ஒப்பிட்டு ஆராய்ந்த பிரான்ஸ் பாப்Franz Bopp 1791- 1867 .
சம்ஸ்க்ருத ராமாயணத்தை அகராதி
துணையின்றி படித்த ஜெர்மானியர்
முதலில் பிரான்ஸ் பாப் செய்த சாதனைகளை பார்ப்போம்
நிறைய ஜெர்மானிய சம்ஸ்க்ருத அம்ம்மா றிஞர்கள் அவரைப் புகழந்து அவர்தான் என் குரு என்று சொல்வதிலிருந்து அவரது செல்வாக்கினை அறிய முடிகிறது
இந்திய- ஐரோப்பிய மொழிக்குடும்ப மொழிகளின் இலக்கணத்தை ஒப்பிட்டு ஆராய்ந்த முதல் மனிதர் இவர்தான். இந்தியாவில் இருந்த வில்லியம் ஜோன்ஸ் போன்றோர் மேக்ல் ம் போக்காக ஒற்றுமையாக் கையை காட்டினேன் ர் . ஆனால் பாப் ஆழமாகச் சென்று இலக்கணத்தை ஒரு சாப்பிட்டதால் அது மொழியியல் துறையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.. சம்ஸ்க்ருத நளோபாக்கியானத்தை எடிட் செய்து வெளியிட்டார்
கத்தோலிக்க தத்துவ அறிஞர் கே ஜெ விண்டிஸ்மானிடம் கற்று வாழ்நாள் முழுதும் அவருடன் நட்பு பாராட்டினார் அவர் மூலம்தான் கீழ்த்திசை மொழிகளின் மீது ஆர்வம் ஏற்பட்டது
பின்னர் பாரீஸ் நகருக்குச் சென்று சில்வஸ்டர் டே சசியிடம் பாரசீக அராபிய மொழிகளைக் கற்றார் இந்திய மொழிகளில் ஆர்வம் ஏற்பட்ட போது அவரது குருநாதர் வின்டிஷ்மனுக்கு புகார் கடிதம் எழுதினார் யாருமே இந்திய மொழிகளைக் கற்பிப்பதும் இல்லை ; யாரும் அவைகளை படிப்பதும் இல்லை என்று.
அந்தக் காலத்தில் அதைக் கற்பிக்கும் பண்டிதர்கள் ஐரோப்பாவில் இல்லாததால் இந்தியாவில் வெளியான மொழிபெயர்ப்புகளைக் கொண்டு சம்ஸ்கிருதம் கறறார்கள்.
பின்னர் அவரே எழுதினார் “நான் சம்ஸ்கிருத அகராதியின் துணையில்லாமல் முழு ராமாயணத்தையும் படித்து முடித்துவிட்டேன்” 1819-ஆம் ஆண்டில் வில்சனின் சம்ஸ்க்ருத- ஆங்கில அகராதி வெளியானது ஆனால் அதன் விலை யானை விலை- குதிரை விலையாக இருந்தது.
பிறந்த தேதி –14-9-1791
இறந்த தேதி–23-10-1867
கல்வி கற்ற இடம் — Aschaffenburg
பிறந்த ஊர்-Mainz
வேலை – பேராசிரியர் வேலை
பாப் ஒப்பிட்ட மொழிகள் – லத்தீன், சம்ஸ்க்ருதம், பாரசீகம், ஜெர்மன், கிரேக்கம் ; வினைச் சொற்களை ஆராய்ந்த அவர் கால வரிசைப்படி ஆராய்ந்தார். இதை நூலாக வெளியிட்டபோது அவருக்கு வயது 25 தான்.
பவேரியா மன்னர் இவருக்கு நிதி உதவி கொடுத்து லண்டனுக்கு அனுப்பினார் பாரீஸ், லண்டன் நகர்களில் இருந்த நளோபாக்கியான சுவடிகளை ஆராய்ந்து நளோபாக்கியந்ததை வெளியிட்டார்.
காட்டிங்கன் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்க்டர் பட்டம் அளித்தது பின்னர் பெர்லின் சென்று அங்குள்ள சம்ஸ்க்ருத மொழி அறிஞர்களுடன் கலந்துரையாடினார். பெர்லினில் ஸம்ஸ்க்ருதத் துறை உருவானவுடன் அங்கு பேராசிரியாகப் பணியாற்றினார்; சாகும் வரை பெர்லின் நகரிலேயே இருந்தார் .
மேலும் பல ஐரோப்பிய மொழிகளை ஒப்பிட்டு அவர் உரையாற்றினார் பிலிப்பைன்ஸ்- மலேயன் மொழிகளை ஆராயும் அவரது திட்டம் நிறைவேறவில்லை அவர் ஜெர்மன் மொழியில் எழுதிய விஷயங்கள் பின்னர் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன .
–subham—
Tags– பிரான்ஸ் பாப், இலக்கண ஒப்பீடு , இந்திய -ஐரோப்பிய மொழிகள் , ஜெர்மன் அறிஞர்
கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா? உலகம் முழுவதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள் -4
கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா?
Is a club needed to kill a fowl?
கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா? என்ற தமிழ்ப் பழமொழிக்கு இணையாக பல நாடுகளில் பழமொழிகள் உள்ளன
ஆங்கிலத்தில்
To break a butterfly upon a wheel .
Or
To kill a bird with ox butchering knife
என்று பிரபல சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் Confucius சொல்கிறார்
இது சீன ஜப்பானிய கொரியன் பழமொழிகள் லும் உள்ளது.
இதற்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.
சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் அவருடைய சீடர் ஷீ யூவைப் பார்த்துக் கேட்கிறார்
ஊ செங் என்னும் சிறிய நகரினை ஆள்வதற்கு உனக்கு எதற்கு இவ்வளவு இசை முதலி ய ஆட்ட பாட்டங்கள்?
ஒரு கோழிக்குஞ்சசை வெட்டுவதற்கு மாட்டை வெட்டும் வாள் தேவையா ?
