27.அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
28.அரசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
29.நால்வர்க்கு வள்ளலார் போடும் பெரிய கும்பிடு!
30.வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்!
31.நாத்தீகர் மீது ஐந்து புலவர்கள் கடும் தாக்கு
32.ராமலிங்க சுவாமிகளின் 3 முக்கியப் பாடல்கள்
33.நான் ஏன் வடலூருக்குச் சென்றேன்?
வடலூர் வள்ளலாரின் சத்ய ஞான சபைக்கு விஜயம்
34. வள்ளலார் பொன்மொழிகள்
—subham—
அட்டையிலுள்ள ஆண்டாள் படம் , விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது; நன்றி . வடலூர் வள்ளலார் படம் லண்டன் சுவாமிநாதன் எடுத்தது.
தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
முன்னுரை
புஸ்தகத் தலைப்பைப் பார்த்தவுடன் ஆண்டாளுக்கும் அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகளுக்கும் என்ன தொடர்பு என்று பலரும் வியக்கலாம்.
திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் நமக்கு அளித்தவர் ஆண்டாள்; திருவருட்பாவை நமக்கு அருளியவர் அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள். இவ்வகையில் இருவரும் எளிய தமிழில் அருட்கவிகளை இயற்றி தமிழ் மொழியை வளப்படுத்தினர் ; இருவரும் இறைவனை மட்டுமே பாடினார்கள்; இருவரும் ஜோதியில் மறைந்தார்கள் . இருவர் பாடிய நூல்களும் நமக்கு இன்றும் ஆன்மீக வேட்கையை உண்டாக்குகின்றன.
இவர்களுக்குள் சில வேற்றுமைகளும் உண்டு; வள்ளலாருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் ஆண்டாள் ; அவர் பெருமாளைப் பாடினார். வள்ளலார் சிவ பிரானையும் சைவ தெய்வங்களான முருகனையும் பிள்ளையாரையும் பாடினார்.
இருவர் பற்றியும் நான் எழுதிய முப்பதுக்கும் மேலான ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெறுகின்றன இவை ஏற்கனவே எனது ‘பிளாக்’குகளில் வெளியான கட்டுரைகள்தான் . இருவர் பற்றியும் எவ்வளவோ நூல்கள் வெளியாகிவிட்டன . ஆயினும் புதிய நோக்கில், புதிய பாணியில் இந்தக் கட்டுரைகளை வரைந்துள்ளேன் . இதற்கு முன்னால் பலரும் எழுதிய விஷயங்களும் இணைய தளங்களும் எனது வேலைப்பளுவைக் குறைத்தன ; ஒவ்வொரு முறையும் பாடலையும் பாசுரத்தையும் மீண்டும் தட்டச்சில் அடிக்கும் தேவை ஏற்படவில்லை. அவர்களுக்கு நன்றி.
நான் நூற்று முப்பதுக்கும் மேலாக ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்களை எழுதி வெளியிட, புஸ்தக . கோ நிறுவனம் எனக்கு உதவியது; மேலும் மேலும் எழுதவும் நூலை வெளியிடவும் அது ஊற்றுணர்ச்சி தருகிறது .முந்தைய நூல்களைப் போலவே இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய நூலையும் வாசகர்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையும் உளது . ஏதேனும் கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டுமானால் எனது ஈ மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
We went to Koothanur, a famous Saraswathi temple, on 16th March 2025. It is just 22 kilometres from Mayuram in Tamil Nadu. I was told that there wont be much crowd on most of the days. But when we went there it was School Examination time. There was a big crowd and most of them were students and their parents. It was a Sunday!
I was surprised to see 50 to 100 shops in front of the temple selling pens and notebooks. On all those items one can see the beautiful Saraswathi picture. The teachers and parents along with the students ‘invade’ this place during examination time. Fifty years ago, no one would have seen any pen shop or book shop there. Modern trend is to place the pen and books and get the blessings of the Goddess of Knowledge. Students want a short cut to get good marks or just a pass, even without studying. So, they frequent the temple only when there is an examination.
Another craze is to write the examination hall ticket number on the walls of the temple . Even after temple whitewashing and cleaning, I could see the scribbling of the examination numbers on the temple wall. Now the temple authorities have put a fence around the wall with a board requesting visitors not to write anything on the wall. Writing Examination numbers on the wall, taking Selfie with the God are all modern superstitions.
****
I have been longing to see the temple for over fifty years. When I joined Dinamani newspaper as sub editor in 1971, I used to accompany Koothanur Sri Singara Subrahmanya Shastrigal who delivered Ramayana Lectures at T V S High School in Madurai. I used to take notes of his discourses and publish it in Dinamani next day. Famous transport company T V S in Madurai invited him almost every year. Shastrigal was a Vedic scholar, who mastered Rig Veda and got awards from Kanchi Shankaracharya (1894-1994). Shastrigal asked me very often to visit Koothanur temple and it happened only in 2025.
