Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 16 December 2018 GMT Time uploaded in London – 20-59 Post No. 5791
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Experimenters Anecdotes
Edison failed thousands of times!
Results! Exclaimed Edison to an assistant marvelling at the bewildering total of his failures— 50000 experiments for example, before he succeeded with a new storage battery. Results? Why man, I have gotten a lot of results. I know fifty thousand things that won’t work.
Xxx
Shelley s Secret Experiments
Shelley s lifelong Interest in science, especially chemistry, was a roused by a quack lecturer who visited his first school, Sion House. At Eton he was forbidden to study chemistry, and so performed experiments in his room.
One day his tutor Mr Bethel, heard strange noises from his room, entered and found Shelley envelope d in blue flames. What on earth are you doing, Shelley? Asked the teacher. Please, Sir, I am raising the devil. The startled tutor put his hand on some apparatus which being a Leyden jar gave him a bad shock.
Xxx
Fluke and Luck
Edison s school of scientific experimentation was essentially empirical. Once he was seeking a solvent for hard rubber. Many scientists, seeking it through theory or formula, were yet helpless. Edison went to his impressive and remarkably complete store room of chemical s. He immersed a small fragment of hard rubber in a vial of each one of these many chemical s. It was an enormous number. But Edison found his solvent.
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 16 December 2018 GMT Time uploaded in London – 11-43 Post No. 5788
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கம்ப ராமாயணத்தைப் பக்திசுவைக்காகப் படித்து அதில் முத்து எடுப்போர் பலர்.
கம்பனை இலக்கிய நயத்துக்காகப் படித்து பவளம் எடுப்போர் பலர்.
ஆனால் கம்பனை விஞ்ஞானியாக, உயிரியல் விஞ்ஞானியாகப்– பார்த்து ரஸிப்போர் சிலரே.
கம்பன் போகிறபோக்கில் கப்பல், கடல் வாழ் பிரணிகளைப் பற்றிச் சொல்லுவ தால், அந்தக் காலத்தில் தமிழர்களுக்குக் கடல் பற்றி எவ்வளவு தெரிந்திருந்தது என்பது நமக்குத் தெரிகிறது.
சோழ சாம்ராஜ்யம், ‘சிங்களம் புட்பகம், சாவகம் எனத் தீவு பலவினும் குடியேறி’ -நல்லாட்சி தந்த காலம் அது.
மாபூப்பாளம், மாநக்கவாரம், மாயிருடிங்கம் எனப் பல்வேறு தீவுகளில் சோழனின் புலிக்கொடி பறந்த காலம் அது.
இதே போல காளிதாசனும் கடல் பற்றிச் சொல்லுவது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாரத நாடு கடல் வணிகத்திலும், கடல் ஆதிக்கத்திலும் சிறந்து விளங்கியதைக் காட்டும்.
ரகு வம்ஸ மன்னர்களின் சிறப்பு பற்றி ஒரு பட்டியல் தருகையில் ‘இரு கடலையும் தொடும் நிலப்பரப்பையும் தன்னகத்தே கொண்டனர்’ என்பான்.; கடலில் கப்பல் மூழ்கினால் அவற்றில் சென்றோரின் சொத்து யாருக்குச் சொந்தம் என்றும் விவாதிப்பான். அந்த அளவுக்குப் பாரதக் கொடி பட்டொளி வீசிப் பறந்த காலம் அது
.
கடல்வாழ் பிராணிகளை உவமையாகப் போகிற போக்கில் கம்பனும் காளிதாசனும் சொல்லுவது இரண்டு உணமைகளைக் காட்டும்
1.அந்தக் காலத்தில் இந்தியக் கடற்பரப்பிலும் திமிங்கிலங்கள் வாழ்ந்தன. (இப்போது கிடையாது).
2. மக்களுக்குத் திமிங்கிலம், சுறாமீன் போன்ற கடல் வாழ் பிராணிகள் பற்றி நன்கு தெரிந்து இருந்தது. ஏனெனில் உவமையாகக் கையாளப்படும் விஷயம் பலரும் அறிந்ததாக இருக்க வேண்டும் என்பது கவிகளின் மரபு இலக்கணம்.
கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டத்தில், வானரர் களம் காண் படலத்தில், ராமன் விட்ட அம்புகளால் என்ன நிகழ்ந்தது என்பதை விளக்கும் பாடல் இதோ:-
ஒழுகிப்பாயும் மும்மத வேழம் உயிரோடும்
எழுகிற்கில்லாச் செம்புனல் வெள்ளத்திடை இற்ற
பழகிற்கில்லா பல்திரை தூங்கும் படர் வேலை
முழுகித் தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை நோக்கீர்
பொருள்
முதல் பாட்டில் ராமன் செலுத்திய அம்பால் வீழ்ந்தவர்களின் முகம் ரத்த வெள்ளதில் மிதந்தது; தாமரைக்குளம் போல இருந்தது என்றான்.