உடனே ஷீ யூ சொன்னார்
சுவாமி , சங்கீதமும் சடங்குகளும் தெரிந்தால் அந்த மக்கள் அமைதியாகவும் நட்புறவுடனும் வாழ்வார்கள் என்று நீங்கள்தானே உபதேசம் செய்தீர்கள்? நீங்கள் சொன்னதைத்தான் நானும் செய்கிறேன்?
உடனே கன்பூசியஸ் சொன்னார்
நான் தமாஷாக அல்லவோ அதைச் சொன்னேன்.
****
இது ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன ஒரு கதையை நமக்கு நினைவு படுத்தும் .
ஒரு சன்யாசி செடி கொடிகள் நிறைந்த பகுதி வழியே சென்று கொண்டிருந்தார். ஆனால் ஊர் மக்கள் அந்தப்பக்கமே போக பயப்பட்டார்கள்; காரணத்தைக் கேட்டபோது அங்கு ஒரு கொடிய பாம்பு எல்லோரையும் விரட்டி அடிக்கிறது; மேலும் கடிக்கவும் வருகிறது என்றனர்.
துறவி அந்தப் பக்கம் போனபோதும் அதே கொடிய பாம்பு அவரை மிரட்டியது அவர் தபோ சக்தியால் அடக்கி நீ இனிமேல் யாரையும் கொத்தக் கூடாது; என்று உபதேசித்தார். பாம்பும் அவரது உபதேசத்தைக் கடைப்பிடித்து. சில மாதங்களுக்குப் பின்னர் அதே துறவி அந்தப் பக்கம் வருகையில் அந்தப் பாம்பினைப் பார்த்தார் . என்ன இப்படி நலிந்து மெலிந்து போனாய்? என்று குசலம் விசாரித்தார்.
சுவாமி நீங்கள் தானே யாரையும் கொத்தக் கூடாது என்றீர்கள்? நான் உங்கள் உபதேசத்தைத்தான் கடைப்பிடித்தேன் இந்த ஊர் மக்கள் நான் பேசாமல் இருப்பதைக் கண்டு என்னைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தினார்கள் அதனால்தான் தான் எனக்கு இந்த கதி.
உடனே சுவாமிகள் சொன்னார் :
உண்மைதான்; யாரையும் கடிக்காதே என்றுதான் சொன்னேன்
உன்னுடைய சுபாவமான சீற்றத்தால் அவர்களை வரவிடாமல் செய்திருக்கலாமே; நீ ஏன் அதைச் செய்யவில்லை? என்றார்.
எந்த உபதேசத்தையும் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே நீதி
****
சூடு கண்ட பூனை
தெனாலிராமன் பூனை வளர்த்த கதை எல்லோருக்கும் தெரியும் ; கிருஷ்ணதேவ ராயர் வீட்டுக்கு ஒரு பூனையைக் கொடுத்து எலிகளை ஒழிக்க ஏற்பாடு செய்தார் ; தெனாலிராமனும் பூனையை வாங்கிக்கொண்டு அதற்குக்கொடுத்த பால் முழுவதையும் தானே குடித்து வந்தான். தனது வீட்டுப் பூனைக்கு ஒரு நாள் கொதிக்கக் கொதிக்க பாலைக் கொடுக்கவே அது பால் என்றாலே மிரண்டு ஓடும். அரசவை அதிகாரிகள் ஒவ்வொரு வீடாகப் பூனைகளை சோதித்த போது தெனாலி ராமன் பூனையைப் பார்த்து ஏன் இப்படி எலும்பும் தோலுமாக இருக்கிறது? என்று வினவினர். நான் என்ன செய்ய? என் பூனை பாலைக் கண்டால் ஓடிவிடுகிறது என்றான்
உடனே அதிகாரிகள் பாலைக் கொண்டு வரச் சொல்லி அதன் முன்னே வைத்தனர் அது ஒரே ஓட்டம் பிடித்தது
இதிலிருந்து இந்த பழமொழி வந்தது
இதற்கு இணையான சீன பழமொழி
A bird once wounded is afraid of a bow.
A bird wounded by an arrow will fall from a bang
ஒருமுறை அம்பினால் அடிபட்ட பறவை வில்லினைக் கண்டாலே பயப்படும் என்பதாகும் இதுவும் ஜப்பானிய கொரிய சீனப் பழமொழி களில் உள்ளது.
இது பற்றியும் ஒரு கதை இருக்கிறது
வில்லுக்கு விஜயன் என்று நாம் அர்ஜுனனைப் புகழவோம். இதே போல சீனாவில் வேய் மாகாணத்தில் வசித்த காங் லே என்பவன் வில்லாதி வீரன் . அவன் பலருடன் சுற்றுலா சென்றபொழுது , ஒரு அடிபட்ட காட்டு வாத்து ஆகாயத்தில் கஷ்டப்பட்டு பறந்து கொண்டிருந்தது .
உடனே காங் லே சொன்னான்: பாருங்கள்! ஒரு வேடிக்கை காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு வில்லினில் அம்பினைப் போடாமல் அதைச் சொடுக்கி, வில் ஒலியை மட்டும் ஏற்படுத்தினான் ; ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த வாத்து தொப்பெனக் கீழே விழுந்து செத்தது. அந்த ஒலியைக் கேட்டவுடன் அது அம்பினால் அடிபட்டதாக நினைந்து பயந்து செத்துவிட்டது .
நீதி – ஒருமுறை கசப்பான அனுபவம் ஏற்பட்டால் அது நமது மனநிலையை எப்போதும் பாதிக்கிறது.
****
கிணறு வெட்டித் தாகம் தீர்க்கலாமா?
Must one dig a well to quench his thirst?
or
Have not your cloak to make when it begins to rain
or
Do not wait till you are thirsty to dig a well
0r
A thirsty man digs a well.
