குரு– பரமகுரு — பரமேஷ்டி குரு — பராபர குரு!

Paramacharya-
Sri Kanchi Paramacharya Swami.

கட்டுரை எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1096; தேதி 10 ஜூன் 2014.

ஆதி சங்கரர் நிறுவிய சங்கர மடங்களில் யார் ஒருவர் சந்யாசம் கொடுக்கிறாரோ அவர் குரு என்று அழைக்கப்படுவார். அவ்வாறு சந்யாசம் பெறுபவர் தன்னுடைய குருவை வணங்குவதோடு, குருவுக்கு குரு, அவருக்கு குரு என்று பல தலை முறைகளையும் வணங்குவார். ஆனால் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு பட்டம் உண்டு.

1.குரு
2.குருவுக்கு குரு = பரம குரு
3.பரம குருவின் குரு = பரமேஷ்டி குரு
4.பரமேஷ்டி குருவின் குரு = பராபர குரு

காஞ்சி சங்கரமடத்தின் தலைவராக இருந்து 1994-ல் சமாதி அடைந்த ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை (பரமாசார்ய சுவாமிகள்) ஆன்மீக உலகம் முழுதும் அறியும். அவர் காமகோடி பீடத்தின் 68-ஆவது பட்டம். எல்லோரும் அவரைப் போற்றி வழிபட்டனர். அவருடைய பராபர குருவைப் பற்றி ஓரிரு சுவையான சம்பவங்கள் உண்டு.

பராபர குருவின் பெயரும் ‘’சந்திரசேகரர்’’தான். சொல்லப் போனால் ’சந்திரசேகரர்’’-5. நமது காலத்தில் நமக்கு அருள் பாலித்த பரமாசார்யார் ’சந்திரசேகரர்’’-6. அவருடைய பராபர குரு 1814 முதல் 1857 வரை பட்டம் வகித்தார். அவருடைய பூர்வாஸ்ரமப் பெயர் வேங்கட சுப்ரமண்ய தீக்ஷிதர். தஞ்சாவூர் மஹாராஜாவுக்கு அமைச்சராக இருந்த கோவிந்த தீக்ஷிதரின் பரம்பரையில் வந்தவர். மந்திர சாஸ்திரத்தில் வல்லவர். ஜம்புகேஸ்வரத்திலும் காஞ்சீ புரத்திலும் மீண்டும் யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்தவர்.

kanchi-tapas

முதல் கனவு

பராபர குரு அவர்கள் பல தலங்களுக்கு விஜயம் செய்துவிட்டு சென்னையை அடைந்தார். அவர் முகாமிட்ட இடம் சென்னை கோட்டை மதில் சுவருக்குள் இருந்தது. தம்புச்செட்டித் தெருவிலும் ஒரு மடம் இருந்தது. சென்னை சிஷ்ய கோடிகள் சிறப்பான பூஜைகளை குறைவின்றி நடத்தி வந்தனர். திடீரென்று ஒரு நாள் இரவில் பராபர குருவின் (சங்கராசார்யார்) கனவில் காமாட்சி அம்மன் தோன்றினாள். “ இதோ என் தலையைப் பார். என் தலை மயிர், எண்ணை இல்லாது சடையாய்ப் போய்விட்டதைப் பார். பாலாலயம் பண்ணியபின் எத்தனை நாட்களுக்கு தைலாபிஷேகம் இல்லாமல் இருப்பது? உனக்கு ஜீர்ணோத்தாரண கைங்கர்யத்துக்குப் பணம் தேவை என்றால் என்னைக் கேட்டால் கொடுக்க மாட்டேனா? எனக் கூறிவிட்டு மறைந்தனள்.

கனவில் வீசிய ஒளியினால் அப்போதே கண்விழித்த ஆசார்ய ஸ்வாமிகள், அப்போதே காஞ்சீபுரத்துக்குப் போகவேண்டும் என்று மடத்து அதிகாரிகளை எழுப்ப உத்தரவிட்டார்கள். அக்காலத்தில் சென்னைக் கோட்டையின் வாயில் கதவுகள் முன்னிரவில் பூட்டப்பட்டு, விடியற்காலையில்தான் திறப்பது வழக்கம். தன் உத்தேசத்தை செல்வாக்குடைய சில பக்தர்கள் மூலம் சொல்லி அனுப்பினார்கள். ஸ்ரீ ஸ்வாமிகளின் அபிப்ராயத்தை அறிந்த கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் கோட்டைக் கதவைத் திறக்க உத்தரவிட்டனர். பக்தர்களால் மாற்று போகிகளுக்கு (பல்லக்கு சுமப்பவர்களுக்கு) ஏற்பாடு செய்யப்பட்டது. பொழுது புலர்வதற்கு முன் ஸ்வாமிகள் சென்னையை விட்டுப் புறப்பட்டுவிட்டார்.

சென்னையிலிருந்து 40 மைல் தொலைவிலுள்ள காஞ்சீபுரத்தை அடைந்து அன்றே அம்பிகையைத் தரிசித்து தாரை தாரையாகக் கண்ணீர் சொரிந்தார்கள். சில தினங்கள் கழிந்தன. பணமும் பொருளும் முயற்சியின்றி குவிந்தன. மராமத்து வேலைகள் வெகு விரைவில் முடிந்தவுடன் காமாட்சி கோவில் கும்பாபிஷேகம் (ஜனவரி 22, 1840) சிறப்பாக நடந்தது.

shanakara face
Sri Adi Sankara

தாடங்கப் பிரதிஷ்டை

பஞ்சபூத க்ஷேத்ரங்களில் ஒன்றான ஜம்புகேச்வரமெனப்படும் திருவானைக்காவலில் கோயில் கொண்டு விளங்கும் ஸ்ரீ அகிலாண்டேச்வரீயின் காதுகளில் ஸ்ரீ ஆதி சங்கரர் தாடங்கங்களை (காதணி) பிரதிஷ்டை செய்தது உலகப் ப்ரஸித்தம். தாடங்கங்கள் சிதிலமடைந்து இருந்ததால் பக்தர்களும் கோவில் ஸ்தானீகர்களும் அந்த தாடங்கங்களை ஜீர்ணோத்தாரணம் செய்து பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று விக்ஞாபனம் செய்தார்கள். ஸ்வாமிகள் இதை ஏற்று 1844ஆம் ஆண்டு திருவானைக்காவலை அடைந்தார்.

ஸ்ரீ சிருங்கேரி மடத்தார் தங்களுக்கே தாடங்கப் பிரதிஷ்டை செய்ய உரிமை உண்டு என்று வழக்கு தொடுத்தனர். திருச்சிராப்பள்ளி பிரின்ஸிபல் ஸதர் அமீன் கோர்ட் (ஜூலை 1844), திருச்சி ஸிவில் கோர்ட், ஸதர் அதலத் உயர்நீதி மன்றம் ஆகிய மூன்று கோர்ட்டு களிலும் வழக்கு, அப்பீல், மேல் அப்பீல் எல்லாம் தள்ளுபடி செய்ய ப்பட்டன. நான்கு ஆண்டுக் காலம் நடந்த இந்த வழக்குகளுக்கு ஏராளமாக பொருட்செலவு ஆயிற்று.

மூன்று நீதிமன்றங்களினாலும் பரம்பரையாகக் காமகோடிபீடத்திற்கு அகிலாண்ட நாயகியின் தாடங்க ஜீர்ணோத்தாரண பாத்யதை ஊர்ஜிதப் படுத்தப்பட்டபின் , பராபர குரு ஸ்வாமிகள், காஞ்சியில் ஸ்ரீ காமாக்ஷிக்கு செய்தபடி, திருவானைக்காவல் அம்பிகை தாடங்கங்க ளுக்கும் கலாகர்ஷணம் செய்வித்து, தாடங்கங்களைப் புதுப்பித்தார். ஒரு நன்னாளில் பரமானந்தத்துடன், ஸ்ரீ அகிலாண்டேச்வரீ அம்பிகையின் காதுகளில் அவைகளைச் சாற்றி, தமக்கும், உலக மக்களுக்கும் தேவியின் பரமானுக்ரஹத்தை ஸம்பாதித்துக் கொண்டார்கள்.

chandrasekara-bharati-abinava-bharati

Sringeri Sankaracharyas Sri Abhinava Bharati and Sri Chandrasekara Bharati swamijis.

இரண்டாவது கனவு

ஸ்ரீ அகிலாண்டேச்வரீயின் தாடங்கங்கப் பிரதிஷ்டை ஸம்பந்தமாக நான்காண்டுக் காலம் நடந்த வழக்கினால் ஏற்பட்ட செலவுகளும்,, யாத்திரைக்கு வேண்டிய அதிகப்படியான பரிவாரங்களினால் ஏற்பட்ட செலவுகளும் சேர்ந்து மடத்திற்குப் பெரிய பளுவாகியது. இதை உணர்ந்த ஆசார்ய ஸ்வாமிகள் மடத்தின் நிர்வாகப் பொறுப்புள்ள அதிகாரிகளைக் கூப்பிட்டு, ‘அம்பிகையின் அனுக்ரஹத்தினால் நமது மடத்தின் பாரம்பர்யமான கைங்கர்யங்கள் ஸ்தாபிதமான மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இவ்வளவு பெரிய பணச் செலவையும், பாரத்தையும், மடத்திற்குப் பிற்காலத்தில் வரக்கூடிய நிர்வாஹி களுக்கு வைத்துவிட்டோமே என்பதை யோஜித்துப் பார்க்கும்போது, ச்ருங்கேரி ஸ்வாமிகள் ஆசைப்பட்டதை அவரே செய்துவிட்டுப் போகட்டுமே என்று இருந்திருக்கலாமே’’ என்று குறைப்பட்டு வருத்தத்துடன் தெரிவித்தார்கள்.

இதைச் செவியுற்ற — நான்கு வருடங்களாகத் தாடங்கங்கப் பிரதிஷ்டை வழக்கில் பிரதிவாதியாக இருந்து , இரவு பகலாகச் சலியாது உழைத்து வந்த மடத்தின் முக்ய அதிகாரி –, ஒருநாள் திடீரெனக் காணப்படவில்லை. எங்கு சென்றார் என்று ஒருவருக்கும் தெரியவில்லை.

ஒருவாரம் சென்றது. சோர்வடைந்த முகத்துடன் அவர் திருவானைக்காவல் மடத்திற்குத் திரும்ப வந்து சேர்ந்தார். அவர் வந்த விவரம் அறிந்த ஆசார்யாள், அவரை அழைப்பித்து, சில தினங்களாக எங்கு சென்றிருந்தார் என நிர்பந்தித்துக் கேட்டார்கள். தஞ்சாவூர் அரண்மனைக்குச் சென்று மஹாராஜாவை பேட்டிகண்டு கும்பகோணம் போகும் வழியில் தஞ்சாவூரில் மஹாசந்நிதானம் முகாமிடலாமா என்று கேட்டதற்கு, அரண்மனையில் தற்போது நிதி வசதி இல்லை என்றும் பின்னொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டார்கள். ஆகையால் மனக் கலக்கத்துடன் திரும்பி விட்டேன் என்றார்.

சில தினங்கள் கழித்து ஸ்ரீ ஆசார்யாள் திருவானைக்காவலை விட்டு கும்பகோணம் நோக்கி யாத்திரையை மேற்கொண்டார்கள். திருவையாறு வழியாக யாத்திரை திட்டமிடப்பட்டது. வண்டிகள், மாடுகள், குதிரைகள், யானை, ஒட்டகை சகிதம், திருவையாறு சாலையில் திரும்பிக் கொண்டிருந்த போது அரண்மனை சிப்பாய்கள் எதிர்பாராத வண்ணம் வண்டிகளையும், யானை, குதிரைகள் முதலிய யாவற்றையும் கட்டாயப்படுத்தி, தஞ்சாவூர் செல்லும் சாலையில் திரும்பச் செய்தனர். எதிர்த்தவர்களிடம் வேறு காரணம் ஏதும், சொல்லாது இது ராஜாவின் உத்திரவு என்று சொல்லி மிரட்டி அவர்களையும் தஞ்சை நோக்கித் திருப்பிவிட்டார்கள், அரண்மனை வீரர்கள்.

ஆசார்யாளின் பல்லக்கும் அங்கு வந்து அடைந்தது. அரண்மனை அதிகாரிகள் பூர்ணகும்பம் முதலிய மரியாதைகளுடன் வரவேற்று அழைத்துச் சென்றனர். சில தினங்களுக்கு முன் ஆசார்யாள் தஞ்சையில் முகாமிடுவதற்கான வஸதி இல்லை எனக் கூறின அரசரின் நிலையில் திடீர் மாற்றம் எப்படி ஏற்பட்டது? மஹா ராஜாவிற்குக் கனவில் ஸ்ரீசந்த்ரமௌளீச்வரர் தோன்றி உடனே ஆசார்ய சுவாமிகளை அழைத்து வந்து, எல்லாவித மரியாதை களுடன், ஸ்வாமி பூஜைக்கு ஏற்பாடு செய்யவேண்டுமென உத்திரவாகியதே காரணமெனத் தெரியவந்தது. கனவை நினை வாக்கினார் மஹாராஜா. பல நாட்கள் சிறப்பான பூஜைகள் நடைபெற்றன. பெரிய அம்பாரியில் நகரப் ப்ரதக்ஷிணம் நடத்தி வைக்கப்பட்டது. சுவாமிகளுடன் தஞ்சை நகர வீதிகள் வழியாக ராஜாவும் பவனி வந்தார். ஸ்வாமிகளுக்கு கனகாபிஷேகமும் செய்துவைத்தார். ஸ்வாமிகள் அமர்ந்திருந்த வெள்ளி அம்பாரியை மடத்திற்கே ராஜா அளித்தார்.

