பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? (Post No.4699)

Picture of S Nagarajan in Halabedu, Karnataka, August 2017.

 

Date: 4 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-02 am

 

WRITTEN  by S NAGARAJAN

 

Post No. 4699

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நாட்டு நடப்பும் சொந்த அனுபவமும்!

 

பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? எனது சில அனுபவங்கள்!

 

ச.நாகராஜன்

 

 

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் இருப்பவை எனது சொந்தக் கருத்துக்கள்; சொந்த அனுபவங்கள். இது எவரையும் புண்படுத்துவதற்காகவோ அல்லது மன உளைச்சலுக்கு ஆளாக்கவோ எழுதப்படவில்லை. நல்ல நோக்கத்துடன் எழுதப்படும் இது எவர் மனதையும் நோக வைத்தால் இப்போதே சொல்கிறேன் – Sorry!)

1

பாராட்டிற்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? நமது தமிழ்நாட்டு ஊடகங்கள் போல் அல்லாமல், அரசியல் கட்சிகள் போல் அல்லாமல் உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டினால் பலன் உண்டு.

தீமையையும் கூட, ஒரு பொதுவான நன்மைக்காகக் கண்டித்தால் பலனுண்டு.

தற்பெருமைக்காக அல்ல; ஒரு இன்ஸ்பிரேஷனுக்காகத் தான் இந்த எனது சொந்த அனுபவங்களை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

2

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்.

சாவியும் மணியனும் ஆனந்தவிகடனிலிருந்து விலகி விட்ட காலம் அது.

சாவி தினமணிகதிர் ஆசிரியப் பொறுப்பை வகித்தார். ஆனால் தினமணி கதிர் வெளியீடு பற்றி வரும் பத்தியில் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் என்றே பதிப்பிக்கப்பட்டிருக்கும்.

ஒரு நாள் தினமணி கதிரைப் பிரித்துப் பார்த்த எனக்கு பகீர் என்றிருந்தது.

ஹலோ ராமச்சந்திரா என்ற தலைப்பில் சாவி ஒரு நகைச்சுவைத் தொடரை ஆரம்பித்திருந்தார்.

அதில் ஒரு படம்.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி டெலிபோன் ரிசீவரைக் கையில் பிடித்திருக்கும் காட்சி.

அன்றாடம் ராமரை வழிபடும் பக்தர்களுக்கு எப்படி இருக்கும்?

மனம் நொந்தேன். அன்றே பல நண்பர்களும் இது பற்றிப் பேசினர். விளைவு, அன்று மாலையே பல பேர் கையெழுத்திட்ட கண்டனக் கடிதம் தினமணி கதிருக்கு அனுப்பப்பட்டது.

அடுத்த வாரம் தினமணி கதிர் வந்தது.

என்ன ஆச்சரியம். பல பக்தர்களின்  மனம் நொந்திருப்பதாகக் கடிதம் வந்ததால் இந்தத் தொடர் இத்துடன் நிறுத்தப்படுகிறது -சாவி என்று அறிவிப்பு வந்தது.

ராம பக்தி ஜெயித்தது!

 

S Nagarajan and S Swaminathan with Great Scholar Dr R Nagaswamy in Chennai, 2017.

 

3

ஏறத்தாழ ஒரு மஞ்சள் பத்திரிகையாகவே தினமணி கதிரை சாவி நடத்திக் கொண்டிருந்தார்.

மிக அருமையான எழுத்தாளரான, மிகவும் (அப்போது) இளைஞரான ஸ்ரீ வேணுகோபாலனை புஷ்பா தங்கதுரையாக மாற்றி ரெட் லைட் ஏரியாவுக்கு அனுப்பி கமலாவின் கதைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தார்.

வேணுகோபாலன் மிக அருமையான எழுத்தாளர் என்றும் அவரை இப்படிக் கெடுக்கக் கூடாது என்றும் பிரபல மணிக்கொடி எழுத்தாளரும் எனது தந்தையாரின் நண்பருமான கி.ரா. அடிக்கடி என்னிடம் சொல்லி வேதனைப்படுவார். கி.ரா. சிறிது காலம் மதுரையில் எங்கள் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவர் உலக இலக்கியம் பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும் பேசுவார். அதில் வேணுகோபாலனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார்.

இந்த ரீதியில் நடந்த கதிரில் ஒரு நாள் ஜெயகாந்தன் கதை ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. (பெயர் நினைவில்லை- ‘சக்கரம்’ என்ற தலைப்பாக இருக்கலாம்!)

அதைப் பார்த்த எல்லோரும் திடுக்கிட்டனர். இப்படி ஒரு ஆபாசமான கதை தினமணி கதிரில் வரலாமா?

பலரும் வெகுண்டனர். நானும், எனது நண்பர்களும் ஆளுக்கொரு போஸ்ட்கார்டில் கண்டனத்தைத் தெரிவித்து ஏ.என்.சிவராமன் அவர்களுக்குக் கடிதம் எழுதினோம்.

இப்போது லண்டனில் வசிக்கும் டாக்டர் நாகசுப்பிரமணியன், அவரது சகோதரர் திரு கிரி உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

பங்களூர் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்தும் நண்பர்கள் கண்டனக் கடிதங்களை அனுப்பினர்.

அடுத்த வாரம் ஆச்சரியம்!

தினமணி கதிரில் கடைசிப் பக்கத்திற்கு முன் பக்கம் ஒரு அறிவிப்பு வந்தது. என் நினைவிலிருக்கும் வார்த்தைகளை வைத்துப் பொருள் கெடாமல் அதைக் கீழே தருகிறேன்,.

“இப்படி ஒரு கதை வெளியானதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இனி இப்படிப்பட்ட கதைகள் என் பெயரை ஆசிரியராகப் போட்ட பத்திரிகையில் இடம் பெறாது.” ஏ.என். சிவராமன்.

அன்பர்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.

விஷயம் இத்துடன் முடியவில்லை.

அடுத்த வாரம் கதிர் வந்தது. அதன் கடைசிப் பக்கத்தில் இதுவரை ஆசிரியர் : ஏ.என்.சிவராமன் என்று இருந்ததற்குப் பதிலாக ஆசிரியர்: சாவி என்று போடப்பட்டிருந்தது.

பின்னர் சில காலம் கழித்து, சாவியும் கதிரிலிருந்து வெளியேறி விட்டார்.

 

 

4

கண்டனத்திற்குப் பலன் உண்டு என்பது எனது அனுபவம். ‘ஜெனியுன்’ – Genuine- என்று சொல்கிறோமே அது முக்கியம்! இப்படிப் பல அனுபவங்கள் உண்டு.

இனி பாராட்டிற்குப் பலன் உண்டா, உண்டு.

இர்விங் வாலஸ் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். த்ரீ சைரன், வோர்ட், ஆர் டாகுமெண்ட், பீஜன் ப்ராஜெக்ட், செவந்த் சீக்ரட் – எந்த நாவல் வேண்டுமென்றாலும் சொல்லுங்கள், என்னிடம் இருக்கும். கதையும் கிட்டத்தட்ட ஃபிங்கர் டிப்ஸில் இருக்கும்.

எமர்ஜென்ஸி காலம். இந்திராவின் தாங்கவொண்ணா அடக்கு முறை.

மதுரை கொதித்தெழுந்தது. அதில் ஏராளமான அனுபவங்கள். அதைச் சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல; இடமும் இல்லை.

அப்போது ஆர் டாகுமெண்டில் இர்விங் வாலஸ் சித்தரித்திருந்த சூழ்நிலை இந்தியாவில்.

உடனடியாக ஒரு தற்காலிக சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. மூன்லைட் அசோஷியேஷன் – எம்.எல்.ஏ. (Moon Light Association MLA)

ஆங்காங்கு நண்பர்களின் வீடுகளில் பத்துப் பேர் சேர்ந்தால் போதும். ஒரு கூட்டம் நடைபெறும். அதில் நான் ஆர் டாகுமெண்ட் கதையைச் சொல்வேன். சரியாக ஒரு மணி நேரம்.

மூன் லைட் என்று சங்கப் பெயர் இருந்தாலும் திருப்பரங்குன்ற மலையின் பின்பக்கம் இருட்டிலும் இரவில் இந்தக் கூட்டம் நடைபெற்றதுண்டு. அதில் உருவங்கள் தெரியாது; ஆனால் என் குரல் ஒலிக்கும்.

கூட்டம் கலையும் போது எமர்ஜென்ஸியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரு நல்ல உத்வேகம் எழும்.

இப்படிப்பட்ட நாவலை எழுதிய இர்விங் வாலஸைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது.

பாராட்டுவது என்றால் (தர்மத்தை உடனே செய்ய வேண்டும் என்பது போல) உடனடியாகப் பாராட்டி விடுவது என் வழக்கம் -இடம், பொருள், காலம் எதையும் பாராமல்!

 

நண்பர் ஒருவர் – இர்விங் வாலஸ் பைத்தியம்! அவரும் கூடச் சேர்ந்தார்.

வாலஸுக்குக் கடிதம் பறந்தது.

என்ன ஆச்சரியம், ஒரு நாள் நண்பர் ஓடி வந்தார்.

இர்விங் வாலஸ் பதில் எழுதி இருந்தார் – ஒரு போட்டோவும் இணைக்கப்பட்டிருந்தது. அவரும் அவர் மனைவியும் இருந்த போட்டோவில் அவரது கையெழுத்து வேறு.

எங்கள் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த உலகின் மாபெரும் எழுத்தாளர் எங்களைப் பாராட்டி இருந்தது தான் ஆச்சரியம்.

“உங்கள் எழுத்திலிருந்து நீங்களே நல்ல கருத்துக்களை எழுதும் வல்லமை படைத்தவர்கள் என்பதை என்னால் அறிய முடிகிறது.

ஆகவே நீங்கள் தெரிவித்திருக்கும் பொருள் பற்றி நீங்களே எழுத முடியும். ஏற்கனவே பலவற்றில் ஈடுபட்டு அவற்றை நிறைவேற்ற வேண்டி இருப்பதால் எனக்குப் போதிய நேரம் இப்போது இல்லை”

அவரது இந்தக் கடிதத்தை நாங்கள் காட்டாத ஆளே இல்லை. (ஆர் டாகுமெண்ட் போன்ற நாவல்களை அவர் எழுத வேண்டுகோள் விடுத்திருந்தோம் எங்கள் கடிதத்தில்)

ஒரே பெருமிதம்.

பாராட்டுக்கு ஒரு பாராட்டு! அது தான் இர்விங்வாலஸ்!

 

இன்னொரு சொந்த அனுபவம்.

எனது தொழிற்சாலையில் நான் ஒரு பொறுப்பு வாய்ந்த மேலாளர்.

காம்பொணண்ட் ஸ்டோர்ஸில் ஒரு இன் சார்ஜ். ஆள் எப்போதும் கடுகடு என்று இருப்பார் என்று எல்லோரும் சொல்வார்கள். எதற்கு இப்படி ஒரு கடுமை, சிடுசிடுப்பு என்று எனக்கும் புரியவில்லை.

ஒரு நாள் ஸ்டோர்ஸுக்குச் செல்ல வேண்டிய வேலை இருந்தது. சென்றேன். அகஸ்மாத்தாக கராத்தே பற்றிய பேச்சு அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது.

என்ன விஷயம் என்று கேட்டேன்.

அங்கிருந்த பணியாளர், அவரைச் சுட்டிக் காட்டி ‘சார், இவர் கராத்தே மாஸ்டர் சார்’ என்றார்.

உடனடியாக அவரைப் பார்த்து, “உண்மையா இது” என்றேன்.

சற்று நெளிந்த அவர் தான் அடைந்திருக்கும் மிகப் பெரிய உயரிய நிலையை – பெல்ட் பெற்றதைக்-  காண்பித்தார்.

“இன்னும் அரை மணி நேரத்தில் சாப்பாடு நேரம் வந்து விடும். அப்போது என் மேஜைக்கு வாருங்கள்” என்று சொல்லி விட்டு    (ஒரு மாதிரியான உத்தரவு தான்!) கிளம்பினேன்.

சாப்பாடு நேரத்தில் அவர் சற்று பயந்தவாறு வந்தார்.

(வேலை நேரத்தில் கராத்தே பற்றி பேசியதற்கு கண்டனமோ!?)

