தமிழில் சாதனை படைத்த ‘உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்’ !

peacock-fan-3000

தமிழில் சாதனை படைத்த ‘உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்’ !

 

Part of “The Wonder that is Tamil” written by London Swaminathan

 

கட்டுரையாளர் லண்டன் சுவாமி நாதன்

 

ஆய்வுக்கட்டுரை எனண் 1568; தேதி 13 ஜனவரி 2015

இந்தியாவில் எழுத்து வேலைகளுக்காக நோபல் பரிசு பெறத் தகுதி உடையவர் வியாசர் என்னும் மாமுனிவன் என்று ஒரு கட்டுரை எழுதி னேன். தமிழில் எழுத்து, அதிலும் குறிப்பாக உரை எழுதியமைக்காக,  ஒரு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால் உச்சி மேற் புலவர் கொள்  நச்சினார்க்கினியர் என்று பாராட்டப்படும் நச்சி அவர்களுக்கே தரவேண்டும்.

 

அவர் ஒரு பிராமணன். வடமொழி தென் மொழி இரண்டையும் கரை கண்டவர் என்பது அவர் உரை வளத்தில் இருந்தே தெரிகிறது. சில நேரங்க்களில் வடமொழியையோ வடமொழி நூல் குறிப்பிடும் வழக்கங்களையோ மட்டம் தட்டிக் கூட தமிழைப் புகழ்ந்துள்ளார். இன்னும் சில இடங்களில் வேத, புராண, இதிஹாசக் கருத்துக்களை உரையின் கண் நுழைத்துள்ளார். ஆக மறத் தமிழர்களின் பாராட்டுக்கும், குட்டுக்கும் ஆட்படுகிறார். தமிழனைப் புகழும் இடங்களில் தமிழ் ஆர்வலர்கள் இவரை உச்சிமேற் வைத்துக் கொண்டாடுவர். சிலருக்கு ஒவ்வாத கருத்துக்கள் வரும்போது திட்டுவார்கள். இது திராவிட அரசியலின் தாக்கம். ஆயினும் அரசியலுக்கு அப்பாற்பட்ட அந்தக் கால சத்திய சந்தர்கள் —- உரைகாரர்களிலேயே அதிகம் புகழ்ந்தது இந்தப் பார்ப்பனரைத்தான்!!

அப்படி என்ன சாதனை படைத்தார் திருவாளர் நச்சி?

 

கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுதல் என்னும் ஒரு புதிய உத்தியை அதிகம் கையாண்டது இவர்தான். அதாவது ஒரு செய்யுளில் முதல் வரியிலோ இரண்டாவது வரியிலோ வரும் சொல்லை வேறு எங்க்காவது கொண்டு இணைத்து (கூட்டி) பொருள் சொல்லுவார். அது கன கச்சிதமாக இருக்கும். கவிதை பாடியவரே நேரில் வந்தாலும் அட நான் எழுதிய கவிதையில் இப்படியும் பொருள் இருக்கிறதா என்று வியப்பார்.

எல்லாப் பெண்களும் ஏற்கனவே சந்திரன், கந்தருவன், அக்னி ஆகியோரை மணந்த பின்னரே நாலாவது நாள் மணமகனை மணக்கிறான் என்ற வேதக் கருத்தை இவர் தொல்காப்பிய சூத்திர உரையில் கையாண்டது பற்றிய விமர்சனத்தை நேற்று ஆளவந்தார்- ஆக்கியாழ்வான் கதையுடன் தந்தேன்.

நச்சி. தமது உரைகளில் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மேற்கோளாகக் காட்டுகிறார் என்றால் இவருடைய மேதாவிலாசம் எத்தகையது என்பது விளங்கும். அந்தக் காலத்தில் இண்டெர்னெட் கிடையாது. நூலகங்களோ மிகக் குறைவு!

 

இவரை வடமொழியில் சிறந்த உரைகளைத் தந்த மல்லினாதருடன் ஒப்பிடுகிறார் தமிழ் தாத்தா உ.வே.சா.

 

ஒவ்வொரு உரையின் இறுதியிலும் மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று — என்று கூறுவதால் இவர் பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர், மதுரைக்காரர் என்பது தெரிகிறது.

 

வண்டிமிர் சோலை மதுரா புரிதனில்

எண்டிசை விளங்க வந்த வாசான்

பயின்ற கேள்விப் பாரத்துவாசன்

 

என்று உரையின் பாயிரத்தில் உளதால் இவர் குலம், கோத்திரம் முதலியவற்றை அறிகிறோம்.

 

தொல்காப்பியம், பத்துப் பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி, குறுந்தொகையில் பேராசிரியர் உரை எழுதாத 20 பாடல்கள் ஆகிய அனைத்துக்கும்  இவர் உரைகண்டார்.

 

பாரத் தொல்காப்பியமும் பத்துப் பாட்டுங் கலியும்

ஆரக் குறுந்தொகையுள் அயன் நான்கும் — சாரத்

திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்

விருத்தி  நச்சினார்க்கினியமே  – என்று ஒரு வெண்பா உளது.

tamil drawing

நச்சி. இன்னும் சில நூல்களுக்கு உரை கண்டார் என்றும் அவை  எவையெனப் புலப்படவில்லை என்றும் உ.வே.சா. கூறுகிறார்.

 

நச்சி எழுதியதாகக் கூறப்படும் உரையிலும்   குறுந்தொகை உரையும், தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் ஆகிய பகுதிகளுக்கான உரைகளும் கிடைக்கவில்லை.

இன்று, நச்சி. உரையை மற்றவர் உரையுடன் ஒப்பிட்ட சில  இடங்களைக் காண்போம். கீழேயுள்ள பகுதி தொல்காப்பியக் கடல் என்ற அற்புத நூலை எழுதிய வ.சுப மாணிக்கம் சொல்லும் கருத்துக்கள்:

 

“நச்சினார்க்கினியர் தமிழ் இலக்கியத்துக்கும் இலக்கணத்துக்கும் உரை எழுதற்கென்றே பிறந்த பெருமகனாவார் இலக்கியங்களில் உரை நயம் கண்டவராதலின்  இவர்தம் இலக்கண உரையிலும் நயக்காட்சிகளைக் காணலாம்.  இவர்தம் நடை இளம்பூரணத்துக்கும் சேனாவரையத்துக்கும் இடைப்பட்டதாகும். சேனாவரையரை இவர் மறுத்த இடங்களும் உண்டு.இளம்பூரணர்க்குப் பின் தொல்காப்பியத்திற்குப் பெரும் பாகம் உரை கண்ட பெருமையுடையவர்  நச்சினார்க்கினியர்.

 

“சொற்கிடந்தாங்கு பொருள் கொள்ளாது  தாம் நினைத்தாங்குச் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால் இவர் தம் உரை  உரையறங் கடந்த உரை ஆயிற்று.  பொருளறை செய்த இப்பெருங்குறை  இவ்வுரையில் இல்லாதிருப்பின்  நச்சினார்க்கினியர் உரை ஞாயிறாகப்  பெரும் புகழ் பெற்றிருப்பர்.


pen

பெண்மை யடுத்த மகனென் கிளவியும்  — தொல்.649

 

பெண்ணைப் பெண்மகன்  என்று ஆண்பால் படச் சொல்லுகின்ற வழக்கை இத் தொல்காப்பிய அடி குறிக்கின்றது.  இப்பகுதிக்கு வரைந்த உரை வளர்ச்சியைக் காண்போம்:

 

(அ)இளம்பூரணர்:

 

புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்பாலரைப் பெண்மகன் என்று வழங்குப.

 

(ஆ)சேனாவரையர்

 

புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோக்கத்தார் இக்காலத்தும்  பெண்மகன் என்று வழங்குப.

 

(இ)கல்லாடர்:

 

நாணுவரை இறந்தாள் தன்மையளாகிப் புறத்துப் போய் விளையாடும் பெண் மகளைப் பெண்மகன் என்பது முற்காலத்து வழக்கம். அதனை இப்போது மாறோக்கத்தார் வழங்குவர்.  மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு

 

(ஈ) தெய்வச்சிலையார்

 

விளையாடு பருவத்துப் பெண்மகளை பெண்மகன் என்றல் பண்டையோர் வழக்கு.

