நாடி கிரந்தங்கள் ஏன் சரியில்லை? (Post No.3867)

Written by S NAGARAJAN

 

Date: 1 May 2017

 

Time uploaded in London:-  6-20 am

 

 

Post No.3867

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஜோதிடமே துணையாகும்

 

விதி விளக்கம் என்னும் இந்த நூலை எனக்கு அனுப்பி உதவியவ்ர் எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்கள். ஏராளமான அருமையான பழைய நூல்களை அவ்வப்பொழுது எனக்கு அவர் அனுப்புவது வழக்கம். அவருக்கு எனது நன்றி.

 

 

நாடி கிரந்தங்கள் ஏன் சரியில்லை? : விதி விளக்கம் – 2

ச.நாகராஜன்

 

  1. நாடி கிரந்தங்கள் ஏன் சரியில்லை?

நூலாசிரியர் மிட்டா முனுசாமி நாடி கிர்ந்தங்களைப் பற்றிய தனது ஆராய்ச்சியை முதல் அத்தியாயத்திலேயே தெரிவிக்கிறார். அதன் சாரத்தைக் கீழே பார்ப்போம்.

நவகிரகங்கள் ஓயாது சுற்றிக் கொண்டே இருக்கின்றன. அவைகளின் ஓயாத இந்த சர கதியினால் பன்னிரெண்டு ராசிகளிலும் ஒரு காலத்தில் ஒரு ஜாதகத்தில் அவை ஒருவாறு அமைந்துள்ளதாகக் கொள்வோமாகில், அதே நிலையில் “ராசியில்” பின் ஒரு காலத்தில் சர கதியினால் அவை அமையக் கூடும். ஆனால் இந்த நவக்கிரகங்கள் நட்சத்திர நிலையிலாவது  அல்லது அம்ச நிலையிலாவது வருவது அசாத்தியம். இதுவே சிருஷ்டியின் மஹிமை.

இப்படி ஒருவேளை அமையக்கூடும் பட்சத்தில் முன்னொரு காலத்தில் ஜனித்த ஒருவர் மற்றொரு காலத்திலும் தோன்றியதாக ஆகக் கூடும். ஆனால் ஒவ்வொருவருடைய அனுபவத்தின் அடிப்படையிலும் சுருதி, ஸ்மிருதி ஆகியவற்றின் சாட்சியங்களின் அடிப்படையிலும் இவ்வாறு நேரிட்டதாகக் காண முடியவில்லை.

ஆகவே நாடிக் கிரந்தங்கள் ஸ்தூல பலனில் மட்டுமே நமக்குப் பயனளிக்குமே தவிர நித்திய அல்லது மாத ரீதியாக அல்லது வருஷ பலனை அறிய்  இடம் கொடுக்க மாட்டா.

அல்லாமலும் ஒரு மனிதரைப் போல இன்னொரு மனிதர் சகல விதத்திலும் ஒத்தவ்ராகப் பிறத்தல் அரிது.

.    நவக்கிரகங்களும் வேறு வேறு நிலைமையுள்ளனவாகச் சஞ்சரிக்கும் அற்புதம் சிருஷ்டி  மஹிமை. பன்னிரண்டு ராசிகளில் ஒரு வகையில் நவக்கிரகங்கள் ஒரு காலத்தில் அமைந்து அதே நிலையில் மற்றொரு காலத்தில் ராசியிலும் நட்சத்திர நிலையிலும் அமைவதில்லை. அதே நிலையில் பத்தாயிரம் வருடங்கள் சென்றாலும் அமைவது அசாத்தியம்.

இப்படிப்பட்ட சிருஷ்டி அமைப்பு இருப்பதினால், அவரவர்க்கு நித்திய அல்லது மாதத்திய அல்லது வ்ருஷத்திய பலனைத் தெரிந்து கொள்வதற்கு ஜோதிடர் அவசியம். நாடிக் கிரந்தங்கள் முழுமையாகப் பயன்பட மாட்டா. இது திண்ணம்.

அது மட்டுமன்றி அப்போதைக்கப்போது நாளுக்கு நாள் அமையும் நிலைமைக்கும், ஒரு வித சமப்ந்தத்தினால் வேறு வேறு பலன்கள் நடந்து  கொண்டு வருவதை நாம் கண்ணாரக் காண்கிறோம்.

ஆனால் ஜனன கால நிலைக்கும் தற்கால நிலைக்கும் இருக்கும் நிலையை யூகித்துப் பலாபலனைக் கண்ட்றிவதே ஜோதிடர் பணி. ஆகவே ஜோதிடர் அவசியம்.

இன்றைய ஜோதிடர்கள் ஒருவருடைய பலனைத் தீர்க்கமாகக் கண்டறிய முடியாதபடி இருக்கும் காரணம் திதியினால் ஏற்படும் ஜாதக பலாப்லன்கள் இன்னதென்று அவர்களுக்குத் தெரியாததால் தான்.

நம் முன்னோர்கள்  1) ஒரு மனிதர் இறந்தால் திதியையே அனுஷ்டிக்க வேண்டும் 2) விரதாதிகள் அனைத்தும் அநேகமாய் திதியை அனுஷ்டித்தே செய்யப்பட வேண்டும் 3) திதிக்கும் நட்சத்திரத்திற்கும் இருக்கும் பேதத்தில் திதியே முக்கியம் என்று இப்ப்டி திதியின் முக்கியத்துவத்தை அனுஷ்டானத்தில் காட்டியுள்ளனர்.

“ஜனன காலம் முதல் ஆயுளுடன் ஜீவிக்கும் வரையில் நட்சத்திரம் முக்கியம். பெயரிடுவதும் விசேஷ காலங்களும் நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.” என நம் முன்னோர்கள் நட்சத்திரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டி விட்டு, இறந்தது  முதல் திதியே பிரதானம் என்று அனுஷ்டான வகையில் காட்டியுள்ளனர்.

ஆனால் திதியினால் ஏற்படும் பலாபலத்தின் விசேஷம் ஜாதகத்தில் அனுஷ்டிப்பதில்லை. திதியைப் பார்த்துப் ப்லன் சொல்ல வேண்டுமென்று சொல்லும் ஜோதிட நூல்களும் இல்லை.

இந்த நிலையைச் சுட்டிக் காட்டி விட்டு திதியே மிக முக்கியமானது என்று மிட்டா முனுசாமி தன் ஆராய்ச்சிகளின் மூலமாகக் கண்டறிந்துள்ளதாக விதி விளக்கம் நூலில் கூறுகிறார்.

இனி பஞ்சாங்கத்தில் வரும் பஞ்ச அம்சங்க்ளான வாரம், திதி,நட்சத்திரம்,யோகம், கரணம் ஆகியவை பற்றி நூலாசிரியர் விவரிப்பதை அடுத்துப் பார்ப்போம்.

– தொடரும்

 

‘பாரதிதாசன் பாடலுக்கு இசை அமைக்க இரண்டு வருஷம் ஆச்சு!’ (Post No.3865)

Written by London swaminathan

Date: 30 APRIL 2017

Time uploaded in London:-6-51  am

Post No. 3865

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று “துன்பம் நேர்கையில்…………..” என்ற பாடல். இது திரைப்படத்திலும் இடம் பெற்றுள்ளது. இதற்கு இசை அமைத்தவர் திக்கெட்டும் தமிழ் இசை மணம் கமழ வைத்த M M தண்டபாணி தேசிகர் ஆவார். இதற்கு இசை அமைக்க அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆயிற்றாம். இது அவரே சொன்ன செய்தி. இதற்கு மிகவும் பொருத்தமான ராகம் ‘தேஷ்’ என்னும் ராகம்தான் என்கிறார் தேசிகர்.