“வாருங்கள்” என்று அவரை அழைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரது அனுபவங்களைத் தெரிந்து கொண்டேன்.

பிறகு அவர் கிளம்பும் போது உங்களது போட்டோ ஒன்று நாளை காலை எட்டு மணிக்கு என் மேஜையில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு அவரை அனுப்பினேன்.

அடுத்த மாதம் எங்கள் தொழிலகத்தின் பிரபல இதழில் அவர் பற்றிய பேட்டிக் கட்டுரை ஒன்று அவரது  போட்டோவுடன் வந்திருந்தது.

தொழிற்சாலையில் ஒரு பரபரப்பு. அவரை அனைவரும் நேரில் சென்று பாராட்டினர்.

அவர் சிடுசிடுப்பு அன்றிலிருந்து போயே போயிற்று. பெரும் புகழைத் தாங்க முடியாத அவர் எளிமையான மனிதராக ஆகி விட்டார்.

விஷயம் இத்துடன் நிற்கவில்லை.

எனது ஜாயிண்ட் மேனேஜிங் டைரக்டர் ( அவரைப் பார்ப்பதே சிம்ம சொப்பனம்; என்ன ஒரு கம்பீரம்; ரோட்டரி தலைவருக்கே உள்ள ஒரு கம்பீரம் அது!) தனது அறைக்குள் நுழைந்தவர், பர்ஸனல் மேனேஜருக்குப் போன் செய்து, “ யாரப்பா அது,கராத்தே மாஸ்டர், அவரை என் ரூமுக்கு அனுப்பு” என்று கூற அலுவலகமும் தொழிற்சாலையும் பரபரப்புக்குள்ளாகியது.

பயந்து நடுநடுங்கியவாறே உள்ளே சென்ற சிடுசிடுப்பு நண்பர் மிகவும் பாராட்டப்பட்டு நிஜ கராத்தே வீரராக வெளியில் வந்தார்.

எனக்கு அவர் கூறிய நன்றி வார்த்தைகள் ஒரு புறம் இருக்கட்டும்! அவர் வேலையே பறி போனது.

ஆம், ஜே.எம்.டி, ஸ்டோர்ஸ் இன் சார்ஜ் வேலையிலிருந்து அவரை நீக்கி விட்டார்.

அவருக்கு இன்னும் அதிகப் பொறுப்புடன் கூடிய உயர் பதவியான செக்யூரிடி பிரிவில் வேலை தரப்பட்டது.

எனக்கும் மகிழ்ச்சி; பாராட்டி எழுதிய எழுத்துக்கும் ஒரு மஹிமை இருப்பதைப் புரிந்து கொண்டேன். (பின்னொரு காலத்தில் அவர் துபாயில் இருப்பதாகக் கேட்டு மகிழ்ந்தேன்)

பாராட்டுகளுக்கு மிகப் பிரமாதமான பலன் உண்டு.

ஆயிரமாயிரம் பேர் மனதில் புகழ்ந்தாலும் வெளிப்படையாகச் சொல்பவர் பல்லாயிரத்தில் ஒருவர் தான்!

அதற்கு ஒரு தனிப் பெருமை உண்டு!

(இந்த சமயத்தில் திரு நஞ்சப்பா அவர்களை நினைக்கிறேன். உடனடியாக பாராட்டி கமெண்ட்ஸ் காலத்தில் தன் கருத்தைப் பதிவிடும் இவர் பல்லாயிரத்தில் ஒருவர் தான்! இவர் எந்த ஊரோ! என்ன பொறுப்பில் இருக்கிறாரோ – எனக்குத் தெரியாது. இந்த விநாடி வரை!)

இன்னும் பல சுவையான அனுபவங்கள் உண்டு என்றாலும் கூட கட்டுரை நீண்டு விட்டதால் நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது!

சாரம் இது தான்!

மக்களுக்குத் தீங்கு பயக்கும் விஷயங்களைக் கண்டியுங்கள். லெட்டர்ஸ் டு தி எடிட்டருக்கு ஒரு கடிதம் போடுங்கள். பாராட்ட வேண்டியவர்களை – உங்கள் குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, சமூக சேவை, எழுத்து உள்ளிட்ட பணியில் ஈடுபட்டவராக இருந்தாலும் சரி, பாராட்டுங்கள்.

பயன் உண்டு சார், பயன் உண்டு!

என் அனுபவம் பேசுகிறது!

***

 

காப்பி அடிக்கும் எழுத்துக் கலைவாண(ஞ)ர்கள்! (Post No.4679)

Date: 30 JANUARY 2018

 

Time uploaded in London- 6-45 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4679

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

இலக்கியத் திருட்டு

காப்பி அடிக்கும் எழுத்துக் கலைவாண(ஞ)ர்கள்!

 

ச.நாகராஜன்

 

1

கவிஞர் கண்ணதாசன் எழுதியதைத் தன் பெயரில் போடத் துடித்த கலைஞர்கள் காலத்திலிருந்து இன்று வரை காப்பி அடிக்கும் கலைவாணர்கள் பெருகியே வந்திருக்கிறார்கள்.

இதை ஒரு குற்றமாக அவர்கள் நினைப்பது இல்லை என்பது தான் மெய்; வருத்தப்பட வைக்கும் விஷயமும் இது தான்!

இதில் ஒரு அற்ப ஆசை; தானும் ஒரு படைப்பாளி தான் என்பதை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே அடி மனத்து ஆசை.

புரிகிறது; ஆனால் இது பெரும் தவறல்லாவா! ஒரிஜினல் படைப்பாளிக்கும் படிப்பவர்களுக்கும் இழைக்கும் மாபெரும் துரோகமல்லவா?!

 

 

படித்ததில் பிடித்ததை நண்பர்களுக்கு அனுப்பலாம்; தளங்களில் வெளியிடலாம்- உரியவரின் அனுமதி பெற்று; அது இந்தக் கால கட்டத்தில் மிகவும் கஷ்டம் என்றால், படித்த நல்ல விஷயத்தைப் பகிர வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி இருந்தால், அதை எழுதியவர் யார், அதை வெளியிட்ட பத்திரிகை அல்லது இணையதளம் எது, அதை விரும்பக் காரணம் என்ன என்பதையும் சேர்த்து வெளியிட வேண்டும். உள்ளதை உள்ளபடி வெளியிட்டால் போதும்; என் அபிப்ராயம் எல்லாம் எதற்கு என்றால், அதுவும் சரிதான், படைப்பை அப்படியே அதை எழுதியவர், வெளியிட்ட தளம், பத்திரிகை எது என்பதுடன் வெளியிட வேண்டும்.

இது குறைந்த  பட்ச கர்டஸி.(Courtesy)

 

2

நாளுக்கு நாள் எனது படைப்புகளை உடனுக்குடன் “திருடி” என் பெயரை ‘கட்’ செய்து விட்டு, தங்கள் பெயரில் வெளியிடும் சாமர்த்தியசாலிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.

இப்படி அவர்கள் பெயரில் வெளியாகியுள்ள திருட்டுக் கட்டுரை எனது உடனடி கவனத்திற்கு சில மணி நேரங்களுக்குள்ளாகவே தெரிவிக்கப்பட்டு விடுகிறது.

 

 

சுமார் எட்டாயிரம் பேர்கள் தினசரி எனது கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்பதும், இவர்களுள் பெரும்பாலானோர் மிகவும் நல்லவர்கள், வல்லவர்கள், அதி புத்திசாலிகள், ஸ்மார் பீபிள் என்பதும் ஒரு காரணம் – இது உடனடியாக என் கவனத்திற்குக் கொண்டுவரப்படுவதற்கு

 

3

எனது எழுத்துக்களை திருடிய சில “திருடர்கள்”, திருடிகள் பற்றி எழுத வேண்டாம் என்று தான் இத்தனை நாள் இருந்தேன். ஆனால் சமீபத்திய “காதல் எத்தனை வகை” என்ற எனது கட்டுரை திருடப்பட்டு வெளியிடப்பட்ட விதம் தான் என்னை வருத்தமுறச் செய்தது, கோபமுறச் செய்தது.

 

 

அதில் என் பெயரை வெளியிடவில்லை; பரவாயில்லை!

வெளியிட்ட www.tamilandvedas.com தளத்தின் பெயர் வெளியிடப்படவில்லை, பரவாயில்லை.

ஆனால் போஜ மஹாராஜன் எழுதிய சிருங்காரபிரகாஸம் என்ற அரிய நூலை 1908 பக்கங்களையும் கைப்பிரதியாக எழுதி அதை ஆராய்ந்து உலகிற்கு வெளியிட்டாரே பேரறிஞர் டாக்டர் வி.ராகவன், அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை.

 

 

அந்தப் பகுதியை கட் செய்து விட்டார் “உத்தம வில்லன்”!

ஏன் அப்படிச் செய்தார் என்பது தான் தெரியவில்லை!

தன் பெயரில் வெளியிட்ட இந்தக் கட்டுரையை சில மணி நேரத்திற்குள்ளாகவே ஹெல்த்கேர் இதழ் ஆசிரியரும் என் நண்பருமான ஆர்.சி. ராஜா,” நன்றி கூட இல்லையே” என்று வருத்தப்பட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் – இதை எடுத்துப் போட்டவரின் தளத்தின் லிங்கை அனுப்பி!

என்ன சொல்லித் திட்டுவது? படிப்பவர்கள் தாம் தீர்மானித்துத் திட்ட வேண்டும்.

 

சிலர் தனக்கு வந்த மெயிலிலிருந்து அப்படியே அனுப்பி விடுகிறார்கள் – அவர்களுக்கு ‘லிஃப்ட்” ஆனது தெரியாது!

ஆகவே உடனடியாக யாரையும் திட்ட முடியாது!

 

4

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தை சென்னையில் இருந்தால் காலையில் கேட்பது வழக்கம். காரணம், சுமார் இருநூறுக்கும் (இன்னும் அதிகமாகவே) மேற்பட்ட  அறிவியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளை நான் அளித்திருப்பதாலும் இன்னும் அளித்து வருவதாலும், அந்தச் சிந்தனைகள் ஒலிபரப்பப்படுவதை  கேட்பேன்.

ஒரு நாள். ஒரு ஒலிபரப்பு என்னை திடுக்கிட வைத்தது.

ஒரு டாக்டர். ஜானகி என்று பெயர். எனது நூறு அறிவியல் கட்டுரைகளைத் தொகுத்து ‘வியப்பூட்டும் விஞ்ஞானப் புதுமைகள் நூறு” (நவம்பர் 2005 வெளியீடு) என்று ஒரு நூலாக வெளியிட்டிருந்தேன்.

 

 

அதில் பத்தை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து  மாற்றாமல் அம்மையார் அனுப்ப, அதை நமது வானொலி நிலையமும் ஏற்றுக் கொண்டிருந்தது.

உடனடியாக புரோகிராம் எக்ஸிகியூடிவிடம் (திரு செல்வகுமார் அருமையான நண்பர்; சிறந்த நிர்வாகி; நல்லனவற்றைத் தேர்ந்தெடுப்பதில் வல்லவர்) விஷயத்தைச் சொன்னேன்.

அவர் சிரித்தார். ‘என்ன செய்வது? எல்லா நூல்களையும் என்னால் படிக்க முடியாதே! இப்படி ஒரு டாக்டர் செய்யலாமா’, என்று வருந்தினார்.

பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை நான் ஊகித்தேன்.

 

5

பாக்யாவில் கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து சுமார் 19 வருடங்களாக வாரம் தோறும் எழுதி வருகிறேன். ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தினத்தந்தியில் அப்படியே எனது அறிவியல் கட்டுரை காப்பியாக ஒரு  முறை வந்ததை தற்செயலாகப் பார்த்துத் திடுக்கிட்டேன். என்ன செய்வது?

 

 

6

இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகை தினக்குரல். சில ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சுளா ரமேஷ் அவர்களின் குழுமத்திலிருந்து வெளியாகும் சினேகிதி பத்திரிகையில் மாதம் ஒரு கட்டுரை எழுதுவது எனது வழக்கம். அதில் வெளியான 64 கலைகள் பற்றிய எனது கட்டுரை அப்படியே வெளியாகி இருந்தது. ஆனால் இந்தப் பத்திரிகையில் எனது பெயரும், கட்டுரை எடிட் செய்யப்படாமலும் வந்திருந்தது. இதை எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன் அவர்கள் சுட்டிக் காட்டினார்.

