் தேவை மிகவும் குறைவு. அப்படியானால் சைவ உணவுக்கார்கள் (VEGETARIANS) என்ன செய்வது? அவர்கள் முட்டைக்கோசு, பிராக்கோலி போன்ற காய்கறிகளையும், நிலக்கடலை (PEANUTS), காளான் (BUTTON MUSHROOMS மஷ்ரூம்), பிரேஸில் நட்- (BRAZIL NUT)முதலியவற்றை சாப்பிட்டால் போதும்

 

லண்டனில் குழந்தை பிறக்க இயலாமைக்கு ஆண்மகன் தான் காரணமா என்று அறிய விந்து ஆராய்ச்சி (SPERM COUNT) செய்வர். பரிசோதனைச் சாலையில் விந்துவை எடுத்த சில மணி நேரத்துக்குள் கொண்டுவரச் சொல்வர். இதன் மூலம் ஸ்பெர்ம் கவ்ண்ட் (SPERM COUNT)  செய்யப்படும்.

 

செலீனியம் என்பது பற்றிச் சில சுவையான செய்திகளும் உண்டு. இதை ஆராய்ச்சி செய்த முதல் விஞ்ஞானி BERZELIUS மிகவும் நாறிப்போனார். அதாவது வாயைத் திறந்தாலே பூண்டு (GARLIC) மணம் ‘குப் குப்’ பென்று வந்தது. அவரை வாடகைக்கு வைத்த வீட்டுக்    காரருக்கு கடும் கோபம்; ஒரு நாள் சத்தம் போட்டுவிட்டார். ஏனைய்யா, மூளையே இல்லையா; பூண்டு சாப்பிட்டுவிட்டு வாயைக்கூட கழுவமாட்டீரா? என்று; அவர் பேந்தப் பேந்த முழித்தார். ஏனெனில் அவர் உள்ளிப் பூண்டையே தொடவில்லை. பின்னர்தான் தெரிந்தது. அவர் செய்த செலீனிய ஆராய்ச்சியில் சில காம்பவுண்டுகள் COMPOUNDS– அதாவது கூட்டுப் பொருட்கள்– உடலில் நேரடியாக நுழைகிறது என்பதும் அவை மணம் வீசும் பொருட்கள் என்றும்.

செலீனியம் (SELENIUM) என்றால் சந்திரன், நிலவு என்று பொருள்.

 

ஸ்வீடனின் தலை நகரான ஸ்டாக்ஹோமில் 1817ல் ஜோன்ஸ் ஜாகப் பெர்ஸீலியஸ் (Jons Jacob  Berzelius இதைக் கண்டுபிடித்தார். அவருக்கு முன்னர் ஒருவர் கண்டுபிடித்த பொருள் டெல்லூரியம் (Tellurium) ; அதைச் சூடுபடுத்தினால் முள்ளங்கி மணம் வீசும். செலீனியத்தை சூடு படுத்தினாலும் முள்ளங்கி சமைக்கும் மணம் வீசியது; ஆனால் அது வேறு, இரு வேறு என்று தெரிந்தவுடன் சந்திரன் (செலீன் Selene) என்று பெயர் சூட்டினார். ஏன்? டெல்லூரியம் என்றால் (Tellus) பூமி என்று பெயர். அதற்குப் போட்டியாக செலீன் – நிலவு என்று வைத்தார். மணத்தினால் நிகழ்ந்த திரு ‘மணம்’!

 

செலீனியம் குறைவதற்கும் புற்று நோய் அதிகரிப்பதற்கும் கூட தொடர்பு உண்டு என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஆனால் உடலுக்குத் தேவையான செலீனியமோ 450 மைக்ரோகிராம்கள்தான்

 

செலீனியத்துக்கு ஓர் அதிசய சக்தி உண்டு. அதன் மீது ஒளிபட்டால் அது மின்சாரத்தை ஆயிரம் மடங்கு வேகமாக கடத்தியது. இதனால் இதை போட்டொகாப்பி (Photocopying) எடுக்கும் ஜெராக்ஸ் (Xerox) கருவிகளில் பயன் படுத்துகின்றனர். ஆனால் இதை டெலிவிஷனில் பயன்படுத்த ஆரம்ப காலத்தில் நடந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

 

இதை கண்ணாடித் தொழிற்சாலைகளிலும் பெயிண்ட் உற்பத்தியிலும் பயன்படுத்துகின்றனர்.

 

பூமியில் செலீனியம் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. சாக்கடையில் உள்ள பொருட்களை ஒருவகை பாக்டீரியாக்கள் செலீனியம் காம்பவுண்டுகளை உண்டாக்கி காற்று மண்டலத்தில் கலக்கச் செய்கின்றன. அவை மீண்டும் மழை மூலம் பூமிக்குத் திரும்பி வரும்.

 

சில இடங்களில் ஆடு, மாடுகள் குடிபோதையில் நடப்பது போல நடந்தன. ஏன் என்று ஆராய்ந்தபோது மாடுகள்  செலீனியத்தை அதிகம் ஈர்க்கும் தாவரங்களை மேய்ந்தது தெரிந்தது. மா ர்க்கோ போலோ (Marco Polo in Turkestan) துர்கிஸ்தான் சென்றபோது இப்படி மிருகங்கள்  தள்ளாடி நடை போட்டதை எழுதி வைத்துள்ளார். மில்க் வெட்ச் (Milk Vetch) என்று சொல்லப்படும் தாவரங்களை சாப்பிட்டதன் விளவு இது! அமெரிக்காவின் சில பகுதிகளில் இது அதிகம். ஆகையால் அங்குள்ள இடையர்கள் இந்த தாவரத்தை ‘பைத்தியச் செடி’ என்று அழைப்பர். ஆடு மாடுகளை அந்தப் பக்கம் போகாமல் பார்த்துக் கொள்வர்.

 

1983-ல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கெஸ்டர்டன் நீர்த்தேக்கத்தில் சாக்கடை நீர் கலந்ததால்  செலீனியம் அதிகரித்து  அங்கு வளர்ந்த பறவைகளைக் கொன்றது; பல உருமாறிப் பிறந்தன.

