Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?

Do You Know Tamil?

Score level:

25 –30 You are a Tamil Scholar!

15-25 Well Done! You are good at Tamil.

10-15 Not good at Tamil.

Under Ten- Are you a Tamil?

By London Swaminathan

 

 

61.தொல்காப்பியரின் கூற்றுப்படி மனிதனுக்கு எத்தனை அறிவு?

62.பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி –என்று பாடியவர் யார்?

63.எத்தனை குறைகள் எத்தனை பிழைகள், எத்தனை அடியேன் எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்– என்று பாடியவர் யார்?

64.எல்லவுயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்—யார் கூறியது இது?

65.கொள்ள மாளா இன்பவெள்ளம் கோது இல தந்திடும் என் வள்ளலேயோ—யாருடைய வாசகம் இது?

66.பத்துப்பாட்டு நூல்களில் மிக நீண்ட நூல் எது?எத்தனை வரிகள்?

67.நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்—என்று திருமூலர் எந்த நூலில் கூறுகிறார்?

68.மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று சொன்னவர் யார்?

69.எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி வேறு ஒன்றும் அறியோம் பராபரமே என்று சொன்னவர் யார்?

70.நாமும் கதையை முடித்தோம் இந்த நானிலம் இன்பத்தில் வாழ்க—என்று வாழ்த்துபவர் யார்?

71. இன்பம் இடையறாது ஈண்டும், மன்னுயிர்க்கெல்லாம் இனிது—என்றி இன்பத்தில் திலைப்பவர் யார்?

72. காலன் எனை அணுகாமல் உனதிரு காலில் வழிபட அருள்வாயே—என்று வேண்டுபவர் யார்?

73.காலா என் காலருகே வாடா, உனை சிறு புல்லென மதிக்கிறேன் என்று வீர முழக்கம் செய்தவர் யார்?

74.நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் என்று கர்ஜித்தவர் யார்?

75.அம்பலத்தேனே அரு மருந்தே ஆனந்தத்தேனே அருள் விருந்தே—என்று சிவனை சுவைபடப் பாடுபவர் யார்?

76. தமிழில் முக்கனிகள் எவை?

77. முத்தமிழ் யாவை?

78.மூவேந்தரின் கொடிகள் யாவை?

79. மூவேந்தரின் மாலைகள் என்ன?

80.சடையப்ப வள்ளல் யார்?

81.பிரபுட தேவ மகாரஜன் யார்?

82.முத்துக் குளிக்க பெயர்பெற்ற பாண்டிய நாட்டுத் துறைமுகம் எது?

83. அறங்கூறு அவையம் சோழ நாட்டில் எந்தவூரில் இருந்தது?

84.திவாகரம், சூடாமணி, பிங்கலந்தை என்பவை என்ன?

85.புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றியவர் யார்?

86.சுவாமிநாத தேசிகர் எழுதிய இலக்கண நூலின் பெயர் என்ன?

87.திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும்—என்ற வாழ்த்துடன் துவங்கும் நூல் எது?

88. விவேக சிந்தாமணி என்ற தமிழ் நூலை எழுதியவர் யார்?

89.மாதவியின் மகள் பெயர் என்ன, தாய் பெயர் என்ன?

90.மதுரை நகரை கண்ணகி எரித்த நாள் எது?

 

***************

விடைகள்:61. ஆறு அறிவு 62. மாணிக்கவாசகர் 63. தேவராய சுவாமிகள் (கந்தசஷ்டி கவசம்) 64. தொல்காப்பியர் 65. நம்மாழ்வார் தி.பி. 3298, 66.மதுரைக் காஞ்சி, 782 வரிகள்,67. திருமந்திரம் 68. திருஞான சம்பந்தர் 69. தாயுமான சுவாமிகள்,70. பாரதியார் (பாஞ்சாலி சபதம்), 71. வள்ளுவர் (குறள் 369, 68), 72. (அருணகிரிநாதர், திருப்புகழ்) 73. பாரதி 74.அப்பர் 75.ராமலிங்க சுவாமிகள் 76. மாம்பழம், பலாப் பழம், வாழைப்பழம் 77. இயல் இசை, நாடகத் தமிழ், 78.சேரன்-வில், சோழன்-புலி, பாண்டியன் மீன் கொடிகள் 79.சேரன்- பனை, சோழன்- ஆத்தி,  பாண்டியன்- வேம்பு 80.கம்பனை ஆதரித்த வள்ளல். கம்ப ராமயணத்தில் பாடப்பட்டவர்..81. அருணகிரி நாதரை ஆதரித்த குறுநில மன்னன். திருப்புகழில் பாடப்பட்டவர். 82. கொற்கைத் துறைமுகம், 83 உறையூர்.84. தமிழ் நிகண்டுகளின் பெயர்கள், 85.ஐயனாரிதனார் 86. இலக்கணக் கொத்து 87. சிலப்பதிகாரம், 88.பெயர் தெரியாத புலவர். 89.மகள்—மணிமேகலை, தாய்—சித்திராபதி 90. ஆடி மாதம் அஷ்டமி திதி, கார்த்திகை நட்சத்திரம், வெள்ளிக்கிழமை

Contact for more Quiz on Hinduism,Tamil Culture & India: swami_48@yahoo.com

 

 

ETRUSCAN- HINDU/ TAMIL LINK

 

By London Swaminathan

(I have already written in Tamil about the Roman- Tamil trade contacts that existed two thousand years ago. Scores of references are there in Sangam Tamil literature about the Yavanas, which is corroborated by Greek and Roman writers of the first few centuries of modern era. Thousands of Roman gold coins of first few centuries were discovered throughout South India. The book “Roman Karur” by eminent historian and archaeologist Dr R Nagasamy gives detailed accounts of this in English. Recently pots of gold coins of Roman origin have been discovered in Anantha Pathmanabhaswamy Temple in Thiruvanathapuram. When the inventory is released we may have more details about such contacts. The following article is completely different from it which deals with Etruscans, a mysterious culture of Northern Italy. Contact: swami_48@yahoo.com  or swaminathan.santanam@gmail.com

 

Who are Etruscans?

Etruscans were the people who occupied Etruria, Italy between 8th century BC and 2nd century BC. Etruria is the modern day Tuscany and part of Umbrian Italy. They ruled Rome from 616-509 BC. Roman civilization was greatly influenced by Etruscan culture. Etruscan language is not fully deciphered. Still the origin of Etruscans is debated.

In the eyes of Greek writers and their Roman successors Etruscans were different from them. They were blamed as pirates

Though lot of things about Etruscans remain mysterious we can’t miss the striking similarities between Hindus and the Etruscans. We see Tamil and Sanskrit words in Etruscan language. We will look at them in bullet points.

1.Origin of Etruscans: They were Tamils(Termilai) and descendents of Pulasthya Rishsi (Pelasginians/Philistines)

2.Birds for predicting future: Like Tamils, they also used birds for predicting future (also read my post in the blog “ Can Birds Predict Your Future?”)

3. Cremation and burial of ash in Urns: This is a Hindu custom followed from Vedic days.

4. Musical instrument Lyre/ Yaz, Kombu: Etruscans used musical instruments which looked like Indian (Horn, also known as Kombu Vadhyam in Tamil) lyre (also known as Yaaz in Tamil)

5. Swastika symbol: Swastika symbol, used by the Hindus till today, was found in their jewels. North Indian Hindus still print Swastika in their wedding invitations, Pujas, Havans and other auspicious ceremonies.

6. Language: We come across words of Sanskrit and Tamil origin

7. Many Gods: Etruscans were polytheistic

Now I will give you more details:

Origin from Pulastya Rishi and Tamils:

There were three theories about the origin of Etruscans. Greek historian Herodotus said that Etruscans came from Turkey. Modern DNA research has proved he was right. Western Turkey was called Lydia. This area was full of Sanskrit names in the olden days. Herodotus said that the ancestors of Etruscans were forced to leave Lydia after 18 years of hard times. They left Lydia under the leadership of Tyrrhenus, son of King of Lydia.

Virgil and others thought they were another branch of Pelasginians. They were the same people who attacked Egypt in 1200 BC. Egyptians called them Sea People. This word came from the Indian Rishi Pulastya. He was one of the seven seers mentioned by the Vedas. Pulastya was the forefather of Rakshasas, Kinnaras, Vanaras and Yakshas. Megasthanes called the people of Ceylon “ Palesgini”, according to Dr KK Pillay. Indian scriptures and Mahavamsa also called the Ceylonese people Yakkas (Yakshas) i.e descendents of Seer Pulastya. They were called Philistines in the Bible.

The original name of the Lycians was Tremilai or Termilai and it may be equated with Dramila/ Tamils/ Dravida according to KK PIllay (Ref. taken from Aryatarangini by A Kalyanaraman page 224).

In short, Sea People, Pelasginians,Termilai, Tremilai, Philistines of the Bible, Pulastyas, Yakshas are one and the same. We can easily trace them to a common source. Since they were interested in trade, they went to different countries.

 

Cremation and Burials

Like Hindus, Etruscans also followed the custom of burial and cremation. When they cremated the bodies, they kept the ash in urns. They believed in afterlife like Hindus. Their tombs looked exactly like tombs in Turkey, which proved Herodotus was right. They left jewels, furniture etc. in the tombs for the future life of the departed souls.

 

Birds Used for Prediction

Boulon is the word for bird. It is similar to PUl in Tamil.

Tamils believed that flights of birds or their sounds (calls) can predict good and bad things that is going to happen. Even today their traditional calendars (Panchang) publish those details every year. No two cultures in the world come so close as the Tamils and the Etruscans. Etruscans had such a calendar.

Etruscans believed that Gods speak to mortals through nature. They even interpreted thunder and lightning. This is in the Hindu Upanishads. The famous parable of Three “Da” sounds of Thunder is in the Upanishads. Another story about five elements trying to lift a blade of grass is also in the Upanishads.

Etruscans used livers of sacrificed animals to find their future. Mesopotamians had similar beliefs. Like Vastu Shastra allocate different corners for different Gods, they have different areas for different gods in the liver. A Bronze model of a sheep’s liver from Piacenza (150 BC) gives 52 names of divinities, mostly abbreviates. Many of them were repeated.

 

Many Gods

Etruscans believed that their religion were revealed to them by seers. This is what exactly Hindus say about the Vedas.

Etruscans were a deeply religious people like Hindus.

They had religious calendars like Hindu Panchang. Like Hindu scriptures they specified which sacrifices should be done for which Gods on what days.

Polytheism was practised by Etruscans like modern day Hindus. Manifestation of divine power in different forms was appreciated by the Etruscans.

They had three tiers of Gods: 1. Lesser deities of local origin, like the Gram Devtas of Indian villages 2.Ruling over them were higher deities and 3.Greek Gods were adopted by the Etruscans. Items 2 and 3 have got similarities with Indo-European Gods (Hindu Gods)

Dionysus, Seneca said that they believed in 40 different Gods. The same god was worshipped in different forms on different occasions to achieve different things or to appreciate different aspects of divinity. Lot of these deities entered Roman pantheon later.

Griffins also were found in tomb sculptures. These are creatures found in Indo European language speaking areas. Mitanni civilization had such griffins.

 

Language and Alphabet

Etruscans wrote from right to left like we have it in Indus seals and other Semitic inscriptions.

Etruscans got their alphabet from the Greeks and modified it to suit their sounds. Romans borrowed it from the Etruscans. Now we have three sounds for K in English: K, C, Q. This is because Etruscans’ language had fine distinctions. They used different sounds for different words like we see 4 Ka, 4Sa, 4Ta etc. in Sanskrit. Tamil also has such fine distinctions for L,R and N (three different L, 3N and 2Rs in Tamil).