Source: காஞ்சி ஸ்ரீ பெரியவர்களின் ஸ்ரீ பராபகுரு ஸ்வாமிகளின் வ்ருத்தாந்தம், Book published by Brindavanam Trust,Kumbakonam, 1981.

தமிழுக்கு எத்தனை பெயர்கள்?

dwajasthamba

தொகுத்து எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1094 ; தேதி ஜூன் 9, 2014.

தமிழுக்குத்தான் எத்தனை பெயர்கள்?

தெய்வத் தமிழ், செந்தமிழ், முத்தமிழ், கன்னித் தமிழ், தென் தமிழ், தேன் தமிழ், பழந்தமிழ், ஞானத் தமிழ், திருநெறிய தமிழ், அமுதத் தமிழ், அருந்தமிழ், தண்டமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் இசைத் தமிழ், தன்னேரிலாத தமிழ், இயற்றமிழ், தீந்தமிழ், இருந்தமிழ், நாடகத் தமிழ், பசுந்தமிழ், கொழிதமிழ், பாற்றமிழ், சொற்றமிழ், பைந்தமிழ் – இப்படி எத்தனையோ பெயர்களை உடையது நம் தாய்த் தமிழ்.

ஆயினுமிவைகளில் இன்று பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தும் பாடல்கள் தெய்வத் தமிழ் பாடல்களே! ஆழ்வார்களும் நாயன் மார்களும், மாணிக்கவாசகர் போன்ற அடியார்களும் பாரதி போன்ற தெய்வீகக் கவிஞர்களும் பாடிய பாடல்களே காலத்தை வென்ற கவிதைகளாக மிளிர்கின்றன. திரைப்படப் பாடல்கள் எல்லாம் நேற்று முளைத்து இன்று மறையும் காளான்கள் போல மறைந்து விடு கின்றன. அவைகளில் பொருள் பொதிந்த தத்துவப் பாடல்கள் மட்டுமே காலத்தை எதிர்த்து நீச்சல் அடிக்கின்றன. அவைகளையும் சற்று ஆராய்ந்தால் அவை ஒரு தெய்வீகக் கவிஞரின் கருத்துகளை சிறிது எளிமைப் படுத்திய பாடல்கள் என்பது புரியும்!!

இதோ தமிழைப் போற்றும் சில பெரியோர்களின் பாடல்கள்:

annamalai ratham,fb

ஞானத் தமிழ்
கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவிய கடவுள்தன்னை
நல்லுரை ஞான சம்பந்தன் ஞானத்தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேடவல்லோர் தொல்லை வானவர் தங்களொடும்
செலுவர் சீரருளாற்பெற லாஞ்சிவ லோகமதே
திரு ஞான சம்பந்தர் 1-117-12

பிறவிஎனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவிஎனுந் தோற்றோணி கண்டீர் – நிறைஉலகில்
பொன்மாலை மார்பன்புனற் காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.
நம்பியாண்டார் நம்பி 11-11 ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
பூதத்தாழ்வார், இரண்டாம் திருவந்தாதி பாடல் 2182

ganesh and mango

திருநெறிய தமிழ்
அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கையலர்மேய
பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே
முதல் திருமுறை

அருந்தமிழ்
அலைபுனல் ஆவடுதுறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெமிறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
முதல் திருமுறை, சம்பந்தர்

கூடல் ஆலவாய்க் குழகன் ஆவது
அறியாது அருந்தமிழ்ப் பழித்தனன் அடியேன்
ஈண்டிய சிறப்பில் இணையடிக் கீழ் நின்று
வேண்டு மதுவினி வேண்டுவன விரைந்தே (பெருந்தேவபாணி)

pulik kodi

செந்தமிழ்
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல் உலகத்து
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
………….. ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே (பனம்பாரர் – பாயிரம்)

பிறந்த பிறவியிற் பேணியெஞ்செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண்டாகில் இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங்கூடுவரே
முதல் திருமுறை, சம்பந்தர்

செந்தமிழ்த்திறம் வல்லிரோ?
அந்திவானமும் மேனியோ? – (சுந்தரர் தேவாரம்)

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை
முத்தமிழும் நான்மறையும் ஆனான் (அப்பர் தேவாரம்)

alagarkoil

தென் தமிழ்
தென் தமிழ் நன்னாட்டு தீது தீர் மதுரை
— சிலப்பதிகாரம்
வடதிசை மருங்கின் மன்னர்க்கெல்லாம்
தென் தமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி
மண்தலை ஏற்ற வரைக — சிலப்பதிகாரம்

தென் தமிழ் உரைத்தோன் (கம்பன்)

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்
–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

21THIDOL_1524795g

தண்டமிழ்
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை (மணிமேகலை)

தள்ளாப் பொருள் இயல்பின்
தண் தமிழாய் வந்திலார்
கொள்ளார் இக்குன்று பயன் –(பரிபாடல் 9)

தண்டமிழ் நூற் புலவாணர்க்கோர் அம்மானே –(சுந்தரர்)

குழுவு நுண்தொளை வேயினும் குறிநரம்பு எறிவுற்று
எழுவு தண்தமிழ் யாழினும் இனிய சொற்கிளியே –(கம்ப இரா.அயோத்தி.சித்திர 28)

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை (மாணிக்கவாசகர், திருவாசகம்)

தன்னேர் இலாத தமிழ்
ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ் — (தண்டி அலங்காரம்)

26fr_Prabhu_Kudantharama

பசுந்தமிழ்
கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமொடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச்சில இலக்கணவரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ – (திருவிளையாடல், நாடு.57)

முத்தமிழ்
எத்திறத்தினும் ஏழுலகும் புகழ்
முத்து முத்தமிழும் தந்து முற்றுமே –(கம்பன்)

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை
முத்தமிழும் நான்மறையும் ஆனான் (அப்பர் தேவாரம்)

அலகிறந்தனை தலை சிறந்தனை
அருள் சுரந்தனை இருள் துரந்தனை
உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை
ஒன்றும் ஆயினை பலவும் ஆயினை
( காசிக் கலம்பகம் )

15.-Uma-maheshwar,Bhimakichaktemple,-Malhar

சொற்றமிழ்
மற்றுநீ வன்மை பேசி வந்தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை; நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார் — (பெரியபுராணம், சேக்கிழார்)

தமிழ்
தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென
வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ்
ஆனாப் பெருமை அகத்தியன்………………. (பன்னிருபடலம்)

காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !

நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !
-சுத்தானந்த பாரதியார்

18.-Door-Jamb,-Large-Vishnu-Temple,-Janjgir

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரை (சிறுபாணாற்றுப்படை)

இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும் (பிங்கலந்தை)

இன் தமிழ் இயற்கை இன்பம் (சிந்தாமணி 2063)

தமிழ் தழிய சாயலவர் சிந்தாமணி சுர.32)

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே (திருமூலர் திருமந்திரம்)

chola Nataraja2
கடவுள் தந்த தமிழ்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் (கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41)

சாறு சுவை எனக் கூற நின்று இட்ட
ஆரியம் தீந்தமிழ் என்மனார் அவையே
ஓரிருமகாரின் பேறுகண்டு அவற்றுள்
கன்னியந்தமிழின் செவ்வியைப் புணர்ந்தோய் (பொய்கையார்)

karikalan
தமிழால் வைதாரையும் வாழவைப்போன் (கந்தர் அலங்காரம்-22, அருணகிரிநாதர்)

பாரதியார், பாரதி தாசன் ஆகியோரின் பொன்மொழிகள் பாரதி பற்றிய கட்டுரைகளிலும், பாரதியுடன் 60 வினாடி பேட்டி, பாரதிதாசனுடன் 60 வினாடி பேட்டி ஆகிய கட்டுரைகளிலும் காண்க.

அருமையான 54 புறநானூற்றுப் பொன்மொழிகள்!

tamil kurathi

Compiled by London Swaminathan
Post No.1088; Dated 6th June 2014.

TAMIL TREASURE TROVE: 54 GOLDEN SAYINGS FROM PURANANURU
1.வீரம்
மரப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? ( மன்னன் வீரம்; ஔவையார், புறம் 90)

2.எலி போல திருடும் குணம் உடையாருடன் சேராதே
எலிமுயன்றனையராகி உள்ளதம்
வளன்வலியுறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ ! –(எலி போன்றோருடன் சேராதே; நல்லுருத்திரன், புறம் 190)

3.வழுதியின் ஆற்றல்: கடலுக்கு அணை போட முடியுமா?

நீர்மிகின் சிறையும் இல்லை; தீ மிகின்
மன்னுயிர் நிழற்றும் இலை;
வளிமிகின் வலியும் இல்லை! – (வழுதியின் ஆற்றல்; ஐயூர் முடவனார், புறம் 51)

4.முடிந்தால் சொல்லு, சொல்லியபின் செய்யாமல் இராதே
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும் வல்லே; – (முடிந்ததைச் சொல்லு; ஆவூர் மூலங்கிழார், புறம் 196

5.சான்றோர் சன்றோருடன் சேருவர்
என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே ! – (இனம் இனத்தோடு சேரும்; கண்ணகனார், புறம் 218)

6.மனைவி இறந்தாள், இன்னும் வாழ்கிறேனே! சீ,சீ!!
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே! –(மனைவி போயும் இன்னும் உயிர் இருக்கிறதே! சேரமான் மாக்கோதை, புறம் 245)

7.கணவனுடன் இறப்பதே மேல்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென, அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! – ( கணவன் சிதைத்தீயில் குதிப்பது குளத்தில் குளிப்பது போல; பெருங்கோப்பெண்டு, புறம் 245)

tamil kottil

8.சீ! உன்னை விட்டால் கதி இல்லை என்று எண்ணாதே!
பெரிதே உலகம் பேணுநர் பலரே
மீளிமுன்பின் ஆளிபோல
உள்ளம் உள்ளவிந்தடங்காது வெள்ளென
நோவா தோன்வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமருவாரே – ( உலகில் கொடுப்போர் அதிகம்; பெருஞ்சித்திரனார், புறம் 207)

9.நீ இருக்கும் வரை இனி நான் கூலிக்கு மாரடிக்கத் தேவை இல்லை
பீடில் மன்னர்ப் புகழ்ழ்ச்சி வேண்டி
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாதாகின்று எம்சிறு செந்நாவே! – (வாரி வழங்குகிறாய் மற்றவர்களைப் பொய்யாகப் புகழத்தேவையே இல்லை; வன் பரணர், புறம் 148)

10. பார்! மற்றவன் கொடுத்த யானை!
இரவலர் புரவலர் நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையுமல்லர்
இரவலர் உண்மையும் காணினி இரவலர்க்கு
ஈவோருண்மையும் காணினி நின்னூர்க்
கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானையெம் பரிசில்
கடுமான் தோன்றல் செல்வல் யானே- – (உலகில் கொடுப்போர் அதிகம்; பெருஞ்சித்திரனார், புறம் 162)

11.காசுக்காகப் பாடும் பரதேசி நான் அல்ல!
காணாது ஈத்தவிப் பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
தினையனைத்தாயினும் இனிதவர்
துணை யளவறிந்து நல்கினர் விடினே – (காசுக்காகப் பாடும் ஆள் அல்ல; பெருஞ்சித்திரனார், புறம் 208

12..உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே –
( உன்னை விடக் கொடுப்போர் உண்டு; அவ்வையார், புறம் 206)

13.பிச்சை எடுப்பது இழிந்ததுதான்
ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயெனென்றல் அதனினுமிழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேனென்றல் அதனினும் உயர்ந்தன்று – ( தா என்பது இழிந்தது; வன்பரணர், புறம் 204)

tamil curiosity

14.நல்லவரை மட்டுமே பாடுவேன்
பெரியவோதினும் சிறியவுணராப்
பீடின்று பெருகிய திருவிற்
பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே – (தகுதியற்றவரைப் பாடமாட்டோம்; மோசிகீரனார், புறம் 375)

15.புலவரைப் போய் உளவாளி என்று மடக்கிவிட்டாயே!
பெற்றது கொண்டு சுற்றமருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந்தன்றோ இன்றே – ( புலவர் வாழ்க்கை;கோவூர்க் கிழார் புறம் 47)

16.வரி விதிக்கும் போது அளவாக வரி விதி
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடியாத்து நாடு பெரிது நந்தும் – (வரி விதிப்பு; பிசிராந்தையார், புறம் 184)

17.கோள் சொல்பவரை நம்பாதே
வழிபடுவோரை வல்லறிதி நீயே
பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே
நீமெய்கண்ட குற்றம் காணின்
ஒப்ப நாடி அத்தகவொறுத்தி – (கோள் சொல்பவரை ஒதுக்கி, குற்றவாளிகளை தண்டிப்பாய்; ஊன்பொதி பசுங்குடையார், புறம் 10

