Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-21;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,728)

Written by London Swaminathan

Post No. 15,728

Date uploaded in London –12 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சீர்காழி தாடாளப் பெருமாள் கோவில்

மூலவர் – த்ரிவிக்ரமன், தாடாளன், உலகளந்த திருவுருவம், நின்ற திருக்கோலம், கிழக்கே ஸகல வசதிகளும் உண்டு.

உத்ஸவர் – த்ரிவிக்ரம நாராயணன்.

தாயார் – மூலவர் – லோகநாயகி. உத்ஸவர் – மட்டவிழ்குழலி.

தீர்த்தம் – சங்கபுஷ்கரிணி, சக்ரதீர்த்தம்.

விமானம் – புஷ்கலாவர்த்த விமானம்.

ப்ரதயக்ஷம் – அஷ்டகோண மஹர்ஷி.

விசேஷங்கள் – பெருமாள் இடதுகாலைத் தூக்கி விண்ணை அளக்கிறார். இவ்வூரில் திருமங்கையாழ்வார் திருஞானஸம்பந்தரை வாதில் வென்று அவருடைய வெற்றி வேலைப் பரிசு பெற்றதுடன் “கடியுண்டநெடுவாளை” என்ற ஓர் அழகிய பாடலாலும் புகழப் பெற்றார். நாலுகவிப் பெருமாள் என்ற விருதையும் பெற்றார் என்று ஒரு செய்தி உள்ளது . ஆனால் இருவர் வாழ்ந்த காலமும் வெவ்வேறு என்பதால் சைவர்கள் இந்தக் கதையை மறுக்கின்றனர்  

செல்வ தெய்வநாயகன் ஸந்நிதியும் இங்கே உள்ளது.

சீர்காழியிலுள்ள தாடாளப் பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதை காழிச்சீராம விண்ணகரம் என்று கூறுவர். ‘தாள்’ என்றால் ‘பூமி அல்லது உலகம்’, ‘ஆளன்’ என்றால் ‘அளந்தவன்’ என்று பொருள். தன் திருவடியால் பெருமாள் மூன்று உலகங்களையும் அளந்தவர் என்பதால் இவருக்கு ஆண்டாள் இவருக்கு “தாளாளன்’ என்ற பெயரை சூட்டினாள். பின்னாளில் அப்பெயர் தாடாளன் என்று மருவி விட்டது.

ஒருசமயம் கோயில் இருந்த இடம் பாழ் பட்டுப்போனது. அப்போது கோவிலில் இருந்த உற்சவ பெருமாள் விக்ரகத்தை, ஒரு மூதாட்டி தவிட்டுப்பானையில் வைத்து பாதுகாத்து வந்தார். எனவே இப்பெருமாளுக்கு தவிட்டுப்பானைத் தாடாளன் என்ற பெயர் ஏற்பட்டது. திருமங்கையாழ்வார் அம்மூதாட்டியிடம் இருந்து உற்சவ பெருமாள் விக்ரகத்தை பெற்று, மீண்டும் கோவிலில் சேர்த்தார்.

மூலவர் பெருமாள் பூமியில் ஊன்றிய வலது பாதத்துக்கு முன்னே நிற்கின்றார். அதனால் மூலவர் பெருமாளின் வலது பாதத்தை நாம் தரிசிக்க முடியாது. வைகுண்ட ஏகாதசியன்று  மட்டும், உற்சவரை அவருடைய இடத்திலிருந்து நகர்த்தி வைப்பார்கள். அன்றைய தினம் மட்டுமே, நாம் மூலவரின் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். இந்த தரிசனம் கண்டவர்களுக்கு மறுபிறவி கிடையாதென்பது ஐதீகம்.

உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி, வாஸ்து பூஜை செய்யும் முன்பு சுவாமியிடம் தங்களது நிலத்தின் மணலை வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் நிலம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

ப்ருஹ்மாவுக்கு தன் ஆயுளைப்பற்றி கர்வம் ஏற்பட்ட பொழுது, ரோமசமுனிவர் “உன் ஆயுசும் என் ஒரு ரோமமும்” ஸமம் என்று சொல்லி அவர் கர்வத்தை அடக்கின ஸ்தலம்.

இங்கு விஷ்ணு திரிவிக்கிரம பெருமாளக காட்சியளிக்கிறார். வாமன அவதாரத்தில், வாமனன் மன்னன் மகாபலியிடம் மூன்றடி நிலத்தைக் கேட்டார், பின்னர் அவனது அளவை அதிகரித்து, ஒரு படியால் வானத்தையும், இரண்டாவது படியால் பூமியையும் மூடினான். இந்தக் கோவிலில், விஷ்ணு தனது இடது காலை உயர்த்திக் காட்டுகிறார் –

***

விஷ்ணு நகரம் அல்லது நித்திய இடத்தைக் குறிக்கும் ஆறு இடங்கள் விண்ணகரம் என்று அழைக்கப்படுகின்றன. அவை: திருவிண்ணகரம் (ஒப்பிலியப்பன் கோயில்), நந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்), அரிமேய விண்ணகரம் (நாங்கூரில் உள்ள குடமாடு கூத்தன் கோயில்), வைகுண்ட விண்ணகரம் (நாங்கூரில் உள்ள வைகுண்டநாதர் கோயில்) பரமேஸ்வர விண்ணகரம் (காஞ்சிபுரம்).

***

இக்கோயிலில் கோதண்டராமருக்கு தனி சன்னதி உள்ளது.

திருக்காழிச்சீராம விண்ணகரம், சீர்காழி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரை மைல் தூரத்திலுள்ளது. பஸ்ஸில் சென்றால் கோயில் ஸந்நிதி வாசலிலேயே இறங்கலாம்.

மங்களா சாஸனம் -திருமங்கையாழ்வார் – 1178-1187 – 10 பாசுரங்கள்.

***

திவ்யதேச பாசுரங்கள்

1178.  

ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி*  உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி*

ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த*  தாடாளன் தாள் அணைவீர்*

தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்*  அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்*

தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்*  சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. (2)

1179.  

நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை*  நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி*

நக்கன் ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை*  ஒளி மலர்ச் சேவடி அணைவீர்*

உழு சே ஓடச் சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்*  தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க*

எங்கும் தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

1180.  

வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்*  மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து*

நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்*  நேர்த்தவன் தாள் அணைகிற்பீர்*

நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்*  மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்*

செய் அணைந்து களை களையாது ஏறும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

1181.  

பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து*  முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்*

நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட*  நின்மலன் தாள் அணைகிற்பீர்*

நீலம் மாலைத் தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே*  தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்*

செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

1182.  

தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு*  திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து*

வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்*

விகிர்த மாதர் அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட*  அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்*

செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.  

1183.  

பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள*  படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை*

வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்*

வெற்புப்பாலும துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்*  துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்*

திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

1184.  

பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்*  புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த*

செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்*  திருவடி சேர்ந்து உய்கிற்பீர்*

திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி*  வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி*

தெருவில் வலம்புரி தரளம் ஈனும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.        

1185.  

பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்*  பணை நெடுந் தோள் பிணை நெடுங்கண் பால்ஆம் இன்சொல்*

மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்*  மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்*

அணில்கள் தாவ நெட்டு இலைய கருங் கமுகின் செங்காய்வீழ*  நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு*

பீனத்தெட்டபழம் சிதைந்து மதுச் சொரியும்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின் நீரே.

1186.  

பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து*  பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து*

கறைதங்கு வேல்தடங்கண் திருவைமார்பில்*  கலந்தவன் தாள்அணைகிற்பீர்*

கழுநீர்கூடி துறைதங்கு கமலத்துத்துயின்று*  கைதைத் தோடுஆரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி*

சிறைவண்டு களிபாடும் வயல்சூழ்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின்நீரே.   

1187.  

செங்கமலத்து அயன்அனைய மறையோர்*  காழிச் சீராமவிண்ணகர் என்செஙகண்மாலை*

அம்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்*  அருள்மாரி அரட்டுஅமுக்கி அடையார்சீயம்*

கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்*  கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன*

சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2)

***

திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்

திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவையாறு அருகே உள்ள ஒரு பழைமையான வைணவத் தலம். இது 108 திவ்ய தேசங்களில் 7-வது தலமாகவும், சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தொடர்புடைய சிறப்பான தலமாகவும் விளங்குகிறது.

:தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும், திருவையாறிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் குடமுருட்டி மற்றும் வெண்ணாறு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.

வேறு பெயர்கள் கண்டன ஷேத்ரம், பஞ்சகமல ஷேத்ரம்

***

மூலவர்: ஹர சாப விமோசன பெருமாள் (நின்ற கோலம்).

தாயார்: கமலவல்லி நாச்சியார்.

சிவன், பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெருமாளை வணங்கிய தலம். எனவே, இத்தலம் ‘கண்டன க்ஷேத்ரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.மூர்த்திகள்: இங்கு மும்மூர்த்திகளான சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருப்பது சிறப்பாகும்.

தீர்த்தம்: கபால மோட்ச புஷ்கரணி.

திருக்குளம் / ஆறு    கபால மோட்ச புஷ்கரிணி, ஹத்யா விமோசன தீர்த்தம், பத்ம தீர்த்தம் (பலி தீர்த்தம்)

ஆகமம்   வைகானச ஆகமம்

வழிபாடு  நான்கு கால பூசை

திருவிழாக்கள்  பங்குனியில் பிரம்மோற்சவம், ஐப்பசியில் பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை தீபம்

சிற்பங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றச் செய்யும் வரப்பிரசாத வடிவமான, ஸ்ரீ லட்சுமி நரசிம்மன், ஸ்ரீ மகா சுதர்சனன், சிலைகள் .

தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது.

