யமன் (எமன்) போல வந்த 3 பெண்கள்! (Post No.4104)

Written by London Swaminathan


Date: 22 July 2017


Time uploaded in London- 11-00 am


Post No. 4104


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ஒரு பாட்டுக்கு எனக்கு முழு அர்த்தம் விளங்கவில்லை. இது நீதி வெண்பாவில் உள்ளது. அந்த நூலை யார் எழுதினார்கள் அல்லது தொகுத்தார்கள் என்பது தமிழ் கூறு நல்லுலகிற்குத் தெரியாது. கால வெள்ளத்தில் மறைந்துவிட்டது. நாம் மிகவும் போற்றும் மூன்று பெண்களை எமனென்று வருணிக்கிறது இந்தப் பாடல்! ஓரளவுக்கு அர்த்தம் விளங்குகிறது!

 

முதலில் பாடலைப் படித்துவிட்டு விவாதிப்போம்:-

என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்

தன்னேர் திரேதத்திற் சானகியே – பின்யுகத்திற்

கூடுந்திரௌபதையே கூற்றாம் கலியுகத்தில்

வீடுதொறும் கூற்றுவனாமே

 

பொருள்:-

கிரேதத்து- கிரேதா யுகத்தில்

இரேணுகையே – இரேணுகை என்பவளே

கூற்றுவன் ஆம் – யமன் ஆகும்

திரேதத்தில் – திரேதா யுகத்தில்

தன் நேர்- தனக்குத் தானே ஒப்பாகிய (வேறு எவரையும் உவமை சொல்ல முடியாத)

சானகியே –  சீதை என்பவளே

கூற்றுவனாம் – யமன் ஆகும்

பின் யுகத்தில் – அதற்கடுத்த துவாபர யுகத்தில்

கூடும் – வந்த

திரௌபதியே – திரௌபதையே

கூற்றாம் – யமன் ஆகும்

கலியுகத்தில் – இப்பொழுது நடக்கும் கலி யுகத்தில் என்றாலோ

வீடுதொறும் – ஒவ்வொரு வீட்டில் இருக்கும் (ஒவ்வொரு பெண்ணும்)

கூற்றுவனாம் ஆம் – யமன் ஆகும்

என்னே – இஃது என்ன ஆச்சரியம்!

 

மொத்தத்தில் கருத்து என்னவென்றால் பெண்கள் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்காமல் அடக்க ஒடுக்கமாக வாழவேண்டும். முன் யுகத்தில் இருந்ததைவிட இப்பொழுது பெண்கள் மிகவும் கெட்டுப் போய்விட்டார்கள் என்பதே.

 

அது எப்படி?

ரேணுகா – பரசுராமன் கதை பலருக்கும் தெரிந்ததே. ரேணுகாவுக்கு காமம் தொ டர்பான தீய எண்ணங்கள் வரவே அவரது கணவர் ஜமதக்னி ரேணுகாவைக் கொல்ல உத்தரவு இடுகிறார். உடனே பரசுராமன் அதைச் செய்கிறார். அதைப் பாராட்டி ஜமத்னி முனிவர் ஒரு வரம் தருகிறார். தன்னுடைய அம்மா ரேணுகாவை உயிர்ப்பிக்க வேண்டும் என்று வேண்டுகிறார். ரேணுகா மீண்டும் உயிர் பெறுகிறாள்.

 

இதில் ரேணுகா செய்த தவற்றால் ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஆனால் எல்லாம் சுபமாக முடிகிறது. பரசுராமர் க்ஷத்ரியர்கள் மீது கோபம் கொண்டு 21 தலைமுறையை அழித்ததற்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை.

 

சீதை, ஒரு மாய மானுக்காக ஆசைப்பட்டதால் ராவணன் கடத்துகிறான். இலங்கையே அழிகிறது. பிறகு சீதையைப் பற்றி ஒரு சலவைத் தொழிலாளி சந்தேகம் கிளப்பவே அவள் பூமாதேவியிடம் திரும்பிச் செல்கிறாள். இங்கு சீதை செய்த தவறு எல்லாப் பெண்களையும் போல தங்கத்துக்கு (பொன் மான்) ஆசைப்பட்டது. அதாவது அது பொன் மான் இல்லை என்று கணவன் தெளிவு படுத்தியும் அடம்பிடித்ததால் வந்த வினை.

 

மூன்றாவது, திரவுபதி சிரித்ததால் வந்த வினை. ரத்தினக் கல் போல இழைக்கப்பட்ட தரையைத் தண்ணீர் என்று நினைத்து துரியோதனன் தனது பட்டாடையைத் தூக்கவே பலகணியில் இருந்து அதைப் பார்த்த திரவுபதி ‘களுக்’ என்று சிரித்துவிட்டாள்; பெண்களுக்கான அடக்கம் அவளுக்கு அப்போது இல்லை.

 

இதற்கெல்லாம் சேர்த்துப் பழிவாங்க, வேறு ஒரு சந்தர்ப்பத்தில், அவளுடைய ஆடையை அவிழ்க்க உத்தரவிட்டான். அவள், உடனே சபதம் செய்து, மஹா பாரதப் போருக்குப் பின்னால்,  துரியோதனன் ரத்தத்தை முடியில் தடவி பழி தீர்த்துக்கொண்டாள். இது பெண்ணின் நகைப்பினால் வந்த வினை.

 

கலியுகத்தில் ஒவ்வொரு பெண்ணும் இப்படித் தவறு செய்யக்கூடும் என்பதால் புலவர் எச்சரிக்கிறார் போலும்.

 

இன்று டெலிவிஷன்களில் வரும் சீரியல்களிலும் அப்படித்தானே பெண்களைக் (நீலாம்பரிகளாக) காட்டுகிறார்கள்.

 

புலவர் பெருமான் காரணம் சொல்லாவிடிலும் மூன்று கதைகளையும் நாமாகத் தொடர்புபடுத்தி விளக்கம் காண முடிகிறது.

 

வேறு ஏதேனும் பொருள் தெரிந்தால் நீங்களும் சொல்லலாம்.

TAGS:- யமன், பெண்கள்,ரேணுகா, சீதை, திரௌபதி, யுகம்

-சுபம்–

 

 

ஆராய்ச்சி என்றால் என்ன? பல்கலைக்கழக அறிஞர் விளக்கம் (Post No.4075)

Written by London Swaminathan
Date: 12 July 2017
Time uploaded in London- 19-22
Post No. 4075

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அமெரிக்காவில் உள்ளது கொலம்பியா பல்கலைக் கழகம். இதன் தலைவராக நிகலஸ் மர்ரே பட்லர் (Nicholas Murray Butler) இருந்தார். அவர் பெரிய அறிஞர்; நோபல் பரிசு வென்றவர். கல்வியாளர்.

 

அவரும் , அதே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிராண்டர் மாத்யூவும் (Brander Mathews) பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் இலக்கியக் கொள்ளை (Plagiarism) என்றால் என்ன என்று விவாதித்தனர். பிராண்டர், தான் எழுதிய கட்டுரையை மேற்கோள்காட்டி விளக்கினார்.

 

யாராவது ஒருவர் ஒரு விஷயத்தை முதல் தடவை சொன்னால் அதுதான் ஒரிஜினல் (originality);

அதுதான் ஆதி; சுயமான சிந்தனை.

அதையே ஒருவர் இரண்டாவது தடவை சொன்னால் அது இலக்கியக் கொள்ளை- Plagiarism

(பேஸ்புக்கில் பலரும் செய்வது)

மூன்றாவது முறை அதையே ஒருவர் சொன்னால் அவருக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றலே இல்லை (Lack of Originality) என்று பொருள்.

அதையே நாலாவது முறை யாராவது சொன்னால், அது ஏதோ ஒரே மூலத்திலிருந்து (drawing from a common source) தோன்றியது என்று பொருள்.

 

இப்படி அவர் சொல்லிக் கொண்டே இருக்கையில் பட்லர் குறுக்கிட்டார், “அதையே யாரவது ஐந்தாவது முறை சொன்னால் அதன் பெயர் ஆராய்ச்சி! (Research)

 

எவ்வளவு உண்மை!

xxx

 

சொல் கஞ்சன்!

 

அமெரிக்க ஜனாதிபதி கூலிட்ஜ் (President Coolidge)பயங்கரமான கஞ்சன்; அதாவது சொல் கஞ்சன்; பெரிய சந்திப்புகளிலும், பொது விருந்துகளிலும் பேசா மடந்தையாக இருப்பார். அப்படியே பேசினாலும் இரண்டு, மூன்று சொற்களே வாயிலிருந்து வரும்; அதுவும் பெரிய அறிவாளி பேசுவது போல இருக்காது!

