முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—38 (Post No.13,276)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,276

Date uploaded in London – –   26 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 38

xxxx

பி

449. மேகவெட்டைக்கு

பிரமிசை மூலத்தைப் பாலில் உபயோகித்து வந்தால் கிரந்தி- சூலை- மேகவெட்டை-  இவை தீரும். நீடித்து உண்டு  வந்தால் சுயம்பாக வல்லமையுண்டாகும்.

xxxx

கார்வாய் ஜன்னிக்கு

பிரமி இலையை துளி விளக்கெண்ணெய் குத்தி வதக்கி பெண்களின் கால் பாதத்திலிருந்து கணுக்கால் வரையிலும் கன மாய் வைத்துக்கட்டினால் கார்வாய் ஜன்னி நிவர்த்தியாகும்.

xxxx

பதினெட்டு வண்டு  கடிக்கும்

பிராயான் சமூலத்தைப் பாலில் உட் கொண்டு  வந்தால் பதினெட்டு வண்டு  கடி, எலி கடி உடம்பில் உண்டாகும் சுரசுரப்பு  இவை தீரும்.

xxxx

வாதக் குடைச்சல் மந்தத்திற்கு

பிண்ணாக்குப் பூண்டைக் கொண்டுவந்து கடுக்காய் தோல்- மிளகு- சுக்கு இதுகள் கால் பங்கு கூட்டி கிஷாயமியட்டு 4, 5 வேளை கொடுக்க சதக் குடைச்சல் தீரும். இதைத் தனியாக கிஷாயமிட்டுக்  கொடுக்க மேக அனல் தணியும்.

xxxx

பீ

வெள்ளைக்கு

பீச்சங்கன் இலையை அரைத்துப் புன்னைக்காயளவு எடுத்து புளித்தயிர் அரைக்கால்  படியில் கலக்கி காலையில் சாப்பிடவும். இப்படி 3 நாள் சாப்பிடவும். உப்பில்லாத பத்தியம் இருக்கவும்.

இதுவுமது

பீச்சங்கன் இலை, பழம் பாசிலை கீழா நெல்லியிலை இவை மூன்றும் சமனாய்  எடுத்து முன்மாதிரி சாப்பிட்டாலும் வெள்ளை விழுகிற வியாதி தீரும்.

xxxxx

வயிற்றுப்  பிடுங்கலுக்கு

பீத ரோகணியை கிஷயத்தை குடிக்க வயிற்றுப் பிடுங்கல் நிவர்த்தியாகும். . சிலது நாள் விடாமல் சாப்பிட்டால்  காமாலை ரோகத்தைச் சாந்தியாக்கும் .

xxxx

படர் தேமல் நீங்க

பீத ரோகணியை தேனில் உரைத்துப் பூசிவந்தால் படர்தாமரை முதலிய தேமல்களை நிவர்த்தியாக்கும். .

xxxx

வாய்வுகளுக்கு

பீநாரிப் பூண்டு என்னும் மூலிகையை சுக்கு மிளகு கூட்டி கிஷாயமிட்டு உட்கொள்ள வாய்வுகளைக் கண்டிக்கும்.

xxxx

பு

சுக்கிலமேகம் அதிசாரத்திற்கு

புளியம் வித்தின்  மேற்றோலை பாலில் அரைத்துக் கலக்கியுண்டுவந்தால் சுக்கிலமேகம் அதிசாரம் இவை தீரும். . உந்திப்புண் சவுக்கியமாகும்.

xxxx

எலி விஷத்திற்கு

புரசு மூலத்தை பாலில் உட் கொண்டுவந்தால் எலி விஷம், குன்மம், வாய்வு வாதம் இவை தீரும்.

xxxx

வயிற்றுப்   பூச்சிக்கு

புரசு வித்தை எருமைச்சாணிக்குள் பொதிந்து காலையில் எடுத்து  சுமார் இரண்டு விதையைத் தோல் நீக்கி அரைத்துப் பாலில் கலந்து கொடுக்க வயிற்றிலுள்ள பெருங் கிருமிகள்  வந்துவிடும்; வயிற்றுவலியும் தீரும்.

xxxx

புண் புரை அரையாப்புக்கு

புங்க மரத்தின் மூலத்தைப் பாலில் அரைத்து உட் கொண்டுவந்தால்  புண் புரை நோய் சூலை அரையாப்புக்கட்டி  இவை கரையும் .

xxxx

மேகத்திற்கு அல்லது வெள்ளைக்கு

புங்கன் கொழுந்து கொண்டுவந்து நெகிழ அரைத்து நல்லெண்ணெயில் கூட்டிக்கொடுக்க வெள்ளை தீரும்; கடும் பத்தியம்.

xxxx

குழந்தைகட்கு பேதி கண்டால்

புளியாரை வாழைப்பூ சமன் கூட்டி பிட்டலத்து தேன் குத்திக் பிசைந்து கொடுக்க சாந்தியாகும்.

xxxx

பசி தீபனத்திற்கு

புதினா ரசம் ஒரு பலம் எலுமிச்சம்பழ ரசம் 2  பலம்  கொஞ்சம் சக்கரை கூட்டிக் கொடுக்க தீபனமுண்டாகும்.’

xxxx

பூ

உடல் புஷ்டியாக

பூசணி வித்தை பருப்பையெடுத்து பொடித்துக் காய்ச்சி பாலில் கலந்து உட் கொண்டுவந்தால்  உடம்பு புஷ்டியாகும் .

xxxx

இரத்தக் கழிச்சலுக்கு

பூனைக்காலி விரையை பாலில் காய்ச்சிஉண்டுவந்தால்  இரத்தக் கழிச்சல் நிவர்த்தியாகும்; விந்து கட்டுப்படும் .

xxxx

வாத நோய்களுக்கு

பூத விருட்ச மூலத்தைப் பாலில் அரைத்து கலக்கியு ண்டுவந்தால்  வாத நோய்கள் நிவர்த்தியாகும்; பல விஷக்கடிகளும்  தீரும்.

xxxx

சொறி கிரந்தி கரப்பானுக்கு

பூவரசு மூலத்தைப் பாலிற் கொள்ள  சொறி கிரந்தி கரப்பான்   வீக்கம் இவை தீரும்.. சில்லறை விஷம் சாந்தியாகும்

xxxx

கை கால் குடைச்சலுக்கு

பூமி சக்கரைக் கிழங்கை தண்ணீர் விட்டரைத்து கை கால் குடைச்சலுக்குப் பூசிவரவும். சில தடவைகள் பூசிவந்தால்  சவுக்கியமாகும்.

xxxxx

மூச்சு அடைப்புக்கு

பூமி சக்கரைக் கிழங்கை தேனில் உரைத்து உள்ளுக்குக் கொடுக்க மூச்சு அடைப்பு  தீரும். நாட்பட்ட இருமல் சாந்தியாகும்.

xxxx

வீரிய விருத்திக்கு

பூனைக்காலி வித்து கட்டு விரை வெங்காய விரை இது சமனிடை கூட்டி ஆலம்பால்  அல்லது அத்திப்பாலில் அரைத்து ஒருவேளைக்கு இரண்டு விராகன் எடையாகப் பசும்பாலில் குழைத்துச் சாப்பிடவும். இப்படி ஏழுநாள் இருவேளையும் தின்றால் தாது விருத்தியாகும். இடுப்புவலிவுண்டாகும் .

xxxx

471. காது நோய்க்கு

பூண்டு திரிகளை பஞ்சுபோல் நசுக்கி துணியில் முடிந்து விளக்கில் வாட்டி 2,3, துளி காதில் பிழிய காது நோய் தீரும் .

