Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ஒருவருடைய கையெழு த்து அவருடைய
குணாதிசயங்களைக் காட்டும் என்று கருதி
அவருடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பது, அதாவது வேலை தருவது,
பதவி உயர்வு தருவது அல்லது தர மறுப்பது இவை எல்லாம் அறிவியல் ரீதியிலானது அல்ல என்று பல விஞ்ஞான சஞ்சிகைகள் எழுதியுள்ளன .ஆகையால் கையெழுத்து இயல் (Graphology) பற்றி உறுதியாக ஒன்றும் சொல்வதற்கில்லை. இத்துடன் 1992ல் நான் தினமணியில் எழுதிய கட்டுரையை இணைத்துள்ளேன் .
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
பாக்யா 1-12-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு இருபத்தி ஒன்றாம் கட்டுரை அத்தியாயம் 437
செஸ் விளையாட்டு உடலின் ஆற்றலை உறிஞ்சுகிறதா? பரபரப்பு ஆய்வு!
ச.நாகராஜன்
அனடாலி கார்பாவ் (Anatoly Karpov – தோற்றம் 23-5-1951 இப்போது வயது 68) உலகின் மாபெரும் செஸ் சாம்பியன். 1999ஆம் ஆண்டு விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் வரை அவரே உலகின் செஸ் சாம்பியன்.
ஆனால் 1984ஆம் ஆண்டு நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டி திடீரென்று பாதியில் நிறுத்தப்பட்டது. கார்பாவ் அவரை எதிர்த்து விளையாடிய காஸ்பரோவை (Garry Kasparov தோற்றம் : 13-4-1963 இப்போது வயது 56) விட முன்னணியில் தான் இருந்தார். இருந்தும் ஏன் செஸ் போட்டி நிறுத்தப்பட்டது?
இந்தப் போட்டி நடைபெற்ற போது ஐந்து மாதங்களில் கார்பாவ் 10 கிலோ எடையை இழந்திருந்தார். இதனால் போட்டியை நடத்தியவர்கள் கவலையுற்று போட்டியை நிறுத்தி விட்டனர். உலக செஸ் சாம்பியனின் உடல் நிலை கவலைக்கிடமாக ஆகி விடக்கூடாது என்பதே அவர்களின் கவலை.
கார்பாவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இப்படி விளையாட்டில் தீவிரமாக சிந்திப்பதில் ஒரு நாளைக்கு 6000 கலோரியை அவர் செலவிட வேண்டி இருந்தது என்பது தெரிய வந்தது.
விஞ்ஞானிகள் அவர் ஏன் தன் சக்தியை இழந்தார்? செஸ் போட்டியில் எந்தக் காயை எப்படி நகர்த்தலாம் என்று இடைவிடாது சிந்தித்ததாலா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா – மூளை அவ்வளவு சக்தியை உறிஞ்சுகிறதா? – என்று ஆராயத் தொடங்கினர்.
சாதாரணமாக உடல் சும்மா இருக்கும் போது – அதாவது சுவாசம், ஜீரணம், உடலைத் தகுந்த வெப்பநிலையில் வைத்திருப்பது போன்ற இயல்பான காரியங்களைத் தவிர வேறெதுவும் செய்யாதிருக்கும் போது – உடலின் மொத்த ஆற்றலில் மூளை 20 முதல் 25 சதவிகிதம் உபயோகிக்கிறது. இதற்கான குளுகோஸை அது எடுத்துக் கொள்கிறது.
ஒரு நாளைக்கு ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி 350 முதல் 450 கலோரிகள் வரை இதற்காக தேவைப்படுகிறது. ஆனால் குழந்தைப் பிராயத்திலோ – 5 முதல் 6 வயதாக இருக்கும் போது மூளை உடலின் ஆற்றலில் 60 சதவிகிதத்தை எடுத்துக் கொள்கிறது. இதை டியூக் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டக் பாயர் தெளிவு படுத்துகிறார். இப்படி மூளை உடல் சக்தியை எடுத்துக் கொண்டாலும் அது உடல் எடையில் 2 சதவிகிதமே ஆகும்.
புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் மூளைக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. ஆனால் தனது வேலையில் ஒருவர் நல்ல திறமை பெற்று விட்டார் எனில் மூளைக்கு அதிக சக்தி தேவைப்படுவதில்லை.
அறிவியல் ரீதியாக இது கண்டுபிடிக்கப்பட்ட போது செஸ் விளையாட்டில் மிகத் திறமைசாலியான கார்பாவ் ஏன் 10 கிலோ எடையை இழந்தார் என்ற கேள்வி எழுந்தது.
இதற்கான காரணம் அதிகம் சிந்தித்தனால் அவர் உடல் எடையை இழக்கவில்லை, மாறாக தீவிரமான விளையாட்டின் போது அவர் மனஉளைச்சலுக்கு ஆளானதோடு, வேளாவேளைக்கு உணவை எடுத்துக்கொள்ளவில்லை, அதனால் தான் அவருக்கு எடை இழப்பு ஏற்பட்டது என்று அறிவியல் நிபுணர்கள் முடிவுக்கு வந்தனர். சாதாரணமாக, நிபுணர்களாக உள்ள செஸ் விளையாட்டு வீரர்கள் தீவிரமாக விளையாடுகையில் அவர்களுக்கு மன இறுக்கம் ஏற்படுகிறது. இதனால் இதயத் துடிப்பு அதிகமாகிறது. வேகமாக சுவாசிக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. உடல் வியர்க்கிறது. இவ்வளவும் சேரும்போது அவர்களது உடல் அதிக கலோரியை இழக்க ஆரம்பிக்கிறது. அத்துடன் இந்த விளையாட்டு நிபுணர்கள் எட்டு மணி நேரம் வரை தொடர்ந்து விளையாட்டில் அமர வேண்டி நேர்கிறது. அப்போது தினசரி நடைமுறையில் இருக்கும் உணவுப் பழக்கத்தை அவர்களால் மேற்கொள்ள முடிவதில்லை. ஆகவே ஆற்றல் இழப்பு அதிகமாக ஏற்படுகிறது. இது சாதாரணமாக அரங்கத்தில் நிகழ்ச்சிகளை நடத்தும் இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் ஒன்று.
உங்கள் உடலை ஒரு வேலையில் தீவிரமாக ஈடுபட வைத்தால் அப்போது அதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. அதனால் உடலில் எடை இழப்பு ஏற்படும் என்பது அறிவியல் கண்டுபிடிப்பு.
ஆகவே கார்பாவ் ஏன் உடலில் 6000 கலோரியை இழந்தார் என்ற கேள்விக்கு, அவர் செஸ் விளையாட்டின் போது அதிகம் சிந்தித்ததால் எடையை இழக்கவில்லை; மாறாக அவர் மன இறுக்கத்திற்கு ஆளானதும், வேளா வேளைக்குச் சரிவர உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்பதுமே காரணங்கள் என்பது முடிவாகத் தீர்மானிக்கப்பட்டது.
