லண்டனில் எழுத்தாளர் ஜெயமோகனின்
ரசிகர்கள், வாசகர்கள் துவக்கிய ‘லண்டன் தமிழ்
இலக்கியக் குழுமம் சார்பில், பல இளம் எழுத்தாளர்களின் கதைப்
புத்தகங்களின் விமர்சனம் ஜூன் 1ம் தேதி நடந்தது. (இது பற்றி ஏற்கனவே 3
கட்டுரைகள் வெளியாகின; இது நாலாவது
கட்டுரை) இலங்கையைச் சேர்ந்த அனோஜன் பாலகிருஷ்ணனின் கதைகளை குழுமம் சார்பில்
தனராஜ் மணி விமர்சித்தார்.
அனோஜனின் இரண்டு கதைப் புத்தகக்ங்கள்; எழு வசந்தம், பச்சை நரம்பு
இதோ தனராஜ் மணி உரையின் சாராம்சம்:–
Dhanaraj reviewing Anojan’s book
அனைவருக்கும் வணக்கம்.
இன்று நான் அறிமுகப்படுத்தப்போகும் அனோஜனின் பச்சை நரம்பு அவரின் இரண்டாவது சிறுகதை தொகுதி. பத்து கதைகள் கொண்ட இந்த தொகுப்பைகிழக்கு பதிப்பகம் பதிப்பித்திருக்கிறது.
இவ்வுரையில் இப்புத்தகத்தை பற்றிய என் வாசிப்பின் ரசனை சார்ந்த அவதானிப்புகளை முன் வைக்கப் போகிறேன். அது உங்களுக்கு இப்புத்தகத்தைவாசிக்கும் ஆர்வத்தை தூண்டினால் மகிழ்வேன். அப்படியில்லையெனில் என் உரையின் குறையே அன்றி புத்தகத்தின் குறையல்ல.
இத்தொகுதியின் முதல் கதையை வாசிக்கும் போது , எழுத்தாளர் ஜெயமோகனின் ரப்பர் நாவலை நான் முதன் முதலாய் வாசிக்கும் போது ஏற்பட்ட ஒருதுணுக்குறல், ஒரு ஆச்சரியம் இதிலும் இருந்தது. இரு கதைகளிலும் கதை மாந்தர் பேசும் மொழி தமிழ் தான் ஆனால் நான் அறிந்த, என் சூழலில் புழங்கும்தமிழ் அல்ல. தமிழர் வாழ்வை பேசும் கதைதான் ஆனால் நான் அது வரை அறிந்த தமிழர் வாழ்வல்ல.வாசிக்க தொடங்கும் போது போரும் அமைதியும்நாவலில் வரும் ரஷ்யாவின் கடும் பனி எவ்வளவு அன்னியமோ ரப்பர் நாவல் பேசும் ரப்பர் தோட்டங்களும் எனக்கு அவ்வளவு அன்னியமாகவே இருந்தது. ஆனால் வாசித்து முடிக்கும் போது டால்ஸ்டாயின் ப்யிரியை எவ்வளவு அணுக்கமாக உணர்ந்தேனோ அதை விட அணுக்கமாக ப்ரான்ஸிஸிடம் உணர்ந்தேன்.
Anojan Balakrishnan is sitting at the right extreme (Blue jacket);
ப்யரியின் உள்ளிருக்கும் ரஷ்யன் ஒரு சிறு அன்னிய உணர்வை இன்றும் தருகிறான் ஆனால் ரப்பரில் வரும் ப்ரான்ஸிஸ் நானே தான். அவனை என்னால்முழுவதுமாய் புரிந்து கொள்ள முடியும் .
அனோஜனின் கதைகள் இதே உணர்வை எனக்களித்தன. வாசிக்க ஆரம்பித்த போது சில ஈழ தமிழ் சொற்கள் எனக்கு புரியவில்லை, காலை சிற்றுண்டிக்குபன்னும் சம்பலும் சாப்பிடும் கலாச்சார அதிர்ச்சிகள் வேறு கதைகளில் நிரம்பி இருந்தது.
ஆனால் வாசித்து முடிக்கும் போது அனோஜனின் கதை நிகழும் களத்தையும் கதை மாந்தரையும் சேலத்தில் நான் வளர்ந்த சூழலுக்கு மிக அணுக்கமாகஉணர்ந்தேன்.
நம்மூர் திருமணங்களில் அடர்த்தியாக செம்பொடி அப்பி அடர் சிவப்பில் நின்று புன்னகைத்து கொண்டிருக்கும் தமிழ் மணப் பெண்களை பார்த்திருப்பீர்கள்.
அழகு கலை நிபுணர்கள் அவர்களுக்கு அழகென்று தோன்றிய ஒரு வடிவை அப்பெண்ணின் முகத்தில் வரைந்தெடுத்திருப்பார்கள்.
சிலருக்கு வியர்வையோடு அவ்வடிவும் வழிந்து ஊற்றிக்கொண்டிருக்கும், பீதியை வெளிகாட்டாமல் மையமாய் புன்னகைத்துவிட்டு மேடையில் இருந்துஇறங்குவதற்கு உங்களுக்கு பெரும் பயிற்சி வேண்டும்.
சில நாட்கள் கழித்து அதே பெண்ணை அவள் வீட்டில் மிகச் சாதாரணமான உடையில் புன்னகையன்றி வேறொரு ஒப்பனையும் இல்லாமல் பார்க்கும் போதுகண்டு கொள்வீர்கள் ,திருமண மேடையில் பேய் போல் தெரிந்தவள் ஓர் தமிழ் நிலத்து மாநிற பேரழகி என. அது போல, சில மொழி மற்றும் சூழல் மேற்பூச்சுகளை கடந்துவிட்டால், அனோஜனின் கதை உலகம் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களுக்கு மிக அணுக்கமான நாம் தொடர்புபடுத்திக்கொள்ள கூடிய கதைமாந்தரையும் கதை களத்தையும் கொண்டிருக்கிறது.
இந்த பத்து கதைகளில் பெரும்பான்மையான கதைகள் காமத்தை மையப்படுத்தி எழுதப் பட்டுள்ளது, குறிப்பாக உடலிலும் மனதிலும் முகிழ்க்க தொடங்கும்பதின்வயதின் காமம்.
காமம், காலம் காலமாக தமிழில் பேசப்பட்டு , பாடப்பட்டு வந்திருக்கிறது.
ஈராயிரம் வருடங்களுக்கு முன் மிளைப் பெருங்கந்தன் எனும் கவிஞன் காமத்தைப் பற்றி ஒரு பாடலை இயற்றியிருக்கிறார், அது
காமங்காமமென்பகாமம்
அணங்கும்பிணியுமன்றேநினைப்பின்
முதைச்சுவற்கலித்தமுற்றாவிளம்புல்
மூதாதைவந்தாங்கு
விருந்தேகாமம்பெருந்தோளோயே.
அதன் அர்த்தம் காமம் என்பது பேயோ நோயோ இல்ல,
வயதான பசுமாடு பசும் புல்லை சாப்பிட முடியாமல் நாவால் நக்கிப் பார்த்து இன்புறுவது போன்றதுனு சொல்றாரு.
இதை அவர் இரு மொந்தை இன்கடுங்கள் அருந்திவிட்டு ஒரு பதின் வயது இளைஞனை பக்கத்தில் உட்கார வைத்து சொல்லி இருப்பாரென நான் நினைத்துக்கொள்கிறேன். அவ்வயதில் அவர்களால் முடிந்தது நினைத்துப் பார்ப்பதுதான். ஹார்மோன்கள் பொங்கி பிரவாகம் எடுக்கும் வயதில் அதற்கு வடிகால்அளிக்கும் கலாச்சார சூழல் நமக்கு கிடையாது. காமத்தை மனதில் மட்டும் நிகழ்த்தி கொள்வதே பெரும் பாலானாவருக்கு வாய்ப்பது.