தொடரும் ……

Tags- முனிசாமி முதலியார் ,மூலிகை அதிசயங்கள் 38 , பூண்டு, பூனைக்காலி, பூமி சக்கரைக் கிழங்கு

மூளை நினைவாற்றல் திறனை முழுதுமாக  ஆராய்ந்த ப்ரெண்டா மில்னெர்- 2 (Post.13,275)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.275

Date uploaded in London – 26 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

22-5-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.

மூளை நினைவாற்றல் திறனை முழுதுமாக  ஆராய்ந்த ப்ரெண்டா மில்னெர் (Brenda Milner) – 2

ச. நாகராஜன் 

நினைவாற்றல்

 நினைவாற்றல் ஆய்வில் இறங்கிய ப்ரெண்டா, இருவகை நினைவாற்றல் நமக்கு இருப்பதைக் கண்டுபிடித்தார். ஒன்று நிகழ்வு நினைவாற்றல் இன்னொன்று செய்முறை நினைவு.

 தகவல்களை ஒழுங்கு படுத்துவதில் மூளையின் முன் மடல்களுக்கும் (Frontal lobes) நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பை அவர் கண்டுபிடித்தார். இப்படி அவர் கண்டுபிடித்த தகவல்கள் மூளை கோளாறுகள், நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட தீவிரமான வியாதிகளைத் தீர்க்க வழிவகைகளைக் கண்டுபிடிக்க உதவியது.

‘வாடா’ (WADA) என்ற ஒரு சோதனை மூலம் இடது பக்க மூளையே மொழி பற்றிய அறிவில் முன்னிலைப் பங்கு வகிக்கிறது என்பதை அவர் நிரூபித்தார்.

சாதனையான சோதனை

ஒரு முறை ஹார்ட்ஃபோர்ட் என்ற இடத்திற்கு ஒரு நோயாளியைப் பார்க்க உடனே வருமாறு ப்ரெண்டாவிற்கு அழைப்பு வந்தது. அங்கு விரைந்த அவர் ஹென்றி மொலைஸன் (ஹெச் எம் என்று பின்னால் அனைவராலும் குறிப்பிடப்பட்டார் இவர்) என்பவரைக் கண்டார்.

அவருக்கு தான் அன்றாடம் செய்யும் செயல்களே நினவில் இல்லை. இதைப் பார்த்து அதிர்ந்து போன ப்ரெண்டா இரு சோதனைகளை அவரிடம் மேற்கொண்டார். 1955, ஏப்ரல் 26-ம் தேதி நடந்த சோதனை பற்றியும் 1957-ல் ஹெச். எம் மீது நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையும் 1957-ல் உலகிற்குத் தெரிய வந்தது. சுமார் 2500 ஆய்வுப் பேப்பர்களில் இந்த சோதனை மேற்கோளாகக் காட்டப்படும் அளவு இது வரலாற்று பிரசித்தி பெற்ற சோதனையாக ஆனது.

இதில் தான் ஹிப்போகாம்பஸ் என்ற மூளையின் பின் மேடு, இதுவரை நினைவாற்றல் பற்றிய எந்த விஷயத்திலும் அறிஞர்களால் பார்க்கப்படாமல் இருந்ததையும் அதன் முக்கியத்துவத்தையும் ப்ரெண்டா சுட்டிக் காட்டினார்.

ஒரு சுவையான விஷயம் ஹெச். எம். மீதான அவரது தொடர் சோதனை ஐம்பது ஆண்டுகள் தொடர்ந்தன.

குறுகிய கால நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் ஆகியவை பற்றிய பல புதிய உண்மைகள் உலகிற்குத் தெரிய வந்தன.

வலிப்பினால் அவதிப்பட்ட ஒரு நோயாளி அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தனது பழைய காலம் பற்றிய அனைத்தையும் மறந்தார். ஆனால் அவரால் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. இதனால் மனித மூளையில் நினவாற்றலைக் கொள்ளும் பல்வேறு அடுக்குகள் உள்ளன என்பதை ப்ரெண்டா தன் ஆய்வின் மூலமாகக் கண்டுபிடித்தார். மூளையின் பல்வேறு பகுதிகள் எப்படி இயங்குகின்றன என்பதைக் கண்டுபிடிக்க இவரது ஆராய்ச்சிகள் பெரிதும் உதவின.

விருதுகள்

ஏராளமான விருதுகள் இவருக்கு வந்து குவிந்தன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இவரை கௌரவித்தன.

2020-ல் மில்னெர் 25 கௌரவ பட்டங்களைப் பெற்றிருந்தார்.

நன்கொடை

அவருக்கு வந்த பரிசுத் தொகை ஏராளமாகக் குவிந்தது. ஆகவே பத்து லட்சம் டாலர்களை அவர் மாண்ட்ரீல் நியூராலஜிகல் இண்ஸ்டிடியூட்டுக்கு நன்கொடையாக அளித்தார்.

குடும்பம்

1941-ல் ப்ரெண்டாவிற்கான நிதி உதவி தீர்ந்து விடவே அவர் பிரிட்டனின் சப்ளை அமைச்சகத்தில் சேர வேண்டி நேர்ந்தது. அங்கு ராடாரை இயக்கும் ஆபரேட்டர்களில்  எந்த கட்டுப்பாட்டுக் கருவிகள் அவர்களுக்கு மிகவும் முக்கியமானவை என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது. அங்கு தான் அவர்  பீட்டர் மில்னெர் என்ற ஆய்வாளரைச் சந்தித்தார். ராடார் ஆய்வில் ஈடுபட்டிருந்த இருவரும் 1944-ல் மணம் புரிந்து கொண்டனர். கணவருடன் கனடா சென்று அங்கு குடியேறினார் ப்ரெண்டா.

ஆனால் 1970-ல் தனது கணவரை விவாகரத்து செய்தார் ப்ரெண்டா.

நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம்

2018-ம் ஆண்டு தனது நூறாவது பிறந்த நாளை ப்ரெண்டா கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டத்தில், ‘தான் இன்னும் பல பிறந்த நாள்களைப் பார்க்க வழி கோலப் போவதாகச்’ சொன்னார்.

நூறாவது வயதிலும் அவர் தனது வேலையை விடவில்லை. ஆராய்ச்சிகளையும் விடவில்லை.

101 வயதிலும் கூட மாண்ட்ரீலில் உள்ள மக்-கில் பல்கலைக் கழகத்தில் ப்ரெண்டா பணியாற்றி வந்தார் என்றால் நம்புவதற்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இது உண்மை!

இளைஞர்களுக்கு ப்ரெண்டாவின் அறிவுரைகள்

 பொருள் பொதிந்த வழிகாட்டுகின்ற அறிவுரைகளை ப்ரெண்டா அனைத்து இளைஞர்களுக்கும் தருகிறார். அவற்றில் மிக முக்கியமான ஒன்று இது:

தப்பான ஒரு பணிக்களத்தில் அல்லது வேலையில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் அதை உடனே மாற்றத் தயங்காதீர்கள். (நான் மட்டும் என் பணியை மாற்றிக் கொள்ளாமல் இருந்திருந்தால்) சாதாரண ஒரு பள்ளிக்கூடத்தில் நான் ஒரு கணித ஆசிரியையாகவே இருந்திருப்பேன்”

மிகத் துணிச்சலுடன் தனக்கு ஒவ்வாத ஒரு தொழிலில் தான் இருப்பதை உணர்ந்து கொண்ட ப்ரெண்டா உடனே நரம்பியலில் தன் பணியைத் தொடங்கி அதிலேயே ஆய்வு செய்து முன்னேறினார்.

ஆகவே நீங்கள் விரும்பும் ஈடுபாடுடன் கூடிய வேலையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுங்கள் என்பதே இவரது முக்கியமான அறிவுரை!

இப்போது இவருக்கு வயது 105.

