அதிசய புத்த துறவி ஸு யுன்! – 24 (Post No.3490)

Written by S NAGARAJAN

 

Date: 28  December 2016

 

Time uploaded in London:-  5-34 AM

 

Post No.3490

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 24

 

ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 84.

 

 

புத்த தர்மத்தில் பக்தர்களில் ஏழு பிரிவுகள் உண்டு.

  • பிட்சுக்கள் – முழுவதுமாக உலகைத் துறந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் இவர்கள்
  • பிட்சுணி – முழுவதுமாக உலகைத் துறந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பெண்மணிகள்
  • சிக்ஷம்ணா – ஆறு உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் ஆரம்ப சாதகர்கள்
  • ஸ்ரமணிரா – ஆரம்ப உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் ஆரம்ப சாதகர்கள்
  • ஸ்ரமணிரிகா – ஆரம்ப உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் ஆரம்ப சாதகப் பெண்மணிகள்
  • உபாசகா – முதல் ஐந்து உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் சாமானியன்
  • உபாசிகா – முதல் ஐந்து உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் சாமானியப் பெண்மணி

 

இந்த ஏழு வகைப் பிரிவினரின் அஸ்திகளை வைப்பதற்காக ஒரு பெரிய ஸ்தூப கட்டிடம் இந்த வருடத்தில் அமைக்கப்பட்டது.

 

 

அதற்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டபோது பத்தடி ஆழத்தில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. அதில், “ஸ்ரீமதி லி. ஃபான் யாங்கைச் சேர்ந்தவர் ஜியா ஜிங் ஆட்சியில் (1525-1526ஆம் ஆண்டு) நான்காம் ஆண்டில் மறைந்தவர்” என்று பொறிக்கப்பட்டிருந்தது.

 

 

அவரது  முகம் உயிரோடிருப்பது போல அன்றலர்ந்த நிலையில் இருந்தது. அவரை எரியூட்டும் சமயம் அந்த சிதையிலிருந்து எழுந்த ஜுவாலைகள் தாமரை வடிவில் உருவெடுத்தன.அவரது அஸ்தி  உபாசிகாக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது.

ஆலயத்திற்கு வலப்புறத்தில் இருந்த அனைத்து கல்லறைகளும் தோண்டப்பட்டன. எரியூட்டப்பின்னர் எடுக்கப்பட்ட அஸ்திகள் ஸ்தூபத்தில்  முறைப்படி வைக்கப்பட்டன.

 

 

ஒரு கல்லறையில் இருந்த கல்லறை வாசகத்தில் டாவோ மிங் என்ற பிட்சுவின் வாழ்க்கை பற்றி பொறிக்கப்பட்டிருந்தது. அவர் டாவோ-குவாங் ஆட்சியின் போது (1821-1850) பிறந்தவர். சங்கத்தில் சேருமாறு அவர்கள் பெற்றோரால் ஆலயத்திற்கு அனுப்பப்பட்டவர். முறைப்படியான சடங்குகளுக்குப் பின்னர் அவர் அவலோகிதேஸ்வரர் நாமத்தைச் சொல்ல ஆரம்பித்தார்

 

அவர் படுத்த படுக்கையாக கிடந்த சமயம், ஒரு நாள் இரவு போதிசத்வர் அவர் கனவில் தோன்றி அவரைக் குளிக்குமாறு ஆணையிட்டார். அதற்குப் பின்னர் அவர் கனவில் போதிசத்வர் வரவே இல்லை.

 

 

குளித்ததற்குப் பின்னர் அவர் கால்கள் மிகவும் இலேசாக ஆயின. அடுத்த நாள் காலை அவரால் மற்றவர்களைப் போல நடக்க முடிந்தது. அவர் அகத்தில் ஞானம் உதிக்கவே இறுதி வரை போதிசத்வர் நாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். அவரது கல்லறையில் இருந்த் சவப்பெட்டியின் மூடி கரையானால் அரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கரையான் அரிப்பு ஒரு சித்திர வடிவில் இருந்தது. அது ஒரு ஏழு மாடி எண்கோண ஸ்தூப வடிவில் இருந்தது. அந்த பிட்சுவின் தவத்திற்கான சித்தியாக அது அமைந்திருந்ததைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர்.

 

இப்படியாக அந்த ஆண்டு முடிவிற்கு வந்தது.

-தொடரும்

******

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 23 (Post No.3468)

Written by S NAGARAJAN

 

Date: 21 December 2016

 

Time uploaded in London:- 5-41 am

 

Post No.3468

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 23

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 83.

 

ஹுவா டிங் ஆலயம் இந்த வருடம் புதுப்பிக்கப்பட்டது. குன் மிங் ஏரிக்கு மேற்கே பி-ஜி என்ற பெயருடைய மலை ஒன்று உண்டு. இந்திய சக்கரவர்த்தியான பேரரசர் அசோகரின் இரண்டாம் மகன் அங்கு வந்தார். அவர் அந்த இடத்தில் மரகத பீனிக்ஸ் பறவைகளின் கூட்டத்தைப் பார்த்தார்.

 

 

அங்கேயே தங்க விரும்பிய அவர் நிர்வாணத்திற்கான உயர் வழியைக் கண்டு உய்ந்தார். அவரை மரகத பீனிக்ஸின் ஆவி என்று அனைவரும் அழைத்தனர். அந்த மலையும் கூடவே அவரது பெயரைப் பெற்றது.

 

ஸூவான் ஃபெங் என்ற குரு அங்கு ஒரு ஆல்யத்தை நிர்மாணித்தார். பூக்களால் நிரம்பிய இடமாதலால் அது மலர்த் தண்டு என்று பெயரிடப்பட்டது.

 

இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த ஆலயத்தை யூனான் நிர்வாகம் வெளிநாட்டவருக்கு விற்க முனைந்தது.

இதனால் மனம் வருந்திய ஸு யுன் கவர்னராக இருந்த டாங்கை அணுகி அதை அவரையே வாங்கச் செய்தார் டாங் அந்த மடாலயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு ஸு யுன்னை வேண்டினார்.

 

 

அதை மீண்டும் புனருத்தாரணம் செய்து கட்டும் போது ஒரு கல்லிலாலான மேஜை ஒன்று கிடைத்தது. அதில் மேகத்தின் ஆலயம் என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டிருந்தது. அது உடனடியாக இறந்தவர்களின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த ஹை ஹுய் ஸ்தூபத்தின் மீது வைக்கப்பட்டது.

 

ம்லையடிவாரத்தில் இன்னொரு ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டு வேலைகள் துவங்கின.

 

ஒரு நாள் அந்த இடத்தில் இரண்டு லட்சம் டாலர் மதிப்புள்ள தங்க, வெள்ளி நாணயங்கள் அடங்கிய மூட்டை ஒன்று கிடைத்தது.

 

அதை அப்படியே அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் ஸு யுன். ஆனால் அங்கிருந்த மற்றவர்களோ அதை ஆலய புனருத்தாரணத்திற்கு ஆகும் செலவிற்காக வைத்துக் கொள்ளலாம் என்றனர்.

 

ஆனால் புத்த தர்மத்தில் இருக்கும் சாதுக்கள் எந்த ஒரு புதையலையும் தான் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற விதி இருப்பதைச் சுட்டிக் காட்டிய ஸு யுன் அதை அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்படியே அந்த புதையல் மூட்டை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த் வருடம் கடுமையான பஞ்சத்தால் யூனான் மாகாணம் தவித்தது. மக்கள் டிப்தீரியா வியாதியால் அவஸ்தைப்பட்டு மரித்தனர்.

 

 

அங்குள்ள ராணுவமும் மக்களும் கவர்னர் டாங்கை மீண்டும் கவர்னராக்க விரும்பினர். அவரும் அதை ஏற்று மீண்டும் கவர்னராக யூனானுக்கு வந்தார்.

 

 

கவர்னரான உடன் மடாலயத்திற்கு வந்த டாங், ஸு யுன்னிடம் மழைக்காக பிரார்த்தனை புரியுமாறு வேண்டினார்.

 

ஸு யுன்னும் அதை ஏற்று ம்ழைக்காக பிரர்ர்த்தனை புரிய மூன்றே நாட்களில் மழை பெய்ய ஆரம்பித்தது.

 

ஆனால் டிப்தீரியா பரவுவது நிற்கவில்லை. ஆகவே டாங் மீண்டும் ஸு யுன்னிடம் வந்து, “ பனிப்பொழிவு ஏற்பட்டால் டிப்தீரியா நிற்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் பனிப் பொழிவிற்கும் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று வேண்டினார்.

