Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
நேற்று பிதியாஸ்- பிசிராந்தையார் ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டேன். மலேசியத் தமிழ்ப் பாட நூலில் பிதியாஸ்- டாமன் நாடகம் சின்ன நாடகமாக வெளியாகியுள்ளது. இதே போல பிசிராந்தையார்- கோப்பெருஞ்ச்ழஷன் நாடகமும் எழுதப்படவேண்டும்.
பொழுது புலர்ந்தது. மக்கள் வெள்ளம் திரண்டது. சபை ஆரம்பித்தது.
கூட்டத்தினருள் ஒருவர் எழுந்து கேட்டார்ர் :
எல்லா உயிர்களும் சமமா? சமம் எனில் ஏன் உலகில் இத்தனை வேற்றுமை?
வள்ளுவர் முழங்கினார்:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்
கேள்வி கேட்டவர் இதைக் கேட்டுத் தொடர்ந்தார்: “தாங்கள் எல்லா உயிர்களும் பிறப்பால் சமம் தான்; ஆனால் செய்யும் தொழில்களால் உயர்வு தாழ்வை அடையும் என்கிறீர்கள். கர்மம் தான் காரணம் எனில் அதை எப்படி அறிவது? எடுத்துக்காட்டு ஒன்றைச் சொல்ல முடியுமா, நாங்கள் தெளிவை அடைவதற்கு? வள்ளுவர் சிரித்தவாறே கூறினார்:
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
இதைத் தனியாக வேறு மெய்ப்பிக்க வேண்டுமா என்ன? இதற்கு நூல்களே தேவை இல்லை. பல்லக்குத் தூக்கிச் செல்பவனையும் அதில் அமர்ந்திருப்பவனையும் பார்த்தால் தெரியவில்லையா என்ன?
அனைவரும் எளிய இந்த விளக்கத்தினால் மகிழ்ந்தனர். அன்றாடம் காணும் பல்லக்கு மூலம் கர்ம வினை பற்றிய ரகசியத்தை அறிந்தனர்.
அறம் யாது? மகளிர் பக்கத்திலிருந்து ஒரு இனிய குரல் ஒலித்தது.
வள்ளுவர் கூறினார்:
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன் சொலினதே அறம்
முகம் விரும்பும் தன்மையைக் காட்ட வேண்டும். இனிது பார்க்க வேண்டும்.உள்ளம் கலந்த இனிய சொற்களைப் பேச வேண்டும். இது அறம்!
அப்படியானால் சொல் எப்படி இருக்க வேண்டும்?
வள்ளுவர் உடனடியாகக் கூறினார்:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
சொற்களில் பயனுடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும். பயனிலாச் சொற்களைச் சொல்லக் கூடாது.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து
இன்னுமொரு சொல் சொல்கின்ற சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருக்கும்படி பார்த்து ஒரு சொல்லைச் சொல்ல வேண்டும்.
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்
ஒரு சொல்லின் திறத்தை உணர வேண்டும். பின்னர் அதைச் சொல்ல வேண்டும். அத்தகைய சொல்லைச் சொல்லும் சொல்வன்மையை விடச் சிறந்ததான அறமும் பொருளும் இல்லை.
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
சொல்லின் தொகுதி அறிந்த தூய்மையாளர், பேசும் இடத்தில் அவையின் தன்மை அறிந்து அதற்கு ஏற்றதான சொற்களைச் சொல்ல வேண்டும்.
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்
சொற்களின் தன்மை அறிந்து ஆராய்ந்த நன்மை உடையவர், சபையின் தன்மையை நன்கு ஆராய வேண்டும். அதற்குத் தக சொல்ல வேண்டியதை உணர்ந்து சொல்ல வேண்டும்.
வள்ளுவர் கூறக் கூற புலவர்கள் அவர் கூறியதன் பொருளை உடனுக்குடன் விரித்துரைத்தனர். சொல் பற்றிய சொற்கள் இத்தனையா!
மக்கள் ஆரவாரம் செய்தனர். ஒரு புலவர் எழுந்து கேட்டார்;
சொல்லுக என்று சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள்; சொல்லக் கூடாதது?
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
சான்றோராக இருந்தாலும் சரி நயனில்லாதவற்றைச் சொல்லினும் சொல்லட்டும்; ஆனால் பயனற்ற சொற்களை ஒரு போதும் சொல்லக் கூடாது.
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க
நன்குசலச் சொல்லு வார்
நல்ல அறிஞர்கள் கூடியுள்ள சபையில் நல்ல பொருளை மனதில் பதியும்படி சொல்லக் கூடிய திறன் உடையவர், அறிவில்லாதவரின் சபையில் மறந்தும் கூடப் பேசி விடக் கூடாது.
காதலின் தன்மை யாது? -ஒரு இளைஞன் கேட்டான். அனைவரும் வள்ளுவரை ஆவலுடன் பார்க்க அவர் கூறினார்.
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை
பெண்ணிடம் உள்ள நாணம், ஆணிடம் உள்ள ஆண்மை ஆகிய தோணிகளை காமம் என்னும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன என புலவர் ஒருவர் விரித்துக் கூற அனைவரும் கரை சேர்வது எப்படியாம் என்று சிரித்தவாறே கேட்டனர்.