இந்தப் பாட்டில்,
ஒழுகிப் பாய்கின்ற மூன்று மத நீர்களையுடைய யானைகள் இன்னும் சாகவில்லை. அவைகள் ரத்த வெள்ளத்தில் இருந்து தலைகளைத் தூக்கி எழுந்திருக்க முயலும்; மீண்டும் விழும். இது எப்படி இருக்கிறது என்றால், பழகிய, அலை வீசும் கடலில் திமிங்கிலங்கள் கடலுக்குள் முழுகுவதும் எழுவதுமாக இருப்பதுப் போலக் காட்சி தந்தது.
இங்கே கடல் வாழ் பிராணிகளில் மிகப் பெரியதான திமிங்கிலத்தை ‘’மீன் அரசு என்பான். மீனவர்களும் அப்படித்தான் நினைப்பர். ஆனால் திமிங்கிலமோ மீன் வகையை சேர்ந்தது அல்ல. குட்டி போட்டு பாலூட்டும் (mammal) பிராணிகளை சேர்ந்தது. அது சுவாசிப்பதற்காக ஒவ்வொரு முறையும் வெளியே வரும். அப்படிச் சுவாசிக்கையில் அதன் அருகிலுள நீர் மேலே பீச்சி அடிக்கும். ஆனாலும் மீன் போலவே வடிவம்!
ஆகையால் மீன் அரசு என்று கம்பன் சொல்லுவதை ஏற்போமாக.
காளிதாசனும் இக்காட்சியை, கம்பனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே செப்பிவிட்டான். இதோ அந்தப் பாடல்…………………… (please follow the link given below)
கம்பன் கிட்கிந்தாக் காண்டத்திலும் திமிங்கிலம் பற்றிப் பேசுகிறான். எனது முந்தைய கட்டுரைகளில் சங்கப் பாடல்கள், காளிதாச ஸ்லோகம், கம்பன் பாடல்கள் உள. கண்டு களிக்கவும்.
திமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் சங்கப் புலவர்களும் தரும் அதிசயத் தகவல் (Post No.3426). Research Article Written by London swaminathan. Date: 7 December 2016. Time uploaded …
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
நாட்டு நடப்பு
சும்மா கொஞ்சம் கலாய்க்கலாம் சார், வாங்க! – 1
ச.நாகராஜன்
நம்ம நாட்டு நடப்பைப் பத்தி பல பேர் பல காலத்திலேயும் சொல்லிட்டாங்க சார்!
சிலதைப் பார்ப்போம்; சிரிப்போம்!
உடம்பு சரியில்லீங்க; என்ன பண்றது?
உடம்பு சரியில்லாம போச்சு; என்ன பண்றது? டாக்டர் கிட்ட போனேன். அது இரட்டை மோசடியாப் போச்சு; அவர் என் வியாதி பத்தி இன்னொரு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கன்ஸல்ட் பண்றாரு! அவருக்கு ஒரு ஃபீஸ்; இவருக்கு ஒரு ஃபீஸ். இரட்டை மோசடி சார்!
இது தாங்க இப்ப எல்லா ஆஸ்பத்திரிலேயும் நடக்குது!
A Cynic says that double jeopardy, which we hear so much of nowadays, is when your doctor calls in a consulting physician.
*
கணவன் மனைவி பத்தி மாமியார் கிட்ட என்ன சொன்னான்?
மாமியார் தன் பெண்ணைப் பத்தி மாப்பிள்ளை கிட்ட வந்து, ‘அவ எப்படி செய்றா? அவ ஸ்பீடு எப்படி’ன்னு கேட்டா!
கணவன் சொன்னான்: ப்ரமாதம்!அவ சூப்பர்மார்கெட்ல நடந்தா ஒரு மணிக்கு 3000 ரூபாய்ங்க்ற ரேஞ்சில இருக்கு அவ ஸ்பீடு!
சொன்னவர் ஜோசப் சலக்
Today women often push carts through supermarkets at speeds over $ 65 an hour : Joseph Salak
*
பிஸினஸ்ல யார் பார்ட்னர்?
உங்க பிஸினஸ்ல யார் சார் பார்ட்னர்?
அட என்னங்க, நீங்க! தெரியாதது மாதிரி கேட்கறீங்க! வழக்கமான பார்ட்னர் தான். ஒவ்வொரு பிஸினஸ்லயும் அரசாங்கம் தானே சீனியர் பார்ட்னர். லாபம் வந்தாலும் வராட்டியும் அவருக்கு பங்கை பிஸினஸ் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே கொடுத்துடறோம் இல்ல!!!
உதவி : நார்மன் கஸின்ஸ்
Government in the U.S. today is a senior partner in every business in the country. – Norman Cousins
*
நாளைய பத்தி சொல்லுங்க!
நாளைய பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்!
நேத்து இன்னியபத்தி நாளைன்னு சொன்னோம்; அவ்வளவு தான்!
உதவி :ஜேனட் கேரி
Yesterday we called today tomorrow! – Janet Cary
*
உங்க வேலை என்னங்க?
‘உங்க வேலை என்னங்க? கொஞ்சம் விவரமா சொல்றீங்களா?’
‘சொல்றேனே, விவரமாவே சொல்றேனே!
தொழிலாளிகள் வேலை பார்க்கறாங்க!
ஊதாரிகள் வெட்டிச் செலவு செய்றாங்க!