சிவன் தனது கையில் ஒட்டிக்கொண்ட பிரம்ம கபாலம் நீங்கியதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும்முகமாக தானும் இவ்விடத்தே கோவில் கொண்டார். எனவே இது ஒரு மும்மூர்த்திதலம். தற்போது இங்குள்ள பிரம்மாவின் கோவில் மூடப்பட்டு பிரம்மா மற்றும் ஸரஸ்வதி சிலைகள் சிவபெருமானின் தலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கினி என்ற நூலை எழுதிய ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்னும் மஹான் கண்டியூருக்கு அருகில் உள்ள திருப்பூந்துருத்தியைச் சார்ந்தவர். கண்டியூர் பெருமான் மீது அளவு கடந்த பக்தி பூண்டவர்.

திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம். ஒரே ஒரு பாடலில் இத்தலத்துப் பெருமை பற்றிக் கூறுகிறார். இத்தலத்தோடு சேர்ந்து ஸ்ரீரங்கம், கச்சி (காஞ்சி) பேர் (திருப்பேர் நகர் என்னும் கோயிலடி) மல்லை என்னும் திருக்கடன்மல்லை என்னும் நான்கு ஸ்தலங்களையுஞ் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார்.

. மைசூர் மன்னன் திப்புசுல்தான் ஒரு சமயம் இக்கோவிலின் முகப்பில் நின்று சண்டையிட வேண்டிய சந்தர்ப்பம் உண்டாக அப்போது இப்பெருமான் திப்புசுல்தானை ஆட்கொண்டார் எனவும். இப்பெருமான் மீது பக்திகொண்ட திப்பு, கோவிலை வலம் வந்து போர் முடித்து வென்றார் என்பதும் கர்ண பரம்பரையான பழங்கால வாய்வழிக் கதையாகும்.

***

 

திருக்கண்டியூர்   பாசுரங்கள்

பிண்டியார் மண்டை ஏந்திப் * பிறர்மனை திரிதந்துண்ணும்-

உண்டியான்* சாபம் தீர்த்த ஒருவனூர்,* உலக மேத்தும்-

கண்டியூர் அரங்கம் மெய்யம் * கச்சிபேர் மல்லை என்று-

மண்டினார்,* உய்யல் அல்லால் * மற்றையார்க்கு உய்யலாமே? (2)

***

திருவையாறில் அமைந்துள்ள (தேவாரத்தில்) பாடப் பெற்ற பஞ்சனாதீஸ்வரர் ஆலயத்தின் சப்தஸ்தானங்களில் ஒன்றாகவும் திருக்கண்டியூர் போற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெருமாள் கோயிலுக்கு அருகிலேயே திருக்கண்டியூர் வீரட்ட சிவாலயம், சைவ-வைணவ ஓற்றுமைக்கு சான்றாக அமைந்துள்ளது ! சிவாலயத்தில் பிரம்மனுக்கும், சரஸ்வதி தேவிக்கும் சன்னிதிகள் உள்ளன.

***

திருக்கண்டியூருக்கு அருகே கல்யாணபுரம் என்ற பசுமையான கிராமத்தில் கல்யாண வேங்கடசுவரர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னனின் துணைவியின் (பெயர்: கல்யாணி) நினைவாகவே கல்யாணபுரம் என்ற பெயரை இக்கிராமம் பெற்றது என்று கூறப்படுகிறது.

வருடம் முழுதும், இக்கோயிலில் விழாக்களும், உத்சவங்களும் நடைபெறுகின்றன. சித்திரையில் வசந்த உத்சவமும், அட்சய திருதியையும், வைகாசியில் விசாக உத்சவமும், நவராத்திரியும், தீபாவளியும், கார்த்திகையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்கு தினமும் கருடசேவை நடைபெறுகிறது!

To be continued……………………………….

Tags- சீர்காழி , திருக்கண்டியூர், ஹர சாப விமோசன பெருமாள் கோயில், தாடாளப் பெருமாள் கோவில், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-21, திவ்யதேசம், லண்டன் சுவாமிநாதன் படங்கள்

ஶ்ரீ தத்தோபந்த் தெங்கடி – பல்துறை கண்ட வித்தகர் (Post.15,727)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,727

Date uploaded in London – 12 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

சப்தரிஷிகள் வரிசையில் நான்காவது ரிஷி! 

ஶ்ரீ தத்தோபந்த் தெங்கடி – பல்துறை கண்ட வித்தகர் – சப்தரிஷிகளின் வரிசையில் நான்காவது ரிஷி! 

ச. நாகராஜன்          

இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்!

 அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.

 இந்தச் சங்கத்தில் வாழ்நாள் முழுவதும் பிரசாரக்காக இருந்து அரும் பணி ஆற்றியவர் ஶ்ரீ தத்தோபந்த் தெங்கடி. 1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி ஆர் எஸ் எஸ்ஸின் பிரசாரகராக ஆகி திருமணம் செய்யாமலேயே தன் வாழ்க்கையை சங்கப் பணிக்கு அர்ப்பணித்தார் அவர்.

 மஹாராஷ்டிர மாநிலத்தில் விதர்பா பகுதியில் வர்தா மாவட்டத்திலுள்ள ஆர்வீ நகரில் 1920ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் நாளன்று பாபுராவ் தாஜீபா தெங்கடி என்பவருக்கும் ஜானகீ பாயி அம்மையாருக்கும் தத்தோபந்த் தெங்கடி பிறந்தார்.

  இள,மையிலேயே சுறுசுறுப்பாகவும் தேசபக்தியுடனும் திகழ்ந்த தெங்கடி மிக இளம் வயதிலேயே வானர சேனை என்று ஒரு சேனையை அமைத்தார்.

படிப்பில் சூரராகத் திகழ்ந்த இவர் நாக்பூர் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்ந்து சட்டம் (எல் எல் பி) மற்றும் முதுகலை (எம்.ஏ) பட்டங்களைப் பெற்றார். 

குருஜி கோல்வல்கரின் தொடர்பில் வந்த அவர் ஏராளமான இயக்கங்களை நிறுவினார். பாரதிய மஸ்தூர் சங் (1955ல் நிறுவப்பட்டது), பாரதிய கிஸான் சங் (1979ல் நிறுவப்பட்டது), ஸ்வதேசி ஜாகரன் மஞ்ச் உள்ளிட்ட பல இயக்கங்களை ஆரம்பித்தார். அத்துடன் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின்  இணை நிறுவனராகவும் திகழ்ந்தார்.

தெங்கடி பாரதிய ஜனசங்கத்தின் சார்பில்  இரு முறை ராஜ்ய சபை உறுப்பினராகத் திகழ்ந்தார்.

 தொழிலாளர் மேம்பாடு, மாணவர் மேம்பாடு என பல துறைகளிலும் அவர் ஆற்றிய பணியைப் பார்த்து நாடே வியந்தது.

பிரதமர் வாஜ்பாயி அவர்களின் ஆட்சிக் காலத்தில் 2003ம் ஆண்டில் அவருக்கு பத்மபூஷன் விருது அளிக்க மத்திய அரசு முன்வந்தபோது அதைப் பெற அவர் மறுத்து விட்டார். 

சிறந்த சிந்தனையாளராகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்த அவர் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் முன்னுரைகளை எழுதியுள்ளார்.

 சங்கேத ரேகா மற்றும் தேர்ட் வே என்ற அவரது புத்தகங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் புத்தகங்களாயின.

கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருடனும் அன்புடன் பழகி வந்த அவரை அனைவரும் மதித்துப் போற்றினர்.

தனது வாழ்நாளில் ரஷியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 35 நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார்.

1989ம் ஆண்டிற்குள் பொதுவுடமை வாதம் ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று அவர் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் கணித்து கூறியபடியே கம்யூனிஸம் ஒரு முடிவுக்கு வந்தது.

 நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட போது தலைமறைவாகி இயக்கத்தைத் திறம்பட வழிகாட்டி அவர் நடத்தினார்.

தொழிலாளர்களுக்குச் சட்டப்படியான போனஸ் வழங்கப்படவேண்டும் என்று குரலெழுப்பி அதற்காகப் போராடி வெற்றி பெற்றார் அவர்.

அவரது வாழ்க்கையில் ஏராளமான அதிசயிக்கவைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 1989ம் ஆண்டு தமிழகத்தில் பயணம் மேற்கொண்ட அவர் காஞ்சி மஹாபெரியவரை சந்திக்கச் சென்றார். அப்போது மௌனவிரதம் மேற்கொண்டு யாருடனும் பேசாமல் இருந்த பெரியவாள் இவருடன் மட்டும் பேசியதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

ஶ்ரீ தெங்கடி அவர்கள் 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதியன்று புனேயில் காலமானார். 

இந்த நூலைப் படிப்போர் ஶ்ரீ தத்தோபந்த் தெங்கடி அவர்களின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை.

நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார். 

சப்தரிஷிகளில் முதல் நான்கு ரிஷிகளின் வரலாற்றைப் படித்தோர் அடுத்த மூன்று ரிஷிகளைப் பற்றியும் படிக்க முனைப்புடன் முயல்வர் என்பதில் ஐயமில்லை.

 விஜயபாரதம்  பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 64 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதில் ஏராளமான படங்கள் ஆர்ட் பேப்பரில் அச்சாகி இருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும். 

நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:

விஜயபாரதம் பிரஸ்

12. எம்.வி.நாயுடு தெரு

சேத்துப்பட்டு, சென்னை – 31

விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466

www.vijayabharathambooks.com

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 62; இந்து மத கலைச்சொல் அகராதி-62 (PostNo.15,726)

Written by London Swaminathan

Post No. 15,726

Date uploaded in London –11 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version was posted yesterday.

மங்களாசாசனம்

தமிழ்நாட்டில் ஆழ்வார்களால் பாடப்பட்ட விஷ்ணு/ பெருமாள் கோவில்களை   மங்களாசாசனம் செய்யப்பட திருத்தலங்கள் என்று அழைப்பார்கள் . இந்த ஆழ்வாரால் அல்லது ஆழ்வார்களால் என்று பெயர் சொல்லி இந்தச் சொல்லை பயன்படுத்துவார்கள்; ஆழ்வார்கள் பாடல்கள் அனைத்தும் திவ்யப்பிரபந்தத்தில் உள்ளது அவர்கள்  பாடிப்பரவிய தலங்களை 108 திவ்ய தேசங்கள் என்று பட்டியலிட்டுள்ளனர்; குமரி முதல் இமயம் வரையுள்ள இந்தத்தலங்களில் பரமபதம் என்னும் வானுலக தலத்தை மட்டும் பக்தர்கள் மனித உடலில் காண முடியாது.