காமம் அப்படிப்பட்ட பெரும் புனலா? இன்னொருவர் கேட்டார்.
வள்ளுவர் சிரித்தவாறே கூறினார்:
காமக் கடல் மன்னும் உண்டே அது நீந்தும்
ஏமப் புணை மன்னும் இல்
காமம் என்பது ஒரு பெருங்கடலே தான். அதை நீந்திக் கடந்து கரை சேர்வதற்கான தோணி தான் இல்லை! அனைவரும் தீராக் காதலின் தன்மையை அறிந்து ரசித்தனர். சபையில் கலகலப்பு உண்டானது.
ஐயனே, கடலைச் சொல்லி விட்டீர்கள், காமத்திற்காக! ஊருணியும் கேணியும் எங்கு வரும்? எதற்கு உவமையாகும்?
வள்ளுவர் கூறினார்:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு
ஊருக்கு உதவுகின்ற பெரிய உள்ளம் கொண்ட பேரறிவாளியின் செல்வமானது, ஊரார் அனைவருக்கும் உபயோகமாகும் நீர் நிறைந்த குளம் போல – ஊருணி போல ஆகும்.
ஆஹா, தேவைக்குத் தக அவரவருக்கு வேண்டியது போல எடுக்க தன்னை அர்ப்பணிக்கும் ஊருணி போல அல்லவா நல்ல உள்ளம் கொண்ட ஒருவனின் செல்வம்! அனைவரும் தமது ஊரில் உள்ள பேரறிவாளிகளுக்கு மனதால் நன்றி கூறினர்.
அடுத்து வள்ளுவர் கூறினார்:
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
மணலில் அமைந்துள்ள கேணியில் தோண்டத் தோண்டத் தோண்டிய அளவு நீர் ஊறும். அது போல மக்கள் தாம் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
ஆஹா, கடல், புணை, ஊருணி, கேணி ஆகிய அனைத்தையும் வைத்து எத்தனை ரகசியங்களை விளக்குகிறார் வள்ளுவர் என மக்கள் மெய் சிலிர்த்தனர்.
கூட்டத்தில் பருத்த உடலுடன் இருந்த ஒருவர் எழுந்திருக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்தார். இவருக்கு என்ன ரகசியம் அறிய வேண்டியிருக்கிறது என அனைவரும் அவரைப் பார்க்க, ‘இந்த உடம்பைப் பேணிக் காப்பது எப்படி ஐயனே! நெடுநாள் வாழ ஆசை தான்!’ என்றார்.
அனைவரும் சிரிக்க வள்ளுவர் புன்முறுவலுடன் கூறினார்:
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு
சித்த மருத்துவர் ஒருவர் எழுந்து உண்ட உணவு செரித்த பின்னரே அடுத்த வேளை உணவை அளவு அறிந்து சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எளிய ரகசியமே உடம்பை அடைந்தோர் அதை நெடுங்காலம் பேணி வைத்திருக்க வைக்கும் வழி என்று நெடுநாள் வாழ வைக்கும் ரகசியத்தை வள்ளுவர் கூறிய படி கூறினார்.
‘இன்னும் எவற்றை அளவறிந்து செய்ய வேண்டும் ஐயனே!’
கேள்வி எழுந்தவுடன் ஐயன் பதில் கூறலானார்:
ஆற்றின் அளவறிந்து ஈக அது பொருள்
போற்றி வழங்கு நெறி
பிறருக்கு வழங்கும் போது எவ்வளவு கொடுக்க முடியும் என்ற அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை வளமாக இருப்பது போலத் தோன்றி இல்லாமல் போய் விடும். ஆகவே அளவறிந்து கொடுக்கவும்.
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்ச
மாற்றங் கொடுத்தற் பொருட்டு
சபையிலே ஒன்றைக் கேட்கும் போது அஞ்சாமல் விடை கூறத் தக்க அளவு அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.
புலவர்களின் விளக்க உரையைக் கேட்டு மக்கள் மகிழ்ந்து கொண்டிருந்த சமயம் ஒரு வயதானவர் எழுந்தார்:
ஐயனே! பயிர்த் தொழில் செய்து வாழ்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
இதுவரை இல்லாத அளவு வள்ளுவர் முகத்தில் மகிழ்ச்சி தோன்றியது.
கரங்களைக் கூப்பினார்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்
உழுகின்ற வேளாண்மைத் தொழிலைச் செய்து வாழ்பவர்களே வாழ்கின்றவர்கள். ஏனைய அனைவரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவர்கள் தாம்!
அனைவரும் உழவுத் தொழிலின் மகிமையையும் அதற்கு வள்ளுவர் தரும் முக்கியத்துவத்தையும் அறிந்து வியந்தனர். கதிரவன் சாயும் நேரம் வரவே, பிரிய மனமின்றி அனைவரும் பிரிந்தனர்.
