26.இந்தப் பூவுலகில் யாராலும் வேதங்களின் காலத்தை சொல்லமுடியாது: மாக்ஸ்முல்லர்
27.மாக்ஸ்முல்லர், கால்டுவெல், ஜி.யு.போப் மீது இலங்கை அறிஞர் கடும் தாக்கு
28.வேதத்தின் மீது கைவைத்த 35 வெளிநாட்டு “அறிஞர்கள்”!
29.வேதத்தை “முழி பெயர்த்த” “அறிஞர்கள் !
–subham—
அட்டையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சில அறிஞர்களின் படங்கள் உள்ளன
தமிழ் , சம்ஸ்க்ருத
மொழிகளை வளர்த்த
ஜெர்மானிய அறிஞர்கள் – book title
முன்னுரை
தமிழ் மொழிக்கும் சம்ஸ்க்ருத மொழிக்கும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள் அளப்பரிய சேவை செய்துள்ளனர். இந்த இரண்டு மொழிகளைத் தவிர கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கும் அவர்கள் சேவை ஆற்றினர் . சம்ஸ்க்ருத மொழியை எடுத்துக் கொண்டால் எல்லோருக்கும் மாக்ஸ்முல்லர் பெயர் மட்டுமே தெரியும்; ஏனைய அறிஞர்களைத் தெரியாது. தமிழ் என்று சொன்னால் சீகன்பால்கு என்ற ஜெர்மானிய அறிஞரையே அதிகம் தெரியும் . ஜெர்மானியர் செய்த மொழிபெயர்ப்புகளும், இலக்கணங்களும், அகராதிகளும் தமிழ் , சம்ஸ்க்ருத மொழிகளை வளப்படுத்தின என்று சொன்னால் மிகையாகாது.
என்னுடைய இந்த நூலில் நிறைய அறிஞர்களின் சுருக்கமான வாழக்கைக்குறிப்பும் உளது. தென்னிந்திய மொழிகளை வளப்படுத்திய ஜெர்மானியர்கள் , கிறிஸ்தவ மத்ததை பரப்புவதற்காக அனுப்பப்பட்டவர்கள்; அதற்காக அவர்கள் மொழிகளைக் கற்றார்கள். ஆனால் சம்ஸ்க்ருத மொழியை வளப்படுத்திய ஜெர்மானியர்கள் அப்படி அல்ல; அவர்களில் பலர் கிறிஸ்தவ மத குருமார்களின் வீடுகளில் பிறந்தாலும், சாகுந்தலம், ரிக்வேதம் முதலியவற்றின் அழகில் முழ்கி முத்துக்களை எடுக்க முற்பட்டனர் . பலர் உபனிஷதங்களை ஆழமாக ஆராய்ந்து எழுதினர் ; ஆயினும் அக்கால நம்பிக்கையான ஆரியர் குடியேற்றக் கொள்கையை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டனர். ஆகையால் அவர்களுடைய முடிபுகளை, துணிபுகளை நாம் ஏற்க வேண்டிய கட்டாயமில்லை. மேலை உலகம் கிரேக்க மொழியை மட்டுமே அறிந்து உலகமே கிரேக்கர்களால் சிறப்புற்றது என்று எழுதிய காலையில், இந்த அறிஞர்கள் சாக்ரடீஸையும் விட மிகப்பெரிய அறிஞர்கள் இந்தியாவில் இருந்ததை வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள்; இதனால் மேலை உலகத்தில் இந்துமதம் பற்றி இருந்த தவறான கருத்துக்கள் தவிடுபொடியாகின. அந்த அளவில் நாம் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். ஜெர்மானிய மொழியில் அவர்கள் எழுதிய அனைத்தும் இன்றும் கூட தமிழ் மொழியிலும் ஆங்கிலத்திலும் முழுமையாக வெளிவரவில்லை; அவைகளை வெளிக்கொணர நம் நாட்டிலுள்ள பன்மொழி வித்தகர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
இந்த நூலினைப் படியுங்கள்; உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நூற்றி முப்பதுக்கும் மேலான என்னுடைய தமிழ், ஆங்கில நூல்கள் உங்கள் கைகளில் தவழட்டும் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART Ten
I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
The stamps posted here are MINT (not used); so more valuable.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சைக்காலஜி PSYCHOLOGY (GREEK) என்ற ஆங்கிலச் சொல்லை உள வியல், மன இயல், மனோதத்துவ சாஸ்திரம் என்று சொல்லலாம்.
இந்து மதத்தின் ஆணிவேரான நான்கு வேதங்களில் எவ்வளவோ அறிவியல் தகவல்கள், செய்திகள் இருப்பதை பல ஆராய்ச்சியாளர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர் ,
இதற்கு முன்னர், அரவிந்தர், ஆர்ய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி போன்றோர் இந்தக் கோணத்தில் சில வேத மந்திரங்களுக்கு விளக்கம் கூறியுள்ளனர்.
