ஸ்ரீ அரவிந்த தரிசனம் – அமுதன் நினைவு அஞ்சலி – 2 (Post No.3942)

Written by S NAGARAJAN

 

Date: 26 May 2017

 

Time uploaded in London:-  5-58 am

 

 

Post No.3942

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

பாரதி இயல் 

பாரதி அன்பர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய நூல்!

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 31 -2

 

ஸ்ரீ அரவிந்த தரிசனம் – அமுதன் நினைவு அஞ்சலி – 2

 

அமுதனாரின் வார்த்தைகளில் அவரது நினைவு அஞ்சலி தொடர்கிறது .. ..

 

  பாரதியார் வீட்டிலோ அல்லது மடுக்கரை ஏரி முதலிய இடங்களிலோ பந்தி போஜனம் நடக்கும் போது எவ்வித வித்தியாசமும் இல்லாது பறையன், பள்ளி, பார்ப்பனன் என்று சொல்லப்படும் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். இது இன்று சகஜமாகத் தோன்றலாம். அன்றோ எங்களில் பலர் இப்படி நடந்ததை வீட்டில் சொல்லவே மாட்டோம்.

***

 சில சில வேளைகளில் பாரதியார் சக்தி உபாஸனை பற்றி ஸ்ரீ அரவிந்தரிடம் கேட்டதாகச் சொல்லுவார்.

***

‘ஆர்யா’ பத்திரிகை வெளி வரப் போவதைப் பற்றி புதுவையில் அப்போதிருந்து வந்த தமிழ்க்கவி பாரதியார், அவர் நண்பர்கள் முதலியோரிடையே கனத்த  பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஒரு நவயுகம் உதயமாகப் போவதாகவும், அதுவும், முக்கியமாக மனித வர்க்கத்துக்கே அந்த நவயுகம் எனவும், அதற்கு ரிஷி ஸ்ரீ அரவிந்தர் என்றும் வதந்தி அந்நாளில் உலவியது. அவ்வதந்திக்கு மூல புருஷர் பாரதியார் தான்.

*** 

சுப்பிரமணிய பாரதியார் மகாத்மா காந்தியைத் தான் பார்க்கப் போவதாகவும் என்னைத் தன்னுடன் வரும்படியும் அழைத்தார். அந்த சமயம் வ.ரா.,ஸ்ரீ இராஜகோபலாச்சாரியார் இல்லத்தில் வாஸம். 1919ஆம் ஆண்டு . மாதம், தேதி நினைவில்லை….

மகாத்மா காந்தியைப் பார்க்க மக்கள் திரள் திரளாய் வந்து  கொண்டிருந்தார்கள். பாரதியாருடன் நானும் அங்கு வந்து சேர்ந்தேன். வேலியால் சூழப்பட்ட ஒரு பெரிய தோட்டத்தின் நடுவில் அழகான பங்களாவில் பிரவேசித்த் போது வெளியில் ஒருவர் பாதரட்சைக்கு மெருகு கொடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர அணுகி பாரதியார் வ்ந்திருக்கும் கருத்தைத் தெரிவித்தேன்.

அவர் தலை நிமிர்ந்து என்னைக் கண்டதும் உள்ளம் பூரித்து கையிலிருந்த செருப்பு முதலியவற்றைப் போட்டு விட்டு என்னை வாரி அணைத்துக் கொண்டார். அது சமயம் சிறிது தொலைவில் வாசலுக்கருகில் பின்புறத்தில் பாரதியார் நின்று கொண்டு நான் கொண்டு வரும் பதிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.என்னை உபயகுசலங்கள் விசாரித்து விட்டு, ‘என்னை தர்மசங்கடத்தில் கொண்டு சேர்த்து விட்டாய். காந்திஜியைப் பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல. முதலில் ராஜாஜியிடம் தெரிவிக்க வேண்டும்.பிறகு அவர் காந்திஜியைக் கேட்டு நாள் குறிப்பிடுவார். இது நடக்கக் கூடிய காரியமல்ல’ எனச் சொல்லி முடித்தார்.

இந்த பதிலை பாரதியாரிடம் தெரிவிக்க தைரியம் இல்லாததினால், “நீங்களே வந்து பாரதியாரிடம் விஷயத்தைத் தெரிவித்து விடலாமே” என்று சொன்னேன். வாசலுக்கருகில் பின்புறத்தில் நின்று கொண்டிருக்கும் பாரதியரை வணங்கி விட்டு, வ.ரா. சொல்லுகிறார் : ”உள்ளே வந்து அமருங்கள். இராஜகோபாலாச்சாரியார் இது வேளை ஸ்நாநதிகளை முடித்திருப்பார். நீங்களே அவரிடம் வந்து காரியத்தை நேரில் தெரிவிக்கலாம்” என்றார்.

பாரதியார், “நான் தெய்வ ஆக்ஞை பெற்று காந்திஜியைக் காண வந்திருக்கிறேன். அவரை உட்னே பார்க்க வேண்டும்” என்று கூறவே கூடத்தில் அமர்ந்திருந்த பாரதியார் சொன்னதைக் கேட்ட இராஜகோபாலாச்சாரி கேட்டு பிரமித்து ஒரு சிறிது தயங்கி, பிறகு, “இதோ  பதில் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே காந்திஜியைக் காணச் சென்றார்.

பாரதியார் காந்திஜியைப் பார்த்துத் திரும்பியது இரண்டு நிமிடம் கூட இருக்காது. பங்களாவில் அரைக் கணம் கூடத் தங்காது வ.ரா.விடம் விடையும் பெறாது என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே பங்களாவை விட்டு வெளீயே பறந்து விட்டார் பாரதியார், வில்லை விட்டுக் கிளம்பிய அம்பைப் போல.

காந்திஜியுடன் என்ன நடந்தது என்று எனக்குச் சொல்ல யாருமே இல்லை. என்னென்னவோ வதந்தியெல்லாம் கிளம்பியது. அவ்வளவு தான்.

**

அமுதனின் இந்த வரலாற்றுக் குறிப்பில் மகாத்மா காந்திஜியை பாரதியார் சந்தித்த போது என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள  முடியாவிட்டாலும் வ.ரா. அவர்கள் எழுதிய பாரதியார் சரித்திரத்தில் அதைக் காண முடிகிறது.

இந்தத் தொடரில் வ.ரா.வின் நூலைப் பற்றிய கட்டுரை முன்பே வெளி வந்துள்ளது அதில் இதைக் காணலாம்.

அடுத்து அமுதனாரின் குடுமி பற்றிய விஷயம்.

அவர் அரவிந்த ஆசிரமத்தில் தங்கி இருந்த போது ஒரு நாள் இரவு அவரது குடுமி பற்றிப் பேச்சு வந்தது.

மறு நாள் எழுந்து பார்த்த போது அமுதனின் குடுமியைக் காணோம்.

அதைப் பற்றி அவரது வார்த்தைகளில் கூறி இருப்பதைக் காண்போம்  :-

“தற்போடைய நிலைக்கு அநுதாபம் காட்டக் கூடியவர் பாரதியார் ஒருவர் தான் என்று எண்ணி அவரிடம் சென்றேன். விஷயத்தையெல்லாம் கேட்டு விட்டு,”வெளியே வர உனக்குத் தைரியமுண்டா? உண்டானால் இப்போதிருந்தே என்னோடிருந்து விடு” என் கலங்கிக் குழம்பிய நெஞ்சுக்கு அமைதி தராது அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னார். …..

ஸ்ரீ அரவிந்தர் தான் என் சிகையை எடுத்து விட ஆக்ஞாபித்ததாக பிறகு கேள்விப்பட்டேன்.

                       *

நூலின் இறுதி அத்தியாயத்தில் அமுதன் அவர்கள் புதுவை வானொலி நிலையத்தில் 11-12-1966 அன்று பாரதியார் பற்றி ஆற்றிய உரை இடம் பெற்றுள்ளது.

இந்த உரையை முன்பே இந்தத் தொடரில் விவரித்திருக்கிறோம்.

**                                                                                                                                                       

123 பக்கங்கள் கொண்ட இந்த நூலை பாரதி அன்பர்கள் அனைவரும் வாங்கிப் படிக்கலாம்.

அரவிந்த ஆசிரமத்தில் உள்ளவர்கள் இன்றும் கூட அமுதனாரின் வழியில் அற்புதமாகத் தொண்டாற்றி வருவதை என் அனுபவத்தில் நான் கண்டுள்ளேன்.

சில மாதங்களுக்கு முன்னர் பாரதியார் பற்றிய ஒரு குறிப்புக்காக ஆசிரமத்தை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டேன். மறு நாள் ஆச்சரியப்ப்டும் விதத்தில் பங்களூருவில் இருக்கும் எனக்கு புதுவை ஆசிரமத்திலிருந்து போன் வந்தது. அதில் விவரமாக பதிலைச் சொன்ன ஆசிரம அன்பர் அது சம்பந்தமான ஆவணம் எங்கிருக்கிறது என்பதையும் விளக்கினார்.

இது போன்ற தொடர்களை ஆதாரத்துடன் எழுத இப்படிப்பட்ட அன்பர்கள் குழு இல்லையேல் எதுவும் சாத்தியமில்லை.