 

(உ)நச்சினார்க்கினியர்

 

பெண்மகன் என்பது அத்தன்மையாரை அக்காலம் அவ்வாறே வழங்கினார் ஆயிற்று.

 

இங்ஙன ம் கூறலின் ,

 

பெண்மகன் என்பது இளம்பூரணர் காலத்து நாடு முழுதும் பரவலாக வழங்கியிருந்தது என்பதும் சேனாவரையர், கல்லாடர் காலங்களில் திசை வழக்காயிற்று என்பதும் சிலையார், இனியார் காலத்து அத்திசை வழக்கும் அருகிற்று என்பதும் பெறப்படும்”


tamil draw2

மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி — பனம் பாரனார் பாயிரம்

 

இப்பாயிரத்தில் எழுத்து முறை என்பது  நூல் எழுதும் முறை  எனப்பொருள்படும். உரை ஆசிரியர்கள்  இதற்கு வேறு வேறு பொருள் எழுதியுள்ளனர். பிற நூல்கள் எழுத்திலக்கணத்தைச் சொல் இலக்கணத்தோடு மயங்கிக் கூறின எனவும் , அங்கனமின்றி மயங்காத முறையானே எழுத்திலக்கணத்தை வேறு தெரிவித்தார் தொல்காப்பியர் எனவும் உரை செய்குவர் இளம்பூரணர்.

நச்சினார்க்கினியர், மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி என்னும் பன்னிரெண்டாம் அடியை ‘’ புலந்தொகுத்தோனே’’   என்ற எட்டாவது அடியோடு கொண்டு கூட்டிக்கொள்வர். மேல் யான் விளக்கியபடி , எழுத்திலக்கணம் ஒன்றை மட்டும்  மயங்காதபடி தொல்காப்பியர்  மொழிந்தார் என்ற இளம்பூரண உரை குறையுடைத்து என்று கண்டு கொண்ட நச்சினார்க்கினியர் கீழதை மேலதொடு கொண்டு கூட்டி,மூன்று இலக்கணங்களையும் மயங்காத முறையில் செய்தார் தொல்காப்பியர்  என்று நிறுவ முயல்வர். தானம் மாற்றிச் செய்யும் கணக்குக் கூட்டு போல , அடிமாற்றும் இவ்வகைக் கொண்டு கூட்டும் முறை குற்றம் உடையது. முவ்விலக்கணங்களையும் ஒழுங்குறச் செய்தார் ஆசிரியர் என்பதற்கு ‘முறைப்பட எண்ணி’, போக்கறு பனுவல்’, ‘அரில்தப’ என்ற செந்தொடர்களே சாலப்போதும். கொண்டு கூட்டும் நச்சினார்க்கினியம் வேண்டா.”

 

-தொல்காப்பியக் கடல், வ.சுப. மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்

எனது கருத்து: நச்சியின் கொண்டு கூட்டும் உத்தி தான் அவருக்குப் புகழை ஈட்டித் தந்துள்ளது. ஆகவே இந்த விமரிசனம் சரியன்று. இளம் பூரணரைவிடப் பொருத்தமான — தொல்காப்பியரை  பாராட்டும் உரையையே  — நச்சி. இங்கே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

 

-சுபம்–

contact swami_48@yahoo.com

கன்னிப் பெண்கள் எல்லோரும் கல்யாணமானவர்கள்!! ஒரு சர்ச்சை!!

wedding2

Research paper written by London Swaminathan

Research Article No. 1566; Dated 12th January 2015

கன்னிப் பெண்கள் எல்லோரும் ஏற்கனவே திருமணமானவர்கள் என்று இந்து மதம் சொல்கிறது. இதை அப்படியே எழுத்துக்கு எழுத்து அர்த்தம் செய்து கொண்டு, அதன் பின்னால் அமைந்துள்ள பொருளை உணராமல், ஒரு சர்ச்சை நடந்தது! காரணம். உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் என்று தமிழ் கூறு நல்லுலகம் போற்றும் பிராமண உரைகாரர் தொல்காப்பிய சூத்திரத்துக்கு எழுதிய உரையில் இந்தக் கருத்தை எடுத்தாண்டதாகும்.

முதலில் ஒரு சுவையான கதை:

 

ஆளவந்தார் என்பவர் ஒரு வைஷ்ணவ ஆச்சார்யார். மணக்கால் நம்பிக்குப் பின்னால் வந்தவர். நாதமுனிகளின் பௌத்திரர், ஈசுரமுனிகளின் குமாரர், அவரது தாயார் பெயர் அரங்க நாயகி அம்மையார். மகாபாஷ்ய பட்டருடன் சாஸ்திரம் கற்றவர். வீர  நாராயணபுரத்தில் பிறந்தவர்.

 

சமஸ்தான வித்வான் ஆகிய ஆக்கியாழ்வான் என்பவனுக்கு கப்பம் கட்ட வேண்டும் என்று மகா பாஷ்ய பட்டருக்கு ஒரு திருமுகம் (கடிதம்) வந்தது. அதை வாங்கி கிழித்தெறிந்தார் ஆளவந்தார். அரசன் அனுப்பிய தண்டிகையில் (பல்லக்கில்) ஏறிச்சென்று அரண்மனையில் ஆக்கியாழ்வானை வாதத்தில் தோற்கடித்தார்.

 

ஆளவந்தாருக்கு தாய் தந்தை இட்ட பெயர் யமுனா. அவருக்கு  16 வயது ஆனபோது இந்த வாக்குவாதம் நடந்தது.

wedding3

ஆக்கியாழ்வாநுடன் அரண்மனையில் மோதிய 16 வயது யமுனாவைக் கண்டவுடன் அரசிக்கு நம்பிக்கை பிறந்தது. அரசனிடம் சென்று அன்புள்ள கணவரே  இந்தப் பையன் கட்டாயம் வாதத்தில் வெல்வான் அப்படி வென்றால் அவனுக்கு பாதி ராஜ்யத்தைக் கொடுக்க வேண்டும். தோற்றால் அவர் உங்களுக்கு பணி செய்யும் வேலைக்காரனாகட்டும் என்றாள். அரசனும் சம்மதித்தான். வாதம் துவங்கியது.

 

சின்னப்பையனை எளிதில் மடக்கி விடலாம் என்று எண்ணிய ஆக்கியாழ்வான் நீயே வாதத்தைத் துவக்கு என்றார். உடனே ஆளவந்தார் மிகவுமெளிதான நிபந்தனைதான் போட்டார்.

 

நான் எதை உண்டு என்று சொல்கிறேனோ அதை “இல்லை“என்று மறுக்க வேண்டும். ஆக்கியாழ்வான் சரி என்றான்.

1.உன் தாய் ஒரு மலடி இல்லை.

 

2.இந்த அரசன் நேர்மையானவன் .

 

3.இதோ இந்த அரசி கற்புக்கரசி.

ஆக்கியாழ்வானால் பதில் சொல்ல இயலவில்லை —- தன் தாய் மலடி என்றால் உடனே ஆளவந்தார், ஆக்கியாழ்வானே நீ எப்படிப் பிறந்தாய்? என்று கேட்டிருப்பார். அரசன் அரசி பற்றிய இரண்டு வாக்கியங்களுக்கும் இல்லை என்று சொன்னாலோ தலையே போய்விடும்

ஆக்கியாழ்வான் நல்ல சிக்கலில் மாட்டிக் கொண்டான். இதில்  எதற்கும் இல்லை என்று சொல்ல முடியாது. நான் தோற்றேன். ஒரு வாதத்தில் யாரும் பொய் சொல்லக்கூடாது. இப்பொழுது நீ சொன்னவற்றை சரி என்று நிரூபி என்றார்.

