HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL- 41; இந்து மத கலைச்சொல் அகராதி-41(Post.15,468)


Written by London Swaminathan

Post No. 15,468

Date uploaded in Sydney, Australia –  1 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Kabir

Kasbir was born in 1440 CE. He was found lying as a child in the lake called Lahar Talao near Kashi on a leaf of lotus. Here he was found by Niru, a childless Mohammedan weaver who was going with his wife Nima to attend a function in a neighbouring village. They took compassion on the forsaken baby. They took him to their home and there they brought him up as their own child. A Kazi was called in to give the child a name. The Kazi told Niru that the child was a demon and should be killed immediately. A miracle happened. The knife was plunged into the heart of the child. No drop of blood came out. Kabir uttered a verse which made them understand that he was not ordinary flesh and blood. Then the name ‘Kabir’ was given to the child. The word ‘Kabir’ means ‘great’ in the Arabic language.

It is said that he was born of a Brahmin girl-widow, who, to hide her shame, left the child in the lake. But in a stanza, Kabir denies his own conception in a womb. 

The life of Kabir is shrouded in mystery. Beyond the facts that he was a weaver, born of poverty-stricken parents, that he lived at Kashi during the reign of Sikander Lodi, that he was the disciple of the great religious reformer Ramananda, and that he himself was the Guru of several distinguished disciples, we know positively nothing about Kabir.

The name of Kabir’s wife was Loi. Kamal was his son. Dharam Das was his chief disciple. Jhali, queen of Chitore, was his royal disciple. Kabir used to live with his wife in a hut in a solitary place outside the city. He used to feed the Sadhus or ascetics who went to his place.  He did not observe the rules of caste. The probable date of his death is 1519 CE.  Kabir died at Maghar near Gorakhpur

Kabir says, “I am the child of Allah and of Ram.” The Hindus take him as a Brahmin saint, the Mohammedans regard him as a Sufi. A sect known as ‘Kabir-panth’, to which some lakhs of Hindus of Northern India still belong, was founded by Kabir’s followers. But Kabir himself was above all sects, cults and creeds.

He was an illustrious philosopher-poet. He was a skilled musician and a poet as well. His verses are repeated, even today, in almost every household in Uttar Pradesh and Punjab.

Kabir’s works are mostly collections of songs composed in the various metres of old Hindi. There are seventy-two works. The most important and famous works are: the Kabir Bijak, the Suknidhan, Sabdas, Sakhis, Rekhtas, Mangal, Vasant and Holy Agams. The Kabir Bijak is the great authority on all religious matters and doctrines of the Kabir-panthis.

கபீர்தாசர்

சுமார் (Kasbir 1440 CE)  600  ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெரிய ஞானி, கவிஞர், பாடகர். இன்றும் இந்துக்களாலும், முஸ்லீம்களின் சூபி பிரிவினாலும்  போற்றப்படுகிறார். இவருடைய தோகா பாடல்களை  தமிழ் நாட்டில் சுவாமி ஹரிதாஸின்  குரலில் கேட்டு மகிழலாம். சம்பிரதாய பஜனைப் பாடகர்களும் இவரது பாடல்களை இந்தியில் பாடுவார்கள் ஒரு பிராமண விதவை, கபீரின் குழந்தைப் பருவத்தில் அவரை விட்டுச் செல்லவே , அதைக் கண்ட முஸ்லீம் தம்பதிகள் இவரை வளர்த்தனர் ; அவர்கள் ஏழை நெசவாளர்கள்  இரு மதத்தினரும் உரிமை கொண்டாடும்போது, நானே  ராமன் நானே அல்லா என்றும் இவர் பாடினார். ஜாதி மத சடங்குகளைப் புற க்கனித்தார் . பிறந்தது முதல் இறந்தது வரை பல அற்புதங்களைச்  செய்ததாக வாய்மொழிக் கதைகள் கூறுகின்றன ; எதற்கும் ஆதாரமில்லை. சிக்கந்தர் லோதி என்ற மன்னர் காலத்தில் இவர், காசியில் வாழ்ந்தார். ராமா நந்தர்  என்ற ஹிந்துவை குருவாக ஏற்றார்.இவரது பொன்மொழிகள் அடங்கிய தோகா பாடல்கள் தத்துவங்களை விளக்கும்  :-

கபீரின் அழுகை!

இந்தப் பாட்டில் கபீர்தாசரின் ஒரு கவிதை இடம் பெற்றிருக்கிறது. அதன் கருத்தைப் பார்ப்போம்.

रंगी को नारंगी कहे , बने दूध को खोया

 चलती को गाड़ी कहे , देख कबीरा रोया

ரங்கீ கோ நாரங்கீ கஹே, பனே தூத் கோ கோயா

சல்தீ கோ காடீ கஹே, தேக் கபீரா ரோயா.

இங்கு வார்த்தை ஜாலம் செய்கிறார் கபிர் தாசர்!

ரங்கீ என்றால் நல்ல  கலர் உள்ளது.  நா-ரங்கீ என்றால் கலர் இல்லாதது. ஆனால் நாரங்கீ என்பது ஆரஞ்சுப் பழத்தின் ஹிந்திப் பெயர். நல்ல வண்ணமுள்ள ஆரஞ்சுப் பழத்தை நாரங்கீ- கலர் இல்லாதது என்கிறார்கள்.

பாலை சுண்டக்காய்ச்சினால் வருவது கோவா- இதை ஹிந்தியில் கோயா என்பார்கள். ஆனால் கோயா என்றால் தொலைந்துபோய்விட்டது  என்றும் பொருள்!  எனவே பாலை இல்லாததாக்கி விட்டார்கள்!

சல்தீ என்றால் வண்டி- சல்= செல்வது  இதை காடி என்பார்கள் ஹிந்தியில் ஆனால் கபீர் தாசர் இருந்த வட்டாரத்தில் இந்தச் சொல்லுக்கு ‘நிற்பது’ என்பதும் பொருள். ஆக, செல்லும் வண்டியை நிற்பது என்று சொல்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்து கபீருக்கு அழுகை வருகிறது என்று பாடுகிறார் கபீர்தாசர் இறந்த வருடம்  1519  CE  !

இந்திய அரசு இவருக்கு இருமுறை தபால் தலைகளை வெளியிட்டுள்ளது.

****

காளி

ராம கிருஷ்ண பரமஹம்ஸர், பாரதியார்  முதலிய பெரியோர்களால் தினமும்  வணங்கப்பட்ட ஹிந்து தெய்வம் காளி . அஸ்ஸாமிலும் வங்கத்திலும் மக்கள் பெரிய அளவில் வழிபடுகிறார்கள் . சிவனின் மனைவியின் உக்கிர ரூபம் காளிமாதா . அதே நேரத்தில் கருணையுடன் பக்தர்களுக்கும் அருள் புரியும் அன்னை . காளி என்றால் கருப்பு ; தமிழில் உள்ள கரி ஆங்கிலத்திலுள்ள கார்பன் முதலியன இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்தன . பாரதியார் பாடலில் சில வரிகள் –

யாதுமாகி நின்றாய் -காளி – எங்கும் நீ நிறைந்தாய்

தீது நன்மையெல்லாம் – காளி – தெய்வலீலை அன்றோ?

பூதம் ஐந்தும் ஆனாய் -காளி – பொறிகள் ஐந்தும் ஆனாய்

போதமாகி நின்றாய் – காளி – பொறியை விஞ்சி நின்றாய்

மஹாகவி பாரதியார்.

காளி என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் வருவது கல்கத்தா/ தக்ஷிணேஸ்வரத்தில் அமைந்துள்ள காளி கோவில் ஆகும்.

கருப்பு அல்லது நீல நிறத்தில்  சித்தரிக்கப்படும் காளிமாதா கழுத்தில் கபாலம் என்னும் மண்டை ஓடுகளை அணிந்திருப்பாள்; கையில் வாளினை ஏந்தி நிற்பாள் . மரணம் என்பதை நினைவுபடுத்தும் உருவம் மது கைடபன், ரக்த பீஜன் முதலிய அரக்கர்களை அழிப்பதற்காக இந்த உருவினை எடுத்தாள் . ரக்த பீஜன் கதை மூலம் இந்துக்கள் உலகத்திற்கு க்ளோனிங் உத்தியைக் கற்பித்தார்கள் . First report of cloning in the world. Each drop of blood creates another demon… goes the story. காளிகாட் அல்லது காளிகட்டா என்பதிலிருந்தே தான், கல்கத்தா என்ற பெயர் அமைந்தது.

காளியின் இடது மேற்கரத்தில் மகா பத்ராத்மஜன் என்னும் வாள் உள்ளது. கீழ்க்கையில் இரத்தம் சொட்டும் அசுரனின் தலை உள்ளது. வலது மேற்கரத்தில் அபய முத்திரையும் கீழ்க் கரத்தில் வர முத்திரையும் தாங்கி நிற்கிறாள்.

KALI- KAALI

Kali (kaali ) is the embodiment of time. Kali is fierce and complex, she’s the mother who nurtures, but also the warrior who destroys.

Kali is shown in blue or black colour with a garland of skeletons.

Kālī appears as early as the Atharva Veda, Kaali means Black. Tamil word KARI and English word CARBON are derived from this Sanskrit word.

Kali is the feminine form of Kala, encapsulating concepts of time and duality, such as good and evil. She tears down the old, destroys the ego, and makes way for the new. Yet, beneath her terrifying appearance lies a heart brimming with love and compassion, ready to embrace those who surrender to her divine will.

Kali represents the cyclical nature of existence, birth, life, death, and rebirth.

The world was threatened by the demons Madhu and Kaitabha, who symbolized the forces of chaos and ignorance. In response to this threat, Durga, the great warrior goddess, summoned forth Kali from her own brow, a gesture that symbolizes the unleashing of pure, unbridled power. She destroyed those demons. She also destroyed Raktabhija, which describes cloning. First report of cloning in the world. Each drop of blood creates another demon… goes the story.

Her worship is particularly prominent in regions like Bengal, Assam, South India, and Nepal. Sri Ramakrishna Paramahamsa was her great devotee. He worshipped her at Dakshineswar temple in Kolkata. Tamil poet Bharati also sang praising her.

Calcutta/Kolkata is derived from Kaalighat.

***


கலியுகம்

நான்கு யுகங்களில் கடைசி யுகம் கலி. இதன் பொருள் கரி/ கருப்பு. 

கலியுகம் 3102 BCE ல் தோன்றியதாக புராணங்களும் இரண்டு கல்வெட்டுகளும் சொல்கின்றன.

மிகவும் பழைய ஸ்ம்ருதியான – அதாவது சட்டப்புத்தகமான– மனு ஸ்ம்ருதியில் முதல் அத்தியாயத்தில் க்ருத யுகம் முதல் கலியுகம் வரை 4000, 3000, 2000, 1000 ஆண்டுகள் என்ற கணக்கில் நடக்கும் . ஒவ்வொரு யுகத்துக்கு இடையே ‘யுக சந்தி’ என்னும் இடைவெளி பத்து +பத்து = 20 சதவிகிதம் இருக்கும் என்கிறார். ஆக மொத்தம் 12000 ஆண்டுகள்தான் மொத்தம் 4 யுகங்களுக்கும்./

இந்துக்கள் உலகத்தின் வயதை நான்காகப் பிரித்துள்ளனர்: கிருத யுகம்(4), த்ரேதா யுக (3), த்வாபர யுகம் (2), கலியுகம் (1). ஏன் இப்படி தலைகீழ் வரிசையில் 4,3,2,1 என்று யுகத்திற்குப் பெயரிட்டார்கள்?

ஏன் என்றால் சத்திய யுகமான கிருத யுகத்தில் தர்மம் என்னும் பசு மாடு நான்கு கால்களில் நிற்குமாம். த்ரேதா யுகத்தில் அதற்கு மூன்று கால்கள்தான். அதவது தர்மம் 25 விழுக்காட்டை இழந்துவீட்டது. அப்போது ராம பிரான் தோன்றினார். த்வாபர யுகத்தில் தர்மம் என்னும் மாடு இரண்டு கால்களை – அதவது 50 விழுக்காட்டை இழந்து விட்டது. அப்போதுதான் கிருஷ்ணன் தோன்றினார். யுகத்தின் முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்தது. கலியுகத்தில் தர்மப் பசுவுக்கு இன்னும் ஒரு காலும் போய், ஒற்றைக் காலில் 25 சதவிகித புண்ய கர்மாவுடன் தள்ளாடிக் கொண்டிருக்கும். கலியுக முடிவில் அந்தக் காலும் போய் உலகமே அழியும். பிறகு மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

புராணம் கூறும் இன்னும் ஒரு கணக்கு

கிருத யுகம் – 1728 ,000000 ஆண்டுகள்
த்ரேதாயுகம் – 1296000000 ஆண்டுகள்
த்வாபரயுகம் – 864,000 ஆண்டுகள்
கலியுகம் – 432000 ஆண்டுகள்

இந்த நாலு யுகங்களையும் சேர்த்து சதுர்யுகம் என்பார்கள். 8,640,000,000 ஆண்டுகள் ஒரு கல்பம் எனப்படும். அதுதான் பிரம்மாவின் ஒரு நாள். அதுபோல அவர் நூறு ஆண்டுகள் வாழ்வார். அவருக்குப் பின்னால் வேறு ஒரு பிரம்மா வருவார். இந்தக் காலச் சுழற்சிக்கு முடிவே இல்லை.

அறப்பளீசுர சதகம் பாடிய அம்பலவாணரும் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரும் கலி யுகத்தில் மக்கள் எப்படி தீய வழிகளில் நடப்பார்கள் என்று பாடியுள்ளனர் .

கலியுகத்தில் என்ன, என்ன நடக்கும் என்று சம்ஸ்க்ருத புராணங்களில் நிறைய எழுதி வைத்துள்ளனர்; அதன் சுருக்கத்தை மட்டுமே பாடல் வடிவில் நமக்கு அம்பலவாணர் சொல்கிறார்.

 “தேவனே!,எல்லோரும் தீய விகடக் கவிஞனைப் புகழ்வார்கள்,  நல்ல கவிஞனைப் புகழமாட்டார்கள்,  தீயவரை மனமகிழ்ச்சியுடன் ஆதரிப்பார்கள்; நல்லோரை ஆதரிக்கமாட்டார்கள்,   தெய்வத்தை நினையார், பேய் போன்றவர்களை  வணங்குவர், பெற்றோர்களைச்

சிறிதும் மதிக்கமாட்டார், நடிகை நடிகையர் காலில் விழுந்து வணங்குவார், இன்பதுன்பங்களுக்கு உட்பட்ட உறவினர் வந்தால் மனம் விட்டுப் பேசமாட்டார், ஒப்புக்கு வந்த புதிய உறவினர்க்கு எப்போதும் பலவகை நலங்களும் புரிவர், (இவை) எட்டுத் திக்குகள் சூழ்ந்த உலகில் கலியுகத்தின் தன்மை ஆகும்”

ஒப்புநோக்குக-

கலியுகம் பற்றி அருணகிரிநாதரும் இதையே சொல்கிறார் :-

கோழையா ணவமி குத்த வீரமே புகல்வர் அற்பர்

     கோதுசே ரிழிகு லத்தர் …… குலமேன்மை

கூறியே நடுவி ருப்பர் சோறிடார் தரும புத்ர

     கோவுநா னெனஇ சைப்பர் …… மிடியூடே

ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மெனஇ சைப்பர்

     ஆசுசேர் கலியு கத்தி …… னெறியீதே

ஆயுநூ லறிவு கெட்ட நானும்வே றலஅ தற்கு

     ளாகையா லவைய டக்க …… வுரையீதே

ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ர

     ஈசன்மேல் வெயிலெ றிக்க …… மதிவேணி

ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில்

     ஏறியே யினிதி ருக்க …… வருவோனே

வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து

     வேதனா ரையும் விடுத்து …… முடிசூடி

வீரசூ ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்த

     வீறுசேர் சிலை யெடுத்த …… பெருமாளே.