As soon as we entered the temple, the main shrine was temporarily closed for morning Puja and so we had to wait for 45 minutes. But I used that time for prayer.
****
Temple visitors must learn some lessons:
Don’t go to temples on Saturdays and Sundays Because the modern trend is that ‘gangs’ in tourist buses ‘flood’ the temple. Many of them are tourists and not real devotees. They want to spend time outside in someone’s company.
Don’t go to temples during Kartikai Ayyapan season. Many ruffians and gangsters also accompany the real devotees. They don’t follow any rules.
Find out the festival time of the temples you visit and avoid those days if you want a good Darshan.
Discourage taking selfie with gods, writing on walls to get His blessings, touching different parts of temples etc. I saw one Telugu village gang in Tirupati temple jumping and touching a god’s figure in the roof. When one stupid villager did this , all the illiterate villagers jumped like monkeys. Please don’t follow those people like goats.
All the temples have weekly or monthly special Puja days. Local people will tell you about them . Normally there is not much crowd in Parikkal Narasimha Swamy temple on week days. When we went there there was a long queue because it was a Swati Star day, which is special puja day for Sri Lakshmi Narasimha.
Modern trend in Tamil Nadu is to travel in coaches to various places during holiday season (Summer Vacation, Christmas vacation etc). One must take this into account before planning any temple visit.
Koothanur temple idol is very beautiful; so don’t miss any opportunity that comes to you.
—Subham—
Tags– Modern Trends in Hinduism; Koothanur Saraswathi Temple Visit!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சென்னைப் பு ற நகரப் பகுதியான நங்க நல்லூரில் உள்ள ஆஞ்சனேயர் கோவில் மிகவும் பிரபலமான கோவில் ஆகும்..
இப்போது அந்த வட்டாரத்தில் ராஜ ராஜேஸ்வரி கோவில், பெருமாள் கோவில், குருவாயூரப்பன் கோவில் ஆகியனவும் பக்தர்களை ஈர்த்து வருகின்றன .
நாங்கள் 2025 மார்ச் 18-ஆம் தேதி அனுமார் கோவிலுக்கும் ராஜேஸ்வரி கோவிலுக்கும் சென்றோம்.
ஊரின் பெயரைச் சொன்னவுடன் ஆஞ்சனேயர் தோற்றம்தான் மனக் கண்களில் தோன்றும். இங்கு 32 அடிக்கு பிரம்மாண்டமாக உள்ள கம்பீரமான ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் கோவிலால் இவ்வூர் மிகவும் புகழடைந்தது.
சோழர்காலத்தில் இவ்வூர் தன்மீச்சுரம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சோழர்காலத்திய தர்மலிங்கேசுவரர் (தன்மீச்வரர்) என்ற சிவன் கோவிலும், பல்லவர் காலத்திய லட்சுமி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் கோவிலும் இவ்வூரின் பழமைக்கு சான்று பகர்கின்றன.
இவை தவிர உத்திர குருவாயூரப்பன் கோவில், ஐயப்பன் கோவில், இராஜராஜேசுவரி கோவில், இராகவேந்திர கோவில் சத்ய நாராயணன் கோவில், தேவி கருமாரியம்மன் கோவில், முத்து மாரியம்மன் கோவில் ஏழூரம்மன் கோவில், ஹயவதன பெருமாள் கோவில், அர்த்த நாரீசுவரர் கோவில், லட்சுமி நாராயணன் கோவில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில், ஸர்வ மங்கள நரசிம்மர் கோவில், சித்தி விநாயகர் கோவில் உட்பட பல கோவில்கள்
இருக்கின்றன . காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால், இவ்வூருக்கு நங்கைநல்லூர் (திருமகள் வாழும் ஊர்) எனப் பெயரிடப்பட்டது .
ஆஞ்சனேயரை ரோட்டிலிருந்தே தரிசிக்கலாம். போகும் வரும் பக்தர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை நிறுத்தி ஒரு கும்பிடு போடுகினறனர். நாங்கள் வாங்கிச் சென்ற துளசி மாலையை கர்ப்பக்கிரகத்தில் சார்த்தாமல் பிரகாராத்தில் உள்ள அனுமார் படத்துக்குப் போடச் சொன்னார் பட்டர். ஏன் என்று புரியவில்லை.
