Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
பிரான்ஸிஸ் பேகன் என்பவர் ஆங்கில இலக்கிய இலக்கிய மேதை. லண்டனில் 1561-ல் பிறந்து 65 வயதில் இறந்தார். அவர் வாழ்க்கையைப் பற்றி பல மர்மங்கள் உண்டு. பல பதவிகளை வகித்தார். நீதிபதியாக இருந்த காலத்து பலர் கொடுத்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டதற்காக சிறைவாசமும் அனுபவித்தவர். ஆங்கில இலக்கியம் பயிலுவோர் இவரது பொன்மொழிகளை அடிக்கடி பயன்படுத்துவர். அவர் புதைத்து வைத்த புதையல் பற்றி 27-9-1992ல் நான் தினமணிக் கதிரில் எழுதிய செய்தி இதோ:-
8 Apr 2014 – வித்யாரண்யருக்கு கிடைத்த தங்கப் புதையல் … இதே புலவர் இன்னொரு பாடலில் (அகம் 251) நந்தனின் செல்வம் பற்றிப் … கங்கை நதி, பாட்னா நகரம், நந்த வம்சம், மௌரிய மன்னர்கள் …
23 Feb 2015 – Written by London
swaminathan. Research Article No.1669; Dated 23 February 2015. வராகமிகிரர் சொல்லும் வாலாட்டிக்
குருவிகள் ஆரூடம். சகுனம் என்றால் …
Date: 23 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 7-04 AM Post No. 7128
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
பைரன் என்னும் ஆங்கிலக் கவிஞரை பிரிட்டனை விட அதிகம் மதிப்பது கிரேக்க (Hellas= Greece) நாடுதான். அவருக்காக அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தனர்.
லார்ட் பைரன் பாரதியாரைப் போலவே இலம்
வயதில் மரணம் அடைந்தார். ஆனால் இலக்கிய உலகில் அழையாப் புகழ் பெற்றார்.
நான் 1992ம் ஆண்டில் நவம்பர் முதல் தேதி தினமணி பத்திரிக்கையில் எழுதிய ஆறு கட்டுரைகளில் பைரனின் உடைவாள் ஏலம் பற்றிய செய்தியைக் காண்போம்.
LORD BYRON
ENGLISH POET
BORN ON JANUARY 22, 1788
DIED ON April 19, 1824
Age at death 36
Publications
1807 Hours of Idleness
1809 English Bards and Scotch
Reviewers
1812-18 Childe Harold’s Pilgrimage
1813 The Bride of Abydos
1817 Manfred
1818 Beppo
1819-24 Don Juan
1821 Cain
1822 The Vision of Judgement
My old articles on Byron
all the six articles were written by swaminathan in 1992.
8 Aug 2018 – During one of
Hobouse’s visit to Byron—Hobhouse was a College friend— at
his villa near Genoa, and whilst they were walking in the garden, …
Date: 23 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 5-48 AM Post No. 7127
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
ஜோத்பூர் மன்னன் யஷ்வந்த் சிம்ஹாவுக்கு ஒரு செய்தி
வந்தது.
பெண் ஒட்டகங்களை மேய்த்துப் பாதுகாக்கும் காவலன்
விவசாயி ஒருவரின் மகன் ஒரு பெண் ஒட்டகத்தைக் கொன்று விட்டான் என்று செய்தி அனுப்பி
இருந்தான்.
மன்னன் உடனே தன் படைவீரர்களுக்கு அந்த விவசாயியைப்
பிடித்து வருமாறு கட்டளையிட்டான்.
ஆசகரனா என்ற அந்த விவசாயி அவனது பையனுடன் அவைக்குக்
கொண்டு வரப்பட்டான்.
மன்னன் கோபத்துடன் அவனை நோக்கி, “உன் பையன் ஒட்டகத்தைக்
கொன்றது உண்மையா?” என்று கேட்டான்.
விவசாயி தன் பையனைச் சுட்டிக் காட்டி, “இதோ இருக்கிறான்
என் பையன். அவன் தான் ஒட்டகத்தைக் கொன்றான்” என்றான்.
மன்னன் அந்தப் பையனை நோக்கி, “ஒட்டகத்தை நீ தான்
கொன்றாயா?” என்று கேட்டான்.
“ஆம், மன்னவா! நான் தான் கொன்றேன். வயல்வெளியைப்
பாதுகாத்துக் கொண்டிருந்தேன். அந்த ஒட்டகம் எனது வயலை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அதை மேய்ப்பவனிடம் அதை வயலுக்குள் விடாதே! என் சோளமெல்லாம் பாழாய்ப் போகும் என்று வேண்டிக்
கொண்டேன். ஆனால் அவன் கேட்கவில்லை. ஒட்டகம் உள்ளே வந்து சோளக்கதிர்களை நாசம் செய்ய
ஆரம்பித்தது. ஆகவே என் வயலைப் பாதுகாக்க ஒட்டகத்தைக் கொல்ல நேர்ந்தது” என்றான் அந்தச்
சிறு பையன்.
மன்னனுக்கு அந்தச் சிறு பையனால் எப்படி ஒரு பெரிய
ஒட்டகத்தைக் கொல்ல முடியும் என்று சந்தேகம் ஏற்பட்டது.
“எப்படி அந்த ஒட்டகத்தைக் கொன்றாய்” என்று கேட்டான்
மன்னன்.
சுற்றும் முற்றும் பார்த்த பையன் தூரத்தில் இருந்த
ஒரு ஒட்டகத்தைக் கண்டான்.
