கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள்!

RNG
Sri Ramnath Goenka

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1276; தேதி: 9 செப்டம்பர் 2014

((கட்டுரையாளர் மதுரை தினமணி நாளேட்டில் 16 ஆண்டுக்காலம் சீனியர் சப் எடிட்டராகப் பணியாற்றியவர். லண்டன் பி.பி.சி. தமிழோசையில் (BBC WORLD SERVICE, BUSH HOUSE, LONDON) ஐந்து ஆண்டுக் காலம் நிகழ்ச்சி தயாரிப்பாளராகப் (ப்ரொட்யூசர்-PRODUCER) பணியாற்றியவர். அவருடைய தந்தை வெ. சந்தானம், மதுரை தினமணிப் பொறுப்பாசிரியராக News Editor நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர்)).

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி நேற்று “என் அப்பாவிடம் கற்றது” என்ற தலைப்பில் வெளியாகி இருக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் (INDIAN EXPRESS) பத்திரிக்கை சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த திரு ராம்நாத் கோயங்காவின் (RNG= Ramnath Goenka) வரலாறு மிக அற்புதமான வரலாறு. இந்தியாவில் அவரைக் கண்டால் இரண்டு பேருக்கு சிம்ம சொப்பனம். திருமதி இந்திரா காந்திக்கும், கம்யூனிஸ்டு களுக்கும் அவரைக் கண்டால் பிடிக்காது. கீரியும் பாம்பும்– எலியும் பூனையும்— வட துருவமும் தென் துருவமும் — என்றால் மிகப் பொருத்தமாக இருக்கும். மதுரையில் எங்கள் வடக்கு மாசிவீதி வழியாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சி ஊர்வலங்கள் போகும். “டாட்டா, பிர்லா, கோயங்கா! டவுன், டவுன், டவுன்! Tata, Birla, Goenka! Down, Down, Down! (ஒழிக)! “இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி வாழ்க) என்று வானம் அதிரக் கோஷமிட்டவாறு செல்வர். அந்த அளவுக்கு கம்யூனிஸ்டுகள் மனதில் “நீங்கா இடம் பெற்றவர்” கோயங்கா.

நாங்களும் கம்யூனிஸ்ட்களை லேஸில் விடமாட்டோம். ஒரு முறை மதுரையில் அகில இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு நடந்தது. அன்று மீனாட்சி கோவில் முழுதும் ஒரே சிவப்புத் துண்டு! சிவப்பு வர்ணம்!! மறு நாளைக்கு தினமணியிலும், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிலும் கொட்டை எழுத்துக்களில் பெட்டிச் செய்தி போட்டு கம்யூனிஸ்டுகளைக் கிண்டல் செய்தோம்.. மதமும் கம்யூனிஸ்டும் இரு துருவங்கள் என்பது கம்யூனிஸ்ட் கொள்கை. “சமயம் என்பது அபினி” (Religion is Opium) என்று கூறியவர் கார்ல் மார்க்ஸ்! நிற்க.

கோயங்கா பற்றி அவருடன் நெருங்கிப் பழகிய எனது தந்தை வெங்கட்ராமன் சந்தானம் கூறியது:
வட நாட்டு மார்வாரியான கோயங்கா, தமிழ்நாட்டுக்கு வந்து சென்னை மவுண்ட் ரோடில் ஒருகாலத்தில் துணி விற்றவர். அவர் காயத்ரி மந்திரம் ஜபித்து வாழ்க்கையில் முன்னேறியவர். அதி பயங்கர அளவில் ஜபம் செய்வாராம். யாராவது குறுக்கிட்டால் மிகவும் கோபம் வருமாம். இதை என் தந்தை நேரில் பார்த்து இருக்கிறார். கடற்கரையில் காயத்ரீ ஜபம் செய்வார் என்று சொன்னதாக எனக்கு ஞாபகம்.

எமர்ஜென்ஸி (Emergency) நேரத்தில் மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று கிண்டல் செய்யப்பட்ட “த ஹிந்து” The Hindu நாளேடு தன் மார்க்சிஸ்ட் கொள்கையைக் கூடக் காற்றில் பறக்கவிட்டு பிராவ்டா (ரஷ்ய கம்யூனிஸ்ட் நாளேடு PRAVDA) பத்திகையாக மாறியது. அந்தக் காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அதன் மொழி நாளேடுகளான தினமணி, ஆந்திரப் ப்ரபா, கன்னடப் ப்ரபா, லோக சத்தா, ஜனசத்தா முதலிய நாளேடுகள் மட்டும் இந்திரா அரசையும் எமர்ஜென்ஸியையும் எதிர்த்து எழுதின. தினமலர் நாளேடோ சஞ்சய் காந்தியை கிருஷ்ணாவதாரம் என்று எழுதி அசிங்கமான பெயர் எடுத்தது! ஆர்.எஸ்.எஸ்.காரகளுக்கு செமை கோபம்!

பெரிய பணக்காரகளுக்கு பொருளாதார கைச் சுத்தம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ஆயினும் தேச பக்தியில் கோயங்கா அப்பழுக்கற்றவர். அந்த ‘ஸ்பிரிட்”Spirit தான் அவரை அவசரகால பிரகடனத்திலும் அஞ்சா நெஞ்சனாக்கியது. எமர்ஜென்ஸி இருந்த 20 மாத காலமும் எங்களுக்கு தினமும் தொல்லைதான். சென்சார் அதிகாரிகள், எனது தந்தையை நள்ளிரவுக்குப் பின் இரண்டு மணிக்கு டெலிபோனில் கூப்பிட்டு “இந்தச் செய்தியைப் போடாதீர்கள், அந்தச் செய்தியை முதல் பக்கத்தில் இருந்து நீக்குங்கள்” — என்றெல்லாம் இன்ட்ஸ்ரக்ஷன் Instruction கொடுப்பார்கள். அதாவது எங்கள் பத்திரிக்கை, மறு நாள் காலையில் கொள்ளிடம் கடற்கரை வரை போக காலை பத்து மணி ஆகிவிடும். இதனால் மிகவும் சர்குலேஷன் டவுன் (Circulation was down) ஆயிற்று. இதே தொல்லை சென்னையில் தினமணி ஆசிரியர் ஏ. என். சிவராமனுக்கும் இருந்தது.

ஏ.என். சிவராமன், தினமணி (எடிட்டோரியல்) தலையங்கத்தை எவ்வளவுதான் அடக்கி வாசித்தாலும் தினமும் அதைக் காரணம் காட்டி தினமணியைப் பழித்து வந்தனர் சென்சார் (Press Censor Officer) அதிகாரிகள். உடனே ஏ.என். சிவராமன், கோயங்காவைக் கூப்பிட்டு என்னால்தானே உனக்கு இந்தத் தொல்லை. நான் ராஜினாமா செய்கிறேன் என்றார்.

அதற்கு கோயங்கா “இf அட் ஆல் வீ ஹேவ் டு சிங்க், லெட் அஸ் சிங்க் டுகெதெர்” IF AT ALL WE HAVE TO SINK, LET US SINK TOGETHER என்று சொல்லிவிட்டார். நமது கப்பல் மூழ்கத்தான் வேண்டும் என்றால் மூழ்கட்டும். நாம் எல்லோரும் சேர்ந்து ஜல சமாதி அடைவோம் என்று சொல்லிவிட்டார். அந்த அளவுக்குக் கொள்கைப் பற்றுடையவர்!!

நாட்டில் உள்ள புகழ்பெற்ற பத்திரிக்கை எல்லாம் எமர்ஜென்சிக்கு ஜால்ரா அடித்த காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப் மட்டும் எதிர்த்து நின்றது நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டும். அவ்வப்போது என் தந்தை, ஏ.என்.சிவராமன், கோயங்கா ஆகியோர் ரகசிய விஷயங்களைப் பரிமாறிக்கொள்வர். அவைகள் வீட்டுக்கும் கொண்டு வரப்படுவதால் நானும் படிப்பேன். அவசர நிலைப் பிரகடன காலத்தில் கோயங்கா நிறுவனங்கள் மீது இந்திரா அரசு போட்ட வழக்குகளின் எண்ணிக்கை இரு நூறு 200 !!!

ராம்நாத் கோயங்கா மதுரைக்கு வரும்போதெல்லாம், மீனாட்சி கோவிலுக்குப் போகையில் “சந்தானம் வா” என்று சொல்லி என் தந்தையை மட்டும் அழைத்துச் சென்றுவிடுவார். அவர் சாமி கும்பிடும் போது யாரும் பக்கத்தில் வரக்கூடாது என்பது என் தந்தை ஒருவருக்குத் தான் தெரியும். புது கரன்ஸி நோட்டுகளுடன் அவருடன் ஒரு சில செயலாளர்களும் வருவர். அதை என் தந்தையின் கையில் கொடுத்து விடுவார்கள். அவர், கோவில் பட்டர் முதல் சேவகர் வரை எல்லோருக்கும் வாரி வழங்கி விடுவார்.

book on RNG

கன்னத்தில் விழுந்த அறை!
ஒரு முறை கோயங்காவை காக்கா பிடிக்க (கால் கை = காக்கா) விரும்பிய ஒரு அதிகாரி, “சார், நாளக்கு Boss பாஸ்-ஐ நான் கோவிலுக்குப் கூட்டிப் போகிறேன் என்றார். என் தந்தைக்கும் ஒரு வேலை மிச்சம் என்று மகிழ்ச்சி! அவரும் சொன்னபடியே போனார். ஆனால் கோயங்கா சாமி கும்பிடும்போது யாரும் குறுக்கிடக் கூடாது, பேசக்கூடாது என்று அவருக்குத் தெரியாது. அவரிடம் நல்ல பெயர் வாங்கும் ஆசையுடன் Boss பாஸ் – இடம் ஏதோ சொல்லப் போயிருக்கிறார். கோயங்கா அவர்கள், அந்த பெரிய அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அவருக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது.

மறு நாளைக்கு என் தந்தையைக் காரில் அழைத்துச் செல்ல அந்த அதிகாரி வந்தபோது கொஞ்சமும் வெட்கப்பாடாமல் நடந்த விஷயத்தை என் தந்தையிடம் சொன்னார். அவருக்கு அவ்வளவு மனக் குமுறல். யாரிடமும் சொல்லாவிட்டால் மண்டை வெடித்துவிடும் போல இருந்தது. என் தந்தை வழக்கம் போல புன் சிரிப்புடன், “அடடே, உன்னிடம் சொல்ல மறந்து விட்டேன். அவர் சாமி கும்பிடும் போது யாரும் பேசக்கூடாது” என்றார். Too Late Advice!! டூ லேட் உபதேசம்!!

எங்கள் மதுரை தினமணி அலுவலத்தில் ஒரு நீண்ட ஹால் உண்டு. அதை மூன்றாகப் பிரித்து இடையில் டெலிபிரின் டர் Teleprinter அறையும் ஒரு புறம் இந்தியன் எக்ஸ்பிரஸ், மறு புறம் தினமணிக்கு என்று ஒதுக்கி இருந்தனர். டெலிபிரிண்டரில் Reuters ராய்ட்டர், பி.டி.ஐ (Press Trust of India), யு.என்.ஐ (United News of India) , யுபி.ஐ (United Press International), மற்றும் எங்கள் கரஸ்பண்டன் ட்களிடமிருந்து (FOC= From Our Own Correspondent) 24 மணி நேரமும் செய்தி வந்த வண்ணம் இருக்கும்.

thirupparangkunRam_a
Thirupparankundram Temple with a powerful Durga

மூன்று சக்திவாய்ந்த தெய்வங்கள் !!

திடீரென கோயங்காவிடம் இருந்து என் தந்தைக்கு கான்பிடென்சியல் மெசேஜ் Confidential Messageகள் வரும் . சந்தானம் 40 நாட்களுக்கு திருநள்ளாறு, திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி கோவில்களில் அர்ச்சனை துவங்குங்கள் என்று. கோயங்கா வேறு எந்தக் கோவிலிலும் அர்ச்சனை செய்வாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் திருப்பறங் குன்றம் துர்க்கை, திருநள்ளாறு சனீஸ்வரன் (சனைச் சரன்= மந்த கதியில் செல்லும் கிரகம்), மதுரை மீனாட்சி ஆகிய மூன்று மிக மிக சக்தி வாய்ந்த தெய்வங்களை அவர் வாழ்நாள் முழுதும் பிடித்துக் கொண்டார். உடனே எனது தந்தை மாயவரம், தஞ்சாவூர் நிருபர் மூலம், திருநள்ளாறு அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்வார். திருப்பறங்குன்றம் துர்க்கை, மதுரை மீனாட்சி கோவில் அர்ச்சனைகளை மட்டும் எங்கள் மேற்பார்வையில் செய்வோம் 40-ஆவது நாள் அர்ச்சனை முடியும்போது அவரது குடும்பத்தினர் யாரவது ஒருவரை கோயங்கா அனுப்பிவைப்பார். அவர் பெரிய தங்கச் சங்கிலி அல்லது தூக்க முடியாத கனம் உடைய வெள்ளி வாளியுடன் வந்து என் தந்தையிடம் கொடுப்பார். அதை அர்ச்சனை செய்த தலைமை பட்டரிடம் அவரைக்கொண்டே கொடுக்கச் செய்வார் என் தந்தை.

சில நேரங்களில் இவற்றை மதுரை மீனாட்சி கோவில் தலைமை ஸ்தானீகர் ம.க.சுந்தரேச பட்டர், எங்களிடம் பெருமையாகக் காட்டுவார். நானும் என் சகோதரர்களும் அந்த வெள்ளி வாளி, தேர்வடம் போன்ற தங்கச் சங்கிலிகளைத் தூக்கியும், தொட்டும் மகிழ்வோம்.