இப்போதெல்லாம் பகதர்கள் கூட்டம் பெருகிவிட்டதால் இந்த நடைமுறையைப் பின்பற்றுகின்றனர் போலும் ; வடக்கில் நாங்கள் திரயம்பகேஸ்வரர் கோவிலுக்குச் சென்ற போதும் சந்நிதிக்குள் நுழையும் போதே பூக்களை வாங்கி வைத்துக்கொண்டார்கள் எல்லாப் பூக்களையும் போட்டால் சாமி மறைந்துவிடுவார்! இதற்கு மாற்றுவழி காண்பது நல்லது.
கேரளத்திலுள்ள குருவாயூர்க் கோவிலைப் போலவே நங்க நல்லூர் கோவிலும் இருப்பதாக , அங்கு சென்றவர்கள் சொன்னார்கள்.
Sri Lakshmi Sathyanarayana Perumal Temple, Next to Rajarajeswari Temple
Sri Rajarajeswari Temple, Nanganallur
Nanganallur Anjaneya Temple
ராஜ ராஜேச்வரி கோவில்
இது ஒரு குறுகிய சந்தில் உளது ஆண்கள் மேல்ச் சட்டையைக் கழற்றிவிட்டே செல்லலாம். பதினெட்டாம் படி போல படிகளில் ஏறி நல்ல லட்சணமான ராஜேஸ்வரியைத் தரிசிக்கலாம் பிரகாரத்தை வலம் வந்த பின்னர் அதே படிகளில் இறங்கி வெளியேறவேண்டும்.
அருகிலுள்ள சந்நிதியில் திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் பூஜித்த சிவலிங்கமும் , அவருடைய தண்டமும் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோவிலில் பிற சந்நிதிகளும் இருக்கின்றன. சிறிய கோவில் ஆனாலும் சுவற்றில் அழகான படங்கள் மாட்டப்பட்டுள்ளன.
பெரும்பாலான கோவில்கள் புதிதாகத் தோன்றியவை; ஆயினும் பக்தர்களின் கூட்டத்துக்குக் குறைவில்லை .
—SUBHAM—
TAGS- சென்னை ,நங்கநல்லூர் ,கோவில்கள் , ராஜராஜேஸ்வரி, ஆஞ்சனேயர்
சாயி–கியாட்ரி என்பது என்ன? ஒரு சைக்கியாட்ரிஸ்டின் அனுபவமும் விளக்கமும்!
ச.நாகராஜன்
உலகப் பெரும் சைக்கியாட்ரிஸ்ட் நிபுணர் சாமுவேல் ஹெச். சாண்ட்விச் (SAMUEL H. SANDWEISS) ஆவார்.
அவர் தனது உளவியல் அனுபவங்களுடனும் மெத்தப் படித்தப் படிப்புடனும் புட்டப்பர்த்தியில் இருந்த ஶ்ரீ சத்யசாயி பாபாவை அணுகினார்.
ஆனால், என்ன ஆச்சரியம்! பாபாவிடம் அவர் ஒரு புது வித சைக்கியாட்ரியைக் கண்டார்.
பல்வேறு செய்திகளை அவர் சேகரித்தார். பல வித அனுபவங்களை அவர் பெற்றார். அவற்றையெல்லாம் தொகுத்து “சாயிபாபா தி ஹோலி மேன்… அண்ட் தி சைக்கியாட்ரிஸ்ட்” – (SAIBABA THE HOLY MAN… AND THE PSYCHIARRIST) என்ற புத்தகத்தை எழுதினார்.
கல்லுக்குள் இருக்கும் கடவுள்!
ஹோவர்ட் மர்பெட் எழுதிய சாயிபாபா – மேன் ஆஃப் மிராகிள்ஸ் என்ற நூலிலிருந்து கீழ்க்கண்ட ஒரு சம்பவத்தைத் தருகிறார் சாண்ட்விச்.
டாக்டர் ஒய்.ஜே. ராவ் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் ஜியாலஜி பிரிவின் தலைவராகப் பணியாற்றுபவர்.
அவர் பாபாவை ஒரு சமயம் புட்டபர்த்தி சென்று தரிசித்தார்.
பாபா அங்கிருந்த ஒரு உடைந்த பாறாங்கல் துண்டு ஒன்றை கையில் எடுத்தார். அதை ராவின் கையில் கொடுத்த பாபா, “இதில் என்ன இருக்கிறது? என்று கேட்டார்.
ராவ் தான் நிலவியல் நிபுணராயிற்றே! அந்தப் பாறாங்கல்லில் இருந்த கனிம தாதுக்களை எல்லாம் விவரித்தார்.
பாபா, “அதை நான் கேட்கவில்லை. இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசியுங்கள்” என்றார்.
ராவ் சற்று யோசித்து விட்டு, “மாலிக்யூல், அணுக்கள், எலக்ட்ரான், புரோடான்” என்றார்.
பாபா, “இன்னும் ஆழமாக….” என்றார்.
