ஆசீர்வாதம் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!!( Post No. 2413)

baba-blessing

Written by S NAGARAJAN

Date: 22 December 2015

 

Post No. 2413

 

Time uploaded in London :– காலை 6-16

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சம்ஸ்கிருதச் செல்வம்

வாழ்த்துவதிலும் ஒரு அழகு, முறை, ஆசீர்வாதம்!

 

ச.நாகராஜன்

 

பெரியோர்களைப் பணிய வேண்டும் என்று சொல்லும் அறநூல்களை போற்றுகிறோம்.

 

 

அப்படிப் போற்றும் போதே பெரியோர்கள் தம்மிடம் வந்து வணங்கியோரை வாழ்த்துவதிலும் ஒரு அழகை, முறையைக் கையாண்டனர். ஆசீர்வாதம் செய்தனர் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

 

இதை நமது இதிஹாஸ, புராண, காவியங்களில் காணலாம். வேத மந்திரங்களில் வாழ்த்து கூறும் மந்திரங்களைக் கேட்பதே ஒரு புண்ணியம்; அவ்வளவு அழகு; அவ்வளவு பொருள் பொதிந்த வாழ்த்துக்கள்; ஆசீர்வாதங்கள்.

கோவையைச் சேர்ந்த என்.வி.நாயுடு (N.V.Nayudu) என்னும் சம்ஸ்கிருத ஆர்வலர் தன் வாழ்நாள் முழுவதும் படித்து வந்த சம்ஸ்கிருத இலக்கியங்களில் நல்ல பகுதிகளைக் குறிப்பெடுத்து வந்தார். அவற்றை 21 தலைப்புகளில் அழகுறப் பிரித்தார். SUBHASHITA COLLECTION ANTHOLOGY என்ற பெயரில் 1992ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார்.

 

 kanna, rajini

இலக்கியங்களைப் படிப்பது மட்டும் போதாது; அவற்றை அடுத்த தலைமுறைக்குப் பொருள் பொதிந்த முறையில் வழங்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு நூல் நல்ல எடுத்துக் காட்டு.

வாழ்த்துக்கள், ஆசீர்வாதங்கள் என்ற முதல் பகுதியில் மட்டும் இந்தப் பொருளையே 17 விதங்களாகப் பிரிக்கிறார்!

 

 

  • பொதுவான வாழ்த்து முறைகள் 2) குழந்தையை ஆசீர்வாதம் செய்தல் 3) தம்பதிகளை ஆசீர்வாதம் செய்தல் 4) ஒரு குடும்பத்தை ஆசீர்வாதம் செய்தல் 5) பெரும் வீரச்செயலைச் செய்தவரை பாராட்டுதல் 6) ஒரு பெண்மணிக்கு ஆசீர்வாதம் செய்தல் 7) அறிவுரையுடன் ஆசீர்வாதம் செய்தல் 8) சொந்த அனுபவத்தைக் கொண்டு அதை வைத்து ஆசீர்வாதம் செய்தல் 9) வழிப்பயணம் செய்யும் போது ஒருவரை வாழ்த்தி அனுப்புதல் 10) போருக்குச் செல்வோரை வாழ்த்தி அனுப்புதல் 11) திருப்தியுடன் வெற்றி பெற்றுத் திரும்ப ஆசீர்வதித்தல் 12) வாழ்த்தும் போதே அதில் நையாண்டி அடிநாதமாக இழைந்தோடல் 13) வாழ்த்துக்களினால் அடுத்து இன்னும் மாபெரும் வெற்றி அடைய ஊக்குவித்து வாழ்த்தல் 14) வாழ்த்துக்களை அங்கீகரிப்போர் அதன் மூலமாகத் தமது அரிய குணநலன்களைக் காண்பித்தல் 15) ஊழிக்காலம் வரைக்குமான நம்பிக்கை வாழ்த்துக்கள் 16) உலகம் நலம் பெற வாழ்த்து 17) ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அறவுரை வாழ்த்துக்கள்

இப்படிப் பல விதமாக ஆசீர்வாதங்களை வகை பிரித்து அதற்கான இலக்கிய மேற்கோள்களையும் திரு என்.வி.நாயுடு தந்துள்ளார்.

 

 

மிக பிரம்மாண்டமான ஒரு வாழ்க்கை முறையை ஹிந்துத்வம் பாரம்பரிய வழியில் கடந்த நூற்றாண்டுகளில் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பதற்கு இந்த வாழ்த்துக்களே சான்று.

“தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு                  சூழ்கலை வாணர்களும் –   இவள்                     என்று பிறந்தவள் என்றுணராத                 இயல்பினளாம் எங்கள் தாய் என்று இப்படி

ஆரியச் செல்வம் அல்லது ஹிந்துச் செல்வம் அல்லது பாரதீயச் செல்வத்தை அவர் பாரதமாதாவாகப் பாவித்துக் கூறுவது ஆழ்ந்த அர்த்தமுள்ள சத்தியமாக விளங்குகிறது.

 

 

நூலுக்கு வருவோம்.

 

நம்மைக் குளிர வைக்கும் சில எடுத்துக்காட்டுகள் :-

பத்ரம் தே |

எல்லா நலமும் (புகழ், தூய்மை) உனக்கே!

 

 

ஸ்வஸ்தி ப்ராப்னுஹி |

நீ நலமுற இருப்பாயாக

 

 

தே பவந்து மங்களம் |

உனக்கு மங்களம் உண்டாகட்டும்

 

 

சிரம் ஜீவ |

நீண்ட ஆயுளுடன் வாழ்வாயாக

 

 

ஜயது பர்த்தா |

ஆதரவு அளிப்பவனுக்கு (இறைவன், ஆதரவாளன்) வெற்றி உண்டாகுக

 

அதிதி துஷ்யந்தனிடம் கூறுவது:

அப்ரதிரதோ  பவ | (சாகுந்தலம் 7-17)

 

ரதம் ஒட்டுவதில் உனக்கு நிகரானவர் யாரும் இல்லாதபடி ஆவாயாக

 

யசோதை கிருஷ்ணரை ஆசீர்வதிப்பது

ஜீவ, க்ருஷ்ணா, சரதாம் சதம் சதம் |  (க்ருஷ்ண கர்ணாமிருதம் 2 – 67)

 

க்ருஷ்ணா, நீ நூற்றுக்கணக்கான சரத்காலங்கள்  வாழ்வாயாக

 

அருந்ததி ஜனகரை ஆசீர்வதிப்பது :

அக்ஷரம் தே ஜ்யோதி: ப்ரகாஷதாம் | (உத்தர ராம சரிதம் 4 -10)

 

 என்றும் மறையாத ஜோதி (ப்ரகாசிக்கும் நுண்ணறிவு) உன்னிடம் என்றும் ப்ரகாசிக்கட்டும்

 

ரிஷிகள் துஷ்யந்தனை ஆசீர்வதிப்பது :