ஆகவே எவ்வளவு வேண்டுமானாலும் தீர்க்கமாக சிந்திக்கலாம் என அறிவியலே முத்தாய்ப்பாகக் கூறி விட்டதால் இனி கவலைப்படாமல் நிறைய சிந்திக்கலாமே!
மூளை பற்றிய காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் இன்னொரு ‘உண்மை’ நாம் அனைவருமே நமது மூளையில் பத்து சதவிகிதம் தான் பயன்படுத்துகிறோம் என்பது. இது உண்மையில்லை, கட்டுக்கதை என்கிறது நவீன அறிவியல். எல்லோருடைய மூளையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படுத்தப்பட்டே வருகிறது என்பது அறிவியலின் சமீப கால முடிவு. மூளையை ஸ்கேன் செய்து பார்த்த நிபுணர்கள் மூளையின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு சமயங்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன என்று கூறுகின்றனர். இப்படி பத்து சதவிகிதம் தான் மூளை பயன்படுத்தப்படுகிறது என்ற கட்டுக்கதையான ஒரு தகவல் எப்படி யாரால் முதலில் சொல்லப்பட்டது என்பது சரியாக விளங்கவில்லை. எல்லோரும் எப்போதும் மூளையின் எல்லா பகுதிகளையும் பயன்படுத்துதல் என்பது முடியாத காரியம். தேவைப்படும் போது தேவையுள்ள தசைப் பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன, அவ்வளவு தான்!!
நாம் என்ன, இதயம், கண், காது போன்ற இதர உடல் அங்கங்களை பத்து சதவிகிதம் தான் உபயோகப்படுத்துகிறோமா என்று கேட்கின்றனர் விஞ்ஞானிகள்.
இப்படி மூளையைப் பத்து சதவிகிதம் தான் நாம் பயன்படுத்துகிறோம் என்று சொல்கிறார்களே, அவர்கள் தாம் தங்கள் மூளை ஆற்றலில் பத்து சதவிகிதம் பயன்படுத்துபவர்கள் என்று கலாய்க்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஆகவே மூளை ஆற்றலை நன்கு பயன்படுத்தி அதிகம் சிந்தித்து அதிகம் பயன் எய்தலாம் என்பதே அறிவியலின் முடிவு!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
சீனிவாச ராமானுஜன் உலகப் புகழ் பெற்ற அதிசய கணித மேதை. (தோற்றம் 22-12-1887 மறைவு : 26-4-1920) 32 ஆண்டுகளே வாழ்ந்த இந்த மகா மேதையின் கணிதக் கண்டுபிடிப்புகள் பற்றி இன்றும் உலக அறிஞர்கள் வியந்து பாராட்டுகின்றனர்.
சீனிவாச ராமானுஜன் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு தொடர் சொற்பொழிவை ஆற்றினார். அவரை ஆதரித்துப் பாராட்டிய பெரும் கணித மேதையான ஜி.ஹெச். ஹார்டி அந்தச் சொற்பொழிவுகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட விரும்பினார். அந்த நூலில் வெளியிட ராமானுஜனின் ஒரு போட்டோ வேண்டுமென அவர் விரும்பினார். இதற்காகப் பலரை அணுகிய போதும் ஒரு போட்டோ கூட கிடைக்கவில்லை. கடைசியாக அவர் சுப்ரமணியம் சந்திரசேகரை அணுகி ஒரு போட்டோவை எப்படியாவது கொண்டு வரும் படி கேட்டுக் கொண்டார்.
சந்திரசேகர் இந்தியாவிற்கு வருகையில் ராமானுஜனது (விதவை) மனைவியை அணுகினார். ராமானுஜத்தின் மனைவியிடம் ஒரே ஒரு போட்டோ இருந்தது. அதை அவர் கொடுத்தார். அதிலிருந்து மூன்று போட்டோக்களை என்லார்ஜ் செய்த சந்திரசேகர் ஒன்றை ராமானுஜனின் மனைவிக்குக் கொடுத்தார். இன்னொன்றை ஹார்டிக்கு அனுப்பினார். மூன்றாவது போட்டோவைத் தான் வைத்துக் கொண்டார்.
நூல் ராமானுஜனின் போட்டோவுடன் வெளியானது.
மிகப் பெரிய கணித மேதையான ராமானுஜனின் ஒரே போட்டோ இது தான். ஒரு வேளை, பிரிட்டனுக்குச் செல்லும் போது பாஸ்போர்ட்டுக்காக அவர் எடுத்த போட்டோவாக இது இருக்கலாம் என எண்ணப்படுகிறது.
இன்னொரு கணித மேதையான பால் எர்டோஸ் (1913-1996) இந்தியாவிற்கு இரு முறை சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டு இந்தியா வந்தார். தனக்குச் சொற்பொழிவுக்காக அளிக்கப்பட்ட பணத்தை அவர் ராமானுஜனின் விதவை மனைவிக்கு அனுப்பி உதவினார்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
மாலைமலர் நாளிதழில் 9-12-2019 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை!
‘தேடுதற்கு அரிதான நவமணி அழுத்தி இடு… சண்முகன் கை வேலே’ என்று முருகனின் கையில் இருக்கும் வெற்றி வேலில் தேடியும் கிடைப்பதற்கு அரிதான ஒன்பது இரத்தினங்கள் பதிக்கப்பட்டிருப்பதை வேல் விருத்தம் போற்றிப் புகழ்கிறது.
நவ ரத்தினங்களில் ஒன்றான புஷ்பராகம் நமது இதிஹாஸங்களிலும் அக்னி புராணம், கருட புராணம் ஆகிய நூல்களிலும் பெரிது சிறப்பாகப் பேtசப்படும் ரத்தினம்.
கருடபுராணத்தில் 68ஆம் அத்தியாயம் முதல் 80ஆம் அத்தியாயம் வரை ஒன்பது நவரத்தினங்கள் பற்றிய விளக்கமும் அவற்றைச் சோதனை செய்து தேர்வு செய்யும் முறையும் நன்கு விளக்கப்பட்டுள்ளது. 74ஆம் அத்தியாயம் புஷ்பராகத்தைப் பற்றிப் புகழ்ந்து விளக்குகிறது.
தெய்வாம்சம் பொருந்திய இந்தக் கல் தேவர்களுக்கு மிகவும் பிடித்தது.
அமராவதி உள்ளிட்ட தேவ லோகமே அற்புதமாக புஷ்பராகத்தால் அமைக்கப்பட்டது தான் என நமது புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீ தேவி பாகவதம் தேவியின் இருப்பிடத்தைப் பற்றி விவரிக்கையில் மணித்வீபத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது (12ஆம் ஸ்கந்தம், 10,11 அத்தியாயங்கள்) நவரத்தின பிரகாரங்களை வர்ணிக்கிறது.
