கொலம்பஸ் பற்றி திடுக்கிடும் தகவல்– உலகம் முழுதும் அதிர்ச்சி அலைகள் (Post.13,832)
“Therefore, having driven out all the Jews from your realms and lordships in the same month of January, your highnesses commanded me that, with a sufficient fleet, I should go to the said parts of India, and for this accorded me great rewards and ennobled me so that from that time henceforth I might style myself ‘don’ and be high admiral of the ocean sea and viceroy and perpetual governor of the islands and continent which I should discover,” he added, “and that my eldest son should succeed to the same position, and so on from generation to generation forever.”
கொலம்பஸ் பெரிய படையுடன் கிளம்பியதும் இந்தியாவைக் கண்டுபிடித்து அவனது ஆட்சியை நிறுவப் புறப்பட்டதும் அவனுக்குப் பின்னர் அவன் மகனே தான் பிடித்த நாடுகளை ஆள வேண்டும் என்றும் எழுதியுள்ளான்.
கொலம்பஸ் Columbus (1451-1506) என்பவன் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகவும் இந்தியாவைக் கண்டுபிடித்ததாகவும் உலவும் வதந்திகளுக்கு அவ்வப்போது மறுப்புகள் வந்ததை நாம் அறிவோம். ஆயினும் அவன் கிறிஸ்தவன் அல்ல யூத மதத்தைச் சேர்ந்தவன் என்று ஸ்பெயின் நாட்டின்(The national Spanish broadcaster TVE aired “Columbus DNA: The true origin”) முக்கிய டெலிவிஷன் நிலையம் அக்டோபர் 2024 இரண்டாவது வாரம் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது . இது உலகம் முழுதுமுள்ள முக்கிய பத்திரிகைகளில் சிறப்பிடம் பெற்றது; யூத மத வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பாலஸ்தீன இஸ்லாமிய தீவிரவாதிகள் சென்ற ஆண்டு அக் 7-ம் தேதி யூதர்களைத்தாக்கி சுமார் 250 பேரைக் கொன்றவுடன் இஸ்ரேலிய யூதர்கள் அமெரிக்கா , பிரிட்டன் ஆதரவுடன் பல முஸ்லீம் நாடுகளைத் தாக்கி 50,000 முஸ்லீம்களைக் (Palestinians, mostly women and children, since October 7, 2023.) கொன்ற செய்தி பெரிதாகி தொடர்ந்து வரும் நேரத்தில் கொலம்பஸ் செய்தி வந்ததால் கூடுதல் கவர்ச்சியைப் பெற்றது. யூதர்கள் நடு நடுங்கிப் போய் அவன் எங்கள் ஆள் அல்ல என்று கதறுகிறார்கள். இதற்கான காரணம் என்னவென்றால், கொலம்பஸ் ஒரு யூதன் என்ற செய்தி வெளியானதாகும்.
செவில் (Seville) என்னும் நகரம் ஸ்பெயின் நாட்டில் உள்ளது; அங்குதான் ஒரு சர்ச்சில் கொலம்பஸின் Columbus (1451-1506) கல்லறை உள்ளது. அங்குள்ள சடலம், எலும்பிலிருந்து எடுத்த மரபணு D N A யை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டனர் .
கொலம்பஸின் மகன் பெயர் ஹெர்னாண்டோ கொலோன்( Hernando Colón ) அவனுடைய டி என் ஏ–யையும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்தனர் அவைகளை ஆராய்ந்ததில் கொலம்பஸ் ஒருயூதன்Sephardic Jewஎன்பது அம்பலமாகியது.
இதைக் கண்டவுடன் பலரும் சப்பைக்கட்டு கட்டிவருகிறார்கள் அவன் யூதன் போல நடித்தவன் என்று சிலரும், அவன் மதத்தைப் பின்பற்றும் யூதன் அல்ல, பிறப்பில்தான் யூதன்என்றும் நொண்டிச் சாக்குகளைக் கூறி வருகின்றனர்; அது சரி, கொலம்பஸை ஏன் யூதர்கள், கை கழுவி விடுகின்றனர் என்றால் அவன் மீது நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன. சென்ற இடமெல்லாம் உள்ளூர் மக்களை படுகொலை செய்தான். அவனது கும்பலைச் சேர்ந்தோர் உலகம் முழுதும் பாலியல் நோய்களை (STD OR VD) பரப்பினார்கள் என்பன சில குற்றச் சாட்டுகள். பல நாடுகளில் அவனது சிலையை இடித்து விழுத்தாட்டிவிட்டார்கள் அவனொரு கொலைகாரப் பாவி என்று அந்த நாட்டினர் முத்திரை குத்திவிட்டார்கள்.
****
Murderer Columbus
அவன் ஸ்பெயின் நாட்டின் மன்னன் பெர்டிநான்ட், அவனது மனைவி இசபெல்லா King Ferdinand and Queen Iabella,” ஆசீர்வாதத்துடன் உலகிலேயே பணக்கார நாடான இந்தியாவைக் கண்டு பிடிக்கிறேன் என்று ஆயுதம் தாங்கிய படைகளுடன் பல கப்பல்களில் 1492 -ஆம் ஆண்டில் புறப்பட்டான்.
That was also the year the Spanish rulers promulgated the Alhambra Decree, or Edict of Expulsion, completing a process that began in 1391 to destroy the Iberian Peninsula’s Jewish communities by conversion or deportation.”
இதில் என்ன வேடிக்கை என்றால், ஸ்பெயின் போர்ச்சுகல் உள்ள ஐபீரியன் தீபகற்பத்திலிருந்து யூத மதத்தை அழிக்க வேண்டும் ; இதை மதமாற்றம் மூலமோ அல்லது வெளியே பிடித்துத். தள்ளுவதன் மூலமோ சாதிக்கலாம் என்ற அலாம்பரா ஆணை 1492- ல் வெளியானது. ஆகையால் பலரும் யூதர் இல்லாதவர்கள் போல நடித்த காலம் அது.
அவனை யூதன் என்று சொல்லி நிறைய ஆராய்ச்சி நூல்கள் ஏற்கனவே வெளியாகின.
Ohio– Columbus statue Removed
அவன் இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரைச் சேர்ந்தவன் என்பது பொய். ஏனெனில் அவன் ஸ்பானிய மொழியில் எல்லாம் எழுதினான் அதுதான் அவனது தாய்மொழி; அவன் எழுதிய காகித மார்ஜினில் யூதர்களின் எபிரேய மொழியில் கிறுக்கல்களை எழுதியுள்ளான் இவை எல்லாம் அவன் யூதன்தான் என்பதை நிரூபிக்கினறன் என்பது ஆய்வாளர்களின் கருத்து.over 50,000
யூதர்கள் கொலம்பஸை வெறுப்பது ஏன் ?
அமெரிக்காவுக்கு வியாபார மார்கத்தைக் கண்டுபிடித்துக் காட்டியதால் ஸ்பானியர்கள் அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள பழங்குடி அமெரிக்கர்களைக் கொன்றுகுவித்து வெள்ளைக்காரர் ஆட்சியை அமைக்க உதவினான் . இபோது அதே போல பாலத்தீனத்தில் யூத மத ஆட்சியை நிறுவ இஸ்ரேல் முயற்சி செய்கிறது என்ற வாதம் வலுப்படும் என்று அஞ்சி நடுங்கி யூதர்கள் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்று கதறுகிறார்கள்
அவனது பெயரும் பல மொழிகளில் பலவாறு எழுதப்படுகிறது அதாவது ஆள் மாறாட்டப் பேர்வழி!
Doubtful origins
Columbus is known as Cristoforo Colombo in Italian and as Cristóbal Colón in Spanish. But he has also been referred to—by himself and others—as Christoual, Christovam, Christofferus de Colombo and even Xpoual de Colón.Columbus belonged to Genoa, Italy. Other popular theories trace his origin to Spain, Greece, Portugal and Britain.
முன்னர் கொலம்பஸைப் புகழ்ந்தவர்கள் இப்போது படைகளுடன் சென்று உள்ளூர் மக்களைக் கொன்று குவித்து வெள்ளைக்காரர்
காலனியாதிக்கத்துக்கு வித்திட்ட கொலம்பஸ் எங்கள் ஆள் அல்ல என்று பறை அறிவித்து வருகிறார்கள்
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் லண்டனில் உள்ள கொலம்பஸ் சிலை மீது சிவப்பு நிற பெயிண்டை அள்ளிவீசி மக்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்
Venezuela – Removing genocide Columbus
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பஹாமாஸ் என்னும் தீவில் கொலம்பஸ் இறங்கினான்; இந்தியாவைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று உலகிற்கு அறிவித்தான் அந்த இடத்தை இப்பொழுது மேற்கு இந்தியத்தீவுகள் என்று அழைக்கிறோம். வெள்ளைக்காரர்கள் அவன் அமெரிக்கவைக் கண்டுபிடித்தான் என்று என்சைக்ளோபீடியாக்களில் பொய்யுரை பரப்பினர். காரணம் என்ன வேனில் அவன் காலயனியாதிக்கத்துக்கு வித்திட்டு வெள்ளை ஆட்சியை உலகமெங்கும் பரவ உதவினான். அப்போது வட மெரிக்காவில் செவ்விந்தியர்கள் என்ற பழங்குடி மக்கள் ஒன்றரைக் கோடி மக்கள் இருந்தார்கள் இரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் அது இரண்டரை லட்சமாக குறைந்துவிட்டது. துப்பாக்கிகளையும் குதிரைகளையும் கொண்டுபோன வெள்ளைக்காரர்கள், அப்பாவி மக்களைக் கொக்கு சுடுவது போல சுட்டுத் தள்ளினார்கள் ; இதை திரைப்படங்களில் இன்றும் காணலாம்.