இங்கு மனம் தொடர்பான விஷயங்களைக் காண்போம்; மனஸ் என்பது தூய ஸம்ஸ்க்ருதச் சொல்; வள்ளுவர் முதல் இன்று வரை எல்லோரும் பயன்படுத்தும் சொல் ; இதிலிருந்து மைண்ட்MIND என்ற ஆங்கிலச் சொல் உருவானது ; இதற்கு நிகரான கிரேக்க சொல் சைக் என்பதாகும்; லோகோஸ் என்ற கிரேக்க சொல்லின் பொருள் – படிப்பு, விவரித்தல்STUDY, DISCOURSE என்பதாகும். அதிலிருந்து பிறந்த சொல்லே சைக்காலஜிPSYCHOLOGY (GREEK) (பி/ P என்பது சைலன்ட்; உச்சரிப்பு கிடையாது ).
வேத மந்திரங்களைக் கண்டுபிடித்து நமக்குச் சொன்ன ரிஷி, முனிவர்கள் ரகசிய விஷயங்களை இரு பொருள்பட பேசினார்கள், பாடினார்கள். மேம்போக்காகப் பார்த்தால் சடங்குகளை விவரிப்பதாகத் தோன்றும் ; உட்கருத்தோ பெரிய தத்துவங்களாக இருக்கும்.
வெள்ளைக்காரர்களும் அர்த்தம் புரியாமல் காற்று/ வாயு, அக்கினி/ தீ , வருணன்/ மழை, இந்திரன்/ இடி மின்னல் போன்ற இயற்கை சக்திகளைக் கண்டு பயந்து ஆரியர்கள் பாடிய பாடல்கள் என்று முதலில் உளறினார்கள். பின்னர் உபநிஷத மந்திரங்களைப் பார்த்தவுடன் அவற்றுக்கு மூலமான வேத மந்திரங்களும் ஆழ்ந்த கருத்துள்ளவை என்பதை அறிந்தார்கள்.
ஈலா, சரஸ்வதி போன்ற சொற்கள் வெறும் தேவிகள் அல்ல ; அவை அறிவு, ஊற்றுணர்ச்சி முதலிய அறிவு விஷயங்கள் என்பதை அரவிந்தர் சுட்டிக்காட்டினார்.
எல்லோரும் பின்பற்றும் சாயன பாஷ்யத்தில் கூட ‘தி’ என்ற சொல்லை எண்ணம், பிரார்த்தனை, செயல், உணவு என்று பலவகையாக உரை செய்தார் . ஆனால் உண்மையில் இது எண்ணம் , புரிதல் என்ற பொருள் மட்டுமே உடைத்து .
அஸ்வ -குதிரை, க்ருதம்- நெய் பசு – மிருகம் என்பனவற்றை வெள்ளைக்காரர்களும் அப்படியே பொருள் கொண்டனர் ; ஆனால் இவை விசை , தூய்மை என்ற பல பொருளில் வருகின்றன.
இன்றும் கூட ஹார்ஸ் பவர் HORSE POWER என்ற சொல்லை விசைக்குப் பயன்படுத்துகிறோம்
திருமூலர் கூட பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்து உண்டு என்று பாடுகையில் யாரும் பசு மாட்டினை நினைப்பதில்லை. அது போல வேதத்திலும் பசு/ மிருகம், அஸ்வ/கு திரை என்பன மனோதத்துவ சொற்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன அரவிந்தர்தான் முதலில் இவ்வகையில் பொருள் கூறினார்.
உபநிஷத மந்திரங்கள் மனது, உள்ளம் , ஆத்மா ஆகியவற்றை ஆழமாக ஆராய்கின்றன பதஞ்சலி போன்றோர் யோக சாஸ்திரத்தில் மனஸ், சித்தம், புத்தி, அஹம்காரம்EGO என்ற சொற்களை பயன்படுத்துகையில் ஆழமான பொருள் தெரிகிறது.
ரிக் வேதத்தின் பகுதியாக வரும் மன ஆவர்த்தன சூக்தம், ஸ்ரத்தா சூக்தம், யஜுர் வேத பகுதியான சிவ சங்கல்ப சூக்தம் ஆகியவற்றில் மனோ தத்துவ விஷயங்களைக் காணலாம்.
தற்கொலையைத் தடுக்கும் மந்திரம்
மனம் அலைபாய்வது குறித்தும் அந்த மனத்தினை மீண்டும் இழுத்து குவிய வைப்பது குறித்தும் ரிக் வேத 10-58 மந்திரத்தில் காணலாம்.
