Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
வித்தியாசமான நடிகை!
மரிலு ஹென்னர்! (MARILU HENNER)
உலகில் நூறு பேரில் ஒருத்தியம்மா நீ!
ச. நாகராஜன்
உலகில் ஆயிரக்கணக்கில் நடிகைகள் உள்ளனர்; அவர்களின் நடிப்புத்திறன் பற்றி வியந்து பாராட்டுவோரும் ஏராளம்.
ஆனால் இந்த நடிகைகளில் ஒரே ஒரு நடிகை மட்டும் அவரது நினைவாற்றல் திறனுக்காக இன்னும் அதிகமாகக் கொண்டாடப்படுகிறார்
அவர் தான் மரிலு ஹென்னர்! உலகில் அதிக நினைவாற்றல் திறன் கொண்ட நூறு பேரில் ஹென்னரும் ஒருவர் என்றால் ஆச்சரியம் தானே!
1980, ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி என்று சொல்லுங்கள். உடனே ஹென்னர் அது ஒரு புதன்கிழமை. என்று ஆரம்பித்து அன்று தான் எந்த இடத்தில் இருந்து யாரைப் பார்த்து என்னென்ன செயல்களைச் செய்தேன் என்று விவரிப்பார்.
இப்படி தன் வாழ்வின் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு கணத்தையும் அதிசயிக்கத் தக்க விதத்தில் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கும் இவரை ஹெச் எஸ் ஏ எம் ஸ்பெஷலிஸ்ட் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஹெச் எஸ் ஏ எம் என்றால் HIghly Superior Autobiographical Memory – HSAM –மிக உயரிய சுயசரிதை நினைவாற்றல் என்று பொருள்.
இவருக்கு ஐந்து வயதாகும் போதே இவருடன் பழகியவர்கள் இவரது இந்த அதிசய நினைவாற்றலைக் கண்டு வியந்து பிரமித்தனர்.
இவரை விஞ்ஞானிகள் ‘மூளையின் நினைவாற்றல் திறன்’ ஆய்வுக்காக அழைத்தனர். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்ட இவரிடம் ஐநூறு கேள்விகள் கேட்கப்பட்டன. அத்தனைக்கும் பளீர் பளீரென்று பதில் அளித்தார் இவர். எம் ஆர் ஐ ஸ்கேன் உள்ளிட்ட அனைத்தும் எடுக்கப்பட்டன. ஆய்வாளர்களுக்கு வியப்பு தான் மிஞ்சியது!
இவர் தனது அனுபவங்களை டோடல் மெமரி மேக் ஓவர் (2012ல் வெளியானது) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் சிகாகோவில் 1952ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி ஹென்னர் பிறந்தார்.
1977lல் ஒரு காமடி படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் வெகு விரைவில் பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட புகழ் பெற்ற திரைப்படங்கள் மற்றும் டிவி ஷோக்களின் பட்டியலைப் பார்த்தாலேயே இவர் எப்படிப்பட்ட வித்தியாசமானவர் என்பது புரியும்.
சிறந்த நடனைக் கலைஞர். ஆரோக்கிய நலத்திற்காக இவர் விசேஷ தயாரிப்புகளைத் தயாரிப்பவர். ஸ்டேஜில் ஏறினாலே போதும், அனைவரையும் சிரிக்க வைப்பவர். பல பத்திரிகைகளிலும் கட்டுரைகளை எழுதுபவர்; பத்திரிகைகளின் அட்டைப்படத்தை அலங்கரிப்பவர்! எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஒரு சிறந்த உணர்வூக்கம் தரும் பேச்சாளர் (மோடிவேஷனல் ஸ்பீக்கர்)! இப்படி பல சிறப்புகளைக் கொண்டவர் இவர்!
இவரது புகழ் பெற்ற பொன்மொழிகளுள் இரண்டை இங்கு காணலாம்:
உங்களுக்குத் தெரியுமா, பல பிரபலங்கள் நான் டாக்ஸியில் அமர்ந்திருக்கும்போதே நான் யார் என்பதைத் தெரிந்து கொள்கிறார்களே, அப்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே, அது தனி தான்!
எந்தவிதமான சூழ்நிலைகள் உங்களுக்கு உகந்தது என்பதை நீங்கள் நிர்ணயித்துக் கொள்வது மிக மிக முக்கியம்; பிறகு உங்களின் தேவைக்குத் தக அந்த சூழ்நிலையை நீங்கள் கட்டமைக்க வேண்டும்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
A B Keith wrote in his preface to his History of Sanskrit Literature, “The Kavya literature includes some of the great poetry of the world, but it can never expect to attain wide popularity in the West, for it is essentially untranslatable”.
1
John Brough in his book Poems from the Sanskrit gives some examples. He says to take an extreme illustration,
Not great poetry, admittedly; but still poetry, and quite gracefully expressed. Yet, let us translate with the most precise identification of the flowers mentioned:
“(The bees think that) your hands are Nelumbo nucifera,
That your cheeks are buds of Bassia latifolia,
That your eyes are blossoms of Nymphaea stellata,
That your lips are Pentapetus phoenica
(or Terminalia tomentosa )
And how can we consider the English reader that there is any poetry at all?”
John Brough continues , “Now Sanskrit verses are shapely. They have a very definite and strict metrical form, and often have extremely complex and subtle sound patterns of assonance and alliteration. The qualities of rhythm, of shapeliness, of the music of the words, cannot be directly transferred to another language and there is no perfect solution.
2
John Brough gives another example .
IN HAMBURG LEBTEN ZWEI AMEISEN
DIE WOLLTEN NACH AUSTRALIEN REISEN
BEI ALTONA AUF DER CHAUSSEE
DA TATEN IHNEN DIE BEINE WEH
UND DA VERZICTETEN SIE WEISE
DANNAUF DEN LETZTEN TEIL DER REISE (German)
MEANING
In Hamburg there lived two ants who made up their minds to travel to Australia. Then, on the pavement at Altona (just outside Hamburg) their feet hurt; and thereupon they sensibly gave up the last part of the journey.
But the English reader may perhaps get more of the bite of the original epigram from
Two ants who lived in London planned
To walk to Melbourne overland
, but footsore in Southampton Row
When there were still some miles to go,
They thought it wise not to extend
The journey to the bitter end. (English)
3
Only on the rarest of occasions , a lucky chance of language may make it possible to reflect a pun in the receiving language; and usually verbal play, if it is essential to the verse, makes the verse in question untranslatable. To take a rather trivial example,
Mukhena candrakaantena mahaaniilaih siroruhaih
Paanibhyaam padmaraagaabhyaam raje ratnamayiva saa
Bhartruhari ,131.
“Since her face has the beauty of the moon, and her hair was jet black, and her hands were the colour of lotuses , she seemed to be all made of jewels.
Nothing can be done to make this into an acceptable verse in another language, since it does not even make sense until the reader knows that candrakaanta, in addition to meaning ‘having the beauty of the moon’ , is also the name of a precious stone; that mahaaniila means very black and also sapphire; and the padmaraaga means lotus coloured and also ruby.”
POEMS FROM THE SANSKRIT; TRANSLATED WITH INTRODUCTION BY JOHN BROUGH; PENGUIN BOOKS
My comments
I have the English translation of Bharati’s poems. When I read it, I can’t see the beauty of Tamil language or the force with which it is done. It is true with all the language translations. Tirukkural is also translated in verses and in prose. But the verses, despite alliteration, do not bring out the meaning in depth. Only in the prose we get the poet’s original meaning.
