SANKARA AND QUANTUM PHYSICS ஆதி சங்கரரும் க்வாண்டம் பிஸிக்ஸும்! (Post No.7305)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 6 DECEMBER 2019

 Time in London – 8-29 AM

Post No. 7305

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ச.நாகராஜன்

ஆதி சங்கரர் கூறியவற்றிற்கும் க்வாண்டம் பிஸிக்ஸ் கூறுகின்ற கொள்கைக்குமான ஒரு ஒப்பீடு இதோ:

ஆதி சங்கரர் : உலகமே மாயை

க்வாண்டம் பிஸிக்ஸ் : நாம் காணும் உலகமும் புலன்களால் உணரும் உலகமும் உண்மையல்ல; அவைகள் மனதினால் உருவாக்கப்பட்ட வெறும்

3 D உருவகங்களே.

ஆதி சங்கரர் : ப்ரஹ்மம் சத்யா ;ஜகம் மித்யா  – ப்ரஹ்மமே இறுதியான உண்மை

க்வாண்டம் பிஸிக்ஸ் :  அந்த பிரக்ஞையே உண்மை

ஆதி சங்கரர் : பிரம்மாண்டம் என்பதானது உருவாக்கப்பட்டு பரப்ரஹ்மத்தில் கரைந்துபோனது.

க்வாண்டம் பிஸிக்ஸ் :  அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து கிரகங்கள், நட்சத்திரங்கள், வால்நட்சத்திரங்களாயின. பின்னர் சில காலம் கழித்து அவைகள் பிரிந்து பிரக்ஞையுடன் ஒன்றிப் போயின.

ஆதி சங்கரர் : ஜீவாத்மாவானது ப்ரஹ்மத்திலிருந்து பிரிந்த ஆத்மனே தவிர வேறல்ல; அது பரப்ரஹ்மத்துடன் சேர்தல் வேண்டும், அதுவே மோட்சம்.

க்வாண்டம் பிஸிக்ஸ் :  ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் பிரக்ஞையின் ஒரு பகுதியாகவே இருந்தவர்கள், பின்னால் பிரிக்கப்பட்டனர். அவர்கள் பிரக்ஞையுடன் இணையவே வேண்டும்.

ஆதி சங்கரர் : ஜீவன் (தன்னை) உணர்ந்து விட்ட நிலையில் அந்த நிலையே நிர்வாண நிலை. ஜீவன் அப்போது காலம் தேசம்,மனதிற்கு அப்பாற்பட்ட நிலையை அடைகிறது.

க்வாண்டம் பிஸிக்ஸ் : ஒருவன் பிரக்ஞையை ஆழ்ந்து உணர்ந்து விட்டால் அப்போது தேசம், காலம், மனம் எதுவும் இல்லை.

ஆதி சங்கரர் : ஜீவன், தன்னை உண்மை என்றே நம்புகிறான்; அது மனம் இருப்பதின் காரணத்தினால் தான்.

க்வாண்டம் பிஸிக்ஸ் :  மனதினால் ஏற்படுத்தப்பட்ட பிரமையே தனிநபரின் தன்மை என்பது.

ஆதி சங்கரர் : புலன்களால் ப்ரஹ்மம் உணரப்பட முடியாது, ஏனெனில் புலன்கள் ஒரு அளவுக்கு உட்பட்டவையே.

க்வாண்டம் பிஸிக்ஸ் :  எல்லையற்ற தன்மை என்பது எல்லைக்குட்பட்ட ஊடகங்களால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

ஆதி சங்கரரும் க்வாண்டம் பிஸிக்ஸும் சொல்லும் கூற்றுக்கள் : 

நாம் எல்லோரும் ஒரே பிரக்ஞையில் இருந்து வெவ்வேறு அனுபவங்களை வெவ்வேறு கர்மாவினால் அனுபவிக்கிறோம். இறப்பு என்று ஒன்று இல்லை. வாழ்க்கை என்பது ஒரு கனவு தான். நாம் என்றுமுள்ளவர்கள். நீங்கள் அறிகின்ற (வாறு அந்த) உண்மை இருப்பதில்லை.

க்வாண்டம் பிஸிக்ஸ்  இன்று அறிந்திருப்பவை அனைத்துமே ஆதி சங்கரரின்அத்வைத தத்துவத்தின் ஒரு பகுதியே. அது வேதத்திலிருந்து பெறப்பட்டது. ஆதி சங்கரரை விட வேறொரு பெரிய விஞ்ஞானி இல்லவே இல்லை.