“பயந்தவராய் இருப்பினும் அகங்காரம் மிக்க வீரப் பேச்சைப் பேசுவார்கள் சிலர். கீழ் மக்களாகவும் குற்றம் உள்ள இழி குலத்தவராகவும் இருப்பினும், சிலர் தங்கள் குலத்தின் பெருமையே பேசி சபை நடுவே வீற்றிருப்பர்.(பசித்தவருக்குச்) சோறு இடாத பேர்வழிகள் தரும புத்ர அரசனே நான்தான் என்று தம்மைப் புகழ்ந்து பேசுவர்.  தரித்திர நிலையில் ஆழ்ந்து கிடப்பவர் செல்வம் மிக்க குபேரன் நான் என்று தம்மைத் தாமே புகழ்வர். குற்றம் நிறைந்த கலி யுகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கிறது.

Kali Yuga

One of the four Yugas (eras) in Hindu Puranas. Two Hindu inscriptions date the beginning of Kali as 3101  BCE.

According to Hindu scriptures there are four Yugas/eras. They are cyclical.

Krta Yuga or Satya Yuga = Golden Age

Treat Yuga = Silver Age

Dwapara Yuga = Bronze Age

Kaliyuga = Iron Age

Another description is Dharma (Righteousness or Moral Code) is imagined as a holy cow which had four legs in Krta Yuga, three legs in Treta Yuga, two legs in Dwapara Yuga and only one leg in Kaliyuga!

There are lots of stories in our Puranas and epics about the bad behaviour of people in the Kaliyuga.

According to Puranas, Four Yugas is One Day in Brahma’s life of 100 years

Krta – 1728 ,000, 000 years
Treta – 1296, 000, 000
Dwapara– 864,000
Kaliyuga– 432, 000

But Manu Smritis gives 12,00 years only for Four Yugas.

***

கம்பர்

தமிழில் அழியாத புகழுடைடைய ராமாயணத்தைப் பாடினார்.

கவிச் சக்ரவர்த்தி என்று தமிழர்கள் புகழ்பாடும் கவிஞன் இவன் . சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ நாட்டில் தேரழுந்தூரில் பிறந்தார் . சடையப்ப வள்ளலால்  ஆதரிக்கப்பட்டார் .புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று மகாகவி பாரதியாரால் போற்றிப் புகழப்பட்டார் .

சில வரலாற்றுச் செய்திகள் மூலம் கம்பர் வாழ்ந்த காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்பது பெறப்படுகிறது. சம்ஸ்க்ருத மொழியில் வால்மீகி முனிவர் எழுதிய ஆதி காவியத்தை பெரும்பாலும் பின்பற்றினாலும் பல இடங்களில் தன்னுடைய தனித்துவத்தைக் காட்டும் தகவல்களையும் சேர்த்துள்ளார்;  சொல்  நயமும் பொருள்நயமும் மிக்க கவிதைகளைப்  பாடி தமிழ் உள்ளங்களைக்  கொள்ளை கொண்டார்.  உத்தரகாண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களைக் கம்ப ராமாயணம் கொண்டுள்ளது. இதில் 116 படலங்கள் உள்ளன. பாடல்கள் 10500 முதல் 10569 அல்லது 10576 வரை உள்ளன.

KAMBAN /KAMBAR/ KAMBA RAMAYANA

Kamban, the Tamil poet who lived one thousand years ago, is considered one of the greatest of poets of India. He gave us the Valmiki Ramayana in Tamil verses. Though he himself said that he followed Valmiki, he deviated from Valmiki in several anecdotes.

He is dated between ninth and 11th centuries CE.

Kamban was well-versed in both Tamil and Sanskrit, incorporating concepts of the Vedas, Upanishads, and the Hindu Trinity (Brahma, Vishnu, Shiva) into his work.

 His work is marked by a deep faith, often emphasizing the oneness of God, a view summarized by the perspective: “To those who say He is one, He is one. To those who say He is many, He is many”.

While he respected the Trinity, Kamban was a devout Vaishnavite who wrote in praise of Vishnu and his avatars (including Sadakopar Andhathi on Nammaazhvar).

He lived during the reign of the Chola dynasty, and was supported by a patron named Sadayappa Vallal. His birth place was Therazhundur (also spelled Therizhandur), a village in the Mayiladuthurai district of present-day Tamil Nadu, India.

***

கர்மயோகம்

பலன்களை எதிர்பார்க்காமல், அதாவது அதில் பற்று வைக்காமல் எதையும் செய்வது கர்ம யோகம் ஆகும்

பகவத் கீதையின் இரண்டாவது,  மூன்றாவது அத்தியாயம் இதை மிகவும் விரிவாக எடுத்துரைக்கிறது

கர்மயோகம் என்பது பக்தி, ஞான யோகங்களுடன் கூடிய கடமைகளைச் சரியாகச் செய்வதையும், பயனை எதிர்பாராமல் செயல்படுவதையும் குறிக்கிறது. இது மனச் சமநிலையுடன் செயல்களைச் செய்வதன் மூலம் கர்ம பந்தத்தைத் தடுத்து, ஞானயோகத்திற்குத் தயாராவதற்கான ஒரு வழியாகக் கருதப்படுகிறது.

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசனா |

மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோஸ்த்வகர்மணி ||

இது பகவத் கீதையின் (அத்தியாயம் 2ஸ்லோகம் 47) மிக முக்கியமான ஸ்லோகமாகும்.

பொருள்:

“உன் கடமையைச் (செயலை) செய்வதில் மட்டுமே உனக்கு உரிமை உண்டு; அதன் பலன்களில் ஒருபோதும் இல்லை. எனவேசெயல்களின் பலனை எண்ணிச் செயலைச் செய்பவனாக ஆகிவிடாதே; அதே சமயம்கடமையைச் செய்யாமல் சும்மா இருப்பதிலும் உனக்கு விருப்பம் இருக்கக்கூடாது.

Karma Yoga

Karma Yoga is the path of ‘action’, of putting in 100 percent effort, without being attached to the outcome When action is performed selflessly, with full focus and attention, it brings fulfillment and freedom. Acting without being attached to the fruits of one’s deeds – this alone can lead to union with the Self, which is the goal of yoga.

Karma Yoga, detailed in Chapter 2 and 3 of the Bhagavad Gita, is the spiritual path of selfless action, or Nishkama Karma, where one performs their duty (dharma) without attachment to the results or personal gain. It transforms daily work into worship by offering the fruits of action to the Divine, purifying the mind, and fostering equanimity.

“Karmanye vadhikaraste ma phaleshu kadachana” is a famous verse (Chapter 2, Verse 47) from the Bhagavad Gita where Lord Krishna tells Arjuna that

You have the right to perform your prescribed duties, but not to the results of your actions. Do not be motivated by the fruits of your actions, and do not be attached to inaction.

This philosophy emphasizes focusing entirely on the effort and duty (Karma Yoga) rather than worrying about success or failure, which are beyond one’s control- Swami Vivekananda

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।

मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥

Karmanye vadhikaraste ma phaleshu kadachana

Ma karma-phala-hetur bhur ma te sangostvakarmani

***

கர்ம காண்டம்

வேதம் கற்ற அறிஞர்கள் அதைக் கர்ம காண்டம் , ஞான காண்டம் என இரண்டாகப் பிரிக்கிறார்கள்;  நல்ல கர்மங்களைச் செய்தல் மற்றும் ஈமக்கிரியைகள், மறுபிறப்பு, யாக யக்ஞங்கள் செய்தல் கர்ம காண்டம் ஆகும் . கர்ம வினை கொள்கையின் அடிப்படையில் மனித வாழ்வின் முக்கியத்துவம்  குறித்து இது விளக்குகிறது. இதைச் செய்வதன் மூலம் அடுத்ததாகவுள்ள ஞானகாண்டத்துக்குச் செல்லலாம்; அதில் உபநிஷத தத்துவங்கள் பேசப்படுகின்றன .

Karma Kanda (kaanda)

Karma Kanda is the ritualistic section of the Vedas, focusing on performing sacrifices, ceremonies, and actions to achieve specific worldly benefits (such as wealth, prosperity, and health) or to accumulate merit. It forms the first part of the Vedas, dealing with the three modes of nature and regulated living.

It consists of Samhitas and Brahmanas, which focus on rituals, and is considered the “feet” of the Vedas, supporting the subsequent Knowledge (Jñāna-kāṇḍa) and Worship (Upāsanā-kāṇḍa) sections.

It is often described as the “preparatory stage” that qualifies a seeker for higher knowledge (Jñāna-kāṇḍa). The Jnana Kanda, or knowledge section of the Vedas, focuses on the philosophical teachings of the Upanishads, aiming for liberation (Moksha) through the understanding of Brahman and the Atman

***


கர்ணன்

கொடைக்கு கர்ணன் என்பது பொன்மொழி . மஹாபாரதத்தில் மிகவும் பெருமைகளையும் அவமானங்களையும் சந்தித்த மாமன்னன் ; குந்தி தேவிக்கு சூரிய தேவன் மூலம் பிறந்த கர்ணனை, அவள் உலகத்திற்குப் பயந்து, ஆற்றில் விடுகிறாள்; கர்ணன் கவச குண்டலங்களுடன் பிறந்தான்; அவனை தேரோட்டி எடுத்து வளர்க்கிறான்.  துரியோதனனின் அரிய நண்பன் ஆகிறான்   . ஒரு போட்டியில் அவன் ராஜ வம்சத்தில் பிறந்தவன்  இல்லை, தேரோட்டி மகன் என்று சொன்னவுடன் அவனை உடனே அங்கதேச மன்னனாக துரியோதனன் அறிவிக்கிறான்  ; அவ்வளவு நட்பு! பின்னர் மஹாபாரதப் போரில் தேர்ச் சக்கரம் புதையுண்ட நேரத்தில் அவனை அர்ஜுனன் கொன்றுவிட்டான். அதற்கு முன்னர் அவனிடமிருந்த கவச குண்டலங்களை இந்திரன் பிராமண வடிவில் வந்து கொடையாகப் பெற்றதால் அவன் சக்தியை இழக்கிறான் கடைசி  காலத்தில்  அவனைத் தன் மகன் என்று அவனிடம் குந்தி கூறியபோதும் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற பொன்பொழிக்கிணங்க கெளரவர் தரப்பில் நின்று உயிர் நீத்தான்; நட்புக்கும், கொடைக்கும், தியாகத்துக்கும்,  வீரத்துக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தான் ;அழியாத புகழ் பெற்றான் . ஆயினும் தீயோர் சேர்க்கை அவனை வீழ்த்தியது .

Karna

Karna was the embodiment of generosity. Karna was the abandoned son of Princess Kunti and the Sun God, Surya, raised by a charioteer. Known as Radheya or Anga-raja, he was a warrior of unmatched skill and immense generosity, and unwavering loyalty to his friend, Duryodhana. His story is in Mahabharata.

Born with divine Kavacha (armor) and Kundala (earrings), Kunti abandoned him to avoid societal disgrace.

Despite his innate Kshatriya skills, he was mocked as Sutaputra (son of a charioteer) and rejected. When humiliated, only Duryodhana offered him respect and the throne of Anga, leading to Karna’s lifelong, blind loyalty to the Kaurava side.

Before the war, Indra (disguised as a Brahmin) tricked him into giving up his divine armor, and curses regarding his knowledge weakened him. He was eventually killed by Arjuna on the 17th day of the Kurukshetra war while unarmed and trying to lift his chariot wheel.

–subham—

Tags- Kabir, Kali, Kanya, Kanyakumari, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 41; இந்து மத கலைச்சொல் அகராதி-41, கர்ணன், கம்பர், கபீர்தாசர்

பாரதியும் அருணகிரியும்!  திருப்புகழில் துரியோதனன்- பீமன் கதை – Part 35 (Post No.15,467)

Written by London Swaminathan

Post No. 15,467

Date uploaded in Sydney, Australia –  1 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part35

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 35

எல்லா உயிரும் இன்பமாக வாழ பாரதியும் அருணகிரியும் வேண்டுதல்

மண்ணில் வாழும் அனைத்து உயிரினங்களும் இன்பமாக வாழ அருள்புரிவாயாகுக என்று பல அடியார்கள் வேண்டுகின்றனர்

சரவணபவ நிதி அறுமுக குருபர … சரவணபவனே நிதியே,

ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,

சரவணபவ நிதி அறுமுக குருபர … சரவணபவனே, நிதியே,

ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,

சரவணபவ நிதி அறுமுக குருபர … சரவணபவனே, நிதியே,

ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,

எனவோதித் தமிழினி லுருகிய … என்று பல முறை தமிழினில்

ஓதிப் புகழ்ந்து உள்ளம் உருகுகின்ற

அடியவரிடமுறு … உன் அடியார்களுக்கு உற்ற

சனனமரணமதை யொழிவுற சிவமுற … பிறப்பு, இறப்பு என்பவை

நீங்கவும், சிவப்பேறு அடையவும்,

தருபிணி து(ள்)ள … வினைகள் தருகின்ற நோய்கள் துள்ளி ஓடவும்,

வரம் எமதுயிர் சுகமுற அருள்வாயே … வரத்தினை நீ எங்கள் உயிர்

இன்பம் அடையுமாறு தந்தருள்வாயாக.

கருணைய விழிபொழி … கண்களினின்றும் பொழிகின்ற கருணையை உடையவனே,

ஒருதனி முதலென வருகரி திருமுகர் … ஒப்பற்ற தனிப் பெரும்

தலைவனென வந்த யானைமுகக் கணபதியை

துணைகொளு மிளையவ … துணையாகக் கொண்ட இளையவனே,

கவிதை யமுதமொழி தருபவர் … கவிதைகளாகிய அமுத

மொழிகளை வழங்குபவருடைய

உயிர்பெற அருள்நேயா … உயிர் நற்கதியைப் பெறுமாறு அருள்

புரியும் நேசம் உடையவனே,

கடலுலகினில்வரும் உயிர்படும் அவதிகள் … கடல் சூழ்ந்த

இவ்வுலகில் உயிர்கள் படுகின்ற துன்பங்களும்,

கலகம் இனையதுள கழியவும் … கலக்கங்களும்இன்னும்

இத்தகையதாக உள்ள வேதனைகள் நீங்கும்படியும்,

நிலைபெறகதியும் … நிலைத்திருக்குமாறு நற்கதி பெறுதலையும்,

உனதுதிருவடிநிழல் தருவது ஒருநாளே … உனது திருவடி நிழல்

அருளக்கூடிய ஒருநாள் எனக்கும் உண்டோ?