–subham—
Tags – Poetry, Untranslatable, Bhartruhari , John Brough, A B Keith, gems, jewels,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 37
Stamps posted today include 1990 STAMPS
M G RAMACHANDRAN, CHARAN SINGH, OIL FIELD, HO CHI MINH, PENNY POST, ASIAN DEVELOPMENT BANK, CONCH, BOMBAY SAPPERS, TRIANGLE STAMP, SUKHA SHRAMDAN, CHANDIGARH, CUTTACK, DANCING WOMAN, INDO SOVIET JOINT ISSUE, BIKANER, HYDERABAD, GREETINGS, BORDER GUARD ON CAMEL, CHILDREN’S ART, GORKHA RIFLES, A K GOPALAN, SURYAMALL MISHRAN, KANAKA DAS, TERCENTENARY, MINAR, DNYANESHWARI, SHIPPING ON THE GANGES, MADAN MOHAN MALAVIA, GANDHI FULL SHEET, 10P, 15 P STAMPS, FARMER 15P , TYAGARAJA,
–subham—
Tags– Pictures of 2500 Indian Stamps, Part 37, year 1990 , M G RAMACHANDRAN, CHARAN SINGH, OIL FIELD, HO CHI MINH, PENNY POST, ASIAN DEVELOPMENT BANK, CONCH, BOMBAY SAPPERS, TRIANGLE STAMP, SUKHA SHRAMDAN, CHANDIGARH, CUTTACK, DANCING WOMAN, INDO SOVIET JOINT ISSUE, BIKANER, HYDERABAD, GREETINGS, BORDER GUARD ON CAMEL, CHILDREN’S ART, GORKHA RIFLES, A K GOPALAN, SURYAMALL MISHRAN, KANAKA DAS, TERCENTENARY, MINAR, DNYANESHWARI, SHIPPING ON THE GANGES, MADAN MOHAN MALAVIA, GANDHI FULL SHEET, 10P, 15 P STAMPS, FARMER 15P , TYAGARAJA,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(11-5-2025 எழுதிய குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-9; குரு கோவிந்த சிம்மன் கதை (Post No.14,499) கட்டுரையின் தொடர்ச்சி)
மொகலாயர் காலத்தில் முஸ்லீம்கள் செயத கொடுமைகளை பாரதியார் சத்ரபதி சிவாஜி கவிதையில் கொட்டி முழக்கினார். ஆனால் அதை விட நீண்ட கவிதை சீக்கிய மதத்தின் கடைசி குரு குருகோவிந்தர் மீது அவர் இயற்றிய கவிதை ஆகும்; மொத்த வரிகள் 204.
இந்தப்பாடலில் கடைசி வரிதான் முக்கியம்:
அவனடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள்
குருகோ விந்தக் கோமகன் நாட்டிய
கொடிஉயர்ந் தசையக் குவலயம் புகழ்ந்தது
ஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி-204
முஸ்லீம் மன்னர்களில் மிகவும் கொடியவன் அவுரங்கசீப் ; சீக்கிய மத குருமார்களையும் அவர்களுடைய குடும்பத்தையும் உயிருடன் கொன்றவன்; சீக்கிய சிறுவர்கள் மீது உயிருடன் இருக்கும் போதே கல்லறை எழுப்பியவன். அவனுடைய ஆட்சிக்கு இருவர் சாவு மணி அடித்தனர் ஒருவர் சத்ரபதி சிவாஜி மற்றும் ஒருவர் குருகோவிந்தர்.
ஆகவே நீண்ட கவிதையின் நோக்கத்தைக் கடைசி வரியில் சொல்லிவிட்டார்
வெள்ளைக்காரர்களும் இபோதைய அரசியல்வாதிகளும் புகழும் கொடியவனுக்கு சாவு மணி அடித்தவர் குருகோவிந்தர்.
இதில் அவர் சுவையான கதை ஒன்றை பாடல் வடிவில் சொல்கிறார்.
குருகோவிந்த சிங் கதை
குருகோவிந்தர் , சீக்கிய மதத்தில் முக்கிய கொள்கைகளை
அறிவித்தார்; இனி தனக்குப்பின்னர் குரு இல்லை ; சீக்கிய மத நூலான ஆதிக்கிரந்தமே குரு; மேலும் சீக்கியர்களுக்கு ஐந்து புனிதத் சின்னங்கள் உண்டு. (முந்தைய கட்டுரையில் கொடுத்துள்ளேன்).
கால்ஸா என்ற அமைப்பையும் நிறுவி சீக்கியர்களை பாதுகாத்தார். அந்த கால்ஸா அமைப்பு தோன்றிய கதைதான் ஐந்து ஆடுகள் கதை. இதை பாரதியார் கவிதை வடிவில் நமக்குத் தந்துள்ளார் ; இதோ அந்தக் கதை
கால்ஸா அமைப்பு தோன்றிய கதை
வைசாகி என்பது சீக்கிய புத்தாண்டு நாள்;
அன்றைய தினம் அவர் சீக்கியர் கூட்டத்தைக் கூட்டினார். பெரும் கூட்டமும் கூடியது தனக்கு மதத்தைக் காப்பாற்ற உயிர்ப்பு பலி தேவைப்படுகிறது என்று அறிவித்து யாராவது தயாரா என்று கேட்டார் ; காளிக்குப் பலியிட வீர்கள் தேவை என்று அவர் அறிவித்தார் ஒருவர் முன் வந்தவுடன் கூடாரத்துக்குள் அழைத்துச் சென்றுவிட்டு அவர் மட்டும் ரத்தம் சொட்டும் வாளுடன் திரும்பி வந்து இன்னும் ஒரு பலியைக் காளி கேட்கிறாள் என்றார் இன்னும் ஒருவர் முன் வந்தார்; இவ்வாறு ஐந்து பேர் முன்வந்தவுடன் அவர்களை கூடாரத்திலிருந்து அழைத்து வந்து அவர்களை பஞ்ச பியாரே- அன்பிற்குரிய ஐவர் என்று அறிவித்தார் . அதுதான் கால்ஸா அமைப்பு.
அவர் மட்டும் ஐந்து முறை வெளியே வந்த போது அவரது கத்தியில் சூடான ரத்தம் வழிந்தோடியது ; கூட்டம் முழுதும் ஒரே அதிர்ச்சி; ஆச்சர்யம் !திகைத்துப்போய் நின்ற கூட்டத்துக்கு முன்னர் கூடாரத்திலிருந்து ஐந்து வீரர்கள் சீக்கியர்களின் புனித உடையில் தோன்றினர் ; எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர். ஏனெனில் குருகோவிந்தர் அழைத்துச் சென்ற ஐந்துபேரும் பலியிடப்படாமல் திரும்பி வந்து இருந்தனர் அப்போது குரு கோவிந்தர் அறிவித்தார் தான் வெட்டிக்கொன்றது ஐந்து ஆடுகள் தான் என்றும் உயிர்த்தியாகம் செய்ய முன் வருவோரே மக்களைக் காப்பாற்ற முடியும் என்றும் அறிவித்தார் அதிலிருந்து சீக்கியர்கள் தங்களை சிங்கம் (சிம்ம- சிங்க- சிங்) என்று அழைத்துக்கொண்டனர். அவர்களுக்கு ஞான ஸ்நானம் வழங்க புதிய முறையையும் குருகோவிந்தர் உண்டாக்கினார் ; அமிர்தம் என்று சொல்லப்படும் இனிப்புக் கரைசலை செய்து அதில் இருபுறமும் கூர்மையுள்ள வாளைத் தோய்த்து அந்த அமிர்தக கரைசலை சீக்கியர்கள் அருந்த வேண்டும் என்றார் . இவர் எழுப்பிய வீரப்படை காரணமாக மொகலாய ஆட்சி முடிவுக்கு வந்தது . 700 ஆண்டு முஸ்லீம் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் வெள்ளைக்காரன் உள்ளே நுழைந்து பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் 300 ஆண்டு ஆண்டான்; இதையும் பாரதியார் வேறு ஒரு பாடலில் ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி என்று சாடுகிறார் . முஸ்லீம்களையும் வெள்ளையக்கார கிறிஸ்தவர்களையும் பாரதியார் புரிந்து கொண்டது போல வேறு எவரும் புரிந்துகொள்ளவில்லை; பாரதி ஒரு தீர்க்கதரிசி மட்டுமில்லை. வரலாறு எழுதிய வரலாற்று ஆசிரியன் என்றாலும் மிகையாகாது..
****
பாரதியார் பாடல்- குருகோவிந்தர்
{[குறிப்பு]: ‘குரு கோவிந்தசிம்ஹ விஜயம்’ — என்பது 1941ஆம் வருடப்
பதிப்பின் தலைப்பு ஆகும்.}
YEAR 1699
ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு
விக்ரம னாண்டு, வீரருக் கமுதாம்
ஆனந்த புரத்தி லார்ந்தினி திருந்தனன்
பாஞ்சா லத்துப் படர்தரு சிங்கக்
குலத்தினை வகுத்த குருமணி யாவான் 5
ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன்
வானம்வீழ்ந் துதிரினும் வாள்கொடு தடுக்கும்
வீரர் நாயகன், மேதினி காத்த
குருகோ விந்த சிங்கமாங் கோமகன்
அவன்திருக் கட்டளை அறிந்துபல் திசையினும் 10
பாஞ்சா லத்துறு படைவலோர் நாடொறும்
நாடொறும் வந்து நண்ணுகின் றாரால்.