கிணறு வெட்டித் தாகம் தீர்க்கலாமா என்ற பழமொழி எல்லா நாடுகளிலும் உள்ளது
இது பற்றிய சீனக் கதை இதோ –
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் டூக்கே ஜாவோகாங் என்ற மன்னன் , பல தவறுகளைச் செய்தான் . இதனால் லு மாகாண மக்களின் நம்பிக்கையை இழந்து அந்த இடத்தைவிட்டே ஓடிவிட்டான் கீ மாகாணத்தில் தங்கிவிட்டுக் கொஞ்சகாலம் கழித்து அமைச்சரிடம் கேட்டான்:
இப்போது நாட்டுக்குத் திரும்பி நல்லாட்சி நடத்தலாமென்று நினைக்கிறேன்; நீர் என்ன சொல்கிறீர்?
மந்திரி சொன்னார்
மன்னர் மன்னா ; காலம் கனியவில்லை; உமது பிழைகளால் பலர் வழி தவறி இறந்தார்கள் ; மேலும் பலர் நதிகளைக் கடக்கையில் ஆழம் தெரியால் அதில் இறங்கிச் செத்தார்கள்; நீர் சொல்லுவது, போர் துவங்கிய பின்னர் ஆயுதங்களை செய்ய உத்தரவிட்டது போல இருக்கிறது. தாகம் ஏற்பட்டவுடன் தண்ணீரைத்தேடி கிணறு வெட்டப் புறப்பட்டது போல இருக்கிறது.
அமைச்சரின் பதிலைக்க கேட்ட மன்னன் மெளனியாகிவிட்டான்
இதை பரமஹம்சரும் தனது உபதேசத்தில் பயன்படுத்தினார் .
மராத்தி மொழியில் இதை
தஹான லாகல்யாவரே விஹீர கனனே என்பர்
तहानलागल्यावरविहीरखणणें
–subham–
Tags- கோழி அடிக்க, குறுந்தடி , வேண்டுமா? உலகம் முழுவதும், தமிழ்ப் பழமொழிகள் 4, பழமொழி
பாலகாண்டத்தின் நாற்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்துக்களின் உற்பத்தி” என்ற ஸர்க்கம்.
மஹரிஷி விஸ்வாமித்திரர் ஶ்ரீ ராமருக்கு மருத்துக்களின் உற்பத்தியைப் பற்றிய வரலாற்றை விரிவாகக் கூறினார்.
திதியும் அதிதியும் கச்யப முனிவரின் இரு மனைவிகள் ஆவர்.
முன்பொரு காலத்தில் பாற்கடலைக் கடைந்த சமயத்தில் தேவர்களுக்கும் போர் நடந்தது.
திதியின் அசுரர்களான புத்திரர்களை அதிதியின் தேவர்களான புத்திரர்கள் கொன்று விட்டார்கள்.
வருத்தமுற்ற திதி கச்யபரைப் பார்த்து “உங்களது புத்திரர்களாலேயே என் புதல்வர்கள் மாண்டு விட்டனர். இந்திரனைக் கொல்லத் தக்க ஒரு புத்திரனைப் பெற ஆசைப்படுகிறேன்” என்றாள்.
உடனே கச்யபர், “அப்படியே ஆகட்டும்” என்றார்.
பால காண்டம், நாற்பத்தாறாவது ஸர்க்கத்தில் உள்ள 5 மற்றும் ஆறாவது ஸ்லோகங்களைக் காணலாம்:
இவ்வாறு கூறிய கச்யபர் தன் கையால் திதியைத் தடவைக் கொடுத்தார். பின்னர் தவம் செய்யச் சென்று விட்டார்.
திதி கடுமையான தவத்தை மேற்கொண்டாள். தேவேந்திரன் அவளுக்குப் பணிவிடை செய்து வந்தான்.
ஆயிரம் வருடம் முடிய இன்னும் பத்து ஆண்டுகளே மீதி இருந்தன.
அப்போது திதி இந்திரனை நோக்கிக் கூறினாள் இப்படி :
வரோ வர்ஷஸஹஸ்ராணே மம தத்த: சுதம் ப்ரதி |\
– பால காண்டம் 46-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 15
தவ பிதா – உன் தந்தையால்
வர்ஷ ஸஹஸ்ராணே – ஆயிரம் வருடங்களின் முடிவில்
வர: – வரமானது பிரார்த்தனையின் நிறைவேற்றமாக
மம – எனக்கு
தத்த: – அருளப்பட்டது
என்று இவ்வாறு கூறிய திதி மேலும் கூறினாள்:”இன்னும் பத்து வருடங்களில் உன் தம்பியைப் பார்ப்பாய். அவனுடன் சகோதர பாவத்துடன் பழகு”
பின்னர் நடுப்பகலில் திதி தன் இரு காலடிகளையும் தலையில் படும்படி வைத்துக் கொண்டு நினைவிழந்தாள்.
உடனே இந்திரன் அவள் உடம்பில் நுழைந்து அங்கு இருந்த கர்ப்பத்தை ஏழு துண்டுகளாகத் துணித்து விட்டான். கர்ப்பத்தில் இருந்த சிசு அழ ஆரம்பித்தது. திதி விழித்து விட்டாள். “கொல்லப்பட வேண்டாம்” என்று அவர் அலறவே அவள் மீதுள்ள மரியாதையால் இந்திரன் அவர்களைக் கொல்லாமல் உடம்பிலிருந்து வெளியில் குதித்து விட்டான்.
உடனே திதி, “ எனது குற்றத்தாலேயே (அசுசியாக இருந்ததால்) இந்த கர்ப்பம் ஏழு துண்டுகளாக ஆகி விட்டது. ஒரு நன்மையைச் செய். இந்த ஏழு துண்டுகளும் ஏழு மருத்துக்களுடைய பதிவி பரிபாலக தேவதைகளாக ஆகட்டும்” என்றாள்.
இந்திரன், “நீங்கள் சொன்னபடியே நடக்கும். உம்முடைய பிள்ளைகள் தேவதா ரூபிகளாய் சஞ்சரிப்பார்கள்” என்றான்.
இப்படியாக மருத்துக்களின் உற்பத்தி பற்றி விஸ்வாமித்திர மஹரிஷி ராமருக்கு எடுத்துரைத்தார்.