அந்தக் காலத்தில் மீனாட்சி கோவில் நகைகளைப் பார்க்க, 500 ரூபாய் கட்டினால் போதும் கோயங்கா குடும்பத்தினர் யார் வந்தாலும் கோடிக்கணகான ரூபாய் விலை மதிப்புடைய நகைகளையும் தரிசனம் செய்ய என் தந்தை ஏற்பாடு செய்வார்.

(இதற்குப் பின், திராவிடக் கட்சிகளின் சில மஹா பாவிகள் கையில் கோவில் நகைகள் சிக்கவே, பின்னால் வந்த ஜெயலலிதா அரசு —ஒத்தக்கூட்டன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்— என்ற கதையாக மூன்று பூட்டுப் போட்டு, கோவில் நகைகளைப் பூட்டிவைத்துவிட்டார். இப்போது அவைகளைப் பார்ப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது!

கோயங்கா தனது காலம் முடியும் வரை அஜாதசத்ருவாக (வெல்ல முடியாதவன்) விளங்கினார். அவர் இறந்த (1991) போது லண்டனில் பி,பி.சி.யில் வேலை பார்த்துவந்தேன் — எனது மேலதிகாரிகள் ஆங்கிலேயர்கள் —- சில நாட்களுக்குப் பின்னர் அவர்களிடம் லண்டன் டைம்ஸ் The Times, London பத்திரிகையில் கோயங்கா பற்றி அப்பத்திரிக்கை எழுதிய பெரிய இரங்கல் (Obituary) கட்டுரையைக் காட்டினேன். கோயங்கா இறந்த அன்று நீ ஏன் பி பி. சியில் அதை அறிவிக்கவில்லை என்று கோபித்துக் கொண்டார். அவருக்கு பி.பி.சி.அளவுக்குப் புகழ் உண்டு என்று தெரியாமல் போனது. அந்தச் செய்தியை பி.பி.சி..யில் சொல்லாமல் விட்டதில் எனக்கும் வருத்தம்தான்.

எனக்கு கோயங்கா மீது கொஞ்சம் கோபம் (He is the Himalayas, I am a mosquitoe!) உண்டு. அவரோ இமய மலை, நானோ கொசு! இருந்தபோதிலும் கொசுவுக்கும் காதுக்கு அருகில் ரீங்கரம் செய்யும் உரிமை உண்டல்லவோ! பி.பி.சி.காரர்கள் சென்னைக்கு வந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க நாலைந்து பரீட்சை நடத்தியதில் நான் முதலாவதாக நின்றதால் பி.பி.சி. என்னை லண்டனுக்கு அழைத்தது. அவர்கள் முதலில், ஆறு மாதத்துக்கே என்னை அழைத்து இருந்ததால் நான் தினமணியில் அன்பெய்டு லீவு Unpaid Leave தான் கேட்டிருந்தேன். இரண்டு முறை கோரிக்கை அனுப்பியும் அதை அவரோ அவரது பரிவார தேவதைகளோ கண்டுகொள்ளவே இல்லை.

லண்டன் பி.பி.சியில் இருந்து இந்தி-தமிழ் துறைகளுக்குத் தலைவரான கைலாஷ் புத்வார் Kailash Budhwar எனக்கு அடிக்கடி போன் செய்து ஏன் தாமதமாகிறது? எப்போது லண்டனுக்கு வருவீர்கள்? என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அப்போது அவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னவுடன் அவரே டில்லியில் உள்ள பி.பி.சி. நிருபர் மார்க் டல்லி, சுபாஷ் சக்ரவர்த்தி (Mark Tully and Subash Chakravarthy) ஆகியோருக்குப் போன் செய்தவுடன் கோயங்கா அலுவலகம், “சுவாமிநாதன் இடமிருந்து எங்களுக்கு எந்த கோரிக்கை மனுவுமே வரவில்லை” — என்று தடலடியாக அடித்து (பொய்) விட்டனர். உடனே நான் ஒரு கடிதம் டெலிப்ரின் டர் மூலம் அனுப்பவே மறுநாளைக்கே எனக்கு விடை கொடுத்து அனுப்பினர்! இதுதான் எனது பொருளற்ற கோபத்துக்குக் காரணம்!

எமர்ஜென்ஸி காலத்தில் இந்தியா முழுதும் ஒரு பயம் நிலவியது. எமர்ஜென்ஸி நீங்கிய மறு நாளைக்கே இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப் நிறுவன நாளேடுகள் இந்திராவை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தின. அதுவரை தொடை நடுங்கிகளாக இருந்த பத்திரிக்கைகளின் சர்குலேஷன் மறு நாளே இமய மலை போலச் சரிந்தது. அதற்குப் பின்னர் அவை எல்லாம் எமர்ஜென்ஸி கால அக்கிரமங்களை எதிர்த்து எழுதின. தேர்தலில் இந்திரா காந்தியும் படுதோல்வி அடைந்தார்.

கோயங்காவைப் பார்க்க எனக்கும் ஆசை. ஒருமுறை மதுரை தினமணி அலுவலத்துக்கு வந்தவுடன் ஒரே பரபரப்பு! எங்கள் பகுதிக்கும் வருவார் என்று எண்ணி வேலையில் மும்முரமாக இருப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தோம்!!! டெலிப்ரிண்டர் பகுதிக்கு அந்தப் புறம் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் பகுதிக்கு மட்டும் வந்துவிட்டு ‘ஹலோ’ சொல்லிவிட்டுப் போய்விட்டார். நாங்கள் எல்லோரும் டெலிபிரின் டர் பகுதி கண்ணாடி வழியாக அரைகுறையாக (திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பது போல) தரிசித்தோம். 16 ஆண்டுகள் தினமணியில் வேலை பார்த்தும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!

கருத்து சுதந்திரத்தின், பத்திரிக்கைச் சுதந்திரத்தின் பாதுகாவலராக விளங்கியவர் ராம்நாத் கோயங்கா (ஆர்.என்.ஜி) அவர்கள் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை!

வாழ்க ஆர்.என்.ஜி! வாழ்க பத்திரிக்கை சுதந்திரம்!!
Long Live Press Freedom! Long Live R.N.G!!

சுமேரியா, எகிப்துக்கு இந்தியாவின் நீலக்கல் ஏற்றுமதி!

lapis block
Lapis lazuli in rock formation.

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1272; தேதி: 7 செப்டம்பர் 2014

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் இந்தியப் பெருநிலப்பரப்பில் இருந்து லபிஸ் லசூலி (Lapis Lazuli) என்னும் நீலக்கல் உலகின் பழம்பெரும் நாகரீகங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதை சுமேரிய, எகிப்திய நாகரீக தொல்பொருட் தடயங்கள் மூலம் ஐயம் திரிபற அறிகிறோம்.

ஒருகாலத்தில் இந்துக்களின் ஆட்சி பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், அதற்கும் அப்பால் உள்ள இராக், ஈரான், துருக்கி, சிரியா வரை பரவி இருந்தது. இதற்கு மறுக்க முடியாத தொல்பொருட் சான்றுகள் இருப்பதால் எல்லா தேச அறிஞர்களும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இதில் ஒரு வரி கூட வெள்ளைக்காரன் எழுதிய பாடப் புத்தகத்தில் கிடையாது. இது அவன் பிழை அன்று. அதை இன்று வரை படித்துக் கொண்டிருக்கும் முட்டாள்களாகிய நம்முடைய பிழையே.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் கூட 1936-ஆம் ஆண்டு சென்னைப் பிரசங்கத்தில் சொன்ன பொகஸ்கோய் Bogazkoy (துருக்கி) கல்வெட்டோ, போர்னியோவின் (இந்தோநேசியா) அதிபயங்கர காட்டிற்குள் கண்டு பிடிக்கப்பட்ட மூலவர்மனின் (Mulavarman Inscription in Borneo) கல்வெட்டோ இன்றுவரை நமது பாடப் புத்தகத்தில் இல்லாதது இந்துக்களின் தலைவிதி! இந்தியாவின் துரதிருஷ்டம்.

இராக் நாட்டில் ‘ஊர்’ (Ur) என்னும் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரசர் கல்லறைகளில் நீலக்கல் (லபிஸ் லசூலி) நகைகள் உள்ளன. இது கி.மு.2500ஆம் ஆண்டைச் சேர்ந்தது.

goddess hathor
Egyptian Goddess Hathor

எகிப்து நாட்டில் லபிஸ் லசூலி இல்லாத இடமோ நகைகளோ இல்லை. அவர்களுக்கு நீல நிறத்தில் அவ்வளவு ஆசை. உயர்ந்தவகை நீலம் (சFபைர் Saphire) அரிதாகவே கிடைக்கும்; விலையும் உயர்வு. ஆகையால அவர்கள் ஆப்கனிஸ்தான் (படக்சான் Badaksan), பாகிஸ்தான் ( Quetta குவெட்டா) ஆகிய இடங்களில் வெட்டி எடுத்து சுமேரியா வழியாக வந்த நீலக் கல்லைப் பயன்படுத்தினர். எகிப்தில் பெரும்பாலும் இவை மெசபொடோமியா பொருட்களுடனே கிடைக்கிறது. லபிஸ் லசூலி என்றால் நீலக் கல் என்று பொருள். இதை வெட்டி எடுப்போர் இன்றும் நீலி (நீலம்), அஸ்மானி (வானம்), சுவ்சி என்ற வடமொழித் தொடர்புடைய சொற் களையே பயன்படுத்துவது குறிப்பிடற்பாலது

இப்போது ஆப்கனிஸ்தான, பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் நாடுகள் எல்லாம் இஸ்லாம் என்னும் மதம் தோன்றுவதற்கு முன் இந்து பூமியாக இருந்தன. ஆப்கனிஸ்தானில் உள்ள காண்டஹார் (Kandahar) நகரம் காந்தாரம் என்னும் சொல்லின் மருவு ஆகும். அங்கிருந்து வந்த காந்தாரியைத்தான் மஹாபராதப் புகழ் திருதராஷ்ட்ரன் கல்யாணம் கட்டினான். ஈரான் ஆப்கன் எல்லையில் உள்ள கேகய நாட்டின் பேரழகி கைகேயியைத் தான் தசரத மாமன்னன் மணம் புரிந்தான். அவள் வீராதி, வீரி, சூராதி சூரி!! தேர் ஓட்டுவதில் நிபுணி. ஒரு போரில் அசுரர்களை வெல்ல அவள் உதவியதே இரண்டு வரங்களுக்குக் காரணம் ஆகி ராமனைக் காட்டுக்கு அனுப்பி வைத்தன.

தசரதன் இறந்தவுடன் பரதனுக்கு விஷயத்தைச் சொல்லாமல் அவனை அழைத்த வந்தனர். அவன் தேரில் சிட்டாகப் பறந்துவந்த மார்க்கத்தை வால்மீகி வருணித்துள்ளான. இதன் மூலம் ராமாயாண கால ‘ரோட் ட்ரான்ஸ்போர்ட்’ (சாலைப் போக்குவரத்து), ஈரான் எல்லை முதல் உத்தரப் பிரதேச அயோத்தி வரை எவ்வளவு சீராக இருந்தது என்பதை அறிய முடிகிறது!!

1450 bce

இந்த காந்தார நிலப்பரப்புக்கு அருகில்தான் லாபிஸ் லசூலி வெட்டி எடுக்கப்பட்டது. பிற்காலத்தில் பாகிஸ்தான் குவெட்டா பகுதியிலும் கண்டு பிடிக்கப்பட்டது. அதில் ஒரு சில பகுதிகள் சிந்து சமவெளி நாகரீகப் பகுதிக்குள் இருந்தவை. சுமேரில் கிடைத்த ஒரு நீலக்கல் முத்திரையில் சிந்து சமவெளிக் காளையின் படமும் உளது.

இப்போது முஸ்லீம்களின் ஆட்சிக்குள் வந்துவிட்ட சிரியா-துருக்கி பிரதேசங்களில் வேத கால நாகரீகம் கி.மு 1480-ல் கொடிகட்டிப் பறந்தது. துருக்கி நாட்டின் தலை நகரமான அங்காரவில் இருந்து 130 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பொகாஸ்கோய் என்னும் இடத்தில் களிமண் பலகைக் கல்வெட்டுகளின் இந்திரன், மித்திரன், வருணன், அக்னி ஆகிய நான்கு வேத கால தெய்வங்களின் பெயரில் சத்தியம் செய்து சமாதான உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளனர். நான் இன்றும் லண்டனில் தினமும் செய்யும் சந்தியாவந்தனத்தில் இந்த நாலு தெய்வங்களையும் வணங்கும் மந்திரம் வருகிறது. இதை எழுதும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. 4000 ஆண்டுகளாக ஒரு மந்திரம் ஆசியா கண்டம் முதல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மற்ற நாட்டுக கடவுளர் எல்லாம் மியூசியத்துக்குள் கண்ணாடிப் பெட்டிக்குள் பூட்டப்பட்டு விட்டனர்.