நான் மனத்தினை இழுத்து வந்து கட்டுக்குள் வைக்கிறேன் என்று ஒவ்வொரு துதியும் முடிகிறது
பன்னிரெண்டு மந்திரங்களும் மனத்தை வசப்படுத்தும் மந்திரம் ஆகும்; அது மட்டுமல்ல சென்ற காலத்துக்கும் வருங்காலத்துக்கும் சென்ற மனத்தினை மீண்டும் வர செய்கிறோம் என்று ஒரு மந்திரம் முடிகிறது ; நாம் அனைவரும் கடந்த கால நிகழ்சசிகளை எண்ணியோ வருங்காலத்தை எண்ணிக் கவலைப்பட்டோ வாழ்க்கையை செலவிடுகிறோம் இதை அழகாக இந்த மந்திரம் உரத்த குரலில் சொல்லி ,கூவி மனதை ஒருமுகப்படுத்த வைக்கிறது.
இதையே பாரதியாரும் பாடியுள்ளார்
சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
– மகாகவி பாரதியார்.
இது ரிக் வேத மனஸ் (10-58-11) பற்றிய கவிதையின் எதிரொலி ஆகும்.
யத்தே யமம் வைவஸ்வதம் மனோ ஜகாம தூரகம்
தத்த ஆ வர்த்த யாமஸீஹ க்ஷயாய ஜீவஸே
यत्ते॑ य॒मं वै॑वस्व॒तं मनो॑ ज॒गाम॑ दूर॒कम् । तत्त॒ आ व॑र्तयामसी॒ह क्षया॑य जी॒वसे॑ ॥ यत्ते यमं वैवस्वतं मनो जगाम दूरकम् । तत्त आ वर्तयामसीह क्षयाय जीवसे ॥ yat te yamaṃ vaivasvatam mano jagāma dūrakam | tat ta ā vartayāmasīha kṣayāya jīvase ||
குறிப்பாக முதல் மந்திரம் தற்கொலையைத் தடுக்கும் மந்திரம் என்று தெரிகிறது; யமனிடம் சென்றுள்ள மனதை — அதாவது தற்கொலை செய்ய முயன்றவரின் — மனதை திருப்பி இழுக்கும் மந்திரம் ஆகும்.
வாழ்க்கைப் போராட்டத்தினை எதிர்கொள்ள வேண்டும்; எதற்கும் அஞ்சக்கூடாது ; மனக்கோட்டைகளையும் கட்டவேண்டாம்; எதிர்காலம் பற்றி அஞ்சவும் வேண்டாம் என்பதை 12 மந்திரங்களும் மீண்டும் மீண்டும் கூறுகின்றன.
தற்காலத்தில் அதி பயங்கர சம்பளத்துடன் மேலை நாடுகள் சைக்கோதெரபிஸ்ட் PSYCHOTHERAPIST என்னும் மருத்துவர்களை நியமிக்கின்றன . தற்கொலை செய்யப்போவதை பார்த்த உறவினர்களோ நண்பர்களோ அவர்களை டாக்டரிடம் கூட்டிச் சென்றவுடன் அவர் உடனே சைக்கோதெரப்பிஸ்ட் திடம் அனுப்புவார்; அவர் தற்கொலை நோயாளியுடன் ஒரு மணி நேரம் பேசி மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்பார். அவருக்கு வருட சம்பளம் ஐம்பதாயிரம் பவுன்கள்! ரிக் வேத மந்திரத்தை இலவசமாகவே கேட்கலாம் ; படிக்கலாம் .
****
அடுத்தாற் போல ரிக் வேதத்தில் உள்ள நம்பிக்கை / ச்ரத்தா சூக்தத்தைக் காண்போம் .
தொடரும் ……..
–சுபம்–
Tags- தற்கொலை , மனம், அலைபாயும், வேதம் , சைக்காலஜி, மன , உள இயல் , மனோதத்துவ ,சாஸ்திரம் , பகுதி 1
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
13-4-25 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
பத்ராசல ராமதாஸர்! – 2
ச. நாகராஜன்
வருடங்கள் ஓடின. சிறைவாசம் பொறுக்கமுடியாத நிலையில், விஷம் அருந்தி தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவிற்கு வந்தார் கோபண்ணா.
“ஏ! சீதம்மா! நீயாவது என் நிலையை ராமருக்குச் சொல்லக் கூடாதா” என்று கூறி விட்டு விஷக் கோப்பையை தயார் செய்து வைத்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.
சீதாதேவியின் மனம் உருகியது. ராமரை நோக்கிய சீதாதேவி, இப்படி ஒரு மெய்யன்பர் உருகித் தவிக்க ஏன் அவரைக் காக்காமல் இருக்கிறீர்கள். பன்னிரெண்டு வருட காலம் சிறைவாசம் என்பது ஒரு பெரிய தண்டனை அல்லவா? என்று கேட்க ராமர், “முன்னொரு ஜென்மத்தில் ஒரு கிளியைக் கூண்டில் அடைத்து வைத்து விட்டான் இவன். அதற்கான தண்டனையை அனுபவிக்கிறான் இப்போது. இன்றுடன் அந்த தண்டனை காலம் முடிகிறது.
