ஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 1

pyramid_of_caste_system_in_india

Written by London swaminathan

Date: 15 September 2016

Time uploaded in London: 7-38 AM

Post No.3155

Pictures are taken from various sources; thanks.

 

 

ஜாதிகள் என்பன பிற்காலத்தில் தோன்றியன. வர்ணம் என்பது வேத காலத்தில் தோன்றின. நால் வர்ணம் என்பது பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்திரர்களைக் குறிப்பதாகும். இன்றோ பல்லாயிரம் ஜாதிகள் உள்ளன. இது எப்படிப் பல்கிப் பெருகின என்பது உலகிலேயே மிகவும் அதிசயமான ஒரு விஷயம். யாரும் தீவிரமாக ஆராய்ந்து எழுதவில்லை. வெள்ளைக்காரர் காலத்தில் தர்ஸ்டன் முதலியோர் பட்டியலிட்டு, அவர்களின் பழக்க வழக்கங்களை பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். ஆனால் அவை ஏன் இப்படிப் பிரிந்தன, தோற்றம் என்ன? என்பதெல்லாம் இன்று வரை கேள்விக்குறியாகவே தொக்கி நிற்கின்றன.

 

தமிழ் இலக்கியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து பகு திகளிலும் இருந்த மேற்குடிகள், கீழ்க்குடிகள், புற நானூற்றில் குறிப்பிடப்படும் ஜாதிகள் பற்றி முன்னரே ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளேன்.

 

வேத காலத்தில் வர்ணம் என்று சொன்னது தோலின் நிறத்தை வைத்து அல்ல. வர்ணம் என்ற உடனே பலரும் கலர் = நிறம் = வர்ணம் என்றே நினைப்பர். வர்ணம் என்பது “வ்ரு” என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. “வ்ரு” என்றால் “தேர்ந்தெடு” என்று பொருள். ஒவ்வொருவரும் சில தொழில்களைத் தேர்ந்தெடுக்கலாம். அந்தத் தொழி லின் அடிப்படையில் அவர்கள் வர்ணம் நியமிக்கப்பட்டது. ஆனால் இந்தக் காலத்தில் நடிகர் மகள் நடிகை யாவது போலும், அரசியல்வாதி மகன் அரசியல் தலைவர் ஆவது போலவும் அந்தக் காலத்திலும் இயற்கையாக, இயல்பாக அவரவர் குடும்பத் தொழில்களைப் பின்பற்றினர். ஆயினும் விஸ்வாமித்திரர், தேவாபி போன்ற வேதகால அரசர்கள் பிராமண ர்களாக மாறியதும் மஹாபாரதத்தில் உள்ளது.

 

வெள்ளைக்கார்கள் அடிக்கடி சுட்டிக்காட்டும் வர்ணம் பற்றிய மந்திரம்:-

 

ப்ராஹ்மணோஸ்ய முகமாசீத் பாஹு ராஜன்ய: க்ருத:

ஊரு ததஸ்ய  யத்வைஸ்ய: பத்ப்யாஹும் சூத்ரோ அஜாயத

–ரிக் வேதம் 10-90-12

the-caste-system-during-vedic-civilisation

பிராமணர்கள் வாயிலிருந்தும் (முகம்), அரசர்கள் தோள்களிலிருந்தும் வைசியர்கள் தொடையிலிருந்தும், சூத்திரர்கள் கால்களில் இருந்தும் வந்தனர் என்பது புருஷ சூக்த மந்திரம் ஆகும். இந்த மந்திரம் இவர்கள் அனைவரும் கடவுளின் விராட ஸ்வரூபத்திலுந்து தோன்றினர் என்று சொல்வதிலிருந்து அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பது தெளிவாகிறது. அது மட்டுமல்ல. வாய் மூலம் வேதம் சொல்லிப் பிழைப்பு நடத்துவோர் பிராமணர், தோள்வலி மூலம் அரசாட்சி செய்வோர் க்ஷத்திரியர்கள், தொடைகள், வயிற்றுப் பகுதிக்கு வாழ்வளிப்போர் வணிகர்கள், கால் உழைப்பினால் பணி புரிவோர் சூத்திரர்கள் என்பதும் தெளிவாகும். இந்த உடல் உறுப்பில் ஒன்று இல்லாவிடிலும் ஒருவன் முழு மனிதன் இல்லை. சமுதாயத்தில் இந்த 4 வகையான தொழில் புரிவோர் இல்லாவிடில் அந்த சமுதாயம் இயங்கா து என்பதையும் அறியலாம்.

 

மனுவும் தனது மானவ தர்ம சாஸ்திரத்தில்,

ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே என்பார். அதாவது பிறப் பினால் எல்லோரும் சூத்திரர் களே, தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர். இரு பிறப்பாளர் என்பது வேத  காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது . பின்னர் “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல” பிராமணர்களை மட்டுமே குறித்து நின்றது!

 

கிருஷ்ண பரமாத்மாவும், பகவத் கீதையில் “சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச: ( 4-13) என்கிறார். அதாவது நான்கு வர்ணம் என்பது குணங்களின் அடிப்படையில் என்னால் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறார். இதற்கு இந்தியாவிலுள்ள அறிஞர்கள் பலரும் விரிவான விளக்க உரைகள் எழுதியுள்ளனர். அத்தனையும் தொகுத்தால் அதுவே தனி புத்தகமாகிவிடும். மஹாத்மா காந்தி முதலியோரும் இதை நியாயப்படுத்தி விளக்கம் அளித்துள்ளனர்.

 

ஜாதிகள் பற்றி மஹாபாரதம் முதல் பாரதியார் வரை என்ன சொல்லுகின்றனர் என்பதை இரண்டாவது பகுதியில் காண்போம்.

 

–சுபம்—

My old articles on the same subject:–

Caste Divisions in Ancient Tamil Nadu

Posted on July 4, 2014

 

Eighteen groups of Indians!

Research paper written by London Swaminathan
Research article No.1390; Dated 4 November 2014.

 

 

To be continued……………………………..

ஐயர்கள் உஷார்! பெண்களும் போட்டிக்கு வருகிறார்கள்!! (Post No.3153)

chanda-2

Translated by London swaminathan

Date: 14 September 2016

Time uploaded in London: 9-16 AM

Post No.3153

Pictures are taken from various sources; thanks.

 

“வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்

வேண்டி வந்தோமென்று கும்மியடி

சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்

சாதி படைக்கவும் செய்திடுவோம்”

–தேசியகவி சுப்பிரமணிய பாரதி

cahnda-3

இதனால் சகல ஐயர்களுக்கும் (Priests) அறிவிப்பது என்ன வென்றால் , உங்கள் பிஸினஸ் பார்ட்னர்களாகப் (Business Partners) பெண்களும் வரவிருக்கிறார்கள். போட்டிக்குத் தயாராகுங்கள்!

 

பிரிட்டனில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் நகரம் லெஸ்டர் (Leicester). லண்டனிலிருந்து 130 மைல் தொலைவில் உள்ளது. அங்கே ஒரு புரட்சி நடந்திருக்கிறது. ஒரு இந்துப் பெண்மணி இந்துசமயப் புரோகிதர் ஆகிவிட்டார். அட! அவர் தன்னை புரோகிதர் என்று அறிவித்தால் சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? லெஸ்டர் இந்து சமூகம் அவளை புரோகிதராக ஏற்றுக் கொண்டது! அவர் பெயர் சந்தா வியாஸ்.