 

Vocabulary

The longest Etruscan manuscript was from the linen cloth found wrapped around a mummy. It has 1200 words. This is called Liber Linteus of Zagreb. Another example of Etruscan writing is the Tile of Capua which has got 62 lines. Three gold foils, known as The Pyrgi Lamellae, have inscribed lines in Etruscan and Phoenician. These jewels were dedicated to Goddess Astarte. Etruscans called the same Goddess Uni. Votive offerings like these are offered to Hindu Goddesses (Example: Sankarankoil Gomathy Amman, Madurai Mari Amman).

Astarte is identified with Goddess Inanna, Ishtar, Aphrodite and goddess of Egypt. This clearly shows that the same Goddess was worshipped in different areas of the world (Asia, Africa, Europe) with different names. Hindus can understand them better than any other community in the world, because they travel from Kashmir to Kanyakumari to worship the same gods and goddesses with different names in over 108,000 temples ( Please read my post: How many temples are in India?).

Though 13000 Etruscan inscriptions were discovered, scholars have identified only a few hundred words. The language remains mostly un deciphered. The inscriptions were short like Indus seals. More over Etruscans did not leave us any literature.

Muni (tomb)= it may be muni (ghost or saint or manithan)

Ais/eis= God (Sanskrit: Eswaran,Aiswarya)

Favi= grave or temple (Avi in Tamil is spirit of the dead)

Clan=son= kula in Sanskrit

Locumno=king=Ilango in Tamil

F sound came into Europe from Etruscan; this is in Sanskrit.

 

Latin words in Etruscan

Latin and Sanskrit come from the same roots. Latin words found in Etruscan are nepos/nephew/neft.

Cousin and wine (vinum) are other words..

Latin also borrowed words from Etruscan: elementum, literae, stylus, cera.

All these words are about writing and letters .Elementum,( e)literate are similar to EZUTHU (write, writing) in Tamil.

Because of the sound changes, lot of Greek words were written with varied spellings in Etruscan:

Thraiambos(Gk)=Triumpus (Lat)=Triumphus(Etruscan). This is from Sanskrit Triambakan/Shiva who burnt three cities of demons with his three eyes. In fact we have a three headed demon in the Etruscan statues.

Fun Loving People

The Etruscans were a fun loving race. They had dance and music, banquets and parties. We see beautiful scenes in the 2800 old paintings on the walls of their tombs. They had gender equality. Men and Women enjoyed the same rights which we see in ancient Vedic culture. The musical instruments displayed in the frescoes were similar to Tamil’s Horn (Thaarai, Thambattai, Kombu Vadhyangal) and Lyre (Yaaz).

Archaeologists have discovered over 3000 mirrors from Etruscan centres. Over 1000 bronze mirrors have inscriptions. The ladies must have spent lot of time in doing make up.

Mirrors have beautiful engravings on them. Western scholars interpret everything with Greek mythology. But when I looked at the pictures of hundreds of mirrors I can find matching anecdotes from Hindu mythology.

 

Gambling

Etruscans played dice like the Pandavas of Hindu Epic Mahabharata. On the dice they wrote the words for numerals instead of dots.

Hair Style

Ancient Tamil women had plaited their hair into five parts called Aimpal Kunthal (five division hair). We such five prt plaits in some statues.

Writing on Epitaphs

Etruscans wrote on tombstones (epitaphs).

Tamils also wrote on stones where they cremated or buried heroes. They were called Hero Stones (Nadu Kal).

 

Sanskrit and Etruscan

Etruscan is an inflected language like Sanskrit.

Example:

Case                                                   singular                    plural

Nominative                                      clan (son)                  clenar (Sons)

And Accusative                               clens                           clenarasi

Genetive (of)                                   clensi                          clenarasi

Dative (to)                                        clensi                          cliniiaras

Locative (in)                                     clenthi

 

Common nouns have gender difference, but personal names have gender ending. It is like Sanskrit sounds:

Feminine names: Uni (Latin Juno),Menrva (Lat.Minerva), Clutsmsta (Gk.Klytem nestra), Ati, Seianti, Lasa

In Sanskrit we have Latha, Uma, Geetha, Rukmini, Shanthi, Vaijayanthi (either” “a” or “ i “ending)

Masculine names:Hercle (Gk.Hercules), Menle (Gk.Menelaos), Achle (Gk. Achilles), Zimite (Gk. Diomedes), Aule (Gk.Aulus), Taitle (Gk.Daidalos), Sime

(In Sanskrit we have “a” ending. Examples: Rama,Krishna,Siva,Harichandra)

Names of Gods end in “s” like Sanskrit “ji” –respectful suffix (Mataji, Pitaji)

Pesonal pronouns have more similarity with Tamil, Telugu etc.

First person “I” = mi (similar to Telugu)

Third person: an (avan in Tamil)

This=ita, eta ( In Tamil Ithu, athu)

 

More Sanskrit and Tamil words in Etruscan

Tin= Dina =day, Oesan=Ushas=morning, Masan=masa=month, arim=ari=monkey,leu=lion=Yali=mirror image of the word yali=lia; neri=water=nara, nereids are water nymphs in Greek, Narayana=water god, capra=copra=urn, husiur=sisu=child, ati=mother=aththi in Tamil, apa=father=appa in Tamil, papa= granfather, teta=grandma=but in Tamil its grandpa, mech=people=makkal in Tamil.

At a cursory glance of 100 words I found out the above words.

Numerals

Numerals have some similarities with Sanskrit:

1=thu=

2=zal=zwei in German=twa in Sanskrit=Duo=Di= dwa= Two

3=ci=??

4=sa=(Satur in Sanskrit)

5=mach=??

6=huth=(Shasti in Sanskrit: H=S is a well known linguistics equation)

7=semph (sapta in Sanskrit)

8=cezp=??

9=nurph (Nav in Sanskrit)

10=sar=???

Not all the numbers are close to Sanskrit. Scholars are not sure about Etruscan words for100, 1000 etc. But the structure is similar to Sanskrit.

In Sanskrit we say 5+20= for 25, 7+30= for 37 unlike English and Tamil (In English it is 20+5= twenty five, in Tamil also it is 20+5=Irupaththu Ainthu)

Etruscan numbers are done like Sanskrit. Eg.16= 6+10 huth zar; 17=7+10 ciem zathrum.

Rasenna

Greeks called the Etruscans TYRRHENIANS (closest Sanskrit word I could think of is Taitriya Upanishad). Greeks also gave this name to the surrounding sea. Romans and Greeks derided them as pirates.

Romans knew Etruscans as Etruri or Tusci (Tuscany is the area they lived).

Etruscans called themselves Rasna or Rasenna (Sanskrit Rasana= Taste)

 

CONCLUSION

Though there are some similarities between Hindus and Etruscans and similarity between Etruscan and Indian languages, we need more evidence to support any new theory. Since majority of the inscriptions are not deciphered, one has to wait for more information. Besides, the difference in pronunciation must be taken into account to find out the source. Even the Greek and Roman names were distorted in Etruscan. They lived only next door. A scholar well versed in several languages only can come to right conclusions. As of now, Etruscans stand out as a separate community and stand alone without any affinity to any known culture.

*****************

தமிழ்த் தாய் வாழ்த்தை மாற்றுக!

by S Swaminathan

தமிழ் நாட்டில் இப்பொழுது பயன்படுத்தப்படும் தமிழ்த் தாய் வாழ்த்து உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்குப் பொருத்தமானதல்ல. ஏற்கனவே இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் இதைப் பயபடுத்தாமல் வேறு பாடல்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இது காலப் போக்கில் தமிழர்களிடையே ஒற்றுமைக் குறைவை ஏற்படுத்தும். ஆகவே தமிழ் நாடு அரசு உடனடியாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றவேண்டும். இந்தப் பாடல் பரதக் கண்டம் பற்றிப் பாடுகிறது. ஆனால் இன்றோ தமிழர்கள் உலகம் முழுதும் வாழ்கிறார்கள்.

 

“நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில் ஒழுகும்” என்று துவங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடல் பல வகைகளிலும் குறையுடையது. முதலாவது அது உருக்குலைந்த பாடல். பாரத நாட்டின் மாபெரும் செல்வமான சம்ஸ்கிருதத்தைப் பழித்துக் கூறிய வரியை வெட்டிவிட்டுப் பாடுகிறோம். இது எப்படி இருக்கிறதென்றால் கோவிலில் வைக்க அழகான சிலையைச் செய்துவிட்டு அதன் மூக்கை மட்டும் உடைத்துவிட்டுப் பூஜைக்கு வைத்தது போல இருக்கிறது. மேலும் சம்ஸ்கிருத வெறுப்பில் பிறந்த பாடல்.

சுந்தரனார் சம்ஸ்கிருதம் பற்றிக் கூறிய வரியை அறிஞர் உலகம் ஏற்காததால்தான் அந்த வரியை வெட்டிவிட்டு சிதைந்த பாடலை தமிழ் வாழ்த்தாக்கி இருக்கிறார்கள். சுந்தரம் பிள்ளையோவெனில் அந்த வாழ்த்திலும் சரி, அவரது மனோன்மணீய நாடகத்திலும் சரி பக்கத்துக்கு பக்கம், வரிக்கு வரி சம்ஸ்கிருதச் சொற்களைக் கையாண்டிருக்கிறார். சுருங்கச் சொன்னால் சொன்னது ஒன்று, செய்தது வேறு.

 

பாரதியார் எழுதிய “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி” பாடல் அற்புதமான பாடல். அந்தக் கவிஞனுக்கு உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகி வாக்கினிலும் ஒளி உண்டானதால் அவன் வேண்டியபடியே பராசக்தி அவனுக்கு மந்திரம் போல் சொல்லின்பம் கொடுத்துவிட்டாள்.

 

பாரதி பெரிய கவியானாலும் தமிழ் வாழ்த்து என்று பார்க்கையில் கவியோகி சுத்தானந்த பாரதியின் பாடல் இன்னும் அற்புதமாக அமைந்துவிட்டது. அதில் தமிழ் அன்னையை அலங்கரிக்கும் ஐம்பெரும் காப்பியங்கள், மற்றும் திருக்குறள், நால்வர், சேக்கிழார், ஆழ்வார் பாடல்கள் ஆகிய அனைத்தும் போற்றப்படுகின்றன. இதோ பாடலை நீங்களே படித்துப் பாருங்கள். எவ்வளவு பொருள் பொதிந்த பாடல். யாராவது ஒருவர் இதற்கு கவர்ச்சிகரமான இசை அமைத்துவிட்டால் மற்ற பாடல்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இது மேடை ஏறும். முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் துணிகர உத்தரவுகளுக்குப் பெயர்போனவர். அவர் நினைத்தால் இதை ஓரிரவில் செய்யலாம். அதுவே நமது வேண்டுகோளும் கூட.

 

காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை

-யாபதியும்,கருணை மார்பின்

மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்

மேகலையும், சிலம்பார் இன்பப்

போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ

ளாமணியும் பொலியச் சூடி,

நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்

தாங்கு தமிழ் நீடு வாழ்க !


நால்வரிசை அமுதிருக்க,
 நம்மாழ்வார்

மொழியிருக்கச் சேக்கி ழாரின்

பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்

திரமிருக்கப் பகலே போன்று

ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்

குறளிருக்க, நமது நற்றாய்,

காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்

கனிபெருகக் கண்டி லோமோ !