“தானீஷா சென்ற ஜென்மத்தில் காசியில் ஒரு அந்தணனாகப் பிறந்தவன். அபிஷேகம் செய்தால் இறைவன் தரிசனம் கிடைக்கும் என்று 999 குடங்கள் அபிஷேகம் செய்தான். பிறகு பொறுமையின்றி குடத்தை இறைவன் தலையின் மீதே போட்டு உடைத்தான். அதன் பயனாகவே அவன் இப்போது இப்படி பிறக்க நேரிட்டது. அவனுக்கும் தரிசனம் தர வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. இதோ லட்சுமணருடன் தானீஷாவிடம் செல்கிறேன்” என்றார் ராமர்.
ஹைதராபாத்தில் நடுநிசி நேரத்தில் தானீஷாவின் அரண்மனைக் கதவுகள் தானே திறக்க உள்ளே நுழைந்தனர் ராமரும் லட்சுமணரும்..
நல்ல ஒரு கனவைக் கண்டு விழித்த தானீஷா தன் எதிரே வந்து நின்றவர்களை யார் யார்? என்று வியப்பு மேலிடக் கேட்டான்.
“நாங்கள் கோபண்ணாவின் வேலையாட்கள் என் பெயர் ராமன். இவன் பெயர் லட்சுமணன். இதோ அவர் கொடுத்தனுப்பிய ஆறு லட்சம் வராகனைக் கொண்டு வந்திருக்கிறோம்” என்று ராமர் கூறி தன் கையிலிருந்த மூட்டையை அவிழ்த்து நாணயங்களைக் கொட்டினார்.
கீழே கொட்டப்பட்டுக் கிடந்த தங்க நாணயங்களைப் பார்த்து பிரமித்தான் தானீஷா.
இதைப் பெற்றுக் கொண்டதற்கு ரசீதைத் தாருங்கள் என்றார் ராமர்.
அதைப் பெற்றுகொண்டு நேராக சிறையை நோக்கி லட்சுமணருடன் விரைந்தார்.
அங்கே விஷக் கிண்ணம் எதிரே இருக்க கோபண்ணா தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
ராமர் லட்சுமணனை நோக்கி, நீ உள்ளே சென்று அந்த கிண்ணத்தைக் கவிழ்த்து விடு என்று ஆணையிட்டார்.
லட்சுமணன் அனந்தனாக – பாம்பாக – மாறி உள்ளே சென்று கிண்ணத்தைக் கவிழ்க்க கோபண்ணா விழித்தார். ரசீதைப் பார்த்துத் திகைத்தார். எதிரே இருந்த ராமர் அவருக்குத் தரிசனம் தந்து அருளினார்.
நடந்ததை எல்லாம் எண்ணிப் பார்த்த தானீஷா வந்தது ராம லட்சுமணரே என்று உணர்ந்து பரிவாரங்களுடன் சிறையை நோக்கி விரைந்து வந்தான்.
அங்கே அவனுக்கும் ராமரின் தரிசனம் கிடைத்தது.
பத்ராசலம் சென்று வழிபடுக என்று ராமர் கூறி அருள, மனம் மகிழ்ந்த கோபண்ணா பத்ராசலம் நோக்கி விரைந்தார்.
அன்றிலிருந்து அவரது பெயர் பத்ராசல ராமதாஸர் என்று ஆயிற்று.
சங்கீதத்தில் வல்லவராக இருந்த அவர் ராமரின் புகழ் பாடி ஏராளமான கீர்த்தனைகளை இயற்றினார்.
மக்களிடையே ராம பக்தியைப் பரப்பினார்.
ஒரு நாள் தேர் ஒன்று வானிலிருந்து வந்து இறங்க அதில் ஏறினார் ராமதாஸர். தன் மனைவியைக் கூப்பிட அவரோ “ கொஞ்சம் வேலை இருக்கிறது, முடித்து விட்டு வருகிறேன்” என்று உள்ளிருந்தே பதிலை அளித்தார்.
தேர் வானில் பறக்கும் சமயம் , வெளியே வந்த அம்மையார் ராமதாஸரைக் காணாமல் தவித்தார்.
“நீ உன் மகனுக்குப் பணி செய்! அதற்காகவே நீ இங்கு தங்கி விட்டாய்” என்று வானிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது.
பத்ராசல ராமதாஸரின் பாடல்கள் பாரதமெங்கும் இன்றும் ஒலித்துக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவர்.
ஹைதராபாத் செல்வம் கொழிக்கும் சீமையாக விளங்குவதற்குக் காரணம் ராமர் அங்கு கொட்டிய ஆறு லட்சம் வராகன் பொன் நாணயங்களே என்று இன்றும் மக்கள் அனைவரும் பேசி வருகின்றனர்.