ஆனந்த புரத்தில் ஆயிர மாயிரம்
வீரர்கள் குருவின் விருப்பினைத் தெரிவான்
15
கூடிவந் தெய்தினர் கொழும்பொழி லினங்களும்
புன்னகை புனைந்த புதுமலர்த் தொகுதியும்
பைந்நிறம் விரிந்த பழனக் காட்சியும்
“நல்வர வாகுக நம்மனோர் வரவு” என்று
ஆசிகள் கூறி ஆர்ப்பன போன்ற
புண்ணிய நாளிற் புகழ்வளர் குரவன் 20
திருமொழி கேட்கச் செறிந்தனர் சீடர்கள்.
“யாதவன் கூறும்? என்னெமக் கருளும்?
எப்பணி விதித்தெம தேழேழ் பிறவியும்
இன்புடைத் தாக்கும்?” எனப்பல கருதி,
மாலோன் திருமுனர் வந்துகண் ணுயர்த்தே
25
ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும்
தேவரை யொத்தனர் திடுக்கெனப் பீடத்து
ஏறிநின் றதுகாண்! இளமையும் திறலும்
ஆதிபத் தகைமையும் அமைந்ததோ உருவம்
விழிகளில் தெய்வப் பெருங்கனல் வீசிடத் 30
திருமுடி சூழ்ந்தோர் தேசுகாத் திருப்ப
தூக்கிய கரத்தில் சுடருமிழ்ந் திருந்தது
கூறநா நடுங்குமோர் கொற்றக் கூர்வாள்
எண்ணிலா வீரர் இவ்வுரு நோக்கி
வானின் றிறங்கிய மாந்திரிகன் முனர்ச் 35
சிங்கக் கூட்டம் திகைத்திருந் தாங்க்
மோனமுற் றடங்கி முடிவணங் கினரால்
வாள்நுனி காட்டி மாட்சியார் குரவன்
திருவுள நோக்கஞ் செப்புவன். தெய்வச்
சேயித ழசைவுறச் சினந்தோர் எரிமலைக் 40
குமுறுதல் போல்வெளிக் கொண்டன திருமொழி:
“வாளிதை மனிதர் மார்பிடைக் குளிப்ப
விரும்புகின் றேன்யான் தீர்கிலா விடாய்கொள்
தருமத் தெய்வந் தான்பல குருதிப்
பலிவிழை கின்றதால் பக்தர்காள்! நும்மிடை 45
நெஞ்சினைக் கிழித்து நிலமிசை யுதிரம்
வீழ்த்தித் தேவியின் விடாயினைத் தவிர்ப்ப
யார்வரு கின்றீர்!” என்னலும் சீடர்கள்
நடுங்கியோர் கணம்வரை நாவெழா திருந்தனர்.
கம்மென ஓர்சிறு கணங்கழி வுற்றது 50
ஆங்கிருந் தார்பல் லாயிர ருள்ளொரு
வீரன்முன் வந்து விளம்புவன் இஃதே:
“குருமணி, நின்னொரு கொற்றவாள் கிழிப்ப
விடாயறாத் தருமம் மேம்படு தெய்வதத்து
இரையென மாய்வன் ஏற்றருள் புரிகவே.” 55
புன்னகை மலர்ந்தது புனிதநல் வதனம்
கோயிலுள் அவனைக் குரவர்கோன் கொடுசெல
மற்றதன் நின்றோர் மடுவின்வந் தாலெனக்
குருதி நீர்பாயக் குழாத்தினர் கண்டனர்.
பார்மின்! சற்குரு பளீரெனக் கோயிலின் 60
வெளிப்போந் தாங்கு மேவினோர் முன்னம்
முதற்பலி முடித்து முகமலர்ந் தோனாய்
மின்னெனப் பாய்ந்து மீண்டு வந்துற்றனன்.
மீண்டுமவ் வுதிரவாள் விண்வழி தூக்கிப்
பின்வரு மொழிகள் பேசுவன் குரவர்கோன்: 65
“மானுடர் நெஞ்சிலிவ் வாளினைப் பதிக்கச்
சித்தம்நான் கொண்டேன் தேவிதான் பின்னுமோர்
பலிகேட் கின்றாள் பக்தர்காள்! நும்முளே
இன்னும் இங் கொருவன் இரத்தமே தந்துஇக்
காளியைத் தாகங் கழித்திடத்துணிவோன் 70
எவனுளன்?” எனலும் இன்னுமோர் துணிவுடை
வீரன்முன் நின்று விருப்பினை உணர்த்தினன்.
இவனையுங் கோயிலுள் இனிதழைத் தேகி
இரண்டாம் பலிமுடித் தீண்டினன் குரவன்
குருதியைக் கண்டு குழாத்தினர் நடுங்கினர். 75
இங்ஙன மீண்டுமே இயற்றிப்
பலியோ ரைந்து பரமனங் களித்தனன்.
அறத்தினைத் தமதோர் அறிவினாற் கொண்ட
மட்டிலே மானிடர் மாண்பெற லாகார்
அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி 80
வாட்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர்,
அவரே மெய்ம்மையோர் முத்தரும் அவரே
தோன்று நூறாயிரம் தொண்டர் தம்முள்ளே
அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே
தண்ணருட் கடலாந் தகவுயர் குரவன் 85
கொடுமைசேர் சோதனை புரிந்திடல் குறித்தனன்
அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர்
ஐவரைக் கண்டபின் அவ்வியல் உடையார்
எண்ணிலர் உளரெனத் துணிந்துஇன்பு எய்தினன்
வெய்யசெங் குருதியின் வீழ்ந்துதா மிறந்து 90
சொர்க்கமுற் றாரெனத் தொண்டர்கொண் டிருக்கும்
ஐந்துநன் மணியெனும் ஐந்துமுத் தரையும்
கோயிலு ளிருந்துபே ரவைமுனர்க் கொணர்ந்தான்!
ஆர்த்தனர் தொண்டர்! அருவியப் பெய்தினர்!
விழிகளைத் துடைத்து மீளவும் நோக்கினர்! 95
ஜயஜய குருமணி ஜயகுரு சிங்கம்
எனப்பல வாழிகள் இசைத்தனர், ஆடினர்
அப்போழ் தின்னருள் அவதரித் தனையான்,
நற்சுடர்ப் பரிதி நகைபுரிந் தாங்கு
குறுநகை புரிந்து குறையறு முத்தர் 100
ஐவர்கள் தம்மையும் அகமுறத் தழுவி
யாசிகள் கூறி அவையினை நோக்கிக்
கடல்முழக் கென்ன முழங்குவன்: — “காணீர்!
காளியும் நமது கனகநன் னாட்டுத்
தேவியும் ஒன்றெனத் தேர்ந்தநல் அன்பர்காள், 105
நடுக்கம்நீரெய்த நான் ஐம் முறையும்
பலியிடச் சென்றது, பாவனை மன்ற
என்கரத் தாற்கொலோ நும்முயிர் எடுப்பன்
ஐம்முறை தானும் அன்பரை மறைத்துநும்
நெஞ்சகச் சோதனை நிகழ்த்தினன் யானே. 110
தாய்மணி நாட்டின் உண்மைத் தனயர்நீர்
என்பது தெளிந்தேன். என்கர வாளால்
அறுத்ததிங் கின்றைந் தாடுகள் காண்பீர்!
சோதனை வழியினுந் துணிவினைக் கண்டேன்
களித்ததென் நெஞ்சம் கழிந்தன கவலைகள்.” 115
குருகோ விந்தன் கொண்டதோர் தருமம்
‘சீடர்தம் மார்க்கம்’ எனப்புகழ் சிறந்தது
இன்றுமம் மார்க்கத் திருப்பவர் தம்பெயர்
‘காலசா’ என்ப ‘காலசா’ எனுமொழி்
முத்தர்தம் சங்க முறையெனும் பொருளது 120
முத்தர்தம் சபைக்கு மூலர்க ளாகமற்று
ஐவரன் னோர்தமை அருளினன் ஆரியன்.