மூப்பின் முதிர்ச்சியில் இருப்பதாகக் கூறும் இவர் தொடர்ந்து தன் ஆய்வுப் பணியைத் தொடர்கிறார்!

மூளை இயலில் புது வழி காட்டிய இவரை சாமான்யன் முதல் மேதை வரை (மூளை உள்ள அனைவரும்) மறக்க முடியுமா என்ன?

***

 6-6-2024 குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழ் இன்று முதல் 25-5-2024 நியூஸ் ஸ்டாண்டுகளில் கிடைக்கிறது. 

இதில் சா.நாகராஜன் எழுதிய இமயமும் இராமாயணமும் கட்டுரை இணைப்புப் புத்தகமாக தரப்படுகிறது. 

இமயமும் இராமாயணமும் – இமயமலையில் இராமாயணம் சம்பந்தப்பட்ட கோயில்கள், குகைகள், இடங்கள், புராண வரலாறுகள் உள்ளிட்ட அனைத்தையும் இந்தக் கட்டுரையில் படிக்கலாம்.

வசிஷ்ட குகை, அனுமார் பெயர்த்தெடுத்து வந்த சஞ்சீவனி மலை, ஊர்மிளாவின் விரதம். லக்ஷ்மணனின் தவம், ஶ்ரீ நகரில் இராமர் புஜை செய்த சிவஸ்தலம், இராவணன் பெயர்த்தெடுக்க முயன்ற கைலாயம் உள்ளிட்ட சுவையான விவரங்கள் இந்தக்  கட்டுரையில் உள்ளன.

படித்து மகிழுங்கள்! 

 —subham—

75 Beautiful Quotations from Vishnu Sahasranama Commentary- Part 5 (Post No.13,274)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,274

Date uploaded in London – –   25 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part 5

Sarva praharaaayudhah – Word No.1000 in the VS

There is no rule that the Lordhas got only the above mentioned weapons. All things which can be used for contacting or striking are His weapons.

Brhan- naaradiiya 1-51-10 says,

Omkaaras ca’tha-sabdas ca dvaav etau brahmanah puraa

Kantham bhitvaa viniryaatau tasmaad mangalikaa vubbau

Meaning

Omkara and the sound Atha came out of Brahma’s mouth. They are both , therefore, cause of auspiciousness. Namah is added a the end  to indicate worship. The Veda says Bhuyisthaam te mama uktim vidhema- We offer you our  salutations again and again.

There are the following verses about the great merits attached to making salutations to Hari:

Dhanyam tad eva lagnam tan nakshatram tad eva punyam ahah

Karanasya ca  saa siddhir yatra Harih praang namaskritye

Meaning

Whatever Lagna (zodiacal sign)there is in which Hari is first saluted that indeed is blessed, that Nakshatra is blessed and that day is holy. That gives also fulfilment to the senses.

In this the word Praak (first) indicates also the end indirectly.  The fruit accruing from salutations is already give. Further

Eko’pi krshnasya krtah pranaamo

Dasa’svamedhaa vabhrthena tulyah

Dasa’svamedhi punareti janma

Krsna  pranaami na punarbhavaaya

-=-Mahabharata, Saanti Parva 47-91

Meaning

One prostration done to Sri Krishna is equal to ten Asvamedha sacrifices and the concluding baths. A man who performed ten Asvamedha sacrifices has to be born again but not so one who prostrates to Krishna.

Saanti parva 47-90 says,

Atasii-puspa- sankaasam pita-vaasasam acyutam

Ye namasyanti Govindam na tesam vidyate bhayam

Meaning

No fear overcomes one who salutes Govinda  who is ever without a fall , who wears a yellow cloth and who is blue in colour.

Loka trayaadhipatim apratima prabhaava

Misad pranamya  sirasa prabhavisnum iasm

Janmaantara-pralaya-kalpa-sahasra- jaata

Maasu prasaantim upayati narasya paapam

Meaning

If a man bows down his head in salutation to the Creator and Lord of all the three worlds who is endowed with limitless powers, the sins committed by him in innumerable past births  and numberless Kalpas are destroyed.

xxxx

Daamodarah – Word No.367 in the VS

One who has very benevolent (Udaara) mind because of disciplines like self-control (Dama).

Brahmaanda Puraana 76-13-14 says,

Dadarsa c’aalpa dantaasyam, smita-haasam ca baalakam

Tayor Madhya-gatam baddham daamnaa gaadham tathodare

Tatas ca Damodarataam sa yayau  daama-bandhanaat

Meaning

The inhabitants of Gokula  saw the boy smiling with teeth, passing between tow trees  with the rope tied tightly round his waits. As He was thus tied up with he rope(Daama), He got the name Daamodarafrom that time.

There are the following verses of Vyaasa :

Daamaani loka-naamaani taani yasy’odaraantare

Tena daamodaro  devah sriidharah sri-samaasritah

Meaning

Dama means the worlds. He in whose abdomen these worlds have their existence, that Lord, known alsoas Sriinivaasa and Sriidhaara, is Daamodara.

My comments

The name Daamodara is the name of one of the Tamil poets in Puranaanuru, Part of Sanagam Tamil Works. That means Tamils had thee names 2000 years ago. We also find Kesava and Vishnu in Tamil poets names.

Vishnudaasan = Vinnandaayan in Tamil Sangam works

Daayankannan = Kannadaasan in Tamil Sangam works

xxxx

Ksobhanah – Word No.374-

One who at the time of creation entered into Purusa and Prakruti and caused agitation.

Prakrtim Purusam c’aiva pravisy’aatmecchayaa Harih

Pravisya Ksobhayaamsa sarga kale vyayaa’vyayau

Meaning

The eternal Lord Hari , at the time of creation, entered at His own willthe changeful Prakriti and the changeless Purusa and created agitation in them.

(I have already explained that this is the Big Bang)

xxxx

Havir-Harih – Word No.359-

Shankara in his commentary says, Hari can mean one who is blue in complexion. We know Krishna means black.

Krishna says

Haraami agham ca smartrnaam havir bhaagam kratusv’aham

Varnas ca hariih sresthas tasmaad harira ham smrtah

I destroy away the sins of those who remember Me. I  take away also the portion of rice in sacrifics. My complexion is the delightfully beautiful blue. I am therefore called Hari.

xxxx

Atulah – Word or naamaa No.355

One who cannot be compared to anything else.

Svetaswatara Upanishad  4-19 says,

Na tasya pratimaa’sti yasya naama mahad yasah-

There is none equal to Paramatman whose name is most glorious.

Also the portion of rice in the sacrifices. My complexion is the delightfully beautiful blue. I am therefore called Hari.

Bhagavad Gita 11-43 says,

पितासि लोकस्य चराचरस्य
त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान् |
 त्वत्समोऽस्त्यभ्यधिककुतोऽन्यो
लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव || 43||

pitāsi lokasya charācharasya
tvam asya pūjyaśh cha gurur garīyān
na tvat-samo ’sty abhyadhikaḥ kuto ’nyo
loka-traye ’py apratima-prabhāva

BG 11.43: You are the Father of the entire universe, of all moving and non-moving beings. You are the most deserving of worship and the Supreme Spiritual Master. When there is none equal to You in all the three worlds, then who can possibly be greater than You, O Possessor of incomparable power?

xxxx

Krsnah – Word or naamaa No.550

One who is known as Krsna-dvaipayana. Says Vishnu Purana,

Krsna -dvaipaayanam vyaasam viddhi naaraayanam prabhum!

Ko hy anyah pundarikaaksanMahaabhaarata- krt bhavet!!

Meaning

Know that the Vyaasa known as Krsna dvaipaayana was the Lord Naaraayana Himself. Who except the lotus eyed Lord can produce a work like Mahaabhaarata?