மஹா பக்த விஜயம் நூலில் தரப்பட்டுள்ளபடி இந்த திவ்ய சரித்திரம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
அற்புதமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து ராம நாம கீர்த்தனைகளை இயற்றி அருளிய பத்ராசல ராமதாஸரைப் போற்றுவோமாக!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART NINE
I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
The stamps posted here are MINT (not used); so more valuable.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
MAHATMA GANDHI STAMPS, DELHI MONUMENTS, TEMPLES, AMRITSAR, NATARAJA, BUDDHA LEFT AND RIGHT, AIR PLANE, INDIAN FLAG, TAJ MAHAL
–Subham—
Tags- PART 9, INDIAN STAMP PICTURES, MAHATMA GANDHI STAMPS, DELHI MONUMENTS, TEMPLES, AMRITSAR, NATARAJA, BUDDHA LEFT AND RIGHT, AIR PLANE, INDIAN FLAG,
மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.
****
வேதங்களில், மனிதர்கள் எல்லோரும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை அடிக்கடி வருகிறது . உலகில் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் இதைக் காண முடியாது. இந்தியாவில் 120 ஆண்டுகள் அல்லது அதற்குமேலாக வாழ்ந்தோரின் வாழ்க்கை வரலாற்றினையும் நாம் அறிவோம்.
பிராமணர்கள் — முன் காலத்தில் மூன்று ஜாதியினரும் செய்த — கீழ்க்கண்ட பிரார்த்தனையில் இன்னும் தெளிவாகவே உள்ளது . இதை இப்போதும் பிராமணர்கள் மதிய வேளை சந்தியாவந்தனத்தில், விரல்களின் சிறு இடுக்கு வழியாக, சூரியனைப் பார்த்துக்கொண்டு, சொல்கின்றனர் :
பஸ்யேம சரதஸ் சதம்
ஜீவேம சரதஸ் சதம்
நந்தாம சரதஸ் சதம்
மோதாம சரதஸ் சதம்
பவாம சரதஸ் சதம்
ஸ்ருணவாம சரதஸ் சதம்
ப்ரப்ரவாம சரதஸ் சதம்
அஜீதாஸ்யாம சரதஸ் சதம்
பொருள்
சூரிய தேவனே ! நூறாண்டுக் காலம் (உன்னை நாங்கள்) காண்போமாக
(அவ்வாறே) நூறாண்டுக் காலம் வாழ்வோமாக
நூறாண்டுக் காலம் உற்றார் உறவினருன் கூடிக்குலவுவோமாக
நூறாண்டுக் காலம் மகிழ்வோமாக
நூறாண்டுக் காலம் புகழுடன் விளங்குவோமாக
நூறாண்டுக் காலம் இனியதைக் கேட்போமாக
நூறாண்டுக் காலம் இனியதைப் பேசுவோமாக
நூறாண்டுக் காலம் தீமைகளால் வெல்லப்படாமல் வாழ்வோமாக!
****
எப்போது ஒருவர் நோயில்லாத வாழ்க்கையை வேண்டுகின்றாரோ அப்போதே நோய்கள் இருந்ததையும் ஒப்புக்கொள்கிறார்கள் என்று அர்த்தம் ; தினமும் சிவன் கோவில்களில் சிவனுக்கு அபிஷேகம் செய்யும்போது சொல்லும் ருத்ரம்- சமகம் மந்திரத்திலும் பேஷஜம், பிஷக் (மருந்து, மருத்துவர்) நல்ல தூக்கம், நல்ல வாழ்வு ஆகியனவற்றை வேண்டுகின்றனர்.
****
வேத கால நோய்ப் பட்டியல்
மக்டொனால் மற்றும் கீத் என்ற இரண்டு ஆங்கிலேயர்கள்
தொகுத்த ‘வேதிக் இண்டெக்ஸ்’– VEDIC INDEX BY A. A. MACDONELL AND A. B. KEITH பட்டியலில் நாற்பதுக்கும் மேலான நோய்களின் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் உள்ளன ; வயிற்றுப் போக்கு, ஜுரம், தலைவலி, க்ஷயரோகம் குஷ்டம், மஞ்சள் காமாலை, இருதய நோய்கள் , ரத்தப்போக்கு முதலியன அந்தப் பட்டியலில் காணப்படுகின்றன. ஒவ்வொன்றினையும் அவர்கள் விளக்கியபோதும் பல சந்தேகக்குறிகளும் உள்ளன. வேதங்கள் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதால் இதுதான் என்று சொல்ல முடியாது .