ராவ், “எனக்குத் தெரியாது ஸ்வாமி” என்றார்.
பாபா ராவின் கையில் இருந்த அந்தத் துண்டுக் கல்லை வாங்கினார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாயால் ஒரு ஊது ஊதினார். என்ன ஆச்சரியம். ஒழுங்கற்ற வடிவமத்தில் இருந்த கல் இப்போது கிருஷ்ணரின் சிலையாக மாறி இருந்தது!
நிலவியல் நிபுணர் அந்தக் கல்லின் நிறம் மாறி இருந்ததையும் அதன் தாதுக்கள் மாறி இருந்ததையும் நுட்பமாகக் கவனித்தார்; பிரமித்தார்!
பாபா: “பார்த்தீர்களா? உங்களது அணு,த்திரள், அணுக்கள் ஆகியவற்றை எல்லாம் கடந்து உள்ளே கடவுள் இருக்கிறார். கடவுள் இனிப்பானவர். ஆனந்தம் தருபவர். இதை உடைத்துப் பாருங்கள்; இதன் ருசியைப் பாருங்கள்!
திகைத்துப் போன ராவ் கிருஷ்ணரின் பாதத்தில் இருந்த ஒரு துணுக்கை எடுத்து வாயில் போட்டார். அது இனித்தது!
“இதிலிருந்து சொல்லுக்கும் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட ஒரு பெரிய உண்மையை நான் கண்டு கொண்டேன்.,. நவீன அறிவியல் முதல் வார்த்தையைத் தான் தருகிறது. ஆனால் ஆன்மீகப் பெரியார்களோ அதன் கடைசி வார்த்தை வரை அனைத்தையும் அறிந்தவர்கள்” என்றார் ராவ்!
ராவ் பெற்ற அனுபவங்களைப் போலவே விதவிதமான அனுபவங்களைப் புட்டபர்த்தியில் பெற்ற சாண்ட்விச் திகைத்தார்; பிரமித்தார்.
இறுதியில் அவர் கூறினார் இப்படி: “ உளவியலின் லட்சியம் மதத்தின் லட்சியம் போல இறைவனை உணர்வது தான். இதை அன்பின் மூலமாக அடைய முடியும். பாபாவினுடனான எனது அனுபவங்களை நினைத்துப் பார்க்கும் போது இவரது அறிவியலை “சாயி-கியாட்ரி” (Sai-chiatry) என்றே சொல்வேன்.
ஆத்மாவைப் பற்றிய – பிரக்ஞையைப் பற்றிய இதை அன்பின் சாயிகியாட்ரி (Sai-chiatry of Love ) என்றே சொல்வேன்.
அறிவியலுக்கும் அப்பாற்பட்டது தான் சாயிகியாட்ரி!
இதை உலகின் பெரும் சைக்கியாட்ரி நிபுணர் அனுபவித்துக் கூறிய போது பக்தர்கள் அனைவரும் ஆனந்தம் அடைந்தனர்!
OUT OF THEM TWO ARE OUT OF PRINT. OTHER 137 BOOKS ARE AVAILABLE FROM PUSTAKA.CO.IN.
HERE IS MY TAMIL BOOK ON AUSTRALIA
அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா- book title
பொருளடக்கம்
1.ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!
2.ஆஸ்திரேலியாவின் வினோத விலங்குகள்
3.மருந்து மரங்கள்
4.உலக அதிசயம்: ஆஸ்திரேலிய பவளப் பாறைகள் !
5.ஆஸ்திரேலியா முழுதும் தங்கக் குவியல், ரத்தினக் குவியல்
6.ஆஸ்திரேலியாவில் அய்யர் மலை
7.ஆஸ்திரேலிய மியூஸியத்தில் அரிய ரத்தினங்கள்
8.பழங்குடி மக்களின் வினோத ஆயுதங்களும் இசைக் கருவிகளும்
ஆஸ்திரேலியப் பழங்குடி கலாசாரத்தில் ‘அக்னி’
9.ஆஸ்திரேலிய பழங்குடிகள் மொழிகளில் தமிழ்ச் சொற்கள்
10.ஆஸ்திரேலியாவில் 50 இந்துக் கோவில்கள்
நான் பார்த்த ஆஸ்திரேலியக் கோவில்கள்
11.பத்தாயிரம் கடற்கரைகள்
12. சிட்னி நகர ஆபரா ஹவுஸ்
13. கொண்டையுள்ள காக்காட்டு; சிரிக்கும் பறவை கூகாபர்ரா; கோமாளிப் பறவை!
14. பிரிஸ்பேன் நகர அதிசயங்கள்!
15.ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை, கார் விலை குறைவு !