***

மதயந்தி

செளதாச என்ற அரசனின் மற்றோரு பெயர் கல்மாஷபாதன்; அதாவது கரிகாலன் ; இவர்களுடைய கதை புராணங்களிலும் மகாபாரதத்திலும் உள்ளது.வசிஷ்ட முனிவரின் சாபத்தால் உடல் நிலை மாறியபோதும் அவனிடம் அன்பு பாராட்டிய கற்புக்கரசி மதயந்தி ; அவர்களுக்குப் பிறந்த குழந்தை அஷமாக. மதயந்திகா என்றால் மருதாணி என்று பெயர்; சிலர் இரண்டினையும் தவறாக எண்ணி குழம்புவார்கள். தமயந்தி – நளன் ஆகியோருடனும் குழம்பிக்கொள்ளக் கூடாது.

***

மதுரை

தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ; கடைச் சங்க காலம் முதல் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றிலும் இலக்கியத்திலும் உள்ள பெயர் ; சங்கப்புலவர் இருந்தது இந்த இடம்தான் என்பதற்குச் சான்றாக அதிகமான புலவர்களின் பெயர்களுடன் மதுரை இணைக்கப்பட்டுள்ளது; தற்போது உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர்  என்ற பாடல் பெற்ற சிவன் கோயிலாலும் ஆண்டு  தோறும் நடக்கும் சித்திரைத் திரு விழாவினாலும் மங்காத புகழுடன் விளங்குகிறது பாண்டிய மன்னர் முதல் நாயக்க மன்னார் வரை வளர்த்த கோவில் இது.

***

மலையாளம்

ஒரு மொழியின்  மற்றும் அந்த மொழி புழங்கும் மாநிலத்தின் பெயர் ; பழங்காலத்தில் சேரநாடு என்றும் தற்போது கேரளா என்றும்    அழைக்கிறோம். தமிழ் மொழியின் சகோதர மொழியான மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்குப்பின்னால் தோன்றியது ; எழுத்தச்சன் ராமாயணம் முதலிய இலக்கியங்கள் உடைத்து. 

***

மலய பர்வதம்

மேற்குத்தொடர்ச்சி மலை என்றும் சம்ஸ்க்ருதத்தில் சஹ்யாத்ரி என்றும் இதற்குப் பெயர் ; அகஸ்தியர் வாழ்ந்த பொதிகை மலை இதன் ஒரு பகுதிதான்.

***

மதுரா

கிருஷ்ணர் பிறந்த இந்த நகரம் உத்தர பிரதேசத்திலுள்ள புனித நகரம் ஆகும்; இந்துக்களின் புனிதமான ஏழு நகரங்களில் ஒன்று; ராமர்ப்பிறந்த அயோத்தி கோவில் போலவே கிருஷ்ணர் பிறந்த மதுராவுக்கும் பக்தர்கள் வரத்து அதிகம்; இதைச் சுற்றியுள்ள பிருந்தாவனம் கோகுலம் என்பன பக்தர்களின் புண்ய பூமி ஆகும்.’

***

மஹா பாரதப் போர்  &  மஹா பாரதம்

மஹா பாரதம், உனக்கிலேயே நீளமான புஸ்தகம் ; ஒரு லட்சம் ஸ்லோகங்கள் உடையது; வியாசரால் எழுதப்பட்ட இந்த நூலில் இல்லாத விஷயம் உலகில் இல்லை என்று ஒரு பொன்மொழி உள்ளது. பகவத் கீதை இதில் ஒரு அத்தியாயத்தில் உள்ளது மொத்தம் பதினெட்டு பருவங்களை உடைய இந்த நூல் சம்ஸ்க்ருத மொழியில் இருக்கிறது .

பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே நடந்த சண்டை குருக்ஷேத்ரம்  என்னும் புண்ய பூமியில் நடந்தது இது தற்கால ஹரியானா மாநிலத்தில் இருக்கிறது. மஹாபாரதப்போரில் பங்குகொண்ட தேசங்கள் மற்றும் மன்னர்களின் பெயர்களைப் பார்க்கையில் இது பெரிய யுத்தம் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் இரும்பு, குதிரை ஆகியவற்றைக் குறிப்பிடுவதால் BCE1500  வாக்கில் நடந்ததாக பெரும்பாலான ஆராய்சசியாளர்கள் வாதிடுகின்றனர் ; இந்துக்களோவெனில் கலியுகம் துவங்குவதற்கு 36 ஆண்டுகளுக்கு முன்னர் இது நடந்ததாக எழுதியுள்ளனர் கலியுகம் துவங்கியது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்; அதாவது கி மு 3102 BCE.

***

மஹா பாஷ்யம்

பதஞ்சலி முனிவர் எழுதிய இலக்கண உரை இது ; பாணினியின் இலக்கணத்துக்கு உலகில் எவ்வளவு பெருமை உண்டோ அவ்வளவு பெருமை இதற்கும் உண்டு 2150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் பாணினியின் அஷ்டாத்யாயி நூலுக்கு எழுதிய உரை மஹா பாஷ்யம் ஆகும்; இதில் அவர் இலக்கணம் தவிர வேறு நிறைய விஷயங்களையும் தருகிறார். அவர் காட்டும் உதாரணங்களால் அக்கால அரசியல் நிலை, பண்பாடு , சமயம் முதலிய பல விஷயங்களை  அறிய முடிகிறது .

***

மஹா மகம்

கும்ப கோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பெரிய பண்டிகை ; தென்னாட்டின் கும்ப மேளா என்றும் பெயர் ; குடந்தையில் கும்பேஸ்வரர் சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஸ்னாநம் செய்யும் விழா அடுத்த முறை மார்ச் 9, 2028-ல் நடக்கும். குரு என்னும்   வியாழன் கிரகம் சிம்ம ராசியில் நுழையும் போது இது கொண்டாடப்படுகிறது . 500 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண தேவ ராயர் விஜய நகரத்திலிருந்து இந்த விழாவுக்கு வந்து ஸ்நானம் செய்ததைக் கல்வெட்டுகள் விளம்புகின்றன.

***

மாயா

மாயை என்று தமிழில் சொல்லுவோம் ; இல்லாத ஒன்றினை இருப்பதாக நினைப்பது மாயை; மாயா ஜாலம் என்றும் மாஜிக் காட்சிக்குப் பெயர் ; இந்த உலகம் என்பதே மாயத் தோற்றம் என்பது ஆதிசங்கரின் அத்வைத வாதம் கூறும்; பாம்பினை கயிறு என்றும் கயிற்றைப் பாம்பு என்றும் தவறாக கருதி நாம் அஞ்சுவதை உதாரணமாகக் காட்டுகிறார் அவர் .

***

மகமாயி / மஹா மாயா

சக்தி தேவிக்கு இப்படி ஒரு பெயர்  ; இந்த உலகினையே நமக்கு மாயத்nதோற்றத்தில் காட்டுபவர் அவர்; தமிழர்கள் இவரை மகமாயி என்றும் மாரியாம்மன் என்றும் அழைக்கிறார்கள் ; அம்மை நோய் வந்தால் மகமாயி வந்திருக்கிறாள் என்று சொல்லி அந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக வீட்டு வாசலில் வேப்பிலையைக் கட்டித் தொங்க விடுவார்கள்; நோய் குணம் ஆனவுடன் அருகிலுள்ள கிராம தேவதை கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் செலுத்துவார்கள் .

***

யோகமாயா

கம்சனைக் கொல்வதற்கு ஒரு ஆண் குழந்தை  பிறக்கப்போகிறது என்று ஆரூடம்/ அசரீரி வந்ததால் அவன் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்று வந்தான்; தேவகிக்குப் பிறந்த எட்டாவது குழந்தை கிருஷ்ணன் ; அவளுக்கு குழந்தை பிறந்ததை அறிந்த கம்சன், வாளால்  குழந்தையை வெட்டப்போன போது அக்குழந்தை வானில் தோன்றி மறைந்தது உண்மையான கிருஷ்ணனை வேறிடத்துக்கு மாற்றியது ; கம்சனுக்கு முன்னர் தோன்றிய யோகமாயா கம்சனுக்கு இறுதி எச்சரிக்கையையும் விட்டுச் சென்றது .

To be continued…………………

Tags- மகமாயி , மஹா மாயா, மங்களாசாசனம்,HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 62; இந்து மத கலைச்சொல் அகராதி-62

Tirukkural Encyclopaedia- Chapter Four (Kural 31 to 35) Post.15,725

Written by London Swaminathan

Post No. 15,725

Date uploaded in London –11 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

These five couplets show that Tiru Valluvar was great Sanskrit scholar. In Kural 34, he used Sanskrit Manam, Akulam (vyaakoolam) .

In Kural 35, he used Sanskrit expression. Listing some things one by one and then saying these ….. is from Sanskrit Subhasitas and Niti Sataka of Bhartruhari.  Before Tirukkural, we don’t see it in Sangam literature. In Bhagavad Gita, this is the style Lord Krishna follows. No doubt Valluvar was a great Hindu!

***

Part 7

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933 

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS. Year 1986

6.H A Popley – HAP (not full book) Year 1931

7.Tamil Original

****

Tiru Valluvar with his wife Vasuki.

Chapter 4 The Might of Virtue or Aram/Dharma or The Importance of Virtue

31.It is the spirit of righteousness that flings open the doors of heaven and unlocks the treasures of the earth; what else does profit man mor than righteousness? — ANM+2

***

31.What more does a man require than virtue, which ends the cycle of births,

And also confers contentment through wealth and fame – SMD

***

31.
It yields distinction, yields prosperity; what gain
Greater than virtue can a living man obtain?
Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?– GUP.