செலீனியத்துக்கு ஒரு அபூர்வ குணம் உண்டு. அதை தனியாக சாப்பிட்டால் அது விஷம், ஆனால் மற்ற விஷப் பொருட்களான காட்மியம், மெர்குரி (பாதரஸம்) ஆர்செனிக், தால்லியம் ( Cadmium, Mercury, Arsenic, Thallium) ஆகியவற்றை அது அடித்துவிடும். கடலிலுள்ள ட்யுனா (Tuna) மீன்கள் அதிக அளவு பாதரஸத்தை  எடுத்தாலும் அதற்குச் சமமாக செலீனியம் அணுக்களையும் கடலில் இருந்து எடுத்து விஷத்தை விஷத்தால் முறித்துவிடும். இது தெரியாததால் 1970-ல் ஒரு கூத்து நடந்தது.  அமெரிக்காவில் ட்யுனா  மீன் டப்பக்களை ஆரய்ந்தபோது மெர்குரி /பாதரஸம் அதிகம் இருந்தவுடன் சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்த லட்சக் கணக்கான டின்களை எடுத்து அழித்தனர். பின்னர் முற்கால மிருகங்களை மியூஸியம்களில் உள்ள பாட்டில்களில் ஆராய்ந்தபோது அவற்றிலும் அதே அளவு மெர்குரி இருந்தது தெரிந்தது. ஆக தற்கால புறச்சூழல் மாசுக்கும் (pollution) மெர்குரிக்கும் தொடர்பு இல்லை என்ற ஞானோதயம் பிறந்தது. பின்னர் நடந்த ஆராய்ச்சிகளில் கடல் வாழ் மீன்களும் ஸீல் (Seal, Walrus) வால்ரஸ் போன்ற பிராணிகளும் ஒரு அபூர்வ வேலையை செய்வது தெரிந்தது. அவை எடுக்கும் ஒவ்வொரு மெர்குரி அணுவுக்கும் சமமாக ஒரு செலீனியம் அணுவை எடுத்து ஈடு கட்டுகின்றன. இயற்கைதான் எவ்வளவு அற்புதங்களை செய்கிறது!!

செலீனியம் (EELENIUM) இரண்டு வகைகளில் கிடைப்பது ஒரு ரசாயன அதிசயம்;  இது உலோக ரூபத்திலும் பொடி ரூபத்திலும் கிடைக்கிறது.

 

செலீனியம் குறைந்தால் உடலில்  ரத்த அழுத்தம் ,புற்று நோய், ஆண்மை இழப்பு முதலியன ஏற்படும்

 

SELENEUM

SYMBOL –Se

ATOMIC NUMBER 34

ATOMIC WEIGHT- 78-96

MELTING POINT 217 C

BOILING POINT 685 C

OXIDE- SeO2

DEFICIENCY CAUSES- INFERTILITY, HIGH BLOOD PRESSURE, ANAEMIA, CANCER, ARHRITIS, PRE MATURE AGING, MUSCULAR DYSTROPHY, MULTIPLE SCEROSIS

DISCOVERED BY JONS JACOB BERZELIUS IN 1817 (STOCKHOLM, SWEDEN)

வாழ்க செலீனியம்- வளர்க பிள்ளைப் பேறு!

 

–subham–

நள தமயந்தி கதையில் விஞ்ஞான விஷயங்கள்-2 (Post No.5372)

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

Date: 28 August 2018

 

Time uploaded in London – 20-53 (British Summer Time)

 

Post No. 5372

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

நள தமயந்தி கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது; இதோ இரண்டாவது பகுதி:-

 

மஹாபாரதத்துக்கு முன்னர், இந்த நாட்டின் பூகோளம்- புவி இயல் எப்படி இருந்தது?

இந்தக் கதையில் நான்கு தேசங்கள் பற்றிக் கேள்விப் படுகிறோம்:

விதர்ப்ப நாடு- மஹாராஷ்டிரத்தின் நாக்பூர் பகுதி- இன்றும் அதே பெயரில் திகழ்கிறது.

நிஷாத நாடு- நிஷாத என்றால் ஏதோ எழுத்தறிவற்ற வேடர்கள் என்று வெளி நாட்டினர் எழுதுவர். ஆனால் நளனின் அறிவைப் பார்க்கையில் நிஷாத என்ற சொல்லின் பொருளே மறைந்து விடுகிறது! ராமாயணத்தில் வரும் குஹனும் நிஷாதர்களின் அரசனே. ஆனால் ராமாயண காலம் மிகவும் முந்தியது. தற்போதைய குவாலியர் பிரதேசம் நிஷாத நாடு என்று கருதப்படுகிறது.

 

தஸார்ண நாடு- தமயந்தியை சாத்தன் எனப்படும் வியாபாரிகள் கூட்டத்தில் கண்ட சேதி நாட்டு ராஜமாதா அவளை அழைத்து அடைக்கலம் கொடுக்கிறாள். ஒரு நாள் பேச்சுவாக்கில் அவள் விதர்ப்பநாட்டு மன்னன் பீமனின் மகள் என்று தெரிந்தவுடன், “தமயந்தி நானும் உன் தாயும் தஸார்ண நாட்டு மன்னன் சுதர்மாவின் மகள்கள் என்று சொல்லி அவளைக் கட்டிக்கொண்டு அழுகிறாள்; இது தமிழ் திரைப்படக் காட்சியைவிட பெரிய ‘சஸ்பென்ஸ்’ காட்சியாக அமைகிறது. என் கணவர் பெயர் வீரபாகு என்கிறாள். குறிப்பிடத்தக்க பெயர் வீரபாகு.

அப்பொழுது தமயந்தியின் முகத்தைத் துடைக்கையில் புருவங்களுக்கு இடையில் மச்சத்தைப் பார்த்துவிட்டு நீ என் தந்தையின் அரண்மனையில்தான் பிறந்தாய் என்கிறாள். மச்சத்தின் முக்கியத்துவதையும் கதையில் கொண்டு வருகின்றனர்!