16.பாரமேட்டா நதியில் படகு சவாரி
17.ஆஸ்திரேலிய பாலைவன அதிசயங்கள்! பத்து லட்சம் ஒட்டகங்கள்
18. டால்பின் பார்க்க நெல்சன் வளைகுடாவுக்கு எனது பயணம்
19.பத்து புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நகரங்கள்
20. டாஸ்மேனியா தீவு, அடிலெய்ட், டார்வின், பிரிஸ்பேன் நகரின் சிறப்புகள்
21.அதிசய ஆர்டீஷியன் ஊற்றுக் கிணறுகள்
22.ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் இந்துக்களா?
23.ஆஸ்திரேலிய நீல மலைக்கு (Blue Mountains) எனது பயணம்
24.ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் ! ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தமிழர்களா?
25.ஆஸ்திரேலியாவில் அழகான சிவன் கோவில்
26.சிட்னி நூலகத்துக்கு விஜயம்
27.ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் யார் ?
28.சிட்னி ஆர்ட் காலரிக்கு விஜயம்
29.ஆதிவாசி மொழிச் சொற்கள்
30.சிட்னி தாவரவியல் பூங்காவுக்கு எனது பயணம்
31.ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்!
******
அட்டைப்படத்தில் சிட்னி ஆபரா ஹவுஸ்
அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா book title
முன்னுரை
ஆஸ்திரேலியா என்னும் கண்டம் முழுதும் ஒரே நாடு ! உலகிலுள்ள பெரிய நாடுகளில் ஆறாவது இடத்தைப் பிடிப்பதோடு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் நிற்கும் நாடு; கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளிலும் பெயர் எடுத்த நாடு. உலகில் வேறும் எங்கும் இல்லாத பிராணிகளும் பறவைகளும் தாவரங்களும் நிறைந்த நாடு. அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆதிவாசிகள் குடியேறிய நாடு; பழங்குடி மக்கள் தங்களுக்காக 250 மொழிகளையும் பண்பாட்டினையும் உருவாக்கி நாற்புறமும் வசித்த பூமி.
பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டேன்; பத்து நாட்கள் தங்கியபோது சிட்னி நகரம், மற்றும் வட கோடியில் கடலில் உள்ள அதிசயமான பவளப் பாறைகள், இடையிலுள்ள பிரிஸ்பேன் நகரம் முதலியவற்றைக் கண்டேன் ; ஆனந்தம் கொண்டேன்.
இப்போது மூன்று மாதங்கள் தங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது டிசம்பர் 2024 முதல் 2025-ஆம் ஆண்டு மார்ச் வரை தங்கியதில் இந்த கண்டத்தை நன்கு ஆழமாக அறிவதற்கும் , புதிய இடங்களைக் கவருவதற்கும் வாய்ப்பு கிடைத்தது . நான் கண்ட அதிசயங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் வேட்கையால் கட்டுரைகளாக எழுதினேன்; இப்பொழுது அந்தக் கட்டுரைகள் உங்கள் கைகளில் புஸ்தகமாகமத் தவழ்கிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் பற்றியும் ஒரு புஸ்தகமே எழுதலாம். நானோ ஏழு மாநிலங்களில் இரண்டு மாநிலங்களையே கண்டேன் .ஆகையால் முழுவதையும் கண்டதாக நினைத்து விடாதீர்கள்; ஆயிரம் அதிசயங்களில் ஒரு பகுதியை மட்டும் எழுதியதாக சொல்லுவேன். இதன் மூலம் நீங்களும் ஆஸ்திரேலியாவைப் பார்க்க வரவேண்டும் என்பதே என் ஆசை. நான் முன்னர் எழுதிய 135 புஸ்தகங்களுக்கும் நீங்கள் கொடுத்துவரும் ஆதரவுக்கும் அவைகளை புஸ்தகங்களாகக் கொண்டுவந்த புஸ்தக. காம் நிறுவனத்துக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன்
மார்ச் 2025
swaminathan.santanam@gmail.com
ABOUT THE BOOK AND THE AUTHOR
Title – அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- Tamil
Published – March 2025
Subject –Travel
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 9500 articles in English and Tamil and over 135 Tamil and English Books.