***

இதோ பாரதி பாடல்

“பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்

மண் மீதுள்ள மக்கள், பறவைகள்

விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;

யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே

இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும், தேவ தேவா!”

–பாரதியின் விநாயகர் நான் மணிமாலை

***

இல்லை என்ற கொடுமை—உலகில்

இல்லையாக வைப்பேன்

தனக்கு வரும் அஷ்ட ஐச்வர்யங்களையும் உலகில் இல்லை என்ற கொடுமை போகப் பயன்படுத்துவானாம்.

இன்னொரு இடத்தில்

“மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன்

வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்கிறான்.

கடவுளை அவன் வேண்டியதெல்லாம் பிறருக்காக வாழத்தான்!

“வல்லமை தாராயோ, இந்த மாநிலம்

பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி—நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”

***

“எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே”- தாயுமானவர்

வாழ்க அந்தணர், வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல்லாம், அரன் நாமமே

சூழ்க, வையகமும் துயர் தீர்கவே!

சம்பந்தர் தேவாரம்

அந்தணர் முதலாவுள்ள நான்கு ஜாதி மக்களும் பசு முதலான எல்லா பிராணிகளும் வாழ வேண்டும் என்பதே பெருள்.

வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்

கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க

நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

கந்த புராணம்

***

துரியோதனன் – பீமன் கதை

நச்சுத் துச் சொப்பிச்சுக் குட்டத்துள் தக்க அட்டத்து

அசிகாண நடத்தி … விஷத்தை உண்ட (பீமன், அந்த விஷம்

தாக்காமல்) சோபித்து விளங்கவும், நீர் நிலையுள் தங்கும்படி குறுக்கே வைத்திருந்த வாள் முனைகள் இருக்கும் இடத்தைத் தெரியும்படி (அந்த பீமனுக்குக்) காட்டியும்*

விடத்தை யுடைத்த படத்தினில் நட(ம்) நவில் கடலிடை

அடுபடை தொடுமுகில் … விஷம் உடையும்படி (காளிங்கன் என்னும் பாம்பின்) பணாமுடியின் மீது நின்று நர்த்தனம் செய்தும், கடல் மீது கொல்லத் தக்க தமது பாணத்தை (ராமனாகச்) செலுத்தியும் (ஆடல் புரிந்த) மேக நிறத்துத் திருமால்,

நகைமுக திருவுறை மணிமார்பன் நத்தத்தைச் சக்ரத்தைப்

பத்மத்தைக் கைப் பற்றிப் பொரு மாயன் … சிரித்த முகத்தை

உடைய லக்ஷ்மி உறையும் அழகிய மார்பை உடையவன், சங்கையும் சக்கரத்தையும் தாமரை போன்ற கையில் பற்றி சண்டை செய்யும் மாயவனாகிய திருமால்,

நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற நசிதரு நிசிசரர் உட

குடல் இடல் செய்த நரகரி ஒரு திரு மருகோனே … நரிக்கும்,

வாளுக்கும், நெருப்புக்கும் விருப்பம் உண்டாகும்படி, அழிந்து போகின்ற அசுரர்களின் குடலை இடுதலைச் செய்தவனும், நரகாசுரனுக்குப்பகைவனுமான திருமாலுக்கும் ஒப்பற்ற திருமகளுக்கும் மருகனே,

இரண்டு சம்பவங்கள்

பீமன் மீது வெறுப்பும் பொறாமையும் கொண்டவன் துரியோதனன் ஒரு முறை அவனுக்கு  விஷத்தைக் கொடுத்து பாம்புகள் உள்ள ஆற்றில் தள்ளிவிட்டான் . அங்குள்ள விஷப் பாம்புகள் அவனைக் கடிக்கவே உடலில் உள்ள விஷம் முறிந்தது.  இன்னும் ஒரு முறை ஆற்றுக்குள் ஈட்டிகளை நட்டு அந்தக் குளத்தில் தள்ளிவிட்டான் அப்போது கண்ணன் அவனுக்கு வண்டுகள் மூலம் அதைக் குறிப்பால் உணர்த்தி அவனைக் காப்பாற்றினான்

ஆற்றில் கழு முனைகளை மறைவாக நிறுத்தி, அங்கே பீமனைக் குதித்து விளையாடச் செய்தான் துரியோதனன். அந்த ஆபத்தான இடத்தை வண்டுகளால் காட்டிப் பீமனைக் கண்ணன் காப்பாற்றினார்.

***

மீண்டும் சொல்கிறார் – திருப்பதியில் இருப்பது முருகனே !

வட வேங்கட மாமலையில் உறைவோனே … வட எல்லையில்

உள்ள திருவேங்கட மாமலையில் வாழ்பவனே,

வேண்டிய போதடியர் … உன் அடியார்கள் விரும்பிய போதெல்லாம்

வேண்டிய போகமது வேண்ட … அவர்கள் விரும்பிக் கேட்ட போக

பாக்கியங்களை உன்னிடம் விண்ணப்பிக்க,

வெறாது உதவு பெருமாளே. … வெறுக்காமல் அவர்களுக்குத்

தந்து அருள் புரிகின்ற பெருமாளே.

***

களமாண்டிடவே யொரு பாரதம் அதிலேகி … போர்க்களத்தில்

இறந்தழிய, ஒரு பாரதப் போர்க்களத்தில் சென்று,

கனபாண்டவர் தேர்தனி லே … பெருமைவாய்ந்த பாண்டவர்களின்

தேரிலே,

எழுபரிதூண்டிய சாரதி யாகிய … கிளம்பிப் பாயும் குதிரைகளைச்

செலுத்திய தேரோட்டி ஆனவனும்,

கதிரோங்கிய நேமியனாம் … ஒளி மிகுந்த சுதர் ன சக்கரத்தை

உடையவனுமான

அரி ரகுராமன் … ஹரி, ரகுராமன், ஆகிய திருமாலும்,

திரைநீண்டிரை வாரியும் வாலியும் … அலைகள் ஓங்கி ஒலிக்கும்

கடலையும், வாலியையும்,

நெடிதோங்குமராமரம் ஏழொடு … நீண்டு உயர்ந்த ஏழு

மராமரங்களையும்,

தெசமாஞ்சிர ராவணனார்முடி பொடியாக … பத்துத்

தலைகளையுடைய ராவணனின் சிரங்களையும் பொடிபடும்படி

சிலைவாங்கிய நாரணனார் மருமகனாங் குகனே … கோதண்ட

வில்லை வளைத்த (ராமனாக வந்த) நாராயணனின் மருகனான குகனே,

பொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய

பெருமாளே. … சோலைகள் சூழ்ந்த திருவேங்கடமாம் திருமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

_–subham—

Tags–திருப்புகழில் ,அருணகிரிநாதர், அரிய செய்திகள் ,Part35, பாரதியும் அருணகிரியும், துரியோதனன் – பீமன் கதைதிருப்பதியில் முருகன்

கண்ணபிரானை மடக்கிய கோபிகை! (Post No.15,466)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,466

Date uploaded in London – 28 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கண்ணபிரானை மடக்கிய கோபிகை! 

ச. நாகராஜன் 

கேரள நாட்டில் பரூருக்கு அருகில் பிறந்தவர் மாபெரும் மகானான லீலாசுகர். இவரது காலம் கி.பி, 1220 முதல் 1300 முடிய என வரலாற்று ஆசிரியர்கள் நிர்ணயித்துள்ளனர்.

பெரும் கிருஷ்ண பக்தரான லீலா சுகர் கிருஷ்ணரது லீலைகளை வர்ணிப்பத்தில் மிகுந்த விருப்பமுள்ளவர். அதில் சிறந்தவர்.

அவர் இயற்றிய் அற்புதமான் நூல் ஶ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்.

ஶ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்  நூலில் நமக்குக் கிடைத்துள்ள 109 பாடல்களும் மிக அருமையானவை.

அதில் ஒன்று தான் கோபியுடனான சிலேடை சம்பாஷணை!

கோபிகை கிருஷ்ணனுடன் நடத்தும் குறும்புத்தனமான கேலியின் கிண்டலும் நிறைந்த சம்பாஷணையை இந்த சிலேடை பாடல் வர்ணிக்கிறது.

கோபிகை: விரலால் (அங்குல்யா)

கா: – யார்

கவாடம் – கதவைத்

ப்ரஹாதி – தட்டுகிறது?

இதற்கு கிருஷ்ணர் பதில் அளிக்கிறார்:

குடிலே – வக்கிரப்பெண்னே

மாதவ: – மாதவன்

உடனே அதை வேறு விதமாக அர்த்தம் செய்து கொண்டாற்போல கோபிகை கேட்கிறாள்:

கிம் வஸந்த: – என்ன வஸந்தருதுவா?

கிருஷ்ணர்: நோ சக்ரீ – இல்லை சக்ரபாணி

கோபிகை: கிம் குலால: – சக்கரம் சுற்றுகிறானே அந்தக் குயவன்.

(சக்ரபாணி என்பதை சக்கரம் சுற்றும் குயவன் என்று அர்த்தம் செய்து கொண்டு கோபிகை இப்படி கிண்டலாகக் கேட்கிறாள்!)

கிருஷ்ணர்: ந ஹி தரணீதர: – இல்லை இல்லை, பூமியைத் தாங்குபவன் நான்!

உடனே கோபிகை: கிம் த்விஜிஹ்வா பணீந்த்ர  – இரண்டு நாக்கு படைத்த பாம்பா?(பூமியைத் தாங்குபவன் ஆதிசேஷன் அல்லவா, அப்படி அர்த்தத்தை எடுத்துக் கொண்டு கிண்டலடிக்கிறாள் கோபிகை!)

கிருஷ்ணர்: நாஹம் தாராஹிமர்த்தீ – இல்லை, இல்லை, நான் ஆற்றில் வசித்த பாம்பை அடக்கியவன்!

கோபிகை: கிமஸி ககபதி? – நீ பட்சிராஜனான கருடனா?

கிருஷ்ணர்: நோ ஹரி – இல்லை ஹரி!

கோபிகை – கிம் கபீந்த்ர: – என்ன குரங்கா? (ஹரி என்றால் குரங்கு என்று ஒரு அர்த்தம் உண்டு!)

கிருஷ்ணர் நொந்து போக மாட்டாரா என்ன?

இத்யேவம் – இப்படியாக

கோபகன்யா வசனஜித: – கோப கன்யாவிடம் தோற்கடிக்கப்பட்டவனான

சக்ரபாணி – சக்ரபாணியான கிருஷ்ணன்

வ: – உங்களை

பாது – காப்பாற்றட்டும்.

105வது பாடலாக அமையும் இந்தப் பாடல் இதோ:

அங்குல்யா க: கவாடம் ப்ரஹரதி

  குடிலே, மாதவா, கிம் வஸந்தோ

நோ, சக்ரீ, கிம் குலாலோ, ந ஹி

  தரணீதர: கிம் த்விஜிஹ்வ: பணீந்த்ர:||

நாஹம் தாராஹிமர்த்தீ, கிமஸி

   ககபதிர் – நோ ஹரி: கிம் கபீந்த்ர

இத்யேவம் கோபகன்யா – ப்ரதிவசன

  ஜித: பாது வச்சக்ரபாணி: ||

இந்த நூலுக்கு அருமையான உரையை அண்ணா அளித்துள்ளார். அதை ஶ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர் வெளியிட்டுள்ளது.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே, ஹரே!

**

March 2026 Calendar with Golden Sayings from Kumaresa Satakam (Post.15,465)

Thanjavur Pictures taken by A Narayanan, Sydney, Australia

Written by London Swaminathan

Post No. 15,465

Date uploaded in Sydney, Australia –  28 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Festival Days- March 03 Tue Lunar Eclipse, Holi, Masi Magam, Full Moon Day; 08 Sun International Women’s Day; 14 Sa Karadaiyan Nonbu; 15 Sun Ekadasi Fasting; 19 Thu New Moon Day, Ugadi New Year Day; 21 Sat Ramadan; 27 Fri Rama Navami; 29 Sun Ekadasi; 31 Tue Mahavir Jayanthi

Auspicious Days March 5,6, 8, 15 16, 25

Kumaresa Satakam is an 18th-century Tamil literary work consisting of 100 poems (stanzas) praising Lord Muruga (Kumaresan), often attributed to the poet Gurupatha Dasar. It is a didactic text that offers profound insights into life, human nature, and morals through maxims and proverbs. Following is a rough translation of the Tamil verses.

March 1 Sunday

Benefits to mankind: The rain giving clouds, Generous/kind hearted king, The water from the lake in the country, The shade of the tree where people gather, The agriculture of the farmer.

***

March 2 Monday
Benefits to mankind: The tree bearing lots of fruits that grow in a place beneficial for the people. Free Drinking Water distribution centres  in public places. The spring that has water flowing like the river Kaveri.

***

March 3 Tuesday

The rays of the Sun and the Moon, The gentle breeze, the wealth in the hands of a wiseman, all of above-mentioned things will benefit many in the country.

***

March 4 Wednesday

Effects of Kaliyuga (Iron Age): Children not following the advice of their mother. They fight with their respectable father; their guru is being insulted. People don’t think about the real God.

***

March 5 Thursday
Effects of Kaliyuga (Iron Age) : Ghost like people are hailed as Gods. People hear to the wife shouting and scolding them. Words of the wise people are neglected.

***

March 6 Friday
Effects of Kaliyuga (Iron Age) : Great people are being denigrated and mean and useless people increase. Cowards are honoured as war heroes.

***

March 7 Saturday

Goddess of Wealth Lakshmi sticks to those who are truthful ; they will shine in life. They will be compassionate.

***

March 8 Sunday

Those who are devoted to God will be a terror to their enemies. They will be the source of compassion and justice.

***

March 9 Monday

Gods are those who provide food for the poor; teacher is god for the pupils; those who shelter to the refugees.

***

March 10 Tuesday

Husbands are Gods for wives; kings are gods for the people; fathers are gods for their sons.

***

March 11 Wednesday

Gods are their relatives for those who are born in high castes; devotees of Lord Siva are gods for the faithful; Lord Skanda is god for the people in the heaven; Brahmins are gods for the low-class people (This last line is found in old versions; but Dravidians has changed it now).

***

March 12 Thursday

Saints always think about liberation (Moksha); wise men think about Dharma/rules and regulations; ruler think about the welfare of the people.

***

March 13 Friday

Sex maniacs always think about women; frauds think about cheating the public; businessmen think about gains; farmers think about their fields; prostitutes target the wealthy; students think about their education; honourable people expect respect. I (author of the verse) always think about Lord Kumara/Skanda.

***

March 14 Saturday

Prostitutes lack truth; thieves have no relatives; poor never think about prostitutes; rude people lack love and affection.

***

March 15 Sunday

Rulers lack gratitude; mlechas/foreigners lack character. Lovers lack shyness; good hearted devotees don’t care about rules for worship; poets lack enemies (all are their friends).

***

March 16 Monday

A ruler is the one who follows the Raja Dharma (established rules); a minister is the statesman who gives proper advice; a hero is the one who does not care about his life.