 

 

மற்றொரு நாடு கோசல நாடு- அதன் தலைநகரான அயோத்தியில் மன்னனாக இருப்பவன் ருது பர்ணன். ஆக, மன்னர்களின் பெயர்களுடன் நமக்கு நாட்டின் புவியியலும் கிடைக்கிறது.

 

சுதேவன் என்ற பீமனின் நண்பன் தெரிவித்த தகவலின் பேரிலேயே ராஜ மாதா பூர்வ கதைகளை அறிந்தாள் உடனே அவளைப் பல்லக்கில் வைத்து பெரும் சேனையின் துணையுடன் விதர்ப்ப நாட்டுக்கே அனுப்பிவைத்தாள். சுதேவனும் உடன் செல்கிறான். அவனுக்கு விதர்ப்ப மன்னன் பீமன் 1000 பசுக்களைப் பரிசாகக் கொடுக்கிறான்.

MINUS X MINUS = PLUS

நளனைப் பாம்பு கடித்தவுடன் அவன் விகார உருவம் அடைந்து குட்டையாகிறான்; அங்கும் ஒரு சொற் புரட்டுக் கதை வருகிறது. அவன் காப்பாற்றிய பாம்பு பத்து வரை எண்ணச் சொல்கிறது அவன் 1,2, 3,4 என்று எண்ணி பத்து (தஸ) என்று முடிக்கிறான். இதற்கு பத்து என்றும் கடி என்றும் பொருள் உணடாகையால் பாம்பு நானைக் கடித்து விடுகிறது. நளன் வருத்தப்பட்டபோது கவலைப் படாதே விஷத்தை விஷம் முறிக்கும் (minus X minus = plus);

ஏற்கனவே கலி (கரி) புகுந்து ஏற்பட்ட கொடுமை இந்த விஷத்தால் கொஞ்சம் கொஞ்சமாக விலகும் என்கிறான். விஷத்துக்கு விஷம் முறிவு என்பது விஷம் பற்றிய அறிவியல் கூற்று. மஹாபாரதத்தில் விஷம் கொடுக்கப்பட்ட பீமனை துரியோதனாதிகள் பாம்புள்ள குளத்தில் தூக்கிப்போட்டவுடன் அவன் விஷப் பாம்புகளால் தாக்கப்பட்டு விஷத்தை விஷம் முறித்த கதையையும் நாம் அறிவோம். ஹோமியோபதியின் தத்துவமும் இதுவே; உடலில் எது விஷப்பொருளாகத் தாக்கி வியாதியை உண்டாக்குகிறதோ அதையே சிறுகச் சிறுகச் சாப்பிட்டால் விஷம் முறிந்து விடும்.

 

நின்ற சீர் நெடுமாறன் என்ற கூன் பாண்டியன் கதை பெரிய புராணத்தில் வருகிறது. ஞான சம்பந்தரின் அதிசய விபூதி கூன் பாண்டியனை நிமிர்த்திவிட்டு நின்ற சீர் நெடுமாறன் ஆக்கியது. அதுபோலவே சிறிது சிறிதாக விஷ்ம் நீங்கிய நளன் தமயந்தியிடம் முழு உண்மையையும் அறிந்தவுடன் கூன் மறைந்து விடுகிறது.

 

கலியின் மூலம் ஏற்பட்ட கெட்ட குணங்கள் கார்க்கோட பாம்பின் மூலம் அகற்றப்படுகிறது.

மேற்கோள்உத்தி

போஜ ராஜனிடம் கோபித்துக் கொண்டு ஓடிய உலகப் புகழ் காளிதாசனைக் கண்டுபிடிக்க போஜன் கவிதை டெக்னிக்கை/ உத்தியைப் பயன்படுத்தி அவனைக் கண்டுபிடித்து விடுகிறான். அது போல பாரப்பனன் பர்ணாதனைத் தூது அனுப்பிய தமயந்தியும் நளன் அடிக்கடி சொல்லும் (quotation) கொட்டேஷனை/ மேற்கோளைச் சொல்லி அனுப்புகிறாள்: “நற்குலத்தில் தோன்றிய பதிவ்ரதைகள் துன்பம் வந்தபோதும் தம்மையே காத்துக் கொள்வர்; ஒழுக்கம் தவற மட்டார்கள்” என்பது அந்த மேற்கோள். இதை பிராஹ்மணன் பர்னாதனிடம், ‘வாகுகன்’ என்ற பெயரில் ருதுபர்ணனிடம் சமையல் வேலை செய்த நளனும் சொன்னவுடன் அவன் இவனேதான் என்று கண்டு பிடித்து தமயந்தியிடம் சொல்லி விடுகிறான். இதுவும், அவள் திட்டம்போட்டு இரண்டாவது ஸ்வயம்வரத்தை அறிவித்ததும், தமயந்தி எவ்வளவு புத்திசாலி என்பதைக் காட்டுகிறது. மாபாரத காலத்துக்கு முன்னமேயே பாரத சமுதாயம் அறிவுசார்ந்த பெருமக்களையும் சுதந்திரப் பெண்மணிகளையும் கொண்டிருந்தது.

 

எட்டு அதிசயங்கள்

800 மைல் தொலைவை 24 மணி நேரத்தில் கடந்து விதர்ப்பதேச குண்டினபுரத்துக்கு அயோத்தி மன்னனை அழைத்து வந்த பாஹுகன் (வாகுகன்) நளனாகத் தான் இருக்கும் என்று கருதிய தமயந்தி, தனது பணிப்பெண் கேசினியை அனுப்பி ரஹஸியாமாக உளவறியச் சொல்கிறாள். அப்பொழுது தேவர்கள் நளனுக்கு அளித்த எட்டு அதிசய சக்திகளைக் கண்ணால் கண்டு தமயந்திக்கு ரிப்பொர்ட் (report)  தருகிறாள். உடனே தமயந்திக்கு அவன் நளன்தான் என்பது 100 சதவிகிதம் தெரிந்து விடுகிறது;

 

அவையாவன:

 

தாழ்வான வாயிலை அடைந்தால் அவன் குனிந்து செல்வதில்லை; வாயில் தானே உயர்கின்றது.