அந்த அன்பருக்கு இங்கு இந்தக் கட்டுரை மூலம் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                     -தொடரும்

 

 

 

 

சில முக்கிய குறிப்புகள் – விதி விளக்கம் – 6 (Post No.3939)

Written by S NAGARAJAN

 

Date: 25 May 2017

 

Time uploaded in London:-  5-38 am

 

 

Post No.3939

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

ஜோதிடமே துணையாகும்

மிட்டா முனிசாமி செட்டி (1897)யின் விதி விளக்கம் நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டு தரப்படுகிறது. நூலின் பகுதிகள் படிப்பதற்கு ஏதுவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

 

முதல் 5 அத்தியாயங்களைப் படித்து விட்டு இதைத் தொடரவும் 

1934ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டுள்ள் இந்த நூலை எனக்கு அனுப்பி உதவிய எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

 

 

சில முக்கிய குறிப்புகள் – விதி விளக்கம் – 6

ச.நாகராஜன்

 

  1. சில முக்கிய குறிப்புகள்

 

      விதி விளக்கம் என்ற நீண்ட நூலில் சில  முக்கியமான சுவையான பகுதிகளை மட்டும் பார்த்தோம். ஜோதிட சாஸ்திரத்தில் நிபுணத்துவம் இல்லாதவர்கள் கூடப் புரிந்து கொள்ளக் கூடிய அடிப்படையான விஷயங்கள் இவை.

 ஜோதிடத்தில் புலமை பெற்றவர்களுக்காக திரு முனிசாமி செட்டி நிறைய குறிப்புகளை நூல் முழுவதும் தருகிறார்.

 

 

     அவற்றை இந்தத் தொடரில் தருவது நமது நோக்கமல்ல.

ஜோதிடத்தில் மிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்தப் புத்தகத்தை – இலவசமாக- பெற விரும்பினால் திரு சுவாமிநாதன், www.tamilandvedas.com  அவர்களை அணுகவும். மின்னணு முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட நூலான இது மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். (நூலின் பக்கங்கள் 112)

 

 

    பொதுவான சில முக்கிய குறிப்புகளைத் தந்து இந்தத் தொடரை இத்துடன் முடிக்கிறோம்.

  • நம் முன்னோர்கள் சாஸ்திரங்களில் வள்ர்பிறைச் சந்திரன் யோகத்தை வளர்ப்பிக்கிறான் என்றும் தேய்பிறைச் சந்திரன் யோகத்தை வர வர மட்டுப்படுத்துகிறான் என்றும் போதிக்கின்றார்கள். ஆனால் அனுபவரீதியில் பார்க்கும் போது தேய்பிறையில் கூட அரசன் ஜனிக்கிறான், வியாபாரிகளும், பணக்காரர்களும், ம்ஹா பண்டிதர்களும் கூட தேய்பிறையில் பிறந்து நல்ல சுக போக பாக்கியத்தை அனுபவிக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.ம்ஹாத்மா காந்தியும் கூட தேய்பிறையில் பிற்ந்திருப்பதாகத்தான் தெரிகின்றது. ஆகவே கெட்டபலனைக் கொடுக்க தேய்பிறை ஜனனம், சனீஸ்வரர் என்று பொதுவாகக் கூறுவது தவறு. நல்ல பலனைக்கொடுக்க குரு மற்றும் சுக்கிர பகவான் என்பதும் வளர் பிறை ஜனனம் என்று பொதுவாகக் கூறுவதும் தவ்று.

 

  • நம் வாழ்க்கையில் நமக்கு இய்ற்கையாக அமைந்துள்ள கெட்ட பலனிலிருந்து அதை நீக்க சில அனுஷ்டானங்களைச் செய்து நமது இஷ்டம் பூர்த்தி பெறச் செய்யலாம்.
  • சிருஷ்டியின் அற்புதம் இது தான் :- ஸ்தூலமாக இது கெட்டதென்றும், இது தான் ஸ்தூலமாக நல்லதென்றும் கிடையவே கிடையாது. நாம், நம் புத்திக்கும் வீரியத்திற்கும், நம் நிலைமைக்கும், நமக்குள்ள துணைக்கருவி முதலிய உப பலன்களால், ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற மட்டும் முயற்சி செய்து அபீஷ்ட பிராப்தி (நினைத்ததை அடைதல்) அடைய மார்க்கமுண்டு. இதுவே சிருஷ்டியின் உண்மையான தத்துவம். இதுவே விதி விளக்கத்தின் கருத்து.

 

  • யோகத்தை எடுத்துக் கொண்டால், வராஹமிஹிரர் பிருஹத்ஜாதகத்தில் யோகத்தினால் ரோக நிவாரணம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் எந்த யோகத்தில் பிறந்தவனுக்கு எந்த யோக அனுஷ்டானத்தினால் இவ்வித பலன் கிடைக்கும் என்று சொல்லவில்லை.
  • கரணத்தை எடுத்துக் கொள்வோம். கரணத்தினால் காரிய சித்தி உண்டாகுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் விவரமாக இந்த ஜாதகன் இந்த வித கரணத்தில் இந்த விதமாக அனுஷ்டானத்தில் ஈடுபடவேண்டுமென்றும் அப்படிப்பட்ட அனுஷ்டானத்தினால் காரிய சித்தி உண்டாகும் என்றும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. இது ஆய்வுக்குரிய விஷயம்.

 

  • 27 நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் ஜனன காலத்திலிருந்தே மிகக் கொடிய பலனைத் தரும். அப்படிப்பட்ட நட்சத்திரத்தில் யோகவான் பிறந்தாலும் ஆயுளின் பிற்பாகத்தில் கஷ்டப்பட்டே தீர வேண்டும். அவை கீழ்வருமாறு. இது பொதுவான விதி:
  • அசுவதி 2) மகம் 3) மூலம் 4) கேட்டை – இந்த நான்கு நட்சத்திரங்களுடன் சந்திரனுக்கு க்ஷீண கதியும் உண்டானால் பலன் எல்லா விதத்திலும் கெடுதல்.
  • தென்னிந்தியாவில், அநேகமாக, புராதன கல் சிலைகளில், ஸ்தம்பங்களில், செப்பேடு புராதன செப்புத்தகடு சாஸனங்களில், அநேகமாய் திதி, யோகம், நட்சத்திரங்கள் இவைகளைக் குறிப்பாகக் காட்டி இருக்கின்றன. தவிர தேதியும் கிழமையும், அநேகமாக கி.பி. நானூறு ஆண்டுகளுக்கு முன் வழக்கத்தில் கிடையாது என்பது காலஞ்சென்ற D. ந சுவாமிக்கண்ணு பிள்ளை என்னும் வான சாஸ்திர நிபுணரின் கருத்து. முற்காலத்தில் ஆண்டு, திதி, யோகம் இவற்றைக் குறிப்பிட்டே ஒரு விசேஷ வர்த்தமானங்களை எக்காலத்தும் பிரபலமாகும் படி செய்வது வழக்கம். மதுரை தேவஸ்தானத்திலும், ராமேஸ்வர தேவஸ்தானத்திலும் இன்னும் வடக்கே அநேக இடங்களிலும் உள்ள சிலாசாசனங்களளக் கவனித்தால் இது விஷயம் தெளிவாகும். ஆகவே நம் முன்னோர்களுக்கு திதியும், யோகமும் முக்கியமானவையே ஒழிய தேதி, வாரம் அவ்வளவு முக்கியமானவை அல்ல.

 

இந்தச் சிறிய நூல் ஒரு ஜாதகத்தை எப்படி அணுக வேண்டும் என்பதில் சில முக்கியமான வித்தியாசமான கருத்துக்களை முன் வைக்கிறது.

இதை அனுபவத்தில் பரீசிலித்துப் பார்த்து உண்மையைக் கண்டறியுங்கள் என்றும் சொல்கிறது.

ஜோதிட ஆர்வலர்கள் இதைத் தங்கள் அனுபவம் மூலமாகச் சோதித்து உண்மையைத் தெளிந்து அறியலாம்.

 

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் படைக்கப்பட்ட இந்த நூல் கால வெள்ளத்தில அழிந்து படாமல் இருக்கவே இந்தச் சிறிய தொடர் வாசகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நன்றி. வணக்கம்

****                                                                      தொடர் முற்றும்

 

சந்திர எண் 1080-இன் மர்மம்! (Post No.3930)

Written by S NAGARAJAN

 

Date: 22 May 2017

 

Time uploaded in London:-  7-18 am

 

 

Post No.3930

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

எண் ரகசியம்

காபிரைட் உள்ள தொடர் இது. திரு எஸ்.சுவாமிநாதன் அனுமதி பெற்று www.tamilandvedas.com மற்றும் கட்டுரை ஆசிரியரின் பெயரோடு வெளியிடல் வேண்டும். மீறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

 

எண் ரகசியம் – 1

சந்திர எண் 1080-இன் மர்மம்!

 

ச.நாகராஜன்

 

எண்களில் உள்ளது பிரபஞ்ச ரகசியம் என்றால் ஆச்சரியமாக இல்லை?