சமைந்தது ‘காலசா’ எனும்பெயர்ச் சங்கம்
பாரத மென்ற பழம்பெரு நாட்டினர்
ஆவிதேய்ந் தழிந்திலர், ஆண்மையிற் குறைந்திலர் 125
வீரமுஞ் சிரத்தையும் வீந்தில ரென்று
புவியினோர் அறியப் புரிந்தனன் முனிவன்.
அந்நாள் முகுந்தன் அவதரித் தாங்கு ஓர்
தெய்விகத் தலைவன் சீருறத் தோன்றி
மண்மா சகன்ற வான்படு சொற்களால் 130
எழுப்பிடுங் காலை, இறந்துதான் கிடக்கிலள்,
இளமையும் துணிவும் இசைந்துநம் அன்னை
சாதியின் மானந் தாங்கமுற் படுவளென்று
உலகினோ ரறிவிடை யுறுத்தினன் முனிவன்
ஐம்பெரும் பூதத் தகிலமே சமைத்த 135
முன்னவ னொப்ப முனிவனும் ஐந்து
சீடர்கள் மூலமாத் தேசுறு பாரதச்
சாதியை வகுத்தனன் தழைத்தது தருமம்
கொடுங்கோல் பற்றிய புன்கைக் குரிசிலர்
நடுங்குவ ராயினர். நகைத்தனள் சுதந்திரை. 140
ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு
விக்கிர மார்க்க னாண்டினில், வியன்புகழ்க்
குருகோ விந்தன் கொற்றமார் சீடரைக்
கூட்டியே தெய்வக் கொலுவொன் றமைத்தனன்
காண்டற் கரிய காட்சி! கவின்திகழ் 145
அரியா தனத்தில் அமர்ந்தனன் முனிவர்கோ.
சூழ்ந்திருந்தனர் உயிர்த் தொண்டர்தா ஐவரும்
தன்திருக் கரத்தால் ஆடைகள் சார்த்தி
மாலைகள் சூட்டி மதிப்புற இருத்திக்
கண்மணி போன்றார் ஐவர்மேற் கனிந்து 150
குழைவுற வாழ்த்திக் குழாத்தினை நோக்கி
“காண்டிரோ! முதலாங் `காலசா,” என்றனன்
நாடுந் தருமமும் நன்கிதிற் காப்பான்
அமைந்ததிச் சங்கம் அறிமின் நீர் என்றான்.
அருகினில் ஓடிய ஆற்றின் நின் றையன் 155
இருப்புச் சிறுகலத் தின்னீர் கொணர்ந்து
வாள்முனை கொண்டு மற்றதைக் கலக்கி
மந்திர மோதினன் மனத்தினை அடக்கிச்
சித்தமே முழுதுஞ் சிவத்திடை யாக்கிச்
சபமுரைத் திட்டான், சயப்பொருந் திருஅக் 160
கொலுமுனர் வந்து குதித்துநின் றிட்டாள்.
ஆற்றுநீர் தனையோ அடித்ததத் திருவாள்
அயர்ந்து போய்நின்ற அரும்புகழ் பாரதச்
சாதியின் திறல்கள் தம்மையே இயக்கி
நல்லுயிர் நல்கினன். நாடெலாம் இயங்கின. 165
தவமுடை ஐவரைத் தன்முனர் நிறுத்தி
மந்திர நீரை மாசறத் தெளித்து
அருள்மய மாகி அவர்விழி தீண்டினன்
பார்மினோ உலகீர்! பரமனங் கரத்தால்
அவர்விழி தீண்டிய அக்கணத் தன்றே 170
நாடனைத் திற்கும் நல்வழி திறந்தது!
சீடர்க ளனைவரும் தீட்சைஇஃ தடைந்தனர்.
ஐயன் சொல்வன், “அன்பர்காள்! நீவிர்
செய்திடப் பெற்ற தீட்சையின் நாமம்
அமிர்தம் என்று அறிமின்! அரும்பேறாம் இது 175
பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார்.
நுமக்கினித் தருமம் நுவன்றிடக் கேண்மின்.
ஒன்றாம் கடவுள். உலகிடைத் தோன்றிய
மானிட ரெல்லாஞ் சோதரர் மானுடர்
சமத்துவ முடையார், சுதந்திரஞ் சார்ந்தவர். 180
சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும்
இக்கணந் தொட்டுநீர் யாவிரு ஒன்றே.
பிரிவுகள் துடைப்பீர்! பிரிதலே சாதல்.
ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க, நீர் அனைவிரும் 185
தருமம், கடவுள், சத்தியம், சுதந்திரம்
என்பவை போற்ற எழுந்திடும் வீரச்
சாதியொன் றனையே சார்ந்தோ ராவிர்.
அநீதியும், கொடுமையும் அழித்திடுஞ் சாதி;
மழித்திட லறியா வன்முகச் சாதி; 190
இரும்பு முத்திரையும் இறுகிய கச்சையும்
கையினில் வாளும் கழன்றிடாச் சாதி;
சோதர நட்புத் தொடர்ந்திடு சாதி;
அரசன் இல்லாது தெய்வமே யரசா
மானுடர் துணைவரா, மறமே பகையாக்
195
குடியர சியற்றுங் கொள்கையார் சாதி;
அறத்தினை வெறுக்கிலீர் மறத்தினைப் பொறுக்கிலீர் தாய்த்திரு நாட்டைச் சந்ததம் போற்றிப்
புகழொடு வாழ்மின்! புகழொடு வாழ்மின்!”
என்றுரைத் தையன் இன்புற வாழ்த்தினன் 200
அவனடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள்
குருகோ விந்தக் கோமகன் நாட்டிய
கொடிஉயர்ந் தசையக் குவலயம் புகழ்ந்தது
ஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி.
—SUBHAM—
TAGS- அரங்கசீப் ஆட்சி, பாரதியார் பாடல், குருகோவிந்தர், குருகோவிந்த சிங் ,ஐந்து ஆடுகள் கதை,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-1
மூன்று பெரும் புலவர்கள் என்ன சொன்னார்கள் ?
தமிழும் ஸம்ஸ்க்ருதமும் சிவபெருமானிடம் பிறந்தவை ; இரண்டும் சமமானவை .
யார் அந்த மூன்று முனிவர்கள் ?
நமது காலத்தில் வாழ்ந்த சித்தர் , முனிவர் பாரதியார் (1882-1921) ; அவருக்கு முன் வாழ்ந்த சிவஞான முனிவர்(1753 – 1785); அவர்களுக்கு எல்லாம் முன்னர் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் .
மூவரும் ஸம்ஸ்க்ருதமும் தமிழும் கற்றுத் தேர்ந்தவர்கள் ; அவர்களின் படைப்புகளில் இதைக் காண்கிறோம் .
நீதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்
தொன்பதின்மர் என்ப” என்னும் இறையனாரகப்
பொருளுரையானும், இப் புராணத்தின் சங்கப்பலகை கொடுத்த
படலத்தில்,
“பொன்னின் பீடிகை யென்னும் பொன்னாரமேல்
துன்னு நாவலர் சூழ்மணி யாகவே
மன்னி னார்நடு நாயக மாமணி
என்ன வீற்றிருந் தார்மது ரேசரே”
“நதிய ணிந்தவர் தம்மொடு நாற்பத்தொன்
பதின்ம ரென்னப் படும்புல வோரெலாம்
முதிய வான்றமிழ் பின்னு முறைமுறை
மதிவி ளங்கத் தொடுத்தவண் வாழுநாள்”
என வருதலானும், நம்பி திருவிளையாடற் புராணத்தானு மறிக.
சேக்கிழார்குரிசிலும் திருத்தொண்டர் புராணத்தில்,
“சென்றணைந்து மதுரையினிற் றிருந்தியநூற் சங்கத்துள்
அன்றிருந்து தமிழாராய்ந் தருளிய வங்கணர்”
எனவும், “திருவாலவாயில், எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கமிருந்தது”
எனவும் கூறியருளினார்.