Hindus have two different views on astrology and astrologers. Though Sanskrit language has Brihat Jataka and Brihat Samhita of Varaha Mihira, Manu Smriti has no favourable view on astrologers, fortune tellers and Palmists. He bans those people from many places. Of late Bharatiyar, the greatest of the Tamil poets also advised Tamils to shun astrology. But like western countries most of the newspapers in India publish weekly or monthly astrological forecasts and predictions.
As far Tamils, they have lot of astrological references in 2000-year-old Sangam Tamil literature. Later books have more references. One remarkable thing about Tamils is they have more synonyms for each of the 27 stars than in Sanskrit. They have all sorts of prediction methods.
Stars, the sun, the moon, planets, eclipses, and astronomy in general are mentioned more than four hundred times in the plays of Shakespeare and sixty times in his poems. A Midsummer Night’s Dream contains thirty references to celestial objects, whereas most of the plays average from twelve to twenty each
Shakespeare used stars instead of planets in his plays. He believed in the power of fate. Commentators think that he used stars for fate. But I think he projected the views of 16th century Britain who believed in fate and astrology.
Let us look at Manu’s views on astrologers first :
Manu warns kings about fortune tellers and he warns the people of three castes not to call them for certain ceremonies.
न चोत्पातनिमित्ताभ्यां न नक्षत्राङ्गविद्यया । नानुशासनवादाभ्यां भिक्षां लिप्सेत कर्हि चित् ॥ ५० ॥
na cotpātanimittābhyāṃ na nakṣatrāṅgavidyayā | nānuśāsanavādābhyāṃ bhikṣāṃ lipseta karhi cit || 50 ||
He shall never obtain alms either by means of prodigies and portents, or by means of the science of astrology and palmistry, or by means of counsel and discussion.—(50)
CALPURNIA When beggars die, there are no comets seen; The heavens themselves blaze forth the death of princes. CAESAR Cowards die many times before their deaths; The valiant never taste of death but once.
—Juius Caesar
This warning against comets in Sangam Tamil literature
Pura Nanuru is one of the important books in 2000 year old Sangam literature .
Hindu Beliefs
Kudalur Kizar, a poet, sings an elegy to the Chera king (Yanaikat Chey) Mantaram Cheral Irumporai, in which he says that the sighting of a comet seven days earlier portended his death. What he feared seven days ago came true today. In short, the king died after the appearance of a comet. It may be Halley’s comet ( Purananauru verse 229)
In another verse Kapilan, the most famous Brahmin poet, who composed the highest number of poems in Sangam period, says that even if a comet appeared Pari’s land will get good rains and good harvest because he was such a just and generous king (Puram verse 117). He used the Sanskrit word Dhumam for a comet.
Brhat Samhita has a full chapter on comets.
****
KING LEAR PLAY
It is the stars,
The stars above us, govern our conditions.
Else one self mate and mate could not beget
Such different issues. You spoke not with her since?
(It’s the stars, the stars above us, who decide our fate. Otherwise one couple couldn’t have children so different from each other as Cordelia and her sisters are. )
Here Shakespeare says that our fate is already decided by our (birth) stars and so we see difference even among close relatives.
This is found throughout Hindu literature
To be continued………………………..
–subham–=
Tags- comets, stars, fate, astrology, Shakespeare, Sangam Tamil literature, Manu smriti, belief, astrologer
உலகம் முழுவதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள்-3 அர்ஜுனன் கதை
தலைவர்கள் சொல்வதை தொண்டர்கள் நம்பவேண்டும். அதே போல குருசொல்வதை சீடன் நம்பவேண்டும். படைத்தளபதி சொல்வதை படை வீரன் நம்ப வேண்டும்;அப்போதுதான் வெற்றி!
இப்படி நம்பிக்கை இருக்கிறதா என்று பார்க்க சீனாவிலும் ஒரு அரசன் டெஸ்ட் / சோதனை வைத்தான்; நம்பாதவர்களைக் கொன்று குவித்தான்.
கிருஷ்ணன்- அர்ஜுனன் நட்புறவு உலகறிந்தது. ஆயினும் மஹாபாரதப் போருக்கு முன்னால், அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் ஒரு பரீட்சை வைத்தான்; அதில் அர்ஜுனன் வெற்றி பெற்றான். இதனால் அவர்களுக்குப் போரிலும் வெற்றி கிட்டியது. ஸ்ரீ சத்ய சாய் பாபா இந்தக் கதையை சொன்னபடி தருகிறேன்.
இதற்கான சீன ஜப்பானிய பழமொழி :கருப்பு நிறத்தைக் காட்டி வெள்ளைஎன்பது. அல்லது மானைக் காட்டி குதிரை என்பது.
மாலை நேரத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காட்டுப்பாதை வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தனர் . கிட்டத்தட்ட இருண்டுவிட்டது . ஒரு மரத்திலுள்ள பறவையைக் காட்டி அர்ஜுனா, அந்த மயில் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்! என்று கிருஷ்ணன் சொன்னான். அர்ஜுனனும் ஆமாம் ஆமாம் மயில் ரொம்ப அழகாக இருக்கிறது என்றான்.
உடனே கிருஷ்ணன் இல்லை, இல்லை, அது கழுகு என்றான். அர்ஜுனனும் ஆமாம் ஆமாம் அந்த கழுகு அழகாக இருக்கிறது என்றான். உடனே கிருஷ்ணன் அவன் முதுகில் தட்டி நன்றாகப் பார்க்கக்கூடாதா? சரியான மண்டு நீ! மக்கு நீ! என்று கிருஷ்ணன் வைதான். உண்மையில் அது புறா நன்றாகப் பார்! என்றவுடன் அர்ஜுனனும் ஆமாம் ஆமாம் அது புறா என்றான்.