 

அமெரிக்காவின் புகழ்மிகு பெண் கவிஞர் எமிலி டிக்கின்ஸன் (Emily Dickinson). அவருடைய வீடு ஆமெர்ஸ்ட்(Amherst) எனும் இடத்தில் இருக்கிறது. அந்த இடத்தை ஒரு கண்காட்சியாக மாற்றி அவருடைய ஒரிஜினல் படைப்புகள், நினைவுப் பொருட்களை வைத்துள்ளனர். அதற்கு கூலிட்ஜ் விஜயம் செய்தார். ஒரு நாட்டின் ஜனாதிபதியே வருகிறார் என்பதால், பொது மக்கள் தொட முடியத பொருட்களை எல்லாம் தொட்டுப் பார்க்க அவரை அனுமதித்தனர்.

 

யாருக்கும் காட்டாத புலவருடைய நினைவுப் பொருட்களை எல்லாம் காட்டினர் கண்காட்சி அதிகாரிகள்.

 

அவரும் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தார். வாயே திறக்காமல்!

 

இவருடைய ஆர்வத்தைக் கண்ட அதிகாரிகள் ஒரு அரிய பொக்கிஷப் பெட்டியைத் திறந்து இவைதான் அவர் கைப்பட எழுதிய கவிதைகள் என்று காட்டினர். அவருடைய கண்கள் அகல விரிந்தன. புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.

கடைசியில் இரண்டே சொற்கள் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் சொன்னது என்ன தெரியுமா?

“பேனாவால் எழுதினாரா, ஹூம்; நான் டிக்டேட் செய்வேன்” (சொல்லச் சொல்ல வேறு ஒருவர் எழுதுவது டிக்டேசன்)

 

சொல் தச்சர்கள் தமிழிலும் சஸ்கிருதத்திலும் உண்டு; நல்ல வேளை, சொல் கஞ்சர்கள் கிடையாது!

–சுபம்–

பெரியவாளின் நகைச்சுவை! (Post No.4035)

Written by S NAGARAJAN

 

Date: 29 June 2017

 

Time uploaded in London:-  5-51 am

 

 

Post No.4035

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

காஞ்சி பெரியவா மஹிமை

 

பெரியவாளின் நகைச்சுவை!

 

ச.நாகராஜன்

 

காஞ்சி மஹா பெரியவா அத்வைத ஞானி. என்றாலும் கூட லௌகிக உலகத்திற்கு அவர் நாசுக்காக சொல்ல வேண்டியதைச் சொல்லுவார்.

 

பி.நாராயண மாமா பகிர்ந்து கொண்ட சம்பவம் இது:

ஒரு முறை உடல் பருமனான ஒரு குண்டு மாமி பெரியவாளை தரிசிக்க வந்தார்.

 

அவரால் நமஸ்காரம் பண்ணக் கூட முடியவில்லை. அவ்வளவு குண்டான மாமி.

 

பக்தி இருந்தாலும் நமஸ்காரம் பண்ண உடல் வாகு இடம் தராததால் ஒரு வித சங்கடம் கலந்த குழப்பத்தில் அவர் ஒரு ஓரமாக கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருந்தார்.

பின்னர் பெரியவாளை அணுகினார்.

 

“எனக்கு டயபடீஸ் (Diabetes) இருக்கிறது.டாக்டர் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். அதற்காக தினமும் ஒரு மணி நேரம் நான் நடக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். ஆனால் என்னாலோ ஒரு பத்து நிமிடம் கூட நடக்க முடியவில்லை.” என்று கூறிய அவர், “பெரியவாள் தான் எனக்கு ஒரு சுலபமான வழியைக் காண்பிக்க வேண்டும்” என்று விண்ணப்பித்தார்.

“இந்த டாக்டர்கள் எல்லாம் ஒரே மாதிரி தான். மெடிகல் புஸ்தகங்களில் இருப்பதை அப்படியே திருப்பித் திருப்பிச் சொலவதே அவர்களின் வழக்கமாக ஆகி விட்டது. பிராக்டிகலாக அவர்கள் ஒரு விஷயத்தை அணுக மாட்டேன் என்கிறார்கள்” என்று ஆரம்பித்தார் பெரியவாள்.

 

குண்டு மாமியின் முகம் விகசித்தது.பெரியவாள் ஏதோ ஒரு சுலபமான வழியைச் சொல்லப் போகிறார் என்று அவர் எதிர்பார்த்தார்.

 

“ஒருவருக்கு வியாதி இல்லாத ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமென்றால் பகவானின் அனுக்ரஹம் வேண்டும்.”

பெரியவாளின் பேச்சை உன்னிப்பாகக் கவனிக்கலானார் அந்த மாமி.

 

“ உன் ஆத்துக்குப் பக்கத்தில் ஏதேனும் கோவில் இருக்கா?” – பெரியவாள் கேட்டார்.

 

“இருக்கிறது. பெரிய சிவன் கோவில் இருக்கிறது.” – மாமி பதில் சொன்னார்.

 

“நல்லதாப் போச்சு. அங்கு தினமும் காலையும் மாலையும் ஆறு ஆறு பிரத்க்ஷிணம் பண்ணு. துடைப்பக்கட்டையால் ஒரு நூறு அடி மட்டும் கோவிலை சுத்தம் செய்.”

 

பெண்மணிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. பெரியவாளின் பிரசாதத்துடன் வீட்டிற்குக் கிளம்பினார்.

 

பெரியவாளின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு அடக்க முடியாத சிரிப்பு.

 

அவரைப் பார்த்த் பெரியவாள்,”என்ன, நான் ஏதேனும் தப்பா சொல்லிட்டேனா?” என்று கேட்டார்.

 

“இல்லை பெரிய்வா! டாக்டர் நடைப் பயிற்சி – வாக்கிங் போ என்று சொன்னார். ஆனால் பெரிய்வா பிரதக்ஷிணம்னு பிரஸ்கிரைப் (prescribe) பண்ணேள்.” என்றார் அவர்.

 

“ஓ! மருந்தாக இரண்டு பேரும் பிரஸ்கிரைப் (Prescribe) பண்ணது அத்வைதம் தான். ஆனால் பேர் தான் த்வைதம் என்கிறாயா?”

என்றார்  பெரியவாள்.

 

அவரது நுட்பமான நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

***                                                        நன்றி திலிப் அக்டோபர்/டிச்மப்ர் 2016 இதழ்

ஐந்து பெண்கள் விலக்கு! ஐந்து பெண்கள் தாய்! (Post No.4010)

Written by London Swaminathan
Date: 17 June 2017
Time uploaded in London- 16-06
Post No. 4010
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

 

 

கன்னியரை பொன்னான் கழிந்தோரை மற்றயலார்

பன்னியரை மாயப் பரத்தையரை – முன்னரிய

தாதியரை நல்லோர் தழுவ நினையார் நரகத்

தீதுவரு மென்றே தெரிந்து.

நீதி வெண்பா பாடல்

 

நல்லோர், மணமாகாத பெண்களையும், பொன்னான தாலியை இழந்த கைம்பெண்களையும், பிறர் மனைவியரையும், வஞ்சனை மிகுந்த வேசியர்களையும், விரும்பத் தகாத வேலைக்காரிகளையும், நரக துன்பம் வந்துவிடுமே என்று உணர்ந்து தழுவ நினைக்க மாட்டார்கள்.

 

எங்கெங்கு தவறுகள் நிகழக் கூடும் என்பதை அறிந்து நம் முன்னோர்கள் ஐந்து பெண்களின் பட்டியலைத் தந்துள்ளனர். ஆகையால் இவர்கள் இருக்கும் இடத்தில் ஆடவர்கள் தனியாக இருக்கக் கூடாது. இருந்தால் பஞ்சினையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தது போலாகும்.

 

இவ்வாறு பெண்களைப் பற்றிச் சொன்னவுடன் யாரும் அவர்களைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்பதற்காக தாயார் போன்ற ஐந்து பெண்கள் யார் யார் என்பதையும் ஒரு பாடல் கூறுகிறது.

இந்த நீதி வெண்பாவை இயற்றியவர் யார் என்பது தமிழ் கூறு நல்லுலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை.

தன்னையளித்தாள் தமையன் மனை குருவின்

பன்னியரசன் பயிறேவி- தன் மனையைப்

பெற்றாளிவரைவர் பேசி லெவருக்கும்

நற்றாய ரென்றே நவில்

 

பேசுமிடத்து தன்னைப் பெற்றவள், தமையனின் மனைவி, ஆசிரியரின் மனைவி, அரசனின் மனைவி, தன்னுடைய மனைவியைப் பெற்றவள் ஆகிய இந்த ஐந்து வகையினரையும் அவரவர்க்கு பெற்ற தாய்மார்கள் என்றே சொல்லு.