To be continued……

 tags- 75 Beautiful Quotations , Vishnu Sahasranama , Part 5 , Adi Sankara commentary

கருட மந்திரம் செய்யும் அதிசயம்!  திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-16 (Post.13,273)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,273

Date uploaded in London – –   25 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கூகை, பாம்பு, கிளி, பூனை

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்

நாகையும் பூழும் நடுவில் உறைவன

நாகையைக் கூகை நணுகல் உறுதலும்

கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. 2851

ஆங்கிலத்தில் உள்ள விஷயம்

உடலில் வாழும் 6 தீய சக்திகளுக்கு ஆண்டவன் எச்சரிக்கை !

ஆந்தை/கூகை , பாம்பு, கிளி, பூனை, மைனா, காடை  ஆகியன வாழ்கின்றன.மைனாவை ஆந்தை நெருங்கும்போது எலியானது கீச்சிட்டு மைனாவை எச்சரிக்கிறது.

xxx

.கூகையாகிய அறியாமையும், பாம்பாகிய சுட்டறிவும், கிளியாகிய அறமும், பூஞையாகிய பாவமும், நாகையாகிய சிற்றறிவும், பூழாகிய அறுபகையும், உடம்பின் நடுவாகிய எண்ணம் என்னும் சித்தத்தின்கண் உறைவன.  நாகையாகிய சிற்றறி வினைக் கூகையாகிய அறியாமை நணுகமுயலும். அப்பொழுது அருள் ஒளிபெற்ற வெள் எலியாகிய ஆருயிர் சிவனை நினைந்து கூவும். சிவனும் வெளிப்பட்டுக் கூகையை அடக்கியருளவன்.

கூகை – அஞ்ஞானம். பாம்பு – காமம். கிளி – அறம். பூஞை – மறம். நாகை – சிற்றறிவு. ;. எலி – சீவன்.

XXXX

ஒன்றுக்கொன்று ஒவ்வாத  சேர்ந்து இருக்கமுடியாத ஜீவன்கள் இந்த பூமியில் வாழ்கின்றன. எல்லாம் இறைவன் சித்தம்.  உதாரணமாக  ஒரு கோட்டானும், அதை விழுங்கும்  பாம்பும்,  அழகிய  பச்சைக் கிளியும்  அதைக்  கொல்லும்  பூனையும், நாகணவாய் பறவையும்,  காடையும் ஒன்றால் ஒன்று பாதிக்காமல் மொத்தத்தில் உயிர் வாழ்கின்றன.     உடலிலும்   இப்படி ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக வாழ்கின்றன.  அறியாமை என்பது கோட்டான் ;காமம் என்பது ஒரு பாம்பு. ;  தர்மம் சாத்வீகம்  கிளி என்றால்,  அதர்மம்  என்பது பூனை.   அதிகம் வளராத, சிற்றறிவுதான்  நம்மில் நாகணவாய் பறவை. அதை அறியாமை எனும் கோட்டான்  அணுகும்.  அந்த நேரத்தில் தான் அறியாமையாகிய  கோட்டானை, ஞானம் ஆகிய  எலி  ஓங்கார நாதமாகிய ஒலியை  எழுப்பி, சிற்றறிவை  சிதறாமல்   பாதுகாக்கும்.

The Six Evils Dwell Within and God’s Warning to Them

The Owl, the Snake, the Parrot and the Cat,

The Mynah and the Quail

They, all, within dwell;

As the Owl nears the Mynah

The Mouse warns Mynah, screeching loud.

xxxx

கூகை- நாகம்

கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்

மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து

நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்

பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே. 2880

XXX

ஆங்கிலத்தில் உள்ள விஷயம்

ஜீவன் சிவன் ஆகலாம்; குண்டலினி யோகத்தால் இது நிகழும் .ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது ஆந்தை குருந்த மரம் ஏறியபோது புரியும். அப்போது நடுவில் நிற்கும் பாம்பு ஞானத்தை கற்பிக்கும் . ஜீவன் சிவனாகி விடும்

XXX

இருளில் மூழ்கி இருக்கும் கோட்டானைப் போலச் சீவன் அறியாமை என்ற இருளில் மூழ்கிக் கிடைக்கும். குருவின் உபதேசத்தால் உண்மையை உணர்ந்து கொண்ட சீவன் ஒளிமயமான குருந்தின் மீது ஏறும்.

இந்த உலகத்துக்குக் காரணம் முக்குணங்கள் கொண்ட மாயை என்ற உண்மையைச் சீவன் அறிந்து கொள்ளும். மண்டலமிட்ட பாம்பு போன்ற குண்டலினி சக்தி உடலின் ஆதாரங்களின் வழியே மேலே ஏறிச் செல்லும்.
அது சென்னியில் உள்ள மேல் நோக்கிய சகசிரதளத்தில் சென்று பொருந்தும். அங்கு நாதத்தை எழுப்பும்! அதனால் பொறிகளின் வசப்பட்டுப் பிறந்து இறந்து கொண்டிருந்த சீவன்பிறவிப் பிணியைத் துறந்துவிட்டுத் தானும் சிவம் ஆகிவிடும்.

XXXX

அருட்கண்ணாகிய அகக்கண் திறக்கும் வரை ஆருயிர்க்கிழவர் ‘பொருட் கண்ணிழந்து உண்பொருள் நாடிப் புகலிழந்த’ பகல் குருடராவர். அதனால் அவர் கூகை என உருவகிக்கப்பட்டனர்.

சிவகுரு வீற்றிருக்கும் தவநிறை திருமரம் குருந்தம் என்பது பொருந்தும்.அதனால் சிவகுருவின் திருவடியிணையினைச் சேர்வதைக் ‘குருந்தம தேறி’ என உருவகித்தனர். அஃது மாணிக்கவாசகருக்கு ‘திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்த மேவி’ ஆட்கொண்டருளினமையான் உணரலாம்.

சிவகுருவின் திருவருளால் சுட்டியுணரப்படும் உடலும், உலகும், உலகியற் பொருள்களும் முக்குண விரிவாயுள்ளன; மயக்கும் தன்மையன என்னும் உண்மையினை உணர்தல் வேண்டும். உணரவே நாகமாகிய மனக்குரங்கு பாகம் எய்தி அடங்கும்.

‘காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட்டோட’ எனத் தாயுமானவர் (30 – 1) அருளியவாற்றான் உணர்க. மனமடங்கவே திருவைந்தெழுத்தைச் ஓதிவரும் தாவாச் செவ்வியராவர். எண்குணம் நிறைந்த சிவப் பண்பருமாவர்.

Jiva Becomes Siva by Kundalini Yoga

When the Owl gets to the top of Kurunda tree

And realizes desire is the source of world

Then the Snake standing in the Center teaches (Jnana)

And Jiva, Siva becomes.

XXXX

கருட மந்திரம் செய்யும் அதிசயம்

கருடன் உருவங் கருதும் அளவிற்

பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்

குருவின் உருவாங் குறித்தஅப் போதே

திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.2611

பாம்பும் கருடனும் எதிரிகள்; கருட மந்திரத்தைப்  பல நாள் உருவேற்றிய மந்திர சித்தர்கள்  கண்ணாற் பார்க்கவே அந்நஞ்சு அப்பொழுதே அகலும்.  அதுபோல் சிவகுருவின் திருவடியிணையினைக் குறிப்பதாகிய சிந்தனை செய்த அப்பொழுதே மும்மலப் பிணிப்பு முற்றும் அகன்றடங்கும். அவ் வுயிரும் சிவனடிப் பேறு பெற்றுச் சிவனவனாக விளங்கும் திருவைந் தெழுத்தே பிறவிப் பெரும் பகையறுக்கும் அருமருந்தாகும்.

At the Thought of Guru’s Form Impurities Vanish

At the thought of Garuda’s form

The serpent’s poison leaves

Its terrors lose;

Unto it,

At the thought of Guru’s form

The triple Malas leave instant;

The Jiva then Siva becomes.

