அம்மா! அம்மா!! அம்மா!!! (Post No.2792)

mother-and-baby-portrait-drawing-kate-sumners

Translated by london swaminathan

 

Date: 8 May 2016

 

Post No. 2792

 

Time uploaded in London :–  6-32 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

இந்தப் பகுதியில், அன்னை (மாதா) பற்றிய பழமொழிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

 

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருத பழமொழிகள்- பகுதி-7

(பகுதி 6 ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது)

mother baby

104.கா நாம மாதா புத்ரக அஸ்ய அபராதம் ந மர்ஷயதி – பிரதிமா நாடக

தனது குழந்தையின் தவறை மன்னிக்காத தாயும் உண்டோ?

 

105.குபுத்ரோ ஜாயதே க்வசித் அபி குமாதா ந பவதி –தேவி அபராதக்ஷமாஸ்தோத்ரம்

கெட்ட மகன்கள் இருக்கலாம், கெட்ட தாயார் கிடையவே கிடையாது.

 

106.ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயசீ

-கஹாவத்ரதனாகர்

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே

 

107.ஜீவன் மாத்ருக ஏவ நூனம் அதுலம் ப்ருங்தே சுகம் ஸ்வாலயே-கஹாவத்ரதனாகர்

தாய் உயிரோடிருக்கும் வரைதான்  வீட்டில் சுகம்.

 

108.து: கம் ஹி ஜனனீனாம் சுதுஸ் சுகம் –ப்ருஹத் கதா மஞ்சரி

அம்மாக்கள் படும் துயரம் கொஞ்சநஞ்சமல்ல.

 

109.துஹிது: ப்ரதானகாலே து:கசீலா ஹி மாதர:

பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து அனுப்புகையில் தாயார் மனம் தவிக்கும்.

mother rangoli

110.ந மாது: தைவதம் பரம்- சாணக்ய நீதி

அம்மாவுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை (தாயினும் பெரிய கோயில் இல்லை)

 

111.பதிதா குரவஸ்த்யாஜ்யா நது மாதா கதாசன

மேலிருந்து கீழே வீழ்ந்த பெரியோரை விட்டுவிடலாம், ஆனால் அம்மாவை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது.

 

112.பாததே ந நிஜ ஆபத்யம் மார்ஜாரீ தசன ஆவலி.

தாய்ப் பூனையின் பற்கள், பூனைக்குட்டிகளுக்கு தீங்கு செய்யா (கோழி மிதித்து குஞ்சுகள் சாகா)

 

113.மாதா கில மனுஷ்யாணாம் தேவதானாம் ச தைவதம் – மத்யமவ்யாயோக

எல்லா மனிதர்களுக்கும் அம்மாவே தெய்வத்தின் தெய்வம்.

 

114.மாதா பித்ருப்யாம்  சப்தஸ்ஸன்ன (சப்த:+சன்+ ந) ஜாது சுகமஸ்னுதே – கதாசரித்சாகரம்

பெற்றோர்களின் சாபத்துக்குள்ளான பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழமுடியாது.

 

115.மாத்ரு ஜங்காஹி வத்சஸ்ய ஸ்தம்பீ பவதி  பந்தனே – ஹிதோபதேசம்

அம்மாவின் கால்களே, குழந்தைகளைத் தாங்கும் தூண்கள் (தாயார்தான் ஆதரவு தரும் கொழுகொம்பு)

 

116.மாத்ரு தேவோ பவ பித்ருதேவோ பவ- தைத்ரீயோபநிஷத்

தாயை தெய்வமாக வணங்கு; தந்தையை தெய்வமாக வணங்கு.

 

117.மாத்ருதோஷோ ந தோஷ: -ப்ரதிமா நாடக

அம்மாவிடமுள்ள குறை, குறையாகாது

 

118.மாத்ரா சமம்  நாஸ்தி சரீர போஷணம் – சுபாஷிதாவலி

தாயைப்போல உடம்பைக் கவனிப்பவர் எவருமிலர்.

 

தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை!