“புஷ்பராக மயமான பிரகாரம், பூமியும் வனங்களும், உபவனங்களும், சோலைகளில் உள்ள ரத்ன விருட்சங்களும், மதில்களும் புஷ்பராக மயமாகவே பிரகாசித்தும், பட்சிகள், ஜலங்கள், மண்டபங்கள், தூண்கள், குளங்கள், குளத்தில் மலரும் தாமரைகள் முதலியனவும் ரத்ன மயமாகவே இருப்பதால் ரத்னசாலை என்று பெயர் பெற்றும் விளங்குகிறது” என்று இவ்வாறு புஷ்பராக பிரகாரத்தை அது வர்ணிக்கிறது!
அனைத்து நாகரிங்களும் போற்றும் ரத்தினம்
புஷ்பராகத்தை ஆங்கிலத்தில் டோபாஸ் (Topaz) எனக் கூறுவர். தபஸ் என்ற சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து டோபாஸ் என்ற வார்த்தை உருவானதாக மொழியியல் அறிஞர் கூறுவர். தபஸ் என்பதற்கு ஒளி பொருந்திய அக்னி என்று ஒரு பொருள் உண்டு. அதை இந்தக் கல் குறிக்கிறது.
இன்னும் சிலர் டோபாஜியோஸ் (Topazios) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை உருவானதாகக் கருதுகின்றனர்.
மஞ்சள் நிற இரத்தினம் பற்றிப் பல இடங்களில் பைபிள் குறிப்பிடுகிறது. இதை புஷ்பராகம் என்று சிலரும், அதன் இன்னொரு வகை என்று சிலரும் கருதுகின்றனர்.
ஆக, மிகப் பழங்காலத்தில் இருந்தே புஷ்பராகம் பல நாகரிகத்தினராலும் அரிதாக மதிக்கப்பட்டு வருவது தெரியவருகிறது.
குருவுக்குரியது புஷ்பராகம்
ஜோதிட சாஸ்திரத்தில் கனக புஷ்பராகம் என்று குறிப்பிடப்படும் இந்தக் கல் குரு கிரகத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. இயக்க சக்தியைக் குறிக்கும் கிரகம் – குரு கிரகம்.
தனுர் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு உகந்த கல் இதுவே. குரு பகவான் தரும் நல்ல பலன்களை அதிகப் படுத்தவும் இந்தக் கல் பரிந்துரைக்கப்படுகிறது. குரு பகவானின் தீய பார்வையைப் போக்க வல்லது புஷ்பராகம்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இதை அணிந்தால் அதன் தாக்கம் குறையும். எண் கணிதக் கலையில் குரு கிரகமானது 3 என்ற எண்ணுடன் தொடர்பு படுத்தப்படும். இந்தக் கல்லை 3 எண்காரர்கள் (பிறந்த தேதி 3 அல்லது கூட்டு எண் 3 இருந்தால்) இதை அணியலாம்; அனைத்துப் பலன்களையும் பெறலாம்.
திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். வயிற்று நோய்கள் போகும் என்பது ஜோதிட சாஸ்திரம் பரிந்துரைக்கும் பலன்களாகும்.
புக்ராஜ் என வட இந்தியாவில் இது கூறப்படுகிறது.
ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள்
ரஸ ஜல நிதி என்னும் நூல் தரும் சுவையான தகவல்கள் இவை:-
புஷ்பராகம் இரு வகையான சுரங்கங்களிலிருந்து கிடைக்கப் பெறும் ஒரு அபூர்வமான ரத்தினம். மாணிக்கம் மற்றும் மரகதம் கிடைக்கும் சுரங்கங்களில் இது காணப்படும்.
ரத்தினக்கற்களில் தேர்ச்சி பெற்ற சந்திர சேனர் என்ற ராஜா இதன் நிறத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் இது மஞ்சள் நிறமாக இருக்கும், ஒளி ஊடுருவ வல்லது, வைரம் போலப் பிரகாசிப்பது என்று குறிப்பிடுகிறார்.
இது புத்திர பாக்கியம் இல்லை என்று ஏங்குவோருக்கு மகனைத் தரும். இதை அணிபவர் பெரும் செல்வந்தர் ஆவார்.
இதர ரத்தினக்கற்களிலிருந்து புஷ்பராகத்தை எப்படி இனம் பிரித்து அறிவது?
மஞ்சள் வண்ணத்துடன் பிரகாசமாக இருப்பது புஷ்பராகம் ஆகும்.
மஞ்சள் வண்ணத்துடன் சிறிது சிவப்பு கலந்திருந்தால் அதன் பெயர் கௌராந்தகம் எனப்படும்.
மஞ்சள்-சிவப்புடன் ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருப்பின் அதன் பெயர் கஷவம் எனப்படும்.
நீல வண்ணத்துடன் சிறிது வெண்மை கலந்திருந்து அது மிருதுவாக இருப்பின் அதன் பெயர் சோமலகம் எனப்படும்.
(மிகவும் சிவப்பாக இருப்பது மாணிக்கம். மிகவும் நீலமாக இருப்பது நீலம்.)
புஷ்பராகத்தில் வேறு வண்ணங்களும் உண்டு. அவையாவன 1) வெண்மை 2) மஞ்சள் 3) வெளுத்த வெண்மை 4) கறுப்பு
நல்ல புஷ்பராகத்தின் குணங்கள் :
கனமாக இருக்கும். ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருக்கும். அதன் மேல் எண்ணெய் பூசப்பட்டது போல இருக்கும். அருமையான வடிவத்துடன் இருக்கும். கர்னிகர மலர் போல இருக்கும்.
விலக்கத்தக்க புஷ்பராகம் :-
மேல் பரப்பில் கரும் புள்ளிகள் இருப்பது, கரடுமுரடாக இருப்பது, வெண்மையாக இருப்பது, ஒளி இழந்து இருப்பது, இயல்பான தனது வண்ணத்துடன் இன்னொரு வண்ணம் கலந்திருக்காமல் இருப்பது, புள்ளிகள் இருப்பது – இப்படி உள்ள புஷ்பராகம் விலக்கத்தக்கது.
வழுவழுப்பாக இல்லாமல் இருப்பது, பழுப்பு அல்லது பழுப்புடன் கூடிய சிவப்பு, வெளுத்த வெண்மை, வெறும் மஞ்சள் வண்ணம் மட்டும், வெறும் கறுப்பு வண்ணம் மட்டும் இருக்கும் கற்களும் விலக்கத் தக்கதே.
புஷ்பராகம் அணிவதால் ஏற்படும் பலன்கள்
விஷத்தை அகற்றும். வயிற்றுக் குமட்டலை நீக்கும். அதிகமான வாயுத்தொல்லையைப் போக்கும். ஜீரணசக்தி குறைந்திருந்தால் அதை அதிகப்படுத்தும். வீக்கத்தை வற்ற வைக்கும். குஷ்டரோகத்தை நீக்கும். ரத்தக் கசிவைப் போக்கும்.