 

 

பிராமணக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறு வயதிலேயே ஆசை — புரோகிதராக வேண்டும் என்று. எல்லா ஆசைகளும் அவ்வளவு எளிதில் நிறைவேறிவிடுமா? இல்லை.

 

அவர் கல்யாணம் முடித்து மூன்று மகள்களை   பெற்றெடுத்தார். சமூக ஊழியராகப் பணியாற்றினார். பழைய ஆசை திடீரென மேலுக்கு வந்தது. அப்பாவிடம் அனுமதி கேட்டார். விவாக மந்திரங்களைப் பயின்றார். கல்யாணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளை மட்டும் நடத்துவதென்று முடிவு செய்தார். செய்தி பரவியது.

 

பிரிட்டனில் வசிக்கும் இந்துக்கள், கால, தேச, வர்த்தமானத்தை மனதில் கொண்டு மாற்றங்களை ஏற்கும் மனப்பக்குவம் படைத்தவர்கள். மேலும் வேத காலத்தில் கார்கி, மைத்ரேயி போன்ற உலகப் புகழ் அறிஞ ர்கள் இந்து மதத்தில் இருந்ததையும் அவர்கள் அறிவர். சாவித்திரி, திரவுபதி போன்ற பேரறிஞர்கள் இந்து மதத்தில் இருந்ததும் அவர்களுக்குத் தெரியும். பெரிய வழக்கறிஞர்களைத் தோற்கடிக்கும் அளவுக்கு திரவுபதியும் சாவித்ரியும் வாக்குவாதம் செய்ததை அவர்கள் மஹாபாரதத்தில் படித்துள்ளனர். அது மட்டுமல்ல; அவ்வையா ர் போன்ற சங்க காலப் புலவர்களையும் சபரி போன்ற வேடர் குலப் பெண்களையும் அவர்கள் அறிவர். பெண்களில் மாமேதைகள் அவர்கள்.

 

இந்தப் பிண்ணனியில் சந்தா வியாசுக்கு திருமணம், பிறந்த நாள் வைபவங்கள், புதுமனை புகு விழாக்கள் (கிருஹப் ப்ரவேசம்) நடத்த அழைப்புகள் வந்த வண்ணமுள்ளன.

 

சந்தா வியாசுக்கு ஆங்கிலமும் குஜராத்தி மொழியும் தெரியும் என்பதால் மந்திரங்களின் விளக்கங்களை ஆங்கிலத்திலும் சொல்லி நடத்துவதால் இளம் தலை முறையினருக்கு பெரு மகிழ்ச்சி.

chanda-vyas1

 

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்

–தேசியகவி சுப்பிரமணிய பாரதி

 

–subham–

 

 

 

எல்லோரும் அறிஞர்கள் ஆன காலம்! (Post No.3152)

advice

Written by S NAGARAJAN

Date: 14 September 2016

Time uploaded in London: 6-28 AM

Post No.3152

Pictures are taken from various sources; thanks.

 

நடைச் சித்திரம்

எல்லோரும் அறிஞர்கள் ஆன காலம்!

.நாகராஜன்

 

 

காலம் கலிகாலம் என்று யார் சொன்னது?

பொய்.

வடிகட்டிய பொய்!

எல்லோரும் அறிஞர்கள்! எல்லோரும் விஞ்ஞானிகள்! எல்லோரும் டாக்டர்கள்! எல்லோரும் பேராசிரியர்கள்!

எந்த ஒரு சப்ஜெக்டிலும் யார் வேண்டுமானாலும் எப்போதும் வயது, அந்தசஸ்து, பால்,மதம், மொழி என்ற வேறுபாட்டையெல்லாம் கடந்து ‘அட்வைஸ்’ செய்யலாம்!

பொற்காலம் ஐயா இது, பொற்காலம்!!

 

 

காலையில் எழுந்து இத்யாதி காரியங்களை முடித்து விட்டு டிபன் சாப்பிட உட்கார்ந்தேன்.இட்லிக்கு சட்னி என்ற பெயரில் தேங்காயை மிக்ஸியில் ஒரு அலசு அலசி உப்பு போடாமல், கடுகு தாளிக்காமல் வந்தது ஒரு வஸ்து.

முழித்தேன்.

 

கடுகு சேர்த்தால் எட்டு கலோரி கூடி விடும்! உப்பு எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும்!

அப்பாவியாக நான், “வாட்ஸ் ஆப்பா? க்ரூப் அட்வைஸா’ என்று சகதர்மிணியை நோக்கிக் கேட்க தன் வாட்ஸ் ஆப் தகவலை அமுல் படுத்தியதை தோழிகளுக்குப் பெருமிதத்துடன் தெரிவிக்க அவள் விரைந்தாள்.

 

கடைக்குப் போக வேண்டும். ஸ்கூட்டர் சாவியைத் தேடினேன். மகன் ஓடி வந்தான் கையில் லாப் டாப்புடன், ஏதோ ஒரு சைட்டைப் பார்த்தவாறே

‘சாவி என் கையில் இருக்கிறது. தினமும் காலையிலும் மாலையிலும் நடக்க வேண்டும். நடப்பதே நல்லது. இன்னிக்கு ஒரு பத்தாயிரம் ஸ்டெப் போட்டால் போதும்’ கையில் ஒரு வாட்சைக் கட்டி விட்டான். அது நடக்கும் போது எத்தனை ஸ்டெப் போட்டோம் என்பதைக் காண்பிக்கும் வாட்ச் போன்ற ஒரு வஸ்து. விஞ்ஞான  விபரீதம்!

 

 

ஆமாம் என்றேன். நடக்க முடியாமல் நடக்க ஆரம்பித்தேன். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாயிற்று.

அப்பாடா, நிம்மதியாக நியூஸ் சானலை ஆன் செய்தேன். பேரன் ஓடி வந்தான்.

அதை மாற்றி டிஸ்கவரி சானலுக்குப் போனான்.

‘தாத்தா, ரொம்ப பார்க்கக் கூடாது. கண் கெட்டு விடும். என் மிஸ் சொன்னாள்.’

ஓஹோ, அப்படியா?!

advice-2

காலிங் பெல் அடித்தது. ஆஹா, பேப்பர் வந்து விட்டது!

சரி , கதவைத் திறந்து பேப்பரை வாங்கப் போனேன். இதை யாரும் தடை செய்து விட முடியாதல்லவா! நிம்மதியாகப் படிக்கலாம்!

அடுத்தவீட்டுக்காரர் பணிவுடன் ஒரு குட் மார்னிங் போட்டார்.

பேப்பர்காரரை நோக்கி அதட்டல் உருட்டலான பார்வையுடன், ‘நாளையிலிருந்து இங்கு பேப்பர் போடாதே!’ என்றார்.

பதறிப் போன நான், ‘ஏன்’ என்று பார்வையாலேயே கேட்டேன். பேச முடியவில்லை. அதனால்!!

 

 

‘ஸார் யார் தெரியுமா? ஆல் இந்தியா ரேடியோவில்  காலையில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை காலை மலர் நிகழ்ச்சியில் தினமும் பெசி வருபவர். ஒரு பேப்பரைத் தயாரிக்க எவ்வளவு மரங்கள் காடுகளில் அழிக்கப்படுகிறது, உனக்குத் தெரியுமா? பேசாமல் நீ கூட வேறு ஒரு வேலையைத் தேடிக் கொள்ளலாம். உனக்கும் நல்லது, நாட்டின் சுற்றுப்புறச் சூழலுக்கும் நல்லது!’