119.யாத்ருசீ ஜனனீ லோகே புத்ரீ பவதி தாத்ருசீ

— கஹாவத்ரதனாகர்

தாய் எப்படியோ அப்படியே மகள் இருப்பாள் (தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை).

mother_love_

120.ஸஹஸ்ரம் து பித்ரூன் மாதா கௌரவேனாம் அதிரிச்யதே—மனுஸ்மிருதி 2-145

தந்தையைவிட ஆயிரம் மடங்கு கௌரவுத்துக்குரியவர் தாய்.

 

121.ஹஸ்த ஸ்பர்சோ ஹி மாத்ரூணாம் அஜலஸ்ய ஜலாஞ்சலி: -ப்ரதிமா நாடக

தாயின் அரவணைப்பு, தாகத்தால் தவிப்பவனுக்குக் கிடைத்த தண்ணீர் போல சுகம் தரும்.

 

 

–சுபம்–

 

ஐந்து தந்தை, ஐந்து தாய், ஐந்து குரு யார்?

Five-Men-with-Cap-Oil-Painting

Compiled by London swaminathan

Article no. 1702; dated 9 March 2015

லண்டன் மாநகர நேரம்  காலை 9-25

நம் ஒவ்வொருவருக்கும் 5 தந்தைகள், 5 தாய்மார்கள், 5 குருக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். அந்தக் காலத்தில் இந்த மாதிரி செய்யுட்களை சிறு வயது முதலே போதித்து வந்தனர். சில செய்யுட்கள் பஞ்ச தந்திர, ஹிதோபதேசக் கதைகளுக்கு நடுவில் கொடுக்கப்பட்டன. இதனால் அவை சிறுவர் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்துவிடும். அது மட்டுமல்ல. ஏதேனும் வழக்கு வாய்தாவில் தீர்ப்புச் சொல்லவும் இவை பயன்பட்டன. இதோ பழங்காலப் பொக்கிஷம்:

தந்தைக்குச் சமமாகக் கருதப்பட வேண்டியவர்கள்:

  • பிறப்பினால் நமக்குத் தந்தையாக இருப்பவர், (2) நமக்கு மந்திர உபதேசம் செய்தவர் அல்லது குருவை அறிமுகப்படுத்தியவர், (3) நமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர், (4 )நமக்கு உணவு கொடுத்து உதவியவர் (5) ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றியவர்.

ஜனிதா ச உபநீதா ச யஸ்து வித்யாம் ப்ரயச்சதி

அன்னதாதா, பயத்ராதா பஞ்சைதே பிதர ஸ்ம்ருதாஹா

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 165/ 542, பஞ்சதந்திரக் கதைகள், சாணக்ய நீதி

5-el-teachers-for-suai-2009

ஐந்து தாய்

ராஜாவின் மனைவி (மஹாராணி), குருவின் மனைவி, அண்ணனின் மனைவி, தன்னுடைய சொந்தத் தாய் மற்றும் மாமியார் ஆகிய அனைவரும் தாய்க்குச் சமமானவர்கள்:–

ராஜ பத்னீ குரோஹோ பத்னீ ப்ராத்ரு பத்னீ ததைவ ச

பத்னீ மாதா ஸ்வமாதா ச பஞ்சைதா மாதர ஸ்ம்ருதாஹா

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 160/ 326, — சாணக்ய நீதி

இன்னொரு ஸ்லோகம் பஞ்ச தந்திரக் கதைகளில் வருகிறது: எந்த வீட்டில் தாய் இல்லையோ, மனைவி இனிமையாகப் பேசுவதில்லையோ அவன் காட்டிற்கு ஏகுவதே மேல்; ஏனெனில் அவனுக்குக் காடுதான் வீடு!