****
பல மொழிகள் பேசப்படும் இடங்கள்
“சிங்களஞ் சோனகஞ் சாகஞ் சீனந் துளுக்குடகம்
கொங்கணங் கன்னடங் கொல்லந்தெ லுங்கங்க லிங்கம்வங்கம்
கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலம்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே”
என்னுஞ் செய்யுளாலறிக.
****
என் கருத்து
மாக்ஸ்முல்லர் கும்பல் சொன்னதும் கால்டுவெல் கும்பல் சொன்னதும் தப்பு என்பதை, மூவர் சொன்னதை நம்புவோர் அறிவார்கள்; ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்று மாக்ஸ்முல்லரும், திராவிடர்கள் மத்த்தியதரைக்கடல் பகுதியிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்று கால்டுவெல்லும் கூறினார்கள் ; இந்துக்களோவெனில் இரு மொழிகளையும் இரண்டு கண்களைப் போல பாதுகாத்து இரண்டும் சிவபிரான் தந்தவை என்று நம்புகின்றனர். இந்த பூமியில் பிறந்து வளர்ந்ததாக நம்புகின்றனர் . இதை பாரதியாரும் சொன்னார்:
பாரதியாரின் தேசிய கீதங்கள்
9. எங்கள் தாய்
(காவடிச் சிந்தில் ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு)
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம் எங்கள் தாய்.
யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயங்கள் தாய் – இந்தப்
பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாள்எங்கள் தாய்.
****
சம்ஸ்க்ருத மொழியின் சப்தங்கள் சிவபிரானின் உடுக்கையிலிருந்து எழுந்தவை என்று பாணினி கூறுகிறார்; அதை மகேஸ்வர சூத்திரங்கள் என்று சொல்லுவார்கள் ; இன்று வரை பிராமணர்கள், பூணுல் மாற்றிக்கொள்ளும் ஆவணி வட்டச் சடங்கில் – உபாகர்மா சடங்கில்– அதைச் சொல்லி வருகின்றனர் அன்று வேத ஆரம்பக் கல்வியை மீண்டும் புதுப்பிக்க சம்ஸ்க்ருதம் தேவை என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு .
மூவர் சொன்னதிலும் சம்ஸ்க்ருதமும் தமிழும் இணையானவை என்ற சொல் இருப்பதை அடிக்கோடு இடவேண்டும் ஆகவே இரண்டும் ஒரே காலத்தில் பிறந்த உலகின் மிகப்பழைய மொழிகள் என்பதே இந்துக்கள்நம்பும் கொள்கை.
இலக்கிய வடிவில் கிடைப்பதும், எழுத்து வடிவில் கல்வெட்டுகளில் கிடைப்பதும் வேண்டுமானால் வேறுபடலாம் பருவ காலமும் மக்களின் உதாசீனமும் ஏராளமான நூல்களை அழித்தன. வெளிநாட்டுப் படை எடுப்பாளர்களால் நாளந்தா, காஞ்சீபுர பல்கலைக்கழக நூலகங்கள் அழிந்தன . ஆகவே சமய நூல்களில் உள்ளதை நம்புவது நம் கடமை!
சம்ஸ்க்ருதம் வாழ்க! தமிழ் வெல்க!
–subham—
Tags-தமிழும் சம்ஸ்க்ருதமும், ஒன்னு, அறியாதவன் வாயில மண்ணு, பாரதியார், பரஞ்சோதி முனிவர் , சிவஞான முனிவர், திருவிளையாடல் புராணம், ஆராய்ச்சி கட்டுரை-1
11-5-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள்! – 2
ச. நாகராஜன்
பிரச்சினைகளையும் அவற்றைப் போக்க ஓத வேண்டிய கந்த புராணப் பாடல்களையும் அழகுறத் தொகுத்து பிரார்த்தனை நூலாக ‘கவலைகள் போக்கும் கந்தபுராணம்’ என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.
61 பாடல்கள் அடங்கியுள்ள 12 பக்கம் உள்ள இந்த நூல் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
குழந்தைகள் கல்வியில் முன்னேற
புத்திரபாக்கியம் பெற்றிட
பதவி கிடைத்திட
பயம் நீங்க
நோய்நொடிகள் நீங்க
அரசு பயம் நீங்க
சத்ரு பயம் நீங்க
பூமி மனை அடைய
மரண பயம் நீங்க
பெண்கள் மனதில் இடம் பெற
காவல் தெய்வம் துணை நிற்க
அச்சம் நீங்கிட
எதிரிகள் நீங்கிட
திருமண பாக்கியம் பெற்றிட
சிவப்பரம்பொருளைச் சரணடைய
தொழில் லாபம் ஏற்பட
கர்வம் நீங்க
சிவபரத்துவம் உணர
வெற்றி, புகழ் அடைந்திட
செல்வ வளம் பெற
மன அமைதி பெற
ஆகிய தலைப்புகளில் துதிக்க வேண்டிய பாடல்கள் தரப்பட்டுள்ளன.
இத்துடன் கிருத்திகை விரத முறையும் அதன் பலனும், ஸ்கந்த சஷ்டி விரத முறையும் அதன் பலனும், கந்தபுராண பாராயண பலன் ஆகியவையும் நூலில் தரப்பட்டுள்ளன.
கந்தபுராணம் படித்தால் கைமேல் பலன் என்பது அனுபவ வாக்கு.
இப்படிப்பட்ட அரும் நூலைத் தொகுத்து அதை இலவசமாகவும் பக்தர்களுக்கு விநியோகித்து வருகிறார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிவஶ்ரீ தில்லை எஸ். கார்த்திகேய சிவம் அவர்கள்.
இதுமட்டுமின்றி ஶ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம், கந்தபுராணம் அற்புதத் திருப்பாடல்கள், கந்தபுராணக் கட்டுரைகள் (இரு தொகுதிகளாக உள்ள ஆய்வுக் கட்டுரைகள்), கந்தபுராணத்தில் முருகப்பெருமானின் விரதங்கள், கந்தபுராணத்தில் சிவபரத்துவம், கலிதோஷம் போக்கும் கந்தபுராணம் உள்ளிட்ட நூல்களும் கந்தபுராண ஞானஸபை, கள்ளக்குறிச்சி, 606202 சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
நூலின் விலை ரூ 50 முதல் 150 வரை நூலின் பக்கம் மற்றும் விவரங்களுக்குத் தக்கபடி அமைந்துள்ளது.
இலவச நூலைப் படித்து அதில் உள்ளபடி பாராயணம் செய்து புத்திரபாக்கியம் பெற்ற அன்பர்கள் பரவசம் அடைந்ததை அறியும் போது ஆனந்தம் அடைகிறோம். விரும்புவோர் திரு கார்த்திகேயசிவம் அவர்களிடமிருந்து தேவையான நூலைப் பெறலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9751848933.
கச்சியப்பர் கந்தபுராணத்தை அரங்கேற்றிய மண்டபம் கந்தபுராண அரங்கேற்ற மண்டபம் என்ற பெயரில் வெளிப்புற மண்டபமாக இன்றும் கோவில் வளாகத்தில் இருந்து வருகிறது. அங்கு இப்போதும் கூட மயில்கள் குவிந்து தோகை விரித்து நடனம் ஆடுவதைக் காணலாம்.
எந்தப் பொருளும் கந்த புராணத்தில் என்பது பழமொழி.
ஆகவே இதன் பெருமையையும் அருமையையும் முற்றிலுமாக உரைத்தல் என்பது முடியாது.
சில முக்கியமான விஷயங்களை இங்கு காண்போம்.
தேவர்களுக்கு முருகப்பெருமான் தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அருளினார்.
அதை விளக்கும் பாடல் இது:
எண்திசையும் ஈரெழு திறத்து உலகம் எண் கிரியும் ஏழு கடலும்
தெண்டிரையும் நேமி வரையும் பிறவும் வேறு திரிபாகி உளசீர்
எட்டுத் திசைகளும் பதினான்கு வகையான உலகங்களும் எட்டு மலைகளும், ஏழு கடல்களும் இவை போன்ற பிற பொருட்களும் மாறுபட்ட தோற்றங்களை உடைய அண்டங்களின் வரிசையாகவும் அனைத்து உயிர்களாகவும் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமானும் தன்னுள் அடங்கிய ஒப்பற்ற வடிவாக குமரன் தோன்றினார்.