 

எந்த எண்ணை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் ஒரு மர்மமான ரகசியம் இருக்கிறது.

 

இந்த இரகசியத்தை அறிந்தவர்கள் அதைப் பயன்படுத்தும் போது அவர்கள் வாழ்க்கை சிறக்கிறது.

 

நியூமராலஜி எனப்படும் எண் ஜோதிடத்தையும் தாண்டியது இந்த விஷயம்.

 

உலகின் பழம் பெரும் நாகரிகங்களான ஹிந்து நாகரிகம், பாபிலோனிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், அஸிரிய நாகரிகம் என்று இப்படி எதை எடுத்துக்  கொண்டாலும் அந்த நாகரிகத்தின் மூத்த குடிகள் இந்த எண் ரகசியத்தை அறிந்திருந்தார்கள்!

ஹிந்து வேதங்கள், புராணங்கள், மஹாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட ஹிந்து நூல்களில் எண்கள் பற்றிய ரகசியத்தை விரிவாகக் காணலாம்.

 

எண்களைப் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் அபூர்வ விஷயங்களை இவை தெரிவிக்கின்றன.

பைபிள், யூத மத நூல்கள்,புத்த மதம், ஜைன மதம் ஆகியவற்றில் உள்ள பழைய நூல்கள் எண்களின் மஹிமையை ஆங்காங்கே விளக்குகின்றன.

 

எடுத்துக்காட்டாக எண்கள் பற்றிய தொடரின் இந்த முதல் கட்டுரையில் சந்திர எண்ணைப் பற்றிப் பார்க்கலாம்.

1080 என்பது சந்திரனின் ஆரத்தில் உள்ள 1080 மைல்களைக் குறிக்கிறது. சுவர்க்கத்தின் வரைபடத்தில் சந்திரன் ஒரு முக்கியமான ‘புள்ளி.’

 

இது 108 என்ற எண்ணின் பத்து மடங்கு.

ஹிந்து மதத்திலும் புத்த மதத்திலும் 108 என்ற எண் அபாரமான பெருமை வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

 

எண் 108இன் மஹிமை என்ற இந்த கட்டுரை ஆசிரியரின் கட்டுரையை படித்தால் இதன் மஹிமையை விளங்கிக் கொள்ளலாம்.

 

 

10800 ரிக்குகள் உள்ளது ரிக் வேதம். இந்த ரிக் ஒவ்வொன்றிலும் 40 எழுத்துக்கள் அல்லது Syllables உள்ளன.

ஜொராட்ரிய fire-altar இல் உள்ள செங்கற்களின் எண்ணிக்கை 10800.

1080 என்ற எண்ணுக்கு ஒரு ரகசிய ஆற்றல் உண்டு.

ஆன்மீக ரீதியிலும் அதிமானுட ரீதியிலும் இது ஒரு சக்தி வாய்ந்த எண்.

 

இது யின் என்ற பெண்மை சக்தியைக் குறிக்கிறது.

அதாவது இயற்கையின் இரவு பக்கத்தைக் குறிக்கிறது.

கிறிஸ்துவ மதத்தில் 1080 பரிசுத்த ஆவியின் (Holy Spirit) எண்.

கற்பனா சக்தி, மறைபொருள் ஆற்றல், தீர்க்கதரிசனமாக எதையும் கூறுதல் இந்த எண்ணுக்குரிய விசேஷ அம்சங்கள்.

இது அமிர்தக் கடலான பாற்கடலைக் குறிக்கும் எண்.

ஞானத்தின் ஊற்றுக்கண்ணாக அமைவது இந்த எண்.

பூமாதேவியின் எண்ணும் இது தான்.

 

பிரபஞ்ச லயத்தைக் குறிக்க ஒரு எண் வேண்டுமா, அது இது தான்!                                            -தொடரும்

 

Hindu’s Magic Numbers 18, 108, 1008 | Tamil and Vedas

Hindu’s Magic Numbers 18, 108, 1008

26 Nov 2011 – In Hinduism numbers have a lot of significance. … But 108and 1008 are used for all the Gods in Ashtotharam (108) and Sahasranamam (1008) …

 

 

Mysterious Number 17 in the Vedas! (Post No.3916) | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/17/mysterious-number-17-in-the-veda…

 

 

4 days ago – Number symbolism is in the Vedas from the very beginning. This shows that the Vedic seers are very great intellectuals. They were the …

 

Mystery Number 7 | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/mystery-number-7/

“It may be incidentally pointed out that the number 7 which gives thenumber of time units in Misrajati appears to have fundamental importancein nature. In most …

 

MOST HATED NUMBERS 666 and 13 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/…/most-hated-numbers-666-and-1…

 

29 Jul 2012 – No 7 and No 3 are considered as holy numbers by several cultures, particularly, the Hindus. Vedic literature and Indus Valley Civilization have …

 

 

Numbers in the Rig Veda! Rig Veda Mystery-2 | Tamil and Vedas

Numbers in the Rig Veda! Rig Veda Mystery-2

3 Sep 2014 – Numbers in the Rig VedaRig Veda Mystery-2. Vedas 9. Research Paper written by London Swaminathan Post No. 1265; Dated 3rd …

 

Oldest Riddle in the World! Rig Veda Mystery –3 | Tamil and Vedas

Oldest Riddle in the World! Rig Veda Mystery –3

6 Oct 2014 – Rig Veda is the oldest religious book in the world. Even if we … 30)Numbers in the Rig VedaRig Veda Mystery – 2 –posted on 3rd Sep.2014

 

–subham–

உடல் ஆரோக்கியத்திற்கு மசாஜ்! (Post No.3921)

 

Written by S NAGARAJAN

 

Date: 19 May 2017

 

Time uploaded in London:-  5-51 am

 

 

Post No.3921

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளிவரு ஹெல்த்கேர் மாத பத்திரிகையில் மே 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

உடல் ஆரோக்கியத்திற்கு மசாஜ்!

 

தமிழாக்கம் ச.நாகராஜன்

 

மசாஜ் ஏன் உங்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது?

உடலின் ஒவ்வொரு இயக்க அமைப்பும் மசாஜினால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நல்ல விதத்தில் பாதிப்புக்கு உள்ளாகிறது.  மசாஜினால் உங்கள் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதற்கான வழிகாட்டி இதோ:-

 

எலும்பு மண்டலம் :-

 

மசாஜினால் எலும்புகள் மறைமுகமாக நலமடைகிறது. இரத்த ஓட்டத்தில் ஏற்படும் மேம்பாடானது ஆக்ஸிஜனையும் ஊட்டச்சத்துக்களையும் எலும்புகளுக்குத் தருகிறது. மூட்டுகளின் இறுக்கமும் வலியும் குறையும். தசைகள் மிகவும் நெகிழ்வுத் தனமையை அடைவதால் மூட்டின் இயக்கம் அதிகரிக்கப்படுகிறது.

தசை மண்டலம்:-

 

சில மசாஜ் இயக்கங்கள் தசைகளுக்கு ஓய்வையும் நீட்சியையும் தருகின்றன. இதனால் தசையின் இறுக்கமும் தசைப்பிடிப்பும் குறைகிறது.மசாஜ் த்சை உரத்தைக் (muscle tone) குறைத்து தசைகளின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. தசைகள் ஓய்வு எடுப்பதன் மூலம் சோர்விலிருந்து மீள்வ்தை விட உடல்ப்யிற்சியின் மூலம் வெகு சீக்கிரம் சோர்விலிருந்து மீள்கிறது.

 

நரம்பு மண்டலம் :-

 

இதமாகத் தரப்படும் மசாஜ் நரம்பு எரிச்சலிலிருந்தும் இன்சோம்னியா மற்றும் தலைவலி போன்ற இறுக்கத்தினால் ஏற்படும் நிலைகளிலிருந்தும் நிவாரணத்தை அளிக்கிறது. ஊக்க்த்தை ஏற்படுத்தும் வண்ணம் மசாஜ் செய்யப்பட்டால், அது சோம்பேறித்தனத்தையும் களைப்பையும் போக்கி விடுகிறது.

 

இரத்த ஓட்ட அமைப்பு :-

 

மசாஜ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் மந்தமான இரத்த ஓட்டம் நீங்கும். நடமாட சக்தியின்றி இருந்த இடத்திலேயே இருப்பவர்களுக்கு இது ஒரு வரபிரசாதமாக பெரிதும் பயனளிக்கும்.

 

நிணநீர் மண்டலம் (Lymphatic System)

 

மிருதுவான மசாஜ் நிணநீர் மண்டலத்தை ஊக்குவிக்கிறது. உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை வெளியே அகற்ற இது உதவுகிறது. மசாஜினால் ஏற்படும் ஓய்வு இறுக்கத்தை நீக்க உதவும். இது நோய் எதிர்ப்புத் தன்மையையும் அதிகரிக்கும்.