18.உழவர்களைப் போற்று
நொதுமலாளர் பொது மொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரமோம்பிக்
குடிபுறந் தருவை யாயினின்
அடிபுறந் தருகுவர் அடங்காதோரே – (உழவரை ஆதரி; வெள்ளைக்குடி நாகனார், புறம் 35)

19.பரித்ராணாய சாதூனாம் விநாசாய துஷ்க்ருதாம் (தீயோரைப் பொசுக்கு)
கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க் களித்தலும்
ஒடியா மரபின் மடிவிலையாகி
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லையென்பார்க்கு இனனாகிலியர்—( கொடியோரை அழி; நாத்திகரை நம்பாதே; முதுகண்ணன் சாத்தனார், புறம் 29)

20.இன்று போல் என்றும் ஒன்றுபட்டு வாழ்க
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும்
உடநிலை திரியீராயின் இமிழ்திரைப்
பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யாகாதே – (ஒற்றுமை வாழ்க; காரிக்கண்ணனார், புறம் 58)

21.நினைத்தேன், வந்தாய்! என்ன அதிசயம்!
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே – பொத்தியார், புறம் 217

22.குழல் இனிது, யாழ் இனிது என்பர், குழந்தை இல்லார்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறுமக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே! – (குழந்தைகள் இல்லாத வாழ்வு இன்பம் தராது; அறிவுடைநம்பி, புறம் 188).

tamil lovers

23.ஈமக்கடன் நிகழ்த்த புதல்வன் பெற்ற பின் என்னிடம் வா!
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென
என்னிவணொழித்த அன்பிலாள
எண்ணாதிருக்குவை யல்லை
என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே பொத்தியார், புறம் 222

24.தைரியம் இருந்தால் போர் செய் அல்லது கோட்டையைத் திற
அறவையாயின் நினதெனத் திறத்தல்
மறவையாயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லையாகி
திறவா தடைத்த திண்ணிலைக் கதவின்
நீண்மதில் ஒருசிறை யொடுங்குதல்
நாணுத் தகவுடைத்துக் காணுங்காலே – புறம் 44, கோவூர்க் கிழார்

kannaki cooking

Following Thirty Golden sayings were already posted under June Calendar in Tamil

புறநானூற்றுப்பாடல்களில் இருந்து எடுக்கப்பட்ட 30 அருமையான மேற்கோள்கள் இந்த மாத காலண்டரை அலங்கரிக்கின்றன. சுருக்கமான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 ஞாயிற்றுக் கிழமை
நிலம் பெயரினும் நின்சொற் பெயரல் (உண்மையே கொள்கை – இரும்பிடர்த்தலையார், புறம் 3).

ஜூன் 2 திங்கட்கிழமை
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
– — (கெட்டவருடன் சேராதே; நரிவெரூஉத் தலையார், புறம் 5)

ஜூன் 3 செவ்வாய்க் கிழமை
நீரின்றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – (அன்னதானமே சிறந்தது; குடபுலவியனார், புறம் 18).

ஜூன் 4 புதன் கிழமை
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே – (உன்னை மதியாதோர் வீழ்க; நீ வாழ்க; ஐயூர் மூலங்கிழார். புறம் 21.)

ஜூன் 5 வியாழக் கிழமை
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப – (வல்லவரே வாழ்வர்; மாங்குடி கிழார், புறம் 24)

ஜூன் 6 வெள்ளிக்கிழமை
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வானவூர்தி
எய்துப,என்ப (புகழுடையோர் சுவர்க்கம் புகுவர்; முதுகண்ணன் சாத்தனார், புறம் 27)

ஜூன் 7 சனிக்கிழமை
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் , பிறத்தல் உண்மையும்
அறியாதோரை அறியக்காட்டி – (ஜனன,மரண சுழற்சியை விளக்குவாய்; முதுகண்ணன் சாத்தனார் புறம் 27)

bow 3
Chera Emblem

ஜூன் 8
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி — (எவர் வந்தாலும் உபசரி; உறையூர் முதுகண்ணன் சாத்தனார், புறம் 27)

ஜூன் 9
அதனால் அறமும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம் – (தர்ம, அர்த்த, காம ஆகிய மூன்றில் நிற்பவன் நீ; முதுகண்ணன் சாத்தனார், புறம் 28)

ஜூன் 10
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் – (தர்ம, அர்த்த, காம ஆகிய மூன்றில் தர்மமே பெரிது; கோவூர் கிழார், புறம் 31)

ஜூன் 11
நிலம்புடை பெயர்வதாயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் – (நன்றி மறக்காதே; ஆலத்தூர் கிழார், புறம் 34)

ஜூன் 12
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே! – (உழவே பெரிது; வெள்ளைக்குடி நாகனார், புறம் 35)

ஜூன் 13
என்றும் இன்சொல் எண்பதத்தை ஆகுமதி! – (இன்சொல் பேசு; ஆவூர் மூலங்கிழார் புறம் 40)

fish 1
Pandya Emblem

ஜூன் 14
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே –( நன்றே செய்க; நரிவெரூஉத் தலையார், புறம் 195)

ஜூன் 15
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால் நமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது – – (தர்மமே முக்கியம்; மருதன் இளநாகனார், புறம் 55)

ஜூன் 16
புலிசேர்ந்து போகிய கள்ளலை போல
ஈன்ற வயிரோ இதுவே,
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே! – (நான் வீரத் தாய்; காவற்பெண்டு, புறம் 86)

ஜூன் 17
—-தந்தயர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை! – (குழந்தை மழலை கடவுள் அருளியது; ஔவையார், புறம் 92)

ஜூன் 18
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா – (பத்ரம், புஷ்பம் எதையும் கடவுள் ஏற்பார்; கபிலர், புறம் 106)
tiger drawing 1
Choza Emblem

ஜூன் 19
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறநிலை வாணிகன் ஆய் அல்லன்! – ( மறு ஜன்மத்தில் பலனை எதிர்பார்த்து அல்ல; முடமோசியார், புறம் 134)

ஜூன் 20
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்; மெய் கூறுவல்! – (சோற்றுக்காக பொய் சொல்லேன்; மருதன் இளநாகனார், புறம் 139)

ஜூன் 21
‘எத்துணை ஆயினும் ஈதல் நன்று’ என,
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே—
(மறு ஜன்மத்தில் பலனை எதிர்பார்த்து அல்ல; பரணர், புறம் 141)

ஜூன் 22
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே !
(- எல்லோரும் சகோதரர்; கணியன் பூங்குன்றனார், புறம் 192)

ஜூன் 23
உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே;
– (இந்திர லோக அமிர்தம் கிடைத்தாலும் பகுத்து உண்பர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

bow and arrow

ஜூன் 24
–பிறர் அஞ்சுவதஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்
–( பழி என்றால் அதை வெறுப்பர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 25
அன்ன மாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோந்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே !
–( பிறருக்காக் உழைப்பவர் உள்ளதால் உலகம் நிலைத்து இருக்கிறது; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 26
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
– (கல்வி கற்பது மிக முக்கியம்; ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், – புறம் 183).

thathrupam pen

ஜூன் 27
நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்! – (நல்லாட்சி மிகவும் முக்கியம்; மோசிகீரனார், புறம் 186).

ஜூன் 28
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்;
அவ்வழி நல்லை வாழிய நிலனே! – (ராமன் இருக்கும் இடம் அயோத்தி; அவ்வையார், புறம் 187)

ஜூன் 29
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே ! (அடிப்படைத் தேவை; நக்கீரர், புறம் 189)

ஜூன் 30
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே – (தானமே சிறந்தது; நக்கீரர், புறம் 189).

Contact swami_48@yahoo.com

மூன்று முறை கணவனைச் சோதித்த அற்புதப் பெண்மணி !

YogaVasisthaTitleFinal

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1079; தேதி:- 2 June 2014.

This article was already posted in English.

வால்மீகி முனிவர் எழுதிய யோகவாசிஷ்டம் என்னும் வடமொழி நூல் ஒரு அற்புதமான நூல். இதில் 32,000 ஸ்லோகங்கள் உள்ளன. மஹாபாரதம், கதா சரித் சாகரம் (கதை கடல்) என்னும் இரண்டு நூல்களுக்கு அடுத்தபடியாக “நீண்ட நூல் வரிசை”யில் இடம் பிடிக்கிறது இந்த அரிய, பெரிய புத்தகம். இதில் வரும் கதைதான் சுடாலாவின் கதை.

மாளவ தேச இளவரசன் சிகித்வஜன், அதாவது மயில்கொடியோன். சௌராஷ்டிர தேச இளவரசி சுடாலா. பேரழகி. அழகிற்கு மேல் அறிவு. பழங்கால உலகின் ‘‘அறிஞி’’ கார்க்கிக்கு நிகர்.

சுடாலாவுக்கும், சித்வஜனுக்கும் கொட்டு மேளம்–கல்யாணம்! இளம் தம்பதி அரசாங்க தம்பதிகள் அல்லவா? போகாத இடமில்லை, சுற்றாத ஊர் இல்லை. வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் அனுபவித்துத் தீர்த்து விடுகின்றனர். வயதான மாளவ தேச மன்னன் முழு அதிகாரத்தையும் சிகித்வஜனிடம் ஒப்படைத்து விட்டு வனத்துக்குச் சென்று (வானப் ப்ரஸ்தம்) விடுகிறான்.

பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். இந்த தம்பதிகளுக்கும் வாழ்க்கை புளித்து விடுகிறது. புதுமைகளைச் சாதிக்க உள்ளம் துடிக்கிறது. அறிவாளி சுடலா ஆன்மீகக் கடலில் நீந்தத் துவங்குகிறாள். ஆனந்தம், பேரானந்தம்!! நாளடைவில் முகம் ஒளிவிடத் துவங்குகிறது. கணவனுக்கு ஒரே ஆச்சரியம். “அன்பே உன் முகத்தில் புத்தொளியைக் காண்கிறேன். என்ன காரணம்? ஏதேனும் புதிய பவுடர், வாசனைப் பொடி, வாசனைப் பூச்சு, வண்ணத் திரவம் பயன் படுத்துகிறாயா?” என்று கேட்கிறான். அவள் “நாதா! நான் கண்ணாடியில் பார்க்கையில் புதுமை எதையும் காணவில்லை. ஆனால் என் உள்ளத்தில் உண்மை ஓளி வீசுகிறது. புதிய ஆனந்தம் மலர்ந்துள்ளது” என்கிறாள். பின்னர் அதற்கான காரணங்களை ஆன்மீக பரிபாஷையில் விளக்குகிறாள். அவனுக்கு அது அதிகம் விளங்கவில்லை. அவளுக்கு மனதில் ஒருகுறை! புதிய ‘’மேக் அப் (வாசனைப் பொடி) போடுகிறாயா’’ என்று கணவர் கேட்டுவிட்டாரே! என்று.

yv1

கணவனும் ஆன்மீகப் பாதையில் செல்ல முயல்கிறான். நாட்டை நன்றாக ஆட்சி செய்யும் மன்னனுக்கு மனதை ஆளத் தெரியவில்லை. இகலோக வாசனைகள் அவனை இழுத்துப் புரட்டி அடிக்கின்றன. ஆன்மீகத்தில் வளர முடியவில்லை. ஒரு நாள் மனைவியிடம், “நான் காட்டுக்குப் போகிறேன் அங்குதான் நல்ல தவம் செய்ய முடியும்” என்கிறான். அவளோ “நாட்டில் அடைய முடியாததைக் காட்டில் அடைவது எப்படி?” என்கிறாள். மறு நாள் காலையில் பாதி படுக்கை காலியாக இருக்கிறது! கணவன் இரவோடிரவாக கானகம் ஏகிவிட்டான்.

நாடாளும் பொறுப்பு முழுதும் பெண்ணரசியின் தலையில் விழுகிறது. நாட்டை நன்றாக ஆளுகிறாள். ஒரு நாள் கானகம் சென்று “சுக்கான் ஒடிந்த கப்பலைப் போல” காட்டில் திரியும் கணவன் முன், ஒரு (ஆண்) துறவி போல மாற்றுருவில் காட்சி தருகிறாள். அவளுடைய யோக சக்தியால் அவள் நினத்த உரு எடுக்க முடியும்!

“என் பெயர் கும்பா (ஆணின் பெயர்). நான் ஒரு துறவி. உன் மனக் கஷ்டம் எனக்குத் தெரியும். நீ மன அமைதி பெற நான் வழி சொல்லித் தருகிறேன். வெளியில் காணப் படும் வசதிகளை மட்டும் துறப்பது மன அமைதி நல்காது. பற்றற்ற மன நிலை வேண்டும்”– என்றெல்லாம் உபதேசம் செய்தவுடன் சிகித்வஜன் ஆழ்ந்த தியானத்தில் இறங்கி விடுகிறான்.