நெருக்கமான இடத்தில் அவன் நுழைந்தால் வழி தானே விரிவடைகிறது. மொஸஸுக்கு கடல் தானே விலகி வழிவிட்டதையும் அதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தையான கண்ணபிரானுக்கு யமுனை நதி விலகி வழிவிட்டதையும் பாம்பு குடை பிடித்ததையும் நாம் அறிவோம்.

 

நளன் பார்த்த மாத்திரத்தில் குடங்களில் நீர் நிரம்புகிறது.

அவன் ஒரு துரும்பை சூரிய ஒளியில் காட்டினாலும் அது தானாகவே பற்றி எரிகிறது. நீர் இல்லாமலும், நெருப்பு இல்லமலும் அறு சுவை படைக்க வல்லவன் அவன்.

 

நீர் அவன் இஷடப்பட்டபடி பெருகுகிறது நெருப்பு அவனைச் சுடுவதில்லை. (பகவத் கீதையில் ஆத்மாவின் வருணனை நினைவுக்கு வரும்)

 

மலர்களை அவன் கசக்கினாலும் கசங்குவதில்லை அது மணம் வீசி கசங்காமல் நிற்கிறது.

 

இவற்றையெல்லாம் பார்த்த கேசினி அப்படியே அறிவிக்கிறாள்!

 

இந்தக் கதையில் நளனும் தமயந்தியும் பிரிந்திருந்த காலம், ‘மூன்று ஆண்டுகள்’ என்ற குறிப்பு இருப்பது கதையின் உண்மைத் தன்மைக்குச் சான்று பகர்கின்றது; ராமாயணத்தில் வண்ணான் பேச்சைக் கேட்டு சீதையை ராமன் சந்தேகித்து பூக்குழி இறங்கச் சொன்ன விஷயம் நமக்குத் தெரியும். அதே போல நளனும் மூன்றாண்டு தனித்திருந்தாயே; உன் கற்பின் திறன் என்னவோ என்று சம்சயத்தைக் கிளப்பவே வாயு தேவன் ஆகாயத்தில் இருந்து தமயந்தி கற்புக்கரசி என்று ‘சர்டிபிகேட்’ (Certificate) கொடுக்கிறான்; கதை முழுதும் திகிலூட்டும் காட்சிகள்; திரைப்பட டைரக்டர்கள் தோற்று விடும் ‘சஸ்பென்ஸ்’ நிறைந்தது நள தமயதி கதை அனைவரும் மஹாபாரதத்தையும் அதீவீர ராம பாண்டியன், புகழேந்திப் புலவர் ஆகியோரின் நள உபாக்கியானங்களையும் கற்றல் நன்றே.

 

கல்வி  தானம்

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’— என்ற குறளின் தத்துவத்தை அறிந்த நளன், ருதுபர்ணனுக்கு அஸ்வ சாஸ்திர ரஹஸியங்களைச் சொல்லித் தருகிறான். உரியவர்களுக்கு கல்விதானம் செய்ய வேண்டும் என்பதை இக்கதை விளக்கும்; இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் சூதாட்ட ரஹஸியங்களை ருது பர்ணனிடம் கற்ற நளன், மீண்டும்

தனது தம்பி புஷ்கரனை சூதாட்டத்துக்கு அழைத்து அவனை வென்று, முன்னர் இழந்த நாட்டை மீட்டு கதையை இனிதே முடிக்கிறான். அது மட்டுமல்ல; சகோதரன் என்பதால் அவனை மன்னித்து அவனுக்கு பரிசும் தருகிறான். “பகைவனுக்கு அருள்வாய்- நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்” என்ற பாரதியின் வாக்கை மெய்ப்பிக்கிறான்.

வணிகர் கூட்டம்

காட்டில் கூட்டம் கூட்டமாகச் செல்லும் வணிகர் கூட்டத்தை யானை தாக்கி அனைவரும் சிதறி ஓடிய காட்சி மஹா பாரதத்தில் விரிவாக உள்ளது. அதில் தமயந்தி அதிசயமாக உயிர் தப்புகிறாள். இப்பொழுது பெண்களைக் கிண்டல் செய்து வம்புக்கிழுக்கும் கும்பல் அப்போதும் இருந்ததையும் பெரியோர்கள் தமயந்தியைக் காத்ததையும், நளோபாக்கியானம் விளக்குகிறது. அக்கால சமுதாய நிலை, வணிகரின் வியாபார உத்திகளை இந்த உபாக்கியானப் பகுதி விளக்குகிறது

முனிவர்களின் பங்கு பணி– Psychologists

முனிவர்களின் பங்கு பணி இதில் முக்கியமானது ; இந்திர லோகத்துக்கு மாதலி ஓட்டிச் சென்ற ராக்கெட்டில் வெளிக் கிரகத்துக்குப் போன அர்ஜுனன் திரும்பி வரவில்லையே என்று நொந்துபோய்க் கிடந்த பாண்டவ சஹோதர்களுக்கு இந்த அருமையான கதையை பிருகதஸ்வர் என்ற முனிவர் நாரதர் சொன்ன படியே சொல்கிறார்; அக்காலத்தில் முனிவர்கள்  இக்கால  ’ஸைகாலஜிஸ்டுகள் (Psychologists) செய்யும் பணியை சம்பளம் வாங்காமல் செய்தார்கள்;  தற்போது பிரிட்டனில் (Psychologists) ஸைகாலஜிஸ்டுகளின் வருட சம்பளம் 60,000 பவுண்டுகள்; அக்காலத்தில் வீட்டிலுள்ள கிழப் பாட்டிகளும் காட்டிலுள்ள முனிவர்களும் இந்த சேவையைக் காசு வாங்காமல் செய்தனர்! பர்வதர் என்ற முனிவரும் நாரதருடன் சென்றதாக வனபர்வத்தில் காண்கிறோம்.