 

சுவாச அமைப்பு:

 

மசாஜின் போது மிக அதிகமான ஓய்வைப் பெறுவதால், சுவாசம் விடுவது மெதுவாக ஆகி விடுவதோடு ஆழ்ந்த சுவாசமும் ஏற்படும். உங்கள் உதரவிதானத்தை சுவாசத்திற்காக சுவாசிக்கவும் பெருக்கவும் தேவையான சக்தி இதனால் குறைவாகவே தேவைப்படும். பிஸியோதெராபிஸ்டுகள் மார்பில் ஏற்படும் இறுக்கத்தை (செஸ்ட் Chest Congestion) நுரையீரலின் அடியில் கப் இயக்கம் (Cupping movements) எனப்படும் இயக்கத்தைச் செய்வதன் மூலம் அதை அகற்றி விடுவர்.

 

ஜீரண மண்டலம்:

 

மசாஜ் ஓய்வை அதிகரிப்பதால் உணவு மற்றும் கழிவுகளின் இயக்கத்தை ஜீரண மண்டலத்தில் அதிகரிக்க உதவுகிறது. இந்த ஓய்வானது ஜீரண மண்டலத்தில் ஒரு சமச்சீர் தன்மையை உருவாக்குகிறது.

 

சிறுநீரக மண்டலம் :

 

மசாஜ் செய்யப்படும் போது கழிவுப் பொருள்கள் இரத்தத்தின் மூலமாக சிறுநீரகங்களுக்குச் செல்லும் வழியைக் காண்கிறது. அங்கு இவை வடிகட்டப்பட்டு வெளியேற்றப்படுகிறது.

 

பெண்களின் இனப்பெருக்க மண்டலம்:

மாதவிலக்கு வரும் போது உருவாகும் பிரச்சினைகளான வ்லி மற்றும் பிஎம்ஸ் (Premenstural Syndrome)  போன்றவை மசாஸ் செய்வதால் அது ஓய்வை ஏற்படுத்துவதன் காரணமாக மிகவும் தணியும். மாதவிலக்கு அறிகுறிகளில் மசாஜ் ஒரு நல்ல நிலைமையை ஏற்படுத்தும்

 

நன்றி டைய்லி மெயில் மார்ச் 4, 2017.

*****

வேதங்களில் எண் 17 ஒரு ரஹசிய எண்! (Post No.3919)

Research article Written by London Swaminathan

 

Date: 18 May 2017

 

Time uploaded in London: 16-43

 

Post No. 3919

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

(I have already posted the English version of this article yesterday)

 

வேதங்களை சங்க காலத் தமிழர்கள் மறை என்று அழகாக மொழி பெயர்த்தனர். ஏனெனில் நிறைய ரஹசியங்கள் நிறைந்தவை. மறை என்றால் மறைவான பொருளுடைத்து. அதனால்தான் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோர் வேதத்தின் அர்த்ததைப் பற்றிக் கவலைப்படாமல் அதை சொல்லி வாருங்கள்; அந்த மந்திர சப்தமே பலன் தரும் என்பர்; அது மட்டுமல்ல ஒரு அழகான கதையும் சொல்லுவார்.

 

ஒரு கண் தெரியாத குருடன் விளக்கை எடுத்துச் சென்றதைப் பார்த்து எதிரே வந்தவர்கள் பரிகசித்தனராம். அவன் அவர்களைப் பார்த்து,எனக்கு கண் தெரியாதது உண்மையே; உங்களைப் போன்றோர் இருட்டு நேரத்தில் என் மீது மோதி விடக் கூடாதல்லவா? என்றானாம்.

 

இதே போல நாம் வேதத்தின் பொருள் விளங்காத, அந்தகர்களாக இருந்தாலும், வேதம் என்னும் விளக்கை- ஞான தீபத்தைக் கையில் ஏந்திச் சென்றால் — எதிர்காலத்தில் ஆதி சங்கரர் போன்ற ஒரு தீர்க்கதரிசி தோன்றி உலக மக்களை உய்விப்பர் என்னும் கருத்து வரும்படி காஞ்சி சங்கராசார்ய சுவாமிகள் 91894-1994) அருள்மொழி வழங்கியுள்ளார்.

 

வேதத்தின் பொருளை விளக்க முற்பட்ட, மொழிபெயர்க்க முன்வந்த வெளிநாட்டுக்காரகள் வரிக்கு வரி இந்துக்களைக் குறை கூறுவர். அந்தப் புத்தகங்களைப் படிக்கும் போது ஒரே சிரிப்பாக வரும். அவர்களுடைய மொழிபெயர்ப்புகளை உளறுவாயன் உளறல் என்று சொல்லுவதா அல்லது தமாஷ் என்று சொல்லுவதா என்று தெரியவில்லை. இதை நீங்களே கண்டு பிடிக்கலாம்.

 

ஒரு குறிப்பிட்ட மந்திரத்துக்கு ஒவ்வொரு ஐரோப்பியரும் என்ன பொருள் சொல்லுகின்றனர் என்று அருகருகே வைத்துப் பார்த்தால் குபீரென்று சிரித்து விடுவீர்கள். புத்தரும் ஆரிய என்ற பதத்தைப் பிரயோகித்தார்; சங்க இலக்கியப் புலவர்களும் ஆரிய என்ற சொல்லைப் பயன்படுத்தினர். பாரதியாரும் ஆரிய என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இவர்கள் அனவரும் கனவான்கள், பண்பாடுடையோர், முனிவர்கள், இமயமலை வாழ் மக்கள் என்ற பொருளில் பயன்படுத்தினர். ஆனால் வெள்ளைக்கார்கள் மொழி பெயர்ப்பு முழுவதிலும் ஆரியர் என்பது ஒரு இனம் என்று மொழிபெயர்த்து அதற்கு அடுத்தவரியில் இது திராவிடர்களுக்கு எதிரானது என்று சேர்த்து இருப்பர். இந்தப் பொருள் எந்த இந்திய இலக்கியத்திலும் இல்லாதது.

எங்கெல்லாம் அவர்களுக்குப் பொருள் தெரியவில்லையோ அங்கெல்லாம் இது ஆரியர்களின் உளறல் (gibberish) என்றும் ஒரு வரி சேர்ப்பர்; சில இடங்களில் இது யாருக்கும் பொருள் விளங்காத விஷயம் (obscure) என்பர். உண்மையில் வேதம் முழுதும் அடையாள பூர்வமாக, சங்கேத (symbolism) மொழியில் பல விஷயங்களைச் சொல்ல வந்த நூல். பிற்காலத்தில் தமிழில் அப்பர், திருமூலர், சிவ வாக்கியர் போன்ற பெரியோரின் பாடல்களில் இப்படி எண்களைப் பயன்படுத்துவதைக் காண லாம். அறிஞர் பெருமக்களின் வியாக்கியானத்தால்தான் அவைகளின் உட்பொருளை நாம் அறிய முடியும்..

வேதத்தில் உள்ள எவ்வளவோ ரஹசியங்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். இன்று 17 என்ற மாய எண்ணின் குறிப்புகளைக் காண்போம்.

 

யஜூர் வேதத்தில் ருத்ரம் சமகம் என்ற பகுதியில் சமகத்தில் இப்படி எண்களை அடுக்கிக் கொண்டே போவர். உலகின் மிகப் பெரிய எண்கள் பிராமண நூல்களில் உள்ளன. அதற்குப் பின்னர் அதை சமண பௌத்த நூல்கள் செப்பின. தசாம்ச (Decimal, Binary) முறையை உலகிற்குக் கற்பித்து பூஜ்யம் என்ற எண்ணை உருவாக்கி உலகில் கம்யூட்டர் மொழியை உருவாக்க உதவினர். ஆனால் எண் 17 என்று எதற்காக ஒரு விநோத எண்ணைத் திரும்பத் திரும்ப குறிப்பிடுகின்றனர் என்று தெரியவில்லை. இதுபற்றி யஜூர் வேத தைத்ரீய சம்ஹிதையில் குறைந்தது ஆறு ஏழு இடங்களில் வருகிறது

 

பிரஜாபதியின் எண் 17 என்று ஒரு இடத்தில் சொல்லுவர்.

 

ஆறு, குளம், ஏரி, கடல், மழை நீர் முதலிய இடங்களில் இருந்து யாகத்துக்கு நீர் கொண்டு வரவேண்டும் என்ற பட்டியலில் 17 நீர்நிலைகள் என்று முடிப்பர்.

 

 

யாகங்களுடன் இணைந்தது குதிரை பூட்டிய தேர் பந்தயம் ஆகும் . இதில் ஒரு வீரன் 17 அம்புகள் எய்தி இடத்தைக் குறிப்பான் என்று வருகிறது

அப்பொழுது 17 டமாரங்கள் முழங்க வேண்டுமாம்.

 

இன்னும் ஒரு மந்திரம்:

 

ஒரு அசைச் சொல்லுடன் அக்னி வாக் (பேச்சு)கை வென்றான்

இரு அசைச் சொற்களுடன் அஸ்வினி தேவர்கள் உற்சாகத்தை வென்றனர்

விஷ்ணு மூன்று அசைச் சொற்களுடன் மூவுலகத்தை வென்றார்

சோமா நான்கு அசைச் சொற்களுடன் காலநடைகளை வென்றார்

பூசன் ஐந்து பங்க்தியை வென்றார்

பிரஜாபதி 17  சொற்களுடன் 17 மடங்கு ஸ்தோமாவை வென்றார்.