இஷ்டேன யுஜ்யஸ்வ | (சாகுந்தலம்  5-13)

(உன்) இஷ்டம் பூர்த்தியாகட்டும்

 

 

துஷ்யந்தனிடம் சகுந்தலையின் தோழிகள் கூறுவது :

ஸ்வாகதம் அவிலம்பினோ மனோரதஸ்ய | (சாகுந்தலம் 3 – 16)

 

வருக, உங்கள் மனோரதம் தாமதமின்றி அதி விரைவில் நிறைவேறட்டும்

( மனோரதம் என்ற அழகிய வார்த்தை மனம் ஒரு ரதம்  என்றும் அது தான் விரும்பிய விஷயங்களை நோக்கி அதி வேகமாக ஓடும் என்பதையும் தெரிவிக்கும் பொருள் பொதிந்த சொல்)

 IMG_2597 (2)

******                                       

 

நாமும் ஒரு குறிப்பேடு தயாரிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் பல நூல்களில் இதுவும் ஒன்று என்பதை மேலே நாம் படித்தவற்றைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம்!

–subham–

 

ஒன்று பட்டாலுண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு!( Post No. 2408)

unity

Compiled by London swaminathan

Date: 20 December 2015

 

Post No. 2408

 

Time uploaded in London: காலை 8-40

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஒற்றுமையே பலம் என்பதை வலியுறுத்த பாரத நாட்டில் பல கதைகளும், பழமொழிகளும் இருக்கின்றன. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு- நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு” என்று பாடினான் பாரதி.

 

சின்னக் குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லுவதுண்டு. ஒரு குடியானவனுக்கு நாலு மகன்கள்; எப்போது பார்த்தாலும் அவர்களிடையே சண்டைதான். அந்தக் குடியானவனுக்கு அந்திம காலம் நெருங்கியது. மரணப்படுக்கையில் இருக்கும்போது, நான்கு மகன்களையும் அழைத்து, ஆளுக்கு ஒரு விறகுக்கட்டையைக் கொண்டுவரச் சொன்னான். இதை ஒடிப்போருக்குதான் நான் சொத்து முழுவதையும் எழுதிவைப்பேன் என்றான். பின்னர் ஒவ்வொருவ ரையும் விறகை ஒடிக்கச் சொன்னான். அவர்கள் பலம் முழுதையும் பிரயோகித்து எளிதில் உடைத்தனர்.

 

பின்னர் நாலு விறகுக் கட்டைகளையும் சேர்த்து ஒன்றாகக் கட்டச் சொல்லி இப்பொழுது இதை ஒடிப்போருக்குதான் முழுச் சொத்தும் கிடைக்கும் என்றான். நால்வரும் தனித்தனியே முயன்றனர். ஒடிக்க முடியவில்லை

 

அப்பொழுது சொன்னான்: என்னருமை மகன்களே, நீங்கள் தனித் தனியே இருந்தால் பலவீனம் அடைவீர்கள். நமது பரம்பரைச் சொத்துக்களைப் பாதுகாக்க இயலாது. உங்களை யாவரும் வென்று விடுவர். நீங்கள் நால்வரும் ஒற்றுமையுடனிருந்தால் பலம் அதிகரிக்கும். உங்களை யாரும் வெல்ல முடியாது என்றான். அவர்கள் நால்வருக்கும் புத்தி வந்தது. ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்தனர்; அதைக் கடைப்பிடித்தனர்.

 

ஒற்றுமை பற்றிய கீழ்கண்ட சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பொன்மொழிகள்- சான்றோர் மேற்கோள்களைப் படிக்கையில் உங்களுக்கு இந்தக் கதை மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும். இதோ அந்தப் பொன்  மொழிகள்:–

IMG_0377 (2)

1).அல்பானாம் அபி வஸ்தூனாம் சம்ஹதி: கார்ய சாதிகா- ஹிதோபதேசம்

எவ்வளவு சின்ன பொருளானாலும், அவை ஒன்று சேருகையில் செயலை முடிக்க உதவும்

 

2).ஏக சித்தே த்வயோரேவ கிம் அசாத்யம் பவேத் இதி – கதாசரித் சகரம்

இரண்டு பேருடைய மனம் ஒன்றுபட்டால், செய்யமுடியாதது எதுவுமில்லை.

 

3).ந இஹ நானாவஸ்தி கிஞ்சன- ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்

இந்த உலகில் உயிர்களிடத்தில் மட்டும் எந்தபேதமும் இல்லை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான் – (திருக்குறள் -972)

 

4).பஞ்சபிர் மிலிதை: கிம் யஜ்ஜஹதீக ந சாத்யதே – நைஷதீக சரிதம்

ஐந்துபேர் சேருமிடத்தில் என்னதான் செய்யமுடியாது?

 

 

5).பஹூனாம் அபி சாராணாம் சமவாயோ ஹி துர்ஜய:

த்ருணைர்விதீயதே ரஜ்ஜுர்பத்யந்தே மத்ததந்தின: – பஞ்ச தந்திரம்

சாரமற்று இருப்பினும் எண்ணிக்கையில் அதிகமானதை வெற்றிகொள்ள இயலாது; புற்களைச் சேர்த்துச் செய்யப்படும் கயிறு மத யானையையும் கட்டிப்போடும்.

 

6).பஹூனாம் ச ஏவ சத்வானாம் சமவாயோ ரிபுஞ்ஜய: — சாணக்ய நீதி தர்பணம்

சாதுவானவர்களானும், ஒன்று சேர்ந்தால் எதிரிகளையும் வென்றுவிடலாம்.

 

7).சம் கச்சத்வம்

சம் வதத்வம்

சம் வோ மனாம்ஸி ஜானதாம் – ரிக் வேதம்

 

நாம் எல்லோரும் ஒன்றாகச் செல்வோம் (ஒன்றாகச் செல்லுங்கள்)

ஒன்றாகப் பேசுவோம் (ஒன்றகப் பேசுங்கள்)

ஒரே சிந்தனை உடையவர்களாவோம் (ஒன்றாகச் சிந்தியுங்கள்)

 

8).சங்கே சக்தி கலௌ யுகே

கலியுகத்தில் சங்கம் (ஒன்றுபட்டிருப்பதே) தான் சக்திவாய்ந்தது.

 

9).சமவாயோ துரத்யய:- போஜ சரித்ரம்

கூட்டாக இருப்பது வெல்ல இயலாதது (ஒன்றாக இருந்தால் அவர்களை யாரும் தோற்கடிக்க முடியாது)

 

(மீண்டும் மீண்டும் ஒரே கொள்கை/ தத்துவம் வலியுறுத்தப் பட்டிருக்கிறது)

IMG_0378 (2)

பராதீனதா – அடிமை (பிறரிடம் தொழில் செய்தல்)

10).கஷ்டம் கலு பராஸ்ரய: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

பிறரைச் சார்ந்து வசிப்பது கடினமாகும்.