NearEastSealFromBadakshanLapisSeal
Sumer Sear with Indus Valley Bull

இந்த ஒரு தடயம் மட்டும் இருந்திருந்தால் வெள்ளைக்காரன் மூடி மறைத்து புதிய வியாக்கியானம் கொடுத்திருப்பான். மிட்டனியை (Mitanni) ஆண்ட மன்னர்களின் பெயர் எல்லாம் சம்ஸ்கிருதப் பெயர்கள்!! தசரதன், பிரதர்தனன் (விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் பெயர்) முதலிய பெயர்கள். அவன் ராஜ்யத்தைல் இருந்து குதிரைப் பயிற்சிக்கு அனுப்பிய கிக்குலி Kikkuli என்பவன் ஒரு அஸ்வசாஸ்திர நூல் Horse Training Manual எழுதி இருக்கிறான. அதில், ஏகம், த்வீதியம், த்ருதீயம் முதலிய சம்ஸ்கிருத எண்கள் உள. அதுமட்டுமல்ல. அந்த தசரதன் எழுதிய கடிதங்கள் எல்லாம் எகிப்து நாட்டில் ‘’அமர்னா லெட்டர்ஸ்’’ Amarna Letters என்ற பெயரில் களிமண் பலகைகளில் சேர்த்துவைக்கப் பட்டுள்ளன. அதில் தசரதன் ஒரே புலம்பல்! படிக்கும்போது வேடிக்கையாக இருக்கும். அவன் பெண்ணை எகிப்து மன்னன் மூன்றாம் அமனோபிஸ் (Amenophis III மன்னனுக்கு மணம் முடித்தான். அவள் பெயர் ததுகிபா (Taduhepa). அதற்குப்பின் ‘’அன்புள்ள மாப்பிள்ளையே உனக்கு ஐந்து தேர்கள், ஐந்து குதிரைகள், என் பெண்ணுக்கு தங்க மோதிரம், கொஞ்சம் தங்கம், நிறைய ரத்தினக் கற்கள் அனுப்[பியுள்ளேன். பெற்றுக்கொள்க’’. என்கிறான். இதற்குப் பின் எழுதிய கடிதங்களில் ‘’ஏன் பதிலே போடவில்லை, நான் அனுப்பியது எல்லாம் என்ன ஆயிற்று?’’ — என்றெல்லாம் புலம்பி இருக்கிறான்.

கி.மு 1340ஆம் ஆண்டில், இன்றைக்கு 3340 ஆண்டுகளுக்கு முன், தசரதனைப் (Tushretta) படுகொலை செய்து விடுகின்றனர். எகிப்திய மன்னனும் காலமாகி விடுகிறான். தசரதன் பெண் தது கிபாவை (தத்த சிவா) அமனோபிஸ் இறந்தவுடன் அவன் மகன் திருமணம் செய்துகொள்கிறான். எகிப்தியர்கள் தங்கையையே கல்யாணம் செய்கையில் சின்னம்மா எம்மாத்திரம்!!

silkroads2000BCE

இந்த தசரதன் ராமாயண தசரதன் அல்ல. இவன் வேறு. ஆக கி.மு.1400 ஆண்டை ஒட்டி கங்கை நதி முதல் ஈரான் வரை நம்மவர்கள் ஆண்டுவந்தனர். இப்போது எல்லாம் மாற்று மதத்தினரின் கைக்குள் போய்விட்டதால் இந்த ஆராய்ச்சி எல்லாம் ஆமை வேகத்தில், நத்தை வேகத்தில் நடைபெறுகிறது. சிரியா (சூர்ய), இரான் (ஆர்ய), பாக்தாத் (பகவான் தத்), துருக்கி (துரக / குதிரை ஸ்தானம்) என்பதெல்லாம் அறிஞர்கள் கண்ட உண்மை. ஆனால் இன்றுவரை எல்லா நாடுகளிலும் ‘’ஸ்தானம்’’ என்ற சம்ஸ்கிருதச் சொல் மட்டும் அழியா இடம் பெற்றுவிட்டது. ஜனஸ்தானம் (மக்கள் இருப்பிடம்) என்பது இப்படிச் சுருங்கிச் சுக்காய்ப் போய்விட்டது!!

வேத கால முனிவர்களுக்கு நூற்றுக் கணக்கான ஒட்டகங்கள் பரிசளிக்கப்பட்டதை உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதம் பகரும். இது காணப்படும் ரிக் வேத (Eighth Mandala) எட்டாம் மண்டலம் மிகவும் மர்மம் நிறைந்த மண்டலம். பலரும் இது ஈரானிய நிலப்பரப்பைச் சேர்ந்ததோ என்றும் ஐயம் கொள்வர். இது பற்றி தனியாக எழுதுகிறேன். ரிக் வேதத்தில் 99,000 வண்டிகள், 99000 வண்டிச் சரக்குகள் பற்றி எல்லாம் பாடி இருக்கின்றனர். இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கையில் நம்மவர்கள் இராக் ( சுமேர், பாபிலோனிய, மெசபொடோமிய பூமி) மற்றும் ஈரான் வரை செல்வதெல்லாம் நம்பக் கூடியதே என்று காட்டும். இதற்கு லபிஸ் லசூலி கற்களும் அவைகளாலான நகைகளும், சிலைகளும் அழியாத சான்றுகளாக நீடிக்கின்றன.
lapis_lazuli_map

INDUS VALLEY CIVILIZATION என்னுடைய முந்தைய கட்டுரைகள்:
சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை (15/10/12)
‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.

caravanseraiEVCAU
Trade Routes of ancient world.

சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! March 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14
சிந்து சமவெளி பிராமணர் தொடர்பு ((Post No 1033, Date 10-5-14)
சிந்து சமவெளியில் இந்திரன்- செப்.6, 2014.

contact swami_48@yahoo.com

பாம்பன் சுவாமிகள் சதுரங்க பந்தம்

Sreemath pamban pocket

தமிழ் என்னும் விந்தை! சதுரங்க பந்தம் – 6

பாம்பன் சுவாமிகள் சதுரங்க பந்தம்
By ச.நாகராஜன்
Post No 1271; Dated 7th September 2014.

பாம்பன் சுவாமிகள் அருளிய அற்புதமான மந்திரப் பாடல் ஒன்று சதுரங்க பந்தப் பாடலாக மலர்ந்துள்ளது.

வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா
வேளா மயிலோய் விமலர்கண் வந்த சமாதியர்கோ
வாளா யெனுநாவுள் ளார்நா ரருந் தெங்க ளாரியற்கே
யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே

இந்தப் பாடலில் முதல் அடியில் 18 எழுத்துக்களும் இரண்டாம் அடியில் 21 எழுத்துக்களும் மூன்றாம் அடியில் 21 எழுத்துக்களும் நான்காம் அடியில் 18 எழுத்துக்களும் ஆக மொத்தம் 78 எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்

சென்ற இரு அத்தியாயங்களில் மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பாடிய பாடல்களுக்காகக் கொடுக்கப்பட்ட துருவக் குறிப்பு மீண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துருவக் குறிப்பு
{ 1-64 – 2+62 — 3+50 – 4+44 – 5+36 -– 6+26 .— 7+22 –
15+78 – 17+77 – 29+76 – 35+75 – 43+74 — 53×73 – 57+72}
மொத்த எழுத்துக்கள் 78.

இந்த இலக்கணம் தவறாமல் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடலும் இருப்பதைக் காணலாம்.

Bandham 6

பாடலில் ஒன்றாம் எழுத்தும் 64ஆம் எழுத்தும் வா
இரண்டாம் எழுத்தும் 62ஆம் எழுத்தும் ளா
மூன்றாம் எழுத்தும் 50ஆம் எழுத்தும் ர
நான்காம் எழுத்தும் 44ஆம் எழுத்தும் நா
ஐந்தாம் எழுத்தும் 36ஆம் எழுத்தும் தி
ஆறாம் எழுத்தும் 26ஆம் எழுத்தும் ம
ஏழாம் எழுத்தும் 22ஆம் எழுத்தும் யி
பதினைந்தாம் எழுத்தும் 78ஆம் எழுத்தும் மே
பதினேழாம் எழுத்தும் 77ஆம் எழுத்தும் ம
இருபத்திஒன்பதாம் எழுத்தும் 76ஆம் எழுத்தும் க
முப்பத்தி ஐந்தாம் எழுத்தும் 75ஆம் எழுத்தும் மா
நாற்பத்தி மூன்றாம் எழுத்தும் 74ஆம் எழுத்தும் னு
ஐம்பத்தி மூன்றாம் எழுத்தும் 73ஆம் எழுத்தும் தெ
ஐம்பத்தி ஏழாம் எழுத்தும் 72ஆம் எழுத்தும் ரி

துருவக் குறிப்பின் அடிப்படையில் மேலே கண்டபடி சதுரங்க பந்த பாடலைப் பார்த்தால் மிகச் சரியாக அமைகிறது. அமைப்பு முறையைக் கண்டு வியக்கிறோம்.

இந்தப் பாடல் ஒரு மந்திரப் பாடலாக இருப்பதை பக்தர்கள் அனைவரும் அனுபவத்தால் உணர்கின்றனர். பல வித அற்புத பலன்களை இது அருளுகிறது.

இன்னொரு விந்தை! மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் சதுரங்கப் பாடல்களையும் இந்தப் பாடலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சில எழுத்துக்கள் அதே கட்டங்களில் அமையும் விந்தையையும் பார்க்கலாம்.
சுவாமிகள் பாடி அருளிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 6666. இந்தப் பாடல்கள் அனைத்து நலன்களும் அருளும் மந்திரங்கள். குறிப்பிட்ட பாடல்கள் மூலம் குறிப்பிட்ட காரியம் சித்தியாகும் என்பது பக்தர்களின் அனுபவம். வடமொழியும் தமிழையும் நன்கு கற்றவர் சுவாமிகள். வடமொழி காழ்ப்புணர்ச்சி இன்றி வடமொழியையும் தேன் தமிழையும் கற்று வல்லவராக வேண்டும் என்று திருஞான சம்பந்தர் அருளியதை சுவாமிகளும் அப்படியே ஆமோதிக்கிறார். இரு மொழிகளிலும் வல்லவராக வேண்டும் என்பதையே சுவாமிகளின் வாழ்க்கை நமக்கு எடுத்து இயம்புகிறது.

சுவாமிகள் இயற்றிய 6666 பாடல்களும் 6 மண்டலங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டாம் மண்டலம் (திருவலங்கற்றிரட்டு) பல்வேறு சித்திரக் கவிகளைக் கொண்டு விளங்குகிறது. இதே போல நான்காம் மண்டலத்தில் உள்ள பத்து பிரபந்தங்கள் அனைத்துமே சித்திரக்கவிகளாக உள்ளன. சித்திரக் கவிகளுக்குள்ளே பல சித்திரக் கவிகளை அமைத்தும் இவர் பாடியிருப்பது தமிழ் என்னும் விந்தையைப் பற்றி ஆராய விரும்புவோருக்கு ஒரு அரும் பொக்கிஷமாகும்.

சஸ்த்ர பந்தம், சதுரங்க பந்தம் மயூர பந்தம், கமல பந்தம் என பல்வேறு வகை சித்திரக் கவிகளை சுவாமிகள் அருளியுள்ளார்.

சுவாமிகள் அவதரித்த ஆண்டாகக் கருதப்படுவது 1853. 1929ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி சுவாமிகள் சமாதி அடைந்தார். அவரது சமாதி சென்னை திருவான்மியூரில் உள்ளது.
******************
contact swami_48@yahoo.com

சிந்து சமவெளியில் இந்திரன்!

industablet2

Indus Valley Indra

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1269; தேதி: 6 செப்டம்பர் 2014

மூன்று ஆண்டுகளுக்கு முன், மே 29, 2011-ல் சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஒரு ஆங்கிலக் கட்டுரை எழுதி (“Indus Valley Civilization- New Approach required” ) இதே பிளாக்-கில் ஏற்றினேன். அதில் யானை மீது நிற்கும் ஒரு சிந்துவெளி சித்திரத்தை இந்திரன் என்று சொல்லி அவன் மீது இருக்கும் ‘சக்கரம்’ அவனுடைய பெயர் என்றும் வியாக்கியானம் எழுதினேன். இந்திரனுக்கு சக்ரன் என்று ஒரு பெயர் உண்டு. இப்போது அதை உறுதிப்படுத்தும் வேறு சில சான்றுகள் கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சிந்துசமவெளி எழுத்துக்களை உலக மஹா அறிஞர்கள் படிக்க முடியாமைக்குக் காரணம் என்ன என்றும் பழைய கட்டுரையில் விளக்கினேன். ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ — என்று ஒரு பொன்மொழி உண்டு. யாரோ ஒருவர் சிந்துவெளி ஆராய்ச்சியில் உள்நோக்கத்தோடு ‘’ஆரிய—திராவிட விஷ விதை’’யை ஊன்றிவிட்டதால், எதைப் பார்த்தாலும், ‘சேனம் கட்டிய குதிரை போல’ ஒரே கோணத்தில் ஆராயத் துவங்கினர். ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ — என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அப்பாவித் தமிழர்களுக்கு எதைப் பார்த்தாலும் ஆரியப் பேய் தெரியவே அதைக் கண்டு பயந்து தத்துப் பித்து என்று உளறத் துவங்கிவிட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இன்றுவரை அந்த உளறல் நிற்கவில்லை!
taranis,celtic indra
Taranis from France (Gaul)

நான் பழைய கட்டுரையில் கூறியது இதுதான்: சிந்துவெளியில் காணப்படும் அனைத்தையும் ஒரே கலாசாரம் என்று எண்ணி வியாக்கியானம் செய்யாதீர்கள். இன்றைய இந்துமதத்தில் இருப்பதைப் போலவே அக்காலத்திலும் பலவகை வழிபாடுகள், பல திறப்பட்ட மக்கள் இருந்திருக்கலாம். ஆகையால் புதிய அணுகுமுறை தேவை என்று எழுதினேன்.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சுமார் 30 கட்டுரைகள், சிந்துவெளி பற்றி மட்டுமே எழுதிவிட்டேன். அத்தனையையும் இலவச புத்தகமாக வெளியிட்டு, பள்ளிக்கூட, கோவில் வாசல்களில் நின்று விநியோகிக்கவேண்டும் என்பது என் தீராத ஆசை!