அதை அருகில் இழுத்து வந்து தன் வாளால் அதன் கழுத்தை
ஒரே வெட்டாக வெட்டினான்.
“இப்படித்தான் வெட்டினேன்” என்றான் அந்தப் பையன்.
மன்னனுக்கு வியப்பு மேலிட்டது.
அவனைத் தன் படையில் உடனடியாகச் சேர்த்துக் கொண்டான்.
அந்தப் பையன்
தான் உலகமே வியக்கும் வண்ணம் பின்னால் மாபெரும் வீரன் என்று புகழ் பெற்ற துர்காதாஸ்!
Date: 21 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 13-19 Post No. 7121
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Date: 21 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 11-52 am Post No. 7120
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
1992 ம்ஆண்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில். தினமணிப்
பத்திரிக்கையில் ‘உலகப் பலகணி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி
வந்தேன். இதோ 6-9-1992ல் வெளியான 3 கட்டுரைகளின் பறவைக் கண் பார்வை (Bird’s Eye View) . ஆனால் காலத்தினாலும் சுவை
குன்றாத கட்டுரை ‘காட்டுராணி பூலான்
தேவி’ அதை மட்டும் பெரிது படுத்திக்
காட்டுகிறேன். பழைய குப்பைகளை (Old
Paper Cuttings) தூக்கி எறிந்துவருகிறேன். பயனுள்ள விஷயத்தை மட்டும் பகிர்வேன்.
முதலில் புல்லட் பாயிண்ட்ஸ் bullet points –
எனது
தினமணிக் கட்டுரைக்குப் பின்னர் பூலான் தேவி இரு முறை எம்.பி.ஆனார்.
அவரைப்
பற்றி நிறைய புஸ்தகங்கள் வெளியாகின. திரைப்படமும் வெளியானது.
2001ம் ஆண்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவரால் சுடப்பட்ட உயர் ஜாதி மக்களின்
ஆதரவாளர்கள் அவரைச் சுட்டுகொன்றனர்.
கர்ம
வினை எல்லோரையும் நிழல் போலத் தொடர்ந்து வந்து அடிக்கும் என்பதற்கு பூலான்
தேவியின் வாழ்க்கை ஒரு சான்று.
கொலைகளையும் கொள்ளைகளையும் நியாயப்படுத்தி காசு செய்த எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், திரைப்படக்காரர்களுக்கு விழுந்த மரண அடி இது.
written by s swaminathan from london
More from
Wikipedia
கைதும் விடுதலையும்
பல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட பூலான்தேவி, 1983_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12_ந்தேதி மத்தியபிரதேசத்தில் அப்போதைய
முதல்_மந்திரி
அர்ஜூன்சிங் முன்னிலையில் சரண் அடைந்தாள். முதலில் குவாலியர் ஜெயிலில் பூலான்தேவி
அடைக்கப்பட்டாள். பின்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி திகார்
ஜெயிலுக்கு மாற்றப்பட்டாள்.
11 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை
அனுபவித்ததும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் தன்னை விடுதலை
செய்யவேண்டும் என்று பூலான்தேவி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து இருந்தாள்.
இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற முலாயம்சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி
அரசு, பூலான்தேவிக்கு
எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற்றது. மத்தியபிரதேச மாநிலத்திலும் அவள்
சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. இந்த சூழ்நிலையில் பூலான்
தேவியை பிணையத்தில் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற கோர்ட்டு நீதிபதிகள் 18_2_1994 அன்று உத்தரவிட்டனர். விடுதலையாகும்
பூலான் தேவிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு
இருந்தனர்.
மக்களவை உறுப்பினர்
கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி
சரண் அடைந்த பூலான்தேவி, பாராளுமன்ற
தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை
“எம்.பி” ஆனார். 1991_ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் பூலான்தேவி
சிறையில் இருந்தார். என்றாலும் சிறையில் இருந்தபடியே டெல்லி பாராளுமன்ற தொகுதியில்
போட்டியிட்டார்.
நடிகர் ராஜேஷ் கன்னாவை (காங்.)
எதிர்த்து நின்றார். ஆனால் பூலான் தேவிக்கு வெற்றிக்கனி கிட்டவில்லை. தோல்வி
அடைந்தார். இருப்பினும் அரசியல் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. 1994_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில்
இருந்து விடுதலை ஆனார். 1994_ம் ஆண்டு
ஜுலை மாதம் 5_ந்தேதி
உமத்சிங் என்பவரை பூலான்தேவி திருமணம் செய்து இல்லற வாழ்வில் நுழைந்தார்.
சமூக சேவையில் அவருக்கு அதிக ஆர்வம்
உண்டாகியது. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஒரு சேவை அமைப்பை
தொடங்கினார். பின்னர் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில்
சேர்ந்தார். 1996_ம் ஆண்டு
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சா பூர் தொகுதியில் சமாஜ்வாடி
கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக
பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். பழைய வழக்குகள் பூலான் தேவிக்கு தொல்லை
கொடுத்துக் கொண்டே இருந்தன. கோர்ட்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டியது
இருந்தது. இதற்காக பாராளுமன்றம் முன்பு தர்ணா நடத்தினார். பிறகு 1999_ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும்
அதே மிர்சாபூர் தொகுதியில் 2_வது முறையாக நின்று அபார வெற்றி பெற்றார்.
“நான் பூலான்தேவி” என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறு பற்றிய சுய சரிதையை பூலான்தேவி எழுதினார்.