***
இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
GREEK PYTHIAS AND TAMIL PISIRANTHAIYAR – SYMBOLS OF FRIENDSHIP! (Post No.5777)
The story of Pythias and Damon is popular in the West. It has become an idiom in English. The two friends of Athens stand as the symbol of true friendship. It is said that they followed the friendship as propagated by the Greek philosopher Pythagoras. That is what exactly the great Tamil poet Tiruvalluvar, author of Tamil Veda called Tirukkural said,
“Friendship requires neither common residence nor frequent meeting; spiritual kinship creates the right to friendship”- Kural 785
“Friendship is not that which shines as a smile in the face; Friendship is that which shines as a joy in the soul within” – 786
Another translation of the same couplets runs like this,
“Identity of feelings alone count for close friendship for which,
Constant companionship is not really necessary”-785.
“A surface smile in the face is not friendship, genuine affection,
Springs from the heart and lights up the face”-786.
The story Of Pythias is as follows,
Pythias and Damon were great friends. Once they visited Syracuse where the tyrant Dionysius was ruling. The king suspected the intention of their visit and arrested Pythias for anti- state activities. He passed a death sentence on him after rejecting all his arguments. His friend Damon felt very sad and tried to help him.
At the same time Pythias’ mother was suffering from serious illness. So Pythias asked permission to go and see her before he dies. But Dionysius was not ready to believe him. He thought he would never come back. Damon, who was his true friend, told the king that he was ready to be a hostage in the place of Pythias. The tyrant agreed to that proposal. Damon was put in jail.
The days passed; now everyone was waiting anxiously from Pythias return. When the deadline was about to expire, Damon was taken to the execution platform. But Damon was dead sure that he would come back. At that time there was a great commotion when people saw Pythias running towards the place. He came in and asked for pardon for the delay and explained that untimely and unseasonal weather stopped his ship. He begged the king to release Damon and execute him as per the original order.
Whoever heard this started shedding tears and appreciated the great friendship between Pythias and Damon. It moved even the stony-hearted Dionysius and he ordered the release of both Pythias and Damon. From that time their name became proverbial for true friendship.
Similar Story in Tamil literature.
Pythias incident happened in the fifth century BCE. A few centuries later another story happened in Tamil Nadu in South India. There was a king by name Kopperum Chozan. He had problems with his sons about ruling the country. Sangam Tamil poets were honest and bold advisers. One of the poets advised the Choza king to hand over the kingdom to his wards and go to forest life—Vanaprastha—third stage in a Hindu’s life. The king said that he wanted to fast unto death. It is called ‘Prayopavesa’ in Sanskrit and found in the Kishkintha Kanda of Valmiki Ramayana. Whoever dies that way goes directly to heaven. They face the holy Northern Direction and starve to death. Several people used to join such a venture because they knew it is a ‘direct flight ticket’ to Heaven. As was the custom lot of scholars and poets joined the Choza king in the fast. One poet by name Pothiar was refused a seat in the hall by the king. He told him that the poet should go back home and can join only after the birth of a male child, which is required to go to heaven according to Hindu Law Books. He went back and came back after the death of the group and lamented. All this information is in Purananuru (verses 213-223), part of 2000 year old Sangam literature.
Here is the interesting bit.
Choza king asked his colleagues to reserve a seat for a poet named Pisir Anthaiar of the neighbouring Pandya kingdom. All other poets in the hall were surprised because the king and the poet never met. They told the king not to get disappointed by expecting him.
Then the king told them in a verse,
“There in the distant Pandya country
A poet from the town of Pisir is a very close friend.
Even if he does not come when I had lot of money, he would definitely come to see me when I am in distress” – Purananuru verse 215
The king’s words did not go waste. Pisir Anthaiyar came there just on time and sat with the king fasting until death.
This is an example for true friendship like the Pythias- Damon story.
Greek story of Pythias and Damon was made into films in several languages. Like Pisir- Choza story we have stories of Kuchela/Sudama – Krishna friendship. The very first chapter of Panchatantra fables is about true friendship.
Ancient Greeks believed in several virtues like Hindus. Pythias story shows,
1.His love for his mother; Hindus say Matha, Pitha , Guru are goods.
2.Pythias also kept his words like Hindus. All ancient foreign visitors said, ‘in India there is no written legal document and all is done by word of mouth’. Hindu myths say they are like the legendary Harischandra.
3. We have umpteen examples about true friendship. When Karna was insulted that he being a commoner, should not participate in Royal Olympic Games, Duryodana made him a king in a second. Karna was loyal to Duryodana till his last minute.
So we see many similarities between the legends of Hindus and Greeks. One is also reminded of the great sacrifice of Sydney Carton in the novel of A Tale of Two Cities by Charles Dickens.
தமிழ் நாட்டு பிசிராந்தையாரும் கிரேக்க நாட்டு பிதியாஸும் (Post No.5776)
Research Article written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 13 December 2018
GMT Time uploaded in London – 18-28
Post No. 5776
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கிரேக்க நாட்டு (கிரீஸ்) இலக்கியத்தில் அழியாத இடம் பெற்ற கதை பிதியாஸ்- டாமன் (Pythias- Damon) நட்புறவுக் கதை. அதை சங்க கால இலக்கிய பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் கதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே இந்த ஆராய்ச்சிக் கட்டுரை.
நட்பின் இலக்கணம் என்ன?