உடனே ஆளவந்தார் நான் சொன்னது எல்லாம் சாஸ்திரப்படி சத்தியமானவை. கேளுங்கள்:–

 

1.ஒரு பெண்ணுக்கு ஒரே ஒரு மகன் இருந்தால   அவளுக்கு  அவன் பிள்ளையே இல்லை என்று சாஸ்திரம் சொல்கிறது நீ ஒரே பிள்ளை என்பதால் உன் தாயின் பிள்ளை இல்லை. ஆகையால் அவள் மலடி

 

2.இந்த அரசு நேர்மையானவனாக இருந்தால் உன்னைப் போன்ற ஒரு அஹங்காரியை பதவியில் வைத்திருக்க மாட்டான். அவ்வகையில் நேர்மைக் குறைவு இருக்கிறது.

 

3.வேத மந்திரங்களின் படி எல்லாப் பெண்களும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள். கல்யாண மந்திரங்களில் ஒரு பெண்  முதலில் சோமனுக்கும் (சந்திரன்), பின்னர் கந்தர்வர்க்கும் அக்னிக்கும் சொந்தமாகி நான்காவது நாள் அக்னியே மணமகனிடத்தில் அப்பெண்ணை ஒப்படைப்பதாகவும் கூறி இருக்கிறது. அந்த சாஸ்திரப் பிரகாரம் பார்த்தாள்  மகாராணியும் கூட கற்பிநுக்கு அணிகலன் என்று சொல்லுதற்கில்லை என்று பதில் தந்தார் ஆளவந்தார்.

 

தோற்றுப்பபோன ஆக்கியாழவான் நாட்டை விட்டு வெளியேறினார். யமுனாவுக்கு பாதிராஜ்யம் கிடைக்கிறது. இதன்னால் அவருக்கு ஆளவந்தார் என்ற பெயர் கிடைத்தது.

its-art-its-not-

தமிழில் ஒரு சர்ச்சை!!!

 

இந்தக் கதையில் வரும் கல்யாண வேத மந்திரங்களை நச்சினார்க்கினியர்

தொல்காப்பிய சூத்திர உரையில் குறிப்பிட்டுள்ளார். உடனே இதைப் பெரிதுபடுத்தி தமிழர்களின் கற்பு நெறிக்கு ஊறு விளைவிக்கும் பகையான கருத்துக்களை நச்சி. நுழைத்துவிட்டார் என்று  மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் எழுதிய — தொல்காப்பியக் கடல் —-  என்ற நூலில்  கூறுகிறார்.

கரணத்தின் அமைந்து முடிந்த காலை எனத் தொடங்கும் தலைவன் கூற்று நூற்பாவில் வரும் நச்சினார்க்கினியரின் உரைப்பகுதி:

(அ) ஆதிக் கரணமும் ஐயர் யாத்த கரணமும் என்னும் இருவகைச் சடங்கானும் ஊர் குறைபாடின்றாய் மூன்று இரவின் முயக்கம் இன்றி (மதியும் கந்தருவரும் அங்கியும் என்ற) ஆன்றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளி செய்து ஒழுகி, நான்காம் பகல் எல்லை முடிந்த காலத்துக் அளவிற் புணர்ச்சி போலும் கற்பினும் மூன்று நாளும்   கூட்டமின்மையானும் நிகழ்ந்த மனக்குறை தீர (நாலாம் நாளை இரவின்கண்) கூடிய கூட்டத்தின் கண்ணும்

 

(ஆ)`வரைந்த காலத்து மூன்று நாட் கூட்டமின்மைக்குக் காரணம் என் என்று தலைவி மனத்து நிகழானின்ற வருத்தந்தீரும்படி  மிக்க வேட்கையொடு கூடியிருந்து வேதஞ் சொல்லுதலுற்ற பொருளின் கண்ணும் தலைவன் விரித்து விளங்கக்கூறும்`.


arguments

மேற்கண்ட நச்சி. உரை மீது மாணிக்கனார் சொல்வது:

 

`இப்பகுதிகளில் தமிழினத்தின் உயிரான கற்புக் கொள்கைக்கு அடி முரணான செய்திகள் எவ்வளவு மிகையாக உள்ளன. தெய்வந்தொழாள் கொழுனனைத் தொழுதெழுவாள் என்ற கற்பறத்திற்கு இவ்விளக்கங்கள் எவ்வளவு பகையாக உள்ளன. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இத்தகைய நாகரீகக் கொல்லுரைகளைப் படிக்கும்போது நெஞ்சு பொறுக்குமா?`

 

–என்று கொதிக்கிறார்.

 

கண்ணகி முதல் பல தமிழ்ப் பெண்கள் தீ வலம் செய்து வேத மந்திர முழக்கத்துடன் திருமணம் செய்ததை  நாம் இலக்கியம் வாயிலாக அறிவோம். தொல்காப்பியத்துக்கே நான் மறை முற்றிய வேதப் பிராமணன் அதங்கோட்டு ஆச்சார்யார்தான் முத்திரை குத்தி இது நல்ல நூலே என்று “சர்டிபிகேட்“ கொடுத்தார் என்று பனம்பாரனார் பகர்வார். அப்படி இருக்க வேத மந்திரக் கருத்தை அதன் நுன்கருத்துணராது மாணிக்கனார் கொதித்தது ஏன் என்று விளங்கவில்லை.

அப்படியானால் வேத மந்திர முழக்கத்துடன் நடைபெறும் பிராமண, செட்டியார், முதலியார் கல்யாணங்களில் உள்ள கன்னிப் பெண்கள் எல்லாம் கன்னியர் அல்ல, வேத மந்திரம் சொல்லாமல் மணம் முடிக்கும் பெண்களே கன்னியர் என்று அவர் நம்புகிறாரா? அல்லது தெய்வத்தைத் தொழாமல் உங்கள் கணவரைத் தொழுங்கள் என்று இவர் இன்று எந்த மகளிர் கல்லூரியிலாவது பேசினால் அப்பெண்கள் நகைக்காமல் இருப்பார்களா?

 

உரை எழுதிய காலத்தில் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அவரவர் பொருள் காணுவர். அதை ஏற்பதும் ஏற்காததும் அந்தந்தக் காலத்து சமுதாய சூழ்னிலையையும் சட்ட திட்டங்களையும் பொறுத்தது. அதற்காக பழைய உரைகாரர் மீது பாய்வது நன்றொ சொல்லீர்!!

-சுபம்-

தமிழ் என்னும் விந்தைக் கடல்!

tamil kadal2

தமிழ் என்னும் விந்தை! -27

 

Research article written by ச.நாகராஜன்

Article No. 1560; posted on 9th January 2015

 

தமிழ் என்னும் விந்தைக் கடல்!

 

தமிழ் என்னும் பிரம்மாண்டமான கடலை நீந்திக் கடந்தாரில்லை. அதில் பிரம்மாண்டமான பனிப்பாறையின் ஒரு முனையைச் சிறிது பார்ப்பது போல சில சித்திரக் கவிகளை இது வரை கண்டோம். இன்னும் ஆயிரக்கணக்கில் பல்வேறு பந்தங்களில் தமிழ் பாடல்கள் மலர்ந்துள்ளன. இவற்றை ஒருங்கு சேர்ந்து சித்திரக் களஞ்சியமாக்க வேண்டுவது நமது கடமை. இறைவன் அருள் இருப்பின் பல பாகங்களில் இதைச் செய்து முடிக்க எண்ணம் உள்ளது.