 

அதை ஏற்றுக் கொண்ட ஸு யுன், ‘நான் பிரார்த்தனை செய்கிறேன். நீங்களும் தூயமையாக இருந்து வேண்டிக் கொள்ளுங்கள்” என்றார்.
டாங் விதிகளை அனுசரிக்க ஸு யுன் பிரார்த்தனை புரிய ஆரம்பித்தார்.

 

மறு நாளே ஒரு அடி உயரம் வரை பனிப் பொழிவு பெய்தது.

அனைவரும் போதிதர்மரின் எல்லையற்ற கருணையை நினைத்து ஆனந்தம் அடைந்தனர்.

*******

 

2 கதைகள்: ‘வேண்ட முழுதும் தருவோய் நீ’ (Post No.3467)

Written by London swaminathan

 

Date: 20 December 2016

 

Time uploaded in London:- 10-20 am

 

Post No.3467

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

எனது சொற்பொழிவின் இரண்டாம் பகுதி இது.

 

 

லண்டன் உயர்வாசற் குன்று முருகன் கோவிலின் (LONDON HIGH GATE MURUGAN TEMPLE) திருவாசக விழாவில் பேசுவதற்கு என்னை அழைத்திருந்தார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை 18-12-2016 அந்த விழா நடந்தது. பலர் சொற்பொழிவாற்றினர். மாணவ மாணவியர் தேவார திருவாசக இன்னிசை விருந்து அளிததனர்.

 

“நீண்ட நாள் வாழ ஒரு யோஜனை”– என்ற தலைப்பில் நேற்று முதல் பகுதியை வெளி யிட்டேன்.

 

என்னுடைய சிற்றுரையின் சுருக்கம் இதோ.

 

முதல் கதை

 

 

திருவாசகத்தை நமக்கு அருளிய மாணிக்க வாசகர் பாடுகிறார்:-

 

 

வேண்டத்தக்கது அறிவோய் நீ

வேண்ட முழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன்மாற்கு அரியாய் நீ

வேண்டி என்னைப் பணிகொண்டாய்

வேண்டி நீயா தருள் செய்தாய்

யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்

அதுவும் உன்றன் விருப்பன்றே

–குழைத்தபத்து, திருவாசகம்

 

பொருள்:-

எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் நீயே அறிவாய். நான் எதைக் கேட்டாலும் அருளும் கருணை வள்ளல் நீ. உன்னிடம் பல பொருள்களை வேண்டும் திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் அரியவன் நீ;  எனக்கு வேண்டியவற்றை கொடுத்து , நீயே என்னை ஏற்று அருளும் செய்தாய்; நானும் அதைத்தான் விரும்பினேன். இப்போது நான் வேண்டுவது ஏதாவது இருக்குமானால், அதுவும் உன்னுடைய விருப்பமே.

 

திருவாசகத்திலுள்ள 656 பாடல்களுக்கும் ஒரு கதை சொல்லி விளக்கமுடியும். சொல்லப்போனால் சிவபுராணம், கீர்த்தித் திரு அகவல் போன்ற நீண்ட பாடல்களுக்கு  ஒவ்வொரு மூன்று வரிகளுக்கும் ஒரு கதை சொல்லலாம். எனக்குள்ள சிறிது நேரத்தில் வேண்டியது முழுதும் அருள்வோய் நீ — என்ற வரிக்கு ராமகிருஷ் ண பரமஹம்சர் சொன்ன கதையை சொல்லுகிறேன்:

ஒரு வழிப்போக்கன் நீண்ட நெடுந்தூரம் பயணம் செய்து களைத்துப் போனான். ஒரு மரத்தின் நிழலில் படுத்துக் கொண்டு சிந்திக்கத் துவங்கினான். அடடா! இங்கு மட்டும் ஒரு மெத்தை இருந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்று நினைத்தான். அடுத்த கணத்தில் அவன் உடல் மெத்தை மீது இருந்தது. அவனுக்கு ஒரே ஆச்சரியம்; சிறிது நேரம் அதில் விழுந்து புரண்டு ஆனந்தித்தான். அடடா! இபோது மட்டும் என் உடல் வலி தீர ஐந்தாறு அழகான பெண்கள் வந்து என் கால்களைப் பிடித்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணினான்.

என்ன அதிசயம்! அடுத்த நொடியில் அங்கே சில அழகிகள் வந்து அவனுக்கு ‘மஸாஜ்’ செய்யத் துவங்கினர். சிறிது நேரம் ஆனபின்னர் பசி, வயிற்றைக் கிள்ளியது. நல்ல அறுசுவை உண்டி கிடைத்தால் சுகமாக இருக்குமே என்று நினத்ததுதான் தாமதம்! ஆவி பறக்க அறுசுவை உண்டி கிடைத்தது. எல்லா தேவைகளும் கிடைத்துவிட்டால் தேவையற்ற பயம் வந்துவிடும்.

 

பாருங்கள் நாம் கூட நிறைய பணம் சேர்ந்தால் அதைப் பாதுகாத்து வைப்பது பற்றிக் கவலைப் படுகிறோம். லாக்கரில் கொண்டு நகைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயம். அதை யாராவது வழிப்பறி செய்துவிடுவானோ என்று நகைகளை எடுக்கும் போது பயம். வீட்டில் அரிசிப் பானைக்குள் நகைகளை வைத்தால் Metal Detector மெடல் டிடெக்டர் வைத்து எடுத் துக்கொண்டு போய்விடுவானோ என்று பயம்! இது போலவே அந்த வழிப்போக்கனுக்கும் வேண்டாத ஒரு பயம் வந்தது அடடா! நம் நடுக்காட்டில் அல்லவா மரத்துக்கு அடியில் படுத் துக் கொண்டிருக்கிறோம் இப்போது ஒரு புலி வந்து நம்மை அடித்துக் கொன்றுவிட்டால் நான் என்ன செய்வது என்று நினைத்தான். அடுத்த வினாடி, புலி தோன்றி அவனைக் கடித்துக் குதறி கொன்றுவிட்டது.

இந்தக் கதையை சொன்ன ராமகிருஷண பரமஹம்சர் நம்மை எச்சரிக்கிறார்:- இறைவன் கருணைக்கடல்; கற்பக விருட்சம்; கேட்டதை எல்லாம் கொடுத்துவிடுவான்; நாம்தான் கேட்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

அன்பர்களே!

பாருங்கள், மாணிக்கவாசகரும் இதைத்தான் மேற்கூறிய பாட்டில் எதிரொலிக்கிறார். நாம் கடவுளை வேண்டும் போது எனக்கு நல்லன எல்லாவற்றையும் கொடு என்று வேண்டினால் போதும்.

 

இரண்டாம் கதை

 

நாடகத்தால் உன்னடியார்

போல் நடித்து நான் நடுவே

வீடகத்தே புகுந்திடுவான்

மிகப் பெரிதும் விரைகின்றேன்

ஆடகச் சீர் மணிக்குன்றே

இடையறா அன்புனக்கென்

ஊடகத்தே நின்றுருகத்

தந்தருளும் எம்முடையானே

திருச்சதகம் 11

பொருள்:-

தங்கத்துக்கு நடுவே எழுந்த மாணிக்க மலையே! எம்மை ஆட்கொண்ட இறைவா! உன்னுடைய அடியார்களைப் போலவே நடிக்கிறேன். அவர்களிடையே இருந்து மோட்ச உலகத்துக்குச் செல்ல விழைகின்றேன். நான் உன் அடிமை என்பதால், நீங்காத அன்பு அகலாதபடி எனக்கு அருள்புரி.

 

நாடகத்தால் நடித்து — என்ற வரியைப் பார்த்டவுடன் ராமகிருஷ்ணர் சொன்ன இன்னும் ஒரு கதை நினைவுக் கு வருகிறது.

 

நாடகத்தில் நடிப்பதுபோல நடித்தாலும் கூட இறைவன் அருள்புரிந்த கதை இதோ: ஒரு திருடன் ஒருநாள், ராஜாவின் அரண்மனைக்குள் புகுந்து திருடுவதற்காக ஒளிந்திருந்தான். அப்போது மன்னன், தன்னுடைய மகளின் கல்யாணம் பற்றி மந்திரியுடன் விவாதித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய மகளுக்கு நல்ல ஆன்மீக நாட்டம் கொண்ட ஒருவனையே மணம் முடிக்க விரும்புவதாகவும் மந்திரி, ஒரு நல்ல மாப்பிள்ளையை கண்டுபிடித்துவர வேண்டும் என்றும் சொன்னான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த திருடனுக்கு ஒரு யோஜனை மின்னல் போலப் பளிச்சிட்டது. நாம் ஏன் இங்கே திருட வேண்டும்? அகப்பட்டுவிடால் தலை போய்விடும். இதற்குப் பதிலாக நாம் ஒரு சந்யாசி போல நடிதால், ஒரு வேளை மன்னன் மகள் தன்னைக் கல்யாணம் செய்துவிடால் முழு ராஜ்யத்தையுமே அமுக்கிவிடலாமே என்று எண்ணி, சந்யாசி வேடம் போட்டுக் கொண்டு ஊருக்கு வெளியே சந்யாசிகள் எல்லாம் தங்கி இருக்கும் மடத்துக்குப் போனான்.