கனடா அமெரிக்கா ஆஸ்த்திரேலியா, பசிபிக், இந்து மஹா சமுத்திரத் தீவுகளை ஆக்கிரமித்த வெள்ளைக்காரகளைத் தவிர மீதமுள்ளோருக்கு கொலம்பஸ் என்றால் ரத்தக் கொதிப்பு வந்துவிடும் ஆவனது படைகள் செய்த அட்டூழியங்கள் ஒவ்வொரு இடத்திலும் பேசப்படுகின்றன; ஏசப்படுகின்றன; புகார்கள் வீசப்படுகின்றன..
Indigenous communities have been persecuted in the Americas since Christopher Columbus first came ashore on the island of Guanahani in the present-day Bahamas 528 years ago.
They have had their land stolen, people slaughtered, enslaved, and infected with diseases, women raped, children kidnapped, treaties broken, and possessions and goods plundered and looted.
Columbus beheaded
There were between 5 million and 15 million Indigenous people living in North America in 1492. By the late 1800s, there were fewer than 238,000 left.
The so-called “Age of Discovery” has begot centuries of genocide.
–SUBHAM—-
Tags- கொலம்பஸ், யூதன் ,இந்தியா , அமெரிக்கா , கண்டுபிடிப்பு, திடுக்கிடும் தகவல் , ஸ்பெயின் , டெலிவிஷன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
26-10-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
ரத்தன் டாட்டாவைப் பற்றிய கட்டுரையின் முதல் பகுதியைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பகுதி வெளியாகிறது.
உத்வேகம் ஊட்டிய உத்தமர் : ரத்தன் டாட்டா! -2 (1)
ச .நாகராஜன்
தலைமை
டாட்டா குழுமத்தின் தலைவரானவுடன் ரத்தன் டாட்டா தனது இயல்பை முதலில் காட்டினார்.
ஜே.ஆர்.டி. டாட்டா அமர்ந்த இடத்தில் அவருக்கு இணையாகத் தம்மால் அமர்வது இயலாது என்று பணிவுடன் கூடிய அவர் “அவரது பெரிய காலணிகள் எங்கே எனது சிறிய கால்கள் எங்கே” என்று கூறினார்.
நிர்வாக போர்டு கூட்டத்தில் அனைவரும் அமரும் போது தலைவரான இவர் சிறிது நேரம் தான் ஜே ஆர் டி டாட்டா அமர்ந்த அதே இருக்கையில் அமர்வார். பின்னர் அங்கிருந்து எழுந்து அடுத்த நாற்காலிக்குச் சென்று விடுவார். இதை ‘மியூஸிகல் சேர் அமர்தல்’ என்பார்கள் அனைவரும்!
மிகப் பெரிய டாட்டா குழுமத்தின் தலைவராக இருந்தாலும் கூட தனக்கென விசேஷ சலுகை எதையும் விரும்பாதவர் டாட்டா.
டாட்டா ஸ்டீலின் அலுவலகம் சிறியதாக இருந்த காரணத்தினால் மூத்த அதிகாரிகளுக்கான அறைகளும் சிறிதாகவே இருந்தன. அவருடன் பணியாற்றிய இரு அதிகாரிகளுக்கும் அவருக்கும் ஒரே பணியும் பொறுப்பும் தரப்பட்டது. அதிகாரிகள் அவரிடம் சற்று பெரிய காபின் ஒன்றை அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிய போது அவர் தனக்கென விசேஷ சலுகை எதுவும் கூடாது என்று கண்டிப்பாகக் கூறி அதே காபினில் பணியைத் தொடர்ந்தார்.
தொழிலாளர்களின் நண்பர்
தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும் போதோ, ஒரு கஷ்ட சூழ்நிலையில் இருக்கும் போதோ, அந்தத் தொழிலாளியின் வீட்டிற்கு தானே நேரடியாகச் சென்று ஆறுதல் கூறி உதவிகளைச் செய்வது அவர் வழக்கம்.
1984-ல் நடந்த பெரும் குழப்பத்தில் தங்கள் வாகனங்களை இழந்த சீக்கிய ஓட்டுநர்களுக்கு அவர் இலவசமாக வாகனங்களைத் தந்தார். இது யாருக்குமே தெரியாது. விளம்பரத்தை அவர் வெகுவாக விரும்பவில்லை.
எளிமை
தனது வாழ்நாள் முழுவதும் மிக எளிமையாக வாழ்ந்து வந்தார் அவர். “வெற்றியாளர்களைக் கண்டு நான் பிரமிக்கிறேன். ஆனால் இரக்கமற்ற அநியாயமான வழியில் அவர்களின் வெற்றி அடையப்பட்டது என்றால் அவர்களைக் கண்டு என்னால் பிரமிக்கத்தான் முடியும். என்னால் அவர்களுக்கு மரியாதை கொடுக்க முடியாது.” என்றார் அவர்.
இந்தக் கொள்கையைக் கொண்ட ரத்தன் டாட்டா தனது வாழ்நாள் முழுவதும் நேர்மையான வழியைக் கடைப்பிடித்து வெற்றியை அடைந்தார் என்பதோடு பெற்ற வெற்றியால் தலைக்கனம் கொள்ளாது மிக எளிமையானவராக இருந்தார்.
இதை நிரூபிக்கும் நூற்றுக் கணக்கான சம்பவங்களை அவருடன் கூட இருந்து பழகியோர் அனுபவித்திருக்கின்றனர். அவரது மறைவையொட்டி அவர்கள் ரத்தன் டாட்டா என்ற மாமனிதருடன் பழகிய சம்பவங்களை இது பற்றி நினைவு கூர்கின்றனர்.
பெரிய குழுமத்தின் தலைவராக இருந்த அவர் ஒருநாள் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தார். அவரது நண்பர் ஒருவர் டாக்ஸியில் ஏறிக் கிளம்பிக் கொண்டிருந்தார். “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார் டாட்டா. தான் போகும் இடத்தை அவர் சொன்னவுடன், “நானும் அங்கே தான் போக வேண்டும், வரலாமா?” என்று கேட்டு விட்டு டாக்ஸியில் அவர் பக்கத்தில் அமர்ந்தார் டாட்டா.
இதைப் பார்த்த நண்பர் விக்கித்து பிரமித்தார்.
பிரம்மாண்டமான நிறுவனங்களின் தலைவர் சாதாரண டாக்ஸியில் தன் கூட பயணிப்பதா? அவரால் நம்பவே முடியவில்லை. ஆனால் டாட்டாவோ சகஜமாக சிரித்தவாறே அவருடன் பேசிக் கொண்டு வண்டியில் சென்றார்.
விருதுக்குப் பெருமை தந்தவர்
வருடத்திற்கு ஒரு பெரிய விருதாவது டாட்டாவிற்கு வழங்கப்படும். விருதை வழங்கியவர்கள் அதைப் பெற்றவரை விட அப்படி வழங்கியதால் பெருமைப்பட்டார்கள். ஒரு முறை இன்ஃபோஸிஸ் நிறுவனர் திரு நாராயணமூர்த்தி அவருக்கு வாழ்நாள் சாதனை விருதை அளித்தார். விருதை அளிப்பதற்கு முன்னர் அவர் காலில் விழுந்து அவரைக் கும்பிட்டு விட்டு வழங்கினார். இப்படிப்பட்ட அபாரமான மனிதரைத் தான் கண்டதே இல்லை என்றார் அவர். கல்லூரியில் படிக்கும் தன் மகளை டாட்டா வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது அந்த இளம்பெண்ணுடன் மூன்று மணி நேரம் உரையாடி அவருக்கு உத்வேகம் ஊட்டியதை அவர் நெகிழ்ச்சியுடன் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறார்.
பங்குதாரர்களுக்கு லாபம்
நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், நிறுவியவரின் வாரிசு என்றாலும் கூட நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ஷேர் ஹோல்டர்கள் எனப்படும் பங்குதாரர்களுக்கு அதிக லாபத்தைத் தர வேண்டும் என்பதில் அதிக முனைப்புள்ளவர் டாட்டா.
இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சுவையான சம்பவத்தைக் கூறலாம்.
2005-ம் ஆண்டு. ஜூலை மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவர்களின் அழைப்பிற்கிணங்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க விஜயத்தை மேற்கொண்டார். பிரதம மந்திரியின் இந்தப் பயணத்தையொட்டி அமெரிக்காவின் மிகப்பெரும் நிறுவனங்களில் பத்து நிறுவனங்களின் தலைவர்களும் இந்தியத் தொழில்துறையில் மிகப் பெரும் பத்து நிறுவனங்களின் தலைவர்களும் கூடிப் பேசி உலகத் தொழிலபதிர்களின் மன்றம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்காவின் பெரிய நிறுவனங்களான பெப்ஸி, ஜெராக்ஸ், ஹனிவெல்,ஜேபி.மார்கன், சேஸ் உள்ளிட்ட பத்து நிறுவனங்களின் தலைவர்கள் ஒரு புறமும், இந்திய அணியில் ரத்தன் டாட்டாவைத் தலைவராகக் கொண்டு முகேஷ் அம்பானி. கிரண் மஜும்தார், நந்தன் நீல்கேணி, அஷோக் கங்குலி உள்ளிட்ட பத்து நிறுவனங்களின் தலைவர்கள் மறுபுறமும் ஒருங்கே திரண்டனர்.
அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் சுறுசுறுப்பானது. இந்திய தொழிலதிபர்கள் தங்குவதற்காக நல்ல ஹோட்டல் அறைகளை அது தேர்ந்தெடுத்தது. ரத்தன் டாட்டா தங்குவதற்காக வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மிகப் பெரும் நட்சத்திர ஹோட்டலான வில்லார்ட் இண்டர் காண்டினெண்டல் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆப்ரஹாம் லிங்கன் உள்ளிட்டோர் தங்கியதால் சரித்திர பிரசித்தி பெற்ற இடம் இது.
இங்கு ரத்தன் டாட்டா தங்க இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் தனது சூட்கேஸை தானே எடுத்துக் கொண்டு வர, அறையில் நுழைந்து இந்திய தூதரகத்தினரைப் பார்த்து புன்சிரிப்புடன் ஜெய்ஹிந்த் என்றார். அனைவரின் நலனையும் விசாரித்தார்.
மறுநாள் காலை அவரை உரிய இடத்திற்கு அழைத்துச் செல்ல பணியாளர்கள் சென்ற போது அவரை அவரது அறையில் காணோம். அவரது உடைமைகள், பெட்டிகள் எதையும் காணோம். கலவரம் அடைந்த அனைவரும் நேரடியாக நட்சத்திர விடுதியின் வரவேற்பாளரிடம் ஓடினர். திடுக்கிட்ட அவர்களது கவலையை வில்லார்டின் பொது மேலாளர் போக்கினார். முதல் நாள் இரவு டாட்டா தங்களை அணுகி அந்த பிரமாண்டமான சூட் தனக்கு வேண்டாம் என்றும் ஒரு சிறிய சிங்கிள் அறை போதும் என்றும் கூறவே அவரது வேண்டுகோளுக்கிணங்கி ஒரு சிறிய அறை ஒதுக்கித் தரப்பட்டது என்று கூறினார்.
அனைவரும் அந்த அறைக்கு விரைந்தனர். அங்கே புன்சிரிப்புடன் தயாராக இருந்தார் டாட்டா. ஏன் அப்படி அவர் அந்த சிறிய அறைக்கு மாறினார் என்று கேட்கப்பட்ட போது, அவர் கூறிய பதில் இது: “என்னால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மிகவும் வருந்துகிறேன். ஆனால் இந்த பிரம்மாண்டமான சூட்டிற்கு ஆகும் செலவை என்னால் நியாயப்படுத்த முடியாது. எனது கம்பெனியின் பங்குதாரர்களுக்கு பதில் சொல்ல வேண்டியவன் நான். எனக்கு இந்த ஆடம்பரச் செலவு ஆகாதே!”.
இந்த பதிலால் அனைவரும் பிரமித்தனர். அவரது உயரிய நேர்மை, சிக்கனம், எளிமை, நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு அதிக லாபத்தொகையைத் தர வேண்டும் என்னும் அவரது உறுதி ஆகிய அனைத்தையும் சுட்டிக் காட்டிய இந்த சம்பவம் அனைவர் மனதிலும் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. “இவர் தான் டாட்டா” என்பதை அறிந்து அனைவரும் பூரித்தனர்.
26-10-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
Tama to nattekudaku to no kawara to natte matta karaji
Better be a broken jewel than a whole tile
முழு ஓடாக இருப்பதைவிட உடைந்துபோன நகையாக/ரத்தினமாக இருப்பது மேல்
****
Story for the proverb
In 500 CE, Prime Minister Gao Yang dethroned Emperor Xiaojiang declared himself Emperor
Wenxuman . he eliminated many officials , and relatives of the ryal house were killed. Yuan Jingan, magistrate of Dinxiang County , who was afraid to be killed, requested his name to be changed Gao , so as to please Emperor Wenxuman.
His cousin said to him
How could you abandon the name of your ancestor and adopt the name of another man ?
A hero woud rather be a brokne jade than a whole tile. Yuan jingan reported it to Gao Yang . His cousin was put to death and he was rewarded and promoted.
We have similar proverbs in Tamil
1654. எளியவனுக்குப் பெண்டாய் இருக்கிறதிலும் வலியவனுக்கு அடிமை ஆகிறது நல்லது. It is better to be the slave of the wealthy, than the wife of the indigent.
****
388. அவனே இவனே என்பதைவிடச் சிவனே சிவனே என்கிறது நல்லது. It is better to cry Siva, Siva, than opprobriously to reproach others.
****
421. அவிவேகி உறவிலும், விவேகி பகையே நன்று. Better is the hatred of the wise than the friendship of fools.
****
2457. காரிகை கற்றுக் கவி சொல்லுவதிற் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று. It is better to live by beating a drum than by composing verses according to the rules of prosody.
****
4535.Hunger is preferrable to eating food given without good feeling, a demoness is better than an unkind wife.
5098. மண்ணோடே பிறக்கலாம் உன்னோடே பிறந்ததில். It were better to be born of the earth, than to be your brother.
*****
5591.வழுவழுத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று. Inveterate hatred is better than fickle friendship.
****
487. அறவும் கொடுங்கோலரசன்கீழ்க் குடியிருப்பிற் குறவன்கீழ்க் குடியிருப்பு. (Better) to live in subjection to a mountaineer than to be the subject of a cruel tyrant.
****
663. ஆட்டைத் தேடி அயலாள் கையிற் கொடுப்பதைப்பார்க்க, வீட்டைக் கட்டி நெருப்பு வைப்பது நல்லது. It is better to build a house and set fireto it, than to buy sheep and place them under the care of others.
****
2221. கல்லார் உறவிலும் கற்றோர் பகை நலம். The enmity of the learned is better than the friendship of the illiterate.
****
1186. உங்கள் உறவிலே வேகிறதைப்பார்க்கிலும் ஒரு கட்டு விறகிலே வேகிறது நல்லது. It is better to be consumed by a faggot than by your friendship.
****
2545. கிழவனுக்கு வாழ்க்கைப்படுகிறதிலும் கிணற்றில் விழலாம். It is better to fall into a well than to marry an old man.
****
2943. கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டிற் கடும்புலி வாழும் காடு நன்று. A jungle inhabited by fierce tigers is better than a country ruled by a cruel tyrant.
—Subham—
Tags- Tamil, Chinese, Japanese, Proverbs, better than, Rather be a broken Jewel , than an intact Tile
BATCH TWO PICTURES; FIRST BATCH OF PICTURES WERE POSTED YESTERDAY; DON’T MISS THEM
Annual Diwali event on behalf of the Greater London Authority lead by London Mayor Sadiq Khan was held on Sunday 27th October 2024 at the Trafalgar Square in London. This year BSNL (Brahmin Society of NorthLondon ) took the leader role and made the function a grand success. Thousands and thousands attended it from 1 pm to 7 pm.
Many years ago, I attended the event and then decided not to go, because the Sikhs took the leader role and made it a dirty event with Bollywood dances and Non Veggy items. The smell was horrible. This year (2024), it was a completely different event with real Hindu Diwali items.
There were Yoga Stall, Bhajan Stall, Dance Stall, Hinduism stall etc. 10 to 15 street food stalls were there with long Queues in front of them.
****
Highlights of the event:
All organisations such as Jain, Hindu and Sikh organisations were given time slots to greet the people. Hare Krishna (ISKCON), Brahma Kumaris, Nepali Hindus also spoke.
Wonder of Wonders, Pakistani origin London Mayor Sadiq Khan garlanded Ganesh statue along with others and lit the Diwali lamps with others. All the people appreciated his gesture and thanked the mayor team for full support.