திருட்டு உலகிலும் ஒரு நல்ல குரல்!

 

 

எனது சம்பந்தி சந்தேகாஸ்பதமாக இருக்கும் கட்டுரைகள் என்னுடையது தானா என்று சுலபமாகக் கண்டுபிடிக்க ஒரு வழி வைத்திருக்கிறார்.

 

 

இதை அவர் சொன்ன போது சிரித்து மகிழ்ந்தேன்.

காப்பி அடிக்கப்பட்டுள்ள கட்டுரையின் சில முக்கிய சொற்றொடர்களை அப்படியே கூகுளில் போடுவாராம். எனது ஒரிஜினல் கட்டுரை வெளியான தளம்/ அல்லது பத்திரிகை, வெளியான தேதி உள்ளிட்டவை வந்து விடுமாம். உடனடியாக எனக்குத் தெரியப்படுத்துவார்.

இது போல எனது நண்பர்கள் பலரும் உடனடியாக போனில் கூப்பிட்டுச் சொல்லி விடுகிறார்கள்!

 

7

ரவி என்று ஒரு ஆசாமி. அப்படியே அப்பட்டமான காப்பியாளர். எனது கட்டுரையைத் தன் போட்டோவுடன் போட்டுக் கொண்டார். இதைச் சுட்டிக் காட்டிய போது, “இதில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார். அவருக்கு காப்பிரைட், திருட்டு இலக்கியம் என்றெல்லாம் பாடமா எடுக்க முடியும்? இதற்கு தண்டனை உண்டு என்றவுடன் ஆசாமி வழிந்தார்; வழிக்கு வந்தார்.

 

 

8

ஒரு நல்ல ஆன்மீக மாதப் பத்திரிகை. ‘அமிர்தமாக வர்ஷிக்கும்’ நல்ல கருத்துக்களைக் கொண்டது. இதில் ஒரு கட்டுரை வந்தது. இதைச் சுட்டிக் காட்டியவுடன் ஆசிரியர் வருத்தப்பட்டார். ஏனெனில் இப்படி ஒரு காப்பி கட்டுரையைத் தான் வெளியிட்டு விட்டோமே என்று!

 

 

சென்ற வாரம் எனது சம்பந்தி அனுப்பிய கட்டுரை ஒன்று வந்தது. மஞ்சுளா ரமேஷ் ஞான ஆலயம் குழுமம் நடத்தும் ஜோஸிய இதழான ஸ்ரீ ஜோஸியத்தில் நவம்பர் 2017 இதழில் வெளியான கட்டுரை ஒன்றை அப்படியே ஒரு பெண்மணி தன் பெயரில் இணைய தளத்தில் வெளியிட, அது “உலா” வந்தது! ஆனால் ஒரிஜினல் கட்டுரையில் நான் கொடுத்திருந்த ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகங்களை (என்னென்ன கிழமைகளில் என்னென்ன செய்யலாம்?) வெட்டி விட்டார்.

 

9

கட்டுரை நீண்டு விட்டது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

அனுமதியுடன் பிரசுரியுங்கள், உரிய கட்டுரையாளரின் பெயரைப் போடுங்கள், அது வெளியான பத்திரிகை அல்லது தளத்தின் பெயரைச் சுட்டிக் காட்டுங்கள் என்று தான் சொல்லலாம்; இதற்கு அதிகமாக என்னத்தைச் சொல்ல, காப்பி அடிக்கும் கலை(ஞ)-வாணர்-களுக்கு?!

1961ஆம் ஆண்டு வெளியான திருடாதே திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது :

‘திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க  முடியாது!’

 

10

ஒழிக்க முடியாவிட்டாலும் கூட கண்டிக்கலாம் இல்லையா?

இப்படி இலக்கியத் திருடு செய்யும் குருடர்களை ஒரு வார்த்தை கண்டித்து எழுதிப் போடுங்கள்.

வெட்கமடைபவர்கள், அப்புறம் அதில் ஈடுபடமாட்டார்கள், உரியவரின் பெயரை வெளியிடுவார்கள்!

அத்துடன் எனது நலம் விரும்பிகள் செய்வது போல ஒரிஜினல் படைப்பாளருக்கு இப்படிச் செய்பவர் யார் என்பதைத் தெரிவிக்கலாம்!

***

 

 

பத்து செட்டியார்கள், மூன்று திருடர்கள் கதை (Post No 4664)

WRITTEN by London Swaminathan 

 

Date: 26 JANUARY 2018

 

Time uploaded in London – 11-05 AM

 

Post No. 4664

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவ்ர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்

 

ஒரு ஊரில் பத்து செட்டியார்கள் துணி வியாபாரம் செய்து வந்தனர். அந்த ஊரிலுள்ள நெசவாளர்களிடம் புடவை, தாவணி, வேஷ்டி, துண்டு முதலியவைகளை வாங்கி பக்கத்து ஊர்களில் நடக்கும் சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பார்கள். ஒரு முறை அவர்கள் பக்கத்திலுள்ள பட்டணத்தில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு காட்டுப் பாதை வழியே கிராமத்துக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது மூன்று திருடர்கள் கத்தி கம்புகளுடன் தோன்றி அவர்களை மிரட்டி எல்லாவற்றையும் பறித்துக் கொண்டனர்.

 

செட்டியார்கள் எப்போதும் இடுப்பில் பணம் முடித்து வைத்திருப்பார்கள் ஆகையால் வேட்டி சட்டையையும் அவிழ்க்கச் சொல்லி விட்டனர். அப்போது அவர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதைப் பார்த்து நாட்டியம் ஆடுங்கள் என்று திருடர்கள் உத்தரவிட்டனர். செட்டியார்கள் தங்களுக்கு நடனம் எதுவும் தெரியாது என்று சொன்னவுடன், ஏதேனும் ஆடாவிட்டால் கத்தியால் வெட்டுவேன் என்று மிரட்டியவுடன் ஒரு செட்டியார் மெதுவாக முன் வந்தார். உடனே மற்ற 9 செட்டியார்களும் அவருடன் சேர்ந்து மெதுவாக ஆடினர்.

செட்டியார்கள் வணிக பரிபாஷையில் பேசிக்கொள்ளும் வழக்கத்தை உடையவர்கள்; வாடிக்கையாளருக்குத் தெ ரியக் கூடாது என்பதற்காக விலைகள் தொடர்பான பரிபாஷை (ரகசிய/ சங்கேத மொழி) இது. அப்போது ஒரு செட்டியாருக்கு ஒரு யோஜனை தோன்றியது உடனே அதை ரஹசிய சங்கேத மொழியில் சொன்னார்.

 

 

தோம்தோம் ததிங்கிணதோம்

அண்ணமார்கள் திருபேர்

தம்பிமார்கள் புலிபேர்

ததிங்கிண ததிங்கிண ததிங்கிண தோம்

சவணம் சவணம் பேர்களைத்

திருவர் திருவர் தழுவிக்கிட்டா

தத்தீம் தத்தீம் ததிங்கிண தோம்

 

சவணம் தானே மீதிடா

கைகட்டி சவணம் கையைக்கட்டி

தோம் தோம் ததிங்கிண தோம்

நில்லடா, வாங்கடா, போங்கடா

தத்தீம் தத்தீம் ததிங்கிண தோம்

என்று ஒருவர் பாடினார்.

 

வர்த்தகர்களின் பரிபாஷையில் இருந்த கருத்து இதுதான்:-

செட்டியார் பரிமாறிக்கொண்ட கருத்து: “நாமோ பத்துப் பேர்; அவர்களோ மூன்று பேர்தான். நாம் ஆளுக்கு முன்று பேர் என்று சுற்றி வளைத்து திருடர்களைப் பிடிப்போம்”.

 

வர்த்தகர்கள் ஒன்று, மூன்று,  பத்து என்ற எண்களை முறையே சவணம், திரு, புலி என்று குறிப்பார்கள்.

 

முதலில் இருந்த செட்டி சொன்ன கருத்தை மற்றவர்கள் அறிந்து கொண்டார்கள்; ஆனால் பத்து திருடர்களும் ஏதோ பாட்டு என்று நினைத்து தத்தீம் தத்தீம் ததிங்கிண தோம் என்ற பல்லவியை மட்டும் பாடி மகிழ்ந்தார்கள்.

 

 

திருடர்களோ தனது கடுமையை எல்லாம் விட்டுவிட்டு ஜாலியாக சீட்டுக் கட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். மூவரும்  குடித்துவிட்டு, கும்மாளம் போட்டனர். இதுதான் தருணம் என்று மூன்று மூன்று பேராகச் சேர்ந்து பாடிக்கொண்டே திருடர்களைப் பிடித்து கயிற்றால் கட்டினார்கள்; ஒருவர் ஓடிச் சென்று பட்டணத்தில் உள்ள போலீஸ்காரர்களிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து பத்து திருடர்களையும் பிடித்தனர்.

இதுதான் “யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்” என்ற பழமொழிக்குப் பின்னால் உள்ள கதை!

–சுபம்—

 

அவர் சொன்னாரா? இவர் சொன்னாரா? எவர் சொன்னார்? QUIZ (Post No.4641)

 

Written by London Swaminathan 

 

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London 18-13

 

 

 

Post No. 4641

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

அவர் சொன்னாரா? இவர் சொன்னாரா? எவர் சொன்னார்? QUIZ (Post No.4641)

  1. வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னைச் சரியாசனம் வைத்த தாய்

 

 

  1. அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி

 

  1. பால்புரை பிறை நுதற் பொலிந்த சென்னி

நீலமணிமிடற்று ஒருவன் போல

மன்னுக — பெரும!

 

 

 

  1. பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்

பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய

பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்

 

  1. எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி

வந்து வழி வழியாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்

 

  1. தன்னை அடைந்தார்வினை தீர்ப்பதன்றோ

தலையாயவர் தங்கடன் ஆவதுதான்

 

  1. அருள்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்றா

அருள்கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே

 

  1. வாதக்கால் ஆம்தமக்கு; மைத்துனர்க்கு நீரிழிவு ஆம்;

பேதப் பெருவயிறு ஆம் பிள்ளைதனக்கு!– ஓதக்கேள்!

வந்தவினை தீர்க்க வகை அறியார் வேளூரர்

எந்தவினை தீர்ப்பார் இவர்?

 

  1. ஆரிய பூமியில் நாரியரும் நர

சூரியரும் சொலும் வீரிய வாசகம்

வந்தே மாதரம்- ஜய வந்தே மாதரம்

 

  1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

 

  1. எங்கெங்கும் காணும் சக்தியடா – தம்பி

ஏழுகடல் அவள் வண்ணமடா

 

 

  (தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்மற்றவர்கள் எழுதியதைஅதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்அதிகம் எழுதுவர்ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்தமிழ் வாழும்!)

ANSWERS

 

1.காளமேகம்,  தனிப்பாடல்கள், 2. கம்பன், கம்ப ராமாயணம்     3. சங்க கால அவ்வையார் ,புறநானூறு, 4. இளங்கோ, சிலப்பதிகாரம்,      5.பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம், 6.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 7. திருமூலர் எழுதிய திருமந்திரம், 8.காளமேகம்,  தனிப்பாடல்கள், 9.பாரதி, பாரதியார் பாடல்கள், 10.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 11.பாரதிதாசன் எழுதிய முதல் பாடல், பாரதியார் எழுதச் சொன்னவுடன் எழுதிய கவிதை

 

 

 

எந்த திசை நோக்கி அமர்ந்து உண்டால் என்ன கிடைக்கும்? மநு தரும் அதிசய தகவல்! (Post.4632)

 

Written by London Swaminathan 

 

Date: 18 JANUARY 2018

 

Time uploaded in London  7-54 am

 

 

 

Post No. 4632

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

மநு நீதி நூல்- Part 11

எந்த திசை நோக்கி அமர்ந்து உண்டால் என்ன

கிடைக்கும்? மநு தரும் அதிசய  தகவல்! (Post.4632)

மநு நீதி நூல் இரண்டாம் அத்யாயம் தொடர்ச்சி

 

163.பிராமணர்கள் வில்வம் அல்லது பலாச மரத்தால் ஆகிய தண்டத்தையும் (கையில் வைத்திருக்கும் குச்சி), க்ஷத்ரியர்கள் ஆல், கருங்காலியால் ஆகிய தண்டத்தையும், வைஸ்யர்கள் அத்தி, இரளி ஆகிய தண்டத்தையும் வைத்திருக்க வேண்டும். ஆனால் இரண்டில் ஒரு தண்டம் மட்டுமே இருக்கலாம்.. (2-45)

164.தடியின் அல்லது குச்சியின் உயரம் பிராமணன், க்ஷத்ரியன், வைஸ்யன் ஆகியோருக்கு தலை, நெற்றி, மூக்கு அளவில் இருக்க வேண்டும்.