 

இதற்கிடையில்  மந்திரிக்கும் கவலை; மன்னன் கட்டளை ஆயிற்றே. மாப்பிள்ளைக் கிடைக்காவிடில் தன் தலை போய்விடுமே என்று மறு நாள் ஊருக்கு வெளியே மரத்தடியில் வசிக்கும் சந்யாசிகளிடையே போனான்

 

ஒவ்வொரு சந்யாசியையும் மந்திரி கேட்ட போது அவர்கள் எல்லாம் திருமணத்துக்கு சம்மதம் தரவில்லை. புதிய சந்யாசியாக வந்த திருடன் மட்டும் முதலில் ஒப்புக்கொண்டான். அவனுக்கு உடனே கிடைத்த ராஜ உபசாரத்தைப் பார்த்தவுடன் அவன் எண்ணினான்: சந்யாசியாக வேடம் போட்டதுக்கே இவ்வளவு மதிப்பு என்றால், உண்மையான சந்யாசியானால் எவ்வளவு மதிப்பும் சுகமும் கிடைக்கும் என்று எண்ணி அவனும் சந்யாசி ஆகிவிட்டான்.

 

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் அல்லவா?

 

அடுத்த முறை வரும்போது ஒரு மணி நேரம் சங்கீத உபந்யாசம் செய்ய ஆசை. ஒவ்வொரு திருவாசகப் பாடலுக்கும் ஒரு கதை சொல்கிறேன்.

நன்றி வணக்கம்.

 

–சுபம்

 

பாரதி பாட்டில் மாணிக்கவாசகர்! (Post No.3441)

Research Article Written by London swaminathan

 

Date: 12 December 2016

 

Time uploaded in London:-11-26 am

 

Post No.3441

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு உருகார், வேறு ஒரு வாசகத்துக்கும் உருகார்.

 

பாரதியின் பாட்டில் மகிழார், வேறு ஒரு பாட்டிலும் மகிழார்.

தெவிட்டாத இன்பம்தரும் பாரதி பாடல்!

 

பாரதி பாடல்களில் தேவார மூவரையோ, திருவாசகம் தந்த மாணிக்கவாசகரையோ நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆயினும் சைவத் திருமுறைகளில் திருவாசகமே அவரது உள்ளத்தைக் கொள்ளைகொண்டது என்பதற்குப் பல சான்றுகள் உள.

 

மாணிக்கவாசகர் என்னென்ன செய்தாரோ அதை இவரும் செய்துள்ளார்.

 

ஓம்காரம்

 

திருவாசகத்தின் முதல் பாடலிலும் (சிவபுராணம்), கடைசி பாடலிலும் ஓம்காரம் ஒலிக்கும்

 

இதே போல பாரதியின் பாஞ்சாலி சபதமும் ஓம் காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும்

 

1.உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என வோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே (சிவபுராணம்)

 

2.உய்யுநெறிகாட்டுவித்திட்

டோங்காரதுட்பொருளை (அச்சோபதிகம்)

 

இனி பாரதியார், பாஞ்சாலி சபதம் நூலைத் துவக்கி முடிக்கும் முறையினைக் காண்போம்:

 

1.ஓமெனப் பெரியோர்கள்- என்றும்

ஓதுவதாய் வினை மோதுவதாய்

தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர்

தேய்ப்பதுவாய், நலம் வாய்ப்பதுவாய்

–பாஞ்சாலி சபதத்தின் துவக்கப்பாடல்

 

2.ஓமென்றுரைத்தனர் தேவர்- ஓம்

ஓமென்று சொல்லி உறுமிற்றுவானம்

–பாஞ்சாலி சபதத்தின் முடிவுப்பாடல்

xxxx

 

மாணிக்க வாசகர் குயில்பத்து பாடினார்

பாரதியார்  குயில்பாட்டு பாடினார்.

xxxx

 

மாணிக்கவாசகர் அச்சோபதிகத்தில்

சாதல், காதல் என்று பாடுவது போலவே, பாரதியும் குயில்பாட்டில்

காதல் காதல் , காதல்

காதல் போயின் சாதல் என்று பாடுகிறார்.

 

ஆண்டவன் மீது திருப்பள்ளி எழுச்சி பாடினார் மாணிக்கவாசகர்.

 

பாரதமாதா மீது திருப்பள்ளி எழுச்சி பாடினார் பாரதியார்.

 

 

xxx

திருவண்டப் பகுதியில் மாணிக்கவாசகர் — எண்ணற்ற பலகோடி நட்சத்திர மண்டலங்களிருப்பது பற்றி பாடி வியக்கிறார்:

 

அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந்தன்மை வளப்பெருங்காட்சி

ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொருகோடியின் மேற்பட விரிந்தன

திருவாசகம்

 

பாரதியும் ,

 

நக்கபிரானருளால் இங்கு

நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்

தொக்கன அணடங்கள் வளர்

தொகைபல கோடிபல் கோடிகளாம்

இக்கணக்கு எவர் அறிவார் – புவி

எத்தனை உளதென்பது யார் அறிவார்

என்று பாடி வியக்கிறார்.

 

xxxx

 

திருத்தசாங்கம் பாடினார் மாணிக்கவாசகர்.

 

பாரதியும் திருத்தசாங்கம் பாடினார்

 

 

இருவரும் கிளியிடம் பேசுவதாகப் பாடியிருப்பதால் சொற்களிலும் அதிக ஒற்றுமை கானப்படுகிறது

xxxx

 

மாணிக்கவாசகர்  போற்றித் திரு அகவல் பாடினார்.

 

பாரதியும் “போற்றி அகவல், கபிலர் அகவல்” முதலியன பாடினார்.

 

இவையெல்லாம் மேம்போக்கான ஒற்றுமைகள். இன்னும் சொல்லாராய்ச்சியில் இறங்கினால் எந்த அளவுக்கு மாணிக்கவாசகரும் அவர்தம் திருவாசகமும் பாரதி மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அறியலாம்.

 

–Subham–

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 21(Post No.3440)

Article Written by S NAGARAJAN

 

Date: 12 December 2016

 

Time uploaded in London:- 10-47 am

 

Post No.3440

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 21

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 80.

 

வசந்த காலத்தில் போதிமண்டலம் என்னும் ஒரு விசேஷ ச்டங்கு இறந்தவர்கள் நற்கதி அடைவதற்காகவும் அடுத்த பிற்வியில் நல்ல பிறவி பெறுவதற்காகவும் செய்யப்பட்டது.

 

கொள்ளைக்காரர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதோடு மிருகங்களை பலியிடுவதும் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டது.

கவர்னர் டாங் வூவுடனும் அவ்ர் சகாவுடனும் பேச்சு வார்த்தை நடத்த அரசு அதிகாரிகளை அனுப்பினார். அவர்கள் இருவரும் ராணுவ கமாண்டர்களாக நியமிக்கப்பட்டனர்.

 

ஒரு குறிப்பிடத்தகுந்த அதிசய விஷயம் என்னவென்றால் இறுதிச் சடங்கு நடத்தப்பட்ட போது பல இடங்களிலும் ஆரமபத்தில் பல மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. அந்த மெழுகுவர்த்திகளின் ஜ்வாலைகள் எல்லாம் வெவ்வேறு விதமான மலர்களின் வ்டிவைக் கொண்டிருந்தன!

 

 

சில ஜ்வாலைகள் தாமரை வடிவிலும் வேறு சில வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் தோன்றின!

ஆலயத்தில் வழிபாடு செய்ய வந்த பக்தர்கள் அனைவரும் இந்த அதிசய வண்ண வடிவங்களைப் பார்த்து பிரமித்தனர். பரவசமாயினர்.

49ஆம் நாள் சடங்கு முடியும் போது வானத்தில் மேகங்கள் பெரிய பந்தல் வடிவிலும்  ரத்தின தோரணங்கள் போன்றும் தோன்றின!