அனோஜனின் கதைகளில் இருந்து ஈழத்திலும் பதின்வயதினருக்கு அதே சூழல்தான் என்பது தெரிகிறது.
என் மனதிற்கினிய கவிஞரான இசை பதின்வயது இளைஞனை தன் கவிதை ஒன்றில் விவரிக்கையில்
அக்காக்கள்குளிக்கையில்படலைப்பிரிப்பான்
என்று சொல்கிறார்.
இத்தொகுப்பின் தலைப்பு கதையான பச்சை நரம்பில் வரும் இளைஞன் செல்வமக்கா பரிமாறும் போது அவள் ஜாக்கெட் மறைக்காத பாகங்களில் கண்ணைஊன்றி வைத்திருக்கிறான்.
பிறழ்வான மீறல்கள் மூலமாகத்தான் தங்கள் பதின்வயது காமத்துக்கு வடிகால் தேட முடியும் என்ற நிலையில் இன்றும் தமிழ் கலாச்சாரம்இருக்கிறது.இத்தொகுப்பில் உள்ள பச்சை நரம்பு , இச்சை போன்ற கதைகள் அதை பதிவு செய்கிறது, இதில் ஆண் பெண் பேதமில்லை.
அனோஜன் மட்டுமல்ல தற்கால தமிழ்புனைவெழுத்தில் இது மீள மீளபேசப்படுகிறது.இலக்கியம் ஒரு சமூகத்தின்கண்ணாடி. தி.ஜா காலத்து கதைக்கரு இன்றும் எழுதபடுவது நம் சமூகம் இவ்விஷயத்தில் 19 நூற்றாண்டிலேயே தேங்கி நிற்பதை காட்டுகிறது.
இத்தொகுப்பில் உள்ள கதைகளில் என்னை மிகவும்கவர்ந்தவை இரு கதைகள். ஒன்று ஒரு தந்தையைபற்றியது, மற்றொன்று அன்னையை பற்றியது. இரண்டும் இரு வேறு உள நிலைகளை பேசுவது .
கிடாய் , காமத்தால் தன் வாழ் நாள் முழுக்க அலைகழிக்கப்படும் ஒரு தந்தையின் கதை. ராசையா ஒருவிவசாய கூலி, தன் மனைவியும், மகளும் வசிக்கும்குடிசைக்கு அருகிலேயே தான் வேலை பார்க்கும்இடத்தில் அறிமுகமான பெண்ணை குடியமர்த்திஅவளோடு காமம் கொண்டாடுகிறான். மனைவிதுக்கம் தாளாமல் தீக்குளித்து உயிரழக்கிறாள். தன்காமக்கிழத்தியை இப்பொழுது வீட்டிற்கே அழைத்துவந்து வைத்து கொள்கிறார் ராசையா. சிறு மகளும்அச்சிறு குடிசையை அவர்களோடு பகிர்ந்துகொள்கிறாள், அவருடைய களியாட்டங்களைமெளனமாக பார்த்தபடி. காலம் ஓடுகிறது, மகள்வளர்ந்து டீச்சர் ஆகிறாள், ராசையா மகள் தயவில்வாழ வேண்டிய சூழல். இப்பொழுது மகளின் முறை. அவர் கண்ணெதிரே அவளிடம் ட்யூஷன் படிக்க வரும்பதின்வயது இளைஞனுடன் காமத்தில் திளைக்கிறாள். அறை கதவை கூட பூட்டி கொள்வதில்லை, அவளுக்குஇவர் ஒரு பொருட்டே அல்ல. ஒரு நாள் அவர் மகள்அவளுடைய காமத்துணைவனுடன் கூடியிருக்கும்நேரத்தில் அறைக்குள் நுழைகிறார். அவ்விளைஞனைதாக்கிவிட்டு சொந்த மகளை வன்புணர்கிறார். அதன்பின் அவ்விளைஞனையும் தூக்கி தன்னோடு கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து உயிர் இழக்கிறார்.
ஊரார் கிணற்றை இறைத்து உடலை மீட்கிறார்கள். கதையின் கடைசி வரியில், ஒரு உடல்தான்உள்ளிருந்தது என முடிக்கிறார் எழுத்தாளர. அந்த ஒருவரி பல வாசிப்பு சாத்தியங்களை வாசகன் முன் விரித்து வைக்கிறது.
அது வரை கதையில் நிகழ்ந்தவை எது உண்மையில்நிகழ்ந்தது எது அவர் மனப்பிறழ்வால் கற்பனைசெய்து கொண்டது என்பதை நம் ஊகத்திற்கு விட்டுவிட்டார். இந்த ஒரு கதை என் மனதில் பல கதைகளாகவிரிந்தது. எனக்கு அபாரமான வாசிப்பனுபவத்தைகொடுத்த கதை இது.
மற்றொரு கதை மனநிழல். ஒரு இளைஞனைமையப்படுத்திய கதைதான் எனினும் இதைஎழுத்தாளர் காட்டியிருக்கும் தாயின்சித்தரிப்புக்காகவே எனக்கு நிரம்ப பிடித்தது. சிங்களராணுவ வேட்டையாடலில் கதை நாயகனின்நெருங்கிய நண்பன் இறந்து போகிறான். ரகசியபோலிஸ் கண்காணிக்கும் என்பதற்காக அந்தநண்பனின் தாய் அவனை அவன் சாவிற்கு போகவேண்டாம் என அறிவுறுத்துகிறாள். கதை பின்நாயகனின் போவதா வேண்டாமா எனும் மனஊசலாட்டங்களுக்குள் செல்கிறது. எனக்கு இந்தகதையில் முக்கியமாக பட்டது கதையில்சித்தரிக்கப்பட்டுள்ள தாய், நானும் நீங்களும்நன்கறிந்த தாய், அவள் மகனை மிஞ்சிய எதுவும்அவளுக்கு உலகில் இல்லை, நாடு, போர், லட்சியங்கள்எதுவும் அவள் மகனின் வாழ்வை விட அவளுக்குபொருட்டல்ல.
இது யதார்த்தம். இந்த யதார்த்தம் தமிழ் நாட்டில்இருந்து எழுதுபவர்களுக்கு ஒரு பெரிய விஷயமல்ல. ஆனால் போரின் அத்தனை குரூரங்களுக்கு மத்தியில்வாழ்ந்தவர்களுக்கு இது அவ்வளவு சுலபம் அல்லஎனவே நான் நினைக்கிறேன். புனைவிலாவது ஒருலட்சிய தாயை காட்டி விடும் ஆவல்தான் மோலோங்கிநிற்கும்.
ஒரு சராசரி தமிழ் தாய் எப்படி நடந்து கொள்வாளோஅப்படித்தான் இவள் நடந்து கொள்கிறாள். இப்புத்தகம்முழுக்கவே நம்மால் இந்த சம நிலையை காணமுடிகிறது. சிங்களன் என்பதாலேயே ஒருகதாப்பாத்திரம் வில்லனாக்க படவில்லை. மனிதர்கள்அவரவர் குறை நிறைகளோடுசித்தரிக்கப்பட்டுள்ளனர். உண்மையின் ஒளியில்இருந்தே ஒரு நல்ல இலக்கியம் எழ முடியும், அவ்வொளியை இத்தொகுப்பு முழுதும் நீங்கள்காணலாம்.