வள்ளுவன் தமிழ் வேதமான திருக்குறளில் அழகாகச் சொல்லிவிட்டான்:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு-786
பொருள்
ஒருவரை ஒருவர் சந்தித்துச் சிரித்துப் பேசுவது உண்மையான நட்பு அல்ல; மனத்தளவில் உள்ளன்போடு ஒருவரை ஒருவர் போற்றுவதும் பாராட்டுவதுமே நட்பு
இதற்கு முன்னுள்ள குறளில் இன்னும் தெளிவாகச் சொல்கிறார்:-
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும் – 785
பொருள்
நட்பு கொள்வதற்கு ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்து, கட்டித் தழுவி, கை குலுக்கிப் பேச வேண்டும் என்பது தேவையல்ல; ஒரே மாதிரியான சிந்தனையே (same wave length) நட்பு என்னும் உரிமையைக் கொடுத்துவிடும்.
இதற்கு முன்னுதாரணமான கதை கோபெருஞ்சோழன் – பிசிராந்தையார் கதையாகும்.
பலரும் அறியாத பிதியாஸ் – டாமன் கதையை முதலில் பார்த்துவிட்டு பிசிராந்தையாருக்கு வருவோம்.
கிரேக்கநாட்டின் மிகப்பெரிய தத்துவ அறிஞர் பிதகோரஸ் (Pythagoras) . அவர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவரும் வள்ளுவரைப் போலவே நட்பின் இலக்கணத்தை வரையரை செய்துள்ளார். அது என்ன? அதற்கு முன்னுதாரணமான கதைதான் — உண்மைக் கதைதான் — பிதியாஸ் கதை.
பிதியாஸும் டாமன் என்பவரும் இணை பிரியாத் தோழர்கள். கிரேக்க நாட்டின் தற்போதைய தலைநகரான ஏதென்ஸில் வாழ்ந்தவர்கள். ஒருமுறை அவர்கள் சைரக்யூஸ் (Syracuse) நகருக்கு வந்தனர். அங்கு டயோனிஸியஸ் (கி.மு. 405-367) என்ற கொடுங்கோலன் ஆட்சி நடாத்தி வந்தான். பிதியாஸ் ஒரு உளவாளி என்று எண்ணி சிறைப் பிடித்தான். எவ்வளவோ மன்றாடியும் மன்னன் விடுவதாயில்லை. மரண தண்டனையும் விதித்தான். இதைக் கேட்ட அவனது ஆருயிர்த் தோழன் டாமன் மனம் வெதும்பினான்.
பிதியாஸ், சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் தொலை தூரத்தில் வசிக்கும் தனது தாயார் உடல் நலம் குன்றி இறந்துவிடும் நிலையிலிருந்ததால் மன்னரிடம் ஒரே ஒரு வேண்டு கோள் மட்டும் விடுத்தான்.
“என்னுடைய மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னர், என் தாயாரை மட்டும் தரிசித்துவிட்டு, விடை பெற்று வருகிறேன்; அனுமதி தாருங்கள்; நான் ஓடி விடமாட்டேன்; கட்டாயம் திரும்பி வருவேன்; என்னை நம்புங்கள்” — என்றான்.
கொடுங்கோலன் டயோனிஸஸ் அதை நம்பவில்லை; உன் தாயாரோ தொலைதூர கிராமத்தில் வசிக்கிறாள்; உன்னை வெளியே விட்டால், நீ கூண்டுக் கிளியாகப் பறந்து விடுவாய். நீ திரும்பி வருவாய் என்று நம்புவதற்கு நான் என்ன இளிச்சவாயனா; முடியாது போ– என்றான்.
அப்போது அங்கே டாமன் பிரவேசித்தான்.
மன்னர் மன்னவா; பிதியாஸ் என்னுடைய ஆப்த சிநேகிதன்; அவனுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்; அவன் சொன்ன நாட்களுக்குள் திரும்பி வராவிடில், நான் மரண தண்டனையை ஏற்கிறேன்; அவனை விடுத்து அந்த கை விலங்குகளை எனக்குப் பூட்டுங்கள். அவன் வராவிடில் என்னைக் கொல்லுங்கள்- என்றான். மன்னரும் கை விலங்கை மாற்றி பிதியாஸை அனுப்பிவிட்டு டாமனைப் பிடித்து சிறையில் தள்ளினான்.
அம்மாவைப் பார்க்கச் சென்ற பிதியாஸ் வரும் அறிகுறியே இல்லை; நாளையுடன் கெடு முடிகிறது.பிதியாஸ் வராவிட்டால் டாமன் தலை உருளுவது நிச்சயம். ஆனால் டாமநோ கொஞ்சமும் அஞ்சவில்லை. கெடு முடிவதற்குள் பிதியாஸ் வருவது உறுதி என்று கருதினான்.
கெடு முடியும் தருவாய். டாமனை மரண தண்டனை மேடைக்கு இட்டுச் சென்றனர். அப்போது வாசலில் ஒரே ஆரவாரம். காவல் காரன் ஓடி வந்து பிதியாஸ், அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருப்பதாக அறிவித்தான். உடனே அவனை இங்கே அனுப்பு என்றான் மன்னன்.