சடங்குகள் முடிந்த பின்னா கவர்னர் டாங் ஸு யுன்னை அவரது இல்லத்திற்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்தார். அங்கு இறந்து போன டாங்கின் உறவினர்களுக்கு  சூத்ரங்கள் இசைக்கப்பட்டன.

 

 

இதனால் அவருக்கு தர்மத்தில் அதிக நம்பிக்கையும் பற்றும் ஏற்பட்டது.

அவருடன் சேர்ந்திருந்த அனைவரும் புத்த தர்மத்திற்கு மாறி விட்டனர்.

குளிர்காலம் வந்தது, ஸு யுன் குன்மிங்கிலேயே தங்கினார்.

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 81

 

கவர்னர் டாங் ஸு யுன்னிடம் இன்னொரு போதி மண்டலம் நடத்துமாறு வேண்டிக் கொண்டார்.

ஹூவா டிங் மடாலயம் குன்மிங்கின் மேற்குப் பக்கம் உள்ள மலையில் இருந்தது, அருமையான அந்த ஆலயத்தை அங்குள்ள துறவிகள் சரியாகப் பராமரிக்கவில்லை. ஆகவே அது சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அதை அவர்கள் ஐரோப்பியர்களுக்கு விற்கத் தீர்மானித்திருந்தனர்.

 

ஐரோப்பியர்களோ அங்கு ஒரு க்ளப்-ஹவுஸ் கட்ட முடிவு செய்திருந்தனர். இதற்கு உரிய அனுமதியையும் அரசு அதிகாரிகளிடமிருந்து அவர்கள் பெற்று விட்டனர்.

இதையெல்லாம் அறிந்த ஸு யுன் மிகவும் வருத்தமுற்றார்.

கவ்ர்னர் டாங்கைச் சந்தித்து அந்தப் புனிதத் தலத்தை அப்படியே நன்கு பராமரிக்குமாறு வேண்டிக் கொண்டார்.

 

ஸு யுன் சொன்னதை உன்னிப்புடன் கேட்ட டாங் உள்ளூர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அந்த அதிகாரிகளுள் ஒருவரான ஜாங் ஸு ஸியான் என்பவர் ஸு யுன்னை ஒரு சைவு உணவு விருந்திற்கு அழைத்தார்.

அங்கு அவரிடம் ஒரு சிவப்புத் தாளில் ஒரு அழைப்பிதழ் தரப்பட்டது.

 

ஹூவா டிங் மடாலயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதை புனருத்தாரணம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டிருந்தது.

மூன்று முறை இதை அவர்கள் வாய்மொழியாகவும் சொன்ன பின்னர் ஸு யுன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

 

உபாசகர் ஜாங் இரண்டு வாத்துகளை வாங்கி ம்டாலயத்தில் விட்டார். அவற்றிற்கு முன்னர் ஸு யுன் அகதிகள் சூத்திரத்தை இசைத்தார். அதை அவை மௌனமாகக் கேட்டன.

 

அன்றிலிருந்து துறவிகளுடன அவையும் பிரதான ஹாலில் சூத்திரங்கள் இசைக்கப்படும் போது அதைக் கேட்க வந்து விடும்.

மூன்று வருடங்கள் இது தவறாமல் நடந்து வந்தது,

துறவிகளுடன அவையும் ஊர்வலத்தில் இணைந்து கொண்டு  புத்தரின் சிலைகளை பிரதக்ஷிணம் செய்யும்.

ஆலயத்தில் இருந்த ஒவ்வொருவரும் அவற்றை அன்புடன் நடத்தினர்.

 

ஒரு நாள் பெண் வாத்து  பிரதான ஹாலின் வாயிலில் வந்து நின்று பார்த்தது. பின்னர் மூன்று முறை பிரதக்ஷிணம் செய்தது. தனது தலையை உயர்த்தி புத்த சிலையைப் பார்த்து உயிரை விட்டது. அதன் இறக்கைகள் ஒளியுடன் இருந்தன. அது ஒரு பேழையில் வைத்து புதைக்கப்பட்டது.

 

அதன் இணையான் ஆண் வாத்து தன் துணையின் பிரிவைத் தாங்க முடியாமல் சில நாட்கள் கழித்து  பிரதான ஹாலுக்கு வந்து நின்று சிலைகளைப் பார்த்தத்து. இறகுகளை விரித்துப் பின்னர் இறந்தது.

அது ஒரு பேழையில் வைக்கப்பட்டு பெண் வாத்துக்கு அருகில் புதைக்கப்பட்டது

 

(அரசியல் நிலைமையோ வேறு விதமானது.இலையுதிர்காலத்தில் கவர்னர் டாங்கை வீழ்த்த ஒரு சதி நடந்தது. அவர் ஸு யுன்னின் ஆலோசனையைக் கேட்டார்.

 

மக்கள் மனதில் நீங்கள் இருந்தாலும், பலம் பொருந்திய ராணுவப் படையை உங்களால் எதிர்கொள்ள முடியாது. ஆகவே இப்போது  இங்கிருந்து சென்று விடுங்கள். காலம் கனியும் போது திரும்பலாம் என்றார் ஸு யுன். அதைக் கேட்டு அவர் நகரிலிருந்து வெளியேறினார்.

 

இந்த விவரம் பத்து வருடங்களுக்குப் பின்னர் ஸு யுன் தனது சிஷ்யரிடம் கூறினார்.)

 

*****

 

மனைவி கர்ப்பிணி, கணவன் பிரம்மச்சாரி! ஒரு சுவையான கதை! (Post No. 3436)

Written by London swaminathan

 

Date: 10 December 2016

 

Time uploaded in London: 9-32 am

 

Post No.3436

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

This story is available in English in my blog.

 
மனம் ஒரு கடல். நம் ஒவ்வொருவரிடையேயும் மகத்தான சக்தி இருக்கிறது. அதைத் தேவை ஏற்படும் போது பிரயோகித்து அதிசயம் நிகழ்த்தலாம். இதோ பேராசிரியர் உஷர்புத் சொன்ன கதை. அவர் முதலில் அமெரிக்காவில் மின்னசோட்டா ப ல்கலைக் கழக சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியராக இருந்து பின்னர் வேதபாரதி என்ற பெயரில் சாமியார் ஆனார்.

 

“முன்னொரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார். அவருடைய அண்ணன் பெரிய அறிவாளி; ஒரு நேரத்தில் அரசாட்சியைத் தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு தவம் செய்யப் போய்விட்டார். தவத்தின் மூலமாக நிறைய சக்தி கிடைத்தவுடன் ஒரு ஆஸ்ரமம் அமைத்தார். ராஜாவின் அரண்மனை நதியின் ஒரு பக்கமும் மறுகரையில் அந்த ஆஸ்ரமமும் அமைந்திருந்தன.

 

காலம் உருண்டோடியது; தம்பிக்கு (ராஜவுக்கு) கல்யாணம் நடந்தது– மனைவி கர்ப்பவதி ஆனாள். கர்ப்பிணிப் பெண்கள் எப்போதும் நல்ல விஷயங்களைக் கேட்டால் குழந்தையும் அறிவாளியாகவும் ஞானியாகவும் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதை ஒட்டி மஹாராணியும் கணவனிடம் சொன்னாள்:

சுவாமி! நாதா! என் பிரிய நாயகரே; எனக்கோ விரைவில் குழந்தை பிறக்கப்போகிறது. உங்கள் குழந்தையும் உங்களைப் போல அறிவாளியாகவும், ஞானவானாகவும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் . ஆகையால் உங்கள் அண்ணனை — சந்யாசியைப் பார்த்துவர அனுமதி கொடுங்கள்.

 

ராஜாவுக்கு மெத்த மகிழ்ச்சி; அதற்கென்ன சென்று வா; வென்று வா! என்று செப்பினார். சாது சந்யாசிகளையும், அரசனையும் பெரியாயோர்களையும் பார்க்கச் செல்லுகையில் வெறும் கையுடன் போகக்கூடாது; ஏதேனும் அன்பாகக் கொடுப்பதற்குக் கொண்டுபோக வேண்டும் என்று இந்துமத சாத்திரங்கள் சொல்லுகின்றன. ஆகவே அவளும் உடனே நிறைய பலகாரங்களைச் சமைத்து எடுத்துக்கொண்டாள். புறப்படுவதற்கு முன் ராஜாவிடம்சென்று, அன்பரே ஆற்றைக் கடக்க படகு ஏற்பாடு செய்துவிட்டீர்களா? என்று வினவினாள்.