 

ஒரு பாட்டின் பொருளுக்கேற்ற ராகத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம் என்கிறார். யார் ஒருவர் பாட்டு எழுதினாரோ, அவருக்கு சங்கீத ஞானம் இருந்தால் அவரே அந்த பாட்டுக்கு ராகமும் போட்டுவிடுவார். பாரதி பாடல்களுக்கு அவரே அமைத்த ராகங்களை பழைய பதிப்புகளில் காணலாம்.

தண்டபாணி தேசிகர் சொல்கிறார்:

“இந்த பாட்டுக்கு சரியான ராகத்தைக் கண்டுபிடித்து இசை அமைக்க இரண்டு வருஷம் ஆச்சு. இதற்கு தேஷ் ராகம்தான் பொருத்தம். பாருங்கள்! நான் இதையே அடானா ராகத்தில் பாடுகிறேன் (தேசிகர் பாடியும் காட்டுகிறார்). இப்படி அடானா ராகத்தில் பாடினால், வருத்தமுற்ற பெண் ‘அம்மா, அப்பா’ என்று அழுதுகொண்டு ஓடிப் போய்விடும். பொருளுக்கேற்ற ராகம் இருக்க வேண்டும். இதை வள்ளுவர் அந்தக் காலத்திலேயே சொல்லி வைத்தார்:-

 

பண் என்னாம் பாடற்கு

பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண் என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண் — குறள் 573

 

பொருள்:-

பாடலின் பொருளோடு இயைந்து வராத பண்ணால் (ராகத்தால்) என்ன பயன்?  அதைப்போல கண்ணோட்டத்துடன் (இரக்கம், அருள்) பொருந்தாத கண்ணால் என்ன பயனுண்டாகும் ?”

 

இதிலிருந்து வள்ளுவனுக்குள்ள சங்கீத ஞானமும் புலப்படும்

 

இதோ பாரதிதாசனின் முழுப்பாடல்:–

 

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? — எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? — நல்
லன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்கமாட் டாயா? — கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா?     …… துன்பம்…

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க — எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க — நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? — கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா?   — துன்பம்…

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது — யாம்
அறிகி லாத போது — தமிழ்
இறைவ னாரின்திருக் குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? — நீ
இயம்பிக் காட்டமாட் டாயா?       —துன்பம்…

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் — தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் — நல்
திறமை காட்டிஉனை ஈன்ற எம்உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? — தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா?   துன்பம்…

——-பாவேந்தர் பாரதிதாசன் (Poem is taken from Project Madurai website)

xxx

 

 

திரு எம் எம் தண்டபாணி தேசிகரின் வெண்கல குரலில் அவர் இயற்றிய பிரபல பாடலை தேஷ் ராகத்தில் கேளுங்கள் இங்கே

https://www.4shared.com/…/o…/Thunbam_nergaiyil_Desh_MMD.html

 

–Subahm–

பணம் பற்றிய தமிழ்ப் பொன் மொழிகள் (Post No.3862)

மே மாத 2017 காலண்டர்

ஹேவிளம்பி சித்திரை- வைகாசி 2017

 

Written by London swaminathan

Date: 29 APRIL 2017

Time uploaded in London:- 8-12 am

Post No. 3862

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

 

Festival/ Holidays: மே 1- மே தினம், மே 10- சித்திரா பௌர்ணமி, புத்த பூர்ணிமா

 

ஏகாதசி— 6, 21

பௌர்ணமி- 10

அமாவாசை-  25

சுபமுகூர்த்த தினங்கள்-  7, 12, 17, 18, 29

 

மே 1 திங்கட் கிழமை

பணம் பத்தும் செய்யும்

 

மே 2 செவ்வாய்க்கிழமை

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை – குறள் 247

 

மே 3 புதன்கிழமை

பணக்கரன் பின்னால் பத்துப் பேர், பைத்தியக்காரன் பின்னால் பத்துப் பேர்

 

மே 4 வியாழக்கிழமை

பணமும் பத்தாயிருக்க வேணும், பெண்ணும் முத்தாயிருக்க வேணும் ,முறையிலேயும் அத்தை மகளாய் இருக்கவேணும்

 

மே 5 வெள்ளிக்கிழமை

பணத்தைப் பார்க்கிறதா, பழமையைப் பார்க்கிறதா?

 

 

மே 6 சனிக்கிழமை

துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கி, சட்டி எட்டுத் துட்டுக்கு விற்றாலும், வட்டிக்கு ஈடல்ல

 

மே 7 ஞாயிற்றுக்கிழமை

பணமிருக்க வேணும், இல்லாவிட்டால் பத்து சனமிருக்கவேணும்

 

மே 8 திங்கட் கிழமை

முதலிலார்க்கு ஊதியம் இல்லை  – குறள் 449

 

மே 9 செவ்வாய்க்கிழமை

பணம் பார்த்துப் பண்டங் கொள், குணம் பார்த்துப் பெண் கொள்

 

மே 10 புதன்கிழமை

பணம் இருந்தால் பாட்சா, பணம் இல்லாவிட்டால் பக்கிரி

 

 

மே 11 வியாழக்கிழமை

காசேதான் கடவுளடா; பணம் இல்லாதவன் பிணம்

 

மே 12 வெள்ளிக்கிழமை

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்

 

மே 13 சனிக்கிழமை

பணம் என்றால் பேயாய்ப் பறக்கிறது

 

மே 14 ஞாயிற்றுக்கிழமை

பணம் என்ன பாடாணம் சுகுணம் ஒன்றே போதும்

 

மே 15 திங்கட் கிழமை

காசு இல்லாதவனுக்கு வராகன் பேச்சு என்ன ?

 

மே 16 செவ்வாய்க்கிழமை

காசு இல்லாதவனை வேசியும் துப்பமாட்டார்கள்

 

மே 17 புதன்கிழமை

காசுக்கு ஒரு புடவை விற்றாலும், நாயின் சூத்து அம்மணம்

 

மே 18 வியாழக்கிழமை

காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கணக்கன் (கம்மாளன்)குஞ்சு ஆகாது

 

மே 19 வெள்ளிக்கிழமை

துட்டுக்கு ஒரு குட்டி விற்றாலும், துலுக்கக்குட்டி மட்டும் ஆகாது

 

மே 20 சனிக்கிழமை

காசு கொடுத்தால் வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்களும் ஆத்தாளும் கூட வருவார்கள்

 

 

மே 21 ஞாயிற்றுக்கிழமை

கால் காசுக்கு குதிரையும் வேணும் கொள்ளும் தின்னக் கூடாது, சிட்டாவும் பறக்கனும்

 

மே 22 திங்கட் கிழமை

காசுக்கு இரண்டும் பிசுக்குக்கு (பீசுக்கு) ஒன்றும்

 

மே 23 செவ்வாய்க்கிழமை

துட்டுக்கு இரண்டு, துக்காணிக்கு மூன்று

 

மே 24 புதன்கிழமை

சுண்டைக்காய் கால் பணம், சுமைகூலி முக்கால் பணம்

 

மே 25 வியாழக்கிழமை

செட்டி போன இடமெல்லாம் வட்டம் காற்பணம்

 

 

மே 26 வெள்ளிக்கிழமை

துட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ , திட்டு வந்து விழுந்ததோ?