மாதா யஸ்ய க்ருஹே நாஸ்தி பார்யா ச ப்ரியவாதினீ

அரண்யம் தேன கந்தவ்யம் யதாரண்யம் ததா க்ருஹம்

–பஞ்சதந்திரக் கதைகள்

Five-teachers-who-are-changing-lives

ஐந்து குரு

குரு யார் என்பதில் இரண்டு விதக் கருத்துகள் இரண்டு ஸ்லோகங்களில் உள்ளன:

மஹாபாரத வனபர்வம் கூறுகிறது:

அம்மா, அப்பா, அக்னி, ஆத்மா (தனக்குத் தானே குரு), ஆசிரியர் ஆகிய ஐவரும் குரு – ஆவர்.

பஞ்சைவ குரவோ ப்ரம்மன் புருஷஸ்ய புபூஷதஹ

பிதா மாதா அக்னிர் ஆத்மா ச குருஸ்ச த்விஜசத்தமஹ

—மஹா பாரத – வன பர்வ – 204-27

யோக வாசிஷ்டம் சொல்லுகிறது:

அம்மா, அப்பா, ஆசிரியர், தாய்மாமன், மாமனார் ஆகியோர் குரு ஸ்தானத்தில் இருப்பவர் ஆவர்.

குரவஹ பஞ்ச சர்வேஷாம் சதுர்னாம் ஸ்ருதிசோதிதாஹா

மாதா பிதா ததாசார்யோ மாதுல ச்வசுரஸ்ததா

–யோக வாசிஷ்டம் 1-60

5 women

உண்மை அன்பு

அம்மா, அப்பா, நண்பர்கள் ஆகியோருடைய உள்ளத்தில் உண்மையிலேயே கருணை இருக்கும். ஆனால் மற்றவர்களோ வெனில் காரியம் நடக்க வேண்டுமானால் (பொய்) அன்பை வெளிப்படுத்துவர்.

மாதா மித்ரம் பிதா சேதி ஸ்வபாவத் ஹ்ருதயம் ஹிதம்

கார்ய காரணத்தஸ்சான்யே பவந்தி ஹித புத்தயஹ

 

இவை எல்லாம் காரண காரியங்களுடன் சொல்லப்பட்ட பொன்மொழிகள். சில இக்காலத்துக்குப் பொருந்தாவிடினும் அக்காலச் சிந்தைப் போக்கையும் சமுதாய நடைமுறைகளையும் அறிய உதவும்.

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க பொது அறிவு!

men-in-black-clip-art

-சுபம்-

தாயார், தந்தையர் யார் யார்?

Picture of King and Queen (Raja and Raja patni)

 

சம்ஸ்கிருதச் செல்வம்– 7

 

தாயார், தந்தையர் யார் யார்?

 ச.நாகராஜன்

பெற்றால் தான் தாயா என்ன? யார் யார் தாய்க்குச் சமானம் என்று கவிஞர் தெளிவாகக் கூறுகிறார் இப்படி:-

ராஜபத்னி – அரசனின் மனைவி

குரு பத்னி – குருவின் மனைவி

ப்ராத்ரு பத்னி – (மூத்த) சகோதரனின் மனைவி

பத்னி மாதா – தனது மனைவியின் தாயார்

ஸ்வ மாதா – பெற்றெடுத்த தாயார்

ஆகிய இந்த ஐவரும் பெற்ற தாயாருக்குச் சமம்.

பாடலைப் பார்ப்போம்:

 

 

ராஜபத்னி குரோ: பத்னி ப்ராத்ரு பத்னி ததைவ ச I

பத்னிமாதா ஸ்வமாதா ச பஞ்சைதா மாதர: ஸ்ம்ருதா: II

சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் என்ற சுபாஷித தொகுப்பு நூலில் இந்தப் பாடல் உள்ளது.

சரி, தந்தையர் பற்றியும் ஒரு கவிஞர் தெளிவாகக் கூறுகிறார் இப்படி:-

ஜனிதா – பெற்ற தந்தை

உபநீதா – மந்திரங்களை உபதேசிப்பவர்

வித்யா தாதா – வித்தையைக் கற்றுக் கொடுப்பவர்

அன்ன தாதா – அன்னம் அளிப்பவர்

பய த்ராதா – பயத்தைப் போக்குபவர்

ஆகிய இந்த ஐவருமே ஒருவருக்குத் தந்தைக்குச் சமானம்.