பிதியாஸ் மூச்சு இளைக்க இளைக்க பேசினான்,
மன்னர் மன்னவா என்னை மன்னியுங்கள்; என் அருமை நண்பன் டாமனை பெரிய இக்கட்டில் வைத்தது என் தவறே. நான் வரும் வழியில் பருவ மழை கொட்டி கப்பல் திணறிப்போய் தாமதமாகிவிட்டது. டாமனை விடுங்கள் நான் உங்கள் கட்டளைப்படி மரண தண்டனையை ஏற்பேன் என்றான்
இதைக்கேட்ட மாத்திரத்தில் கொடுங்கோல் மன்னனின் மகன், மரண தண்டனையை நிறை வேற்றும் வெட்டியான் ஆகியோர் கண்களில் கண்ணிர் பெருகியது
அரிய நட்பின் பெரிய சின்னம் பிதியாஸ்- டாமன் நட்புறவு என்பதை அறிந்த கொடுங்கோல் மன்னன் டயோனிஸஸ், இருவரையும் விடுதலை செய்தான். நீங்கள் இருவரும் என்னுடனும் நப்பு பாராட்டுங்கள் என்று இறைஞ்சினான்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
இப்போது எல்லோரும் அறிந்த பிசிராந்தையார்- கோப்பெருஞ் சோழன் கதையைக் காண்போம்.
கோப்பெருஞ் சோழனை அவனுடைய மகன்கள் எதிர்த்தபோது, எயிற்றியனார் என்னும் புலவர் சொற்படி, நாட்டை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்தார். வடதிசை புனிதமான திசை என்பதால் பாண்டவ சஹோதர்கள் போல வடதிசை நோக்கி நடந்து கொண்டே இருந்து பூமியில் உடல் விழுந்து இறப்பர் பலர்; சிலர் இருந்த இடத்திலேயே வடதிசை நோக்கி அமந்து இறப்பர்; இந்த உண்ணா விரதத்துக்கு பிராயோபவேசம் என்று பெயர். ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்திலும் புறநானூற்றிலும் காணலாம்.
கோபெருஞ் சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதை அறிந்து பலரும் அவருடம் பந்தலில் உடகார்ந்து உயிர்துறந்தனர். பொத்தியார் என்ற புலவரை மட்டும் சோழன் திருப்பி அனுப்பிவிட்டான். நீ ஆண் குழந்தை பிறந்த பின்னர்தான் இப்படி சாக முடியும் என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டான். ஆனால் மன்னர், ஒரு ஆசனத்தை மட்டும் பிசிராந்தையாருக்காக ‘ரிஸர்வ்’ செய்தான். எல்லோருக்கும் ஆச்சர்யம். மன்னரே; அவரோ தொலைதூரத்தில் உள்ளார் உம்மையோ பார்த்ததே இல்லை. அவரை நண்பர் என்று சொல்லி இடம் ஒதுக்கச் சொல்கிறீரே என்று வியந்தனர்.
அதற்கு சோழன் பதில் சொல்கிறான்
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே;
செல்வக் காலை நிற்பினும்
அல்லற்காலை நில்லலன் மன்னே (புறம் –215)
பொருள்
பாண்டிய நாட்டில் தொலைதூரத்தில் பிசிர் என்னும் ஊரில் என் நண்பன் இருப்பதாகச் சொல்லுவர். அவன் எனக்கு செல்வம் இருந்த காலத்தில் வாராவிட்டாலும் துன்பம் வந்த காலத்தில் வாராது இருக்க மாட்டான்
அவர் சொன்னபடியே பிசிர் வந்தார்! உசிர் தந்தார்!!
அவருடைய ஆரூயிர் நண்பர் புலவர் பிசிராந்தையார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததே இல்லை. ஆயினும் சோழன் எதிர்பார்த்தது போலவே பிசிராந்தையாரும் சாகும் வரை உண்ணா நோன்பில் கலந்து உயிர்நீத்தார்.
பிதியாஸ் கதைக்கு ஆதாரம்- கிரேக்க ஆசிரியர் அரிஷ்டசேன, ரோமானிய ராஜதந்திரி சிஸரோ, கிரேக்க ஆசிரியர் டியோதரஸ் சிகுலஸ்
பிசிராந்தையார் கதைக்கு ஆதாரம்- புறநானூறு பாடல்கள் 213-223
பிசிராந்தையார் யார்?
சங்க காலப் புலவர். அவர் பாடிய நரை முடி இல்லாமைப் பாடல் மிகவும் பிரஸித்தம்:
ஐயா, தொண்டுக் கிழமாகிவிட்டீரே; முடி மட்டும் கருக்கவில்லையே; ஏதேனும் கூந்தல் வளர் தைலம் தடவுகிறீரோ என்று எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். அவர் சொல்லுகிறார்:- ஐயன்மீர் என் வீட்டிலும் ஓம் சாந்தி, நாட்டிலும் ஓம் சாந்தி, என் மனதிலும் ஓம் சாந்தி; இப்படி சாந்தி நிலவுகையில் முடி எப்படி நரைக்கும்? என்று பாடுகிறார்:–
யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதிராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர் என் இளையரும்: வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதன் தலை
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே
——(புறநானூறு ,பாடல் எண். 191)
பொருள்:-
நுமக்குச் சென்ற ஆண்டுகளோ பலவாயின; இருந்தும் நரைமுடி காணவில்லை. இது எப்படி? என்று கேட்கிறீர்களா?