      –சுத்தானந்த பாரதியார்

 

இந்தப் பாடலுக்கு நல்ல இசை அமைப்பவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். பரிசு காத்திருக்கிறது !

swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள்- பகுதி 2

Picture: Goddess Kali

ராம ராம ராம

இராம பாணம் பட்டு உருவினாற்போல
இராமர் இருக்கும் இடம் அயோத்தி
இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது
இராம வாக்குக்கு இரண்டு உண்டோ?
அனுமார் வால் போல நீளுகிறதே
இராமனைப் போல ராசா இருந்தால் அனுமாரைப் போல சேவகனும் இருப்பான்
இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?
இராமன் மங்கையோடு இணங்கியது அவம்
இராமாமிர்தமே சீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா? (110)
இரா முழுதும் இராமாயண்ம் கேட்டு சீதைக்கு ராமன் என்ன வேண்டும் என்ற கதை (சீதைக்கு ராமன் சித்தப்பன் என்ற கதை)
இராமேசுரத்துக்கும் காசிக்கும் போயும் என்னைப் பிடித்த சநீசுரன் தொலையல்ல
தம்பி உடையான் படைக்கஞ்சான் ( லெட்சுமணன் பற்றிய மொழி)
இராவண சந்யாசி போல இருக்கான்
இராவணன் குடிக்கு மஹோதரன் போலும், சுயோதனன் குடிக்கு சகுனி சுக்கிரீவ ஆக்கினையாய் இருக்கிறது
போலும்

சந்நியாசி புராணம்

சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்து சமுசாரம் மேலிட்டது போல
சந்நியாசி கோவணம் கட்டினது போல
சந்நியாசம் சகல நாசம்
சந்நியாசிக்குப் பழைய குணம் போகாது
சந்நியாசிக்கு சாதி மானம் போகாது (120)
சந்நியாசி பயணம் திண்ணையை விட்டுக் குதிப்பது தான்
சந்நியாசி பூனை வளர்த்தது போல
சந்நியாசியைக் கடித்த நாய்க்கு பின்னாலெ நரகமாம், சந்நியாசிக்கு முன்னாலெ மரணமாம்
சந்நியாசியை நிந்தித்தவனுக்கு பின்னாலெ நரகமாம்
சந்நியாசி வீடு திண்ணைல
சபையிலெ நக்கீரன் அரசிலே விற்சேரன்
சப்தப் பிரம்மத்திலே அசப்த பிரம்மம் பிரகாசிக்கிறது
சப்தப் பிரம்மம் பரப் பிரம்மம் இரண்டையும் அறிய வேண்டியது
பழமொழிகளில் அவதாரம்
கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக் கூடாது (வாமன அவதாரம்) (130)
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் (நரசிம்ம அவதாரம்)
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (காகாசுரன் கதை-ராமாவதாரம்)
சாத்திரம் கற்றவன் தானே காசு
சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்திரம்
சாத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள், கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு
சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்
சாபமிட்டருண்டோ? தலையில் திரு எழுத்தோ? வேக விட்டருண்டோ? எழுத்தின்படி தானோ?
சுவர்க்கத்திலே தோட்டியும் சரி, தொண்டமானும் சரி
சுவர்க்கத்துக்குப் போகிறபோது கக்கதிலே கூத்தியரா?
சுவர்க்கத்துக்குப் போகிறபோது கக்கதிலே ஒரு பிள்ளை ஏன்?
சுவர்க்கத்துக்குப் போனாலும் கக்கதிலே அட்சய பாத்திரமா?
சுவாமி வரங் கொடுத்தாலும் முன்னடியான் வரங் கொடான்
சூட்சுமத்தில இருக்குது மோட்சம்
சூட்சுமம் அறியாதவனுக்கு மோட்சம் இல்லை

14 லோகங்கள்

கீழேழு லோகமும் மேலேழு லோகமும் கண்ட காட்சியா?
குபேர பட்டணம் கொள்ளை போனாலும் கொடுத்து வையாத பாவிக்கு ஒன்றுமில்லை
ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதாம்
ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரி ஆனது போல
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்
ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது (150)
ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு
காவியுடுத்தவர் எல்லாம் விவேகானந்தரா?

ஏகாதசி மஹிமை

ஏகாதசிக்கு மா இடித்தாற் போல
ஏகாதசித் திருடியை ஏற்றடா ரததின் மேலே
ஏகாதசி மரணம் துவாதசி தகனம்
ஏகாதசி மரணம் நல்லதென்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா?
எறும்பு முதல் எண்ணாயிரம் கோடிக்கும் தெரியும் நாராயணன் என்னை காப்பாற்ற மாட்டானா?
ஓமப் பிண்டத்தை நாய் இச்சித்தாற் போல
வடக்கே போன வாலியும் வரக் காணோம்
அவன் தம்பி அங்கதன் (160)
ரிஷிப் பண்டம் ராத்தங்காது
ஆண்டியே அன்னத்துக்கு அலையறச்சே லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறதாம்
ஆதி முதல்வனே பாய்ந்தோடும் போது ஐயர் மணி ஆட்டுவாரா?
ஆத்தாள் அம்மணம், அன்றாடம் கோ தானம்
ஆயிரம் உளிவாய்ப் பட்டுத்தான் ஒரு லிங்கம் ஆகவேண்டும்
சரியான சாப்பாட்டு ராமன்
அண்டத்தை சுமக்கிறவனுக்கு சுண்டைக்காய் பாரமா?
அண்ணாமலையாருக்கு 64 பூசை, ஆண்டிகளுக்கு 74 பூசை
அண்ணாமலையார் அருள் உண்டானால் மன்னார்சாமி மயிர் பிடுங்குமா?
வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி (170)
பகீரதப் பிரயத்தனம் செய்தான்
அகாரியத்திலே பகீரதப் பிரயத்தனம் ஆகாது
அகோர தபசி, விபரீத நிபுணன்
அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?
அக்கினி தேவனுக்கு அபிடேகம் செய்தது போல இருக்கிறது
அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக் கூறு வழியாக வரும்
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
வீட்டுக்கு வந்த வரலெட்சுமி
லெட்சுமி இருக்கும் இடத்தில சரசுவதி இருக்க மாட்டாள்
பெருங்காயம் இருந்த பாண்டம் வாசனை போகாது (பாவம் செய்தவர்கள் நிலை) (180)
பிறவிக் குருடனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற் போல
வைகுண்டம் என்பது திரு மாநகரம்
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்தில்

Picture: Kneeling figure from Cambodia

வேத மகிமை

வேதியர்க்கு அழகு வேதம் ஓதுதல்
வேதத்தில் நாலு விதம் உண்டு
வேதத்திற்கு உலகம் பகை, உலகத்திற்கு ஞானம் பகை
வேதத்திற்கும் விக்ரகபக்திக்கும் பகை
வேதத்தை அறியாத கிழவன் வீண்
வேதம் ஆய்ந்து ஓதல் போதகர் முறைமை
வேதம் ஏன், நியாயம் ஏன், வித்தாரம் கள்ளருக்கு (190)
வேதம் ஒத்த மித்திரன்
வேதம் கேடவரை, வேதம் கேடவர் என்பான் ஏன்?
வேதம் பொய்த்தாலும் வியாழம் பொய்யாது
உருத்திராக்கப் பூனை உபதேசம் பண்ணினது போல
ஐயப்பன் குதிரையை வையாளி விட்ட கதை
ஐயர் ஒன்றே கால் சேர் அவர் அணியும் லிங்கம் அரை சேர்
ஐயானாரே வாரும், கடாவைக் கொள்ளும்
ஐயனார் கோவிலிலே ஆனை பிடிக்க வேண்டும் (200)
ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தங்கம்
ஐயனார் கோவில் மண்ணை மிதித்தவர் அத்தனை பேரும் பத்திரகாளி
கஞ்சி வரதப்பா என்றால் வாயில் வாரப்பா என்றானாம்
காசிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம்
கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுக்கும்
சுடலை ஞானம் திரும்பி வரும் மட்டும்தான் (ஸ்மசான வைராக்யம்)
தவசிச்சிக்கு தயிரும் சோறும் விசுவாசிக்கு வென்னீரும் பருக்கையும்
தவசிப்பிள்ளை நமசிவாயம் கையாசாரம்
தவசுக்குத் தனிமையும் தமிழுக்குத் துணையும்
தவசே அணிகலன், தாழ்மையே மேன்மை (210)
தவத்திலிருதால் தலைவனைக் காணலாம்
தவத்துக்கொருவர் கல்விக்கிருவர்

Picture: Ganesa in US Museum

உன்னையே நீ அறிவாய்
எல்லாம் தலை விதி (கர்ம வினைக் கொள்கை)
உடலில் உள்ள அழுக்கைப் போக்கிடலாம் உள்ளத்திலுள்ள
அழுக்கைப் போக்குவது கஷ்டம்
ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சுக் கும்பிட்டானாம்
மலையத்தனை சுவாமிக்கு கடுகத்தனை கற்பூரம்/ சாம்பிராணி

பெருமாள்

பெருமாளைச் சேர்ந்தோருக்குப் பிறப்பில்லை, பிச்சைச் சோற்றுக்கு எச்சல் இல்லை
பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் உண்டு
பெருமாள் இருந்தால் அல்லவோ திருநாள் நடக்கப் போகிறது?
பெருமாள் என்கிற பெயரை மாற்றி பெத்த பெருமாள் ஆச்சு (220)
பெருமாள் செல்கிற வழியில் புல்லாய் முளைத்தாலும் போதும்
பெருமாள் நினைத்தால் வாழ்வு குறைவா? பிரம்மா நினைத்தால் ஆயுசு குறைவா?
பெருமாள் புளிச்ச தண்ணீருக்கு அலைகிறான், அனுமார் ததியோதனம் கேட்கிறார்
பிச்சை எடுக்கிறதாம் அதைப் பிடுங்குகிறதாம் அனுமார்
பிள்ளையாரைப் பிடிச்ச சனி அரசமரத்தையும் பிடிச்சதாம் (225)

(பழமொழிகளில் இந்துமதம் என்ற எனது கட்டுரையில் கண்ட 14 பழமொழிகளையும் சேர்த்துக் கொள்க)

இந்து மதம் பற்றிய 200 பழமொழிகள்-Part 1


Picture: Lord Ganesh

( முன்னர் ஏற்றப்பட்ட (1) 20,000 தமிழ் பழமொழிகள், (2) யானை பற்றிய 100 பழமொழிகள், (3) பழமொழிகளில் இந்துமதம் ஆகிய மூன்று கட்டுரைகளையும் (4) Amazing Collection of 20,000 Tamil Proverbs கட்டுரையும் காண்க ).

இந்து மதத்தின் மாபெரும் தத்துவங்களை, ஒரு சில சொற்களைக் கொண்டே பழமொழிகள் விளக்குகின்றன. இத்தகைய 14 பழமொழிகளை விளக்கி 2009ஆம் ஆண்டில் எழுதிய எனது கட்டுரை இலண்டன் தென் இந்திய சங்க தீபாவளி மலரிலும் பல பிளாக்குகளிலும் வெளியாகியது இப்போது மேலும் சில நூறு பழமொழிகளை மட்டும் பார்ப்போம்.
கங்கை நதி ,காசி பற்றி மட்டுமே பத்துப் பதினைந்து பழ மொழிகள் இருக்கின்றன. ராமனும் கண்ணனும், அரியும் சிவனும், கங்கையும் காசியும் சுவர்க்கமும் நரகமும், கோவிலும் சுவாமியும் தமிழர்கள் வாழ்வில் எப்படி இரண்டறக் கலந்திருக்கின்றன என்ற பேருண்மையை பழமொழிகள் பட்டவர்த்தனமாகப் பறை சாற்றுகின்றன.