வங்கிக்காரங்க கடன் கொடுக்கறாங்க!
பொம்பளைங்க செலவழிக்கறாங்க!
திருட்டுப்பசங்க போலியா தயாரிக்கறாங்க!
வரிகளால எடுத்துகறாங்க!
சாவறங்க விட்டுட்டுப் போறாங்க!
வாரிசுங்க வாங்கிக்கிறாங்க!
சேர்க்க ஆசைப்படறவங்க சேர்க்கறாங்க!
கருமிகள் ஏங்குறாங்க!
கொள்ளைக்காரங்க கொள்ளையடிக்கிறாங்க!
பணக்காரங்க அதிகமாக்கிக்கறாங்க!
சூதாடிங்க சூதாடறாங்க!
இவ்வளவையும் நான் பயன்படுத்திக்கிறேங்க; அவ்வளவு தாங்க, என்னோட வேலை! நான் ஒரு அரசியல்வாதி!’
சொன்னவர் – யாரோ!
Workers earn it,
Spendthrifts burn it,
Bankers lend it,
Women spend it,
Forgers fake it,
Taxes take it,
Dying leave it,
Heirs receive it,
Thrifty save it,
Misers crave it,
Robbers seize it,
Rich increase it,
Gamblers lose it ….
I could use it
*
இலக்கியவாதி என்ன ஆனார்?
ஏம்பா! நீ ஒரு இலக்கியவாதி தானே? இப்ப என்ன பண்றே?
நான் ஒரு ஜர்னலிஸ்ட் ஆயிட்டேங்க!
அப்படீன்னா?
அதாங்க! இலக்கியங்கறது பரபரப்பா சூடா வித்தியாசமா அப்பப்ப தர ஜர்னலிஸம் தாங்க!
உதவி : மாத்யூ ஆர்னால்ட்
Journalism is literature in a hurry – Mathew Arnold
*
நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்ன்ன்ன்!
நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன், என் காதலியை! நீடிச்சிருக்க ஆசிர்வாதம் பண்ணுங்க!
பண்றேனே!
உன்னோட மணவாழ்க்கை
காதல் ததும்பி வழிய ஒரே வழி
இரண்டு பேர்ல எப்பல்லாம் நீ தப்பு செய்யறயோ, உடனே அவகிட்ட ஒத்துக்க!
எப்பல்லாம் நீ சரியா இருக்கயோ, உன் வாயை அவகிட்ட மூடிக்க!
உதவி : யாரோ!
To keep your marriage brimming
With love in the laving cup,
Whenever you’re wrong, admit it,
Whenever you’re right, shut up!
*
உன்னைப் பற்றி நீயே சரியாகப் புரிந்து கொள்!
சார்! உன்னை நீ அறிவாய்ன்னு சாக்ரடீஸ் மாதிரி அடிக்கடி சொல்றீங்களே,எப்படி சார் அறியறது!
“அட, உன் ஃபிரண்டு மாதிரி இருக்கணும்னு சொல்றேம்பா!”
“அவன் மாதிரின்னா?”
அவன் என்ன பண்ணான்! ரூம் வாசல்லே ஒரு சீட்டை எழுதி வச்சான்’ல்லே அது மாதிரிப்பா! சீட்ல என்ன எழுதி இருந்தான்:
வாட்ச்மேன்! நிச்சயமா என்னை காலம்பற ஏழு மணிக்கு எழுப்பிடு. ரொம்ப முக்கியமான தவிர்க்க முடியாத வேலை சரியா ஏழு மணிக்கு இருக்கு. மறந்துடாம எழுப்பிடு. சரியா டயத்துக்கு அதை முடிக்கணும். அதுனாலே நான் எழுந்துட்டேன்னு குரல் கொடுக்கற வரைக்கும் திருப்பித் திருப்பிக் கதவைத் தட்டு. மறந்துடாதே!
இந்த வரிகளுக்குக் கீழே ஒரு குறிப்பு இப்படி இருந்தது – எதுக்கும் பத்து மணிக்கும் ஒரு முறை வந்து பாத்துடு!
KNOW THYSELF!
A Yale undergraduate left on his dooe a placard for the janitor on which was written, “Call me at 7 O’Clock; it is absolutely necessary that I get up at seven. Make no mistake. Keep knocking until I answer. Under this he had written: “Try again at ten”.
*
என்னங்க, கலாய்ப்பு எப்படி இருக்கு? இன்னும் கொஞ்சம் கலாய்க்கலாமா?
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
The story of the discovery of two elements is very interesting. America kept it as a top secret, but it was announced in a ‘Kids Quiz Radio Show’ in 1945! The discoverers of americium chose an unusual way to announce their discovery in a children’s radio show in USA called Quiz Kids, broadcast on 11 November 1945.
The guest scientist on the panel that week was a 33 year old chemist, Glen T Seaborg, who had worked on the top secret atomic weapons programme that had produced two new elements, curium and americium. Americium came to light as part of the Allied project to develop nuclear weapons, so its discovery was kept secret until the end of Second World War. Its existence was officially announced a few days after the broadcast, and the following year Seaborg proposed naming it americium, after the continent on which it was first produced.