“
கொலை
2001 சூலை 25 இல், பூலான் தேவி புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து
மகிழுந்தில் ஏறிப் புறப்படும் போது முகமூடி அணிந்த மூவரால் சுடப்பட்டு இறந்தார்.
அவரது தலையில் மூன்று தடவைகளும், உடம்பில் இரண்டு தடவைகளும் சுடப்பட்டன. சுட்டவர்கள் மாருதி வாகனத்தில்
ஏறித் தப்பிச் சென்றனர்.[1] உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்
செல்லப்பட்டாலும், அவர்
இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுத்
தேடப்பட்டு வந்த சேர் சிங் ராணா என்பவர் பின்னர் காவல் துறையினரிடம் சரணடைந்தார்.[2] பெக்மாய் படுகொலைகளில் பூலான் தேவி
உயர் வகுப்பைச் சேர்ந்த நபர்களைக் கொலை செய்தமைக்காக பழி வாங்கவே தாம் கொலை
செய்ததாக ராணா கூறினார்.[3]. இது தொடர்பான வழக்கில் ராணா
குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து அவருக்கு 14-8-2014ல் நீதிமன்றம் ஆயுள்தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.[4]
Date: 19 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-39
Post No. 7113
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average
hits per day for both the blogs 12,000.
Date: 19 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 8-50 am Post No. 7112
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
broken Murug/ SKANDAMURUGA/ SKANDA WITH HEAD IN 1903DANANAG MUSEUM IN VIETNAM
சாக்லெட் நாடு பெல்ஜியம்! (Post No.7097)Written by S Nagarajan swami_48@yahoo.comDate: 15 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 14-19 Post No. 7097
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.ச.நாகராஜன்கோகுலம் கதிர் அக்டோபர் 2019 இதழில் உலக உலா பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை! பெல்ஜியத்திற்கும் தமிழுக்கும் ஒரு தொடர்பு உண்டு. பெல்ஜியம் அறத்திற்காகப் போராடி வீழ்ந்த போது அதைப் பாராட்டிக் கவலைப்படாதே என்று சொன்னது ஒரு தமிழ்க் கவிதை தான்! பாடியவர் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார். ‘பெல்ஜியத்திற்கு வாழ்த்து’ என்ற தலைப்பில் கவிதை புனைந்த பாரதியார் ஆரம்பத்திலேயே அற்புதமாக பெல்ஜியத்தை இப்படிப் புகழ்ந்தார்: “அறத்தினால் வீழ்ந்து விட்டாய்; அன்னியன் வலிய னாகி மறத்தினால் வந்து செய்த வன்மையைப் பொறுத்தல் செய்யாய் முறத்தினால் புலியைக் தாக்கும் மொய்வரைக் குறப்பெண் போலத் திறத்தினால் எளியை யாகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்” இந்தப் பாட்டின் பின்னணி என்ன? மிகப் பெரும் பழைய சரித்திரத்தைக் கொண்ட பெல்ஜியம் 1830இல் சுதந்திரம் பெற்றது. அதற்கு முன்னால் ஜூலியஸ் சீஸர் அங்கு வந்த போது அதன் பெயர் பெல்கே. 1839இல் பிரிட்டனுடன் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கையின் படி அதன் மீது யாரேனும் வலியப் போர் தொடுத்தால் பிரிட்டன் உதவிக்கு வரும் என்ற ஷரத்து ஏற்பட்டது. போரை விரும்பாத பெல்ஜியம் தனது நடுநிலைத் தன்மையை எப்போதுமே உறுதிப் படுத்தி வந்தது. 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி திடீரென்று ஜெர்மானியப் படை பெல்ஜியத்தின் வழியே தன் படை செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றது. 3ஆம் தேதி இதை பெல்ஜியம் உறுதியாக மறுத்தது. 4ஆம் தேதி ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது போர் தொடுத்தது. அன்று தான் முதலாம் உலகப் போர் தொடங்கியது. அதன் விளைவு பெரும் விபரீதத்தில் பெல்ஜியத்தை அழிக்கும் அளவு சென்றது. The Rape of Belgium -பெல்ஜியத்தின் கற்பழிப்பு என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுமளவு அந்த தேசம் பாதிக்கப்பட்டது. அறத்திற்கென தலை நிமிர்ந்து நின்று, ஜெர்மனியின் படையை உள்ளே வரக் கூடாது என்று துணிந்து சொல்லி அதன் விளைவாக அல்லல் பட்ட நாட்டை வியப்புடன் பார்த்துத் தான் மஹாகவி இந்தப் பாடலைப் புனைந்தார்.. முறத்தினால் புலியை விரட்டி செய்கையால் உயர்ந்து நின்ற புறநானூற்றுத் தமிழ்ப் பெண்ணை உவமையாகக் காட்டி ‘முறத்தினால் புலியைக் தாக்கும் மொய்வரைக் குறப்பெண் போலத் திறத்தினால் எளியையாகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்” என்று பாராட்டினார். பாரதியாரின் அருமையான முழுப் பாடலையும் படித்தால் பெல்ஜியத்தின் பெருமை விளங்கி விடும். ‘லீஜ் போர்’ எனப்படும் Battle of Liege லீஜ் நகரில் தொடங்கி பல இடங்களுக்குப் பரவியது. போர், போர், போர்! அந்தப் போரில் அடிபட்டுத் துவண்டு மீண்டும் எழுந்து இன்று கம்பீரமாக நிற்கும் பெல்ஜியம்.