 

தமிழ் இறைவனின் மொழி. செம்மொழி.மந்திர மொழி.அருள் மொழி. நுணுக்கமான மொழி. இயற்கையின் அடிப்படையிலும், மனித உடல்கூறின் அடிப்படையிலும் பேசுவதற்கு எழுந்த மொழி. பல ரகசிய கலைகளை சொற்களிலும் அதன் ஒலிகளிலும் அடக்கிய மொழி. அதைப் பேசுபவர்களுக்கு இனிமையை அருளும் மொழி. பேசும் போது உபயோகிக்கும் சொற்களால் பல் வேறு நலங்களைத் தரும் மொழி. இறை அருளாளர்கள் அற்புதமான சொற்சேர்க்கை களால் பாக்களை அருளி அனைவரையும் உத்வேகமூட்டி எழ வைக்கும் மொழி. இன்னும் தமிழ் விடு தூது போன்ற நூல்களில் விவரிக்கப்பட்ட அரும் நலன்களையும் குணங்களையும் கொண்ட மொழி. சுருக்கமாகச் சொல்லப் போனால் அறம். பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளையும் சுலபமாக அருளும் மொழி!

tamil kadal 1

இலக்கணக் கட்டமைப்பு வாய்ந்த பழம் பெரும் மொழி என்பதால் இதில் கவிதை எழுதுவது என்பது சுலபமல்ல. பல்வேறு கலைகளையும் இயற்கை ரகசியங்களையும் கற்றுத் தேர்ந்து மொழிப் புலமை பெற்று இறைவனின் அருளைப் பெற்றவரே நின்று நிலைக்கும் கவிதைகளை அருள முடியும்.

 

கவி என்பார் நான்கு வகைப் படுவர். 1)ஆசு கவி 2) மதுர கவி 3) சித்திர கவி 4) வித்தார கவி.

 

இன்னொரு வகையாகப் பிரிப்போர் 1)கடுங்கவி 2) இன்கவி 3) அருங்கவி 4) பெருங்கவி என்பர்.

 

ஆசு கவி என்போர் தொடுத்த பொருளும், தொழுத்த சூழலும், அடுத்த தொடையும் வழுவாமற் கடுத்துப் பாடுவர்.

மதுர கவி என்போர் சொற் செல்வமும் பொருள் பெருமையும் கொண்டதாய், தொடையும் தொடை விகற்பமும் கொண்டு உருவக முதலாகிய அலங்காரங்களையும் கொண்டு ஓசைப் பொலிவு உடையதாய் உய்த்துணரும் புலவருக்கு ஒலிக் கடல் அமிழ்தம் போன்று இன்பம் பயக்கப் பாடுவோர் ஆவர்.

 

சித்திர கவி என்போர் மாலைமாற்று முதலாகிய அரும் கவிகளைப் பாடும் திறன் உடையவர் ஆவர்.

வித்தார கவி என்போர் மும்மணிக் கோவை, பன்மணி மாலை, மறம், கலிவெண்பா மடலூர்ச்சி ஆகியவற்றோடு நெடும்பாட்டும், கோவையும், பாசண்டமும், கூத்தும், விருத்தமும், கதையும் உள்ளிட்ட செய்யுளும் இயல் இசை நாடகம் ஆகியவற்றோடு  கூடிய கலை நூல்களோடு பொருந்தப் பாடும் பெருங் கவி ஆவர்.

இந்த நாற்வகைப்பட்ட கவிஞர்கள் ஆயிரமாயிரம் பேர் லட்சக் கணக்கான தமிழ் பாடல்களைப் பாடியுள்ளனர். இவற்றைக் கற்றலே, அவை காட்டும் மெய்ப்பொருள் படி நிற்றலே உண்மை இன்பம்.வாழ் நாள் முழுவதும் கற்க வேண்டிய தமிழ்க் கடலில் நீந்துவதே ஒரு சுகானுபவம்.

tamil kadal 3

தமிழ் என்னும் விந்தையின் இந்த முதல் பாகத்தில் சில சித்திர பந்தங்களைப் பார்த்தோம். இன்னும் சுவைக்க வேண்டியவை ஏராளம். விரைவில் அடுத்த பாகத்தில் விந்தையைத் தொடருவோம்.

 

இந்தத் தொடரை வெளியிட்ட நிலாச்சாரல் ஆசிரியர் திருமதி நிர்மலா ராஜுவுக்கும், நிலாச்சாரல் குழுவினருக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் வாழ்க! வெல்க!!

                        முற்றும்

This series (27 parts) was written by my brother Santanam Nagarajan for nilacharal.com magazine. This is the final part.

tiruchendur1

contact swami_48@yahoo.com

பேசுவதெல்லாம் கவிதை!

saraswathy

Post No 1556; Dated 8th January 2015

தமிழ் என்னும் விந்தை! -26

by ச.நாகராஜன்

தமிழ் ஒரு அரிய செம்மொழி. மதுரை சங்கத்திலே சிவனார் தலைமை வகித்து அருளிய மொழி. தன்னைத் தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் அளவு தமிழ் மீது தீராக் காதல் கொண்ட முருகன் தந்த  மொழி!

 

இதில் புலமை கொண்டு காலம் காலமாக ஆயிரக் கணக்கான கவிஞர்கள் பல அரிய விந்தைகளைக் காட்டி உள்ளனர். மாதிரிக்கு ஒரே ஒரு சிறிய சம்பவத்தைப் பார்த்தால் இப்படிப்பட்டவர்களுக்கு சித்திர கவி சாதாரணம் தான் என்றே தோன்றி விடும்!

 

பேசுவதெல்லாம் கவிதை என்ற அளவில் இலக்கணத்துடன் பேச்சையே கவிதையாகத் தந்த கவிஞர்கள் சமீப காலத்தில் கூட வாழ்ந்திருக்கின்றனர்.

 

உதாரணத்திற்கு  மாம்பழக்கவிச்சிங்க நாவலரைக் கூறலாம், இவர் பிறந்த ஆண்டு கி.பி.1836. தமிழ் வளர்த்த சேது சமஸ்தான சேதுபதிகள் இவரை ஆதரித்தனர். இவர் கவித்திறம் கண்டு வியந்த முத்துராமலிங்கச் சேதுபதியவர்கள் மற்றும் பொன்னுசாமித் தேவர் அவர்கள் இவருக்கு கவிச்சிங்க நாவலர் என்ற பட்டத்தைத் தந்தனர்.

 

ஒருமுறை கவித்திறம் வாய்ந்த அப்பாச்சி பிள்ளையவர்கள் மாம்பழக்கவிச்சிங்க நாவலரைச் சந்தித்தார். அவர்கள் பேசியதெல்லாம் கவிதையாக இருந்தது.

 

அப்பாச்சி பிள்ளை கூறினார்:- “கம்பனும், ஒட்டக்கூத்தனும், புகழேந்தியும்,ஔவையும், காளமேகமும், படிக்காசுத் தம்பிரானும், பரஞ்சோதி முனிவனும், சிற்றம்பலமும், வெண்பாப் புலியும், வாலசிம்மமும் மற்ற வித்துவான்களும் பழனி மாம்பழக் கவிச்சிங்கத்துக்கிணையா? உலகத்தோரே!

 

இது விருத்தமாக ஆனது இப்படி:-

கம்பனுமொட் டக்கூத்த னும்புகழேந் தியுமவையுங் காளமேக

மும்படிக்கா சுத்தம்பி ரானும்ப  ரஞ்சோதி முனிவ னுஞ்சிற்              

றம்பலமும், வெண்பாப்பு லியும்வால  சிம்மமுமற் றவித்து  வான்க

ளும்பழனி மாம்பழக்க விச்சிங்கத் துக்கிணையா? உலகத்தோரே!

 

“மாம்பழக் கவிச்சிங்கமும் சளைத்தவர் இல்லையே! அப்பாச்சி பிள்ளையவர்கள் பேசியதெற்கெல்லாம் இவரும் பதில் கூறினார் – கவிதையாக!

அப்பாச்சி பிள்ளை: முன்பு போசன் சமூகத்திருந்த காளிதாசன் போலிலை யெந்த வித்வானும் என்பார்கள். நல்ல புத்திமான் மாம்பழக் கவிச்சிங்கத்துக் கொப்பில்லையென்பேன் நிச்சயமிது.

இது வெண்பா ஆகிறது இப்படி:-

 

முன்புபோ சன்ச மூகத்திருந்த காளிதா

சன்போ லிலையெந் தவித்வானு  – மென்பார்கள்  நல்லபுத்தி

மான்மாம்ப ழக்கவிச்சிங் கத்துக்கொப் பில்லை

யென்பேன் நிச்சயமி து.