 

மே 27 சனிக்கிழமை

காசுக்கு லோபி கழுதையினிடத்திற் போனால் போல

 

மே 28 ஞாயிற்றுக்கிழமை

பணக்கார அவிசாரி பந்தியிலே, அதில்லாத அவிசாரி சந்தியிலே

 

மே 29 திங்கட் கிழமை

செட்டி பணத்தைக் குறைத்தான், சேணியன் நூலைக் குறைத்தான்

 

மே 30 செவ்வாய்க்கிழமை

பணமிருந்தால் பத்தும் வந்து சேரும்

 

 

மே 31 புதன்கிழமை

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே- கா.மு.செரீப் (திரைப்படப் பாடல்)

 

xxxx

பணம் குலமாகும் ,பசி கறியாகும்

xxxxx

 

செட்டி வீட்டில் பணம் இருக்கிறது ஆலமரத்தில் பேய் இருக்கிறது.

 

–Subahm–

 

 

கழுதையும் குயிலும்; தமிழ்ப் புலவர் ஒப்பீடு! (Post No.3849)

Written by London swaminathan

Date: 25 APRIL 2017

Time uploaded in London:- 6-19 am

Post No. 3849

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

குயில், உங்களுக்கு ஏதாவது கொடுத்ததா? கழுதை உங்களுக்கு எதையேனும் கொடுக்க மறுத்து உங்களை விரட்டியதா? இல்லையே. பின்னர் ஏன் மக்கள், குயிலைக் காரணம் இல்லாமல் புகழ்கிறரர்கள்; கழுதையைக் காரணம் இல்லாமல் திட்டுகிறார்கள்? குயிலால் நமக்கு நன்மையும் வரவில்லை; கழுதையால் நமக்குக் கெடுதலும் வரவில்லை. இந்தப் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் அவரவர் குரலினால்தானே வந்தது? நாமும் இனிமையாகப் பேசினால் நமக்கும் குயில் போல் புகழ் உண்டாகும். கழுதை போலக் கத்தினால் நமக்கும் அவப்பெயர் உண்டாகும். இதை வலியுறுத்தி நீதி வெண்பா பாடிய புலவர் சொல்கிறார்:

 

மென்மதுர வாக்கால் விரும்பும் சகம் கடின

வன்மொழியினால் இகழும் மண்ணுலகம் — நன்மொழியை

ஓதுகுயிலேதங்குதவியது கர்த்தபந்தான்

ஏதபராதஞ் செய்த தின்று

–நீதி வெண்பா

பொருள்:-

 

நன் மொழியை = மெல்லிய இனிய ஓசையை

ஓது குயில் = கூவுகின்ற குயில்

ஏது உதவியது = நமக்கு என்ன கொடுத்து விட்டது?

இன்று = ஒன்றுமில்லை

கர்த்தபம் = கழுதை

ஏது அபராதம் செய்தது = என்ன கெடுதி செய்தது?

இன்று = எதுவும் இல்லை

 

(அவ்வாறிருக்க குயிலை மட்டும் உலகம்    விரும்புவதேன்?

அதன் மெல்லிய ஓசையினாலன்றோ!. ஆகவே)

 

சகம் = இந்த உலகம்

மென் = மெல்லிய

மதுர வாக்கால் = இன்சொலால்

விரும்பும் = யாரையும் விரும்பி மகிழ்கின்றது

மண்ணுலகம் = இன்சொல்லால் மகிழ்ந்த இவ்வுலகே

கடின = கொடுமையான

வன்மொழியினால் = வலிய சொல்லால்

இகழும் = எவரையும் இகழ்ந்து பேசும்

 

இதே (பெயர் தெரியாத)  புலவர் இன்னொரு பாடலும் பாடியிருக்கிறார்.

‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’

 

நாவின் நுனியில் நயம் இருக்கிற் பூமாதும்

நாவினிய நல்லோரும் நண்ணுவார் — நாவினுனி

ஆங் கடினமாகில் அத்திருவும் சேராள் முன்

ஆங்கே வரும் மரணமாம்

 

நாவின் நுனியில் = நாக்கு முனையில்

நயம் இருக்கில் = நல்ல நயமான சொற்கள் வெளிவந்தால்

பூமாதும் = லெட்சுமியும்

நா இனிய = இனிய சொற்களால்

நல்லோரும் நண்ணுவர் = பெரியோரும் அணுகுவர்.

நாவின் நுனி = அவ்வாறின்றி நாக்கின் நுனியானது

கடினம் ஆம் ஆகில் = கொடிய சொற்களைக் கூறினால்

அத் திருவும் = முன்னே சொன்ன லெட்சுமியும்

சேராள் = ஆங்கு வரமாட்டாள்

ஆங்கு மரணம் வரும் = சாவும் நேரிடலாம்.

My old article:

ஞயம்பட உரை; வெட்டெனப் பேசேல்; பழிப்பன பகரேல்;

Post No.3114; Date: 2 September 2016

 

–Subham–

பெண்கள் பேசினால்………… தமிழ்ப் புலவர் கதறல்! (Post No.3838)

Written by London swaminathan

Date: 21 APRIL 2017

Time uploaded in London:- 15-59

Post No. 3838

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

ஒரு பெண் பேசினால் பூமி அதிரும்;

 

இரண்டு பெண்கள் பேசினால் நட்சத்திரங்கள் பூமியில் விழும்;

 

மூன்று பெண்கள் பேசினால் கடல் நீர் வற்றிவிடும்;

 

பல பெண்கள் பேசினால் இந்த உலகத்துக்கு என்னதான் ஆகுமோ!

 

இது ஒரு தமிழ்ப் புலவரின் கதறல், அச்சம்!

 

ஆனால் இவை அனைத்தும் தீயது உரைக்கும் வாயாடிகள் பற்றிய வியாக்கியானம். ஏனெனில், அதே புலவர் நல்ல பெண் யார் என்பதற்கு ஆறு நிபந்தனைகள் போட்டும் பாடி இருக்கிறார்.

 

முதலில் தீய பெண்கள் பற்றிப் பார்ப்போம்:-

 

பெண்ணொருத்தி பேசிற் பெரும்பூமி தானதிரும்

பெண்ணிருவர் பேசில்விழும் வான்மீன்கள் – பெண்மூவர்

பேசி லலைசுவறும் பேதையே பெண் பாலர்தாம்

பேசிலுல கென்னாமோ பின்.

–நீதிவெண்பா (எழுதியவர் பெயர் இல்லை)

 

 

(பெண் ஒருத்தி பேசில் பெரும் பூமிதான் அதிரும்; பெண் இருவர் பேசில் விழும் வான் மீன்கள் (நட்சத்திரங்கள்); பெண் மூவர் பேசில் அலை (கட) சுவறும் (வற்றிவிடும்);  என்றால் பெண்ணே (பேதையே) பெண்கள் பலர் பேசத் துவங்கிவிட்டால் பின்னர், இவ்வுலகம் என்னதான் ஆகுமோ?)

 

xxxxxxx

நல்ல பெண்ணுக்கு உரிய ஆறு லட்சணங்கள்

 

நல்ல பெண் என்பவள்—-

1.தாயைப் போல அன்பும்

2.வேலைக்காரி போல தொண்டும்

3.திருமகளைப் போல அழகும்

4.பூமாதேவியைப் போல பொறுமையும்

5.அழகிய கொங்கையுடைய வேசி போல இன்பமும்

6.அமைச்சரைப் போல அறிவுரையும்

உடையவளே பெண் என்று பெயர் உடையவள்.