 

இப்படிப் பல மந்திரங்கள்!

 

யாகத்தில் 4 முக்கிய புரோகிதர்கள், அவர்களுக்கு உறுதுணையானோர் நால்வர், அவர்களுக்குப் பல வகைகளில் எடுபிடி வேலை செய்வோர்– என்று 17 பேரைச் சொல்லுவர்.

17 என்பது ஒரு மர்மமான எண்!

 

“தமிழில் பழ மறையைப் பாடுவோம்” என்று பாரதி முரசு கொட்டினான். “வேதம் என்று வாழ்க வென்று கொட்டு முரசே” என்றான் பாரதி.

 

நாமும் முடிந்தவரை வேதத்தை வாழ்த்துவோம். அது நம்மை வாழ்த்தும்; வாழ்விக்கும்.

-சுபம்-

 

கம்யூனிஸ ஜோக்குகள்! (Post No.3912)

Written by S NAGARAJAN

 

Date: 16 May 2017

 

Time uploaded in London:-  6-08 am

 

 

Post No.3912

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

நகைச்சுவை விருந்து

 

கம்யூனிஸ ஜோக்குகள்!

ச.நாகராஜன்

 

கம்யூனிஸ ஜோக்குகள் பேச்சு சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் எப்படியெல்லாம் கம்யூனிஸம் அடக்கி விடும் என்பதைத் தெரிவிப்பவை. கம்யூனிஸ கொள்கைகள் அது பிறந்த நாட்டிலேயே செத்து மடிந்த போதும் கூட இன்றும் காம்ரேடுகள் இங்கு அதைக் கட்டி அழுவது விசித்திரமே!

 

சில கம்யூனிஸ ஜோக்குகள் இதோ:-

சராசரி நாள்!

 

கம்யூனிஸ்ட் ஆட்சியில் நாட்களைத் தள்ளுவது கஷ்டம் தான்!

ஆனால் காம்ரேடுகள் அதை ஒப்புக் கொள்வார்களா, என்ன?

நாளைய தினத்தைப் பற்றி விஞ்ஞான ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் ரஷியாவில் சொல்லப்படும் அறிவிப்பு :

இன்று சராசரியான ஒரு நாள். – நேற்றைய தினத்தை விட மோசமான நாள்; நாளைய தினத்தை விட நல்ல நாள்!

 

 

உண்மையையே சொல்லும் ப்ராவ்தா

 

ப்ராவ்தா என்ற ரஷிய பத்திரிகை செய்தியை வெளியிடும் விதத்தைப் பற்றி ஏராளமான ஜோக்குகள் உண்டு. அவற்றில் ஒன்று இது:-

 

ப்ராவ்தா பத்திரிகைக்கு வந்த ஒரு டெலிபோன் அழைப்பு:-   ஐவான் ஐவனோவிச் லண்டாவ் இன்ஸ்டிடியூட்டில் (Landau Institute) உள்ள தனது லாபரட்டரியில் கோல்ட் ஃப்யூஷன் (cold fusion) சோதனையில் மாபெரும் வெற்றியை அடைந்திருக்கிறாராமே, நீங்கள் பிரசுரித்திருக்கும் அந்தச் செய்தி  உண்மையா?

 

இதற்கு ப்ராவ்தாவின் பதில்:

 

ஆமாம், அந்தச் செய்தி உண்மை தான். ஆனால் அதில் சில சின்னத் திருத்தங்கள் உள்ளன. இன்ஸ்டிடியூட் லண்டாவில் இல்லை. அது டப்னாவில் (Dubna) உள்ளது. சோதனையைச் செய்தது ஐவான் ஐவனோவிச் அல்ல; செய்தவர் பியோட்ர் பியோட்ரோவிச். அவர் சாதனை படைத்தது கோல்ட் ஃப்யூஷனில் இல்லை; மாறாக அவர் செய்தது இஸ்ரேலுக்கு ஓடிப்போனது தான்!

 

 

கடவுளும் உருளைக்கிழங்கும்

 

விஞ்ஞான ரீதியாக விவசாயம் செய்வதில் முனைந்த மாஸ்கோ அரசின் போலிட்பீரோ விஷயம் தெரித தனது காம்ரேட் ஒருவர் தலைமையில் குழு ஒன்றை மாஸ்கோவிற்கு அருகில் உள்ள ஒரு கூட்டுறவுப் பண்ணைக்கு அனுப்பியது.

 

“உருளைக்கிழங்கு விளைச்சல் எல்லாம் எப்படி இருக்கிறது, தோழரே! என்று கேட்டார் குழுவின் தலைவர்.

“பிரமாதமாய் இருக்கிறது, காம்ரேட் என்று ஆரம்பித்த விவசாயி, ‘ எல்லா உருளைக்கிழங்குகளையும் ஒரே இடத்தில் சேகரித்துக் குவித்தால் அது தரையிலிருந்து கடவுளின் சொர்க்கம் வரை போய் விடும் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

குழுத் தலைவர் கோபமாக, “ என்ன சொல்கிறாய், தோழா, இது சோவியத் யூனியன். இங்கு கடவுளே கிடையாது, உனக்குத் தெரியாதா? என்று கேட்டார்.

 

“ஆமாம், ஆமாம், இது சோவியத் யூனியன் தான். இங்கு உருளைக்கிழங்கும் கிடையாதே, அது தெரியாதா உங்களுக்கு?

என்று பதில் சொன்னார் அந்த விவசாயி.

 

 

நான்கு பேருக்குத் தெரியும் நடந்தது என்னவென்று!

 

வார்ஸாவுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு புகைவண்டியின் பெட்டி ஒன்றில் நான்கு பேர் அமர்ந்திருந்தனர்.

ஒருவர் ரஷியர்; இன்னொருவர் ஒரு விவசாயியின் வயதான மனைவி. மூன்றாமவர் ஒரு இளவயது அழகி; நான்காமவர் போலந்தைச் சேர்ந்த ஒரு லாஜிக் புரபஸர்.

 

நெடு நேரம் புகைவண்டியில் அவர்கள் பேசாமலேயே அமர்ந்திருந்தனர்.ஒரே நிசப்தம்!

 

திடீரென்று புகைவண்டி ஒரு குகைக்குள் சென்றது. பெட்டியில் ஒரே இருள். திடீரென்று நிசப்தத்தைக் கலைக்கும் வகையில் ஒரு முத்தமிடும் சப்தம் கேட்டது; அடுத்து பளார் என்று ஒரு அறை விழுந்த சப்தம் கேட்டது.

 

புகைவண்டி குகையிலிருந்து வெளியேற, வெளிச்சம் வந்தது.

ரஷியர் மிகவும் கலவரமான முகத்துடன் வெளிறிக் காணப்பட்டார். அவரது ஒரு கன்னம் மற்றதை விடச் சிவந்து இருந்தது.

இப்போதும் கூட யாரும் பேசவில்லை. அவரவர் தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தனர். அவர்கள் நினைத்தது என்ன, தெரியுமா?

 

வயதான பெண்மணி நினைத்தது:-  ரஷிய மடையனுக்கு நன்கு வேண்டும். அழகி கொடுத்த அடி பிரமாதம்!

ரஷியர் நினைத்தது:- என்ன அநியாயம்! போலந்துக்காரன் கொடுத்த முத்தத்திற்கு நானா பலிக்கடா? என்னை எதற்கு அடிக்க வேண்டும்?

 

இளம் அழகி நினைத்தாள்:- என்ன விசித்திரம் இது! ரஷிய ஆபீஸர் அந்த வயதான பெண்மணியையா முத்தமிட வேண்டும்? என்ன அநியாயம்?

 

போலிஷ் லாஜிக் புரபஸர் நினைத்தார்:- அடடா! தேசபக்தியுள்ள அருமையான போலந்துக்காரன் அல்லவா நான்! என் கையை நானே முத்தமிட்டுக் கொண்டு கொடுத்தேன் ஒரு அடியை ரஷியனின் கன்னத்தில்! யாரும் அதை புரிந்து கொள்ளவில்லை, யாராவது புத்திசாலியாக இருந்தால் தானே!

 

***

 

 

பனை மரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும்… (Post No.3904)

Written by London Swaminathan

 

Date: 13 May 2017

 

Time uploaded in London: 6-34 am

 

Post No. 3904

 

Pictures are taken from various sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

தமிழில் அழகான, ஆழமான பொருள் பொதிந்த பழமொழிகள் உள. ஒருவன் செய்யும் காரியம் எவ்வளவுதான் நல்லதானாலும் இடமும் நேரமும் சூழ்நிலையும் சரியாக இல்லாவிடில் நல்ல பெயர் கிடைக்காது

 

பாம்புப் புற்றுக்கு அருகில் ஒரு கயிறு கிடந்தாலும் அதைப் பாம்பென்றே மக்கள் கருதுவர்; சஹவாச தோஷம்!

பனைமரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும், அதன் வெண்மை நிறமும், இடமும் அதைக் கள் என்று நினக்கச் செய்யும்.