பழமொழிகள்

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது
அரசன் அன்றேகொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
கல்லைக் கண்டால் நாயைக் காணும், நாயைக் கண்டால் கல்லைக் காணும் ( மரத்தை மறைத்தது மாமத யானை……….என்பதும் அதுவே)
லங்கணம் பரம ஔஷதம் (ருக்மாங்கனின் ஏகாதசி விரதக் கதை)
தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமா?
சட்டியில் இருந்தால் தானே அகப்பைஅயில் வரும் (கந்த சஷ்டி பற்றிய பழமொழி)


Picture: Tripura Vijaya from Tamilartsacademy.org

இது என்ன வேத வாக்கா?
அவன் சரியான பிரஹஸ்பதி (காலப்போக்கில் பொருள் மாறிய மொழி)
அவன் சரியான அசமஞ்சன் (புராணக் கதை)
இது என்ன பிரம்ம வித்தையா?
காலம்–கலி காலம், நாம் என்ன செய்ய?
கெடுவான் கேடு நினைப்பான் (விநாச காலே விபரீத புத்தி)
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி
இருக்குதே தண்ணீர் வண்டி, இல்லாவிட்டால் தம்பிரான் பதவி
என்ன ரொம்ப வேதாந்தம் பேசுகிறாய்?
அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனை பாடுவேனா?
அடியைப் பிடியடா, பாரத பட்டா
அவனின்றி ஒரு அணுவும் அசையாது (20)

Picture: Sri Krishna

பிள்ளையார் சுழி போட்டாயிற்று
பிள்ளையார் பிடிக்க குரங்கானது
உரு ஏறத் திரு ஏறும்
ஒன்றாகக் காண்பதே காட்சி
ஆருமில்லார்க்கு தெய்வமே துணை (அகதிக்குத் தெய்வமே துணை)
தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் (தனக்கும் மிஞ்சியதுதான் தானம்)

அரியும் சிவனும்

சிவ பூஜையில் கரடி புகுந்தது போல
சிவனொடுக்கும் தெய்வம் தேடினும் இல்லை (சிவாத் பரதரம் நாஸ்தி)
அரன் அதிகம் அரி அதிகம் என்போருக்கு பரகதி இல்லை (கம்பன்)
அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு
தோத்திரத்துக்கு திருவாசகம் சாத்திரத்துக்கு திருமந்திரம்
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்
சித்தம் போக்கு சிவம் போக்கு, ஆண்டி போக்கும் அதே போக்கு
கல்லாடம் படித்தவனிடம் சொல்லாடாதே
அன்பே சிவம்
சிவத்தைப் பேணிற் தவத்திற்கழகு
சிவனே என்று கிட
சோற்றுக்குப் பின்னர்தான் சொக்கரும் மீனாட்சியும்
எறும்புக்கும் படி அளப்பான் ஈசன் (சிவநி ஆக்ஞாலேக சீம கறவது: தெலுங்கு)


Picture: Sri Nataraja

பிச்சைச் சோற்றிற்குப் பிறப்பு இல்லை (40)
என் கடன் பணி செய்து கிடப்பதே (அப்பர்)
நீரில்லாத நெற்றி பாழ்; நெய் இல்லாத உண்டி பாழ்
சும்மா இருப்பதே சுகம் (சும்ம இரு, சொல்லற)
தருமம் தலை காக்கும்
வானத்துக்கு வால்மீகி போருக்கு வியாசர்
காணாமற் கோணாமற் கண்டு கொடு (முக்கால சந்தியா வந்தனம் செய்யும் நேரம் பற்றிய பழமொழி )
வயிறு நிறைந்தால் வாய் வாழ்த்தும் (அன்ன தானப் பெருமை)
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்தது போல

வேலும் மயிலும்

வேலை வணங்குவதே எமக்கு வேலை (பாரதி)
வேலுண்டு வினை இல்லை; மயிலுண்டு பயமில்லை
சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை
குன்று தோராடும் குமரன் (50)
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வதாற்போல்
கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்
நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறைத் தீர்ப்பு
கடவுளை நம்பினார் கைவிடப் படார்
கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடிப் போக
கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மாதா பிதா குரு தெய்வம்

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
பசித்திரு, தனித்திரு, விழித்திரு
நாலாம் பிறை பார்த்தவன் கதி நாய் பட்டபாடு தான்
ஞானத்தில் தன் பேச்சு, பிரேமத்தில் பெண்பேச்சு
கருடா சவுக்கியமா என்றதாம் பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு
கருடா சவுக்கியமா என்று கேட்டதற்கு அவரவர் இருக்கிற இடத்தில் இருந்தால் சவுக்கியம் என்றதாம்
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது
அவன் ஒரு ருத்திராட்சப் பூனை (65)

கோவிலோ கோவில்

Picture: Madurai Meenakshi Temple

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
கோபுர தரிசனம் பாப விநாசம்
கோவில் இடிக்கத் துணிந்தவனா குளம் வெட்டப் போகிறான்
கோவில் உண்டைச் சோறு குமட்டின தேவடியாள் குத்துமித் தவிட்டுக்குக் கூத்தாடுகிறாள்

கோவிலை அடைத்துக் கொள்ளை இடுகிறவனா குருக்களுக்குத் தட்சினை கொடுப்பான்?
கோவிலைப் பார்த்துக் கும்பிடுகிறதா? கொள்ளை பார்த்துக் கும்பிடுகிறதா?
கோவில் மணியம் என்கிற பேர் இருந்தால் போதும்
கோவில் மணியம் போனால் நம்பியான் சுழலும் போச்சுதா?
கோவில் விளங்கக் குடி விளங்கும்
கண்ட இடம் கைலாசம்
கண்ட கண்ட கோவில் எல்லாம் கை எடுத்துக் கும்பிட்டேன்
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யறது
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது (கடுகு சிறுத்தாலும் காரம் போகாது
ஒரு மனப் படு, ஓதுவார்க்குதவு (80)
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்

கங்கையும் காசியும்


படம்: சிவனும் பார்வதியும் (Shiva and Parvati)

கங்கா ஸ்நானம் துங்கா பானம்
கங்கைக்குப் போன கடாவின் கதை போல
கங்கை ஆடப் போன கடாவை கட்டி அழுதானாம்
கங்கையிலே படிந்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது
கங்கையில் ஆடினாலும் கணமும் விடாமற் செய்த பாவம் தொலையாது
கங்கையிலே பிறந்த நத்தை சாலக்கிராமம் ஆகாது
கங்கையில் ஆடினாலும் பாவம் தீருமா?
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
வைகைக் கரைக்கு வார்த்தையும் கங்கைக் கரைக்குக் கீர்த்தியும்
கங்கையிலுள்ள மீன் எல்லாம் சொர்க்கத்துக்குப் போகாது (ரா.கி.பரமஹம்சர்

காசி இரண்டு எழுத்துத் தானே காண எத்தனை நாள் செல்லும்?
காசிக்குப் போயும் கரும தொலையவில்லை
காசிக்குப் போயும் மூடத் தவசி காலில் விழுகிறதா?
ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது
காசிக்குப் போனாலும் அகப்பை அரைக் காசு
காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை
காசிக்குப் போனேன் காவடி கொண்டு வந்தேன்
காசி முதல் ராமேசுவரம் பரியந்தம்
காசி முதல் ராமேசுவரம் வரையில் தெரிந்தவன் (100)
காசியில் இருந்தவன் கண்ணைக் குத்த காஞ்சீபுரத்திலிருந்து கையை நீட்டிக் கொண்டு போனானாம்

தமிழ் ஒரு கடல்!!


“கல்வி கரையில, கற்பவர் நாள் சில” என்பது ஆன்றோர் வாக்கு. கலைமகளும் கூட “கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு” என்று கூறினார். தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்களை எல்லாம் ஒருவர் கணக்கெடுத்தால் அவையனைத்தையும் கற்றறிய ஒரு வாழ்நாள் போதாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புலப்படும்.

உலகில் பழமையான இலக்கியம் படைத்த மொழிகள் ஒரு சில மொழிகளே. தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், எபிரேயம், சீனம் என்று விரல் விட்டு எண்ணி விடலாம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் தன் சீரிளமைத்திறம் குன்றாதது தமிழ். இந்தக் காலக் கட்டத்தில் வளர்ந்த முக்கிய சில நூல்களின் நீளத்தை அல்ல து அளவை மட்டும் சிறிது சிந்தித்துப் பார்ப்போம். சங்க இலக்கியம் என்பதில் எட்டு நூல்களைக் கொண்ட எட்டுத்தொகையும் பத்து நூல்களைக் கொண்ட பத்துப்பாட்டும் அடக்கம். இந்த 18 நூல்களில் 473 புலவர்கள் பாடிய 2381 பாடல்கள் உள்ளன. ஏறத்தாழ 30,000 வரிகள்! ஒரு நாளைக்கு நூறு அடிகள் வீதம் படித்தாலும் கூட சங்க இலக்கியத்திற்கு மட்டும் முந்நூறு நாட்கள் தேவைப்படும்.!!

இதற்கு முன்னர் எழுந்த தொல்காப்பியம், அதற்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஏழாம் நூற்றாண்டு முதல் பெருகிய பக்தி இலக்கியங்கள் (தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம்) ஆகிய அனைத்திலுமுள்ள பாடல்களை எண்ணிக் கூட்டினால் தமிழைக் கற்பதற்குப் பல பிறவிகள் எடுக்க வேண்டும் என்பதை உணர்வீர்கள். கையில் ஒரு கணக்கிடும் கருவியை (கால்குலேட்டர்) வைத்துக்கொண்டு பின்வரும் செய்யுட்களின் எண்ணிக்கையைக் கூட்டுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு செய்யுட்களை நன்கு மனதில் பதியுமாறு படிக்க முடியும் என்பதைத் தீர்மானித்து அதனால் இந்தச் செய்யுட்களின் எண்ணிக்கையை வகுத்துப் பாருங்கள். இப்படிச் செய்தால் இனி ஒரு வினாடி கூட தாமதிக்காமல் தமிழைப் படிக்கத் தோன்றும். ஒரு அறை முழுவதும் பொன்னும் மணியும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. உங்கள் கையில் அறைக்கான சாவியும் (தமிழ் அறிவு) உள்ளது. இனியும் தாமதிப்பது நியாயமா?

புள்ளிவிபரம்

தொல்காப்பியம் 3,999 அடிகள் 
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் 30, 000 அடிகள்
சிலப்பதிகாரம் 5,001 அடிகள்
மணிமேகலை 4,759 அடிகள்
பெருங்கதை 16,230 அடிகள்

பாடல் கணக்கு

பதினெண் கீழ்க்கணக்கு (குறள் உள்பட 18 நூல்கள்) 3,250 பாடல்கள்
கம்ப ராமாயணம் 10,500 பாடல்கள்
சீவக சிந்தாமணி 3,145 பாடல்கள்
திவ்யப் பிரபந்தம் (ஆழ்வார் பாடியவை) 4,000 பாடல்கள்
பன்னிரு திருமுறை 18, 326 பாடல்கள்
தாயுமானவர் 1,454 பாடல்கள்
அருணகிரி 1,361 பாடல்கள்


இராமலிங்க சுவாமிகள் 5,800 பாடல்கள்

20,000 பழமொழிகள்

தமிழில் 20,000க்கும் மேலாக பழமொழிகள் இருக்கின்றன. மூன்று வெள்ளைக்காரர்கள் இவைகளைத் தொகுத்து தனித்தனி புத்த்கங்களாக வெளியிட்டனர். அவைகளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புகள் அல்லது ஆங்கிலத்திலுள்ள இணையான பழமொழிகளைக் கொடுத்தனர். பழமொழிகள் ஒவ்வொன்று பற்றியும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதலாம்!!
முக்கியமான சில பாடல் தொகுப்பை மட்டுமே கொடுத்துள்ளேன். பாரதி வரையுள்ள ஆயிரக்கணக்கான புலவர்களின் பாடல்களை எல்லாம் கணக்கிட்டால் அந்த நூல்களின் பெயர்களை எழுத மட்டுமே தனியாக ஒரு நூல் தேவைப்படும். தமிழ் ஒரு பெருங்கடல்! முத்துக்குளிப்போம் வாருங்கள்!

******************

 

வரலாறு எழுதிய முதல் தமிழன்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் கபிலரும் பரணரும் இரட்டைப் புலவர்கள் போலக் கருதப்படுகிறார்கள். இவ்விருவரும் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. கபிலர், பாட்டு எண்ணிக்கையால் (205 பாடல்கள்) முதலிடம் பெறுகிறார். பரணரோவெனில், பாடல்களில் அளிக்கும் வரலாற்றுச் செய்திகளால் முதலிடம் பெறுகிறார். பரணரை தமிழ் கூறு நல்லுலகத்தின் முதல் வரலாற்று ஆசிரியர் என்றால் மிகையாகாது. தேதியையும் ஆண்டையும் குறிக்கவில்லை என்றாலும் ஏராளமான நிகழ்ச்சிகளை இவர் கூறுவது பழந் தமிழகத்தை நம் கண் முன் நிறுத்துகிறது.