என்றுமே மாறாத உண்மையானது, சாதாரண மக்களால் கடவுள் எனக் கூறப்படுகிறது. பிரக்ஞை என விஞ்ஞானிகள் அதைக் கூறுகின்றனர். இறைசக்தி என நம்பிக்கையுடையோரால் அது கூறப்படும் போது, இயற்கை என நம்பிக்கையற்றவர்கள் (நாத்திகர்கள்) அதைக் கூறுகின்றனர்.

நாம் அனைவரும் ஒரே பிரக்ஞை தான்; ஆனால் நம்முடைய சொந்த செயல்களினால் வேறு வேறாகத் தோற்றம் அளிக்கிறோம்.

ஒரே வரியில் சங்கரர் இதை இப்படிச் சொல்கிறார்:-

ப்ரஹ்மம் சத்யம், ஜகத் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நாபர:

ப்ரஹ்மம் ஒன்றே சத்யம்; ஜீவன் ப்ரஹ்மனைத் தவிர வேறல்ல. இதுவே உள்ளார்ந்த அறிவை வெளிப்படுத்துகிறது.

விஞ்ஞானக் களமானாலும் சரி, உலகிற்கு அளித்த கொடைகள் பற்றி எடுத்துக் கொண்டாலும் சரி, ஆதி சங்கரரின் சுயநலமற்ற சேவைக்கு முன் எதுவும் ஈடாகாது.

சதாசிவ சமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம் |

அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் ||

நன்றி :- ட்ரூத், கல்கத்தாவிலிருந்து வெளி வரும் வார இதழ் தொகுதி 87; இதழ் 30

22-11-2019 தேதியிட்ட இதழ்

****

ஆங்கிலத்தில் படிக்க விரும்போர் கீழே உள்ள மூலத்தைப் படித்து மகிழலாம் :-

Here is a Comparison between Adi Shankara and Quantum Physics.

Adi Shankaracharya : This world is (maya) an illusion. 

Quantum Physics : The world we see and perceive are not real, they are just 3D projections of mind. 

Adi Shankaracharya : Brahma sathya jagan mithya–Only the Brahman is the absulote reality

Quantum Physics: Only that conciousness is reality

Adi Shankaracharya :  The Brahamhanda created and dissolved again in to the para – brahman. 

Quantum Physics : The atoms bind together to make planets, stars ,comets and at some time later they dis-integrate and merge with consciousness. 

Adi Shankaracharya : Jivatma is nothing but a separated soul from Brahman. and has to strive to merge with Brahman called moksha. 

Quantum Physics : Everyone was once part of one consciousness later separated. And has to merge back to that consciousness. 

Adi Shankaracharya : When the Jiva becomes realised then it is the state of nirvana, the jiva beyond – time, space and mind. 

Quantum Physics : when someone deeply understands that consciousness then there is no time, no space and no mind. 

Adi Shankaracharya : Jiva feels he is real because of the presence of mind. 

Quantum Physics : Individuality is an illusion that is caused by mind. 

Adi Shankaracharya : Brahman cannot be realised through senses, because they are limited. 

Quantum Physics : Infinity cannot be understood with finite mediums. 

Adi Shankaracharya and Quantum Physics– We are all one consciousness experiencing differently subjectively (because of different karma). There is no such thing as death, life is just a dream. we are eternal beings. The reality as you know does not exist. 

What the entire Quantum physicists have understood is just a part of Advaita Philosophy of Adi Shankaracharya which is purely derieved from the Vedas. There exists none greater a scientist than Adi Shankarcharya. 

The unchanging reality is called God by common people, called consciousness by scientists, called energy by believers, called nature by disbelievers. 

We are all the same consciousness but appear differently because of our own actions. With a single line stated by Shankara

Brahma sathya jagat mitya, jeevo brahmaiva naapara”

 Brahman is the only reality, the living entity is not different from Brahman” that has revealed the inner most knowledge. 

Nothing can match Adi Shankara’ s selfless service in the field of science and contributions to the world. 

Sadasiva samaarambaam shankracharya madyamaam |

Asmadhaachaarya paryanthaam vande guru paramparaam ||

***

Thanks : Truth Weekly

Source : TRUTH VOL.87 NO. 30  Issue dated : 22-11-2019