கும்பன் (சுடாலா) ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி நாட்டின் தலை நகருக்குப் போய் அரசுப் பணிகளைக் கவனிக்கிறாள். சின்னாட்களுக்குப் பின் காட்டிற்கு வந்தபோது சிகித்வஜன் கற்பாறை போல் அமர்ந்து சமாதி நிலையில் இருக்கிறான். கும்பன் திரும்பிச் சென்று மீண்டும் வந்தபோதும் இதே நிலை! யோக சக்தியால் சிங்க நாதம் ( சிம்ம கர்ஜனை) செய்தும் பலனில்லை. பின்னர் தன் யோக சக்தியால் சிகித்வஜனுடைய மனதில் வேற்றுருவில் நுழைந்து சமாதியைக் கலைக்கிறாள்.

yoga-vasistha2

முதல் சோதனை
கணவனைச் சோதிக்க எண்ணி பல சோதனைகளை முன்வைக்கிறாள். ஒரு நாள் வெளியே போய்விட்டுக் கும்பன் (சுடாலா), முகத்தைச் சோகமயமாக வைத்துக் கொண்டு திரும்புகிறான். உடனே சிகித்வஜன், “துறவியாரே, உங்கள் முகம் வாட்டம் அடைந்திருக்கிறதே; காரணம் என்னவோ? என்று கேட்கிறான். கும்பனோ இந்திரலோகத்துக்குப் போய்விட்டு வரும் வழியில் துர்வாச முனிவர் பற்றி தமாஷ் (ஜோக்) செய்ததாகவும் அவர் தான் இரவு நேரம் முழுதும் பெண்ணுருவுக்கு மாறி விடுவேன் என்று சாபம் கொடுத்துவிட்டதாகவும் கூறுகிறான்.

இதைக் கேட்ட சிகித்வஜன், அதனால் என்ன? நீங்கள் இரவில் பெண் ஆனால் தனியாக ஒரு புறத்தில் ஒதுங்கி இருந்துவிட்டுப் போங்களேன் என்று சொல்லிவிடுகிறான். இரவும் வந்தது. கும்பன் ஒரு மறைவிடத்தில் நின்றுகொண்டு தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை எல்லாம் மிகவும் அங்கம் அங்கமாக வருணிக்கிறான். பின்னர் தான் வெளியே வரப் போவதாக எச்சரித்துவிட்டு பேரழகி போலத் தோன்றுகிறான். இனி தன் பெயர் மதனிகா என்றும் சொல்லிக் கொள்கிறான். மெல்ல மெல்ல நெருங்கிவந்து அவன் தோள் மீது கைகளை வைத்து நானும் நீயும் கணவன் மனைவி போல வாழ்வோம் என்றவுடன் சிகித்வஜனும் உடன்படுகிறான். ஆனால் அவன் மன நிலை துறவி நிலையீல் இருக்கிறது. உடல் மட்டும் பற்று இல்லாமல் மதனிகா இழுத்த இழுப்புக்கு எல்லாம் செல்கிறது. மதனிகாவுக்கு (கும்பன்=சுடாலா) மிகவும் சந்தோஷம், தனது கணவன் முதல் சோதனையில் வெற்றி பெற்றுவிட்டான் என்று.

இரண்டாம் சோதனை
பகல் நேரத்தில் எல்லாம் கும்பனாகவும் இரவு நேரத்தில் எல்லாம் மதனிகாவாகவும் காட்சி தரும் சுடாலா ஒரு மாய இந்திரனை தோன்றும் படி செய்கிறாள். அவன் சிகித்வஜனிடம் சென்று, “நாட்களை எல்லாம் இப்படி வீண் அடிக்கிறீர்களே! நீங்களோ தவத்தில் உயர் நிலையை எய்துவிட்டீர்கள். இந்திர லோக இன்பங்களை அனுபவிக்க என்னுடன் வாருங்களேன்” என்கிறான். அதற்கு சிகித்வஜனோ இன்பம் என்பது நம்முள் இருக்கும் போது வெளியே தேடுவது அறிவுடைமை ஆகாது” என்று கூறுகிறான். மாய இந்திரன் திடீர் என்று மறைந்து விடுகிறான். கும்பனுக்கு ( சுடாலா) ஏக மகிழ்ச்சி. தன் கணவன் இரண்டாம் சோதனையிலும் வெற்றி பெற்றுவிட்டான் என்று.

முதல் சோதனை காமம் தொடர்பான சோதனை; இரண்டாம் சோதனை மோஹம் தொடர்பான சோதனை. இதில் வெற்றி பெற்ற கணவனுக்கு க்ரோதம் (கோபம்) தொடர்பான சோதனையைத் தர சுடாலா திட்டம் தீட்டுகிறாள்.

yoga_vasistha3

மூன்றாவது சோதனை

ஒரு நாள் மாலை நேரத்தில், தனது யோக சக்தியால், அழகிய ஆண்மகனை உருவாக்குகிறாள். மதனிகா உருவில் அவனைக் கட்டித் தழுவி இன்பம் துய்க்கிறாள். வெளியில் இருந்து வந்த சிகித்வஜன் இதைப் பார்த்தும் மனம் சஞ்சலப்படவில்லை; கோபப்படவும் இல்லை. மதனிகா மெதுவாக அந்த ஆண்மகனை அனுப்பிவிட்டு சிகித்வஜனிடம் மன்னிப்பு கேட்கிறாள். தன்னை மீண்டும் மதனிகா என்னும் மனைவியாகக் கருத வேண்டும் என்றும் இனிமேல் தப்பு செய்ய மாட்டேன் என்றும் கெஞ்சுகிறாள்.

சிகித்வஜன், ‘’அதனால் என்ன, நீ உணர்ச்சிக்கு அடிமையாகி இதைச் செய்துவிட்டாய். அது உன் முடிவு;– எனக்குத் தொடர்பேதும் இல்லை.கணவந்மனைவி உறவு இனி தேவை இல்லை. இனி நீ இரவு நேரத்தில் மதனிகாவாகவும், பகல் நேரத்தில் கும்பனாகவும் என்னுடன் ‘’நண்பன்’’ என்ற முறையில் தங்கி இருக்கலாம் என்கிறான். கொஞ்சமும் கோபம் அடையவில்லை. மதனிகாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மூன்றாவது சோதனையிலும் கணவன் வெற்றி பெற்று விட்டான் என்று!

உடனே தனது சுயரூபத்தில் சுடாலாவாகத் தோன்றுகிறாள். சிகித்வஜனுக்கு ஒரு பக்கம் குழப்பம், மறு பக்கம் வியப்பு. தானே மதனிகாவாவும், கும்பனாகவும் தோன்றி அவனைச் சோதித்ததாகவும் அவன் இப்போது மிக உயர்ந்த ஜீவன் முக்தன் ( நடமாடும் தெய்வம்) நிலை அடைந்து விட்டதாகவும் சொல்கிறாள். தன்னை மீண்டும் பணிவுடைய சுடாலா என்னும் மனைவியாக ஏற்க வேண்டும் என்றும் மன்றாடுகிறாள். சிகித்வஜன், “வா , நானும் நீயும், துறவி ஆவோம்” என்று சொல்கிறான். ஆனால் சுடாலாவோ, நீங்கள் ராஜாவாக ஆளவேண்டும். மக்களுக்கு இப்போதுதான் சேவை செய்ய முடியும் என்கிறாள். உடனே இரண்டாவது பட்டாபிஷேகம் தடபுடலாக ஏற்பாடாகிறது. அவர்கள் இருவரும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு இனிதே ஆட்சி புரிகின்றனர் என்று யோக வாசிஷ்டம் கூறுகிறது.

(வடமொழியில் 10,000 ஆண்டுகள், 60,000 ஆண்டுகள், 60,000 மனைவியர் என்று சொல்வதெல்லாம் மரபுச் சொற்றொடர்கள். அதன் உண்மைப் பொருள் “நீண்ட நெடுங்காலம்” என்பதே!)

மன்னனை வென்ற புத்திசாலிப் புலவன்

memory

கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.1075; தேதி:- 31/5/14
(This is already published in English under Three Amazing Stories on Memory Power)

அபாரமான, அபூர்வமான நினைவாற்றல் பற்றி சில கதைகள் எழுதினேன். இதோ மேலும் ஒரு சுவையான நிகழ்ச்சி. இது திருவிளையாடல் புராண தருமி கதை போன்றது.

ஒரு மன்னனுக்கு கவிதை என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் மிகவும் சந்தோஷமாக இருக்கையில் “பொருள் புதிது, சுவை புதிது, சோதி மிக்க நவ (புது) கவிதை” எழுதி வரும் புலவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று அறிவித்தார்.. அவருடைய அரசவையில் ஏழு புலவர்கள் இருந்தனர். அவர்களுக்கு அபார நினைவாற்றல் உண்டு. யாரோ ஒரு புலவன் ஒரே கவிதை மட்டும் எழுதி இவ்வளவு காசு பெறுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. சொல்லப் போனால் பொறாமைதான்.

ஏழு பேரும் கூடி திட்டம் வகுத்தனர். அவர்களில் ஒருவர் ஏகாக்ரஹி. அதாவது எதையாவது ஒரு முறை கேட்டால் போதும், அதை அப்படியே சொல்லும் அபூர்வ நினைவாற்றல் உடையவர். மற்றவர் இரண்டு முறை கேட்டால் சொல்லி விடுவார். இப்படியே ஒருவர், மூன்று முறை கேட்டால் இன்னொருவர் 4 முறை கேட்டால் திருப்பிச் சொல்லும் ஆற்றல் இருந்தது.

karikalan

ஒவ்வொரு புலவரும் புதுக் கவிதை எழுதி வாசித்த போதெல்லாம், ஏகாக்ரஹி எழுந்து இது புதுக் கவிதை அல்லவே, எனக்கு முன்னமே தெரியும், இதோ சொல்கிறேன் என்று சொல்லிவிடுவார்! இப்படியே இரண்டாமவர் எழுந்து, ஆமாம் முதல் புலவர் சொன்னது முற்றிலும் உண்மை எனக்கும் தெரியும் என்று சொல்லி அவரும் ஒப்பித்து விடுவார். அதற்கு மேல் மூன்றாவது புலவருக்கு வேலையே இருக்காது. வந்த புலவர் குழம்பிப் போய் வெளியே போய்விடுவார். அவைப் புலவர்களின் அபூர்வ நினைவாற்றலால் இதைச் சாதிக்க முடிந்தது.

இப்படி ஒவ்வொரு புலவரின் புதுக் கவிதையும் பரிசு பெறாமல் போனதுடன் புலவர்களுக்கு எல்லாம் தலையில் குழப்பம், கிறுக்கே பிடித்துவிடும் போல இருந்தது. அந்த ஊரில் இருந்த ஒரு புத்திசாலிப் புலவனுக்கு ராஜ சபையில் இருந்த புலவர்களின் திருட்டுத்தனம் புரிந்தது. அவர் கள்ளனுக்கும் குள்ளன்! அவைப் புலவர்கள் எட்டு அடி பாய்ந்தால் இவர் 16-அடி பாயும் புலமைப் புலி. ஒரு அருமையான கவியுடன் அவைக்குச் சென்றார்.

மன்னர் வழக்கம் போல ஏழு அவைப் புலவர் புடை சூழ கவிதையை ரசிக்கத் தயாரானார்.’ மன்னாதி மன்னா! உன்னப்பன் என்னப்பனிடம் கடன் வாங்கிய பத்தாயிரம் பொற்காசுகளை இன்னும் தராமல் காலம் கழிப்பது ஏனோ? இது நீதியா? நியாயமா? தருமமா? என்று பொருள் தொனிக்கும் கவிதையைப் பொழிந்தார். மன்னருக்கு ஒரே ஆத்திரம். நிறுத்துங்கள், புலவரே. அப்படி என்னப்பன் கடன் வாங்கி இருந்தால் இந்தப் புலவர்களுக்குத் தெரியாமல் இராது. இவர்கள் என்னப்பன் ராஜாவாக இருந்த காலத்தில் இருந்து அவைப் புலவர்களாக் இருக்கின்றனர் என்றான் மன்னன்.

வழக்கமாக வந்த புலவரின் புதுக் கவிதைகளை மனனம் செய்தும் அவைப் புலவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர். திருட்டு முழி முழித்தனர். உண்மை என்று சொல்லி புதுக் கவிதையை மீண்டும் சொல்ல முடியவில்லை! சொன்னால் தலை போய்விடும். புதுக் கவிதை வாசித்த புலவருக்கு ஒரே மகிழ்ச்சி. மன்னா! நான் புதுக் கவிதைக்காக அப்படிச் சொன்னேன். உன் தந்தை உன்னைவிட கொடையாளி. அவன் கை ”கொடுத்தே அறியும், வாங்கி அறியாது” என்றவுடன் மன்னனுக்கு மகிழ்ச்சி. பன்மடங்கு கூடுதலாகப் பரிசு வழங்கி புலவரை அனுப்பிவைத்தான். அவைப் புலவர்களின் கொட்டம் ஒடுங்கியது!

நினைவாற்றல் பாராட்டத்தக்கதே, அதைத் தீய வழியில் பயன்படுதினால் ஆய்ந்தவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பொறுப்பரோ? பொறார்!!

contact swami_48@yahoo.com

சிந்தனைச் சிற்பிகள் காலண்டர் (ஜய- ஜூன் 2014)

tamil puu parithal

Post No. 1073; Date: 30 May 2014.
தயாரித்தவர்: லண்டன் சுவாமிநாதன் (C)

புறநானூற்றுப்பாடல்களில் இருந்து எடுக்கப்பட்ட 30 அருமையான மேற்கோள்கள் இந்த மாத காலண்டரை அலங்கரிக்கின்றன. சுருக்கமான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாத முக்கிய நாட்கள்: ஜூன் 11 (புதன்) —வைகாசி விசாகம்;
பௌர்ணமி:– 13, ஏகாதசி:–9 & 23, அமாவாசை:– 26 சுபமுகூர்த்த நாட்கள்:– 2,8,18,30.