கிருஷ்ணன் கோபம் வந்தவன் போல நடித்து உனக்கு புத்தியே இல்லை; யாரவது ஏதாவது சொன்னால் உன் சொந்த புத்தியைப் பயன்படுத்தி அது என்ன, ஏது என்று அறிய வேண்டும் என்றான் கிருஷ்ணன்.
அர்ஜுனன் சொல்கிறான்:
“கிருஷ்ணா! நான் என்ன சொன்னாலும் அந்தப் பறவையை மாற்றும் வல்லமை படைத்தவன் நீ! உன் சொல்தான் எனக்கு முக்கியம் அந்தப் பொருள் இல்லை”.
இதைக் கேட்டவுடன் கிருஷ்ணன். அகம் மகிழ்ந்து ,உளம்குளிர்ந்து, நீதான் என் உண்மையான பக்தன்! என்னையே நம்பி என்னையே நினைத்து எல்லா காரியங்களையும் செய் என்று ஆசீர்வதிக்கிறான்.
குரு பக்தி என்பதும் கடவுள் நமபிக்கை என்பதும் இப்படி இருக்க வேண்டும்.
****
சீனாவில் ஒரு அரசனின் பிரதம மந்திரி தனது மந்திரிகளையும் தளபதிகளையும் கொடூரமான முறையில் சோதனை செய்தான். அவன் பெயர் ஜாவோ காவோ குயின் வம்ச மன்னனின் மந்திரி .
Zhao Gao was Prime Minister of the second emperor of the Quin Dynasty -221 to 206 BCE.
திறமையற்ற மன்னனைக் கவிழ்ப்பதற்காக தனக்கு கீழேயுள்ளவர்களை அழைத்து ஒரு மானைக் காட்டி அந்தக் குதிரையைப் பார்த்தீ ர்களா ? என்று கேட்டான். யார் யார் ஆமாம் குதிரையைப் பார்த்தேன் என்று சொன்னர்களளோ அவர்களை சேர்த்துக் கொண்டான் ; இல்லையே அது மான் அல்லவா என்று சொன்னவர்களை ஒவ்வொருவராகக் கொன்றுவிட்டான் அதாவது விசுவாசம் இல்லாதவர்கள் என்பது அவனது கருத்து.
****
குருடன் கையில் விலாங்கு மீன் அகப்பட்டது போல என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
இதற்கு இணையான மேலை நாட்டுப் பழமொழி குருடன் கூட சில நேரங்களில் முயலைப் பிடித்துவிடுவான் என்பதாகும்.
சீனாவில் ஆயிரம் தவறு செய்பவன் ஒரு நல்லதைச் செய்துவிடுவான் என்றும் ஆயிரம் பிழைகளுக்கு நடுவில் ஒரு சாதனை நிகழக்கூடும் என்றும் சொல்வார்கள்.
ஏன் என்றால் அதற்குப்பின்னால் ஒரு கதை உள்ளது
யான் யிங் என்ற பிரதம மந்திரிக்கு நன்றிக கடனாக ஆயிரம் பொற்காசுகளை கீ வம்ச மன்னன் தூக்கி ஜிங் அனுப்பினான். ஆனால் பலமுறை அனுப்பியும் பிரதமர் அதை ஏற்கவில்லை .அவர் சொன்ன காரணம் :
ஒரு அறிவாளி ஆயிரம் நல்லது செய்தும் ஒரு தவற்றினை செய்ய இயலும்; அதே போல ஒரு முட்டாளும் கூட ஆயிரம் தவறுகளுக்குப் பின்னர் ஒரு நல்ல யோஜனையைக் கூறுவான் ; என்னுடைய யோஜனை இம்முறை சரியாக இருந்தது அவ்வளவுதான் என்று பணிவோடு சொல்லிவிட்டார்.
As a return of courtesy Duke Jing of Qi sent a thousand pieces of gold to Yan Ying, the Prime Minister of the state of Qi during 770-476 BCE period. He repeatedly refused to accept it telling,‘A wise man weighing a matter thousand times may make a slip, while a fool, weighing the issue a thousand times , may hit upon a good idea. A careful consideration may prove that my idea is correct’
ஷேக்ஸ்பியரும் கூட, இதை வேறுவிதமாகச் சொல்கிறார்
This fellow is wise enough to play the fool,
And to do that well craves a kind of wit.– Shakespeare in Twelfth Night
இந்த ஆளுக்கு முட்டாளாக நடிக்கும் திறமை இருக்கிறது; அதற்கும் கூட கொஞ்சம் புத்திசாலித்தனம் வேண்டும்.
இது உலகம் முழுதும் ஒலிக்கும் பழமொழி ; மெலியாரை வலியார் கொல்வர் அல்லது தோற்கடிப்பர். பங்குச் சந்தை என்னும் ஸ்டார்க் மார்க்கெட் செய்திகளைப் படிப்போர் இதை அடிக்கடி பத்திரிகைகளில் பார்ப்பார்கள். அதாவது சின்னக் கம்பெனிகளை பெரிய கம்பெனிகள் சுவாஹா செய்துவிடும்; அக்கினியில் போடுவதை அது விழுங்குவது போல, பெரிய கம்பெனிகள் விழுங்கி விடும்.
தமிழில் பழமொழி நானூறிலும் ஒரு பாடலில் இதைக் காணலாம்
சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்,
பெரிய பொருள் கருதுவாரே;-விரி பூ
விராஅம் புனல் ஊர!- வேண்டு அயிரை இட்டு,
வராஅஅல் வாங்குபவர்.
இம்மையில் தம்மால் இயன்ற சிறிய பொருளை உள்ளன்போடு வறியவர்க்கு ஈய வேண்டும். இந்த நல்வினை செய்து மறுமையில் வீடுபேறு முதலியன பெற நினைக்க வேண்டுமாம். அப்படி நினைப்பவர்கள் அயிரை என்னும் சிறிய மீனைத் தூண்டிலில் கோத்துவிட்டுப் பெரிய வரால் மீனை இழுப்பவரோடு ஒப்பர்.