 

அவன் அரண்டு போய் ஓட ஆரம்பித்தான்.

நானோ! – ஙே என்று முழித்தேன்.

வேர்க்க விறுவிறுக்க வீட்டினுள் நுழைந்தேன்.

 

 

என் மருமகள், ‘ இந்த ஆல் இந்தியா ரேடியோவிற்குக் ஸ்கிரிப்ட், பாக்யாவிற்குத் தொடர்  எழுதுவது என்ற வேலை எல்லாம் வேண்டாம். இப்ப தான் என் ஃபிரண்ட் – அதான், பிஸியோதெராபிஸ்ட் பிரேமா ஸ்கைப்பிலே கூப்பிட்டு டெமோ செய்து காண்பித்தாள். நூறே நூறு பயிற்சிகள் தான். முதல் ஐந்தை இன்று ஆரம்பிக்கலாம். உடம்புக்கு ரொம்ப நல்லது!’

 

அடடா! என்ன அக்கறை!!

உலகத்திற்குத் தான் நம் மீது எத்தனை அக்கறை!!

சும்மாவா சொன்னார்கள் இரத்த பாசம் என்று!

எல்லோரும் அறிஞர்களே!

இப்போது சொல்லுங்கள், காலம் கலிகாலம் என்று யார் சொன்னது?

பொற்காலம் ஐயா இது, பொற்காலம்!!

 

***********

 

 

 

நூறு வயதானவர்களின் மகிமை! (Post No.3136)

100-yr-old-berry-seller

100 year old lady sells berries on the road!

Written by London Swaminathan

 

Date: 8 September 2016

 

Time uploaded in London: 21-34

 

 

Post No.3136

 

Pictures are taken from various sources; thanks.

A over 100 year old Sadhu at the Shambhu Nath Hindu Cremation Area, Kathmandu Nepal

A over 100 year old Sadhu with his incredible long hair at the Shambhu Nath Hindu Cremation Area, Kathmandu Nepal

ஒரு பந்தியில் (வரிசையில்) யார் யார் உட்கார்ந்தால் அந்த வரிசையே தூய்மையாகிவிடும், புனிதமாகிவிடும் என்று மனுஸ்மிருதியில், மனு ஒரு பட்டியல் கொடுக்கிறார். அதில் 100 வயதுக் கார்களையும் சேர்த்திருக்கிறார். அவர்கள் அனுப்பும் VIBRATIONS வைப்ரேஷன்ஸ் — எல்லோரையும் உயர்த்திவிடும். அதுவும் அவர்களை யாருடன் சேர்த்து வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்கையில் 100 வயதானவர்களின் மதிப்பு இன்னும் உயர்கிறது!

அவர்களுக்கு “பங்தி  பாவனாள்” என்று பெயர்

 

ஆக்ரயா: சர்வேஷு வேதேஷு சர்வ ப்ரவசனேஷு ச

ஸ்ரோத்ரியான் அன்வயஜா: ச ஏவ விக்ஞேயா:  பங்க்திபாவனா:

 

வேதார்த்தவித்ப்ரவக்தா ச ப்ரஹ்மசாரி சஹஸ்ரத:

சதாயுஸ்சைவ விக்ஞேயா: ப்ராஹ்மணா:  பங்க்திபாவனா:

 

மனு 3- 184-186

 

வேதங்களைக் கற்றுத் தேர்ந்த அறிஞர்கள், அதன் ஆறு அங்கங்களையும் (ஷட்+ அங்கம்= ஷடங்கம்=சடங்கு) அறிந்தவர்கள், அவர்கள் வம்சத்தில் பிறந்தவரகள், ஆகியோர் வரிசையைப் புனிதப்படுத்துவர்.

 

குருவினிடத்தில் வேதப் பொருளை அறிந்தவன்,  அதைச் சொல்லிவைப்பவன், பிரம்மச்சாரி, ஆயிரம் பசுக்களை தானம் செய்தவன், நூறு வயதானவன் ஆகியோரும் எங்கே உட்காருகிறார்களோ அந்த வரிசையே தூய்மை ஆகிவிடும்!

 

மனு ஸ்மிருதியில் மூன்றாவது அத்தியாயத்தில் மனு இதைச் சொல்லுகிறார்.

0phil

இந்தப் பட்டியலில் உள்ள எல்லோரும் வேதம் கற்றவர்கள், தானம் செய்தவர்கள். ஆனால் இதில் வயதுக்கு மதிப்பு கொடுக்கப்பட்டிருப்பது விஷேஷமானது.  நூறு வயது ஒருவர் வாழ்கிறார் என்றால் அவர் வாழ்வு சுத்தமானதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்; மேலும் வேத மந்திரங்களில்  நிறைய இடங்களில் “நூறாண்டுக் காலம் வாழ்க; நோய் நொடியில்லாமல் வாழ்க” என்ற பிரார்த்தனை வருகிறது.

 

வேதங்களின்படி ஒருவனுடைய ஆயுள் நூறு வயதுதான். ஆயுர்வேத, சோதிட சாத்திரப்படி ஒருவனின் வயது 120 ஆகும்.

 

வாழ்க நூற்றாண்டு கண்டோர்!

கல்வி பற்றி இந்துக்களின் அபூர்வ கண்டுபிடிப்பு (Post No.3098)

girls school

Written by London Swaminathan

 

Date: 28 August 2016

 

Time uploaded in London: 7-09 AM

 

Post No.3098

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

children 1

லண்டனுக்கு வருகை தந்துள்ள மாயூரம் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியாரை 45 நிமிடங்கள் பேட்டி கண்டேன்; இந்துக்களின் விடுமுறை பற்றி அவர் சொன்னதை நேற்று வெளியிட்டேன்; இன்று கல்வி என்பது பற்றி இந்துக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி அவர் கூறியதைப் பார்ப்போம்.

 

நீங்கள் நடத்தும் வேத பாடசாலையில் மாணவர்களுக்கு என்ன கற்பிக்கிறீர்கள், எத்தனை ஆண்டுகள் என்று கேட்டேன்?

வேதத்தில் தேவையான சில பகுதிகளும் ஆகமங்களும் கற்பிக்கப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு இது நீடிக்கும் பின்னர் ஒரு சான்றிதழ் வழங்குகிறோம். அது தமிழ்நாடு அரசு அங்கீக ரம் பெற்ற தகுதி. கோவில்களில் அர்ச்சகராகப் பணி செய்ய அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றார்.

 

நீங்கள் ஆங்கிலம் முதலிய விஷயங்களை ப் பள்ளிக் கல்வி போல கூடவே சேர்த்துக் கற்றுத் தரலாமே; அவர்களின் பிற்காலத்துக்கு உதவுமே என்றேன்.