***


From virtue weal and wealth outflow;
What greater good can mankind know?  – SB       31

***

31.What brings glory to a man than righteousness?  It gives prosperity ( on earth) and also happiness ( in heaven) –EVS.

***

31.Than virtue true what greater good is there for man

It gives eternal bliss and temporal wealth -HAP

***

Tamil Original

31. சிறப்புஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தினுஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Vasuki Miracle- The pot is hanging in the middle of the well; for her, Husband is God. When he called her she came  running leaving the pot halfway through the well. It is still there without going down.

32.To dwell in the spirit of the higher law of your being is life, but to forget it is death itself — ANM+2

***

32.A man’s adherence to virtue raises him to  great heights;

His failure brings him down – SMD

***
32.
No greater gain than virtue aught can cause;
No greater loss than life oblivious of her laws.
There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it. — GUP.

***

Virtue enhances joy and gain;
Forsaking it is fall and pain.   – SB      32

***

32.There is no greater good than the practice of virtue; nor is greater evil than the neglect of it –EVS.

***

32. Than virtue, greater good doth not exist;

No greater ill than to lose it -HAP

***

32. அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

33.Be unwearied in your service in the cause of righteousness and pursue its spirit wheresoever it guides you — ANM+2

***

33.Do all the good you can, at all times and places,

And in all the ways possible – SMD

***
33.
To finish virtue’s work with ceaseless effort strive,
What way thou may’st, where’er thou see’st the work may thrive.
As much as possible, in every way, incessantly practise virtue. — GUP.

***
Perform good deeds as much you can
Always and everywhere, o man!  – SB       33

***
33.Do good dees unceasingly, as far as you are able, by thought word and deed –EVS.

***

33.By every means, by every way you can,

With never halt, live virtuously- HAP

***

33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

34.Be spotlessly pure in your heart; verily everything is in this one commandment; all else is nothing but a vain show and a hollow symbol — ANM+2

***

34.A blemish less mind is the basis of all virtue;

Everything is empty show – SMD

***
34.
Spotless be thou in mind! These only merits virtue’s name;
All else, mere pomp of idle sound, no real worth can claim.
Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show. — GUP.

***

In spotless mind virtue is found
And not in show and swelling sound. – SB        34
***

34. To be of pure, spotless mind is real virtue; all else is of no avail –EVS.

***

34.Be pure in mind, for that true Virtue is;

All else is merely sound and sham- HAP

***

34. மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;
ஆகுல நீர பிற

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

35.Steer clear of envy, lust, wrath and bitter speech in your short sojourn on earth; that is the only way to be virtuous ANM+2

***

35.Thoughts and deeds fee of envy, greed, wrath and

Bitter words alone, constitute virtue – SMD

***
35.
‘Tis virtue when, his footsteps sliding not through envy, wrath,
Lust, evil speech-these four, man onwards moves in ordered path.
That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech. — GUP.

***

Four ills eschew and virtue reach,
Lust, anger, envy, evil-speech.   – SB      35
***

35.To be free from envy, greed and anger and bitter words is virtue –EVS.

***

35.Envy, greed, anger , bitter words- these four

Avoiding, and then pressing on, is Virtue true- HAP

***
35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

To continued……………………

Tags- Part 7, Tirukkural Encyclopaedia, Chapter Four (Kural 31 to 35), Vasuki Miracle, Tiruvalluvar

கங்கை நதி பற்றி வியத்தகு புதிய தகவல்! 1117 மூலிகைகள்! 935 மருந்துகள்! (Post.15,724)

Written by London Swaminathan

Post No. 15,724

Date uploaded in London –11 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கங்கைக் கரையில் வசிப்பவன் நீர் பெறுவதற்கு ஊற்று தோண்டுவது மடமை ; வைரச் சுரங்கத்துக்கு வருபவன் தாவர குந்துமணிகளை நாடுவதும் மடமை அன்றோ !

சுவாமி விவேகாநந்தர் 

கங்கை நதியைத் தூய்மைப்படுத்தவும் , கரையோர தாவரங்களைக் கணக்கிட்டு  அவைகளைப் பாதுகாக்கவும் , சாக்கடை நீர் கலப்பத்தைத் தடுத்து கங்கை மாதாவுக்கு புத்துயிர் அளிக்கவும் 2014 ஆம் ஆண்டிலொரு திட்டம் துவங்கப்பட்டது ; இதற்கு மத்திய  அரசு ரூ.20000 கோடியை ஒதுக்கியது.

நமாமி கங்கே ( கங்கை அன்னைக்கு வணக்கம் ) என்று இந்த திட்டத்துக்குப் பெயர் . இதன் அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது ;அதன்படி 935 ஆயுர்வேத மருத்துகளைத் தயாரிக்கத் தேவையான 1117 மூலிகைகளும் தாவரங்களும் கங்கை நதி ஓரம் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுவிட்டது.

கங்கை நதி ஓரம் வளரும் தாவரங்கள் பற்றி நிறைய நாட்டுப்புற பாடல்களும் பழமொழிகளும் 200 ஆண்டுகளாக புழக்கத்தில் இருப்பதை அறிந்தும் கேட்டும் வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் அதை இந்து சமய மூட நம்பிக்கை என்று கருதி வாளா  இருந்துவிட்டனர்.

1914 ஆம் ஆண்டில் வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் இயற்றிய சட்டம், ஆயுர்வேத மருத்துவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தது; இதனால் இந்துக்களின் மூவாயிரம் ஆண்டு மருத்துவ அறிவு மழுங்கிப்போனது.

நரேந்திர மோடி தலைமையில் அமைந்த அரசு 2014 ஆம் ஆண்டில் கங்கை நதியைத் தூய்மைப் படுத்தும் பணியைத் துவக்கி கங்கையை வணங்குவோம் என்ற முழக்கத்தை  முரசு கொட்டியது. கங்கை நதி ஓடும்  2525 கிலோமீட்டர் நெடுகிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது .

இதனிடையே 212 சாக்கடை நீர் சுத்திகரிப்பு திட்டங்களை உத்தரப்பிரதேச யோகிஜி அரசு துவக்கி சாக்கடை நீர்,  புனித கங்கையில் விழாமல் தடுத்தது ; அதற்காக 35,000 கோடி ரூபாயைச் செலவழித்தது.

சரகர் என்ற அறிஞர் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் கங்கை தோன்றும்  இடத்திற்கு அருகில் சரக சம்ஹிதை என்னும் மருத்துவ நூலை சம்ஸ்க்ருத மொழியில் எழுதினார் . அவரையடுத்து வந்த சுஸ்ருதர் வாரணாசியில் கங்கைக் கரையில் அமர்ந்தே இன்னு மொரு நூலை எழுதினார்.

ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட்ட அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற நூல் கங்கை நதி நீரை  குளிர்ச்சியானது லேசானது , அமிர்தம் போன்றது என்று வருணித்தது.

2019 ஆம் ஆண்டில் ரூர்கியில் உள்ள ஐ ஐ டி நடத்திய ஆய்வு கங்கையின் தூய்மைப் படுத்தும்  சக்தி ஏனைய நதிகளை விட அதிகம் என்றது; இதற்கு இமய மலையிலுள்ள தாதுக்கள் மற்றும்  பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் உயிரினங்கள் இந்த நதியில் இருப்பது காரணம் என்று காட்டியது.

டாக்டர் ஹான்பரி ஹேங்கின் British physician E. Hanbury Hankin பிரிட்டிஷ் 1896 ஆம் ஆண்டு ஒரு ஆராய்ச்சி செய்து அறிவித்தார். காலரா கிருமிகளை கங்கை நீரில் விட்டால் சில மணி நேரத்துக்குள் இறந்து விடுகின்றன அதே கிருமிகளை சுத்த மான சாதாரண நீரில் விட்டால் அவைகள் பல நாட்களுக்கு உயிருடன் உள்ளன என்றார்

தற்போதைய ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட சில தாவரங்களின் பயனைப் பெரும்பாலான இந்துக்கள் அறிவார்கள் ; துளசி, வேம்பு, அசுவகந்தி, வல்லாரை முதலிய பல மூலிகைகளின் சக்தியைப் பாமர மக்களும் அறிவார்கள்; தற்போதைய ஆராய்சசிகள் அவைகளில் என்ன ராசாயனப் பொருள் உள்ளது என்ற மேல் விவரங்களை வெளியிட்டு வருகின்றது. கோவிட் நோய் பரவியபோது துளசிக்கு 400 சதவிகிதம் அதிக கிராக்கி ஏற்பட்டது .

குப்தர் காலத்தில் இருந்த நாளந்தா பல்கலைக் கழக வளாகத்தில் மூலிகைத் தோட்டமும் இருந்தது ; அப்போதே முறையான ஆராய்ச்சிகளை  இந்திய பல்கலைக் கழக்கங்கள் துவக்கிவிட்டன!

–subham—

Tags- கங்கை நதி , வியத்தகு புதிய தகவல், 1117 மூலிகைகள், 935 மருந்துகள்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-20;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,723)

Written by London Swaminathan

Post No. 15,723

Date uploaded in London –11 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்பார்த்தன்பள்ளி

திருப்பார்த்தன்பள்ளி, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ள 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில் பார்த்தசாரதி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளாதேவியுடன் தாமரையாள் கேள்வன் என்ற பெயரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். 

திருப்பார்த்தன்பள்ளி பற்றிய முக்கிய தகவல்கள்:

  • மூலவர்: தாமரையாள் கேள்வன் (பார்த்தசாரதி) – நின்ற கோலம்.
  • தாயார்: தாமரைநாயகி.
  • சிறப்பு: குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு பார்த்தசாரதி பெருமாள் அர்ஜுனனுக்கு காட்சி கொடுத்த தலம்.
  • ஆழ்வார் பாசுரம்: திருமங்கையாழ்வார் இந்த பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்.
  • அமைவிடம்: சீர்காழி – திருவெண்காடு சாலையில், திருவெண்காட்டிலிருந்து சுமார் 2 மைல் தொலைவில் உள்ளது.
  • திருநாங்கூர் திருத்தலங்கள்: இது திருநாங்கூர் பதினொரு திருத்தலங்கள் குழுவில் ஒன்றாகத் திகழ்கிறது. 
  •  

திருவெண்காட்டிலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் அமைந்துள்ள இக்கோவில், மிகவும் அமைதியான மற்றும் பிரார்த்தனை தலமாக போற்றப்படுகிறது. 