 

நிந்தையிலாத் தூயவரும் நிந்தையைச் சேரில் அவர்

நிந்தையது தம்மிடத்தே நிற்குமே – நிந்தைமிகு

தாலநிழல் கீழிருந்தான் றன்பால் அருந்திடினும்

பாலதனச் சொல்லுவரோ பார்.

-நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

 

பொருள்:-

பனை மரத்தின் அடியின் உடகார்ந்துகொண்டு பசுவின் பாலைக் குடித்தாலும், பிறர் அதைப் பால் என்று சொல்லுவரோ? நீ அதனை நினைத்துப் பார். அதுபோல நல்ல பெயருடைய மேலோர், கெட்டவர்களுடன் சேர்ந்தால் அவர்களுடைய கெட்ட பெயர் இவர்களையும் ஒட்டிக்கொள்ளும்.

பழுதும் பாம்பும்

 

இதே கருத்தை வலியுறுத்த இன்னொரு பாடலையும் பாடி வைத்தார் அந்தப் புலவர்!

 

நல்லொழுக்கம் இல்லாரிடம் சேர்ந்த நல்லோர்க்கு

நல்லொழுக்கமில்லாச் சொல் நண்ணுமே – கொல்லும் விடப்

பாம்பென உன்னாரோ பழுதையே ஆனாலும்

தூம்பு அமரும் புற்று அடுத்தாற் சொல்

-நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

 

ஓட்டைகள் மிக்க புற்றுக்குப் பக்கத்தில் கயிறே கிடந்தாலும், அதை கொல்லக் கூடிய விஷப் பாம்பு என்று சொல்லுவார்கள் அல்லவா? நீயே சொல்! அது போல நல்ல ஒழுக்கம் இல்லாதவர்களுடன் சேர்ந்த நல்லோரையும் பழிச் சொல் வந்து சேரும்.

 

அழகான இரண்டு உவமைகள் மூலம் நமக்கு உயரிய கருத்துக்களைச் சொல்வர் தமிழ்ப் புலவர். இளம் வயதிலேயே இந்தச் செய்யுட்களை மனப்பாடம் செய்தால், அவை நம் மனதில் பசு மரத்தாணி போலப் பதியும்.

 

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்ப் புலவர்தம் பெருமை!

 

–சுபம்–

 

 

தராசு உவமை: புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-3 (Post No.3901)

Written by London Swaminathan

 

Date: 12 May 2017

 

Time uploaded in London: 17-07

 

Post No. 3901

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

முதலிரண்டு பகுதிகள் நேற்றும் அதற்கு முந்தைய தினமும் வெளியாகின.

 

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி (குறள் 118)

பொருள்:-

 

முதலில் சமமாக நின்று, பின்னர் பொருளின் எடைக்குத் தக்கபடி சீர்தூக்கும் தராசு போல ஒரு பக்கம் சாயாமல் இருப்பதே சன்றோர்க்கு அணியாகும்.

 

கண்ணனும் கீதையில் (5-18) மொழிவது இஃதே.

 

ஆத்ம ஞானம் பெற்றவர்கள் கல்வியும் அடக்கமும் நிறைந்த பிராமணனிடத்தும் பசுவினிடத்தும் யானையினிடத்தும் நாயினிடத்தும்  நாயை உண்ணும் புலையனிடத்தும் சமதர்சனம் உடையவர்களாவர்.

 

 

புத்தனும் தம்மபதத்தில்(269) கூறுவது இதைத்தான்:-

“ஒரு மனிதன் அறியாமையாலோ, மூடத்தனத்தாலோ பேசாமல் இருந்தால் அவன சிந்தனைச் சிற்பி அல்ல. ஒரு முனிவர் சிந்தனையாளர் ஆவார். ஒரு தராசுத் தட்டில் நல்லதையும் கெட்டதையும் தனித்தனியே வைத்து சீர்தூக்கிப் பார்ப்பவன் முனிவன், சிந்தனையாளன் ஆவான்.

 

மனு, வள்ளுவன் புத்தன்!

 

அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர் சொகுத்துண்ணாமை நன்று (259)

 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (260)

 

ஒரு உயிய்ரைக்கொல்லாமல் இருப்பது டீதீயில் நெய் சோறு இட்டு ஆஇயிரம் வேள்விகளைச் செய்வதைவிடப் புண்ணியமாகும்

 

 

ஒர்ரு உயிரைக் கொல்லாமலும் மாமிசத்தைச் சாப்பிடாமலும் இருப்பவனை உலகில் வாழும் எல்லா உயிய்ரினங்களும் இரண்டு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டு வணங்கும்.

 

 

36,500 அஸ்வமேத யாகம் = சைவ உணவு

 

தினமும் ஒரு அஸ்வமேதயாகம் வீதம் நூறு ஆண்டுகளுக்கு யாகம் செய்து கிடைக்கும் புண்ணியமும் மாமிசம் சாப்பிடாமல் இருப்பதால் கிடைக்கும் புண்ணியமும் சமம் ஆகும்.

புத்தர் உரைப்பதும் அஃதே

தம்மபதம் 266, 270):– ஒருவர் மஞ்சள் உடை தரித்து யாசகம் செய்து வாழ்வதால் புத்த பிட்சு ஆகிவிடமாட்டார். நேர்மையான பாதையை ஏற்று மாமிச உண்வைத் தவிர்ப்ப்வரே புத்த பிட்சு எனப்படுவார்.

 

ஒருவர் நிறைய பேரைக் கொன்ற வீரன் என்பதால் பெரியவன் அல்ல; யார் ஒருவன் ஒரு உயிருக்கும் தீங்கு செய்ய்தவனோ அவனே பெரியவன்; மா மனிதன்.

மொட்டையும் குடுமியும்

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 835 தேதி 12-02-14

ஆதி காலத்தில் இந்து, புத்த, சமண மதத்தில் மிகுந்த ஈடுபாடுடையோர் வெளிச் சின்னங்கள் மூலம் அதைக் காட்டினர். காவி உடை, மஞ்சள் உடை, வெள்ளாடை இப்படி வெளிப்புறத்திலும் நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம், கோபி, நாமம் இப்படிப் பல சின்னங்களாலும் யார் என்பதைக் காட்டினர். இது போலவே தலை முடி விஷயத்திலும் பல பாணிகள் (ஸ்டைல்) நிலவின. முன் குடுமி, பின் குடுமி, மொட்டை (பௌத்தர்), மயிர் ஒவ்வொன்றாக பறித்து மொட்டையாகுதல் (சமணர்) என்று பல வகைகள் இருந்தன. முற்றிலும் உணர்ந்த ஞானிகள் இந்த வெளி வேஷத்தைப் பொருட்படுத்தாமல் தத்துவங்களில் மட்டுமே நம்பிக்கை வைத்தனர். ஏனெனில் காலப்போக்கில் இது எல்லாம் ஏமாற்றும் பேர்வழிகளுக்கு வசதியாகப் போயின.

 

வள்ளுவர், ஆதிசங்கரர், புத்தர், திருமூலர் ஆகிய எல்லோரும் இதில் ஒருமித்த கருத்து வைத்திருப்பது வியப்பளிக்கிறது.இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டங்களில், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தவர்கள்.

1400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட மஹேந்திர பல்லவ மன்னன் சம்ஸ்கிருதத்தில் ஒரு நகைச்சுவை நாடகம் எழுதி இருக்கிறான். மத்தவிலாசப்ரஹசனம் என்ற அந்த நாடகத்தில் இந்து, புத்த, ஜைன (சமண) மத போலி சந்யாசிகளைக் கிண்டல் செய்துள்ளான். சங்கரரின் பஜகோவிந்தத்தில் சொல்லும் விஷயம், மஹேந்திர வர்மன் நேரில் கண்ட காட்சியுடன் இணைகிறது!

முடி விஷயத்தில் பல வகையான ‘ஸ்டைல்கள்’ வேத காலம் முதலே இருந்திருக்கின்றன. ஏதோ இந்தக் காலத்தில் ரவிவர்மா வரைந்த படங்களில்தான் சிவனுக்கு மீசை, விஷ்ணுவுக்கு மீசை இல்லை என்று நினைத்துவிட வேண்டாம். சிவபெருமானை வருணிக்கும் யஜூர் வேத ருத்ரம்/சமகத்தில் சிவனை மொட்டையன் என்றும் நீண்ட சடையன் என்றும் போற்றுகின்றனர்.

நீண்ட சடையன் (கபர்தீன்)
வ்யுப்தகேச (முண்டம்/ மழித்த) – ருத்ரம் (யஜூர் வேதம்)
வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்ற தமிழ்ப் பழமொழி இந்த ருத்ர மந்திரத்தில் இருந்துதான் வந்ததோ என்னவோ!

 

வள்ளுவர் கூறுகிறார்:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)

பொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.

சங்கரரும் சாடுகிறார்

தத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார். இந்தப் பாட்டை அவரது சீடர் தோடகர் பாடியதாகச் சொல்லுவர்.:

ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :
காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :
பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:
ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”
பஜகோவிந்தம்

( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).

பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.
எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் தோடகர்.