Americium is named after America. It is a radioactive, silvery metal. Americium was first made in 1944 at the University of Chicago by a team which included Glen T Seaborg, Ralph A James, Leon. O Morgan and Albert Ghiorso. It was produced as a result of the bombardment of plutonium with neutrons in a nuclear reactor. It was in fact discovered after curium, the element which follows it in the Periodic Table.
Smoke Detector It is widely used in smoke detectors. A smoke detector contains 150 micro grams of americium oxide. The price of americium oxide per gram was $1500 in the year 2000. 5000 detectors can be made in one gram.
Americium 243 is produced from plutonium 239 with a half -life of 7370 years. Americium 241 is used in smoke detectors. It is extracted from nuclear reactors.
Americium probably does occur naturally on earth, but only in incredibly tiny amounts in uranium minerals where nuclear fission may occasionally produce an atom.
Chemical Element
Chemical symbol –Am Atomic number– 95 Melting point– 994 degree C
Curium for Pace makers
Curium 242 is produced in nuclear reactors by bombarding plutonium with neutrons. This isotope is used as power source for pacemakers and navigational buoys, and on space missions because it gives off 3 watts of heat energy per gram of metal. Its radiation can easily be shielded against.
Nuclear weapon tests from 1945 have pumped some curium into atmosphere. Curium is a synthetic, radioactive metal belonging to the actinide group. It is silver in colour. Altogether there are 14 known isotopes. The ones made in kilogram quantities are curium 242 ( half- life 163 days) and curium 244 ( half- life 18 years). The longest lived isotope is curium 247, with a half-life of 16 million years.
Chemical properties
Chemical symbol Cm Atomic number 96 Melting point 1340 degree C
The production of curium in large quantities in nuclear reactors solves a big problem. This helps to reduce the stockpile of plutonium which may be otherwise used for making nuclear weapons. Curium is relatively short lived and useful.
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
அதிசய க்யூரியம், அதிசய அமெரிஷியம்; குழந்தைகள் கூட்டத்தில் அறிவிப்பு! (Post No.5783)
நம் வீடுகளை செங்கற்காளால் கட்டுகிறோம். இந்தப் பிரபஞ்சமானது 118 மூலகம் (தனிமம்) என்னும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் பகர்வர். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் முதல், பெண்கள் அணியும் தங்கம் வரை அனைத்தும் 118ல் அடக்கம். க்யூரியம் (Curium) என்ற உலோகமும் அமெரிஷியம் (Americium) என்ற உலோகமும் ரஹஸியமாகத் தயாரிக்கப்பட்டன. இரண்டாவது உலக மஹா யுத்த காலத்தில் அமெரிக்கா நடத்திய ஆராய்ச்சியில் இவை உருவானது. இதை அமெரிக்கா பரம ரஹஸியமாக வைத்திருந்தது. அதில் ஈடுபட்ட ஒரு விஞ்ஞானி குழந்தைகள் ரேடியோ நிகழ்ச்சியில் இந்தக் கண்டு பிடிப்பை வெளியிட்டார். அவர் சொன்னது குழந்தைகளுக்கு விளங்கி இருக்காது! அடுத்த சில தினங்களில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியான பின்னர் வேதியியல் உலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதோ சில சுவையான மூலகக் கதைகள்!
1945 நவம்பர் 11ம் தேதி க்விஸ் கிட்ஸ் (Quiz Kids- Radio Show) என்ற ரேடியோ நிகழ்ச்சி நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக க்ளென் டி. ஸீபோர்க் (Glen T Seaborg) என்பவரை அழைத்திருந்தனர். அவர் எங்கள் ஆராய்ச்சியில் புதிய மூலகம் (தனிமம்) இரண்டு கிடைத்தன என்றார். இரண்டாவது உலக மஹா யுத்தம் முடிந்துவிட்டதால் அமெரிக்காவின் ரஹஸிய அணு ஆயுத ஆராய்ச்சிகள் வெளியிடப்பட்டன. இதற்குச் சில நாட்களுக்குப் பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு உலகத்தை வியப்பில் ஆழ்த்தியது அமெரிக்கா.
இதற்கு ஓராண்டுக்குப் பின்னர், அந்த மூலகத்துக்கு அமெரிஷியம் என்ற பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்படி ஒரு நாமகரணம்!
மற்ற மொழிகளில் அமெரிஷிய என்றாலும் ஆங்கிலத்தில் அமெரிஷம் என்பர்.
ரேடியத்தைக் கண்டுபிடித்து கதிரியக்கத்தினால் புற்று நோய் ஏற்பட்டு இறந்த மேரி க்யூரி, பியர் (பீட்டர்) க்யூரி என்ற பிரெஞ்சு விஞ்ஞானிகளின் நாமம் க்யூரியம் என்ற மூலகத்துக்கு சூட்டப்பட்டது. ரேடியம் கதையை இன்னொரு நாள் சொல்லுகிறேன்.
அமெரிஷம் பற்றி சில சுவையான செய்திகள்.
எங்கள் லண்டனில் எல்லோருடைய வீட்டிலும் ஸ்மோக் அலார்ம் (Smoke Detector) உண்டு. வீட்டை வாடகைக்கு விடுவதாக இருந்தால் இது கம்பல்ஸரி (கட்டாயம்).