 

ஆஸ்திரேலியாவில் வசித்த சங்கரன் என்ற நல்ல உள்ளம் படைத்த ஒருவர், வேத பாடசாலைகளுக்குச் சென்று, பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தைக் கற்பித்து வருகிறார். அவர் கிராமங்களுக்கும் சென்று எல்லா வகுப்பினருக்கும் இப்படி ஆங்கிலம் கற்பிக்கிறார். தனது சொந்தக் காசை செலவழித்து அரிய பணியைச் செய்கிறார். அவர் எங்களுடைய வேத பாட சாலைக்கும் வந்து அடிப்படை ஆங்கிலம் கற்றுத் தருகிறார். எனக்கும் இதன் தேவை புரிகிறது. இன்று உலகெங்கிலும் உள்ள இந்து ஆலயங்களுக்கு அர்ச்சகர்கள்  தேவைப்படுகிறார்கள். ஆகவே அவர்களுக்குப் பொது அறிவும் தேவைப்படுகிறது ; அதையும் நாங்கள் சொல்லித் தருகிறோம் என்றார்.

children 2

எனக்கு அப்போதும் திருப்தி ஏற்படவில்லை. நல்ல கல்வித் தகுதி இல்லாவிடில் அவர்கள் வருங்கால உலகில் வாழ்வது கடினமே; எப்படி முழு அறிவு பெற முடியும்? என்றேன்.

 

“வேதக் கல்வி என்பது வெறும் மனப்பாடம் செய்வது மட்டுமல்ல. வகுப்பு முடிந்தவுடன் அவர்களுக்குள், கற்றுத தந்த விஷயங்களை விவாதிக்கும் வகுப்பும் உண்டு” என்றார்.

(அதாவது லண்டனில் எனது பிள்ளைகள் பள்ளி வகுப்பில் நடந்தது போல அந்தக் காலத்தில் இருந்தே, இந்துக்கள் கல்வி கற்கும் இடங்களில் ரிவிஷன், விவாதம், கலந்துரையாடல் இருப்பது எனக்கு புதிய, மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது).

அவர் மேலும் சொன்னார்:

கல்வி என்பது ஆசிரியர் மட்டும் கற்றுத் தருவது அல்ல;

 

 

आचार्यात् पादमादत्ते पादं शिष्यः स्वमेधया ।
सब्रह्मचारिभ्यः पादं पादं कालक्रमेण च ॥

 

 

ஆசார்யாத் பாதம் ஆதத்தே பாதம் சிஷ்ய: ஸ்வமேதயா

சப்ரம்மசாரிப்ய: பாதம் பாதம் காலக்ரமேன ச

என்று அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

பொருள்:

 

ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது கால்வாசி (25 சதவிகிதம்) ; மாணவன் சுயபுத்தியால் கற்றுக்கொள்வது இன்னொரு கால் வாசி; சக மாணவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது கால் வாசி; காலம் செல்லச் செல்ல கற்றுக் கொள்வது இன்னொரு கால் பகுதி.

 

என்று  சுவாமிநாத சிவாச்சாரியார்  சொன்னார்.

என்ன அற்புதமான ஸ்லோகம் என்று சொல்லி வியந்தேன்.

boys play 1

என் கருத்து:

 

நேற்று, மனனம் செய்தல் (Memory Techniques), அதைத் திருப்பிச் சொல்லி நினைவுகூறுதல் (Revision), மாதத்துக்கு குறைந்த எட்டு நாள் விடுமுறை விடுதல் (8 Days Holiday a month) ஆகியன பற்றி எழுதினேன். இன்று இந்த ஸ்லோகத்தை மீண்டும் மீண்டும் படியுங்கள். என்ன அற்புதமான ஒரு கல்விக் கொள்கை (Concept of Teaching)  நம் முன் னோர்களிடம் இருந்தது என்பதை அறிய முடியும்.

 

ஒரே ஆசிரியர் ஒரே மாதிரி எல்லோருக்கும் கற்று த் தருகிறார். அதில் ஒருவர்தான் தலை சிறந்த கல்விமானாகவோ, விஞ்ஞானியாகவோ, நாட்டின் தலைவராகவோ வருகிறார். ஏன்? ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது 25 சதவிகிதமே; மாணவன் சுய புத்தியைப் பயன்படுத்தி அதைத் துருவித் துருவி ஆரா ய்ந்து மேலும் கற்க வேண்டும்; தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அகந்தையில் மனக் கோட்டை கட்டாமல் மற்ற மாணவர்களுடன் கலந்துரையாடி, மாற்றுக் கருத்துகளைக் கிரஹிக்க வேண்டும். இறுதியில் மூளை வளர்ச்சியினாலும், அனுபவ அறிவாலும் கடைசி 25 சதம் அறிவு வந்து 100 சதவிகித அறிவு பெற்றவனாக திகழ முடியும்.

 

உலகில் பெண் கல்விக்கே முதலில் சிலபஸ் (Syllabus) போட்டுக் கொடுத்தது இந்துக்கள்தான் என்று 64 கலைகள் பற்றிய கட்டுரையில் காட்டினேன். அது வாத்ஸ்யாயன மஹரிஷி எழுதிய காம சூத்திரத்தில் உள்ள பட்டியல். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் 64 கலைகளில் வல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நாடு இது.!!

children 3

வளர்க கல்வி: மிளிர்க பாரத மணித் திரு நாடு!!

 

 

புத்தி கூர்மை: பலே! பலே! ரபலே!!! (Post No.3090)

gargantua-252683

Written by London Swaminathan

 

Date: 25  August 2016

 

Time uploaded in London: 8-06 AM

 

Post No.3090

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் பிரான்ஸ்வா ரபலே. அவர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் மறுமலர்ச்சி காலத்தில் வாழ்ந்தார். கிறிஸ்தவ மத போதகராகவும், அங்கத எழுத்தாளராகவும், நகைச்சுவை எழுத்தாளராகவும், கிரேக்க மொழி அறிஞராகவும் திகழ்ந்தவர். அவர் எழுதிய ‘கார்காங்டுவா’ என்ற நூல் பிரெஞ்சு அரசியலையும் வாழ்க்கை முறையையும் கிண்டல், கேலி செய்யும் புகழ்மிகு புத்தகம் ஆகும்.

 

ஒரு முறை அவர் தெற்கு பிரான்ஸில் ஓரிடத்தில் பணமே இல்லாமல் மாட்டிக்கொண்டார். தலைநகரான பாரீசுக்குத் திரும்பிவருவதற்கு அவர் கையில் தம்பிடிக் காசு (பைசா கூட) இல்லை.

 

அந்தக் கிராமத்திலுள்ள ஒரு சத்திரத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தார். அதை நடத்தும் பெண்மணியிடம் தான் முக்கிய விஷயங்களை எழுதவிருப்பதால் தனக்கு ஒரு எழுத்தர் தேவை என்றார்.

அப்பெண்ணும், அதற்கென்ன? என் மகன் கெட்டிக்காரன்; 12 வயது என்றாலும் அச்சுப்பொறித்தாற் போல எழுதிக் கொடுப்பான். அவனை சம்பளத்துக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பிவைத்தார்.

 

பையனும் வந்தான். ரபலே பேசினார்: டே! பையா! மிக முக்கியமான ஒரு காரியத்தைச் செய்யப்போகி றேன். ஆகையால் கவனமாகக் கேட்டு எழுது என்று சொல்லி துவங்கினார்; முதலில் எழுது:

 

ராஜாவுக்கான விஷம்

இதையும் எழுது

மஹாராணிக்கான விஷம்

ஆர்லியன்ஸ் நகர பிரபுவுக்கான விஷம்

 

இதையெல்லாம் கொட்டை எழுத்தில் எழுது. ஏனென்றா ல் இவை எல்லாம் டப்பா மீது ஒட்டும் அடையாள வில்லை என்றார்.

Gargantua_GF

பையனுக்கு பயம்! இருந்தாலும் அச்சுப்பொறித்தாற் போல, மாக்கோலம் போல எழுதினான்.