இவையெல்லாம் பழம்பெரும் நூலான ரஸஜல நிதி தரும் தகவல்கள்.
டோபாஸ் ஐலேண்ட்
புஷ்பராகம் பண்டைய காலத்தில் அனைத்து நாகரிகத்தினராலும் பெரிதும் போற்றப்பட்டு வந்தது. இதை டோபாஸ் என்று அழைத்தனர். ஜஸிரட் ஜபூகட் (Jazirat Zabugat) என்ற தீவிலிருந்து இது கிடைப்பதாகப் பழம் பெரும் கிரேக்க நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தீவு எங்கிருக்கிறது என்பதை ஆராயப் புகுந்த இன்றைய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் இன்றைய டோபாஸ் ஐலேண்டே (Topaz Island) ஜஸிரட் ஜபூகட் என்று முடிவுக்கு வந்துள்ளனர். செங்கடலில் உள்ள இந்தத் தீவு இப்போது ஜபர்காட் (Zabargad) என அழைக்கப்படுகிறது.
இடது கையில் இதை அணிவது தீய கண்திருஷ்டியைப் போக்கும் என்றும் பிரச்சினைகள் வரும் போது அதை எதிர்கொள்ள வலிமையைத் தரும் என்றும் கிரேக்க நூல்கள் கூறுகின்றன. கோலோன் கதீட்ரலில் உள்ள மாபெரும் மன்னர்களான காஸ்பர்,மெல்சியார்,பல்தஜார் ஆகியோர் புஷ்பராகம் அணிந்தவர்களே. ஏராளமான சிலுவைகளில் புஷ்பராகம் பதிக்கப்பட்டுள்ளது.
மஞ்சளுடன் பச்சை வண்ணம் கலந்த புஷ்பராக வகைகள் குடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் என்றும் பொறாமை எண்ணங்கள் மனதில் தோன்றாமல் தடுக்கும் என்றும் கிரேக்க நூல்கள் கூறுகின்றன.
இதை நெக்லஸாக அணிவது துக்கத்தைப் போக்கி நுண்ணறிவைத் தீர்க்கமாக்கும் என்றும் நம்பப்பட்டது. விஸ்வாசம், நட்பு, நம்பிக்கை ஆகிய அனைத்திற்குமான ஒரே ரத்தினம் புஷ்பராகம் தான்.
புஷ்பராக சிகிச்சை
தீ விபத்து மற்றும் இதர விபத்துக்கள் ஏற்படாதவண்ணம் காக்கும் கல் புஷ்பராகம். பிரபல யோகியான பிஞ்ஜெனைச் சேர்ந்த செயிண்ட் ஹில்டிகார்ட் (St Hildegard of Bingen) 1255ஆம் ஆண்டு கண் சம்பந்தமான வியாதிகளைத் தீர்க்க ஒரு அரிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தினார்.புஷ்பராகத்தைச் ஒரு ஒயின் உள்ள பாட்டிலில் செங்குத்தாக மூன்று நாள் வைத்திருந்து, பின்னர் அதை எடுத்துக் கண்களின் மீது லேசாகத் தேய்க்க வேண்டும். பின்னர் அதைக் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். மங்கலான கண்பார்வை மறைந்து கண் பார்வை தீர்க்கமாகி கூர்மையான பார்வை உருவாகும். பைத்தியம் போகவும் புஷ்பராக சிகிச்சைப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
வானவில்லில் இருக்கும் அனைத்து வண்ணங்களிலும் புஷ்பராகம் கிடைப்பது அதன் தனித்தன்மையைக் காட்டுகிறது. சிவப்பு வண்ணத்துடன் கூடிய புஷ்பராகம் இம்பீரியல் டோபாஸ் என அழைக்கப்படுகிறது. கிடைக்கின்ற புஷ்பராகக் கற்களில், இது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே கிடைக்கிறது.
அறிவியல் தகவல்கள்
மோவின் அலகின் படி இதன் கடினத்தன்மை 8 ஆகும்.
அறிவியல் ரீதியாக இதைச் சொல்லப் போனால் இது அலுமினியம் மற்றும் புளோரின் ஆகியவற்றின் சிலிகேட் தாதுவால் ஆனது. இதன் இரசாயன சமன்பாடு Al2SiO4(F,OH)2 .
இதன் ஒப்படர்த்தி : 3.49 – 3.57
புஷ்பராகம் கிடைக்கும் இடங்கள்
இன்றைய நவீன யுகத்தில் பிரேஜிலில் கிடைக்கும் புஷ்பராகம் அனைவராலும் விரும்பி வாங்கப்படுகிறது. அமெரிக்கா (ஊடாஹ் என்னுமிடம்), ரஷியா, ஆப்கனிஸ்தான், இலங்கை, நார்வே, இத்தாலி,ஜிம்பாப்வே, ஜெர்மனி,நைஜீரியா போன்ற பல நாடுகளிலும் புஷ்பராகத்தின் வெவ்வேறு வகைகள் கிடைக்கின்றன. இந்தியாவில் திருவனந்தபுரம், கோழிக்கோடு பகுதிகளில் இது கிடைக்கிறது.
புஷ்பராகத்தின் அரிய கற்கள்
19ஆம் நூற்றாண்டில் ரஷியாவில் ஜார் அரசாண்ட காலத்தில், இளஞ்சிவப்பில் புஷ்பராகம் கிடைக்கவே அரிதான இந்த ரத்தினக் கல்லை ஜார் மன்னரும் அவர் குடும்பத்தினரும் மட்டுமே அணிய வேண்டும் என்றும் அவர் கொடுத்தால் மட்டுமே இதரர் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
1680 கேரட்டில் கிடைத்த புஷ்பராகம் போர்த்துக்கீசிய மன்னரின் மகுடத்தில் பதிக்கப்பட்டது. இது வைரம் என முதலில் நினைக்கப்பட்டு பின்னால் புஷ்பராகம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிடியூட்டில் உள்ள அமெரிக்கன் கோல்டன் டோபாஸ் 22892 கேரட் அதாவது 4.5785 கிலோ எடை உள்ளது. இது 172 வெட்டுக்களைக் கொண்டது. பல வர்ணஜாலங்களைக் காட்டுகிறது. 11.8 கிலோ மஞ்சள் வண்ணக் கல்லிலிருந்து இது வெட்டப்பட்டு உருவாக்கப்பட்டது. பிரேஜிலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல் 1988ஆம் ஆண்டு அமெரிக்காவில் அனைவரும் கண்டு களிப்பதற்காக வாஷிங்டன் மியூஸியத்தில் வைக்கப்பட்டது.