இன்று உலகின் பணக்கார நாடுகளில் இருபதாவது இடத்தை வகிக்கிறது. மக்கள் இயல்பாகப் பழகும் தன்மை உடையவர்கள். இதன் தலைநகரான ப்ரஸ்ஸல்ஸின் (Brussels) தெற்கே உள்ள வாட்டர்லூ நகரில் தான் நெப்போலியன் தோல்வியுற்றான். இதே ப்ரஸ்ஸல்ஸில் தான் வாஷிங்டனில் இருக்கும் அளவு பல நாடுகளின் ராஜதந்திரிகள் இன்று உள்ளனர். வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் உலகின் எந்த நகரில் ஏராளமாக உள்ளனர் என்று கேட்டால் ப்ரஸ்ஸல்ஸ் என்ற பதிலே வரும். அப்படிப்பட்ட புகழைக் கொண்டது ப்ரஸ்ஸல்ஸ்! உலகின் முதல் இரு செய்தித்தாள்களை 1605இல் அச்சிட்டது பெல்ஜியம் தான்! டச்சு, ப்ரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மூன்று மொழிகளை அதிகாரபூர்வ மொழிகளாகக் கொண்டுள்ளது பெல்ஜியம். உலகின் எல்லா நாடுகளின் நகர்களிலும் – சென்னை உட்பட – ஓய்வெடுக்க என இயங்கும் – Spas – ஸ்பாக்கள் அந்தப் பெயரைக் கொள்ளக் காரணம் பெல்ஜியமே. பெல்ஜிய நகரான ஸ்பாவிலிருந்து உருவானவையே இந்த ஸ்பாக்கள்! ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பு என்று எடுத்துக் கொண்டாலும் கூட உலகின் அதிக கோட்டைகளைக் கொண்டதும் பெல்ஜியமே. குழந்தை இல்லையா, அதிகம் வருமானவரி செலுத்த வேண்டும். உலகின் அதிக வருமானவரி இவர்களுக்குத் தான்! பொழுது போக்கு அம்சங்களும் விளையாட்டுக்களும் அதிகம் உள்ள இந்த நாட்டில் தான் டின் டின் போன்ற பல காமிக் புத்தகங்கள் உருவாயின. அகில உலக கால்பந்தாட்டப் போட்டியும் 1904இல் ப்ரஸ்ஸல்ஸில் தான் முதன் முதலில் நடந்தது. இந்தக் குட்டி நாடு ஒரு முறை தனது அரசை அமைக்க, அனைத்துக் கட்சிகளும் 541 நாட்கள் ஆலோசனை நடத்தவும் இன்னும் ஒரு 200 நாட்களை 65 நிர்வாக வேலைப் பொறுப்புக்கான நபர்களை நியமிக்கவும் எடுத்துக் கொண்டது அதிசயமே! இப்போது இங்கு ஓட்டுப் போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 1953இல் டி.வி. நிகழ்ச்சிகளைத் தொடங்கியது பெல்ஜியம். 97 சதவிகிதம் வீடுகளில் கேபிள் டி.வி. உண்டு. நம் தமிழ்நாட்டுப் பெண்மணிகள் போலவே சீரியல்களுக்கு இங்குள்ள பெண்களும் அடிமைகள். முக்கியமான சீரியல் முடிந்த பிறகு தான் சாப்பாடு – இங்குள்ளது போலவே! பெண்களுக்குப் பிடித்த இன்னொரு விஷயமான வைரத்தின் உலகத் தலைநகரமான அன்ட்வெர்ப்பும் பெல்ஜியத்தில் தான் உள்ளது. பெல்ஜியம் கண்ணாடி என்றால் கேட்கவே வேண்டாம். பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம்பளத்தில் இங்கு வேறுபாடே இல்லை. சமத்துவமான சம்பளம் தான்! உலகில் ஆயிரக்கணக்கில் சுவையான உணவு வகைகளை அறிமுகப்படுத்துவதும் பெல்ஜியமே! நமது காமராஜரை நினைவு படுத்தும் படி அனைவரும் படிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட இந்த நாட்டில் 18 வயது வரை கல்வி என்பது அனைவருக்கும் கட்டாயமான ஒன்று. குளிர் மிகுந்த நாட்களில் நாம் பேசினாலே புகை வரும். அப்படி ஒரு நடுக்கும் குளிர். தொழிலகமெல்லாம் நன்கு அடைக்கப்பட்ட கட்டிடங்களில் வெப்பமூட்டும் சாதனங்கள் பொருத்தப்பட்டே இயங்குகின்றன. தொழிலாளிகள் ஜாலியாக ரிலாக்ஸாக, ஆனால் திறம்பட, கொடுத்த வேலையை குறித்த நேரத்தில் தரத்துடன் முடிக்கின்றனர். பெல்ஜியம் பெண்களின் நாடு மட்டுமல்ல; குழந்தைகளுக்கும் பிடித்த நாடு. ஏனெனில் இங்கு தான் வருடத்திற்கு 2,20,000 டன்கள் சாக்லட் உற்பத்தியாகிறது. ப்ரஸ்ஸல்ஸில் உள்ள பன்னாட்டு விமானநிலையத்தில் தான் உலகில் அதிக அளவு சாக்லட் விற்பனை ஆகிறது. பெல்ஜியம் பீருக்கு ஏகப்பட்ட டிமாண்ட் உண்டு. 