கருடபாவனை வருமாறு : “ஆதிபௌதிக கருடன், ஆதி தைவிக கருடன், ஆத்தியான்மிக கருடன் எனக்கருடன் மூவகைப்படும். , உலகத்திற் காணப்படும் கருடன் ஆதிபௌதிக கருடன். அதற்கு அதி தெய்வமாய் அது போல வைத்துத் தியானஞ் செய்து கணிக்கப்படும் மந்திரம் ஆதிதைவிக கருடன். அம் மந்திரத்தினிடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுப்பதாகிய சிவசத்தி ஆத்தியான்மிக கருடன் எனப்படும் அவற்றுள், ஈண்டுக் கருடனென்றது ஆதி தைவிக  கருடன் (சிவஞான முனிவரர், 9 2-3பேருரை.)

xxxx

சிவன் ஒரு கருடன்!

நோக்குங் கருடன் நொடியேழு லகையும்

காக்கும வனித் தலைவனுமங்குள

நீக்கும் வினையென் நிமலன் பிறப்பிலி

போக்கும் வரவும் புணர வல்லானன்றே 2989

எல்லாவற்றையும் கூர்ந்து பார்க்கும் கருடன் அவன்

; விண்ணிலிருந்துகொண்டே மண்ணுலகில் உள்ள எல்லாவற்றையும் கூர்ந்து பார்க்க வல்லது கருடன் ;சிவபெருமான் கருடனுக்கு ஒப்பானவர்.ஏழு உலகங்களையும் பார்த்து பக்தர்களுக்கு நொடிப்பொழுதில் உதவுவான்.பாசங்களிலிருந்து நீங்கியவன் ஆதலால் நிர்மலன்; போக்கும் வரவும் இல்லாத பிறப்பற்றவன் (சிவனுக்கு திருமால் போல அவதாரங்கள் இல்லை; ஆகையால் பிறப்பிலி)

He Has No Entry, Exit and Stay

He is unto the Garuda Bird, that in an instant sees all;

He protects the seven worlds entire,

He removes my Karmas,

He, the Pure One, the Birthless One,

xxxxx

பன்றியும் பாம்பும்

பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்

தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்

குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்

குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே. 2877

மனித மனம் பன்றியைப் போலத் தூய்மை இன்மையில் விருப்பம் கொண்டது. பாம்பு போலப் பகைமையில் சீற்றம் கொண்டது. பசு போலத் தீமையில் அடக்கம் கொண்டது. வானரம் போல அடங்காமல் திரிவது. இத்தகைய உள்ளத்துடன் பொருந்தாமல் மனிதன் சிவத்துடன் பொருந்த வேண்டும். தராசுத் தட்டுக்கள் போல இவை இரண்டும் சமம் ஆனால் அந்த சீவனின் குறைவுகள் குறைந்து அதன் நிறைவுகள் வளரும்.

XXXX

துங்கிக் கிடக்கும் பன்றியனைய தோல்வியும், பாம்பின் சீற்றமனைய வெற்றியும், பசுவாகிய ஆடனைய அடக்கமும், முசுவானர மனைய அடங்காமையும் எங்கணும் விரவிக்கிடந்தன.  சிறுநரிக் கூட்டமாகிய பயனில்லாத நினைப்புகளுள், ஒருவன் சோர்வடையாது திருவடி நினைப்பிற் கூடித், தராசின் நாநுனிபோன்று எண்ணத்தால் உணரும் உணர்ச்சியினைச் சிவபெருமான் மாட்டு மாறின்றி நிறுத்தினால் பன்றியனைய இருள்மலமிகுதியை நாளும் ஒளிவரக் குன்றிமணியொப்பச் சிறிது சிறிதாகக் குன்றவைத்தல் கூடும்.

இருண்மலம் பன்றி; மருண்மலம் அன்னம்; 

 பன்றியும் பாம்பும் – தோல்வியும் வெற்றியும். பசு – முசுவானரம்; அடக்கமும் அடங்காமையும்.

Conquer Indriyas and Reach Iruvinai-Oppu and Nalapari

Pakam

Pig and Snake, Cow and Monkey

Together were in the lowly Jackal herd;

Joining them not and debasing himself not,

When, in balance, deeds good and bad are equal weighed

The Jiva, tinier than crab’s-eye berry,

Its ego’s diminution saw.

–subham—

Tags- கருட மந்திரம், ,அதிசயம், கூகை , கிளி, பூனை, எலி, ,பன்றி , திருமந்திரம், ஆராய்ச்சி, கட்டுரை

மூளை நினைவாற்றல் திறனை முழுதுமாக  ஆராய்ந்த ப்ரெண்டா மில்னெர் -1 (Post.13,272)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.272

Date uploaded in London – 25 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

22-5-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.

மூளை நினைவாற்றல் திறனை முழுதுமாக  ஆராய்ந்த ப்ரெண்டா மில்னெர் (Brenda Milner) – 1

ச. நாகராஜன்  

ப்ரெண்டா மில்னெர்

உத்வேகம் ஊட்டும் இந்தப் பெண்மணி தான் நியூரோ பிஸியாலஜி எனப்படும் மூளை இயலை முதலில் நிறுவியவர். மனித மூளை, நினவாற்றல் உள்ளிட்ட மூளை சம்பந்தமானபல்வேறு ஆய்வுகளையும அதன் அடிப்படையிலான உண்மைகளையும் கண்ட “மூளைப் பெண்மணி” இவர். 105 வயதான இவர் இன்றும் துடிப்புடன் இயங்குகிறார் என்பது ஆச்சரியகரமான ஒரு உண்மை!

பிறப்பும் இளமையும் 

இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் 15-6-1918 அன்று ப்ரெண்டா மில்னெர் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சாமுவேல் லாங்க்போர்ட் ஒரு இசை விமரிசகர்,  பத்திரிகையாளரும் கூட. தாயார் ஒரு பாடகர். தந்தை, தாய் ஆகிய இருவரும் இசைத் துறையில் நிபுணர்களாக இருந்தாலும் கூட ப்ரெண்டாவிற்கு இசையில் ஒரு லயிப்பு ஏற்படவில்லை.

1918-ல் ஏற்பட்ட இன்ஃபுளுயென்ஸா நோயில் தாயாரும் குழந்தையும் பீடிக்கப்பட்டு ஒரு வழியாக பிழைத்துக் கொண்டனர்.

கேம்பிரிட்ஜ் கல்லூரியில் சேர்ந்த ப்ரெண்டா உளவியல் பிரிவில் சேர்ந்தார். பட்டத்தையும் பெற்றார்.

19 வயதிலேயே பணியாற்றத் தொடங்கிய இவருக்கு மூளை பற்றிய ஆய்வில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது.

நியூரோ பிஸியாலஜி என்று அறியப்படும் நரம்பு  இயங்கு இயலை ஒரு புதிய துறையாக இவரே கண்டுபிடித்து நிறுவினார்.

நினைவாற்றல், அறிவுத் திறன் ஆகியவற்றில் இவர் ஆய்வு நடத்தி பல சாதனைகளை நிகழ்த்தினார்.

மூளை

மனித மூளை ஒரு சிக்கலான உறுப்பு. இதைப் பற்றிய ஆயிரம் அதிசய தகவல்கள் உண்டு. பிரமிக்க வைக்கும் சில தகவல்கள் இதோ:

மூளையில் 73% நீர் தான்.

2 சதவிகிதம் டீ-ஹைட் ரேஷன் ஏற்பட்டால் நமது கவனிக்கும் சக்தி, நினைவாற்றல் எல்லாம் போய்விடும்.

மூளையின் எடை ஆண் என்றால் 1370 கிராம். பெண் என்றால் 1200  கிராம்.