 

(மற்றதெல்லாம் பெண் உருவில் இறைவன் படைத்த பேய்கள் என்பது சொல்லாமலே விளங்கும்; அதாவது சூர்ப்பநகை, தாடகை, கைகேயி, பூதகி — எல்லாம் ஒன்று சேர்ந்த கட்டழகி!!)

 

அன்னை தயையும் அடியாள்    பணியுமலர்ப்

பொன்னி   னழகுங் புவிப்பொறையும் — வன்னமுலை

வேசி துயிலும் விறன்மந்     திரிமதியும்

பேசி லிவையுடையாள் பெண்

–நீதி வெண்பா (எழுதியவர் பெயர் இல்லை)

(அன்னையின் தயையும், அடியாள்/வேலைக்காரி பணியும், தா மரை மலர் மீதமர்ந்த லெட்சுமி தேவியின் அழகும், புவி/பூமியியைப் போல பொறுமையும், தூங்கும்போது அழகிய முலைகளை உடைய விலைமாது போல இன்பம் தருதலும், வல்லமைமிக்க அமைச்சரைப் போல அறிவும் — இந்த ஆறு அரிய இயல்புகளையும் உடையவளே பெண் எனத் தக்கவள்)

 

–Subham–

விளம்பர குருவின் நல்ல அறிவுரை! (Post No.3833)

Written by S NAGARAJAN

 

Date:20 April 2017

 

Time uploaded in London:-  5-56 am

 

 

Post No.3833

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

விளம்பர குருவின் நல்ல அறிவுரை!

.நாகராஜன்

 

    “படைப்பாற்றல் திறன் எந்த ஒரு பிரச்சினையையும் தீர்த்து விடும்”ஜார்ஜ் லாய்ஸ்

 

 

அறிவியல் யுகத்தில் எந்த ஒரு பொருளையும் விளம்பரப்படுத்துவது ஒரு தனிக் கலை ஆகி விட்டது. ஏராளமான நவீன சாதனங்களைப் பயன் படுத்தி அழகிய மாடல்கள் பஞ்ச் வசனங்களை உதிர்க்க ஏராளமான  உத்திகளுடன்  மக்கள் மனதைக் கவர வழி வகுக்கின்றனர் அட்வர்டைஸ்மெண்ட்’   குருமார்கள்.

 

 

       இந்த அட்’ குருக்களில் (AD – Guru) தனக்கெனத் தனி இடம் பிடித்திருப்பவர் ஜார்ஜ் லாய்ஸ் (George Lois). இவர் தனது அனுபவங்களை எல்லாம் தொகுத்து  படைப்பாற்றலுடன் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான குறிப்புகளை டாம் குட் அட்வைஸ்’ ( Damn Good Advice) என்ற புத்தகத்தில் தந்துள்ளார்.

 

 

       விளம்பர குரு! உலகின் நம்பர் ஒன் படைப்பாளி! கேட்கவா வேண்டும் அறிவுரைகளுக்கு?! 120 அறிவுரைகளை நச்சென்று கொடுக்கிறார் வித விதமான சுவையான சம்பவங்கள், மேற்கோள்களுடன்!

 

 

    முதலில் மனிதர்களை அவர் நான்கு வகையாகப் பிரிக்கிறார்:

 

  • மிகுந்த புத்திசாலிகள், உழைப்பாளிகள்
  • மிகுந்த புத்திசாலிகள், ஆனால் சோம்பேறிகள்
  • வடிகட்டிய முட்டாள்கள், சோம்பேறிகள்
  • வடிகட்டிய முட்டாள்கள், ஆனால் உழைப்பாளிகள்

 

முதல் இரண்டு பிரிவினருக்கு லாய்ஸின் அறிவுரைகள் பயன்படும். மற்ற இரு பிரிவினரிடம் அனாவசியமாகத் தனது அறிவுரைகளைக் கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்கிறார் அவர்.

 

 

       உங்களிடம் ஏராளமான சாதனங்கள் இருக்கலாம். ஆனால் படைப்பாற்றலுடன் கூடிய ஐடியா இல்லை என்றால் வெற்றி பெற முடியாது. ஒரு சின்ன கருத்துருவாக்கம், நல்ல வார்த்தைகள், சித்திரம் இவையெல்லாம் வாழ்க்கையில்  மாயாஜால வெற்றிக்கான வித்துக்கள். முதலில் நல்ல ஐடியாவை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்கிறார் லாய்ஸ்.

 

 

     வாய்ப்புக் கிடைக்கும் போது உங்கள் ஐடியாவை ஒரு விநாடியில் நூற்றில் ஒரு பங்கிற்குள், ஒரு நேனோ செகண்டிற்குள் சொல்லும் அளவு நீங்கள் பக்குவப்பட்டிருக்க வேண்டும்.

 

 

     எதையும் சுருக்கமாகச் சொல்லுங்கள். உரிய வார்த்தைகளில் விளக்குங்கள். முதலில் வார்த்தைகள், பின்னரே சித்திரங்கள் அல்லது வீடியோ மூலமான விளக்கம். இதுவே அனைவரையும் கவரும் எளிய மாஜிக் வழி என்கிறார் அவர்!

 

 

     ஆற்றலுடன் செயல்படுங்கள். ஆற்றல் ஆற்றலைக் கூட்டிக் கொண்டே இருக்கும். இதற்காக மனதையும் உடலையும் வலுப்படுத்தும் விதத்தில் ஏதேனும் செய்து  கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லும் லாய்ஸ் வார் கேம்ஸ்’ எனப்படும் விளையாட்டைத் தான் விளையாடிக் கொண்டே இருப்பதாகக் கூறுகிறார்.

 

  விளையாட்டுக்களில் ஈடுபடுவதும் உடலுக்கும் மனதுக்கும் அதிக ஆற்றலைத் தரும். செஸ் விளையாட்டும் படைப்பாற்றல் திறனை அதிகரிக்கும்.

 

 

    தாமஸ் ஹக்ஸ்லி என்னும் படைப்பாற்றல் நிபுணர் கூறுவது: “செஸ் போர்ட் என்பது தான் உலகம். அதில் உள்ள காய்கள் தான் பிரபஞ்சத்தின் அம்சங்கள். செஸ் விளையாட்டின் விதிகளைத் தான் இயற்கையின் விதிகள் என்று கூறுகிறோம்”

 

 

      முன்னேற்றத்திற்கு வயது ஒரு தடையில்லை. உலகின் பிரபல அறிவியல் நூலான தி ஆரிஜின் ஆஃப் ஸ்பீஸஸ்’ என்ற நூலை எழுதும் போது டார்வினுக்கு வயது 50.

    மக்டொனால்ட் என்ற சங்கிலித் தொடர் உணவு விடுதிகளை ஆரம்பிக்கும் போது ரே க்ராக்கிற்கு வயது 52.

    ஹரே கிருஷ்ணா இயக்கத்தை அமெரிக்காவில் ஆரம்பித்த பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதர் அந்த இயக்கத்தை நிறுவிய போது அவருக்கு வயது 69. அவர் கையில் இருந்த பணம் வெறும் 7 டாலர் தான்!

 

 

     “எப்போதாவது எதையாவது செய்ய முயன்றிருக்கிறீர்களா? அதில் தோற்றிருக்கிறீர்களா? பரவாயில்லை. போனது போகட்டும். மீண்டும் முயலுங்கள். தோல்வியைச் சந்தியுங்கள். ஆனால் நல்ல விதமாகத் தோல்வியை அணுகுங்கள்.”  – வெற்றிக்கான வழியாக லாய்ஸ் தரும் டிப்ஸ் இவை.