இந்த தொகுப்பின் மிக முக்கியமானபங்களிப்பென்பது யுத்தம் தாண்டிய ஒரு சராசரி ஈழதமிழர் வாழ்வை இயல்பாக , உண்மையாக பதிவுசெய்திருப்பதுதான். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது நான் படித்து கொண்டிருந்த பள்ளிஇலங்கையில் இருந்து வந்திருந்த அகதிகளைதற்காலிகமாக தங்க வைப்பதற்காக ஒரு மாதம்மூடப்பட்டது. ஈழம் என்ற சொல்லோடு முதல் அறிமுகம்எனக்கு அப்பொழுதுதான். அன்றிலிருந்து இன்றுவரை போரும், ஈழ தமிழரின் அவதியும், புலிகள் பற்றியசெய்திகளுமாகத்தான் எனக்கு ஈழம் பரிச்சயம். துண்டு துண்டாக , செய்தி பரிமாறும் ஊடகங்களின் , மனிதர்களின் விறுப்பு வெறுப்பு சார்ந்த ஒரு வண்ணம்பூசப்பட்ட சித்திரம்தான் என் மனதில் இருந்தது. இத்தொகுப்பு அதை மாற்றி உள்ளது. ஈழ வாழ்வின்ஒரு உண்மையான சித்திரத்தை இக்கதைகளைகொண்டு என்னால் உருவாக்கி கொள்ள முடிகிறது.
ஈழத்தின் கொடுங்கோடைகளை மட்டுமே கேட்டு , படித்து வந்திருக்கும் என்னை போன்றவர்களுக்கு ஈழத்தில் இன்று எழும் வசந்தத்தின் பதிவாகஇத்தொகுப்பை நான் பார்க்கிறேன்.
என் இனிய இளவல் அனோஜனுக்கு என் வாழ்த்துகள். பூக்கும் , தளிர்க்கும் பொங்கி பெருகும் ஈழ வாழ்வைஅவர் எழுத்தில் மீண்டும் மீண்டும் பதிவு செய்யவேண்டும் என விரும்புகிறேன்.
பச்சை நரம்பு இங்கு விற்பனைக்கு கிடைக்கும், வாங்கிவாசியுங்கள், வாசித்து விட்டு உங்கள் கருத்தைஅனோஜனிடம் பகிருங்கள்.
தலைப்பைப் பார்த்தவுடன் ‘அட, பாவி! இத்தனை நாள் இவனைப்
பற்றிக் கொஞ்சம் நல்ல எண்ணம் வைத்திருந்தோமே, இவன் இவ்வளவு மோசமா’ என்று நீங்கள் எண்ணி
விட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.
சில பேர்
ராத்திரியில் ‘அடிக்கும்’ ‘அந்த ரவுண்டைப்’ பற்றி நான் சொல்லவில்லை; நான் காலையில்
தினமும் வெறுங்காலுடன் புல்வெளியில் அடிக்கும் நடைப்பயிற்சி ரவுண்டைப் பற்றித் தான்
சொல்கிறேன்.
இவன் என்னடா, ஹெல்த்கேர் கட்டுரையாக எழுதுகிறான்,
எழுதியபடி கொஞ்சமாவது எதையாவது பின் பற்றுகிறானா என்று நீங்கள் எண்ணி விடக் கூடாது
பாருங்கள், அதற்காகத் தான் இதைச் சொல்கிறேன்.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தினம் நான் எட்டு ரவுண்ட் அடிக்கிறேன் – காலையில்!
புல்வெளி சில இடங்களில் ஏற்ற இறக்கமாக இருப்பதால்
கலோரி பர்னிங் (Calorie Burning) சற்று அதிகமாக இருக்கும்; சம
பரப்பில் நடக்கும் போது தேவையான அளவு இருக்கும்.
ஒரு ரவுண்டுக்கு 350 ஸ்டெப்ஸ்! எட்டு ரவுண்டுக்கு
2800 ஸ்டெப்ஸ். சுமார் 20 நிமிடங்கள்.
இந்த ரவுண்டுகளுக்கு நான் பெயரும் வைத்திருக்கிறேன்.
முதல் ரவுண்ட் சுவாச ரவுண்ட். ஆயிரத்தி தொள்ளாயிரத்து
எண்பதுகளில் மதுரையில் பிரபல ஹோமியோபதி டாக்டரான ( இவர் அல்லோபதி டாக்டர்; ஆனால் ஹோமியோபதி
ப்ராக்டீஸ் செய்தார்) அனந்தநாராயணன் வீட்டு மாடியில் மனவளப்பயிற்சி அருளிய வேதாத்ரி
மஹரிஷியின் காய கல்ப (அதாவது ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழும் கலை) கோர்ஸை (ஏழு வாரம்
கொண்டது; ஞாயிறு மட்டும் காலையில் நடக்கும்) நடத்தவே அதில் பயிற்சிக்காக சேர்ந்தேன்.
அற்புதமான டெக்னிக்குகள் சொல்லித் தரப்பட்டன. ஒவ்வொன்றும் சில விநாடிகளே நீடிக்கும்
என்பதால் அதிக நேரம் பற்றிக் கவலைப்படாமல் அனைவரும் செய்யலாம். கணுக்காலை ஏழு முறை
தேய்த்து விடுவது, சுவாசப் பயிற்சி போன்றவை இதில் அடங்கும்.
இதன் படி முதல் ரவுண்டில் காற்றை ஆழ்ந்து இழுத்து
விடுவது போன்ற பயிற்சிகளை செய்வதால் சுத்தமான காற்றின் ஆற்றல் உள்ளே இறங்கும்.
அடுத்த ரவுண்ட் மந்திர ரவுண்ட். இதில் காயத்ரி மந்திரம்,
மஹா மிருத்யுஞ்சய மந்திரம், துர்கா சப்த சதியில் நடுவில் வரும் சப்த ஸ்லோகத்தில் நடுவில்
வரும் ஸர்வ மங்கள மாங்கல்யே ஸ்லோகம், வனமாலி கதி சார்ங்கீ ஸ்லோகம், அபிராமி அந்தாதி,
கந்தர் அந்தாதியின் சில முக்கிய செய்யுள்கள் உள்ளிட்டவை மந்திர ரவுண்டில் இடம் பெறும்.
மூன்றாவது ரவுண்ட் யோகா ரவுண்ட். இதில் காலை மடக்கி
நடப்பது, கண்களின் தசை வலுவைக் கூட்டும் சின்னச் சின்னப் பயிற்சிகள் — தூரத்தில் இருப்பதை
ஏழு விநாடிகள் பார்ப்பது உடனே மிக அருகில் உள்ளதைப் பார்ப்பது – போன்றவை இடம் பெறும்.tamilandvedas.com, swamiindology.blogspot.com
நான்காவது ரவுண்ட் ரமண ரவுண்ட். இதில் பகவான் ரமண
மஹரிஷியின் போதனையான ‘நான் யார்’ விசாரம் இடம் பெறும். யோக வாசிஷ்டம் வலியுறுத்தும்
கொள்கை இது!
ரமணரின் அருள் வேண்டும் இந்த ரவுண்டில் அவரது போதனைகளை
நினைவில் கொள்வது உற்சாகத்தை அளிக்கும்.
ஐந்தாவது ரவுண்ட் மௌன ரவுண்ட். மௌனத்தின் மஹிமையை
நினைவூட்டும் தக்ஷிணாமூர்த்தி பற்றிய ரவுண்டில் மஹா பெரியவாள் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்
பற்றி விளக்கி உள்ள உரை நினைவுக்கு வரும். பல துவாரங்கள் உள்ள ஒரு பானையில் உள்ளே உள்ள
தீபத்தின் ஒளி எப்படிப் பரவுகிறதோ அதே போல உடலில் உள்ள பொறிகளை இணைத்து அவர் தரும்
அற்புதமான விளக்கம் உள்ளிட்ட அனைத்து மௌன மஹிமைகளையும் நினைவுக்குக் கொண்டு வருவதானது,
உள்ள ஆற்றலை உயரத்தில் தூக்கும்!