 

பரணர் கூறும் எல்லா செய்திகளும் நற் செய்திகள் என்று கூறமுடியாது, ஆனால் உண்மைச் செய்திகள் என்பதில் ஐயமில்லை. பொய் அடிமை இல்லாத புலவர் வரிசையில் முன்னிலையில் நிற்பவர்.

 

இரு பெரும் சோழர்களையும், இரு பெரும் சேரர்களையும் நேரில் சந்தித்ததாகத் தெரிகிறது. இது தவிர கடை எழு வள்ளல்களில் பேகன், ஆய், அஞ்சி, காரி, ஓரி ஆகியோரைப் பாடுகிறார். அவர் பாடிய 85 பாடல்களிலும் உவமை வாயிலாகவோ நேரடிக் குறிப்பு மூலமாகவோ ஏதேனும் ஒரு புதிய செய்தியைக் கூறுவார். எதிர்காலத்தில் வாழ்வோருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே நன்கு உணர்ந்து ஒவ்வொரு செய்தியாக அவிழ்த்து விடுகிறார்.

 

நான்கு பெரிய போர்களைப் பாடலில் வருணிக்கிறார்: வெண்ணிப் பறந்தலை, வாகைப் பறந்தலை, கூடற் பறந்தலை ,பாழிப் பறந்தலை ஆகிய போர்க் கள நிகழ்ச்சிகளை விரித்துரைக்கிறார். கழார்ப் பெருந்துறை நீர் விழாவில் ஆட்டனத்தியை காவிரி அடித்துச் சென்றது, கரிகாலன் வெண்ணிப் பறந்தலையில் அடைந்த வெற்றியைக் கொண்டாட அவனுக்குப் பெண் கொடுத்த அழுந்தூரில் விழா நடந்தது, ஆற்றில் மிதந்து வந்த மாங்காயைத் தின்றதற்காக ஒரு பெண்ணுக்கு, நன்னன் என்பவன் மரண தண்டனை விதித்தது, பாழியில் வேளிர் புதையல் செல்வங்களைச் சேர்த்துவைத்தது, தந்தையின் கண்ணைப் பறித்த கோசரை அன்னி மிஞிலி பழிவாங்கியது, மனைவியைப் பிரிந்து பரத்தை வீட்டில் வாழ்ந்த பேகனை மீண்டும் மனைவியுடன் சேர்த்து வைத்தது—இப்படி எத்தனையோ செய்திகளை பத்திரிக்கை நிருபர்கள் போல பிட்டுப் பிட்டு வைக்கிறார். அந்தக் காலத்தில் பத்திரிக்கைகள் இருந்திருந்தால் சிறந்த பத்திரிக்கையாளர் விருது பரணருக்குத்தான் கிடைத்திருக்கும்!

 

மேலே கூறிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் சுவையான நிகழ்ச்சி. இவைகளில் கரிகாலன், நன்னன், பறவை நண்பன் ஆய் எயினன், சேரன் செங்குட்டுவன் போன்றோரின் சுவையான கதைகளை ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். கீழ்கண்ட கட்டுரைகளில் காண்க:

 

1.கரிகாலன் வெள்ளை முடி தரித்ததால்தான் இன்றும் பிரிட்டிஷ் நீதிபதிகள் வெள்ளை “விக்” தரித்து வந்து தீர்ப்பு கூறுகிறார்கள்

2. துலாபாரம் கட்டுரையில்,எடைக்கு எடை தராசில் வைத்து தங்கம் தருகிறேன் என்று ஊர்மக்கள் மன்றாடியும் நன்னன் ஒரு பெண்ணைப் படுகொலை செய்தான் என்பதைக் கூறியிருக்கிறேன்

3. அதிசயப் பறவைத் தமிழன் கட்டுரையில் ஆய் எயினனுக்குப் பறவைகள் கூடி குடை பிடித்த அற்புத நிகச்சியைக் கொடுத்துள்ளேன்

4. கடற்கொள்ளையர்: இந்துக் கடவுள்கள் கடற்கொள்ளையரைத் தாக்கி ஒழித்த கட்டுரையில் கடம்பறுத்த செங்குட்டுவன் பற்றி எழுதினேன்.

5. Sea in Tamil Literature and Kalidasa என்ற கட்டுரையில் கடல் பற்றி பரணர் கண்டுபிடித்த அரிய விஷயத்தைக் கொடுத்திருக்கிறேன்

 

அறுகை என்ற நண்பனுக்கு உதவுவதற்காக மோகூர்ப் பழையன் மீது படை எடுத்த செங்குட்டுவன், பழையனுக்குத் துணையாக வந்த பாண்டியனையும் சோழனையும் விரட்டிவிட்டு பழையனை வென்றான். பழையனின் காவல் மரமான வேம்பை வெட்டித் துண்டுகளாக்கி முரசு செய்ய யானைகளால் இழுத்துவந்தான்.  இதற்குப் பழையன் மனைவியரின் முடியைக் கத்தரித்து கயிறு செய்து அந்தக் கயிற்றைப் பயன்படுத்தினான். ஆக தமிழர் செய்த தவறான தவறுகளையும் துல்லியமாகத் தருகிறார். மாங்காய் எடுத்த பெண்ணைக் கொன்ற நன்னனை ஏசுகிறார். கடற்படையைக் கொண்டு கடல் கொள்ளயர்களைச் செங்குட்டுவன் அழித்ததையும் கூறுகிறார்.

 

ஆதிமந்தி—ஆட்டநத்தி

அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட், உதயணன்—வாசவதத்தை, மும்தாஜ்- ஷாஜஹான் காதல்கதைகளைத் தெரிந்தோருக்கு ஆதிமந்தி-ஆட்டநத்தி காதல் கதை தெரியாது. கரிகால் சோழனின் மகள் ஆதிமந்தி. அவள் ஆட்டநத்தி என்ற ஆடல்வல்லானை மணக்கிறாள். ஆட்டத்தில் சிறந்த அவன் பல நீர் விளையாட்டுகளைச் செய்து காட்டுகையில் காவிரி நதி அவனை அடித்துச் செல்லுகிறது. அவன் மனைவி ஆதிமந்தி காவிரி கடலுடன் கலக்கும் இடம் வரை அவனைப் பின் தொடர்ந்து அலறியவாறே ஓடுகிறாள். இந்த அவலத்தைக் கண்ட சோழ நாடே கண்ணீர் உகுக்கும் வேளையில் மருதி என்பவர் அவனைக் கரை சேர்த்து விட்டு காவிரியால் அடித்துச் செல்லப்பட்டு மறைந்துவிடுகிறார். இந்தச் சோகக் காட்சிகளை பரணரும் வெள்ளிவீதீயாரும் பல பாடல்களில் பாடியிருக்கிறார்கள்.

 

வடமொழிக்கு இலக்கணம் கண்ட, உலகமே வியக்கும் மேதை பாணிணீயை, பகவான் பணிணி என்று பதஞ்சலி புகழ்வார். நாமும் வள்ளுவனைத் தெய்வப் புலவன் என்போம். பரணரும் இவ்வாறு தெய்வப் புலவன் என்று நக்கீரரால் வணங்கப்படும் செய்தியைத் தொல்காப்பியத்துக்கு உரை கண்ட பேராசிரியர் கூறுகிறார்: “முரணில் பொதியின் முதற் புத்தேள் வாழி! பரண கபிலரும் வாழி ! என்று அகத்தியரோடு அவரும் போற்றாப்படுகிறார். தெய்வப் புலவன் பரணன் வாழ்க !

 

இதோ அவரால் பாடப் பட்டோரின் பட்டியலைப் பாருங்கள்:

  1. சோழன் உருவப்பஃற்றேர் இளஞ்சேட்சென்னி 2. சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிரற்கிள்ளி 3. சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் 4. சேரன் செங்குட்டுவன் 5. பேகன் 6. ஊனூர் தழும்பன் 7. உறந்தை வெளியன் தித்தன் 8. மோகூர்ப் பழையன் 9. அறுகை 10. மலையமான் திருமுடிக் காரி 11. ஆய் அண்டிரன் 12. அதியமான் நெடுமான் அஞ்சி 13. கண்டீரக் கோப்பெருநள்ளி 14. வல் வில் ஓரி 15. கரிகாலன் 16. ஆட்டனத்தி 17. ஆதிமந்தி 18. நன்னன் 19.அன்னி மிஞிலி 20. அகுதை 21. ஆய் எயினன் 22.பாணன் 23. கட்டி 24. பொருநன் 25. கணையன் 26. பசும்பூட் பாண்டியன் (தலை ஆலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் 27. அதிகன் 28. எவ்வி 29. மத்தி 30. கழுவுள் 31. அழிசி 32. பெரும்பூட் பொறையன் 33. தழும்பன் 34. விரான் 35.விச்சியர் பெருமகன் 36. பழையன் 37. வல்லங் கிழவன் 38. பொதியில் திதியன் 39. வன் பரணர் 40. வெள்ளிவீதியார் 41. மருதி 42. உதியஞ் சேரல் (செங்குட்டுவனின் மகனான உதியன் சேரல் பரணரிடம் பாடம் கற்றான்).

 

தமிழ் வரலாறு கண்ட ஏனையோர்:

பரணரைத் தவிர சங்க காலத்துக்கு முந்திய மௌரியர் காலம் குறித்து தகவல் தருகிறார் மாமூலன் என்ற புலவர். மௌரியர்கள் மலைகளில் சாலைகளை அமைத்து படை எடுத்து வந்தது, வேங்கட மலைக்கு அப்பால் வேற்று மொழிகள் பேசப்பட்டது ஆகிய தகவல்களைத் தருகிறார் (அகம் 251, 281).

சிலப்பதிகாரம் என்னும் அற்புதமான காவியம் குறித்து பழந்தமிழ் நூல்களில் எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால் மருதன் இளநாகன் என்ற ஒரு புலவர் மட்டும் “முலையைத் தூக்கி எறிந்த பத்தினி” பற்றிப் பாடுகிறார். இது கண்ணகி தன் முலையை பிய்த்து எறிந்து மதுரையைத் தீக்கிரையாக்கிய சம்பவமே என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு.

 

இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கூறிய சில வரிகள்தான் தமிழ் இலக்கியத்தின் காலத்துக்கே அடித் தளமாக அமைந்தது. “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்” கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்தான் என்று அவர் பாடியதால் இலங்கையின் வரலாறு கூறும் மஹாவம்சத்திலிருந்து கஜபாகு மன்னரின் காலம் கி.பி.130 என்பதை அறிந்து சேரன் செங்குட்டுவன் காலத்தை அறிந்தோம். இளங்கோவும் ஏனைய புலவர்களும் கூறும் சுனாமி தாக்குதல்கள் , தென் மதுரை முதலியன கடலுக்குள் சென்றது ஆகியன எல்லாம் கி.பி.130க்கு முன் நடந்தன என்பதையும் அறிகிறோம். இவை எல்லாம் சதகர்ணி மன்னர் பற்றிய குறிப்புகளாலும் ரோமானிய வணிகத் தொடர்பு தடயங்களாலும் உறுதியாக்கப்பட்டன.

 

திருவிளையாடல் புராணம் பல வரலாற்று நிகழ்ச்சிகளைச் சொன்னாலும் அவைகளைப் புராணக் கதைகள் என்றும் வரலாறு இல்லை என்றும் ஒதுக்கிவத்தனர். ஆனால் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் (திருநாவுக்கரசு) பெருமான், தருமிக்கு பொற்கிழி கிடைத்த சம்பவத்தைத் தனது தேவாரத்தில் பாடி ஏழைத் தருமிக்கு அழியாத புகழ் வாங்கிக் கொடுத்துவிட்டார். நரியைப் பரியாக்கிய அற்புதத்தைக் குறிப்பிட்டு மாணிக்கவாசகர் தங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர் எனபதையும் சொல்லாமல் சொல்லுகிறார். செய செய சங்கரா போற்றி என்றும் கீதங்கள் பாடிய அடியார்கள் என்றும் பாடி ஆதிசங்கரர் தங்களுக்கு முன்னால் வாழ்ந்ததையும் காட்டுகிறார். (ஆதிசங்கரர் காலம்: தமிழ் இலக்கியத்தில் சான்றுகள் என்ற எனது கட்டுரையில் முழு விவரம் காண்க).