இவர்கள் ஐந்து பேரையும் தாய் போலக் கருத வேண்டும்.

 

MY OLD ARTICLES ON THE SAME THEME:—

ஐந்து தந்தை, ஐந்து தாய், ஐந்து குரு …

https://tamilandvedas.com/…/ஐந்து-தந்தை-ஐந்து-…

 

9 Mar 2015 – Compiled by London swaminathan Article no. 1702; dated 9 March 2015 லண்டன் மாநகர நேரம் காலை 9-25 நம் ஒவ்வொருவருக்கும் 5 தந்தைகள், 5 தாய்மார்கள், …

தாய் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/தாய்/

 

ஐந்து தாய். ராஜாவின் மனைவி (மஹாராணி), குருவின் மனைவி, அண்ணனின் மனைவி, தன்னுடைய சொந்தத் தாய்மற்றும் மாமியார் ஆகிய …

ஐந்து ‘ஜ’ காரமும் ஐந்து ‘வ’ காரமும்!! | Tamil …

https://tamilandvedas.com/…/ஐந்து-ஜ-காரமும்-ஐந…

 

15 Feb 2014 – தாயும், தந்தையும், விஷ்ணு பக்தியும், கங்கையில் ஸ்நானம் … இதே போல ‘வ’ காரத்தில் ஆரம்பிக்கும் ஐந்துவார்த்தைகள் …

 

 

ஐந்து பெண்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ஐந்து-பெண்கள்/

 

இளவரசர் ஹாரிக்கு ‘பஞ்ச கன்யா’ பெண்கள் வரவேற்பு (Post No 2654). harry with kunkum … (for old articles go to tamilandvedas.comOR swamiindology.blogspot.com) … இந்த ஐந்து பெண்களின் கதை தெரியாதோர் பாரத நாட்டில் இல்லை.

 

 

சுபம்–

சோமபான ரஹசியங்கள் (Post No.3962)

Research Article Written by London Swaminathan

 

Date: 1 June 2017

 

Time uploaded in London- 22-10

 

Post No. 3962

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

சோம லதா என்று அழைக்கப்படும் அதிசயமான அற்புதமான குளிகை பற்றி ரிக் வேதம், யஜூர் வேதம்,அதர்வண வேதம் ஆகிய மூன்றிலும் பல வியப்பான விஷயங்கள் உள்ளன. மூன்று ஆங்கிலக் கட்டுரைகளில் நிறைய விஷயங்களைத் தந்துள்ளேன். இங்கே சுருக்கமாக சில விஷயங்களைத் தருவன்.

 

சோம பானம் என்பது ஒரு போதை தரும் பானம் என்றும் இது ஒரு வகைக் காளான் அல்லது கள்ளிச்செடி போன்ற தோற்றமுள்ள ஒரு செடி என்றும் அந்தக்காலத்தில் வெள்ளைக்காரர்கள் புத்தகம் எழுதினர்.

 

நம்ம ஊர்க்கார்களுக்கு ஆட்சியில் இருக்கும் வெள்ளைகளை எதிர்க்கும் துணிவும் இல்லை; ஆங்கிலத்தில் எழுதும் அறிவும் இல்லை; மூன்று வேதங்களை ஆராய்ச்சி கோணத்தில் படித்தவர்களும் இல்லை. ஆங்கிலத்தில் எழுதும் வல்லமை படைத்தவர்களோ ஜால்ரா கேஸுகள்!

நல்ல சிந்தனை படைத்தவர்களுக்கு மனதில் சில கேள்விகள் எழும்.

1.உண்மையில் வெள்ளையன் சொன்னது போல போதை தரும் தாவரமானால் அதை ஆப்கனிஸ்தான் முஸ்லீம்கள் கஞ்சா பயிரிட்டு உலகம் முழுதும் ஏற்றுமதி செய்து பில்லியன் கணக்கில் (நூறு கோடி) சம்பாதிப்பது போல அவர்களும் சம்பாதித்திருப்பர். முதலில் பேடன்ட் (Patent) வாங்கி இருப்பர்.

அவர்கள் அப்படிச் செய்யாததிலிருந்தே இந்தத் தாவரம் என்ன என்று தெரியவில்லை என்பதைக் காட்டுகிறது. இன்று தெரிந்தால் கூட அவர்கள் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கலாம்.

 

2.மாதா என்பது மதர் (mother) என்றும் பிராதா என்பது பிரதர் (brother) என்றும் ஹோரா என்பது ஹவர் (hour) என்பதும் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆரியர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தனர் என்று வில்லியம் ஜோன்ஸ் (William Jones) முதலியோர் சொன்னவுடன் எல்லா அரை வேக்காடுகளும் ஆமாம் என்றன. ஆனால் வேதத்தில் கூறப்படும் நூற்றுக் கணக்கான வழக்கங்களும் சொற்களும் ஏன் ஐ ரோப்பாவில் இல்லை என்று கேட்டால் பேந்தப் பேந்த முழித்து அரைகுறை பதில்களை வெள்ளையர் தந்தனர்

முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் செய்த அஸ்வமேத யாகமோ, பெஉநற்கிள்ளி செய்த ராஜசூய யாகமோ, கரிகாற் சோழன் செய்த பருந்துவடிவ யாக குண்டமோ புற நானூற்றில் கூட இருக்கிறதே ஏன் வெளி நாட்டில் இல்லை. ஜாதி முறை பற்றி சங்க இலக்கியம் முழுதும் இருக்கிறதே இது ஏன் வெளிநாட்டில் இல்லை, சுயம்வரம் என்பது ராமயண மஹாபாரதம் ஆகியவற்றில்  கூட இருக்கிறதே, ஏன் வெளி நாட்டில் இல்லை என்று நம்மவர்.கேட்கவில்லை. உண்மையில் வேத கால இந்துக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று காலாசாரத்தைப் பரப்பினர், அவர்கள் வெளி நாட்டிலிருந்து வரவில்லை என்பதே உண்மை

 

3.இரானில் சொராஸ்தர்  (Zoroaster) கூட அவர்களது வேதப் புத்தகத்தில் (Zend Avesta) சோம லதையைப் புகழ்ந்து பேசியுள்ளாரே, அதில் அவர் 4 முக்கிய விஷயங்களைச் சொல்லி இருக்கிறாரே. கங்கைச் சமவெளி முதல் ஈரான் வரை பல்லாயிரக் கணக்கான சதுர மைல் பரப்பில் மூவாயிரமாண்டுகளுக்கும் மேலாக சோம லதை இருக்கிறதே! ஏன் ஐரோப்பாவில் ஒரு வரி கூட இல்லை? ஆரியர்கள் அங்கிருந்து அல்லது மத்திய ஆசியவிலிருந்து வந்தால் அங்கும் இது பற்றிப் பேச்சு இருக்குமே? மேலும் சோம ரசம் ஆயுளைக் கூட்டும், குழந்தை பெற உதவும், சக்தியைக் கூட்டும், நோய்களை விரட்டும் என்று சொராஸ்தர் சொல்கிறாரே. மூன்று வேதங்களும் இதைச் செப்புகின்றனவே. இது போதை மருந்தாக இருந்தால் இப்படிப் பேசியிருப்பரா?

 

4.ரிக் வேதத்தின் ஒன்பதாவது மண்டலம் முழுதும் சோமபானம் புகழ் பாடுகிறதே. இதை 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சரிப்பு மாறாமல் பாடி வருகின்றனரே. உலகில் எவனாவது இப்படி போதை மருந்து புகழ்ந்து பாடுவானா அப்படி போதை மருந்தைப் றா போற்றி இருந்தால் அந்த இனமே அடியோடு அழிந்திருக்குமே.ஆனால் வேத கால இந்து மதமோ சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, சீன, கிரேக்க நாகரீகங்களை மியூசியத்துக்கு அனுப்பிவிட்டு இன்றும் உயிர்த்துடி ப்புடன் இருக்கிறதே இது எப்படி முடியும்?

5.சோம யாகம்செய்ததால் மனோசுத்தம் ஏற்பட்டதாகத் தமிழ் கல்வெட்டு கூ றுகிறதே. எங்கள் லண்டன் மாநகரில் டிரக் DRUG – போதைப் பொருள் விஷயத்தால் வாரத்துக்கு ஒரு கொலை நடக்கிறதே; உலகம் முழுதும் போதைப் பொருள் சாப்பிட்டவர்கள்

ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்வர் என்பதை மெக்ஸிகோ, பிரேஸில், லண்டன் வன்செயல்கள் காட்டுகின்றனவே. ஆனால் வேதத்திலோ இதிஹாசத்திலோ இப்படி போதை தொடர்பான வன்முறைகளும் இல்லை; மேலும் பாராட்டுரைகள் அல்லவா இருக்கின்றன?