ஆறாவது ரவுண்ட் விஞ்ஞான ரவுண்ட். அதாவது நவீன கால
உலகில் உள்ள செல்ஃப் இம்ப்ரூவ்மெண்ட் டெக்னிக்ஸை நினைவுக்குக் கொண்டு வரும் ரவுண்ட்
இது. அத்துடன் அன்றைய தினம் பற்றிய ப்ளானிங்,
முதல் நாள் நடந்தவை பற்றிய ரிவியூவிற்கான ரவுண்ட் இது!
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஏழாவது ரவுண்ட் ஞான ரவுண்ட். இது அருள் வேண்டும்
ரவுண்ட். ‘அருள் நினைந்து அழும் குழவி போல இருந்தேனே’ என அருளாளர்களே கூறி இருக்கும்
போது நாம் அருள் வேண்டும் போது அது கிடைக்கும் மஹிமையே தனி!
கடைசி ரவுண்ட் சரண ரவுண்ட்! உலகம் யாவையும் தாம்
உளவாக்கலும், நிலை பெறுத்தலும் நீக்கலும் அலகிலா விளையாட்டு. அதைச் செய்பவன் தலைவன்;
அன்னவர்க்கே சரண் நாங்களே; கம்பனுடன் சேர்ந்து சரணம் அடைய வேண்டியது தான்!
இந்த நடைப்பயிற்சியின் ஆரம்பத்தில் ஜகஜோதியாக உதிக்கும்
சூரியனைத் துதித்து – ஆதித்ய ஹ்ருதயம் போன்ற மந்திரங்களைக் கூறி – ரவுண்டை ஆரம்பித்து,
பின்னர் முடிக்கும் போது அவனுக்கு நன்றியைத் தெரிவித்து ரவுண்டை முடித்து விட்டால்
அன்றைய பயிற்சி ஓவர்!
சுவாச ரவுண்ட், மந்திர ரவுண்ட், யோகா ரவுண்ட், ரமண
ரவுண்ட், மௌன ரவுண்ட், விஞ்ஞான ரவுண்ட்,ஞான ரவுண்ட், சரண ரவுண்ட் – ஆக எட்டு ரவுண்டுகள்
கணக்கில் வந்து விட்டதா!tamilandvedas.com,
swamiindology.blogspot.com
ஆக இந்த எட்டு ரவுண்டுகளைத் தான் நான் சொன்னேன்;
நீங்கள் விபரீதமாக எண்ணி விடக்கூடாது தலைப்பைப் பார்த்து!
தினமும் நீங்கள் எத்தனை ரவுண்டு அடிக்கிறீர்கள்,
ஸார்?!
லண்டனில் இளம் எழுத்தாளர்களின் கதைப் புத்தகங்களின் விமர்சனமும் அறிமுகமும் ஜூன் 1-ம் தேதி நடந்தது. (இது பற்றி முன்னரே இரண்டு கட்டுரைகள் இங்கே பதிவிடப்பட்டன. இது மூன்றாவது கட்டுரை) கதாசிரியரும் , கட்டுரையாளருமான ஜெயமோகன் அவர்களிடமிருந்து ஊற்றுணர்ச்சி பெற்ற இளம் எழுத்தாளர்கள் ஒன்று கூடி புதிய
ஒரு தமிழ் அமைப்பை உருவாக்கினர். அதன் பெயர் ‘லண்டன் தமிழ் இலக்கியக் குழுமம்’. அதில் லண்டன் எழுத்தாளரும் கதாசிரியருமான சிவா கிருஷ்ணமூர்த்தியின் ‘வெளிச்சமும் வெயிலும்’ கதைப் புத்தகம் பற்றி கிரிதரன் ராஜகோபாலன் விமர்சனம் செய்தார். கிரி, சிவா, சிரில், தனராஜ் ஆகிய நால்வரும் பல கதை கட்டுரைகளை ‘சொல்வனம்’ முதலிய பிளாக்குகளில் ஏற்கனவே எழுதி வாசகர்களின் வரவேற்பபைப் பெற்றவர்களாவர். இதோ வெளிச்சமும் வெயிலும் கதைகள் பற்றி கிரியின் விமர்சனம்:-
“நண்பர்களுக்கு
வணக்கம்
ஒரு முறை
என் உறவினர் ஒருவரிடம் நண்பர் ஒருவர் எழுதிய கதையை அனுப்பியிருந்தேன். உறவினர்
வாசிப்புப் பழக்கம் உள்ளவர். ஒரு விதத்தில் எனக்கும் வாசிப்பை அறிமுகப்படுத்தியவர்
எனும் விதத்தில் என் வழிகாட்டியும் கூட. குமுதத்தின் நடுப்பக்கத்தில் கவனம்
கூடிய காலம் அது. அந்த காலத்தில் சுஜாதாவையும் பாலகுமாரனையும்
அறிமுகப்படுத்தினார். கதைகளில் ரெண்டே ரெண்டு விஷயம் தான் கவனத்தில் இருக்க
வேண்டும் என்பார். கதை நம்பும்படியாக இருக்கிறதா, கதாபாத்திரங்கள் நம் மனதுக்கு
நெருக்கமாக இருக்கிறார்களா – இவை ரெண்டும் போதும் என்பார். நான் அனுப்பியதோ ஒரு
வரலாற்று மிகு புனைவு. கற்பனையை மட்டுமே பெருமளவு நம்பி படிக்கத் தொடங்கவேண்டிய
வகை. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே ரெண்டு விஷயங்களைச் சொன்னதோட
கதையில் மானுட அன்பு தெரியவேண்டும் எனக்கூடுதலாகச் சொல்லி முடித்தார். அறுபது
வயதைக் கடந்தவர். இன்று சுஜாதாவைப் படித்தால் பல கதைகளை நிராகரிப்பேன் என்றார்.
நண்பர்களே, கதை வாசிப்பு என்பது நம் வாழ்நாள் முழுவதும் வரக்கூடிய பழக்கம் எனக்கொண்டால் ஒருவருக்கு காலம் முழுவதும் மாறாத ரசனை என்று ஒன்று இருக்க முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஒரே எழுத்தாளரின் கதைகளை ஒட்டுமொத்தமாகப் படிப்பதென்பது அதை எழுதியவரை புரிந்துகொள்ளும் முயற்சி தான். அவரது ரசனை, விருப்பு, வெறுப்புகள், ருசி, எரிச்சலுக்கான விஷயங்கள் எனப் பல வகையில் அவரது வாழ்க்கைப்பார்வை திரண்டு வரும் கலசம் தான் கதைகள். அதுவும் ஒருவர் தன் வாழ்நாளில் கண்டவற்றை, கேட்டவற்றை, கற்பனை செய்ததை எழுத்தில் பதியும்போது நாம் அவருடன் பல்வேறு காலகட்டங்களில் பயணம் செய்தவர் ஆகின்றோம். கருவறைக்குத் திரும்ப எத்தனிப்பது போல காலத்தை முன்னும் பின்னும் புரட்டிப்பார்க்கும் முயற்சி.
சிரில் அலெக்ஸ் பேசுகிறார்.துவக்க விழாவுக்கு வந்த ராய் மேக்ஸம் , வாசகர்களின் கேள்விக்குப் பதில் தந்தார். அவருக்கு அருகில் சிவா கிருஷ்ணமூர்த்தி, அனோஜன் பால கிருஷ்ணன் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.