பாடலைப் பார்ப்போம்:


Picture of Ramakrishna and Sarada Devi (Guru and Guru Patni)

ஜனிதா சோபநீதா ச யஸ்ச வித்யா ப்ரயச்சதி I

அன்னதாதா பயத்ராதா பஞ்சைதே பிதர: ஸ்ம்ருதா: II

 

நினைவில் இருத்திக் கொள்ள வேண்டிய கருத்தல்லவா இது!

 

Picture of Mahatma Gandhi and Kasturbai Gandhi

********* 

சம்ஸ்கிருதச் செல்வம்- 6

 

 சிதையும் சிந்தையும்!

 

By ச.நாகராஜன்

 

 

  சிதையையும் சிந்தையையும் பற்றிச் சிந்தித்தார் கவிஞர் ஒருவர்.

அற்புதமான ஒற்றுமை அவருக்குத் தோன்றியது. பாடலாக வடித்து விட்டார்.

சிதை என்பது இறந்த உடலை வைத்துத் தீ மூட்டும் இறுதி யாத்திரையின் இருப்பிடம்.

சிந்தை என்பதோ ஒரு காரியத்தைப் பற்றித் தீவிரமாக எண்ணுவது.

இரண்டு எழுத்துக்களுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான்!

ஒரு அனுஸ்வரம் அதாவது ஒரு ‘ந்’ இடையில் வருகிறது.

 

சிதா சிந்தா சமா ஹ்ருத்கா பிந்து மாத்ரம் விசேஷத: I

சஜீவம் தஹதே சிந்தா நிர்ஜீவம் தஹதே சிதா II

 

 

சிதா சிந்தா சமா ஹ்ருத்கா பிந்து மாத்ரம் விசேஷத: – சிதை, சிந்தை இரண்டு எழுத்துக்களுக்கும் உள்ள ஒரு வித்தியாசம் ஒரு பிந்து (ந் என்ற புள்ளி தான்!)

நிர்ஜீவம் தஹதே சிதா – உயிர் போனவுடன் சிதை எரிக்கிறது

 

சஜீவம் தஹதே சிந்தா – உயிருடன் இருக்கும் போதே எரிக்கிறது சிந்தை!

 

எப்படிப்பட்ட கவலையில் இருந்திருந்தால் இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கும்!

ஆனால் எப்போதுமே மனித சிந்தை கவலைக்கு இருப்பிடமாகத்தானே இருக்கிறது. ஆகவே ஒரு புள்ளி மாத்திரமே வித்தியாசமாக இருந்தால் கூட சிதையும் சிந்தையும் ஒரே வேலையைத் தான் செய்கிறது.

கவிஞரின் கருத்து பெரும்பாலும் உலகத்தில் சரியாகத் தானே இருக்கிறது!

******

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- இறுதி பகுதி


வீட்டுக்கு அலங்காரம் மனையாள்

வீட்டுக்கு அலங்காரம் மனையாள்
வீட்டுக்கு இருந்தால் வெங்கலப் பெண்டாட்டி வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி
வீட்டுக்காரி என்று பெண்சாதிக்குப் பெயர்
வீதிரும் பெண்ணும் விலை போச்சுது, கை தப்பினால்
வெடவெட என்று தண்ணீர் குடிக்காதவளா உடன்கட்டை ஏறப்பொகிறாள்?
வெட்கத்தால் ஒல்காதவள் குலஸ்த்ரீக்குப் போகாது
வெடகப்படுகிற வேசியும், வெடகங் கெட்ட சமுசாரியும் உதவ மாட்டார்கள்
வெட்கமே கெட்டு வெளிப்பட்ட முண்டைக்கு முக்காடு ஏதுக்கு?
வெட்கம் அற்ற பெண்பிள்ளை வீண்