உடல் எடையில் இது 2 சதவிகிதம் தான்.  ஆனால் 20 சதவிகித ஆக்ஸிஜனை இது எடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறது.

நமது மூளையில் எத்தனை செல்கள் (உயிரணுக்கள்) இருக்கின்றன என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்று போல் இன்னொரு உயிரணு இல்லை. 3300 வகையான உயிரணுக்கள் இது வரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் நூறு பில்லியன் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) உயிரணுக்கள் இருக்கலாம். நூறு கோடி நரம்பிணைப்புகள் இருக்கலாம். இவை தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று தகவலைப் பரிமாறிக் கொண்டே இருக்கிறது.

மூளை செய்திகளை உணர்ந்து அறியும் திறன் இன்றைய அதி நவீன கணினியை விட வேகமானது. இங்கு தகவல் மணிக்கு 268 மைல் வேகம் என்ற வேகத்தில் செல்கிறது. (பார்முலா ஒன் ரேஸ் காரின் உயர்ந்தபட்ச வேகம் மணிக்கு 240 மைல் தான்!) ஒவ்வொரு நியூரானும் ஒரு விநாடிக்கு ஆயிரம் நரம்புத்தாக்கம் (IMPULSE) ஏற்பட பல்லாயிரம் நரம்பிணைப்பு தொடர்புகள் மற்ற நியூரான்களுடன் ஏற்படுகின்றன

 ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் மூளையின் மூலம் 70000 எண்ணங்களை எண்ணுகிறோம். அதாவது ஒரு நிமிடத்திற்கு 48.6 எண்ணங்கள் என்ற அளவில் எண்ணுகிறோம்.

 மூளையால் 50000 வாசனைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது.

 ஒவ்வொரு நிமிடமும் 750 முதல் 1000 மில்லி லிட்டர் ரத்தம் மூளை வழியே பாய்கிறது.

 கண் இமைக்கும் நேரத்தை விடக் குறைவான நேரத்தில் –  நீங்கள் பார்க்கும் காட்சியை கண் அனுப்ப அதை 13 மில்லி வினாடிகளில் மூளை உணர்ந்து கொள்கிறது.

 மூளையில் 400 மைல் நீளம் என்ற அளவில் ரத்த நாளங்கள் உள்ளன.

25 வயதில் தான் மூளை முழு வளர்ச்சியை அடைகிறது.

தொடர்ந்து மூளை இயக்கத்திற்கு ஆக்ஸிஜன் தேவை. ஐந்து நிமிடம் ஆக்ஸிஜன் இல்லையென்றால் மூளை சேதப்படும்.

 மூளையின் சேமிக்கும் திறனை முழுதுமாக இன்னும் அறிய முடியவில்லை. எல்லையற்ற அளவில் அது சேமிக்கும் திறனைக் கொண்டது.

இப்படி மூளை பற்றிய விவரங்களை சொல்லிக் கொண்டே போகலாம் – முடிவில்லாமல்!

 ஒன்பது வகை அறிவு

மனிதனுக்கு ஒன்பது வகை அறிவு உண்டு என்று அறிவியல் சோதனைகள் நிரூபிக்கின்றன.

மொழி வகையிலான அறிவு- LINGUISTIC 2) தர்க்கரீதியிலான அறிவு – LOGICAL – MATHEMATICAL  3) பார்ப்பதன் மூலம் வருகின்ற அறிவு, மற்றும் இடம் பற்றிய அறிவு – VISUAL AND SPATIAL  4) உடல் இயக்கத்தில் இருக்கும் அறிவு – BODILY KINESTHETIC   

5) இசை அறிவு- MUSICAL 6) தனி மனித உறவு சார்ந்த அல்லது நபர்களுக்கு இடையேயான அறிவு – INTERPERSONAL 7) தன்னைப் பற்றிய அறிவு – INTRAPERSONAL 8) இயற்கையின் அறிவு – NATURALISTIC.   9) புறநிலை பற்றிய அறிவு – EXISTENTIAL.     

 ஆக இவற்றை கல்விப் பயிற்சியின்  மூலம் திறம்படக் கூட்டிக் கொள்ளலாம்.

மூளையைப் பற்றிய பல தவறான தகவல்களை அறிவியல் தகர்த்து வருகிறது.

மூளையைத் தீவிரமாக ஆராய்ந்த ப்ரெண்டா, அறிவியல் ரீதியாக மூளை பற்றிய சரியான புது தகவல்களைத் தந்தார்.

 to be continued…………………………….

******

S NAGARAJAN’S SUPPLEMENT WITH BHAKTI ISSUE

POSTED ON 24 MAY 2024OUR BLOGS’ REGULAR CONTRIBUTOR’S SUPPLEMENT IS AVAILABLE WITH BHAKTI TAMIL MAGAZINE.

BENGALURU S NAGARANAN HAS WRITTEN ABOUT HIMALAYAN SHRINES CONNECTED WITH THE GREAT EPIC RAAMAAYANAA

TOPIC

HIMALAYAS AND RAMAYANA (IN TAMIL).

BUY IT AND GET ENLIGHTENED.

–SUBHAM—

75 Beautiful Quotations from Vishnu Sahasranama Commentary- Part 4 (Post No.13,271)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,271

Date uploaded in London – –   24 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

PART FOUR

Aadi Sankara’s Vishnu Sahasranaama (VS) commentary continued

Uurjita -saasanah – Word No.910 in the VS

One whose dictates in the form of Srutis and Smritis are of an extremely sublime nature. The Lord says,

Sruti -Smriti mamaivaa’jne yas te ullangya vartate

Aajnaa-cchedi mama dvesi madbhoktopi na vaishnavah

Meaning

The Srutis and Smritis areMy commnadments. Whoever violates them violates My order. Therefore they are my traducers. They are not my devotees, nor can they be called Vaisnavas.

xxxx

Punya -sravana- kirtanah  – Word No.922 in the VS

One to hear about whom and to sing of whom is meritorious. VS says

Ya idam srunuyaan nityam yas capi parikirtayet

Naa’ subham praapnuyaat kincit so’mutr’cha ca maanavah.

Meaning

He who hears and recites this everyday will not be overcome by evil here or hereafter.

xxxx

Pramaanam – Word No.959 in the VS

One who is self-certifying as He is pure consciousness.

Taittiriya Upanishad 1-2-1 says

Jnana-svaruupam atyanta  nirmalam paramaaarthatah

Tam ev’aartha-svaruupena bhraanti-darsanatah sthitam

Meaning

That which is in  truth absolutely pur  and is the nature of consciousness; that very thing  when viewed by delusive vision , is experienced as objects of the world.

xxxx

Praana -jiivanah Word No.962 in the VS

He who keeps alive human beings with Vaayus (air) known as Praana, Apaana etc.

Katopanishad says,

Na praanena naapanena  marto jiivati  kascana

Itarena tu jiivanti yasmin netaa’vupaasritau

Meaning

No one lives by Praana or Apaana . He lives by what that which is support of these.

xxxx

Ekaatmaa —Word No.965 in the VS

One who is the sole being and the spirit (Aatmaa) in all.

Taittiriya Upanishad 1-1 says,

Aatmaa vaa idam eka evaa’gra aasit – This Aatman alone existed in the beginning.

The Smrti says ,

Yac ca’pnoti yad aadatte yac caa’tti visayaan tha

Yac ca’sya santato bhaavas tasmaad aatme’ti giiyate

Meaning

That is known as the Aatma which pervades every being, which sustains every being, which sustains every being , which enjoys every being , and which remains always the same.

xxxx

Bhuur- bhuvah- svastaruh — Word No.967 in the VS

The three Vyaahrutis- Bhuuh- bhuvah- svah- are said to be the essence of the Veda.