சிவா
கிருஷ்ணமூர்த்தியின் பல கதைகளின் முதல் வாசகனாக நானும் நண்பர் பாஸ்கர் எனும்
நட்பாஸும் இருந்திருக்கிறோம். அவர் எங்கோ சென்னையில் இருப்பவர் என்றாலும் இன்று
என்னோடு இங்கே இருப்பவராகத் தான் நினைக்கிறேன். சிவாவுக்கும் அதே எண்ணம் இருக்கும்
என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அவரது லட்சிய வாசக வடிவம் நண்பர்
நட்பாசாகத்தான் இருக்கும். எங்களுக்கு மட்டுமல்லாது இன்று எழுதிக்கொண்டிருக்கும்
பலருக்கும் வழிகாட்டியாக அவர் இருக்கிறார்.
சிவா
கிருஷ்ணமூர்த்தியின் புனைவு உலகம் பெரும்பாலும் இந்தியாவுக்கு வெளியே
இங்கிலாந்தில் நிகழ்பவை. கல் பாவித்தத் தெருக்கள், மிக அருகே தெரியும் வானம், குறுகலான
வீதிகளில் ஒரே மாதிரியான அச்சில் வார்க்கப்பட்ட விக்டோரியன் வீடுகள், ஹை
ஸ்டிரீட் எனப்படும் சந்தை வீதி என அந்நிய உலகை நம்முன்னே காட்டிட மிகவும்
மெனெக்க்டுகிறார். அநேகமாக அவரது கதைகள் அனைத்திலும் இந்த உலகம் முகத்தில் அறையும்
தகவல்களாக வெளிப்பட்டபடி இருக்கிறது. இங்கிலாந்தைப் பற்றி அறிமுகமற்றவர்களுக்கு
நிச்சயம் ஒரு ஏக்கம் உருவாகும் வகையில் இந்த வர்ணனைகள் இருக்குமென்றால், இங்கு
புழங்கும் மனிதர்களைப் பற்றி விவரணைகள் ஆசுவாசத்தை அளிக்கும். அவனும் நம்மைப் போல
ஒரு மனிதன் தாண்டா என..
சிவாவின் கதைகளில் நம்மை உடனடியாகக் கவரும் சில அம்சங்கள் உண்டு. ஒரு பிபிசி குற்றப்புனைவுத் தொடர் தொடங்குவதைப் போல நிதானமும், பூடகத்தன்மையும் அவரது தொடக்கங்களில் உண்டு. மெல்மெல்ல ஒரு ஆங்கிலேய கிராமப்பகுதியின் ஞாயிறு காலை போல மெல்ல துலக்கம் கொள்ளும். கதாபாத்திரங்கள் அறிமுகமாகும்போதே அவர்களைப் பற்றிய ஒருசில குறிப்புகளில் முழு சித்திரத்தையும் கொடுத்துவிடுவார். அழகான ஒரு பெண், அதுவும் தன் மனதுக்கு நெருக்கமானவள் எனும்போது ம.செவின் ஓவியம் எனச் சொல்லிவிடுவார். ம.செவின் ஓவியத்தை அறிந்தவர்கள் அங்கு முழு பெண்ணைக் கண்ணால் பார்த்துவிடுவார்கள். அதே போல ஒரு தெருவை வர்ணிக்கும்போது, எல்லா ஊரின் தெருவைப் போல இதுவும் இருந்தது என சொல்லிவிட்டு ஹை ஸ்டீர்ட்டில் இருக்கும் கடைகள் ஒன்றிரண்டைச் சொல்லிவிடுவார். இது ஒரு அம்சம். மற்றொன்ரு மனிதர்களின் பிரத்யேகத்தன்மை – இதையும் ஓரிரு வரிகளில் நம் முன்ன்னே நிறுத்துவதற்காக சில தனிப்பட்ட உச்சரிப்புகளையோ, அவர்களது பார்வைகளையோ சொல்லிவிடுவார். இது அவர்களை மட்டும் அறிமுகப்படுத்தாது. அவர்களின் பாத்திர அகச்சித்திரத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும்.
கிரிதரன் ராஜ கோபாலனும் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த சௌம்யாவும்
பெரும்பாலான
கதைகளை எழுதும்போதோ அதற்கு முன்னரோ என்னிடம் நேர் பேச்சில்
பகிர்ந்துகொண்டிருக்கிறார். எப்படி ஒரு கதையை எழுதியிருக்கிறாரோ அப்படியே தான்
சொல்வார். இது சில சமயம் சுவாரஸ்யமான கதைசொல்லலாக இருக்கும். சில சமயம் லீனியரான
கதை சொல்லலால் பின் கதை மிக நீண்டு போய்விடும் அபாயமும் நடந்திருக்கிறது.
நினைப்பதெல்லாம்
உளறும் சம்பத் எனும் பாத்திரம், ப்ளைட்டில் சந்திக்கும் முன்னாள் காதலி, புதிதாக
ஊருக்கு வரும் ஆந்திரா நண்பரின் அட்டகாசங்கள், ஆஸ்திரேலியர்களைக் கைதிகளாகப் பார்க்கும்
நவீன மங்கை, சொந்த ஊரிலேயே காரணமில்லாமல் அகதி
ஆனவர் வெளிநாட்டில் பிறர் மீது காட்டும் பிரிவினை பாவம் என கதைகள் பல தரப்பட்ட
மனிதர்களையும், சம்பவங்களையும் பற்றிப் பேசுகிறது. இவை
அனைத்தையும் கோர்ப்பது எது? தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களை
கூர்ந்து கவனிப்பதில் தொடங்கி, ஏதோ ஒரு புள்ளியில் இவையெல்லாம்
இணையும் வரலாற்றுத் துளிகளைச் சேர்ப்பதில் முடிகிறது.
நல்ல நகைச்சுவை கதையையும் கதாபாத்திரங்களையும் இத்தொகுப்பில் உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக, யாகாவாராயினும் நாகாக்க எனும் சிறுகதை இத்தொகுப்பில் நகைச்சுவை மிகுந்த புனைவாக அமைந்திருக்கிறது. சந்தர்ப்பம் அவலமாக ஆக வேண்டிய சூழலை நகைச்சுவையால் காப்பாற்றியிருக்கிறார். கதை களன் மட்டுமல்லாது, பாத்திரங்களின் வார்ப்பும் அவர்களது எண்ண ஓட்டங்களும் மிகவும் சுவாரஸ்யமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. அதே போல What a wonderful world கதையில் வரும் செல்வேந்திரனின் பாத்திரம் சுருங்கச்சொல்லப்பட்டிருந்தாலும் மனிதனின் கசப்புகளையும், வரலாற்றின் முரணையும் நன்றாகப் படம்பிடித்துக்காட்டியுள்ளது.
ஒரு
வகையில் சாதாரணமானவர்களின் சாதாரண வாழ்க்கையில் இடம்பெறும் சிறு முரண்களை
வெளிப்படும் கதைகள் என இவற்றைச் சொல்லலாம். யாருமே வரலாற்றின் அதி நாயகர்களோ, தின
வாழ்வின் வெற்றியாளர்களோ கிடையாது. தோல்வியாளர்கள் கூட இல்லை. ஆனால் சக மனிதன்
மீது வெறுப்பும், அந்நியரின் மீது காரணமற்ற அன்பும்
சட்டென உருவாகும் சூழல்கள் மீதான வெளிச்சம் இக்கதைகள்.