 

திருமூலரின் திருமந்திரம்

நூலும் சிகையும் நுவலில் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலது அந்தணர் காணும் நுவலிலே

பூணூலும் உச்சுக்குடுமியும் தரித்திருக்கும் எல்லா பிராமணர்களையும் பிரம்மத்தை அறிந்தவர்கள் என்று எண்ண முடியுமா? நூல் என்பது வெறும் பருத்தி நூல்தானே, சிகை என்பது வெறும் முடிதானே. உண்மையில் நூல் என்பது வேதாந்த நூலறிவு. நுண் சிகை ஞானம் என்பது இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய 3 நாடிகளின் தன்மை அறிந்து, பிரம நாடி சிறக்க தலை உச்சியில் ஞானம் உண்டாவதே. இதுவே அந்தணர் கடைப்பிடிக்க வேண்டிய முறை—என்பார் திருமூலர்.

 

புத்தர் பேருரை

உச்சுக்குடுமி, மொட்டை, ஜடாமுடி, காவித்துணி, மஞ்சள் உடை, நிர்வாண கோலம் இவைகளால் ஒருவன் துறவி ஆகிவிட முடியாது என்று புத்தர், வள்ளுவர், திருமூலர், ஆதிசங்கரர் முதலிய பல தீர்கதரிசிகள் எடுத்துரைத்துள்ளனர்.

 

புத்தர் தம்மபதத்தில்,  மூன்று இடங்களில் இக்கருத்தை வலியுறுத்துகிறார் (தம்மபதம் 141, 264, 393)

நீண்ட முடியும் சிகையும் வைத்திருப்பதாலோ, பிராமண குடும்பத்தில் பிறந்ததாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிடமாட்டான். எவனிடத்தில் சத்யமும் புனிதமும் இருக்கிறதோ அவனே பிராமணன். அவன் ஆனந்தக் கடலில் மிதப்பான் என்று தம்மபதத்தில் (393) புத்தபிரானும் கூறுகிறார்.

புத்தரும் தனது மதத்தினரின் வெளி வேஷங்களை அபோழுதே கண்டித்துள்ளார். அவரது மதம் எப்படித் தேய்ந்துபோகும் என்பதை அவர் பிரதம சீடரான ஆனந்தனுடன் நடத்திய சம்பாஷணையில் கூறினார். அவர் இறந்தவுடன் நடந்த மூன்று மஹா நாடுகளில் வாதப் பிரதிவாதங்கள் விண்ணைப் பிளந்தன. பெண்களைக் கட்டாயம் புத்த மதத்தில் சேர்க்கவேண்டும் என்று ஆனந்தன் மன்றாடியபோது, 1000 ஆண்டுகள் நிலைக்கக்கூடிய என்னுடைய மதம், பெண்களை (புத்த பிட்சுணிகளாக) அனுமதித்தால், 500 ஆண்டுகளே இருக்கும் என்றார் புத்த பிரான். இது பற்றிய விரிவான விளக்கத்தை எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க: Two Interesting Conversations about Women, posted on 5th February 2014.

Contact swami_48@yahoo.com

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 30 (Post No.3897)

Written by S NAGARAJAN

 

Date: 11 May 2017

 

Time uploaded in London:-  6-26 am

 

 

Post No.3897

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 30

 

சென்று போன சில நாட்கள் : எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடுவின் நூல்

 

ச.நாகராஜன்

 

    மஹாகவி பாரதியாரின் நண்பர்களில் ஒருவர் எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு. புதுச்சேரியில் அவருடன் நெருங்கிப் பழகியவர். அவர் அமிர்த குணபோதினி என்ற மாதப் பத்திரிகையில் பாரதியாரைப் பற்றிய பல குறிப்புகளை சென்று போன சில நாட்கள் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்தார்.

1928ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் 1929ஆம் ஆண்டு ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய ஆறு  மாதங்களில் வெளி வந்த அவரது கட்டுரைகள் பல சுவையான செய்திகளைத் தெரிவிக்கின்றன.

அவற்றில் ஒரு சில பகுதிகளை மட்டும் இங்கு காண்லாம்.

*

    அந்தக் காலத்தில் பாரதியார் தீவிர தேசபக்தராயிருந்தார். எதிலும் நிதானத்தையே யனுசரித்து நின்ற ஸ்ரீமான் ஜி.சுப்பிரமண்ய ஐயரின் கொள்கைகளில் பாரதியார் வேறுபட்டுப் பிரிந்து இந்தியா என்ற தமிழ் வாரப் பத்திரிகையைத் தொடங்கி அதற்கு ஆசிரியராக அமர்ந்தார்.அப்பத்திரிகையின் சொந்தக்காரர் வேறொருவராவார். பாரதியாரின் தமிழ் நடை அது  முதற்கொண்டு ஒரு புதுவழியில் மாறியது. அதற்கு முன்னர் எவரும் அவ்வழியில் பத்திரிகையை நடத்தவில்லையென்று சொல்லும்வாறாக வெகு சிறப்புடனும் திறமையுடனும் எழுதி வரத் தொடங்கினார். சிறுசிறு பதங்களுடன் கூடிய ஒரு நவீன கம்பீர நடை. இந்தியா பத்திரிகை சனிக்கிழமை தோறும் வெளியாகி வந்தது. நாலாயிரம் பிரதிகள் வரைப் போய்க்கொண்டிருந்தது.

*

 

1907ஆம் வருஷத்தில் பரிமளா என்ற நாவலை அச்சிட நாம் சென்னை சென்றிருந்த சமயம் ஒரு கொடிய முறை ஜ்வரத்தினால் வருந்தும்படியாக, பாரதியாரே பரிமளா ‘புரூப்;கள் முக்காற் பாகத்தையும் திருத்தி முடிவு செய்து, அந்த நாவலைப் பற்றி இந்தியா பத்திரிகையின் தலையங்கத்தில் ஆறு கலங்கள் வரை மதிப்புரை வரைந்தார். அதிலே மொழி பெயர்க்குந் தொழிலைக் குறித்தும் தமிழின் இயற்கை இனிமையைக் குறிக்கும்  ‘அங்கனாமணி’ என்பதிலும் ‘பெண்மணி’ என்ற தமிழ்ச் சொல் மிக்க இனிமையுடையது என்றும் விஸ்தாரமாக வரைந்தார்.

*

பாரதியாரைப் பிடித்துத் தருவோருக்கு நூறு ரூபாய் பரிசு தரப்படுமென்று ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அதிலே அவரது உயரம் இத்தனை அடியென்றும், கஞ்சா, புகையிலை உபயோகிப்பவரென்றும், பூணூலை எடுத்துவிட்டவரென்றும் இன்னும் பல குறிப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

*

புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்த காலையில் ‘தமிழ்நாட்டைப் பற்றி நல்ல கருத்துகள் அமையப் பெற்றதும் அதன் பெருமையை விளக்கக்கூடியதுமான பாடல்களை புனைந்து அனுப்புவோருக்கு இன்ன வெகுமதி தரப்படும்’ என்று ஒரு விளம்பரம் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது….

 

   பாரதியாரின் புதுவை நண்பரான வாத்தியார் சுப்ரமணிய ஐயரவர்களும் மற்றும் சில நண்பர்களும் அந்த விளம்பரத்தின் படி ஒரு பாடல் செய்ய வேண்டுமென்று பாரதியாரை நிர்ப்பந்தப் படுத்தினர். அவர்கள் அதிகாரம் செய்யப் பாத்தியதை பெற்றவர்கள். பாரதியார் இவர்களின் விருப்பத்தைக் கேட்டு புன்னகை கொண்டார். வேறு பதில் சொல்லவில்லை. அதன் பின்பு வாத்தியார் ஐயரவர்கள், “வெகுமதிக்கு, நான் உங்களைப் பாடச் சொல்லவில்லை. சங்கத்துப் பண்டிதர் அநேகரின் முன்பு உங்கள் கவி ஜோடி கேட்கட்டுமே என்று தான் சொல்லுகிறேன். சங்கத்தார் கவி கேட்பது தமிழ் நாட்டைப் பற்றி செந்தமிழில் பாடிக் களிக்கட்டும் என்ற நோக்கத்துடன் தான்; ஆகையால் இந்த விஷயத்தில் நீங்கள் ஏன் லோபித்தனம் காட்ட வேண்டும்? என்று குத்திப் பேசிக் கேட்டார். “அதற்கு நான் சொல்லவில்லை” என்று இழுத்தார் பாரதியார். வாத்தியார், “அதெல்லாம் போகிறது, எங்களுக்குத் தேவை ஸ்வாமி” என்று ஒரே போடு போட்டு விட்டார்.

    பாரதியார் அதற்கு “நான் கட்டாயம் பாட்டு எழுதி விட்டு  மூச்சு விடுகிறேன். அது வேண்டுமென்கிற சங்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் அனைவரும் சர்க்காருக்கு நண்பர்கள். எனது கவியை ‘நல்லது’ என்று அவர்கள் உரத்துச் சொல்லக் கூடப் பயப்படுகிறவர்கள், அதனால் தான் தாமதித்தேன்” என்று சொல்லி ஒரு நிமிஷ நேரம் பூப்பூவாய் நகைத்தார். உடனே வரைவதற்கு எழுதுகோலைக் கொண்டார்.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்

    தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு

     சக்தி பிறக்குது மூச்சினிலே”

என்று பல்லவி எழுதி வாசித்துக் காண்பித்தார். வாத்தியார் மலைத்தார். எடுத்த விஷயங்கள் அத்தனையும் பல்லவியிலேயே சுருக்கமாக முடிந்து விட்டது.