வேதங்கள் மருத்துவ நூல்கள் இல்லை ; அவை சமய நூல்கள். மேலும் அவை சொல்லும் வியாதி என்ன என்று சிகிச்சைக் குறிப்பிலிருந்தோ மருந்துக் குறிப்பிலிருந்தோ கூட கண்டு பிடிக்க முடிவதில்லை. க்ஷேத்திரியா KSHETRIA என்ற நோயினை அதர்வண வேதம் (AV) 2-8-5; 3-7-1 பல இடங்களில் குறிப்பிட்டாலும் அது என்ன என்று தெரியவில்லை !
யுக்மன்YUKMAN என்ற வியாதியையும் அதர்வண வேதம் குறிப்பிடுகிறது ; பிற்கால சம்ஸ்க்ருத நூல்களில் இந்த நோயினைக் காண முடியவில்லை ; ஒருவேளை ஜுரம்/ காய்ச்சல் என்ற பொதுச் சொல்லாக இருக்கலாம்
கீழ்க்கண்ட சொற்கள் என்ன வியாதியைக் குறிக்கின்றன என்று காணலாம் ,
பாமன் PAMAN- தோல் நோய்
பிரிஸ்த்யமயா PRISHYTYAMAYA – விலா எலும்பில் நோவு
பலாஷ் BALASH – டி .பி. க்ஷயரோகம், எலும்புருக்கி நோய்.
யக்ஷ்ம YAKSHMA – காய்ச்சல்
நூற்றுக்கணக்கான யக்ஷ்ம – காய்ச்சல் என்ற சொற்றோடர் யஜுர் வேத வாஜசநேயி சம்ஹிதையில் வருகிறது.
அயக்ஷ்ம AYAKSHMA = நோயற்ற வாழ்வு என்ற சொல் காடக சம்ஹிதையில் வருகிறது
இவை தவிர வயிற்று நோய் , கண் நோய் , இருமல், தலையில் நோய், இருதயத்தில் நோய் ஆகியவற்றையும் வேதம் குறிப்பிடுகிறது .
ரோகம், ஆமய என்ற நோய் பற்றிய வேத கால சொற்கள் இன்றுவரை புழக்கத்தில் உள்ளன .
முப்பது நோய்கள்
வேத காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரம், இராமாயண- மஹாபாரதம் பாணினியின் இலக்கண நூல் அஷ்டாத்யாயீ என்பனவற்றில் முப்பது நோய்கள் காணப்படுகின்றன..
மிலிந்த பன்ன என்ற புத்தமத நூல் 98 வியாதிகள் ப ற்றி ப் பேசுகிறது ; அதிலும் கூட குறிப்பான விஷயங்கள் இல்லை; ஏனெனில் அதுவும் சமய நூல்தான்.
ஆனால் புத்தர் காலத்திலிருந்து கிடைக்கும் குறிப்புகளிலிருந்தும் அதற்கு முந்தைய சரக, சுஸ்ருத சம்ஹிதைகள் மூலம் கிடைக்கும் குறிப்புகளிலிருந்தும் தெளிவான சித்திரம் கிடைக்கிறது.
****
ஆயுர்வேத நூல்களுக்கு முன்னர் காணப்பட்ட நோய்கள்,
மல மூத்திர வெளியேற்ற சிக்கல்கள் – அர்த்தசாஸ்திரம்
க்ஷய ரோகம் என்னும் காச நோய் எலும்புருக்கி நோய். – அர்த்தசாஸ்திரம்
பாலியல் நோய் — அர்த்தசாஸ்திரம்
குஷ்டம் – மஹாபாரதம்
வயிற்றுப போக்கும் – அர்த்தசாஸ்திரம் மஹாபாரதம்
ஆஸ்த்மா – மஹாபாரதம்
தோல் நோய் – மஹாபாரதம்
ஜலோதரம்/மகோதரம் – மஹாபாரதம்
வலிப்பு – மஹாபாரதம்
ராமாயணம் பொதுப்படையாக வாத ரோகம், ரக்த ரோகம் VATA ROGA, RAKTA VIKARA என்றே சொல்கிறது ; பாணினியின் 2700 ஆண்டுக்கு முந்தைய அஷ்டாத்யாயீ இலக்கண நூல் மூல நோய், இருமல், ஜுரம், குஷ்டம், ரத்தம் வயிற்றுப்போக்கு ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது .
ஆயுர்வேதத்தில் ஆயிரம் நோய்கள்
முதல் முதலில் எழுதப்பட்ட மருத்துவ நூல்களில் நீண்ட நோய்ப் பட்டியல் உளது; ஆயிரம் வியாதிகளுக்கு மேல் உள்ளன.
அந்தக் காலத்தில் பிறந்த குழந்தைகள் இறப்பது மிகவும் சர்வ சாதாரணமாக இருந்தது; இதை சரக, சுஸ்ருத சம்ஹிதையில் காணலாம். இதனால் இறந்த குழந்தைகளுக்குத் தகனமோ, இறுதிக் கிரியைகளோ தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் விளம்பின; அதே போல 15 மன நோய்களையும் — உன்மத்தம்– அவை குறிப்பிடுகின்றன.