கதையின் நிதானமான தொடக்கம் நம்மை அந்த உலகத்தோடு அறிமுகப்படுத்துகிறது என்பது போல இடையில் வரும் உரையாடல்களும், பாத்திரங்களின் சிறு கோணல்களும் கதையை விட்டுத் தனியே பிரித்துவிடும்படியாக அமையவில்லை. அதனால் பனி உருளைப்போல மெல்ல கிளம்பும் கதை பல மனிதர்களை சேர்த்துக்கொண்டு அவரவர்க்கான உலகத்தை உருவாக்கிவிடுகிறது.
பிராஜெக்ட்
மேனேஜராக வரும் பெரியசாமி கணினித்துறையில் இருக்கும் பலருக்கும் பரீட்சயம்
இருக்கும் கதாபாத்திரம். தனது பிராஜெக்ட் குறிப்பிட்ட நேரத்தில் எந்த பிசகும்
இல்லாமல் க்ளையண்டுக்குத் தயாராகிவிட வேண்டும் எனும் ஒரே குறிக்கோளோடு மட்டும்
வாழ்பவர். ஒரு பிராஜெக்ட் மேனேஜரின் கஷ்டம் இன்னொரு பிராஜெண்ட் மேனேஜருக்குத் தான்
புரியும் என்பது போல சிவாவின் அனுபவம் இங்கு நன்றாகக் கை கொடுத்திருக்கிறது.
ஒவ்வொரு பிராஜெக்ட் டீமும் ஒரு மினி உலகம். பலவேறு மனிதர்கள், அவர்களுக்கு
இடையே இருக்கும் சிக்கல்கள், திறமைசாலிகள், பேச்சை
மட்டும் மூலதனமாகக் கொண்டே அலுவலகத்தில் வலம் வருபவர்கள் என நம் முன்னே இருக்கும்
உதாரணங்கள் அநேகம்.இவை எல்லாவற்றுக்கும் அடியில் அல்லது தலைக்கு மேலே தினம்
வாழ்க்கை எனும் மற்றொரு அவல உலகம் உள்ளது. கோபி கிருஷ்ணனின் கதையில் வரும் குமாஸ்தா
போல உலகத்தை தன் அலுவலகத்துக்குள் கொண்டு செல்லக்கூடிய சவுகரியம் ஐடி துறையில்
இருப்பவர்களுக்குக் கிடையாது. உலகம் முழுவதும் ஒரு டைம் சோனில் இருக்கும் போது
டைம் சோனே இல்லாத ஒரு இடம் இந்திய ஐடி தொழிற்கூடங்கள். அலுவலகத்துக்கு வரும்
வழியில் ஒரு கிழவியை இடித்துவிட்டதால் திறமைசாலி அலுவலகர் முக்கியமான நாளன்று வர
இயலவில்லை. இக்கட்டான நேரத்தில் பெரியசாமியை அழைத்து தனது சிக்கலைச் சொல்ல
வருகிறார். ஆனால் பிராஜெக்டில் கோ லைவ் சிக்கலால் பெரியசாமி எரிந்து விழுகிறார்.
ஆனால் பாட்டி இறந்துவிட , கோ லைவ் சிக்கலில்லாமல் போன அன்றைய
இரவு உதவ முடியாமல் போன காரணத்தால் வரிசையாக தன்னை இந்த இடத்துக்கு வரவழைத்த
பலவேறு காரிய காரணங்களை கன்னத்தில் மானசீகமாக அடிக்கிறார். வெகுளாமை எனும் இந்த
கதை நல்லதொரு சிறுகதைக்கு உதாரணமாக இருக்கிறது.
சின்னச்
சின்ன வரலாற்று தருணங்களால் ஆன சரடு மைக்ரோ வரலாறாக மாறி இருக்கிறது. விக்டோரியன்
எனும் கதையில் விக்டோரியன் பேய்களைக் கண்டு பயப்படும் கதைக்களனில் யுத்த காலத்தில்
போரிடச்சென்றவரின் கடிதம் ஒன்று கிடைக்கிறது. யுத்த கால கடிதங்கள் என்பது
மிகப்பெரிய ஆவணமாக மறவோம் கதையில் வருகிறது.
இந்த
உலகிலும் பல சாக்கடைகள் உண்டு, இருட்டு உண்டு, ஏழ்மை
உண்டு, ஏமாற்றங்கள் உண்டு, பல
சங்கடங்களும், சமரசங்களும் உண்டு எனும் இடத்துக்கு
இவரது கதைகள் மெல்ல நகர்வதை இவரது கதைகளைத் தொடர்ந்து படிக்கும் என்னால் உணர
முடிகிறது. சின்ன சின்ன வரலாற்றுத் தகவல்களை இடங்களோடு தொடர்புபடுத்தி வருகிறார்
என்றாலும் வரலாறு எனும் பரிணாமம் பூதாகரமாக இங்கு இருப்பதை மேலும்
விரிவுபடுத்தியிருக்கலாம் என்பது ஒரு குறை.
என்
உறவினரிடம் இன்று சிவாவின் கதைகளைக் கொடுத்தால் அதில் இருக்கும்
நம்பகத்தன்மைக்காகவும், பாத்திரங்களின் தனித்துவத்தைச் சொன்னதற்காகவும்
நிச்சயம் பாஸ் மார்க் கொடுத்திருப்பார். சின்ன விஷயங்களைச் சொல்லிச்செல்லும்
சாதாரணர்களைப் பற்றிய கதைகளாகவும் இருப்பதால் சுஜாதாவின் ஶ்ரீரங்கத்துத் தேவதைகள்
போல லண்டன் லார்டுகள் பற்றிய தொகுப்பாகவும் இருக்கிறதென பாராட்டியிருப்பார்.
இன்னும் சில காலங்கள் கழித்தும் நாம் நினைவில் கொள்ளும் சில பாத்திரங்களைப்
படைத்ததாலும்,, அந்நிய கலாச்சாரத்த்தைப் பற்றிய
சின்னச்சின்ன வரலாறுக்காகவும் இந்தத் தொகுப்பு நினைவில் வாசகர் மனதில் நிற்கும்.”
Compiled by London swaminathan. Article no. 1702; dated 9 March 2015. லண்டன் மாநகர நேரம் காலை 9-25. நம் ஒவ்வொருவருக்கும் 5 தந்தைகள், 5 தாய்மார்கள், 5 குருக்கள் …
17 Jun 2017 – இவர்கள் ஐந்து பேரையும் தாய் போலக் கருத வேண்டும். … லண்டன் மாநகர நேரம் காலை 9-25 நம் ஒவ்வொருவருக்கும் 5 தந்தைகள், 5 தாய்மார்கள், … … https://tamilandvedas.com/tag/ஐந்து-பெண்கள்/.
… கீழ்க்கண்ட ஐந்து விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன– அவனது ஆயுள், வேலை, … ஒருவனுடைய அறிவுக்குக் காரணம் அவனுடைய தாய் தந்தையர் மூலம் … https://tamilandvedas.com/tag/தாயைப்-போல/.
உங்களின் ஜீரண மண்டல அமைப்பு உங்களை
நோயுறச் செய்கிறதா, பருமனாக ஆக்குகிறதா? – 2
கட்டுரை ஆக்கம் : Mark Hyman MD
மொழியாக்கம் ச.நாகராஜன்
tamilandvedas.com,
swamiindology.blogspot.com
உங்கள் குடல் நாளம் சீராக இல்லை
என்பதை எப்படி உணர்வது?