 

 

       உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் உங்களை நல்ல விதமாக அறிமுகப்படுத்தும் நல்ல பொதுத் தொடர்பு அதிகாரிகளாக மாற்றுங்கள்.

தேவையில்லாதவருடன் பழகவே பழகாதீர்கள்.

 

     நண்டு எப்போதும் ஒரு நண்டு தான்பாம்பு எப்போதும் ஒரு பாம்பு தான். உங்கள் படைப்பாற்றல் மிக்க வாழ்க்கையில் ஒரு முட்டாள் எப்போதும் ஒரு  முட்டாள் தான்! உங்களின் அருமையான யோசனையை அங்கீகரிக்கத் தெரியாதவரிடம் பழகி என்ன பிர்யோஜனம்? ஒரு நண்டுக்கு நேராக நடக்க உங்களால் கற்பிக்க முடியுமா, என்ன?

 

 

     உலகில் பல அரிய  காரியங்கள் கொஞ்சம் துணிச்சல் இல்லாததனால் தான் வெற்றி பெறாமல் போய்விட்டன. வெப்ஸ்டர் அகராதியில் தைரியம் என்ற வார்த்தைக்கு அபாயகரமான கஷ்டமான, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய விஷயத்தில் அதை துணிகரமாக எதிர்கொள்ள உறுதியாகத் தீர்மானித்தல் என்று அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

     உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரே நபர் நீங்கள் மட்டுமே.போல்ஸ்மூர் சிறையில் 27 வருட காலம் கழித்த நெல்ஸன் மண்டேலா வில்லியம் எர்னெஸ்ட் ஹென்லி என்ற கவிஞரால் 1875ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இன்விக்டஸ் (ஜெயிக்க முடியாத என்ற பொருள் கொண்ட) என்ற கவிதையை அடிக்கடி தன் தோழர்களுக்கு சிறையில் படித்துக் காண்பித்துக் கொண்டே இருப்பார். அதில் வரும் கீழ்க்கண்ட அமர வரிகள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்தது போலவே நெல்ஸன் மண்டேலாவைச் சார்ந்தவர்களுக்கும் உத்வேகம் அளித்து வெற்றியைத் தந்தது.

 

 

     “It matter not how strait the gate, How charged with punishment the scroll, I am the master of my fate, I am the captain of my soul”

 

            இது போன்ற உற்சாகம் தரும் நூற்றி இருபது அறிவுரைகளைப் படித்தவுடன் அட, நல்ல அறிவுரை தான்’ என்று வாழ்க்கையை ஒரு புதிய அணுகுமுறையுடன் உத்வேகத்துடன்  பார்க்க வைக்கிறார் லாய்ஸ்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

இயற்பியல் விஞ்ஞானியான ராபர்ட் ஓப்பன்ஹீமர்   (Robert Oppenheimer) எட்டு மொழிகளில் புலமை கொண்ட நிபுணர். கவிதை,மொழி வன்மை, தத்துவம் போன்ற பல துறைகளில் ஆர்வம் கொண்ட பன்முக விற்பன்னர். இந்த அபாரமான அறிவால்அவருக்குப் பல தடவைகள் பெரும் சங்கடங்கள் ஏற்பட்டதுண்டு.    

                 அவரால் மற்றவர்களுக்குள்ள குறைவான  அறிவுத் திறனைப்     புரிந்து கொள்ள முடியவில்லை.    

                                                                                                                                                   தன்னைப் போலவேஅனைவரும் எல்லாவற்றிலும் வல்லுநர்கள்  என்றே   அவர் எண்ணிக் கொண்டிருந்தார்.

1931ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் இது:

     கலிபோர்னியாவில்,

பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தன் சகாவான       லியோ நெடெல்ஸ்கி (Leo Nedelsky)    என்பவரிடம்  தனக்காக ஒரு   சொற்பொழிவைத்   தயாரிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.  அதற்காக ஒரு புத்தகத்தையும் கொடுத்தார்.  அந்தச்சொற்பொழிவுக்கான    அனைத்தும் ஒரு புத்தகத்தில்  இருந்ததால் அதை லியோ தயாரிப்பது மிகவும் சுலபம் தான் என்று அவர் எண்ணினார்

ஆனால் புத்தகத்தை வாங்கிக் கொண்ட சிறிது நேரத்திலேயே மிகுந்த குழப்பத்துடன்  அவரிடம் லியோ ஓடி வந்தார்.

இது ஜெர்மன் மொழியில் அல்லவா இருக்கிறது என்று  குழப்பத்துடன் அவர் கேட்டார். அவருக்கு ஜெர்மானிய மொழி தெரியாது!

ஆமாம், ஆனால் அது சுலபமான நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும்படி தானே இருக்கிறது என்று பதில் சொன்னார் ஓப்பன்ஹீமர்.

 

அனைவருக்கும் ஜெர்மன் மொழி தெரியும் என்பது அவரது எண்ணம். தன்னைப் போலவே அனைவரையும் இப்படி நினைத்ததால் அடிக்கடி இது போன்ற  சங்கடங்களை அவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது!

*****

 

 

 

 

 

புகழ்ந்தால் வெட்கம் வரும்! வள்ளுவனும் காளிதாசனும் சொன்ன கருத்து (Post No.3829)

Written by London swaminathan

 

Date: 18 APRIL 2017

 

Time uploaded in London:- 8-54 am

 

Post No. 3829

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

 

நம்மை யராவது புகழ்ந்தால் உச்சி குளிர்ந்து, தலை நிமிர்ந்து, யாராவது மாலை போட வரமாட்டர்களா, பொன்னாடை போர்த்த எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று காத்திருப்போம். ஆனால் அறிஞர்களையோ, நல்லோர்களையோ புகழ்ந்தால் அவர்கள் வெட்கப்பட்டு, கன்னம் சிவந்து, தலை குனிந்து பணிவுடன் இருப்பார்களாம். அவர் குனியக் குனிய அவருடைய புகழ் உயர்ந்து கொண்டே போகிறதாம் இவை எல்லாம் காளிதாசனும் வள்ளுவனும் கண்ட உண்மைகள். இதோ வள்ளுவன் வாய்மொழி:-

 

அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

பிணி அன்றோ பீடு நடை – குறள் 1014

பொருள்:-

சான்றோர்க்கு நாணம் என்பது ஒரு ஆபரணமாகும். அப்படி நாணுடைமை இன்றி ஒருவர் பெருமையுடன் நடக்கும் நடை அவரைப் பிடித்த நோய்தானே?

 

இதற்கு உரைகண்ட பரிமேல் அழகர் ஒரு அழகான சம்ஸ்கிருதப் பொன்மொழியை மேற்கோள் காட்டுவார்:-

 

குணாட்யஸ்ய சதஹ பும்சஹ ஸ்துதௌ லஜ்ஜைவ பூஷணம்

 

பொருள்:-

குணம் மிக்க நன்மகனுக்கு புகழப்படுங்கால் வெட்கமுறுதலே அணியாகும்.

வள்ளுவன் சொல்லும் மேலும் இரண்டு குறள்களும் இவ்விடத்திலே சாலப் பொருந்தும்:-

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு (1012)

பொருள்:-

உணவு, உடை முதலியவை எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை ஆனால் நாணம் என்பது மக்களுக்கே உரித்தான சிறந்த பண்பு.