வீட்டிலெங்கேனும் புகை அதிகமானால் உடனே இது ‘கியா, கியா’ என்று கத்த ஆரம்பித்துவிடும். சில நேரங்களில் தோசை வார்க்கும் போதோ சுவையான கறி செய்யும்போதோ கொஞ்சம் புகை வந்துவிட்டால் புகை அபாய அறிவிப்பு அலறும்; ஓடிப்போய் அதை அணைத்துவிட்டுப் பின்னர் ‘ஆன்’ (Switch On) செய்வோம். வீடுகளுக்கு ஐயர்களை பூஜைக்கு அழைத்தால் அவர் போடும் முதல் கட்டளை.
“ஆத்தில் (அகத்தில்) ஏதேனும் ஸ்மோக் அலார்ம் இருந்தால் அணைச்சுட்டு வாங்கோ” என்பார். அல்லது அவர் விளக்கையும் ஊதுபத்தியையும் ஏற்றிய அடுத்த நிமிஷத்தில் அபஸகுன அலார்ம் (எச்சரிக்கை ஒலி) வந்து விடும். இவ்வளவு பீடிகை எதற்கு என்று கேட்கிறீர்களா?
வீட்டுக்கு மிகவும் பயன் தரும் உயிர் காக்கும் தோழனான– ஸ்மோக் அலார்மில், அமெரிஷம் அல்லது அமெரிசியம் உளது. ஆனால் இதிலிருந்து வரும் கதிரியக்கம் உடலைப் பாதிக்கும் அளவு கிடையாது. ஆயினும் இதைப் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் கதிரியக்கம் தாக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உண்டு.
இதிலிருந்து வரும் கதிரியக்கம் எலும்புகளைத் தாக்கி அதன் மஜ்ஜையில் உருவாகும் இரத்த சிவப்பு அணுக்களை அழித்துவிடும்..
அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாகாணத்திலுள்ள சிகாகோ பல்கலைக் கழகத்தில் ஸீபோர்க் உள்பட 4 விஞ்ஞானிகள் 1944ம் ஆண்டில் இதை உண்டாக்கினர். ப்ளூட்டோனியம் என்னும் மூலகத்தின் மீது, ஒரு அணு உலையில், நியூட் ரான்-களைக் கொண்டு தாக்கினால் க்யூரியமும் அமெரிஷமும் கிடைக்கும்.
ப்ளூடோனியம்-239 இலிருந்து அமெரிஷம் 243 கிடைக்கும் (ஐஸடோப்). இது நிலைத்து நிற்கக்கூடிய வகையறா; ஏனையவை குறுகிய காலத்தில் அழிந்து விடும். இது பாதியாகக் குறைய (Half Life) 7370 ஆண்டுகள் ஆகும். எல்லா கதிரியக்க மூலகங்களுக்கும் இப்படி அரை வாழ்வு (Half life) கணக்கு உண்டு. பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ஈயத்தில் வாழ்வு முடிந்து விடும்.
ஸ்மோக் டிடெக்டரில் பயன்படுவது அமெரிஷம்-241. ஒவ்வொரு ஸ்மோக் அலார்மிலும் 150 மைக்ரோக்ராம் அளவுதான் இது வைக்கப்படும். அந்தக் கருவியில் மின்சார ஓட்டம் புகை காரணமாக தடைப்படுகையில் அதனுடன் இணைந்த எச்சரிக்கை மணி அடிக்கத் துவங்கும். 5000 கருவிகள் செய்வதற்கு ஒரு கிராம் உலோகம் போதுமானது. ஆனால் அமெரிஷம் ஆக்ஸைட் ஒரு கிராமின் விலை 1500 டாலர்களுக்கு மேல்!
இதன் வேதியியல் குறியீடு- Am
அணு எண் -95
உருகு நிலை- 994 டிகிரி C
பூமியில் இது இயற்கையில் கிடைக்கக்கூடும். ஆனால் கோடிக்கணக்கான ஆண்டுகளில் அழிந்திருக்கலாம்.
பலவகை அமெரிஷம் காம்பவுண்டுகளை (உப்பு) செய்து, வெவ்வேறு கலர் ஊட்டுவர். எடுத்துக் காட்டாக அமெரிஷம் க்ளோரைட் இளஞ்சிவப்பு (ரோஜா) நிறத்தில் இருக்கும்.
இது வெள்ளி போன்று பளபளக்கும் ஒரு உலோகம்.
இனி க்யூரியத்தின் கதையைக் காண்போம்.
ஒரு பெண்ணின் பெயர் சூட்டப்பட்ட பெருமை இதற்கு உண்டு. அவர்தான் மேரி க்யூரி.
முன்னர் சொன்ன ஆராய்ச்சியில் கிடைத்ததுதான் க்யூரியமும். இந்தக் கதிரியக்கமும் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும். ஆனால் இதையும் மிக குறைந்த அளவில் பயன்படுத்தினால் ‘உயிர் காக்கும் தோழன் ஆவான்.