என் மனைவி நல்லவள்; என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள்; என்னிடம் பணிபுரியும் ஏவலரோ நான் ‘எள் என்றால் எண்ணை யாக’ நிற்பர்; குறிப்பறிந்து ஒழுகும் தன்மையர். என் அரசன், எந்த தவற்றையும் செய்யான்; இதற்கெல்லாம் மேலாக என் ஊரிலுள்ள அறிஞர்கள் புலன்களை வென்று, உயர்ந்த குறிக்கோள் உடையவர்கள். (எனக்கு கலையே இல்லை; கவலை இல்லாதோருக்கு நரை முடி வராதே!)
புறநானூற்றிலுள்ள (பாடல் 191) படுத்தும்.
xxx
பிதியாஸ் – டாமன் கதை திரைப்படங்களாகவும் நாடகங்களாகவும் பரவியிள்ளது. அவர்கள் நட்புறவு பற்றிய பாடல்களும் உண்டு.
கிரேக்க கதை காட்டும் மற்ற உண்மைகள்
1. இந்துக்களைப் போலவே அவர்களும் சொன்ன சொல் மீறாதவர்கள். அரிசந்திரனை நினைவு படுத்துகிறது பிதியாஸ் கதை.
2.நட்புறவின் சிறப்பு; பஞ்ச தந்திரக் கதைகளின் முதல் பகுதியே நட்புறவின் சிறப்பைப் பற்றியதே; குசேலர்- கிருஷ்ணரின் நட்புறவு மற்றொரு எடுத்துக் காட்டு; உயிர் காப்பான் தோழன். சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘எ டேல் ஆப் டூ சிட்டிஸ்’ (A Tale of Two Cities by Charles Dickens) நாவலில் சிட்னி கார்ட்டனின் தியாகமும் நினைவு கூறத்தக்கது.
3. தாயைக் காண பிதியாஸ் மன்றாடியது- மாதா, பிதா குரு தெய்வம் என்ற வசனத்தை நினைவு படுத்தும்.
2500 ஆண்டுகளுக்கு முன்பு உலகம், தார்மீக ரீதியில் உளுத்துப் போகாமல் இருந்தது. போகப் போக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகி விட்டது.
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். கருணையே வடிவான அந்தப் பெண்மணி உலகப் புகழ் பெற்றாள். அவரைப் பாடிய கவிஞரும் தமிழ் கூறு நல்லுலகம் முழுதும் பிரசித்தமானவரே!
சீரடியார் பழவேத முனிவர் போற்றுஞ் செழுஞ் சோதி – சீர்களும் அடிகளும் இயைந்த மந்திரங்களால் முன்னைய வேத ரிஷிகள் போற்றிய ஞாயிறு
இங்கு சூர்யாஸ்தமய வர்ணனை கூறப்படுகிறது. இப்பாடல்களின் கருத்து நன்கு விளங்கும் பொருட்டு நமது ‘கர்மயோகிப்’ பத்திரிகையிலே இவ்விஷயத்தைப் பற்றி எழுதியுள்ள உபந்யாஸமொன்றை இங்கு தருகின்றோம்.
ஸூர்யாஸ்தமயம்
உலகத்தில் எங்கு பார்த்தாலும் நிறைந்து கிடக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது. சனிக்கிழமை சாயங்காலந்தோறும் குளக்கரைகளிற் போய்க் கருடன் பார்ப்பதெற்கென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். சூர்யாஸ்தமய காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசியங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போவதில்லை. அப்போது வானத்திலே இந்திரஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்த க்ஷணம் இருந்த தோற்றம் அடுத்த க்ஷணம் இருப்பதில்லை. உலகத்திலுள்ள திரவிய முழுவதையும் செலவிட்டு வர்ணக் காட்சிகள் ஏற்படுத்திப் பார்ப்போமானாலும் அது சூர்யாஸ்தமய காலத்தில் வானத்திலே நாம் பொருட்செலவில்லாமல் பார்க்கக்கூடிய காட்சிகளிலே கோடியிலொரு பங்கு கூடக் காணாது. வாணவேடிக்கைகள் பார்க்க ஒரு செல்வன் பதினாயிரக்கணக்கான திரவியம் செலவிடுகிறான். அவ்னது செல்வத்தினாலன்றோ இந்தக் காட்சி சுலபமாகிறதென்று அதையே பார்த்து ஆயிரம் ஏழைகள் பெருமூச்செறிகிறார்கள். ஸஹோதரா! ஸூர்யாஸ்தமயத்தின் விநோதங்களைச் சென்று பார். ஸூர்யனைப் பார்த்தால் கண்ணுக்குக் கெடுதி என்ற குருடர் நம்பிக்கையைப் பொருட்டாக்காதே. ஸூர்யனைப் பார்ப்பது பாவமென்று சொல்லும் மூடர் சாஸ்திரத்தைக் கண் கொண்டு பார்க்காதே.