மாம்பழக் கவிச்சிங்கம் கூறினார்: நமது துரையவர்களைக் காண இன்றைக்கு மனசு துடிக்குது கண்டு முறையிட்டுக் கொள்வதுசிதமோ, கூடாததோ சொல்லுங்கள் பிள்ளையவர்களே

இது வெண்பா ஆகிறது இப்படி:-

 

நமது துரையவர்க ளைக்காண வின்றைக்கு

மன சுதுடிக் குதுகண் – டுமுறையிட்டுக் கொள்வ

துசிதமோ கூடாத தோசொல்லுங்  

கள்பிள் ளையவர் களே

god2a

அப்பாச்சி பிள்ளை: அய்யா கவிராயரவர்களே தங்களுக்குச் செய்யுமரியாதி விஷயத்தில் அய்யரும் நானுஞ் சொன்னோம், நம் எசமானும் சரி என்று ஒப்பி மனசும் சுமுகமாச்சுது.

இது வெண்பா ஆகிறது இப்படி:-

“அய்யா கவிரா யரவர்களே தங்களுக்குச்   

செய்யு மரியாதி விஷயத்தி – லையருநா

னுஞ்சொன்னோ  நம்மெசமா  னுஞ்சரியென் றொப்பி மன

சுஞ்சு முகமாச் சுது”

 

மாம்பழக் கவிச்சிங்கம் பதில் கூறினார் இப்படி:- தாங்களறியாத சமாசாரமென்ன உத்தரவு வாங்கி என்னை ஊர்க்கனுப்பி வைப்பதெற்கெல்லாங் கிருபை தான் வேண்டும். மானேஜரவர்களே, மெத்த நம்பினேன் வீண் பேச்சல்ல நிஜம்.

 

இது வெண்பா ஆகிறது இப்படி:-

“தாங்களறி யாதசமா சாரமென்ன வுத்தரவு

வாங்கியென்னை யூர்க்கனுப்பி வைப்பதெற்கெல் –

லாங்கிருபை தான்வேண்டும். மானே ஜரவர்களே, மெத்த நம்பி   

னேன்வீண்பேச் சல்ல நிஜம்.

 

அப்பாச்சி பிள்ளை: நமது பிரபுவிடத்தினிலே மருமசங்கதி முழுதும் பேசி முடிவு செய்திருக்கிறேன் அதிக சந்தோஷம் தானே அய்யா, கவிராயரே!

இது வெண்பா ஆகிறது இப்படி:-

நமது பிரபுவி டத்தினி லேமருமசங் கதிமுழு தும்பே – சிமுடிவு

செய்திருக்கி றேன திகசந்தோ ஷந்தானே   அய்யா, கவிரா யரே!

பேச்செல்லாம் கவிதையாக மூச்செல்லாம் தமிழாக வாழ்ந்த கவிஞர்களுக்கு வெற்றியா, அவர்களை உளமும் உயிரும் கொண்டு ஆதரித்த சேதுபதிகளுக்கு வெற்றியா அல்லது இதையெல்லாம் கேட்டு உளம் மகிழ்ந்த தமிழர்களுக்கு வெற்றியா!

 

இவர்கள் அனைவருக்கும் வெற்றி தான்! ஆனால் முதல் வெற்றி தமிழ் என்னும் விந்தைக்குத் தானே!

 

contact swami_48@yahoo.com

*****************

திரிபங்கி – 2

Post No 1553; Dated 7th January 2015.

தமிழ் என்னும் விந்தை! -25

திரிபங்கி – 2

by ச.நாகராஜன்

திரிபங்கிக்கு மாறனலங்காரம் தரும் இலக்கணம் இது.

 

நனியொரு பாவாய் நடந்தது தானே

தனிதனி மூன்றாஞ் சால்புறு பொருண்மையிற் பகுப்ப நிற்பது

திரிபங்கியதாகும்.

திரிபங்கிக்கு உதாரணச் செய்யுளாக மாறனலங்காரம் தரும் செய்யுள் இது:-

“வாரிதிபார் மன்மதன் பூசல்பார் வெய்ய மாமதி பார்      

ஊரலர்பா ரன்னையிங் கேசல்பாருய் யுமாறிலைபார்  

சோர்குழல்பார் பொன்னிறஞ்சேர்தல்பார் துய்யமான் மயல்பார்  

நாரணனே தென்னரங்கேசனே தெய்வ நாயகனே

 

இதனை மூன்றாகப் பகுத்த பா கட்டங்களில் வருமாறு:-

வாரிதிபார் மன்மதன்பூசல்பார் வெய்யமாமதி பார்
ஊரலர் பார் அன்னையிங்கேசல் பார் உய்யுமாறிலை பார்
சோர்குழல் பார் பொன்னிறஞ்சேர்தல் பார் துய்யமான்மயல் பார்
நாரணனே தென்னரங்கேசனே தெய்வநாயகனே

 வாரிதிபார்    ஊரலர் பார்     சோர்குழல் பார்       நாரணனே

மன்மதன்பூசல்பார்      அன்னையிங்கேசல் பார்  பொன்னிறஞ்சேர்தல் பார்                                  தென்னரங்கேசனே

வெய்யமாமதி பார்   உய்யுமாறிலை பார்   துய்யமான்மயல் பார்   தெய்வநாயகனே

யாழ்ப்பாணக் கவிஞர் க.மயில்வாகனப் பிள்ளை இயற்றிய கட்டளைக் கலித்துறையில் அமைந்த திரிபங்கிப் பாடல் இது:-

“தந்தையென் பேனன்னை தானுமென் பேன்சற் குருவுமென்பேன்                                      

சிந்தையன் பாய்நின்னை நாடிநிற் பேனற் றிருநகுலை         

வந்துறச் சீர்மன்னு வாழ்வளிப் பாய்மற் றருணிறையத்  

தந்திருப் பாய்வன்னி சேர்கரத் தாய்தற் பரமுதலே”

இச்செய்யுள் மூன்று வஞ்சித் துறை ஆகுமாறு கீழ்க்கண்டபடி பிரிக்கலாம்:-

  1. தந்தை யென்பேன்  சிந்தையன்பாய்  வந்துறச் சீர்     தந்திருப்பாய்
  2. அன்னைதா னுமென்பேன்      நின்னைநா டிநிற்பேன்   மன்னுவாழ் வளிப்பாய்                      வன்னிசேர் கரத்தாய்
  3. சற்குரு வுமென்பேன்    நற்றிரு நகுலை   மற்றரு ணிறையத்   தற்பர முதலே

நேரிசை வெண்பாவில் அவர் அமைத்த இன்னொரு திரிபங்கி வெண்பாப் பாடல் இது:-

கங்கரா பன்னாகக் கச்சார் வியனிடையாய்     

பங்கதனின் மின்னாள் பயில்வடிவா –

வெங்கயிலை     மன்னா வியனகுலை வானவா

இங்கஞ்சல்         என்னா யியைபயனும் ஈ

இந்த வெண்பா கீழ்க்கண்ட இரு வெண்பாக்களை உருவாக்கும்:-

  1. பன்னாகக் கச்சார் வியனிடையாய் பங்கதனின்   மின்னாள் பயில் வடிவா வெங்கயிலை – மன்னா    வியனகுலை வானவா விங்கஞ்ச லென்னா         யியைபயனு மீகங்க ரா
  2. பயனுமீ கங்கரா பன்னாகக் கச்சார்      வியனிடையாய் பங்கதனின் மின்னாள் – பயில்வடிவா   வெங்கயிலை மன்னா வியனகுலை வானவா    விங்கஞ்ச லென்னா வியை

எப்படி ஒரு அற்புதமான கவித்  திறமையை நம் தமிழ் கவிஞர்கள் கொண்டிருக்கிறார்கள், பாருங்கள்!

வளம் வாய்ந்த நம் தமிழ் மொழி அன்றோ செம்மொழி!

*****

contact swami_48@yahoo.com

தமிழ் என்னும் விந்தை! -24 ! திரிபங்கி – 1

தமிழ் என்னும் விந்தை! -24

திரிபங்கி – 1

by ச.நாகராஜன்

Post No 1550 ; Date 6th January 2015

 

ஒரு பாடலிலேயே மூன்று பாடல்கள் வர முடியுமா? தமிழ் என்னும் விந்தையில் மட்டும் முடியும்!