 

11).கஷ்டாத் அபி கஷ்டதரம் பரக்ருஹவாச: பரான்னம் ச – (சு.ர.பா)

கஷ்டங்களிலும் பெரிய கஷ்டம் மற்றவர் வீட்டில் வசிக்க வேண்டியிருப்பதும், மற்றவர் கொடுக்கும் உணவுக்காகக் காத்திருப்பதும் ஆகும்.

 

12).கஷ்டா வ்ருத்தி: பராதீனா

பிறரிடத்தில் ஊழியம் செய்வது கடினம்

 

13).திகஸ்து பரவசதாம் – ராமாயணம்

பிறருடைய வசத்தில்/ ஆளுகையில் இருப்பது ஒழியட்டும்

 

14).பராதீனே பரம் துக்கம் ஸ்வாதீனே ச மஹத் சுகம் – புத்த சரிதம்

பிறர் வசம் இருப்பது துக்கமானது

சுதந்திரமாகச் செயல்படுவது மிகவும் சுகமானது.

 

–சுபம்–

பாரதி பாடிய பெருந்தலைவர்கள்! (Post No. 2381)

Written by London swaminathan

Date: 11 December 2015

Post No. 2381

 

Time uploaded in London :–8-24 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Subramanya Bharati- born on 11 December 1882

Died on 11 September 1921

 

டிசம்பர் 11 – பாரதி பிறந்த நாள்

பாரதியை நாம் எல்லோரும் புகழ்கிறோம். பாரதியால் புகழப்பட்டோர் யார்? எவர்? என்று பார்த்தோமானால் அது மிக நீண்ட பட்டியலாகிவிடும். இவ்வளவு பேரைப் பாரதி பாடினார் என்பதை அறியும் போது அவரது பரந்த மனப்பான்மை நமக்கு விளங்கும்.

 

 

பேஸ்புக்—கில் ஒரு ‘லைக்’ போடக் கஷ்டப்படும் நமக்கு, பாரதி எத்தனை பேருக்கு ‘லைக்’ (பிடிக்கும் என்று) போட்டிருக்கிறார் என்பதை அறிகையில் அவரது கனிவும் பணிவும் புரியும். நாம் பாராட்டினால் அவை நீர் மேல் எழுத்தாக மறைந்துவிடுகிறது. பாரதி போன்ற “மந்திரம்போல் சொல்லின்பம்” உடைய கவிஞன் பாராட்டினாலோ அது கல் மேல் எழுத்தாகி காலத்தால் அழியாததாகிவிடுகிறது.

 

 

பாரதி பாடாத கடவுள் இல்லை. போற்றாத புராண இதிஹாச புருஷர்கள் இல்லை. கர்ணனும் பார்த்தனும், சகுந்தலையும் பரதனும், வீமனும் தர்மனும் அவரால் பாடப்பட்டனர். இந்தப் பட்டியலைத் தராமல் அவர் பாடிய தலைவர்களை யும், சாதனையாளர்களையும், கவிஞர்களையும் மட்டும் காண்போம்.

 

உலக மகா இலக்கிய வித்தகன் பாணினி, இந்துமதத்தைப் புனருத்தாரணம் செய்த, ஷண்மத ஸ்தாபர் ஆதிசங்கரர், உலக மஹா கவிஞன் காளிதாசன், தமிழ்ப் புலவர்கள் கம்பன், இளங்கோ, வள்ளுவன், அவ்வை, இந்துமதத்தை முஸ்லீம் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய வீர புருஷர்களான வீர சிவாஜி, குருகோவிந்த சிம்மன், மதத்தலைவர்களான ஏசு, புத்தன், தயானந்தர், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், சுதந்திரப் போராட்டத் தலைவர்களான காந்திஜி, கோகலே, திலகர், தாதாபாய் நவுரோஜி, லாலா லஜபதி ராய், வ.உ.சி. முதலானோர் அவரால் பாடப்பட்டனர்.

 

வான சாஸ்திர மேதை பாஸ்கராசார்யார், மாமன்னன் அசோகன், கொடை வள்ளல் பாரி, சுவாமி விவேகாநந்தர், அவரது சீடர் நிவேதிதா, ஓவியர் ரவிவர்மா, தாயுமானவர், சுவாமி அபேதாநந்தா, வேல்ஸ் இளவரசர், குவளைக்கண்ணன்,வெங்கடேசு ரெட்டப்ப பூபதி,   நாம் அறியாத பல சாமியார்கள்:– சித்தாந்த சாமி, கோவிந்த சாமி, யாழ்ப்பாணத்துச் சாமி, மாங்கொட்டைச்சாமி, குள்ளச் சாமி, சுப்பராம தீட்சிதர் என்று பலரையும் போற்றிப் பாடியுள்ளார்.

இதாலிய தலைவர் மாஜினியையும் பாடினார். தாகூர்,தாமஸ் மூர், பங்கிம் சந்திர சாட்டர்ஜி மற்றும் பலரின் பாடல்களை தமிழில் மொழி பெயர்த்தார். ஆண்டாள், நம்மாழ்வார் பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதனால் இவரையும் பாடாமல் பாடினார்.

 

ரஷிய மன்னன் ஜார், ஆங்கில விஞ்ச் துரை முதலியோரை வசை பாடியுள்ளார்!

பாரதியின் போற்றுதலுக்குள்ளானோர் பட்டியலில் இன்னும் பலருமுண்டு. என் பட்டியல் முழுமையான பட்டியலன்று. அகத்தியர் — வேத, புராண, இதிஹாசத்தில் அடிபடும் ரிஷியின் பெயராகும். அவரையும் இரண்டு இடங்களில் பாடியுள்ளார்.

 

இதோ, பாரதி பாடிய சில புகழ்மிகு வரிகள்:

பாடல் 1

கம்பனென்றொரு மானிடன் வாழ்ந்ததும்

காளிதாசன் கவிதை புனைந்ததும்

உம்பர் வனத்து கோளையும் மீனையும்

ஓர்ந்ததளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்

நம்பருந்திறலோடொரு பாணினி

ஞாலமீதில் இலக்கணம் கண்டதும்

இம்பர் வாழ்வின் இறுதிகண்டுண்மையின்

இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும்

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்

தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்

பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்

பாரளித்து தர்மம் வளர்த்ததும்

பேரருட்சுடர் வாள் கொண்டு அசோகனார்

பிழைபடாது புவித்தலம் காத்ததும்

வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்

வீழ்த்திவென்ற சிவாஜியின் வெற்றியும்

அன்னர் யாவும் அறிந்திலர் பாரதத்து

ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்

பாடல் 2

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து

வான்புகழ் கொண்ட தமிழ் நாடு – நெஞ்சை

அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் – மணி

யாரம்படைத்த தமிழ்நாடு

 

பாடல் 3

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்

பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை

உண்மை இது வெறும் புகழ்ச்சி இல்லை

 

பாடல் 4

 

அகத்தியன் பற்றி தமிழ்த் தாய் சொல்வது:——

ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணம் செய்துகொடுத்தான்

 

பாடல் 5

அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்

அன்பினிற் போகுமென்றே – இங்கு

முன்பு மொழிந்துலகாண்ட புத்தன்

மொழி எங்கள் அன்னை மொழி

 

பாடல் 6

உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை

உமையவள் என்று அறியீரோ? உணர்ச்சி கெட்டீர்!