ராஜா சொன்னார்: கண்ணே! மணியே! கற்கண்டே! படகு எதற்கு? சத்தியம் செய்துவிட்டு அந்த சத்தியத்தின் பேரில் “நதியே வழிவிடு” என்றால் தானாக வழிவிடும். நந்த கோபன், கிருஷ்ணனை தலைமீது கூடையில் வைத்துக் கொண்டு யமுனையைக் கடக்கவில்லையா? அப்போது யமுனையே வழிவிட்டதே!

 

மனைவி/ மஹாராணி சொன்னாள்: அவர்களுக்கெல்லாம் மஹத்தான சக்தி இருந்தது. எனக்கு அப்படி ஒன்றுமில்லையே!

 

கணவர்/ ராஜா சொன்னார்:

அதனால் என்ன? என்னுடைய சக்தியை எடுத்துக் கொள். நதிக் கரைக்குப் போய் நில்; என் கணவன் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான நாள் முதல் இன்று வரை  பிரம்மச்சாரி என்பது உண்மையானால் நதியே எனக்கு வழிவிடு என்று சொல் என்றார்.

 

மனைவிக்கு ஒரு புறம் சந்தேகம்; மறுபுறம் குழப்பம்; என்னுடன் படுக்கையில் படுத்து என்னை கர்ப்பம் தரிக்கச் செய்தவர்; எப்படி பிரம்மச்சாரி என்று சொல்லுகிறார்?  சரி, போய்தான் அவர் சொன்னதைச் செய்வோமே என்று அவர் சொன்னபடியே செய்தாள். நதியும் விலகி வழிவிட்டது!

 

மகிழ்ச்சியுய்டன் மறுகரையிலுள்ள ஆஸ்ரமத்தை அடைந்தாள். ராஜாவின் அண்ணனான சாமியாருக்கு நாள் முழுதும் பணிவிடை செய்தாள்; உபதேச மொழிகளைக் கேட்டறிந்தாள். தான் கொண்டு சென்ற பலகாரங்களைப் பரிமாறி அவரை உண்ண வைத்தாள். அவரும் மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொல்லிச் சாப்பிட்டார்.

 

மாலை நேரம் நெருங்கியது; கணவனிருக்கும் அரண்மனைக்குப் போவதற்கு விடை பெற்றாள் சந்யாசியிடம்.

“தயவு செய்து, எனக்கு ஒரு படகு மட்டும் ஏற்பாடு செய்து விடுங்கள்; நான் பொழுது சாய்வதற்குள் அரண்மனைக்குப் போக வேண்டும்” என்றாள்.

சந்யாசியோ சிரித்துக் கொண்டே சொன்னார்:

“பெண்மணியே! சத்தியம் செய்துவிட்டுப் போ, நதி தானாக வழிவிடும் என்றார். என்ன சத்தியம் செய்வது?” என்று கேட்டாள்.

 

“நான் காலை முதல் மாலைவரை பணிவிடை செய்த சந்யாசி நாள் முழுதும் உண்ணா நோன்பு அனுஷ்டித்தது உண்மையானால் ஏ! நதியே! எனக்கு விலகி வழிவிடு என்று சொல்; நதியும் விலகிவிடும்” என்றார்.

அவளுக்கு மீண்டும் குழப்பம். என் கையால் சமைத்ததை நாள் முழுதும் சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரதம் இருந்ததாகச் சொல்லுகிறாரே! என்று திகைத்தாள்

638d2-img_7098

ஆயினும் காலையில் வந்தபோது நிகழ்ந்த அதிசயம் மீண்டும் நடக்குமோ என்று எண்ணி, சந்யாசி சொன்னபடியே செய்தாள். நதியும் இரண்டாகப் பிரிந்து இடைவெளியில் பாதை உண்டாக்கியது. இதைக்கண்டு வியப்புற்ற அவள், கணவனிடம் இதற்கு விடை கேட்காவிடில் என் தலையே வெடித்துவிடும்; அவ்வளவு குழப்பமாக இருக்கிற து என்று எண்ணிச் சென் றாள்.

 

 

கணவன் அவளை இன்முகத்துடன் வரவேற்றவுடன் கேட்ட முதல்

கேள்வி:

நீங்கள் பிரம்மசாரியுமில்லை; உங்கள் அண்ணன் உண்ணாவிரதியும் இல்லை; நீங்கள் என் வயிற்றிலுள்ள குழந்தைக்குத் தந்தை; அவரோ நாள் முழுதும் நான் கொண்டு சென்ற உணவுவகைகளை ருசித்துச் சாப்பிட்டார்.

 

சுவாமீ! நாதா!! இதற்கு என்ன விளக்கமோ?

 

அவர் சொன்னார்:-

“அன்பே! ஆருயிரே! மனத்தின் விசாலம் பலருக்கும் தெரிவதில்லை. அது சமுத்திரம் போலப் பரந்தது; உண்மையாகவுள்ள சமுத்திரத்தைவிட ஆழமானது, பெரியது. அதில் நாம் துளிக்கூடப் பயன்படுத்தவில்லை. நான் உன்னுடன் படுக்கையில் படுத்து இன்பம் துய்த்தது உண்மையே; எனது அண்ணன்/ சந்யாசி நீ கொண்டுசென்ற உணவைப் புசித்ததும் உண்மையே. ஆயினும் எப்படி கடலின் ஒரு ஓரத்தில் அழுக்குப் படிந்தாலும், அந்தக் கடல் முழுதும் அழுக்குக் கடல் ஆகாதோ, அப்படியே மனத்தின் ஒரு ஓரத்தில் பதிந்திருக்கும் இக்காரியங்கள் — செயல்கள் — எங்களைப் பாதிக்காது.

 

என் கருத்து:–

மனத்தின் சக்தி மஹத்தானது; ஆதிசங்கரர்,ஜனக மஹராஜா போன்ற ஞானிகள் அதைப் பயன்படுத்தி பல அற்புதங்களைச் செய்துள்ளனர். மேற்கூறிய கதையைப் பின்னனியில் வைத்து மகான்களின் புரியாத செயல்களை ஆராய்ந்தோமானால் பொருள் விளங்கும்!

 

–subham–

 

ஆற்றுப்படைகளில் அந்தணரும் வேதமும் ! (Post No.3364)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 18 November 2016

 

Time uploaded in London:5-53 AM

 

Post No.3364

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 9

 

இந்தக் கட்டூரையில் பெரும்பாணாற்றுப்படை மற்றும் சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் வேதம் அந்தணர் பற்றி வரும் சிறப்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன

 

பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படையில்

 

அந்தணரும் வேதமும் !

 

                        ச.நாகராஜன்

                            

பெரும்பாணாற்றுப்படை

பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,, கூத்தராற்றுப்படை ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்களாகும்.

 

ஆறு என்றால் வழி; படை என்றால் படுத்தல்.

 

குறிப்பிட்ட ஒரு வழியில் செல்லும்படி  நெறிப்படுத்துவதே ஆற்றுப்படையாக அமைகிறது.

 

இந்த வழியில் சென்று இந்த தலைவனை அடைந்தால் நல்ல நன்கொடை பெறலாம் என புலவர் அறிவுறுத்தும் பாடலே ஆற்றுப்படையாக மலர்கிறது.

 

இந்த வகையில் பெரும்பாணாற்றுப்படையைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

 

பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.

500 அடிகள் கொண்டது பெரும்பாணாற்றுப்படை..

 

 

வறுமையான இசைக் குடும்பம் ஒன்று. அதன் தலைவனை விளிக்கும் புலவர் காஞ்சியை ஆண்டு வந்த  தொண்டைமான் இளந்திரையனை அடையும் வழியை விவரிக்கிறார்.

அந்த விவரணத்தில் நாம் பெறுவது அழகிய சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை!

 

காட்டின் வழியே சென்றால் காண்பது என்ன என்பதை விவரிக்கும் புலவர் அடுத்து பாலை வழி, முலலை நிலம் வழி,மருத நிலம் வழி ஆகியவற்றை விவரிக்கிறார்.

இதை அடுத்து வருவது அந்தணர் குடியிருப்பு.

 

அங்கே சிறிய  பந்தலில் கன்றைக் கட்டி இருப்பர். வீட்டின் முற்றமோ பசுஞ்சாணம் இடப்பட்டு மெழுகப்பட்டிருக்கும்.

அங்கு கோழியோ நாயோ வராது. அங்குள்ள பசுங்கிளிகள் வேத பாராயணம் செய்யும். அந்த வீட்டில் இருக்கும் பிராம்மணப் பெண்மணி அருந்ததி போன்ற கற்புடையவள்.