 

இதற்கிடையில் ரபலேயோ ஒரு பெட்டியிலிருந்த சாம்பலைச் சுரண்டினார். அதைத் தன் மூக்குப்பொடி டப்பிக்குள் போட்டுக் குலுக்கினார். முகத்தை மிகவும் கடுமையாக வைத்துக் கொண்டு காகிதத்தில் போட்டார்.

 

இதைப் பார்த்த எழுத்தருக்கு — 12 வயது பாலகனுக்கு — மேல் மூச்சூ கீழ் மூச்சு வாங்கியது. அலறி புடைத்துக்கொண்டு மாடியிலிருந்து இறங்கி அம்மா, அம்மா! இவன் ஒரு கொலைகாரன்,  ராஜா ராணியை விஷம் வைத்துக் கொள்ள விஷம் தயாரித்துக் கொண்டிருக்கிறான் என்று எல்லாவற்றை யும் சொல்லி முடித்தான்.

 

உடனே அப்  பெண் போலீசுக்கு ஆள் அனுப்பினாள்; அவர்களும் விரைந்தோடி வந்து ஆளை க் கையும் களவுமாகப் பிடித்து,

யாரடா நீ, அயோக்கியா? என்றனர்.

 

பிரபல ரபலேயை அவர்களுக்குத் தெரியவில்லை. அவரும் பதில் சொல்லாமல் பேந்தப் பேந்த முழித்தார். ஆளை அலாக்காகத் தூக்கி ஒரே கட்டாக கட்டி வண்டியில் பாரீசுக்குக் கொண்டு சென்றனர். போலீசுக்கு மிகவும் பெருமிதம். பிரான்ஸு நாட்டின் ராஜத்  துரோகியைக் கண்டுபிடித்து  விட்டோ ம்; நமக்குப் பரிசு கிடைக்கும்; இவனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று கணக்குப் போட்டனர்.

rabelais 1

பாரீஸ் நகரத்துக்கு வந்து சேர்ந்தவுடன் அவசரமாக மன்னர் தலைமையில் நீதிமன்றம் கூடியது. மன்னருக்கோ ரபலேயைப் பார்த்தவுடன் அதிர்ச்சி! திகைப்பு! ரபலே நடந்தவற்றை அப்படியே விவரித்தார். மன் னரும் புன்சிரிப்புடன் ரபலேயை விடுவித்தார்.

 

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் ! கத்தியை விட பேனா வலிமை வாய்ந்தது அல்லவா!

 

எவரெஸ்ட் வெற்றியும் உயிர் தியாகங்களும்! (Post No.3087)

everestroutemap

Article Written S NAGARAJAN

Date: 24th  August 2016

Post No. 3087

Time uploaded in London :– 5-29 AM

 

(Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா 19-8-16 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

எவரெஸ்ட் வெற்றியும் உயிர் தியாகங்களும்!

.நாகராஜன்

Mt._Everest_from_Gokyo_Ri_November_5,_2012

மேலை நாட்டினரின் மலையேறும் நோக்கமும் நமது மலையேறும் நோக்கமும் முற்றிலும்  மாறுபட்டது” –ஜம்லிங் டென்சிங் (எவரெஸ்டை வெற்றி கொண்ட டென்சிங்கின் மகன்)

 

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வெற்றி கண்ட முதல் மனிதர் டென்சிங் நார்கே. (தோற்றம் 29-5-1914 மறைவு 9-5-1986) இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்குள்ள போற்றப்படும் நூறு பேர்களில் அவரையும் சேர்த்துக் கொண்டாடியது டைம் பத்திரிகை.

1953ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் சர் எட்மண்ட் ஹிலாரியுடன் அவர் ஏறினார்.

 

மேலை நாட்டினருக்கு  மலை ஏறுவது என்பது ஒரு விளையாட்டான பொழுது போக்கு. ஆனால் இந்தியா, திபத் மற்றும் நேபாளத்தில் உள்ள ஷெர்பாக்களுக்கோ அது ஒரு வழிபாடு போல. எவரெஸ்ட் அருகில் உள்ள இடத்தை அவர்கள் புனிதத் தாய் என்று போற்றி வழிபட்டு வருகின்றனர்.

 

எவரெஸ்ட் வெற்றியைப் பற்றி டென்சிங் கூறுகையில், “நான் முயன்றேன். ஏழு  முறை முயன்றேன். தாயின்  மீது தவழத் துடிக்கும் சேயைப் போல. முடிவாக அவள் வெற்றியை அருளினாள் என்று கூறினார்.

 

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று பலியானோர் எண்ணிலடங்காத பேர்கள்.

 

1996ஆம் ஆண்டு மே மாதம் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் பனிப்புயலில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். கோரமான விபத்து என்ற பெயரை இது பெற்றது. எவரெஸ்ட்  மீது ஏறுவதில் வருடா வருடம் பலர் உயிரிழப்பது வழக்கமாக ஆனது.

 

1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி பிரிட்டனைச் சேர்ந்த மலையேறும் வீரர்களான ஜார்ஜ் மல்லாரி மற்றும் ஆண்ட்ரூ இர்வின் ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் மிக உயரத்தில் உள்ள முகாமிற்குச் சென்று தங்கினர்.

 

நான்கு நாட்கள் கழித்த பின்னர் அவர்கள் வடகிழக்கே சிகரத்தின் கீழ் செங்குத்தாக 800 அடிக்குக் கீழாக இருப்பதைக் கண்டதாக சிலர் பின்னர் கூறினர். ஆனால் அப்போது பிரம்மாண்டமான மேகக் கூட்டம் அவர்களை மூடியது.

பின்னர் அவர்கள்  இருவரையும் யாரும் காணவே இல்லை.

அவர்கள் என்ன ஆனார்கள்? புரியாத புதிராக இருந்தது.

அறிவியல் ஆய்வாளர்கள் அந்த இருவரும் 29029 அடி உயரத்தில் மலை உச்சியை அடைந்து கீழே இறங்கி வரும் போது ஜூன் 9ஆம் தேதி இறந்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தனர்.

 

1933ஆம் ஆண்டு இர்வினின் ஐஸ் கோடரி 28907 அடியில் கண்டு பிடிக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு மலாரியின்  உடலை எவரெஸ்டின் வடக்குப் பகுதியில் ஒரு மலையேறும் குழு கண்டது. சில நாட்களில் அதே பகுதியில் இன்னொரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அது இர்வினா என்ற சந்தேகமும் எழுந்தது.

 

ஆனால் அவர்கள் எவரெஸ்ட் உச்சியை அடைந்தனரா என்பதை யாராலும் உறுதி செய்ய முடியவில்லை.

எவரெஸ்டில் டென்சிங்கின் வெற்றியைக் கொண்டாட வெற்றி கண்ட 50ஆண்டு விழாவின் போது டென்சிங்கின் மூன்றாவது  மனைவிக்குப் பிறந்த டென்சிங்கின்  மகன், ஜம்லிங் டென்சிங் (Jamling Tenzing) எவரெஸ்ட் மீது ஏறினார். அவருக்குத் துணையாக சர் எட்மண்ட் ஹிலாரியின் மகனும் கூடச் சென்றார். தன்னை ஒரு நாளும் மலை ஏறுவதை தன் தந்தை ஊக்குவிக்கவில்லை என்று கூறிய ஜம்லிங், “ஆனால் அவன் ஒரு நாள் நிச்சயம் எவரெஸ்ட் மீது ஏறி விடுவான் என்று மற்ற அனைவரிடமும் டென்சிங் தன்னைப் பற்றிக் கூறியதாகத் தெரிவித்தார்.