 

165.இந்த குச்சிகள் வடுக்கள் இல்லாததாகவும், கோணல் இல்லாமலும், அழகானதாகவும், தீயினால் கருகாததாகவும், பார்ப்போருக்குப் பயம் ஏற்படுத்தாததாகவும் இருக்க வேண்டும். மேலும் அந்தந்த மரத் தோலுடன் இருக்க வேண்டும்.

 

166.அவரவர்க்குரிய தண்டத்துடன் புறப்பட்டு, சூரியனை நமஸ்கரித்து, அக்னியை (தீ) வலம் வந்து அவரவர்களுக்குரிய கோஷங்களுடன் பிச்சை கேட்க வேண்டும்.  இனி சொல்லப் போகிற விதிப்படி பிச்சை கேட்க வேண்டியது.

 

  1. பிராமணன் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்றும், க்ஷத்ரியன் பிக்ஷாம் பவதி தேஹி என்றும், வைஸ்யன் தேஹி பிக்ஷாம் பவதி என்றும் சொல்லி பிச்சை கேட்க வேண்டும் (Permutation combinations!)

168.பூணூல் போட்டவுடன் எடுக்கும் முதல் பிச்சையை தாயிடம், அல்லது அவளுடைய சஹோதரிகளிடம், அல்லது தனது சொந்த சஹோதரியிடம் செய்ய வேண்டும். இவர்கள் இல்லாத பட்சத்தில் அந்த மாணவன் மீது அன்புடையோரிடம் எடுக்க வேண்டும்.(2-50)

 

169.இவ்வாறு மூன்று பேரிடம், போதுமான அளவு வாங்கிய பின்னர், அதை குருவுக்கு நிவேதனம் செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து ஆசமனம் செய்துவிட்டுப் புசிக்க வேண்டும்.

 

  1. ஆயுளை விரும்புபவன் கிழக்கு முகமாகவும், கீர்த்தியை (புகழ்) விரும்புபவன் தெற்கு முகமாகவும், சம்பத்தை (செல்வம்) விரும்புபவன் மேற்கு முகமாகவும் சத்தியத்தை விரும்புபவன் வடக்கு முகமாகவும் அமர்ந்து சாப்பிடுக.

 

171.இரு பிறப்பாளன் (மூன்று வருணத்தார்) தினமும் கைகால் கழுவி, உணவைப் பூஜித்துவிட்டு, பரிசேசனம் செய்து அன்னத்தை உண்ண வேண்டும்; பின்னர் ஆசமனம் செய்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்

(பரிசேசனம்+ மந்திரம் சொல்லி நீரால் அன்னத்தைச் சுற்றுதல்.

ஆசமனம்; கையில் உளுந்து மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் எடுத்து மந்திரம் சொல்லி உண்ணல்).

 

 

172.தினமும் உண்ணும் உணவு இறைவனின் வடிவம் (பரப் பிரம்ம ஸ்வருபம்) என்பதால் உணவை நிந்திக்கக்கூடாது. அதைப்போற்றிப் புகழ்ந்து, பார்த்து, சந்தோஷத்துடன் உண்ண வேண்டும்.

 

173.அன்னத்தைப் பூஜித்து உண்டால் தைரியமும் உணவின் சத்தும் (பலன்) கிடைக்கும்;  இல்லாவிடின் இது அழிந்துபோகும்

 

174.தான் உண்ட மிச்சத்தை எவனுக்கும் இடக்கூடாது. இரவும் பகலும் மட்டும் இரண்டே முறைதான் சாப்பிடலாம். அதிகமாகப் புசிக்ககூடாது; அதிகமாக உண்பது இக, பர லோக நன்மைகளைத் தராது.

எனது கருத்துகள்:

 

மநு ஒரு பெரிய உளவியல் நிபுணன் (great Psychologist). மநு ஒரு பெரிய விஞ்ஞானி- அறிவியல் வித்தகன் (great scientist); மநு ஒரு டாக்டர் (physician). எப்படி?

 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? என்றனன் வள்ளுவன்.

 

மூன்று வர்ணத்து பாலகர்களும் முதலில் பிச்சை எடுப்பது அம்மாவிடமோ சின்னம்மாவிடமோ அல்லது பெரியம்மாவிடமோ, அவர்கள் வராவிடில் அல்லது அப்படி உறவுகள் இல்லாவிடில் சொந்த சஹோதரியிடமோ செய்ய வேண்டும். அவர்களும் பூணூல் விழாவுக்கு வரவில்லையென்றால் உன்னிடம் அன்பு பாராட்டுவரிடம் முதல் பிஷையை வாங்கிக்கொள்! என்ன அற்புதமான அறிவுரை!!

 

பச்சிளம் பிராஹ்மணப் பையன், அல்லது க்ஷத்ரியப் பையன் அல்லது வைஸ்யப் பையன் முதல் நாளிலேயே தெருவில் சென்று பிச்சை எடுத்து, அவர்கள் சீ’, போ!’ என்று சொல்லிவிட்டால் அந்த இளம் உள்ளம் எவ்வளவு வருந்தும்? இந்த அற்புதமான உண்மை தெரிந்த அன்பே உருவான மாபெரும் ரிஷி மநு!

 

மஹா அற்புதம்; அவர் ஒரு மாபெரும் ஸைகாலஜிஸ்ட் (Psychologist).

 

எந்த திசையில் அமர்ந்து எந்த திசையை நோக்கி உணவு அருந்தினால் என்ன கிடைக்கும் என்றும் சொல்கிறார். அவர் ஒரு பெரிய டாக்டர். இன்னும் விஞ்ஞானம் கண்டு பிடிக்காத விஷயங்களை அவர் ஞான த்ருஷ்டியில் கண்டு நமக்கு வழங்கியுள்ளார். இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் நியூ ஸைன்டிஸ்ட் அல்லது ஸைன்டிபிக் அமெரிக்கன் (New Scientist or Scientific American) பத்திரிக்கையில் “திசையும் உணவும்” என்று ஆராய்ச்சிக் கட்டுரை வரும்போது நாம் வியப்போம்; அன்றே சொன்னார் எங்கள் மநு என்று!

மநு ஒரு பெரிய பொடானிஸ்ட் (Botanist); அவரது தாவரவியல் அறிவு வியக்கத்தக்கது. மரம் வளர்ப்பது பற்றியும், மரங்களை வெட்டுவது பாவம் என்றும் வரப்போகும் அத்தியாயங்களில் விளம்புவார். இப்போது எந்த ஜாதிக்காரன் எந்த குச்சி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மொழிவது அவர்தம் தாவரவியல் அறிவுக்குச் சான்று

 

 

இங்கே மேலும் ஒரு கருத்தையும் சுட்டிக் காட்டுவேன். மநு தர்ம சாஸ்திரம் 2200 ஆண்டுகளுக்கு முந்தையது எனது மேலை நாட்டாரும், அவர்தம் அடிவருடும் அரை வேக்காடுகளும் சொல்லும்.

 

ஆனா மநுவோ மூன்று ஜாதியினரும் பூணூல் போடுவது, கையில் தண்டம் வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது, ஒவ்வொருவரும் வெவ்வேறு வாக்கியங்களுடன் பிக்ஷை எடுப்பது,  பற்றி எல்லாம் பகர்கின்றார். இந்த வழக்கங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன் கூட இருந்ததில்லை. அப்படி இருந்தால் அது புத்தர், மஹாவீரர் கதைகளில் வரும்; அவர்கள் க்ஷத்ரியர்கள்; சம்ஸ்கிருத நாடகங்களில் வந்திருக்கும்.

முன்னரே சொன்னேன்; மநு ஸரஸ்வதி நதியின் முழு நீளம் பற்றிப் பேசுகிறார். மனைவியை எரிக்கும் உடன்கட்டை வழக்கம் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. மேலும் ரிக் வேதத்தில் பல மநுக்களைப் பற்றிய குறிப்புகள் உள. ஆகையால் ஒரிஜினல் மநு நீதி நூல் மிகவும் பழையது; அதில் பல இடைச் செருகல்கள் நுழைக்கப்பட்டுள்ளன. அதுவே இன்று நம் கைகளில் தவழ்கிறது என்பது என் வாதம்.

மேலும் பிராமணர்கள் இன்று அரச மரக் குச்சியையே கையில் வைத்துப் பூணூல் கல்யாணம் நடத்துகின்றனர். மற்றவர்கள் நடத்துவதும் இல்லை. இந்தக் குச்சி, பிச்சிசை எடுக்கும் முறை, வேதக் கல்வி ஆகியனவும் அவர்களிடையே இல்லை.

 

இவை எல்லாம் எந்தக் காலத்தில் விடுபட்டது? என்பதை ஆராய்ந்தால் மநுவின் பழமை விளங்கிவிடும்!

 

இன்று டெலிவிஷன் பார்த்துக்கொண்டே உண்ணுவதால் ஏற்படும் தீங்குகளை பிரபல ஹிப்னாடிஸ்ட் (Hypnotist) பால் மக்கென்னா சொன்னதை ஏற்கனவே ஒரு கட்டுரையில் தந்துள்ளேன். உணவை வணங்க வேண்டும்; புகழ வேண்டும்; சந்தோஷத்துடன் கண்ணால் பார்த்து உண்ண வேண்டும்– இவை எல்லாம் இன்று எடையைக் குறைக்க நவீன விஞ்ஞானம் சொல்லும் உத்திகள்; இதைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மநு சொல்லிவிட்டார்! மேலும் உணவை நிந்திக்கக் கூடாது என்பதால் தாயையும் மனைவியையும் சமையல் அறையில் ஏசும் வழக்கமும் அறுபட்டுப் போகும். மநு மாபெரும் ஸைகாலஜிஸ்ட் (Psychologist) ; பெரிய விஞ்ஞானி! எதைச் சாப்பிட வேண்டும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று சொல்லும் உணவியல் நிபுணன் (Dietician). மாணவர்கள் அதிகம் புசிக்கக் கூடாது; அளவோடு உண்டால்தான் மூளையில் பாடங்கள் பதியும் என்கிறான்; இது மேல் உலகிலும் உதவும் என்பான்.

இப்போது நாம் ஏற்றுக் கொண்ட நவீன மநு– அம்பேத்கரின்– அரசியல் சட்டத்தையே பார்லிமெண்ட் பலமுறை திருத்திவிட்டது! ஆகவே ஒரிஜினல் மநுவும் பல முறை திருத்தப் பட்டிருக்கும். இந்த மநு நூலின் சில ஸ்லோகங்களை மட்டும் எடுத்துக் காட்டும்- திராவிடங்களையும் மார்கஸீயங்களையும் பார்த்து அழுவதா சிரிப்பதா?

 

இரண்டாயிரத்து அறுநூற்று எண்பைத்தைந்து ஸ்லோகங்களில் சுமார் 200 மட்டுமே கண்டுள்ளோம்; இனியும் வரும்!!! பல வியப்பான விஷயங்கள் வரும்!!!

TAGS—உணவு, திசை, தண்டம், குச்சி, பிராமண, க்ஷத்திரிய, வைசிய, பூணூல்

–தொடரும்………………

சுவத்துக் கீரையை வழித்துப் போடடி……… பழமொழிக் கதை (Post No.4623)

Written by London Swaminathan 

 

Date: 16 JANUARY 2018

 

Time uploaded in London  7-54 am

 

 

 

Post No. 4623

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சுவத்துக் கீரையை வழித்துப் போடடி, சுரணை கெட்ட வெள்ளாட்டி – தமிழ்ப் பழமொழிக் கதை

 

((இதை ஷேர் SHARE செய்யலாம்; ஆனால் எழுதியவர் பெயரையோ, பிளாக் BLOG பெயரையோ நீக்கக் கூடாது; அப்படி நீக்கினால் நீங்கள் தமிழை அழித்த பாவத்துக்கு உள்ளாவீர்கள்))

 

1886 ஆம் ஆண்டு நடேச சாஸ்திரி என்னும் பெரியார் திராவிட பூர்வ காலக் கதைகள் என்ற புத்தகத்தில் 49 கதைகளை அக்காலத் தமிழில், அக்கால வழக்கப்படி ஜாதி, மதப் பெயர்களுடன், தான் கேட்டவாறு வெளியிட்டுள்ளார். அதிலிருந்து ஒரு பழமொழிக்கதையை புதுத் தமிழில் புதுக்கி வரைவேன்.