மூலவர், உற்சவர், இருவருமே ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி

என்று மூன்று தேவி மார்கள் சூழ காட்சி அளிக்கிறார்கள்.

இங்குள்ள மற்றொரு உற்சவருக்கு கோலவில்லிராமன் என்று திருநாமம். சங்கு, சக்கரம், கதை இவற்றுடன் வில்லும், அம்பும், கொண்டு காட்சி அளிக்கிறார்.

இந்த உற்சவரான கோலவில்லி ராமன் என்னும் திருநாமத்தில் திருவெள்ளியங்குடி திவ்ய தேசத்து மூலவரும் இருப்பது ரசிக்க வேண்டிய ஒன்று.

பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு சன்னதி உண்டு.

பார்த்த சாரதி என்ற பெயரில் திருவல்லிக்கேணியில்

எழுந்தருளியுள்ள எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார். இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு புஜங்களுடன் காட்சி அளிக்கிறார்.

மூன்று நிலை ராஜகோபுரம், 75 அடி உயரத்தில் பிரமாண்டமாக உள்ளது.

***

திருக்காவளம்பாடி

திருக்காவளம்பாடி திருக்காவளம்பாடி (திருநாங்கூர்) 108 வைணவத் திவ்ய தேசங்களில் 27-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலம். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் ஒன்றாகும்.

முக்கியத் தகவல்கள்:

மூலவர்: கோபாலகிருஷ்ணன் (ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன்).

நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார்

தீர்த்தம் – தடமலர்ப்பொய்கை.

விமானம் – ஸ்வயம்பு விமானம்.

ப்ரத்யக்ஷம் – சேனைத் தலைவர், ருத்ரன்,

அமைவிடம்: சீர்காழி – பூம்புகார் சாலையில் திருநாங்கூரிலிருந்து சுமார் 1.5 மைல் தொலைவில் உள்ளது சென்னை மாயூரம் ரயில் பாதையில் வைதீசுவரன் கோயில் ரயில் நிலையத்திலிருந்து 5 மைல் தூரத்தில் இருக்கிறது. சீர்காழி ஸ்டேஷனிலிருந்து கிழக்கே 7 மைல். சீர்காழியிலிருந்தும், திருவெண்காட்டிலிருந்தும் பஸ்ஸில் வரலாம். திருநகரியிலிருந்து வண்டிப்பாதை உள்ளது.

: இத்தலம் வட துவாரகைக்கு இணையாகக் கருதப்படுகிறது.திருவிழா: ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் நடைபெறும் திருநாங்கூர் கருட சேவை (திருமங்கையாழ்வார் மங்களாசாசன உற்சவம்) மிகவும் முக்கியமானது.

விசேஷங்கள் – திருமங்கையாழ்வார் அவதாரஸ்தலமான திருக்குறையலூர், மங்கை மடம், இரண்டும் இத்தலத்திற்கு மிக அருகாமையில் உள்ளது.

மங்களாசாஸனம் -திருமங்கையாழ்வார் – 1298-1307 – 10 பாசுரங்கள்.

–Subham—

Tags- திருக்காவளம்பாடி,திருப்பார்த்தன்பள்ளி, Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-20,  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

ஶ்ரீ ஏக்நாத் ரானடே – தீர்வு கண்ட தீரர் – சப்தரிஷிகளின் வரிசையில் மூன்றாவது ரிஷி! (Post.15,722)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,722

Date uploaded in London – 11 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சப்தரிஷிகள் வரிசையில் மூன்றாவது ரிஷி!

ஶ்ரீ ஏக்நாத் ரானடே – தீர்வு கண்ட தீரர் – சப்தரிஷிகளின் வரிசையில் மூன்றாவது ரிஷி!

ச. நாகராஜன்

இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்!

அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.

அவரைத் தொடர்ந்து சங்கப் பொறுப்பை பரம பூஜனீய ஶ்ரீ மாதவ சதாசிவகோல்வல்கர் ஏற்க சங்கத்தின் பொதுச் செயலாளராக  1956 முதல் 1962 வரை பொதுச் செயலாளராக இருந்து சங்கப் பணியை ஆற்றியவர்

ஶ்ரீ ஏக்நாத்ஜி ரானடே.

பல்வேறு எதிர்ப்புகளைச் சமாளித்து விவேகானந்தருக்கு கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறையில் பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் ஒன்றை உருவாக்கிய இவரது வாழ்க்கைச் சரிதம் அற்புதமான வியக்க வைக்கும் ஒரு சரித்திரமாகும்.

இந்த நூலில் அவரைப் பற்றிய பல்வேறு சம்பவங்கள் அவருடன் நெருக்கமாக இருந்து பணியாற்றியவர்களால் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளது.

நூலைத் தொகுத்து அளித்தவர் நாமக்கல்லைச் சேர்ந்த, சிறந்த ஸ்வயம்சேவகரான  திரு ஹரிஹரகோபாலன்.

ஶ்ரீ ஏக்நாத்ஜி ரானடே.1914ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் நாளன்று  மஹராஷ்டிர மாநிலத்தில் அமராவதி மாவட்டத்தில் திம்தலா என்ற கிராமத்தில் ஶ்ரீ ராமகிருஷ்ணராவுக்கும் ஶ்ரீமதி ரமாபாய் அம்மையாருக்கும் எட்டாவதும் கடைசி குழந்தையுமாகப் பிறந்தார்.

சிறுவயதிலேயே புத்திகூர்மையுடன் விளங்கிய ஏக்நாத் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்டவராக இருந்து உயர்கல்வியை முடித்தார்.

1936ல் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் சேர்ந்தார். பின்னர் முழு நேர பிரசாரக்காக ஆனார்.

1956 முதல் சங்க சர்காரியவாஹ் பொறுப்பை ஏற்றார்.

சங்க விழா ஒன்றில் கருநாகம் ஒன்று மேடை அருகே தென்பட்டது. அதனைப் பற்றி அவர் சொல்ல விழைந்தாலோ அல்லது கொல்ல முயன்றாலோ பெரும் அமளி ஏற்பட்டிருக்கும். ஆனால் இவர் அந்த கருநாகத்தின் தலையைத் தன் காலின் கீழ் வைத்து அழுத்தி அப்படியே நின்று கொண்டார்.

மிகச் சிறந்த சொற்பொழிவாளரான ஏக்நாத் டயரி எழுதும் பழக்கம் உடையவர். குறிப்பிடத்தகுந்த முக்கிய உரையாடல்களை ஒரு சொல்லும் விடாமல் அப்படியே குறிப்பெடுக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. 1963 ஜனவரி முதல் 1964 வரை ஸ்வாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

ஸ்வாமிஜி கன்யாகுமரியில் கடல் அருகே உள்ள பாறையில் அமர்ந்து தியானம் செய்து உத்வேகம் பெற்று அமெரிக்கா சென்று ஹிந்து மதத்தின் பெருமையை உலகெங்கும் பரப்பினார். அங்கு அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று கன்யாகுமரி மக்கள் விரும்பினர். நாடெங்கும் இதற்கு ஆதரவு பெருகிற்று.

இதைச் சரிவர அமைக்க ஒருவர் வேண்டுமே! சங்கத்திலிருந்து இதற்காக குருஜி கோல்வல்கர் ஏக்நாத்தை அனுப்பினார்.

விவேகானந்தர் நினவுச் சின்னம் ஆறு லட்சம் திட்ட மதிப்பீட்டில் ஆரம்பித்தது. ஆனால் ஏக்நாத் அவர்களின் தீவிர ஈடுபாட்டால் ஒரு கோடியே முப்பத்தைந்து லட்சம் ஆனது. ஒரு ரூபாய் நினைவுச் சின்ன நிதி திரட்டலை அவர் ஆரம்பித்தார். இதனால் நாடு முழுவதும் உள்ளவர்கள் இந்த தேசீய அஞ்சலித் திட்டத்தில் பங்கு கொண்டனர்.

கம்யூனிஸ்டான ஜோதிபாசு வங்க அரசின் சார்பில் 15 லட்ச ரூபாய் நிதியைத் தந்தார். காஷ்மீரிலிருந்தும் நிதி திரண்டது.

ஒரு சிலை மட்டும் நிறுவப்பட இருந்த திட்டம் பெரும் நினைவுச் சின்ன மண்டபம் நிறுவும் திட்டமாக ஆகி வெற்றி பெற்றது.

சில கத்தோலிக்கர்கள் இதை விரும்பவில்லை. அங்கு ஒரு சிலுவையை நிறுவி இதை சேவியர் பாறையாக ஆக்க முயன்றனர்.

ஆனால் சிலுவை உடைத்தெறியப்பட்டது. சத்தியம் வென்றது

அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த பக்தவத்ஸலத்தைச் சந்தித்து நினைவுச் சின்னத்தின் அவசியத்தை விளக்கினார் ஏக்நாத்ஜி.

பல வித எதிர்ப்புகளையும் தகர்த்து 1970ல் திறப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து 1972ல் விவேகானந்த கேந்திரம் நிறுவப்பட்டது.

 1982ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி அவர் உடலை உகுத்தார்.

 இந்த நூலில் பாரத பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி 9-11-2014 அன்று புது டில்லியில் நடைபெற்ற விழாவில் ஶ்ரீ ஏக்நாத் ரானடே பற்றி ஆற்றிய உரை இடம் பெற்ற்ள்ளது. திரு லட்சுமி நாராயணன், திரு ஆர்பிவி எஸ் மணியன் ஆகியோரின் நினைவலைகளும் பகிரப்பட்டுள்ளது.