பண்டாய்ச்சி அவ்வை அன்னையும் பிதாவும்

பாரிடை முன்னறி தெய்வம் என்றாள் அன்றோ

 

பாடல் 7

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டுப்

பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை

வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க! வாழ்க!

 

பாடல் 8 (உ.வே.சா. பற்றி)

பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்

காலமெல்லாம் புலவர் வாயில்

துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்

இறப்பின்றித் துலங்குவாயே

 

பாடல் 9

தாயுமானவர் பற்றி

இறவாய் தமிழோடிருப்பாய் நீ

பாடல் 10

நிவேதிதா பற்றி

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

பெரும்பொருளாய் புன்பைத் தாகச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

நிவேதியைத் தொழுது நிற்பேன்.

 427-Kambar

 

இடம் கருதி இத்தோடு நிறுத்துகிறேன் ஏனைய கவிதைகளை பாரதியார் கவிதைத் தொகுப்பில் காண்க.

பாரதி வாழ்க! பாரதி வளர்த்த தமிழ் வாழ்க!!

 

–சுபம் —

 

 

டிசம்பர் 2015 காலண்டர் ( Post No. 2363 )

IMG_8421

(மன்மத வருஷம்,கார்த்திகை/மார்கழி)

இந்த மாதக் காலண்டரில், பலம், மானம் பற்றிய 31 அரிய சம்ஸ்கிருத பழமொழிள் இடம் பெறுகின்றன.

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by London swaminathan

Date: 26 நவம்பர் 2015

Post No:2363

 

Time uploaded in London :–  8-36

(Thanks  for the pictures) 

 

முக்கிய நாட்கள்: டிசம்பர் 11- பாரதி பிறந்த நாள்,  17- மார்கழி மாதப் பிறப்பு,  21 வைகுண்ட ஏகாதசி, 24 மிலாடி நபி, 25 கிறிஸ்துமஸ் , 26 ஆருத்ரா தரிசனம் (திருவாதிரை)

 

 

 

அமாவாசை –  டிசம்பர் 11

ஏகாதசி – டிசம்பர் 7, 21 வைகுண்ட ஏகாதசி

பௌர்ணமி— டிசம்பர் 25

 

முகூர்த்த நாட்கள்: டிசம்பர் 6, 7.

IMG_8423

டிசம்பர் 1 செவ்வாய்க்கிழமை

துர்பலஸ்ய பலம் ராஜா – ஹிதோபதேசம்

பலமில்லாதவர்களுக்கு அரசனே துணை

(ஒப்பிடு: திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை)

 

டிசம்பர் 2 புதன்கிழமை

திக் பலம் க்ஷத்ரிய பலம்

ப்ரம்மதேஜோ பலம் பலம் – மஹாபாரதம்

அரசர்களுடைய பலம் பெயரளவுக்குதான்; ஆன்மீக பலமே பெரிய பலம்

(ஒப்பிடுக: புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரம் – அவ்வையார்)

 

டிசம்பர் 3 வியாழக்கிழமை

நாஸ்தி ச ஆத்ம சமம் பலம் – சாணக்ய நீதி

தனக்குத்தானே பலம் (ஒருவன் மற்றவர்களைச் சார்ந்திருப்பதைவிட தன் சுய பலத்தையே நம்பியிருக்க வேண்டும்.

 

டிசம்பர் 4 வெள்ளிக்கிழமை

ப்ரக்ஞா நாம பலம் தஸ்மான் நிஷ்ப்ரஜஸ்ய பலேன கிம்? – கதா சரித் சாகர்

புத்திதான் உண்மையான பலம்; மற்றவற்றால் என்ன பயன்? (உடல் பலம் உண்மையான பலம் அல்ல).

 

டிசம்பர் 5 சனிக்கிழமை

பலம் மூர்கஸ்ய மௌனித்வம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

முட்டாள்களுக்கு மௌனமே பலம்.

 

டிசம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை

பலீயசீ கேவலம் ஈஸ்வர இச்சா – மஹாபாரதம்

ஆசையில் பெரியது, இறைவன் மீதுள்ள ஆசையே!

ஒப்பிடு: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு- குறள்

 vishnu

டிசம்பர் 7 திங்கட்கிழமை

சௌராணாம் அந்ருதம் பலம்  — சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

திருடர்களுக்கு பொய்தான் பலம்.

 

டிசம்பர் 8 செவ்வாய்க்கிழமை

துல்யே பலே து பலவான் பரிகோபமேதி – பஞ்ச தந்திரம்

சமமான பலமுள்ளவனிடத்தில்தான், பலசாலி

கோபத்தைக் காட்டுவான் (பலம் குறைந்தவர்களிடம் சண்டை போட மாட்டான்)

 

டிசம்பர் 9 புதன்கிழமை

பாலானாம் ரோதனம் பலம் — சு.ர.பா

சிறுவர்களுக்கு அழுகையே பிரதானம்

 

டிசம்பர் 10 வியாழக்கிழமை

பாஹூ மே பலமிந்த்ரியம் – யஜூர் வேதம்

தோள் வலிமையே பெரிய சொத்து.

mosquito-illustration_360x286

டிசம்பர் 11 வெள்ளிக்கிழமை

மசகஸ்ய பலம் கியத்?

கொசுவுக்கு என்ன பலம்?

 

டிசம்பர் 12 சனிக்கிழமை

யஸ்ய புத்திர்பலம் தஸ்ய நிர்புத்தேஸ்து குதோ பலம் – பஞ்ச தந்திரம்

யாரிடம் மூளை இருக்கிறதோ அவனிடம் பலம் உண்டு; புத்தியில்லாதவனிடம் பலம் எங்கே?

 

டிசம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை

ரூப யௌவன மாதுர்யம் ஸ்த்ரீணாம் பலம் அனுத்தமம் – (சாணக்ய)

பெண்களின் பெரிய பலம்: அழகு, இளமை, இனிமை.

 azaki tamil

டிசம்பர் 14 திங்கட்கிழமை

வீரபோக்யா வசுந்தரா

இந்த பூமியானது வீரர்களுக்கே சொந்தம்.

 

டிசம்பர் 15 செவ்வாய்க்கிழமை

ஹிம்சா பலம் அசாதூனாம் – மஹாபாரதம்

கெட்டவர்களின் பலம் மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பதே

 

டிசம்பர் 16 புதன்கிழமை

அப்ரகடீக்ருதசக்தி: சக்தோபி ஜனஸ்திரஸ்க்ரியாம் லபதே– பஞ்ச தந்திரம்

தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தாத சக்திமான், பழிச்சொல்லுக்கு ஆளாவான்.