 

இதை ‘மூன்று செவிடன் கதை’ என்றும் வழங்குவர்.

 

ஒரு ஊரில் ஒரு மஹா செவிடன் இருந்தான். அவன் மனைவி, அவனைவிடச் செவிடு; அணுகுண்டு வெடித்தாலும் காதில் விழாது! இவர்கள் வீட்டில் ஒரு வழக்கம் உண்டு; திங்கள் என்றால் கீரை மசியல், செவ்வாய் என்றால் வாழைக்காய் கறி, புதன் என்றால் கத்தரிக்காய் பொடித்துவல், வியாழன் என்றால் பூசணிக்காய் கூட்டு … என்று. இருவருக்கும் அவ்வளவு ஞாபக சக்தி. நாள் தவறாமல் அதற்குரிய கறி, கூட்டு!

 

ஒரு நாள் நமது செவிட்டுக் கதா நாயகன் சாப்பிட அமர்ந்தான். அன்றும் கீரை மசியல்; அதற்கு முதல் நாளும் கீரை மசியல்! சூரியன் கிழக்கே உதிக்கத் தவறினாலும் சமையல் ‘மெனு’ MENU மாறாத வீட்டில் பூகம்பம்! வந்ததே கோபம்; ஏனடி! இன்றும் கீரை மசியல்? உனக்கு ஸ்மரணை தப்பிவிட்டதா? என்று பல சுடு சொற்களைப் பெய்து

வசை மாரி பொழிந்தனன்; அவளும் கணவன் சொற்களைக் குறிப்பாலும், உதட்டசைவாலும் ஊகித்து விளக்கம் கொடுத்தாள்; அடி அசடே! என்னை எதிர்த்துவேறு பேசக் கற்றுக் கொண்டு விட்டாயா என்று மேலும் சீறினான். வீட்டை வீட்டு வெளியேறினன்; அப்படிச் செல்லும் முன், நமது கதாநாயகன் இலையில் பரிமாறப்பட்ட கீரையை எடுத்து சுவரில் எறிந்தனன்.

முதல் காட்சி முடிந்தது;

இரண்டாவது காட்சி எங்கு தெரியுமா? ஊர் மன்றத்தில்! அவன் கோபக் கனலோடு ஒரு ஆல மரத்தடியில் உட்காந்தனன்; அங்கே இவ்விருவரையும் விட மஹா மஹா செவிடு ஒன்று வந்தது; வாலறுந்த ஒர் கன்றுக் குட்டியுடன் வந்த அந்த இடையன், “ஐயா, என் மாடு தொலைந்துவிட்டது;கன்று மட்டும்தான் இருக்கிறது; இதைப் பார்த்துக்கொள்ளுங்கள். மாட்டைப் போய்த் தேடிக் கண்டு பிடிக்கிறேன்” என்று செப்பினன். அவன் நுவன்றது நமது கதாநாயகனுக்கு வேறு எண்ணத்தை உண்டாக்கியது; காதில் விழாததால் வந்த குறை அது. கன்றுக் குட்டியின் வாலை அறுத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டி, காம்பன்சேஷன் COMPENSATION (நஷ்ட ஈடு) கேட்கிறான் என்று அவன் நினைத்தான். ஆகவே அவன் சொன்னான்:

சீ, சீ; எனக்கும் இந்தக் கன்னுக்குட்டிக்கும் சம்பந்தமே இல்லை; நான் எப்படி வாலை அறுக்க முடியும்? என்று அவன்

 

அவன் கைகளை ஆட்டி வாதாடியதை இடையன் செவிடன் தவறாகப் புரிந்தனன்; ஓஹோ மாடு இந்தப் பக்கம் போனதாகச் சொல்கிறாயா: நான் மட்டும் மாட்டைக் கண்டுபிடித்தால் உனக்கு இந்தக் கன்றுக் குட்டியையே பரிசாக அளிப்பேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டனன். நமது கதா நாயகனோ பயந்து உளறத் துவங்கினன்; ஐயஹோ! ஊர்ப் பஞ்சாயத்துத் தலவரை அழைத்து பஞ்சயத்துச் செய்யப் போகிறாயா? Please! ப்ளீஸ் வேண்டாம் என்று கெஞ்சினான்.

 

இதை எல்லாம் ஒரு மஹா போக்கிரி பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு விஷயம் புரிந்து விட்டது; இரண்டும் செவிடு; ஒன்று சொல்லுவது மற்றொன்றுக்கு விளங்காமல் பயந்து நடுங்குகிறது. நாம் இதில் நல்ல ஆதாயம் அடையலாம் என்று நினைத்து. இரண்டு பேரிடமும் போய் ஒருவனைத் தனியாக அழித்துச் சென்று உரத்த குரலில் டமாரம் அடித்தான்.

 

இதோ பார்! நீ கன்றுக் குட்டியின் வாலை அறுத்ததாகக் குற்றஞ்சாட்டி ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்ட அந்த மாடு மேய்க்கும் இடையன் முயல்கிறான்; நீ ஓடி விடு; நான் அவனை சமாளிப்பேன் என்றான்.

 

அடுத்தபடியாக அந்த இடையனிடம் சென்று, நீ கவலைப் படாதே; முதலில் போய் மாட்டைத் தேடிக் கண்டுபிடி; அவன் கன்று போதாது; கூடுதல் பணமும் வேண்டும் என்கிறான். நீ போய்த் திரும்பி வருவதற்குள் நான் அவனை சமாதானம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி அவனையும் ஒட்டினான்.

 

இருவரையும் வெவ்வேறு திசையில் ஓட்டிய பின்னர் அந்தக் கன்றுக்குட்டியுடன் கம்பி நீட்டினான்.

காட்சி மூன்று:

 

அவன் விட்டிற்குத் திரும்பி வருவதற்குள் அவன் மனைவி சுவற்றில் வழிந்த கீரையை எல்லாம் சுத்தப் படுத்திவிட்டு, மிகுந்த உணவைச் சாப்பிட்டு விட்டு, சட்டி முதலிய பாத்திரங்களை அலம்பிவிட்டு, “என் பிராண நாதா! எங்கே போனீர்? நாளை முதல் நாள்தோறும் MENU ‘மெனு’வை மாற்றாமல் சமைப்பேன்; இது ஸத்யம்” என்று புலம்பிக் கொண்டிருந்தாள். பசியுடன் வீடு திரும்பிய கதா நாயகன் சாப்பிடும் பலகையில் அமர்ந்து சாப்பாடு போடு என்றனன்; இவளதைக் குறிப்பால் உணர்ந்து ஜாடையாகச் சொன்னாள் –எல்லாம் காலி என்று; அலம்பிவைத்த பாத்திரங்களையும் கவிழ்த்துக் காட்டினள்;

 

அவன் சொன்னான்,

அது கிடக்கட்டும் ஒரு புறம்; சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என் சுரணை கெட்ட வெளாட்டி என்று.

 

இடதுதான் இப்பழமொழி உருவான மூன்று செவிடன் கதை!

 

தமிழில் 20, 000 பழமொழிகள் உள. இவற்றின் பின்னால் உள்ள பல கதைகளைப் பல்வேறு பழைய– நூறாண்டுக்கும் முந்தைய—- நூல்களில் இருந்து நுவன்றேன்; மேலும் பல விளம்புவேன்

-சுபம், சுபம்—

 

TAGS:  சுவற்றுக், சுவத்து, கீரை, வெள்ளாட்டி, பழமொழிக் கதை, மூன்று செவிடன்

கண்ணதாசனின் நல்- எண்ணதாசன் நான்! (Post No.4622)

Date: 16 JANUARY 2018

 

Time uploaded in London- 5–59 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4622

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

இணையிலா இந்து மதம்!

கண்ணதாசனின் நல்- எண்ணதாசன் நான்!

 

ச.நாகராஜன்

 

1

சென்ற நூற்றாண்டின் பெருமை தரும் கவிஞர்களுள் ஒருவர் கண்ணதாசன்.

 

அவருடைய நல்லெண்ணதாசன் நான்.

நல் – எண்ணதாசன் நான்!

 

அவர் வாழ்க்கையில் அனைத்தையும் கண்டவர்.

கடவுள் இல்லை என்ற கயவர் கழகத்திலும் இருந்தார்.

கடவுள் அனுபவத்தைத் தானே நேரிலும் உணர்ந்தார்.

இதை நான் சொல்லவில்லை.

 

அவரே சொல்கிறார் இப்படி ‘சுய சரிதம்’ என்னும் கவிதையில்!

இந்தக் குட்டிச் சுய சரிதம் ஏழு கண்ணிகள் கொண்டது.

கண்ணதாசனின் நல்லெண்ணதாசர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று:

 

இதோ கவிதை:

ஆசை வெட்கம் அச்சம் துன்பம்

பாசம் பற்று பதவி உதவிக்

காதல் கடமை கவனம் மறதி

ஈதல் பெறுதல் ஏற்றம் இறக்கம்

எத்தனை எத்தனை படிகளில் ஏறி

இத்தனை வயதை எய்தி விட்டேன் நான்.

 

இது முதல் கண்ணி. இதை அவர் 1978இல் கல்கியில் ‘கண்ணதாசன் பக்கத்’தில் ஒரு வாரம் எழுதினார். அப்போது அவருக்கு வயது 48 தான்!

 

 

மேலே பார்ப்போம்:

கடவுளை ஒருநால் கல்லென் றவனும்

கல்லை ஒரு நாள் கடவுளென் றவனும்

உண்டென் றதனை இல்லையென் றவனும்

இல்லையென் றதனை உண்டென் றவனும்

உயர்பெரும் தரணியில் ஒருவன் ஒருவனே

நானே என்பதை நன்றாய் அறிவேன்.

 

 

எப்படிப்பட்ட ஒரு சுய விமரிசனம் பாருங்கள்.

சத்திய விமரிசனம்! சத்திய சோதனையில் விளைந்ததோ!

 

அவர் பட்ட இன்ப துன்பங்களைப் பற்றிச் சொல்கிறார் மூன்றாவது கண்ணியில், இப்படி:

 

ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்

காற்றில் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்

ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்

மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்.

பார்த்தது கோடி பட்டது கோடி

சேர்த்தது என்ன? சிறந்த அனுபவம்!

 

இந்த அனுபவம் உதிர்த்த மொழிகள் ஆயிரம். அவை நல்லெண்ணத்தில் தோன்றியவை.

அதனால் தான் அந்த நல்லெண்ணதாசன் ஆகி விட்டேன் நான்!

 

கடைசிக் கண்ணியில் அவர் கூறுகிறார்:

காலம் வருமுன் காலனும் வருமுன்

காணும் உறவினர் கதறியே அழுமுன்

ஆலம் விழுதாய் ஆயிரம் விழுதுகள்

எழுதி எழுதி என்னையான் ரசிப்பேன்

யானே யானாய் எனக்குள் அடங்கினேன்

வானும் மண்ணும்என் வாழ்வைஎன் செய்யும்?

 

 

ஆலம் விழுதாய் ஆயிரம் விழுதுகள் எழுதி எழுதிக் குவித்தார் இல்லையா! அவை அற்புதமானவை. அதனால் தான் அவரது நல்லெண்ணதாசன் நான்.

அவரது நல் எண்ணங்களைப் பரப்பும் தாசர்கள் கோடி கோடியாகப் பெருக வேண்டும்!]

2

அவரது அற்புதமான எழுத்துக்களில் அவர் ‘ நான் ஏன் ஒரு ஹிந்து’ என்பதை விளக்குகிறார்.

அது அனைத்து ஹிந்து மக்களும் படிக்க வேண்டிய ஒன்று.

அதை அப்படியே தருகிறேன்.

அதைப் படிக்கும் போது நீங்களும் கண்ணதாசனின் நல்லெண்ணதாசன் ஆகி விடுவீர்கள் – இதுவரை ஆகாமல் இருந்தால்.

கீழே இருப்பது அவரது சொற்கள்!