ஜூன் 1 ஞாயிற்றுக் கிழமை
நிலம் பெயரினும் நின்சொற் பெயரல் (உண்மையே கொள்கை – இரும்பிடர்த்தலையார், புறம் 3).

ஜூன் 2 திங்கட்கிழமை
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
– — (கெட்டவருடன் சேராதே; நரிவெரூஉத் தலையார், புறம் 5)

ஜூன் 3 செவ்வாய்க் கிழமை
நீரின்றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – (அன்னதானமே சிறந்தது; குடபுலவியனார், புறம் 18).

ஜூன் 4 புதன் கிழமை
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே – (ஊனை மதியாதோர் வீழ்க; நீ வாழ்க; ஐயூர் மூலங்கிழார். புறம் 21.)

ஜூன் 5 வியாழக் கிழமை
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப – (வல்லவரே வாழ்வர்; மாங்குடி கிழார், புறம் 24)

ஜூன் 6 வெள்ளிக்கிழமை
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வானவூர்தி
எய்துப,என்ப (புகழுடையோர் சுவர்க்கம் புகுவர்; முதுகண்ணன் சாத்தனார், புறம் 27)

ஜூன் 7 சனிக்கிழமை
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் , பிறத்தல் உண்மையும்
அறியாதோரை அறியக்காட்டி – (ஜனன,மரண சுழற்சியை விளக்குவாய்; முதுகண்ணன் சாத்தனார் புறம் 27)
karikalan

ஜூன் 8
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி — (எவர் வந்தாலும் உபசரி; உறையூர் முதுகண்ணன் சாத்தனார், புறம் 27)

ஜூன் 9
அதனால் அறமும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம் – (தர்ம, அர்த்த, காம ஆகிய மூன்றில் நிற்பவன் நீ; முதுகண்ணன் சாத்தனார், புறம் 28)

ஜூன் 10
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் – (தர்ம, அர்த்த, காம ஆகிய மூன்றில் தர்மமே பெரிது; கோவூர் கிழார், புறம் 31)

ஜூன் 11
நிலம்புடை பெயர்வதாயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் – (நன்றி மறக்காதே; ஆலத்தூர் கிழார், புறம் 34)

ஜூன் 12
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே! – (உழவே பெரிது; வெள்ளைக்குடி நாகனார், புறம் 35)

ஜூன் 13
என்றும் இன்சொல் எண்பதத்தை ஆகுமதி! – (இன்சொல் பேசு; ஆவூர் மூலங்கிழார் புறம் 40)

ஜூன் 14
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே –( நன்றே செய்க; நரிவெரூஉத் தலையார், புறம் 195)

ஜூன் 15
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால் நமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது – – (தர்மமே முக்கியம்; மருதன் இளநாகனார், புறம் 55)

tamil veeran

ஜூன் 16
புலிசேர்ந்து போகிய கள்ளலை போல
ஈன்ற வயிரோ இதுவே,
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே! – (நான் வீரத் தாய்; காவற்பெண்டு, புறம் 86)

ஜூன் 17
—-தந்தயர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை! – (குழந்தை மழலை கடவுள் அருளியது; ஔவையார், புறம் 92)

ஜூன் 18
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா – (பத்ரம், புஷ்பம் எதையும் கடவுள் ஏற்பார்; கபிலர், புறம் 106)

ஜூன் 19
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறநிலை வாணிகன் ஆய் அல்லன்! – ( மறு ஜன்மத்தில் பலனை எதிர்பார்த்து அல்ல; முடமோசியார், புறம் 134)

ஜூன் 20
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்; மெய் கூறுவல்! – (சோற்றுக்காக பொய் சொல்லேன்; மருதன் இளநாகனார், புறம் 139)

ஜூன் 21
‘எத்துணை ஆயினும் ஈதல் நன்று’ என,
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே—
(மறு ஜன்மத்தில் பலனை எதிர்பார்த்து அல்ல; பரணர், புறம் 141)

ஜூன் 22
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
பெரியோரை விஅய்த்தும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே !
– எல்லோரும் சகோதரர்; கணியன் பூங்குன்றனார், புறம் 192

tamil curiosity

ஜூன் 23
உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே;
– (இந்திர லோக அமிர்தம் கிடைத்தாலும் பகுத்து உண்பர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 24
–பிறர் அஞ்சுவதஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்
–( பழி என்றால் அதை வெறுப்பர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 25
அன்ன மாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோந்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே !
–( பிறருக்காக் உழைப்பவர் உள்ளதால் உலகம் நிலைத்து இருக்கிறது; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 26
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
– (கல்வி கற்பது மிக முக்கியம்; ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், – புறம் 183).

ஜூன் 27
நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்! – (நல்லாட்சி மிகவும் முக்கியம்; மோசிகீரனார், புறம் 186).

ஜூன் 28
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்;
அவ்வழி நல்லை வாழிய நிலனே! – (ராமன் இருக்கும் இடம் அயோத்தி; அவ்வையார், புறம் 187)

ஜூன் 29
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே ! (அடிப்படைத் தேவை; நக்கீரர், புறம் 189)

ஜூன் 30
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே – (தானமே சிறந்தது; நக்கீரர், புறம் 189).

contact swami _ 48@yahoo.com

பிராமணர்களை இந்திரன் கொலை செய்தது ஏன்?

Indra (1)

கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1071; தேதி:- 29 May 2014.
(இக் கட்டுரை ஏற்கனவே ஆங்கிலத்தில் என்னால் வெளியிடப்பட்டது)

வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே — பாரதியார்

உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் இந்திரனின் சாகச் செயல்கள்தான் அதிக இடத்தைப் பிடிக்கின்றன. நாலில் ஒரு பகுதி துதிகள் இந்திரனைப் (250 துதிகள்) பற்றியதே. தமிழினத்தின் மிகப் பழைய நூலான தொல்காப்பியமும் இந்திரனை , தமிழர் கடவுளாகப் போற்றுகிறது. கரிகால் சோழன் நடத்திய பெரிய விழா இந்திர விழா! ஆனால் சங்க இலக்கிய த்தின் 18 நூல்களில்– 27,000 வரிகளில்— இல்லாத ஒரு அபாண்டப் பொய்யை வெள்ளைக்காரகள் சொன்னதை இன்றுவரை பல தமிழக அறிவிலிகள் பரப்பி வருகின்னர்.

இந்திரன் என்பவன் ஆரிய இனத் தலைவன் என்றும் அவன் தஸ்யூக்கள் என்னும் கருப்பர்களைக் கொன்றதாகவும் வெளி நாட்டு ‘’அறிஞர்கள்’’ எழுதிவருகின்றனர். உலகிலேயே அதிகமான பழைய நூல்களைக் கொண்டது சம்ஸ்கிருத மொழி. தமிழைப் போல பன்மடங்கு இலக்கியம் உடைய, சம்ஸ்கிருத மொழியில் ஒரு நூலிலும் ஆரிய ,திராவிட இனவாதக் கொள்கை இல்லை.தமிழிலும் இல்லை.

வெளிநாட்டுக்காரர்கள் எழுதியதற்கு நேர் மாறான விஷயங்கள்தான் நம் இலக்கியத்தில் இருக்கின்றன.
1.அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் பிராமணர்களாகிய பிருஹஸ்பதியும் சுக்ராசார்யாரும்தான் ஆசிரியர்கள். இதை சங்க இலக்கியப் பாடல்களும் உறுதி செய்வதை ஏற்கனவே கொடுத்துவிட்டேன்.

2.அசுரர், தேவர், நாகர் முதலிய யாவரும் ஒரு தாய் வயிற்றுப் புதல்வர்கள்.
3.தஸ்யூகளைக் கொன்ற இந்திரன் பிராமணர்களையும் கொன்றான். அவன் இப்படிப் பிராமணர்களைக் கொன்றதை, இந்தியா முழுதும் உள்ள ஸ்தல புராணங்களும் ,ராமாயண மஹாபாரத, புராணங்களும் பக்கம் பக்கமாக எழுதி இருக்கின்றன. முப்பதுக்கும் மேலான அசுரர்களைக் கொன்ற இந்திரனின் மிகப் பெரிய வெற்றி– விருத்திராசுரனைக் கொன்றதுதான். அவன் ஒரு பிராமணன். அவனது அண்ணன் திரிசிரஸ் இந்திரனால் கொல்லப்பட்டான். அவனும் ஒரு பிராமணன்.

4.இந்திரனால் மானபங்கப்படுத்தப்பட்ட அஹல்யையும் பாப்பாத்தி.! இந்திரனால் எத்தி உதயப்பட்ட முனிவன் அகத்தியனும் பார்ப்பனன். இந்திரனைப் பிடித்துக்கொண்ட மிகப்பெரிய பாவம்—பிரம்மஹத்தி. அதாவது பிராமணனைக் கொன்றால் வரும் பாபம். இதற்காக அவன் இந்தியா முழுதும் சென்ற கோவில் குளம், ஆறு, மலை, ஏரி பற்றி உள்ள ஸ்தல புராணங்கள் ஆயிரம் ஆயிரம்!!

18 Banteay Srei Indra on Airavata, photograph by Anandajoti Bhikkhu
Indra in Cambodia

இவ்வளவு ஆதாரங்கள் இருக்கையில் வெள்ளைக்கார, வெளிநாட்டுக்கார ‘’அறிஞர்கள்’’ எப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தார்கள்? அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். இந்து மத நூல்கள் கடல் போலப் பெருகியவை. மற்ற மத நூல்களையோ ஒரே மூச்சில் சில மணி நேரத்தில் படித்து முடித்து விடலாம். அவை எல்லாம் நேற்று வந்தவை. ஆனால் காலத்தைக் கடந்து நிற்கும் இந்து மதத்திற்கோ பல்லாயிரம் நூல்கள். ஆங்கிலம் படித்த ‘அரைவேக்காடு’கள், இந்துமத ராமாயணத்தையோ, மஹாபாரதத்தையோ ‘’ஒரிஜினலில் ‘’முழுக்க படித்ததே இல்லை. அவர்கள் படிப்பதெல்லாம் ஆங்கிலத்தில் எதிர்மறையில் எழுதப்பட்ட கட்டுரைகள் அல்லது வெற்று வேட்டுப் பட்டிமன்றங்கள்தான். மாதா, பிதா, குரு ஆகியவர்களை விட அதிகம் மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆங்கிலத்தில் எழுதப்படும் கட்டுரை யாளர்களே என்பது அந்த அறிவிலிகளின் ஏகோபித்த முடிவு.

இந்த பலவீனங்களை அறிந்த வேற்று மத, வெளிநாட்டு ‘’அறிஞர்கள்’’ இந்து மதத்தில் எந்தப் புத்தகத்தில் எந்த வரியை வேண்டுமானலும் எடுத்து எப்படி வேண்ண்டுமானாலும் ஒட்டுப்போட்டு என்ன வேண்டுமானாலும் எழுதி நம்மிடமே பி.எச்டி. பட்டம் வாங்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். பிரபல வெளிநாட்டுப் புத்தக பதிப்பாளர்கள் மூலம் கோடிக் கணக்கில் பணம் பெற முடியும் என்றும் தெரியும். அவர்கள் வேற்று மதங்களைப் பற்றி இப்படிப் புத்தகம் எழுதுவதும் இல்லை. எழுதினாலும் விற்காது. இந்து ஒருவன் தான் ஏமாந்த சோணகிரி! ஊருக்கு இளத்தவ பிள்ளையார் கோவில் ஆண்டி!!

நம்முடைய இலக்கியம், இலக்கிய கர்த்தாக்கள் ஆகியவர்களுக்கு அவர்களே பொய்மையான ஒரு காலத்தையும் எழுதி– ‘இது முதல், அது பின்னது’– என்று சொல்லவும் கற்றனர். நமது சங்கத் தமிழ் இலக்கியத்தையோ, தேவார திருவாசக, திவ்வியப் பிரபந்தங்களையோ வாழ்நாளில் தொட்டுப் பார்க்காத தமிழ் அஞ்ஞானிகள், கேள்விகளை மட்டுமே கேட்கப் பழகிக்கொண்டார்கள். இதனால் இந்திரன், பிராமணர்களைக் கொன்றதையோ, இராம பிரான் ராவணன் என்னும் பிராமணனைக் கொன்றதையோ பெரிது படுத்தாமல், இதற்கு எதிர்மறையான கருத்துக்களை மட்டும் பிரபலப்படுத்தினர்.

Bangkok_Indra_Erawan
Indra in Thailand

திரிசிரஸ், விருத்திரன் கொலை
த்வஷ்டா என்ற முனிவருக்கு திரிசிரஸ் என்ற மூன்று தலை உடைய முனிவர் பிறந்தார். அவர் ஒரு தவ சீலர், மகா முனிவர். தனது பதவிக்கு ஆபத்து வரும் என்று அஞ்சிய இந்திரன் அவரைக் கொன்றான். அவன் தந்தை கோபம் அடைந்து, விருத்திரன் என்பவனை யாகத்தீயில் உண்டாக்கினான். அவனைக் ‘’கடல் நுரை’’ மூலம் இந்திரன் கொன்றான். இதுதான் சுருக்கமான கதை. இருவரும் பிராமணர்கள். அவனைப் ப்ரம்மஹத்தி பற்றிக்கொண்டது.