 

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன் ஞாலம்

பேணலர் மேலாயவர் (1016)

மேன்மக்களுக்கு நாணமே வேலி; அதுவின்றி இந்தப் பெரிய உலகத்தில் வாழ விரும்ப மாட்டார்கள்.

‘உயிரினும் சிறந்தன்று நாணே’ என்று தொல்காப்பியரும் செப்புவார்.

 

காளிதாசன் சொல்வது

உலகப் புகழ் கவிஞன் காளிதாசன் , அவனது ரகு வம்ச காவியத்தில் மூன்று இடங்களில் மூன்று மன்னர்களைப் புகழ்ந்த போது வெட்கமுற்றதை எடுத்துக் காட்டுகிறான். இது அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும்,  , படித்துப் பின்பற்ற வேண்டிய ஒரு பண்பு.

 

`स्तूयमानः स जिह्राय स्तुत्यमेव समाचरन्।
तथापि ववृधे तस्य तत्कारिद्वेषिणो यशः॥ १७-७३

stūyamānaḥ sa jihrāya stutyameva samācaran |
tathāpi vavṛdhe tasya tatkāridveṣiṇo yaśaḥ|| 17-73

 

“போற்றத்தக்க காரியங்களையே அதிதி (என்ற மன்னன்) செய்தான். அதனால் அவனைப் புகழ்ந்தனர் அவன் அதைக் கேட்டு வெட்கம் (நாணம்) அடைந்தான். புகழை அவன் வெறுக்க வெறுக்க, அவன் புகழ் வளர்ந்து கொண்டே போனது”- (ரகு 17-73)

 

तस्य संस्तूयमानस्य चरितार्थैस्तपस्विभिः।
शुशुभे विक्रमोदग्रम् व्रीडयावनतम् शिरः॥ १५-२७

tasya saṁstūyamānasya caritārthaistapasvibhiḥ |
śuśubhe vikramodagram vrīḍayāvanatam śiraḥ|| 15-27

 

“தங்கள் மனோரதம் நிறைவேறியதால் முனிவர்கள், மன்னன் சத்ருக்னனைப் புகழ்ந்தனர். அவனுடைய வீரத்தால் அவன் தலை நிமிர்ந்து இருக்க வேண்டும். ஆனால் அவனோ தன் புகழ்ச்சியைக் கேட்டு வெட்கம் அடைந்து தலையைக் குனிந்து கொண்டான்”- (ரகு 15-27)

तस्याभवत्सूनुरुदारशीलः शिलः
शिलापट्टविशालवक्षाः।
जितारिपक्षोऽपि शिलीमुखैर्यः
शालीनतामव्रजदीड्यमानः॥ १८-१७

tasyābhavatsūnurudāraśīlaḥ śilaḥ
śilāpaṭṭaviśālavakṣāḥ |
jitāripakṣo’pi śilīmukhairyaḥ
śālīnatāmavrajadīḍyamānaḥ || 18-17

 

“அந்தப் பாரியாத்ரனுக்கு அகன்ற மார்பையும், பரந்த நோக்கத்தையும் உடைய சீலன் என்ற மகன் பிறந்தான். பகைவர்களை தோல்வி அடையச் செய்து அவன் வெற்றி அடைந்ததை மற்றவர்கள் புகழ்ந்தார்கள். அவன் அதைக் கேட்டு நாணினான்”-ரகு 18-17

 

வள்ளுவன் பத்து குறள்களிலும் காளிதாசன் மூன்று பாடல்களிலும் நவின்ற நாணுடைமை அருகிக்கொண்டே வருவது வருத்ததிற்குரியது.

 

பெண்களுக்கு அணி (ஆபரணம்) போன்ற இந்த அருங்குணத்தை மேலை நாட்டுப் பெண்களிடம் இப்போது காண்பது அரிது. லண்டனில் ரயில்களிலும் கூட, பெரும் கூட்டத்துக்கு இடையே, ஆண்கள் புடை சூழ அமர்ந்து கொண்டு, ‘மேக் -அப்’ செட்டை வைத்துக்கொண்டு வர்ணப்பூச்சுகளைப் பெண்கள்   பூசிக்கொள்வதை நான் தினமும் காண்கிறேன்!

 

–Subham–

Why did a Tamil King Kill 1000 Goldsmiths? (Post No.3821)

Written by London swaminathan

 

Date: 15 APRIL 2017

 

Time uploaded in London:- 15-59

 

Post No. 3821

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

Silappadikaram, the Tamil epic, is the story about Kannaki and Kovalan (The details of the story are given at the end of this post).

Matalan, the Brahmin, is a link in the story. He plays a key role and fills the gaps in the story. He advised the mighty king Cheran Senguttuvan about the good things in life (Dharma).

 

In the Nirpataik (Chapter) Kaathai of the epic he gives some important details:-

While King Senguttuvan was sitting on the throne, the Brahmana Matalan appeared before him and said:

“Long live the King! After going around the Potiyil Hills, sacred to the great sage (Agastya) and bathing in the famous ghat of Kumari, I was returning, when, as if impelled by fate, I went into Madura belonging to far-famed Tennavan (Pandya King) of the sharp sword.

 

There when Matari heard that beautiful (Kannaki) had defeated the Pandyan king of the mighty army with her anklet, she proclaimed in the Taateru manram (common meeting place of the cowherds and cowherdesses, and was generally under a tree):-

“O people of the cowherd community! Kovalan had done no wrong; it is the king who has erred; I have lost her to whom I gave refuge. Have the king’s umbrella and the sceptre fallen from the righteous path?”  With these words, she (Matari) threw herself into the burning flames in the dead of night.

Kavunti, distinguished for her penance, took a vow to die of starvation and thus gave up her life.

I heard in full detail all this and also of the devastation that over took the great city of Madurai ruled by the Pandyan of the golden car. Overcome by this I went back to my native place (KaveriPumpattinam, Port city of Chozas) and leant that Kovalan’s father distributed all his wealth in charity and entered Indra Viharas/Buddhist temple and practised penance. Kovalan’s mother died of pity. Kannaki’s father also gave away his wealth in religious gifts and adopted Dharma in the presence of Ajhivakas. His wife gave up her good life within a few days ( of Kovalan’s execution , followed by the death of Pandya King and Queen and Kannaki burning Madurai city).

 

The lady Matavi (courtesan), shorn of her hair with the flower wreaths therein, entered the Buddha Vihara and received the holy instruction. She told her mother that her daughter should not become a courtesan.

 

Brahmin Matalan continued………….

“These people died because, they heard this news from me, therefore I come to bathe in the holy waters of the Ganges (In order to purify myself). Long live you, O King of Kings!

 

When Matalan gave the king the tragic news about Kannaki’s parents, Kovalan’s parents, Cowherd woman Matari, Jain woman saint Kavunti and courtesan Matavi, the mighty lord of the Cheras, asked Matalan:

 

“May I hear what happened in the highly flourishing Pandya Kingdom after the king’s death?”

Matalan said,

“May you long live, King of the great world! You destroyed in a single day nine umbrellas of nine kings, who joined together in an alliance against your brother in law Killi valavan.

Human Sacrifice of 1000 people!

 

“The victorious (Pandya king) Ver Chezian residing at Korkai (Port City of the Pandyas), offered a human sacrifice of one thousand goldsmiths in a day to divine Pattini (chaste woman) who had twisted off one of her breasts (with which Kannaki burnt Madurai city).