சின்ன மீனைப் போட்டாத்தான் பெரிய மீனைப் பிடிக்கலாம் சில்லறையை விட்டாத்தான் பெருந்தொகையை எடுக்கலாம் – தாயைப் போல பிள்ளை சினிமாபாட்டு.
—SUBHAM—
உலகம் முழுவதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள் 3 அர்ஜுனன் கதை, சீனக் கதை .,சின்ன மீனை போட்டு
Arjuna’s faith in Krishna is known to many of you. Here is the story as told by Sri Sathya Saibaba in 1996 lectures:
Krishna wanted to impart the knowledge of the Bhagavad Gita to Arjuna to instil courage and enthusiasm in him. But before imparting this knowledge, Krishna wanted to test Arjuna, to see whether he had total faith in Him.
Krishna took Arjuna to a forest. While returning, it became dark. Krishna pointed to a bird perched on a tree and said, “Arjuna, see how beautiful this peacock is!” He started this conversation to see the state of Arjuna’s mind.
Arjuna replied, “Yes, Swami, the peacock in really beautiful.” Krishna said, “Oh madcap, that is not a peacock. Don’t you see it is an eagle?” Arjuna replied, “Yes, Swami, it is an eagle.” Krishna slapped him on his back and said, “What a fool you are, Arjuna, that you are unable to make out whether it is a peacock, an eagle, or some other bird. Look carefully. It is neither a peacock nor an eagle. It is a pigeon.” Arjuna replied, “Yes, Swami, it is a pigeon.”
Pretending to be a little angry, Krishna said, “Don’t you have common sense? Don’t you have discrimination power? What are you thinking? You don’t seem to enquire whether it is a peacock or an eagle or a pigeon. You are blindly saying yes to whatever I say.”
Arjuna replied, “Oh Krishna, if I say it is not a peacock, You may change it into a peacock. Similarly, if I say it is not an eagle or a pigeon, You may turn it into any of them. You can do anything. Your word is important for me. What does it matter to me whether it is a pigeon or a peacock or an eagle?” Krishna was very happy that Arjuna had so much faith in His words. He placed His hand on Arjuna’s head and blessed him, saying, “Now you are My true devotee.” Fix your mind on Me, be devoted to Me, offer obeisance to Me and worship Me.
Chinese Story and the Proverb
To say / make that black is white
In Japanese it is same- shika wo sashite uma to iu/nasu.
Chinese proverb is similar to arjuna’s story above.
Chinese say – zhi lu wei ma – pointing to a deer as a horse.
Equivalent proverb in European languages is – To say / make that black is white
Here is the story
Zhao Gao was Prime Minister of the second emperor of the Quin Dynasty -221 to 206 BCE.
He intended to overthrow the inefficient ruler but first wanted to test the loyalty of the courtiers. He brought a stag and told them that it was a horse. Those who told the truth and said it was a stag were all considered not loyal to him and were killed one by one
****
Chinese Story for
A blind man may sometimes catch the hare
Japanese say ,
Of one thousand ideas of fools there is one good one.
As a return of courtesy Duke Jing of Qi sent a thousand pieces of gold to Yan Ying, the Prime Minister of the state of Qi during 770-476 BCE period. He repeatedly refused to accept it telling,
‘A wise man weighing a matter thousand times may make a slip, while a fool, weighing the issue a thousand times , may hit upon a good idea. A careful consideration may prove that my idea is correct’.
Tamil proverb says,
2693. குருடன் கையில் விலாங்கு மீன் அகப்பட்டது போல
As an eel was caught in the hand of a blind man.
***
This fellow is wise enough to play the fool,
And to do that well craves a kind of wit.– Shakespeare in Twelfth Night
In Shakespeare’s works, fools are often clever peasants or commoners who use their wits to outdo people of higher social standing. They are similar to the real fools and jesters of the time, but their characteristics are exaggerated for theatrical effect.
According to the proverb, “A wise man can play a fool, but a fool can’t play wise,” a person who is educated and knowledgeable has the capacity to act foolish or naive when they so choose, either for tactical purposes or to achieve a certain result.
****
Big fish eat little fish is in many languages
“சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடி
Latin- pisces minutos magnus comest
Chinese – ruo zhi rou qiang zhi shi = the meat of the weak , the meal of the strong
In Tamil literature we have
Pazhamozhi 400 verse No. 302
O’ lord of the town where blooming flowers jostle in streams!
Those who spend whatever little they have to do good deeds,
and expect to reap much more in return – are like those
who throw in small fish to catch a big fish
சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்,
பெரிய பொருள் கருதுவாரே;-விரி பூ
விராஅம் புனல் ஊர!-வேண்டு அயிரை இட்டு,
வராஅஅல் வாங்குபவர்.
Some people spend a little money on charity in this life and expect much in return in their after life. These people are like those who throw in small fish (small fish – அயிரை) to catch big fish (வரால் – big fish).
Pazha Mozhi Naanooru ( 400 Old Sayings) is one of the 18 post Sangam anthologies. Each verse explains a proverb.
This proverb is used very often in commercial circles and share markets. Big companies always take over smaller companies.
சின்ன மீனைப் போட்டாத்தான் பெரிய மீனைப் பிடிக்கலாம் சில்லறையை விட்டாத்தான் பெருந்தொகையை எடுக்கலாம் – தாயைப் போல பிள்ளை சினிமாபாட்டு.
To be continued………………..
–subham–
Tags- Arjuna’s faith, Chinese, Proverb, black is white, small fish, big f8sh eat, blind man, fool
ஜோதிடம்-தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள் -12
Part 12
ஷேக்ஸ்பியரும் ஜோதிடமும்
ஜோதிடத்தில் ஷேக்ஸ்பியருக்கு நல்ல நம்பிக்கை இருந்ததை அவருடைய நாடக வசனங்களிலிருந்து அறிய முடிகிறது. நாம் கிரகங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக அவர் நட்சத்திரங்கள் என்ற சொல்லை பிரயோகிக்கிறார். இது அவரது நமபிக்கை என்பதோடு ஐநூறு வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பா முழுதும் இருந்த நம்பிக்கை என்று கொண்டாலும் பொருந்தும்.