திரி என்றால் மூன்று என்று பொருள். பங்கம் என்றால் பேதம். ஆக திரி பங்கி என்றால் மூன்று பேதம் அல்லது பங்கம் உடையது என்று பொருளாகிறது.

இதற்கு தண்டியலங்காரம் இரு உதாரணங்களைத் தருகிறது. இந்த உதாரணங்களையே பரிதிமால் கலைஞரும் தன் நூலில் விளக்கியுள்ளார்.

பாடல்களைப் பார்ப்போம்.

ஆதரந் தீரன்னை போலினி யாய் அம்பி காபதியே!

மாது பங்காவன்னி சேர் சடையாய் வம்பு நீண்முடியாய்!  

 ஏதமுய்ந் தாரின்னல் சூழ்வினை தீரெம்பி ரானினியார்!  

ஓது மொன்றே உன்னு வாரமு தேஉம்பர் நாயகனே!

இதன் பொருள்:-

அன்னையே போன்று இனிமையாய் விளங்குபவனே! அம்பிகையின் நாயகனே! உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டு விளங்குபவனே! வன்னிப் பத்திரத்தைச் சடைமுடியில் தரித்தவனே! மகுடம் போன்ற சடை முடியுடையவனே! குற்றம் நீங்கி உய்ந்தவர் பிறவித் துன்பத்தைத் தரும் வினையைத் தீர்ப்பவனே! பேரின்பத்தினை உடைய ஞானிகளால் போற்றப்படும் ஒப்பற்ற பொருளே! நின்னை நினைப்பவர்க்கு அமுதமாக இருப்பவனே! தேவர்களின் நாயகனே! நின்னை ஏத்துதும்!

இனி இப்பாடலை மூன்று விதமாகப் பிரிப்பதைப் பார்ப்போம்:

  1. “ஆத ரந்தீர்  மாது பங்கா  ஏதம் உய்ந்தார்      ஓதும் ஒன்றே!”
  2. “அன்னை போல் இனியாய்    வன்னி சேர் சடையாய்   இன்னல் சூழ் வினைதீர்  உன்னுவார் அமுதே!”
  3. “அம்பிகா பதியே      வம்புநீண் முடியாய்    எம்பிரான் இனியார்    உம்பர் நாயகனே!”

எப்படி பொருளுடன் கூடிய அற்புதமான மூன்று பாடல்கள் மலர்ந்துள்ளன, பார்த்தீர்களா!

கட்டளைக் கலித்துறையில் அமைந்த பாடல் இது.

திரிபங்கியைக் கட்டங்களில் அமைத்துப் பார்ப்போம்:-

கிடைமட்டமாகப் படித்தால் நான்கு வரிகளில் உள்ள  பாட்டை செங்குத்தாக  மூன்று வரிசைகளில் படித்தால் மேலே உள்ள மூன்று பாடல்கள் மலர்வதைக் காணலாம்!

ஆத ரந்தீர் அன்னைபோ லினியாய் அம்பிகா பதியே
மாது பங்கா வன்னிசேர் சடையாய் வம்புநீண் முடியாய்
ஏத முய்ந்தார் இன்னல்சூழ் வினைதீர் எம்பிரா னினியார்
ஓது மொன்றே உன்னுவா ரமுதே உம்பர் நாயகனே

 

இதே போன்ற இன்னும் ஒரு வகைப் பாடலைக் கீழே காண்போம்:-

சங்கந்தா பூணாரந் தாமே கலைதாநற்  

 புங்கவன்மால் காணாப் புலவுடைய –

கங்கரா!  கோணா கலாமதி சேர் கோடீர!

சங்கரா!    சோணாசலா சலமே தோ!”

இதன் பொருள்:-

நன்மை புங்கவன் மால் காணா புலவுடைய கம் கரா – நன்மை மிக்க பரிசுத்தனாகிய நான்முகனும் திருமாலும் கண்டறியாத புலால் நாற்றம் வீசும் கபாலத்தை ஏந்தும் கையினை உடையாய்! கோண் ஆ கலா மதி சேர் கோடீர – வளைவு பொருந்திய பிறைச் சந்திரன் பொருந்திய சடை முடியை உடையாய்! சங்கரா – சுகத்தைச் செய்பவனே! சோண அசலா – பொன் மயமாகிய மலையை இடமாகக் கொண்டவனே! சலம் ஏதோ – கோபம் யாதோ? சங்கம் தா – (யாம் இழந்த சங்க வளையல்களைத் தா;     பூண் ஆரம் தா – பூண்டிருந்த மாலைகளைத் தா; மேகலை தா – (நழுவி ஒழிந்த) மேகலாபரணத்தைத் தா!

இந்த வெண்பாவை கீழ்க்கண்ட இரு வெண்பாக்களாக படிக்கலாம். ஆகவே இது திரிபங்கி ஆகிறது.

நேரிசை வெண்பா

  1. பூணாரந் தாமே கலைதரநற் புங்கவன்மால்  காணாப் புலவுடைய கங்கரா – கோணா    கலாமதி சேர் கோடீர சங்கரா சோணா     சலாசலமே தோசங்கந் தா”

 

நேரிசை வெண்பா

  1. “சலமேதோ சங்கந்தா பூணாரந் தாமே                      கலைதா நற் புங்கவன்மால் காணாப் – புலவுடைய              கங்கரா! கோணா கலாமதிசேர் கோடீர!                    சங்கரா! சோணா சலா!”

திரிபங்கியின் சித்திரம் கீழே தரப்பட்டுள்ளது

 tribhangi

ஒரு பாடலில் மூன்று பாடல்கள் வரும் விந்தை நல்ல பல தமிழ்ப் புலவர்களால் செய்யப்பட்டுள்ளது.

***************

Lord Shiva Composed Tamil Poems! The Wonder that is Tamil- Part 6

siva japam

Written by London swaminathan

Research Article No.1549; dated 5th January 2015.

 

Sangam Tamil litearture has 18 books and one of them is Mullaippattu. It has one finite verb in the whole poem.

 

Nedunal vadai,one of the Ten Long Poems, has got one subject proper that too in the last line –181st line.

 

Kalingathu Parani is one of the famous books in the Parani (Barani) genre. if someone has to be the hero of a Parani poem, he must have killed at least one thousand elephants. The hero of the poem Kalingathu Parani is Karunakara Tondaiman. He led an army against Anantavarman, the King of Kalinga. It happened during the reign of Kulottunga Chola (1070-1120 CE). Jayamkondar was the court poet who composed this Kalingathu Parani.

 

Pallu is another type of composition in Tamil.  It describes the life of farmers and the status of agricultural community. Mukkudal Pallu is the most famous Pallu litearature. No one knows the name of the author. it was written in the later part of 17th century. The town Mukkudal is in Tirunelveli district of Tamil Nadu. the poet lists thirty varieties of paddy, twenty five kinds of bulls and 25 varieties of fish.

rg_hyd_201210_rice_kerala

Tamil is a ‘faceless’ and a ‘heartless’ language. Tamil hasn’t got any word for heart or face in its vocabulary. The words that are  used for face and heart (muham and irudhayam) are of Sanskrit language (Mukam, Hruthaya).

Lord Shiva was not mentioned by the word ‘Shiva’ anywhere in ancient Tamil books. Only devotional books of post Sangam literature use the word ‘Shiva’. But references like ‘ the one with blue throat’, the one with Bull flag, ‘the one who burnt the three forts’ are abound in ancient Tamil books.

 

Tamils consider ‘Tirukkural’ as their greatest book. It consists of 1330 couplets giving moral advice to everyone. The beauty of the book is anyone can follow it irrespective of one’s faith. If anyone wants to understand the meaning of the saying ‘Brevity is the soul of wit’ one must read this book. This is the Tamil book that is translated in more number of languages than any other Tamil work.