மேல் ஏழு உலகங்களாவன: பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், தபோலோகம், சனலோகம், மகர்லோகம், சத்தியலோகம்
கீழ் ஏழு உலகங்களாவன : அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாளம்.
எட்டு மலைகளாவன: இமயம், ஏமகூடம், கந்தமாதனம், கயிலை, நிடதம், நீலகிரி, மந்தரம், விந்தம்
ஏழு கடல்களாவன: உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய்,, கருப்பஞ்சாறு, தேன்
முருகப்பெருமானின் பேருருவத்தில் மண்ணுலகம் முதல் பாதாளம் முடிய உள்ளவை காலாகவும். திசைகளின் எல்லைகள் பெரிய தொள்களாகவும், விண்ணுலகம் முழுவதும் தலையாகவும், ஒளிதரும் சுடர்கள் அனைத்தும் கண்களாகவும், விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட பகுதி உடலாகவும், இசை பொருந்திய வேதங்கள் வாயாகவும், அறிவு முழுவதும் செவிகளாகவும்,பிரம்மாவும் திருமாலும் வலம் இடம் என இரு பக்கங்களாகவும் உமையம்மை மனதில் எழும் எண்ணமாகவும் , ஐந்தொழில் புரியும் சிவபெருமானே உயிராகவும் ஆகி காட்சி அளித்தார்.
சிவபிரானுக்கு எட்டு விரதங்களும், அம்பிகை, விநாயகர், முருகன், பைரவர் ஆகியோர் ஒவ்வொருவருக்கும் மூன்று முக்கிய விரதங்களையும் அனுஷ்டிக்குமாறு நமது அற நூல்கள் கூறுகின்றன.
கந்த புராணத்தில் முருகப்பெருமானுக்குரிய சுக்கிர வார விரதம், கிருத்திகை விரதம், ஸ்கந்த ஷஷ்டி விரதம் ஆகியவை விரிவாகவும் விளக்கமாகவும் கூறப்படுகின்றன.
சரி கந்தபுராணத்தை ஓதுவதால் என்ன பயன்?
பெறுதற்கரிய முக்திப் பேறு கிடைக்கும் என்பதே பயனாகும்.
வற்றா அருள் சேர் குமரேசன் வண்காதை தன்னைச்
சொற்றாரும் ஆராய்ந்திடுவாரும் துகள் உறாமே
கற்றாரும் கற்பான் முயல்வாரும் கசிந்து கேட்கல்
உற்றாரும் வீடு நெறிப்பாலின் உறுவர் அன்றே;
கச்சியப்ப சிவாசாரியாரது காலம் பனிரெண்டாம் நூற்றாண்டு என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
Tags– Pictures of 2500 Indian Stamps, Part 36, year 1990 , YEAR 1989, EPILEPSY CONGRESS, BRAIN, PANDITA RAMABAI, PIGEON POST, NARENDRA DEO J B KRIPALANI, J L NEHRU, TRACK AND FIELD, G BEWOOR, B K SHARMA, BOMBAY ART SOCIETY, LIKH FLORICAN BIRD, PEACE KEEPING FORCE, SRI LANKA, AGRICULTURAL RESEARCH, CHILD CARE, GIRL CHILD, LITERACY YEAR, WRITING, DRINKING WATER, BORING PIPE, KABADI, RACING, CYCLING, ARCHERY, XI ASIAN GAMES, S L SHARMA, KUDIRAM BOSE, KELAPPAN
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
In the past 200 years a lot of books and articles were written comparing the Hindu Gods with Greek gods and other gods in Rome (Italy). But no one has mentioned the time gap between them. In fact, there is a big gap. Professor Wilson, Max Muller’s guru, dated Rig Veda 2000 BCE. Max Muller said 1200 BCE and after a backlash said Rig Veda may be 5000 year old or more than that and nobody could date it. But Baba Research centre (BARC) and NASA did reveal the secrets of mysterious disappearance of the Great Sarasvati River of Rig Veda which confirmed it was a pre Indus Valley Civilisation one.
So, one must tell the date of each God when they compare two different Gods from two different cultures. The whole world agree that the Greeks had their first literature from 800 BCE only. We know the date of Homer’s Iliad and Odyssey. Except some portions in Old Testament of the Bible, there is nothing nearer to Vedic civilisation. There is a gap of 1200 years between the Vedic and Greek Gods. Apart from Greek literature we have some fragments from old Greek Mycenaean and Minoan civilizations. Even those fragments disappeared into mist because of the discovery of Vedic Sanskrit names in Cuneiform tablets dated 1400 BCE in Turkey. Around the same time, we have Dasaratha (Amarna) letters in Egypt. This archaeological evidence was the final nail in the coffin of Max Muller gang. Asko Parpola, famous Indus Civilization researcher, has shown us that the names of Vedic Gods in Mitanni Civilization of 1400 BCE inscription in the same order as in Rig Veda. It shows that the Rig Veda was in the Middle East and Egypt in and around 1500 BCE. Further evidence came from Kikkuli’s Horse manual with Sanskrit numbers from the same period.
Hittite and Kassite cultures (1800 BCE) have a very few Sanskrit words .
Nicholas Kazanas from Athens, Greece , after quoting from all the latest books in this field , say that Hindus migrated from Sapta Sindhu (modern Punjab in India and Pakistan) to different parts of the world. Parsees/Zoroastrians also confirmed that they were in Sapta Sindhu and Aryana (modern Haryana) before coming to Iran/Persia.
Kanchi Paramacharya (1894-1994) also has spoken about it and said in one of his lectures that Zoroastra is the corrupted form of Saurashtra. This is also proved correct from the fact that they came back to Gujarat when Muslims occupied Iran in eighth century CE.
****
Here is the list provided by Nicholas Kazanas in his book
VEDIC AND INDO EUROPEAN STUDIES (published in 2015 by Aditya Prakashan, Delhi.
Agni
Agnis in Hittite (Ht), Ignis in Latin (L).Note : Even the Iranians who had Fire Worship did not preserve this name, not even as a demon like Indra, Sauru etc. though the stem appears in the name Dastayni.
My comment: This is a very important point. Rig Veda begins with the word Agni and finish with this. When Zend Avesta portrayed Indra as a demon, they did not even know the word Agni! By this and other linguistic evidence we know that Avestan language and Zend Avesta came later than Rig Veda.
My comments: Asvins are twins. Note there is no linguistic affinity. Moreover, Rig Veda call them Nasatya as well; also we have separate names for the two Gods . In the above comparisons they ride horses but not twins. So ,I reject it.
Bhaga
Bugas (Kassite)Phoibos (Gk)
Brhaddiva (a goddess)
Briganti (celtic)
Dyaus
Sius (Ht) ,Zeus (Gk), Jupiter (L),
My Comment: Max Muller gang used this minor god out of proportion and claimed that Aryans are Germans. Lter Hitler used this in his book and killed Jews, Non Aryans.
My comment: English name Andrew, Sangam Tamil Name Ay Andiran= Ajendran are derived from Indra. Till this day Indra is used in baby names around the world.
Marut- as
Maruttas (Ks), Mars(L), Morrigan (C).
My comments
It is a very important Vedic deity. No Greek or Avestan comparison!
Manu
Mannus (Germanic/Gm) ; father of the Germanic people.
My comments
This word exists as Man in English, Manithan in Tamil, but no comparison from other languages. At least five different Manus are referred to in the Rig Veda. Later Hindu scriptures mentioned 14 Manus. None of them is found in any other ancient language)
When we see such names referred in one community in one part of the world, we can guess the migrants retained one or two words.
With only two Tamil words (Onnu, Munu=1,3) in Brahui language the idiots are still saying they were Dravidians; and the language is not ancient; they use more Sanskrit words . If we accept those idiots’ argument then I can claim English are Tamils because they also have two Tamil numerals One, Eight (Onnu, Ettu, 1, 8)!
As a matter of fact over one thousand Tamil words are in English ( I have published the list in this blog)
Mitra
Mithra (Av), Mitra (Gk) but not God’s name; in Rome we have Mitra cult later ; that God is different from Vedic Mitra; in the Rig Veda, Mitra and Varuna are a pair.
Apaam Napaat
Neptunus (Roman), Nech tan (Ireland, Celtic), anepsios (Gk)
My comments
In the above words, the comparisons are not acceptable because they mean different things not the Vedic meaning.