 

டிசம்பர் 17 வியாழக்கிழமை

அவக்ஞாத்ருடிதம் ப்ரேம நவீகர்தும் க ஈஸ்வர:

அவமரியாதையில் உடைந்த அன்பை எந்தக் கடவுள்தான் ஒட்ட வைப்பான்?

(கடவுளினாலும் முடியாது)

 

டிசம்பர் 18 வெள்ளிக்கிழமை

உன்னதோ ந சஹதே திரஸ்க்ரியாம் – கிராதர்ஜுனீயம்

உயர்ந்த மனிதன், வசவுகளைப் பொறுக்கமாட்டான்

 

டிசம்பர் 19 சனிக்கிழமை

பரிபவோரரிபவோ ஹி சுது: சஹ: – சிசுபாலவதம்

எதிரியினிடம் அடையும் தோல்வி பொறுத்துக் கொள்ள முடியாததே

 

டிசம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை

மோன ஹானி: குத: சுகம்?

மானம் போன பின்னால் சுகம் எங்கே?

 Vishnu_1

டிசம்பர் 21 திங்கட்கிழமை

வரம் ம்ருத்யுர்ன புனரபமான:

அவமானத்தை விட சாவே சிறந்தது

 

டிசம்பர் 22 செவ்வாய்க்கிழமை

சந்தத கமனாதனாதரோ பவதி – சு.ர.பா.

அடிக்கடி செல்வது மரியாதைக் குறைவு

(பழகப் பழகப் பாலும் புளிக்கும்)

ஒப்பிடு: முதல் நாள் தலை வாழை இலையில்

இரண்டாம் நாள் தையல் இலையில்

மூன்றாம் நாள் கையில் (சாப்பாடு கிடைக்கும்).

 

டிசம்பர் 23 புதன்கிழமை

கஜானாம் பங்கமக்னானாம் கஜா ஏவ துரந்தரா: – ஹிதோபதேசம்

யானைகள் சகதியில் சிக்கினால் யானைகள் தான் அவைகளைக் காப்பாற்றமுடியும்

(ஒப்பிடுக: யானையால் யானை யாத்தற்று)

 

 

டிசம்பர் 24 வியாழக்கிழமை

தாரு சஸ்த்ர ப்ரஹாரேண ம்ருகேந்த்ரோ நைவ ஹன்யதே- கஹாவத்ரத்னாகர்

மரக் கத்தியை வைத்து சண்டை போட்டு சிங்கத்தைக் கொல்ல முடியாது

 

டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை

ந நிர்பலா பாத்ரபதோ ஹி ஸ்ராவணாத்- கஹாவத்ரத்னாகர்

ஆவணிக்கு சளைத்தது அல்ல புரட்டாசி!

(இரண்டும் பருவ மழை கொட்டும் மாதங்கள். புரட்டாசியில் கல்யாணம் செய்ய மாட்டார்கள்; ஆவணியில் நல்ல காரியங்களைச் செய்வார்கள்)

 Nataraja atom

டிசம்பர் 26 சனிக்கிழமை

ந வ்யாக்ரம் ம்ருகசிசவ: ப்ரதர்ஷயந்தி- ப்ரதிமா நாடகம்)

மான்குட்டிகள் புலிகளைத் தாக்காது.

 

டிசம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை

ந ஹி துல்யம் பலம் சௌம்ய ஸ்த்ரியாஸ் ச புருஷஸ்ய ஹி – வால்மீகி ராமாயணம்

அன்பரே! ஆணும் பெண்ணும் சம பலம் படைத்தவர் அல்ல

 

டிசம்பர் 28 திங்கட்கிழமை

ப்ரபலே துர்பலே ஜாதே துர்பல: ப்ரபலாயதே – கஹாவத்ரத்னாகர்

பலவான், பலவீனம் அடையும் போது, பலமற்றவன் வலிமையுள்ளவனாகிறான்

(ஒப்பிடு: ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்)

 

டிசம்பர் 29 செவ்வாய்க்கிழமை

பக்னாதி மசகமேவ லூதாதந்துர்ன மாதங்கம் —விக்ரம சரித

சிலந்தி வலையில் கொசுதான் சிக்கும், யானை சிக்காது!

spider

டிசம்பர் 30 புதன்கிழமை

பலம் ஹி சித்தம் விகரோதி – சாணக்கியர்/கௌடில்யர் அர்த்தசாஸ்திரம்

உடல் பலம், உள்ளத்துக்கு உரமூட்டும்

(ஒப்பிடுக: இளைஞர்கள், பகவத் கீதை படிப்பதைவிட கால்பந்து ஆடுவதையே நான் விரும்புகிறேன். பலவீனனால் இந்த ஆத்மாவை ஆடைய முடியாது என்று உபநிஷதம் கூறுகிறது:- சுவாமி விவேகாநந்தர்)

 

டிசம்பர் 31 வியாழக்கிழமை

வஜ்ரம் வஜ்ரேண பித்யதே- சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 2-45

வைரத்தை வைரத்தால்தான் அறுக்கமுடியும்

(ஒப்பிடுக: முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்).

 _diamonds_

ஜனவரி 1 வெள்ளிக்கிழமை (2016)

அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! மங்களம்! சுப மங்களம்!!

யார் மனைவி? எவன் மகன்?

IMG_4485

Compiled  by London swaminathan

Post No.2254

Date: 18 October 2015

Time uploaded in London: 14-59

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

1.ரத்னாகரோ ஜலநிதிரித்யசேவி தனாசயா

தனம் தூரே அஸ்து வதனமபூரி க்ஷாரவாரிபி:

பண ஆசையால் கடலில் இறங்கினால், பணம் தூரப் போய்விட்டது; வாய் எல்லாம் உப்பு ஆனதுதான் மிச்சம்!

ஹிந்தி: சௌப்பே கயே சப்பே பனனே துப்பே ஹீ ரஹ் கயே.

Xxx

2.சர்வம் ஸ்ரத்தயா தத்தம் ஸ்ராத்தம் – ப்ரதிமா

சிரத்தையாகச் செய்யப்படுவது சிராத்தம்

Xxx

3.சர்வஜன மனோபிராமம் கலு சௌபாக்யம் நாம –ஸ்வப்னவாசவதத்தம்

எல்லோர் மனதையும் கவரக்கூடிய விஷயமே சௌபாக்கியம் எனப்படும்.

Xxx

IMG_4496 (2)

யார் மனைவி? எவன் மகன்?