ஏராளமான படங்கள் ஆர்ட் பேப்பரில் அச்சாகி இருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

இந்த நூலைப் படிப்போர் ஶ்ரீ ஏக்நாத் ரானடேஜியின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை.

நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார். 

சப்தரிஷிகளில் முதல் மூன்று ரிஷிகளின் வரலாற்றைப் படித்தோர் அடுத்த நான்கு ரிஷிகளைப் பற்றியும் படிக்க முனைப்புடன் முயல்வர் என்பதில் ஐயமில்லை.

 விஜயபாரதம்  பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 56 பக்கங்களைக் கொண்டுள்ளது.

நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:

விஜயபாரதம் பிரஸ்

12. எம்.வி.நாயுடு தெரு

சேத்துப்பட்டு, சென்னை – 31

விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466

www.vijayabharathambooks.com

**

My Visit to Mayuram Veda Patasala: சிவபுரம் வேத சிவாகம பாடசாலை (Post No.15,721)

Written by London Swaminathan

Post No. 15,721

Date uploaded in London –10 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சிவபுரம் வேத சிவாகம பாடசாலை (மயிலாடுதுறை): இங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிவாச்சாரிய மாணவர்கள் பயின்று, உலகெங்கிலும் உள்ள கோயில்களில் சேவை செய்து வருகின்றனர்.

லண்டன் சுவாமிநாதனுக்குப் பொன்னாடை ; ஸ்ரீ சுவாமிநாத சிவாச்சார்யார் அளித்தது .5-3-2026; Mayiladuthurai.

சிவபுரம் வேத பாடசாலை மாணவர்களுடன் புகைப்படம்

I visited Sivapuram Veda Agama Patasalai in Mayiladuthurai (old name Mayuram) on 5th March 2026. Every time I visit Mayuram, I used to go to Sivapuram Veda patasala run by Sri A V Swaminatha Sivachariar. I was very keen to get the blessings from the Vedic scholars there.

Sri Swamintha Sivachariar and his son Srikandan welcomed me and we had a chat about the Vedic school and his new project at near by Karavazaikkarai கருவாழைக்கரை  . He honoured me with a shawl, in Tamil Ponnadai, and gave me lot of books and souvenirs published recently. I felt very happy when he told me about 30 students are studying Yajur Veda. His project at Karuvazaikkarai கருவாழைக்கரை slowed down because of unusual heavy rain fall during last monsoon season. So it may take a few more years to complete it.

Sri AV Swaminatha Sivachariar came to London last year to perform the Kumbabishekam of Highgate Murugan temple. He was also here to perform the Rudra Homam organised by the Mitra Seva, UK.

I was able to meet some students and talk about their studies. One student accompanied me to the Mayuranatha swami Temple and showed me around. Because of him I was able to get quick darshan and prasad from the shrines.

Sivachariyar has a very busy schedule during this summer. He has received invitations from temples in different countries.

He answers religious and spiritual questions in a popular daily in Tamil Nadu. If anyone needs genuine answers in Tamil, one can approach him.

His website address is as follows:

+914364-212773 info@sivapuramtrust.org

SIVAPURAM VEDA SIVAGAMA PATASALAI

தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் அமைந்துள்ள சிவபுரம் வேத சிவாகம பாடசாலை, வேதம், ஆகமம் மற்றும் சாஸ்திரங்களைக் கற்பிக்கும் ஒரு புகழ்பெற்ற குருகுலமாகும். 1997-ல் நிறுவப்பட்ட இது, ஆதிசைவ சிவாச்சாரியார்களுக்குத் தேவையான ஆன்மீக மற்றும் வேதாகமப் பயிற்சிகளை வழங்கி, திருக்கோயில்களில் ஆகம முறைப்படி பூஜை செய்ய மாணவர்களைத் தயார்படுத்துகிறது. SIVAPURAM VEDA SIVAGAMA PATASALAI +2முக்கிய அம்சங்கள்:பயிற்சிகள்: வேதம், சிவாகமம், பூஜை முறை மற்றும் சாஸ்திரக் கல்வி.தலைவர்: இந்த பாடசாலையின் தலைவர் ரவி சிவாச்சாரியார்.கிளை: இலங்கையில் மன்னார், திருக்கேதீச்சரத்திலும் இதன் கிளை உள்ளது.செயல்பாடுகள்: ஆண்டு ஆன்மீகப் பயணம், வேத பாராயணம் மற்றும் ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. SIVAPURAM VEDA SIVAGAMA PATASALAI

தொடர்பு மற்றும் விபரங்கள்:பாடசாலை தொடர்பான மேலதிக விபரங்கள், மாணவர்கள் சேர்க்கை மற்றும் இணையதளப் பக்கத்தைப் பார்வையிட அவர்களின் அதிகாரப்பூர்வ சிவபுரம் டிரஸ்ட் இணையதளத்தை பார்க்கலாம்

Kelungal Solgirom / கேளுங்கள் சொல்கிறோம்

Our Guru Nathar answers people’s spiritual questions. contact@sivapuramtrust.org

எனது தந்தை இறந்து ஒரு ஆண்டு நிறைவடயவில்லை, நாங்கள் புதிதாக கட்டியுள்ள வீட்டில் க்ருஹபிரவேசம் செய்யலாமா?

Vasantha

Arasur

சண்டிகேஸ்வரரிடம் கைதட்டி வழிபாடு செய்யலாமா அய்யா? ஒவ்வொருவரும் வேறு வேறு கருத்து சொல்கிறார்கள்

Thiruchitrambalam

koradacheri

சிவராத்திரி தினம் அன்று காலையில் இருந்து விரதம் இருக்க வேண்டுமா, மாலையில் இருந்து விரதம் இருக்க வேண்டுமா அய்யா?

kamali kirushnan

Porur, Chennai

****

கருவாழக்கரை

கருவாழக்கரை, தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமம் ஆகும். இது காவிரி கரையில் அமைந்திருப்பதால் ‘கருவாடக்கரை’ என்றும், கருவை (குழந்தையை) காத்து வாழவைக்கும் அம்மன் அருளும் தலம் என்பதால் ‘கருவாழக்கரை’ என்றும் அழைக்கப்படுகிறது.

:ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில்: இங்குள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில், கருவில் இருக்கும் குழந்தையைக் காத்து, உலகத்தில் பிறக்க வைத்து, நல்ல முறையில் வளர்க்கும் தாயாக போற்றப்படுகிறது.சோமசுந்தரேஸ்வரர் கோவில்: கருவாழக்கரையில் அருள்மிகு சோமசுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.அமைவிடம்: மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 9 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.வரலாறு: வாழை மரங்கள் அதிகமாக இருந்ததால், இப்பகுதி ஒரு காலத்தில் ‘கதலிவனம்’ என்று அழைக்கப்பட்டது.

கர்ப்பக் கோளாறுகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் பக்தர்கள் இந்த அம்மனை வழிபடுகின்றனர். 

–subahm—

Tags- My Visit ,  Mayuram,  Veda Patasala, SIVAPURAM VEDA SIVAGAMA PATASALAI , சிவபுரம் வேத சிவாகம பாடசாலை, மயிலாடுதுறை

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 61; இந்து மத கலைச்சொல் அகராதி-61 (Post.15,720)

Written by London Swaminathan

Post No. 15,720

Date uploaded in London –10 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

M words continued………………………………

Snake or Rope illusion = Maayaa 

Tamil Version will be posted tomorrow.

***

Mangalasanam 

Twelve Tamil Vaishnavite Saints known as Alvars, have sung the glory of Vishnu in 108 divine shrines spread over India and beyond. Those temples which are sung by an Alvar or more Alvars are said to have Mangalaasanam of this Alvar or these Alvars. The 108 Divine Shrines are called Divya Desam. The 4000 compositions of Alvars in praise ofVishnu shrines are in a Tamil book known as Divya Prabandham.

***

Madayanthi

Madayanti (or Madayanthi) is a virtuous queen of King Saudasa (Kalmashapada) in the Mahabharata and Puranas. Known for her loyalty, she aided her husband in overcoming a curse from Sage Vashishtha and is associated with the birth of their son, Ashmaka. 

Wife of King Saudasa of the Ikshwaku dynasty. She is depicted as a virtuous queen who, along with her husband, survived a difficult curse.

When her husband was cursed to be a cannibal, she remained by his side. Later, she was involved in a complex narrative involving the sage Vashishtha to obtain a son.

The name is sometimes spelled Madayanti and should not be confused with Madayantika, which is the botanical name for henna (Lawsonia inermis). 

It is a plant with medicinal properties known for treating skin diseases, jaundice, and as a natural hair dye.

 ***

MADURAI

A big city in Tamil Nadu known for its big and beautiful Siva temple called Meenakshi Sundareswarar temple. About 2000 years ago, there was a Tamil Academy called Tamil Sangam here with 49 poets. Madurai is synonymous with Tamil language because of this Tamil Sangam. Sangam Tamil literature has more than 40 poets with the prefix Madurai. Chitra festival celebrated here every year attracts lakhs of people.

***

Malayalam

It is the name of a language and the land where it is spoken. The place is called Kerala now. It is adjacent to Tamil Nadu. As a language it is junior to Tamil language. Kerala is also known for its temples and natural beauty. In the olden days it was called Chera Nadu.

***

Malaya Parvata

Common name of Western Ghats also known as Sahyadri. Pothikai hill is part of this mountain chain Where sage Agastya lived and wrote the first grammar book for Tamil. The mountain chain runs for over 1000 miles from the land’s tip up to Maharashtra.

***

Mathura

One of the Seven Sacred Cities in India. Lord Krishna was born here, and his playing field is called Brindavan It is in modern Uttar Pradesh with a beautiful Krishna temple.

***

Mahabharata & War

Mahabharata is one of the two Hindu epics; the other epic is Ramayana. Mahabharata is the longest religious book in the world with one hundred thousand Slokas/couplets describing the history of Pandavas and Kauravas. It has 18 chapters and the most popular Bhagavad Gita is in one of the 18 Chapters.