ப்ளூட்டோனியத்தை நியூட் ரான் கொண்டு அடிக்கும் அடியில், க்யூரியம் கதறிக்கொண்டு வெளியே வரும். ஒவ்வொரு கிராம் உலோகத்தைக் கொண்டு, மூன்று வாட் (3 Watt) மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். இதன் காரணமாக இதை செயற்கை இருதயக் கருவிகள் (Pace makers), விண்கலங்கள், கடலில் மிதக்கும் வழிகாட்டி (Navigational buoys) மிதவைகள் ஆகியவற்றில் பயன்படுத்துகின்றனர். இது வெளியிடும் ஆல்பா (alpha rays) கிரணங்களை எளிதில் தடுக்க இயலுமாதலால் பாதுகாப்புப் பெட்டகத்தில் அடக்கிவைத்து, மின்சாரத்தைப் பெறுவர்.
இதன் வேதியியல் குறியீடு- Cm
அணு எண் -96
உருகு நிலை- 1340 டிகிரி C
இதுவும் செயற்கை மூலகம்; உலோகம். வெள்ளி நிறம் உடையது. இதற்கு 14 அவதாரங்கள் (ஐஸடோப்புகள் ) உண்டு. க்யூரியம்-242 என்ற ஐஸடோப் 163 நாட்களில் அழிந்துவிடும். ஆனால் க்யூரியம்-247ன் அரை வாழ்வு 16 மில்லியன் ஆண்டுகள் (ஒரு மில்லியன் = பத்து லக்ஷம்).
இது இயற்கையில் கிடைப்பதல்ல. ஆனால் மனிதர்கள் நடத்திய அணு ஆய்த சோதனைகளால் காற்று மண்டலத்தில் கொஞ்சம் இருக்கக்கூடும்.
அமெரிஷத்தால் தீவிபத்து உயிரிழப்புகளைத் தடுக்க முடிகிறது; க்யூரியத்தால் செயற்கை இருதயக் கருவிகளை உருவாக்க முடிகிறது.
இயற்கையில் தீய கதிரியக்க மூலகங்கள்!!! ஆனால் மனிதனின் புத்திசாலித்தனம் இரண்டையும் ‘உயிர் காப்பான் தோழன்’ என்ற வகையில் சேர்த்துவிட்டது அரக்கர்களைப் பயன்படுத்தி தேவர்கள் அமிர்தத்தைப் பெறவில்லையா? ஆகவே நம்மூர் முரடர்களையும் கூட, நுகத்தடியில் காளைகளைப் பூட்டி வேலை வாங்குவது போல வேலை வாங்கலாம்.
வாழ்க க்யூரியம்! வாழ்க அமெரிஷம்/ அமெரிஷியம்!!
TAGS– க்யூரியம், அமெரிஷியம், ஸ்மோக் அலார்ம், செயற்கை இருதயக் கருவி
இன்றுடன் வள்ளுவரின் அருளுரை முடியப் போகிறது என்பதை அறிந்த மக்கள் சற்று வருத்தப்பட்டனர். என்றாலும் மூன்று தினங்களுக்கு மேல் ஓரிடத்தில் இருக்காத வள்ளுவப் பிரான் முப்பெரும் தேவியருக்காக ஒன்பது நாட்கள் இருந்ததை எண்ணி அவர்கள் ஆறுதல் அடைந்தனர்.
சபை ஆரம்பித்தவுடன் வேகம் வேகமாக கேள்விகள் வர ஆரம்பித்தன.
ஒருவர் எழுந்து கேட்டார்.
நல்ல முறையில் வாழ்க்கை நடத்துகின்ற ஒருவனை நாம் எப்படி வாழ்த்த வேண்டும்?
வள்ளுவர் உடனே கூறினார்:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
அப்படி வாழாதவன்?
ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
பேய் உண்டா?
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப்படும்
தலைவன் யார் ஐயனே!
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும்
ஒரு புலவர் உற்சாகத்துடன் எழுந்தார்.
பார்த்தீர்களா, வாழ்வாங்கு வாழ்பவனை தெய்வத்துள் வைத்தார். மற்றவருக்கு உதவி செய்யாமல் வாழ்பவனை செத்த பிணத்துடன் வைத்தார். உலகத்தோடு ஒட்ட ஒழுகாமல் உலகம் உண்டு என்று சொல்வதை இல்லை என்று சொல்பவனைப் பேயாக வைத்தார். நீதிமுறை தவறாமல் மக்களைக் காப்பாற்றுபவனை தலைவன் என்று வைத்தார். இப்படி நான்கு விதமாக மனிதர்களைப் பிரிக்கிறார் வள்ளுவப் பிரான் என்று அவர் முடித்தவுடன் அனைவரும் கைதட்டி ஆரவாரித்தனர்.
ஒருவரை நடுநிலைமை உள்ளவரா என்று எப்படி அறிவது?
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்
இங்கு புலவர் இரு வரிசையாகப் பிரிந்தனர். ஒரு சாரார் ஒருவன் இறந்த பின் அவனைப் பற்றி நிற்கும் புகழாலும் பழியாலும் அவனது நடுநிலைத் தன்மை காணப்படும் என்றனர். இன்னொரு சாரார் அவனது எச்சம் என்பது அவனது பிள்ளைகளே, அவர்கள் வாழ்வைப் பார்த்து அறியலாம் என்றனர். இரு கருத்துக்களையும் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
தர்மவான் போல இல்லாத ஒருவனை எப்படி இனம் காண்பது?