***

March 17 Tuesday

A poet is the person who knows the prosody and old literature; a doctor is the one who has learnt the medical books and the anatomy; a wiseman is the person who has full control over his five senses.

***

March 18 Wednesday

Better to have intercourse with your wife twice a month; and that woman should have black hair (don’t go to bed with her when she becomes grey haired) one should have oil bath twice a week.

***

March 19 Thursday

Take laxatives to clean your stomach twice a year.

Have curd, butter milk, ghee, hot milk and tender coconut water every day.

***

March 20 Friday

Murderers, and those who left their parents in a miserable state also go to hell. Cowards who let their kings down in the battlefield go to hell; so do students who violated teacher’s command.

***

March 21 Saturday

Those who have illegal intimacy with others’ wives, and those who show ingratitude to the people who provided them food fall in hell.

***

March 22 Sunday

Those who denigrate gods and saints fall into hell; so do who insult the devotees of Lord Siva.

Liars and the people who covet others’ properties fall into hell.

***

March 23 Monday

Qualities of Great men are like Gold which does not change even when it is melted; lie sandal wood which gives fragrance even when it is rubbed hard; they are like white conches which remains white even when it is burnt.

***

March 24 Tuesday

Qualities of Great men are like milk which tastes good even when it is heated and they are like iron weapons which shine even when they are put in grindstone.

***

March 25 Wednesday

Daytime shines because of sun;  Night time becomes bright due to moon; land becomes fertile due to rain; in the same way husband becomes great because of his wife.

***

March 26 Thursday

A horse gets appreciated because of its speed; citizens are protected by the king; character makes one beauty; music becomes perfect with tuning box; human body becomes beautiful because of healthy food

***

March 27 Friday

Sweet words are the sign of compassion; giving makes one famous; flowers are liked because of its fragrance; happiness makes face bright; Yagas are made great by Vedic chanting; truth makes the words respectful.

***

March 28 Saturday

Place of birth is immaterial; it won’t make one great: even when crows are born in beautiful gardens, they could not become cuckoos; even when weeds are grown in flowerpots, they are not considered flowers.

***

March 29 Sunday

Place of birth is immaterial; it won’t make one great: when rabbits are born in forest, they are not equal to calves of elephants; even if snails have shells, they are not used as conches; even when dullards born in a wiseman’s family he is not considered wise. White salt produced by the vast sea does not become sugar

***

March 30 Monday

Best in each category: sandal among the trees; Ganges among the rivers; Kashmir among the regions; Chidambaram among the shrines; Vasishtha among Rishis; Narada among the Munis.

***

March 31 Tuesday

Best in each category: Ruby among Gems; Arundhati among women; Airavata among elephants; Kamadhenu among cows; Meru among the mountains; Agaththiyam in Tamil; Milky ocean among the seas; Pranava among the Mantras.

–Subham—

Tags- March 2026 Calendar, Golden Sayings, Kumaresa Satakam, Gurupada Dasar

மார்ச் 2026 காலண்டர்- குமரேச சதகம் பொன்மொழிகள் (Post No.15,464)

Rama in ivory;picture by A Narayanan, Sydney, Australia.

Written by London Swaminathan

Post No. 15,464

Date uploaded in Sydney, Australia –  28 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

குருபாததாசர் இயற்றிய குமரேச சதகம் பொன்மொழிகள்

காஷ்மீரே சிறந்த இடம்! குருபாததாசர் கண்டுபிடிப்பு! —11 (Post No.14,590) Date uploaded in London –  4 June 2025 என்ற கட்டுரையில் முதல் 24  பாடல்களில் உள்ள விஷயங்களை கண்டோம். இதோ மேலும் 31  பொன்மொழிகள்.

பண்டிகைகள் :-

மார்ச் 03 Tue சந்திர கிரஹணம், ஹோலி,/மாசி மகம் , பௌர்ணமி விரதம் , பௌர்ணமி; 08 Sun உலக மகளிர் தினம்; 14 Sat காரடையான் நோன்பு; 15 Sun                ஏகாதசி விரதம் , சபரிமலையில் நடை திறப்பு;  19 Thu  அமாவாசை , யுகாதி, தெலுங்கு வருஷப் பிறப்பு; 21 Sat          ரம்ஜான் ; 27 Fri     ஸ்ரீராமநவமி; 29 Sun ஏகாதசி விரதம் ; 31 Tue            மகாவீரர் ஜெயந்தி.

      மார்ச் சுப முகூர்த்தம்- 5,6, 8, 15 16, 25

மார்ச் 1 ஞாயிற்றுக் கிழமை

அந்தணர்க்கு பலம் தருவது வேதம் .க்ஷத்ரியர்க்கு பலம் வீரம்.

வைச்யர்களுக்கு பலம் தருவது நிதி/ செல்வம் ; வேளாளர்க்கு பலம் என்பது உழவுத் தொழில்

***

மார்ச் 2 திங்கட் கிழமை

மந்திரிக்கு  பலம் தருவது சதுர் உபாயம், அதாவது சாம தான பேதா  தண்டம்;  நீதி மானுக்கு பலம் நாடு நிலைமை ஆகும்; சன்யாசிகளுக்குப் பலம் தவம் செய்வது ; பெண்களுக்குக் கற்பு பலம்.

***

மார்ச் 3 செவ்வாய்க் கிழமை

சான்றோர்க்கு பொறுமை பலம்; புலவர்க்கு நல்ல கலவி அறிவு பலம்

***

மார்ச் 4 புதன் கிழமை

தக்க தருணத்தில் உதவி செய்யாத நபர்கள் இருந்தும் பயனில்லை; தராதரம் அறிந்துமுறை செய்யாத மன்னர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.

***

மார்ச் 5 வியாழக் கிழமை

ஆண்மையில் லாதஒரு பிள்ளையைப்

     பெற்றென பெறாமலென்ன! அன்பிலாதவர் நட்பும் பயனற்றதே.

***

மார்ச் 6 வெள்ளிக் கிழமை

மானமற்ற பிழைப்பு பிழைப்பே அல்ல ; கொடு என்று கெஞ்சுவோருக்குக் கொடுக்காத செல்வம் இருந்தென்ன போயென்ன

***

மார்ச் 7 சனிக் கிழமை

இளமைப் பருவத்தில் திருமணம ம்  செய்யாத பெண் பயனற்றவளே

***

Siva Linga, Lepakshi; picture by A Narayanan, Sydney.

மார்ச் 8 ஞாயிற்றுக் கிழமை

கடல் நீரும், காட்டில் பூக்கும் மலரும் காட்டில் பெய்யும் மழையும் நாயின் பாலும், கருவேல மரத்தின் பழமும் பயனற்றவைதான்

***

மார்ச் 9 திங்கட் கிழமை

கழுதை லத்தி குவியல் குவியலாக கிடைத்தும் என்ன பயன்? அழகு இருந்து குணமில்லாத பெண்ணும் யாருக்கும் பயனில்லை; சபையில் பேச அஞ்சும் அறிஞனாலும் பயனில்லை.

***

மார்ச் 10 செவ்வாய்க் கிழமை

பூதம் காத்திருக்கும் தங்கத்தால் பயன் உண்டா ? அடர்த்தியான கரடி மயிரினால் ஆடை நெய்ய முடியுமா?

***

மார்ச் 11 புதன் கிழமை

தற் பெருமை பேசி எப்போதும்  தன்னைப் புகல்பவன் நெல்லில் உள்ள பதர் போன்றவனே;  போர் என்றவுடன் பயந்து ஓடுபவனும், பெரி யோர்புத்தி கேளாதவானும் பதருக்குச் சமம்.

***

மார்ச் 12 வியாழக் கிழமை

பிறரைப் பற்றி அவர் போனவுடன் குறை கூ றுவோனும், பெற்றதாய் தந்தையரைத் துன்பத்தில் வாழ வைப்போனும், பெண்புத்தி கேட்டு  நடப்போனும் பதர்.

***

மார்ச் 13 வெள்ளிக் கிழமை

பணம் இருந்தும் பிறரிடம் யாசகம் கேட்போனும் பொய்ச்சாட்சி சொல்லும் மனிதர்களும் பதர் போன்றவர்களே.

***

மார்ச் 14 சனிக் கிழமை

சூரிய ஒளியே புகாத இருந்த காடு , மழையே பேயாத இடத்தில் உள்ள பயிர், அன்புடன் போடப்படும் உணவு ஆகியன விரும்பத் தக்கதல்ல.

***

மார்ச் 15 ஞாயிற்றுக் கிழமை

தாயைக் காணாத குழந்தை, பசுவினைக் காணாத கன்று சோலைகள் இல்லாத இடத்திலுள்ள வந்து முதலியன பரிதாபத்துக்குரியவை ஆகும்.

***

மார்ச் 16 திங்கட் கிழமை

பெரியோர் இல்லாத சபையும், கணவர் இல்லாத பெண்களும் மேகமே காணாத மயில்களும், குழந்தை பெறாத மலடிகளும் ; வசந்தம் காணாத குயில்களும் ஒரே நிலையில் உள்ளவைதான்

***

மார்ச் 17 செவ்வாய்க் கிழமை

வரவுக்கேற்ற செலவு செய்யாதவனும் இளமையில் நல்ல வாழ்வு அமையாதவனும் ஒரே நிலையில் உள்ளவர்களே.

***

மார்ச் 18 புதன் கிழமை

அதிக உணவு உண்ணுதலும், கவலையாலும், மலஜலத்தை அடக்குவதாலும் வியாதிகள் உண்டாகும்.

***

மார்ச் 19 வியாழக் கிழமை

சாப்பாட்டில் நெல்லும் உமியும் இருக்கக்கூடாது ; சரியான அளவு தூக்கம் இருக்க வேண்டும் ; தண்ணீரிலும் பனியிலும் நீண்ட நேரம் இருக்கக்கூடாது இவைகளை மீறுவது நோய்களுக்கு வழிவகுக்கும் .

*** 

மார்ச் 20 வெள்ளிக் கிழமை

அதிக உடலுறவு கொள்வதாலும் மலச் சிக்கலாலும் அதிக பாரத்தைச் சுமப்பதாலும் இளம் வெய்யிலில் உலவுவதாலும் உடல் நோக வேலை செய்வதாலும் நோய்கள் தோன்றும்.

***

மார்ச் 21 சனிக் கிழமை

இரவில் தயிர் சாப்பிடக்கூடாது ; ஜீரணமாகாத கடினமான பொருள்களைச்  சாப்பிடக்கூடாது ; இவைகளை நோய்களை உண்டாக்கும்.

***

மார்ச் 22 ஞாயிற்றுக் கிழமை

எல்லோருக்கும் உதவி செய்தவரும், பொதுமக்களுக்கான கிணறு வெட்டியோரும் ஆலயங்கள் கட்டியோரும் இறந்தாலும் என்றும்  புகழோடு வாழ்பவர்களே.

***

மார்ச் 23 திங்கட் கிழமை

புகழ் பெற்ற புதல்வர்களைப்  பெற்றவர்களும் போரில் வெற்றிபெற்ற வீரர்களும் , பூமியில் அழியாத தருமங்கள் செய்தொரும் இறந்தும் இறவாதவர்களே.

***

மார்ச் 24 செவ்வாய்க் கிழமை

பெரிய கொடையாளர், காவியம் செய்த கவிஞர்கள் , பத்தினிப் பெண்களை மணந்தோர் ஆகியோரும் இறந்தும் இறவாதவர்களே.

***

மார்ச் 25 புதன் கிழமை

மாறாத வறுமையோர் தீராத பிணியாளர், மனைவியை வழங்கியே சீவனம் செய்குர் உயிருடன் செத்தசவம் ஆகி மாய்வர்..

***

மார்ச் 26 வியாழக் கிழமை

பல்லக்கு  சுமந்தே பிழைக்கின்றவர்கள், சொற்பிழை உடையோர் , மனையாள் தனக்கஞ்சி வந்திடு விருந்தினை ஒழித்துவிடுவோர், வீம்புடன் செல்லாத விஷயங்களுக்கு கோர்ட்டுக்குப் போவோர் இருந்தும் இறந்தவர்களே.

***

மார்ச் 27 வெள்ளிக் கிழமை

பணந் தேடிப் புதைத்துவைப்பார், நல்அமுது  செய்து  உண்ணாதவர்கள்  தருமம் செய்யாதவர்கள் கருமிகள் ஆவர்.

***

மார்ச் 28 சனிக் கிழமை

பொய்வார்த்தை சொல்லாத     நல்லோ ரிடந்தன்னிலும்

நல்லசுப லட்சண மிகுந்தமனை தன்னிலும்     ரணசுத்த வீரர்பாலும் லெட்சுமி வசிப்பாள்.

***

மார்ச் 29 ஞாயிற்றுக் கிழமை

யானையிடத்திலும் கங்கா சலத்திலும், தாமரையிலும், விஷ்ணுவின்  மார்பிலும் அரசரிடத்திலும் லெட்சுமி தங்குவாள்.

***

மார்ச் 30 திங்கட் கிழமை

துளசியிலும்  வில்வத்திலும் கடப்பமலர் தனிலும், இரதத்திலும்,  குணம் உடைய பெண்ணிடத்திலும் ,திருமகள் வாழ்கிறாள்.

***

மார்ச் 31 செவ்வாய்க் கிழமை

மனத்தில் கடும்பகை இருப்பதைக் கடுத்த முகத்தினால் அறியலாம்;     மாநிலப் பூடுகளெலாம் மழையினால் அறியலாம்; நல்லார்பொல்  லார்தமை அவர்கள் பெற்ற பிள்ளைகளால் அறியலாம்.

—subham—

Tags- மார்ச் 2026 காலண்டர், குமரேச சதகம், பொன்மொழிகள்

திருப்புகழில் ஐந்து கலைகள்,  ஐந்துஎழுத்து, பஞ்ச பூதங்கள் விளக்கம்- Part 34 (Post.15,463)


Written by London Swaminathan

Post No. 15,463

Date uploaded in Sydney, Australia –  28 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part34

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 34

***

பஞ்சாட்சர விளக்கம்

மதியம் மண் குணம் அஞ்சு நால் முக(ம்) நகர(ம்) முன்கலை …

சந்திரனது உதவியைக் கொள்ளும் மண்ணின் குணம் ஐந்தாகும்.*1 (அந்த மண்ணுலகம்) நாற் கோண வடிவைக் கொண்டது. (பஞ்சாட்சரத்தில்)

 என்னும் எழுத்தையும், (பஞ்ச*2 கலைகளில்) முன் கலையான நிவர்த்தி கலையையும் கொண்டது.

கங்கை நால் குண(ம்) மகரம் … நீர் (அப்பு மண்டலம்)

நான்கு*3 குணம் கொண்டது. இது பஞ்சாட்சரத்தில் ம என்னும்

எழுத்தைக் குறிக்கும்.

முன் சிகர(ம்) அங்கி மூணிடை தங்கு கோண(ம்) … அப்பு

மண்டலத்துக்கு முன் உள்ள அக்கினி மண்டலம் பஞ்சாட்சரத்தில்

சி என்னும் எழுத்தைக் குறிக்கும். (இந்த அக்கினி மண்டலம்)

மூன்று*4 குணமும் முக்கோணமும் கொண்டது.