வேசி பற்றி

வேசி காசு பறிப்பாள் (210)
வேசி அவல் ருசியை அறியாள்,வெள்ளாட்டி எள் ருசியை அறியாள்
வேசி ஆடினால் காசு, வெள்ளாட்டி ஆடினால் சவுக்கு
வேசி உறவு காசிலும் பணத்திலுந்தான்
வேசி உறவும் வெள்ளாட்டி அடிமையும் காசு பணத்தளவே காணலாம்
வேசி கூச்சப்பட்டால் வெண் காசு கிடைக்குமா?
வேசிக்கு ஆணையில்லை,வெள்ளாட்டிக்குச் சந்தோஷமில்லை
வேசிக்கு காசு மேல் ஆசை, விளையாடுப் பிள்ளைக்கு மண் மேலாசை
வேசி மேல் ஆசைபடறது வெள்ளெலும்பை நாய் கவ்வினதுக்கு ஒப்பாம்
வேசியும் நாயும் விதி நூல் வைத்தியரும் பாசம் அற்று நிற்பது காண்பார்
வேசியைப் பெண்டுக்கு வைத்துக் கொண்டால், வேறே வினை தேவையில்லை
வேசி வீடு போவதும் வெந்து சாம்பல் ஆவதும் ஒன்னுதான் (220)
வேடக்காரனுக்கும் ஆடக்காரனுக்கும் பகை, வேசிக்கும் தாசிக்கும் பகை
துக்குணிச் சிறுக்கிக்கு முக்கலக் கந்தை
துடைகாலி முண்டை எல்லாம் துடைத்துப் போட்டாள்
சும்மாக் கிடந்த அம்மையாருக்கு அரைப் பணத்துத் தாலி போதாதா?
சுவத்துக் கீரயை வழித்துப் போடடி சுரணை கெட்ட வெள்ளாட்டி
தையல் சொல் கேட்டால் எய்திடும் கேடு

தைரிய லெட்சுமி தன லெட்சுமி

தைரிய லெட்சுமி தன லெட்சுமி
தோசிப் பெண்ணுக்கேற்ற சொறியாங்கொள்ளி மாப்பிள்ளை
பெற்ற தாயானாலும் குற்றம் எத்தனை பொறுப்பாள்?
பெற்ற தாயிடத்திலேயா கற்ற வித்தையை காட்டறது? 230
பெற்ற தாயுடன் போகிறவனுக்கு பத்தம் ஏது?
வித்துவானை அடித்தவனும் இல்லை, பெற்ற தாயுடன் போனவனும் இல்லை
வித்தைக் கள்ளி மாமியார் விறகு ஒடிக்கப் போனாளாம், கத்தாழை முள்ளு கொத்தோடு தைத்ததாம்
வித்தைக் கள்ளி, விளையாடுக் கள்ளி, பாகற்காய் விற்ற பழங்கள்ளி
விட்தைக்காரப் பெண்பிள்ளை, செத்த பாம்பை ஆட்டுகிறாள்
வித்தையடி மாமி விற்கிறதடி பணிகாரம்
விலைமோரிலே வெண்ணை எடுத்துத் தலை மகனுக்கு கலியாணம் பண்ணுவாள்
வடுகச்சி காரியம் குடுகுச்சு, முடுகுச்சு