Manu says,

Agnau prastaa’hutih samyag aadityam upatisthate

Aadityaad jaayate vrstir vrster annam tatah prajaah

Meaning

The oblations put in the fire reach the sun. from the sun comes the rain; from rain food grows. From food beings are born . or Bhuuh, Bhuvah,Svah stand for the three worlds  and constitute the tree of Samsaara. It is the Lord who has manifested as that tree.

xxxx

Yajnaangah — Word No.974in the VS

Aadi Sankara in his commentary quotes seven sloka/ couplets from Harivamsa 3-34-34 to 41 . Hari Vamsa is an appendix of Mahabharata.

(I am just giving the gist of the seven slokas.)

Hari vamsa 3-34-34 to 41 says:-
Supreme Lord is Yajna (sacrifice)
Vedas = Feet
Sacrificial Post/Yupa= Molar
Sacrificial Rites= Arms
Fire = Tongue
Darbha grass= Hair
Brahma = Head
Day and Night (Sun, Moon) – Two Eyes
Six Veda Angas = Ear ornaments
Ghee = Nose
Sruvas/laddle= Mouth
Sama Veda= His Voice
Dharma and Truth = Two arms/hands
His activities = Foot steps
Penance= Nails
Vedic Chants= Intestines
Sacrificial Act = Sex Organ
(two woods are used in churning out fire)
Herbs= His Seed
Atmosphere= His soul
Mantras= His Hind Parts


SOMA JUICE = HIS BLOOD


Sacrificial Pits= Shouder
Sacrificial Beast= Knees
Sacrificial Offering = incense
Havya, Kavya = His great Speed
Pragvamsa = His Body
(Praagvamsa= Retiring quarter of the sacrificer)
Sacrificial Gift/Dakshina= Heart
He is a Yogi endowed with the wholesacrifice as His Being
Subsidiary Rites= His lips and teeth
Pravargya= Pores
Vedic Metres = His Routes/paths
Secret Upanishads= His Buttocks
His Shadow= His wife
He shines like a peak of Mount Meru.

These verses give the full picture of a Vedic Sacrifice. The importance of Soma is emphasized by comparing it with God’s blood. One can easily see that it is a holy substance and not a narcotic drug as projected by Marxists and Max Muller Gangs.

My Comments:

“The Soma juice is His blood” explodes the half- baked, motivated,  cunning, Anti-Hindu foreigners’ interpretation of Soma Rasa. N one in the world will interpret God’s blood as Whisky and Brandy except the Max Muller, Griffith Gangs.


One may be surprised to see the comparison between buttocks and Upanishads. Vedic Yajnas are done in sitting posture and one is prohibited in showing his buttocks, so secretive are Upanishads. Even when we go to see God in the temple or a saint in an Ashram, we step backwards slowly and turn when we are out of sight of god or saint. One is not allowed to show his backside. Only practising Hindus know this. It is very important that we read the interpretation of great saints and not the beef eating foreigners.

xxxx

Devaki -Nandanah – Word No.989 in the VS

The son of Devaki in the incarnation as Krishna. Mahabharata 158-31 says

Jyotismi sukraani ca yaani loke!

Trayo lokaa lokapaalaas trayii ca

Trayo gnayas caahutayas ca pancha

Sarve devaa Devaki putra eva

Meaning

All the luminous bodies in the sky including the planets and the stars, all fires, and in the same way the three worlds, their guardian angels, the three vedas, the three Vedic fires, the five oblations, the entire group of Devas—all this is the son of Devaki.

xxxx

Paapanaasanah – Word or naamaa No.992

He who destroys the sins of those who adore Him, remember and sing hymns of praise on Him. The text known as Vrddha- saataapa says,

Pakso pavaasadyat paapam purusasya pranasyati

Praanaayaama -satena iva tat paapapam nasyate nrnaam!!

Praanaayaama – sahasrena  yat yat paapam nasyate nrnaam

Sana-maatrena tat paapam harer dhyaanaat pranasyati

Meaning

–Whatever sin of a man is atoned for by one week’s fasting, that is achieved by a hundred Praanaayaamas. So also whatever sin is atoned for by a thousand  Praanaayaamas, that is atoned for by meditation upon Hari even for a while.

To be continued……………………..

—subham–

Tags- 75 beautiful quotations, Part 4, Vishnu Sahasranama, Adi Sankara commentary

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—37 (Post No.13,270)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,270

Date uploaded in London – –   24 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 37

Snake Skin

 xxxx

எச்சரிக்கை

எங்கள் பிளாக்கில் வரும் கட்டுரைத் தொடர்களில் காணும் மருத்துவ சிகிச்சை முறைகளை அனுபவம் வாய்ந்த, அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்கள், டாக்டர்களின் ஆலோசனை இன்றி பயன்படுத்துவது ஆபத்தானது. ஆகையால் மருத்துவர்களைக் கேட்காமல்  எதையும் செய்க்கூடாது.

xxxx

432. சொற்ப வாய்வுக்கு

பரங்கிப் பட்டையை அரைத்து பாலில் கலக்கியுண்டுவந்தால் சொற்ப வாய்வு-சூலை-கரப்பான்-கூட்டம்-கிரந்தி  இவை தீரும்.

xxxx

அஸ்தி காங்கைக்கு

பற்பாடகத்தை அரைத்து பாலில் உ,ண்டுவந்தால் அஸ்தி காங்கை- வேட்டை- மேகம் -எரிவு- காந்தள்- இவை தீரும்

xxxx

சரஸ்வதி கடாட்சமுண்டாக

பனங்கோரை – பெருங்கோரை என்கிற குறட்டை மூலிகையைப் பாலில் அரைத்து உபயோகித்து வந்தால் லட்சுமி கடாக்ஷமுண்டாகும்.நரை திரை மாறும் .

xxxx

என் குறிப்பு – தலைப்பில் சரஸ்வதியும் உள்ளே லட்சுமியும் இருப்பது என் பிழை அல்ல. புஸ்தகத்தில் அவ்வாறே உள்ளது

xxxx

தழுதணைக்கு

பழுபாகல் சமூலத்தைப் பாலில் பிரயோகித்து உண்டு வந்தால் , தழுதணை ,- தொழுதணை கிருமி இவை தீரும். மேற்படி மூலிகையின் கிழங்கை  பத்திய பாகமாய் நாட்பட தின்று வந்தால் தேகம் பலக்கும் .

xxxx

சகல விஷத்திற்கும்

பங்கம் பாளை என்னும் ஆடு தீண்டா மூலிகையை அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து வெள்ளாட்டுப் பாலில் கலக்கியுண்டுவந்தால் புண் புளவை சகல விஷங்களும் தீரும் .

இதுவுமது

 பழுபாகல் என்னும் ஆடு தீண்டா மூலிகையை கருங்குறுவை நெல்லுடன் விக்கித்து அவள் இடித்து அந்த அவலை  தினமும் அரைக்கால்படி ஒரு மண்டலம் தின்றால்  சொறி -சிரங்கு -வங்கு- தழுதணை – வண்டு கடி- அரணை கடி- செய்யான் கடி- பூரான் கடி- பேய் சொறி – வெள்ளைப் புள்ளி கரப்பான்  இவை தீரும் . மூன்று இரண்டு மாதம் வரை நல்லெண்ணை புணர்ச்சி ஆகாது .

xxxx

பேன் சாக

படிகாரத்தைப் பொடித்து தண்ணீரில் கரைத்து தலையில் தேய்த்து ஒரு ஜாமம் சென்று ஸ்நானம் செய்யவும் .பேன் –  ஈறு முதலானதும் சாகும்.

xxxx

பல்லு நோய்க்கு

படிகாரமும் கொட்டைப்பாக்கும் சமனிடை கொண்டுஇடித்து வஸ்திர காயம் செய்து பல் தேய்த்து வெந்நீரில் வாய் கொப்பளித்து  வரவும். சவுக்கியமாகும்.

