Post No. 14,344
Date uploaded in London – 4 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருக்குறளில் ஐம்பது சதவிகித குறள்களுக்கு மேல் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் காணப்படுகின்றன. ஆகையால் யாராவது ஒருவர் தனித்தமிழ் எம்று சொன்னால் சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும் மூட்டை கட்டி வைத்துவிடலாம்.
சுமார் அறு நூறு குறளகளில் ஸம்ஸ்க்ருத்க் சொற்கள் இருப்பதை நான் ஹைலைட்டர் பேனாவைத்து வர்ணம் பூசியுள்ளேன். காமம், மனது, காலம், லோகம் போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை வள்ளுவர் தாராளமாமகப் பயன்படுத்தியுள்ளார் .
வடமொழிச் சொற்பட்டியல்
வள்ளுவர் பயன்படுத்திய வடமொழிச் சொற்கள் பட்டியலை தமிழ் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை அளிக்கிறார். அத்தோடு வள்ளுவர் பயன்படுத்தும் புதிய தமிழ் இலக்கண அமைப்புகளும் அவர் எக்காலத்தவர் என்பதை காட்டிவிடுகிறது. வள்ளுவர் 137 வட மொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு சொல்லையும் பலமுறை பயன்படுத்தும் போது இது பன்மடங்கு அதிகரிக்கும்.:
அகரம், அச்சு, அதி, அவி, அந்தம், அமிர்தம், அங்கணம், அரங்கு, அமர், அமரர், அமைச்சு, அரங்கு, அரண், அரசர், அவம்,அவலம், அவை, ஆசை, ஆகுலம், ஆசாரம், ஆதி, ஆணி, ஆயிரம், ஆயம், இசை, இந்திரன், இமை, இரா, இலக்கம்,உரு, உருவு, உலகு, உல்கு, உவமை, உறு, ஏமம், ஏர், கஃசு, கருமம், கணம், கணிச்சி, கதம்,காந்து, கலுழும், கவரி, கவுள், கழகம், களம், களன், கனம், காரிகை,கானம், காமம், காரணம், காமன், காலம், குணம், குடங்கர், குலம், குவளை, கூர், கூகை, கொக்கு, கோடி, கோட்டி, கோட்டம், சலம், சமன்,சிவிகை,சுதை,சூது,சூதர் , தகர், தண்டம், தவம், தானம், தாமரை, திண்மை, திரு, துகில், துலை,தூது, தெய்வம், தேயம், தேவர்,தொடி, தோட்டி, தோணி, தோள், நத்தம், நயம், நாகம், நாவாய், நாகரிகம், நாமம், நிச்சம், நீர், நுதுப்பேம்,பகவன், பக்கம், பகுதி, படாம், படிவத்தர், பதம், பயன், பரத்தன், பண்டம்,பளிங்கு, பள்ளி, பாக்கியம்,பாகம், பாவம்,பாவி, பூரியர்,பூசனை. புருவம், பூதம், பீழிக்கும் ,பீழை, புருவம், பூசனை, பூதங்கள் பேடி, பேய், மங்கலம், மடமை, மதலை, மயிர், மயில், மனம், மந்திரி, மணி, மதி, மா, மாடு, மாதர், மாத்திரை, மாயம், மானம், மீன், முகம், யாமம், வஞ்சம், வண்ணம்,வளை, வாணிகம், வித்தகர்
*****
கலம் தமிழ்ச் சொல்லா ?
கலம் செய் கோவே! கலம் செய் கோவே! என்ற முதல் வரிகளுடன் துவங்கும் இரண்டு பாடல்கள் புறநானூற்றில் (228, 256) உள்ளன.
சங்க இலக்கியப் பாடல்களில் மேலும் நிறைய இடங்களில் வருகிறது திருவள்ளுவரும் இச்சொல்லை பயன்படுத்தியுள்ளார் .
இதற்கு முன்னர், உலகின் மிகப்பழைய நூல் என்று பேரறிஞர்கள் ஒப்புக்கொண்ட ரிக்வேதத்தில் கலசம் என்ற சொல்பல இடங்களில் வருகிறது. கலம், கலசம், கலயம் ஆகியன ஒரே பொருளில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது மட்கலம் என்ற சொல்லையும் எல்லோரும் அறிவார்கள்; பானை, குடம் என்பதே இதன் முதல் பொருள். மேலும் ஆபரணம், கப்பல், படகு என்ற பொருளிலும் தமிழில் கையாளப்படுகிறது
ரிக்வேதத்தில் வரும் கலசம் என்பதற்கும் தமிழில் வரும் கலம் என்பதற்கும் ஒரே எழுத்துதான் வித்தியாசம்
கலசம் (ரிக் வேதம் = கலம் தமிழ் வேதம்
திருக்குறளில் கலம் வரும் இடங்கள் :
1000, 660, 60,575, 1262, 605
திருக்குறளுக்கும் ரிக்வேதத்துக்கும் உள்ள கால இடைவெளி 3500 ஆண்டுகள்!