****
About the Cultural Events
Dance after dance was performed by various teams. One team came all the way from Cambridge. The function began with Drums.in between Bollywood songs, divine music was also heard. Indian High Commission was represented by Deputy H C Mr Gosh. I stayed there for three hours and covered 40 percent of the events. South Indians also did participate in the dance events.
In between the cultural items, Professor Steven who did good research on autism, explained the causes and requested full support for people with autism. No bad activity of parents cause autism, and it is one of the genetic things. People with autism got Ph.D.s and we see famous doctors and lawyers, accountants who has autism. Though he took five minutes he gave an informative report. One Ms. Geetha came with an autism boy.
The good thing is all the staged items were brief and did not take more than ten minutes. People from different walks of life and foreign tourists who frequent Trafalgar Square also joined the crowd.
Above all, London weather blessed the event with full sunlight which is very rare. A lot of volunteers maintained the crowd efficiently.
Hope every year we get such an event with good quality and standards.
Happy Diwali to our Readers.
Diwali is on 31st October 2024. But Gujarati Hindus celebrate it for four days and one of the days is New Year day for them.
So Happy New Year as well.
I have seen my accountant friends do Computer Puja on that day because all the accounting work is done by computer software!
I took 100 ++++ pictures. I will post them batch by batch.
–subham—
Tags- London Diwali, Year 2024, Trafalgar Square, Mayor Sadiq Khan, BSNL, Dance events, Part two, pictures
வேதகாலத்தை வான சாஸ்திரம் மூலம் கண்டுபிடித்த ஹெர்மன் ஜாகோபி Herman George Jacobi
ஹெர்மன் ஜாகோபி என்ற ஜெர்மானிய அறிஞர் வேத காலம் என்பது 6500 ஆண்டுகளுக்கு முன்னர் என்று கண்டுபிடித்தார். ஒரு அற்புதமும் நிகழ்ந்தது. ஜெர்மானியர் ஆராய்ச்சி பற்றி அறியாத மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் அதே முடிவை அறிவித்தார் . ஒரியன் அல்லது ஓரையன் நட்சத்திர கூட்டம் பற்றிய திலகரது புஸ்தகத்தில் இது வெளியானது.
ஹெர்மன் ஜாகோபி என்ற ஜெர்மானிய அறிஞர் பல துறைகளில் வல்லவர். கணிதம் பயின்றார். பின்னர் ஸம்ஸ்க்ருதமும் கற்றார். அவரது ஆசிரியர் வீபர் (WEBER).
இந்திய ஜோதிடம் மற்றும் ஹோரா என்ற சொல்லின் தோற்றம் என்ற தலைப்பில் செய்த ஆராய்ச்சிக்காக ஜாகோபிக்கு பான் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
இந்தியாவுக்கு இரு முறை வந்து நீண்ட காலம் தங்கினார். மனு ஸ்ம்ருதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பியூலருடன் ராஜஸ்தானில் பயணம் செய்தார். சமண மத மடங்களில் பேரார்வம் கொண்டு பழமை மாறாத சம்பிரதாயம் உடைய ஜைன மடங்களுக்குச் சென்றார்; அவர்களது ஆசார்யர்கள் எழுதிய நூல்களை ஜெர்மன் மொழியில் ஆக்கினார். யோகம், வைசேஷிகம் முதலிய துறைகளிலும் புஸ்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தார். சமண மத தீர்த்தங்கரர்கள் ஆன மகாவீரரும் பார்ஸ்வ நாதரும் வரலாற்று நாயகர்கள், கட்டுக்கதைகள் என்றும் அல்ல நிரூபித்தார். புத்த மதத்திலிருந்து உதித்ததே சமண மதம் என்று அக்காலத்தில் நிலவிய வாதத்தைத் தகர்த்தார். கல்வெட்டு ஆராய்சசியாளர்களுக்கு உதவும் இந்திய திதி அவற்றுக்கு நிகரான ஆங்கில ஆண்டு என்ற கால அட்டவணையை வெளியிட்டார். பெர்லின் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார் கல்கத்தா பல்கலைக்கழகம் இவரை விரிவுரை ஆற்ற அழைத்து கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
கணித அடிப்படையில் கிரகங்கள் நட்சத்திரங்களின் இயக்கத்தைக் கணக்கிட்டு வேத காலம் என்பது கி.மு 4500 BCE என்றும் அறிவித்தார்.
இப்போது விஞ்ஞானிகள் வேதத்திலுள்ள சூரிய கிரகணக் குறிப்புகளைக் கொண்டு ஜாகோபி, திலகர் ஆகியோர் சொன்னது சரியே என்று காட்டியுள்ளனர். வேத காலம் எனது சிந்து சரஸ்வதி தீர நாகரீகத்துக்கு முந்தியது என்பதை ஜாகோபி முதல் நவீன பாபா அணுசக்தி ஆராய்ச்சிக் கேந்திர விஞ்ஞானிகள், அமெரிக்க நாசா NASA விஞ்ஞானிகள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.
HERMAN GEORGE JACOBI 1850- 1937
பிறந்த தேதி – 1-2-1850
பிறந்த ஊர் – KOELN (Cologne)
இறந்த தேதி – 19-10-1937
கல்வி கற்ற இடம் – KOELN, BERLIN UNIVERSITY
அவரது குரு – A.WEBER
பார்த்த வேலைகள் – MUENSTER UNIVERSITY பேராசிரியர்.
DOCTORATE AWARDED BY – BONN UNIVERSITY, CALCUTTA UNIVERSITY
எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள் –
BOOKS OR ARTICLES ON INDIAN CALENDAR CALCULATIONSIN INSCRIPTIONS, YOGA, JAIN ACHARYAS, VAISHEKA SASTRA , JAIN PHILOSOPHY
Zwei Jainastotras (1876)
Jaina Sutras, Part I (1884) (Ākārāṅga Sūtra and Kalpa Sūtra)
Jaina Sutras, Part II (1895) (Uttarādhyayana and Sūtrakritāṅga)
Ausgewählte Erzählungen in Maharashtri (i.e. Selected tales of the Maharashtri, 1886)
The Computation of Hindu Dates in the Inscriptions (1892)
Das Ramayana, Geschichte und Inhalt nebst Concordanz nach den gedruckten Rezensionen (1893)
Compositum und Nebensatz, Studien über die indogermanische Sprachentwicklung (1897)
On the Antiquity of Vedic Culture (1908)
Schriften zur indischen Poetik und Ästhetik (i.e. Writings on Indian poetics and aesthetics, 1910)
Die Entwicklung der Gottesidee bei den Indern und deren Beweise für das Dasein Gottes (i.e. The development of the Indians’ idea of God and their proofs for God’s existence, 1923)
Über das ursprüngliche Yogasystem (i.e. About the original system of Yoga, 1929 / 1930)
ஹரிபத்ரா, விமலசூரி என்ற சமண ஆசிரியர்களின் நூல்களை மொழிபெயர்த்தார். பிராகிருத மொழியில் இருந்த சமண ராமாயணத்தை வெளியிட்டார். அபப்பிராம்ச என்ற மொழி பற்றி மேற்கோள்கள் மட்டுமே இருந்தன. அவர் இந்த மொழியையே கண்டுபிடித்து அப்படி ஒரு மொழி இருந்தது என்பதைக் காட்டினார். ஒப்பீட்டு மொழியியலில் இருந்த ஆர்வம் காரணமாக பிராகிருத மொழி பற்றியும் நிறைய எழுதினார் .
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் அவர் தொடாத இந்தியவியல் துறை எதுவும் இல்லை; பிராகிருதம், சம்ஸ்க்ருதம் ஜோதிடம் வானவியல், பஞ்சாங்கக் கணக்கீடு, சமண மதம், நியாயம் வைசேஷிகம், கணிதம், உயிரியல் ஆகிய எல்லாவற்ரையும் பற்றி எழுதினார் அவர் எழுதிய படைப்புகள் பல வாதப் பிரதிவாதங்களை எழுப்பின.
மஹாபாரதம் பற்றியும் தனது ஆராய்சசிகளை வெளியிட்டார் கவிதையியலில்( poetics) இருந்த ஆர்வம் காரணமாக ஆனந்தவர்த்தனவின் அலங்கார சாஸ்திரம் த்வனி ஆகியவற்றையும் மொழிபெயர்த்தார்.
14 Jul 2021 — உலகிலேயே மிகப் பழைய புஸ்தகமான ரிக் வேதத்தில் சூரிய கிரஹணம் பற்றி அத்ரி …
—Subham—-
Tags- Herman Jacobi, Jai Studies, Age of Vedas, வேதகாலம், வான சாஸ்திரம், ஹெர்மன் ஜாகோபி, சமண மத ஆராயச்சி , கல்வெட்டு காலம் , கணக்கீடு , அபிப்பிராம்ச மொழி , சமண ராமாயணம்
3. அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோஹிணி, மிருகசீரிஷம், ஆருத்ரா, புனர்வசு, புஷ்யம், ஆஸ்லேஷம், மகம், பூரம், உத்தரா, ஹஸ்தா, சித்ரா, ஸ்வாதி, விசாகா,அனுராதா, ஜேஷ்டா, மூலம், பூர்வாஷாடா, உத்தராஷாடா ஸ்ரவணம், ஸ்ரவிஷ்டா, சதபிஷக், பூர்வபத்ரா, உத்தரபத்ரா, ரேவதி என்றும் ஜோதிட ரீதியாக இந்த 27 நட்சத்திரங்கள் குறிப்பிடப்படும்.
4. ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் உண்டு.
5. ஒவ்வொரு ராசிக்கும் 9 பாதங்கள் உண்டு.
6. ஆக 12 ராசிகளில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் வீதம் 27 நட்சத்திரங்களுக்கு (27×4 = 108) பாதங்கள் வரும்.
7. ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரிகள் உண்டு.
8. 12 ராசிகளுக்கு 360 டிகிரிகள் வரும்.
9. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியவை நவ கிரகங்கள் ஆகும்.
10. இந்த நவ கிரகங்கள் சுப மற்றும் அசுப (தீய) கிரகங்கள் என இருவகையாக பகுக்கப்படும்.
11. குரு, சுக்ரன், சரியான நல்ல சேர்க்கையில் இருக்கும் புதன், பௌர்ணமி சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள்.
12. சூரியன், அமாவாசை சந்திரன், தீய சேர்க்கையில் இருக்கும் புதன். செவ்வாய், சனி, ராகு,கேது ஆகியவை அசுப (தீய) கிரகங்கள்.
13. ஜனன காலத்தில் ஜாதகத்தில் உள்ள இடத்திலிருந்து ஏழாம் இடத்திற்கு அனைத்து கிரகங்களுக்கும் பார்வை உண்டு.
14. குரு தனது இடத்திலிருந்து ஐந்தாம் இடத்தையும் ஒன்பதாம் இடத்தையும் வலிமையுடன் பார்க்கும்.
15. செவ்வாய் தனது இடத்திலிருந்து நான்காம் இடத்தையும் எட்டாம் இடத்தையும் வலிமையுடன் பார்க்கும்.
16. சனி தனது இடத்திலிருந்து மூன்றாம் இடத்தையும் பத்தாம் இடத்தையும் வலிமையுடன் பார்க்கும்.
17. நல்ல சுப பார்வை நல்ல விளைவுகளைத் தரும்.
18. தீய பார்வை தீய விளைவுகளைத் தரும்.
19. இந்த இடங்களில் இந்தப் பார்வைகள் ஏழாம் பார்வையை விட விளைவுகள் அதிக சக்தியுடன் இருக்கும்.
20. தீய மற்றும் நல்ல பார்வைகள் கலந்திருந்தால் விளைவுகளும் அப்படியே தீய மற்றும் நல்ல விளைவுகள் கலந்ததாக இருக்கும்.
21. கிரகங்களில் சில நட்பு கிரகங்கள்.
22. கிரகங்களில் சில எதிரி கிரகங்கள்.
23. கிரகங்களில் சில சேர்க்கை கிரகங்கள்.
24. நட்பு நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமானதாகவோ இருக்கக்கூடும்.
25. நட்பு கிரகங்கள் நலத்தைத் தர, எதிரி கிரகங்கள் தீயதைத் தர சேர்க்கை கிரகங்கள் நடுநிலைமையுடன் இருக்கும்.
26. சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை ஒரு குழு.
27. புதன், சுக்ரன், சனி இன்னொரு குழு.
28. ஒரு குழு இன்னொரு குழுவை வெறுக்கிறது.
29. ஆனால் சந்திரன் மட்டும் எந்தக் குழுவிலும் சேரவில்லை என்பதால் எதிரிகளே சந்திரனுக்கு இல்லை.
30. குரு, செவ்வாய். சூரியன் ஆகியவை ஆண்கள்.
31. சுக்ரன், ராகு, சந்திரன் ஆகியவை பெண்கள்.
32. சனி, புதன், கேது ஆகியவை அலிகள்.
33. ஒரு கிரகத்தின் செல்வாக்கே, ஒரு பெண்ணானவள் பெறப் போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை நிர்ணயிக்கிறது.
34. இத்துடன் குழந்தையின் சகோதரர்களையும், குழந்தைகளையும் நிர்ணயிக்கிறது.
35. குரு, சூரியன், சந்திரன் ஆகியவை தெய்வீக கிரகங்கள் அல்லது சாத்வீக கிரகங்களாகும்.
36. இவை ஒரு ஜாதகரை சாத்விகவாதி, சத்யவாதி,இரக்கத்தன்மை உடையவர்,அன்பு பாராட்டுபவர், நன்கொடையாளர் ஆக்கும்.
37. சுக்ரன், புதன் ராஜஸத்தைக் குறிக்கும்.
38. இவை ஒரு ஜாதகரை தனி உயர் ரகமாக்குவதோடு, காதல் வாழ்க்கை, கலை, விஞ்ஞானத்தில் மேன்மை, பெண்களின் மீது நேசம், தைரியம், ஆடம்பர வாழ்க்கை கொண்டவர்களாக ஆக்கும்.
39. செவ்வாய், சனி தாமஸத்தைக் குறிக்கும்.
40. இவை கடுமையான சுபாவத்தையும், ஏமாற்றுவோராகவும், கதை கட்டுபவராகவும், சண்டை இடுபவர்களாகவும் கடுமையானவர்களாகவும், சோம்பேறிகளாகவும், இரக்கமற்றவர்களாகவும், பழி வாங்குபவர்களாகவும், தூங்குவதில் விருப்பம் உள்ளவர்களாகவும், கீழ்த்தர ஆசை உடையவர்களாகவும், தகுதியற்ற பெண்களாகவும் ஆக்கும்.
41. சூரியனும் செவ்வாயும் உக்கிரமான கிரகங்கள்.
42. புதன் நிலம் சார்ந்த கிரகம்.
43. சனி வாயு கிரகம்.
44. குரு தெய்வீக கிரகம்.
45. சுக்ரன், சந்திரன் நீர் சார்ந்த கிரகங்கள்.
46. சூரியனின் வர்ணம் தாமிரம்.
47. சந்திரனின் வர்ணம் வெண்மை
48. செவ்வாயின் வர்ணம் இரத்தச் சிவப்பு.
49. புதனின் வர்ணம் பச்சை.
50. குருவின் வர்ணம் பிரகாசமான மஞ்சள்.
51. சுக்ரனின் வர்ணம் அனைத்து வண்ணங்களின் கலவை.
52. சனியின் வர்ணம் கறுப்பு.
இந்த அடிப்படை விவரங்களை ஜோதிட ஆர்வலர் ஒவ்வொருவரும் அறிதல் இன்றியமையாதது.
இன்னும் சில அடிப்படை ஜோதிடங்களை அறிய நம் பயணத்தைத் தொடர்வோம்.
Annual Diwali event on behalf of the Greater London Authority lead by London Mayor Sadiq Khan was held on Sunday 27th October 2024 at the Trafalgar Square in London. This year BSNL (Brahmin Society of NorthLondon ) took the leader role and made the function a grand success. Thousands and thousands attended it from 1 pm to 7 pm.
Many years ago, I attended the event and then decided not to go, because the Sikhs took the leader role and made it a dirty event with Bollywood dances and Non Veggy items. The smell was horrible. This year (2024), it was a completely different event with real Hindu Diwali items.
There were Yoga Stall, Bhajan Stall, Dance Stall, Hinduism stall etc. 10 to 15 street food stalls were there with long Queues in front of them.
****
Highlights of the event:
sadiq Khan garlanding Ganesh Idol
All organisations such as Jain, Hindu and Sikh organisations were given time slots to greet the people. Hare Krishna (ISKCON), Brahma Kumaris, Nepali Hindus also spoke.
Wonder of Wonders, Pakistani origin London Mayor Sadiq Khan garlanded Ganesh statue along with others and lit the Diwali lamps with others. All the people appreciated his gesture and thanked the mayor team for full support.
****
About the Cultural Events
Dance after dance was performed by various teams. One team came all the way from Cambridge. The function began with Drums.in between Bollywood songs, divine music was also heard. Indian High Commission was represented by Deputy H C Mr Gosh. I stayed there for three hours and covered 40 percent of the events. South Indians also did participate in the dance events.
In between the cultural items, Professor Steven who did good research on autism, explained the causes and requested full support for people with autism. No bad activity of parents cause autism, and it is one of the genetic things. People with autism got Ph.D.s and we see famous doctors and lawyers, accountants who has autism. Though he took five minutes he gave an informative report. One Ms. Geetha came with an autism boy.
The good thing is all the staged items were brief and did not take more than ten minutes. People from different walks of life and foreign tourists who frequent Trafalgar Square also joined the crowd.