 

 

3

நான் ஒரு ஹிந்து

கவிஞர் கண்ணதாசன்

நான் ஒரு ஹிந்து.

 

ஹிந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

 

நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன். ஆனால் ஹிந்துவாகவே வாழ விரும்புகிறேன்.

 

 

நான் கடவுளை நம்புகிறேன். அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன். அந்தக் கடவுளைக் கல்லிலும் கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.

 

ஆன்மா இறைவனோடு ஒன்றி விடும் போது அமைதி ஹிருதயத்தை ஆட்சி செய்கிறது.

 

நாணயம் சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.

 

நேரான வாழ்க்கையை ஹிருதயம் அவாவுகிறது.

 

பாவங்களைக் கண்டு அஞ்சுகிறது.

 

குறிப்பாக, ஒரு ஹிந்துவுக்குத் தன் அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.

 

கடைசி நாத்திகனையும் அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது.

 

 

‘என்னைத் திட்டுகிறவன் தான் அடிக்கடி என்னை நினைத்துக் கொள்கிறான். எனவே அவன் தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.

 

ஹிந்து மதத்தைப் போல் சகிப்புத் தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எங்கும் இல்லை.

நீ பிள்ளையாரை உடைக்கலாம். பெருமாள் நாமத்தை அழிக்கலாம்.மதச் சின்னங்களைக் கேலி செய்யலாம். எதை செய்தாலும் ஹிந்து சகித்துக் கொள்ளுகிறான்.

 

 

ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறப்பது போல் எண்ணி கொண்டு பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாத்திரத்தைக் கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்தவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்?

 

கடந்த நாற்பது வருடங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லையே!

 

பாவப்பட்ட ஹிந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி அதை நம்புகிற அப்பாவிகளிடம் ரேட்டு வாங்கிச் சொத்து சேர்க்கும் ‘பெரிய’ மனிதர்களைத் தான் நான் பார்த்திருக்கிறேன்.

 

அவர்கள் பேசும் நாத்திக வாதம் அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல் வாழ்க்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.

 

பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல, ஆரம்ப காலத்தில் இந்த நாத்திக வாதம் மிகவும் கவர்ச்சிகரமாகவே இருந்தது.

 

 

நடிகையின் ‘மேக்-அப்பை’க் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப் போல், அன்று இந்த வார்த்தை கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

 

அந்தக் கவர்ச்சி எனக்குக் குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே.

 

என்னை அடிமை கொண்ட கண்ணனும் ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமை கொண்டு, ஆன்மீக வெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள்.

 

 

அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறி விட்டது!

 

வேண்டுமானால் ‘பணத்தறிவில்’ முன்னேறி விட்டது என்று சொல்லலாம்.

 

உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர வென்றதாக இல்லை.

 

இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டிருக்கிறான்.

 

இந்த நாலரைக் கோடி மக்களில் நீங்கள் சலித்து எடுத்தாலும் நாலாயிரம் நாத்திகர்களைக் கூடக் காண முடியாது.

 

 

பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும் திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

சித்தம் பொய் சொன்னாலும் வேதம் பொய் சொல்வதில்லை. சித்தாந்தம் தவறக்கூடும்; வேதாந்தம் தவறாது.

 

வேதாந்தம் பரசுராமர் காலத்திலும் ஒன்று தான், ஆதி சங்கரர் காலத்திலும் ஒன்று தான், நமது காலத்திலும் ஒன்று தான்.

 

நமது மூதாதையர்கள் மாபெரும் மேதைகள். தெய்வ நம்பிக்கையின் மீதே சகல நியாயங்களையும் நிர்மாணம் செய்தார்கள்.

 

 

மனிதர்களின் எழுத்துக்களும் கருத்துக்களும் தோற்றுப் போன இடத்தில் தெய்வ நியாயமே தீபம் போல் எரிகிறது.

 

வெள்ளைக்காரனை நாம் விரட்டியது பாதி தூரம் தான். மீதி தூரம் அவனை விரட்டியது தெய்வமே.

 

அன்று பாரதப் போரை முன்னின்று நடத்திய கண்ணன், நமது பாரதப் போரையும் மறைந்து நின்று நடத்தினான்.

 

 

தேர்தல் வைப்பதும் வைக்காததும் ஒருவர் கையிலேயே இருந்த போது அவர் தேர்தலை நடத்துவானேன்? தோற்றும் போய் ஒதுங்குவானேன்?

 

மனிதன் வெளியில் நின்று விளையாடுகிறான். தெய்வம் மறைந்து நின்று விளையாடுகிறது! தெய்வத்தை நம்புகிறவன் தோற்றாலும் ஜெயிக்கிறான். நம்பாதவன் ஜெயித்தாலும் தோற்கிறான்.

 

 

இயக்கத்தின் கர்த்தா இறைவன். கருவி மனிதன்.

 

என் வீடு, என் வாசல், என் தோட்டம், எனக்கு வரும் கூட்டம், எனக்கு வரும் ஓட்டு, நான் அமரும் பதவி என்றெல்லாம் சிந்திப்பவனும் பேசுபவனும் மடையர்கள்!

 

நீ ஏறுகிறாய் என்றால் ‘இறைவன் ஏற்றி விட்டுப் பார்க்கிறான்’ என்று பொருள். இறங்குகிறாய் என்றால் ‘சிந்திக்க வைக்கிறான்’ என்று பொருள்.

 

உனது பெருமை கடவுளின் மகிமை. உனது சிறுமை கடவுள் உனக்குத் தரும் அடக்கம்.

 

 

நோக்கம் உன்னுடையது. ஆக்கம் அவனுடையது.

 

பகவான் சொன்னபடி, ‘மனிதன் மரத்திலிருந்து விழும் இலை. அது தண்ணீரில் விழுந்தால் கொஞ்ச நாட்கள் மிதக்கும். மாலையில் கட்டப்பட்டால் சாமியின் கழுத்துக்குப் போகும். அதிலும் சிக்காமல் இருந்தால் காற்றடிக்கும் திசையெல்லாம் அலையும். நெருப்பில் விழுந்தால் சாம்பலாகும்.’

 

‘எதிலே விழுவது’ என்பது இலையின் விருப்பத்தைப் பொறுத்ததல்ல.

 

 

ராதையின் கற்புக்குக் கண்ணனே சாட்சி. சீதையின் கற்புக்கு அக்கினியே சாட்சி. மானிட ஜாதி முழுமைக்கும் இறைவனே சாட்சி. சாட்சி இல்லாதவன் வழக்கு வெற்றி பெற்றதாக வரலாறே இல்லை

4

படித்து முடித்து விட்டீர்களா?

இந்த நல்- எண்ணங்களுக்கு கர்த்தா கண்ணதாசன். கண்ணதாசனின் நல்லெண்ண தாசன் நான்.

நீங்களும் தான் என்பது எனக்குப் புரிகிறது.

அடுத்த கட்டுரை: கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை!

விரைவில் மலரும்.

 

***

 

சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616)

((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616)

Research Paper Written by London Swaminathan 

 

Date: 14 JANUARY 2018

 

Time uploaded in London  11-28 am

 

 

 

Post No. 4616

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சென்னையில் 2107 டிசம்பரில் நடந்த சுதேசி மஹாநாட்டுக்கு அனுப்பிய நீண்ட ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரையின் சுருக்கம் இது.  தமிழில் சிலப்பதிகாரம் எளிதில் கிடைப்பதால் பொருத்தமான விஷயங்கள் வரும் காதைகளின் பெயர்களை மட்டும் அளிக்கிறேன். முடிவுரையில் எனது துணிபு என்ன என்பதை உரைக்கிறேன்

 

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியால் புகழப்பட்ட சிலப்பதிகாரம், தமிழ் மொழியில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இளங்கோ அடிகளால் எழுதப்பட்டது. அவர் சமணர் என்று ஒரு கொள்கை உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இந்துமதமே மிகவும் புகழ்ப்படுகிறது. பலருக்கும் தெரியாத ஒரு அதிசய விஷயம் என்றால், இதில் பிராமணரை இளங்கோ புகழ்ந்து தள்ளுவதாகும். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வரிகளின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட காப்பியத்தின் நாலில் அல்லது ஐந்தில் ஒரு பகுதியாகும்.

 

மேலும் காப்பியத்தின் கதைப் போக்கில் உள்ள இடைவெளிகளை இட்டு நிரப்புவதும் பிராமண கதா பாத்திரம் மூலமே.

காப்பியத்தின் முதல் பகுதியில் கண்ணகி-கோவலன் திருமணத்தை அக்கினி சாட்சியாக பார்ப்பன புரோகிதர்கள் நடத்திய செய்தியில் இருந்து கடைசியில் மாடல மறையோன் என்னும் பார்ப்பனர் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை சொல்லுவது வரை ஏராளமான பிராமணர்களைச் சந்திக்கிறோம்.

 

மாடல மறையோன் என்ற பிராமணரும், பராசரன் என்ற பிராமணரும் முக்கிய பிராமண கதாபாத்திரங்கள் ஆவர். இவர்களில் மிகச் செல்வாக்குடைவர் பிராமண கதாபாத்திரம் மாடல மறையோன். அவர் மூலம் மாதவி, மணிமேகலை, மாதரி, கோவலன்- கண்ணகி யின் பெற்றோர்கள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்றும் இளங்கோ கூறுகிறார்.

 

பிராமண புரோகிதர்களுடன் தீ வலம் வந்து நடந்த கல்யாணத்தை முதல் முதலில் சொன்னவர் இளங்கோ.

 

ஆலமர் செல்வன் என்ற சிறுவன் பராசரன் என்ற முதிய பிராமணருடன் போட்டி போட்டுக் கொண்டு வேதம் சொன்னவுடன் தனது தங்க நகை மூட்டையை அந்தச் சிறுவனிடம் கொடுத்த காட்சியையும் இளங்கோ வருணித்து பிராமணர்களின் தன்னலமற்ற போ க்கையும் காட்டுகிறார்.

 

மாடல மறையோனும் பராசரனும் சதுர்வேதிகள்; நான்கு வேதங்களின் கரை கண்டவர்கள். இதில் மாடல மறையோன்  4 காதைகளில் வந்து பெரும்பணி ஆற்றுகிறார். பாண்டிய  நாட்டில் 1000 பொற்கொல்லர்கள் பலி கொடுக்கப்பட்டது, சோழ நாட்டின் அக்கால அரசியல் நிலை ஆகியவற்றையும் சொல்கிறார்.

பிராமண தூதர், பிராமண நடிகர் ஆகியோரையும் நமக்கு இளங்கோ அடிகள் அறிமுகப்படுத்துகிறார்.

 

மேலும் (ஆராய்ச்சி) “மணி நா ஓசை கேட்காத பாண்டிய நாட்டில் மறை (வேத) ஒலி” கேட்டே பாண்டிய மன்னர் துயில் எழுவான் என்கிறார் இளங்கோ

இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பான ஒரு செய்தியைக் கூறி பிராமணரின் செல்வாக்கைக் காட்டுகிறார் இளங்கோ.

சேரன் செங்குட்டுவன் என்பவன் சக்தி வாய்ந்த சேர மன்னன். இமயம் வரை இரு முறை சென்று வெற்றிக்கொடி நாட்டியவன். கடல் சூழ் இலங்கை கஜபாகுவையும் தென்னாட்டின் சக்தி வாய்ந்த பேரரசர்களான சாதகர்ணிகளையும் நண்பகளாகக் கொண்டவன். அப்பேற்பட்ட சக்திவாய்ந்த செங்குட்டுவனை “நீ மறக்கள வேள்வி (போர்கள்) செய்தது போதும் அறக்கள வேள்வி (யாக யக்ஞங்களை) நடத்துவாயாக” – என்று பகிரங்கமாக புத்திமதி சொல்கிறான் மாடல மறையோன் அதை உடனே செவி மடுத்து வேள்வி செய்ய உத்தரவிடும் காட்சியையும் இளங்கோ நம் முன் படைக்கிறார்.

 

அந்த பிராமணனுக்கு எடைக்கு எடை (துலாபாரம்) தங்கக் கட்டிகளை பரிசளித்த கௌரவச் செய்தியையும் இளங்கோ காட்டுகிறார்.