Parjanya
Perunnu (Slovakian), (in Scandinavian with different meaning; not comparable with Vedic)
Rbhu
Orpheus (Gk), rabu (Slovakian), Orbu (L)
Saranyu
Erinus, Helene (Mcn, Gk)
Suurya
Suriyas (Ks), Helios (Gk), Sol(L),
My comments
In Greek and Persian there is no S. They use H instead.
Kassite/Ks and Hittite/Ht are older than Greek and Avestan. So, they are important.
Tvastr
Twisto (Gm)
Usas
Eos (Gk), Aurora (L), Eostre (Gm)
Varuna
Uruwna (Mitanni)Ouranos (Gk),
My comment
Vedic God Varuna is in Tamil Tolkappiam, and Indra is in Sangam literature These are 2000 year old books
(Picture shows that Vedic Gods are worshipped even today. In every Yaga, every Puja these 8deities are worshipped)
Ten years ago I posted my article Vedic Sarama and Greek Hermes!!
I have given the following equation: Sarama= Hermes = Mercury= Aesir/Vanir
Shrikant Talageri also dealt with this topic in his book THE RIG VEDA A HISTORICAL ANALYSIS.
****
Money= Pana= Vanik
Every one of us use the word “Pana” for money in India. All of us use the word “Vanik(a)” for the business people or commerce. The entire English speaking world use the word “MONEY”. All these are derived from the Rig Vedic word “Pani”.
Linguists know that P=V=M are interchangeable. If you apply this rule, you get:-
Pani=Vanik= Vanij= Pana= Money
P=V=M interchange is very common in several languages including Tamil.
According to Western encyclopaedias, Phoenicians’ contribution to the world are 1)Alphabet and 2)Money. Even the Indian Brahmi which gave birth to Tamil script and all the South East Asian scripts are developed from the Phoenician alphabet according to them.
My Conclusion
No language or no book mentioned all the Vedic Gods . Not even Avestan. This shows Hindus did not come from outside. They were the sons of the soil. They went outside to spread their culture.
Also read my old articles
Vedic Phoenicians; History’s Mystery!
Research Article No.1889; Date: 25 May 2015;
****
Vedic Sarama and Greek Hermes!!
Research paper No 1952; Date: 24 June 2015
****
OLDEST MESSENGER POEM IN THE WORLD (Post No.10,936)
COLLLECTED FROM POPULAR NEWS PAPERS AND EDITED FOR BROADCAST.
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் (11-5-2025)
****
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை மே 11- ஆம் தேதி 2025-ம் ஆண்டு
*****
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆர்எஸ்எஸ் பாராட்டு
பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்ற தீர்க்கமான நடவடிக்கையை எடுத்த மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்துக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை இது என்றும் இந்த நடவடிக்கையால் நாட்டின் சுயமரியாதையும், மன உறுதியும் மேம்பட்டுள்ளது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான ராணுவ நடவடிக்கை நம் நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியமானது, தவிர்க்க முடியாதது என்று கூறியவர், இந்த நெருக்கடியான நேரத்தில் ஒட்டு மொத்த நாடும் ராணுவத்துக்கு உறுதுணையாக நிற்கும் என்று மோகன் பகவத் உறுதிபட தெரிவித்துள்ளார்.
எல்லையில் வசிக்கும் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மோகன் பகவத் இந்த சவாலான நேரத்தில் அரசின் அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டிலும் இந்திய ராணுவ நடவடிக்கையை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேரணி நடத்தினார். அஸ்ஸாமில் காங்கிரஸ் கட்சியும் இந்திய ராணுவத்தை ஆதரித்து பேரணிகளை நடத்தியது. அனைத்துக் கட்சிகளும் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுதும் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளன .
இதற்கிடையில் நாடு முழுதுமுள்ள கோவில்களில் இந்தியாவின் வெற்றிக்காக பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆதீனங்களின் தலைவர்களும் , மடாதிபதிகளும், இந்து மத தலைவர்களும் ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
எல்லை மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், காஷ்மீர் ஆகியவற்றில் போர்க்கால சூழ்நிலை நிலவுகிறது . பயங்கரவாதிகளின் இலக்குகளை மட்டும் இந்தியா தாக்கி வருகிறது ; ஆகையால் உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
*****
இன்று மே மாதம் பதினோராம் தேதி குருப்பெயர்ச்சி நடப்பதால் தமிழ் நாட்டில் பல கோவில்களில் சிறப்பு பூஜைகளும், யாக யக்ஞங்களும் நடக்கின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 11ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மே 14ஆம் தேதியும் குருப்பெயர்ச்சி நடக்கிறது;
குரு என்னும் வியாழன் கிரகம் ஆண்டு தோறும் இடம் பெயரும். இப்பொழுது ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் செல்கிறார்.
****
மீனாட்சியம்மன் கோவில் தேரோட்டம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா, கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. மீனாட்சி கல்யாணத்தை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் ஒரு லட்சம் பேருக்கு இலவச சாப்பாடு வழங்கப்பட்டது. ஆறுவகையான உணவுகளை தயாரிக்க ஐநூறு தொண்டர்கள் உதவி செய்தார்கள்.
வெள்ளிக்கிழமை நடந்த தேரோட்டத்தில் கலந்து கொள்ளப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நகரமே விழாக்கோலம் பூண்டது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
சித்திரை மாதத்தில் தமிழ்நாடெங்கும் பல்வேறு கோவில்களில் தேரோட்டமும், கல்யாண வைபவங்களும் நடப்பது வழக்கம். அதன்படி பல இடங்களில் தேரோட்டம் நடந்த செய்திகளும் வந்துள்ளன
**********
திருச்செந்தூர்கும்பாபிஷேகம் நடத்தும் நேரத்திற்கு தீட்சிதர்கள் ஆட்சேபனை!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்திற்குக் கோயில் தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின், ஜூலை 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக 300 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், காலை 9 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள கோயில் தீட்சிதர்கள், நிழல் விழாத சுபமுகூர்த்த நேரமான நண்பகல் 12 மணிக்குக் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அறநிலையத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
xxxx
ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரி மலைக்கு வருகிறார்
சபரிமலை: வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலையில் மே 14ல் நடை திறக்கப்படுவதால், 15 முதல் 19 -வரை பக்தர்கள் தரிசிக்கலாம். ஜனாதிபதி திரவுபதி முர்மு, மே 18 அல்லது 19ல் சபரிமலை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் நிலக்கல் சென்று, அங்கிருந்து காரில் பம்பைக்கு செல்கிறார். அங்கிருந்து நடந்தோ அல்லது டோலி மூலமாகவோ அவர் சபரிமலை சன்னிதானம் செல்ல வாய்ப்புள்ளது. இந்த இடங்களை உயர் போலீஸ் அதிகாரிகள், இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.சன்னிதானம் விருந்தினர் மாளிகையில், கூடுதல் வசதிகளுடன் அறை தயாராகிறது. அந்த இரு நாட்களுக்கு, பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முர்மு, சபரிமலை வரும் பட்சத்தில், பதவியில் இருக்கும்போது, இங்கு வரும் முதல் ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.
****
சிலை தடுப்புப் பிரிவு அதிரடி..! கண்ணப்ப நாயனார் சிலை ஏலம் தடுத்து நிறுத்தம்…!
தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையின் துரித நடவடிக்கையால், நெதர்லாந்து நாட்டில் பழமையான கண்ணப்ப நாயனார் சிலை ஏலம் விடப்படுவது கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் திருப்புகழூரில் உள்ள அக்னீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இந்த விலை மதிக்க முடியாத உலோகச் சிலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இந்த சிலை, தற்போது நெதர்லாந்து நாட்டில் ஏலம் விடப்பட இருப்பதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக செயல்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், நெதர்லாந்து நாட்டு காவல்துறைக்கும், இந்திய தொல்லியல் துறைக்கும் அவசர மின்னஞ்சல் மூலம் தகவலைத் தெரிவித்தனர். சிலையின் பழமை மற்றும் அது திருடப்பட்டது தொடர்பான ஆவணங்களையும் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பினர்.