 

இன்றும் கூட ஒருவர் நன்றாகச் சமைத்தால் நள பாகம், பீம பாகம் என்று சொல்கிறோம். கை,கால்களை சரியாக கழுவாமல் வந்தால் அதன் வழியாக சனி நுழைவான் என்று குழந்தைக ளை மிரட்டுகிறோம்; அக்காலத்திலேயே ‘சுத்தம் சோறு போடும்’ என்று பெரியோர்கள் சொல்லிக் கொடுக்க இந்தக் கதைகள் உதவி செய்தன.

 

தடிப்பான எழுத்துகளில் உள்ள விஷயங்கள் நேற்றைய கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

1.பிற கிரஹங்களில் வாழும் மக்கள் நிலை (Extra Terrestrials)

2.மாறுவேடக் கலை ( Art of Disguise)

3.எட்டு அதிசய சக்திகள் (மாயாஜாலக் கலை) Eight Paranormal Powers

4.பறவைகளை தூது விடப் பழக்கல் (Bird Migration and Training Birds for communication)

5.சமையல் கலை (Art of Cookery)

6.தேரோட்டும் கலை (Art of Charioting)

7.எண் ரஹஸியம் (Magic Numbers)

8.சூதாட்டக் கலை (Art of Gambling and Manipulation)

9.மாயமாய் மறையும் கலை (Invisible Cloaking)

10.விஷத்தை விஷம் முறிக்கும் அறிவு (Toxicology)

11.மனநலம் தரும் சொற்கலை (Moral Teaching and Psychology)

12.கடிதம் எழுதும் கலை (Letter Writing by Kings)

13.ஸத்தியமே பெரிது (Truth alone Triumphs)

14.தூய்மையின் அவஸியம் (Necessity of cleanliness)

15.கவிதைக் கலை (Role of Poetry)

16.பார்ப்பனரைத் தூதுவிடும் கலை (Brahmin Ambassadors/ Role of Ambassadors)

17.வணிகர்கள் (சாத்தன்) பயணக் கலை (Travellers’ Tale & Business Travel)

18.பாரத நாட்டின் புவியியல் (Geography)

19.பாரத நாட்டின் வரலாறு (History)

20.முனிவர்களின் பங்கு பணி (Role of Saints/Pscychologists)

21.குழந்தைகள் வளர்ப்புக் கலை (Child care)

22.பெண்களின் மஹத்தான சுதந்திரம் ( Unusual Freedom of Indian Women)

23.மச்ச சாஸ்திரம் (Body marks)

24.அஸ்வ (குதிரை) சாஸ்திரம் (Science of Horses)

25.வ்ருக்ஷ (மரம்) சாஸ்திரம் (Tree Science)

  1. தகவல் பரிமாற்றம்(SHARING/ EXCANGE OF INFORMATION)

 

 

Also read

நள தமயந்தி – சுவையான காதல் கதை! (Post No.5215) | Tamil and Vedas

tamilandvedas.com/2018/07/14/நள…

Written by S NAGARAJAN Date: 14 JULY 2018 Time uploaded in London – 6-49 AM (British Summer Time) Post No. 5215 Pictures shown here are taken from various …

 

த்ரிவிக்ரம பட்டரின் நள சம்பு முடியாதது ஏன்? (Post No.4873 …

swamiindology.blogspot.com/2018/04/post-no4873.html

post no. 4873. pictures are taken … த்ரிவிக்ரம பட்டரின் நள சம்பு முடியாதது ஏன்? … நள …

–subham—

 

Interesting Chemistry Anecdotes (Post No.5369)

 

Compiled BY LONDON SWAMINATHAN

Date: 27 August 2018

 

Time uploaded in London – 16-11 (British Summer Time)

 

Post No. 5369

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

From very young age I was very much interested in the Periodic Table. At one time I memorised all the elements in the periodic table. Then I bought The Russian series of Physics for Entertainment, Mathematics for Entertainment, Chemistry, astronomy boos in the same series. Now I started reading another book which I bought ten years ago. Still I am toying with my pet theory or hypothesis that there is a periodic table for all subjects. God has created the world in a mathematical order which we see in the phyllotaxy of the plants and Fibonacci numbers.

Let me give you some interesting anecdotes from ‘Nature’s Building Blocks’ by John Emsley OUP, 2001

Xxx


Berkelium Jokes
The discovery of berkelium caught the attention of The New Yorker magazine which saw it as part of a growing number of new elements and jokingly suggested the University of California at Berkeley had missed a golden opportunity to immortalize itself for ever on the Periodic table. The article said that they should have named the sequence of trans -uranium elements ‘universitium’, ‘ofium ‘, ‘californium ‘ and ‘berkelium ‘.
Seaborg replied to the article, saying that they had thought this but this would open door to someone in New York discovering the next two elements naming them ‘newium, and ‘yorkium’. The New Yorker retorted that they were already hard at work on the new elements, but so far all they had was their names.

Xxx

Aluminium Mysteries
Analysis of a curious metal ornament removed from the tomb of Chou Chu, a military leader in the third century China, showed that it was 85% aluminium. How it was produced remains a mystery.
As long ago as the first century CE, the Roman army doctor Dioscorides wrote a medical text De Materia Medica , in which he recommended alum for stopping bleeding and for various skin conditions such as eczema, ulcers, dandruff etc (ALUM= aluminium compound)

Gems and aluminium
Several gem stones are made of the clear crystal form of aluminium oxide known as corundum. The presence of traces of other metals creates various colours:-
Iron producers yellow Topaz
Cobalt create blue Sapphires
Chromium makes red Rubies
All these are now easy and cheap to manufacture artificially.

Xxx


Emeralds of India
Emeralds have been traded since the time of ancient Egyptians and are to be found in early jewellery across Europe, including that of the Celts. The Romans and Celts got their emeralds mainly from Austria, although some came from Pakistan.

More surprising is the discovery that the Mogul rulers of India got some of their emeralds from South America. Analysis of gems from the treasure of the eighteenth century Nizam of Hyderabad showed they were of Colombian Origin; this has been interpreted to mean that there was trade across the Pacific Ocean by Spanish vessels which carried emeralds to their colonies in the Philippines, from where they eventually reached India.