 

சிலப்பதிகார சம்பவங்கள் நடந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வேதக் கல்வி தழைத்தோங்கியதையும், பிராமணர்கள் காலில் மன்னர்களும் வணிகர்களும் விழுந்து வணங்கியதையும் சொல்லத் தவறவில்லை இளங்கோ. பார்ப்பனர்களை  ஏன் இப்படிப் புகழ்கிறார் இளங்கோ? கட்டுரையின் முடிவுரையில் காண்க.

தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

1.பார்ப்பன புரோகிதர் முன்னிலையில் கண்ணகி-கோவலன் அக்னி சாட்சியாகக் கல்யாணம்– மங்கல வாழ்த்துப் பாடல்

 

2.மாடல மறையோன் அறிமுகம்- அடைக்கலக் காதை

 

3.கோவலன் ஒரு பிராஹ்மணனைக் காப்பாற்றியதை மாடல மறையோன்  உரைத்தல்

 

4.கோவலன் ஒரு பிராஹ்மணப் பெண்மணிக்கு உதவிய சம்பவம்

 

5.பூதம் விழுங்கிய மனிதன் கதை– மறையோன் வாய் வழியாக

 

6.பராசரன் தட்சிணாமூர்த்தி சம்பவம்- கட்டுரைக் காதை

7.வேதம் நிறைந்த தமிழ் நாடு

 

8.கார்த்திகை- வார்த்திகன் (ப்ராஹ்மண தம்பதி) அற்புத நிகழ்ச்சி; பிராமணர் காலில் விழுந்து மன்னன் மன்னிப்பு கேட்டல்

 

9.பிராஹ்மணர்கள் வண்டமிழ் மறையோர்– கட்டுரைக் காதை

 

10.மீண்டும் மாடல மறையோன் மூன்று காதைகளில் தோன்றல்–

நீர்ப்படைக் காதை

நடுகற் காதை

வரந்தரு காதை

 

Kannaki Temple

11.நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி மாடலன் உரைத்தல்- நீர்ப்படைக் காதை

 

12.மாதரி தற்கொலைச் செய்தி

 

  1. கவுந்தி அடிகள் பட்டினி கிடந்து மரணம்

 

14.கோவலன் அம்மா மன நோய் கண்டு மரணம்

 

  1. மாதவி- மணிமேகலை நிலைமை

16.பிராஹ்மணர்களுக்கு சாப்பாடு போடமுடியவில்லையே- கண்ணகி வருத்தம்– கொலைக்கள காதை

 

  1. ஆயிரம் பொற்கொல்லர்கள் பலி

 

  1. பிராஹ்மணனுக்கு 50 கிலோ தங்கம்!

 

19.செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்டளை- நடுகற் காதை

 

  1. மாடலன் செல்லுதல்– பிராமண அற்புதம்- சாமி ஆடுதல்; பிராஹ்மணன் புத்திமதி

 

21.பிராஹ்மண தூதர் (புறன்சேரி இறுத்த காதை)

22.பிராஹ்மண நடிகர் – சாக்கையர் கூத்து

 

 

Kannaki Anklet

23.கீரந்தை என்ற பார்ப்பானைக் காக்க பாண்டியன் கையை வெட்டிக்கொண்டு பொற்கை பாண்டியன் ஆன கதை

 

24.பாலைக் கௌதமனார் என்ற சங்க காலப் புலவர், சேர மன்னன் செய்த யாகத்தின் பின்னர் பார்ப்பனியுடன் உயிருடன் சுவர்க்கம் புகும் கதை– நடுகற் காதை

 

25.மதுரை நகரம் முழுதும் பார்ப்பனர்களின் வேள்விப்புகை– நாடு காண் காதை

 

ஐயர், அந்தணன், பார்ப்பனன், மறையோன்

முழுக்க, முழுக்க, முழுக்க பிராஹ்மணர் புகழ்!!!

 

சிலப்பதிகாரத்தில் முக்கியச் செய்திகள் எல்லாம் ஐயர் வாயிலாக வருகிறது.

ஐயர் காலில் மன்னன் விழுகிறான்.

 

பேரரசன் செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்ட ளை இடுகிறான்; அவனும் உடனே அதைக் கேட்கிறான்.

 

ஏன்? ஏன்? ஏன்?

 

முடிவுரை:

இளங்கோவின் பெயரில் யாரோ ஒரு பார்ப்பான் இந்த நூலை எழுதிவிட்டானோ? அல்லது இவை எல்லாம் இடைச் செருகலோ? அல்லது மிகைப் படுத்தப்பட்ட கூற்றோ? அல்லது ஆரியர்களின் சதியோ? மந்திரம் போட்டு மன்னர்களை பார்ப்பனர்கள், ஏமாற்றி விட்டனரோ?

 

இல்லவே இல்லை.

 

இரண்டாம் நூற்றாண்டில் தமிழகம் எப்படி இருந்ததோ அப்படியே இளங்கோ நமக்குப் படம் பிடித்து காட்டி விட்டார். பராசரன் போன்ற பண ஆசையற்ற வேத விற்பன்னன், தன்னலமற்ற தூய ஒழுக்கம் உடைய மாடல மறையோன் ஆகியோர் வாழ்ந்த நேரம் அது. மணி ஓசைக்குப் பதிலாக மறை ஓசை — வேத ஒலியும் – வேள்விப்புகையும்– எழுந்த காலம் அது. ஆகவே இளங்கோ சொன்ன யாவையும் உண்மையே; மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.

 

பிராமணர் புகழ் பாடும் சிலப்பதிகாரத்தை ப்ராஹ்மண காவியம் என்றால் மிகை ஆகாது.

 

வாழ்க இளங்கோ! வளர்க தமிழ்!!

Kannaki Cooking, World Tamil Conference Souvenir

References:

The Cilappatikaram,Prof. V R Ramachandra Dikshitar,The South India Saiavasiddhanta Works Publishing Society, Tinnelvelly Limited, Madras,600 001, 1978

Akananuru, Varthamanan Pathippakam, A Manikkanar,Chennai- 600 017,1999

Srimad Bhagavad Gita, Anna, Sri Ramakrishna Mutt, Chennai-600 004,1965

 

 

–Subahm–

IS SILAPPADIKARAM A BRAHMANA KAVYA? (Post No.4612)- Part 2

KANNAKI COOKING, WORLD TAMIL CONFERENCE SOUVENIR PICTURE

 

Research Paper Written by London Swaminathan 

 

Date: 13 JANUARY 2018

 

Time uploaded in London  6-16 AM

 

 

 

Post No. 4612

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND  BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

PART 2 (PART 1 WAS PUBLISHED YESTERDAY)

6.Parasaran- Dakshinamurthy Anecdote in the Katturai Katai is equally interesting:

 

“An able Brahmana, Parasara, who belonged to the good and fertile Kingdom of the Lord of the highly reputed Pukar wielding a righteous sceptre and a triumphant sword – one of whose kings weighed (his flesh) to save a dove (Story of Sibi) and another awarded justice to a cow (story of Manu Niti Cholan) who had heard the peerless munificence of the Cera of the curved lance, by offering the heavens to a Tamil Brahmana poet, said to himself, “I shall see the Cera of great valour and long lance”. He then passed through jungles and country places and towns leaving behind him the tall Malaya Hills. There by the force of his dialectical skill which he had acquired in the traditional manner, from the twice born Brahmana—who with the thought of achieving oneness with the Infinite, kindled the three fires as ordained in the four Vedas and performed the five great sacrifices (Pancha Maha Yajna) and the six great duties- he defeated his rivals and earned the title of Parpana Vakai.

(A typical Brahmin’s profile!)

As he was returning home with great and valuable gifts, he reached the village of Tankal (Tirutankal near Sivakasi) of the righteous Pandyan and of Dharmic Brahmanas. In this village, on a platform beneath the Bodi tree, luxuriant with green leaves, the tired man stayed awhile with his staff, water bowl, white umbrella, fire stick, a small bundle of articles and slippers (the impedimenta of an orthodox Brahmana; white umbrellas can be used only by the Kings and Brahmins who did Soma yaga) and said,

“Long live the victor whose protecting white umbrella assures his certain success. Long live the protector who uprooted the Katampu from the sea (Marine attack on sea pirates)! Long live the king who engraved his bow on the Himalayas! Long live the Poraiyan, possessor of the cool and beautiful Porunai! Long live King Mantaran Ceral! (contemporary king of Ceran Senkuttuvan)

 

Surrounded by a group of playful youths, some with curly hair and some with tufts and some with lisping mouths and coral lips, toddling some distance from their homes, he addressed them,

“Young Brahmana boys, if you can recite the Veda after me you may go away taking this little bundle of jewels.” Then the son of famous Brahmana Vartikan, by name Aalamar Selvan (Dakshinamurthy) whose rose lisps still retained the fragrance of his mother’s milk, in the presence of his playmates, with prattling tongue and great inward pleasure, recited the Veda, faultlessly observing the correct rhythm. The elderly man was exceedingly pleased with young Dakshinan and presented him with a sacred thread of pearls and bright jewels, as well as with bangles and earrings before departed for his native place”.

7.VEDIC  TAMIL NADU

Here Ilango was so poetic that we are captivated by every word he said here. This gave the beautiful description of Vedic education in the second century Tamil Nadu. Every word of Ilango praised the Brahmins and Brahmin boys. A little boy could recite Vedas with a learned Pundit. He described the appearance of Vedic Brahmins in minute details

 

The translator adds a beautiful note here:

The Brahman’s love for the Veda and his magnanimity in giving away the valuable jewels to a child reciting Vedas according to established practice show how unselfish were the learned Brahmins of those golden days.

 

Through Matalan  and Parasaran and a little boy we know that Vedas were recited in nook and corner of Tamil Nadu.

 

8.A MIRACLE HAPPENED!

“When Vartikan’s child departed with the little bundle of jewels, Vartikan was accused of misappropriating treasure trove which belongs to the king. So Vartikan was imprisoned. His wife Kartikai grew frantic. She wept in grief. She threw herself on to the ground rolling and fulminating. Seeing this the Goddess Durga of untarnished glory refused to open the door of her temple for the conduct of daily worship. When the king of the mighty spear heard that the massive door remained shut and would not open, he was confounded, and inquired, “Has any injustice been done? Come and tell me if you have heard of any failure in the discharge of our duties to the Goddess of Victory”.

 

“Then his young messengers made obeisance to the protecting king and informed him the case of Vartikan. “This is not fair, burst forth the king in anger and addressed Vartikan, It is your duty to forgive me. My righteous rule still has life, though owing to the ignorance of my men, it has deviated from the ordained path”.

 

“The king granted him Tankal with its paddy fields watered by tanks and Vayalur of immeasurable yield and prostrated himself on the ground before Vartikan, the husband of Kartikai. Then the door of the Goddess who rode upon the stag, opened so loudly as to be heard throughout the long and broad streets of mountain like mansions of the ancient city.

Then he issued a proclamation to release all the prisoners and allowed everyone to enjoy the treasures they find!”

 

Such is the power of Brahmins. Even mighty kings fell at their feet!

 

9.In this chapter (Katturai Katai) , Brahmins are praised as Vandamil Maraiyor i.e people who speak chaste Tamil. This answered the question whether Brahmins are sons of the soil!

 

10.Matalan Again!

Matala Maraiyon, the influential Brahmin, appears again in the last three sections:

Nirppataik Katai

Natukar Katai

Varantaru katai

 

Matalan giving Important News!

Ilango uses Matalan to fill the gaps in the epic. Mighty Cera King Senkuttuvan brought the stone from the holy Himalayas and bathed it in the Holy Ganges and carved the stone into the Goddess Pattini.

Following is in the Nirppataik Katai

“While Senkuttuvan was sitting on his throne ( in North India), the Brahmana Matalan appeared before him and said, Long live our king! The seashore song of the lady Matavi made the crowns of Kanaka and Vijaya bear a weight (the implied meaning is that Kovalan left Matavi’s house and other events followed resulting in Kannaki becoming a goddess; Kanaka and Vijaya who challenged Senkuttuvan made to carry the stone on their heads).

 

The Brahmana Matalan then continued: “The maid Matavi, whilst sporting on the cool beach, had a lover’s quarrel with Kovalan. Then governed by fate she sang the seashore song appropriate to her dance. This not resulted in their reunion but in their separation, and necessitated his entry with his virtuous wife into the ancient towered city of Madura, whose reigning king with his wreath of leaves attained blissful heaven as a result of the murder of Kovalan, whose wife, O Lord of the Kutavar, entered your country. And now she is being borne upon the crowned heads of the northern kings”.