800 வகையான பீர்கள் இங்கு தயாராகின்றன. சில பீர் பிரியர்களோ, இது தப்பு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பீர்கள் இங்கு தயாராகின்றன என்கின்றனர். ஒவ்வொரு பீரின் வகைக்கும் தக்கபடி ஒவ்வொரு வகையான பாட்டில் தயாரிக்கப்படுகிறது! டுமாரோலேண்ட் என்ற இடத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் எலக்ட்ரானிக் இசை மற்றும் நடனத் திருவிழா உலகினரைப் பெருமளவில் கவர்கிறது; அத்தோடு பெல்ஜியத்திற்கு திருவிழாக்களின் நாடு என்ற செல்லப் பெயரும் உண்டு! ஏனெனில் அன்றாடம் தெருக்களிலும் அரங்கங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும். உலகின் முதல் லாட்டரிச் சீட்டை அறிமுகப்படுத்தியதும் பெல்ஜியமே. ஆனால் இந்த லாட்டரியில் கிடைக்கும் நிதியை ஏழைகளுக்குக் கொடுக்கவே அது லாட்டரியை நடத்தியது! இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டைத் தயாரித்த அமெரிக்கா அதில் எந்த நாட்டு யுரேனியத்தைப் பயன்படுத்தியது தெரியுமா? சமாதானத்தை என்றும் நிலை நிறுத்த விரும்பும் பெல்ஜியத்திலிருந்து வந்த யுரேனியத்தைத் தான்! காங்கோ அதன் காலனியாக இருந்த போது பெல்ஜியம் தரவழைத்தது இந்த யுரேனியம். இங்குள்ள எஞ்ஜினியர்கள் திறமைசாலிகள். ஆகவே தான் உலகின் பெரிய கட்டிடமான பர்ஜ் துபாய் கட்டிடத்தைக் கட்ட துபாய் தேர்ந்தெடுத்த நான்கு கம்பெனிகளுள் பெல்ஜியம் கம்பெனியும் ஒன்றாக அமைந்தது. இங்குள்ள நீதி மன்றம் போல பெரிய அளவிலான கட்டிடம் கொண்ட ஒன்று உலகிலே எங்குமே இல்லை. 26000 சதுர மீட்டர் பரப்புள்ள கட்டிடம் நீதியை நிலை நாட்டுவதில் குறியாக உள்ளது. ஐரோப்பாவின் யூரோ கரன்ஸியை முன் வைத்தது முதன் முதலில் பெல்ஜியம் தான். அது மட்டுமல்ல, அதற்கான யூரோ சின்னத்தை – € – வடிவமைத்துத் தந்ததும் அது தான்! இந்த நாட்டைப் பற்றி ஒரு வரி சொல் என்று சின்னக் குழந்தையைக் கேட்டால் கூட அது சொல்லும் – சாக்லெட் நாடு என்று! ***
Date: 14 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 7-45 am Post No. 7094
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
சந்துல தானா சிந்துகள் பாடி தந்திரம் பண்ணாதே நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே பறிக்க எண்ணாதே
Date: 13 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 14-48 Post No. 7091
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
12-10-2019 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை
எல்லையில்லா மஹிமை கொண்ட வைரத்தை
ஆலயங்களிலிருந்து அருள் பாலிக்கும் தெய்வத்திடம் சமர்ப்பித்தனர் நமது முன்னோர்.
அரிய ரத்தினங்கள் அனைத்தும்
தேவியை அலங்கரிக்க அருள் ஒளியுடன் ரத்னங்களிலிருந்து வரும் ஒளி அலைகளும் சேர்ந்து துதிப்போரின்
மீது வெள்ளமெனப் பாய்ந்து சௌபாக்கியத்தைக் கொடுப்பது பாரம்பரியப் பழக்கமானது.
நீலத்திரைகடலின் ஓரத்தில் நின்று
தவம் செய்யும் குமரியம்மனின் மூக்குத்தியின் ஒளி வெள்ளம் கடலில் தொலை தூரத்தில் வரும்
கப்பல்களுக்கு வழி காட்டியாக அமைந்ததைச் சரித்திரம் கூறும்.
திருப்பதியில் குடி கொண்டிருக்கும்
வெங்கடாசலபதிக்கு 1986ஆம் ஆண்டு வைர கிரீடம் சூட்டப்பட்டது. இந்த கிரீடம் சுமார்
26 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டது. இதில் 28369 வைரங்கள் பதிக்கப்பட்டன.27 ½ அங்குலம் உயரமும் 13 அங்குல குறுக்களவும் கொண்டது இந்த கிரீடம்.
இதில் உள்ள வைரங்களின் அப்போதைய மதிப்பு 430 லட்சம் ரூபாய் ஆகும். பெல்ஜிய வைரங்களை
ரஷியாவில் பட்டை தீட்டி இதில் பயன்படுத்தியுள்ளனர்.
இதை விட அதிகமாக 70000 வைரங்களுடன்
34 கிலோ எடை தங்கமுள்ள கிரீடம் ஒன்றை 2009 ஜூனில் ஒரு பக்தர் வெங்கடாஜலபதிக்குச் சமர்ப்பித்தார்.
ஒரு வைரத்திலிருந்து வீசும்
ஒளிக்கதிர்களே எல்லையற்ற நன்மைகளை உருவாக்கும் என்று கூறும் போது இத்தனை ஆயிரம் வைரங்களின்
கதிர்கள் ஏழுமலையானின் அருள் கதிர்களுடன் கலந்து பக்தர்களின் மீது படும் போது என்னென்ன
நன்மைகள் ஏற்படும் என்பதை எளிதில் ஊகிக்கலாம். இதே போல மதுரை மீனாட்சி அம்மனின் வைர
கிரீடமும் எல்லையற்ற மகிமையைக் கொண்டுள்ள ஒன்று.