Xxx

 

Poem about Periodic Table
There is antimony, arsenic, aluminium ,selenium ,
And hydrogen and oxygen and nitrogen and rhenium,
And nickel, neodymium, neptunium, germanium
And iron, americium, ruthenium, uranium ,
Europium, zirconium, lutetium, vanadium,
And lanthanum and osmium and astatine and radium ,
And gold and protactinium and indium and gallium,
And iodine and thorium and thulium and thallium,
There’s yttrium, ytterbium, actinium, rubidium,
And boron, gadolinium, niobium, iridium,
And strontium and silicon and silver and samarium,
And bismuth, bromine, lithium, beryllium ,barium,
There is holmium and helium and hafnium and erbium,
And phosphorus and francium and fluorine and terbium
And manganese and mercury, molybdenum, magnesium,
Dysprosium and scandium and cerium and caesium,
And lead, praseodymium, and platinum and plutonium ,
Palladium, promethium, potassium, polonium
And tantalum and technetium, titanium, tellurium,
And cadmium and calcium and chromium and curium,
There’s sulphur, californium and fermium, berkelium,
And also mendelevium, einsteinium and nobelium,
And argon, krypton, neon , radon, xenon, zinc and rhodium,
And chlorine, cobalt, carbon ,copper, tungsten, tin and sodium
These are the only ones of which the news has come to Harvard
And there may be many others, but they haven’t been discavard.
Tom Lehrer wrote this amusing poem in the 1950s. He entertained a whole generation of chemists when he sang his poem to the tune of the song ‘I am the Very Model of a Modern Major General from Gilbert and Sullivan’s operetta ‘The Pirates of Penzance’.

Xxx SUBHAM Xxx

நளதமயந்தி கதையில் விஞ்ஞான விஷயங்கள்-1 (Post No.5368)

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

Date: 27 August 2018

 

Time uploaded in London – 13-16 (British Summer Time)

 

Post No. 5368

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

நள தமயந்தி கதை மிகவும் சுவையான கதை. இதிலுள்ள விஷயங்களை ராமாயண நிகழ்ச்சிகளுடனும் மஹாபாரதத்தில் பாண்டவர்களின் கதையுடனும் ஒப்பிட்டுப் பார்த்தால் வியப்பான ஒற்றுமைகள் புலப்படும் அவைகளைப் போகிற போக்கில் தொட்டுக் காட்டுகிறேன். இந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் நான் காட்ட விரும்புவது விஞ்ஞான விஷயங்களாகும்.

 

நள தமயந்தி கதையில் வரும் விஞ்ஞான விஷயங்கள்:-

 

1.பிற கிரஹங்களில் வாழும் மக்கள் நிலை (Extra Terrestrials)

2.மாறுவேடக் கலை ( Art of Disguise)

3.எட்டு அதிசய சக்திகள் (மாயாஜாலக் கலை) Eight Paranormal Powers

4.பறவைகளை தூது விடப் பழக்கல் (Bird Migration and Training Birds for communication)

5.சமையல் கலை (Art of Cookery)

6.தேரோட்டும் கலை (Art of Charioting)

7.எண் ரஹஸியம் (Magic Numbers)

8.சூதாட்டக் கலை (Art of Gambling and Manipulation)

9.மாயமாய் மறையும் கலை (Invisible Cloaking)

10.விஷத்தை விஷம் முறிக்கும் அறிவு (Toxicology)

11.மனநலம் தரும் சொற்கலை (Moral Teaching and Psychology)

12.கடிதம் எழுதும் கலை (Letter Writing by Kings)

13.ஸத்தியமே பெரிது (Truth alone Triumphs)

14.தூய்மையின் அவஸியம் (Necessity of cleanliness)

15.கவிதைக் கலை (Role of Poetry)

16.பார்ப்பனரைத் தூதுவிடும் கலை (Brahmin Ambassadors/ Role of Ambassadors)

17.வணிகர்கள் (சாத்தன்) பயணக் கலை (Travellers’ Tale & Business Travel)

18.பாரத நாட்டின் புவியியல் (Geography)

19.பாரத நாட்டின் வரலாறு (History)

20.முனிவர்களின் பங்கு பணி (Role of Saints/Pscychologists)

21.குழந்தைகள் வளர்ப்புக் கலை (Child care)

22.பெண்களின் மஹத்தான சுதந்திரம் ( Unusual Freedom of Indian Women)

23.மச்ச சாஸ்திரம் (Body marks)

24.அஸ்வ (குதிரை) சாஸ்திரம் (Science of Horses)

25.வ்ருக்ஷ (மரம்) சாஸ்திரம் (Tree Science)

  1. தகவல் பரிமாற்றம் (SHARING/ EXCANGE OF INFORMATION)

 

இந்தக் கதையின் மூலம், மஹாபாரதத்தின் 18 பர்வங்களில் மூன்றாவதாக வரும் வன பர்வத்தில் வருகிறது.

 

நள தமயந்தி சரிதத்தைப் புகழேந்திப் புலவரும், அதிவீரராம பாண்டியனும் தமிழில் யாத்துள்ளனர். கதையின் சுவை காரணமாகவும் உருக்கமான காதல் கதை என்பதாலும் அதிலுள்ள பல அறிவுசார்ந்த விஷயங்களைக் கவனிப்பதில்லை. சிலப்பதிகாரம், தேவாரம் போன்ற நூல்களில் இந்த கதையின் மேற்கோள்கள் வந்த போதும் இதிலுள்ள பல அம்சங்கள் சங்க இலக்கியத்திலும் உள்ளதை நினைவு கூறுதல் அவஸியம்.