 

 india-1953-conquest-of-mount-everest-set-fine-mint-20096-p

டென்சிங் பற்றிய ‘எவரெஸ்ட் என்ற ஆங்கிலத் திரைப்படம் இமேஜ் மேக்ஸிமம் என்பதன் சுருக்கமான ஐமேக்ஸ் உத்தியில் 1998ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதைத் தயாரிக்க ஜம்லிங் எவரெஸ்ட் பெரிதும் உதவினார். அவருக்கு 25000 டாலர்கள் தரப்பட்டது. ‘பணம் பெரிதல்ல, ஷெர்பாக்களைப் பற்றி உலக மக்கள் அறிய அது உதவியதே, அதைத் தான் பெரிதாக நினைக்கிறேன், என்று கூறி மகிழ்ந்தார் ஜம்லிங்.

45 நிமிடமே ஓடும் எவரெஸ்ட் படம் ஐமேக்ஸ் உத்தியில் தயாரிக்கப்பட்ட படங்களிலேயே அதிக வசூலை அள்ளிக் குவித்தது.

 

 

‘டச்சிங் மை ஃபாதர்ஸ் சோல் (Touching  my Father’s Soul) என்ற புத்தகத்தை அவர் எழுதி 2001 ஆம் ஆண்டில் வெளியிட்டார். புத்தகம் அமோகமாக விற்பனையைக் கண்டது, 18 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஜம்லிங் இப்போது மலையேறும் வீரர்களுக்கான பயிற்சியைத் தருவதற்கான ஒரு மையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகிறார்.

அத்துடன் உத்வேகம் ஊட்டும் சிறந்த மோடிவேஷனல் பேச்சாளராகவும் திகழ்கிறார்.

 

 

தந்தைக்கு ஏற்ற பிள்ளை என்று உலகம் அவரை பாராட்டுகிறது.

 

புனிதமான அன்னை எனக்கு வெற்றியை அருளினாள் என்று ஜம்லிங்கும் இமய மாதாவைத் தொழுது போற்றி வணங்குகிறார்!

 

rod2

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,

 

தென் துருவத்தில், அண்டார்டிகா குளிர் என்பது பயங்கரமான குளிர்! வான்பௌதிக இயலாளரான ரோட்னி  மார்க்ஸ் (astro physicist – Rodney Marks) என்பவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். அண்டார்டிகாவில் உள்ள அமெரிக்க ஆய்வு மையமான அமுண்ட்ஸென் ஸ்காட் நிலையத்தில் தென் துருவ ஆய்வுப் பணிக்காகச் சென்றார்.

 

2000ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதியன்று திடீரென்று அவர் மரணமடைந்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

 

குளிரோ கடும் குளிர். விமானம் பறப்பது என்பது எளிதான காரியமல்ல.ஆகவே அவரது உடல் வசந்த காலம் வரும் வரை அங்கேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டு பின்னர் நியூஜிலாந்திற்கு பருவநிலை சீரடைந்த பிறகு கொண்டு வரப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் மெதனால் விஷத்தால் மரணமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

 

 உடனடியாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த நிலையத்தில் இருந்த 49 பேரிடம் நியூஜிலாந்து போலீஸ் விசாரணையை மேற்கொண்டது. அவர் நிச்சயம் தற்கொலையும் செய்து கொள்ளவில்லை, யாரும் அவருக்கு மெதனால் கொடுக்கவும் இல்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தனக்குத் தெரியாமலேயே தற்செயலாக மெதனாலை சாப்பிட்டிருக்கலாம் என்று  முடிவு செய்யப்பட்டது. 2008ஆம் ஆண்டு மீண்டும் ஒரு அறிவியல் ஆய்வை பிரேத பரிசோதனை நிபுணர் ஒருவர் மேற்கொண்டு முந்தைய முடிவை உறுதி செய்தார்.

 rodney marks

 

அறிவியல் அறிஞர் ஒருவரின் முடிவு தென் துருவத்தின் முதல் கொலை கேஸாக அமைந்து பிரபலமானது.

********************

 

 

 

சோழ மன்னன் செய்த ராஜசூய யக்ஞம் (Post No.3083)

IMG_5583

Research Article written by London Swaminathan

 

Date: 22  August 2016

 

Time uploaded in London:  21-18

 

Post No.3083

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

சோழ மன்னன் பெருநற்கிள்ளி ராஜசூய யக்ஞம் என்ற பெரிய வேள்வியைச் செய்ததை புறநானூறு மூலம் நாம் அறிகிறோம் அவனைக் குறித்து நான்கு பாடல்கள் 16, 125, 367, 377) உள்ளன. அவற்றை முறையே பாண்டரங் கண்ணனார், வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார், ஔவையார், உலோச்சனார் ஆகியோர் பாடினர்.

 

இராஜசூய வேள்விக்கு சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் வந்திருந்தனர். அவர்கள் மூவரும் ஒருங்கே உட்கார்ந்திருந்ததைப் பார்த்த ஔவையாருக்கு பெரிய மகிழ்ச்சி. நீங்கள் வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களைவிட, மழைத் துளிகளைவிட அதிக நாட்கள் வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.

IMG_5584

ராஜசூய யக்ஞம் என்றால் என்ன?

இது குறித்து லாத்யாயன ஸ்ரௌதசூத்ரம் சொல்கிறது. அரசர்கள் ஜாதியான க்ஷத்ரியர்கள் மட்டுமே இதைச் செய்யலாம். ராஜ சூய என்றால் அரசனை ‘உற்பத்தி செய்தல்’, ‘கடைந்தெடுத்தல்’ என்று பொருள். அதாவது ஒரு மாமன்னனை உருவாக்குதல்.

 

இந்த வேள்வியைச் செய்த, பெருநற்கிள்ளி தன்னுடைய பெயருக்கு முன்பாக ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று பட்டம் வைத்துக் கொண்டதிலிருந்தே இதன் பெருமையும் மகிமையும் விளங்கும்.

 

இதைச் செய்து முடிக்க இரண்டு ஆண்டுகள் தேவை!

பங்குனி மாத சுக்லபட்ச முதல்நாளில்  தீட்சை எடுத்துக்கொள்வர்.

முதலில் சோமரசம் தொடர்பான சடங்குகள் ஐந்து நாட்களுக்கு நடக்கும். பின்னர் ஓராண்டுக்கு சிறிய யாகங்கள் நடக்கும்.

 

அதன் பிறகு 12 நாட்களுக்கு நீடிக்கும் சடங்குகள் நடைபெறும்.

 

அரசனுக்கு அபிஷேகம் செய்து முடிசூட்டுதலே முக்கியமான — முத்தாய்ப்பான — நிகழ்ச்சி. பல புண்ய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீரை மந்திரம் சொல்லி அரசனின் தலையில் ஊற்றுவர் பிராமணர்கள். அபோழுது பிராமணர்களுக்கு நிறைய தானங்கள் வழங்கப்படும்

 

இதை ஔவையார் பாராட்டுகிறார்:-

வாழச் செய்த நல்வினை அல்லது

ஆழுங்காலைப் புணை பிறிது இல்லை — என்பார்.

 

ஒருவர் செய்த நல்வினைதான் அவர் இறந்த பின்னர் அவருக்கு துணையாக வரும் – என்பதே இதன் பொருள்.

 

ஆகையால் பிராமணர்களுக்கு கைநிறைய தங்கக் காசுகள கொடு என்கிறரர்.