 

The strange thing about Tirukural is that the early Christian scholars who translated it into European languages refused to translate the third chapter because it talks about sex. Sex was a taboo for European scholars but not for Indians. Indians praise Vatsyayana, who wrote the oldest book on sex ‘Kama Sutra ‘ in Sanskrit, as a Rishi (sage).

elephant

Oldest Tamil inscriptions exist from third century BC and there are more than 80,000 inscriptions are in Tamil. A lot of research is awaited in to these historical treasure.

 

An epigraph with musical notes is in Arachalur near Erode in Tamilnadu. It is dated to 2nd century AD. Vannakkan Thevan Sathan is the author of this piece. Whatever way you read it, it will be same. The matter found in the epigraph is used in dance and music.

 

Tamils were the first to use white colour wigs in the court of justice. British judges and barristers follow this custom even today. Young Karikal Cholzan, the most famous Tamil king, wore this wig to satisfy two old men. The king did it to pretend like an old judge. Cankam poem :Porunar Atruppadai lines 187-188; also in Manimekalai and Pazamozi refer to this anecdote.

 

Tamil race is very old. The poet Kapila who lived around first century AD mentions in his poem that one of the Tamil kings is 49th king in his dynasty. It takes his ancestors to 1000 or 1500 BC. Irunkovel  is the king and this reference is found in poem 201 of Pura Nanuru.

 

Lord Shiva’s Poems!

Lord Shiva is considered  the first one to preside over the first Tamil Academy called ‘Sangam’. His poem is still there in one of the books. Kurunthokai poem No 1 (by Iraiyanar).

 

Lord Shiva was the first one to give a recommendation letter to a Tamil poet known as Bana Bhadran who went to see a king called Seraman Perumal Nayanar for funds. This poem is still available in Thiruvilaiyadal Puranam (Mathi mali purisai mada kudal——)

murugan1

Proof Reader Skanda

Lord Skanda (Murugan) worked as a proof reader for Kachiappa Sivacharyar who translated Skanda Purana from Sanskrit. He got the first poem from Lord Murugan himself. He composed 10,342 poems during a long period. Every night he used to put the poems he wrote for the day at the temple near the god. When he came the next day poems were corrected and kept ready at the same place. When he was ready to launch the book, scholars objected to the very first poem saying it was not according to the grammar book Tolkappiyam.

He was very upset and went home saying that he would come back the next day with proof. That night Lord Muruga appeared in his dream and told him not to worry and someone came next day to the assembly of poets and showed a proof from another Tamil grammar book called Veerasoziyam.

rice-varieties

20,000 Proverbs !

Tamil is so rich that 20,000 proverbs are listed in three books. The foreigners who came to preach Christianity compiled all of them and translated them in to English. One may not see that many proverbs in any other language in the world. Rev P .Percival published 6156 proverbs and Danish Missionary John Lazarus and Rev. Herman Jensen 9417 and 3644 proverbs respectively.

There is a Tamil book  called ,’Paza Mozi’ with 400 ethical poems each ending with one proverb. No where in the world we can find such a book.

One of the great four Saivaite poets known as Appar alias Thirunavukkarasar sang one pathikam (10 poems)  on Shiva with proverbs.

 

22,000 Devotional Poems !

22000 devotional poems were written, thousand years ago by a number of Saivaite  and 12 Vaishnavaite (Azvars) devotees.

 

Lord Shiva’s play ground was the famous city Madurai which has the architectural wonder of the world -Meenakshi Temple. Shiva’s 64 divine acts were listed in the book called ‘Thiruvilayadal Puranam.’ It was translated in to Sanskrit by a poet under the title ‘Siva Leelarnavam’.

contact swami_48”yahoo.com

 

சுழிகுளம் – 2

suzi 3

தமிழ் என்னும் விந்தை! -23

சுழிகுளம் – 2

by ச.நாகராஜன்

Post No 1548  Dated 5th January 2015

 

சுழி குளத்தை விளக்கும் விதமாக மாறனலங்காரம் தரும் சூத்திரம் இது:-

“தெழித்தெழு நீர்குளத் தினுட்செறிந் ததைக்கொடு   

             சுழித்தடங் குவபோன் றடங்குதல் சுழிகுளம்”

ஆரவாரித்து எழுகின்ற புனல் குளத்தினுள் தனது இடத்தை அடைந்தது யாதொன்று, அதனைக் கைக் கொண்டு சுற்றி உள்ளே அடங்குவது போலச் சுற்றிப் பாவினகத்துப் பொருளைக் கொண்டடங்குதல் சுழிகுளம் என்பது இதன் பொருள்

மாறனலங்காரம் தரும் உதாரணச் செய்யுள் இது:-

“சதிதகனடனாடீ                                            

திததிதிகாண்ஞானா                                            

ததிதாகார்கண்ட                                             

 கதிகாகிளர்கான

 

இதன் பொருள்:-

தாளவொத்துக்குப் பொருந்தக் கூத்தாட நின்றவனே! உண்மையான காவல் தொழிலை உனதாகக் கொண்டவனே! தயிரைத் தாகித்துண்ட கண்டத்தை உடையவனே! கிளர்ந்த கானத்தை உடையவனே! நீயே கதி, காப்பாயாக!

துறை – வஞ்சித்துறை

இதன் சித்திரத்தைக் கீழே  காணலாம்:

சுழிகுள வகையில் யாழ்ப்பாணக் கவிஞர் மயில்வாகனப் பிள்ளை, வஞ்சித் துறையில் இயற்றிய செய்யுள் இது:-

 

“தகுநகு லேசுரங்                                                 

 குலவிவ யச்சிர                                                     

 நவிறல முனாச்சு                                                      

 குவலயம் முயலே”

 

இதன் திரண்ட பொருள் : தகுந்த நகுலேச்சுரம் என்னும், விளங்கி வலிமை பொருந்திய பிரதான தலமாகச் சொல்லப்படும் தலத்தின் முன்னர் உலகம் உய்தல் ஆயிற்று.

இப்படி ஏராளமான செய்யுள்கள் சுழிகுள வகையில் தமிழ் இலக்கியத்தில் உண்டு.

***************

Snakes and Great Men!

pictures-of-king-cobra-snakes

The Wonder that is Tamil – Part 5

Research paper written by London Swaminathan

Research article No.1539; Dated 2 January 2015.

Tamil wisdom is rich and old. It is not different from what we find in Sanskrit literature; but the way the Tamils express their thoughts and views is different from Sanskrit. I give a rough translation of some of the beautiful poems in Tamil about great men.

Tamil poetess Avvaiyar says, “Broken clay pot is useless; broken gold pot is still useful!”

If a clay pot is broken you have to throw it into the bin. If a gold pot is broken, no one throws it into dustbin. They melt it and remake the pot. Great men are like gold pots. Even if something goes wrong with the great, they are still worthy of respect.

light house

Light House on top of the Hill!

If the bad people do many wrongs again and again, they are not going to earn any (new) bad name. But if great men commit even if one mistake it will be like a light house on top of the hill. Everybody will know it. Everyone will talk about it- – From Tamil book “Pazamozi Four Hundred”

Moon and Great men

Shining moon and great men are similar except one small difference. Moon can bear the spots (hare or deer) on it. But great men can’t bear such spots in their life! –  from Tamil book Naaladiyar.

The moon is bright and shining. Great men are also bright and shining.

The moon is cool. Great men are also full of mercy.

Moon has spots; great men have no spots. Their life is pure and immaculate; faultless and without moral blemishes.

Moon can bear the spots, but yet it wanes and waxes (out of regret). Scholars can’t bear it. Once there are black spots in their lives, they will sacrifice their lives.

Valluvar on Moon

“The faults in men of good families will show up conspicuously like dark spots

On the bright moon that traverses the sky” – Kural 957

“The shortcomings, if any, in the expected good behaviour of men, hailing from good old families, will be so rare and eye catching, that these will be prominently exposed to public gaze, like the dark spots on the surface of the bright moon that travels across the blue sky. It is known that persons of public status have no private lives of their own; every misdemeanour of theirs is highlighted as big failings before public”, says Dr S M Diaz in his commentary on this couplet.

moon

 

Kalidasa on Moon

It is interesting that the greatest of Indian classical poets Kalidasa, while describing the Himalayas, says

“Snow could not be a destroyer of beauty in the case of  him who is the source of  countless jewels; for, one blemish is lost in a host of  virtues, like the  spot on the moon (los) in her rays” – Kumarasambhava 1-3

Valluvar on yak

“Hair lost, the yak lives not. Honour lost, noble men leave their life” – Kural 969

The legendary yak is believed to give up its life, when it loses its hairs. Great men also will not live if they lose their honour.