Visited 16 Countries
India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece
*****
london swaminathan in pacific ocean
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆசை 2025 மார்ச் 16- ஆம் தேதி நிறைவேறியது; கூத்தனூர் மஹா சரஸ்வதி ஆலயத்தில் அவருடைய திவ்ய தரிசனம் கிடைத்தது மாயூரத்திலிருந்து 22 கிலோமீட்டரில் கூத்தனூர் இருக்கிறது
வைத்தீஸ்வரன் கோவிலில் குல தெய்வத்தை தரிசித்துவிட்டு அக்ஷர்தாம் விடுதியில் இலவச காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு காரில் சென்றோம் . ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசாரியைகள் ஆகியோரின் கூட்டம் நெருக்கித் தள்ளியது. கடவுளளைத் தரிசிக்கக் கட்டணம் கிடையாது; விசேஷ கட்டண டிக்கெட்டும் இல்லை . வரிசையில் நின்றோம் ; எங்கள் அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ தெரியவில்லை; காலை நேர பூஜைக்காகத் திரை போடாப்பட்டது முக்கால் மணிநேரம் கியூவில் நின்று குமர குருபரரின் சகல கலா வல்லி மாலையில் நினைவில் நின்ற பாடல்களை ஜபித்துக்கொண்டு பொறுமையாக நின்றோம் திரை திறந்தவுடன் வெண்ணிற ஆடையுடன் தாமரையில் வீற்றிருந்த சரஸ்வதி தேவியை வணங்கினோம்..
இந்தக் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கிறது; இந்த ஊரினைச் சேர்ந்த கூத்தனூர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்த்திரிகள் ஆண்டுதோறும் ராமாயண உபன்யாசத்துக்காக மதுரைக்கு வருவார். அவரை, புகழ்பெற்ற , டி .வி .எஸ் T V S நிறுவனம் அழைக்கும் சாத்திரிகள் மஹா வேத பண்டிதர்; எங்கள் ஆத்தில் (வீட்டில்) தங்குவார். சுவாமி அறையில் பூஜை செய்வார் ; அறை தெப்பக்குளம் ஆகிவிடும்;மாமி கோபித்துக் கொள்ளாதீர்கள் நான் ஜபம் செய்தால் இப்படி ஆகிவிடும் என்பார். ரிக்வேதத்தை முழுமையாக அத்யயனம் செய்து காஞ்சி மகா சுவாமிகளிடம் வீடு, பசு மாடு, சால்வை, தங்க க் காசு பரிசு பெற்றவர் ; ராமாயண உபன்யாசம் முழுதும் ரிக் வேத மேற்கோள்கள் வரும் அவருக்கு நான்தான் காரியதரிசி. மாலையில் டி .வி .எஸ் T V S காரர்கள் அனுப்பிய கார் வந்தவுடன் நானும் அவரும் டி .வி .எஸ் T V S நகருக்குப் பயணம் செய்து பள்ளிக்கூடம் செல்வோம்; பள்ளியின் ஹாலில் நடக்கும் உ பன்யாசத்தைக்கேட்பேன். நோட்ஸ் எடுத்து மறுநாளைக்கு மதுரை தினமணிப் பத்திரிகையில் அது அப்படியே வரும் ; இதனால் என் மீது தனிப்பட்ட அன்பு. நேரம் கிடிக்கையில் ரிக்வேத பெருமைகளை கேட்டறிவோம். வார விடுமுறைகளில் எனது தந்தை தாயாரும் வருவார்கள்; அவர் “குழந்தை ! நீ கூத்தனூருக்கு வந்து சரஸ்வதியைத் தரிசிக்க வேண்டும்” என்று சொல்லுவார் ; அப்போது முதல் இருந்த ஆசை இப்போது நிறைவேறியது!
வீட்டில் தங்கி இருக்கையிலோ அல்லது சாப்பாடு பரிமாறுகையிலோ என் தாய், தந்தையர் வேறு என்ன வேண்டும்? என்று சொல்லுங்கள் என்று கேட்டால் நீங்கள் எல்லோரும் பரம க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று பதில்கொடுப்பார் ; கூத்தனூர் கோவிலில் முக்கால் மணி நேரம் கியூவில் நிற்கையில் நான் மேலே சொன்ன விஷயங்கள் நிழல் ஆடின.
இந்து மதத்தின் புதிய வடிவங்கள் !
இப்போதெல்லாம் எல்லோருக்கும் சுருக்கு வழிப் பெருக்கல் கணக்கில் ஆசை வந்துவிட்டது அதாவது, படிக்காமலேயே பாஸ் செய்ய வேண்டும் ; உழைக்காமலேயே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சுருக்கு வழியில் மக்கள் இறங்கிவிட்டார்கள்; நாங்கள் சென்ற நாளில் பள்ளிக்கூட ஆசிரியைகளும் தங்கள் பள்ளி மாணவர்களை அழைத்து வந்திருந்தனர் ; முன்னரெல்லாம், மாணவர்கள் ஹால் டிக்கெட் எண்களைக் கோவிலில் சுவரில் எழுதி வந்தார்கள் ; அதாவது மூட நம்பிக்கை! அப்படி எழுதினால் பாஸ் ஆகலாம் அல்லது நல்ல மதிப்பெண் பெறலாம் என்ற நம்பிக்கை அத்தகைய மூடர்களின் கிறுக்கல்களை நான் படம் பிடித்தேன் இப்போது சுவரை நெருங்க முடியாதபடி தள்ளி, கம்பிகளைக் கட்டிவிட்டனர், தயவு செய்து உங்கள் எண்களை எழுதாதீர்கள் என்று எழுதியும் போட்டுள்ளனர்.