தமிழர்களுக்கு ஜோதிடத்திலும் சகுனத்திலும் இருந்த நம்பிக்கையை சங்க இலக்கிய நூல்களிலிருந்தே காண முடிகிறது . ஒன்றல்ல இரண்டல்ல ; நூற்றுக் கணக்கான குறிப்புகள் கிடைக்கின்றன .
இந்துக்களின் நூல்களிலுள்ள எல்லா குறிப்புகளுக்கும் சம்ஸ்க்ருத நூல்களே அடடிப்படை என்பதை பிருஹத் சம்ஹிதா, பிருஹத் ஜாதகம் ஆகிய நூல்களைப் படித்தோர் அறிவர் . தமிழர்கள் வடக்கத்தியரைப் போல ரோகிணி நட்சத்திரத்தில் கல்யாணம் கட்டியதை அக நானூறு செய்யுட்களில் படிக்கிறோம்.
ஆயினும் சம்ஸ்க்ருத நூல்களை மிஞ்சும் ஒரு விஷயத்தை நான் எனது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். நான் செய்த ஆராய்ச்சியில் 27 நட்சத்திரங்களுக்கும் தமிழில் உள்ள பெயர்கள் அளவுக்கு சம்ஸ்க்ருதத்தில் பெயர்கள் இல்லை. இதனால்தான் தமிழன்தான் ஜோதிடத்தைக் கண்டுபிடித்தான் என்று நான் கட்டுரை எழுதினேன் நிற்க.
பாரதியார் ஜோதிடத்தை இகழ் என்று புதிய ஆத்திச்குடியில் சாடுகிறார். மனு ஸ்ம்ருதியோ சில விஷயங்களுக்கு ஜோதிடரைக் கூபிடா தே என்று தடை போடுகிறது
****
மனு ஸ்ம்ருதி
न चोत्पातनिमित्ताभ्यां न नक्षत्राङ्गविद्यया ।
नानुशासनवादाभ्यां भिक्षां लिप्सेत कर्हि चित् ॥ ५० ॥ 6-50
துறவியோ வானப்பிரஸ்தனோ குறி சொல்லியோ ஜோதிடம் கைரேகை பார்த்தோ காசு பணம் வாங்கக்கூடாது
na cotpātanimittābhyāṃ na nakṣatrāṅgavidyayā |
nānuśāsanavādābhyāṃ bhikṣāṃ lipseta karhi cit || Manu 6-50 ||
****
उत्कोचकाश्चोपधिका वञ्चकाः कितवास्तथा ।
मङ्गलादेशवृत्ताश्च भद्राश्चैक्षणिकैः सह Manu Verse 9.258
utkocakāścopadhikā vañcakāḥ kitavāstathā |
maṅgalādeśavṛttāśca bhadrāścaikṣaṇikaiḥ saha || 9-258 ||
லஞ்சம் வாங்குவோர், சூதாடிகள் குறி சொல்லுவோர் கைரேகைக்காரர்கள் ஆகியோரிடத்தில் அரசன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் (9-258)
யார் யாரை திதி, திவசத்துக்குக் கூப்பிடக்கூடாது என்ற நீண்ட பட்டியலில் சோதிடர்களையம் மனு சேர்த்துள்ளார் . திதி /திவசம் முதலியவற்றை முதல் மூன்று வர்ணத்தினரும் செய்வார்கள்.
இனி ஷேக்ஸ்பியர் சொல்வதைக் காண்போம் :
அவருக்கு வானசாஸ்திரம் ஜோதிடம் முதலியவற்றில் அக்கறையும் ஆர்வமும் இருந்ததை கீழ்க்கண்ட புள்ளிவிவரம் காட்டும் :
நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், கிரகங்கள், கிரககங்கள் பாரிய குறிப்புகள் ஷேக். நாடகங்களில் நானூறு முறைகளுக்கு மேலாகவும் கவிதைகளில் அறுபதுக்கு முறை மேலாகவும் வருகின்றன. மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம் என்ற நாடகத்தில் மட்டுமே முப்பது முறை வருகிறது.
Stars, the sun, the moon, planets, eclipses, and astronomy in general are mentioned more than four hundred times in the plays and sixty times in the poems. A Midsummer Night’s Dream contains thirty references to celestial objects, whereas most of the plays average from twelve to twenty each
*****
CALPURNIA When beggars die, there are no comets seen; The heavens themselves blaze forth the death of princes. CAESAR Cowards die many times before their deaths; The valiant never taste of death but once.
—Juius Caesar
பிச்சைக்காரர்கள் செத்தால் வால் நட்சத்திரங்கள் வராது;
இளவரசர் இறந்தால் வானம் ஒளி வீசிப் பிரகாசிக்கிறது
ஜுலியஸ் சீசர் நாடகம்
இது புறநானூற்றிலும் உள்ளது
புறநானூற்றில் வால் நட்சத்திரம்
வால் நட்சத்திரம் தோன்றினால் தேசத்துக்கும் அதை ஆள்வோருக்கும் ஆபத்துவரும் என்ற நம்பிக்கை மஹா[பாரத காலத்தில் இருந்து நிலவி வருகிறது. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இதே செய்தி வருகிறது. ஒரு வால் நட்சத்திரம் தோன்றிய பின்னர் ஒரு சேர மன்னன் இறப்பார் என்று புலவர் கவி பாடினார். எதிர்பார்த்தபடியே அம் மன்னன் ஏழாம் நாளில் இறந்தான். மாபாரதத்திலும் போருக்கு முன் தூமகேது தோன்றியது.
இதோ புறநானுற்றில் உள்ள பாடல்:
புறநானுற்றில் கூடலூக் கிழார் பாடிய பாடல் எண் 229-ல்:
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முடப்பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காய
பங்குனி உயர் அழுவத்துத்
தலை நாள்மீன் திரிய…………..