Above all, London weather blessed the event with full sunlight which is very rare. A lot of volunteers maintained the crowd efficiently.
Hope every year we get such an event with good quality and standards.
Happy Diwali to our Readers.
Diwali is on 31st October 2024. But Gujarati Hindus celebrate it for four days and one of the days is New Year day for them.
So Happy New Year as well.
I have seen my accountant friends do Computer Puja on that day because all the accounting work is done by computer software!
I took 100 ++++ pictures. I will post them batch by batch.
–subham—
Tags- London Diwali, Year 2024, Trafalgar Square, Mayor Sadiq Khan, BSNL, Dance events,part one
கதாசரித் சாகர நூல் கதைகளிலும் விக்ரமாதித்யன் வேதாளம் கதைகளிலும் பேய்கள் பற்றி வருவதை எல்லோரும் அறிவோம். எழுபது செட்டியார்ககளைக் கொன்ற அதி பயங்கர தமிழ்ப் பெண் பேய் நீலியைத் திருமூலர் பாடியுள்ளார். திருஞான சம்பந்தர் அந்தப் பழையனூரில் நுழையாமல் சுற்றிச் சென்றார். தமிழ்ப் பழமொழிகளில் பெண்களை வசைபாடும்போது நீலி என்று திட்டுகிறார்கள்.ஆக பழமொழிகளில் நீலியைக் காணலாம். தவறு செய்யும் பிராமணர்கள் பிரம்ம ராக்ஷஸ் என்னும் பிராமணப் பேயாகப் பிறப்பார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன ஏழு ஜாடி தங்கமும் அம்பட்டனும் என்ற கதையையும் நாம் அறிவோம். அ னந்த ராம தீட்சிதர் ஜெயமங்கள ஸ்த்தோத்திரம் எட்டாவது பகுதியில் புளிய மரத்தில் வசித்து ஒரு குடும்பத்தைத் துன்புறுத்திய பேயை விரட்டியதை விரிவாக எழுதியுள்ளார். இவை அனைத்தும் இந்த பிளாக்கில் 13 ஆண்டுகளில் கட்டுரையாக வந்துள்ளன. புஸ்தகமாகவும் வெளிவந்துவிட்டது
இதே போன்ற நம்பிக்கைகள் ஐரோப்பா முழுவதும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் நிலவியது. இப்போதும் ஆண்டுதோறும் அக்டோபர் 31 ஆம் தேதி பேய்கள் தினம் (HALLOWEEN DAY) கொண்டாடப்படுகிறது; சிறுவர்கள் பேய் வேடம் அணிந்து வீடு வீடாகச் சென்று ட்ரிக் ஆர் ட்ரீட் TRICK OR TREAT “விஷமத்தைக் காட்டவா அல்லது விருந்து படைக்கிறீர்களா” என்று கேட்பார்கள்; உடனே நாங்கள் கதவைத் திறந்து சாக்லேட், பிஸ்கட் முதலிய ‘சுவீட்’டுக்களைத் தருவோம். லண்டனில் வசிக்கும் நான் போன வாரம் சூப்பர் மார்க்கெட் சென்று இரண்டு பெரிய சாக்லேட் டின் TIN களை வாங்கி வைத்துள்ளேன்; என் பேரப்பிள்ளைகள் நேற்று ஆஸ்திரேலியாவிலிருந்து அனுப்பிய புகைப்படத்தில் அவர்கள் புதிய பேய் உடைகளை அணிந்திருந்ததைக் கண்டு சிரித்து மகிழ்ந்தோம். ஆண்டுதோறும் பிரிட்டிஷ் பத்திரிகைகள் பேய் வீடுகள் பட்டியலை வெளியிடுகின்றன. புதிய பேய்க் கதைகளையும் வெளியிடுகின்றன . அக்டோபர் என்பது ஐரோப்பாவில் பேய்கள் சீசன். இந்தியாவிலும் ஒவ்வொரு கிராமத்திலும் பேய்கள் கதைகளைக் கேட்கலாம். சூதாடிகள் குடிகாரர்கள் கொள்ளைக்கார்கள் தங்கள் இரவு நேரத்தில் நடமாடும் இடங்களில் மக்கள் வராமலிருக்கவும் புதிய பேய்க் கதைகளை எட்டுக்கட்டி உலவ விடுகிறார்கள் நிற்க.
****
இதோ ஷேக்ஸ்பியர் சொல்லும் பேய்கள் பற்றிய வசனங்கள்:– .
பேய்கள் குறைந்தது ஐந்து நாடககங்களில் மேடையில் தோன்றுகின்றன . சில நேரத்தில் இது எல்லோருக்கும் தெரியாது; ஒரே ஒரு கதாபாத்திரத்துக்கு மட்டுமே தோன்றும்.
ஜூலியஸ் சீசர்
ஹேம்லெட்
மூன்றாம் ரிச்சர்ட்
மாக்பெத்
சிம்பலின்
(five Shakespearean plays: Julius Caesar, Hamlet, Richard the Third, Macbeth and Cymbeline.)
பொதுவாக கொலை செய்யப்பட்டவர்கள் பேய்களாகத் தோன்றி பழிவாங்கு என்று கட்டளை இடுவார்கள். அல்லது வரப்போகும் கொலை பற்றி எச்சரிப்பார்கள்.
இவைதவிர சூன்யக்காரிகள். அபசகுனங்கள், பயங்கரத் தோற்றங்கள் ஆகியவற்றையும் ஷேக்ஸ்பியர் பயன்படுத்துகிறார். ஆக கெட்ட சகுனங்கள், பேய்கள், பறவை சகுனங்கள், வானத்தில் தோன்றும் ரத்தச் சிவப்பான சந்திர சூரியன்கள், அதி பயங்கர சப்தங்கள் இவைகளையெல்லாம் கணக்கில் சேர்த்தால் நூற்றுக்கும் மேலான வசனங்களைக் காணலாம். இவை ஐரோப்பிய மக்களின் நம்பிக்கைககளைப் பிரதிபலிக்கும் காட்சிகள்.
ஹேம்லட் நாடகத்தில் மூத்த ஹேம்லட் பேயாக வருகிறார்; மாக்பெத் நாடகத்தில் பாங்கோ என்னும் கதாபாத்திரம் பேயாக வருகிறார்; . மூன்றாம் ரிச்சர்ட் நாடகத்தில் அவரால் கொலை செய்யப்பட்டவர்கள் பேய்களாகத் தோன்றுகிறார்கள் ; ஜூலியஸ் சீசரின் அவரே கொலை செய்யப்பட பின்னர் பேயாக வருகிறார்;
சிம்பலின் நாடகத்தில் தாய் தந்தை சகோதரர்கள் பேய்களாகத் தோன்றுகிறார்கள் .
The appearance of a ghost in the opening scenes of “Hamlet” suggests that this is a play with Catholic sympathies at a time when this was a dangerous affiliation. Ghosts were a feature of the world of superstition and witchcraft that Protestant Europe wanted to leave behind, making the appearance of the ghost of Hamlet’s father a provocative gesture.
மத்திய காலத்தில் ஐரோப்பாவில் நிலவிய அச்சத்தை மூர்மேன் என்பவர் ஆங்கிலத்தில் புஸ்தகமாக எழுதியுள்ளார். குற்றவாளிகள், தற்கொலை செய்து கொண்டோர், கொலை செய்யப்பட்டோர் வெளியே பேயாக உலாவுவார்கள் ;சில நேரங்களில் மனிதர்களை நெருங்கி வசிப்பார்கள் ; நள்ளிரவில் தோன்றி சேவல் கூவும்போது மறைந்துவிடுவார்கள்; அவரகள் அருகிலே வரும்போது விளக்குகள் மங்கலாக எரியத் தொடங்கும். அமெரிக்காவிலும் இந்தக்கருத்து உண்டு. இது கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு பேருதவியாக வந்தது. அவர்கள் ஆத்மாக்களை சுத்திகரிக்கும் ஒரு நரகம் PURGATORY உண்டு என்பர். இங்கிலாந்து போன்ற பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் அதை ஏற்பதில்லை. இங்கிலாந்தில் அந்தக் காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையெல்லாம் மனதிற்கொண்டு ஷேக்ஸ்பியர் வசனம் எழுதினார் என்று உரைகாரர்கள் பாஷ்யம் எழுதியுள்ளனர்.