நமது நாட்டில் வேத காலத்து ரிஷிகள் பிரகிருதியின் சௌந்தர்யங்களைக் கண்டு மோஹித்துப் பரமானந்தமெய்தியவர்களாய்ப் பல அதிசியமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். பிரகிருதியின் அழகைக் கண்டு பரவசமெய்திக் காளிதாஸன் முதலிய பெருங்கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்கின்றனர். இக்காலத்திலே தான் இந்த துரதிர்ஷ்ட நிலை கொண்ட நாட்டில் வானம் பார்த்தறியாத குருடர்களெல்லோரும் கவிகளென்று சொல்லி வெளி வருகிறார்கள்.
ஸூர்யாஸ்தமயத்தின் அற்புத சௌந்தர்யங்களை எழுதிப் பிறர் மனதில் படும்படி செய்வது சாத்தியமில்லை. (நேரிலே கொண்டு காட்டினாலும் பலருக்கு ஆரம்பத்திலே கண் கூசுவது தான் அர்த்தமாகுமேயல்லாமல் விஷயம் தெரியாது.) ஸஹோதரா! நீயாகவே போய்ப் பல தினம் அடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு தான் உனக்கு அந்தத் தெய்வக் காட்சி சிறிது சிறிதாக விளங்கும். ஸூர்யோதயத்திலேயும் ஸூர்யாஸ்தமயத்திலும் வானத்தில் நடக்கும் இந்திரஜாலக் காட்சியில் க்ஷணந்தோறும் புதிய புதிய விநோதங்கள் மாத்திரமேயன்றி இன்னுமொரு விசேஷமுண்டு. நேற்று இருந்தது போல இன்றைக்கு இராது. இன்று இருப்பது போல நாளை இராது. தினந்தோறும் வெவ்வேறு வியப்புக்கள். வெவ்வேறு உலகங்கள். வெவ்வேறு மஹிமைகள். வெவ்வேறு கனவுகள். வெவ்வேறு ஆனந்தங்கள். வெவ்வேறு அநிர்வசனீயங்கள்.
சில தினங்களின் முன்பு ஓர் மாலைப்பொழுதில் நான் கண்ட அதிசியங்களை ஒருவாறு இங்குக் குறிப்பிடுகிறேன். அடிவானத்தில் ஸூர்ய கோளம் தகதகவென்று சுழன்று கொண்டிருந்தது. இருபது கோடி மின்னல்களை எடுத்து ஒரு சக்கரமாக வார்த்துச் சுழற்றுவது போலிருந்தது. ஆரம்பத்திலே தான் கண்கூசும். சிறிது நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தால், பிறகு கண் கூச்சம் தீர்ந்து போய் விடும். இரண்டு வட்டத் தகடுகள் ஒன்றின் மேலொன்று சுழலும். கீழே இருப்பது சுத்தமான மின்வட்டம். மேலே இருப்பது மரகத வட்டம். பச்சை வர்ணம்! அற்புதமான பசுமை.
பச்சைத் தகடு பின்புறத்திலிருக்கு மின் தகட்டை முழுவதும் மறைத்துக் கொண்டிருக்கும். ஆயினும் இடையிடையே பின்னுள்ள வட்டத்தின் வயிரக் கிரணங்கள் கண்மீது பாயும்.
பார்! ஸுர்யனைச் சுற்றி மேகங்களெல்லாம் தீப்பட்டெரிவது போலத் தோன்றுகிறது! ஆஹா! என்ன வர்ணங்கள்! எத்தனை வித வடிவங்கள்! எத்தனை ஆயிர விதமான கலப்புக்கள்! அக்கினிக் குழம்பு! தங்கம் காய்ச்சியிட்ட ஓடைகள்! எரிகின்ற தங்கத் தீவுகள்!
நீல ஏரிகள்! கரும் பூதங்கள்! எத்தனை வகை நீலம்! எத்தனை விதச் செம்மை! எத்தனை வகைப் பசுமை! எத்தனை விதக் கருமை! நீல ஏரியின் மீது மிதக்கும் தங்கத் தோணிகள்! எரிகின்ற தங்க ஜரிகைக்கரைப் போட்ட கரிய சிகரங்கள்! தங்கத் திமிங்கலங்கள்! மிதக்கும் செங்கடல்! எங்கு பார்த்தாலும் ஒளித்திரள், வர்ணக் களஞ்சியம்.போ, போ, என்னால் அதை வர்ணிக்க முடியாது.
உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள் எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்; எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப் … 85
பொல்லாப் பிரமா, புகுத்திவிட்டாய் அம்மாவோ! காலம் படைத்தாய் கடப்பதிலாத் திக்கமைத்தாய்; ஞாலம் பலவினிலும் நாடோ றுந் தாம்பிறந்து தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்!
*
இதுவரை கூறிய பாடல் பகுதிகளால் பாரதியார் வானக் காட்சிகள் மீது கொண்ட மோகத்தைப் பார்க்கிறோம்.
வானக் காட்சிகளைத் தமிழர் கவனிப்பது கிடையாது என்று அவர் அங்கலாய்க்கிறார்.
சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், தாரகைக் கூட்டம், அண்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அவர் வியப்புடன் பார்க்கிறார்; அதன் உண்மை தெளிகிறார்; நமக்குப் புலப்படுத்துகிறார்.