உங்கள் ஜீரண அமைப்பைச் சரியாக இருக்குமாறு செய்ய முதலில் உங்கள் உடலின் குடல்நாளத்தை சீரற்றதாகச் செய்யும் எந்தப் பொருள்கள் குடலுக்கு அனுப்பப் படுகின்றன என்பதை அறிய வேண்டும். பட்டியல் இதோ:
பைபர் சத்து குறைவாக
உள்ளவை, அதிக இனிப்புள்ளவை , பதப்படுத்தப்பட்டவை, சத்துக் குறைவானவை, அதிக கலோரி
உணவுத் திட்டம் ஆகியவை தப்பான பாக்டீரியாக்களையும், நுரைமங்களையும் (wrong Bacteria abd
yeast) குடல் நாளத்திற்கு அனுப்புவதால் குடலானது பாதிப்புக்குள்ளாகிற்து.
அதிக
மருந்துகளை உட்கொள்வதால், அமிலத் தடைகளைப் போல (acid blockers – Prilosec,
Nexium etc.), அவை குடல்நாளத்தின் ஜீரண வேலையைத்
தடுக்கிறது – வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகளான ஆஸ்பிரின், அட்வில். ஆலிவ்
(Aspirin, Advil and Aleve) மற்றும் அதிக அளவில் ஆன்டி
– பயாடிக்ஸ், ஸ்டிராய்ட்கள், ஹார்மோன்கள் ஆகிய மருந்துகளையும் குறிப்பாகச்
சொல்லலாம்.
*
கண்டுபிடிக்கப்படாத குளூட்டன் சகியாமை (Gluten intolerance), குளூட்டன் ஒவ்வாமை, (Celiac disease) அல்லது
பால் பொருள்கள், முட்டைகள் அல்லது சோளம் போன்ற குறைந்த கிரேடு உணவு ஒவ்வாமைகள்
*
தொடர்ந்து இருக்கும் குறைந்த கிரேடு தொற்று வியாதிகள் அல்லது சிறுகுடலில்
பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்க அதனால் ஏற்படும் குடல் நாளத்தின் சீரற்ற தன்மை,
ஈஸ்டின் அதிக வளர்ச்சி (Overgrowth of Yeast),
பாராசைட்டுகள் (Parasites) அல்லது இன்னும் மோசமான
குடல்நாளத் தொற்றுக்கள்
*
குடல் நாளத்தைச் சேதப்படுத்தும் மெர்க்குரி (Mercury – பாதரஸம்)
மற்றும் பாசி (mold toxins) போன்ற விஷங்கள்
*
அமிலத்தைத்தடை செய்யும் மருந்துகளின் உபயோகத்தால் ஏற்படும் ஜீரணத்திற்கான போதுமான
என்ஜைம் இயக்கம் இல்லாமை அல்லது துத்தநாகம் போதுமான அளவு இல்லாமல் இருப்பது (Zinc
deficienty)
*
குடல்நாள நரம்பு மண்டலத்தை மாற்றக் கூடிய மன அழுத்தம், ஒழுகக்கூடிய குடல் நாளத்தை
உருவாக்குகிறது. சாதாரணமான பாக்டீரியாக்களை குடல்நாளத்தில் மாற்றுகிறது.
பிறகு என்ன நடக்கிறது என்று சொல்ல வேண்டியதே இல்லை; நீங்கள் நோய்வாய்ப்படுகிறீர்கள்.
குடல் நாளத்திற்குக் கொஞ்சம்
கூடச் சம்பந்தமில்லாதது போலத் தோன்றும் எக்ஸிமா, சொரியாஸிஸ் அல்லது ஆர்த்ரிடிஸ் (eczema, psoriasis, or arthritis) ஆகியவை
உண்மையில் குடல்நாளப் பிரச்சினைகளாலேயே ஏற்படுகின்றன என்பதை முக்கியமாக அறிந்து கொள்ள
வேண்டும். குடல்நாளத்தை நன்கு கவனித்தால் நீங்கள் நலமுடையவராக ஆகி விடுவீர்கள். இதோ
ஒரு சின்ன எடுத்துக்காட்டு:
எக்ஸிமா குடல்நாளத்தில் ஆரம்பிக்குமா?
அலிஸன் எனது நோயாளிகளில் ஒருவர்.
அவர் எக்ஸிமாவினால் பாதிக்கப்பட்டிருந்தார். செம்மையான, ஒழுகும், கறை படிந்த, அரிப்புக் கொண்ட தடிப்புகள்
அவளது உடல் முழுதும் பரவி இருந்தது. உங்கள் குடல்நாளம் சீரற்றிருந்தால் என்ன நடக்கும்
என்பதற்கான சரியான எடுத்துக்காட்டு இது தான். உங்கள் ஜீரணத்தை சரியாக ஆக்கி விட்டால்
எப்படிப்பட்ட அசாதாரணமான பரிபூரண குணத்தை நீங்கள் அடைய முடியும் என்பதற்கான உதாரணமும்
இவர் தான்.
ஒரு டாக்டர், இன்னொரு டாக்டர் என்று ஒவ்வொருவரையாக இந்தப் பெண் பார்த்துக் கொண்டே இருந்தார். பூச்சுத் தைலங்கள், லோஷன்கள், திரவ மருந்துகள் (slves, lotions and potions) ஆகியவற்றைத் தன் தோலின் மீது தடவிக் கொண்டிருந்தார். அத்துடன் ஸ்டிராய்டுகள் , ஆன்டி பயாடிக் மருந்துகளையும் எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் பார்த்த டாக்டர்களில் ஒருவராவது அவரது நோயின் அடிப்படையான காரணத்தை அறிந்து கொண்டு சிகிச்சை செய்யவில்லை.
அலிஸனுக்கு
வயது 57. தொடர்ந்து எட்டு வருட காலம் கடுமையான, கொஞ்சம் கூட குணமடையாத, எக்ஸிமாவினால்
அவதிப் பட்டுக் கொண்டிருந்தார். அவர் அதிக இனிப்புக் கொண்ட உணவுத் திட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
அடிக்கடி ஜனன உறுப்பில் ஈஸ்ட் தொற்றுக்களைக் கொண்டவராகவும் இருந்தார் (frequent vaginal yeast infections).
நான் அவரைப்
பார்த்த போது அவரது குடல்நாளத்தைச் சோதனை செய்தேன்; ஒழுகும் குடல்நாளத்தை அவர் கொண்டிருப்பதையும்
கண்டேன். அவரது குடல்நாளத்தில், ஒரு செல் கனத்தைக் கொண்ட பூச்சு உடைபட்டு சரியாக இயங்காமல்
இருந்தது. அவர் 24 lg G என்ற உணவு ஒவ்வாமையைக் கொண்டிருந்தார்; அவரது
மலமோ ஆரோக்கியமான பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கவில்லை, பல வருடங்களாக ஆன்டி பயாடிக்
மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தமையால் ஈஸ்டின் அதிக வளர்ச்சியையும் கொண்டிருந்தார்.
ஈஸ்டிற்கு எதிராக அதிக அளவில் ‘ஆன்டி பாடிஸ்’(Antibodies) அளவுகளையும் இரத்தத்தில் கொண்டிருந்தார்.
ஆகவே அவரது
குடல்நாளம் சரியாக ஆவதற்கு நான் உதவி செய்தேன். அவருக்கு எதிர்வினை செய்த அனைத்து உணவுகளையும்
அவரை நிறுத்தச் சொன்னேன். இனிப்பைத் தவிர்த்து அவரது கேஸ்ட்ரோ இண்டெஸ்டினல் பாதையில்
ஈஸ்டையும் பதப்படுத்தப்பட்ட கார்போஹடிரேட்டுகளையும்
அளிப்பதை நிறுத்தச் சொன்னேன் (to stop
feeding the yeast in her gastrointestinal tract by cutting sugar and refined
carbohydrates). அவரது குடல் நாளத்தில் இருந்தஈஸ்டைக் கொல்ல, பூசண எதிர்ப்பு மருந்துகளையும்(antifungal
medications) மூலிகைகளையும் அளித்தேன்.