மதனம் முன் தரி சண்ட மாருதம் இரு குணம் பெறில் அஞ்சு

எல் ஓர் தெரு வகரம் … அழித்தல் தன்மையை தன்னிடத்தே

கொண்டுள்ள பெருங் காற்று (வாயு மண்டலம்) இரண்டு*5

குணங்களைப் பெற்றதாய், ஐந்துடன் ஒன்று சேர்கின்ற (ஆறு) ஒளி

பொருந்திய வீதியாகும். (அதாவது வாயு மண்டலம் ஆறு கோண

வடிவானது). பஞ்சாட்சரத்தில் உள்ள வா என்னும் எழுத்தைக் குறிக்கும்.

மிஞ்சி அகன் படாகம் ஒர் ஒன்று சேரும் கதிர் அடங்கிய

அண்ட கோளகை யகர(ம்) நின்றிடும் … விரிந்துள்ள ஆகாயம்

ஒப்பற்ற ஒன்று சேரும் குணத்தை (சப்தத்தைக்) கொண்டதாகும். (இந்தஆகாய மண்டலம்) சூரிய சந்திரர் அடங்கி விளங்குவதான அண்ட உருண்டையான வட்ட வடிவம் கொண்டது. இதை ய என்னும் எழுத்து நின்று விளக்கும்.

(இ)ரண்டு கால் மிசை ககன(ம்) மின் சுழி (இ)ரண்டு கால்

பரி கந்து பாயும் … (ரேசகம், பூரகம் என்னும்) இரண்டு வழி கொண்டு

அண்டமாகிய ஒளி கொண்ட உச்சியில் (கபாலத்தில்) இடை கலை,

பிங்கலை*6 என்னும் நடையுள்ள குதிரைகள் பாய்ந்து செல்வன ஆகும்.

கருணை இந்திரியங்கள் சோதிய அருண சந்திர மண்டலீகரர்

கதி கொள் யந்திர விந்து நாதமொடு என்று சேர்வேன் …

(அவைகளை வசப்படுத்த) இந்திரியங்களின் அருள் ஜோதி விளங்க,

சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்கினி மண்டலம் ஆகிய மும்

மண்டலங்களில் பொருந்தியுள்ள மூர்த்திகள் பிரசன்னமாகும் மந்திர

சக்தியால் லிங்கவடிவ சிவத்துடன் நான் என்று சேர்வேன்?

அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர அண்டமொடு ஐந்து

பேரிகை டகுட டண்டட தொந்ததோதக என்று தாளம்

அதிக … ஒலிக்கும் பறைகள் டங்கு டாடிக என்ற பேரொலியை முற்றின வகையில் எழுப்ப, அண்டங்களில் ஐந்து வகையான பேரிகை (தோற்கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி என்னும் ஐவகை வாத்தியங்கள்) டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம் மிக்கு ஒலிக்க,

விஞ்சையர் தும்ப்ரு நார்தரொடு இத விதம் பெறு சிந்து பாடிட

அமரர் துந்துமி சங்கு தாரைகள் பொங்க ஊடு …

பதினெண்கணங்களுள் ஒருவராகிய வித்தியாதரர், தும்புரு நாரதர்

என்பவர்களுடன் இன்பகரமான முறையில் சிந்து முதலிய இசை

வகையைப் பாட, தேவர்கள் தேவபேரிகை, சங்கம், தாரைகள் (நீண்ட

ஊதுங் குழல்கள்) இவைகளை முழக்கி அவ்வொலி இடையே

மேலெழுந்து பொங்க,

உதிர மண்டலம் எங்குமாய் ஒளி எழ குமண்டி எழுந்து சூரரை

உயர் நரம்பொடு எலும்பு மா முடி சிந்தி வீழ உறு சினம்

கொண்டு எதிர்த்த சேவக … இரத்தப் பெருக்கின் வெள்ளம்

எல்லாவிடத்தும் பரவ, தீயின் ஒளி வீச, குதித்து எழுந்து போருக்கு வந்த சூரர்களை (அவர்களுடைய) பெரிய நரம்புகளுடன், எலும்புகளும்

மாமுடிகளும் சிதறுண்டு விழும்படியாக கோபத்துடன் எதிர்த்துப் போர் புரிந்த வலிமையாளனே,

மழை புகுந்து உயர் அண்டம் வாழ்வுற உரகனும் புலி கண்ட ஊர்

மகிழ் தம்பிரானே. … மழை பெய்து உயர்ந்த இப்பூமியில் உள்ளோர்

வாழ்வுறும்படி, பாம்பு உருவராகிய பதஞ்சலியும், புலி உருவரான

வியாக்ரபாதரும் (இறைவன் நடனத்தைத்) தரிசித்த தலமாகிய

சிதம்பரத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கும் தம்பிரானே.

*1 – மண்ணின் ஐந்து குணங்கள்:

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

*2 – ஐந்து கலைகள்:

நிவிர்த்திகலை – ஆன்மாக்களை பாசத்தினின்று விடுவிப்பது.

பிரதிஷ்டாகலை – ஆன்மாக்களை முக்தியில் உய்ப்பது.

வித்யாகலை – பந்தநிலை நீங்கிய ஆன்மாக்களுக்கு அனுபவ ஞானத்தைத் தருவது.

சாந்திகலை – ஆன்மாக்களுக்கு எல்லாத் துன்பங்களும் சாந்தமாகச் செய்வது.

சாந்தியதீதகலை – சாந்தி பெற்ற ஆன்மாக்களுக்குத் துன்பங்களை முற்றும் ஒழியச் செய்வது.

*3 – நீரின் நான்கு குணங்கள்:

சப்தம், பரிசம், உருவம், ரஸம்.

*4 – தீயின் முக்குணங்கள்:

சப்தம், பரிசம், உருவம்.

*5 – வாயுவின் இரண்டு குணங்கள்:

சப்தம், பரிசம்.

****

மாணிக்க வாசகர் பற்றி

குருவின் உரு என அருள் செய் துறையினில் குதிரை கொள

வரு நிறை தவசி தலை கொற்றப் பொன் பதம் வைத்திட்டு

அற்புதம் எற்றிப் பொன் பொருள் இட்டுக் கைகொ(ள்)ளும்

முதல்வர் … குருவாய்த் தோன்றி அருள் பாலித்த திருப்பெருந்துறையில் (அரசனுக்காக) குதிரை வாங்க வந்த நிறை செல்வத் தவத்தினரான மாணிக்கவாசகரின் தலையில் வீரம் வாய்ந்த அழகிய தமது திருவடியைச் சூட்டிஅற்புதக் கோலத்தை வெளிப்படுத்தி, ஞானப் பொருளை அவருக்கு உபதேசித்து தடுத்தாட்கொண்டருளிய முதன்மையரான சிவ பெருமான்.

இள கலை மதியம் அடை சடை அருண உழை மழு மருவு திரு

புயர் கொட்டத்துப் புரர் கெட்டுப் பொட்டு எழ விட்டத் திக்கு

அணை நக்கர்க்கு அற்புத குமரன் என … இளம் பிறை நிலவை

அடைந்துள்ள சடையினர். சிவந்த மான், மழு இவைகளைத் தரித்த

அழகிய புயத்தினர். இறுமாப்பும் சேட்டையும் கொண்ட திரிபுராதிகள்

கேடுற்று அழியும்படிச் செய்து, திக்குக்களை எல்லாம் ஆடையாகப் புனைந்த திகம்பரராகிய சிவபெருமானுக்கு அற்புதமான குமாரன் என்று வந்தவனே,

***

மனத்துக்குக் கட்டளை

மனமே உனக்கு உறுதி புகல்வேன் … மனமே, உனக்கு உறுதி

தரக்கூடிய நன்மொழிகளைக் கூறுவேன்,

எனக்கு அருகில் வருவாய் உரைத்தமொழி தவறாதே … என்

சமீபத்தில் வா, நான் சொல்லும் சொற்படி தவறாமல் நடப்பாயாக.

மயில் வாகனக்கடவுள் அடியார் தமக்கரசு … மயிலை வாகனமாகக்

கொண்ட தெய்வம், அடியவர்களுக்கெல்லாம் அரசர்,

மனமாயை யற்ற சுக மதிபாலன் … மனம், மாயை என்பதெல்லாம்

இல்லாத சுகத்தைத் தரும் இளம் குழந்தை.

நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு … உனக்கு

வேறு நினைவு எதற்கு? தேவலோகத்தையும், சிவலோகத்தையும்

உனக்குத் தந்தருளி,

மல நிலை வேர் அறுக்கவல பிரகாசன் … மும்மலங்களில்

(ஆணவம், கன்மம், மாயை) நிலைத்துள்ள வேர்களை அறுக்கவல்ல

ஒளியுருவானவர்,

நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம … சங்க நிதி, பதுமநிதி,

கற்பக மரம்* போன்று அளிக்கவல்லவர், அவரே நமக்கு உறுதி, அவரேமுழு முதற் கடவுள்.

நிழல் ஆளியைத் தொழுது வருவாயே … நீதிமான், அத்தகைய

பெருமானைத் தொழுது வழிபட்டு வருவாயாக.

மனம் பற்றி பாரதியார்

பாரதியாரின் நீண்ட கவிதையில் கடைசி பகுதியை மட்டும் தருகிறேன்

மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!

நின்னொடு வாழும் நெறியும் நன்கு அறிந்திடேன்;

இத்தனை நாட்போல இனியும் நின்னின்பமே

விரும்புவன்; நின்னை மேம்படுத்திடவே

முயற்சிகள் புரிவேன்; முத்தியும் தேடுவேன்;

உன் விழிப்படாமல் என் விழிப்பட்ட

சிவம் எனும் பொருளைத் தினமும் போற்றி

உன்றனக்கு இன்பம் ஓங்கிடச் செய்வேன்.

மனம் பற்றி பகவத் கீதை

“அஸம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிர்க்ரஹம் சலம்

அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேன் ச க்ருஹ்யதே” (6—35)

“தோள்வலி படைத்த அர்ஜுனா! மனம் அடக்குதற்கரியது; இதில் சந்தேகம் இல்லை. பயிற்சியாலும் வைராக்யத்தாலு (திட உறுதி) அடக்கமுடியும்”.

தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:

மனம் ஊசலாடிகொண்டுமோய்வற்றும் இருக்கும் அதைக் காப்பதும் கட்டுப்படுத்துவதும் கடினம். அம்பு செய்பவர்கள் அதை எப்படிக் கூராகச் செய்வார்களோ அதே போல அறிவாளிகளும் அதை நேராகவும் கூராகவும் வைப்பர் (33)

மனம் ஒரு புலி

ஆதிசங்கரர் மனதையும் எண்ணத்தையும் புலிக்கு ஒப்பிடுகிறார். ஐம்புலன்கள் செயல்படும் அடர்ந்த காட்டில் மனது என்னும் கொடும் புலி வசிப்பதால், முக்தியை நாடுவோர் அந்தக் கட்டுக்குள் அகப்படாமல் இருக்க வேண்டும் (விவேக சூடாமணி 176)
ஆதிசங்கரரின் வினா – விடை துதியிலும் (பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா) மனதைப் பற்றி பல குறிப்புகள் வருகின்றன.

மனிதர்களுக்கு மிகவும் கஷ்டமான செயல் எது என்ற கேள்விக்கு அவர் தரும் பதில் “ எப்போதும் மனதைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதே” என்பார்.

***

வினைகளைப் பொடியாக்கு!

தேன் உந்து முக்கனிகள் … நல்ல தேன், உயர்ந்த முக்கனிகள் (மா,

பலா, வாழை)

பால்செங் கருப்பிளனிர் … பால், சிவந்த கரும்பு, இள நீர்

சீரும் … இவைகளின் இனிப்பின் சிறப்பையும்

பழித்த … (தனது ஒப்பற்ற தனிப் பெரும் இனிமையால்)

தாழ்மைப்படுத்துகின்ற

சிவம் அருள் ஊற … மேலான சிவத்தின் திருவருள் ஊற்றெடுத்துப்

பெருகவும்,

தீதும் பிடித்தவினை யேதும் … தீவினைநல்வினை முழுவதும்

பொடித்துவிழு … தூள்பட்டு ஒழியவும்,

சீவன் சிவச்சொருபம் … இந்த ஜீவன் சிவவடிவாக விளங்குகிறது

என தேறி … என்று நன்கு தெளிந்து,

நானென்ப தற்று … அகங்காரத்தை அடியோடு நீத்தும்,

உயிரொ(டு) ஊனென்ப(து) அற்று … உயிர்ப்பற்று, உடற்பற்று

இரண்டையும் அகற்றியும்,

வெளிநாதம் பரப்பிரம … (சிதாகாசம் என்ற) பரவெளியில் உள்ள

அருள்நாதப் பிரம்மமாம்

ஒளிமீதே … பரஞ்ஜோதியில்

ஞானம் சுரப்ப … சிவ ஞானம் பெருகிவரவும்,

மகிழ் ஆனந்த சித்தியொடு … மகிழ்ச்சி ஊறும் சிவானந்த மோட்சத்தில்,

எநாளும் களிக்க … அடியேன் எந்நாளும் மகிழ்ந்திருக்குமாறு

பதம் அருள்வாயே … நின் திருவடியைத் தந்தருள்வாயாக

***

உடல் ஒரு பொம்மை

பனியின் விந்(து) துளி போலவே கருவின் உறு அளவில் …

பனித்துளி அளவுக்கு உள்ள சுக்கிலம் கருவில் சேர்ந்த அளவில்,

அங்கு ஒரு சூசம் ஆய் மிளகு துவர் … அவ்விடத்தில் ஒரு

அறிகுறியாய், (பின்பு) மிளகு அளவாய், (அதன் பின்) பாக்கு அளவாய்,

பனை தெ(ன்)னங் கனி போலவே பல கனியின் வயிறு

ஆகி … பிறகு பனை, முற்றிய தேங்காய் போல் ஆகி, (பின்னர்) பலாப்

பழ அளவுக்கு வயிறு பெரிதாகி,

பருவமும் தலை கீழதாய் நழுவி நிலம் மருவி … (பூமிக்கு

வரவேண்டிய) பருவ காலம் வந்தவுடன், தலை கீழாக நழுவி இந்தப்

பூமியை அடைந்து,

ஒன்பது வாசல் சேர் உருவம் உள பதுமையின் செயல்

போலவே வளி கயிறின் உடன் ஆடி ம(ன்)ன … ஒன்பது

துவாரங்களைக்* கொண்ட உருவம் உள்ள ஒரு பொம்மையின் செயலைப் போல, பிராண வாயு என்னும் கயிற்றின் உதவியால் ஆடி இயங்கி இருக்கும்போது,

விதம் தெரியாமலே மல சலமொடு உடல் நகர்ந்து அழுது

ஆறியே … இவ்வாறு போகின்றது என்னும் உணர்ச்சி இல்லாமல் மலசலம் கழியும் உடலுடன் தவழ்ந்தும், அழுதும், பிறகு அழுகை ஓய்ந்தும்,

அ(ன்)னை முலையின் மயம் அயின்று ஒரு பாலனாய் இகம்

உடைய செயல் மேவி … தாயின் முலைமயமான பாலை நன்கு உண்டு,ஒரு குழந்தையாய் இப்பிறப்பில் செய்யும்படி விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து,

வடிவம் முன் செய்த தீமையால் எயும் உனையும் அற மறந்து

அகம் மீது போய் … உருவமானது முன்பு செய்த தீவினை காரணமாக எவ்வாறோ அமைந்து, உன்னையும் அடியோடு மறந்து, பாவம் மேலும் மேலும் வளர,

தின(ம்) தினமும் மனம் அழிந்து உடல் நாறினேன் இனி

உனது கழல் தாராய் … நாள்தோறும் மனம் உடைந்து, உருக்

குலைந்து கெடுகின்றேன். இனி உனது திருவடிகளைத் தந்து

அருள்வாயாக.