 

ஏற்ற பார்ப்பர்க்கு ஈர்ங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து

 

வாழ வேண்டும் என்று அறிவுரை பகர்கிறார். (Puram.367)

 

இதற்குப் பிறகு தேரோட்டும் பந்தயம் (ரேஸ்) நடக்கும்

அதைத் தொடர்ந்து ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் நடக்கும்.

இதில் சுமார் 100 பசுக்கள் இருக்கும்

 

(தமிழ் நாகரீகம், பண்பாடு என்று எதுவும் தனியாக கிடையாது. ஆநிரை மீட்டல், கவர்தல் ஆகியன மஹா பாரதத்திலும் உண்டு. சங்க இலக்கியத்திலும் உண்டு. பிராந்தியத்துக்கு பிராந்தியம் உலகம் முழுதும் சில விநோத வழக்குகள், இசை நடனம் முதலியன இருக்கும் அது போல இந்தியாவிலும் 25 மாநிலங்களில் 25 விதமான பழக்க வழக்கங்கள் , நடை உடை பாவனைகள் இருக்கும்.)

IMG_5585

மன்னன் , தேரிலிருந்து இறங்கிய பின்னர் முடி சூட்டு வைபவம் நடக்கும்.

 

இறுதியாக சொக்கட்டான் ஆட்டம் நடைபெறும். இதில் மன்னர்தான் வெற்றி  பெ றுவார்.  சொக்கட்டான் ஆட்டம் புற நானூற்றிலும், திருக்குறளிலும் உள்ளதே.

 

இதற்குப் பிறகு சுனஸ்சேபன் கதை உபந்யாசம் நடக்கும்.

அடுத்த பத்து நாட்களுக்கு சிறிய யாகங்கள் நடத்தப்படும். இதற்குப் பின் மன்னன், ஓராண்டு காலத்துக்கு சில விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

இவ்வளவையும் சோழ மன்னன் பெருநற்கிள்ளி செய்தது ம் அதை மற்ற புலவர்களும், புரவலர்களும் போற்றியது ம் எதைக் காட்டுகிறது?

 

தமிழ் மன்னர்களுக்கு யாக யக்ஞங்கள் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. பார்ப்பனர் பற்றியும், வேள்வி பற்றியும், நான்மறைகள் குறித்தும், யூப நெடுந்தூண்கள் (வேள்வித் தூண்) பற்றியும் சங்க இலக்கியத்தில் ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன.

 

32,000 பசு, 16000 பசு 8000 பசு தானம்!

 

ராஜ சூய வேள்வியை செய்வதற்கு 4 புரோகிதர்கள் தேவை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் 32,000 பசுக்கள் தட்சிணை!

இரண்டாம் நிலையிலுள்ள 4 ஐயர்களுக்கு தலா 16,000 பசுக்கள் தட்சிணை.

 

மூன்றாம் நிலையிலுள்ளோருக்கு தலா 8000, அதற்கடுத்த நிலையிலுள்ளோருக்கு தலா 4000 பசுக்கள் தட்சிணை என்று சாத்திரங்கள் செப்புகின்றன.

ஆச்வலாயன, பாரத்வாஜ, ஆபஸ்தம்ப, காத்யாயன ச்ரௌத சூத்ரங்களில் இதன் விவரங்களைக் காணலாம்.

 

சிந்து சமவெளி நாகரீகம்

 

சிந்து சமவெளி நாகரீகத்திலும் எடைக்கற்கள் இதே வீதத்தி ல்தான் இருக்கின்றன.4, 8, 16, 32, 64 ….

 

வேத கால தட்சிணையும் இதே வீதாசாரத்தில்தான் இருக்கும். ஆக வேத கால நாகரீகமும் சிந்து சம்வெளி நாகரீகமும் ஒன்றே.

 

இப்போதுள்ள ரூபாய்க்கு முன் இந்தியாவில் தம்பிடி, அணா, ரூபாய் என்ற முரை இருந்தது மூன்று தம்பிடி= காலணா, நான்கு காலணா = ஒரு அணா, 16 அணா = ஒரு ரூபாய் (அதாவது 64 காலணா அல்லது 192 தம்பிடி). இதுவும் சிந்து சம்வெளி விகிதாசாரமே!

 

–subham–

கருவுயிர்த்தாள் குறத்தி; காயம் தின்றான் குறவன் (Post No.3082)

new tribe 1

Research Article written by London Swaminathan

 

Date: 22  August 2016

 

Time uploaded in London:  15-54

 

Post No.3082

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

குறத்தி கருவுற்ற காலத்தில் குறவன் மருந்து சாப்பிட்டான் – என்று ஒரு தமிழ்ப் பழமொழி உள்ளது. இதன் உண்மைப் பொருள் என்ன?

 

குறத்தி கருவுற்றபோது அவளைப் போலவே கணவனும் மருந்து (காயம்) உண்டான் என்பது இதன் பொருள். இது கிண்டலாக எழுந்த பழமொழியா அல்லது உண்மைப் பொருளுடைத்தா?

 

அரசமரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத்தொட்டுப் பார்த்தாள் (பார்த்தாளாம்) என்று ஒரு தமிழ்ப் பழமொழியும் இருக்கிறது. அதாவது அரச மரத்தைச் சுற்றினால், மகப்பேறு இல்லாதோருக்கு மகப் பேறு (குழந்தைகள்) கிட்டும் என்றும் சொல்லலாம். உடனடி பலனை எதிர்பார்ப்பது மடமை என்றும் பொருள் சொல்லலாம்.

 

இதே போல குறத்தி கர்ப்பமுற்றதற்கு குறவன் மருந்து சாப்பீட்டானாம் என்று கிண்டலாகவும் நினைக்கலாம்.

 

ஆனால் உண்மைப் பொருள் : குறவன் மருந்து சாப்பிட்டான் என்பதே!

 

இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் இந்தப் பொன்மொழி  சம்ஸ்கிருத்த்திலும் உண்டு. “மகனைப் பெறுகிறாள் நிஷாதப் பெண்; மருந்தைக் குடிக்கிறான் நிஷாத தந்தை” — என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு பொன்மொழி இருக்கிறது.

 

இதைவிட வியப்பான விஷயம் வடகிழக்கு மலையில் வாழும் நாகா இன மக்களும் இப்படியே சொல்லுவர்

“நாகாவின் மனைவி குழந்தை பெற்றாளாம்; நாகன் மருந்து சாப்பிட்டானாம்” என்று.

 

இப்படிப்பட்ட வழக்கம் உலகம் முழுதும் இருக்கிறது. இதை கூவேட் (couvade) என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லால் குறிப்பிடுவர். அந்தச் சொல்லின் பொருள் பறவைகள் முட்டையை ‘அடைகாப்பது’ ஆகும்.

 

மனைவிக்கு பேய் பிசாசுகளால் எந்தப் பாதகமும் வரக்கூடாது என்று பேய் பிசாசுகள், துர் தேவதைகள், அணங்குகளை ஏமாற்ற கணவன் இப்படி பிரசவ வேதனைப்படுவது போல நடிக்கும் வழக்கம் எகிப்து, கிரேக்கம் முதலான நாடுகளில் ஆதிகாலத்தில் இருந்தது. ஆயினும் கணவன்” மருந்து உண்ணல்” என்பது இந்தியாவில் பல இடங்களில் காணப்படுகிறது.

 

இதிலிருந்து தெரியும் விஷயங்கள் என்ன?