இந்தியாவிற்குச் சொந்தமான மஹிமை
வாய்ந்த கோஹினூர் வைரம் இன்று இங்கிலாந்தில் உள்ளது.
இதன் கதையே தனி. ஒரு வைரம் என்னென்ன செய்யும் என்பதற்கு கோஹினூரின் வரலாறே ஒரு
சிறந்த சான்று.
கோஹினூர் என்றால் பாரசீக மொழியில் ஒளி மலை என்று பொருள்.
இது எவ்வளவு பழமையானது
என்பது யாருக்கும் தெரியாது.
இதன் பழைய காலப் பெயர்
ஸ்மயந்தக மணி.சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றிலும் இதன் புகழ் மற்றும் அருமை பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பகவான் கிருஷ்ணர் உள்ளிட்டோரால் இந்த மணி மதிக்கப்பட்டது என்பது பரம்பரையாக வழங்கி
வரும் ஐதீகம்.
அத்துடன் இந்த கோஹினூருடன் கூடவே ஒரு சாபமும் உண்டு
என்று நம்பப்படுகிறது.
ஆண்களிடம் இது இருந்தால் அது அவர்களுக்கு ஆபத்தையே
தரும். பெண்கள் இதை அணியலாம், அவர்களுக்கு இது பெருமை தரும். இது தான் சாபம்.
இதன் பழைய கால எடை 793 கிராம். இன்றோ வெட்டப்பட்டு
வெட்டப்பட்டு சுமார் 106 கிராமாகச் சுருங்கி விட்டது.
காகதீய வம்சம் இந்தியாவில் ஆட்சி புரிந்த போது
ஆந்திர பிரதேசத்தில் கோல்கொண்டா பிரதேசத்தில் இது மீண்டும் கிடைத்ததாக ஒரு வரலாறும்
உண்டு.
முகலாய அரசரான ஷாஜஹான் 1628ஆம் ஆண்டு தனது சிம்மாசனத்தில்
வைரங்களைப் பதித்தார். இதைச் செய்ய சுமார் ஏழு ஆண்டுகள் பிடித்தது.
இதன்
விலையோ தாஜ்மஹாலுக்கு ஆன செலவைப் போல நான்கு மடங்கு அதிகம்! தாஜ்மஹால் கட்டப்பட்டு
வந்த அதே காலகட்டத்தில் தான் இந்த சிம்மாசனமும் உருவாகிக் கொண்டிருந்தது. இந்தச் செய்தியை
அரசவை குறிப்புகளை எழுதி வந்த அஹ்மத் ஷா எழுதி வைத்துள்ளார்.
கோஹினூர் வைரம் பற்றி அஹ்மத் ஷா எழுதி வைத்த குறிப்பு தான் முதன் முதலாக
ஆதார பூர்வமாக எழுதப்பட்ட குறிப்பாகும்.
அதில் அவர் கூறியிருப்பது :-
” சிம்மாசனத்தின் வெளிப்புற குடை,
எனாமல் பூச்சில் ரத்தினங்கள் பதிப்பிக்கப்பட்டதாகவும் உட்புறத்தில் மாணிக்கக் கற்கள்
மற்றும் செம்மணிக்கல் (கார்னெட்) மற்றும் இதர ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டதாகவும்
இருந்தது. இதை மரகதத் தூண்கள் தாங்கி இருந்தன.
ஒவ்வொரு தூணின் மேலும் நெருக்கமாக
இழைக்கப்பட்ட ரத்தினக் கற்களால் ஆன இரண்டு மயில்கள் இருந்தன. இப்படி அமைக்கப்பட்ட ஒவ்வொரு
இரண்டு மயில்களுக்கு இடையிலும் மாணிக்கம், வைரம், மரகதம். முத்துக்கள் ஆகியவற்றினால்
ஆன மரம் ஒன்று இருந்தது.
இந்த அழகிய மயிலாசனத்தில் அபார
மதிப்புடைய இரண்டு ரத்தினக் கற்கள் இருந்தன. ஒன்று,தைமூர் மாணிக்கக் கல் – முகலாயர்களால்
மிகவும் விரும்பப்பட்ட ஒன்று,ஏனெனில் அவர்கள் வண்ணம் சார்ந்த கற்களைப் பெரிதும் விரும்பினர் – இன்னொன்று
கோஹினூர் வைரம்.
இந்த கோஹினூர் வைரம் சிம்மாசனத்தில்
உச்சியில ரத்தினக்கற்களால் ஆன மயிலின் தலையில்
பதிக்கப்பட்டிருந்தது.”
இப்படி ஒய்யாரமாக
கம்பீரமாகப் பதிக்கப்பட்டிருந்த கோஹினூர் வைரம் உலகளாவிய அளவில் அனைவரது வியப்பையும்
(இதர மன்னர்களின் பொறாமையையும்) சம்பாதித்தது.
இந்த மயில் சிம்மாசனம் செய்யப்பட்டு
ஒரு நூற்றாண்டுக் காலம் வரை முகலாய வமிசத்தின் தலைமையை அது இந்தியாவிலும் அதற்கப்பால்
உலகெங்கிலும் பறை சாற்றிக் கொண்டிருந்தது.
‘ஆசியாவே செல்வக் களஞ்சியம்;
அதன் தலைமையகம் டில்லி’ என்று அனைவரும் மனமார ஒப்புக்கொண்டு
புகழ்ந்தனர்.