பின்னர் ப்ரோபயாடிக்ஸ்களை அளித்து (probiotics)
அவர் உடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள்
இருக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன். அத்துடன் குடல்நாளத்தை குணப்படுத்தும் ஊட்டச்சத்துக்களை அளித்து
அவரது குடல்நாள பூச்சைச் சரி செய்து இயல்பான உடல் இயக்கம் அவருக்கு வருமாறு செய்தேன்.
விளைவு?அவரது
எக்ஸிமா எட்டு வருடங்களில் முதல் தடவையாக மறைந்தே போனது. அது மீண்டும் வரவே வராமல்
ஒழிந்தது!
அலிஸனுக்கு
ஏற்பட்ட அனுபவத்தை நீங்களும் அனுபவிக்கலாம். உங்களது ஜீரணத்தைச் சரியாக ஆக்குவதன் மூலம்
உங்கள் தொடர் வியாதி அடையாளங்களை நீக்கிக் குணமாகலாம்.
நல்ல ஜீரண ஆரோக்கியத்திற்கான
ஏழு படிகள் இதோ:
உங்களது உள் குழாயைச் சரி செய்ய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்:
பதப்படுத்தப்படாத முழுமையான உணவுகளை உண்ணுங்கள். அதிகமான பைபர் இருக்கும்படியான
கறிகாய்கள், பீன்ஸ், பருப்புகள்,
விதைகள் முழுமையான தானியங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உணவு ஒவ்வாமையை நீக்குங்கள். சில உணவுகள் சேராவில்லை
என்ற நிலை இருந்தால் அதைத் தவிர்த்து வேறு உணவுத் திட்டத்தை மேற்கொள்ளுங்கள். க்ளூடன்,
பால் பொருள்கள், ஈஸ்ட், சோளம், சோயா, முட்டைகள் ஆகியவற்றை ஒரு வாரம் நிறுத்துங்கள்.
(cut out gluten, dairy, yeast,
corn, soy and eggs). உங்கள் குடல்நாளம்
எப்படி இருக்கிறது என்று பாருங்கள். மற்ற நோய்க்குறிகளின் அடையாளங்கள் எப்படி இருக்கிறது
என்பதையும் பாருங்கள்.
பூச்சிகள் அதிகமாக இருக்கிறதா என்பதையோ அல்லது தொற்றுக்கள்
இருக்கிறதா என்பதையோ பார்த்து அதற்குத் தக்க சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். பாராசைட்டுகள்,
சின்ன குடல்பகுதி பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவை சரியாக குடல்நாளம் இயங்குவதைத் தடைப்படுத்தும்.
நீங்கள் குணமடைய விரும்பினால், இந்தத் தொற்றுக்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டும்.
உங்கள் ஜீரண என்ஜைம்களை மீண்டும் நிறைவு செய்யுங்கள்.
போதுமான அளவு ஜீரண என்ஜைம்கள் உங்கள் குடல்நாளத்தில் இல்லையென்றால் உங்கள் உடல் மற்றும்
மூளை சரியாக இயங்குவதற்கான மூலப்பொருள்களை உங்கள் உணவுகள் சரியாக மாற்றித்தரச் செய்ய
முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க சரியான ஜீரண என்ஜைம்களை உங்கள் உணவுடன் சேர்த்துக்
கொள்ளுங்கள் (take a
broad – spectrum digestive enzymes with your food).
நட்பான
பாக்டீரியாக்களைக் கொண்டு உங்கள் உடல் மண்டலத்தை அருமையாக ஆக்கி மீண்டும் நிர்மாணியுங்கள்.
ப்ரோபயாடிக் துணை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் (Take
probiotic supplements). அவைகள் நல்ல
குடல்நாளத்திற்கான ஆரோக்கியமான் பாக்டீரியாக்களை மீண்டும் அடைய உதவும்.
நல்ல கொழுப்பைக்
கொள்ளுங்கள். ஒமேகா -3 துணை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது குடல்நாளத்தில் இருக்கும்
வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
உங்கள் பூச்சை (lining) குணப்படுத்துங்கள்.
குடல்நாளத்தைக் குணப்படுத்தும் க்ளூடாமைன் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களை
உங்களின் குடல்நாள பூச்சைச் (gut
lining)சரி செய்வதற்காக உண்ணுங்கள். அது தனது இயல்பான இயக்கத்தை
அடையும்.
இப்படி ஜீரணத்தைச் சரி செய்ய சில காலம் பிடிக்கும், ஆனால் அதில்
நிச்சயம் வெற்றி உறுதி. நீங்கள் துடிப்பான ஆரோக்கியத்தை விரும்பினால் அது மிக மிக அவசியமானது.
ஆகவே உங்கள் உள் குழாயை சரி செய்ய மேற்கொண்ட சிகிச்சை வழிமுறைகளைக் கடைப்பிடித்து உங்கள்
நோய் அறிகுறிகள் மறைவதைக் கண்டு மகிழுங்கள்!
இப்போது நான் உங்களிடம்
கேட்க விரும்புவது : –
உங்களின் குடல்நாளம் உங்களின் முழு ஆரோக்கியத்திற்கு எவ்வளவு
முக்கியமானது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?
உங்கள் ஜீரணத்தைச் சரியாக்க என்னென்ன வழிமுறைகளை நீங்கள் எடுக்கிறீர்கள்?
எப்படி அவை வேலை செய்கின்றன?
ஏன் மருத்துவக் கம்பெனிகள்
குடல்நாளத்தின் சரியான இயக்கத்தைத் தடை செய்யும் மருந்துகளைத் தயார் செய்து
அவற்றை தீவிரமாக விளம்பரப்படுத்துகின்றன? உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன?
உங்கள் எண்ணங்களைத் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாமே!
உங்கள் ஆரோக்கியத்தை விரும்பும் நலம் விரும்பி
மார்க் ஹைமேன்
MD
****
நன்றி : மார்க் ஹைமேன் MD – க்ளீவ்லாண்ட் க்ளினிக் சென்டர் ஃபார் ஃபங்ஷனல் மெடிசின் – இன் டைரக்டர். அல்ட்ரா வெல்னெஸ் சென்டரின் நிறுவனர்.
வெள்ளைக்கார கொள்ளைக்காரர்கள் 40,000 வராகன் கொள்ளையடித்த செய்தி
குலவை சத்தம் போட்டவுடன் வெள்ளையர் மீது தாக்குதல்
கட்டபொம்மனை வெள்ளைக்கார அதிகாரிகளும் கலெக்டர்களும் பலமுறை அழைத்த போதும் அவர் போகவில்லை. இறுதியாக ஒரு நாள் சந்தித்தபோது கோபால் அய்யர் கடிதங்களைப் படித்து முடித்தவுடன் பயங்கர மோதல்.
ஊமைத்துரையின் வீரம்
கட்டபொம்மனுக்கு
தூக்கு
எட்டயபுரம்
ராஜா காட்டிக் கொடுத்ததால் கட்டபொம்மன் பிடிபட்டார். தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டவுடன் அமைதியாக நடந்து சென்றார். அவ்வளவு வீரம்; அவ்வளவு மன உறுதி.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் கல் போடுவது நினைத்த காரியத்தை எல்லாம் நிறைவேற்றும் என்பதால் போகும் வரும் மக்கள் எல்லோரும் கல் போட்டு மரியாதை செய்வர்.