 

ஒவ்வொன்றாகக் காண்போம்:-

 

கதையின் மிகச் சுருக்கம்:- நளனும் தமயந்தியும் காதலித்துக் கல்யாணம் கட்டினர். தூய்மையற்ற நிலையில் நளனைக் கலி பற்றிக் கொண்டான். சூதாட்டத்தால் நாடிழந்த நளன் மனைவியுடன் காடேகி, இருவரும் பிரியும் நிலை ஏறபடுகிறது. சமையல் கலை, தேரோட்டக் கலை, கவிதைக் கலையில் வல்ல நளன், தமயந்தியின் சமயோஜித புத்தியால் மீண்டும் இணைகின்றனர். கதையும் சுபமாக முடிந்தது. இடையிலோ தமிழ்த் திரைப்படங்களை விடக் கூடுதலான திருக்கிடும், திகிலூட்டும் சஸ்பென்ஸ் (Thrilling and Exciting Suspense) காட்சிகள்.

 

1.பிற கிரஹங்களில் (E.T.) வாழும் மக்கள் நிலை

 

நளனைக் கல்யாணம் செய்துகொள்ளும் ஆசையுடன் அக்னி, இந்திரன், யமன், வருணன் ஆகிய நால்வரும் வருகின்றனர். அவர்கள் மாறுவேடக் கலையில் வல்லவர்கள். தமயந்தி நளனைத்தான் காதலிக்கிறாள் என்பதை அறிந்து அவர்கள் அனைவரும் நளன் போலவே தோன்றினர். இது அக்கால மாறுவேடக் கலையின் வளர்ர்ச்சியைக் காட்டுகிறது. ஆயினும் தமயந்தி அவர்களை அடையாளம் காண உதவுவது பிற கிரஹ வாசிகளின் தனித் தன்மையாகும்;

தேவ லோகத்தில் வாழ்வோருக்கு கண்கள் இமைக்காது; கால்கள் நிலத்தில் ஊன்றாமல் அவர்கள் மிதப்பர்; அணிந்துள்ள மாலைகள் வாடாது. வெளிக் கிரஹ வாஸிகள் பற்றி இவ்வளவு தெளிவாக வருணிப்பது இந்து மதம் ஒன்றுதான்.

 

அவர்களிடம் உதவுவதாக வாக்களித்த பின்னரே ,அவர்களும் தமயந்தியைத் திருமணம் செய்ய விரும்புவது தெரிந்தது. ஆயினும் நளன் சொன்ன சொல்லை மாற்றுவது தருமம் அல்ல என்று அவர்கள் சொன்னதை தமயந்தியிடம் சொல்லி, தமயந்தி சொன்னதை அப்படியே மாற்றாமல் திரிக்காமல் நான்கு தேவர்களிடமும் சொல்லி விடுகிறான்.

 

 

2.பறவைகளைத் தூதுவிடப் பழக்கல்

பறவைகளின் மூலம் செய்தி அனுப்பும் கலை மஹாபாரதத்துக்கும் முன்னரே (கி.மு.3100-க்கும் முன்னதாக) நளன் காலத்திலேயே இருந்தது. நளன் அன்னப் பறவைகள் மூலம், காதலி தமயந்திக்குச் செய்தி அனுப்புகிறான். இந்த உத்தியைப் புறநானூற்றிலும் (பாடல் 67) காணலாம்.

  1. சமையல் கலை

இந்திய மொழிகளில் நள பாகம், பீம பாகம் என்று இரண்டு வழக்குகள், மரபுச் சொற்றொடர்கள் (Phrases) உண்டு. நளன் அதிசயமாகவும், சுவையாகவும் சமைக்க வல்லவன். இதனால் அவனுக்கு வேறு ஒரு இடத்தில் வேலையும் கிடைத்தது. சமையல் மூலம் தமயந்தி அவனை அடையாளம் காணவும் முடிந்தது. அந்தக் காலத்தில் கல்யாணம் போன்ற வற்றில் ஆண்களே சமைப்பர். சமையல் கலையின் உச்சம் நளன்!

 

4.தேரோட்டும் கலை

தேர்களை மிகவும் வேகமாக ஓட்டுவதில் வல்லவன் நளன். ருது பர்ணனின் மேலாடை விழுந்தவுடன் தேரை நிறுத்தச் சொன்னபோது நளன் எவ்வளவு தூரம் சென்றான் என்ற கணக்கு நள சரிதத்தில் உளது. மேலும் அயோத்திக்கு, விதர்ப்ப நாட்டிலிருந்து ஒரே நாளில் 100 யோஜனை தூரம் (800 மைல்) வந்த வேகமும் வியப்புக்குரியது. பார்முலா ஒன் ரேஸிங் (Formula One Racing Cars) கார்கள் போல நளன் வந்திருக்க வேண்டும்!!

 

5.எண் ரஹசியமும் சூதாடும் கலையும்

மஹாபாரதத்திலும் தர்மன் சூதாட்டத்தால் நாடிழந்ததைக் காண்கிறோம். அதே போல நளனும் சூதாட்டக் கலையில் நாடிழக்கிறான். ஆனால் அவனுக்கு எண்களின் ரஹஸியம், அதை எப்படி சாதகமாக வருமாறு செய்தல் முதலியன தெரியாது. பின்னர் மன்னன் ருது பர்ணன் அவனுக்குக் கற்றுத் தருகிறான். காஸினோ (Casino) போன்ற சூதாட்டக் களங்களுக்குப் போவோருக்கு சில தந்திரங்கள் தெரியும். இது போல சூதாட்டக் காரர்களுக்கும் சில ரஹஸியங்கள் தெரியும்.