The 18 day war between the five Pandavas and their 100 cousins Kauravas was fought in Kurukshetra, now in Haryana. Hindus believe that the war was fought just before Kali Yuga began, that is before 3102 BCE. Majority of the modern historians believe that it should have happened around 1500 BCE.

Apart from the conflict, the epic has lot of sub stories ad a lot of didactic materials. And it is said thus in a famous quote:

“यदिहास्ति तदन्यत्र यन्नेहास्ति न तत्क्वचित्”Yad ihāsti tad anyatra, yan nehāsti na tat kvacit “What is here [in the Mahabharata] is found elsewhere, but what is not here is nowhere else”. The epic covers all aspects of human life.

***

Mahabhasyam

Mahabhayasam is the celebrated commentary on grammar given to the world by Maharshi Patanjali based on Ashtadhyayi of Maharshi Panini. It  deals with the theory of language from Bharatiya perspective. The siddhantas behind the origin and development of sound, syllable, word, sentence and context and their interrelated features are discussed in this commentary. It consists of nine ahnikas (Units) .

***

Mahamakam

Mahamaham is a major Hindu festival celebrated every 12 years in Kumbakonam, Tamil Nadu, often referred to as the Kumbh Mela of South India. It occurs during the Tamil month of Masi (Feb–Mar) when Jupiter passes through Simha Rasi, drawing millions for a holy dip in the sacred Mahamaham tank, which is surrounded by 16 small mandapams. It is very near the famous Siva temple- Kumbeswarar.

The next Mahamaham festival in Kumbakonam is scheduled to take place on March 9, 2028

 The Mahamaham tank is a massive, historic pond located in the heart of Kumbakonam town, featuring 20 “theerthams” (holy wells) on its banks, each associated with specific deities or blessings. During the festival all the nearby temples take part in it. 500 years ago, famous king Krishnadeva Raya travelled all the way from Vijayanagara to take part in it.

***

Maya, Mahamayi. Mahamaya

Maya is illusion.

Mahamaya (“Great Illusion”) is a multifaceted term in Indian philosophy and religion, primarily referring to the divine, all-encompassing, and bewildering creative energy of the Supreme Goddess (Shaktism) or the material world’s illusory nature (Vedanta). It represents the power that creates, maintains, and veils reality, often associated with Goddess Durga and the material world’s distracting, worldly attachments. 

In Tamil, Mahamayi is the goddess of small pox. If some one is sick with any type of pox, they hang Neem leaves outside the house to avoid spreading the disease. After recovering, they go to Marai Amman Goddess temple and offer Maa Vilakku. It is a flour and jaggery dish with ghee lamps lighted in the middle. They consume it after the lamp is extinguished

Mahamaya (or Yoga-maya) is the divine energy of illusion and Vishnu’s potency who facilitated Krishna’s birth to destroy the tyrant King Kamsa. She transferred Krishna from Kamsa’s prison to Gokul and replaced him with her own form, ultimately warning Kamsa that his killer had already been born, thus fulfilling the prophecy of Kamsa’s downfall. When Kamsa tried to strike her with his sword it flew into sky and disappeared.

To be continued………………

Tags-  Maya, Madurai,  Mangalasanam, Divya desam, mahamaham,

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-19;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,719)

Written by London Swaminathan

Post No. 15,719

Date uploaded in London –10 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 19

தில்லைத் திருச்சித்ரகூடம் (சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகம்)

சைவ வைணவ ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழும் கோவில் சிதம்பரம் நடராஜர் கோவில்; ஒரே கோவிலுக்குள் பாடல்பெற்ற வைணவ சைவ தலங்கள் இருப்பது இதன் தனிச் சிறப்பு
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம், சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே அமைந்துள்ளது.

மூலவர் – கோவிந்தராஜன், போகசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் – தேவாதிதேவன், பார்த்தஸாரதி, வீற்றிருந்த திருக்கோலம். சித்திரகூடத்துள்ளான் என்ற மற்றொரு உத்ஸவரும் உபயநாச்சிமாருடன் ஸேவை ஸாதிக்கிறார்.

தாயார் – புண்டரீகவல்லி (தனி நாச்சியார் ஸந்நிதி) .

தீர்த்தம் – புண்டரீக புஷ்கரிணி.

விமானம் – ஸாத்விக விமானம்.

ப்ரத்யக்ஷம் – தில்லைமூவாயிரவர், பாணினி, பதஞ்சலி, வ்யாக்ரபாதர்.

இந்தக் கோவில் தில்லை தீக்ஷதர்களின் நிர்வாகத்தில் உள்ளது. நடராஜப்பெருமான் உள்ளிட்ட தில்லை மூவாயிரவர் இவரைத் துதிக்க இங்கு வந்ததாகவும், தன்னெதிரே நடனமாடிய நடராஜப் பெருமானது தாண்டவத்தைப் பெருமாள் ரஸித்ததாகவும் ஐதிஹம்.

பாணினி சிவன் ஆடும் ஆனந்தத் தாண்டவத்தைக்கண்டு பரவசமடைந்து வியாகரணம் செய்த இடம்.. பரதமுனிவர் நாட்டிய சாஸ்த்ரத்தை ஏற்படுத்திய ஸ்தலம். கோவில் புஷ்கரிணியில் வடக்கே உள்ள புஷ்கரணியில் புஷ்கரக்ஷேத்திரத்தில் உள்ளதைப்போல் மீன்கள் தரையில் வந்து யாத்ரீகர்களிடமிருந்து பொறி கடலை வாங்கி சாப்பிடுறது.

சிதம்பரத்தில் நாட்டிய முத்திரைகள்  

பரதநாட்டியத்தின் 108 கரணங்களும் சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் கோயிலில் கீழைக்கோபுரத்தின் கிழக்குப்பகுதியில் தெற்குச் சுவரிலும் வடக்குச் சுவரிலும்  நான்கு வரிசையாக வரிசைக்கு 8 சிற்பங்கள் என்ற வகையில் 32 + 32 = 64 சிற்பங்கள் உள்ளன. மேற்குச் சுவரில் தெற்குப் பகுதியில் 24 சிற்பங்களும், வடக்குப் பகுதியில்  20 சிற்பங்களும் உள்ளன.

தில்லை நடராஜர் பற்றி சம்பந்தர் அப்பர்

தேவாரம் பாடிய மூவரும் அதற்கு முன்னாள் மாணிக்க வாசகரும் பாடியதால் சிதம்பரம் — தமிழில்  சிற்றம்பலம் — கோயில் 1400 ஆண்டுக    க்கும் மேலான பழமை உடைத்து .

தில்லை நடராஜர் (சிதம்பரம்) கோயில் நாயன்மார்களால் போற்றப்படும் தலமாகும். திருஞானசம்பந்தர் (2 பதிகங்கள்) மற்றும் திருநாவுக்கரசர் எனப்படும் அப்பர் (8 பதிகங்கள்) தில்லை சிவனின் நடனத்தை தேவாரத்தில் பாடி மகிழ்ந்துள்ளனர். திருநாவுக்கரசர் (அப்பர்): தில்லைப் பெருமானின் அருட்சிறப்பை, “பொன்னார் மேனியனே” போன்ற பதிகங்கள் மூலம் போற்றியுள்ளார். இறைவனின் ஆடல் கண்டு மகிழ்ந்த அவர், தில்லை சிவனின் திருவருளைப் புகழ்ந்துள்ளார்.திருஞானசம்பந்தர்: தில்லைக் கூத்தனின் நடனத்தையும், சிவனடியார்களின் சிறப்பையும் தனது பதிகங்களில் பாடியுள்ளார். இத்தலம் தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் தில்லைவனம் என்று அழைக்கப்பட்டது

தில்லையில் திருமாலின் திருக்கோலத்தைத் திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் குறிப்பதும் நம் ஆய்வுக்குத் துணை நிற்கும். “வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றலில் அம் மாயவனே” என்பது மாணிக்கவாசகரின் அருள் வாக்கு.

தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பல்லவ மன்னன் திருமாலை எழுந்தருள்வித்தான்.

     “பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து

     புடைமன்னவன் பல்லவர் கோன் பணிந்த

     செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த

     தில்லைத் திருச் சித்திர கூடம்”

என்று திருமங்கையாழ்வாரால் அருளப்பட்டது. எனவே தில்லைத்

திருச்சித்திர கூடத்தில் திருமாலை எழுந்தருள்வித்தவன் நந்திவர்மனே (730-795) .

     “தில்லை நகர்த் திருச்சித்திர கூடந் தன்னுள்

     அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த……”

என்று குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருமால் மீது பாடியிருப்பதும் கணிக்கத்தக்கது.

திருச் சித்திர கூடம்

பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் இத்திருக்கோவில் மேம்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

***

கோவிந்தராஜப் பெருமாள் மீது குலசேகராழ்வார் (11 பாசுரங்கள் – பெருமாள் திருமொழி) மற்றும் திருமங்கையாழ்வார் (10 பாசுரங்கள் – பெரிய திருமொழி) ஆகியோரால் பாடப்பட்ட நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் திருச்சித்ரகூடம் பாசுரங்கள் எனப்படும். இப்பாசுரங்கள், இத்தல எம்பெருமானை இராமபிரானாகவே பாவித்து, தில்லை வாழ் அந்தணர்கள் துதிக்கச் சேவை சாதிப்பதாகப் போற்றுகின்றன. 

குலசேகராழ்வார் (பெருமாள் திருமொழி – பதிகம் 10):

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி…” – இப்பாசுரம், இராமவதாரம் முடித்து வைகுந்தம் புகுந்த ராமனாக, தில்லைத் திருச்சித்ரகூடத்தில் வீற்றிருக்கும் கோவிந்தராஜனைப் போற்றுகிறது.

தில்லைநகர் திருச்சித்ர கூடந்தன்னுள்அந்தணர்களொரு மூவாயிரவரேத்த…” – தில்லை அந்தணர்கள் தினமும் வணங்கும் எம்பெருமானாகச் சித்தரிக்கிறார்.

குலசேகராழ்வார் இத்தலப் பெருமாளை இராமாயணக் கதையோடு தொடர்புபடுத்தி, அனுமனுடன் காட்சி தரும் சித்திரகூட ராமராகவே பாடியுள்ளார்.

திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி):

ஊன் வாட நீண்ட நாள்… தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே” – கடினமான தவங்கள் செய்ய வேண்டாம், தில்லை திருச்சித்ரகூடம் சென்று கோவிந்தராஜனை நினைத்தாலே போதும் என, இத்தலத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் பாசுரம்.

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்…” – வராஹ அவதாரத்தில் பூமி தேவியை மீட்ட பெருமாள் தில்லைத் திருச்சித்ரகூடத்தில் இருப்பதாகப் பாடுகிறார்.

***

இரண்டாம் ஆயிரம்

திருமங்கை ஆழ்வார்

பெரிய திருமொழி

தில்லைத் திருச்சித்திரகூடம் 1

1157    ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு

      உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து

தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா-

      தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்

கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே

      கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்

தேன் ஆட மாடக் கொடி ஆடு தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (1)

1158    காயோடு நீடு கனி உண்டு வீசு

      கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம் ஐந்து

தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா

      -திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்

வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்

      மறையாளர் நாளும் முறையால் வளர்த்த

தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (2)

1159    வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்

      விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த

வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்

      அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர

பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து

      படை மன்னவன் பல்லவர்- கோன் பணிந்த

செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (3)

1160    அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்

      அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த

பெருமான் திருநாமம் பிதற்றி நும்-தம்

      பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்

கரு மா கடலுள் கிடந்தான் உவந்து

      கவை நா அரவின்-அணைப் பள்ளியின்மேல்

திருமால் திருமங்கையொடு ஆடு தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (4)

1161    கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய

      குல மன்னர் அங்கம் மழுவில் துணிய

தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்

      தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்

பூ-மங்கை தங்கி புல-மங்கை மன்னி

      புகழ்-மங்கை எங்கும் திகழ புகழ் சேர்

சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (5)

1162    நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர்

      துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு

மை ஆர் மணிவண்ணனை எண்ணி நும்-தம்

      மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்

அவ் வாய் இள மங்கையர் பேசவும் தான்

      அரு மா மறை அந்தணர் சிந்தை புக

செவ் வாய்க் கிளி நான்மறை பாடு தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (6)

1163    மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து

      மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த

தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு

      திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்

கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்

      கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்

தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே            (7)

1164    மா வாயின் அங்கம் மதியாது கீறி

      மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள்

கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்

      குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்

மூவாயிரம் நான்மறையாளர் நாளும்

      முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்

தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (8)

1165    செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்

      சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்

அரு நீல பாவம் அகல புகழ் சேர்

      அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்

பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும்

      வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள

திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (9)

1166    சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய தில்லைத்

      திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு

ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப

      அலை நீர் உலகுக்கு அருளே புரியும்

கார் ஆர் புயல் கைக் கலிகன்றி குன்றா

      ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்

பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்

      பல காலம் நிற்கும்படி வாழ்வர்-தாமே             (10)

******

741.  

அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்*  அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி*

வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி*  விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்*

செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்*   தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை*  என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (2)      

742.  

வந்துஎதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி*  வருகுருதி பொழிதர வன்கணை ஒன்றேவி*

மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து*  வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் காண்மின்*

செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்*  தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*

அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த*  அணிமணி ஆசனத்திருந்த அம்மான் தானே. 

743.  

செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்*  சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி* 

வெவ்வரி நற் சிலைவாங்கி வென்றி கொண்டு*  வேல்வேந்தர் பகை தடிந்த வீரன்தன்னைத்*

தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை*  இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே*

744.  

தொத்து அலர் பூஞ் சுரிகுழல்-கைகேசி சொல்லால்*  தொல் நகரம் துறந்து துறைக் கங்கைதன்னைப்*

பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு*  பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து*

சித்திரகூடத்து இருந்தான்தன்னை இன்று- தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற*  இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே  

745.  

வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று*  வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி*

கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்*  கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி*

சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*

தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்*  திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே.

746.  

தனம் மருவு வைதேகி பிரியல் உற்று*  தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி*

வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு*  வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்*

சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

இனிது அமர்ந்த அம்மானை இராமன்தன்னை*  ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே*

747.  

குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து*  குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி*

எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்*  இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து*

திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்*  அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே*

748.  

அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி*  அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்*

தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி*  உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்*

செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்*  பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே*

749.  

செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று*  செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த

நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்*  தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத்

திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்

உறைவானை மறவாத உள்ளந்தன்னை*  உடையோம் மற்று உறுதுயரம் அடையோம் அன்றே

750.  

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி*  அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை*

வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற*  விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி*

சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்*  இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே* 

751.  

தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*  திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை*

எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று*  அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா*

கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்*  கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த*

நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே* 

1158.  

ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு*  உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து*

தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா*  தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்*

கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே*  கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்*

தேன் ஆட மாடக் கொடி ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. (2)

1159.  

காயோடு நீடு கனி உண்டு வீசு*  கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம்*

ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா*  திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*

வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்*  மறையாளர் நாளும் முறையால் வளர்த்த*

தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே. 

1160.  

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்*  விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த*

வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்*  அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர*

பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து*  படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த*

செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த*   தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1161.  

அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்*  அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த*

பெருமான் திருநாமம் பிதற்றி*  நும்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்*

கரு மா கடலுள் கிடந்தான் உவந்து*  கவை நா அரவின்அணைப் பள்ளியின்மேல்*

திருமால் திருமங்கையொடு ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1162.  

கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய*  குல மன்னர் அங்கம் மழுவில் துணிய*

தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்*  தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்*

பூமங்கை தங்கி புலமங்கை மன்னி*  புகழ்மங்கை எங்கும் திகழ*

புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1163.  

நெய் வாய் அழல் அம்பு துரந்து*  முந்நீர் துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து*

இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி*  நும்தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்*

அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான்*  அரு மா மறை அந்தணர் சிந்தை புக*

செவ் வாய்க் கிளி நான்மறை பாடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1164.  

மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து*  மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த*

தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு*  திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*

கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்*  கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்*

தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1165.  

மா வாயின் அங்கம் மதியாது கீறி*  மழை மா முது குன்று எடுத்து*

ஆயர்தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்*  குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்*

மூவாயிரம் நான்மறையாளர்*  நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்*

தேவாதிதேவன் திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1166.  

செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்*  சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்*

அரு நீல பாவம் அகல புகழ் சேர்*  அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்*

பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து*  எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள*

திரு நீலம் நின்று திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1167.  

சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு*

ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப*  அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*

கார் ஆர் புயல் கைக் கலிகன்றி*  குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்*

பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்*  பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே. (2)

1168.  

வாட மருது இடை போகி*  மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*

ஆடல் நல் மா உடைத்து*  ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*

கூடிய மா மழை காத்த*  கூத்தன் என வருகின்றான்*

சேடு உயர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே. (2) 

1169.  

பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட*  பிள்ளை பரிசு இது என்றால்*

மா நில மா மகள்*  மாதர் கேள்வன் இவன் என்றும்*

வண்டு உண் பூமகள் நாயகன் என்றும்*  புலன் கெழு கோவியர் பாடித்*

தே மலர் தூவ வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.  

1170.  

பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று*  ஆய்ச்சியர் கூடி இழிப்ப*

எண் திசையோரும் வணங்க*  இணை மருது ஊடு நடந்திட்டு*

அண்டரும் வானத்தவரும்*  ஆயிரம் நாமங்களோடு*

திண் திறல் பாட வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே. 

1171.  

வளைக் கை நெடுங்கண் மடவார்*  ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப*

தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்*  தண் தடம் புக்கு அண்டர் காண*

முளைத்த எயிற்று அழல் நாகத்து*  உச்சியில் நின்று அது வாடத்*

திளைத்து அமர் செய்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

1172.  

பருவக் கரு முகில் ஒத்து*  முத்து உடை மா கடல் ஒத்து*

அருவித் திரள் திகழ்கின்ற*  ஆயிரம் பொன்மலை ஒத்து*

உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து*  இன மால் விடை செற்று*

தெருவில் திளைத்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

1173.  

எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க*  வரு மழை காப்பான்*

உய்யப் பரு வரை தாங்கி*  ஆநிரை காத்தான் என்று ஏத்தி*

வையத்து எவரும் வணங்க*  அணங்கு எழு மா மலை போல*

தெய்வப் புள் ஏறி வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே .(2) 

1174.  

ஆவர் இவை செய்து அறிவார்?*  அஞ்சன மா மலை போல*

மேவு சினத்து அடல் வேழம்*  வீழ முனிந்து*

அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்*  கை தொழ வீதி வருவான்*

தேவர் வணங்கு தண் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே.

1175.  

பொங்கி அமரில் ஒருகால்*  பொன்பெயரோனை வெருவ*

அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு*  ஆயிரம் தோள் எழுந்து ஆட*

பைங் கண் இரண்டு எரி கான்ற*  நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்*

சிங்க உருவின் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

1176.  

கரு முகில் போல்வது ஓர் மேனி*  கையன ஆழியும் சங்கும்*

பெரு விறல் வானவர் சூழ*  ஏழ் உலகும் தொழுது ஏத்த*

ஒரு மகள் ஆயர் மடந்தை*  ஒருத்தி நிலமகள்*

மற்றைத் திருமகளோடும் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

1177.  

தேன் அமர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடம் அமர்ந்த*

வானவர் தங்கள் பிரானை*  மங்கையர் கோன்மருவார்*

ஊன்அமர் வேல் கலிகன்றி*  ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்*

தான் இவை கற்று வல்லார்மேல்*  சாரா தீவினை தானே.  (2)

—Subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-19;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்