 

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பாட்னா நகரில் ஜைனர்களுடன் அப்பர் வாழ்ந்ததால் கங்கை  பற்றியும் அது வங்க தேசத்தை அடைந்தவுடன் ஆயிரம் பிரிவுகளாகப் பிரிந்து கடலில் விழுவதையும் “ஆயிர மாமுக கங்கை” என்றும் பாடுகிறார்.

 

மருதன் இளநாகன் கண்ணகி பற்றி பாடியது– நற்றிணை 216.

“ஏதிலாளன் கவலை கவற்ற

ஒரு முலை அறுத்த திருமா வுண்ணிக்

கேட்டோர் அனையா ராயினும்

வேட்டோ ரல்லது பிறரின் னாரே”

****

(அப்பர், திருப்புத்தூர் திருத்தாண்டகம் 2-1-2

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி

நற்கனகக்கிழி தருமிக்கருளினோன் காண்

*****

 

கரிகாலன் வெற்றி பற்றி பரணர் பாடியது:

காய்சின மொய்ம்பிற் பெரும்பெயர்க் கரிகா

லார்கலி நறவின் வெண்ணி வாயிற்

சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பி

னிழிமிசை முரசம் பொருகளத்தொழியப்

பதினொரு வேளிரொடு வேந்தர் சாய (அகம். 246)

*****

 

சிலப்பதிகாரத்தில் கஜபாஹு:

மாளுவ வேந்தரும்

கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்

மெந்நாட்டாங்க ணிமைய வரம்பனி

னன்னாட் செய்த நாளணி வேள்வியில் (சிலம்பு.30-2-159)

*********************

கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்- பகுதி 3

Tamil-Greek Link- Part 3

மேலும் சில தமிழ்-கிரேக்க சொற்கள் ஒற்றுமை

Chaire= siri சிரி rejoice

Manual= பனுவல் panuval in Tamil. The English etymological dictionaries give a wrong derivation. It is actually a Tamil word. It happens according to M=P/B=V changes found in many of the languages.

Palli-ative- வலி நிவாரண (P=V)

Minoan Civilization = மீனவன் miinavan

Dorian= திரையன் thiraiyan (sea people)

Terra= தரை tharai , tharaNi (earth)

Terra cotta= தரை tharai + சுட்ட cotta/sutta= sutta tharai= சுடு மண் சிற்பம் sutuman sirpam

Ophis / ophites/ Oviya/ஓவியர் குடி (tamil word for Nagas)

Ophites in Gk is snake worshippers

Uros- uraka/snake ( Uragapuram, Alaway)

Tholoi (mycenean) = Thazi (Tam)- long mud urn

Patni = பத்தினி வழிபாடு

Poly=பல

Bottle=புட்டில் (ஓலைக் கூடை)

Pangaea=பங்கஜம்/ பங்கயம் (தாமரை) gaia=geo=jaya

Athlete=அடலர், Victory=வெற்றி

Greek greeting: Haritu-tay (May Hari Bless You) ஹரி தூ தே

Greek rulers and philosophers:

Pantikapaion= பாண்டிகாபயன் (மகாவம்சத்தில் பண்டுகாபயன் என்ற மன்னன்)

Agamemnon=அகமெம்னொன்=அஜ மன்னன்

Atreus=ஆத்ரேயஸ்= ஆத்ரேய (கோத்ரம்)

cybel= சிங்க ரதத்தில் ஸ்ரீ பலி (கேரள கோவில்களில் இப்போதும் ஸ்ரீ பலி வலம் வருதல் உண்டு)

Demerites= Deva Mitras= a friend/Bhakta of God= தேவ மித்ரன்

Socrates=Su Kruta=a man of meritorious conduct= சாக்ரடீஸ்/ சுக்ருத

Alexander=Laksyendra= the Lord of Gods= லக்ஷ்யேந்திர

Menander=Meena Indra=Lord of fishes (matsyavatara or Pandyan name)=மீனேந்திர

Aristotle=Arishta Tal= God as the averter of obstacles or calamites=அரிஸ்ட தள

Parthea= Partha’s Desa=Land of Partha/ Arjuna= பார்த்த தேச

 

கிரேக்கர் பெயரிடும் முறை

இந்தியாவைப் போல கிரேக்க நாட்டிலும் பெயரிட்டனர். தசரதன் பிள்ளையை தாசரதி (ராமன்) என்றும் காந்தார நாட்டுப் பெண்ணை காந்தாரி என்றும் மிதிலை நகரப் பெண்ணை மைதிலி என்றும் கேகய நாட்டுப் பெண்ணை கைகேயி என்றும் அழைப்பதைப் போலவே கிரேக்க நாட்டிலும் பெயரிட்டனர்.

 

காளை பிடித்தல்

தமிழ்நாட்டு ஜல்லிக் கட்டு போலவே கிரேக்க நாட்டிலும் நடந்தது. கி.மு.1500 தங்கக் கோப்பை ஒன்றில் காளை பிடிக்கும் காட்சிகள் புடைக்கப்பட்டுள்ளன. ஸ்பார்டா அருகில் ஒரு கல்லறையிலிருந்து கண்டு பிடிக்கப் பட்ட இந்தக்கோபை ஏதென்ஸ் தேசிய அருங்காடசியகத்தில் உள்ளது.

 

தந்தச் சிற்பம்

தலையில் கவசத்துடன் ஒரு வீரனின் தந்தச் சிற்பம் ஆர்டெமிஸ் கோவிலி கண்டு பிடிக்கப்பட்டது. இது டெலோஸ் என்னும் இடத்தில் மியூசியத்தில் உள்ளது. பொதுவாக தந்தச் சிற்பங்கள் தென் இந்தியாவிலிருந்தே உலகம் முழுதும் போயின. அவன் எண் எட்டு (8) வடிவில் ஒரு கேடயத்தையும் தூக்கிச் செல்கிறான். இதன் காலம் கி.மு.1400.

 

பாம்பு ராணி, சிங்க ராணி

சிந்து சமவெளியிலும் சுமேரியாவிலும் சீறிப் பாயும் இரண்டு மிருகங்களைச் சமாளிக்கும் முத்திரைகள் கிடைத்தன. இதே போல முத்திரைகள் கிரீஸிலும் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கி.மு.1500. மைசீனிய நாகரீகத்தைச் சேர்ந்த இது ஏதென்ஸ் மியூசியத்தில் இருக்கிறது.

அதே மியூசியத்தில் கி.மு.1600ஐச் சேர்ந்த குதிரை ரதமும் காணப்படுகிறது.

ஒரு பெண் தெய்வத்தின் இரு புறத்திலும் இரு கைகளிலும் பாம்புகள் அல்லது சிங்கங்கள் இருக்கும். அவைகளை அவர் அடக்கி ஆள்வது போல காட்டப் பட்டிருக்கும். அதர்வ வேதத்தில் அலிகி, விளிகி என்று குறிப்பிடப்படும் இவர்கள், சுமேரிய இலக்கியத்திலும் வருகிறது. இந்த நாகர்களை ரிக் வேதம்மும் மறைமுகமாக குறிப்பிடுகிறது. சர்ப்பராக்ஞா/ சர்ப்பராணி என்று ரிக் வேதம் குறிப்பிடும்.

 

ஐம்பால் கூந்தல்

சங்கத் தமிழ் பாடல்களில் பெண்களின் ஐம்பால் கூந்தல் பற்றிப் படிக்கிறோம். கி.மு.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் தெய்வம் இப்படி முடியுடன் காணப் படுகிறது. அவருக்கு அருகில் ஒரு ஆண் தெய்வமும் அவர்களுக்கு சேவல் காணிக்கை தரும் இரண்டு உருவங்களும் உள்ளன. அந்த தெய்வங்களின் நாற்காலிக்கு ஒரு பாம்பு குடை பிடிக்கிறது.

 

டெல்பி ஆரக்கிள்- சதுக்க பூதம்- யக்ஷப் ப்ரஸ்னம்- விக்ரம் வேதாளம்

டெல்பி என்னும் இடத்திலுள்ள கிரேக்க நாட்டு தெய்வம் அப்பலோவும் அங்கே சாமி ஆடி குறி சொல்லும் பெண்ணும் மிகவும் பிரசித்தமானவர்கள். 2700 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இந்த குறி கேட்கும் வழக்கம் ஆயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடைபெற்றது. உலகப் புகழ் பெற்ற சாக்ரடீஸ், அரிஸ்டாடில், அலெக்ஸாண்டர், அவரது தந்தை பிலிப், ஹெரொடோட்டஸ் இன்னும் புகழ்பெற்ற அத்தனை கிரேக்க தலைவர்களும் ரோமானிய மன்னர்களும் கூட தங்கள் எதிர்காலத்தை அறிய குறி கேட்டுள்ளனர். இது நம் ஊரில் மாரியம்மன், காளியம்மன் கோவில் பூசாரிகள், பூசாரினிகள் இன்றும் கடைப் பிடிக்கும் வழக்கம். இது சிலப்பதிகாரத்தில் வரும் சதுக்க பூதம், மஹாபாரதத்தில் வரும் யக்ஷப் ப்ரஸ்னம், விக்ரமாதித்யன் கதையில் வரும் வேதாளம் ஆகியவற்றின் கேள்வி பதிலகளை நினைவு படுத்தும்.

 

பத்தினி வழிபாடு:

கிரீஸில் பத்தினி என்ற சொல் கி.மு.1600ல்பெண் தெய்வத்தின் பெயராக இருக்கிறது.

சிம்மாசனம்:

மினோவன் அரண்மனைக்குப் போகும் வழியில் இரண்டு பெரிய கல்லாலான சிங்கங்கள் இருக்கின்றன. இதுவும் இந்திய தொடர்பைக் கட்டுகின்றது. சிங்கத்தைக் கட்டுராஜாவாக பஞ்ச தந்திரக் கதையிலும் காளிதாசன் காவியங்களிலும் படிக்கிறோம். இறக்குமதியான ஒரு விஷயம் இப்படி நாடு தழுவிய அளவில் இருக்க முடியாது. ஆகவே இது நம்முடையதே.

கிரேக்க புராணக் கதைகள்:

ஹெர்குலீஸ் என்பவன்தான் கிரேக்க நாட்டின் மாபெரும் வீரன். இவனுடைய செயல்கள் (12 legendary labours of Hercules) எல்லாம் கிருஷ்ண பரமாத்மாவின் செயல்களை ஒத்து இருக்கும். ஹெர்குலீஸ் என்ற பெயரையே ஹரி குல ஈசன் என்று சொல்லுவோரும் உண்டு. இந்தக் கதைகள் எல்லாம் இந்தியப் புராணக் கதைகளின் சிதைந்த வடிவங்கள் என்று மாக்ஸ்முல்லர் கூறுவார். ஹெர்க்குலீசின் 12 வீரதீரச் செயல்கள் எல்லாம் கண்ணனின் வீரச்செயல் (லீலை) களைப் போல இருக்கின்றன.

 

கிரேக்க நூலில் கன்னடம்:

எகிப்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கிரேக்க நாடகத்தில் கன்னட மொழிச் சொற்கள் இருக்கின்றன. இது இரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்தது. ஒரு கிரேக்க அழகி கர்நாடக துறைமுகமான மால்பியின் நாயகனிடம் சிக்கும் நகைச்சுவை நாடகம் இது. அந்த கிரேக்க அழகியை நாயகன், சந்திரன் கோவிலுக்குக் காணிக்கையாக விடும்போது, கிரேக்க நாட்டிலிருந்து ஒரு குழு அவளைத் தேடி வருகிறது. அதில் ஒரு கோமாளியும் உண்டு. மால்பி நகர நாயகனுக்கு கிரேக்கர்கள் நிறைய மது பானத்தைக் கொடுக்கவே அவன் போதையில் விழுகிறான். அப்போது கிரேக்க அழகி தப்பி ஓடிவிடுகிறாள்.