 

5.பெண்களின் மஹத்தான சுதந்திரம்

 

இந்திய க்ஷத்ரிய குலப் பெண்களுக்கு இருந்த சுதந்திரம் உலகில் வேறு எவருக்கும் இல்லை. திரவுபதி, சீதை, தமயந்தி, காளிதாசனின் இந்துமதி ஆகியோர் ஸ்வயம்வரம் வைத்து ஒரு போட்டியில்

வென்றோரையோ அல்லது தனக்கு மனதுக்குப் பிடித்தோரையோ தேர்ந்து எடுத்தது உலகில் காணாத நடைமுறை. ஆரியர்கள் வெளி நாட்டிலிருந்து வந்தனர் என்று கூறும் அரை வேக்காடுகளுக்கு சம்மட்டி அடி தரும் வாதம் இது. இப்படியொரு வழக்கம் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் கிடையாது. காளிதாசனை ஏமாந்து போய் மணந்த பெண் உலகிலேயே அறிவாளியைத்தான் மணப்பேன் என்று சொல்லி, கேள்வி கேட்ட கதை இதற்கு ஒரு சான்று. மதுரையை ஆண்ட மீனாட்சி தன்னை வெல்லும் ஆண்மகனையே மணப்பேன் என்று சவால்விட்டு சுந்தரேஸ்வரரை மணந்த ‘திக்கு விஜயம்’ இன்றும் ஆண்டுதோறும் மதுரை விழாவில் நடத்திக் காண்பிக்கப்படுகிரறது. மனுவும் தொல்காப்பியரும் எட்டு வகை திருமணங்கள் பற்றிப் பேசுவது ஆரிய-திராவிடப் பிரிவினை வாதம் பேசுவோரின் சவப்பெட்டியில்  பெரிய ஆணி அறைகிறது.

 

6.மாயமாய் மறையும் கலை

 

தமயந்தி இருக்கும் இடத்தை நான் எப்படி அடைய முடியும் என்று நளன் கேட்ட போது அவனை மாயாமாய் மறையும் படி செய்கின்றனர் தேவர்கள்; இதை இன்று விஞ்ஞானக் கதைப் புத்தகங்களில் படிக்கிறோம். மறையும் (Invisible Cloaking)  துணிவகைகளைக் கண்டுபிடித்தது பற்றிப் படிக்கிறோம். அந்தக் காலத்தில் வெளிக் கிரஹவாசிகளுக்கு இது தெரிந்து இருந்ததால் நான்கு தேவர்களும் அவனுக்கு இந்தச் சக்தியைக் கொடுக்கின்றனர்.

7. அஸ்வ சாஸ்திரம்,  வ்ருக்ஷ சாஸ்திரம்

 

குதிரைகளுக்கும் க்ஷாமுத்ரிகா லக்ஷணம் உண்டு. அவைகளை வேகமாகச் செல்ல சாலிகோத்ர முனிவர் எழ்,,,,,,,,,,,,,,,திய சாத்திரம் தெரிந்திருக்க வேண்டும். இது நளனுக்குத் தெரியும். கிமு. 1400ல் துருக்கி நாட்டில் கிக்குலி என்பவர் எழுதிய குதிரைப் பயிற்சிப் புஸ்தகம் கிடைத்துள்ளது; அதில் ஸம்ஸ்க்ருதக் கட்டளைகளே உள்ளன. துரக என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லே துருக்கி ஆனது. ‘துரக’ என்பதே தமிழில் குதிரை என்று ஆயிற்று; ஹோமர் கி.மு 800-ல் எழுதிய இலியட்டில் அவரும் ட் ரோ ஜன் (TROJAN HORSE) ஹார்ஸ் என்பதும் துரக= ட் ரோ க / ஜ என்பதிலிருந்தே வந்தது. துரக =கதுர= குதிரை. (TROJAN=TROGO=THURAGA=TURKEY= HORSE IN SANSKRIT= DYSLEXIC IMAGE IN TAMIL KUDRA= TRGA)

 

ஒரு மரத்தில் எத்தனை இலைகள், எத்தனை பழங்கள் இருக்கும் என்பதைச் சொல்லி எல்லோரையும் நளன் அசத்தும் விஷயமும் நள சரிதத்தில் வருகிறது.

 

8. பார்ப்பன தூது

 

பார்ப்பனர்களை தூது விடும் விதியைத் தொல்காப்பியம் செப்புகிறது. சிலப்பதிகாரத்திலும் (மாதவி தூது) அதைக் காண்கிறோம்; பிராஹ்மணர்கள் ஸத்தியத்தின் வடிவமாகத் திகழ்ந்ததால் அவர்களை பூலோக தேவர்கள் என்று கம்பர் முதலியோர் பாராட்டுவர். அவர்களைத்தான் தூதுக்கு அனுப்ப வேண்டும் என்பதை தொல்காப்பியம், புற நானூறு, மஹாபாரதத்திலும் (நள சரிதம்)  காண்கிறோம். ஆரியர்- திராவிடர் என்று பிரித்துப் பேசுவோருக்கு மஹாபாரதமும் தொல்காப்பியமும் சுத்தியல் அடி தருகிறது. புற நானூற்றிலும் தூது சென்ற பார்ப்பானைக் கொன்ற மறவர்கள் வருத்தப்படும் காட்சி பாடப்பட்டுள்ளது.

வாஸ்கோடகாமா என்னும் போர்ச்சுகீஸிய கிறிஸ்தவ வெறியன் தூது வந்த பார்ப்பானை கப்பலிலேயே கண்டம் துண்டமாக வெட்டி மூட்டை கட்டி, கொச்சி மன்னனுக்குத் திருப்பி அனுப்பிய வரலாற்றுக் குறிப்பைப் படிப்போருக்கு பார்ப்பன தூது 5000 ஆண்டு வழக்கம் என்பது விளங்கும். இதுவும் உலகில் இல்லாத பாரதப் புதுமை. திராவிடர் தனிப் பண்பாடு கொண்டோர் என்று பேசுவோரின் கபாலத்தில் ஆணி அடிக்கிறார் தொல்காப்பியர்.

TO BE CONTINUED…………………………………..

 

Also read

நள தமயந்தி – சுவையான காதல் கதை! (Post No.5215) | Tamil and Vedas

tamilandvedas.com/2018/07/14/நள…

Written by S NAGARAJAN Date: 14 JULY 2018 Time uploaded in London – 6-49 AM (British Summer Time) Post No. 5215 Pictures shown here are taken from various …

 

த்ரிவிக்ரம பட்டரின் நள சம்பு முடியாதது ஏன்? (Post No.4873 …

swamiindology.blogspot.com/2018/04/post-no4873.html

post no. 4873. pictures are taken … த்ரிவிக்ரம பட்டரின் நள சம்பு முடியாதது ஏன்? … நள …

–subham–