“And when ancient Maduria lost her glory and was chafing in untold trouble owing to royal injustice, this Pandyan prince of the lunar line (Chandra vamsa) which was celebrated for the exemplary way in which it gave protection to the people of the southern regions, mounted in succession the royal throne of Madura, like the (sun) mounting in the morning, with his rays crimson, the divine chariot with the single wheel, yoked to seven horses with tiny bells attached to its necks. May the king of our land live for all time protecting the world from aeon to aeon; live he in fame.”

 

Thus, from the Brahmin Matalan we come to know the fate of cowherdess Matari, Jain woman saint Kavunti, Courtesan Matavi, Parents of Kannaki and Kovlan and the human sacrifice of 1000 goldsmiths.

 

Silappadikaram Story:–

 

Silappathikaram is the earliest among the available Tamil epics. It was written by a poet cum prince Ilango. The story of the epic is as follows:-

Kannaki and Kovalan were the daughter and son of wealthy merchants of the port city Kaveri Pumpattinam of Choza kingdom . Both of them were married  and before long Kovalan fell into the spell of courtesan Matavi. But Kannaki was a faithful wife and received Kovalan wholeheartedly when he came back to her. They wanted to start a new life away from their home town and so they travelled to the renowned city of the Pandyas, Madurai.

 

Kannaki came to Madurai along with her husband Kovalan to sell her anklet and start a new life. But, her husband was unjustly accused of stealing the anklet of the Queen by a GOLDSMITH and was killed under the orders of the Pandya King. To prove the innocence of her husband, and expose the heinous crime of the Great Pandya King, Kannaki went to his court with one of her anklets. She accused the Pandya King of having ordered the death of her husband without conducting proper trial. The Pandya Queen’s anklet had pearls whereas the anklet of Kannaki had gems inside. She broke her anklet in the presence of the king and proved that her husband Kovalan was not guilty. Immediately Pandya King and Queen died, probably of massive heart attack.

Image of Kannaki and Kovalan

Afterwards Kannaki burnt the city by twisting one off her breasts and throwing it in the streets of Madurai City , Capital of the Pandya Kingdom, sparing the elderly, invalids, children, Brahmins and women. In other words, all the bad people were burnt alive. Later she went to Chera Nadu (present Kerala in South India) and ascended to Heaven in the Pushpaka Vimana/ pilotless airplane, that came from the Heaven. When the Chera King Senguttuvan heard about it from the forest tribes who witnessed her ascension, he decided to go to Holy Himalayas to take a stone and bathe it in the holy Ganges and then carve a statue out of it for Kannaki. King Senguttuvan’s brother Ilango composed the Silappadikaram giving all the details about the chaste woman/Patni Kannaki. Though the incidents happened in the second century CE, the epic in its current form is from the fourth or fifth century CE (Post Sangam Period).

–Subham–

 

கிலுகிலுப்பை ஆடிய குரங்கு; சங்கப் புலவர் கண்ட காட்சி (Post No.3811)

Written by London swaminathan

 

Date: 12 APRIL 2017

 

Time uploaded in London:- 8-19 am

 

Post No. 3811

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

குரங்கு பற்றி தமிழ் இலக்கியத்திலுள்ள அதிசயச் செய்திகளை முன்னொரு கட்டுரையில் தந்தேன். இதோ மேலும் சில செய்திகள்:–

 

ஒரு குரங்கு கிலுகிலுப்பை ஆடும் காட்சியே அரிய காட்சி; அதுவும் முத்துக்களைக் கொண்டு கிலுகிலுப்பை ஆடிய பணக்கார குரங்கைப் பார்த்த, சங்க காலப் புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், சும்மா இருப்பாரா?

 

மகா அரன்ன மந்தி மடவோர்

நகா அரன்ன நளிநீர் முத்தம்

வாள்வாய்ருந்தின் வயிற்றகத்தடக்கித்

தோள்புற மறைக்கு நல்கூர் நுசுப்பி

னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற

கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலியாடு நம்

தத்து நீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்

 

சிறுபாணாற்றுப்படை 56-63

 

உப்பு வணிகர் வண்டியுடன் வந்த, அவருடைய பிள்ளைகளைப் போன்ற குரங்கு, வாள் போன்ற வாயையுடைய கிளிஞ்சலில் பற்கள் போன்ற (வெண்ணிறமுடைய) முத்துக்களை இட்டு மூடி, உப்பு வணிகர் பிள்ளைகளுடன் சேர்ந்து கிலுகிலுப்பை விளையாடும் கடற்கரைப் பட்டினமான கொற்கை.

 

உப்பு விற்கும் பெண்கள் இடையையும் ,தோள்புறத்தையும் மறைக்கும் கூந்தலையும் உடையவர் என்று பாட்டு வரிகள் சொல்கின்றன.

 

கொற்கை நகரில் முத்துக்கள் அவ்வளவு மலிவு! மேலும் அந்தக் காலத்தில் கிலுகிலுப்பை விளையாட்டு மிகவும் பிரபலம்; அதோடு, குரங்குகள் மக்கள் செய்யும் எதையும் திருப்பிச் செய்யும் அறிவுடையன என்ற செய்திகளும் இப்பாட்டு வரிகள் மூலம் கிடைக்கின்றன. குரங்கையும் தன் பிள்ளைகளுக்குச் சமமாக வளர்த்த உப்பு விற்கும் பெண்ணின் மனித நேயத்தையும் இப்பாட்டு புலப்படுத்தும். இவை எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழகத்தை நம்முன் காட்டும் சித்திரங்களாகும்.

 

 

நாம் எல்லாம் உயரமான கட்டிடத்தின் மீதேறி கீழே பார்த்தால் தலை சுற்றும்; அதுவும் அங்கு கைப்பிடியோ சுவரோ இல்லாவிட்டால் போகவே பயப்படுவோம். ஆனால் , வானளாவி நிற்கும் ஒரு மரத்தின் உச்சியில், ஒரு குரங்கு அதன் குட்டியுடன் தைரியமாக உட்கார்ந்த காட்சியைக் கண்டவுடன் அதை  நமக்கு சொற்கள் மூலம் வரைந்து காட்டுகிறார் அவ்வையார்-

 

உயர்கோட்டு மகவுடை மந்தி போல

அகன் உறத் தழீ இக் கேட்குநர்ப் பெறினே

குறுந்தொகை 29

இப்படிப் பல இயற்கைக் காட்சிகள் நிறைந்தது சங்க காலத் தமிழகம். நாம் அந்த இயற்கை வளத்தை இனிமேலாவது அழியாமல் காப்பாற்ற வேண்டும்.

xxx

 

My Old Article Monkeys

தமிழ் இலக்கியத்தில் குரங்கு பற்றிய அதிசயச் செய்திகள்

Post no 878 dated 1st March 2014

 

அவ்வையாரின் அருமையான 30 பொன்மொழிகள் (Post No.3768)

Compiled by London swaminathan

 

Date: 29 March 2017

 

Time uploaded in London:- 6-12 am

 

Post No. 3768

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

ஏப்ரல் 2017 காலண்டர்

துர்முகி பங்குனி–  ஹேவிளம்பி சித்திரை 2017

 

அவ்வையாரின் அருமையான 30 பொன்மொழிகள்

 

Festival/ Holidays:

ஏப்ரல் 5- ராம நவமி, 9-மஹாவீர் ஜயந்தி, பங்குனி உத்திரம்; 13–பைசாகி, 14-தமிழ் புத்தாண்டு; ஹேவிளம்பி வருஷப் பிறப்பு; புனித வெள்ளி;  16-ஈஸ்டர்; 29-அக்ஷய த்ருதியை; 30- ஆதி சங்கரர், ராமானுஜர் ஜயந்திகள்

 

ஏகாதசி–6, 22

பௌர்ணமி- April 10

அமாவாசை- April 26

சுபமுகூர்த்த தினங்கள்- April 2, 9, 10, 17, 21

 

Pictures are from Newspapers;Gudi Padwa (New Year) in Maharashtra

ஏப்ரல் 1 சனிக்கிழமை

பயன்கருதாது உதவுக:

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தரும் கொல் என வேண்டா – மூதுரை செய்யுள் 1

 

ஏப்ரல் 2 ஞாயிற்றுக்கிழமை

நல்லோர்க்குதவி=கல்மேல் எழுத்து‘;தீயர்க்குதவி=நீர்மேல் எழுத்து

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப்போல் காணுமே மூதுரை செய்யுள் 2

 

ஏப்ரல் 3 திங்கட்கிழமை

இளமையில் வறுமை துன்பம் தரும்

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக்கால்

இன்னா அளவில் இனியவும் – இன்னாத

நாள் அல்லா நாள் பூத்த நன்மலரும் போலுமே

ஆள் இல்லா மங்கைக்கு அழகு- மூதுரை செய்யுள் 3

 

ஏப்ரல் 4 செவ்வாய் க்கிழமை

மேன்மக்கள் வறுமையிலும் பண்பாளரே

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்- மூதுரை செய்யுள் 4

 

ஏப்ரல் 5 புதன் கிழமை

காலம் அறிந்து காரியம் செய்

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா – மூதுரை செய்யுள் 5

 

ஏப்ரல் 6 வியாழக்கிழமை

நுண் அறிவு

நீர் அளவே ஆக்கும் ஆம் நீர் ஆம்பல் தான் கற்ற

நூல் அளவே ஆகும் ஆம் நுண் அறிவு – மேலைத்

தவத்து அளவே ஆகும் ஆம் தாம் பெற்ற செல்வம்

குலத்து அளவே ஆகும் குணம்–மூதுரை செய்யுள் 7

 

ஏப்ரல் 7  வெள்ளிக்கிழமை

மானம் காக்க உயிர் கொடுப்பர்

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவரோ? – கல்தூண்

பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான் –மூதுரை செய்யுள் 6

 

ஏப்ரல் 8 சனிக்கிழமை

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே –மூதுரை செய்யுள் 8

 

ஏப்ரல் 9 ஞாயிற்றுக்கிழமை

வலியவர்க்கும் துணை வேண்டும்

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்

விண்டு உமிபோனால் முளையாது ஆம்- கொண்டபேர்

ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி

ஏற்ற கருமம்  செயல்- மூதுரை செய்யுள் 11

 

ஏப்ரல் 10 திங்கட்கிழமை

தீயரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே –மூதுரை செய்யுள் 9

 

 

ஏப்ரல் 11 செவ்வாய்க்கிழமை

தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை — மூதுரை செய்யுள் 10

 

ஏப்ரல் 12 புதன் கிழமை

உருவத்தைக் கண்டு மதிப்பிடாதே

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா- கடல் பெரிது

மண் நீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூரல்

உண் நீரும் ஆகிவிடும் மூதுரை செய்யுள் 12

 

ஏப்ரல் 13 வியாழக்கிழமை

மரமண்டை யார்?

சபைநடுவே நீட்டுஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய

மாட்டாதவன் நல் மரம்- -மூதுரை செய்யுள் 13

 

ஏப்ரல்  14  வெள்ளிக்கிழமை

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன்

பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி – – மூதுரை செய்யுள் 14

 

ஏப்ரல் 15 சனிக்கிழமை

அடக்கம் உடையார்

ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்

வாடி இருக்குமாம் கொக்கு — மூதுரை செய்யுள் 16

 

ஏப்ரல் 16 ஞாயிற்றுக்கிழமை

தீயோர்க்குதவி செய்தல் வீண்

பாங்கு அறியாப் புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின்மேல் இட்ட கலம் — மூதுரை செய்யுள் 15

 

ஏப்ரல் 17 திங்கட்கிழமை

வறுமை வந்ததும் பிரிபவர் உறவினரல்லர்

அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் – மூதுரை செய்யுள் 17

 

ஏப்ரல் 18 செவ்வாய் க்கிழமை

மேன்மக்கள் – கீழ்மக்கள் வேறுபாடு

பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும்;என் ஆகும்

மண்ணின் குடம் உடைந்தக்கால்- மூதுரை செய்யுள் 18

 

ஏப்ரல் 19 புதன் கிழமை

கணவனும் செல்வமும் விதிப்படியே

நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்

விதியின் பயனே பயன் – மூதுரை செய்யுள் 19

 

ஏப்ரல் 20 வியாழக்கிழமை

உடன்பிறந்தும் கொல்வர்; தொலைவில் மலையில் உள்ள மூலிகையும் உயிர்காக்கும்

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்கவேண்டா

உடன்பிறந்தே கொல்லும் வியாதி- மூதுரை செய்யுள் 20

 

ஏப்ரல் 21  வெள்ளிக்கிழமை

அடங்கா மனைவி= புலி இருக்கும் புதர்

இல்லாள் கத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை

இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின் – இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ் இல்

புலிகிடந்த தூறுஆய் விடும் மூதுரை செய்யுள் 21

 

ஏப்ரல் 22 சனிக்கிழமை

கற்பக மரத்தில் தங்கினாலும் முன்வினை விடாது

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்

முன்பவத்தில் செய்தவினை மூதுரை செய்யுள் 22

 

ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை

நல்லவர் சினமும் அல்லவர் சினமும்

கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்

பொற்பிளவோடு ஒப்பாரும்……. சான்றோர் சினம் –செய்யுள் 23

 

ஏப்ரல் 24 திங்கட்கிழமை

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பு இல்லா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்– செய்யுள் 24

 

ஏப்ரல் 25 செவ்வாய் க்கிழமை

வஞ்சகரே ஓடி,ஒளிவர்

கரவு உடையார் தம்மைக் கரப்பர்; கரவுவார்

கரவு இலா நெஞ்சத்தவர் –செய்யுள் 25

 

ஏப்ரல் 26 புதன் கிழமை

மன்னர்க்குத் தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை; கற்றோர்க்குச்

சென்ற இடம் எல்லாம் சிறப்பு– செய்யுள் 26

 

ஏப்ரல் 27 வியாழக்கிழமை

வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்- கூற்றமே

இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் — செய்யுள் 27

 

ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை

மருவு இனிய சுற்றமும் வான்பொருளும் நல்ல

உருவும் உயர் குலமும் எல்லாம் – திருமடந்தை ஆம் போது அவளோடும் ஆகும் –மூதுரை செய்யுள் 29

 

ஏப்ரல் 29 சனிக்கிழமை

சாம்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை

ஆம் தனையும் காப்பர் அறிவு உடையோர் – மூதுரை செய்யுள் 30

 

 

Disguised as Veera Shivaji

 

ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமை

மன்னர்கள் மன்னர்களே; தாழார்

தனம் சிறியர் ஆயினும் தார்வேந்தர் கெட்டால்

மனம் சிறியர் ஆவரோ மற்று –மூதுரை செய்யுள் 28

 

-Subham–