இன்னொரு அரிய 31000 கேரட் உள்ள கல் எல்-டோராடோ டோபாஸ் என அழைக்கப்படுகிறது. இதன் எடை 6.2 கிலோ ஆகும். இதுவும் பிரேஜிலில் வெட்டி எடுக்கப்பட்ட கல் ஆகும். 37 கிலோ கல்லிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த அரிய கல் இப்போது பிரிட்டிஷ் அரச வம்சத்தினரிம் உள்ளது.
தெய்வீக மணி புஷ்பராகம்
கோயிற் புராணம் என்ற நூல் ஞாயிறு முதல் சனி வரை ஒவ்வொரு கிழமையன்றும் ஒவ்வொரு ரத்தினம் இறைவனுக்கு அர்ப்பிக்கப்படுவதைச் சிறப்பித்து “நண்ணித் தினகரன் முதலோர் கிழமை கொணல்மார் நவமணி அணி மேவ” என்று கூறுகிறது. இதன் படி வியாழக்கிழமை புஷ்பராகம் அர்ப்பிக்கப்படுவதை அறிய முடிகிறது.
தெய்வீக மணியான புஷ்பராகம் தேவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று, என்றால் பல நலன்களைத் தரும் அது மனிதர்களுக்குப் பிடிக்காமல் போகுமா என்ன?!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ஹிட்லரின் வி -2 ராக்கெட் இரண்டாவது உலக மகா யுத்தத்தில் , ஹிட்லரின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது .போர் முடிந்த பின்னர் அவை எல்லாம் ஏலம் விடப்பட்டன .நான் அக்டோபர் 25, 1992-ல் எழுதிய கட்டுரை இதோ —
வரலாறு படிக்கும் மாணவர்களுக்குப் பயனுள்ள குறிப்பு —
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
ச.நாகராஜன்
ஆதி சங்கரர் கூறியவற்றிற்கும் க்வாண்டம் பிஸிக்ஸ் கூறுகின்ற கொள்கைக்குமான ஒரு ஒப்பீடு இதோ:
ஆதி சங்கரர் : உலகமே மாயை
க்வாண்டம் பிஸிக்ஸ் :நாம் காணும் உலகமும் புலன்களால் உணரும் உலகமும் உண்மையல்ல; அவைகள் மனதினால் உருவாக்கப்பட்ட வெறும்
3 D உருவகங்களே.
ஆதி சங்கரர் : ப்ரஹ்மம் சத்யா ;ஜகம் மித்யா – ப்ரஹ்மமே இறுதியான உண்மை
க்வாண்டம் பிஸிக்ஸ் :அந்த பிரக்ஞையே உண்மை
ஆதி சங்கரர் : பிரம்மாண்டம் என்பதானது உருவாக்கப்பட்டு பரப்ரஹ்மத்தில் கரைந்துபோனது.
க்வாண்டம் பிஸிக்ஸ் : அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து கிரகங்கள், நட்சத்திரங்கள், வால்நட்சத்திரங்களாயின. பின்னர் சில காலம் கழித்து அவைகள் பிரிந்து பிரக்ஞையுடன் ஒன்றிப் போயின.
ஆதி சங்கரர் : ஜீவாத்மாவானது ப்ரஹ்மத்திலிருந்து பிரிந்த ஆத்மனே தவிர வேறல்ல; அது பரப்ரஹ்மத்துடன் சேர்தல் வேண்டும், அதுவே மோட்சம்.
க்வாண்டம் பிஸிக்ஸ் :ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் பிரக்ஞையின் ஒரு பகுதியாகவே இருந்தவர்கள், பின்னால் பிரிக்கப்பட்டனர். அவர்கள் பிரக்ஞையுடன் இணையவே வேண்டும்.
ஆதி சங்கரர் : ஜீவன் (தன்னை) உணர்ந்து விட்ட நிலையில் அந்த நிலையே நிர்வாண நிலை. ஜீவன் அப்போது காலம் தேசம்,மனதிற்கு அப்பாற்பட்ட நிலையை அடைகிறது.
க்வாண்டம் பிஸிக்ஸ் :ஒருவன் பிரக்ஞையை ஆழ்ந்து உணர்ந்து விட்டால் அப்போது தேசம், காலம், மனம் எதுவும் இல்லை.
ஆதி சங்கரர் : ஜீவன், தன்னை உண்மை என்றே நம்புகிறான்; அது மனம் இருப்பதின் காரணத்தினால் தான்.
க்வாண்டம் பிஸிக்ஸ் :மனதினால் ஏற்படுத்தப்பட்ட பிரமையே தனிநபரின் தன்மை என்பது.
ஆதி சங்கரர் : புலன்களால் ப்ரஹ்மம் உணரப்பட முடியாது, ஏனெனில் புலன்கள் ஒரு அளவுக்கு உட்பட்டவையே.
க்வாண்டம் பிஸிக்ஸ் :எல்லையற்ற தன்மை என்பது எல்லைக்குட்பட்ட ஊடகங்களால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.
ஆதி சங்கரரும்க்வாண்டம் பிஸிக்ஸும் சொல்லும் கூற்றுக்கள் :
நாம் எல்லோரும் ஒரே பிரக்ஞையில் இருந்து வெவ்வேறு அனுபவங்களை வெவ்வேறு கர்மாவினால் அனுபவிக்கிறோம். இறப்பு என்று ஒன்று இல்லை. வாழ்க்கை என்பது ஒரு கனவு தான். நாம் என்றுமுள்ளவர்கள். நீங்கள் அறிகின்ற (வாறு அந்த)உண்மை இருப்பதில்லை.
க்வாண்டம் பிஸிக்ஸ் இன்று அறிந்திருப்பவை அனைத்துமே ஆதி சங்கரரின்அத்வைத தத்துவத்தின் ஒரு பகுதியே. அது வேதத்திலிருந்து பெறப்பட்டது. ஆதி சங்கரரை விட வேறொரு பெரிய விஞ்ஞானி இல்லவே இல்லை.
என்றுமே மாறாத உண்மையானது, சாதாரண மக்களால் கடவுள் எனக் கூறப்படுகிறது. பிரக்ஞை என விஞ்ஞானிகள் அதைக் கூறுகின்றனர். இறைசக்தி என நம்பிக்கையுடையோரால் அது கூறப்படும் போது, இயற்கை என நம்பிக்கையற்றவர்கள் (நாத்திகர்கள்) அதைக் கூறுகின்றனர்.
நாம் அனைவரும் ஒரே பிரக்ஞை தான்; ஆனால் நம்முடைய சொந்த செயல்களினால் வேறு வேறாகத் தோற்றம் அளிக்கிறோம்.
ஒரே வரியில் சங்கரர் இதை இப்படிச் சொல்கிறார்:-
ப்ரஹ்மம் சத்யம், ஜகத் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நாபர:
ப்ரஹ்மம் ஒன்றே சத்யம்; ஜீவன் ப்ரஹ்மனைத் தவிர வேறல்ல. இதுவே உள்ளார்ந்த அறிவை வெளிப்படுத்துகிறது.