அங்கு சென்றால் நல்ல அரிசிச் சோறும், நல்ல மோரும், கொம்மட்டி மாதுளங்காயின் துண்டுகளை மிளகோடு கறிவேப்பிலல கலந்து மாவடுவோடு பெறுவீர்கள் என்று விவரமாகக் கூறுகிறார் புலவர்.

 

 

கவனிக்கவும்: அங்கே போனால், அது பிராம்மணரின் வீடு. உள்ளே விட மாட்டார்கள். ஒன்றும் கிடைக்காது என்று சொல்லவில்லை.

மாறாக வேதம் சொல்லும் கிளிகள் சூழ பசுஞ்சாணம் மெழுகிடப்பட்ட அழகிய இடத்தில் அரிசிச் சோறும் மோரும், மாதுளங்காய் கறி மற்றும் மாவடுவும் அந்தணர் தருவர் என்கிறார் புலவர்..

என்ன ஒரு அற்புதமான சூழ்நிலை. என்ன ஒரு அன்பு.

பாடல் வரிகளைப் பார்ப்போம்:,

 

செழுங்கன்று யாத்த சிறுதாட் பந்தர்
பைஞ்சேறு மெழுகிய படிவ நல்நகர்
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது
வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும்
மறை காப்பாளர் உறைபதிச் சேப்பின்
பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்
வளைக்கை மகடூஉ வயின்அறிந்து அட்ட
சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம்
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து
கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர்
நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த                                                                 தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர் (வரிகள் 297-310)

செழுங்கன்று யாத்த – கொழுத்த கன்றுகள் கட்டப்பட்ட

சிறுதாள் பந்தர் – கால்கள் நடப்பட்ட பந்தல்

பைஞ்சேறு மெழுகிய – பசுஞ்சாணத்தினால் மெழுகிடப்பட்ட          படிவ நல்நகர் – பலவித சடங்குகள் நடக்கும் வீடு

உறி கோழியொடு ஞமலி துன்னாது – கோழி, நாய் அங்கு அண்டாது                                                          வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் – வளைந்த மூக்குகள் கொண்ட கிளிகள் வேத பாராயணம் செய்யும்             மறை காப்பாளர் – வேதங்களைக் காத்து வரும் அந்தணர் உறைபதி சேப்பின் – (அவர்கள்) உறையும் இல்லம் சென்றால் வானத்து வடவயின் விளங்கும் சிறுமீன் புரையும் கற்பின் –  வானத்தின் வடக்கே திகழும் அழகிய சிறு நட்சத்திரமான அருந்ததி போல

நறுநுதல் வளைக்கை மகடூஉ – நல்ல நெற்றியை உடைய வளையல்களை அணிந்த பெண்கள் இருப்பர்                    வயின் அறிந்து அட்ட – மிக நன்றாக சமைக்கப்பட்ட

சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம் – சூரியாஸ்தமனத்தில் உள்ள பறவையின் பெயர் கொண்ட பிரமாதமான உணவு (அரிசிச் சோறு)

 

 

சேதா நறுமோர் வெண்ணெயின் – பசுவினிடமிருந்து பெறப்பட்ட நறுமணமுடைய வெண்ணெயுடன் கடைந்தெடுக்கப்பட நறுமோர் மாதுளத்து உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து – மாதுளங்காயை சுட வைத்துத் துண்டுகளாக்கி மிளகு தூவப்பட்ட கறியுடன்

கஞ்சக நறுமுறி அளை இ –  நறுமணமுடைய கறிவேப்பிலை கலந்த

பைந்துணர் நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த – புதிய பெரிய மாமரத்தினின்று எடுக்கப்பட்ட மாவடு                     விதிர்த்த – கலக்கப்பட்ட

தகைமாண் காடியின் – அருமையான ஊறுகாயுடன் கூட

வகைபடப் பெறுகுவீர் – பல வித வகை உணவைப் பெறுவீர்!

 

 

காழ்ப்புணர்ச்சியோ பகையுணர்ச்சியோ இல்லாத ஒரு சமுதாயம். அந்தணரும் இசைக் குடும்பமும் இணைந்து உண்ணும் ஒரு அருமையான விருந்துச் சாப்பாடு!

 

அடுத்து 315, 316 அடிகளில் அந்தணரும் வேள்வியும் உரைக்கப்படுகிறது.

 

நீர்ப்பெயற்று என்று ஒரு ஊர். அந்த ஊரின் சிறப்போ சொல்லி  மாளாது. அங்குள்ள பெண்டிர் தங்களுக்குத் தெரிந்த நட்புடன் அதிகாலை நேரத்தில் நீரில் விளையாடுகின்றனர். அவர்கள் தங்களது தங்கக் காதணிகளை கரையிலே கழட்டி வைக்க அவ்ற்றை மீனொன்று தன் உணவென எடுத்து  தனியே பறவைகள் நிறைந்துள்ள் பனைமரம் அருகே செல்லாது வேதம் சொல்லும் அந்தணர்கள் யாகம் இயற்றும் வேள்வித் தூணத்து அருகில் கொண்டு வைக்கிறது.

 

 

 கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ         (வரிகள் 315-316)

 

 

எத்தகைய அற்புதமான நடைமுறை வாழ்க்கைச் சித்திரம். வேதத்தின் பெருமையும் அதை உரைக்கும் அந்தணரின் வாழ்க்கையும் விருந்தோம்பும் பண்பும் மாண்புறச் சித்தரிக்கப்படுகிறது!

 

சிறுபாணாற்றுப்படை

 

அடுத்து சிறுபாணாற்றுப்படையில் வரும் வரிகளைக் காண்போம்:

இது தொண்டை நாட்டு ஓவியர் குடியில் பிறந்த (ஒய்மான் நாட்டு) நல்லியக் கோடன் மேல் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய பாடல்.

 

 

அருமறை நாவின் அந்தணர்க்காயினும்

கடவுள் மால்வரை கண் விடுத்தன்ன

அடையா வாயில்    (வரிகள் 204,205,206)

 

நல்லியக்கோடனின் அரண்மனை வாயில் பொருநர்க்கும் புலவர்க்கும் மூடப்படாத வாயில். அருமறையை நாவிலே கொண்டிருக்கும் அந்தணர்க்கும் கடவுளின் உயர் மலை கண் திறந்து இருத்தாற்போல மூடப்படாத வாயிலாகும்

 

ஆக சிறப்புடை ஒரு தலைவனுக்கு உள்ள நல்லிணக்கணத்தில் அந்தணரை அவன் வரவேற்று உபசரிப்பதும் ஒன்று என்பது இதிலிருந்து பெறப்படுகிறது! இந்த இரு ஆற்றுப்படை நூல்களிலும் அந்தணரும் அவர் நாவில் உச்சரிக்கும் வேதமும் பற்றிய அருமையான கருத்துக்கள் இடம் பெறுவதைக் காண்கிறோம்; சங்க காலத்தில் வேதம் மற்றும் அந்தணருக்கான சிறப்பான இடம் பற்றி அறிகிறோம்!

******

 

 

 

அனுமாருக்கு இரண்டு இறக்கை! கம்பன் புதுத் தகவல்!( Post No.3363)

Written by London Swaminathan

 

Date: 17 November 2016

 

Time uploaded in London: 16-21

 

Post No.3363

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

குட்டி யானைக்குக் கொம்பு முளைச்சதாம் பட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சாமென்று சிறு வயதில் பாடக் கேட்டிருப்போம்.

 

கம்பன் சொல்கிறான் அனுமனுக்கு இரண்டு இறக்கைகள் என்று; அதை வைத்துதான் அவன் பறந்தானாம்.

அதுவும் அனுமன் வாயிலாகவே அதைச் சொல்லுகிறான். படிக்கச் சுவையாக இருக்கிறது.

 

இதோ அந்தப் பாடல்

 

முற்றும் நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர்

உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்த தேனும்

இற்றை நும் அருளும் எம் கோன் ஏவலும் இரண்டு பாலும்

கற்றை வார் சிறைகள் ஆகக் கலுழனின் கடப்பல் காண்டீர்

 

பொருள்:-

 

கடலால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் முழுகச் செய்து அழிக்கும் பொருட்டு கடல் பொங்கி வந்தாலும் (சுனாமி ஏற்பட்டாலும்),  இந்த உலக உருண்டையே உடைந்து போய் உயர்ந்து வானத்தில் சென்றாலும், சற்றும் கலங்காமல் கருடன் (கலுழன்) போல இக்கடலைக் கடந்து செல்வேன். எப்படியெனில் எனக்கு இரண்டு இறக்கைகள் முளைத்துள்ளன. ஒரு இறக்கை நீங்கள் எல்லோரும் என் மீது வைத்துள்ள கருணை; மற்றொரு இறக்கை இராமபிரான் போட்ட கட்டளை! நான் கடலைக் கடப்பதைக் காணத்தான் போகிறீர்கள்!