இங்கிலாந்துவாசிகளுக்கு VIOLENCE கொடுமைகள் என்றால் பிடிக்கும். அந்தக்காலத்தில் பல இடங்களில் கரடி- நாய் சண்டை, காளைமாடு- நாய், சண்டை, ஆட்டுக்கிடா சண்டை ஆகியவற்றை ஏற்பாடு செய்து கரடிகளையும் காளைகளையும் வேட்டை நாய்கள் குதறுவதைப் பார்த்து ஆனந்தக் கூச்சல் இட்டார்கள். . இதே போல யாராவது லண்டன் டவரில் தூக்குத் தண்டனையில் தொங்கவிடப்பட்டால் அதைப் பார்த்தும் ஆனந்த ஆரவாரம் செய்வார்கள்; எட்டாவது ஹென்றி என்ற கிராதகன் எட்டு மனைவிகளில் நாலு பேரைத் தூக்கில் தொங்கவிட்டான் . அதைப் பார்க்க பிரம்மாண்டமான கூட்டம் ஒவ்வொரு மஹாராணி இறக்கும் போதும் பெரிய கொண்டாட்டம். இதையெல்லாம் அப்போது ஆங்கிலத்தில் எழுதியும் வைத்துள்ளனர். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பதால் ஷேக்ஸ்பியரும் பல நாடகங்களில் வன்முறைக் காட்சிகளை நுழைத்து மக்களை ஆனந்தப் படுத்தினார்.
அதற்கு முன்னர் ரோமானிய ஸாம் ராஜ்யத்தில் மனிதனையும் மிருகத்தையும் சண்டைபோடவிட்டு மன்னர்களும் மக்களும் வேடிக்கை பார்த்தனர். ஸ்பெயினில் அண்மைக்காலம் வரை மஞ்சுவி ரட்டில்- ஜல்லிக்கட்டில் காளை மாடுகளை கோரமாக குத்திக் கொன்றதை மக்கள் பார்த்து ரசித்தனர் வன்முறை என்றால் அவர்களுக்கு லட்டு, அல்வா!! நமது நாடக ஆசிரியர் ட்ராஜெடி TRAGEDY நாடகங்களை எழுதி அதைக் காசாக்கிக்கொண்டார் .
ஷேக்ஸ்பியருக்குப் பேய்களில் நம்பிக்கை உண்டா என்பதையும் ஆங்கில உரைகாரர்கள் விவாதித்து எதிரும் புதிருமாகக் கட்டுரைகளை வரைந்துள்ளார்கள்.
ஷேக்ஸ்பியர் காலத்தில் வேறு இரண்டு நாடகங்கள் பிரபலம் ஆகியிருந்தன; ஒன்று ஸ்பானிஷ் ட்ராஜெடி; அதில் பேய்தான் முக்கிய கதாபாத்திரம் இன்னொரு நாடகம் டாக்டர் பாஸ்டஸ் SPANISH TRAGEDY, DR FAUSTUS அதில் மந்திரவாதி வருகிறார். அவை இரண்டும் வெற்றி நடை போட்டதால் ஷேக்ஸ்பியரும் பேய்களையும் பயங்கர சகுனக் காட்சிகளையும் அறிமுகப்படுத்தினார் என்று பலரும் சொல்வர். இன்னும் சிலர் அவருக்கும் பேய்களில் நம்பிக்கை இருந்ததால்தான் அதை எழுதினார் என்பார்கள்.
****
இதோ பேய்கள் வரும் நாடகக் காட்சிகள்
Ghostly Quotes of Shakespeare
A collection of Shakespearean quotations on ghosts, witches and omens :
I have heard (but not believ’d) the spirits of the dead
May walk again: if such thing be, thy mother
Appeared to me last night; for ne’er was dream
So like a waking.
(The Winter’s Tale, 3.3)
Angels, and ministers of grace, defend us!
Be thou a spirit of health, or goblin damn’d.
Bring with thee airs from heaven, or blasts from hell.
Be thy intents wicked or charitable.
Thou com’st in such a questionable shape,
That I will speak to thee.
(Hamlet, 1.4)
But, soft: behold! lo where it comes again!
I’ll cross it, though it blast me. – Stay, illusion!
If thou hast any sound, or use a voice.
Speak to me.
(Hamlet, 1.1)
O, answer me:
Let me not burst in ignorance! but tell,
Why thy canoniz’d bones, hears’d in death,
Have burst their cerements! why the sepulchre,
Wherein we saw thee quietly inurn’d.
Hath op’d his ponderous and marble jaws,
To cast thee up again.
(Hamlet, 1.4)
Why, what care I ? If thou canst nod, speak too, –
If charnel-houses, and our graves, must send
Those that we bury, back, our monuments
Shall be the maws of kites.
(Macbeth, 3.4)
The ghost of Caesar hath appear’d to me
Two several times by night : at Sardis, once;
And, this last night, here in Philippi fields.
I know, my hour is come.
(Julius Caesar, 5.5)
Glendower. – I can call spirits from the vasty deep.
Hotspur. – Why, so can I; or so can any man:
But will they come when you do call for them ?
(1 Henry IV, 3.1)
Infected he the air whereon they ride,
And damned all those that trust them.
(Macbeth, 4.1)
The night has been unruly: where we lay,
Our chimneys were blown down; and, as they say,
Lamentings heard i’ the air; strange screams of death,
And prophesying with accents terrible
Of dire combustion and confused events
New hatch’d to the woeful time: the obscure bird
Clamour’d the livelong night: some say, the earth
Was feverous and did shake.
(Macbeth, 2.3)
By the pricking of my thumbs,
Something wicked this way comes.
(Macbeth, 4.1)
In ranks and squadrons and right form of war,
Which drizzled blood upon the Capitol;
The noise of battle hurtled in the air,
Horses did neigh, and dying men did groan,
And ghosts did shriek and squeal about the streets.
(Julius Caesar, 2.2)
The bay-trees in our country are all wither’d
And meteors fright the fixed stars of heaven;
The pale-faced moon looks bloody on the earth
And lean-look’d prophets whisper fearful change.
(Richard II, 2.4)
For night’s swift dragons cut the clouds full fast,
And yonder shines Aurora’s harbinger;
At whose approach, ghosts, wandering here and there,
Troop home to churchyards: damned spirits all,
That in crossways and floods have burial,
Already to their wormy beds are gone.
(A Midsummer Night’s Dream, 3.2)
The southern wind
Doth play the trumpet to his purposes,
And by his hollow whistling in the leaves
Foretells a tempest and a blustering day.
(1 Henry IV, 5.1)
Well may it sort that this portentous figure
Comes armed through our watch; so like the king
That was and is the question of these wars.
(Hamlet, 1.1), Bernardo to Horatio, speaking of Hamlet’s father’s ghost.
As stars with trains of fire and dews of blood,
Disasters in the sun; and the moist star
Upon whose influence Neptune’s empire stands
Was sick almost to doomsday with eclipse:
And even the like precurse of fierce events,
As harbingers preceding still the fates
And prologue to the omen coming on,
Have heaven and earth together demonstrated
Unto our climatures and countrymen.
(Hamlet, 1.1)
At my nativity
The front of heaven was full of fiery shapes,
Of burning cressets; and at my birth
The frame and huge foundation of the earth
Shaked like a coward.
(1 Henry IV, 3.1)
No natural exhalation in the sky,
No scope of nature, no distemper’d day,
No common wind, no customed event,
But they will pluck away his natural cause
And call them meteors, prodigies and signs,
Abortives, presages and tongues of heaven.
(King John, 3.4)
Calpurnia here, my wife, stays me at home:
She dreamt to-night she saw my statua,
Which, like a fountain with an hundred spouts,
Did run pure blood: and many lusty Romans
Came smiling, and did bathe their hands in it:
And these does she apply for warnings, and portents,
And evils imminent; and on her knee
Hath begg’d that I will stay at home to-day.
(Julius Caesar, 2.2)
Is this a dagger which I see before me,
The handle toward my hand? Come, let me clutch thee.
26 Mar 2016 – Tansen and Tamarind Tree! Ghosts in Tamarind Trees! (Post No 2666). tansen tomb. Research Article by london swaminathan. Date: 26 March ..
23 Dec 2012 — This is a story that shook the ancient Tamil Nadu. Neeli in her second birth took revenge upon 72 people and killed all of them. If there is a …
3.பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post No.13,824)
Part Three (Last Part)
அதிகம் கேட்டிராத நீதி வெண்பாப் பாடலைப் பார்ப்போம்:
அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமுங்
கத்து புனல் மீன் பதமுங் கண்டாலும் — பித்தரே
கானார் தெரியற் கடவுளருங் காண்பரோ
மானார் விழியார் மனம்.
பொருள்:
பெண் மயக்கம் கொண்ட பைத்தியக்காரர்களே! அருமையான அத்திப் பூவும், காக்கையின் வெள்ளை நிறமும், கடலில் உள்ள பெரு மீன்களின் கால்களும் ஒருக்கால் பார்க்க இயன்றாலும் பெண்களின் மன நிலையை நம்மால் காண/ அறிய முடியாது. மான் பார்வை போலும் மருண்ட கண்களை உடைய அப்பெண்களின் நெஞ்சத்தை தேவர்களும் காண மாட்டார்.