விஞ்ஞானக் களமானாலும் சரி, உலகிற்கு அளித்த கொடைகள் பற்றி எடுத்துக் கொண்டாலும் சரி, ஆதி சங்கரரின் சுயநலமற்ற சேவைக்கு முன் எதுவும் ஈடாகாது.
சதாசிவ சமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம் |
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் ||
நன்றி :- ட்ரூத், கல்கத்தாவிலிருந்து வெளி வரும் வார இதழ் தொகுதி 87; இதழ் 30
22-11-2019 தேதியிட்ட இதழ்
****
ஆங்கிலத்தில் படிக்க விரும்போர் கீழே உள்ள மூலத்தைப் படித்து மகிழலாம் :-
Here is a Comparison between Adi Shankara and Quantum Physics.
Adi Shankaracharya : This world is (maya) an illusion.
Quantum Physics : The world we see and perceive are not real, they are just 3D projections of mind.
Adi Shankaracharya : Brahma sathya jagan mithya–Only the Brahman is the absulote reality
Quantum Physics: Only that conciousness is reality
Adi Shankaracharya : The Brahamhanda created and dissolved again in to the para – brahman.
Quantum Physics : The atoms bind together to make planets, stars ,comets and at some time later they dis-integrate and merge with consciousness.
Adi Shankaracharya : Jivatma is nothing but a separated soul from Brahman. and has to strive to merge with Brahman called moksha.
Quantum Physics : Everyone was once part of one consciousness later separated. And has to merge back to that consciousness.
Adi Shankaracharya : When the Jiva becomes realised then it is the state of nirvana, the jiva beyond – time, space and mind.
Quantum Physics : when someone deeply understands that consciousness then there is no time, no space and no mind.
Adi Shankaracharya : Jiva feels he is real because of the presence of mind.
Quantum Physics : Individuality is an illusion that is caused by mind.
Adi Shankaracharya : Brahman cannot be realised through senses, because they are limited.
Quantum Physics : Infinity cannot be understood with finite mediums.
Adi Shankaracharya and Quantum Physics– We are all one consciousness experiencing differently subjectively (because of different karma). There is no such thing as death, life is just a dream. we are eternal beings. The reality as you know does not exist.
What the entire Quantum physicists have understood is just a part of Advaita Philosophy of Adi Shankaracharya which is purely derieved from the Vedas. There exists none greater a scientist than Adi Shankarcharya.
The unchanging reality is called God by common people, called consciousness by scientists, called energy by believers, called nature by disbelievers.
We are all the same consciousness but appear differently because of our own actions. With a single line stated by Shankara
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
சொல் ஆராய்ச்சியில் ஈடுபடுவோருக்கு பெரிய பட்டியல் உள்ளது . விருந்துக் காட்சிகளும் விரிவாக எழுதப்பட்டுள்ளது . அதைத் தனியாகத் தருகிறேன் .
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
நவரத்தினங்களுள் பச்சை பசேலென ஒளிர் விடும் ரத்தினம் மரகதம்.
அன்னை மீனாட்சியின் சிலை மரகதத்தால் ஆனது என்பது ஒன்றே மரகதத்தின் அருளாட்சியைப் புலப்படுத்த வல்லது.
தமிழ்நாட்டில் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள உத்தரகோச மங்கை நடராஜரின் திருவுருவமும் மரகதத்தால் ஆன ஒன்றே! வருடம் முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும் நடராஜரின் திருவுருவம் திருவாதிரை உற்சவத்தின் போது மட்டும் சந்தனம் எடுக்கப்பட்டு காட்சியளிக்கும். சிறு அதிர்வுகள் கூட சிலைக்குப் பங்கம் விளைவித்து விடும் என்பதால் ஒரு வித தாள வாத்தியமும் சந்நிதியில் வாசிக்கப்பட மாட்டாது.
மரகத வண்ணன்
வில்லிபுத்தூரார் அர்ஜுனனும் துரியோதனனும் கண்ணனின் உதவி கேட்டு வரும் நிகழ்ச்சியை விவரிக்கும் போது கண்ணனை மரகதவண்ணன் என்று கூறிச் சிறப்பிக்கிறார்.
கம்பரோ இராமபிரானை வர்ணிக்கையில் அவரது மேனியிலிருந்து எழும் ஒளியால் சூரியனின் ஒளி மறைவதைக் குறிப்பிட்டு, ‘மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ, ஐயோ, இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்’ என்று ராமரின் அழியா அழகைப் பாராட்டுகிறார்.
ஆம், மரகதம் அழியா அழகுடையது தான்.
காலம் காலமாக உலக மக்களுடன் ஒன்றி விட்ட மணி மரகத மணி.
எண் கணிதத்தின் படி ஐந்து என்ற எண்ணை பிறந்த தேதி எண்ணாகவும் கூட்டு எண்ணாகவும் உடையவர்கள் அணிய வேண்டியது மரகதமே.
மரகதத்தின் மற்ற பெயர்கள்
மரகதம் எப்படித் தோன்றியது என்பதைப் பற்றி சிலப்பதிகார உரையில் ஊர்காண் காதையில் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகையில், “வலாசுரன் வயிற்றின் புறத்தைக் கொத்தி விழுங்கிய கருடன் அதனைக் கனைத்து உமிழ, அது வீழ்ந்து பல மலைகளிலும் ஊறிப் பிறந்த கற்கள் மரகதம் எனப்படும்” என்று குறிப்பிடுகிறார்.
கருடோற்காரம் எனவும் மரகத்தின் பெயராக அவர் குறிப்பிடுகிறார்.
நிகண்டுகள் மரகதத்தின் மற்ற பெயர்களாக, பச்சை, தோல், பரிமளம், புதல், மால் புந்தி ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.
மதுரை கலெக்டர் அளித்த மரகதக் காணிக்கை
மரகதம் பற்றி உலகெங்கும் சுவையான வரலாறுகள் ஏராளம் உண்டு.
மதுரையை ஆளும் மரகத மீனாட்சி பற்றி ஒன்றைப் பார்ப்போம். பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில் ரோஸ் பீட்டர் என்பவர் (1812 முதல் 1828 முடிய) மதுரை கலெக்டராக இருந்தார்.