வேதங்களில் பல விஷயங்கள் ரகசிய, சங்கேத மொழியில் சொல்லப்பட்டிருப்பதால் தமிழர்கள் வேதங்களுக்கு ‘’மறை’’ என்று அழகான பெயர் வைத்தனர். இங்கே விருத்திரன் என்பது மனிதனா, இயற்கை நிகழ்ச்சியா (வறட்சி) என்று பல அறிஞர்களுக்குக் குழப்பம். வேத, இதிஹாசபுராணம் முழுதும் வரும் இந்திரன் ஒருவரா? பலரா? என்பதிலும் எல்லோருக்கும் குழப்பம்.

இந்திரன் என்பது ஒரு ஆள் அல்ல, அது ஒரு ‘’டைட்டில்’’—அதாவது பிரதமர், ஜனாதிபதி, சக்ரவர்த்தி, மன்னர், தலாய் லாமா, சங்கராச்சார்யார், போப்பாண்டவர் என்பது போல அவ்வப்போது பதவிக்கு வருவோர் பெறும் பட்டமா என்பதும் விளக்கப்படவில்லை. மேலும் வேதம் முழுதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வெள்ளைக்காரர்கள் அவன் எப்போது வாழ்ந்தான் என்பதிலும் குழப்பம் அடைந்ததால் பேசாமல் இருந்து விட்டனர். அப்படி ஒரே இந்திரன் தான் என்று யாராவது நினைத்தால் உலகிலேயே அதிகமாக இலக்கியத்தில் அடிபட்ட பெருமை இந்திரன் ஒருவனுக்கே கிட்டும்!!

ஒரே இந்திரன் இவ்வளவு பாடல்களுக்கு முதற்பொருளாக அமைந்திருக்க முடியாது. இந்திரன் என்பது பல பொருள்களில் பயன்படுத்தப்பட்டிருக் கலாம் அல்லது இந்திரன் என்பது மன்னன் போன்ற ஒரு பட்டம். ஆகையால் யார் அந்தப் பதவிக்கு வருகிறார்களோ அவர் இந்திரன் என்றும் கொள்ளலாம்.

மூன்றுதலை திரிசிரஸ் என்பதெல்லாம் சில தத்துவங்களை விளக்கும் சொற்களாக இருக்கலாம். உண்மையில் இப்படிப்பட்ட விளக்கங்களை சாயனர், சங்கராசார்யார், பட்டபாஸ்கரர், அண்மைக் காலத்தில் ஆரிய சமாஜ ஸ்தாபகர் தயானந்த சரஸ்வதி ஆகியோர் கொடுத்துள்ளனர். வேதம் முழுதும் உள்ள விஷயங்களைக் கூறவே தேவாரமும் திருவாசகமும், திவ்வியப் பிரபந்தமும் பாடப்பட்டதாக அவற்றை யாத்தவர்களே திருவாய் மலர்ந்திருக்கின்றனர்.. இதற்குப் பின்னரும் வீம்பு பிடித்து நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான், நான் ஆரிய திராவிடச் சகதியில்— பன்றியைப் போல தொடர்ந்து உழல்வேன்— என்பவரை இறைவனே வந்தாலும் கரையேற்ற முடியாது!!
indra_td58
Indra in painting

Also read my other posts:-
Brahmins deserve an entry into Guinness Book of Records (Jan.26, 2012)

No Brahmins, No Tamil!! (Jan. 14, 2012)
Foreign Travel Banned for Brahmins! (26 Nov.2013)
Fall of Brahmin Kingdoms in Pakistan & Afghanistan (23 Mar.2014)
Indus valley –Brahmins connection (10th May 2014 ,Post No.1034)

Why did Indra kill Brahmins? (25th May 2014,Post No.1064)

உலகம் கெட்டுப்போனதற்கு பிராமணர்களே காரணம்? 4-3-2014 (885)
சிந்துசமவெளி—பிராமணர் தொடர்பு 10-5-14 ( 1033)
1500 ஆண்டு பிராமணர் ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14
பிராமணர்களை இந்திரன் கொன்றது ஏன்? 29-5-14 (1071)

வித்தியாசமான விஞ்ஞானி யுங்! -5

synchronicity

ச.நாகராஜன்
Post no 1069; Dated 28th May 2014

(கார்ல் ஜங் என்று ஆங்கிலத்தில் இருப்பதை கார்ல் யுங் என்று உச்சரிக்க வேண்டும்)

52 சீட்டுகள் உள்ள ஒரு சீட்டுக்கட்டில் 13 கார்டுகளை ஒருவர் தான் நினைத்த வரிசைப்படி எடுக்க வேண்டுமெனில் 635,000,000,000 தடவைகளில் ஒரே ஒரு முறை தான் இப்படி வர வாய்ப்பு உண்டு என்கிறது புள்ளி இயல் துறை அறிவியல். ஒரே ஒரு முறை ஒருவர் சீட்டுக்கட்டைக் குலுக்கிப் போட்டுத் தான் நினைத்த 13 சீட்டுகளை எடுத்து நம்மிடம் காட்டினால் வியப்பினால் விழிகள் பிதுங்கி விடும் இல்லையா!

இப்படி நம்ப முடியாத விஷயங்கள் திடீரென்று ஓரிடத்தில் நடந்தால் அதை வெறும் தற்செயலான ஒற்றுமை சம்பவம் என்று ஒதுக்கி விட முடியாது என்று யுங் கூறிய சிங்க்ரானிசிடி தத்துவத்தை ஒப்புக் கொண்ட ஏராளமானோர் இதை ஆராயத் தொடங்கினர். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான சிங்க்ரானிசிடி சம்பவங்கள்

அதிகாரபூர்வமாக சரிபார்க்கப்பட்டு இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரபல கணித மேதையான வாரன் வீவர் தான் எழுதியுள்ள லேடி லக்: தி தியரி ஆஃப் ப்ராபபலிடி என்ற நூலில் ’லைஃப்’ இதழில் வெளியான ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

நெப்ராஸ்காவில் பீட்ரிஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு சர்ச்சில் தேவாலய இசைப்பாடல் ஒத்திகைக்காக 15 பேர் குழுமத் திட்டமிட்டனர். 1950ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதியன்று மாலை ஏழு மணி இருபது நிமிடங்களுக்கு அவர்கள் அங்கு வர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட்து. அங்கு வர வேண்டிய 15 பேரும் சற்று தாமதமாக வந்தனர். பாதிரியாரும் அவரது மனைவி மற்றும் மகளும் தாமதமாக வந்த்தற்கான காரணம் பாதிரியாரின் பெண்ணின் உடையை அயர்ன் செய்ய பாதிரியாரின் மனைவி சிறிது நேரம் கூட எடுத்துக் கொண்டார் என்பது தான்.

dreams

வரவேண்டியவர்களுள் ஒரு பெண் தன் ஜாமெட்ரி வரைபடத்தை முடிக்கச் சிறிது நேரம் ஆனது. இன்னொருவரின் கார் ஸ்டார்ட் ஆக தாமதமாகி விட்டது. இரண்டு பேர் அவர்களுக்குப் பிடித்த ரேடியோ புரோகிராமில் லயித்து ஈடுபட்டு அது முடிந்தவுடன் வந்தனர்.

ஒரு தாய் தன் மகளை குட்டித் தூக்கத்திலிருந்து எழுப்ப நேரமாகவே இருவரும் கிளம்பி வரச் சற்று தாமதமானது. இப்படியே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சின்னக் காரணம் அவர்கள் வருகையை தாமதப்படுத்தியது.

அவர்கள் எழு மணி இருபது நிமிடங்களுக்கு வருவதற்குப் பதிலாக ஐந்து நிமிடங்கள் தாமதமாக ஏழு மணி இருபத்தைந்து நிமிடங்களுக்கு சர்ச்சுக்கு வந்து சேர்ந்தனர். அப்போது ஒரு பெரிய வெடி விபத்து ஏற்பட்டு சர்ச் இடிந்து விழுந்தது. அனைவரும் அதிசயமாக உயிர் தப்பினர். ஒவ்வொரு சின்னக் காரணத்தை வைத்துத் தங்களை தாமதப் படுத்தியது கடவுளே என்று அவர்கள் நம்பினர்..

இந்தச் சம்பவத்தைத் தன் நூலில் குறிப்பிட்ட வாரன் வீவர் அறிவியல் ரீதியாகப் பார்த்தால் பத்து லட்சத்தில் ஒரு தரமே அனைவரும் தாமதமாக வரக்கூடிய இப்படிப்பட்ட சம்பவம் நடைபெறக் கூடும் என்று வியந்து எழுதினார்.

jung_redbook02
Carl Jung’s Red Book

உலகில் உள்ள அனைத்துமே பிரபஞ்சத்துடன் ஒன்றி இருப்பதால் மட்டுமே இப்படிப்பட்ட தற்செயல் ஒற்றுமைகள் ஏற்படுகின்றன என்பது ஜங்கின் முடிவு. பிரபஞ்சத்தில் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன என்று ஜங் நம்பினார். இதைத் தொடர்ந்து சீன முறையான் ‘ஐ சிங்’கை ஆராய்ந்த அவர் துல்லியமாக அனைத்தையும் இறுதி வினாடி வரை கணித்து செயல்களை உள்ளது உள்ளபடி ‘ஐ சிங்’ விளக்குகிறது என்றார்.

ஜோஸப் ஐனர் என்பவர் ஆஸ்திரியாவில் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற ஓவியராவார். தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக அவர் பலமுறை தற்கொலை செய்து கொள்ள முயன்றார். 18 வயது ஆன போது அவர் முதன்முறையாக தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால் அப்போது கத்தோலிக்க சர்ச்சை சேர்ந்த கபுசின் மாங்க் என்ற பிரிவிலிருந்து வந்த ஒரு மர்மமான துறவி அவர் முன் தோன்றி அவரைத் தடுத்து விட்டார். இருபத்தியிரண்டாம் வயதில் மீண்டும் அவர் தற்கொலை செய்ய முயன்ற போது அதே துறவி மீண்டும் தோன்றி அவரை மறுபடியும் தடுத்து விட்டார். எட்டு வருடங்கள் கழித்து அவரது அரசியல் நடவடிக்கைகள் காரணமாக அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட்து. அப்போதும் அதே துறவி வந்து அதைத் தடுத்தார். கடைசியாக அவரது 68ஆம் வயதில் தனது கைத்துப்பாக்கி மூலம் சுட்டுக் கொண்டு அவர் இறந்தார்.அவரது இறுதிச் சடங்குகளை அதே துறவி வந்து நட்த்தினார். ஜோஸப் ஐனருக்கு அந்தத் துறவி யாரென்றே தெரியாது!!

ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஜோஸப் பிக்லாக் என்பார் ஒரு தெரு வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாடி வீடுகளில் ஒன்றின் ஜன்னலிலிருந்து ஒரு குழந்தை தவறிக் கீழே விழுந்தது. சரியாக அந்த விநாடியில் அங்கு வந்த பிக்லாக் அந்தக் குழந்தையைக் கையில் ஏந்திப் பிடித்துக் கொண்டார்.குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதில் இன்னொரு அதிசயமும் உள்ளது. ஒரு வருடம் கழித்து அதே பிக்லாக் அதே தெருவில் நடந்த போது அதே மாடிவீட்டிலிருந்து அதே ஜன்னலிலிருந்து அதே குழந்தை மீண்டும் கீழே விழுந்த்து.பிக்லாக் இந்த முறையும் குழந்தையைப் பிடித்துக் கொண்டார். குழந்தை மீண்டும் ஒரு முறை உயிர் தப்பியது.

இதே போல ஏராளமான இரட்டையர்கள் வாழ்வில் சம்பவங்கள் ஒரே விதமாக இருந்த்தையும் அவர்கள் மரணம் ஒரே சமயத்தில் நிகழ்ந்ததையும் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
scheme-jung

யுங் தனது வாழ்க்கை வரலாற்றில் இப்படிப்பட்ட அமானுஷ்யமான சம்பவங்கள் ஒருவர் வாழ்வில் நிகழவில்லை என்றால் அவர் நிச்சயமாக ஏதோ ஒன்றை இழந்து விட்டார் என்று தான் அர்த்தம் என்கிறார். ஒரு மர்மமான உலகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று கூறும் ஜங் தான் வாழ்ந்த வாழ்க்கையும் வாழ்ந்த விதமும் திருப்திகரமான ஒன்று என்று கூறித் தன் நூலை முடிக்கிறார்.

வியப்பான பல நூறு சம்பவங்கள் அடங்கிய வித்தியாசமான விஞ்ஞானி யுங்கின் சுயசரிதை அனைவரையும் நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடும் ஒன்று!