 

1.நிஷாதர்கள், தமிழ்க் குறவர், குறத்தியர், நாகா இனப் பழங்குடிகள் யாவரும் ஒன்றே.

 

2.அவர்களும் இந்துக்களே. ஏனெனில் நிஷத நாட்டு மன்னன் நளன் சரிதம் மஹாபாரதத்திலேயே உள்ளது. அவன் மிகச் சிறந்த தேரோட்டி, மிகச் சிறந்த சமையல்காரன்.

 

3.நிஷாதர்கள் என்னும் வேடர் குடியைச் சேந்தவர்தான் வால்மீகி, குஹன், கண்ணப்ப நாயனார், சபரி என்னும் தவசி.

 

4.நான் முன்னர் கட்டுரைகளில் குறிப்பிட்டது போல நகர நகரீகம் நிலவியபோதே அவர்கள் கானகத்தில் சுகமான– இயற்கையோடு இணைந்த வாழ்வு நடத்தினர். இதற்கு ராமாயணம், மஹாபாரத, சிலப்பதிகார சான்றுகளை ஏற்கனவே கொடுத்துள்ளேன்

 

  1. வெளிநாட்டு வெள்ளையர்கள், இவர்களை திராவிடர்கள் என்றும், மலைகளுக்கு விரட்டி அடிக்கப்பட்டவர்கள், இந்துக்கள் அல்லாதவர் என்றும் எழுதியது எல்லாம் பொய்ப் புனைச் சுருட்டு என்பதை சங்கத் தமிழ் இலக்கியமும், சம்ஸ்கிருத இலக்கியமும் விளக்குகின்றன.
  2. தமிழர்கள் நகர நாகரீகம் வாழ்ந்த காலத்திலேயே குறிஞ்சி நிலத்தில் கானவர் வாழ்க்கை நடந்ததை சங்க இலக்கியம் பறை சாற்றூம்.

 

7.இப்போது நிஷாதர்களின் ஒரு பிரிவு “பில்” என்ற இன மக்கள் ஆவர். அவர்கள் வில்லும் கையுமாகத் திரிவதால் ‘வில்’ என்பதே ‘பில்’ என்று மாறியதாகச் சொல்லுவர். ஆனால் அவர்கள் இப்போது பேசும் மொழி வடக்கத்திய மொழிகளே (குஜராத்தி, மராத்தி).

 

8.நிஷாதப் பெண்களை மணந்த அந்தணர் பற்றிய குறிப்புகளும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இதே போல நாக கன்னிகைகள் மணந்ததையும் இதிஹாச புராணங்களில் காண முடியும். ஆக ஜாதி, இனம் என்பது கடுமையான விதியாக இருக்கவில்லை.

new tribe 16

ஆக, நாகா இன மக்கள், நிஷாதர்கள் (பில்/வில்லவர்), குறிஞ்சி நிலக் குறவர், குறத்தியர் ஆகியோர் ஒரே மாதிரி சிந்திப்பது  — “இமயம் முதல் குமரி வரை ஒன்று” —  என்பதை நி லைநாட்டுகிறது.

 

வெளி நாட்டினர் எழுதிய பல விஷயங்கள் வடிகட்டிக் கொடுக்கப்பட்ட செய்திகளே (filtered information) அன்றி முழு உண்மை அல்ல என்பதை

பழங்குடி மக்கள் பற்றிப் படித்தால் புரிந்துகொள்ளலாம். அவர்களும் கண்ணப்பர், சபரி, வால்மீகி போல தீவிர இந்துக்களே.

 

வாழ்க நிஷாதர்கள்! வளர்க இந்து மதம்!!

 

கம்பனின் அதிசய உவமை! புறச்சூழல் உண்மை!!(Post No.3065)

Dead fish floated in the green waste water.

Written by London swaminathan

Date : 15th August 2016

Time uploaded in London: 17-56

Post No.3065

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

கம்பராமாயணம் ஒரு தேன் கூடு;  பிழியப் பிழிய தேன் வரும். ஆனால் என் போன்றோர் இலக்கிய நயத்துக்காக நூல்களைப் படிப்பதில்லை. அதிலுள்ள விஞ்ஞான உண்மைகளையும் தத்துவ உண்மைகளையும் ஆழத் துருவி ஆராய்வதே நோக்கம். ஆரணிய காண்டத்தில் மாரீசன் வதை படலத்தில் கம்பன் ஒரு அசாதாரண உவமையைக் கையாளுகிறான். இதைப் பார்க்கும் போது 1200 ஆண்டுகளுக்கு முன்னரே புறச் சூழல் அறிவு இருந்திருப்பது புலனாகிறது.

 

இதோ பாட்டும் அதன் பொருளும்:–

 

வெஞ்சுற்றம் நினைந்து உகும் வீரரை வேறு

அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர்

நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான்

நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால்

 

பொருள்:

மாயமான் வடிவத்தில் சென்று சீதையை ஏமாற்று — என்று ராவணன் ஏவியபோது மாரீசன் மன நிலை பற்றிய பாடல் இது:–

 

“இராவணன் செயலால தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் அழிவு வரும் என்பதை மாரீசன் உணர்ந்தான். தனது அன்பிற்குரிய சுற்றத்தாரை நினைத்து வருந்தினான். மானிட வீரர்களான இராம இலக்குவரை எண்ணி மனதில் குழப்பம் அடைந்தான். இது எப்படி இருந்ததென்றால்….

ஆழமான பள்ளத்தில் உள்ள நீர் நச்சுத் தனமை அடையும் போது, அதில் வாழும் மீன் அந்த நீரில் இருந்தாலும் சரி, நிலத்தில் இருந்தாலும் சரி இறப்பது உறுதி. அந்த மீன்கள் எப்படி நடுங்குமோ அப்படி மாரீசன் நடுங்கினான். அந்த மாரீசனின் மன நிலையை நம்மால் முடியாத அளவுக்கு அவன் பயப்பட்டான்”

இந்தப் பாட்டில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவது இலக்கிய நயம்: விஷ நீரில் மீன் இருந்தாலும் சாகும். வெளியே போனாலும் சாகும். அது போல மாரீசன் மாய மான் வேடம் போடாமல் சென்றால் ராவணன் கொன்றுவிடுவான். மாய மான் வேடம் போட்டாலோ ராமன் கொன்று விடுவான்! இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை!

fishes 2

இரண்டாவது அறிவியல் விஷயம்:

 

ஒரு விஷயத்தை உவமையாகப் பயன்படுத்த வேண்டுமானால் அது மக்களுக்குப் புரிய வேண்டும்; தெரிந்திருக்க வேண்டும்.

 

நீர் நிலைகள், குறிப்பாக ஆழமான கிணறுகள், அசுத்தமடைவதும், அதனால் மீன்கள் இறப்பதும் மக்களுக்குத் தெரிந்திருந்தது. ஒரு வேளை நீரை அசுத்தம் செய்யாதீர்கள்! நடுக்குறும் மீனின் கதி , உங்களுக்கும் வரும் என்று கம்பன் அறிவுரை பகர்கிறான் போலும்.

 

எது எப்படியாகிலும் இப்பேற்பட்ட உவமை அரிதிலும் அரிது. கம்பன் கையாளும் உவமைகளைப் பட்டியலிட்டுப் பார்த்தால் அவன் மேதா விலாசமும் நமக்கு வெள்ளிடை மலையென விளங்கும்.

 

–SUBHAM–