கிழவன் கிழவி பற்றி

கிழம் ஆனாலும் கேட்டானாலும் கட்டிக்கொண்டவள் பிழைப்பாள்
கிழவனுக்கு வாழ்க்கைப் படிகிறதிலும் கிணற்றில் விழலாம்
கிழவன் ஆனாலும் கட்டை ஆனாலும் கட்டிக்கொண்டவள் பிழைப்பாள்
கிழவி இருந்த வீடும் கிளி இருந்த காடும் ஈடேறமாட்டாது (241)
கிழவி பாட்டைக் கின்னரக் காரன் கேட்பானா?
கிழவி போனபோது சுவர் இடிந்து விழுந்ததாம்
கிழவியும் காதம் குதிரையும் காதம்
கிழவியை அடித்தால் வழியிலே பேலுவாள்
கிழவியை பாட்டி என்பதற்கு கேட்க வேண்டுமா?
குங்குமக் கோதைக்கும் அஞ்சு பணம், குருட்டுக் கண்ணிக்கும் அஞ்சு பணமா?
கெட்டது கெட்டாய் மகளே கிட்ட வந்து படுத்துக் கொள்
கெட்ட பயலுக்கேற்ற துட்ட சிறுக்கி
கூலிக்குக் குந்துவாள் பிள்ளைக்குத் தவிடு பஞ்சமா? (25)
கூனி ஆனாலும் கூடை சுமந்துதான் கூலி பெற வேண்டும்
கூனி வாயாற் கெட்டாற் போல
செத்த பாம்பு சுற்ற வருகிறதே, அத்தை நான் மாட்டேன் என்றாற் போல
செத்த பாம்பை ஆட்டுவாளாம் வித்தைகார பெண்பிள்ளை
அன்ன நடை நடக்கப் போய் தன் நடையும் கெட்டாற்போல
அன்னிய சம்பந்தமேயல்லாமல் அத்தை சம்பந்தம் இல்லை என்கிறான்
அன்னிய மாதர் அவதிக்குவுவாரா?
அன்னைக்குதவாதவன் ஆருக்குமாகான்
ஆக்கமாட்டாத பெண்ணுக்கு அடுப்புக் கட்டி பத்தாம்
ஆக்கமாட்டாத அழுகல் நாரிக்குத் தேடமாட்டாத திருட்டுக் கணவன் வாய்த்தானாம்
ஆக்கவேண்டாம் அரைக்கவேண்டாம் பெண்ணே, என் அருகில் இருந்தாலும் போதுமடி கண்ணே (260)
ஆக்கி அரைத்துப் போட்டவள் கெட்டவள், வழிக்கூட்டி அனுப்பினவள் நல்லவள்
ஆங்காரிகளுக்கு அதிகாரி
ஆங்காலம் எல்லாம் அவசாரி ஆடி,சாங்காலம் சங்கரா சங்கரா என்கிறாள்
ஆசையாய் மச்சான் என்றாளாம், அடிச் சிறுக்கி என்று அறைந்தானாம்
ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் பேசாதே
அண்ணனிடம் ஆறுமாதம் வாழ்ந்தாலுமண்ணியிடத்தில் அரை நாழிகை வாழலாமா?
அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அயல்நாட்டாள்
அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம்
அண்ணாங்கை அப்சரஸ்த்ரீ
அதமனுக்கு பெண்டாட்டியாய் இருப்பதைவிட பலவானுக்கு வேலைக்காரியாய் இருப்பதே மேல் (270)
அதிசயமான ரம்பை அரிசி கொட்டுகிற தொம்பை

அத்தை பற்றி

அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா
அத்தைக்கொழியப் பித்தைகில்லை ஔவையாரிட்ட சாபத்தீடு
அத்தை மகளானாலும் சும்மா வருமா?
அத்தை மகள் சொத்தை அவள் கேட்கிறாள் மெத்தை
அத்தை மகள் அம்மான் மகள் சொந்தம் போல
கள்ளப் புருடனை நம்பிக் கணவனைக் கை விடலாமா? (277)
மலடி அறிவாளோ பிள்ளை அருமை?
மலடிக்குத் தெரியுமா பிள்ளையைப் பெற்ற அருமை?
மலடிக்குத் தெரியுமோ மகப்பேறு வைத்தியம்? (280)
மலடி மகப் பெற்றாள்
மலடியைப் பிள்ளை பெறச் சொன்னால் பெறுவாளா?
மனையாளுக்கு உற்றது ஒன்றும் சொல்ல வேண்டாம், மாற்றானை ஒருநாளும் நம்பவேண்டாம்
மனைவியில்லாத புருடன் அரை மனிதன்
மனைவி இறந்தால் மணம், மகள் இறந்தால் பிணம்
முகம் சந்திர பிம்பம், அகம் பாம்பின் விடம்
முண்டைகண்ணி பிள்ளை இரண்டு கண்ணும் நொள்ளை
முண்டைச்சி சம்பந்தக்காரன் முன்னுக்கு வருவானா?
முண்டைச்சி பெற்றது மூன்றும் அப்படியே
முண்டையைப் பிடித்த கண்டமாலை முருங்கையையும் பிடித்தது
முப்பணியிட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறை (290)
மூடு முக்காட்டுக்குள்ளே போகிறவள்தான் ஓடிஓடி மாப்பிள்ளை கொள்ளுகிறது