தாரனிஸ் – தோர் – ஜூபிடர் – இந்திரன்
கெல்டிக் (Celtic) இனத்தைச் சேர்ந்தவர்கள், 2500 ஆண்டுகளுக்கு முன், தாரனிஸ் (Taranis) என்னும் கடவுளை வணங்கினர். இவருடைய உருவம் பிரான்ஸ் முழுதும் பல இடங்களில் கிடைத்துள்ளன. இவர் கையில் ஒரு சக்கரம் இருக்கிறது. இடி–தான் இவரது ஆயுதம். டாரனிஸ் என்றால் இடி முழக்கம் செய்வோன் என்று பொருள். சிலர், இவர் கையில் இருக்கும் சக்கரம் சூரியனைக் குறிக்கும் என்பர். இன்னும் சிலர் அது ரதத்தின் சக்கரத்தைக் குறிக்கும். ஏனெனில் ஏனைய இடி மின்னல் தேவர்களின் சக்கர சப்தமே இடிக்குக் காரணம் என்று எழுதப்பட்டுள்ளது என்பர்.

taranis-statue1

இவை அனைத்தும் இந்திரனுக்குப் பொருந்தும். தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியம் இந்திரனையும், வருணனையும் தமிழர்களின் முக்கியக் கடவுள் பட்டியலில் சேர்த்துள்ளது. இதில் இந்திரனைக் குறிக்கையில் ‘வேந்தன்’ என்ற சொல்லையே தொல்காப்பியர் பயன்படுத்துகிறார். இந்திரன் என்றால் அரசன், கடவுள் என்ற இரண்டு பொருள்களே நால்வேதங்களிலும் வருகிறது அவனுக்கு இடி மின்னல், மழை, வானவில் (இந்திர தனுஸ்) எல்லாம் சொந்தம். அவன் கையில் ‘இடி’ வஜ்ராயுதமாகக் காட்சி தருகிறது.

சிந்துவெளி முத்திரையில் சக்கரம் இந்திரனுக்கு மேலே இருக்கிறது. அவனுக்குக் கீழே அவனுடைய வாகனமான ஐராவதம் என்னும் யானை இருக்கிறது. இந்திரனுக்கு சக்ரன் என்ற ஒரு பெயர் உண்டு. புத்த மத நூல்கள் முழுதும் ‘சக்கன்’ என்ற சொல்லையே காணலாம்.

Gundestrup_C
Gundestrup Caudron: Taranis

சூரியனை நாமும் அரசனுடன் ஒப்பிடுவோம். சூரிய வம்சம் என்பதோடு ஆதித்ய (சூரியன்) என்பது ஆதித்த கரிகாலன், விக்ரமாதித்தன் என்னும் நூற்றுக் கணகான இந்திய மன்னர்களின் பெயரில் வருகிறது. சுடர் நேமி என்னும் சொல் அரசனின் ஆட்சிச் சக்கரத்தையும் குறிக்கும். சக்கரம் என்பது இந்திரனின் பெயர் மட்டும் அல்ல. இந்திய அரசர்களின் சின்னமும் கூட. இந்தியாவின் அரசாங்கச் சின்னத்தில் அசோகரின் தர்மச் சக்கரத்தைக் காணலாம்.

தாரனிஸ் என்னும் கடவுளை இதாலிய கடவுள் (Jupiter) ஜூபிட்டருடனும் க்ரேக்க கடவுள் ஷூஸ் (Zeus) உடனும் ஒப்பிடுவர். எல்லோரும் வானத்துடனும் இடி மின்னலுடனும் தொடர்புடையவர்கள்.

gajalakshmi
Gajalakshmi in Gundestrup Cauldron

இரண்டு விஷயங்களை நினவிற்கொண்டு இந்த ஒப்புமைகளை ஆராய்தல் நலம்:1. ஒவ்வொரு கடவுளும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு இனத்தாரால் வெவ்வேறு நாட்டில் வணங்கப்பட்டதால் போகப் போக கதை மாறும் 2. காலத்தின் வேறுபாட்டாலும், கலாசாரத்தின் வேறுபாட்டாலும் நூற்றுக்கு நூறு ஒற்றுமை எதிர்பார்ப்பது மடமை.

IthyphallicProtoSiva
Indus Pasupati

denmark pasupati

Pasupati in Gundestrup

தோர் (Thor)
தோர் (Thor) என்பவர் நார்வீஜிய வைகிங் இனக் கடவுள். பழைய ஜெர்மானிய டொனார் (இடி) (Donar) என்னும் கடவுள் பெயர்ச்சொல்லில் இருந்து வந்தது இச் சொல் என்பர் ஆய்வாளர். இவர் கி.பி.700 முதல் 1200 வரையே வணங்கப்பட்டார். ‘தர்ஸ்டே’ (Thursday) என்னும் வியாழக்கிழமையின் பெயர் இவர் மூலமே நமக்குக் கிடைத்தது. இந்தியர்களும் இதே கொள்கை உடையவர்களே. இவரை ஒப்பிடும் ஜூபிட்டர் என்பது வியாழன் (Jupiter) கிரகத்தையும் வியாழக் கிழமையையும் குறிக்கும். நாமும் வியாழன் (குரு) பெயரையே தர்ஸ்டே-க்கு வைத்துள்ளோம்.

தோர் கையில் ஒரு சுத்தியல் உண்டு. அது அவருடைய வஜ்ராயுதம். இடி முழக்கம் எழுப்பும். அதைக் கொண்டு அவர் மலைகளையும் பிளப்பார். இதே வருணனை இந்திரனைக் குறித்து ரிக் வேதத்திலும் வருகிறது. இந்திரன் மலைகளைப் பிளந்து ஆற்று நீரை விடுவித்தான் என்று வேதங்கள் போற்றும். தோரின் சின்னம் இந்துக்களின் ஸ்வஸ்திகா (Swastika) சின்னம். இதுவும் சூரியனுடன் தொடர்புடையதே.

முடிவுரை
தோர், தாரனிஸ், ஜூப்பிடர், இந்திரன் ஆகியோர் இடையே நாம் காணும் இடி-மின்னல்-மழை-வஜ்ராயுதம்-சக்கரம்—சூரியன் ஒற்றுமையில் இருந்து அறிவது யாது?

1.இவர்கள் அனைவரும் ஒரே கடவுளே. இதற்கு மூலம் இந்துக்களின் வேதங்களே. ஏனெனில் காலத்தினால் பழமையான நூல் ரிக் வேதமே. துருக்கி நாட்டு பொகாஸ்கோய் (Bogazkoi Inscription) கல்வெட்டில் கி.மு.1400 ஆம் ஆண்டிலேயே இந்திரன், மித்ரன், வருணன், அக்னி பெயர் வருவதால் மறுக்க முடியாத தொல்பொருட் சான்று நம்மிடமுள்ளது.

2.இவை அனைத்தும் இந்து மதத்துடன் தொடர்புடையதே என்பதற்கு மற்றொரு சான்று டென்மார்க் நாட்டில் சதுப்பு நிலப் புதைகுழியில் கிடைத்த குண்டஸ்ட்ரப் அண்டா (Gundestrup cauldron) ஆகும். இதில் சக்க்ரத்துடன் தாரனிஸ், இந்துமத கஜலெட்சுமி, சிந்துவெளி பசுபதி முத்திரை ஆகிய அனைத்தையும் ஒருங்கே வடிவத்துள்ளான் ஒரு மர்மப் பொற்கொல்லன். இது டென்மார்க் (Denmark) நாட்டிற்கு வந்த மர்மம் துலங்கா விடினும் இது கி.மு. இரண்டு/மூன்றாம் நூற்றாண்டு சின்னம் என்பதில் அறிஞர் பெருமக்களிடையே கருத்தொற்றுமை உண்டாம்.

3.தாரனிஸ், தோர், ஜூப்பிடர் ஆகியோருக்கான மூல முதல்வன் இந்திரனையே சிந்துவெளி சிற்பத்திலும் காண்கிறோம் என்பது எனது துணிபு.

வாழ்க இந்திரன் ! வளர்க சிந்துவெளி ஆராய்ச்சி!!

INDUS VALLEY CIVILIZATION என்னுடைய முந்தைய கட்டுரைகள்:

சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை (15/10/12)
‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.

சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! March 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14
சிந்து சமவெளி பிராமணர் தொடர்பு ((Post No 1033, Date 10-5-14)

Indus Valley-Brahmin Connection (Post No 1034, Date 10-5-14)
Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu (posted 21/1/12)
Human Sacrifice in Indus Valley and Egypt (posted on 31/10/12)
Ghosts in Indus Seals and Indian Literature
Flags: Indus Valley- Egypt Similarity
Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian?
Indus Script Deciphered

Human sacrifice in Indus Valley and Egypt 0ct.31, 2012
Indus Valley Cities in Ramayana Dec.18, 2012
Open Sesame’: Password to Heaven Post No 756 dated 23rd December 2013
Change ‘’Indus’’ valley civilization to ‘’Ganges’’ valley civilization! Ulta! 29-3-2014
Indus Valley Case: Lord Indra Acquitted Post No 764 dated 28th Dec. 2013
‘Sex Worship’ in Indus Valley

Flags: Indus Valley – Egypt Similarity (15/1012)
The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty
Vishnu in Indus Valley Civilization (posted on 19-10-11)
Serpent Queen: Indus Valley to Sabarimalai 18 June 2012
Fall of Brahmin Kingdoms in Pakistan and Afghanistan 23-3-14
Indus Valley Civilization- New Approach , posted on May 29, 2011

contact swami _ 48@yahoo.com

உலகின் முதல் சிவில் எஞ்சினீயர் இந்திரன்!

dam-busters-poster

கட்டுரை மன்னன் – லண்டன் சுவாமிநாதன்
ஆய்வுக் கட்டுரை எண்:–1267; தேதி 5 செப்டம்பர் 2014

தமிழில் பழமறையைப் பாடுவோம் — பாரதி
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே — பாரதி

உலகின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். துருக்கியில் (Bogazkoy Inscription) கிடைத்த களிமண் கல்வெட்டு கி.மு. 1400 ஆண்டிலேயே ரிக்வேதக் கடவுளரைக் குறிப்பிடு வதால் யாரும் அதற்குக் கீழ் இதைக் கொண்டுவர முடியாது. இதற்கும் முன்பாகவே இந்தியாவில் சரஸ்வதி நதி தீரத்திலும் கங்கை நதிக் கரையிலும் வேத முழக்கம் கேட்டிருக்கும்.

ரிக்வேதம் மிகப் பழைய நூல் என்பதால் அதன் பொருள் பலருக்கும் விளங்குவதில்லை. அதை வாய் மொழியாகவே கற்பிக்க வேண்டும் என்பதாலும் யாரும் உரை எழுத முன்வரவில்லை. வேதம் அழிந்து விடுமோ என்று பயந்த வியாசர் அதை கி.மு 3150 வாக்கிலேயே நான்காகப் பிரித்து நமக்குக் கொடுத்தார். அப்படியானால் அதற்கு முன் எவ்வளவு காலத்துக்கு எண்ணற்ற வேதங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பே மேலிடும். இப்போது நம்மிடம் உள்ள வேதம் நூற்றில் ஒருபகுதியே!

ரிக் வேதச் சொற்களுக்குப் பொருள் காண முயன்ற யாஸ்கர் போன்றோர் கி.மு.800 –வாக்கிலேயே திணறத் துவங்கிவிட்டனர். அதற்கு நீண்ட நெடுங் காலத்துக்குப் பின்வந்த சாயனர் என்னும் அறிஞர் வேதத்துக்கு முதல் முதலில் உரை எழுதினார். அவர் நமக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்தவர். வெளிநாட்டு “அறிஞர்கள்”, காசியிலுள்ள சில பண்டிதர்களைக் கொண்டு அரைகுறை ஆங்கிலத்தில் அவர்கள் மூலம் கேட்ட அர்த்தத்தை வைத்து ‘கன்னா பின்னா’ என்று வேதத்துக்குப் பொருள் எழுதினர். இவர்கள் வேதத்தைப் படித்த மூல காரணம் இந்து மதத்தை அழிக்கவேண்டும், இந்தியாவை அழிக்கவேண்டும், அதற்காக இவர்களை வந்தேறு குடியேறிகள் என்று காட்ட வேண்டும் என்பதாகும். நாமும் அப்போது வெள்ளைக்கார ஆட்சியில் இருந்ததால் ஆங்கிலம் படித்த நம்மூர் அறிஞர்கள் பதவி, பட்டம் ஆகிய இரண்டையும் கருத்திற்கொண்டு அவர்களுக்கு ‘’ஆமாம்சாமி’’ போட்டனர்.