–subham—

Tags- திருப்பபுகழ், அருணகிரிநாதர், ,அரிய செய்திகள் Part 34

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்-ஓர் ஆய்வு  – 5 (Post.15,462)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,462

Date uploaded in London –  27 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

(ஆர், சேஷாத்ரிநாதன்) 

கிஷ்கிந்தாக் காண்டத் தொடக்கம் சர்கம் 1 

कुन्देन्दीवरसुन्दरावतिबलौ विज्ञानधामावुभौ

शोभाढ्यौ वरधन्विनौ श्रुतिनुतौ गोविप्रवृन्दप्रियौ।

मायामानुषरूपिणौ रघुवरौ सद्धर्मवर्मौ हितौ

सीतान्वेषणतत्परौ पथिगतौ भक्तिप्रदौ तौ हि नः ॥1 

இங்கு இராம இலக்ஷ்மணர்களை துளசிதாசர்  வணங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஆரம்பத்திலேயே நமக்கு வேலை கொடுத்துவிட்டார் துளசிதாசர். ஸ்லோகத்தின் பொருள் என்ன?

 இறைவன் இராமன் மல்லிகைப் பூ போலவும் தாமரை மலரைப்  பூ போலவும் அழகானவர் வசீகரமானவர் விதிவிலக்காக வலிமையானவனவர்   சக்திவாய்ந்தவர். உயர்ந்த ஞானம் . மற்றும் புலமையின் களஞ்சியம். மகத்துவம்  மற்றும் கருணை ஆகிய நற்பண்புகளைக் கொண்டவர். சிறந்த வில்லாளி. வேதங்களால் பாராட்டுப் பெற்றவர். பிராம்மணர்களால் (சமுகத்தின் முதியவர்கள் மற்றும் கற்றவர்களால்) நேசிக்கப்படுபவர் தனது உண்மை அடையாளத்தை மறைக்க மானுட வடிவம் எடுத்தவர, ரகு வம்சத்தின் மன்னர்களில் சிறந்தவர்,  உயர்ந்தவர், தர்மத்திற்கு ஒரே கேடயம் போன்றவர், அனைவரின் நலவிரும்பி, வனத்தில் பயணித்து விடாமுயற்சியுடன் சீதையைத் தேடி வருபவர், அந்த இறைவன் நமக்கு பக்தியின் வரத்தை வழங்குவானாக   …………….ஒரு சில உரையாசிரியர்கள் இவ்வாறு இந்த காண்டத்தை ஆரம்பிக்கின்றனர். 

ஒரு சிலர்  இவ்வாறு சொல்கின்றனர்…..முல்லை மலர் போலவும்,  நீல ஆம்பல் போலவும், மஞ்சள் நீல  நிறமுடையவர்கள், மிக்க வலிமையானவர்கள், விஞ்ஞானத்தின் உறைவிடங்கள், பொலிவு உள்ளவர்கள், சிறந்த வில்லாளிகள், வேதங்களால் கொண்டாடப்படுபவர்கள், பசுக்கள் அந்தணர்கள் கூட்டத்திற்கு பிரியமானவர்கள், மாயையாக மனித வடிவெடுத்தவர்கள், அனைவருக்கும் நன்மை புரிபவர்கள். சீதையைத் தேடுவதில் முனைந்து வழிநடப்பவர்கள், அத்தகைய ரகுகுலத்தின் சிறந்த சகோதரர்களான இருவர் நமக்கு பக்தியை அளிக்கட்டும். 

முதல் சுலோகம் இராமனை மட்டும் குறிக்கிறது. 

இரண்டாவது சுலோகம் இராம இலக்ஷ்மணர்களைக் குறிக்கிறது.

 அதாவது சீதையைத் தேடி இராமனும் இலக்ஷ்மணனும் காட்டில் சென்றதால் இந்த சுலோகம் இருவரையும் குறிக்கும் என்று ஒரு சில அறிஞர்கள் சொல்லுகின்றனர். ஒரு சில அறிஞர்கள் ரகு குலத்தின் புகழ் பெற்றவர, 

மூத்தவர் என்று பொருள்படும் रघुवरौ  raghuvarau என்ற சொல் இருவரை அல்ல ஒரு தனி நபரைக் குறிக்கும் என்பதால் ஸ்லோகத்தை இராமன் மீதே மையப் படுத்த விரும்புகிறார் துளசிதாசர் என்று சொல்கின்றனர்.  இராம சரித மானஸில்  இந்த வார்த்தை அல்லது அதன் வெவ்வேறு மாறுபாடுகள் எங்கெல்லாம் பயன்படுத்தப் பட்டிருக்கிறதோ அவை அனைத்தும் இராமனை மட்டும் குறிக்கின்றன. வேறு யாரையும் அல்ல. இலக்ஷ்மணன் உட்பட அவரது சொந்த சகோதரர்களைக் கூட அல்ல என்று ஒரு சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர்.

                       **                     தொடரும்

பக்தியினால் திருப்பிக் கிடைத்த மோதிரம்! சத்ய சாயிபாபா விவரித்த ரகசியம்! (Post.15,461)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,461

Date uploaded in London – 27February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

22-11-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

 பக்தியினால் திருப்பிக் கிடைத்த  மோதிரம்: ஷீர்டி சாயியாக இருந்த போது நடந்த சம்பவத்தை ஶ்ரீ சத்ய சாயிபாபா விவரித்த ரகசியம்! 

ச. நாகராஜன் 

ஶ்ரீ சத்யசாயிபாபா  பிறந்த நாள் விழாவில் 23-11-1962 அன்று பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய உரை! 

வேத பண்டிதர்கள் வேதத்தின் மீது முழு நம்பிக்கையோடு இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் அவர்கள் மிகவும் சந்தோஷத்துடன் இருப்பார்கள். வேதங்கள் ஒரு மனிதனை சந்தோஷமாக இருக்க வைக்க முடியாவிடில் வேறு எது தான் சந்தோஷத்தைத் தரும்?

ஹோட்டல் வைத்து நடத்தும் ஒருவர் தனக்கு தலை வலிக்கும் போது மருந்துக் கடைக்குச் சென்று தலைவலி மாத்திரையை வாங்கிச் சாப்பிடுகிறார். மருந்துக் கடை வைத்து நடத்துபவரோ தனக்கு காப்பி வேண்டும் என்கின்ற போது அதே ஹோட்டலுக்குச் சென்று காப்பி அருந்துகிறார். மேலைநாடுகள் கீழை நாடுகளை நோக்கி மன அமைதிக்காக வருகின்றன; கிழக்கோ மன அமைதி என்று தாங்கள் நினைத்துக் கொள்வதை அடைய மேலை நாடுகளை நோக்கிச் செல்கின்றன. 

உங்களுக்கு எனது முந்தைய பிறவியில் ஷீர்டி சாயியாக நான் இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

எனது பக்தையான ஒரு எழுத்தறிவற்ற பெண்மணி பகல்ஹானில் வாழ்ந்து வந்தாள். அவள் தனது சமையலறையில் மூன்று பளபளக்கும் பித்தளைக் குடங்களில் நீரை நிரப்பி வைத்துக் கொள்வாள்.   அந்த மூன்று குடங்களுக்கும் அவள் கங்கை, யமுனை, சரஸ்வதி என்று பெயர் சூட்டியிருந்தாள். அவள் அந்தப் பெயரால் தான் அந்தக் குடங்களைக் குறிப்பிடுவது வழக்கம்.

யாரேனும் வழிப்போக்கர் ஒருவர் தாகமாக இருக்கிறது என்று அந்தப் பெண்மணியிடம் சொன்னால், அவள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நீரையும் கலந்து திரிவேணி சங்கமமாக வந்த வழிப்போக்கருக்குத் தருவாள்.

அவளது இந்தச் செய்கையைக் கண்டு அண்டை அயலார் எள்ளி நகையாடுவது வழக்கம். ஆனால் அவளோ அந்த மூன்று குடங்களில் உள்ள தண்ணீர் நிலத்தடி வழியே கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகளுடன் இணைந்திருப்பதாக நம்பினாள்.அவளது இந்த நம்பிக்கை அசைக்க முடியாததாக இருந்தது.

அவளது கணவன் ஒரு முறை காசி யாத்திரைக்குக் கிளம்பினான். அவனது தாயார் அவனிடம் தான் அணிந்திருந்த தங்க மோதிரத்தைத் தந்து அவனை அணிவிக்கச் சொன்னாள். அது அவனை  நன்கு காக்கும் தாயத்தாக இருக்கும் என்று அவள் கூறினாள். அவனும் அதை அணிந்து கொண்டு காசிக்குக் கிளம்பினான். கங்கையில் மணிகர்ணிகா துறையில் அவன் நீராடும் போது அந்த மோதிரம் நழுவி நீரினில் விழுந்து விட்டது. தேடிப் பார்த்தும் அது கிடைக்கவில்லை.

அவன் திரும்பி வந்து நடந்ததைச் சொல்லி தாயாரிடம் ஆறுதலுக்காக,
“கங்கை அது வேண்டுமென்று விரும்பினாள் போலும், எடுத்துக் கொண்டாள்” என்றான்.

ஆனால் அவனது மனைவி இதைக் கேட்ட போது, “கங்கை ஒரு நாளும் ஒரு எளிய வயதான பெண்மணியின் மோதிரத்தை வலிய எடுத்துக் கொள்ள மாட்டாள். அன்புடன் எதைத் தருகிறோமோ அதை மட்டுமே அவள் பெற்றுக் கொள்வாள். அதை அவள் நமக்குத் திருப்பித் தருவாள்.  இது நிச்சயம். அவள் நமது சமையலறையிலேயே தான் இருக்கிறாளே!” என்றாள். 

இதைச் சொல்லி விட்டு நேராக சமையலறைக்குச் சென்ற அவள் கங்கை என்று பெயரிட்டிருந்த குடத்தின் முன்னர் கூப்பிய கையுடன் மனதார பிரார்த்தனை செய்தாள். பின்னர் குடத்தில் தன் கையை விட்டுத் துழாவினாள்.

என்ன ஆச்சரியம்! கங்கையில் தொலைந்து போன அந்த மோதிரம் அவள் கையில் கிடைத்தது.

அவள் த்வாரகாமாயிக்கு தன் கணவனுடனும் மாமியாருடனும் வந்தாள்.

நம்பிக்கையே முக்கியம். பெயரும் வடிவமும் முக்கியம் அல்ல! ஏனெனில் எல்லா பெயர்களும் அவனுடையவையே! எல்லா வடிவங்களும் அவனுடையவையே!

நம்பிக்கை என்பது தர்ம பூமியிலே வேதம் என்ற செழிப்பான மணல் உள்ள பூமியிலேயே வளரும். ஆகவே தான் இங்கு பாடசாலை இன்று ஆரம்பிக்கப்பட்டது!

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 40; இந்து மத கலைச்சொல் அகராதி-40 (Post No.15,460)

Written by London Swaminathan

Post No. 15,460

Date uploaded in Sydney, Australia –  27 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆங்கில எழுத்து K- ல் துவங்கும் சொற்கள்

Words beginning with “K”. (Tamil Version is posted here)

காளிதாசன்

காளிதாசன் உலக மகா கவிஞர்களில் ஒருவன். மிகப் பெரிய நாடகாசிரியன். அவனுடைய ஏழு நூல்கள் அவனுக்கு உலகப் உகழை ஈட்டித் தந்துள்ளன. காளிதாசன் உவமை மன்னன். ஆயிரத்துக்கும் அதிகமான உவமைகளை ரத்தினக் கற்கள் போல ஆங்காங்கு பொருத்தமாகப் பயன்படுத்தியுள்ளான். சங்க இலக்கிய நூல்களில் இவனுடைய 1250 உவமைகளில் அல்லது சொற்றொடர்களில் 225 வரை அப்படியே கையாளப்பட்டுள்ளன.

காளிதாசனின் முக்கிய நூல்கள்:

மகா காவியங்கள்:

ரகுவம்சம் (Raghuvamsa)

குமாரசம்பவம் (Kumarasambhava)

கண்ட காவியங்கள்:

மேகதூதம் (Meghaduta)

ருதுசம்காரம் (Ritusamhara)

நாடகங்கள்:

அபிஞான சாகுந்தலம் (Abhijnanashakuntalam)

மாளவிகாக்கினிமித்திரம் (Malavikagnimitram)

விக்ரமோர்வசியம் (Vikramorvashiyam)

இவைதவிர ஏராளமான ஸ்லோககங்களும் சுபாஷிதங்களும் அவர் பெயரில் வெளியாகியுள்ளன.

காளிதாசன் எழுதிய மேகதூதம் உலகின் முதல் பயண நூல் ஆகும். டூரிஸ்ட் கைடு புஸ்தகம் போல மத்திய இந்தியா முதல் இமை யா  மலை வரை வரிசையாக வருணிக்கிறார். மேலும் மேகதூதம் தான் தென் மேற்குப் பருவக்காற்றின் போக்கை வருணிக்கும் உலகத்தின் முதல் வானிலை இயல் நூலும் ஆகும் இதைப் பார்த்துதான்  கபிலர் என்னும் உலகப் புகழ சங்கத் புலவன் குறிஞ்சிப்பாட்டினை எழுதினார் என்று தமிழ்  அறிஞர் ரெவரென்ட்  ஜி யு போப் குறிப்பிட்டுள்ளார்.

காளிதாசனின் காலம்

காளிதாசனின் காலம் குறித்து நீண்ட காலமாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன. கி. மு முதல் நூற்றாண்டு முதல் குப்தர்களின் காலமான நான்காம் நுற்றாண்டு வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பல தேதிகளைக் குறிப்பிட்டார்கள். ஆனால் அவைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் நல்ல சான்றுகள் சங்கத் தமிழ் இலக்கியத்தில் கிடைத்துள்ளன. இதன் மூலம் காளிதாசனின் காலம் சங்க காலத்துக்கு முன் என்பது தெள்ளத் தெளிவாகிறது. புகழ்பெற்ற வரலாற்று நிபுணரும் கலைத்துறை வல்லுனருமான சிவராம மூர்த்தி போன்றோர் காளிதாசனை விக்ரமாதித்தன் காலத்தில் வைத்தனர். சங்க இலக்கியமும் அவர் காலம் கி.மு முதல் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது. டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி சந்திரா ராஜன் வெளியிட்ட Penguin publication காளிதாசர் நூல்களின் மொழிபெயர்ப்பில் கூட அவரை சங்க காலத்துக்கு முன்னரே வைக்கின்றார்

காளிதாசன் ஒரு மாமேதை. அவன் பேசாத பொருள் இல்லை. அவனுடைய பூகோள அறிவோ மூக்கில் விரலை வைத்து வியக்கும் வண்ணம் உள்ளது. இமய மலையை பூமியை அளக்கவந்த அடிக் கோல் என்கிறார். வரை படம் இல்லாத காலத்தில் 1500 மைல் நீளமுள்ள இமயமலையை அவர் எப்படி இப்படி வருணித்தார் என்பது ஆச்சரியமே.