அசுரர் பெயர்கள்

அசுரர் பெயர்கள்: நம் புரணக் கதைகளில் மஹிசாசுரன், தாரகாசுரன் என்று அசுரர் பெயர்கள் வருவது போல கிரேக்க நாட்டிலும் ‘அசுர்’ என்று அசுரர் பெயர்கள் முடியும் (Minotaur, Centaur).

 

(Ophites= Nagas/Oviyar in Tamil): ஓவியர்/நாகர்கள்

நாகர் இனத்தவருக்கு தமிழில் ஓவியர், அருவாளர், நாகர் என்று பல பெயர்கள் உள்ளன. ஒரு வேளை அவர்கள் அந்த இனத்திலுள்ள பல பிரிவினராக இருக்கலாம். ஒபைட்ஸ் என்பவர்களை கிரேக்க எழுத்தாளர்கள் பாம்பை வழிபடுவோர் என்பதிலிருந்து ஓவியர் என்ற நாகர்களையே அவர்கள் அப்படி அழைக்கின்றனர் என்பது தெளிவாகின்றது.

Ophir—Oviyar— Chitra—Painter– is another name of Nagas. Probably they wore Tattoos of snakes on their bodies. Ophites (snake worshippers) is mentioned in Greek literature. Hippolytus and Clement of Alexandria mention this sect.

 

கிரேக்க மொழி சிவலிங்க கல்வெட்டு

உத்தரப் பிரதேச மானில பதேபூர் மாவட்ட ரே நகரில் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட கிரேக்க மொழிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு சிவலிங்கத்துடன் உள்ளது. அலெக்சாண்டருக்குப் பின்னர் வடமேற்கு இந்தியாவை ஆண்ட மெனாந்தர் (மீன இந்திரன்) கல்வெட்டு இது. “மஹாராஜச ராஜ ராஜச மகாம் தச திராதாரச காச ஜயந்தச காப்ர ஜதாச மினாந்தரச”– என்ற விருதுகளுடன் கல்வெட்டு துவங்குகிறது. இதன் பொருள்: மாமன்னன், மன்னாதி மன்னன், மாபெரும் பாது காவலன், மினாந்தரன். மேலும் இது அவனை வெற்றித் திருமகன், வெல்லமுடியாத மாவீரன் என்றும் வருணிக்கிறது (தினமணி செய்தி 11-04-1980).

கமலாதேவி கட்டுரை

Illustrated weekly of India 20 January 1980-My impressions of Greece by Kamaladevi Chattopadhyaya: கமலாதேவி சட்டோபாத்யாயா எழுதிய கட்டுரையில் கிரேக்க நாட்டில் ஒரு கிராமத்தில் 1980களில் கண்ட காட்சிகளை இந்தியாவுடன் ஒப்பிடுகிறார். பூக்குழி இறங்கல் (தீ மிதித்தல்), சாமிவந்து ஆடுதல், முகமூடி போட்டுக்கொண்டு ஆடுதல் (இமயமலைப் பகுதிகளில் இன்றும் நடக்கிறது, கேரள கதகளி ஆட்டத்திலும் உண்டு), இந்தியாவிலிருந்து வந்ததாகக் கருதப்படும் பாவாடை போட்டுக்கொண்டு ஆடுதல் ஆகியவற்றை மாசிடோனிய கிராமமான நவுச்சாவில் கண்டதை எழுதி இருக்கிறார். அந்த கிராம மக்களே அது இந்தியாவிலிருந்து ஆதிகாலத்தில் வந்தது என்று கூறியதாக எழுதுகிறார்.

டியோடரஸ் சிகுலஸ் (கி.மு 60) என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹெர்குலீஸ் பற்றி பல அபூர்வமான தகவல்களைத் தருகிறார். ஹெர்குலீஸ் இந்தியாவில் பிறந்தவர் என்றும் இந்தியாவில் அவருடைய வாரிசுகள் ஆட்சி புரிவதாகவும் எகிப்திலும் அவர் வழிபடப் படுவதாகவும் அவர் இறந்தவுடன் வானத்தை வழிபடுவோரின் வழக்கத்துக்கிணங்க அவரை தகனம் செய்ததாகவும் எழுதியுள்ளார்.

 

சித்திர கவி தகடு

கிரீட் தீவில் பைஸ்டோஸ்  என்னும் இடத்தில் கிடைத்த ஒரு வட்டமான களிமண் தகட்டில் 242 சித்திர எழுத்துகள் (The Phaistos disk ,1700 BC) காணப்படுகின்றன. இதிலுள்ள விஷயம் இதுவரை படிக்கப்படவில்லை. ஆனால் இந்த எழுத்து தேவநாகரி லிபி போல கடைசியில் சில குறிகளுடன் முடிவதாகவும் முன்னொட்டு விஷயத்தில் சம்ஸ்கிருத மொழியை ஒத்திருப்பதாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். ரப்பர் ஸ்டாம்ப் போல முதல் முதலாக ஒவ்வொரு எழுத்தையும் அச்சுப் பொறித்ததில் உலகில் வேறு எங்கும் காணமுடியவில்லை என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர் இது சித்திர கவி எழுதியது போல வட்டமாக எழுதப்பட்டுள்ளது.

கடல் நீராடல்

கடலில் நீராடுவதை மஹாபாரதம், சங்க இலக்கியம் முதலியன குறிப்பிடும். கிரேக்க நாட்டிலும் கடலில் நீராடுவது புனிதம் என கருதப் பட்டதை கிரேக்க மொழி முதல் நூலான இலியட்—டில் (1: 312-317) காணலாம்.

 

இந்திர விழா

சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்துக் கொல்லுவதைத் தாமதப்படுத்தியதற்குக் காரணம் அருகில் தீவில் நடந்த கோவில் விழாவாகும். அந்த விழா துவங்கிவிட்டால் அது முடியும் வரை மரணதண்டனை முதலியன நடைபெறாது. நம் ஊர்க் க்கோவில்களில் கொடி ஏற்றிவிட்டால் எல்லா காரியங்களையும் வெளியூர் பயணத்தையும் ஒத்திவைப்பது போல இது.

மத்தியதரைக் கடலில் இந்திர விழா (Nzegna Festival) போல கடல் விழாவும் கொண்டாடினர். ஆண்டுதோறும் சாரா என்பவள் நினைவாக மே 24ஆம் தேதி ஜிப்சி நாடோடி மக்கள் ஆயிரககணக்கில் கூடி சாராவின் சிலையைக் கடலில் கரைப்பார்கள். நாம் வினாயகர் , காளி சிலைகளைக் கரைப்பது போல இது.

நாம் கடலைக் கடைந்தபோது தெய்வங்களும் புனிதப் பொருட்களும் வெளியேறியதாக நம்புவதைப் போல அவர்களும் அப்ரதிரதி என்பவள் கடலில் இருந்து வந்ததாக நம்புகின்றனர்.

யுதக்ஷன் (Eudoxus) என்ற கிரேக்கன் இரண்டு முறை செங்கடலில் இருந்து இந்தியாவுக்கு வந்து நிறைய வாசனைத் திரவியங்களை ஏற்றிவந்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன.

 

வாஹனங்கள்

இந்திய கடவுளர் போலவே கிரேக்க தெய்வங்களும் வாகனங்களில் பவனி வருவதையும் சில பெண் தெய்வங்கள் கையில் பறவை வைத்திருப்பதும் உண்டு. ஆர்டெமிஸ் தேவி மான் வாகனத்திலும் அதீனா சிங்க நாற்கலியிலும், நைகி 4 குதிரை பூட்டிய ரதத்திலும், ஸ்ரீபலி சிங்க ரதத்திலும்,போவதைக் காணலாம். இந்த உருவங்களோடு பல நகைகள், மோதிரங்கள் செய்யப்பட்டன. (Artemis = Stag vahana Athena =Lion stool

Nike =Four horse chariot, Goddess Cyprus and Aphrodite with bird, Kamadhenu)

 

வேதகால தெய்வங்கள்

கிரேக்க தெய்வங்கள் பல வேத கால தெய்வங்களை ஒத்திருப்பதை ஏராளமான ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அவர்கள் ஹெர்குலீஸ் மிகப் பழங்காலத்தில் இந்தியாவிலிருந்து எகிப்து வழியாக கிரீட் தீவுக்குச் சென்று குடி ஏறியிருக்கலாம் என்று கருதுகின்றனர். காரணம் என்ன வென்றால் ஹெர்குலீசை சிங்கத்தோல் (சிவனின் புலித்தோல்) போற்றி கையில் முட்கள் உள்ள கதையை வைத்திருப்பதாகவே சித்தரிகின்றனர். இது நாகரீக உடைகள் பரவாததற்கு முன் இருந்த உடைகள். கிருஷ்ணரைப் போல சங்கு சக்ர பீதாம்பர தாரியாகக் காட்டுவதில்லை. ஆக கிருஷ்ணருக்கும் ஹெர்குலீசுக்கும் ஒரே இந்திய மூதாதையர்கள் என்பதால் ஹரி குல ஈச= ஹெர்குலீஸ் என்பதாகவும் கருதுகின்றனர்.

ஒரு காரணமும் இல்லாமல் ஏஎராளமான கிரேக்க அறிஞர்கள் இந்தியாவை சம்பந்தப் படுத்தமாட்டார்கள். மிகப் பழங்காலத்தில் இருந்த தொடர்புகளை தற்போதைய கிரேக்க நாகரீகத்துக்கும் முந்திய மைசீனிய மினோவன் நாகரீகத்திலும் காணமுடிகிறது. சிவலிங்க வழிபாடு, தேவி வழிபாடு,பத்தினி வழிபாடு ஆகியவற்றுக்கான எண்ணற்ற தடயங்கள் உள்ளன.

வருந்ததக்க விஷயம் என்னவென்றால் துண்டு துண்டாக பலவேறு இடங்களில் சிதறிக் கிடக்கும் விஷயங்களை அணமைக் காலத்தில் யாரும் தொகுக்கவில்லை. 100 அல்லது 150 ஆண்டுகளுக்கு முன் சில வெளி நாட்டுக்காரர்கள் எழுதியதுடன் நாமும் வாளாவிருந்து விட்டோம்.

பிக்ஷு சமன்லால் எழுதிய “இந்தியா-உலகின் தாய்” INDIA-MOTHER OF US ALL என்ற நூலில் இந்திய-கிரேக்க உறவு பற்றி மிகப் பழங்காலத்தில் எழுதியோர் பட்டியலை மட்டும் தருகிறேன்.

LIST OF SCHOLARS

Garbe says that the doctrines of Indian Sankhya philosophy exerted great influence on Greek thinkers like Heraclitus, Empedocles, Anaxagorus, Democritus and Epicurus.

Hussar says the Eleatic philosophers of Greece were profoundly influenced by the Upanishads.

Max Mueller and others say that Pythagoras had contact with Indian scholars in Persia from whom he learnt forty seventh theory of the Euclidean geometry, which is found in Sulva sutras of Baudhayana.

Colebrook holds that the Pythagorians were indebted to their Indian instructors.

Schrader declares that India is the birth place of Pythagorean ideas.

Both Plato and Aristotle had contact with India through Persia. Max Mueller says Brahmins from India were in Greece in fifth century BC.

Urwick is convinced that India is the birth place of many of the ideas of Plato.

Hopkins says Plato is full of Sankhyan thought worked out by him but taken from Pythagoras.

Erdmann says that Plotinus, the founder of neo Platonist school, had deep knowledge of Indian mysticism and himself led the life of a Yogi

Zenob, a fourth century historian of Armenia, relates how in the second century BC, two Indian princes settled in Taron, west of lake Van, and erected temples for the worship of Giasne (Krishna).

