தமிழ் இலக்கியம் ஒரு பெரிய அமுத ஸாகரம்.
அதில் முத்துக் குளிப்பதென்பது கடினமான காரியம்.
அதைச் செய்தவர் பண்டித மு.இராகவையங்கார்.
அவர் 2200 தமிழ்ப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து பெருந்தொகை என்னும் ஒரு தொகுப்பு நூலை
1936ஆம் ஆண்டு வெளியிட்டார்.
கடவுள் வாழ்த்தியல், அறிவியல், பொருளியல்
என மூன்றாகப் பகுக்கப்பட்ட இந்த நூல் ஒரு அரிய நூல்.
ஆங்கிலத்தில் ஏராளமான கவிதைத் தொகுப்பு
நூல்கள் உண்டு. தமிழிலோ அப்படி இல்லை. ஆனால் அப்படி பல நூறு தொகுப்பு நூல்களை வெளியிடக்
கூடிய அளவில் தமிழ் இலக்கியம் பரந்திருக்கிறது.
பெருந்தொகையில் உள்ள ஒரு பாடலை மாதிரிக்காக்
இங்கே பார்ப்போம்:
கம்பர் ஒரு முறை பாண்டி நாட்டு மதுரையம்பதிக்கு
வருகை புரிந்தார்.
உமாதேவியே பாண்டி நாட்டு அரசியாக அவதரித்த திருத்தலம்
மதுரை. அங்கு மீனாட்சியையும் சிவபிரானையும் தரிசித்தார். பின்னர் பாண்டிய மன்னனின்
அரசவைக்கு வந்தார்.
தடபுடலான வரவேற்பு. பாண்டிமாதேவியும் பாண்டியனும்
வணங்க பாண்டிமாதேவியை நன்கு பார்த்தார் கம்பர்.
பிறகு சொன்னார் பாண்டிமாதேவியே! நீயும் உமையும்
ஒப்பு நோக்கினால் ஒன்றே தான்.
இதைக் கேட்டவுடன் பாண்டிமாதேவி மகிழ பாண்டியன் புன்முறுவல்
பூக்க அவையோர் மகிழ்ந்தனர்.
கம்பர் தொடர்ந்தார்:
“ஆனால் தேவியே! உமாதேவிக்கு ஒரு குறை உண்டு”
அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. ஆவலுடன் கம்பரின் பாடலை எதிர்நோக்கினர்.
கம்பர் பாடினார் இப்படி:
உமையவளும் நீயும் ஒருங்கொப்பே ஒப்பில்
உமையவளுக் குண்டங்கோர் ஊனம் – உமையவள் தன்
பாகந்தோய்ந் தாண்டான் பலிக்குழன்றான் பாண்டியன்
உன்
ஆகந்தோய்ந் தாண்டான் அரசு!
உமையவளும் – உலகம் ஆளும் உமாதேவியும்
நீயும் – பாண்டிமாதேவியாகிய நீயும்
ஒருங்கொப்பே – ஒப்புநோக்கிப் பார்த்தால் ஒன்றே தான்
ஒப்பில் – ஆனால் நன்கு ஒப்பு நோக்கி ஊன்றிக் கவனித்தால்
உமையவளுக்கு அங்கு உண்டு ஓர் ஊனம் – உமையவளுக்கு
ஒரு குறை உண்டு
உமையவள் தன் பாகம் தோய்ந்து ஆண்டான் பலிக்கு உழன்றான்
– உமா தேவியை தன் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்ட சிவ்பிரான் அவள் பாகம் தோய்ந்த காரணத்தால்
திருவோடு எடுத்து பிச்சை எடுத்துக் கொண்டு அலைகிறான் (பலி – பிச்சை)
ஆனால்
பாண்டியன் உன் ஆகம் தோய்ந்து ஆண்டான் அரசு – உன்னுடைய
ஆகம் தோய்ந்ததால் பாண்டிய மன்னன் இந்தப் பெரும் பாண்டிய நாட்டை அல்லவா ஆள்கிறான்!
போட்டார் ஒரு போடு!
எல்லொரும் ஆரவாரித்தனர் என்பதைச் சொல்லவா வேண்டும்!
பாண்டிய அரசியிடமும் பாண்டியனிடமும் பாண்டிய நாட்டிடமும்
கம்பர் எத்துணை மதிப்பும் அன்பும் வைத்திருக்கிறார் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்ட
இந்த ஒரு பாடலே போதும் அல்லவா?