கனை எரி பரப்பக், கால் எதிர்பு பொங்கி
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே………….. (புறம் 229)
அதாவது தூமகேது ஒன்று தோன்றிய ஏழாம் நாளில் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை இறந்து விடுவான் என்று கூடலூர்க் கிழார் அஞ்சினார். அதன்படியே அவன் இறந்துபட்டவுடன் புலவர் பாடிய பாடல் இது. சிலர் இதை எரிகல் விழுந்தது என்பர். தினமும் பூமியில் பல்லாயிரக் கணக்கான எரிகற்கள் விழ்வதால் பல அறிஞர்கள் இதை தூம கேது என்றே விளக்கியுள்ளனர்.
****
பாரி வள்ளளின் பெருமையைப் பாடும் கபிலன் அந்த நாட்டில் “மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும்,, தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்” (பொருள்: சனிக் கிரகம் புகை போல மங்கிக் காணப்படினும், தூமகேது (வால் நட்சத்திரம்) தோன்றினும், வெள்ளி கிரகம் தென் திசை நோக்கிச் சென்றாலும்) மழை பொய்க்காது என்கிறார். ஆக கபிலரும் தூமகேது தோன்றினால் கெடுதிகள் வரும் என்பதை அறிந்திருந்தார்.
****
அம்பலவாணரும் ஜோதிடம் உண்மையே என்று பாடினர்
அறப்பளீசுர சதகம் அம்பலவாணர்
அறப்பளீசுர சதகம் 52. உண்மையுணர் குறி
சோதிடம் பொய்யாது மெய்யென்ப தறிவரிய
சூழ்கிரக ணம்சாட்சி ஆம்!
சொற்பெரிய வாகடம் நிசமென்கை பேதிதரு
தூயமாத் திரைசாட்சி ஆம்!
ஆதியிற் செய்ததவம் உண்டில்லை என்பதற்
காளடிமை யேசாட்சி ஆம்!
அரிதேவ தேவனென் பதையறிய முதல்நூல்
அரிச்சுவடி யேசாட்சி ஆம்!
நாதனே மாதேவன் என்பதற் கோருத்ர
நமகசம கம்சாட்சி ஆம்!
நாயேனை ரட்சிப்ப துன்பாரம்! அரியயன்
நாளும் அர்ச் சனைசெய் சரணத்
தாதிநா யகமிக்க வேதநா யகனான
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
திருமாலும் பிரமனும் எப்போதும் மலரிட்டு வழிபடும் திருவடிகளையுடைய முதன்மையான தலைவனே!, மிக்கவேத நாயகன் ஆன அண்ணலே –
சோதிடம் கணித நூல் பொய்படாது; உண்மையே என்பதற்கு பொதுமக்களால் அறியமுடியாத கிரகணத்தை அவர்கள் முன் கூட்டியே அறிவிப்பது பெரிய சான்று ஆகும்,
புகழ்பெற்ற பெருமைமிக்க மருத்துவநூல் உண்மையென்பதற்குப் பேதிக்குத் தரும் நல்ல மாத்திரைகளே சான்று தரும்,
முன்னே செய்த நல்வினை உண்டா இல்லையா என்பதற்கு ஆளும் அரசனும் ,அடிமையுமே சான்று ஆகும்.
திருமால் வானவர் தலைவன் என அறிவதற்குச் சிறுவர்கள்க ற்கும் முதல் நூல் அரிச்சுவடியாக இருப்பதே சான்று ஆகும்,
சிவபெருமானே தலைவன் என்பதை அறிவதற்கோ என்னில் ருத்திர நமக-சமகம் என்னும் யஜூர்வேதத் துதியே சான்று ஆகும்,
நாய் போன்று இழிவுற்ற என்னைக் காப்பது உன் பொறுப்பு.
****
KING LEAR PLAY
It is the stars,
The stars above us, govern our conditions.
Else one self mate and mate could not beget
Such different issues. You spoke not with her since?
(It’s the stars, the stars above us who decide our fates. Otherwise one couple couldn’t have children so different from each other as Cordelia and her sisters are. )
கிங் லியர் நாடகத்தில் வரும் வசனம் :
நமக்கு மேலே பிரகாசிக்கும் நட்சத்திரங்களே நம்மை ஆளுகின்றன; நமது தலை விதியை நிர்ணயிக்கின்றன அப்படி இல்லாவிட்டால் கார்டீலியாவுக்கும் அவளது சகோதரிகளுக்கும் பிறந்த குழந்தைகள் எப்படி வெவ்வேறாக இருக்கின்றன ?.
To be continued…………………………………..
–subham—
Tags- ஷேக்ஸ்பியரும் ஜோதிடமும், தமிழ் சம்ஸ்க்ருத நூல்கள்,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் (9)
ராமாயணத்தில் வரங்கள் (9) மஹரிஷி சூலி ஸோமதை என்ற கந்தர்வகுமாரிக்கு வரம் கொடுத்தது!
ச. நாகராஜன்
பாலகாண்டத்தின் முப்பத்திஎட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘ஸகரமகாராஜனின் அச்வமேத யாக ஆரம்பம்” என்ற ஸர்க்கம்.
விஸ்வாமித்திரர் ஶ்ரீ ராமருக்குக் கூறிய சரிதங்களில் ஸகர மகாராஜனின் சரிதமும் ஒன்று.
முன்னொரு காலத்தில் ஸகரன் என்ற பெயருள்ள ஒரு மன்னன் அயோத்தியை ஆண்டு வந்தான். அவன் விதர்ப்ப தேசத்தைச் சேர்ந்த கேசினி என்ற ராஜகுமாரியை மணந்தான். காச்யப முனிவரின் மகளான சுமதி என்பவள் அவனுக்கு இரண்டாவது மனைவியாக இருந்தாள்.
பிள்ளைகள் இல்லாத காரணத்தால் ஸகரன் இமயமலைக்கு இரு மனவிகளோடும் சென்று கடும் தவம் புரிந்தான்.
நூறு வருடம் கடந்தன. பிருகு முனிவர் ஸகரருக்கு ஒரு வரத்தை அளித்தார்.