Scheling, Schopenhauer, Mansel Milman, Vincent Smith, Winternitz, Max Mueller, historian Mahaffy, A.A.Macdonnell explain how the Buddhist philosophy, Jataka tales, Lalita Vistara and Asoka’s emissaries influenced Christianity in Europe.

In Autobiography of a Yogi by Paramahamsa Yogananda, one can read about Alexander- Dandamis meeting, Alexander- Calanus (Kalyanji) meeting. Dandamis and Calanus are corrupted Hindu names.

*************************

தமிழர்களின் எண் “ ஜோதிடம் “ !

தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணையும் நான்கின் வர்க்கங்களையும் நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- நியுமெராலஜி- (Numerology) பித்து வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர்தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள்.

நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும்

இதோ நூல்களின் பட்டியல்:

(4) நாலடியார் (400)

நான் மணிக் கடிகை (4)

சதுர் (4) அகராதி

கார் நாற்பது (40)

களவழி நாற்பது (40)

இனியவை நாற்பது (40)

இன்னா நாற்பது (40)

புற நானூறு (400)

அக நானூறு (400)

நற்றிணை நானூறு (400)

குறுந்தொகை நானூறு (400)

பழ மொழி நானூறு (400)

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (4000)

நாலாயிரக் கோவை (4000)

இவ்வாறு எண்களின் பெயரில் புத்தகம் ,பாக்கள் இயற்றுவது வேத காலத்திலேயும் உண்டு. தசம், சதம், சஹஸ்ரம் (1000) என்ற டெசிமல் (Decimal) முறைப் பெயர்கள் நிறைய வரும். இந்த தசாம்ச முறையைக் (Decimal System) கண்டுபிடித்தவர்களே இந்தியர்கள்தான். யஜூர் வேதத்தில் சத ருத்ரீயம் (100)  என்று சிவன் பெயரில் முக்கியமான துதி வருகிறது. அதில்தான் சைவர்களுக்கு உயிர் போன்ற நம சிவாய மந்திரம் முதல் தடவையாக வருகிறது. சமகம் என்னும் பகுதியில் எண்களின் பெயர்களில் மட்டுமே வரும் மந்திரங்களும் உண்டு. அதற்குப் பின்னுள்ள காலத்தில் முதல் இலக்கணப் புத்தகம் எழுதிய பாணிணி தனது புத்தகத்துக்கு அஷ்டாத்யாயீ ( 8 அத்தியாயம்) என்று பெயர் வைத்தார்.

தமிழில் மற்ற எண்களிலும் நூல்கள் இருக்கின்றன. ஏர் எழுபது (70), முப்பால் (3), திரி(3)கடுகம், சிறு பஞ்ச(5) மூலம்,பதிற்றுப் பத்து (10X10) ஐங்குறு நூறு (5X100).

எல்லா நூல்களையும் தொகுத்த போதும் அவைகளுக்கும் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு என்று எண் பெயராகவே வைத்ததால்தான் இவர்களுக்கு நியூமெராலஜி பைத்தியம் இருந்திருக்குமோ என்று எண்ண வேண்டியுள்ளது.

சம்ஸ்கிருதத்தைப் பொறுத்த வரை தசாம்ஸப் பெயர்கள் அதிகம் வரும்.

பதிகம் (10), சதகம் (100) சஹஸ்ர நாமம் (1000 , 1008), லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை என்று. மொத்தத்தில் இந்தியர்கள் எல்லோருமே எண்கள் மீது காதல் உள்ளவர்கள் தான்.

பல வட மொழித் துதிகள் பஞ்ச ரத்னம் (5), அஷ்டகம் (8) என்று ஐந்துக்கும் எட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. சங்க காலத்திலும் ஐம்பெருங்குழு (5), எண்பேராயம் (8) என்று சபைகளை அமைத்து தமிழர்களும் இவ்வாறு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

 

(ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் 9,18,108,1008, 10008 பற்றி எழுதியுள்ளேன். தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் சமர்ப்பித்த சங்க இலக்கியத்தில் நிறம், சங்க இலக்கியத்தில் எண்கள் என்ற கட்டுரைகளில் மேலும் பல அதிசயச் செய்திகள் உள்ளன.)

தமிழ் பூதமும் கிரேக்க பூதமும்

Picture: Oedipus kills Sphinx

கிரேக்க நாட்டிலுள்ள டெல்பி ஆரக்கிளுக்கும் (ஒரு பெண் சாமி ஆடி குறி சொல்லுதல்) தமிழ் நாட்டிலுள்ள சாமி ஆடிகள், கோடங்கி அடிப்போர், குறி சொல்லுவோருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது (இதைப் பற்றி தனி கட்டுரையில் தந்திருக்கிறேன்). இது போலவே கிரேக்க ஸ்பிங்ஸ் (SPHINX)  பூதத்துக்கும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பல வகை பூதங்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. ஏற்கனவே அப்பர், சுந்தரர் ஆகியோருக்கு உதவிய பூதங்கள் பற்றி தனி கட்டுரையில் கூறிவிட்டேன். எகிப்திலும் ஸ்பிங்ஸ் சிலகள் உண்டு. ஆனால் கிரீஸ் நாட்டின் தீப்ஸ் நகரில் உள்ளது பற்றித்தான் இந்தக் கதை.

இதோ சிலப்பதிகார பூதக் கதைகள்:

இந்திரன் தலை நகரான அமராவதியை முசுகுந்தன் என்ற சோழ மன்னன் காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதத்தையும் ஐந்து வகை மன்றங்களையும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் எழுதியுள்ளார் (5: 65-67, 6:7-17). (முசுகுந்தன் என்ற மன்னன் பெயரை உரைகாரர்கள் தந்தனர்).

காவல் பூதம் அமராவதியில் அசுரர் விடுத்த இருள் அம்பினைப் போக்கியது. இந்திரன் அனுப்பியதால் பூம்புகாருக்கு வந்து நாளங்காடியில் தங்கி பலிகளை ஏற்றுவருகிறது என்று சிலம்பு கூறும் (7: 14)

ஐவகை மன்றம் பற்றி சிலப்பதிகாரம் மிகவும் விரிவான தகவல்களைத் தருகிறது (5: 111- 140). 1.) சுருக்கமாகச் சொன்னால், களவாட நினைப்போரை நடுங்க வைக்கும் வெளியிட மன்றம் 2.) நோயால் அழுகியவரைக் குணப்படுத்தும் மன்றம். அதாவது ஒரு பொய்கையில் குளித்தவுடன் நோய்கள் ஓடிவிடும். நம் ஊர் புஷ்கணிகள் போல 3.) நஞ்சாலும் பேயாலும் துன்புற்றாரின் துயர் நீக்க ஒளியை வீசும் மன்றம். அதாவது நவீன லேஸர் ஒளிக் கற்றை சிகிச்சை போல.4.) ஒழுக்கம் கெட்டவரை நிலத்தில் புடைத்துச் சாப்பிட்டு விடும் சதுக்க பூதம் ( இது உண்மையில் இருந்தால் ஜனத்தொகைப் பெருக்கப் பிரச்சினை பற்றி நாம் கவலையே பட வேண்டாம். அதுவே மக்கட் தொகையைக் குறைத்துவிடும்!! 5.) அரசன் செங்கோல் தவறி ஆட்சி புரியினும் சபையோர் நேர்மை குன்றினாலும் கண்ணீர் விட்டு அழும் பாவை மன்றம் ( இது இன்று இருந்தால் நித்திய அழுகைதான்!!)

இது தவிர அழற்படுகாதையில் ஆதி பூதம், அரச பூதம், வணிக பூதம், வேளாண் பூதம் ஆகிய நால் வருணப் பூதங்களும் மதுரை தீப்பற்றி எரிவதற்கு முன்னரே வெளியேறி விட்டதாகவும் இளங்கோ பாடுகிறார்.

அடைக்கலக் காதையில் பத்தினிப் பெண் ஒருத்தியைப் பற்றிப் பொய்யுரை உரைத்த ஒருவனை ஒரு பூதம் பாசக் கயிற்றால் பற்றிப் புடைத்து உண்டதாகவும் இருக்கிறது. பொய்க்கரி சொன்னவனுடைய தாயார் தனது மகனை விட்டுவிட்டு தன்னைப் பிடித்துக் கொள்ளலாம் என்று கெஞ்சிக் கேட்டபோதும் அதை பூதம் ஏற்கவில்லை. அந்த மனிதனை அவர்கள் கண் முன்னாலேயே அறைந்து கொன்று உண்டு விட்டது என்கிறார் இளங்கோ.

காடுகாண் காதையில் மதுரைக்கு வழி கேட்ட கோவலனுக்குப் பதில் கூறிய மறையவன், திருமாலிருஞ் சோலை பக்கத்தில் மூன்று பொய்கைகள் உள்ளதாகவும் அங்குள்ள தெய்வங்கள் என்ன என்ன கேள்விகள் கேட்கும் என்றும் என்ன பதில் கூறினால் நல்லது என்றும் சொல்லித் தருகிறான். இவை எல்லாம் கிரேக்க பூதக் கதையில் வரும் சில அம்சங்கள்.

புலவர் பெயர்களிலும் பூதம், பேய் உண்டு. சதுக்க பூதனார், பேய்மகள் இளவெயினி, காரைக்கால் பேயார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்—இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கிரேக்க பூதம்

எகிப்திலும் கிரீஸிலும் ஸ்பிங்ஸ் உண்டு. ஸ்பிங்ஸ் சிலை பாதி சிங்கமாகவும், பாதி பெண் ஆகவும் இருக்கும். இரண்டு நாடுகளிலும் தீப்ஸ் என்ற நகரும் உண்டு. ஆனால் பூதக் கதை கிரேக்க வீரன் ஈடிபஸ் பற்றியது. அவன் பாதி சிங்க உடலும் பாதி பெண் உருவமும் கொண்ட ஸ்பிங்ஸைப் பார்க்கிறான். அது கேள்விகள் கேட்கும். பதில் சொல்லாதவர்களைப் பிடித்துச் சாப்பிட்டு விடும். தீப்ஸ் நகர மக்களுக்கு இது ஓயாத கவலை தந்தது. வழிப்போக்கர்களைக் கேள்வி கேட்டு அச்சுறுத்தி வந்தது. இதைப் படிக்கும் போது மஹாபாரதத்திலுள்ள யக்ஷப் ப்ரஸ்னம் கதையும் ,விக்ரமாதித்தன் வேதாளம் கதைகளும் ஞாபகத்துக்கு வரும்.

ஈடிபஸ் போனபோது அவனிடம் கேட்ட கேள்விகள்: எது சில நேரம் இரண்டு காலகளோடும் சில சமயம் மூன்று கால்களோடும் சில சமயம் நான்கு கால்களோடும் நடக்கும். எது அப்படி 4 கால்களோடு நடக்கையில் பலவீனமாக இருக்கும்?

ஈடிபஸ் கொடுத்த விடை: மனிதன். குழந்தையாக இருக்கும் போது எழுந்து நிற்க முடியால் நாலு “கால்”களில் தவழ்ந்து செல்லுவான். பின்னர் இரண்டுடன் நடந்து கைத்தடியுடன் நடக்கையில் மூன்று கால்களோடு இருப்பான்.

ஒருவரை ஒருவர் பாதிக்கும் சகோதரிகள் யார்? பகலும் இரவும் என்று ஈடிபஸ் பதில் கொடுத்தான். இறுதியில் ஸ்பிங்ஸ் ஒரு மலையிலிருந்து விழுந்து இறந்தது.

ஆக கேள்விகள் கேட்டு அச்சுறுத்துவது, தவறிழைப்போரைச் சாப்பிடுவது ஆகிய அம்சங்களில் சிலப்பதிகார தமிழ் பூதத்துடன் ஒற்றுமையைக் காணலாம்.

***************************