இப்போது புதுப் புது தடயங்கள் கிடைப்பதாலும், கம்ப்யூட்டர் முதலிய கருவிகளைப் பயன்படுத்தி ஆராய்வதாலும், துவாரகை முதலிய இடங்களில் கடலுக்கடியில் மூழ்கிய நகரம் கண்டுபிடிக்கப்பட்டதாலும், சரஸ்வதி நதிதீர புகைப்படம் ‘நாஸா’ (National Aeronautical and Space Administration) என்னும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் மூலம் கிடைத்ததாலும். டாடா அணுசக்தி நிறுவன ஆய்வாளர்கள் பூமிக்கடியில் மறைந்துபோன சரஸ்வதி நதி நீரை எடுத்து ஆராய்ந்து அதன் பல்லாயிரம் ஆண்டுப் பழமையை வெளியிட்டதாலும் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்கள் எழுதிய வாதங்கள் தவிடுபொடியாகிவிட்டன.

dambusters-398707

ரிக்வேதம் மிகவும் ரகசியமான, அற்புதமான நூல். இதில் ரகசியம் இருப்பதால் சங்க காலத் தமிழர்கள் வேதங்களுக்கு ரகசியம் (மறை) என்று பெயரிட்டனர். தமிழனின் அபார அறிவுக்கு இதுவும் ஒரு உதாரணம். ரிக் வேதம் அதர்வண வேதம் பற்றி முப்பதுக்கும் மேலான கட்டுரைகளை எழுதி அதன் ரகசியங்களை வெளியிட்டு வருகிறேன். இன்று இந்திரன் பற்றி இரண்டு ரகசியங்களை ஆராய்வோம்.

வேதத்தில் பறக்கும் தட்டா (Flying Saucers)?

முதல் ரகசியம்:
இந்திரன் பறக்கும் மலைகளின் சிறகுகளை வெட்டினான். அதற்குப் பின்னர் மலைகள் பறப்பதை நிறுத்திவிட்டன என்று நமது புராணங்கள் கூறும். இது என்ன? பறக்கும் (Unidentified Flying Oobject= UFO) தட்டுகளின் “ஆண்டெண்ணாக்களை” இந்திரன் வெட்டி வீழ்த்தினானா? அல்லது ஆதிகாலத்தில் பூமியைத் தாக்கிய பெரிய நுண்கிரகங்கள் (Asteroids) , விண்கற்கள் (Meteorites) பற்றிய குறிப்பா? என்று ஆராய வேண்டும். இப்போதும் நாள்தோறும் கோடிக் கணக்கான விண்கற்கள் பூமியைத் தாக்குகின்றன. ஆனால் காற்று மண்டலத்தில் நுழையும் போது அவை கருகிச் சாம்பல் ஆகிவிடுகின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு முன் தாக்கிய ஒரு நுண்கிரகம் பூமியில் உள்ள டைனோசர் (Dinosaurs) எனும் ராட்சத மிருகங்களை அழித்தன. ஒருவேளை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியைத் தாக்கிய நுண்கிரக விஷயங்களைத் தான் நமது சமய நூல்கள் இப்படிக் கூறுகின்றனவா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். இன்று நான் அதைப் பற்றி எழுதவில்லை.

natural dam1.jpg2

இரண்டாவது ரகசியம்
இந்திரன் பற்றிய இரண்டாவது ரகசியம் அவன் ஏழு நதிகளை விடுவித்ததாகும். இதை ரிக் வேத துதிகள் மறை பொருளில் பேசும். அஹி என்ற பயங்கர பூதம் (ட்ராகன் Dragon) மற்றும் வலன் என்ற அரக்கன் “பிடித்துவைத்த” ஏழு நதிகளின் தண்ணீரை இந்திரன் விடுவித்தான் என்று வேதத்தில் பல இடங்களில் மந்திரங்கள் வருகின்றன.

வெள்ளைக் காரனிடம் புத்தியை அடகு வைக்காத, எவரும் சுய புத்தி உடைய எவரும், ஏன் “நதிகள்”, “பிடித்துவைத்த தண்ணீர்”, “விடுவித்தல்”– என்ற சொற்கள் வேதத்தில் வருகின்றன என்று சிந்திப்பர். இதை வைத்து ரிஷி முனிவர்கள் வேறு விஷயங்களை மறை பொருளில் சொல்ல வந்தனர் என்று நாம் கொண்டாலும் உவமை என்பதே அந்தக் காலத்தில் இது போன்ற எஞ்சினீயரிங் வேலைகள் நடந்ததைக் காட்டும்.

தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் ஒரு விதி உண்டு. உவமையாகக் கூறப்படும் விஷயம் உவமேயத்தைவிட சிறப்புடையதாக இருத்தல் வேண்டுமென்பது அந்த விதி. ஆக இந்த —-‘’நதி’’, ‘’பிடித்துவைத்தல்’’, ‘’விடுவித்தல்’’ —– என்பதை உவமையில் வரும் சொற்கள் என்று எவரேனும் வாதிட்டாலும் அவை மகத்தான செயல்களாக இருந்த தனால்தான் உவமையாகக் கையாளப்படுகிறது என்பது புலப்படும்.

எல்லா மந்திரங்களையும் கொடுக்க இடமின்மையால் இதோ ஒரு சில மந்திரங்கள்:

வெள்ளங்களோ பலப் பல; அஹியால் பிடிக்கப்பட்டன. ஏ வீரனே! நீ அவைகளைப் பெருகச் செய்தாய், விடுவித்தாய் -– RV. 2-11-2
அஹி என்பது பனிக்கட்டி ஆறுகளாக இருக்கலாம் என்பது சிலர் கருத்து. கிரகணம் முழுவதும் அறிந்து முன் கூட்டி கணக்கிட்டு நமக்கு அறிவித்தப் பஞ்சாங்கப் பிராமணர்கள். இதெல்லாம் வயற்காட்டில் உழும் பாமரனுக்குப் புரியாது என்பதால் ராஹு என்னும் பாம்புத் தலை அரக்கன் (ட்ராகன் ) சந்திரனை விழுங்குகிறது என்று சொன்னது போல இது!

SCHWEIZ STAUSEE LAGO BIANCO

யார் அரக்க பூதம் அஹியைக் கொன்று ஏழு நதிகளை விடுவித்தாரோ, வலனுடைய குகையில் இருந்து பசுக்களை (ஒளியை) விடுவித்தாரோ RV. 2-12-3

பசு என்ற சொல்லுக்கு ஒளி என்ற பொருளும் வேதத்தில் பயன்படுத்த ப்படுவதாக அறிஞர்கள் செப்புவர். பஞ்சாப் என்றால் ஐந்து நதிகள் என்று பொருள். இது ஒரு காலத்தில் ஏழு நதிகள் (சப்த சிந்து) பாய்ந்த பெரிய பூமியாக இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வர்ஜில் (Virgil) கூட சப்த சிந்து என்ற சொல்லை அவர் காவியத்தில் கையாள்கிறார்.

ஏ, இந்திரனே? ஏழு நதிகளின் பிணைப்பை நீ தகர்த்து எறிந்தாய். அப்போது பூமி அதிர்ந்தது. நதிகள் கரை புரண்டு ஓடின. மலைச் சிகரங்களைப் பிளந்து கொண்டு தண்ணிர் பெருக்கெடுத்தது. ஒரு தாய் தன் குழந்தையை நோக்கி ஓடுவது போல அவை உன்னை நோக்கி ஓடிவந்தன. தடை பட்ட நதிகளை நீ விடுவித்தாய்! – RV. 4-19-3/5

தாய்-குழந்தை உவமை படித்துப் படித்து ரசிக்கவேண்டிய அற்புதமான வேத கால உவமை!! ரிக் வேதத்தில் ஒரே கவிதையில் 27 உவமைகள் இருப்பது பற்றி நான் எழுதிய கட்டுரையயும் காண்க.

ஆங்கிலத்தில் இரண்டாவது உலக மஹாயுத்த காலத்தில் ஒரு அணையைத் தகர்க்கச் சென்ற படைகள் பற்றி ‘’தி டேம் பஸ்டர்ஸ்’’ என்று ஒரு திரைப்படம் வந்தது. அது போல இந்திரன் மலைப் பாறைகளைத் தகர்த்து தண்ணீரைக் கொண்டுவந்தான் என்றே எண்ண வேண்டியுள்ளது.

ரிக் வேதத்தில் புரியாத விஷயங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. வேதத்தை மொழி பெயர்த்த கிரிப்பித் (Griffith) போன்றோர் பக்கத்துக்குப் பக்கம் இதன் பொருள் விளங்கவில்லை என்று அடிக்குறிப்பு சேர்த்துள்ளனர். ரிக் வேதத்தில் இந்திரன் பற்றி எழுதப்பட்டதை அவர்கள் மனம்போன போக்கில் வியாக்கியானம் செய்துள்ளனர். அவர்கள் தெளிவு படுத்தாத விஷயங்கள்:

dam germany

1,இந்திரன் ஒரு ஆளா? பல நபர்கள் இந்திரன் என்ற பெயரில் இருந்தனரா?
2.இந்திரன் என்பது பிரதமர், ஜனாதிபதி, போப், சங்கராச்சார்யார் என்பது போல ஒரு பட்டமா, Title டைட்டிலா?
3.இந்திரன் என்பவன் அரசனா? கடவுளா?
4.இந்திரன், மனிதர்கள் போல நூறு ஆண்டு ஆயுள் உடையவனா அல்லது ஆயிரம் ஆண்டு, பல நூற்றாண்டு வாழ்ந்தவானா?
5.இந்திரன் என்பது மழை, வானவில், இடி, தண்ணீர் போன்றவற்றின் அதிதேவதையான கடவுளா?

இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை காணாமல், சில இடங்களில் அவனை மனிதன் போலவும், சில இடங்களில் அவனை இயற்கைச் சக்திகளின் அதி தேவதை போலவும் மனம் போன போக்கில் மொழி பெயர்த்துவிட்டனர். இதில் ஜெர்மானிய, பிரெஞ்சு, ஆங்கில “அறிஞர்கள்” இடையே பயங்கர கருத்து வேறுபாடு வேறு!!

உண்மையில் இந்திரன் என்பது கடவுளையும் அரசனையும் குறிக்கும். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் அரசனுக்கும் தெய்வத்துக்கும் ஒரே சொல்லே பயன்படுத்தப்படுகிறது. தொல்காப்பியரும் தமிழர் கடவுளான இந்திரனை வேந்தன் என்றே குறிப்பிடுவார். மற்ற ஒரு தமிழர் கடவுளான வருணனை மட்டும் வருண என்ற சம்ஸ்கிருதப் பெயரிலேயே குறிப்பிடுவார்.

dam idukki

உலகின் முதல் சிவில் எஞ்சினீயர்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே பிளாக்கில் எழுதிய Great Engineers of Ancient India ஆராய்ச்சிக் கட்டுரையில் பகீரதன் மகத்தான திட்டங்கள் தீட்டி கங்கை நதியைத் திசை திருப்பிவிட்டதை எழுதி இருந்தேன். அவன் மிகப்பெரிய எஞ்சினீயர். அவன் பல ஆண்டுகள் திட்டம் தீட்டி வெற்றி பெற்றதை, அவன் ‘’ஒற்றைக்காலில் பல்லாயிரம் ஆண்டுகள் நின்று தவம் செய்து’’ கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்தான் என்று புராணங்கள் சங்கேத பாஷையில் பகரும். அதே கட்டுரையில் பாரத நாட்டின் முதல் அக்ரிகல்சுரல் (Agricultural) எஞ்சினீயர் பலராமன் என்பதையும், விந்திய மலை மூலமாக தென் இந்தியாவுக்கு முதலில் ரோடு போட்டவர் அகத்தியர் என்றும் தென் கிழக்காசியாவுக்கு முதல் கடற்படை கொண்டு சென்றவர் அகத்தியர் என்றும் எழுதினேன். இதைத் தான் புராணங்கள் சங்கேத மொழியில், ‘விந்திய மலை கர்வ பங்கம்’, ‘அகத்தியர் கடலைக் குடித்தார்’ என்றெல்லாம் எழுதின என்பதையும் விளக்கினேன்.

கடந்த பல ஆண்டுகளாக நான் நடத்திய இன்னும் ஒரு ஆராய்ச்சியில் புலப்பட்ட விசயம் பகீரதனுக்கு மாபெரும் சிவில் எஞ்சீயரிங் புராஜெக்டை (Civil Engineering Project) மனதில் தோற்றுவித்தவனே இந்திரன் என்பதாகும். ரிக்வேதத்தில் ஆயிரத்துக்குக் அதிகமான இடங்களில் இந்திரன் பெயர் வருகிறது. இன்று நேபாளம் முதல் இலங்கையின் தென் கோடி கண்டி வரை எல்லோரும் இந்திரனின் பெயரையும் அவன் மனைவி இந்திராணி (சசி) பெயரையும் சூட்டி வருகிறோம். தென் கிழக்கு ஆசிய நாடுகள் முழுதும் சங்க காலத் தமிழர் கொண்டாடிய இந்திர விழாவை இன்றும் Water Festival வாட்டர் fபெஸ்டிவல் (நீர் விழா) என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். நேபாளத்திலும் இது நடைபெறுகிறது. ஆக உலகின் மிகப் பழைய கடவுள் இன்று வரை நம் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டான். தமிழ் நாட்டில் உள்ள 38,000 கோவில்களிலும் நடக்கும் யாக யஞங்களில் இந்திரன் பெயர் வருகிறது. பிராமணர்களாகிய நாங்கள் தினமும் இந்திரன் பெயரில் ஒரு நாளைக்கு மூன்று முறை சந்தியாவந்தனம் செய்கிறோம்.

industablet2

Indra in Indus Valley tablet (Indra is called Chakra/wheel in Hindu and Buddhist scriptures)

உலக மகா யுலிஸிஸ், ஜில்காமேஷ், ராம்சஸ் முதலிய கிரேக்க, சுமேரிய, எகிப்திய ‘ஹீரோ’-க்கள் எல்லாம் ‘ஜீரோ’—க்களாக (Hero to Zero) மாறி மியூசியங்களுக்குள் ஒளிந்து கொண்டுவிட்டனர். இந்திரன் மட்டும் சரஸ்வதி, கங்கை நதி தீரத்தில் கொடிகட்டிப் பறந்த மாதிரியே இன்றும் கொடிகட்டிப் பறக்கிறான். எங்கெங்கெலாம் இந்துக் கோவில்கள் உள்ளனவோ, எங்கெங்கெல்லாம் பிராமணர்களின் வேத மந்திரங்கள் ஒலிக்கின்றனவோ அங்கெங்கெல்லாம் இந்திரன் புகழ் பாடப்படுகிறது.