 

  1. சோமயாகம் பற்றிய வியப்பான விஷயங்களுக்கு விளக்கம் கிடைக்காமல் வெளி நாட்டினர் திணறி, தத்துப் பித்து என்று உளறுகின்றனரே. 12 ஆண்டுகளுக்கு சோம யாகம் நடந்ததாக யஜூர் வேத தைத்திரீய சம்ஹிதை சொல்கிரதே; அதே வேதம் ஆயிரம் ஆண்டும் சோம யாஹம் பற்றிப் பேசுகிறதே; உலகில் எவனாவது யாக குண்டத்தைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு 12 ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டுவரை போதை மருது சாப்பிட்டானா? ஆகவே இதுவும் சோம லதை என்பது ஒரு அரிய குளிகை, போதை மருந்து அல்ல என்பதைக் காட்டுகிறது அல்லவா?
  2. சோமலதையைக் கழுகு கொண்டு வந்ததாகச் சொல்கிறதே. இதற்கு விளக்கம் சொல்ல முடியாமல் உளறுகின்றனரே. ஏன்?

  1. சோமலதை என்பதை விலைக்கு வாங்கும் சடங்கு விநோதமாக இருக்கிறதே. அதாவது சோமலதையை மலையில் இருந்து எடுத்து வருபவனுக்கு ஒரு கன்றுக்குட்டியைக் கொடுத்துவிட்டு அதை அவனிடமிருந்து பிடுங்கிக் கொள்ளும் மந்திரம் உள்ளதே. எந்த வியாபாரியாவது ஒரு முறை இப்படி அடிபட்டவுடன் மீண்டும் அதே ஆளுக்கு சோமலதை விற்பா னா?. அவன் தனது சஹ வியாபாரிகளிடமும் சொல்லி சோம லதையை விற்காமல் அல்லவா செய்திருப்பான். இந்த வழக்கமும் வேத மந்திரம் மறை பொருளாகச் சொல்ல வந்ததது வேறு என்பது தெரியாமல் உளறுகின்றீரே. உலகில் இப்படி யாராவது போதைப் பொருள் விற்பனை செய்தது உண்டா?

9.சோமலதையை ‘அரசன்’ என்றும் ‘விருந்தாளி’ என்றும் வேத மந்திரம் சொல்கிறதே; விலைக்கு வாங்கிய சோம லதையை ஒரு வண்டியில் வைத்து அதை ராஜ உபசாரத்துடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வேத மந்திரங்கள் உள்ளதே. உலகில் எவனாவது போதை மருந்தையோ, கஞ்சா, அபினியையோ இப்படி ஊர்வலம் விட்டு ராஜ உபசாரம் செய்தானா? அப்படிச் செய்திருந்தால் முதலில் அந்த இனத்தைச் சேர்ந்த பெண்களே அவர்களை ஓட ஓட விரட்டி இருப்பார்களே.

  1. சோம யாகம் செய்தோர் சோமரசத்தை மந்திரம் சொல்லிப் பிழிந்தெடுத்து யாகத் தீயில் கடவுளுக்கும் அர்ப்பணம் செய்துவிட்டுக் குடித்ததாக தம் சொல்கிறதே. எவனாவது போதை பொருளைத் தீயில் போட்டு “வீண்” அடிப்பானா? உண்மையில் போதைப் பொருளானால் அவர்களுக்குள் அடிதடி அல்லவா ஏற்பட்டிருக்கும்? மேலும் ஒவ்வொரு கோப்பைக்கும் ஒரு பெயர் கொடுத்து அதை யாகத்தில் பயன்படுத்தினரே. இதெல்லாம் இது போதைப் பொருள் அல்ல; ஒரு அபூர்வ குளிகை என்பதைக் காட்டவில்லையா?

சமீப காலம் வரை சோம யாகம் நடந்தது. ஆனால் உண்மையில் சோமலதைக் கிடக்கததால் மாற்றுப் பொருள் பயன்படுத்தப்பட்டது. அந்த மாற்றுப் பொருள் கூட போதை மருத்து இல்லையே.

 

அப்படியானால் உண்மை என்ன?

வேத கால இந்துக்கள் ‘மண்ணின் மைந்தர்கள்’ (Sons of the soil). அதனால்தான் வேத கலாசாரம் பரவிய ஈரான் வரை இது பரவியது.

 

மேலும் சோமபானம் சக்தி, ஆயுள், இன விருத்தி, நோய் நீக்கம் ஆகியவற்றைத் தந்த அபூர்வ குளிகையாகும்

இது மூஜாவத் என்ற மலையில் இருந்து கிடைத்தது.

நீண்டகாலத்துக்கு முன்னரே இது அழிந்துவிட்டது. வேதகாலத்திலும் கூட இதைக் கஷ்டப்பட்டே பெற்றனர்.

 

என்றாவது ஒரு நாள் சோம லதையைக் கண்டுபிடிப்போம்; அது வரை ரிக்வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தைப் பாடி வருவோம்!

 

Confusion about Vedic Soma Plant | Tamil and Vedas

Confusion about Vedic Soma Plant

5 May 2013 – Confusion about Vedic Soma Plant Soma was the famous plant used by the Vedic priests to make juice for the fire sacrifice. The whole of Ninth …

 

Madurai Temple Tunnel and Soma Plant of Vedas … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/madurai-temple-tunnel-and-soma-pla…

23 Apr 2017 – Madurai Temple Tunnel and Soma Plant of Vedas (Post No. 3844) … Soma Plant. I read your “Confusion about Vedic Soma Plant” article.

 

MYSTERY AND MIRACLE OF SOMA PLANT, SOMA RASA! (Post No …

https://tamilandvedas.com/…/mystery-and-miracle-of-soma-plant-soma-rasa-post-no-3…

1 day ago – Anjaneya appears in Sacrificial Fire Research Article Written by London Swaminathan Date: 31 May 2017 Time uploaded in London- 18-13 …

 

–SUBHAM–

 

பெண்களின் அழகு எப்போது மறையும்? (Post No.3908)

Written by London Swaminathan

 

Date: 14 May 2017

 

Time uploaded in London: 20-10

 

Post No. 3908

 

Pictures are taken from various sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பெண்களின் அழகு எப்போது குறையும்? பெரியோர்களின் பெருமை எப்போது மறையும்? என்று ஒரு கவிஞர் அழகாகப் பாடி வைத்திருக்கிறார். கவிஞரின் பெயர் மட்டும் கிடைக்கவில்லை. நீதி வெண்பா என்ற நூலில் வரும் பாடல் இது.

 

கற்றைக் குழலார் கவினெல்லாம் ஓர்மகவைப்

பெற்றக் கணமே பிரியுமே – கற்றருளை

வேட்ட பெரியோர் பெருமையெல்லாம் வேறுஒன்றைக்

கேட்டபொழுதே கெடும்

 

பொருள்-

 

கற்றைக் குழலார் கவினெல்லாம்= அடர்த்தியான மயிரை உடைய பெண்களின் அழகு எல்லாம்

 

ஓர்மகவைப்பெற்றக் கணமே பிரியும் = ஒரு  குழந்தையைப் பெற்ற அந்த நொடியே நீங்கிவிடும்

 

அது போல

 

கற்றருளை வேட்ட பெரியோர் பெருமையெல்லாம் = கடவுள் அருளைப் பெற விரும்பிய பெருமைகள் எல்லாம்

வேறுஒன்றைக்கேட்டபொழுதே கெடும் = கெட்ட விஷயங்களைக் கேட்டாலேயே போதும்; மறைந்துவிடும்

 

கெட்டது செய்ய வேண்டும் என்பது கூட இல்லை. கெட்ட விஷயங்கள் கா தில் விழும் அளவில் நின்றாலேயே போதும்; பெருமை எல்லாம் சீர் குலையும்.

 

குழந்தை பெற்ற பின்னால்,  பெண்களைப் பொறுத்த மட்டில் இளம் குமரி என்ற நிலை மாறி அம்மா, மாமி என்ற நிலைக்குத் தள்ளப்படுவர்.

 

நல்லோரைப் பொறுத்த மட்டில், இவரும் கூட அப்படிச் செய்வாரா? வேலியே பயிரை மேய்ந்தது போலல்லவா இருக்கிறது என்பர்.

 

பல சாமியார்கள் ஒரு தப்புச் செய்தாலும் உடனே பத்திரிக்கைகளில் பெரிய எழுத்தில் செய்தி வந்து விடும்.

 

ஆகையால் மிகவும் கவனமாக வாழவேண்டும்.