 

என்ன அருமையான கற்பனை. கருணை/அன்பு என்ற ஒன்றும் தலைவனின் கட்டளை என்ற ஒன்றும் அனுமனை கடலையே கடக்க வைத்துவிட்டது. இவைதான் இரண்டு இறக்கைகள் (சிறைகள்).

 

இந்தப் பாடலில் உள்ள சில விஞ்ஞானச் செய்திகளையும் அலசி ஆராய்வோம். வெள்ளைக்காரன் எழுதிய புத்தகங்களில் எல்லாம் ஏதோ பூமி உருண்டை என்பதை அவந்தான் கண்டு பிடித்தான் என்று எழுதியிருப்பார்கள். ஆனால் நாமோ பூமியைக் குறிப்பிடத் தொடங்கிய நாளிலிருந்தே அண்டம் (முட்டை) என்ற சம்ஸ்கிருதச் சொல்லையே பயன்படுத்துவோம். பூமி முட்டை வடிவமானது என்பதோடு கடலால் சூழப்பட்டது என்பதையும் ஒவ்வொரு பாடலிலும் சொல்லுவோம்.

 

அது மட்டுமல்ல; சுனாமி போன்ற பெரிய தாக்குதலில்– இயற்கைச் சீற்றத்தில் உலகமே முழுகி பெரும் பிரளயம் வரும் என்பதும் நமக்குத் தெரியும். இந்த சுனாமியை அணுகுண்டுகள் வீசுவதால் மனிதனே உருவாக்குவானா அல்லது இயற்கையின் சீற்றத்தால் உருவாகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அண்ட சராசரங்கள் என்ற சம்ஸ்கிருதச் சொற்றொடர் மூலம் இந்தப் பிரபஞ்சமே வட்டவடிவமனது என்பதையும் நாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டோம்.

 

–Subham—

 

 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 3 (Post No.3331)

Picture of a Brahmin from a German book

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 8  November 2016

 

Time uploaded in London: 5-16 AM

 

Post No.3331

 

 

Pictures are taken from various sources. Thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 6

இந்தக் கட்டூரையில் புறநானூற்றில் உள்ள பாடல்கள் 224,361,362,400 ஆகியவை இடம் பெற்றுள்ளன

 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 3

 

                        ச.நாகராஜன்

                            

 

சங்ககாலத்தில் வாழ்ந்த அற்புதமான ஒரு சோழ மன்னன் கரிகாலன். இவனது அறிவுத் திறனும் சிறு வயதிலேயே நீதியை நிலை நாட்டிய நிகழ்வும் தமிழ் வரலாற்றில் பொன் ஏட்டில் பொறிக்கபட்டவை.

இவனைப் புகழ்ந்து கருங்குழல் ஆதனார் பாடிய பாடல் 224ஆம் பாடலாக புறநானூற்றில் இடம் பெறுகிறது. மன்னன் கரிகாலன் வேள்விகளை இயற்றி வேதமுறைப்படி அரசாண்டதை நினைவு கூர்கிறார் புலவர்.

பாடல் வரிகள் இதோ:

பருதி உருவின் பல் படைப் புரிசை

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்  (வரிகள் 7 முதல் 9 முடிய)

 

சூரியனைப் போன்ற வட்ட வடிவமான (பருதி உருவின்) பல சுவர்களை அமைத்து (பல் படைப் புரிசை) பருந்துகள் நுகரும்படியான (எருவை நுகர்ச்சி) பல யூபத் தூண்களை நாட்டி (யூப நெடுந்தூண்) வேதம் அறைந்த வழியில் வேள்விகளைச் செய்தவன் (வேத வேள்வித் தொழில்  முடித்ததூஉம்) என்று புலவர் இவனைப் புகழ்கிறார்.

தூய்மையான மகளிர் சுற்றி இருத்தல், அறநெறி வழுவாத நடுநிலைமையுடன் கூடிய நீதி வழங்கு நெறிமுறை கொண்டிருத்தல், வேத வேள்வியை இயற்றுதல் ஆகியவை கொண்டவன் என புலவர் சொல்வதால் சங்க கால மக்களின் வாழ்வில்  மிகுந்த மேன்மையுடையவை என கற்பு, நீதி, வேத முறை ஆகியவை போற்றப்பட்டதை அறியலாம். வேள்வியை முறைப்படி செய்து முடிக்கும் அந்தணரும் குறிப்பால் உணர்த்தப்படுகின்றனர்.

 

அடுத்து 361, 362 ஆகிய இரு பாட்லகளைப் பார்ப்போம். க்யமனார் என்னும் புலவர் பாடிய பாடலாக இடம் பெறுகிறது பாடல் எண் 361.

பாட்டுடைத் தலைவன் யாரெனத் தெரியாவிட்டாலும் கூட, அவன் கூற்றுவனுக்கு அஞ்சா நல்லவன் என்பது புரிகிறது. அவன் தாயின் நல்லன்.

வேத வேள்வியைச் செய்யும் கேள்வி முற்றிய அந்தணருக்கு  தொன்று தொட்டு இருந்து வரும் நடைமுறைப்படி கையில் நீர் வார்த்து ஏராளமான பொன்குவியலை அள்ளிக் கொடுத்தவன். அவன் பெருமையை அள்ளித் தெளிக்கிறார் இந்தப் பாடலில் பெரும் புலவர்.

நன் பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அருங்கலம் நீரொடு சிதறிப் பெருந்தகை (வரிகள் 3 முதல் 5 முடிய)

 

அடுத்து வரும் 362ஆம் பாடலைப் பாடியவர் சிறுவெண் தேரையார்.

பாட்டுடைத் தலைவன் சாதாரணமானவன் அல்லன். அவனைப் புகழ வந்த புலவர் சூரியனையும் சந்திரனையும் இணைக்கிறார். ர்ஞாயிறு அன்ன ஆய மணி மிடைந்தவன்.மதி உறழ ஆரம்  மார்பில் கொண்டவன். (சந்திரனைப் போன்று திகழும் முத்து மாலை மார்பில் அணிந்தவன்.)

பாடலில் வரும் சில வரிகளைப் பார்ப்போம்: .

 

தாக்குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறை குறித்தன்று அருளாகாமையின்
அறம் குறித்தன்று பொருளாகுதலின்

மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக்
கை பெய்த நீர் கடற்பரப்ப    (வரிகள் 8 முதல் 12 முடிய)

ஓ, பிராமணர்களே! தாக்குகின்ற குரல்களைக் (தாக்கி வரும் பகைவர்களின் ஒலிகளைக்) கேளுங்கள்! இது நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்பட்ட ஒன்று அல்ல! இது அருள் இல்லாதது என்பதால் இது அறம் சார்ந்த ஒன்று அல்ல. இது பொருள் குறித்தது. அதாவது materialism குறித்தது. அறத்திற்கும் அருளுக்கும் சம்பந்தமில்லாத ஒன்று.

அடுத்து வரும் வரி அற்புதமான வரி!

Brahmin doing Pranayama (Breathing exercise)

மருள் தீர மயக்கம் ஒழிய அந்தத் தலைவன் அந்தணர்களின் கையில் நீர் பெய்து வாரி வழங்குகிறான்.

அவன் இப்படிக் கொடுத்து கீழே விழும் நீர் எவ்வளவு தெரியுமா?

“கை பெய்த நீர் கடற் பரப்ப”

அவன் கையிலிருந்து வழிந்த நீர் கடலாக ஆயிற்று.

அடேயப்பா!எத்துணை பேருக்கு அவன் நீர் வார்த்திருந்தால் ஒரு கடல் உருவாகி இருக்கும்.!

தமிழர்களின் நெஞ்சங்களில் வேரூன்றி இருக்கும் நேர்மையான கற்பனைத் திறனைத் தூண்டி விடும் புலவர் அவன் அந்தணரை ஓம்பி அறம் காத்த பான்மையைச் சிறப்பாகச் சொல்லி விடுகிறார்!!

புலவர் ஒரு கோடிட்டுக் காட்டி அவன் அறம் வளர்த்த பான்மையைச் சொற்களால் சுற்றி வளைத்துக் காட்டுகிறார்.

வாழ்க அந்தணர்! வாழிய அறம் வளர்த்த மன்னர் குலம் !!

 

அடுத்து இறுதியாக 400ஆம் பாடலைப் பார்ப்போம்.