வாழ்க தொல்காப்பியன்! வளர்க அவன் பாடிய இந்திரன், வருணன்!!

–சுபம்–

ரிக் வேத கணிதப் புலிகள்!

vedas4
கட்டுரை மன்னன் – லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:–1267; தேதி 4 செப்டம்பர் 2014

ரிக் வேத கால முனிவர்கள் மஹா மஹா கணிதப் புலிகள்! அவர்கள்தான் உலகத்துக்கு தசாம்ச முறையைக் (decimal system) கற்பித்தவர்கள். அந்த தசாம்ச முறை வந்திருக்காவிடில் கம்ப்யூட்டரோ இன்ட ர்நெட்டோ உலகில் வந்திருக்க முடியாது. “வேதமே இந்த உலகிற்கு அடிப்படை” என்று மனு கூறிய வாசகம் மிகவும் ஆழ்ந்த பொருள் உடையது. வேதம் முழுதும் பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், நூறாயிரம் (decimal system) என்ற எண்களே காணக்கிடக்கின்றன. உலகில் ஏனைய நாட்டு இலக்கியங்கள் இதற்குப் பின்வந்தவை. அவைகளில் 40 அல்லது நாற்பதின் மடங்குகளே அதிகம் இருக்கும். பெரிய எண்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. மிக அபூர்வமாகவே கையாளப்படும்.

“நீரளவே ஆகுமாம் நீராம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு”– என்பர் ஆன்றோர். வேத கால முனிவர்களின் மகத்தான கணிதப் புலமை அவர்கள் கையாளும் எண்களில் இருந்து வெள்ளிடை மலை என விளங்கும்.

நான் 1995 தஞ்சாவூர் உலகத் தமிழ் மகா நாட்டில் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தேன்: ‘சங்க இலக்கியத்தில் எண்கள்’, ‘சங்க இலக்கியத்தில் வண்ணங்கள் (நிறங்கள்)’ — என்ற இரண்டு ஆய்வுக் கட்டுரைகளும் கால தாமதம் காரணமாகப் புத்தகத்தில் இடம் பெறவில்லை. ஆனால் நானும் எனது சகோதரரும் ஒவ்வொரு ஆய்வு அரங்க அறையிலும் அந்தக் கட்டுரைகளை விநியோகித்தோம். அது முதல் எண்கள் (நம்பர்) ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்து வருகிறேன். ரிக் வேதத்தில் எங்கு நோக்கினும் எண்கள் காணக்கிடக்கின்றன. யஜூர்வேதத்தில் ருத்ரம்/சமகம் துதியில் எண்கள் வருகின்றன. இவை அனைத்தும் பல ஆழ்ந்த, மர்மமான, ரகசியமான பொருள் உடையவை. இதைப் பார்த்து பிற்காலத்தில் தமிழ் சித்தர்களும் திருமூலர் போன்றோரும் நம்பர்களை வைத்தே பாட்டு இயற்றத் துவங்கினர். அப்படிப்பட்ட பாடல்களுக்கு அந்தத் துறையில் உள்ள வல்லுநர்கள்தான் சரியான பொருள் சொல்லமுடியும். இதைப் பார்த்து திருவள்ளுவரும் ‘கோடி’ என்ற சம்ஸ்கிருத எண்ணை எண்ணற்ற குறள்களில் பயன்படுத்துகிறார்.

கீழ்கண்ட எண்கள் ஒரு சின்ன மாதிரியே. வேதத்தில் உள்ள எண்களை ஆராய்ச்சி செய்தே ஒருவர் எளிதாக டாக்டர் பட்டம் வாங்கி விடலாம்.முதலில் ரிக் வேத மண்டல எண்ணும் துதியின் எண்ணும் உள்ளது. இரண்டாவது பத்தியில் எண்ணும் மூன்றாவது பத்தியில் அதன் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.

vedas5
RV 5-29-8 3X100 =300 சோம ரசம் கொடுக்கும் எண்ணிக்கை
8-85-8 63 மருத்துகளின் எண்ணிக்கை
10-34-8 53 சூதாட்டக் காய்கள் 50+3
10-114-6 36 பாத்திரங்கள் 33+3
10-53-3 34 விளக்குகள் 33+1
8-28-1 33 கடவுள் எண்ணிக்கை
3-4-9 33 கடவுள் எண்ணிக்கை

Vedas 9
இந்திரன் ‘’கொன்றது’’ எத்தனை பேர்?
RV 6-26 100,000 கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை
RV 6-26 60,000 கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை
RV 4-30 100,000 கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை
RV 1-53 10,000 கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை
RV6-27 3000 கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை

RV 2-14-6 100X 1000 கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை
2-13-9 100X10 கொல்லப்பட்ட தாசர்கள் எண்ணிக்கை
2-14-6 100,000 கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை
7-19-14 6666 l கொல்லப்பட்ட தாசர்கள் எண்ணிக்கை 3300+3300+33+33

(AV9-5-2) 6333 கந்தர்வர்கள் எண்ணிக்கை
RV3-9-9 3339 கடவுள் எண்ணிக்கை
(3003+303+33)
((Satapata Brahmana 3306 கடவுள் எண்ணிக்கை
(3003+303) )
RV4-27-6 3000 கொல்லப்பட்ட வீரர்கள் எண்ணிக்கை
3X1000

vedas2

இந்திரன் ‘’அழித்த’’ கோட்டைகள் எத்தனை?
RV 2- 14 100 கோட்டைகள் Ancient castles
RV 1-130 90 கோட்டைகள் forts
RV 1-53 100 கோட்டைகள் forts
RV10-98-10 99000 வண்டிகள் எண்ணிக்கை
No of wagon loads (100 000—1000=99000)
RV 1-54-6 99 கோட்டைகள் Forts of Sambara 100-1
2-19-6 99 கோட்டைகள் Forts of Sambara 100-1
10-98-11 99000 வண்டிகள் எண்ணிக்கை
100000—10000
1-130-7 90 கோட்டைகள் forts of Dasas
8-1-24 1100 குதிரைகள் எண்ணிக்கை
steeds of Indra 1000+100
10-97-1 107 மூலிகைகள் எண்ணிக்கை 100+7
10-130-1 101 மந்திரிகள் 100+1
10-93-15 77 குதிரைகள் எண்ணிக்கை 70+7

vedas3

வேத முனிவர்கள் பெற்ற பரிசுகள் எத்தனை?
8-6-46 100,000 பரிசுகள்
8-5-37 100+10,000 100 ஒட்டகங்கள் & 10,000 பசுக்கள்,
8-46-32 100 100 ஒட்டகங்கள்
10-93-15 77 குதிரைகள் எண்ணிக்கை 70+7
8-85-8 7X9 மருத்துகளின் எண்ணிக்கை
5-52-7 7X7 மருத்துகளின் எண்ணிக்கை
10-55-3 5×7 கடவுள் எண்ணிக்கை
10-90-15 3X7 மருத்துகளின் எண்ணிக்கை
7-9-11 21 கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை

2-12 40 சம்பரன் 40 ஆண்டுகளுக்குப் பின் மலையில் கண்டுபிடிக்கப்பட்டான்.
7-18 10 தச ராஜ யுத்தம் (பத்து அரசர் போர்)
5-62-1 1000 ஆயிரம் கால் மண்டபம்
1-116-3 100 நூறு துடுப்புகள் உடைய பெரிய கப்பல்

பல இடங்களில் ஆயிரம், நூறு, பத்து என்ற எண்ணிக்கை திரும்பத் திரும்ப வரும்.

vedas6
இவைகளில் இருந்து தெரிவது என்ன?

1.பெரிய எண்களை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் “அதிகமான” என்று பொருள் கொள்ள வேண்டும்
2.கொல்லப்பட்டவர்கள் என்பது உண்மையிலேயே கொல்லப்பட்டவர் இல்லை. ‘’கொல்’’ என்பதே வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

3.வேதகாலத்தில் நூறு துடுப்புகள் உடைய பெரிய கப்பல்கள் இருந்தன. இவைகளில் பூஜ்யூ என்பவரை அஸ்வினி தேவர்கள் காப்பற்றியதாக வேதம் பகரும்.

4.வேத கால எஞ்சினீயர்கள் சொன்ன ஆயிரம் கால மண்டபங்களையே நாம் மாயா நாகரீகத்திலும் இந்துக் கோவில்களிலும் இன்று காண்கிறோம்.

5.மந்திரிகள், கடவுளர், கோட்டைகள் எண்ணிக்கை எல்லாம் சங்கேத மொழியில் சொல்லப்பட்டுள்ளன. கோட்டைகள் வேதகால அரசர்களுடையவை. சங்க இலக்கியத்தில் சோழன் படை எடுத்து பாண்டியன் கோட்டைகளை அழித்தான் என்றால் சோழர்களிடம் கோட்டைகளெ இல்லை என்று பொருள்படாது. ஆக கோட்டைகள் அனைத்தும் ஓரினத்திடம் இருந்தது என்னும் வாதம் பொருந்தாது.

6.ஒட்டகங்களும் பரிசுப் பொருட்களில் இருப்பதால் வேத கால முனிவர்கள் மணற்பாங்கான பாலைவனப் பகுதிகளிலும் இருந்தது விளங்கும். கப்பல் ஓடும் கடல்களும் பாலைவனக் கப்பல்(ஒட்டகம்) செல்லும் மணற் பிரதேசங்களும் வேதகால அரசர் வசம் இருந்தன.

7.பசுக்களைக் கண்டுபிடித்து உலகிற்கு அளித்தது வேத கால முனிவர்கள் என்பதில் ஐயமில்லை.

8.மூலிகை எண்ணிக்கை, இன்னும் ஒரு இடத்தில் இரும்புக் கால் ஆபரேஷன் பற்றிய செய்திகள் வருவதால் அவர்கள் பெரிய டாக்டர்கள் எனப்திலும் ஐயமில்லை.

9.கடவுள் ஒருவரே; அறிஞர்கள் பலவாறாய்ப் பகர்வர் — ஏகம் சத் விப்ரா: பஹூதா வதந்தி—– என்ற வேத மந்திரத்தையும், இங்குள்ள கடவுளர் எண்ணிக்கையும் ஒப்பிடுகையில் இவை சங்கேத மொழிகள் என்பது பட்டென விளங்கும்.

10.வண்டிகள், குதிரைகள், ஒட்டகங்கள் ஆகியன அந்தக் காலத்தில் விளங்கிய போக்குவரத்து வசதிகளை ஊள்ளங்கை நெல்லிக்கனி என விளக்கும்.

11.மொத்தத்தில் இந்த எண்கள் எழுதப்பட்ட முறை — அவர்களின் கணித அறிவையும், மொழி அறிவையும், பல்வேறு துறைகளில் இருந்த அறிவையும் விளக்குவதாகக் கொள்ளலாம்.

12.சிலர் கூறுவதுபோல அவர்கள் காட்டுமிராண்டிகளோ, நாகரீகம் அறியா மேய்ப்பவர்களோ, பனிப் பிரதேசத்தில் வந்த குடியேறிகளோ இல்லை. வேதம் முழுதும் ஒரு சீரான டெசிமல் முறை எண்கள் இருப்பதாலும், இவை உலகில் வேறு எங்கும் காணப்படாததாலும் இவர்கள் பாரத நாட்டின் மண்ணின் மைந்தர்கள் என்பது சொல்லாமலே விளங்கும்.

vedas7

வேதம் பற்றி நான் இதுவரை எழுதிய கட்டுரைகள் பின்வருமாறு:
1.The Mysterious Vedic Homa Bird: Does it exist? – posted on 10-12-2011
2.Vedic Hymn better than National Anthems
3.Vedas and Egyptian Pyramid Texts – posted on 29-8-2012
4.Kapinjala Bird Mystery –posted on 23-5-2014 (Post No 1060)
5. Most misinterpreted words :Asva and Ayas
6.Confusion about Vedic Soma Plant –posted on 5-5-2013
7.Horse Headed Seer: Rig Veda Mystery- 1 -posted 27-8-2-14
8.Cucumber in the Rig Veda – posted on 2-42014 (post no 950)
9.Origin of Horse race and Chariot Race –posted 25-8-2014
10.Creation: Vedic Hymn and Babylonian Hymn –posted 6-8-2013
11.Sex Mantras and Talismans in Egypt and the Atharva Veda –posted 26 Sept. 2012
12.Gems from the Atharva Veda – posted 27 Sept. 2013
13.Mysterious Atharva Veda: Part 1 –posted 30 Sept. 2013
14. Mysterious Atharva Veda: Part 2 – posted 7 Oct 2013
15).27 Similes in one Vedic Hymn! – posted on18-8-2012
16) 107 Miracle Herbs in Rig Veda – posted on16-9-2013
17)Vedic Origin of 1000 Pillar Halls in Indian and Mayan Culture – 5 July 2014
18.Two seers saved by Asvins: Stories from the Rig Veda – posted 7 Aug. 2014.
19.Herbs and Diseases in the Veda – posted on 1 July 2014.
20) 31 Quotations from the Vedas – posted on 26 June 2014.
21.Talismans in Atharva Veda and Ancient Tamil Literature — posted on 17 June 2014.
22)Why did Indra kill Brahmins? – posted on 25 May 2014.
23)Ode to Sky Lark: Shelley, Kalidasa and Vedic Poet Grtsamada– posted on 3/5/14
24)Vedic Poet Medhathithi’s Quotations — Posted on22/5/2014
25)Pearls in the Vedas and Tamil Literature –posted on 18/5/2014
26.Important Vedic Quotations on Rivers and Water –posted on 8/5/14
27) 40 Important Quotations from the Atharva Veda –posted on 2-5/14
28.Oldest and Longest patriotic Song – 20 Sept. 2013
29)King and 8 Ministries in Vedic Period – posted on 28 May 2013
30)Numbers in the Rig Veda: Rig Veda Mystery – 2 –posted on 3rd Sep.2014

vedas8
இவைகளில் பல தமிழிலும் அதே தேதிகளை ஒட்டி வெளியாகி இருக்கின்றன. இவை தவிர சங்க இலக்கியத்தில்/ தொல்காப்பியத்தில் இந்திரன், சங்க இலக்கியத்தில்/தொல்காப்பியத்தில் வருணன், சங்க இலக்கியத்தில்/ தொல்காப்பியத்தில் அக்னி, சங்க இலக்கியத்தில் இந்திர விழா ஆகிய கட்டுரைகளும் எழுதியுள்ளேன். ஆயிரத்துக்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளப் படித்து மகிழ்க!