I Ching Theory
Picture of I Ching and Synchronicity

சின்ன உண்மை!
தனது பேரன், பேத்திகளுடன் வாழ்ந்து வந்த யுங்கின் வீட்டின் வாயில் கதவில் பொறிக்கப்பட்டிருந்த லத்தீன் மொழி வாசகங்கள் இவை:- VOCATUS ATQUA NON VOCATUS DEUS ADERIT. இதன் பொருள் :-கூப்பிட்டாலும் சரி, கூப்பிடாவிட்டாலும் சரி கடவுள் இருக்கிறார்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல விஞ்ஞானியான பாஸ்கலுக்கு வேடிக்கையான சோதனைகளை அனைவருக்கும் முன்னால் நிகழ்த்திக் காட்டி அவர்களை வியப்படைய வைப்பதில் அலாதி பிரியம்.ஒரு நாள் முந்நூறு லிட்டர் கொண்ட ஒரு பீப்பாயில் அனைவரின் முன்னாலும் நீரை நிரப்பினார். பின்னர் அதை மூடி, மூடியில் ஒரு சதுர சென்டிமீட்டர் குறுக்களவுள்ள ஒரு துவாரத்தைப் போட்டார்.பின்னர் 10 மீட்டர் நீளமுள்ள குழாயைச் செருகி அதில் நீரை நிரப்பினார். குழாயில் நீர் முழுவதுமாக நிரப்பப்பட்ட போது அதிக அழுத்தம் தாளாமல் பீப்பாய் வெடித்துச் சிதறியது. அனைவரும் அதிசயத்துடன் அலறினர்.

பாஸ்கலின் தந்தையான எடியனுக்குக் கல்வி கற்பிப்பதில் விநோதமான கொள்கைகள் உண்டு. 15 வயதுக்கு முன்னால் யாருக்கும் கணிதம் சொல்லித் தரக் கூடாது என்பதும் அவரது கொள்கைகளில் ஒன்று. பாஸ்கல் கணிதத்தை முன்னதாகவே கற்றுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் வீட்டில் இருந்த கணிதப் புத்தகங்களை அவர் மிகவும் கவனமாக அகற்றினார். ஆனால் அபார அறிவு படைத்த பாஸ்கல் தன் தகுதியை அவரிடம் காண்பிக்கவே அவர் அசந்து போனார். கணிதத்தைக் கற்க அவருக்கு அனுமதியும் தந்தார்.

வித்தியாசமான விஞ்ஞானி யுங்! -4

jung1

கட்டுரை எண்:-1063; தேதி:- 25 மே 2014

வித்தியாசமான விஞ்ஞானி யுங்! -4
ச.நாகராஜன்
(கார்ல் ஜங் என்று ஆங்கிலத்தில் எழுதினாலும் யுங் என்றே சொல்ல வேண்டும்)

யுங்கிற்கு ஏழு வயதிலிருந்தே பல்வேறு ஆவிகளின் காட்சிகள் தென்படலாயின.ஆகவே ஆவிகளுடன் பேசும் மீடியங்கள் பற்றிய ஆராய்ச்சியில் அவர் மனம் விழைந்தது அவரது நெருங்கிய உறவுக்காரப் பெண்மணி இப்படிப்பட்ட சிறந்த மீடியமாகத் திகழ்ந்தார்.

அப்போது ஆரம்பித்த அவரது ஆராய்ச்சி சுமார் 30 வருட காலம் தொடர்ந்தது. 1905ஆம் ஆண்டிலேயே அவர் எட்டு மீடியங்களைப் பற்றி நன்கு ஆராய்ந்து முடிந்து விட்டார்.

1907ஆம் ஆண்டு அவர் சிக்மண்ட் ப்ராய்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட போது ப்ராய்டுக்கு இந்த விதமான அதீத உளவியல் விவகாரம் ஒன்றும் பிடிபடவில்லை, பிடிக்கவும் இல்லை. ஆனால் ஒரு நாள் இந்த விவாகரம் விவாதம் என்ற அளவுக்கும் மீறி முற்றி விட்டது.அன்று மாலை தான் ப்ராய்ட் “உன்னை எனது சுவீகார புத்திரனாக மூத்த மகனாக ஏற்றுக் கொண்டேன்.நீயே எனது வாரிசு மற்றும் இளவரசன்” என்று யுங்கிற்கு எழுதிய கடித்த்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இரவு நெருங்கிய போது விவாதம் உச்சகட்டத்திற்குச் சென்று விட்டது! அப்போது திடீரென்று ப்ராய்ட் வைத்திருந்த புத்தக அலமாரியில் ஒரு பெரும் வெடிச் சத்தம் கேட்டது. ஜங் இதை அதி மானுஷ சம்பவங்களின் வரிசையில் சேர்த்து அதற்கான விளக்கத்தைத் தரமுற்பட்டார்.ஆனால் இது ப்ராய்டுக்குச் சற்றும் பிடிக்க வில்லை.ஆனால் யுங்கோ விடாப்பிடியாக ப்ராய்ட் இதை நம்ப மறுத்தாலும் கூட இதே போல இன்னொரு சம்பவம் நடக்கப் போகிறது என்று உரைத்தார். என்ன, ஆச்சரியம், அதே போல வெடிச்சத்தம் உடனே கேட்டது. ப்ராய்ட் பயந்தே போனார்! இதைத் தொடர்ந்து இருவரின் பாதைகளும் பிரிந்தன. ஆனால் ப்ராய்டின் தொடர்பு அறுந்த நேரத்தில் இரு பெரும் உளவியலாளர்களான தியோடர் ப்ளர்நாய் மற்றும் வில்லியம் ஜேம்ஸ் ஆகிய இருவர் யுங்கின் முயற்சிகளுக்கு பெரும் ஆதரவு தந்து அதீத உளவியல் ஆராய்ச்சிக்குக் கை கொடுத்தனர்.

யுங்கின் கனவில் ஒரு நாள் ஆழ் மன நிலையிலிருந்து ஒரு தோற்றம் உருவானது. அதை யுங், பிலமோன் என்று பெயரிட்டு அழைக்கலானார்.பிலமோன் யுங்குடன் அடிக்கடி பேச ஆரம்பித்தது. பிலமோன் ஒரு குரு ஸ்தானத்தில் இருந்து ஜங்கை வழிகாட்ட ஆரம்பிக்க அதை ஜங் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இப்படி ஒரு “கனவு குரு” இருப்பது சாத்தியம் தானா?

15 வருடங்களுக்குப் பின்னர் ஜங்கிற்கு இதற்கான விடை கிடைத்தது. மஹாத்மா காந்திஜியின் நண்பர் ஒருவர் யுங்கைக் காண வந்தார். மிக உயரிய பண்பு உடைய அவர் பாரதத்தின் கல்வி முறையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். பேச்சு குரு-சிஷ்ய உறவைப் பற்றித் திரும்பியது. சற்று தயக்கத்துடன் அவரிடம் ஜங்,” உங்கள் குருவைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா? அவர் குணாதிசயங்கள் எப்படி?” என்று கேட்டார்.

“ஓ! சொல்கிறேனே. எனது குரு சங்கராசாரியர்” என்றார் அவர்.
“யார்? வேதங்களுக்கு பாஷ்யம் (உரை) எழுதியவரையா சொல்கிறீர்கள். அவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே மறைந்து விட்டாரே!” என்றார் யுங்.

“ஆமாம்! அவரையே தான் சொல்கிறேன்!” என்றார் அவர். ஜங் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்று விட்டார்.
“அதாவது அவரது ஆவியைச் சொல்கிறீர்களா?” என்றார் ஜங்.
“ஆமாம்! அவரது ஆவியைத் தான் சொல்கிறேன்” என்றார் அவர்!
உடனே ஜங் பிலமோனை நினைத்துக் கொண்டார்.
“ஆவி ரூபத்தில் கூட குருமார்கள் வருவதுண்டு. சிலர் வாழ்ந்து கொண்டிருக்கும் குருமார்களைக் கொண்டிருப்பார்கள். சிலர் ஆவி ரூபத்தில் உள்ள குருமார்களைக் குருவாகக் கொள்வதும் உண்டு” என்றார் அவர்.

இந்த உரையாடல் யுங்கிற்குப் பெரும் ஆறுதலைத் தந்தது. தன்னைப் போலவே இன்னும் பலரும் ஆவிரூபத்தில் வழி காட்டுதலை அடைந்து வருகின்றனர் என்பதில் அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. நாளடைவில் பிலமோனின் வலிமை அதிகரிக்கவே இன்னொரு தோற்றம் ஏற்பட்டது. அதை பழைய கால எகிப்திய மன்னர் பரம்பரையையொட்டி ஏற்பட்ட உயரிய ஆத்மாவான ‘கா’ என்று அழைக்கலானார் யுங்.

நாளடைவில் இரசவாத வித்தையில் யுங்கிற்கு நாட்டம் ஏற்பட உலகில் இருந்த பழம் பெரும் புத்தகங்களைத் தேடிக் கண்டு பிடித்துப் படித்தார். ரஸவாதத்தில் தேர்ந்த சித்தர்கள், ஞானிகள் ஆகியோரையும் அவர் சந்தித்தார்,இந்த இரசவாத அறிவின் மூலம் தனது கனவு குருக்களான பிலமோனையும் ‘கா’வையும் ஒன்றாக இணைத்து தனது வழிகாட்டுதலைத் தொடர்ந்து பெறலானார் யுங்.
Carl_Jung_by_wallflower_studios

ஜோதிடத்தின் மீது அளவிலாத ஆர்வத்தை இளமையிலிருந்தே யுங் கொண்டிருந்தார். ஜோதிடத்தில் அவருக்கு ஏற்பட்ட ஏராளமான அனுபவங்களை வைத்தே அவர் தனது சிங்க்ரானிசிடி கொள்கையை உருவாக்கினார். இதனால் விஞ்ஞானிகள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டனர். ‘இவர் விஞ்ஞானியே அல்ல; ஒரு ஜோதிடர்’ என்ற கடும் விமரிசனத்திற்கும் ஆளானார். வெகு சிலர் மட்டுமே அவரைப் புரிந்து கொண்டனர்.

அவர் பெங்களூரைச் சேர்ந்த பிரபல ஜோதிடரான பி,வி.ராமனுக்கு எழுதிய 6-9-1947 தேதியிட்ட கடிதம் ஒன்றில், “ஜோதிட உண்மைகளை விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பதற்கான புள்ளியியல் அடிப்படையிலான ஒரு வழிமுறை ஜோதிட இலக்கியங்களில் எனக்குக் கிடைக்கவில்லை” என்று எழுதினார். 480 ஜோடிகளின் திருமணப்பொருத்தத்தை ஆராய்ந்த அவர் சந்திரனுக்கும் திருமணத்திற்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்தார்.

கடைசியில் ஜோதிடம் பற்றிய தனது ஆராய்ச்சி முடிவை அறிவித்தார் இப்படி: “ முடிவுகள் தற்செயலாக இருப்பதற்கான புள்ளி விவர எல்லைக்குள் வருவதால் ஜோதிடம் முற்றிலும் சரியே என்று கூறுகின்ற கூற்றை நான் ஆதரிக்கவில்லை. தற்செயலாக அவை ஜோதிடம் எதிர்பார்க்கும் முடிவுகளைப் போலவே அமைந்துள்ளன. ஆனாலும் அவை அப்படிச் சரியாக அமைந்திருப்பது பொருள் படைத்த ஒன்றாக இருக்கிறது. இதையே தான் நான் சிங்க்ரானிசிடி என்கிறேன்” என்றார்.

யுங்கின் புகழ் உலகெங்கும் நாளடைவில் பரவ ஆரம்பிக்கவே அவரை அறிஞர்களின் கூட்டங்களிலும் விஞ்ஞானிகளின் மாநாடுகளிலும் பேச அழைத்தனர். அங்கெல்லாம் அவர் அதீத புலனாற்றல் பற்றியும் இதுவரை எதற்கெல்லாம் விஞ்ஞானிகள் முகம் சுளித்தார்களோ அந்தக் கொள்கைகளான கனவுகளின் விளக்கம், ஆவிகளின் உலகம், அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமை, உலகெங்கும் இருக்கும் பிரபஞ்ச மனம் ஆகியவை பற்றி விளக்கி அனைவரையும் கவர்ந்தார்.

சின்ன உண்மை!
1938-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த யுங் பல ஆச்சரியமான அனுபவங்களை அடைந்தார். கோனார்க் கோவிலையும் அங்குள்ள பெரிய ரதத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டார். சாஞ்சியில் புத்தர் உபதேசம் செய்த இடத்தை நெருங்கியவுடன் அவருக்கு ஆச்சரியகரமான ஒரு உயரிய உணர்வு தோன்றியது. தனது இந்திய அனுபவங்களை அவர் சுயசரிதையில் இந்தியப் பயணம் என்ற பகுதியில் பதிவு செய்திருக்கிறார்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

கிரேக்க தத்துவ ஞானியும் விஞ்ஞானியுமான தாலஸ் (கி.மு.625-547) கி.மு. 584ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தை சரியாகக் கணித்து அனைவரும் வியக்கும் படி முன்னதாகவே சொன்னார். பிரமிடுகளின் நிழல்களின் நீளத்தை அளந்து அவற்றின் உயரத்தைச் சரியாகச் சொன்னார். அந்தக் காலத்திலேயே பல வடிவியல் (ஜாமெட்ரி) தேற்றங்களையும் நிரூபித்தார். இன்றும் ஒரு தேற்றத்தைத் தாலஸ் தியரம் என்று சொல்லி அவரை கௌரவிக்கின்றனர்.