கல்லானாலும் கணவன்

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்
மூதேவி மூதேவி முகம் கழுவ வா மூதேவி
மூன்று முடிச்சு கழுத்தில் விழட்டும், முப்பது இலை குப்பையில் விழட்டும்
மேலான மினுக்கியைக் கொண்டவன் கெட்டான், மேட்டிலே
பயிரிட்டவன் கெட்டான்
கூத்திக்கு இட்டுக் குரங்கு ஆனான், வேசிக்கு இட்டு விறகு ஆனான்
கூத்தியார் பிள்ளைக்கு தகப்பன் யார்?
கூத்தியார் ஆத்தாள் செத்தால் கொட்டும் முழக்கும், கூத்தியார் செத்தால்
ஒன்றுமில்லை
கூத்தியார் செத்தால் பிணம், அவள் தாய் செத்தால் மணம்
குமரிக்கு ஒரு பிள்ளை கோடிக்கு ஒரு வெள்ளை
குமரி தனி வழியே போனாலும் கொட்டாவி தனி வழியே போகாது (300)
குமரியாய் இருக்கையில் கொண்டாட்டம் கிழவியாய் இருக்கையில் திண்டாட்டம்
கனவிலே கண்டவனுக்கு பெண் கொடுத்த கதை
தங்கப் பெண்ணே தாராவே, தட்டால் கண்டால் பொன் என்பான், த்கராசில் வைத்து நிறு என்பான், எங்கும் போகாமல் இங்கேயே இரு
தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆனால், தவத்துக்குப் போவான் ஏன்?
கலியாண சந்தடியில் தாலி கட்ட மறாந்தது போல
வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் ஆசை வண்ணாத்திக்கு கழுதை மேல் ஆசை
மயிருக்கு மிஞ்சின கருப்பும் இல்லை மதனிக்கு மிஞ்சின உறவும் இல்லை
ஆத்தங்கரையில் அம்மவைப் பார்த்தால் வீடில் பெண்ணைப் பார்க்கவேண்டாம் (310)
பொண்ணை போத்தி வள, ஆணை அதட்டி வள (ர்)
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
கல்யாணமே என்றாளாம், தூரமே என்றாளாம்
மாட்டுக்கு மூக்கணாம் கயிறு பெண்ணுக்கு தாலிக் கயிறு
பொட்டு வச்சுக்கோ மாமியாரே பூ வச்சுக்கோ மாமியாரே என்றாளாம்
கொண்டு வந்தால் மகராசி இல்லாவிட்டால் பரதேசி
அடி வயத்தை அம்மா பார்ப்பாள் அடி மடியை ஆத்துக்காரி பார்ப்பாள்

பெற்ற தாய்

பெற்ற தாய்க்கும் வளர்த்த தாய்க்கும் உதவாமல் பிரிந்த குயில் போல
பெற்ற தாய் செத்தால் பெற்ற அப்பன் சிற்றப்பன்
பெற்ற தாய் பசித்திருக்க பிராமண போஜனம் செய்வித்தது போல
பெற்ற தாய் மூதேவி,, புகுந்த தாரம் சீதேவி (320)
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு
பெற்றவளுக்குத் தெரியாதா பெயரிட?
பெற்றவளுக்குத் தெரியும் பிள்ளை அருமை
பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள், பெண்சாதி மடியைப் பார்ப்பாள்
வலியப் பெண் கொடுக்கிறோம் என்றால் குலம் என்ன? கோத்திரம் என்ன என்பார்கள்
வலிய வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?
வலிய வந்தால் கிரந்திக்காரி
வல்லடி வழக்கைச் சொல்லடி மாமி (328)