 

–சுபம் —

பெண்கள் பேசினால்………… தமிழ்ப் புலவர் கதறல்! (Post No.3838)

Written by London swaminathan

Date: 21 APRIL 2017

Time uploaded in London:- 15-59

Post No. 3838

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

ஒரு பெண் பேசினால் பூமி அதிரும்;

 

இரண்டு பெண்கள் பேசினால் நட்சத்திரங்கள் பூமியில் விழும்;

 

மூன்று பெண்கள் பேசினால் கடல் நீர் வற்றிவிடும்;

 

பல பெண்கள் பேசினால் இந்த உலகத்துக்கு என்னதான் ஆகுமோ!

 

இது ஒரு தமிழ்ப் புலவரின் கதறல், அச்சம்!

 

ஆனால் இவை அனைத்தும் தீயது உரைக்கும் வாயாடிகள் பற்றிய வியாக்கியானம். ஏனெனில், அதே புலவர் நல்ல பெண் யார் என்பதற்கு ஆறு நிபந்தனைகள் போட்டும் பாடி இருக்கிறார்.

 

முதலில் தீய பெண்கள் பற்றிப் பார்ப்போம்:-

 

பெண்ணொருத்தி பேசிற் பெரும்பூமி தானதிரும்

பெண்ணிருவர் பேசில்விழும் வான்மீன்கள் – பெண்மூவர்

பேசி லலைசுவறும் பேதையே பெண் பாலர்தாம்

பேசிலுல கென்னாமோ பின்.

–நீதிவெண்பா (எழுதியவர் பெயர் இல்லை)

 

 

(பெண் ஒருத்தி பேசில் பெரும் பூமிதான் அதிரும்; பெண் இருவர் பேசில் விழும் வான் மீன்கள் (நட்சத்திரங்கள்); பெண் மூவர் பேசில் அலை (கட) சுவறும் (வற்றிவிடும்);  என்றால் பெண்ணே (பேதையே) பெண்கள் பலர் பேசத் துவங்கிவிட்டால் பின்னர், இவ்வுலகம் என்னதான் ஆகுமோ?)

 

xxxxxxx

நல்ல பெண்ணுக்கு உரிய ஆறு லட்சணங்கள்

 

நல்ல பெண் என்பவள்—-

1.தாயைப் போல அன்பும்

2.வேலைக்காரி போல தொண்டும்

3.திருமகளைப் போல அழகும்

4.பூமாதேவியைப் போல பொறுமையும்

5.அழகிய கொங்கையுடைய வேசி போல இன்பமும்

6.அமைச்சரைப் போல அறிவுரையும்

உடையவளே பெண் என்று பெயர் உடையவள்.

 

(மற்றதெல்லாம் பெண் உருவில் இறைவன் படைத்த பேய்கள் என்பது சொல்லாமலே விளங்கும்; அதாவது சூர்ப்பநகை, தாடகை, கைகேயி, பூதகி — எல்லாம் ஒன்று சேர்ந்த கட்டழகி!!)

 

அன்னை தயையும் அடியாள்    பணியுமலர்ப்

பொன்னி   னழகுங் புவிப்பொறையும் — வன்னமுலை

வேசி துயிலும் விறன்மந்     திரிமதியும்

பேசி லிவையுடையாள் பெண்

–நீதி வெண்பா (எழுதியவர் பெயர் இல்லை)

(அன்னையின் தயையும், அடியாள்/வேலைக்காரி பணியும், தா மரை மலர் மீதமர்ந்த லெட்சுமி தேவியின் அழகும், புவி/பூமியியைப் போல பொறுமையும், தூங்கும்போது அழகிய முலைகளை உடைய விலைமாது போல இன்பம் தருதலும், வல்லமைமிக்க அமைச்சரைப் போல அறிவும் — இந்த ஆறு அரிய இயல்புகளையும் உடையவளே பெண் எனத் தக்கவள்)

 

–Subham–

அவ்வையாரின் அருமையான 30 பொன்மொழிகள் (Post No.3768)

Compiled by London swaminathan

 

Date: 29 March 2017

 

Time uploaded in London:- 6-12 am

 

Post No. 3768

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

ஏப்ரல் 2017 காலண்டர்

துர்முகி பங்குனி–  ஹேவிளம்பி சித்திரை 2017

 

அவ்வையாரின் அருமையான 30 பொன்மொழிகள்

 

Festival/ Holidays:

ஏப்ரல் 5- ராம நவமி, 9-மஹாவீர் ஜயந்தி, பங்குனி உத்திரம்; 13–பைசாகி, 14-தமிழ் புத்தாண்டு; ஹேவிளம்பி வருஷப் பிறப்பு; புனித வெள்ளி;  16-ஈஸ்டர்; 29-அக்ஷய த்ருதியை; 30- ஆதி சங்கரர், ராமானுஜர் ஜயந்திகள்

 

ஏகாதசி–6, 22

பௌர்ணமி- April 10

அமாவாசை- April 26

சுபமுகூர்த்த தினங்கள்- April 2, 9, 10, 17, 21

 

Pictures are from Newspapers;Gudi Padwa (New Year) in Maharashtra

ஏப்ரல் 1 சனிக்கிழமை

பயன்கருதாது உதவுக:

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தரும் கொல் என வேண்டா – மூதுரை செய்யுள் 1

 

ஏப்ரல் 2 ஞாயிற்றுக்கிழமை

நல்லோர்க்குதவி=கல்மேல் எழுத்து‘;தீயர்க்குதவி=நீர்மேல் எழுத்து

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப்போல் காணுமே மூதுரை செய்யுள் 2

 

ஏப்ரல் 3 திங்கட்கிழமை

இளமையில் வறுமை துன்பம் தரும்

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக்கால்

இன்னா அளவில் இனியவும் – இன்னாத

நாள் அல்லா நாள் பூத்த நன்மலரும் போலுமே

ஆள் இல்லா மங்கைக்கு அழகு- மூதுரை செய்யுள் 3

 

ஏப்ரல் 4 செவ்வாய் க்கிழமை

மேன்மக்கள் வறுமையிலும் பண்பாளரே

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்- மூதுரை செய்யுள் 4

 

ஏப்ரல் 5 புதன் கிழமை

காலம் அறிந்து காரியம் செய்

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா – மூதுரை செய்யுள் 5

 

ஏப்ரல் 6 வியாழக்கிழமை

நுண் அறிவு

நீர் அளவே ஆக்கும் ஆம் நீர் ஆம்பல் தான் கற்ற

நூல் அளவே ஆகும் ஆம் நுண் அறிவு – மேலைத்

தவத்து அளவே ஆகும் ஆம் தாம் பெற்ற செல்வம்

குலத்து அளவே ஆகும் குணம்–மூதுரை செய்யுள் 7

 

ஏப்ரல் 7  வெள்ளிக்கிழமை

மானம் காக்க உயிர் கொடுப்பர்

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவரோ? – கல்தூண்

பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான் –மூதுரை செய்யுள் 6

 

ஏப்ரல் 8 சனிக்கிழமை

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே –மூதுரை செய்யுள் 8

 

ஏப்ரல் 9 ஞாயிற்றுக்கிழமை

வலியவர்க்கும் துணை வேண்டும்

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்

விண்டு உமிபோனால் முளையாது ஆம்- கொண்டபேர்

ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி

ஏற்ற கருமம்  செயல்- மூதுரை செய்யுள் 11

 

ஏப்ரல் 10 திங்கட்கிழமை

தீயரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே –மூதுரை செய்யுள் 9

 

 

ஏப்ரல் 11 செவ்வாய்க்கிழமை

தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை — மூதுரை செய்யுள் 10

 

ஏப்ரல் 12 புதன் கிழமை

உருவத்தைக் கண்டு மதிப்பிடாதே

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா- கடல் பெரிது

மண் நீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூரல்

உண் நீரும் ஆகிவிடும் மூதுரை செய்யுள் 12

 

ஏப்ரல் 13 வியாழக்கிழமை

மரமண்டை யார்?