பெருந்தொகையில் 1504-வது பாடலாக அமைந்துள்ளது இந்தப்
பாடல்!
அருமையான பெருந்தொகையில் 2200 பாடல்களும் இப்படிப்பட்ட
அரும் பாடல்களே!
Date: 31 JANUARY 2019 GMT Time uploaded in London – 8-46 am Post No. 6012 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது? Picture shows
Prof. Bin He pf Minnesota University with his thought powered helicopter. Those
who use this article in other blogs must name the author London …
14 Oct 2018 – தஸரதன் பெயர் மட்டுமின்றி ராமன்பெயரும் சுமேரியாவில் கி. …..tamilandvedas.com/2017/05/17/mysterious-number…
….ராமன் புஸ்பக விமானத்தில் பறந்து வந்து ஜாத கர்மம் முதலிய
சடங்குகளைச் …
Post No. 5946 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
Date: 6 JANUARY 2019 GMT Time uploaded in London 7-07 am Post No. 5890 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
சர்வோதயத் தலைவர் டாக்டர் எம்.அறம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கத்தைத் தமிழில் வரைகிறேன். கல்கத்தா பாரதி தமிழ் சங்கம் வெளியிட்ட பாரதி பற்றிய ஆங்கில நூல்களின் மூன்றாவது தொகுதியில் இது உளது.
“நாங்கள் ஒரிஸ்ஸா மாநிலத்தின் சம்பல்பூர் – பார்கார் சாலையில் நடந்து கொண்டிருந்தோம். சிறிது நேரத்துக்கு முன்னால், சாலையின் ஓரத்தில், ஒரு ஒதுக்குப் புறத்தில் உட்கார்ந்து பிரார்த்தனை, தியானம் செய்தோம். கீழ் வானம் அற்புதமாக செக்கச் செவேல் என்று காட்சி தந்தது. அங்கே அமர்ந்து அதைப் பார்த்துக் கொண்டுதான் பிரார்த்தனை நடந்தது. பனி மூட்டமும் அழகு சேர்த்தது. கீழ் வானம் முழுதும் செந்நிறப் பிழம்பு. சற்று மேலே சிவப்பும் ஆரஞ்சு வர்ணமும் பட்டை பட்டையாக இருந்தன. சில நட்சத்திரங்கள் கூட இன்னும் தெரிந்தன. இரவு நேரம் விடை பெற்றுக்கொண்டு பகற் பொழுதுக்கு அழைப்புவிட்டுக் கொண்டிருந்த அற்புதமான காலைப் பொழுது அது.
மீண்டும் நடைப் பயணத்தைத் தொடர்ந்தோம். வினோபாஜி அழைத்ததால் நான் முதல் நாள்தான் அங்கே சென்றிருந்தேன். அந்த நாள் 1963 அக்டோபர் 9ம் தேதி. டில்லி- பீகிங் நட்புறவுப் பயணம் பற்றிய திட்டங்களை விவாதிக்கவே என்னை அழைத்திருந்தார். நான் ஏற்கனவே நிலமையை விளக்கி முழு அறிக்கை சமர்ப்பித்திருந்தேன். அது பற்றி மேற்கொண்டு விவாதிக்கவே இந்த சந்திப்பு.
கொஞ்சம் கொஞ்சமாக சம்பாஷணை, உலக நடப்புகளை நோக்கி நகர்ந்தது. திடீரென்று வினோபாஜி சொன்னார்:-
தக்ஷிண பாரதமே இப்பொழுது என்னோடு நடந்து கொண்டிருக்கிறது
நாங்கள் என்ன என்று நினைத்துப் பார்ப்பதற்குள் அவரே விளக்கமும் தந்தார்.
அதோ பாருங்கள் (சந்யாஸி உடையில் இருந்தவரைக் காட்டி), அவர் கேரளத்திலிருந்து வந்திருக்கிறார். வினோபாஜியின் ‘குரானின் சாராம்ஸம்’ என்ற நூலை சரிசெய்து கொடுக்க வந்திருந்த ஒரு வயதானவரைச் சுட்டிக்காட்டி, அந்த முதியவர் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வந்திருக்கிறார். வினோபாஜியின் உதவியாளரான ஜயதேவ் பாயை நோக்கி அவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். நீங்களோ தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். தென் இந்தியாவே என்னுடன் நிற்கிறது என்றார் வினோபா பாவே.