ஆனால் அபரிமிதமான இந்தச் செல்வமே
அனைவரின் கண்ணையும் உறுத்தியது. பார்த்தான், பெர்சியாவைச் சேர்ந்த நாதிர் ஷா.
இந்தச் செல்வத்தைக் கவர, அவன்
1739ஆம் ஆண்டு டில்லியின் மீது படையெடுத்தான். பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.
நாதிர் ஷா கொள்ளையடித்த செல்வம்
எவ்வளவு? அதைச் சுமந்து செல்ல மட்டும் 700 யானைகள். 4000 ஒட்டகங்கள், 12000 குதிரைகள்
தேவையாய் இருந்தன. அதாவது இந்த மிருகங்கள் இழுப்பதற்குத் தேவைப்பட்டது; சுமப்பதற்கு
அல்ல! அப்படியானல் இழுத்துச் செல்லப்பட்ட வண்டிகளுக்குள் இந்தியச் செல்வம் எவ்வளவு
இருந்திருக்கும்!
இப்படிப்பட்ட கொள்ளையில் நடுநாயகமாக
அமைந்தது ஷாஜஹானின் மயிலாசனம். அதில் ஒய்யாரமாக இருந்தது கோஹினூர் வைரம்.
நாதிர்ஷா, தான் கொள்ளையடித்ததில்
தைமூர் ரூபியையும் கோஹினூர் வைரத்தையும் மயிலாசனத்திலிருந்து எடுத்துக் கொண்டான் –
அவற்றைத் தன் கை கங்கணத்தில் அணிவதற்காக!
இந்தியாவை விட்டு இப்படியாகக் கொள்ளையடிக்கப்பட்ட்ட கோஹினூர் வைரம் சொந்த நாட்டை விட்டு ‘கொள்ளை யாத்திரை’ போக ஆரம்பித்தது.
இதை எப்படியாவது மீட்க வேண்டும்
என்று இந்திய ராஜாக்கள் ஒரு புறம் சபதம் எடுத்தனர். நாதிர் ஷாவிடமிருந்து இதை அபகரிக்க
வேண்டும் என்று அண்டை நாடுகளின் அரசர்கள் தங்கள் பங்கிற்குத் தங்கள் ஆசையை வளர்த்தனர்.
ஆப்கனிஸ்தான் என்று பின்னால்
அழைக்கப்பட்ட நாட்டில் கோஹினூர் வைரம் சென்றவுடன் ஏராளமான ரத்த ஆறு ஓடியது பல போர்களின்
வாயிலாக. ஒவ்வொரு ஆட்சியாளரின் கையிலிருந்தும் இன்னொருவருக்கு இது மாறியது.
இவர்கள் பற்றிய வரலாறு மிகவும்
சோகமயமானது. ஒரு மன்னன் தன் சொந்த மகனின் கண்களையே குருடாக்கினான். இன்னொருவனோ பண ஆசைப்
பைத்தியத்தால் தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டு தங்கத்தை உருக்கித் தன் தலையில் தடவிக்
கொண்டு ‘தஙக மொட்டையன்’ ஆனான்.
பல போர்களைப் பார்த்த கோஹினூர்
வைரம் கடைசியாக இந்தியாவில் ரஞ்சித் சிங் அரசாண்ட போது அவரால் மீட்கப்பட்டது. 1813இல்
கோஹினூர் வைரத்தை மீட்ட ரஞ்சித் சிங் அதை மிகவும் நேசித்தார். ஒருவழியாக இந்தியாவின்
கௌரவம் மீட்கப்பட்டதாக அவர் கருதியதை மக்களும் ஆமோதித்தனர்.
1801ஆம் வருடம் ஏப்ரல் மாதம்
12ஆம் தேதி ஆட்சிக்கு வந்த ரஞ்சித் சிங் 1780ஆம் ஆண்டு பிறந்தவர்.
மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட மாமன்னராக விளங்கிய அவர்.1839ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி மறைந்தார்.
மஹாராஜா இறந்த மறு நாள்
அவரது மகன் முடி சூட்டப்பட்டார். அவரோ போதை மருந்துக்கு அடிமையானவர்.
ஆறு வருடங்கள் சரியான
தலைமை இல்லாமல் பஞ்சாப் அல்லோல கல்லோலப் பட்டது.
வெள்ளைக்காரன் பஞ்சாபின்
மீது கண்ணை நன்கு பதித்தான்.நடப்பதை தனக்குச் சாதகமாக எப்படி ஆக்குவது என்பதே ஈஸ்ட்
இந்தியா கம்பெனியின் ஒரே நோக்கமாக ஆனது.
ரஞ்சித் சிங்கை அடுத்து அரியணை ஏறிய மூவரும் கொல்லப்பட்ட
சூழ்நிலையில் ரஞ்சித் சிங்கின் இளைய ராணி ஜிண்டானின் குமாரரான துலிப் சிங் பட்டம் சூடினார்.
அப்போது அவருக்கு வயது 5 தான்.
தொடர்ந்து ஏற்பட்ட போர்
ஒன்றில் சீக்கிய ராணுவம் பெருமளவு அழிந்தது.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட லாகூர் உடன்படிக்கையை
அடுத்து பிரிட்டிஷ் பிரதிநிதி அரசுப் பொறுப்பை ஏற்க மகாராஜா துலிப் சிங் (பெயருக்கு)
அரசாட்சி செய்தார்.