மனைவிக்கு அஞ்சுவோன் மீது அம்பலவாணர் தாக்குதல் (11,644)
றப்பளீசுர சதகத்தை எழுதிய அம்பலவாணர் , 56, 57 பாடல்களில் சாதாரணமாக உலகறிந்த விஷயங்களைப் பற்றித்தான் கதைக்கிறார். ஆயினும் வீணர்கள்,– அதாவது வெட்டிப் பயல்கள் —-பற்றியும் கெட்ட விஷயங்கள் (Useless) பற்றியும் சொல்லி அவைகளுக்கு – மார்க் Mark – மதிப்பெண் போடுகிறார் . அதாவது எதைவிட எது மோசம் என்று வரிசைப் படுத்துகிறார்.
மாமனார் வீட்டில் உறைவோரும் – 35/100 fail mark
வெட்டி அரட்டையை விரும்புவோரும் – 30 marks
விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடுவோரும் – 25 marks
படிப்பில்லாதவரும்- 20 marks
கல்லாத பேர்வழிகள் மீது கவிதை பாடுவோனும் – 15 marks ,
மக்களைச் சுமக்கும் பல்லக்கு தூக்கிகளும் – 10 marks
பொருளைத் தேடும் அறிவற்றவர்களும் – 5 marks
வரவவே இல்லாமல் செலவுசெய்வோரும்- o marks வீணர் (Useless Fellows)
அறப்பளீசுர சதகம் 56. வீணர்
வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீணுரை
விரும்புவோர் அவரின் வீணர்!
விருந்துகண் டில்லாள் தனக்கஞ்சிஓடிமறை
விரகிலோர் அவரின் வீணர்!
நாட்டம் தரும்கல்வி யில்லோரும் வீணரே!
நாடி அவர் மேற்கவி சொல்வார்
நானிலந் தனில்வீணர்! அவரினும் வீணரே
நரரைச் சுமக்கும் எளியோர்!
தேட்டறிவி லாதபெரு வீணரே அவரினும்
சேரொரு வரத்தும் இன்றிச்
செலவுசெய் வோர் அதிக வீணராம்! வீணனாய்த்
திரியும்எளி யேனை ஆட்கொண்
டாட்டஞ்செ யும்பதாம் புயம்முடியின் மேல்வைத்த
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடி மறையும் அறிவு இல்லாதவர் வீணர்”
அவ்வையார் தாக்குதல்
அவ்வையார் பசியுடன் நடந்து கொண்டிருந்தார் ; அதைக் கண்ட ஒரு ஆடவனுக்கு கருணை உள்ளம்;
ஏ கிழவி என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போ என்றான்.; ஆனால் அவன் மனைவியோ அடங்கா பிடாரி; மஹா முரடு; இருந்த போதிலும் அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அவ்வைக் கிழவிக்கு சோறு போட்டு விடலாம் என்று அவன் தப்புக்கு கணக்குப் போட்டான்; வீட்டுத் திண்ணையில் அவ்வையாரை உட்காரவைத்து விட்டு மனைவியைத் தடவிக்கொடுத்து, தலையை வாரிவிட்டு பேன்களை எல்லாம் எடுத்துவிட்டு அன்பே ஆருயிரே ஒரு விருந்தாளியை அழைத்து வந்துள்ளேன்; பாவம் அவள் ஒரு கிழவி என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் காளி போல தாண்டவம் ஆடினாள் ; வசை மாறி பொழிந்தாள்; அதுவும் போதாதென்று பழைய முறத்தை எடுத்து கணவனை அடித்து ஓட ஓட விரட்டினாள் ; அவ்வைக் கிழவிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி; மறு பக்கம் ஒரே சிரிப்பு ; சும்மாவா விடுவார் ஒரு பாடலையும் பாடினார்:—
இருந்து முகம் திருத்தி ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்ததென விளம்ப –வருந்தி
ஆடினாள் … பாடினாள்; ஆடிப்பழ முறத்தால்
சாடினாள் ஓடோடத்தான்.– தனிப்பாடல்கள்
XXXX
இரண்டாவது அதிர்ச்சி
அவ்வையார் கொஞ்ச தூரம் நடந்து போனார்; பசியோ வயிற்றைக் கிள்ளியது ; ஒரு ஆண் மகனைக் கண்டு ,
அப்பா, ரொம்ப பசிக்கிறது; சாப்பிட ஏதாவது கொடு என்றாள் ; அவனும் அன்போடு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்; அவன் மனைவியும் முரடு; இருந்தபோதிலும் வேண்டா வெறுப்போடு முகத்தைச் சுளித்துக்கொண்டு உணவு பரிமாறினாள்; கரண்டியை வைத்து அடிக்காத குறைதான்.
வெளியே வந்த அவ்வையார் இரண்டு ,மூன்று
பொன்மொழிகளை உதிர்த்துச் சென்றார்.
காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது.
அன்பில்லாத மனைவி இட்ட அமுது அவர் நெஞ்சசத்தைப் பிளந்தது ; கொட்டித் தீர்த்துவிட்டார்
****
அத்தோடு நிறுத்தவில்லை; அந்த ஆடவனுக்கு அறிவுரையும் வழங்கினாள் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறு ; நல்ல குருவைப் பார்த்து சன்யாசம் வாங்கிக்கொள்; உனக்கு நிம்மதியான வாழ்வும் கிட்டும்; அடியார்கள் அன்போடு கொண்டுவரும் உணவும் கிடைக்கும் என்கிறார்.
சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு
கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே
தொண்டா செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன
செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்
பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்
எத்தாலும் கூடி யிருக்கலாம் – சற்றேனும்
ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்.
****
பெண்கள் பற்றிய என்னுடைய புஸ்தகங்களில் ஏற்கனவே உள்ள விஷயங்கள்:–
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சம்ஸ்கிருதசெல்வம்
சுபாஷிதமஞ்சரி –சுபாஷிதங்கள்– 1
ச.நாகராஜன்
ஆர்ய சமாஜ் பவுண்டேஷன் சென்னை – நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சுபாஷித மஞ்சரி என்னும் டிஜிடல் புத்தகத்தில் உள்ள சில சுபாஷிதங்கள் இங்கு தமிழில் தரப்படுகிறது.
மூலத்தில் சம்ஸ்கிருத மூலமும் ஆங்கில மொழிபெயர்ப்பும் தரப்பட்டுள்ளது.
இங்கு சம்ஸ்கிருத மூலம் தமிழில் தரப்பட்டிருக்கிறது.
ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பின் தமிழாக்கம் என்னால் செய்யப்பட்டிருக்கிறது.
கைகளுக்கு அழகு தானம் வழங்குதல். தொண்டைக்கு அழகு சத்யம் பேசுதல்.
சாஸ்த்ரங்களைக் கேட்பது காதுகளுக்கு அழகு. (இப்படி இருக்கையில்) மற்றவற்றால் என்ன பிரயோஜனம்?
2
கோதிபார: சமர்தானாம் கிம் தூரம் வ்யவசாயினாம் |
கோ விதேஷ: ஸவித்யானாம் க: பர: ப்ரியவாதினாம் ||
பலசாலிக்கு எது தான் அதிக பாரமாகும்? தளர்ச்சி அடையாதவனுக்கு எது தான் தூரமாகும்? படித்தவனுக்கு எது தான் அயல் தேசம்? பிரியமாகப் பேசுபவனுக்கு யார் தான் அந்நியமாவான்?
3
தாராணாம் பூஷணம் சந்த்ர: நாரீணாம் பூஷணம் பதி: |
ப்ருதிவ்யா: பூஷணம் ராஜா வித்யா சர்வஸ்ய பூஷணம் ||
நட்சத்திரங்களுக்கு ஆபரணம் சந்திரன். பெண்ணுக்கு ஆபரணம் அவளது கணவன். பூமிக்கு ஆபரணம் அரசன். வித்யாவே (கல்வியே) அனைவருக்கும் ஆபரணம்.
வித்யைக்கும் அரசாள்வதற்கும் ஒரு விதமான ஒப்பீடும் இல்லை. ஏனெனில் அரசன் அவனது ராஜ்யத்தில் மட்டுமே மதிக்கப்படுகிறான். ஆனால் ஒரு வித்வானோ எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறான்.
மனதிற்கு மனம் அறிவு வேறுபடுகிறது. குளத்திற்குக் குளம் ஜலம் வேறுபடுகிறது. தேசத்திற்கு தேசன் சம்பிரதாய பழக்க வழக்கங்கள் மாறுபடுகிறது. வாய்க்கு வாய் பேச்சு வேறுபடுகிறது.
7
ஆகாஷே சந்த்ரமா பாதி பத்மம் பாதி சரோவரே |
சுபுத்ரஸ்து குலே பாதி சுந்ருபோ தரணீதலே ||
சந்திரன் ஆகாயத்தில் ஒளிர்கிறான். தாமரை குளத்தில் அழகாக ஒளிர்கிறது. அதே போலவே ஒரு நல்ல குடும்பத்தில் நல்ல புத்திரன் ஒளிர்கிறான். பூமியில் ஒரு நல்ல அரசன் ஒளிர்கிறான்.