சபைநடுவே நீட்டுஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய

மாட்டாதவன் நல் மரம்- -மூதுரை செய்யுள் 13

 

ஏப்ரல்  14  வெள்ளிக்கிழமை

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன்

பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி – – மூதுரை செய்யுள் 14

 

ஏப்ரல் 15 சனிக்கிழமை

அடக்கம் உடையார்

ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்

வாடி இருக்குமாம் கொக்கு — மூதுரை செய்யுள் 16

 

ஏப்ரல் 16 ஞாயிற்றுக்கிழமை

தீயோர்க்குதவி செய்தல் வீண்

பாங்கு அறியாப் புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின்மேல் இட்ட கலம் — மூதுரை செய்யுள் 15

 

ஏப்ரல் 17 திங்கட்கிழமை

வறுமை வந்ததும் பிரிபவர் உறவினரல்லர்

அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் – மூதுரை செய்யுள் 17

 

ஏப்ரல் 18 செவ்வாய் க்கிழமை

மேன்மக்கள் – கீழ்மக்கள் வேறுபாடு

பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும்;என் ஆகும்

மண்ணின் குடம் உடைந்தக்கால்- மூதுரை செய்யுள் 18

 

ஏப்ரல் 19 புதன் கிழமை

கணவனும் செல்வமும் விதிப்படியே

நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்

விதியின் பயனே பயன் – மூதுரை செய்யுள் 19

 

ஏப்ரல் 20 வியாழக்கிழமை

உடன்பிறந்தும் கொல்வர்; தொலைவில் மலையில் உள்ள மூலிகையும் உயிர்காக்கும்

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்கவேண்டா

உடன்பிறந்தே கொல்லும் வியாதி- மூதுரை செய்யுள் 20

 

ஏப்ரல் 21  வெள்ளிக்கிழமை

அடங்கா மனைவி= புலி இருக்கும் புதர்

இல்லாள் கத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை

இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின் – இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ் இல்

புலிகிடந்த தூறுஆய் விடும் மூதுரை செய்யுள் 21

 

ஏப்ரல் 22 சனிக்கிழமை

கற்பக மரத்தில் தங்கினாலும் முன்வினை விடாது

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்

முன்பவத்தில் செய்தவினை மூதுரை செய்யுள் 22

 

ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை

நல்லவர் சினமும் அல்லவர் சினமும்

கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்

பொற்பிளவோடு ஒப்பாரும்……. சான்றோர் சினம் –செய்யுள் 23

 

ஏப்ரல் 24 திங்கட்கிழமை

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பு இல்லா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்– செய்யுள் 24

 

ஏப்ரல் 25 செவ்வாய் க்கிழமை

வஞ்சகரே ஓடி,ஒளிவர்

கரவு உடையார் தம்மைக் கரப்பர்; கரவுவார்

கரவு இலா நெஞ்சத்தவர் –செய்யுள் 25

 

ஏப்ரல் 26 புதன் கிழமை

மன்னர்க்குத் தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை; கற்றோர்க்குச்

சென்ற இடம் எல்லாம் சிறப்பு– செய்யுள் 26

 

ஏப்ரல் 27 வியாழக்கிழமை

வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்- கூற்றமே

இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் — செய்யுள் 27

 

ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை

மருவு இனிய சுற்றமும் வான்பொருளும் நல்ல

உருவும் உயர் குலமும் எல்லாம் – திருமடந்தை ஆம் போது அவளோடும் ஆகும் –மூதுரை செய்யுள் 29

 

ஏப்ரல் 29 சனிக்கிழமை

சாம்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை

ஆம் தனையும் காப்பர் அறிவு உடையோர் – மூதுரை செய்யுள் 30

 

 

Disguised as Veera Shivaji

 

ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமை

மன்னர்கள் மன்னர்களே; தாழார்

தனம் சிறியர் ஆயினும் தார்வேந்தர் கெட்டால்

மனம் சிறியர் ஆவரோ மற்று –மூதுரை செய்யுள் 28

 

-Subham–

 

 

 

 

 

சுமேரிய கல்யாணம்- இந்து திருமணம் ஒப்பீடு (Post No.3723)

Picture of a Traditional Tamil Wedding

 

Written by London swaminathan

 

Date: 14 March 2017

 

Time uploaded in London:- 20-55

 

Post No. 3723

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாபிலோனியா, மெசபொடோமியா, சுமேரியா என்றெல்லாம் அழைக்கப்படும் பகுதி இராக், சிரியா, துருக்கி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் நாடுகளாகும். அருகாமையிலுள்ள வேறு சில நாடுகளின் பகுதிகளும் இந்த வரம்பிற்குள் வரும். அங்கு சுமார் 3000, 4000 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருமணத்தை இந்துக்களின் திருமணத்துடன் ஒப்பிடுவதே இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கம்.

 

1.1மத்தியக் கிழக்கு (Middle East) அல்லது அருகாமைக் கிழக்கு (Near east) என்று அழைக்கப்படும் இப்பகுதிகளில் கல்யாணத்தை நடத்தும் பொறுப்பு தந்தையிடமே இருந்தது.

 

இந்துமதத்திலும் தந்தைதான் இதை ஏற்பாடு செய்வார். ஆனால் பெண் அல்லது மாப்பிள்ளையை முடிவு செய்வதில் தாயார் பெரும் பங்காற்றுவார். இது காளிதாசன் முதலியோர் எழுதிய நாடகங்களிலிருந்தும், புராணக் கதைகளிலிருந்தும் தெரிகிறது.

 

2.பெண்கள் 13 வயது முதல் 19 வயதுக்குள்ளாக கல்யாணம் செய்தனர். ஆண்கள் வயது, திருமணத்தின்போது 10 வயது கூடுதலாக இருந்தது.

இந்துக்களும் பெண்ணின் வயது 10 முதல் 20 வரை குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். (உ.ம். வால்மீகி ரா மா யணம், சிலப்பதிகாரம்).

 

3.ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறையே பின்பற்றப்பட்டத்து. ஆனால் முதல் மனைவிக்குக் குழந்தை இல்லாவிடில் இரண்டாவது மனைவிக்கு அனுமதி உண்டு.

இந்துக்களின் மனு தர்ம சாத்திரமும் இதையே செப்பும். அரசர்கள் மட்டும் அருகாமை நாட்டு உறவு நீடிக்கவும், படைபல உதவிக்கும் என பல மனைவியரை மணந்தனர். ஆனால் ராமன் போன்ற மன்னர்கள் “இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” என்று சொன்னார்கள்.

 

4.முதலில் சம்மதம், பின்னர் கல்யாணம் என்ற நடைமுறை இருந்தது.

பெண்ணுக்கு பணம் (சீதனம்) கொடுக்க வேண்டும்.

 

நிச்சயதார்த்தம் பின்னர் திருமணம் என்பது இந்துக்களின் வழக்கம்.

சங்கத் தமிழ் நூல்களிலும், சம்ஸ்கிருத நூல்களிலும் பெண்ணுக்கு சீதனம் கொடுக்கும் வழக்கம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

 

5.திருமண ஒப்பந்தம் எழுத்தில் இருந்தது. ஆனால் வாய்மூலம் சொன்னாலும் அதுவும் ஏற்கப்பட்டது. சுமேரியாவில் திருமணத்தைப் பற்றி சட்ட விதிகள் இருந்தன.

 

இந்துக்களும் நிச்சயதார்த்த்தின்போது பத்திரிக்கை படிக்கும் வழக்கம் உண்டு. இரு தரப்பினரும் அதை கைமாற்றிக்கொள்வர். சில நேரங்களில் இந்தப் பெண், இந்தப் பையனுக்குத்தான் என்று சொல்லிவிட்டால், வார்த்தை மாறாமல் அதை மதித்து நடந்தனர். இந்துக்களின் நீதி நூல்களில் திருமண விதிகள் உள்ளன.

 

6.மெசபொடோமியாவில் இ ருதரப்பாரும் பெண்ணுக்குக் கொடுத்த சீதனம் பற்றி எழுதி வைத்தனர். பெண்ணின் சொத்து குழந்தைகளையே சாரும். குழந்தை இல்லாவிடில் கணவருக்கும் பங்கு உண்டு. பெண்ணுக்கான  சீதனத்தை குழந்தை பெறும்வரை தவனை முறையில் செலுத்தினர்..

இந்துமத்தில் இது பற்றி விதி இல்லாவிடினும் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைப் போடுவர். ஆடி, கிருத்திகை, வளைகாப்பு, குழந்தை பிறப்பு, தலை தீபாவளி என்று ஏதேனும் ஒரு சாக்கில் கொடுப்பர். அதை எல்லாம் மொத்த சீதனக் கணக்கில் சேர்ப்பர். இடை க்  காலத்தில் ஆண்களுக்கு கிராக்கி அதிகம் இருந்ததால் ஆண்களுக்கு   வரதட்சிணைப் பணம் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. பழங்காலத்தில் இவ்வாறு இல்லை.

 

6.சுமேரிய, பபிலோனிய திருமணங்கள், 5 முதல் 7 நாட்கள் வரை நீடித்தது. ஆனால் என்னென்ன சடங்குகள் நடந்தன என்ற விவரம் இல்லை.

 

இந்துக்களின் திருமணம் ஐந்து நாட்களுக்கு நடந்தது. இப்பொழுது அது இரண்டு நாட்களாகச் சுருங்கிவிட்டது. இந்துக்களின் 5 நாள் சடங்குகளும் நீதி நூல்களில் உள்ளன.