Snake-5_1421019i

Snake and Great men

Three poets sang about great men and poisonous snakes

Even if poisonous snakes enter an assembly of scholars it will pass through them unscathed. They won’t hurt them, says a poem in Pazamozi Four Hundred. Even the Sangam Tamil Literature (Neithal kali, Kali Tokai) gave the same message.

Another poet ( of Tamil book “Aranerisaram” ) viewed the snakes differently. He says, look at this, If you give water to a cow it gives you milk; but if you give milk to a cobra, it produces poison! Likewise the books read by bad people are interpreted negatively. The same books read by the great people are interpreted positively”.

The best examples for this poem are our Vedas and the Epics. Foreigners who read these books interpreted them negatively. They are like snakes that convert milk into poison. The great Tamil kings Chera, Chola and Pandyas fostered Vedas and Vedic Yajnas for over 2000 years according to Sangam Tamil Literature. In the North, more Asvamedha Yajnas and Rajasuyas were done. Vedas are viewed positively in Kalidasa’s works and Sangam Tamil works. They are like cows that turns water into milk.

northern-water-snake

image of water snake

When Duryodhana and Yudhistra were asked to identify the worst person and the best person in the world, Yudhistra came back to Krishna and reported everyone was good. Duryodhana came back and told Krishna he could not see one good person in the whole wide world; all people were bad. So, if you ask foreigners to identify anything good in Hindu scriptures, they would act like Duryodhana.

Tamil poetess Avvaiyar in her book Vakkundaam compared water snake to good people and cobra to bad people. She says that the water snake is not poisonous and it lies openly on the banks of rivers and lakes. But the cobra is poisonous and so it hides in the holes. Good people don’t fear any one, bad people fear others and lead a secret life! They pretend to be good.

Tamil and Sanskrit poets are great lovers of nature. Like Dattatreya they learn and teach us using natural objects!

Please read my posts:-

The Connection between William Wordsworth and Dattatreya, — posted on 10th November 2011.

contact swami_48@yahoo.com

Tamil Book Launches in Temples! The Wonder that is Tamil- Part 4

Natraja_Temple

Chidambara Nataraja Temple

Research paper written by London Swaminathan

Research article No.1536; Dated  1 January 2015.

1.Tamil Humour!

A humorous picture of a crab’s encounter with a beetle is found in Natrinai ( A collection of 400 Tamil poems). A beetle wanted to taste a black naval fruit. A crab mistook it for a fruit. The crab thought that there two black fruits lying on the ground and grabbed the unfortunate beetle first leaving the real fruit. The poor beetle made a pitiable cry like the yaz/veena instrument and attracted the attention of a crane standing nearby. The crane rushed to its rescue and relived the beetle from the clutches of the crab (Natrinai verse 35).

2.Love and ‘’Naaval’’ fruit

 

Akananuru , part of Sangam literature, describes another scene. A male crab noticed a fruit falling down from a naval tree. It seized it with its claws, crushed it out of shape and carried it to its mate (Akam verse 380).

 

The crab on the sea coast is assigned its own place in the life of the lovers. When the hero seeks the favour of the lady-companion to approach his sweet heart, he notices a crab taking with its pincer like legs a naval fruit and offering it to its loving mate in the burrow among the screw pine roots. He then remarks that the creature is blessed and fortunate to be so loving. He makes this remark in the hearing of the lady-companion who later conveys it to the heroine and convinces of her of his sincerity in his love (Akam 380)-from The Treatment of Nature in Sangam Literature by Prof.M Varadarajan

avvaiyar_murugan

Avvaiyar — Murugan; pictre from murugan.org

3.Avvaiyar’s encounter with Lord Skanda

Jambu (Naaval in Tamil) is associated with Lord Ganesh and his brother Lord Skanda (Murugan) in Tamil Nadu. During Ganesh Chathurthi in August/September they buy it and offer it to Lord Ganesh. His brother Skanda/Murugan was teasing the grand old lady of Tamil literature —  poetess Avvaiyar by sitting on a jambu tree.

When Avvaiyar came under the tree and looking for ripe fruits, young Murugan (Skanda) sitting on the tree asked the old lady, Oh, Grand ma! Do you want burnt/hot fruits or not burnt fruits? Avvaiyar was puzzled by this question. She wondered whether fruits are cooked on the tree. When asked for explanation Murgan revealed himself and gave her the explanation. Burnt fruits are the one which you blow with your mouth to remove the sand sticking to the fallen fruits.

4.Kapila’s Achievement!

Kapila was the poet who made the highest contribution to Cankam corpus .His poems form nearly one tenth of the Cankam anthologies. He was praised by other poets as ‘A Brahmin of spotless character’. He was the Sangam poet who was praised by more than anyone else. Kapila composed over 235 poems.

Kapila, though a Brahmin, was the first to throw the caste barriers into wind and took a Tamil Chieftain’s (Paari Vallal) daughters to other kings for marriage alliance. But no Tamil chieftain came forward to marry them, fearing the enmity of the three powerful kingdoms. The three great Tamil Kingdoms Chera,Choza and Pandya were against Paari and eventually killed him. At last the daughters of Paari were put under the trust of Brahmins and Kapila entered fire (self immolated himself).

madurai-meenakshi-temple

Madurai Meenakshi temple

5.Auspicious Tamil Words

Tamil grammar says that the books should begin with an auspicious word (Mangala Sol) like the world, sun, Moon, letter ‘a’ etc. Famous poems begin with the world “ Ulakam” in Tamil ‘Lokam’ in Sanskrit. Tamil Tirukkural begins with ‘a’ like the Rig Veda!

6.One of the Four Famous Saivite poets is Manikkavasagar. His Tiruvasagam attracted even Christian preachers like Rev. G U Pope. He learnt Tamil just to study Tiruvasagam. He translated it in to English 100 years ago. But one poet by name Kadavul Mamunivar who wrote the life history of Manikka Vasagar (Tiruvatavurar Puranam) never mentioned Manikkavasagar’s name throughout his book, probably forgot. He simply calls him ‘a man from Vaathavur’ (Vaathavuurar). Vaathavur is the birth place of Manikkavasagar and it is 20 miles from Madurai in South India. We did not know the true name of Manikkavasagar as well.

7.Paranar’s Achievement

Nine similes in one poem: Aka nanuru poem 178 by Paranar has nine similes in just twelve lines. Scholars compared it to a bride loaded with jewellery from head to foot at the wedding time. Though a Vedic hymn has got 27 similes (Please read my post 27 Similes in one Vedic Hymn posted on 18 August 2012) Paranar did it in 12 lines!

srirangam ranga gopuram

Srirangam Temple

8.Tamil Book Launch

Tamils do the Arangetram (Book Launch Events) of their books mostly in temples:

a)Periya Puranam-  launched  at Chidambaram Temple

b)Kandha Puranam- launched  at Kumara Kottam,Kanchi

c)Kamba Ramayanam- launched  at Srirangam Temple

d)Thiruvilaiyadal Puranam- launched  at Madurai Meenakshi Temple

  1. e) Tirukkural – launched at Madurai Meenakshi temple

f)Meenakshi Pillai Thamiz- launched  at Madurai Meenakshi Temple

g)Narayaneeyam- launched  at Guruvayur Temple (Book is in Sanskrit)

h)Tolkappaiam, oldest Tamil book, was launched in the court of king Nilantharu Thiruvil Pandyan, presided over by a Brahmin well versed in the four Vedas.

(Palm leaf manuscripts of the great Thevaram poems were found in Chidambaram Temple. Annamacharya’s copper plates were found in Tirupati temple).

Contact–  swami_48@yahoo.com