 

11.Matari commits suicide!

“Be good enough to listen also to the reason for my coming here, O king of kings holding the illustrious spear! After going round the Potiyil Hills sacred to the great sage (Agastya) and bathing in the famous ghat of Kumari, I was returning, when as if impelled by fate, I went into Madura belonging to far famed Tennavan of the sharp sword. There when Matari heard that the beautiful Kannaki had defeated the Pandyan king of the mighty army with her anklet, she proclaimed in the Taateru manrdram (common meeting point of the Yadava community), ‘O People of the cowherd community! Kovalan has done no wrong; it is the king who has erred; I have lost her to whom I gave refuge. Have the king’s umbrella and the sceptre fallen from the righteous path? With these words she threw herself into the burning flames in the dead of night!

12.Kavunti died of Starvation!

Kavunti, distinguished for her holy penance, waxed wroth; but when she heard of the death of the great king renowned for his righteous sceptre, her ire was appeased and she burst out: Was this the fate of those who joined my company? She took a vow to die of starvation and thus gave up her life.

 

13.Kovalan’s mother died of Depression!

I heard in full detail all this and also of the devastation that overtook the great city of Madura ruled by the Pandyan of the golden car. Overcome by great I went back to my native place, the ancient capital of the Colas, and informed the chief men there of this. Kovalan’s father heard what happened to his son and daughter in law and also to the righteous monarch of Madura and became deeply afflicted. He distributed all his wealth in charity, and entered Seven Indra Viharas (The Buddhist Temple) and began to practise self -denial like the three hundred monks who roam the sky, having renounced the world to obtain release from the cycle of births. The wife of him who thus renounced, unable to endure the sorrowful news of the death of her son under such tragic circumstances, died of pity.

 

Kannaki’s father also gave away his wealth in religious gifts and adopted Dharma in the presence of Ajivakas like sages engaged in penance of a high order. The noble wife of him who made these gifts gave up her good life within a few days.

 

TO BE CONTINUED……………………………………….

 

காரிய வெற்றிக்கு சகுனங்கள்! (Post No.4611)

Date: 13 JANUARY 2018

 

Time uploaded in London- 5-51 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4611

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஞான ஆலயம் குழுமத்திலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஜோதிட இதழான ஸ்ரீ  ஜோஸியம் பத்திரிகை ஜனவரி 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

காரிய வெற்றிக்கு சகுனங்கள்!

 

ச.நாகராஜன்

 

நமது முன்னோர்கள் இயற்கைப் படைப்பைக் கூர்ந்து கவனித்து ஒரு காரியம் கை கூடுமா, தொடங்கும் பணியில் வெற்றி உண்டா இல்லையா என்பதை முன்கூட்டியே நிர்ணயிக்க சகுன பலனைச் சொல்லி உள்ளனர்.

 

இராமாயணத்தில் சீதைக்கு ஏற்படும் நல்ல சகுனங்கள், மஹா பாரதத்தில் துரியோதனனுக்கு ஏற்படும் தீய சகுனங்கள் ஆகியவற்றைப் படிக்கும் போது வியப்பு ஏற்படும்.

அப்படி சகுன பலன்களை விவரமாக விவரித்துள்ளனர் முன்னோர்.

 

 

கிராமங்களில் சர்வ சாதாரணமாகச் சொல்லி, கடைப்பிடிக்கப்படும் இந்த சகுனக் குறிகள் இன்றைய நகர வாழ்க்கையில் சில சமயம் பொருத்தமில்லாமல் போகிறது; அல்லது அதைத் தெரிந்து கொள்ளாமல் நகரங்களில் வாழ்வோர் காரியங்களைத் தொடங்குகின்றனர்.

 

 

சம்ஸ்கிருதத்தில் சகுனம் பற்றிப் பல நூல்கள் உண்டு. நூற்றுக்கணக்கான ஸ்லோகங்கள் உள்ளன.

தமிழிலும் பல நூல்கள் உண்டு. எடுத்துக் காட்டாக ஒரு நூலை மட்டும் இங்கு பார்க்கலாம்.

 

 

அம்பலவாணப் புலவர் எழுதிய அறப்பளீசுர சதகம் நூறு பாடல்களைக் கொண்ட அருமையான நூல்.

அதில் சகுனங்களைப் பற்றி மூன்று செய்யுள்கள் உள்ளன. (செய்யுள்கள் 62,63,64)

 

 

அவை வருமாறு:-

சொல்லரிய கருடன் வானரம் அரவம் மூஞ்சூறு குகரம் கீரி கலைமான்

துய்யபாரத்வாசம் அட்டை எலி புன் கூகை சொற்பெருக மருவும் ஆந்தை

வெல்லரிய கரடி காட்டான்பூனை புலி மேல் விளங்கும் இரு நா உடும்பு

 

மிகவுரை செய் இவையெலாம் வலம் இருந்திடமாகில் வெற்றியுண்டதிக நலம் ஆம்;

ஒல்லையின் வழிப்பயணம் ஆகுமவர் தலை தாக்கல்

ஒருதுடையிருத்தல்,பற்றல்,

ஒரு தும்மல், ஆணையிடல், இருமல், போகேலென்ன

உபசுருதி சொல் இவையெலாம்

 

அல்லல் தரும் நல்ல அல என்பர்;முதியோர் பரவும்

அமலனே! அருமை  மதவேள்

அனுதினமும் மனதில் நினை தரு சதுரகிரிவளர்

அறப்பளீசுரதேவனே!

பொருள்: பெரியோர்கள் வாழ்த்துகின்ற தூயவனே! மதவேள் தினமும் மனதில் வழிபடுகின்ற சதுரகிரியில் குடி கொண்டிருக்கும் அறப்பளீசுர தேவனே!

 

சொல்வதற்கு அரிய கருடனும், குரங்கும், பாம்பும், மூஞ்சூறும், பன்றியும், கீரியும், கலைமானும்,தூய கரிக்குருவியும், அட்டையும், எலியும், இழிந்த கோட்டானும், மிகுதியாகப் பேசப்படும் ஆந்தையும், வெல்ல முடியாத கரடியும், காட்டுப் பசுவும், பூனையும், புலியும், மேலாக விளங்கும் இரு நாக்குகளை உடைய உடும்பும் ஆகிய இவை எல்லாம் வலத்தில் இருந்து இடப்பக்கம் போனால் வெற்றி உண்டாகும். மிகுதியான நலமும் உண்டாகும்.

 

வழிப்பயணம் மேற்கொள்வோரின் தலையில் இடித்தல், ஒரு காலில் நிற்றல், வலது கையைப் பிடித்தல், ஒற்றைத் தும்மல், ஆணையிடுதல், இருமுதல், போக வேண்டாம் என்று காதில் விழும்படியாகக் கூறுதல் இவை யாவும் துன்பம் தரும். நல்லன அல்ல என்பர்.

 

நரிமயில் பசுங்கிள்ளை கோழி கொக்கொடு காக்கை

நாவிசிச்சிலியோந்தி தான்

கரையான் கடுத்தவாய்ச் செம்போத்துடன் மேதி

நாடரிய சுரபி மறையோர்

 

வரியுழுவை முயலிவையனைத்தும் வலம் ஆயிடின்

வழிப்பயணம் ஆகை நன்றாம்;

மற்றும் இவை அன்றியே குதிரை அனுமானித்தல்

வாய்ச்சொல் வா வா வென்றிடல்,

தருவளை தொனித்திடுதல், கொம்புகிடு முடியரசி

தப்பட்டை ஒலி வல்வேட்டு

 

தனி மணி முழக்கெழுதல் இவையெலாம் ஊர்வழி

தனக்கேக நன்மை என்பர்!

அருணகிரனோதயத் தருணபானுவையனைய

அண்ணலே! அருமை மதவேள்

அனுதினமும் மனதில் நினை தருசதுரகிரி வளர்

அறப்பளீசுரதேவனே!

 

பொருள் :  சிவந்த கதிர்களை உடைய ஞாயிறு போன்ற அண்ணலே! சதுரகிரியில் எழுந்தருளியுள்ள அறப்பளீசுர தேவனே!

நரியும், மயிலும், பச்சைக் கிளியும், கோழியும், கொக்கும், காக்கையும், கஸ்தூரி மிருகமும்., சிச்சிலிப் பறவையும், ஓணானும், வல்லூறும், விரைந்து கத்தும் செம்போத்தும், எருமையும் சிந்தித்தற்கு அரிதான பசுவும், அந்தணரும், வரிப்புலியும், முயலும் ஆகிய இவை யாவும் வலமாக வந்தால் வழிப் பயணம் நன்மை தரும். மேலும், குதிரை கனைத்தலும், வா வா என்று வாய்ச்சொல்லாக காதில் படும்படி கூறுதலும்,சங்கு ஒலித்தலும், கொம்பும்,கிடுமுடியும், முரசும், தப்பட்டையும் ஆகிய இவற்றின் ஒலியும், ஒப்பற்ற மங்கல வாத்தியம் முழங்குதலும் ஊரிலிருந்து பயணம் மேற்கொள்ள நல்லது என்று அறிஞர் கூறுவர்.

 

தலைவிரித்தெதிர் வருதல், ஒற்றைப் பிராமணன்,

தவசி, சந்நாசி, தட்டான்,

தன்மிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறகுதலை,

தட்டைமுடி, மொட்டைத்தலை,

கலன் கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,

கதித்த தைலம், இவைகள்

காணவெதிர் வரவொணா: நீர்க்குடம், எருக்கூடை,

கனி, புலால் உபய மறையோர்

நலம் மிகு சுமங்கலை, கிழங்கு, சூதக மங்கை

நாளும் வண்ணான் அழுக்கு

நசை பெருகு பாற்கலசம், மணி, வளையல், மலர் இவைகள்

நாடி யெதிர் வர நன்மையாம்;

அலை கொண்ட கங்கைபுனை வேணியாய்! பரசணியும்

அண்ணலே! அருமை மதவேள்

அனுதினமும் மனதில் நினை தரு சதுரகிரி வளர்

அறப்பளீசுர தேவனே!

 

 

பொருள்: அலை கொண்ட கங்கையை அணி ந்த சடையானே!

மழு ஏந்திய அண்ணலே! சதுரகிரியில் எழுந்தருளியிருக்கும் அறப்பளீசுர தேவனே!

 

தலைவிரி கோலமாக ஒருவர் எதிரில் வருதலும், ஒற்றைப் பிராமணனும், தவம் புரிவோனும், துறவியும், தட்டானும், தனம் இல்லாத மார்பினளும்,மூக்கில்லாதவனும், புல் தலையனும், விறகு தலையனும், சப்பைத் தலையும், மொட்டைத் தலையும், அணிகலன் இல்லாத பெண்களும்,குசவன் பாண்டமும், வாணியன் மிகுந்த எண்ணெயும் ஆகிய இவைகள் கண் காண எதிரில் வருதல் தகாது.

 

நீர்க்குடமும், எருக்கூடையும்,பழமும், மாமிசமும், இரட்டை பிராம்மணரும்,நலம் மிகு சுமங்கலி, கிழங்கு,  பூப்புப் பெண்ணும், நாளும் எடுக்கும் வண்ணான் அழுக்கும்,  விருப்பம் ஊட்டும் பாற்குடமும், மணியும், வளையலும், மலரும், ஆகிய இவைகள் தேடி எதிரே வந்தால் நலம் ஆகும்.

மேற்கூறிய சகுன பலன்கள் சரியா, இல்லையா?

இதை எப்படி சரி பார்ப்பது. மிகவும் சுலபம். சகுனத்தை தினமும் கவனித்து குறிப்புகளை எடுத்துக் கொண்டால் போதும், ஒரு சில வாரங்களில் நாம் நிபுணராகி விடுவோம்.

 

சோதனை செய்து அறிவதே ஆனந்தம். இதையே இயற்கையை அனுசரித்த முன்னோர் செய்தனர். சகுனத் தடை என்றால் சற்று நேரம் கழித்துக் காரியத்தைத் தொடங்கலாம்,இல்லையா!

முயன்று பார்ப்பதில் நஷ்டம் ஒன்றுமில்லை; லாபம் தான்!

முயல்வோம்; சரி பார்ப்போம்; கடைப் பிடிப்போம்!

***