4.சா பார்யா யா ப்ரியம் ப்ரூதே

ச புத்ரோ யத்ர நிவ்ருத்தி:

தன்மித்ரம் யத்ர விஸ்வாச:

ச தேஸோ யத்ர ஜீவ்யதே – (மஹாபாரதம்)

யார் அன்பாகப் பேசுகிறாளோ அவளே மனைவி,

யார் சுகமான வாழ்வு தருகிறானோ அவனே மகன்,

எங்கே விஸ்வாசம் (நம்பக்கூடிய தன்மை) இருக்கிறதோ அவனே நண்பன்,

எங்கு நல்ல வாழ்க்கை நடத்தமுடிகிறதோ அதுவே நாடு.

ஹிந்தியில்

பார்யா வஹீ ஹை, ஜோ ப்ரிய போலே,

புத்ர வஹீ ஹை, ஜிஸ்ஸே சுக மிலே,

மித்ர வஹீ ஹை ஜிஸ்மேம் விஸ்வாஸ் ஹோ,

தேஷ் வஹீ ஹை, ஜஹாம் ஜீவிகா ஹோ.

doctor3

யார் டாக்டர்? யார் போலி மருத்துவர்?

ஸ்ருதே பர்யவதாதத்வம் பஹுசோ த்ருஷ்டகர்மதா

தாக்ஷ்யம் சௌசமிதி ஞேயம் வைத்யே குணசதுஷ்டயம்

–சரக (சூத்ரம்) 9-6

நல்ல மருதுவரின் 4 லட்சணம்:

ஸ்ருதே பர்யவதாதத்வம் = மருத்துவ அறிவு

பஹுசோ த்ருஷ்டகர்மதா= நல்ல அனுபவம்

தாக்ஷ்யம் = திறமை

சௌசமிதி= தூய்மை (சுத்தம்)

நோயாளிகளை எப்படி கவனிப்பது?

மைத்ரீ காருண்யமார்தேஷு சக்யே ப்ரீதிரூபேக்ஷணம்

ப்ரக்ருதிஸ்தேஷு பூதேஷு வைத்யவ்ருத்திஸ்சதுர்விதா

–சரக (சூத்ரம்) 9-26

மைத்ரீ = நட்புடன் அணுக வேண்டும்

காருண்யம்= கருணை இருக்க வேண்டும்

ப்ரீதி = உற்சாகமாக சிகிச்சைதர வேண்டும்

உபேக்ஷணம்= நோயாளியிடத்தில் அனுதாபம் இருக்க வேண்டும்

போலி வைத்யர்கள் எப்படி இருப்பர்?

குசேல: கர்கச: ஸ்தப்தோ க்ராமணீ ஸ்வயமாகத:

பஞ்ச வைத்யா ந பூஜ்யந்தே தன்வந்த்ரிசமா அபி

–சம்ஸ்கிருத பொன்மொழி

மருத்துவப் பிதாமஹான் தன்வந்த்ரிக்குச் சமமானவராக இருந்தாலும் கீழ்க்கண்ட ஐந்து போலி மருத்துவருக்கு மதிப்பளிக்க வேண்டாம்:–

குசேல: = மோசமான ஆடை அணிந்தவர்

கர்கச: =முரட்டுப் பேர்வழி

ஸ்தப்தோ = பிடிவாதக்காரன்

க்ராமணீ =குதர்க்கமான (நேர்மையற்ற) பார்வையுடையோன்

ஸ்வயமாகத: = தானாக (அழையாமலே) சிகிச்சைதர வருபவன்

திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் சொன்ன விஷயங்களி இவற்றுடன் ஒப்பிட்டு மகிழ்க!!!

–சுபம்–

16 வயதினிலே!

donkey1

Compiled by London swaminathan

Post No.2243

Date: 14 October 2015

Time uploaded in London: 10-40 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

1.ந உலூக அபி அவலோகதே யதி திவா சூர்யஸ்ய கிம் தூஷணம்? (பர்த்ருஹரி)

ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது; இது சூரியனுக்கு என்ன குறை?

Xxx

2.பத்ரம் நைவ யதா கரீர்விடபே தோஷோ வசந்தஸ்ய கிம்? (பர்த்ருஹரி)

கரீல செடியில் (துளசி) இலை இல்லாததற்கு வசந்த காலம் என்ன செய்யும்?

Xxx

3.ப்ராணீ ப்ராப்ய ருஜா புனர்ன சயனம் சீக்ரம் ஸ்வயம் முஞ்சதி –ஸ்வப்னவாசவதத்தம்

நோயாளி தானாகவே படுக்கையைவிட்டு உடனடியாக எழுவதில்லை

Xxx

donkey2

4.ப்ராப்தே து ஷோடஸே வர்ஷே கர்தபீ சாப்யப்சராயதே.

16 வயது வந்துவிட்டால் கழுதைகூட அப்சரஸ் (தேவ லோக அழகி) போலத் தோன்றும்!

Xxx

5.மலயேபி ஸ்திதோ வேணு: வேணுரேவ ந சந்தனம்

மூங்கிலானது மலய பர்வதத்தில் வளர்ந்ததால் சந்தனம் ஆகிவிடாது.

Xxx

6.ப்ரம்மசர்யேன தபஸா ராஜா ராஷ்ட்ரம் விரக்ஷதி – அதர்வ வேதம்

பிரம்மசர்யரூப தவத்தினால் அரசன் ஆனவன் நாட்டைக் காப்பாற்றுகிறான்

Xxx

7.மனுர் பவ, ஜனயா தைவ்யம் ஜனம் – ரிக்வேதம்

மனிதனாக இரு; தெய்வீகமான குழந்தைகளைப் பெறு

Xxx

crow nest2

8.ப்ரசாதசிகரஸ்தோபி காக: கிம் கருடாயதே (சாணக்ய நீதி தர்பணம், பஞ்சதந்திரம்)

அரண்மனையின் உச்சியில் உட்கார்ந்தால், காக்கை என்ன கருடன் ஆகிவிடுமா?

ஒப்பிடுக: கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாசி சிறகை விரித்தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி – அவ்வையாரின் மூதுரை.

Xxx

9.மலயே பில்லபுரந்த்ரீ சந்தனதருமிந்தனம் குருதே – சு.ர.பா.

மலய பர்வத ப்ரதேசத்தில் மலைஜாதிப் பெண்கள், சந்தன மரத்தை விறகாகப் பயன்படுத்துவர்

crow nest

Xxx

10.முண்டே முண்டே மதிர் பின்னா

ஒவ்வொருவர் தலையிலும் ஒவ்வொரு எண்ணம் (புத்தி)

ஒப்பிடுக (இந்தி)

அப்னா அப்னா டங் ஹை

அப்னீ அப்னீ சமக்ஞா ஹை

Xxx

11.யௌவனம் தன சம்பத்தி: ப்ரபுத்வமவிவேகதா

ஏகைகமப்யனர்தாய கிமு யத்ர சதுஷ்டயம் – ஹிதோபதேச

இளமை, அதிகாரம், செல்வம், விவேகமில்லாத போக்கு – இந்த நான்கில் ஒன்று இருந்தாலே கெடுதல் ஏற்படும். நாலும் சேர்ந்து இருந்தால் என்ன கதியோ!!