மஹா வேடிக்கை
இதைவிட மகா வேடிக்கை ! கோவிலுக்கு முன்னால், நூற்றுக் கணக்கான பேனா, நோட்டுப் புஸ்தகக் கடைகள்; அத்தனையிலும் சரஸ்வதி தேவியின் படங்கள்; அந்தப் பேனாவை வைத்து எழுதினால் படிப்பு வரும், பாஸ் மார்க் வரும் என்ற நம்பிக்கை! குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் செய்வதற்கு பெற்றோர்கள் சிறு குழந்தைகளையும் அழைத்து வருகின்றனர். கியூ வரிசையில் நின்றபோது பள்ளி மாணவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன்; ஏப்ரல் மாத முதல் வாரத்தில் பரீட்சை என்று பய பக்தியுடன் பதில் தந்தனர்!
ஒட்டக்கூத்தன் வாழ்க
இந்தத் தலத்துக்குப் பெயரை உண்டாக்கியாவர் புகழ்பெற்ற புலவர் ஒட்டக்கூத்தர் ஆவார். அவருக்கு சரஸ்வதி அருள்புரிந்த இடம் என்பதால் கூத்தனூர் என்ற பெயர் உண்டாக்கியது . அவரால் பெருமை பெற்றது இந்த ஊர்; சரஸ்வதியால் பெருமை பெற்றார் அவர் .
கற்க வேண்டிய பாடங்கள்
சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குப் போகாதே.
கோடை விடுமுறைக் காலத்தில், சுற்றுலா ஊர்களுக்குச் செல்லாதே.
ஐயப்ப பக்தர் வரும் சீஸனின் எந்த தலத்துக்கும் போகாதே ; அதில் தள்ளுமுள்ளு ரவுடிகள் அதிகம்.
ஒவ்வொரு ஊரிலும் விஷேச நாட்கள் உண்டு; ஊரை நன்கு அறிந்தவர்களிடம் விசாரித்து அந்த நாட்களில் செல்லாதே ; பரிக்கல் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர நாள் விஷேச நாள் என்பதை அறியாமல் சென்று வரிசையில் நின்றோம்.
****
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய் வாக்கும் பெருக பணித்தருள்வாய் வட நூல் கடலும் தேக்கும் செழுந்தமிழ் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று காக்கும் கருணைக் கடலே சகலகலா வல்லியே.
4. Goddess of all Learning! Ocean of Mercy! You rest on the grateful tongues (lips) of poets and preserve the sea of Sanskrit scholarship and the rich heritage of Tamil songs. May you grant that I become proficient in the deep and varied branches of Learning! May you grant me the gift of singing felicitous songs!
6. Goddess of all Learning! You pervade everything: you pervade the Vedas, the five elements, namely, ether, air, water, fire and the earth; you fill the vision and the hearts of Your devotees. Grant me this boon; make me proficient in all the arts whenever I wish. Make me proficient in music, in dance, in learning and in singing sweet poems.
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும் விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலா வல்லியே —குமரகுருபரர் அருளிய சகல கலா வல்லி மாலை
10. Goddess of all Learning! There are myriads of Gods, and celestial beings like the Creator. But is there one to equal you? Grant me this boon that all monarchs, who rule over the earth, bow unto me the moment I sing my poems.
English Translation of Sakalakalavallai malai from The Tanjore Art Gallery Guide Book, year 1954
–SUBHAM—
TAGS- கூத்தனூர் ,சரஸ்வதி கோவில் , ஒட்டக்கூத்தன், சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள், ரிக்வேதம், உபன்யாசம் , டி .வி .எஸ்., சகல கலா வல்லி மாலை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
7-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்!
காங்கோ படுகை (CONGO BASIN)
ச. நாகராஜன்
இருண்ட கண்டம் என்று ஆப்பிரிக்கா அழைக்கப்படக் காரணம் அதன் நடுப்பகுதியை பத்தொன்பதாம் நூற்றாண்டு யாத்ரீகர்கள் பார்த்து பயந்ததால் தான்!
அந்த நடுப்பகுதியில் இருந்தது உள்ளே நுழைய முடியாத அடர்ந்த காடு – அதில் உள்ளே உலவும் பயங்கரமான மிருகங்கள்! அதை விட அதி பயங்கரமானவர்கள் – மனிதர்களைத் தின்னும் காட்டுமிராண்டிகள் – அங்கு உள்ளே இருந்தார்கள்.