ஒரு முறை எப்போதும் போல வானத்தை அண்ணாந்து பார்த்தவாறே நடந்து கொண்டிருந்தவர் ஒரு ஆழமான படுகுழியில் விழுந்து விட்டார். ‘உதவி, உதவி’ என்று பெருத்த குரலில் அவர் கூவியதைக் கேட்ட ஒரு கிழவி குழிக்கு அருகில் வந்து பார்த்தார். தாலஸின் நிலைமையைப் பார்த்த அவர்,” தரையிலேயே என்ன இருக்கிறது என்று பார்த்து சரியாக நடக்க உனக்குத் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் வானத்தில் என்ன நடக்கிறது என்று அறிய விரும்புகிறாயே” என்று கிண்டல் செய்தாள்.

தாலஸின் போதாத நேரம் கிழவியிடம் ‘வாங்கிக் கட்டிக்’ கொண்டு குழியிலிருந்து வெளியேறிப் பிழைத்தார்!

***********************
தொடரும்

ரிக் வேதத்தில் ஒரு பறவைப் பாட்டு!

cataka 1
Written by London Swaminathan
Post No.1059 : dated 23rd May 2014.

உலகிலேயே மிகப் பழமையான சமயப் புத்தகம் ரிக் வேதம். அது பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளாது. இரண்டாவது மண்டலத்திலுள்ள பாடல்களுக்கான ரிஷி க்ருத்சமடர். அதிகம் கேள்விப்படாத ரிஷி. இவர் இந்திரனை கபிஞ்ஜல என்ற பறவையாக உருவகித்துப் பாடிய இரண்டு பாடல்கள் (2-42. 2-43) சுவையானவை. உலகில் பறவைக்காக முதல் முதலில் ஒரு பாடல் பாடியது க்ருத்சமடர்தான். இந்தப் பறவையை சம்ஸ்கிருத இலக்கியங்கள் சாதக பட்சி (Jacobin cuckoo) என்றும் தமிழ் இலக்கியங்கள் ‘’துளி நசைப் புள்’’ என்றும் வருணிக்கும்.

முதலில் இந்தப் பறவையின் பெயரில் ஜலம்= நீர் என்ற சொல் இருப்பதைக் காணலாம். இந்தப் பறவையும் சாதக பட்சியும் மழை நீருக்காக ஏங்கிக் காத்திருக்கும் .ஏனெனில் இது மழைத் தண்ணீரை மட்டுமே பருகும். இது விஞ்ஞான ரீதியில் உண்மையா என்று ஆராயப்படவில்லை. ஆயினும் ஆதிசங்கரர், உலக மகா கவிஞன் காளிதாசன், புறநானூற்றுப் புலவர் வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் (பாடல் 198) மற்றும் பலர் இந்தப் பறவையைப் பாடிப் பரவியுள்ளனர்.

ஆதி சங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் ஆன்மீக வேட்கையுடைய ஞானிக்கு இந்தப் பறவையை உவமையாகப் பயன் படுத்தினர். சுய மரியாதை, கர்வம் ஆகியவற்றின் அடையாளமாகவும் இதை வடமொழி இலக்கியங்கள் கையாண்டன.

சம்ஸ்கிருத தமிழ்ப்புலவர்களுக்கு அடுத்தபடியாக இதே போல கவிபாடியவர் ஆங்கிலப் புலவர் பி.பி.ஷெல்லி (P.B Shelley) ஆவார். அவர் வானம்பாடி பற்றிப் பாடிய (Skylark-ஸ்கைலார்க்) பாடல் மிகவும் புகழ்பெற்றது. வானம்பாடி சிறகடித்து மகிழ்ச்சியாகப் பறப்பதைப் பாடும் அவர் அந்த மகிழ்ச்சியின் ரகசியத்தைத் தனக்கும் தர வேண்டுகிறார். இவருக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் கபிஞ்ஜல பறவை பற்றிப் பாடிய க்ருத்சமடரும் அதே போலப் பாடியிருக்கிறார். ஆக உலகில் முதல் முதலில் பறவைக் கவி பாடிய புகழ் வேத கால ரிஷியையே சாரும். ரிக் வேதத்தின் இரண்டாம் மண்டலம் காலத்தால் பழமையான மண்டலம் என்றும் கி.மு.1700 வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் என்றும் வேத அறிஞர்களின் இப்போதைய ஆய்வுகள் காட்டுகின்றன.

04-willem-jacobin-cuckoo

வேத காலத்தில் சோதிடம்: சகுனம் பார்க்கும் வழக்கம்

இந்தப் பாட்டில் இன்னும் ஒரு சுவையான விஷயமும் உண்டு; பறவைகளைக் கொண்டு சகுனம் பார்க்கும் வழக்கம் அப்போதே தோன்றிவிட்டது தெரிகிறது. நல்ல சகுனத்தைக் காட்டுவதாக கிருத்சமடர் பாடியதைக் காளிதாசனும் அவனது மேகதூதப்பாடலில் சாதகப் புள் விஷயத்தில் உறுதி செய்கிறான். இடது பக்கம் சாதகப் புள் பறப்பது சுப சகுனம் (பாடல் 9) என்பான் காளிதாசன். பறவைகளுக்கு ‘’சகுன’’ என்று வடமொழியில் பெயர். ஆகையால்தான் ‘’சகுனம் பார்ப்பது’’ என்று நாம் சொல்லுகிறோம். தமிழர்களுக்கு இதில் அபார நம்பிக்கை உண்டு என்பது சங்க இலக்கியப் பாடல்கள் முழுவதும் விரவிக்கிடக்கிறது.

தமிழர்கள் ஆங்கிலத்தில் (பேராசிரியர் மு.வரதராஜன்) மொழிபெயர்த்த போது சாதகப் புள்ளை ‘’ஸ்கைலார்க்’’ Skylark என்று மொழிபெயர்த்தனர். ஆனால் ‘’ஸ்கைலார்க்’’ என்னும் வானம்பாடி வேறு; சாதகப்பட்சி வேறு இருந்தபோதிலும் பாடும் விஷயத்தில் இரண்டுக்கும் ஒப்புமை உண்டு.

(இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவில் (Ode to Sky Lark: Shelley, Kalidasa and Vedic Poet Grtsamada) எல்லாப் பாடல்களையும் விரிவாகக் கொடுத்துள்ளேன். கட்டுரையைச் சுருக்கவேண்டி தமிழ்ப் பகுதியையும் வேதப் பாடலையும் மட்டும் இதில் தருகிறேன். இந்தப் பறவை பற்றிய மர்மங்கள், இது பற்றி புத்தர் கூறிய கதை ஆகியவற்றை தனியே காண்போம்)

க்ருத்சமடர் பாடல் (இருக்கு வேதத்தின் இரண்டாம் மண்டலம், துதி 2-42)
“ஒரு படகோட்டி நீரில் படகு செலுத்துவது போல இரைச்சல் உண்டாக்கும் ஒலி எழுப்பும் ஓ, அதிர்ஷ்டம் தரும் மகிழ்ச்சியான பறவையே! பருந்து, கழுகு, வேடனின் அம்பு ஆகியவற்றில் இருந்து, உனக்கு ஒரு ஆபத்தும் நேரிடக் கூடாது.

தந்தையர் பகுதியில் இருந்துகொண்டு நீ எழுப்பும் மங்கள ஒலியை முழக்கட்டும்.
(தந்தையர் பகுதி என்பது இறந்துபோன முன்னோர்கள் வாழும் தென் திசை என்று கிரிப்பித் மொழிபெயர்த்துள்ளார். தென் திசை என்பது வலப்பக்கம். ஆனால் காளிதாசன் இடப்பக்கம் என்று மேகதுதத்தில் கூறுகிறான். சகுனப் பறவை என்பதை இருவரும் உறுதி செய்தாலும் திசையிலோ, மொழி பெயர்ப்பிலோ தடுமாற்றம் இருப்பதை அறியமுடிகிறது.)

ஓ, மங்களச் செய்தி அறிவிக்கும் பறவையே! எங்கள் வீடுகளுக்கு வலப் புறத்தில் இருந்து ஒலி எழுப்பு. திருடர்களும், பாவம் செய்வோரும் எங்களைத் தாக்காமல் இருக்கட்டும். பொதுச் சபையில் நாங்கள் உரத்த குரலில் (உன்னைப் போல) பேசுவோமாக.

01-chatakpakshi2

பாடல் 2-43
பருவ காலங்களில் உரிய பாடல் பாடும் பறவை போல வலது புறத்தில் இருந்து இசை எழுப்பு.
சாமவேதம் பாடுவோர் போல காயத்ரி, த்ருஷ்டுப் இரண்டு வகையிலும் பாடு.
சாமகானம் பாடும் வேத விற்பன்னர் போல துதி பாடு; பிரம்மனின் மகன் போல பாடு; ஆண்குதிரை பெண் குதிரையை நோக்கி வரும்போதும் நல்ல செய்திகளை அறிவி. ஓ, பறவையே, எல்லா பக்கங்களிலும் நல்லதிர்ஷ்டம் ஒலிக்கச்செய்.

(வேதகால ரிஷிகள் நாங்கள் ரகசிய (coded language) மொழியிலேயே எதையும் சொல்லுவோம் என்று இரண்டு இடங்களில் பாடி இருக்கின்றனர். ஆக இதை நேரடியாகப் பொருள் கொள்ளாமல் பாரத நாட்டு அறிஞர்கள் என்ன சொல்கிறார்களோ அதையே நாம் கேட்கவேண்டும் .ஆனால் மறை பொருளில் ஏதேனும் சொல்லவந்தாலும் அந்தக் காலத்தில் நம் கண் முன்னால் உள்ள பொருள்களைப் பயன்படுத்தியோ எல்லோரும் அறிந்த வழக்கங்களைச் சொல்லியோதான் விளக்கமுடியும். அந்த வகையில் இந்த பறவைப் பாட்டு இந்திரனைக் குறித்துப் பாடப்பட்டாலும் கவிதைச் சுவையுடையது மட்டுமின்றி ஷெல்லி முதலிய கவிஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தது என்பது என் வாதம்)

சங்க இலக்கியத்தில் சாதகப் பட்சி

“நீடு வாழிய ! நெடுந்தகை ! யானும்
துளி நசைப் புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி, நின்
கடுமான் மாற ! மறவாதீமே”.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் பாடியது—புறநானூறு பாடல் 198

பொருள்: நீ நீண்ட காலம் வாழ்க! பெருந்தகுதி உடையவனே! நானும் நாள்தோறும் மழைத் துளியை விரும்பும் வானம்பாடி போல நின் கொடைத் தன்மை கருதி உன் நிழலில் வாழ்வேன். விரைவான ஓட்டத்துடைய குதிரையுடைய நன்மாறனே! நீ எனக்குச் செய்த செயலை மறவாதே!

மழைத்துளிக்காக ஏங்கும் பறவைக்கு மேகம், வாரி வழங்குவதை ரகு என்ற மன்னனின் கொடைத்தனமைக்கு உவமையாகப் பயன்படுத்துகிறான் காளிதாசன். குதிரை பற்றி பேரி சாத்தன் பாடியது போல க்ருத்சமடரின் பாடலிலும் வருகிறது. ஆக இந்திய கலாசாரம் ஆ சேது ஹிமாசலம்= இமயம் முதல் குமரி வரை ஒன்றே. ஆரிய- திராவிடப் பொய்மை வாதம் பேசுவோருக்கு பேரிசாத்தனும் காளிதாசனும் கொடுக்கும் அடி இது.

சங்க இலக்கியப் புலவர்கள், காளிதாசனின் ஆயிரத்துக்கும் மேலான உவமைகளில் 200க்கும் மேலான உவமைகளிப் பயன்படுதுவதால் காளிதாசனின் காலம் விக்ரமாதித்தன் காலமே (கி.மு.முதல் நூற்றாண்டு) என்ற எனது வாதமும் மேலும் உறுதியாகிறது.

jacobin-cuckoo_

மேலும் சில மேற்கோள்கள்:
துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள் (கலி. 46)

வானம்பாடி வறங்களிந்து ஆனாது
அழிதுளி தலை இய புறவு (ஐங்குறு. 418)

பொறிவரி
வானம் வாழ்த்திப் பாடவும் அருளாது
உறை துறந்து எழிலி நீங்கின் (அக. 67,நோய்பாடியார்)

தளியுணவின் புள் (பட்டின.3,உருத்திரன்கண்ணனார்)

இந்த மேற்கோள் அனைத்திலும் மேகம்- பறவை உறவு காட்டப்பட்டுள்ளது. இதே கருத்தைக் காளிதாசனும் மொழிவான்:
மேகதூதம்:–10,23,113; விக்ரம.2-3/1; சாகு:7-7; குமார:6-27; மாள.2; ருது:2-3; ரகு:5-17, 17-60
(கட்டுரையின் இரண்டாம் பகுதியில் கபிஞ்ஜலா (Jacobin cuckoo) பறவை மர்மம் குறித்துக் காண்போம்).

yaham

Please read my earlier posts
The Mysterious Vedic Homa Bird: Does it Exist? (posted on 10 December 2011)
Can Birds Predict your Future?
Hindu Eagle Mystery Deepens (Posted on 16-2-2013)
A Tamil bird in Sumerian Double headed Eagle in Sumerian
Double Headed Eagle: Sumerian- Indian Connection
Karikal Choza and Eagle Shaped Fire Altar
Bird Migration in Kalidasa and Tamil Literature
Friends of Birds
Four Birds in One Sloka
Can Parrots recite Vedas?
Gods and Birds

contact swami_48@yahoo.com