Contact swami_48@yahoo.com

வாத்தியாரைக் காலை வாரிவிட்ட மூக்குப்பொடி டப்பி!!

elt projects india

கட்டுரை மன்னன் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1266; தேதி 4 செப்டம்பர் 2014

School Days Stories
“உலகம் தட்டை சார்”

பள்ளிக்கூடங்களில் பெரிய கல்வி அதிகாரிகளின் (D E O டி.ஈ.ஓ) சோதனை நாள், அதாவது இன்ஸ்பெக்சன் (Inspection) என்று ஒரு சடங்கு உண்டு. அப்பொழுது பள்ளிக்கூடம் மிகவும் சுத்தமாக இருக்கும். எல்லோரும் நன்றாக உடை உடுத்தி வருவர். யாரும் தாமதமாக வரக்கூடாது என்று ஒரு வாரம் முன்னதாகவே எச்சரித்து விடுவார்கள். ஆசிரியர்களும் இன்ன பாடம்தான் நடத்துவேன் இன்ன கேள்விகள்தான் கேட்பேன் என்று முன்னரே மாணவர்களுக்குச் சொல்லிவிடுவார். எல்லாம் ‘ரிஹர்சல்’ (ஒத்திகை) செய்து பார்த்து விடுவர். அந்த சூழ்நிலயில் நடந்ததுதான் இந்தக் கதை!!

ஒரு புத்திசாலி வத்தியார் இருந்தார். “டேய், பையன்களா, நான் நாளைக்கு டி.ஈ.ஓ (District Educational Officer டிஸ்ட்ரிக்ட் எடுகேஷனல் ஆபீஸர்) வரும் போது பூகோள பாடம் நடத்துவேன். நான் யாரையாவது ஒருவரை பூமி தட்டையா, உருண்டையா என்று கேட்பேன். பதில் மறந்து போனாலும் கவலைப் படாமல் என் மூக்குப் பொடி டப்பாவைப் பாருங்கள்.

இதோ பார், இதுதான். இது என்ன வடிவமோ அதைச் சொல்லிவிடுங்கள் என்று சொல்லி தன்னுடைய உருண்டையான மூக்குப் பொடி டப்பாவைக் காட்டினார். பையன்களுக்கு ஒரே மகிழ்ச்சி! எவ்வளவு எளிய கேள்வி! எவ்வளவு சின்ன பதில் என்று!

classroom7

பூகோள வாத்தியாரின் மனைவிக்கும் தெரியும் பள்ளிக்கூடத்துக்கு பெரிய அதிகாரி சோதனைக்கு வரப்போகிறார் என்று? மறுநாள் என்றைக்கும் இல்லாத திருநாளாக அந்தப் பெண்மணி, தனது கணவர் எங்காவது அழுக்கடைந்த பழைய மூக்குப் பொடி டப்பியைக் கொண்டு போய்விடுவாரோ என்று எண்ணி புத்தம் புதிய டப்பியில் மூக்குப் பொடியை நிரப்பி ஆசிரியர் பைக்குள் போட்டுவைத்து வழி அனுப்பினார். அந்த புதிய மூக்குப் பொடி டப்பி தட்டையான சதுர வடிவம் உடையது. அப்பாவி ஆசிரியருக்கு அது தெரியாது.

காலை மணி பத்து. ஆசிரியரின் கெட்ட காலம்! முதல் வகுப்பாக இவரது அறைக்குள் நுழைந்தார் டி.ஈ.ஓ. அழகாக புவி இயல் பாடம் நடத்திவிட்டு ஒரு பையனை நோக்கி பூமியின் வடிவம் என்ன? என்று கேட்டார். பையனுக்கோ பெரிய அதிகாரியைப் பார்த்தவுடன் ஒரே உதறல். உடனே ஆசிரியர் பைக்குள் இருந்த மூக்குப்பொடி டப்பியை லாவகமாக எடுத்துக் காட்டினார். அதன் தட்டை வடிவத்தைப் பார்த்த பையன், “ஐயா, உலகம் தட்டையாக சதுரமாக இருக்கும் என்றார். டி.ஈ.ஓ.வுக்கு ஒரே சிரிப்பு. அவருடன் வந்த தலைமை ஆசிரியர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. வாத்தியார் முகத்திலோ அரை டன் அசடு வழிந்தது!!

classroom 6

போத் ஆப் யூ ஆர் ‘உராங்’!

Both of you are urang (wrong)!
மூக்குப் பொடி டப்பி வகுப்பறை சம்பவத்துக்குப் பின்னர் தலைமை ஆசிரியருக்கு ஒரே கவலை. அடக் கடவுளே! நம் பள்ளிக்கூடம் ‘பேர்’, ரிப்பேர் ஆகிவிடுமே என்று.

அடுத்ததாக ஆங்கிலப் பாடம் நடத்தும் ஒரு வகுப்பறைக்குள் தலைமை ஆசிரியரும் (D E O ) டி.ஈ.ஓ.வும் நுழைந்தனர். அங்கு இதைவிட பெரிய தலைவலி காத்திருந்தது.

ஆசிரியர் ஒரு பையனைப் பார்த்து
What is the SSpelling far Kuvaneltj (Knowledge)? வாட் இஸ் தெ ஸ்ஸ்பெல்லிங் பார் குவாநலெட்ஜ்? என்று கேட்டார்.
class room 5

அந்தச் சொல்லில் கே என்னும் ஆங்கில எழுத்து ஒலிக்காது/ சைலன் ட் என்பது ஆசிரியருக்குத் தெரியாது.
பையன் அதற்கு மேல் மண்டு!!

ஐ டோண்ட் க்நோ சார், என்றான். Ai tont kkno (know), sir

தலைமை ஆசிரியர்க்கு உதறல் எடுக்கத் துவங்கி விட்டது. ஆசிரியருக்கே ஆங்கிலம் தெரியவில்லை, உச்சரிப்பும் தெரியவில்லை என்றால் பள்ளிக் கூடத்தையே மூடச் சொல்லி அதிகாரி ‘’ரிப்போர்ட்’’ கொடுத்து விடுவாரோ என்று பயந்து நடுங்கினார்.

அந்த நேரத்தில் டி.ஈ.ஓ. திருவாய் மலர்ந்தருளினார்:

போத் ஆப் யூ ஆர் “உராங்” poth ap u or Uraang (wrong) என்று சொல்லிவிட்டு நாலெட்ஜுக்கு ஸ்பெல்லிங் எழுதிக் காட்டினார் Naledj னாலெட்ஜ் என்று.

தலைமை ஆசிரியருக்கு உயிர்வந்தது!!

மண்டு டீ.ஈ.ஓ. வாழ்க என்று மனதுக்குள் வாழ்த்தினார்!!!

Contact swami_48@yahoo.com

Pictures are taken from various websites; not connected with the anecdotes here;thanks.

சுவீடன் நாட்டில் மர்ம புத்தர் சிலை!

viking buddha big
Buddha at Stockholm Museum

கட்டுரை மன்னன்:- லண்டன் சுவாமிநாதன்
ஆய்வுக் கட்டுரை எண்:– 1264: தேதி:- 3 செப்டம்பர் 2014.
(I have posted the English version of this article yesterday)

இந்தியாவில் இருந்து 5000 மைல்களுக்கு அப்பால் உள்ள சுவீடன் நாட்டில் ஹெல்கோவில் ஒரு புத்தர் சிலை கிடைத்தது. இது நடந்தது 1954ஆம் ஆண்டில்; ஆனால் இன்னும் மர்மம் நீடிக்கிறது. எப்படி இந்தச் சிலை அங்கே வந்தது என்பது மர்மமே! ஹெல்கோ என்றால் புனித இடம் என்று பெயர். புத்தர் சிலை இங்கே கிடைத்தது எவ்வளவு பொருத்தம் பாருங்கள்!

இதற்கு முன், டென்மார்க் நாட்டில் குண்டஸ்ட்ரப் கால்ட்ரன் (Gundestrup Cauldron) என்னும் அண்டாவில் கஜலெட்சுமி உருவமும் சிந்து சமவெளி பசுபதி முத்திரை போன்ற ஒரு கடவுள் உருவமும் இருப்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதினேன். சென்ற வாரம் டென்மார்க் நாட்டு சூரிய ரதம் சிலை (Trundholm Sun Chariot) ரிக் வேதத்தில் சொல்லப்படது போல இருப்பது பற்றி எழுதினேன். அதற்குப் பின், போனவாரம் சுவீடன் நாட்டுத் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகருக்குப் போய் இருந்தேன். அங்குள்ள ஒரு மியூசியத்தில் இந்த வெண்கல புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மலரான் ஏரிக்கு (Lake Maleran) அருகில் ஹெல்கோ (Helgo) என்னும் இடத்தில் பூமிக்கடியில் இருந்து இந்த வெண்கலச் சிலை எடுக்கப்பட்டது. அத்தோடு எகிப்திய, அயர்லாந்திய, பைசாண்டிய பொருட்களும் கிடைத்ததால் இது ஒரு வணிகர் கொண்டுவந்த பொருளாக இருக்க வேண்டும் என்பது தொல்பொருட் துறையினரின் கருத்து.

இந்த புத்தர் சிலை வட இந்தியாவில் 1500 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. நெற்றியில் ஒரு திலகம் உள்ளது. இது ஞானக் கண்ணாகிய மூன்றாவது கண். புத்தர் இரண்டு தாமரை மலர் மீதான பீடத்தில் தியான நிலையில் அமர்ந்து இருக்கிறார்.

IMG_2168

Statue near T Centralen Tube Station in Stockholm.

மலரன் ஏரிக்கு அருகில் பிற்காலத்தில் பிர்கா என்னும் ஒரு புதிய வணிகத் துறைமுகமும் உருவானது. அங்கும் நிறைய பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டன. சுவீடன் நாடு கி.பி. 800 முதல் 1100 வரை வைகிங் என்னும் கடல் வணிகரின் வசம் இருந்தது. இவர்கள் நீண்ட உயரமான கப்பல்களை வைத்துக் கொண்டு உலகம் முழுதும் சென்று கொள்ளை அடித்தனர். தங்கம் தான் இவர்களுக்கு குறி. அதுமட்டுமல்ல. வட அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை காலனிகளையும் அமைத்தனர். கிட்டத்தட்ட பிரிட்டா னியர்கள், ஸ்பானியர்கள், போஸ்ர்ச்சுகீசியர் என்ன செய்தனரோ அதையே இவர்களும் செய்தனர். வைகிங் மன்னர்களின் வீர வரலாறுகளைக் கூறும் சாகா என்னும் இலக்கியமும் இவர்களிடம் உண்டு.

வைகிங் (Viking) மன்னர்கள் இறந்தால் அவர்களை கப்பல்களுடன் புதைத்து விடுவார்கள். 1999 ஏப்ரலில் பிரிட்டனில் சானல் 4 டெலிவிஷனில் வைகிங் பற்றி ஒரு செய்திப் படம் காட்டினார்கள். இவர்களைப் பற்றி அராபியர் எழுதிய விஷயங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சித்திரம் அது. அவர்களின் மன்னர்கள் இறந்தவுடன் அடிமைப் பெண்கள், தோழிகள், மனைவியர் எல்லோரையும் சேர்த்துப் புதைத்தனர் அல்லது எரித்தனர். இந்த வழக்கம் எகிப்திலும் இருந்தது. நம் நாட்டில் இமயம் முதல் குமரி வரை வழங்கிய சதி என்னும் வழக்கம் போன்றது இது.

IMG_2043

krishna on leaf

(Baby statue in The Royal Palace and the Hindu Krishna on Banyan leaf! Look at the similarity!