தமிழ்நாடு காவல்துறையின் துரித நடவடிக்கையின் பலனாக, நெதர்லாந்து நாட்டு அதிகாரிகள் ஏலத்தை உடனடியாக நிறுத்தி உத்தரவிட்டனர். தற்போது அந்த கண்ணப்ப நாயனார் சிலை நெதர்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
சிலையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் உள்ள அக்னீஸ்வரா் கோயிலில் கண்ணப்ப நாயனார் உலோகச் சிலை கடந்த 2010-ஆம் ஆண்டு திருடப்பட்டது. 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அந்தச் சிலை, 64 செ.மீ. உயரம், 23 கிலோ எடை கொண்டதாகும்.
****
உண்மைக்குப்புறம்பாக அறிக்கை வெளியிட்ட காவல்துறை – மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு!
உளுந்தூர்பேட்டை சாலை விபத்து தொடர்பாக காவல்துறை உண்மைக்குப் புறம்பாக விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளதாக மதுரை ஆதீனம் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார் விபத்து தொடர்பாக எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்று காவல்துறை கூறுவது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த அடுத்த நிமிடமே 100 எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததாகவும், உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் விபத்து தொடர்பாகப் பேசியதாகவும் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்து 26 மணி நேரம் கழித்து எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை என்ற காவல்துறையின் அறிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனக்கூறியுள்ள மதுரை ஆதீனம், எதிர் தரப்பின் புகாரின் அடிப்படையில் தனது கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பு வாகனம் பக்கவாட்டில் வேகமாக வந்து மோதியதை மறைக்கும் வகையில், தாங்கள்தான் விபத்து ஏற்படுத்தி விட்டதாகக் கூறுவது ஏற்புடையதல்ல எனக்கூறியுள்ள அவர், முன்னுக்குப் பின் முரணாக அமைந்துள்ள காவல்துறையின் விளக்க அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
****
சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது : ஜெ.பி.நட்டா
சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது என மத்திய அமைச்சரும், பாரதீய ஜனதாக கட்சியின்
தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டாதெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள SRM கல்வி நிறுவன வளாகத்தில், 6-வது சர்வதேச சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய ஜெ.பி.நட்டா, வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு எனக்கூறி உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், தருமபுரம் ஆதீனம் மிகவும் தொன்மையானது எனத் தெரிவித்தார். கோயில்கள், புலவர்கள் என பல்வேறு சிறப்புகளைத் தமிழ்நாடு பெற்றிருப்பதாகவும் புகழாரம் சூட்டினார்.
இதையடுத்து தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ரவி, சனாதன தர்மத்தால் தான் பாரதம் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
திருமுறை, தேவாரம் ஆகிய தலைசிறந்த படைப்புகளை சைவ சித்தாந்தம் வழங்கியுள்ளதாகக் கூறிய அவர், சைவ சித்தாந்தத்தைப் பிரதமர் மோடி பின்பற்றுவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், உயர்கல்வி பாடத்திட்டத்தில் தேவாரம், திருவாசகம் பாடல்களைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்
இதையடுத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வந்திருந்த அனைவரையும் தமிழ் மொழியில் வரவேற்றார். இதைத் தொடர்ந்து சிவபெருமானை அவர் தமிழில் போற்றி வணங்கியபோது கூடியிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 1-ஆம் தேதி சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
விழாவின் 3-ஆம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடைபெற்றது. இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் அதிகார நந்தியின் மீது வேதகிரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து, 63 நாயன்மார்களும் சுவாமியை வணங்கியபடி ஊர்வலமாகச் செல்ல, முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா நடைபெற்றது. மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் சுவாமி வீதியுலா செல்ல, பக்தர்கள் சுவாமியை வணங்கியபடி கிரிவலம் சென்றனர்.
பக்தர்கள் வழி நெடுகிலும் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா மே 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
******
ராமர் ஒரு புராண கதாபாத்திரமா? – ராகுல் காந்திக்கு பா.ஜ.க கண்டனம்!
ராமர் ஒரு புராண கதாபாத்திரம் என கூறிய ராகுல் காந்தியின் கருத்துக்கு பாரதீய ஜனதாக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி, அங்குள்ள பிரவுன் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, புத்தர், குருநானக், காந்தி, அம்பேத்கர் உள்ளிட்டோர் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என கூறியதாகவும், ராமர் போன்ற புராண கதாபாத்திரங்களும் அதைதான் போதித்ததாகவும் தெரிவித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாரதீய ஜனதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா, இந்துக்களையும், ராமரையும் அவமதிப்பது காங்கிரசின் அடையாளமாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ராமருக்கும், இந்துக்களுக்கும் எதிரானவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதிகாசம் என்பது வரலாறு; ஆகவே மகாபாரதமும் ராமாயணமும் உண்மையில் நடந்த சம்பவங்கள் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள் அப்படியிருக்க இதை புராணம் என்று ராகுல் கூறியதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .
****
சுஹாஸ் ஷெட்டி கொலைக் குற்றவாளிகள் கைது
கர்நாடக மாநிலம்தட்சிண கன்னட மாவட்டத்தில் பதட்டமான சூழலை உருவாக்கிய இந்து ஆர்வலர் சுஹாஸ் ஷெட்டி கொலை தொடர்பாக மங்களூரு நகர காவல்துறை இரண்டு பேரை கைது செய்து, எட்டு சந்தேக நபர்களை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள கலாசாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் விசாரணையில் அவர்கள் மங்களூரை சேர்ந்த பிரபல சஃப்வான் கும்பலுக்கு உதவி செய்து வந்தது தெரியவந்துள்ளது.
தற்போது, வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், மங்களூரு போலீசார் எட்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்,
****
சம்ஸ்கிருத மொழி மறுமலா்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை – உள்துறை அமைச்சர் அமித் ஷா
இந்திய மொழிகள் பலவற்றிற்கு சம்ஸ்கிருதம்தான் தாய் என மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 1008 சம்ஸ்கிருத உரையாடல் அமா்வுகளின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, காலனித்துவ ஆட்சிக்கு முன்பே சம்ஸ்கிருதத்தின் வீழ்ச்சி தொடங்கியது என்றும், பிரதமா் மோடியின் தலைமையிலான ஆட்சியில் சம்ஸ்கிருதத்தின் மறுமலா்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
உலகின் புகழ்பெற்ற மொழி அறிஞா்கள் பலரும் சம்ஸ்கிருதத்தை மிக அறிவியல்பூா்வ மொழியாக அங்கீகரித்துள்ளதாக கூறிய அவர், சம்ஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளில் சிதறி கிடக்கும் கையெழுத்து பிரதிகளை சேகரிக்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சமஸ்கிருத மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என கூறினார்.
****
ஹிந்துக்கள் வெளியேற கனடாவில் காலிஸ்தான் பேரணி
கனடாவில் வசிக்கும் ஹிந்துக்கள் வெளியேற வேண்டும் என்ற கோஷத்துடன் கனடாவில் காலிஸ்தான் பேரணி நடத்தினர். சமீப காலமாக ஹிந்து கோவில்கள் மீது சில மர்ம கும்பல் தாக்குதல் நடத்தினர். இதற்கு ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். சமீபத்தில் கனடாவில் நடந்த தேர்தலில் லிபரல் கட்சியை சேர்ந்த மார்க் கார்னரி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தல் முடிவு வெளியான சில நாட்களுக்குள் மே 5- ன்று காலிஸ்தான் அமைப்பினர் டோரடண்டோவில் உள்ள மால்டன் குருத்வாரா அருகே நகர் கிர்தான் பகுதியில் பேரணி நடத்தினர். இதில் 8 லட்சம் ஹிந்துக்கள் வெளியேற வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த பேரணியில் டிரக்கில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரது உருவ படத்தை கையில் விலங்கிட்டவாறு கூண்டுக்குள் நிற்பதுபோன்று சித்தரித்து இருந்தனர்.
இந்த பேரணிக்கு கனடிய ஹிந்து சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த ஆபத்தான செயலை அனைத்து தலைவர்களும் கண்டிக்க வேண்டும். என்று ஹிந்து அமைப்பு கூறியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏறக்குறைய 18 லட்சம் பேர் அங்கு வசிக்கின்றனர். இதில் 8 லட்சம் பேர் ஹிந்துக்கள் ;
xxxx
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல் இது.