 

 

7.பெண்ணின் முகத்தை மூடியிருக்கும் திரையை, மாப்பிள்ளை அகற்றுவது முக்கிய சடங்காக இருந்தது.

 

இந்த வழக்கம் வட இந்திய இந்துக்களிடையே  – குறிப்பகத் தமிழ்நட்டுக்கு – வடக்கில் இன்றும் உள்ளது. தமிழ்நாடு ஏனைய எல்லா மாநிலங்களையும் விட வெப்பம் அதிகமான இடம் என்பதால் காலப்போக்கில் இந்த வழக்கம் விடுபட்டுப் போயிருக்கலாம். மாப்பிள்ளையும் வேட்டி துண்டுடந்தான் நிற்பார்; வடக்கில் குளிர் என்பதால் ஆணும் கூட உடம்பு முழுதும் மூடியிருப்பார்.

8.பெண்களின் தோழிகள் அந்தப் பெண் கன்னிப் பெண் தான் என்பதை உறுதி செய்யும் வழக்கம் இருந்தது.

 

இந்துக்களிடையேயும் இவ்வழக்கம் இருந்தது. முதல் இரவுக்குப் பின்னர் அந்த வேஷ்டி முதலிய துணிகளை நாவிதனுக்குத் தானம் செய்துவிடுவர். அந்தக் காலத்தில் அவர்கள்தான் மருத்துவச்சி; மகப்பேறு வேலைகளைக் கவனித்து வந்தனர். ஆகையால் ஏதேனும் இசகு பிசகு இருந்தால் அவர்கள் மூலம்  கிசு ,கிசு ஊர் முழுதும் பரவிவிடும்.

 

  1. திருமணத்தின் முக்கிய நோக்கம் சந்ததி விருத்தி என்று நூஜி (Nuzi) முதலிய இடங்களில் உள்ள களிமண் (Clay tablets) கல்வெட்டுகள்/ பலகைகள் சொல்கின்றன.

 

இந்துக்களின் வேத மந்திரங்களும் இதையே வலியுறுத்துகின்றன. காளிதாசனும் ரகு வம்ச மன்னர்களின் 14 குண நலனகளை அடுக்குகையில் சந்ததி விருத்திக்காகவே ரகுவம்ச மன்னர்கள் திருமணம் செய்தனர் (செக்ஸ் இன்பத்துக்காக அல்ல) என்று அடிக்கோடிட்டுக் காட்டுவான்.

 

10.குழந்தையின்மை/ மலட்டுத் தனமை என்பது அக்காலத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது ஹமுராபி (Hammurabi Code) மன்னனின் சட்ட ஷரத்துகளில் ஒரு மணப்பெண், ஒரு அடிமைப் பெண்ணையும் கண்வனுக்கு அளிக்கலாம் என்று சொல்லியிருக்கிறது.

 

இது இந்துமதத்தில் இல்லை. ஆனால் மன்னர்களுக்குக் குழந்தை இல்லையென்றால் உறவினர் மூலம் குழந்தை பெற அனுமதி உண்டு. அம்பா, அம்பாலிகா மூலமே வியாசர், திருதராஷ்டிரனும் பாண்டுவும் பிறக்க உதவினார்.

 

11.கனவனுடனோ, அல்லது கணவனும் மனைவியும் பெண்ணின் தந்தை வீட்டிலோ வசிக்கும் இரண்டு வகையான ஏற்பாடுகள் இருந்தன. குழந்தை இல்லாமல் இருக்கும் போது கணவன் இறந்துவிட்டால் மாமனார் தனது மகன்களில் வேறு ஒருவனுக்குக் கல்யாணம் செய்யும் ஏற்பாடு இருந்ததை நூஜி களிமண் படிவங்கள் காட்டுகின்றன.

 

அர்ஹல்பா (Arhalba) என்ற மன்னன் தான் இறந்தால் தனது சகோதரனைத் தவிர வேறு எவரையும் தன் மனைவி மணக்கக் கூடாது என்று உயில் எழுதிவைத்ததை உகாரித் (Ugari) களிமண் பலகைகள் தெரிவிக்கின்றன.

 

12.ஹிட்டைட் (Hittite) களிமண் பலகைகள் வேறு ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. ஒரு ஆணும் பெண்ணும் 2 முதல் 4 ஆண்டுகள் வரை திருமணம் செய்துகொள்ளாமலேயே கூடி வாழ்ந்தால், அதை சட்டபூர்வமாக கருதலாம் என்று சொல்கின்றன.

இது இந்துமத்தில் இல்லை

 

14.விவாக ரத்து பற்றி, சொத்து பிரிவினை பற்றி சட்ட விதிகள் இருந்தன. பெண்களுக்கு எதிராகவே பல சட்ட விதிகள் இருந்தன.

இந்து சட்ட நூல்கள் (மனு முதலான நீதி நூல்கள்) விவாக ரத்து, சொத்துக்களின் பாகப் பிரிவினை பற்றி விரிவாகச் சொல்கின்றன. இது விஷயத்தில் வேற்றுமை பாராட்டவில்லை

.

13.இந்துக்கள் இறைவனுக்கு ஆன்டுதோறும் கல்யாண உற்சவங்கள் நடத்துவது போல ((மதுரை மீனாட்சி கல்யாணம், சீதா கல்யாணம், ஆண்டாள் போன்றவை) சுமேரியாவிலும் கடவுளர் கல்யாண மஹோத்சவங்கள் நடந்துவந்தன.

 

 

இப்போது முஸ்லீம் சட்ட விதிகள் இருக்கும் அந்த நாடுகளில் முன்காலத்தில் தலாக், தலாக் விவாக  ரத்து, ஐந்து மனைவி திருமணம் முதலியன இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 

Source for Middle East: “ Dictionary of the Ancient Near East” by  British Museum.

 

–Subham–

 

சொந்த தங்கையை மணந்த மன்னர்கள்- எகிப்திய அதிசயங்கள் 19 (Post No.3722)

Menkaure and his wife

Written by London swaminathan

 

Date: 14 March 2017

 

Time uploaded in London:- 9-18 am

 

Post No. 3722

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்திய பாரோக்கள் (பர ராஜ = மன்னர்கள்) சொந்த தங்கைகளையே திருமணம் செய்துகொண்டனர். இதனால் அவர்கள் பலவகை மரபியல் நோய்களுக்கு உள்ளானார்கள். மேற்காசியாவை ஆண்ட ஹிட்டைட்டுகள் (Hittites) இப்படி யாரேனும் திருமணம் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை என்று அறிவித்தார்கள். இவை எல்லாம் வரலாற்றில் காணப்படும் சுவையன செய்திகள்!

 

எகிப்திய சரித்திரத்தில் பழைய ராஜ்யம், நடு / மத்திய ராஜ்யம், புதிய ராஜ்யம் (Old, Middle and New Kingdoms) என்றும் குழப்பமான (அராஜக= அரசனற்ற) காலங்களை இடைப்பட்ட காலம்  (Intermediate Periods) என்றும் வரலாற்றாசிரியர்கள் பிரித்துள்ளனர். புதிய ராஜ்யத்தின் துவக்கத்தில் இரண்டாம் அஹோதேப் ( Ahotep II மஹாதேவி என்பது இப்படித் திரிந்திருக்கலாம்) தனது சகோதரனையே  கல்யாண ம் செய்துகொண்டார். அவருடைய பெயர் தா அல்லது காமோசி (Taa or Kamose) என்று நம்பப்படுகிறது.

 

(மோசி/மோசஸ்/ மூசு பலா,  தேப்/தேவி பற்றிய எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காணவும்)

 

அவர்களுக்குப் பிறந்த மகன் ஆமோசியும் (Ahmose) தனது தங்கையை திருமணம் செய்துகொண்டான். அவளுடைய பெயர் ஆமோசே நவரதிரி Ahmose Nefertiry (நவ ரதி).

 

அவர்களுக்குப் பிறந்த மகன் ஆமெனோதேப் ( Amenhotep) சமணதேவன்). அவன் தனது சகோதரி மேர்யாடாமுனை (Merytamun மாரி அம்மன்) மணந்தான்.

statue of Hatshepsut

இதற்குப் பின்னர் ஆண்ட மன்னன் துதமோசிக்கு (Thutmose) ஹட்சேப்சுத் (சத்ய சுதா Hatshepsut) என்ற மகள் பிறந்தாள். அவள் தனது ஒன்றுவிட்ட சகோதரனை கல்யா ணம் செய்துகொண்டாள். அவன் மன்னனான போது அவன் பெயர் இரண்டாம்  துதமோசி.

 

 

இந்தக் காலகட்டத்தில் சகோதர-சகோதரி கல்யாணம் நடைபெற்ரது உண்மை என்பதும், இது சம்பிரதாய சடங்கு அல்ல– உண்மையான திருமணம் என்பதும் உறுதியாகிவிட்டது.