Xxx

12.ரிக்த: சர்வோ பவதி ஹி லகு: பூர்ணதா கௌரவாய – மேகதூதம்

வெற்றிடமாக உள்ள ஒரு பொருளுக்கு எடை இராது;

பூரணமாக இருந்தால் அதற்கு எடை இருக்கும்

ஒப்பிடுக: குறைகுடம் கூத்தாடும் (தழும்பும்) நிறைகுடம்

தழும்பாது.

பெரியார் அடக்கமாக இருப்பர். அரைவேக்காடுகள் ஆர்ப்பரிக்கும்!!

–Subham–

4.தமிழ்ப் பழமொழிகள்: TAMIL- ENGLISH PROVERB BOOK -2 (Fourth/last Part)

cat and mouse

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்

Compiled by London swaminathan

Post No.2229

Date: 9  October 2015

Time uploaded in London: 15-17

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

Third part of Proverb book –Two was published yesterday. This is the Fourth and last part of Book Two.

page31

mouse and cat

பூனைக்குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்

page32

solai mayil

மயிலே மயிலே, இறகு கொடு என்றால் கொடுக்குமா?

page33

ONE PAGE MISSING

pumpkin

முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைத்தது போல

page35

2nd yanai anbu

யானைக்கும் கூட, அடி சருக்கும்

page36

Valparai_GhatRoad

வளைந்து போனாலும் வழியோட போ.

page38

plantain leaf whites

விருந்துக்கும் மருந்துக்கும் மூன்று பொழுதுதான்!

page39

dam

வெள்ளம் வருமுன், அணை போட வேண்டும்

page40

boat suprabadh

வைகறைத் துயில் , எழு!

page41

pag42

–SUBHAM–

 

3.தமிழ்ப் பழமொழிகள்: TAMIL- ENGLISH PROVERB BOOK -2 (Third Part)

சிதம்பரத்தில்  பிறந்த பிள்ளைக்குத் திருவாசகம் கற்றுக் கொடுக்கவேண்டுமா?

Compiled by London swaminathan

Post No.2225

Date: 8  October 2015

Time uploaded in London: 17-10

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

Second part of Proverb book –Two was published yesterday. This is Third part of Book Two.

தனி மரம் காடாகாது  (தனி மரம் தோப்பு  ஆகாது)

துரும்பு நுழைய, இடம் கொடுத்தால் யானையைக் கட்டுவான் –(இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்)

நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டாடு கேட்கும்
நிழலின், அருமை வெயிலில் போனால்தான்   தெரியும்

பணம் பத்தும் செய்யும்

பார்த்தால் பூனை, பாய்ந்தால் புலி

தொடரும்………………………….

ஊரோடு ஒத்து வாழ்!

Sentinelese tribe

Compiled  by  லண்டன் சுவாமிநாதன்

Date: 1 October 2015

Post No: 2205

Time uploaded in London :– -11-09 am

(Thanks  for the pictures)

1.யத்ர யாத்ருச ஆசார: தத்ர வர்தேத தாத்ருசம்

எங்கு என்ன ஆசாரமோ அங்கு அதைப் பின்பற்று

(ஊரோடு ஒத்து வாழ்)

2.எவ்வதுறைவது உலகம்    உலகத்தோடு

அவ்வதுறைவது      அறிவு (குறள் 426)

3.ஆடையில்லாதவன் ஊரில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன்.

Do in Rome in as Romans do

4.யதா தேசஸ்ததா பாஷா – சுபாஷிதரத்ன பாண்டாகாரம்

எந்த நாடோ அந்த பாஷை

5.யதா தேசஸ்ததா வேஷ:

தேசத்துக்கு ஏற்ற உடை

6.காக: கிருஷ்ண: பிக: கிருஷ்ண: வசந்தகாலே சமயாதே காக: காக:, பிக: பிக:

காக்கையும் கறுப்பு, குயிலும் கறுப்பு; வசந்தகாலம் வந்தால் தெரியும்! காகம் காகமே! குயில் குயிலே!

ஒப்பிடுக: கறுப்பு நாயைக் குளிப்பாட்டினாலும் வெளுக்காது.

7.காமார்த்தா ஹி ப்ரக்ருதி க்ருபணா சேதனா சேதனேஷு – மேகதூதம்

காம இச்சை உடையவனுக்கு, உயிருள்ள பொருள் எது, உயிரற்ற பொருள் எது என்று கூடத் தெரியாது.

8.ப்ரக்ருதி கலு சா மஹீயச: சஹதே நான்யசமுன்னதிம் யயா- கிராதர்ஜுனீயம்

பெரியோர்கள் மற்றவர்களின் உயர்வை பொறுக்க மாட்டார்கள் (பெரிய மரத்தின் கீழ் சிறு செடிகள் வளராது)

9.பூயோபி சிக்த:பயசா க்ருதேன ந நிம்பவ்ருக்ஷோ மதுரத்வமேதி – சாணக்யநீதி

எலுமிச்சையை பாலிலும் நெய்யிலும் நனைத்துவைத்தாலும் அது இனிக்காது.

lemon tree on terrace

10.ஸ்த்ரீ  ஸ்வபாவஸ்து காதர: – ஸ்வப்னவாசவதத்தா

பெண்கள் பலவீனமானவர்கள்.

11.மஹான் மஹத்ஸ்யேவ கரோதி விக்ரம் – பஞ்சதந்திரம்

வலியோர் வலியோரிடத்தில்தான் வலிமையைக் காட்டுவர்

12.மஹீயாம்ச: ப்ரக்ருத்யா மிதபாஷிண: – சிசுபாலவதம்

பெரியோர்கள் இயல்பாகவே குறைவாகவே பேசுவர்

ஒப்பிடுக: சொல்லுக சொல்லிற் பயனுடைய – குறள்

13.சரித்பதிர்நஹி சமுபைதி ரிக்ததாம் – சிசுபாலவதம்

கடல் எப்போதும் வற்றாது.

14.மண்டூகா யத்ர வக்தாரஸ் தத்ரம் மௌனம் ஹி பூஷணம்

தவளைகள் எங்கு பேச்சாளர்களோ, அங்கு பேசாமலிருப்பதே அணிகலன்.

(குரங்குக்கு உபதேசம் செய்த தூக்கணங் குருவியின் கூட்டை, குரங்கு பிய்த்தெறிந்த பஞ்ச தந்திரக் கதையை ஒப்பிடுக)

 

15.ம்ருதங்கோ முகலேபேன கரோதி மதுரத்வனீம்

மிருதங்கம் கூட மாவு பூசுவதை வைத்தே நல்ல சப்தத்தைக் கொடுக்கும் (தட்டிக் கொடுத்து வேலை வாங்கு)

ஒப்பிடுக:–ஆடுற மாட்டை ஆடிக்கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.