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்
மற்றவனைப் பற்றிப் புறங்கூறும் ஒருவன் தர்மவான் இல்லை என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
பிறவித் துன்பம் ஒழிவது எப்படி, ஐயனே?
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்
ஆசைகளை விடு; அப்பொழுதே பிறவித் துன்பம் ஒழியும். இல்லையேல் மாறிமாறிப் பிறக்கும் நிலையாமை காணப்படும்.
அனைவரும் பெரிய ரகசியத்தை உணர்ந்தனர்.
பிறவித் துன்பம் அற வழி கேட்ட உடனேயே காமம் சம்பந்தமாக ஒருவர் ஒரு கேள்வி எடுத்து வைத்தார். மகளிரும் ஆண்களும் மிகவும் ஆவலாக வள்ளுவரைப் பார்த்தனர்.
ஐயனே! மனைவி ஊடலின் போது ஒருவர் விட்டுக் கொடுக்கிறார். யார் இதில் வென்றது?
வள்ளுவர் சிரித்தார்.
ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும்
கூடலிற் காணப் படும்
மணம் புரிந்த அனைவரும் ஓஹோ என்று சிரித்து அதை ஆமோதிக்க இளம் மங்கையரும் வாலிபரும் புரியாமல் சற்று நாணித் திகைத்தனர்.
புலவர் ஒருவர் எழுந்து நான்கு ‘காணப்படும்’ விஷயங்களை பிரான் உணர்த்தி இருக்கிறார். இத்துடன் புறந்தூய்மை நீரால் அமையும் அகத் தூய்மை வாய்மையால் காணப்படும் என்று சொன்னதையும் சேர்த்துப் பார்த்தால் ஐந்து ‘காணப்படும்’ என்ற ரகசியங்களை அறிகிறோம் என்றார்.
எதைக் கண்டால் அஞ்ச வேண்டும்?
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
தீய செயல்கள் தீயினும் கொடியன. ஆகவே அந்தத் தீமை விளவிக்கும் செயல்கள் அஞ்சப்படும்.
வள்ளுவர் தொடர்ந்தார்:
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்
முகத்தினால் சிரித்து அகத்தினால் தீமை கொள்ளும் கறுப்பு உள்ளத்தவரை நட்பாகக் கொள்ள அஞ்ச வேண்டும்.
இரு அஞ்ச வேண்டிய விஷயங்களைக் கேட்டவுடன் ஒருவர் ஒருவனை எப்படி ஆராய்ந்து நம்புவது என்று கேட்டார்.
அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப் படும்
அறம், பொருள், இன்பம், உயிரச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஒருவனை ஆராய்ந்து பார். பின்னரே அவனைப் பற்றி அறிய முடியும்!
வள்ளுவர் மன்னனைப் பார்த்துத் தொடர்ந்தார்:
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன் மூவர்
சொற்றொக்க தேறப் படும்
ஒரு ஒற்றனை இன்னொரு ஒற்றனால் ஆராய்க; அப்படி ஆளப்பட்ட மூன்று பேர்களின் சொற்கள் ஒத்திருக்கிறதா என்று பார்த்து உண்மையை அறிக.
எப்போது ஒருவனின் மதிப்பு கெட்டுப் போகும்?
வள்ளுவர் கூறினார்:
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்
கல்லாத ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டு பேசும் மதிப்பானது கற்றவர் அவையில் கூடிப் பேசும் போது கெட்டுப் போகும்.
நன்கு படித்த ஒருவன் நல்ல நூலின் பொருளை விரித்து உரைத்தாலும் கூட அவன் வறியவனாக இருந்தால் அவன் சொற்களை மதிப்புக் கொடுத்து யாரும் கேட்க மாட்டார்கள் அவன் சொற்கள் பயனின்றிப் போகும்.
கண்ணுக்கு அணிகலன் எது ஐயனே! கைகளில் மை தீட்டிய ஒரு அழகிய இளம் பெண் கேட்டாள்.
வள்ளுவர் குரல் புன்சிரிப்புடன் ஒலித்தது:
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
அந்தப் பெண்ணை கருணை பொதிந்த கண்களால் பாண்டிமாதேவி பார்க்க அவள் கண்களுக்கு அழகு மை அல்ல; கருணைப் பார்வை இல்லையேல் அது புண் என உணர்ந்து அமர்ந்தாள்.
ஒருவர் எழுந்து கேட்டார்: சற்றுக் கருணையற்றுக் கடுமையான சொற்களால் குடும்பத்தில் உள்ளவர்கள் கடிந்து கொண்டால்?
உறாஅ தவர் போல் சொல்லினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்
வெளிப்பட அன்பில்லாதவர் போலக் கடுமையாகச் சொன்னாலும் கூட, அது அகத்தே பகையில்லாமல் தன் அன்புக்குரிய ஒருவரின் நன்மைக்காகவெ சொல்லப்பட்டது என்பதை விரைவில் யாரும் உணர்வர்.