ஈரான் முதல் இந்தோனேஷியா வரை பல இடங்களை அவர் குறிப்பிடுகிறார். கப்பல் கவிழ்ந்தால் அந்த சொத்துயாருக்குப் போய்ச் சேரும் என்ற சட்ட விசயங்களை அலசுகிறார். ரகு வம்ச காவியத்தில் ஸ்வயம்வரத்துக்கு வந்த மன்னர்களை வருணிக்கையிலும் பாண்டிய மன்னனையும் ஆதித்ய முனிவரையும் குறிப்பீடுகிறார் ; தமிழ் இலக்கியத்தின் அஸ்திவாரமே அகத்தியர்தான்.

காளிதாசனின் வியப்பூட்டும் உவமைப் பட்டியல்!

காளிதாசனின் உவமைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. எண்ணிக்கையிலும் அதிகம்; தரத்திலும் அதிகம்; அவருடைய ஏழு நூல்களில் எங்கும் மிகப் பொருத்தமான உவமைகளைக் காணலாம். அவற்றில் இரு நூற்றுக்கும் மேலான உவமைகளை சங்கத் தமிழ்ப்புலவர்கள் எடுத்தாண்டதை, நான் எழுதிய  இரண்டு தமிழ், ஆங்கில நூல்கள் மூலமாகவும் அறியலாம் சுமார் 1250 உவமைகளை அவர் பயன்படுத்தியதால் உபமா காளிதாஸஸ்ய – உவமைக்கு காளிதாசன் என்று சம்ஸ்க்ருத மொழியில் ஒரு பொன்மொழி உள்ளது .

 அதனால்தான் அவரை உலக மஹா கவிஞன் என்றும் நாடக ஆசிரியன் என்றும் உவமைச் சக்ரவர்த்தி என்றும் இன்றும் அறிஞர்கள் போற்றுகின்றனர்.

;இந்த உவமைப் பட்டியலிலும் அவர் மன்னர்களை வேத கால தெய்வங்களுடன் ஒப்பிடுவதால் அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவர் என்று தெளிவாகிறது;  சங்க நூல்களிலும் மன்னர்களை வேத கால தெய்வங்களுக்கும் பின்னர் முருகன் விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கும் ஒப்பிடுவது காலத்தைக் காட்டும் கண்ணாடியாகத் திகழ்கிறது.

***

கல்பம்

வேதப் படிப்பினைப் படிப்போருக்கு வேதங்களோடு ஆறு துணைப்பாடங்களையும் கற்க வேண்டும் என்று ஆயிரக்கண ஆண்டுகளுக்கு முன்னர் சிலபஸ் வகுத்துள்ளனர் . அவைகளில் ஒன்று கல்பம் . ஆறு பாடங்களை ஷட் அங்கம் என்று சொல்லுவார்கள். இதிலிருந்து சடங்கு என்ற தமிழ்ச் சொல் உண்டாக்கியது .

இன்னும் ஒரு பொருள் காலம் பற்றியது .

பிரம்மாவின் நூறு வயதில் ஒரு நாள் கல்பம் ஆகும்

இது 14 மன்வந்தரங்களைக் கொண்ட மிக நீண்ட கால அளவாகும்.

ஒரு கல்பம் என்பது 1,000 மகாயுகங்கள் அல்லது 14 மன்வந்தரங்கள், இது பிரம்மனுக்கு ஒரு நாள் (சுமார் 4.32 பில்லியன் மனித ஆண்டுகள்) ஆகும்.

வேதாங்கம்: வைதீகக் கர்மாக்கள், யாகம், திருமணம் போன்ற சடங்குகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற நெறிமுறைகளை (கல்ப சூத்திரங்கள்) விளக்கும் நூல்.

***

கற்பக விருட்சம்

இது  தேவலோகத்தில் உள்ளது;  கேட்டதையெல்லாம் வாரி வழங்கும் தெய்வீக மரம்  கல்பதரு மரம் ஆகும். பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய இது, செல்வத்தையும், நினைத்ததெல்லாவற்ரையும் தரும்  இதன் இன்னுமொரு பெயர் கல்பதரு.

பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது, காமதேனுவுடன் சேர்ந்து இந்த மரமும் தோன்றியது. இந்திரன் இந்த மரத்தைத் தனது தேவலோகத்திற்கு (சொர்க்கம்) எடுத்துச் சென்றான்

பாரிஜாதம்ஹரிசந்தனம்சந்தனம்மந்தாரம்கற்பக விருட்சம் ஆகிய ஐந்தும் தேவலோக மரங்கள்.

***

காம

ஆசை, விருப்பம் என்பது பொதுவான அர்த்தம் ஆயினும் பிற்காலத்தில் உடல் தொடர்பான காம உணர்வு என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டது சங்க இலக்கியம்திருக்குறள் முழுவதிலும் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லைக் காணலாம் அமோரஸ் AMOROUS என்ற ஆங்கிலச் சொல், இதிலிருந்து பிறந்தது .

***

காம சூத்திரம்

உலகின் முதல் உடலுறவு பற்றிய செக்ஸ் புஸ்தகம்  இது . வாத்ஸ்யாயனர் என்ற ரிஷி சம்ஸ்க்ருதத்தில் இந்த நூலினை சுமார் 2000  ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார் இதில் உலகத்தில் முதல் முதலில் பெண்கள்  கல்வி பற்றிய சிலபஸ் உள்ளது 64  கலைகளையும் பெண்கள் கற்க வேண்டும் என்று இவர் பட்டியலிட்டுள்ளார் அவை சரஸ்வதேவியிடமிருந்து தோன்றிய கலைகள் பிற்காலத்தில் எல்லாப் புலவர்களும் ஆய கலைகள்64  என்று எழுதினர் வெறும் உடலுறவுபற்றி மட்டும் சொல்லாமல் அழகு  சாதனங்கள், காய கல்ப மூலிகைகள் பற்றியும் வாத்ஸ்யாயனர் எழுதியுள்ளார்.

***

காமன்

மன்மதனின் பெயர் .

***

காமதேனு

பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய  தெய்வீகப் பசு காமதேனு . இது வசிஷ்ட மகரிஷியிடம் இருந்தது ; கற்பக விருட்சம் என்ற மரம் போலவே நினைத்தை எல்லாம் உண்டாக்கும். காமதேனுவிற்கு சுரபி என்றும் நந்தினி என்றும் வேறு பெயர்களும் உண்டு. இதன் உடலில் தேவர்கள் அனைவரும் வசிப்பதாக ஐதீகம்; கோவில்களிலும் வீடுகளிலும் வாகனமாகவும் சிலையாகவும் விக்ரகமாகவியம் வழிபாட்டில் உள்ளது .

***

கர்மாவினை

வினைப் பயனை கர்மா என்பார்கள் இந்துமதம், பெளத்த மதம், சமண மதம் ஆகியன கர்ம வினைப்பயனிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை வைத்துள்ளன

பல்லக்கினைச் சுமந்து செல்கின்றவனையும் பல்லக்கில் அமர்ந்து செல்பவனையும் பார்த்த உடனேயே தெரியும்- அறத்தின் பயன் என்ன என்று. புண்ணியம் செய்தவன் பல்லக்கில் பவனி வருவான். இது பரிமேல் அழகர் எழுதிய திருக்குறள் உரை.

ஒருவர் செய்த நல்லதும் கெட்டதும் ஏழு பிறப்புக்கும் தொடர்ந்து வரும் என்பது இந்த மூன்று மதங்களின் நம்பிக்கை

வினைகளை வெல்லலாம் என்று மாணிக்க வாசகர், திருமூலர் போன்றோர் பாடியுள்ளனர்

வினைகளை இந்துக்கள் மூன்றாக வகுத்துள்ளனர் அவை சஞ்சிதம்பிராரப்தம் ஆகாமியம் எனப்படும்.

சஞ்சிதம் (கடந்தகால சேமிப்பு)பிராரப்தம் (தற்போதைய அனுபவம்)மற்றும் ஆகாமியம் (எதிர்கால வினை) 

ஒருவன் செய்த செயல்கள் என்ன செய்யும் என்பதற்கான இந்துமத உவமையை  திருவள்ளுவர் அளித்தார்.

புத்தமத உவமையை கவுதம புத்தர் அளித்தார்.

வள்ளுவர் சொன்னார்,

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை

வீயாது அடிஉரைந்தற்று (குறள் 208)

பொருள்

தீய செயல்களைச் செய்தவர்கள் தீச்செயலின் பயனை அனுபவித்து அழிவது உறுதி. இது ஒருவனுடைய நிழல் அவனோடு பின் தொடர்ந்து சென்று அவன் அடியில் இருப்பது போன்றது.

ஒருவனுடைய நிழல் ஒருவனை எப்படித் தொடர்கிறதோ அப்படி அவன் செய்த செயல்களும் அவனுடன் வரும்.

புத்தர் சொன்னார்

ஒருவன் கெட்ட எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்குத் துன்பம், வண்டி மாட்டின் மீது அந்த வண்டிச் சக்கரங்கள் எப்படி தொடர்ந்து வருகின்றனவோ அப்படி வரும்.

 ஒருவன் நல்ல எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்கு இன்பம், ஒருவனுடைய நிழல் எப்படி அவனைத் தொடர்ந்து வருகின்றதோ அப்படி வரும்.- தம்மபதம் 1,2

வினை பற்றி சமணர்கள் -ஆயிரம் பசு உவமை !

இந்துக்கள் கர்ம பலனில் நம்பிக்கை கொண்டாலும் அதை நமக்கு அளிக்கும் ஆண்டவன் ஒருவன் உளன் என்று நம்புகின்றனர். சமணர்களோ ஒரு பசுக்கூட்ட உவமையைச்  சொல்லுவார்கள் ; ஆயிரம் பசுக்கள் இருந்தாலும் ஒரு கன்றுக்குட்டி எப்படி தாய்ப் பசுவைக் கண்டு  பிடிக்கிறதோ அப்படி ஒருவன் செய்த வினை, அவனைக் கண்டுபிடித்துவிடும் என்பது அவர்கள் கூற்று; சமணர்கள் இயற்றிய நாலடியாரில் இந்தப்   பாட்டு வருகிறது :

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு.—நாலடியார்

(பொ-ள்.) பல ஆ (பசு)க்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் ;  இளைய ஆன்கன்று,  தன் தாய் ஆ(பசு)வினைத் தேடித் தெரிந்தடைதலை, போன்ற தாகும்; பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும்,  தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில், அத்தகைய தன்மையுடையதேயாகும்.

(க-து.) பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும்.

***

கர்மேந்திரியங்கள்

கர்மேந்திரியங்கள் (செயற்கருவிகள்) என்பவை மனித உடல் செயல்களைச் செய்ய உதவும் ஐந்து முக்கிய உறுப்புகள் ஆகும். வாக்கு, கைகள், கால்கள், மலத்துழை, மற்றும் பிறப்புறுப்பு ஆகிய ஐந்தும் கர்மேந்திரியங்கள் ஆகும், அவை முறையே பேசுதல், கையாளுதல், நடத்தல், கழிவகற்றல் மற்றும் இன்புறுதல் ஆகிய செயல்களைச் செய்கின்றன

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவை ஐம்புலன்களின் மூலம் அறியப்படும் ஐந்து உணர்வுகளாகும். இவை முறையே நாவினால் சுவைத்தல், கண்ணால் பார்த்தல், உடலால் தொடுதல், காதால் கேட்டல், மூக்கால் முகர்தல் ஆகியவற்றைக் குறிக்கின்றன. இவற்றை ஆராய்ந்து கட்டுப்படுத்துபவன் அறிவில் உலகம் அடங்கும் என்பது திருவள்ளுவரின் குறள் (27) கருத்தாகும்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு-27

***

கர்த்தா

கர்த்தா (Karta) என்பது ஒரு செயலைச் செய்பவர், படைப்பவர், அல்லது மூல காரணத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஆன்மீகத்தில் இது கடவுள், இறைவன், அல்லது தலைவனைக் குறிக்கப் பயன்படுகிறது.

சம்ஸ்க்ருத இலக்கணத்தில் (வ்யாகரணம்), கர்த்தா (Karta – कर्ता) என்பது ஒரு வாக்கியத்தில் வினையைச் செய்பவரை (Subject/Doer) குறிக்கும். இது காரகங்களில் (Karaka – வேற்றுமைப் பொருட்கள்) முதன்மையானது. 

***

காவியம்

தமிழ் இலக்கியத்தில் ஐம்பெரும் காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

ஐஞ்சிறு காப்பியங்கள்: சூளாமணி, நீலகேசி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதா காவியம்.

சம்ஸ்க்ருத மஹா காவியங்கள்

வால்மீகி ராமாயணம் ஆதிகாவியமாகப் போற்றப்படுகிறது

குமாரசம்பவம், ரகுவம்சம், கிராதார்ஜுனீயம், சிசுபாலவதம், மற்றும் நைஷதசரிதம் ஆகியவை ஸம்ஸ்க்ருதத்தின் பஞ்ச மஹா காவியங்கள்

ஹேமசந்திரரின் சூத்திரம்

காவ்யமானந்தாய யஷஸ்ச காந்தாதுல்யதயோபதேஷாய ச I

(ஆனந்தம் – மகிழ்ச்சி; யஷஸ் –புகழ்; காந்தா – மனைவி; துல்யம் – சமமாக;

உபதேசம் – அறிவுரை)

இப்படி ஹேமசந்திர்ர் காவ்யானுசாஸனத்தில் ( I -3) காவியத்தின் பிரயோஜனத்தை ஒரு சூத்திரமாகக் கூறுகிறார்.

ஹேமசந்திரர் கூறிய மூன்றைத் தவிர, ஆசார்ய மம்மட பட்டர் என்னும் புகழ்பெற்ற அறிஞர், செல்வம், பண்பாடு மற்றும் அறிவு, தீமையை அறவே நீக்கிக் கொள்ளும் பண்பு ஆகிய இன்னும் மூன்றையும் ஒரு காவியம் தருகிறது என்கிறார். இந்த உரைகல்லில் தேருகின்றவையே காவியம். 

***

கதிர  மரம் / கருங்காலி

Khadira (खदिर) is a Sanskrit word referring to the “Catechu tree” tree from the Fabaceae family, and is used throughout Ayurvedic literature such as the Caraka-saṃhitā.