பாரிஸ் நகரில் கண்டுபிடித்தது போல ஏதேனும் இந்து மத தடயங்கள் ஸ்வீடன் நாட்டிலும் கிடைக்குமா என்று கேமராவுடன் அலைந்தேன். இரண்டு, மூன்று விஷயங்கள் கிடைத்தன. ஆனால் இவை அனைத்தும் ஊகங்களே. இந்துமத செல்வாக்கோ என்று எண்ணவைக்கிறது. அவ்வளவுதான்.

முதலில் நோபல் மியூசியம்(Nobel Museum) சென்றேன். அங்கு நோபல் பரிசு பெற்ற இந்தியர்களான அமார்த்ய சென், தாகூர், சர் சி வி ராமன், ஹரிகோவிந்த கொரானா ஆகியோர் பற்றிப் படித்தேன். சில புகைப்படங்களும் எடுத்தேன். (Please see the pictures on my Facebook page)

ராயல் பாலஸ் (The Royal Palace) எனப்படும் அரசர் மாளிகைக்கும் சென்றேன். அங்கு ஆலிலைக் கண்ணன் போல ஒரு குழந்தையின் பளிங்குச் (மார்பிள்) சிலை இருந்தது. அதையும் புகைப் படம் எடுத்தேன். ட்ரைசெந்த்ரலன் என்னும் (T centralen) ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் ஒரு பையன் இந்திய பத்மாசனம் போல் சம்மணம் போடு உட்கார்ந்ததையும் படம் எடுத்தேன். அண்மைக் காலத்தில் கட்டப்பட்ட இரண்டு இந்துக் கோவில்களும் ஸ்டாக்ஹோமில் உண்டு. சிட்டி ஹால் (The City Hall) என்னும் நகர மண்டபத்தில் பெண்கள் சிலைகள் கொடுத்த “போஸ்” நம்மூர்க் கோவில்களை நினைவுபடுத்தின.
என்னுடைய நண்பர் டாக்டர் சஞ்சீவி, ஸ்டாக்ஹோமில் 25 ஆண்டுகளாக வசிப்பதால் அவர்கள் வீட்டில் அறுசுவை விருந்தும், காரில் சவாரியும் கிடைத்தது.

IMG_2128
Picture of Indian Nobel Laureate Amartya Sen

வாழ்க ஸ்வீடன்! வளர்க தமிழ்!!

யாரிடமும் கற்கலாம்; எப்போதும் கற்கலாம்!!

rkp

கட்டுரை மன்னன்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1262; தேதி:– September 1, 2014.

சில ஆண்டுகளுக்கு முன், லண்டன் சவுத் இந்தியன் சொசைட்டி நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்தியாவில் இருந்து வந்திருந்ததால் எங்கெங்கே போயிருந்தீர்கள்? என்று வழக்கமான பல்லவியுடன் சம்பாஷணையைத் துவக்கினேன்.

திருப்பதிக்கு போனோம்; பெருமாளுக்கு கல்யாணம் செய்தோம் என்று அவரும் பேச்சைத் தொடங்கினார்.
அடக் கடவுளே! திருப்பதி பெருமாளுக்கு கல்யாணம் செய்வதென்றால் நிறைய பணம் செல்வாகுமே! ஏதாவது நேர்த்திக் கடனா? என்று கேட்டேன்.

இல்லை, இல்லை. வீட்டில் உள்ள பெருமாள் உண்டியலில் தினமும் ஒரு பவுண்ட் காசு போடுவேன். மூன்று ஆண்டுகளாக திருப்பதி போகாததால் நிறைய பணம் சேர்ந்துவிட்டது; ஆகவே கஷ்டமில்லாமல் பெருமாள் கல்யாணத்தை முடித்தோம் என்றார்.

என் மூளையில் மின்னல் வெட்டில் பளிச் சென்று ஒரு ‘ஐடியா’ உதித்தது. இந்தியாவில் இருந்து சில உண்டியல்கள் வாங்கி வந்திருந்தேன். அவைகளை வாங்கியதன் நோக்கம்: என் பிள்ளைகளுக்கு காட்டத்தான். அந்தக் காலத்தில் பாட்டி, அம்மா தரும் காசுகளை எப்படி உண்டியலில் சேர்ப்போம், அது நிறைவதற்குள் அதை உடைத்து காசை எடுத்து எப்படிச் செலவழிப்போம் என்ற கதைகளைச் சொல்ல வாங்கியது அவை.

என் சுய புராணத்தை சொல்லிய அந்தக் காலத்திலேயே உண்டியலும் அதன் பணியை இழந்துவிட்டது. இருந்தபோதிலும் தூக்கிப் போட மனம் இல்லாமல் ஒரு ஓரத்தில் வீசி எறிந்திருந்தேன். அன்றிரவு நிகழ்ச்சியில் இருந்து திரும்பி வந்தவுடன் அந்த உண்டியலைக் கண்டுபிடித்து சுவாமி அறையில் கடவுள் படத்திற்கு முன் வைத்தேன். ஒரு நல்ல நாள் பார்த்து தினமும் இரண்டு பவுண்ட் காசுகளைப் போடத் துவங்கினேன். ஒன்று கம்யயூனிட்டி டொனேஷன் (சமூகப் பணிகளுக்கு நன்கொடை) மற்றொன்று கோவில், தெய்வப் பணிகளுக்கு நன்கொடை என்று சங்கல்பம் செய்துகொண்டேன்.

இவ்வாறு சேர்ந்த பணத்தை ஒவ்வொருமுறை இந்தியாவுக்குப் போகும்போதும் கோவில்களுக்கும் சமூக நிறுவனங்களுக்கும் நன்கொடை கொடுப்பதில் செலவழித்தேன். இதில் பெரிய மன நிறைவு கிடைத்தது. எனது தந்தை தினமணி பொறுப்பு ஆசிரியராக வேலை பார்த்ததால் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அறிவித்த —பிடி அரிசி திட்டத்துக்கு தினமணியில் பெரிய பப்ளிசிடி கொடுத்ததோடு எங்கள் வீட்டிலும் ஒரு பானை வைத்து தினமும் அதில் பிடி அரிசி போட்டு வாரம் தோறும் கொடுத்து வந்தோம்.

லண்டனில் அதற்கு வாய்ப்பு இல்லாவிடிலும் உண்டியல் மூலம் அந்தப் பணிகளை இந்தியாவில் செய்யமுடிகிறது. லண்டனில் கேன்ஸர் (புற்று நோய்) உதவி நிகழ்ச்சிகள், மற்றும் பல நிதி உதவி நிகழ்ச்சிகளுக்கு கம்யூனிட்டி உண்டியல் பணத்தைச் செலவழிக்கிறேன். சொந்தமான யாத்திரை, பயணச் செலவுகளுக்கு இதில் இருந்து எடுப்பது இல்லை.

இதை இங்கே எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு:

1.இதைப் படிப்பவர்கள் யாராவது, வீட்டில் உண்டியல் வைத்து இப்படிச் சேர்த்தால் நிதி உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வழங்கலாம்.
2.யாரிடமிருந்தும் எதையும் கற்கக்கூடிய மாணவர்களாக நாம் வாழ்நாள் முழுதும் இருக்கவேண்டும் என்ற உண்மையையும் இதில் கற்க முடியும்.

sahanavatu

வி.ஜி.எஸ். சொல்லிக் கொடுத்த பாடம்
பாரதியார் வேலை பார்த்த மதுரை சேதுபதிப் பள்ளிக்ககூடத்தில் நானும் என் சகோதர்களும் படித்தோம். அங்கு பாரதியின் பெயரை சதா சர்வ காலமும் சொல்லி எங்களை எல்லாம் ஊக்குவித்த ஆசிரியர் வி.ஜி.எஸ். எங்களுக்குப் பல நல்ல விஷயங்களைச் செயல் மூலம் கற்பித்தார்.

அவர், எந்த புதுமையான விஷயத்தைப் பார்த்தாலும், நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய எந்தக் கவிதைகளைப் படித்தாலும் உடனே ஒரு (குயர்) நோட்டில் எழுதிவிடுவார். இவ்வாறு அவர் எழுதிய நோட்டுப் புத்தகங்களே ஏராளம். அவ்வப்போது பத்திரிக்கைகளுக்கும் அந்தத் துணுக்குகளை அனுப்புவார். அவை அமுதசுரபி, கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர் முதலிய பல பத்திரிக்கைகளில் வெளியாகும். இதைக் காட்டி எங்களையும் உற்சாகப் படுத்தியதால் நானும் என் சகோதரர்களும் எழுதத் துவங்கி னோம். 1960-ஆம் ஆண்டுகளில் நான் சேகரித்த பல விஷயங்களை இப்போதும் நானும் என் அண்ணனும் கட்டுரை எழுதப் பயன்படுத்து கிறோம்.

நாங்கள் தபால்தலை சேகரிக்கும் பழக்கத்தையும், பழைய காசுகள் சேகரிக்கும் பழக்கத்தையும் அவர் மூலம்தான் கற்றோம். அவரே வறுமையில் வாடிய பள்ளிக்கூட வாத்தியார்!
“சீனிவாசா, கொஞ்சம் காப்பிக்குப் பணம் வேண்டும்” என்று என் அண்ணனிடம் உரிமையோடு வாங்கிச் செல்வார். அப்படிப்பட்டவர், ஒவ்வொரு இந்திய தபால் தலை வெளியீடு நாள் அன்றைக்கும் சேதுபதி பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கும் தலைமைத் தபால் அலுவலகத்துக்குச் சென்று முதல் நாள் உறை வாங்கி புதிய தபால் தலையை ஒட்டி என் அண்ணனுக்கு தபாலில் அனுப்பிவிடுவார். இன்றும் அவை எங்களிடம் உள்ளன.

நேதாஜி வெளியிட்ட அரிய தபால்தலைகளைக் கூட கண்ணாடி ‘பிரேம்’ போட்டு எங்களிடம் கொடுத்துவிட்டார். அதில் அவர் கைப்பட

“விடுதலை பெறுவதன் நெடுநாள் முன்னரே
வீர சுபாஷ்போஸ் வெளியிட்டதாம் இவை”

என்ற கவிதை வாசகத்தையும் எழுதி எங்களிடம் கொடுத்துவிட்டார். அவ்வளவு பெருந்தன்மை.
இன்று அவர் பூத உடல் மறைந்து போனாலும் புகழ் உடம்பு நீடிக்கிறது. பாரதிக்கு மதுரையில் சிலைவைத்த அவருக்கு எங்கள் மனக் கோவிலில் என்றும் ஒரு சிலை உண்டு.
யாரிடமிருந்தும் எப்போதும் நல்ல விஷயங்களைக் கற்கலாம்!
நீங்களும் ஒரு குயர் நோட்டு எடுத்து பிடித்த விஷயங்களை எழுதுங்கள்.

–சுபம்–

Tamil Merchant who dumped Gold into Sea

maritime trade

Written by London Swaminathan
Post No. 1239; Dated 17th August 2014.

Tiruvalluvar was the author of the Tamil ethical book Tirukkural which is praised as Tamil Veda. He had a friend by name Elela Singan who was a rich merchant. He had several ships and exported lots of goods. He earned a lot of money and spent it on charities. He was the patron of the great poet Tiruvalluvar. He considered Tiruvalluvar as his Guru. Though we did not have ancient records to support Tiruvalluvar- Elela singan friendship, we have lot of stories passed by word of mouth. They were put to writing in the last two hundred years. Tamil encyclopaedia ‘Abidana Chintamani’ gives a short sketch about the merchant.

A Tamil king who ruled Sri Lanka for over 40 years was called Elara. People think that his name was also Elela Singan. But it is possible that there may be more than one person with the same name.

sailing ship pics 1600X1200

Episode 1
One day Tiruvalluvar went to the house of Elelasingan. Since Valluvar was doing weaving, he used to buy the yarn from him. He was stopped at the door and was told that Elela was doing puja to Lord Shiva (Hindu Prayer). Tiruvalluvar smiled and asked whether Elela was doing it in his prayer room or on the sea shore. Elela overheard this conversation and came running and fell at his feet. Actually Elela was thinking about the ships arriving on the day instead of Lord’s name. Tiruvalluvar was a mystic who could read his thoughts. From that day Elela took Valluvar as his Guru (spiritual teacher).

Vashishtiputra_Shri_Pulumavi
Satavahana coin with Indian ship

Episode 2
Once the ship loaded with lots of Elala’s goods ran aground. He sought the advice of Valluvar to rescue the stranded ship. Valluvar advised him to repeat the slogan Elela Ailesar, Elela Alisar and the ship was afloat again. From that time fishermen started repeating this slogan Elela Ailesar to travel safely. Since he was a philanthropist, his name did a miracle.

indian ship

Elela accumulated so much gold that even after doing lot of charity he had bars of gold. Again he went to his spiritual guru for advice. Valluvar asked him to dump them into sea. Probably Valluvar thought that this would make him an ascetic. One day the local fishermen came back to him with the same gold bars which he threw into the sea. Since his name was inscribed on them, fishermen could identify the owner. The gold bars were devoured by sharks and when the fishermen cut them open for selling they found the gold with his name! Valluvar told him that good people’s wealth will come back multi fold. The more they give the more they will get back. He composed a couplet on this incident (See Kural 659)

All profits, that make others weep, depart with tears
Even if lost, blessings flow from good deeds (couplet 659)

Hearsay stories tell us that he was the one who did funeral rites to Valluvar and built a temple for Valluvar in Mylapore, Chennai.

Elela’s name became proverbial. Even today Tamil proverbs like ‘Elela’s gold will come back even if it goes beyond seven seas’ spread his name and fame far and wide!

Souce: Abidana Chintamani (Tamil Encyclopaedia)