ஒருநாள் அவர் தூங்கும் போது பலத்த மின்னல் இடியுடன் ஒரு சூறாவளி எழுந்தது. ஒரு சிறிய பெண் ரோஸின் முன்னே தோன்றி உடனே கட்டிடத்திலிருந்து வெளியேறுமாறு கூறினாள். ரோஸ் பீட்டர் உடனே வெளியேறினார். அவர் வெளியே வந்ததும் ஒரு இடி கட்டிடத்தின் மேல் விழ, கட்டிடம் அடியோடு நொறுங்கிப் போனது. மிகவும் ஆச்சரியப்பட்ட ரோஸ் கனவில் தோன்றிய பெண் யார் என விசாரிக்கத் தொடங்கினார். அது மதுரை மீனாட்சியே என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட அவர் தனது நன்றிக் காணிக்கையாக மதுரை மீனாட்சிக்கு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட பாத அணிகளை பக்தியுடன் சமர்ப்பித்தார். ஒவ்வொரு பாத அணியும் 28 தோலா (ஒரு தோலா என்பது சுமாராக 11.5 கிராம்) எடையுடன் இருந்தது. 412 சிவப்புக் கற்கள், 72 மரகதக் கற்கள், 80 வைரக் கற்கள், முத்துக்கள், வைடூரியம், நீலம் உள்ளிட்ட கற்கள் அவற்றில் பதிக்கப்பட்டிருந்தன. மரகதவல்லிக்கு காணிக்கையாக மரகதம் இப்படி வந்து சேர்ந்தது.
தர்மதேவதைக்கும் மரகதவல்லி என்ற பெயர் உண்டு. குபேரனுக்கு மரகதன் என்ற பெயரும் உண்டு.
விஷமகற்றும் மரகதம்
எகிப்திய நாகரிகம் உள்ளிட்ட பண்டைய நாகரிகங்கள் அனைத்திலும் மரகதத்தை அணிந்தால் கண் நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை இருந்தது. அத்தோடு தீய கண்திருஷ்டியைப் போக்கவும் வலிப்பு வியாதி தீரவும் மரகத்தை அணிந்து கொண்டனர். தூய்மையான ஒளி பொருந்திய மரகதத்தைப் பார்த்தவுடன் கட்டுவிரியன், நாகப்பாம்பு ஆகியவற்றின் கண்கள் தெறித்து வெளியில் வந்து விழும் என்று அவர்கள் தங்கள் அனுபவ உரையைக் கூறினர்.
ரஸ ஜல நிதி தரும் தகவல்கள்
இனி பண்டைய பழம் பெரும் நூலான ரஸ ஜல நிதி மரகதம் பற்றி ஏராளமான சுவையான கீழ்க்கண்ட தகவல்களைத் தருகிறது.
நல்ல மரகதத்தின் ஏழு அம்சங்களாவன :-
பச்சை வண்ணம் கொண்டிருக்கும் 2) கனமாக இருக்கும் 3) ஆனால் மிருதுவாக இருக்கும் 4) ஒளிக் கதிர்களைப் பீச்சி அடிக்கும் 5) வழவழப்பாக இருக்கும் 6) பிரகாசமாக இருக்கும் 6) ஒப்படர்த்தி அதிகமாக இருக்கும்
மோசமான மரகதம் எப்படி இருக்கும்?
1) மஞ்சள் பழுப்பு நிறம் கொண்டது 2) கரடுமுரடானது 3) நீல வண்ணம் உடையது 4) இலேசானது 5) தட்டை வடிவமானது 6) அழகற்றது 7) கறுப்பாக இருப்பது 8) ஒழுங்கான வடிவமற்று இருப்பது
இப்படிப்பட்ட மரகதங்களை விலக்க வேண்டும்.
மரகதத்தின் பயன்கள் :
(உரிய முறைப்படி பஸ்மமாக ஆக்கப்பட்ட போது) மரகதம் ஜுரத்தைப் போக்கும். வாந்தியை நீக்கும். விஷத்தை முறிக்கும். ஆஸ்த்மாவைப் போக்கும். திரிதோஷத்தை அகற்றும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். மூலத்தைப் போக்கும். ரத்த சோகையை விலக்கும். உடல் வீக்கத்தைத் தணிக்கும். வலிமையைக் கூட்டும்.
மரகத சுரங்கத்தில் உள்ள அனைத்துமே விஷத்தை நீக்கும் வல்லமை வாய்ந்தது. கொடிய விஷமுள்ள பாம்பு கடிக்கு – மூலிகை உள்ளிட்ட மற்ற அனைத்து மருந்துகளினாலும் குணப்படுத்த முடியாத நிலையிலும் கூட – மரகத பஸ்மமே சிறந்த மருந்து.
நல்ல உயரிய மரகதத்தின் குணங்கள் :
நல்ல பச்சை வண்ணமும் மிருதுவாகவும் ஒளி பளீரென மின்னுவதாகவும் வெளியிலிருந்து கதிர்கள் ஊடுருவும் படியான மரகதம் அருமையானவை. அதன் உட்புறம் தங்கத் துகள்களால் மின்னுவது போல இருக்கும். வண்ணம் சீராக இருப்பதுடன் வடிவ அமைப்பு அற்புதமாக இருக்கும். சூரியக் கதிர்கள் அதன் மீது படும் போது அது இருக்கும் அறையே ஒளிரும்! அதைப் பார்த்தாலே மனம் அமைதியுறும்; மகிழ்ச்சி பொங்கும்.
மரகதத்தைச் சோதிக்கும் விதம்
முதலாவது முறை
அதை ஒரு கல்லினால் கீறும் போது அது கண்ணாடியாக இருந்தால் பல துண்டுகளாக உடைந்து வீழும். நிஜமான மரகதம் இப்படி உடையவே உடையாது.
இரண்டாவது முறை
ஒரு இரும்புக் கம்பியினால் மரகதத்தைக் கீறி விட்டுப் பின்னர் எலுமிச்சையினால் பூசினால் நிஜ மரகதம் ஒளிரும். போலிகள் ஒளி இழந்து காணப்படும்.
மூன்றாவது முறை
ஒரு மரகதம் இன்னொரு மரகதத்தால் உடைபட்டால் அதை அணியக் கூடாது. அப்படிப்பட்ட கல்லை வாங்கவும் கூடாது.
நான்காவது முறை
பட்டுத் துணியினால் அழுத்தித் துடைக்கப்படும் போது போலி மரகதம் அதன் ஒளியை இழக்கும்; நல்ல மரகதமோ ஒளியை அதிகரித்துக் காட்டும்!
ஐந்தாவது முறை
மரகதத்தின் எடையை அதே அளவுடன் கூடிய நீரின் எடையுடன் ஒப்பிட வேண்டும். பின்னர் நீரின் அதே அளவுடன் கூடிய ஒரு கல்லின் எடையுடன் ஒப்பிட வேண்டும். கிடைத்த எடையில் இரண்டாவதாகக் கிடைத்தது முதலில் கிடைத்ததை விட மிகவும் குறைவாக இருந்தால் அது வெறும் கண்ணாடி தான் என்பதை அறியலாம் ; அல்லது மரகதமில்லாத வேறொரு கல் எனத் துணியலாம்.