****
உதவிய நூல் – பழங்கால இந்தியாவில் மருந்துகள் – ஆசிரியர் கன்சீவ் லோஷன் – வாரணாசி- ஆண்டு 2003.
REFERENCE- MEDICINES OF EARLY INDIA, KANJIV LOCHAN, CHAUKHAMBHA SANSKRIT BHAWAN, VARANASI, 2003
—SUBHAM—
TAGS – மன நோய்கள், ஆயுர்வேதத்தில், ஆயிரம் நோய்கள் , வேத காலம், வள்ளுவர் காலம்
13-4-25 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
பத்ராசல ராமதாஸர்! – 1
ச. நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
ராமதாஸர் என்ற பெயரில் மூன்று மகான்கள் உள்ளனர். ஒருவர் சமர்த்த ராமதாஸர்.. இன்னொரு மகான் பத்ராசல ராமதாஸர். அடுத்து சமீப காலத்தில் வாழ்ந்து மறைந்த இன்னொரு மகான் கன்ஹன்காட் ராமதாஸர் ஆவார்.
சமர்த்த ராமதாஸரைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம் இன்று பத்ராசல ராமரின் வாழ்க்கை வரலாற்றைப் பார்ப்போம்.
பத்ராசலம் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு ஊராகும்.இப்போது தெலிங்கானா மாநிலத்தில் உள்ளது. ஹைதராபாத்திலிருந்து இது 202 மைல் தூரத்தில் உள்ளது.
பத்ராசல ராமதாஸர் என்று அறியப்படும் காஞ்செர்லா கோபண்ணா 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் ராம பக்தர் ஆவார். இவரது காலம் 1620 முதல் 1688 முடிய என வரலாறு தெரிவிக்கிறது.
கோபண்ணா என்று அழைக்கப்பட்ட இவர் தெலுங்கு பிராமண குடும்பத்தில் லிங்கண்ணா மற்றும் காமாம்பா ஆகியோருக்கு மகனாக பத்ராசலம் நகருக்கு அருகில் உள்ள நெலகொண்டபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.
குதுப் ஷாஹி வம்சத்தைச் சேர்ந்த தானீஷா அப்போது ஹைதராபாத்தை ஆண்டு வந்தான். அவனது அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த மாதண்ணா மற்றும் அக்கண்ணா ஆகியோர் கோபண்ணாவின் மாமன்மார்கள் ஆவர்.
இளவயதில் கோபண்ணாவின் தாயும் தந்தையும் மறையவே அவர் ராம விக்ரஹத்திற்கு பூஜை செய்தவாறு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரைச் சந்தித்த ஒரு பெரியவர் அவரது ராம பக்தியைச் சோதிக்க எண்ணி அவர் ராம விக்ரஹம் வைத்திருந்த பெட்டியை ஒரு குளத்தில் எறிந்து விட்டார். விக்ரஹத்தைக் காணாத கோபண்ணா தவியாய்த் தவித்தார். ஏனிப்படித் தவிக்கிறாய் என்று பெரியவர் கேட்க தனது விக்ரஹம் காணாமல் போனதைக் கூறி அழுதார் கோபண்ணா. வேறு விக்ரஹம் ஒன்றை நான் தருகிறேன் என்றார் பெரியவர். ஆனால் கோபண்ணாவோ தான் வழிபடும் விக்ரஹமே தனக்கு வேண்டும் என்றார்.
உடனே அந்தப் பெரியவர் ராம நாமத்தை உச்சரித்து குளத்தில் இருந்த பேழையை வருவித்து அவரிடம் தந்தார்.
கபீர் தாஸர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மாபெரும் மகானான கபீர்தாஸர் அவர் தலை மீது தன் கையை வைத்து உபதேசமும் செய்தார்.
பின்னர் கோபண்ணாவுக்குத் திருமணம் நடந்தது. ஒரு குழந்தையும் பிறந்தது. ராமநவமி உற்சவம் நடைபெற்ற தினத்தன்று குழந்தையானது தவறி அங்கிருந்த கஞ்சித் தொட்டியில் விழுந்து மாண்டது.
அதிதிகளுக்கு சாப்பாடு போட வேண்டியிருந்த சமயம் என்பதால் குழந்தைக்கு ஏற்பட்ட விபத்தை கோபண்ணாவின் மனைவி கூறவில்லை. சாப்பாடு முடிந்தபின்னர் எங்கே குழந்தை என்று கோபண்ணா கேட்க நடந்ததைச் சொன்னாள் கோபண்ணாவின் மனைவி.
‘இதைக் கேட்ட கோபண்ணா, “ராமா! அடியாரைக் காப்பது உன் கடமை அல்லவா? இப்படி ஒரு துயரத்தைத் தரலாமா என்று கதறி அழுதார். அப்போது, “அப்பா! அம்மா! என்று மழலை மொழியில் அழைத்தவாறே குழந்தை வந்தது. அனைவரும் பிரமித்தனர்.