 

எகிப் தி ய மன்னர்களின் பெயர்களில் உலகம் முழுதும் தெரிந்த மன்னன் துதன்காமுன் Tutankhamun (துஷ்டகாமினி). அவனும் அவனுடைய ஒன்றுவிட சகோதரி அங்கசேனாமுன்னை (தேவ சேனா/ தெய்வானை என்பது போன்ற ஒரு சம்ஸ்கிருதப் பெயர் என்பது என் துணிபு) கல்யாணம் செய்துகொண்டான்.

 

(துதன் காமுனின் ரத்தின- தங்கப் புதையல் அப்படியே கிடைத்ததால் அவன் பெயர் உலகம் முழுதும் பரவியது அவன் இளம் வயதில் இறந்ததால் அவனை BOY KING பாய் கிங் — மாணவ அரசன் — என்பர்).

 

அப்பாவும் மகளும் திருமணம் செய்துகொண்ட அபூர்வ நிகழ்ச்சிகளும் உண்டு. மூன்றாம் அமனோதேப் Amenhotep (சமண தேவன்), இரண்டாம் ரமேஸஸ் Ramesses II (ராம சேஷன், ரமேசன்) ஆகியோர் தங்களுடைய மகளைத் திருமணம் செய்தனர். ராமசேஷனுக்கு பிண்டாநட் Bintanat  (விந்தியாநாத்) என்ற மகள் பிறந்தாள்

 

Akhenaten and his wife Nefertiti

பழைய ராஜ்யத்தில் (OLD KINGDOM) இப்படி நடந்ததற்கான குறிப்புகள் உள்ளன. ஆனால் உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஆனால் டாலமி (PTOLEMY II) காலத்தில் மீண்டும் 200 வருடங்களுக்கு இந்த வழக்கம் நடைமுறைக்கு வந்தது. டாலமி காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டாகும் (இந்தியாவில் அசோகன் ஆண்ட காலத்தை ஒட்டி)

 

அரசர் அளவில் இப்படி நடந்தபோதும் சமுதாயத்தில் இப்படி நடந்ததாகத் தகவல் இல்லை. ஆகவே இது சமுதாயம் வெறுத்த ஒரு வழக்கம் என்றே கருதப்படுகிறது. இது எப்படித் தெரிகிறதென்றால் புதிய சாம்ராஜ்யத்தில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசர் கல்லறைப் பணியில் ஈடுபட்ட ஒரு தொழிலாளி, அவனுடைய தாயாருடனும் மகளுடனும் கள்ள த் தொடர்பு வைத்துக்கொண்டதோடு வேறு ஒரு பெண்ணை தன் மகனுடன் சேர்ந்து அனுபவித்ததாக அவன் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவனுடைய பெயர் நபாமுன் (நவமுனி).

 

இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. மன்னர்கள் மட்டும் எப்படி குடும்ப உறுப்பினர்களை யே அனுபவித்தனர்? இதற்குக் காரணம் என்ன?

 

பெண்வழி (Female line) அரச மரபு இருந்ததால் தங்கள் குடும்பத்துக்குள்ளேயே ராஜபோகத்தை வைத்துக்கொள்ள அப் படிச் செய்தனர் என்பது ஒரு ஊகம்.

 

வெளியிடத்தில் பெண் எடுத்தால் அரசாட்சி கை மாறிவிடுமோ என்ற அச்சம் காரணமாக இருந்திருக்கலாம். அல்லது எகிப்தில் இருப்பதே ஒரு ராஜ குடும்பம்- அந்த ராஜ குடும்பத்திலேயே  உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்று கருதி இருக்கலம். இப்பொழுதும் கூட சில ஜாதியினர் தங்கள் ஜாதிக்குள்ளேயே — ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே — திருமணம் செய்வதைப் பார்க்கிறோம். தமிழர்கள் அத்தை, மாமன் மகள், மகன்களை க் கட்டுவதைக்கூட  வெளிநாட்டினர் COUSIN MARRIAGE கஸின் மேரேஜ் என்றுதான் இன்றும் சொல்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு புதுமை.

 

தெய்வங்களின் கதைகளிலும் இப்படி வருவதாலும் எகிப்திய அரசர்கள் தெய்வங்கள் என்று கருதப்பட்டதாலும் இப்படி நடந்ததாகக் கருதுவோரும் உண்டு. பைபிள் கூறும் முதல் மனிதனாகிய ஆதாம் அவன் இடுப்பு எலும்பில் உருவான ஏவாளையே (ADAM AND EVE) மனைவியாகக் கொண்டான். அதாவது மகளையே மணந்தான்!

 

ஆதாம்- ஏவாள் ஆகிய இருவருக்குப் பிறந்த சகோதர சகோதரிகள் ஒருவரை ஒருவர் மணந்ததாலும் புணர்ந்ததாலும்  மக்கள் பெருகினர் என்று பைபிள் வாக்குவாதத்தில் ஈபடுவோர் செப்புவர்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் இது போன்ற பல குறிப்புகள் உண்டு.

எகிப்தைப் பொறுத்தமட்டில் எல்லா காரணங்களும் ஊகங்களே; உறுதியான காரணம் எதுவும் எழுதப்படவில்லை.

 

xxxxxxxxxxxxxxxxxxx சுபம் xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 

My Research Articles on Egypt

Did Indians build Egyptian Pyramids?

27 august 2012

Hindu Gods in Egyptian Pyramids

16 september 2012

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda

26 september 2012

 

Mata and Pita in Egyptian Religion! – 17 November 2014

 

Vedas and Egyptian Pyramid Texts

29 August 2012

 (Part 3)

5 september 2012

More Tamil and Sanskrit Names in Egypt

Research paper written by London Swaminathan
Research article No.1413; Dated 15th November 2014.

Flags: Indus Valley-Egypt similarity

15 october 2012

 

First Homosexual King in History! (Post No.3692) 5-3-2017

 

கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி எகிப்து அதிசய ஒற்றுமை!

14 october 2012

எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!

Research paper written by London Swaminathan
Research article No.1414; Dated 16th November 2014.

 

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்

POST No. 716 dated 21 Novemeber 2013

சுமேரியாஎகிப்தில் இந்திரன் வழிபாடு!

15 September 2014

 

எகிப்திய அதிசயங்கள் 17 கட்டுரைகள்

 

1.எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்? (Post No.3638) posted on 15-2-2017

2.எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள்-2 (Post No.3641) posted on 16-2-2017

 

3.எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம்: எகிப்திய அதிசயங்கள்- பகுதி 3 (Post No.3648)posted 18-2-2017

 

4.எகிப்தில் சூர்ய வம்சம்: எகிப்திய அதிசயங்கள்-பகுதி 4 (Post No.3651) posted 19-2-2017

 

5.ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள்-5 (Post No.3654) posted 20-2-2017

6.எகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள்-பகுதி 6 (Post No.3657) posted on  21-2-2017

 

7.எகிப்தில் இந்திய நீலக்கல்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 7 (Post No.3660) posted on 22-2-2017
8.மனித முகம்சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 8 (Post No.3664) posted on  23-2-2017

9.எகிப்தில் 30 வம்சங்கள்: அதிசய தகவல்கள்-பகுதி 9 (Post No.3667)

posted on  24-2-2017

 

10.பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670)posted on  25-2-2017

 

11.பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11posted on  27-2-2017

 

12.வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய அதிசயங்கள்-12 (Post No.3684) posted on  2-3-2017

 

13.சுவர்களில் எழுதப்பட்ட சமயச் சடங்குகள்- எகிப்திய அதிசயங்கள்-13 (Post No.3687)posted on  3-3-2017

 

14.மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்எகிப்திய அதிசயங்கள் –14 (Post No.3689) posted on  4-3-2017

15.சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதிசயங்கள் –15 (Post No.3693)

posted on  5-3-2017

 

16.விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்: எகிப்திய அதிசயங்கள்-16 (Post No.3696) posted on   6-3-2017

 

17.எகிப்தில் இந்து தெய்வங்களின் வழிபாடு- எகிப்திய அதிசயங்கள் – பகுதி 17 (Post No.3705)

18. எகிப்து மீது படை எடுத்தவர்கள் இந்திய யக்ஷர்களா?-எகிப்திய அதிசயங்கள் -18 (Post No.3716)  Posted on12-3-20117

xxxx

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

2.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 2 (Post No.2806) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

 

3.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 3 (Post No.2809)  BY S NAGARAJAN; posted on  Date: 14 May 2016

5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு (Post No. 3487) by S Nagarajan, posted 27-12-2016

 

 

Please Read my earlier Posts
The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)