*

பாரதியார் எவ்வளவோ காலம் வாழப் போவதாக எண்ணியிருந்தார். எவ்வளவோ வேலைகள் செய்ய நினைத்திருந்தார். ஒரு வாரப் பத்திரிகை தொடங்க வேண்டுமென்று நம்மிடம் தர்க்கித்தார். பழைய இந்தியாவின் காரமான நடை கூடாதென்று நாம் சொன்னதையும் ஒப்புக் கொண்டார். 1920ஆம் வருஷத்து சுதேசமித்திரன் அனுபந்தத்தில் நல்ல வேலை செய்தார். 1921ஆம் வருஷ ‘மித்திரன்’ அனுபந்தத்திற்கு இல்லாமல் போய்விட்டார். அவர் வாழ்த்திச் சென்ற தமிழ்நாட்டில் சமீபத்தில் அவரது கீதங்களை அரசாங்கத்தினர் தடுத்து விட்ட ‘திருவிழாவும்’ நடந்தது. நற்காலமாய் அந்தத் தடை நிவர்த்திக்கப்பட்டது தமிழகத்தின் பாக்கியமே. பாரதியார் 1907ஆம் வருஷத்தில் தமது நண்பரொருவர் மரித்ததற்காக இரங்கிச் சில பாடல்கள் புனைந்தார். அச்சமயம் நாமும் அருகிலிருந்தோம். அவற்றின் இரண்டு அடிகளை இப்பொழுது பாரதியாருக்கே உபயோகித்து இவ்வியாசத்தை முடிக்கின்றோம்.

“அந்தோ மறலி நம் அமுதினைக் கவர்ந்தான்

நொந்தோ பயனில்லை; நுவலயாதுளதே!”

 

*

பாரதியாரைப் பற்றி இப்படி ஆறு இதழ்களில் ராமானுஜலு நாயுடு அவர்கள் அருமையாக எழுதியுள்ள இந்தக் கட்டுரைகள் அவர் இறந்த ஏழு ஆண்டுகளிலேயே வந்திருப்பது குறிப்பிடத் தகுந்தது.

 

 பாரதியார் அன்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் ‘சென்று போன சில நாட்கள்’

****

வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் (Post No3876)

Written by S NAGARAJAN

 

Date: 4 May 2017

 

Time uploaded in London:-  6-28 am

 

 

Post No.3876

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஜோதிடமே துணையாகும்

வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் – பஞ்ச அங்க விளக்கம் : விதி விளக்கம் – 3

 

by ச.நாகராஜன்

 

  1. வாரம், திதி,நட்சத்திரம்,யோகம், கரணம் : பஞ்ச அங்க விளக்கம்

நூலாசிரியர் மிட்டா முனிசாமி செட்டி ராகு காலம், குளிகை ஆகியவற்றை இன்றும் பார்த்து வரும் அன்பர்கள் பஞ்ச அங்கங்களை ஏன் கவனிப்பதில்லை என்று வியக்கிறார்.

அவர்  பஞ்ச அங்கங்களைப் பற்றி விளக்குகிறார்.

அவற்றில் சில பகுதிகள் இதோ:

 

 

வாரம்

வாரங்களில் திங்கள்,புதன்,வெள்ளி ஆகியவைகள் சகல சுபங்களுக்கும் அனுகூலமானவை.

செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகியவை அவ்வளவு சிரேஷ்டமாக தினசரி அனுஷ்டானத்திற்கு எடுக்கவில்லை.

 

ஆனால் செவ்வாய், ஞாயிறு, வியாழன் ஆகியவற்றில் விவாகம் முதலிய சுபங்கள் நடந்தால் மேல் சொல்லிய சுப வாரங்களின் மஹிமை குறைவதில்லை.

 

 

,திதி

சூரியன், சந்திரன் இவைகள் ஒன்றுக்கொன்று இருக்கின்ற நிலையினால் பூமிக்கு ஏற்படும் ஒரு வித சுபாவ நிலையைக் குறிப்பது திதி.

 

திதியினால் சூரியனும் சந்திரனும் இருவரும் சேர்ந்து தங்கள் சர கதியினால் சக்தியை ஆகர்ஷணம் செய்து மனிதர்களுக்குப் பல வேளைகளிலும் , பல் இடங்களிலும் அவரவர் பிராரப்தம் போலவும், ஜெனன கால நவக்கிரக பிரசாத ஈடு போலவும் இயக்கி மண்மகனைப் பிணமகனாக்கலும் போன்ற அநேக பல்ன்களளச் செய்கின்றனர்.

கிரகண காலத்தில் மனிதர்களுக்கு வியப்பையும் பயங்கரத்தையும் ப்ரவச் செய்து தங்கள் சக்தியைக் காண்பிக்கின்றனர்

 

 

நட்சத்திரம்

 

நட்சத்திரம் சந்திரனுடைய நித்ய சரகதி நிலையைக் காண்பிக்கிறது.மற்ற கிரகங்களை விட பூமிக்கு மிகவும் ச்மீபத்தில் சஞ்சரிப்பதினால், சந்திரன் தின பலனை மனிதர்கள் யூகிப்பதற்கு உதவியாக இருக்கின்றான்.

 

 

யோகம்

 

இதுவும் நட்சத்திரத்தைப் போல 27 வகை உள்ளதென்றாலும் நட்சத்திரத்தைப் போல நாழிகை ஆதியந்தம் எடுத்து ஜெனனகால விசேஷம் கணக்கிட்டு , அந்த நாழிகையை வருடமாகவும், விநாடியை மாதமாகவும் வைத்துக் கவனித்தால் ஒவ்வொருவருடைய யோகம் மாறுவது போல, பூவுலகில் தங்கள் தங்கள் அனுபவ யோகம் எப்படி மாறி வருகின்றது என்பதைக் கவனிக்கலாம்.

 

நட்சத்திரத்தைக் கொண்டு திசை கணக்கிடுகிறோம்.

ஆனால் யோகம் ஸ்தூலமாக வாழ்நாள் யோகக் கூறுபாட்டை, ஜெனன சேஷ வருஷம் மாதம் வரையில் ஒவ்வொருவர் ஆயுள் காலத்தில், தெரிவிப்பதாக்த் தற்கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

 

கரணம்

 

கரணம் தீர்க்கமாக ஆயுள் பரியந்தம் ந்டக்கும் ஆன்ம சுபாவத்தைத் தெரிவிக்கிறது.

இது யோகத்தைப் போல மாறி வருவதில்லை.

 

இனி பஞ்ச அங்கங்களைப் பற்றிச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 

வாரம்

 

  1. வார சூன்யம் : வாரமும் நட்சத்திரமும் கூடிய தினத்தன்று நன்மை உண்டாகாது. அப்படிப்பட்ட நாள்கள் சுபத்திற்கும் ஆகாது. எவ்வித காரியத்தையும் அன்று ஆரம்பிக்கக் கூடாது.

ஞாயிறு : – அனுஷம், கேட்டை, மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகம்

திங்கள் :- பூராடம்,அனுஷம், மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகம்

செவ்வாய்:- அவிட்டம், திருவோணம், சதயம்,கேட்டை, திருவாதிரை

புதன் :- மூலம், திருவோணம்,கார்த்திகை,அவிட்டம், அசுவினி, பரணி

வியாழன் – மிருகசீரிஷம்,பூராடம்,ரேவதி, புனர்பூசம்

வெள்ளி – பூசம், விசாகம், ரோகிணி, அவிட்டம்,மிருகசீரிஷம், ஹஸ்தம், அனுஷம்

சனி – ஹஸ்தம்,பூசம், புனர்பூசம், உத்திரம், ரேவதி

இவை பொது விதி. திதி,யோகம் ஆகியவற்றால் மேற்காட்டிய வாரசூனயம் நன்மையாக முடியும்.

தெய்வ அனுகூலத்தினால் மனித யத்தனமின்றி விசேஷ காரியங்களும் சுபங்களும், இஷ்ட பிராப்தியும் உருவாகலாம்.

 

  1. கிழமை பிறந்த ( நாள் என்று குறிப்பிடப்படும்) நட்சத்திரம் கூடிய வாரங்களில் செய்கின்ற கருமம் எல்லாம் தீமையாக முடியும்.

இது தினசரி அன்றாடம் கடைப்பிடிப்பதற்காக ஏற்பட்டது.

இது பின் வருமாறு

ஞாயிறு – பரணி

திங்கள் – சித்திரை

செவ்வாய் – உத்திராடம்

புதன் – அவிட்டம்

வியாழன் – கேட்டை

வெள்ளி – பூராடம்

சனி – ரேவதி

இது சிறப்பு விதி. இதை நிச்சயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

அடுத்து நட்சத்திரங்களைப் பற்றிச் சற்று விளக்கமாகக் காண்போம்.

– தொடரும்