எல்லோரும் அதைகேட்டு சிரித்து மகிழ்ந்தோம்.
பாரதி பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன் என்று நான் சொன்னேன். நாங்கள் சுமார் 25 பேர் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தோம். அப்பொழுது வினோபாஜி சொன்ன கருத்துக்கள் மிகவும் சுவையானவை.
ஒரிஸ்ஸாவின் முன்னாள் முதலமைச்சர் நவகிருஷ்ண சௌத்ரியும் அங்கே இருந்தார்.
வினோபாஜி சொன்னார்,
முதலாவதாக,
நான் அப்பொழுது வேலூர் சிறைச் சாலையில் இருந்தேன். நான் பாரதியார் கட்டுரைகள் புஸ்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அவர் கல்வி பற்றி எழுதிய விஷயம். விஞ்ஞானமானது புதுப் புது கிருமிகள், சிற்றுயிர்களைக் கண்டுபிடித்து வருகிறது. காலரா, பிளேக் கிருமிகள் முதலியன. ஆனால் இந்த உயிரினங்களில் மனிதன்தான் மிகச் சிறந்தவன். அவன் எல்லா உயிர்களையும் விட முன்னேறிவன். பாரதியாரின் இந்தக் கருத்து– மனிதனே மிகச் சிறந்த படைப்பு– என் மனதில் ஆழப் பதிந்தது.
வினோபாஜி சற்று மவுனம் சாதித்தார்.
அந்த மவுனமானது அவர் சொன்ன விஷயத்தை எங்கள் மனதிலும் பதித்தது. பின்னர் அவர் தொடர்ந்தார்,
இரண்டாவதாக,
பாரதியார் இந்த பிரபஞ்சம் முழுவதையும் சொந்தபந்தமாக நினைக்கிறார். மனிதர்கள் பிராணிகளுடன் அவர் நிறுத்தவில்லை.
இதை வினோபாஜி தமிழில் சொல்லி விட்டு மற்றவர்களுக்காக இந்தியிலும் அவரே மொழி பெயர்த்தார்.
காக்கை குருவி எங்கள் ஜாதி
இப்படி உயிரினங்கள் மட்டுமின்றி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்.
இந்த பிரபஞ்சமே நமது உறவினரென்ற பாரதி கருத்து என்னை ஈர்த்தது.
பல மொழி பேசும் மக்கள் அந்தக் குழுவில் இருந்தனர். எல்லோரும் சபாஷ் போட்டு ரஸித்தனர்.
வினோபாஜி தொடர்ந்தார்,
மூன்றாவதாக,
பாரதியார் ஒரு தேசீயவாதி என்பது அறிந்ததே. அவருடைய தேசீயப் பற்று அஹிம்ஸையை அடிப்படையாக உடையது.
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே,
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
…………………………………….
தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
சிந்தையில் போற்றிடுவாய்……………….
இதைக் கேட்டு மகிழ்ந்த
ஆந்திராக்காரர், எங்கள் தெலுங்கு மொழியிலும் ‘புலி’ என்றுதான் சொல்லுவோம் என்றார்.
இதைச் சொல்லி முடித்தவுடன் வினோபாஜி என்னைப் பார்த்து, கிண்டல் செய்யும் தொனியில் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்றார்.
அவரே பின்னர், அடுத்த முறை இன்னும் சொல்கிறேன் – என்று முடித்தார்.
இதற்கிடையில் கூடவே நடந்து வந்த வினோபாஜியின் உதவியாளர்/ காரியதரிஸி பாலுபாய், ‘நம் டி.பி. சுப்ரமணியம் (தமிழ் நாட்டு சாந்தி சேனை அமைப்பாளர்) அடிக்கடி சொல்லுவாரே, பயப்படாதே, பயப்படாதே என்ற கருத்துள்ள பாரதி பாடல். அது என்ன? மறந்துவிட்டதே’– என்று நினவுபடுத்திக் கொள்ள முயன்றார். வினோபாஜியே அந்தப் பாடலையும் நினைவுகூர்ந்தார்.
நான் மேற்கொண்டு அவருடன் பேசுகையில் பூதானத்தின் அடிப்படைக் கருத்துகளைப் பாரதி பாடல்களிலும் காணமுடிகிறது என்றேன்.
ஆமாம், உண்மைதான். இது பற்றி ஸர்வோதய பத்திரிக்கைகளில்
ஏற்கனவே எழுதியுள்ளோம் என்றார்.