ஆறாவது முறை
மரகதம் போன்று தோற்றமளிக்கும் கற்களை இனம் காண்பது எளிது. வண்ணம் தெளிவாகவும் அதிகமாகவும் இருப்பது தான் உண்மை மரகதம். (அதாவது ஒரு நல்ல மரகதக் கல்லை பக்கத்தில் வைத்துக் கொண்டு போலியா உண்மையா என்பதைக் கண்டுபிடித்து விடலாம்)
இவ்வளவு அரிய விஷயங்களையும் ரஸ ஜல நிதி நமக்குத் தெரிகிறது. ஒப்படர்த்தி எனப்படும் Specific Gravity பற்றி அந்தக் காலத்திலேயே நன்கு அறிந்திருந்தனர் என்பதை ரஸ ஜல நிதியின் மரகதம் பற்றிய பகுதியால் நன்கு அறிய முடிகிறது!
அறிவியல் தகவல்கள்
‘மோ அலகின்’ படி மரகதத்தின் கடினத் தன்மை 7.5 முதல் 8 ஆகும்.
Specific Gravityசராசரியாக 2.6 இருக்கும்.
வைரத்திற்கு உள்ள நான்கு ‘C’க்கள் – Colour, Clarity, Cut, Carat weight – நிறம், தெளிவு, பட்டை தீட்டல், கேரட் எடை ஆகியவை – மரகதத்திற்கும் உண்டு. தரம் பிரிக்கையில் வண்ணத்திற்கே முதலிடம் தரப்படும்.
அதிசய மரகத புத்தர்
பாங்காக்கில் உள்ள தியானம் செய்வது போன்ற யோக நிலையில் காணப்படும் புத்தர் மரகதத்தால் ஆனது. 26 அங்குலம் உயரம் உள்ள இந்தச் சிலை மரகத புத்தர் ஆலயத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டிருக்கிறது. இதை வாட் ப்ரா க்யூ என அழைக்கின்றனர்.
இந்தச் சிலை பற்றி ஏராளமான சுவையான வரலாறுகள் உண்டு. அவற்றில் ஒன்று இது:
பாடலிபுத்ரத்தில் (இன்றைய பாட்னா நகரில்) நாகசேனர் என்னும் புத்த துறவி இதை உருவாக்கினார். இதை உருவாக்குவதில் விஷ்ணுவும் இந்திரனும் அவருக்கு அருள் புரிந்தனர். நாகசேனர் இந்த மரகத புத்தர் பிரபலமடையப் போவதை முன்கூட்டியே கணித்துச் சொல்லி விட்டார் இப்படி :” மிகப் பெரும் புகழை ஐந்து தேசங்களில் – ஸ்ரீ லங்கா, ராமலக்கா, த்வாராவதி, சியங் மாய் மற்றும் லாவோஸ் ஆகிய தேசங்களில் – இது பெறப் போகிறது.”
பாடலிபுத்ரத்தில் இருந்த இந்த மரகத புத்தர் உள்நாட்டுப் போரினால் சேதமடையாமல் இருப்பதற்காக ஸ்ரீ லங்காவிற்கு 457ஆம் ஆண்டு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து அனுருத் என்ற மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க பர்மாவிற்கு அனுப்பப்பட்டது, ஆனால் வழியில் ஒரு சூறாவளியில் அதை எடுத்துச் சென்ற கப்பல் திசை மாறி கம்போடியாவை அடைந்தது. பின்னர் பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு இப்போதிருக்கும் பாங்காக்கை அடைந்தது.
கொலம்பியா மரகதம்
தென்னமரிக்காவில் உள்ள கொலம்பியாவில் உள்ள மரகதச் சுரங்கங்கள் பிரபலமானவை. மரகத சந்தையில் 70 முதல் 90 சதவிகிதம் மரகதத்தை உலகிற்கு வழங்குவது கொலம்பியாவே.
தமிழ்நாட்டில் கோவை,காங்கேயம் பகுதியிலும், ஜெய்ப்பூர் பகுதியிலும் நல்ல மரகதம் கிடைக்கிறது.
பிரேஜில் நாட்டில் ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் முதன் முதலாக ‘வனடியம் பெரில்’ என்னும் மரகதம் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் இது மரகதம் தானா என்ற சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது. அமெரிக்கா ‘வனடியம் பெரிலை’ மரகதம் என்று அங்கீகரித்துள்ளது. ஆனால் இதர நாடுகள் இதை மரகதம் என்று அங்கீகரிக்கவில்லை.
செயற்கை முறையிலும் மரகதம் கடந்த அறுபது ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இவை ஒரிஜினல் மரகதம் போல அவ்வளவு சிறப்பானவையாக இல்லை.
நமது அறநூல்கள் கூறும் அனைத்துப் பயன்களும் இயற்கை மரகதத்திற்கே பொருந்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இன்னும் அக்னி புராணம், கருட புராணம் ஆகியவற்றில் கூறப்படும் செய்திகளையும் முழுவதுமாக அறிந்தால் நாம் மரகத நிபுணராக ஆகி விடுவோம்; நம்மிடம் மரகதம் பற்றிய தகவல் களஞ்சியம் ஒன்று இருக்கும்!
கிளியோபாட்ராவின் மகுடம்
மரகதத்தைப் பற்றிய மகுடமான செய்தியும் உண்டு!
எகிப்திய மன்னர்களும் சக்கரவர்த்திகளும் மரகதத்தை உயரிய அந்தஸ்தைத் தரும் ஒன்றாகக் கருதினர்.
உலகின் பேரழகியும் பெரும் சாம்ராஜ்யத்தின் ராணியுமான கிளியோபாட்ராவிற்கு மரகதம் என்றால் உயிர். அதை மகுடம் உள்ளிட்ட தனது அனைத்து ஆபரணங்களிலும் பதித்து மகிழ்ந்தார்; உலகினரும் அவரைக் கௌரவித்தனர்.
ஸ்பெயினிலும் அனைத்து மன்னர்களும் மரகத கிரீடத்திற்குத் தனி கௌரவத்தை வழங்கினர்.
தி க்ரௌன் ஆஃப் ஆண்டஸ் (The Crown of Andes) என்ற ஆண்டஸ் மகுடத்தில் இருந்த மிகப் பெரும் மரகதம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்று! இப்போது அடாகுலாபா மரகதம் என இது அழைக்கப்படுகிறது. இங்கா வமிச மன்னரான அடாகுலாபா என்பவரை பிரான்ஸிஸ்கோ பிஜாரோ என்பவர் வெற்றி கொண்டபோது எடுத்துச் செல்லப்பட்டது இந்த மகுடம்!
கிளியோபாட்ரா ராணியின் மகுடம் ஒரு புறம் இருக்கட்டும், என் இல்லத்திற்கு நானே ராணி என்று உங்கள் அன்புக்குரியவர் சொன்னால் அதுவும் சரி தான்! அவருக்கு ஒரு மரகத மகுடத்தைச் சூட்ட வேண்டியது தான்!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
You must be logged in to post a comment.