சரக சம்ஹிதை முதலிய ஆயுர்வேத நூல்கள்  கருங்காலி மரத்தின் மருத்துவப் பயன்களை எடுத்துரைக்கின்றன சம்ஸ்க்ருதத்தில் கதிர என்றும் தாவரவியலில் Acacia catechu அக்கேசியா கடேச்சு என்றும் சொல்லுவார்

திருவாதிரை நட்சத்திரத்தின் விருட்சம் கருங்காலி. செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்தது. கருங்காலி மரம் (Ebony Tree) மருத்துவ மற்றும் ஆன்மீக நன்மைகள் கொண்ட, மிகவும் உறுதியான மரமாகும்.

***

கரகம் காவடி

இவை இரண்டும் தமிழ்நாட்டின் கிராமீய நடனங்கள் ஆகும்

காவடி எடுக்கும் வழக்கத்தை நாம் எல்லோரும் அறிவோம். முருகனுக்கு காவடி எடுப்பதைப் பார்க்கிறோம். இதே போல காவடி பட எழுத்து சிந்து சமவெளி முத்திரையிலும் கிடைத்திருகிறது. உடனே இதை தமிழ் வழக்காகவும் ஆகையால் சிந்து சமவெளியினர் திராவிடரே என்றும் இனபேதம் காட்டி கட்டுரை எழுதிவிட்டார்கள். உண்மையில் இது பாரதம் முழுதும் உள்ள வழக்கம். சொல்லப்போனால் காவடி என்பது உலகம் முழுதும் இருக்கிறது.

நம் தமிழர்கள் ஆண்டுதோறும் முருகனுக்குக் காவடி எடுப்பதுபோலவே வடக்கேயுள்ள ஹிந்துக்கள் சிவபெருமானை வழிபட ஹரித்வாருக்கு லட்சக் கணக்கில் காவடி எடுக்கிறார்கள். ஹரித்வாரில் கங்கை நதியை வணங்கிவிட்டு இரு புறமும் தொங்கும் பானைகளில் கங்காஜலம் கொண்டு போகிறார்கள். இப்படி காவடியில் தண்ணீர் கொண்டு போகும் வழக்கம் இதாலி, மேரற்கிந்தியத் தீவுகள், சீனா போன்ற பல நாடுகளில் இருந்திருக்கிறது. சாலைப் போகுவரத்து மற்றும் வாஹன வசதிகள் இல்லாத இடங்களில் காவடி இருப்பது சகஜம்.

மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் சீஷெல்ஸ் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தைப்  பூசம் முதலிய நாட்களில் காவடி எடுத்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர் மலேசியா பத்துமலை முருகனைத் தரிசிக்க லட்சக்கணக்கில் செல்வதால் அன்று அரசாங்கம் விடுமுறை அறிவித்துள்ளது

தமிழ் நாட்டில் முருகனுக்கு விசேஷமான தினங்களில் பக்தர்கள் காவடி எடுக்கின்றனர் ஏதேனும் வேண்டுதலை நிறைவேற்றவோ நேர்த்திக் கடனாகவோ காவடி எடுக்கிறார்கள் அப்போது பலரும் பரவச நிலையை அடைகின்றதனார் வெற்றி வேல்  என்ற கோஷமும் அரோஹரா என்ற கோஷமும் விண்ணதிர முழங்கப்படும்.

காவடிகளில் பல வகை உண்டு அப்போது முதுகில் கொக்கியைக் குத்தி க்கொண்டும் வாயில் வேலைக்குத்திக்கொண்டும் காவடி எடுக்கிறார்கள்

***

கரகம்

தமிழ் நாட்டில் ஆண்களும் பெண்களும் கரகம் ஆடுகிறார்கள் ; அப்போது தலையில் குடம் அல்லது மார்க் கம்பத்தை வைத்துக்கொண்டு அதைக் கீ ழே விழாமல் ஆடுவர் இது தவிர கீழே  உருளும்  மரக்கட்டையிலும் ஆணிகளிலும் நின்றும் கூட ஆடுகின்றனர்  கோவில் திருவிழாக்களில் மட்டுமின்றி பெரிய ஊர்வலங்களிலும் கரகாட்டத்தை  ஏற்பாடு செய்கிறார்கள். 

–subham—

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 40; இந்து மத கலைச்சொல் அகராதி-40  , காளிதாசன், காவியம், கரகம் காவடி, கர்மா, வினைகளின் வகைகள், pictures

பச்சிலைக்கும், எச்சிலுக்கும் மயங்கியவன் சிவன் ! ஞான சம்பந்தரின் ஞான வாள்! – Part 33 (Post.15,459)

Written by London Swaminathan

Post No. 15,459

Date uploaded in Sydney, Australia –  27 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 33

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 33

***

புலி முனிவரும்  பாம்பு  முனிவரும் 

இடர்கலிகள் பிணியோட எனையுமருள் … துன்பங்களும், கிரகக்

கோளாறுகளும், நோய்களும் விலக, என்னையும் ஒரு பொருளாகக் கருதி அருள்வாயாக.

குறமாதின் இணையிளநிர் முலைமார்பின் அணைமார்பா …

குறப்பெண் வள்ளியின் இளநீர் போன்ற மார்பில் அணையும் மார்பனே,

இனிய முது புலிபாதனுடன் … இன்ப நிலையில் உள்ள முதிய முநி* வியாக்ரபாதருடன்,

அரவு சதகோடி யிருடியர்கள் … பாம்பின் உருவில் உள்ள பதஞ்சலி முநிவரும், நூறு கோடி ரிஷிகளும்

புகழ்ஞான பெருமாளே. … புகழ்கின்ற ஞான மூர்த்தியாம் பெருமாளே.

சிதம்பரத்தில் முதலில் தவத்தில் இருந்த வியாக்ரபாதரை ‘முதிய முநி’ எனக் குறிப்பிட்டார் – தில்லைப் புராணம்.

***

நித்திய கல்யாணிசிவகாமிஅபிராமி- சொல் நயம்

சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி

எனை ஈண மலை மாது சிவை தற் பரனொடு ஆடும் அபிராமி

சிவகாமி உமை அருள் பாலா … சக்தி, தனித்து விளங்கும் ஜோதி,

அழகிய பார்வதி, பலவித உருவத்தை உடையவள், சுக நிலையிலேயே இருக்கின்ற நித்திய கல்யாணி, என்னைப் பெற்ற தாயாகிய, இமவான் மடந்தை, சிவை, பரமசிவனுடன் நடனம் இடும் அபிராமி, சிவகாமி ஆகிய உமாதேவி அருளிய பாலனே,

சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி

விளையாடி அசுராரை விழ சத்தியினை ஏவி அமரோர்கள்

சிறை மீள நடம் இடுவோனே … சக்ரவாள கிரியும், வலிமை வாய்ந்த

பெரிய மேரு மலையும், கடலும் புழுதிபடுமாறு ரத்தின மயமான மயிலின் மீது ஏறி விளையாடி அசுரர்கள் அழியுமாறு சக்தி வேலைச் செலுத்தி தேவர்களைச் சிறையினின்று மீட்டு நடனம் செய்பவனே,

***

யோக ரகசியங்கள்

நாலு சதுரத்த பஞ்ச அறை மூல கமலத்தில் அங்கியை … நாலு

சதுரப் பிரம பீடமாகிய, ஐந்தாம் வீடாகிய சுவாதிஷ்டானத்தில்*

செல்லும்படி, மூலாதார கமலத்துள்ள அக்கினியை

நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே … பிராணாயாம மந்திர

ஒழுங்கினால் சுழு முனை** நாடி மார்க்கத்தில் செலுத்தி,

நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற …

விஷ்ணு வீடாகிய மணி பூரகத்தில் உள்ள சந்திரகாரமாகிய பீடத்தில் பொருந்திச் சேர்ந்து நல்ல சுடர் தோன்றும்படியாக,

இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் … (அனாகதம் முதலிய மற்ற

நிலைகளிலும்) இணங்கி நடத்தி அக்கினி முதலிய மும்மண்டலங்களிலும்சந்தித்துள்ள ஆறு ஆதாரங்களிலும் பொருந்திய

கோலமும் உதிப்ப கண்டு … பல திருக் கோலங்களையும் பார்த்து,

உள நாலினை மறித்து … சரீர நிலைக்கு ஆதாரமாக உள்ள நாலு அங்குலப் பிராண கலையை (கும்பக வழியில்)** சிறிது சிறிதாகக் கழிந்து போகாதபடித் தடுத்து,

இதம் பெறு கோ என முழக்கு சங்கு ஒலி … இனிமையாகிய

கோ என்று முழங்கும் சங்கின் ஒலியைக் கேட்டு,

விந்து நாதம் கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை

உண்டு … விந்து சம்பந்த (சிவ – சக்தி) நாத ஒலி கூடி இருக்கும் இடத்தில் நின்று இந்திர போகமாகிய தேவாமிர்தத்தைப் பருகி,

ஒரு கோடி நடனப் பத அம் சபை என்று சேர்வேன் …

கணக்கற்ற நடனம் புரியும் குஞ்சிதபாதனுடைய (நடராஜனுடைய) அழகிய பொற் சபையை எக்காலத்தில் அடையப் பெறுவேன்?

** இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு: நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் ‘பூரகம்’ என்றும், வெளிவிடும் காற்றுக்கு ‘ரேசகம்’ என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு ‘கும்பகம்’ என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட ‘ஆதாரங்கள்’ (நிலைகள்,

சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் ‘பிரம கபால’த்தில் உள்ள ‘ஸஹஸ்ராரம்’ (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் ‘மூலாதார’த்தை வந்து அடையும்.சுவாச நடப்பை ‘ப்ராணாயாமம்’ என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால்மன அமைதி ஏற்படும்.

***

ஞான சம்பந்தரின் ஞான வாள்!

ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொ(ண்)டு தலை பறி

அமணர் சமூகம் மாற்றிய தவ முனி சகம் உளர் பாடு பாட்டு

என மறை பாடி … இப்பூமியில் அருள் நிறந்த ஞானமாகிய வாளைக்

கொண்டு, பறித்த தலையை உடைய சமணர்களின் கூட்டத்தை அழித்த

(ஞான சம்பந்தப் பெருமானாகிய) தவ முனியே, உலகத்தில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்கள் போன்ற பாடல்களில் வேத சாரங்களை (தேவாரமாக) அமைத்துப் பாடியவனே,

தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தாவெ

னாச்சில சபதமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள்

அகு குகுகுகு என ஆளி வாய்ப் பல அலகைகள் அடைவுடன்

ஆடும் ஆட்டமும் … தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா என்று இந்த விதமான ஒலிகளைக் கொண்டு எழுகின்றனவான தாளவாத்தியங்களுடன் நெடு நேரம் அகு குகு குகு இவ்வாறான ஒலியுடன் ஆளியின் வாய் போல பல பேய்கள் முறையுடனே ஆடுகின்ற கூத்தும்,

அரன் அவனுடன் எழு காளி கூட்டமும் அகலாதே அரி

துயில் சயன வியாள மூர்த்தனு(ம்) மணி திகழ் மிகு புலியூர்

வியாக்ரனும் … சிவபெருமான் ஆடும் போது அவனுடன் எழுந்து

ஆடுகின்ற காளிகளின் கூட்டமும் உன்னைச் சூழ, திருமால் உறங்கும் படுக்கையான பாம்பாகிய ஆதிசேஷ மூர்த்தியாகிய பதஞ்சலியும், அழகுபொலியும் பேர் பெற்ற புலியூர் என்னும் சிதம்பரத்தில் வியாக்கிர பாதரும்,

அரிது என முறை முறை ஆடல் காட்டிய பெருமாளே. …

நடராஜப் பெருமானின் நடனம் அருமை வாய்ந்தது என்று வியக்க விதம் விதமான கூத்துக்களை ஆடிக் காட்டிய பெருமாளே.

பகவத் கீதையில்

பகவத் கீதையில் ஞானம் ( பகவத் கீதை அத்தியாய எண்களும் ஸ்லோக எண்களும்) பின்வருமாறு

ஞானப் படகு – 4-36

ஞான விளக்கு- 10-11

ஞானத் தீ – 4-3, 19

ஞானக் கண் – 15-10

ஞான வேள்வி – 4-33; 9-15; 18-70

ஞானத் தவம்  – 4-10

ஞான யோகம்- 3-3; 16-1

திருமந்திரத்தில்

திருமந்திரத்தில் 406, 877, 1033, 1335, 1423, 1403, 1416, 1454, 1500, 1541, 1605, 1640, 1814, 1860, 1858, 1913, 2000, 2167, 2277, 2285, 2598, 2677, 2695, 2755, 2747, 2782, 2777, 2807, 2803, 2927,

ஞான வாள்

நமன் வரின் ஞான வாள் கொண்டே எறிவன்
சிவன் வரின் நான் உடன் போவது திண்ணம்
பவம் வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம் வரும் சிந்தைக்குத் தான் எதிர் யாரே.

(சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்ட திருமந்திரம் நூல் எண்கள் இவை )

ஞானக் கொழுந்து (406), ஞானத் தலைவன் (878), ஞானக் கொம்பு (1033), ஞானப் பொருள் (1335), ஞானபூபதிஞானோதயம் (1403) ஞான நிர்வாணம் (1449), ஞான சமாதி (1605) ஞான வேடம் (1640), ஞான முத்திரை (1860), ஞானத் தறி (2000), ஞானம் படர்கின்ற கொம்பு,ஞானத் தலைவன்,  ஞானானந்தம்ஞான விளக்கொளிஞான நெறிஞான மார்க்கம்ஞானக் கூத்து

***

பச்சிலைக்கும்எச்சிலுக்கும் மயங்கியவன் சிவன் !

பொக்கணத்து நீற்றை இட்டு ஒருத்தனார்க்கு … விபூதிப்

பையிலிருக்கும் திரு நீற்றை (நெற்றியில்) இட்டு விளங்கிய ஒப்பற்ற (சிவகோசரியார் என்னும்) அந்தணனுக்கு

புத்தி மெத்த காட்டு(ம்) புன வேடன் … உண்மை அறிவை நன்கு

காட்டிய மலைக் கொல்லைக் காட்டு வேடன் (கண்ணப்பன்) தந்த பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் … பச்சிலைப் பூஜைக்கும், அவன் வாயில் இருந்து உமிழ்ந்த எச்சிலாகிய அபிஷேகத்துக்கும்,

வீக்கு பைச் சிலைக்கும் ஆட்கொள் அரன் வாழ்வே … (அவன்)

தோளில் கட்டியிருந்த வலிய வில்லுக்கும் வெகுவாக உகந்து அவனை ஆட்கொண்டருளிய சிவபெருமானுடைய செல்வக் குமரனே,

பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட … முறைமையுடன்

வீட்டின்பத்தை உபதேசித்து தந்தையாகிய சிவபெருமானுடைய

உள்ளத்தை வசப்படுத்தியவனே,

பத்தருக்கு வாய்த்த பெருமாளே. … பக்தர்களுக்கு அருமையாகக்

கிட்டியுள்ள பெருமாளே.

–subham—

Tags- பச்சிலைக்கும், எச்சிலுக்கும் , சிவன் ! சம்பந்தரின் ஞான வாள்! – Part 33 திருப்புபுகழ் அருணகிரிநாதர் ,அரிய செய்திகள்