வள்ளுவர் உடன் தொடர்ந்தார்:
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்
அதே போல நண்பர்கள் போல நல்லனவற்றைச் சொன்னாலும் கூட, மனதிலே பகைமை கொண்டவர்கள் கூறும் சொற்களின் உண்மைத் தன்மையை விரைவில் யாவரும் உணர்வர்.
வள்ளுவரின் தீர்க்கமான சொற்களையும் அதற்கு புலவர்களின் விளக்க உரையையும் கேட்ட மக்கள் மகிழ்ந்தனர்.
ஆராயத் தக்கது எது?
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
பொறாமை நெஞ்சம் கொண்ட ஒருவனுடைய செல்வமும், பொறாமை இல்லாத ஒருவனின் கேடு காலமும் ஏன் என்று ஆராயப்பட வேண்டியவை.
எள்ளப்படுவது எது?
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
கேட்டவர்கள் எல்லாரும் வெறுக்கும் படியாக ஒரு பயனும் இல்லாத வெற்றுச் சொற்களைச் சொல்லும் ஒருவன் எல்லாராலும் இகழைப் படுவான்.
உள்ளப்படுவது எது?
வீறெய்தி மாண்டார் வினைத் திட்பம் வேந்தன் கண்
ஊறெய்தி உள்ளப் படும்
நல்ல செயல் திறன் மூலம் தன் திறமை காட்டி உயர்ந்தவரின் வினைத் திட்பமானது அரசு வரை எட்டும்; அவரை அரசனும் மதிப்பான்.
எள்ளப்படுவதையும் உள்ளப்படுவதையும் கேட்டவுடன் மக்கள் மகிழ அந்தி மாலை வந்தது.
பாண்டிமாதேவி பாண்டியனுடன் வள்ளுவரின் பாதம் தொட்டு பாத பூஜையைச் செய்ய சேரமாதேவியும் சோழமாதேவியும் ஏக்கத்துடன் பார்த்தனர்.
காலையில் பாண்டிமாதேவியிடம் வள்ளுவர் தங்கள் நாட்டிற்கு வருகை தந்து தங்களைப் புனிதப் படுத்தக் கூடாதா என்ற ஏக்கத்தை அவர்கள் கொட்டித் தீர்த்தனர்.
பாண்டிமாதேவி வள்ளுவரிடம் வினயமாக ஏதோ விண்ணப்பித்தாள்.
மக்கள் அப்படி தங்கள் மஹாராணி எதை விண்ணப்பிக்கிறார் என்று அறிந்து கொள்ள ஆவல் கொண்டனர்.
வள்ளுவர் புன் சிரிப்புடன் தலையை அசைக்க பாண்டியன் பெரிதும் மகிழ்ந்து உற்சாகக்குரலை எழுப்பினான்.
மக்கள் புரியாமல் திகைக்கவே ராணி சேரமாதேவியையும் சோழமாதேவியையும் பார்த்துக் கூறினாள் : “காலையில் என்னிடம் வள்ளுவப் பிரான் உங்கள் நாட்டிற்கு வர வேண்டும் என்ற ஆசையைக் கூறினீர்கள் அல்லவா? அதை உங்கள் சார்பில் அவரிடம் விண்ணப்பித்தேன். அவர் வருகிறேன் என்று கூறி விட்டார். சென்று ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அங்கே உங்கள் மன்னருடன் நீங்கள் பாத பூஜை செய்யலாம்.”
கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்ப இருவரும் ஓடோடி வந்து அக்கா என்று கூவி அவரைக் கட்டி அணைக்க பாண்டிமாதேவி அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.
அவர்கள் வள்ளுவரின் பாதம் பணிய அவர் ஆசீர்வாதம் கூறி எழுந்தார். மக்களும் எழுந்தனர். சிலர் அழுதனர். சிலர் ஆனந்தப் பட்டனர். சிலர் பேசினர்; சிலர் மௌனமாக இருந்தனர்.
மந்திரி, படைத்தலைவர், மக்கள் உடன் வர பாண்டியனும் மூன்று தேவிகளும் முன் செல்ல வள்ளுவர் பாண்டிய நாட்டு எல்லையை அடைந்து அனைவரையும் கையை உயர்த்தி ஆசீர்வதித்தார்.
இதற்கு மேல் என்னைத் தொடர வேண்டாம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.
நவ ராத்திரி போல ஒன்பது பகல் நடைபெற்ற அறிவு விருந்தைச் சுவைத்த மக்கள் திரும்ப மனமின்றி வள்ளுவரை வணங்கியவாறே திரும்பலாயினர்.
அவர் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்?
கொல்லி மலையை நோக்கியா, பொதிய மலையை நோக்கியா?
யாருக்குத் தெரியும்?
வள்ளுவர் வாழ்க என்ற மாபெரும் ஒலி கொல்லி மலையையும் பொதிய மலையையும் சென்று எதிரொலித்தது.
வள்ளுவர் வாழ்க; தமிழ் வாழ்க; உலகோர் சிறந்து உயர்க!
நன்றி, வணக்கம்!
****
இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்