சம்ஸ்க்ருதத்தில் ச/S ஒலியும் தமிழில் ல/L ஒலியும் சிறப்பான சப்தங்கள்; காலப்போக்கில் தமிழானது ச ஒலியை இழந்திருக்கலாம் . ச எழுத்துக்கு தொல்காப்பியர் விதித்த தடையை நாம் எல்லோரும் அறிவோம்.
என்னுடைய முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் தமிழும் சம்ஸ்கிருதமும் மட்டுமே உலகின் பழைய மொழிகள்; இரண்டும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்பதையும் காட்டியுள்ளேன். ஆகையால் கலம், கலசம் ஆகியன ஒரே மூலத்திலிருந்து வந்தும் இருக்கலாம்
ரிக் வேதத்தில் கலசம் வரும் இடங்கள் :
RV. 3-32-15; 10-32-9; 9-62-19; 9-86-11
அதர்வண வேதத்தில் கலசம் வரும் இடங்கள் :
AV.20-8-3; 19-53-3
பால் அல்லது தண்ணீர் அல்லது சோம ரசத்தை வைக்கும் பாண்டமாக ரிக் வேதம் இதைப் பயன்படுத்துகிறது ; முழுவதும் சோம ரசம் பற்றிப் பாடும் ஒன்பதாவது மண்டலத்தில் கலசம் என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது .
ஆக கலசமே கலமாகச் சுருங்கியது என்பதே என் துணிபு
ஆதாரம் இல்லாமல் நானெதையும் சொல்வதில்லை . ஒரு சில ஆங்கிலச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் எடுத்துக் கொள்வோம்
கார்களுக்குப் பெட்ரோல் போடுவோருக்கு Gallon காலன் என்ற சொல் தெரியும்; இப்போது லிட்டர் வந்துவிட்டது இது ஒரு குறிப்பிட்ட அளவு திரவம் என்பதன் அளவு ; அதாவது அப்படி ஒரு கலம் (Vessel) இருந்திருக்க வேண்டும்.
இதைவிட நேரடி ஆதாரத்தைப் பார்ப்போம்.
பாரசீகம், கிரேக்கம், லத்தீன் ஆகியன பழைய மொழிகள்; சொல்லப்போனால் தமிழுக்கும் முன்னரே இலக்கியம் படைத்த மொழிகள் அவை .
அதிலுள்ள சொல் goldan (PAARASEEKAM; Persian)
Cauldron =calidarium ‘cooking-pot’ (English)
கால்ட்ரன் , கோல்டான், காலிடேரியம் எல்லாம் பானை / பாண்டம் என்றே பொருள்படும் இவை ஆங்கில, பாரசீக, லத்தீன் மொழிச் சொற்கள் அதாவது தமிழுக்கு ஸ்நானப்ராப்தி இல்லாத சொற்கள் என்பது கால்டுவெல் கும்பலின் வாதம் !
இன்னும் ஒரு சொல் கல்லியன்; இதற்கு ஸ்பானிய மொழியில் கப்பல் என்று பொருள்; திருவள்ளுவரும் கலன்= கப்பல் என்ற பொருளில் பயன்படுத்துகிறார். ஒரு சொல் ஐரோப்பிய மொழியில் இருந்தால் அதற்கும் தமிழுக்கும் தொடர்பே இருக்க முடியாது என்பது கால்டுவெல் கும்பலின் வாதம் !
ஆனால் காலன் , கால்ட்ரன், கல்லியன் , காலிடேரியம் எல்லாம் குழிவான கப்பல் போன்ற இடத்தை, பாத்திரத்தை, பாண்டத்தைக் குறிப்பதைக் காண்கிறோம்.
ஆகவே வில்லியம் ஜோன்ஸ் போன்ற சம்ஸ்க்ருத ஆதரவுக் கும்பல், கால்டுவெல் போன்ற திராவிட மொழிக்குடும்ப ஆதரவுக் கும்பல்களின் வாதங்களை ஒதுக்கிவிட்டு தமிழ்- சம்ஸ்க்ருத மூல மொழிக் கொளகையை ஏற்றால் கலம்= கலசம் என்பது சகோதரச் சொற்கள் (Cognate Words) என்பது விளங்கும் இது எனது கொள்கை மட்டுமல்ல. சிவா ஞான முனிவர், பரஞ்சோதி முனிவர், பாரதியார் பாடல்களிலும் உள்ள உண்மை
முந்தைய ஆராய்சசிக் கட்டுரைகளில் நேவி= நாவ =படகு என்பதையும் ஸ்கிப் = ஷிப்= கப்பல் என்பதையும் கண்டுள்ளோம். ஆகவே உலகில் கப்பல் ஓட்டுதலைக் கண்டுபிடித்ததும் இந்துக்களே என்பதை இந்தச் சொற்கள் உறுதிப்படுத்துகின்றன.
Skip= ship = kappal –
Navy= naava= boat= pataku
–சுபம்—
Tags- கலம், கலசம்,திருக்குறள், சம்ஸ்கிருதத் சொற்கள், ரிக் வேதம்











