அதற்குள் போக யாருக்குத் தான் துணிவு வரும்?
இது தவிர பிரம்மாண்டமான காங்கோ நதியானது தனது கிளை நதிகளுடன் அங்கு பாய்ந்து கொண்டிருந்தது.
ஆனால் ஹென்றி ஸ்டான்லி (1841-1904) என்ற எதற்கும் அஞ்சாத வெள்ளைக்காரர் துணிந்து காட்டிற்குள்ளே சென்று ஆராயலானார்.
ஜோஸப் கான்ராட் (1857-1924) என்ற போலந்து தேச எழுத்தாளர் இந்த காங்கோ காடுகளின் மர்மத்தை வியந்து கொண்டாடி தனது நாவலான ‘ஹார்ட் ஆஃப் டார்க்னெஸ்’ (Heart Of Darkness) என்ற நாவலைப் படைத்தார்.
நீளமான பாம்பு போல வளைந்து வளைந்து ஓடும் இந்த காங்கோ நதியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!
ஜாம்பியாவின் வடமேற்கில் சம்பேஸி ஆறாகத் தோன்றும் இந்த நெடிய பாம்பு வடக்கே ஓடி பின் மேற்குப் பக்கமாகத் திரும்புகிறது.
2900 மைல் ஓடி உலகின் ஆறாவது பெரிய ஆறாகப் பரிமளிக்கிறது இது!
அமேஸான் நதிக்கு அடுத்தபடியாக சுமார் 14,60,000 கன அடி நீரை இது அட்லாண்டிக் மகாசமுத்திரத்தில் கொண்டு தள்ளுகிறது.
காங்கோ படுகையின் பரப்பு மட்டும் பதிமுன்று லட்சத்து முப்பத்தைந்தாயிரம் சதுர மைல் பரப்பாகும். இதில் பெரும்பகுதி ஜைரே நாட்டில் சுற்றிலும் மலைகள் சூழ இருக்கிறது.
எழுத்தாளரான ஜோஸப் கான்ராட் இதற்குள் சென்று பார்த்து விட்டு உலகில் ஆதி காலத்தில் முதன் முதலில் தோன்றிய பகுதிக்குச் செல்வது போல இருந்தது என்றார்.
பெரிய குரங்குகளளும், கொரில்லாக்களும் இங்கு ஒரு புறம் கொட்டம் அடிக்கும்: இன்னொரு புறம் இருக்கும் ஆப்பிரிக்க கிளிகள் அழகிய பட்டாம்பூச்சிகள் இன்னும் இன்ன பிற அழகிய பறவைகளின் கூட்டத்தை வர்ணிக்கவே முடியாது; அப்படி ஒரு அழகு!
சூரிய ஒளி புக முடியாதபடி அடர்ந்திருக்கும் மரங்களின் கீழே பிரம்மாண்டமான கட்டு விரியன்களும் ராஜ நாகங்ளும் நெளிந்து கொண்டிருக்கின்றன!
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் இங்குள்ள மூன்று விஷேசமான மிருகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஒகாபி என்று ஒரு அதிசய மிருகம் அங்கு இருந்தது. அடுத்து அட்டி என்று அழைக்கப்பட்ட ஒரு கழுதை, இலைகளை மட்டும் தின்று வாழ்வது ஒரு அதிசயம்! மூன்றாவது, குதிரை போன்று இருக்கும் ஒரு வரிக்குதிரை இரவில் மட்டும் உலவுவது கண்டுபிடிக்கப்பட்டது.
1899ம் ஆண்டு உகாண்டாவில் இருந்த பிரிட்டிஷ் கவர்னரான சர் ஹென்றி ஜான்ஸன் என்பவர் ஒகாபியைப் பற்றி நன்கு ஆராய்ந்து அது ஒருவிதமான ஒட்டகசிவிங்கி என்பதைக் கண்டுபிடித்தார்.
காங்கோவில் உள்ள மயில் உலகில் வேறெங்கும் காண முடியாத ஒரு மயில் வகையாகும். ஆனால் இதைக் காண்பது மிக மிக அரிய விஷயமாகும்.
ஆப்பிரிக்க மழைக்காடுகளோ ஆறு அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு விதமான தாவர வகைகள் உண்டு.
இந்த மழைக்காடுகள் ஆப்பிரிக்காவின் வடபகுதியில் உள்ள ஜைரே நாட்டில் உள்ளன.
உலகின் அதிசய இடங்களில் முக்கியமான ஒரு இடம் இந்த காங்கோ தான்!
இருண்ட கண்டத்தின் இதயமான காடு என்று காங்கோ படுகை அழைக்கப்படுவது சரிதானே!