1848ஆம் ஆண்டு நடந்த
இன்னொரு போரில் கவர்னர் ஜெனரலான லார்ட் டல்ஹௌஸி,
மகாராஜாவின் பெரும் பகுதிச் சொத்தை விற்று விட்டார்.
தனது பட்டங்கள், உரிமைகள், அதிகாரம் அனைத்தையும்
படிப்படியாகத் துறக்குமாறு செய்யப்பட்டார் துலிப் சிங். சொத்தெல்லாம் பிரிட்டிஷார்
வசம் போக வைக்கப்பட்டது.
அந்த சொத்தில் ஒன்று தான் கோஹினூர் வைரம்!
வஞ்சக சூழ்ச்சிக்கு இரையான துலிப் சிங் இங்கிலாந்திற்கு
அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினொன்று. பல இன்னல்களுக்கு ஆளான
அவர் 1893ஆம் ஆண்டு பாரிஸில் இறந்தார்.
கோஹினூர்
வைரத்தை டல்ஹௌசி பிரபு தன்னுடனேயே தனது இடுப்பு பெல்ட்டில் எப்போதும் வைத்திருந்தார்.
குளியலறை போகும் போது மட்டும் அதைத் தன் உதவியாளரிடம் கொடுப்பாராம்.
ஈஸ்ட் இந்தியா கம்பெனி
கோஹினூர் வைரத்தை மஹாராணி விக்டோரியாவுக்கு அளிக்க முடிவு செய்ய, டல்ஹௌசி அதை இங்கிலாந்திற்கு
அனுப்பினார்.
ராணியோ அதைப் பெற்று மனம் மிக
மகிழ்ந்தார். அது அவரது மேலாடை அணிகலன்களில் ஒன்றாகச் (Brooch) சேர்ந்தது.
பின்னர் அதை ராஜ கிரீடத்தில்
நடுவில் பதித்தார்.
விக்டோரியா மஹாராணியாரின் கணவரான
பிரின்ஸ் ஆல்பர்ட் கோஹினூர் வைரத்தை மீண்டும் அறுத்து பாலிஷ் செய்தார். இப்போது வைரத்திலிருந்து
அதிக பிரகாசமான ஒளி பிரதிபலித்து அனைவரையும் மயக்கியது
விக்டோரியாவின் மூத்த புதல்வரான
ஏழாம் எட்வர்ட் மன்னரின் ராணியான க்வீன் அலெக்ஸாண்ட்ரியாவின் மகுடத்தில் அது பிரகாசித்தது.
பின்னர் விக்டோரியாவின் பேரரான ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் மனைவியான க்வீன் மேரியின் மகுடத்தில்
1937இல் அது ஒளி வீசியது. க்வீன் மேரி தான் இரண்டாம் எலிஸபத்தின் தாயார்.
2002ஆம் ஆண்டு க்வீன் மதர் இறக்கவே
அந்த இறுதிச் சடங்கில் சவப்பெட்டியின் மீது கோஹினூர் வைரம் வைக்கப்பட்டது. ஊர்வலத்தில்
கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்கள் அதைப் பார்த்தனர். கோஹினூரை அனைவரும் கடைசியாகப்
பார்த்த தருணம் அது தான்!.
1947இல் இந்தியா சுதந்திரம் அடையவே
எப்படியேனும் கோஹினூரை இந்தியாவிற்கு மீட்பது குறித்துப் பலரும் ஆலோசித்தனர்.
இந்தியாவிற்கு மட்டுமே உரிமையான
இதை, இப்போது பாகிஸ்தான், ஆப்கனிஸ்தானில் தாலிபான் ஆகியவையும் உரிமை கொண்டாடுகின்றன.
2010இல்
இந்தியா வந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரான் கோஹினூர் இங்கிலாந்தில் தான் இருக்கும்
என்றும் ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமைப் பொருளைத் திருப்பிக் கொடுக்க இசைந்தால் எல்லாப்
பொருள்களையும் இழந்து பிரிட்டிஷ் மியூசியமே காலி ஆகி விடும் என்று கூறினார்.
இருப்பினும் நீதி மன்றத்தில்
வாத பிரதிவாதங்கள் அவ்வப்பொழுது நடந்து கொண்டே இருக்கின்றன.
வரலாற்று ரீதியாக கோஹினூரை ஆராய்ந்து ஆனந்த் மற்றும் டால்ரிம்பிள் ஆகியோர் எழுதிய “கோஹினூர்: தி ஹிஸ்டரி ஆஃப் தி வோர்ல்ட் மோஸ்ட் இன்ஃபேமஸ் டயமண்ட் (Koh-i-noor: The History of the World’s Most Infamous Diamond by Anand and Dalrymple) என்ற நூல் கோஹினூர் வைரத்தின் சரித்திரத்தைத் தந்துள்ளது.
ஒரு வைரத்தின் வரலாறே அதன் சாபத்தின்
வாயிலாக இப்படி பல சாம்ராஜ்யங்களை ஆட்டி வைத்து, பல மன்னர்களுக்குத் துன்பங்களைத் தந்ததையும்
பெண்மணிகளுக்குப் பெருமையைத் தந்ததையும் பார்க்கின்ற போது வைரத்தின் மகிமை நமக்கு நன்கு
புலப்படுகிறது அல்லவா?
நமக்கென ஒரு வைரத்தைத் தேர்வு
செய்வதில் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த உண்மை வரலாறு ஒரு சான்று.
வைரம் பற்றிய இன்னும் சில உண்மைகளை
அடுத்துக் காண்போம்.