ராமபக்தியில் திளைத்த கோபண்ணா ராம தரிசனத்திற்காக ஏங்கினார். தன் குருவான கபீர்தாஸரிடம் ராம தரிசனம் அருளுமாறு வேண்டினார். அவரோ சற்றுப் பொறு என்றார்.
“என்னால் பொறுக்க முடியாது” என்று கோபண்ணா அடம் பிடித்தார். சரி! நாளை உச்சிப் பொழுதில் ராமர் உனக்கு தரிசனம் தருவார் என்றார் கபீர்தாஸர்.
மறு நாள் வெகு விமரிசையாக பஜனை நடந்து கொண்டிருந்தது. உச்சிப் பொழுதும் வந்தது. அப்போது ஒரு எருமையானது சகதியிலிருந்து எழுந்து வந்தது போலச் சேறுடன் பஜனைக் கூடத்தில் நுழைந்து அங்கிருந்த பூ, பழம் மற்றும் பாத்திரங்களை எல்லாம் உருட்டியது. இதனால் வெகுண்ட கோபண்ணாவும் மற்றவர்களும் அதைத் தடியால் அடித்து விரட்டினர்.
கபீர்தாஸர் முன் தோன்றிய இறைவன், “ஹே! கபீர்! உன் பக்தன் என்னை அடித்து விட்டான்” என்று கூறி தன் முதுகைக் காட்ட, கபீர்தாஸர், “இது நியாயம் இல்லை. எருமை மாடாக வருவதை அப்பாவி கோபண்ணா எப்படி அறிவார். அதை அறியத் தக்க ஞானத்தை நீங்கள் அல்லவோ அவருக்குத் தர வேண்டும்” என்றார்.
“உரிய பக்குவ நிலையை கோபண்ணா அடைந்தவுடன் நானே காட்சி தருவேன்” என்று கூறி இறைவன் மறைந்தார்.
ஹைதராபாத் மன்னனாக விளங்கிய தானீஷாவின் அரண்மனையில் உயர் பதவியில் இருந்த தனது மாமன்மார்கள் ஞாபகத்திற்கு வர கொபண்ணா நேராக மாமன்மார் வீட்டை அடைந்தார்.
அங்கே தனது ஏழ்மை நிலையை அவர் எடுத்துச் சொன்னார்.
தர்பார் கூடியிருந்த சமயத்தில் தானீஷாவிடம் கோபண்ணாவைப் பற்றி மாமன்மார் சொல்ல அவருக்கு பத்ராசலம் தாலுகாவின் தாசில்தாராகப் பதவியை அளித்தான் தானீஷா.
“ஒழுங்காக கிஸ்தியை வசூலிக்க வேண்டும்” என்று கண்டிப்புடன் கூறினான் தானீஷா.
வெறுங்காலுடன் ஹைதராபாத் சென்ற கோபண்ணா அரண்மனை மரியாதைகளுடன் பல்லக்கில் வருவதைக் கண்ட ஊர் மக்கள் வியந்தனர். தங்கள் கோபண்ணா தாசில்தாராக ஆனதை அவர்கள் வரவேற்றனர்.
வசூலிக்க வேண்டிய வரிப்பணத்தை எல்லாம் முறையாக வசூலித்து ஹைதாராபாத்திற்கு அனுப்பலானார் அவர்.
ஒரு நாள் பத்ராசலம் கோவில் சிதிலமடைந்திருந்ததைக் கண்டு வருத்தமடைந்த கோபண்ணா அதை சீர்திருத்தியதோடு பிரம்மாண்டமான ஆலயமாக புனர் நிர்மாணம் செய்தார்.
கிடைத்த வரிப்பணத்தை எல்லாம் கோவில் கட்டச் செலவழித்த கோபண்ணா அதை தானீஷாவிற்கு அனுப்பவே இல்லை.
ஒரு வருட காலமாக வரிப்பணம் வராததைக் கண்ட தானீஷா கோபண்ணாவை உடனடியாக வந்து தன்னைப் பார்க்குமாறு உத்தரவிட்டான்.
கோபண்ணா தர வேண்டிய வரிப்பணம் ஆறு லட்சம் வராகன் என்ற பெரிய தொகை என்று கேட்ட மன்னன் அதைத் தரும் வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.
சிறைவாசம் அனுபவித்தாலும் அவ்வளவு பெரிய தொகையை எப்படித் திரட்ட முடியும்?
தானீஷா இன்னும் அதிக கோபம் கொண்டு முச்சந்தியில் நிறுத்தி அவருக்குச் சவுக்கடி கொடுங்கள். அப்போதாவது பணம் வருகிறதா என்று பார்ப்போம் என்று கூறினான்.