21THTHAVIL_2555245f.jpg,hindu

16.ய: ஜீவதி ச: பஸ்யதி

யார் உயிரோடு இருக்கிறானோ, அவனே பார்க்கிறான்

(சுவர் இருந்தால்தானே சித்திரம்?)

17.யத்ர சௌரா ந வித்யந்தே தத்ர கிம் ஸ்யாத் நிரீக்ஷகை:

எங்கு திருடர்கள் இல்லையோ அங்கு மேற்பார்வையாளர் எதற்கு?

18.யத்ர தூமஸ்தத்ர வஹ்னி:

நெருப்பு இருந்தால்தானே புகையும்?

19..உத்சவப்ரியா: கலு மனுஷ்யா: (சாகுந்தலம்)

மனிதர்கள் விழாக்களை விரும்புவோர் அல்லவா?

20.ஏகோதர சமுத்பவதா ஏக நக்ஷத்ர ஜாதகா:

ந பவந்தி சமா: சீலைர்யதா பதரிகண்டகா: – சாணக்ய நீதி

ஒரே வயிற்றில், ஒரே நட்சத்திரத்தில் பிறந்தாலும் ஒழுக்கத்தில் சமமாக இல்லை. எப்படியென்றால் இலந்தை மரம் பழத்தையும் முள்ளையும் கொடுக்கிறதல்லவா?

(ஒப்பிடு:  ரோஜாச் செடியிலும் முட்கள் உண்டு)

21.யதா  பீஜம் ததா நிஷ்பத்தி:  – சாணக்ய சூத்ரம்

போட்ட விதைதான் முளைக்கும்

22.யதா வ்ருக்ஷஸ் ததா பலம் —-சுபாஷிதரத்ன பாண்டாகாரம்

மரத்துக்கேற்ற பழம்தான் கிடைக்கும்

23.யதா ஹி குருதே ராஜா ப்ரஜாஸ்தமனுவர்ததே – ராமாயணம்

ராஜா எப்படிச் செய்கிறாரோ மக்களும் அப்படியே செய்வர்

(யதா ராஜா ததா ப்ரஜாJ

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி

24.எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை; வாழிய நிலனே! (ஔவையார், புறம் 187)

(பொருள்: மக்கள் நல்லவராக இருந்தால் நிலமும் நல்லதாக இருக்கும்!!)

–சுபம்—

நாய்வாலை நிமிர்த்த முடியாது!

dog,monkey1

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by London swaminathan

Date: 22 September 2015

Post No: 2179

Time uploaded in London :– 14-06

(Thanks  for the pictures) 

பிறவிக் குணம், சுபாவம் பற்றிய பொன்மொழிகள்

1.அங்கார: சததௌதேன மலினத்வம் ந முஞ்சதி

கரியை நூறு தடவைக் கழுவினாலும் அதன் கறுப்பு நிறம் போகாது

(ஒப்பிடுக: நாய் வாலை நிமிர்த்த முடியாது)

crow

2.ஆஜன்ம உன்மஜ்ஜது துக்தசிந்தௌ ததாபி காக: கில காக ஏவ

பிறந்த நாள் முதல் பாற்கடலில் மூழ்கினாலும் காகத்தின் கறுப்பு நிறம் போகாது

3.அதீத்ய ஹி குணான் சர்வான் ஸ்வபாவோ மூர்த்னி திஷ்டதி – ஹிதோபதேசம்

எல்லா குணங்களையும் மீறி ஒருவனுடைய சுபாவம் தலைதூக்கி நிற்கும்( அதாவது பிறவிக் குணம் மாறாது)

4.சுதப்தமபி பானீயம் புனர்கச்சதி சீததாம் – பஞ்சதந்திரம்

ஒப்பிடுக: சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

நன்றாகச் சூடேற்றினாலும், நீரின் குணம் குளிர்ச்சிஅடைவதுதான்

பெரியோரின் குணமும் அப்படித்தான்.

குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது (குறள்).

5.சுதப்தமபி பானீயம் சமயத்யேவ பாவகம்- பஞ்சதந்திரம்

நல்ல கொதிக்கும் நீரானாலும்

நெருப்பை அணைக்கத்தான் செய்யும்.

(ஒப்பிடுக: தேளைக் காப்பாற்றினாலும் அது கொட்டத்தான் செய்யும்)

6.ஸ்வபாவம் நைவ முஞ்சந்தி சந்த: சம்சர்கதோ அசதாம்

ந த்யஜந்தி ருதம் மஞ்சு காகசம்பர்கத: பிகா: – த்ருஷ்டாந்த சதகம்

தீயோர் சஹவாசம் இருந்தாலும் நல்லோர் கெடுவதில்லை; காகத்துடன் சம்பந்தம் வைத்திருந்தாலும் குயில்கள் அதன் இனிமையான குரலை விடுவதில்லை

ஒப்பிடுக:-புகைக்கினும் நன்மணம் குன்றாது   …. சங்கு சுட்டாலும் வெண்மைதரும்

7.ஸ்வபாவோ யாத்ருசோ யஸ்ய ந ஜஹாதி கதாசன – சாணக்ய நீதி

ஒருவர், தன் சுபாவத்தை விடுவதே இல்லை

476_Lion

8.ஸ்வபாவோ ஹி துரதிக்ரம: – ஹிதோபதேசம்

ஒருவரின் சுபாவமானது மீறமுடியாதது.

9.அனுஹூங் குருதே கனத்வனிம் நஹி கோபாயுருதானி கேசரி – சிசுபாலவதம்

இடியோசை கேட்டால் சிங்கம், பதிலுக்குக் கர்ஜிக்கும்; சிறு மிருகங்களின் சப்தத்துக்கு பதில்தராது.

ஒப்பிடுக: யானையைப் பார்த்து குரைத்த நாய் போல

10.ஆகண்ட ஜலமக்னோபி ஸ்வா லிஹத்யேவ ஜிஹ்வயா – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

பால் ஆறாக ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்.

ஒப்பிடுக: காவேரி கஞ்சியாய் ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்

11.ந ஸ்வபாவோ அத்ர மர்த்யானாம் சக்யதே கர்துமன்யதா – பஞ்சதந்திரம்

பூவுலகிலுள்ளவர்களின் சுபாவத்தை (இயல்பான குணத்தை) மாற்ற இயலாது

dog ele

12.நஹி கஸ்தூரி காமோத: சபதேன விபாவ்யதே – சமயோசித பத்ய மாலிகா

கஸ்தூரியின் மணத்தை ஒருவர் சபதம் செய்து நிரூபிக்க வேண்டியதில்லை. அது சுயமாகவே சுகந்த மணம் வீசும். நல்லோரும் சுயம் பிரகாசிகள்

(ஒப்பிடு: பல்பொடி வியாபாரி கூவி விற்பான்; வைர வியாபாரியை மக்கள் நாடிச்செல்வர்)

xxxxxxxxxxxxxxxxxxxxx