இன்னும் வசன கவிதையிலும் உரை நடைப் பகுதிகளிலும் அவர் ஞாயிறு, நட்சத்திரம், நிலா ஆகியவை பற்றிக் கூறியவை ஏராளம் உள்ளன.
அவற்றையும் சேர்த்துப் படித்தால் வானவியல் கவிஞன் பாரதி என்று ஒரு புதிய பரிமாணத்தை மஹாகவி பாரதியாரில் நாம் காண முடியும்.
பாரதியைக் கற்றால் வானவியலையும் கற்றது போலத் தான் என்று கூறி இந்தக் குறுந்தொடரை முடிக்கிறேன்.
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
குறைந்தது 24 புலவர்கள் இக்கட்டத்தில் மறைந்துளர். பல மொழிகளில் ராமாயணம் எழுதியோர், தேவாரம் திருவாசகம், திருப்பாவை பாடியோர், தமிழ் மூதாட்டி முதல், யாதும் ஊரே யாவரும் கேளிர் — பாடிய புறநானூற்றுப் புலவர்கள் உள்பட 24 பேர்! பெயரைப் படித்தாலேயே புண்ணியம் கிட்டும்.
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
I am not giving a comprehensive list of assassinations that happened in Indian history. Just to compare the less known assassination that happened in Tamil Nadu I am giving some known attacks. As far as we know it started in 73 BCE and went up to 1991. Tamil poet Tiruvalluvar and Vishnusarman of Panchatantra also mentioned such assassinations.
Devabhuti, the last of the Sunga emperors, who was a weak, dissipated and debauched monarch was assassinated in his bed in dark by a slave girl dressed as his queen. He was killed in 73 BCE on the orders of his minister Vasudeva.
Julius Caesar was assassinated in Rome around that time. And his own friend Brutus was part of the conspiracy. All of us know the ‘Et tu Brute?’ (You too Brutus!) exclamation of Julius Caesar.
Mahatma Gandhi was assassinated by N Godse in 1948. In our own times Prime Minister Indira Gandhi was assassinated by her own bodyguard on 31 October 1984. Later her own son Rajiv Gandhi was assassinated by a LTTE girl from Si Lanka, near Chennai in 1991.
Tiruvalluvar, author of Tamil Veda, Tirukkural says,
An enemy will twist his words as he bends his bow;
Neither will forbade any good- 827
The meaning is
Do not be misled by the politeness or courtesy of language on the part of enemies. The enemy bends his words as he bends his bow, which is not for your good.
In the next couplet the poet says,
The enemy’s hands raised in salutation may conceal a weapon,
So too, his tears of sympathy are not to be trusted.
This is what happened in the case of Rajiv Gandhi’s assassination.
In Periya Puranam written around 12th century CE by Sekkizar, we have a similar story. It is a sad and heart breaking story.
Here is a summary:
There was a king by name Meyporul Nayanar ruling Chedi country from Tirukkovalur. He was a just king and conquered the nearby territories. He was a great Shiva devotee and respected any one coming with the Saivite symbols such as Vibhuti (holy ash), Rudraksha (holy garland) in saffron or white cloths.
Muthanathan, a near by king who was defeated several times by Meyporul, realised that he would never be able to defeat Meyporul by honest means. So he conspired and took the guise of Shiva devotee. He hid a dagger in a bundle of palm leaf manuscripts and approached the palace.
As usual all the gates were wide open for the ‘great devotee’ and he entered the palace room where the king was lying in bed with his wife. Knowing a person coming in an untimely hour, king’s body guard Dattan prevented him from entering the bedroom. But yet Muthanathan introduced himself as a great Guru and he had come with a rare manuscript to show it to the king. Datta could not stop him any more. When the ‘devotee/guru’ entered the bed room, the queen was surprised and got up suddenly. But the king showed all the respect due to any Shiva’s follower. When he asked the reason for his visit at the dead of night, disguised Muthanathan told the king that he had some rare Agama manuscripts and wanted to teach the king.
He also insisted that he should be alone without the queen to listen to the secret doctrines. The king readily obliged and came back all alone. Muthanathan opened the bundle and took the dagger and stabbed the king.
Hearing the commotion, his body guard Datta rushed into the room and caught hold of the assassin. But Meyporul told his bodyguard,
‘Datta, He is our man’. Please take him out of the town with full security and leave him alone; make sure that no one harms him! Datta did as he was commanded.
All this happened just because the respect for the external Saivite (religious) symbols! But Meyporul was made a saint among the 63 Famous Saivite Saints and worshipped in all the Shiva temples in Tamil Nadu.
We hear lot of stories even today that terrorists come in different disguises, particularly abusing religious faith and symbols. Since Tiruvalluvar also sings about hidden arms, he might have heard such stories.
Sekkizar, author of Periya Puranam, describes the appearance of Muthanathan in Saivite gear. ‘He appeared white outside (with smeared holy ash) but inside he was black. His mind was full of bad things’.
The world has not changed much from the days of Devabhuti. Even before Devabhuti, Manu gives a list of kings who were dethroned or killed. Vena was one of them who met a violent death from the revolting general public. Something like French Revolution must have happened and Vena was ‘guillotined’.