(உலகில் அதிகமான மொழிகளைப் பேச வல்லோரில் பூதான இயக்கத் தலைவர் வினோபா பாவேயும் ஒருவர். அவர் பாரதியாரை எந்த அளவுக்குப் படித்து, அவரது கருத்துக்களை உள்வாங்கி இருக்கிறார் என்பது இந்த உரையாடல் மூலம் வெளிப்படுகிறது.)
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பாரதியும் வானசாத்திரமும்! – 1
ச.நாகராஜன்
பாரதியார் பிறந்த நாள். அவரை வணங்கிப் போற்றுவோம்.
புண்ணியன் பிறந்த நாள்
பூவுலகம் சிறந்த நாள்
எண்ணிநின் றேத்து வோம்
இனியநாடு போற்று வோம்
நன்னிதிப் பாடல் கள்
நவின்றநா வாணி நா
உன்னியவை ஏற்று வோம்
உயிர்கலந்து பாடு வோம்
ச.நாகராஜன்
***
பாரதியாரைப் பலவிதமாக ஆராய்ந்து பார்த்து உவகை அடையலாம்.
அவரை வானசாத்திரத்தின் மூலமாகப் பார்க்கும் பார்வையே இந்தக்
குறுந் தொடர்.
பாரதியார் வானக் காட்சிகளைக் கண்டு ரசித்து மயங்கி அவ்வண்ணங்களைக் கவிதைத் தேனெனப் பொழிந்திருக்கிறார். வசன நடையிலும் எழுதியுள்ளார். அவற்றையெல்லாம் பற்பல இடங்களிலிருந்து எடுத்துத் தொகுத்துப் பார்த்துள்ள ஒரு மாலையே இது.
*
பாரத தேசம் என்ற கவிதையில் ..
மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம்
வானையளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
விநாயகர் நான்மணி மாலை (விருத்தம்)
வையந்தனையும் வெளியினையும்
வானத்தையுமுன் படைத்தவனே
விநாயகர் நான்மணி மாலை (விருத்தம்)
படர்வான் வெளியிற் பலகோடி
கோடி கோடிப் பலகோடி
இடறா தோடும் அண்டங்கள்
இசைத்தாய் வாழி, இறையவனே!
இறைவா, இறைவா!
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் – எங்கள் இறைவா, இறைவா, இறைவா
சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்
அத்தனை யுலகமும் வண்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய்
மஹாசக்தி வெண்பா
எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் – பண்ணியதோர்
சக்தியே நம்மைச் சமைத்ததுகாண் நூறாண்டு
பக்தியுடன் வாழும் படிக்கு
மஹாசக்தி
சந்திரனொளியில் அவளைக் கண்டேன்
சரண மென்று புகுந்து கொண்டேன்;
மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்
வீசிநிற்கும் வளியைச் செய்தாள்
வான்கணுள்ள வெளியைச் செய்தாள்
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்
காளி ஸ்தோத்திரம்
வான கத்தி னொளியைக் – கண்டே – மனம கிழ்ச்சி பொங்கி
யானெ தற்கும் அஞ்சேன் – ஆகி – எந்த நாளும் வாழ்வேன்
ஞான மொத்த தம்மா – உவமை – நானு ரைக்கொ ணாதாம்!
வான கத்தி னொளியின் – அழகை – வாழ்த்து மாறி யாதோ?
ஞாயி றென்ற கோளம் – தருமோர் – நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை – எவரே – தேடி யோத வல்லார்?
வாயி னிக்கும் அம்மா! – அழகாம் – மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத் தால் – ஆங்கே – நெஞ்சி ளக்க மெய்தும்
மஹாசக்தி பஞ்சகம்
எண்ணிலாப் பொருளும், எல்லையில் வெளியும், யாவுமாம் நின்றனைப் போற்றி மண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும் மயங்கிலேன்
மஹாசக்தி வாழ்த்து விண்டு ரைக்க அறிய அரியதாய் விரிந்த வான வெளியென நின்றனை; அண்ட கோடிகள் வானில் அமைத்தனை; அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை; மண் டலத்தை அணுவணு வாக்கினால், வருவ தெத்தனை அத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை, கோலமே!நினைக் காளியென் றேத்துவேன்.
கோடி யண்டம் இயக்கி யளிக்கும்நின் கோலம் ஏழை குறித்திட லாகுமோ?