பாடலைப் பாடியவர் மிக அற்புதமான அரும் புலவரான கோவூர் கிழார். பாடப்பட்ட பாட்டுடைத் தலைவனோ புகழ் பெற்ற சோழன் நலங்கிள்ளி!

கேட்கவா வேண்டும். சொற்கள் கும்மாளம் போட்டுக் குதித்து வருகின்றன. பாடலைப் படிப்பதே ஒரு தனி சுகம்.

 

சோழன் நலங்கிள்ளி இருக்கிறானே அவன் உலகு காக்கும் உயர் கொள்கையாளன். பலர் துஞ்சும் போது (உறங்குகையில்) தான் துஞ்சான் அவன் தன் எதிரிகளை மட்டும் கடிதல் அல்லன்.

 

அவன் தன் எதிரிகளை வெல்வதோடு பசிப்ப்கையையும் வெல்பவன். அவனது நாட்டில் பசி என்று சொன்னால் அந்தப் பகைவனை உடனே அவன் வென்று விடுவான். பசியைக் கொன்று விடுவான்.

இத்துணை சிறப்புடைய அவனைப் பற்றி புறநானூற்றில் மட்டும் 12 பாடல்கள் இருப்பதில் வியப்பில்லையே!!

 

Pranayama step 2

அவன் கேள்வி மலிந்த வேள்வியையும் செய்பவன். பாடல் வரிகள் இதோ:

கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து
இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்துத்
துறை தொறும் பிணிக்கும் நல்லூர்
உறைவின் யாணர் நாடு கிழவோனே. (வரிகள் 19 முதல்23 முடிய)

கேள்வி மலிந்த வேள்விக்கான பல தூண்கள் நிறுவப்பட்டு யாகஙகள் நடை பெறும் நாடு.

ஆர்கலி கப்பல்கள் அகன்ற நீர்ப்பரப்பின் முகவாய் வழியே வருகின்ற நாடு.

அது தேறு நீர்ப்பரப்பை நனகு சுத்தம் செய்ய கடற்கரையில் அழகிய நகரங்கள் உள்ள நாடு.

அந்த நாட்டை ஆளும் அற்புதன் யார்?

யாணர் நாடு கிழவோன்! வளம் கொழிக்கும் நாட்டின் மன்னன் அவனே நலங்கிள்ளி!

இப்படிப்பட்ட பாடல்களை முழுதுமாக நாமே பாடிப் பொருளை நன்கு ஓர்ந்து உணர்ந்து அறிந்தால் தமிழ் நாடு வேத தேசமாக இருந்ததை நன்கு அறிந்திடுவோம்; மகிழ்ந்திடுவோம்.

இங்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை நினைவு  கூர்ந்து மகிழலாம். தென்னகத்தில் இருக்கும் ராமநாதபுரம் சேத்பதி மன்னர் முதல் கர்நாடகத்தில் இருக்கும் மைசூர் மஹாராஜாவிலிருந்து வடக்கே நெடும் தொலைவில் இருக்கும் ராஜஸ்தானில் உள்ள மன்னர்கள் வரை இன்றும் வேத வேள்விகளை வளர்த்து அந்தணர்களைப் போற்றி வருகின்றனர்.

இது அழியாத பரம்பரையின் ஒரு தொடர்ச்சி அல்லவா!

இன்னும் சில புறநானூறுப் பாடல்கள் உள்ளன. (கட்டுரைத் தொடரில் சொல்லப்பட்டு இதுவரை விளக்கப்பட்ட ஒன்பது பாடல்களைத் தவிர) அவற்றையும் பார்க்காமல் விட்டு விட முடியுமா என்ன? தொடருவோம்!

-தொடரும்

 

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 15 (Post No.3317)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 4  November 2016

 

Time uploaded in London: 5-51 AM

 

Post No.3317

 

 

Pictures are taken from various sources; thanks. This picture is from a Facebook friend ; thanks.

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 15

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 71.

அரசாங்கம் மடாலயங்களின் சொத்துக்களுக்கு எந்த வரியையும் விதிக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்ததிலிருந்து யுனான் மாகாணத்தில் மிக்க அமைதி நிலவியது.

 

யுனானின் வைசிராய் லி ம்டாலயத்திற்கு ஒரு பிரதிநிதியை அனுப்பி ஸு யுன்னின் நலம் பற்றி விசாரித்தார்.

ஏராளமான பரிசுகளையும் அவர் அனுப்பி வைத்திருந்தார்.

மடாலயங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிகளை ஸு யுன் வகுத்ததோடு அதை அணுவளவும் பிசகாது பின்பற்றும்படியும்  செய்தார்.

 

 

கோடைகாலத்தில் திடீரென்று ஒருநாள் ஸு யுன்னின் வீட்டிலிருந்து ஒரு கடிதம் வந்தது. ஸு யுன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியதிலிருந்து இன்று வரை நடந்ததை எண்ணிப் பார்த்தார்.

மளமளவென்று கவிதைகளாக வர ஆரம்பித்தன.

அவற்றைப் படித்துப் பார்த்த மத்திய அரசின் தலைமைச் செயலர் உபாசகர் சென் யுங் சாங் அவற்றை கல்வெட்டுக்களாக கல்லில் பொறித்தார்.

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 72. வருடத்தில் வ்சந்த காலத்திலும் கோடை காலத்திலும் தியான வகுப்புகள் நன்கு நடைபெற்றன. ஒன்பதாவது மாதத்தில் வூசாங் மாகாணத்தில் ஒரு பெரும் புரட்சி ஏற்பட்டது, பின்சுவான் நகர் முற்றுகையிடப்படுவது நிச்சயம் என்ற நிலை உருவானது.  உடனே ஸு யுன் களத்தில் இறங்கி  மத்யஸ்த பேச்சு வார்த்தைகளைத் தொடங்கினார். ஒரு சின்னத் தவறினால் தவறுதலாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொணட கமாண்டர்  லி ஜென் யுயான் தன் படைகளோடு காக் ஃபுட் மவுண்டனைச் சுற்றி வளைத்து விட்டார்.

 

 

ஆனால் ஸு யுன்னின் சரியான விளக்கத்தைக் கேட்ட பின்னர் மிக்க திருப்தியுற்றுத் தன படைகளை அவர் விலக்கிக் கொண்டார்.

குளிர் காலம் தொடங்கியது. ஸு யுன்னுக்கு சீன புத்த சங்கத்திலிருந்து ஒரு தந்தி வந்தது. சீன புத்த் சங்கத்திற்கும் ஷாங்காயில் உள்ள யுனிவர்ஸல் புத்திஸ்ட் சொஸைடிக்கும் ஏற்பட்டுள்ள தகராறைச் சரி செய்ய உடனே வாருங்கள் என்ற அழைப்பு தந்தியில் இருந்தது. உடனே நான் ஜியாங் நகர் சென்ற ஸு யுன் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். இறுதியில் புத்த சங்கத்தின் தலைமையகம் ஜிங்-ஆன் ஆலயத்தில் அமைக்கப்படுவதென்று ஒரு மனதாக  முடிவானது.

 

 

இதையடுத்து மாஸ்டர் ஜி-சானுடன் ஸு யுன்  பீகிங் சென்றார். அங்கு ஃபா யுவான் மடாலயத்தில் இருவரும் தங்கி இருந்தனர். ஒரு நாள் தியான நிலையில் அமர்ந்திருக்கும் போதே மாஸ்டர் ஜி சான் நிர்வாணம் எய்தினார்.

 

 

அவரது இறுதிச் சடங்கை நடத்திய ஸு யுன் அவரது சவப்பெட்டியை ஷாங்காய் எடுத்துச் சேன்றார். புத்த சங்கத்தின் த்லைமையகம் அங்கு துவங்கப்பட்டது.  மாஸ்டர் ஜி-சானுக்கும் ஒரு நினைவு விழா நடத்தப்பட்டது. அனைவரும்  மகிழ்ந்தனர்.

யுனானுக்கு ஸு யுன் திரும்பும் தருணத்தில் உபாசகர் லி ஜென் யுவான் கவர்னர் கெய்-ஓ விற்கு ஒரு அறிமுகக் கடித்ததைக் கொடுத்தார். அவர் மூலம் புத்த தர்மம் செழிக்க வேண்டும் என்ற அவா அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தக் கடித்தத்துடன் ஸு யுன் யுனானுக்குத் திரும்பினார். புத்த தர்மம் செழிப்பதற்கு அவர் செய்ய வேண்டிய ப்ணிகள் நிறைய இருந்தன!

-தொடரும்