xxxx

பாம்பு விஷத்திற்கு

பச்சைத் தவளை மாமிசத்தை உப்பு-நல்லெண்ணெய் அல்லது வெண்ணெயுடன் கலந்து தின்றால் சகல பாம்பு விஷமும் தீரும். மறு தினம் வரை நித்திரை கூடாது.

xxxx

அஸ்தி சுரத்திற்கு

பச்சைத் தவளையை கிரமப்படி சாறு காய்ச்சிக்குடிக்க அஸ்திசுரம் – நாட்பட்ட ரோகம்  தீராத இருமல் இவைகள் தீரும். தேக புஷ்டியுண்டாகும் . உடம்பு குளிர்ச்சியுண்டாம் .

xxxx

பிளவை கட்டிகட்கு

பச்சைத் தவளையை உயிருடன் கொண்டுவந்து பிளவை மேல் கட்டி வைக்கவும் அது இறந்த பிறகு எடுத்துவிட்டு வேறே கட்டவும். இப்படிச் செய்வதினால் கட்டிகள் விஷம் நீங்கும். நோய் தீரும்- பிடிப்புகள் நீங்கும்.

xxxx

பா

அரையாப்புக்கட்டிக்கு

பாவட்டம் வேரும் பூலாப்பூவும் சமன்கூட்டி அரைத்து கனமாய்ப் பூச கட்டி கரையும் .

xxxx

பல் நோய்க்கு

பாக்கு  அதாவது கொட்டைப்பாக்கை  துண்டு துண்டாய்க் கருக்கி  சட்டியிலிட்டு கருக வறுத்து கற்பூரம் சமன் கூட்டி நசுக்கி பல் துலக்கி வரவும் .

xxxx

சீக்கிரத்தில் பிரசவமாக

பாம்பு தானாயுரித்த தோலைக்கொண்டுவந்து இடுப்பிலாவது வயிற்றிலாவது கட்டிவைக்க உடனே பிரசவமாகும் .

xxxx

தினவு நீங்க

பாம்புத்  தோலை போடி செய்து  அல்லது சாம்பலாக்கி உடம்பில் தேய்க்க  தினவு தீரும்.. மயிரற்ற இடத்தில் மயிர் முளைக்கும் .

xxxx

நீர்க்கோவை தீர

பாம்புத்  தோலை அங்கவஸ்திரம் போல மேலுக்காவது கச்சையைப்போல இடுப்பிலாவது கட்டியிருந்தால் பாண்டு – நீர்க்கோவை இவைகள் தீரும் .

xxxx

448. அறுபட்ட நரம்புக்கு

பாம்புத் தோலின் பொடியும் வயல் நண்டு உலர்த்திய பொடியும் சமன் கூட்டி அறுபட்ட நரம்பின்மேல் தூவி வந்தால்  அறுபட்ட நரம்பு கூடி, மூன்று தினத்தில் குணப்படும் .

தொடரும்……………………………………..

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 37, பாம்புத் தோல், தவளை, பாக்கு, படிகாரம், பேன் , ஈறு, Snake treatment

அயோத்தியில் ராமருக்கு சூர்யாபிஷேகம்; பக்தர்கள் ஆனந்தம்! ( Post.13,269)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.269

Date uploaded in London – 24 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அயோத்தியில் ராமருக்கு சூர்யாபிஷேகம்பக்தர்கள் ஆனந்தம்! 

ச. நாகராஜன்

2024, ஜனவரியில் அயோத்தியில் ராமர் பிராணபிரதிஷ்டை செய்யப்பட்ட பின் முதல் ராம நவமி 17-4-2024-ல் புதன்கிழமையன்று கொண்டாடப்பட்டது.

அனைத்து பக்தர்களுக்கும் ஒரே ஆனந்தம்.

சுமார் 5 லட்சம் பக்தர்கள் அயோத்தியில் ராம நவமி அன்று குழுமினர்.

காலை 3.30 மணியிலிருந்தே பக்தர்கள் குழும ஆரம்பித்து விட்டனர்.

ராம நவமி கொண்டாட்டத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

நண்பகலில் முறைப்படியான விழா ஆரம்பித்தது.

சூர்ய அபிஷேகம் சரியாக நண்பகல் 12-01க்கு ஆரம்பித்தது.

சூரியன் தன் பொன் கிரணங்களால் ஐந்து நிமிடங்கள் ராமருக்கு சூர்யாபிஷேகம் செய்த பின் 12-06க்கு அபிஷேகம் முடிந்தது.

ராமரின் நெற்றித் திலகத்தில் சூரியனின் பொற்கிரணங்கள் விழுந்தன. சுமார் 75 மிலிமீட்டர் குறுக்களவு கொண்டதாக இருந்தது திலகம்.

எப்படி இவ்வளவு சரியாக கிரணங்கள் ராமரின் நெற்றித் திலகத்தில் விழுந்தன என்றால் இதில் விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்து தங்கள் பங்கை சரியாகச் செய்ததால் தான்!

அயோத்தியில் சூரிய சஞ்சாரம் எப்படி இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் தொடர்ந்து கவனித்தனர்.

சரியான திசை, பிரதிபலிப்பு, லென்ஸ் ஆகியவற்றை விஞ்ஞானிகள் நிர்ணயித்தனர். லென்ஸ் உள்ளிட்ட சாதனங்கள் அனைத்தும் ஆலயத்தில் மேல் அடுக்கில் நிர்மாணிக்கப்பட்டன.  சூரிய கிரணங்கள் சுழற்றப்பட்டு சரியாக ராமரின் உருவத்தில் நெற்றித் திலகத்தின் மீது விழும் படியாகச் செய்யப்பட்டது.  முதலில் கிரணங்கள் மேல் அடுக்கில் உள்ள லென்ஸ் மீது விழுந்தன.  பின்னர் மூன்று லென்ஸ்கள் வழியே இரண்டாம் அடுக்கில் இருந்த கண்ணாடியில் வந்து விழுந்தன.

இறுதியில் ராமரின் திருவுருவச் சிலை மீது அவை விழுந்தன.

75 மிலிமீட்டர் குறுக்களவு உள்ள வட்ட வடிவத்தில் அவை ராமரின் நெற்றித் திலகத்தில் சரியாக விழுந்தது கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

செவ்வாய்க்கிழமை அன்றே வந்த பக்தர்கள் சரயு நதியில் நீராடி வழிபாட்டைத் துவங்கி விட்டனர்.

புதன்கிழமை ராமநவமி அன்று சரியாக நண்பகலில் ராமருக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. 56 விதமான உணவு வகைகள் அடங்கிய சாபன்போக் ராமருக்கு நிவேதனம் செய்யப்பட்டது.

இதற்கு முன்பாக ஒரு குடத்தில் இருந்த வெவ்வேறு மூலிகைகளால் திருவுருவச் சிலை அலங்கரிக்கப்பட்டது.

வைரங்கள் முத்துக்கள், தங்கம், வெள்ளி உள்ளிட்ட  நகைகளால் திருவுருவச்சிலை அலங்கரிக்கப்பட்டது.

நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட திருவுருவம் பக்தர்களைப் பரவசப்படுத்தியது.

ஐந்து வாயில்கள் வழியே பக்தர்கள் சீராக உள்ளே செல்ல வழி வகை செய்யப்பட்டது. பிரசாத விநியோகமும் சிறப்பாக அமைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சி LEDs வழியாக ஒளிபரப்பட்டதோடு, தூர்தர்ஷன் வாயிலாகவும் ஒளிபரப்பப்பட்டது.

பூரி ஜெகநாதர் கோவில் ரத்ன கருவூல சாவி எங்கே?திராவிடர்கள் திருட்டு அம்பலம்?

COMPILED BY LONDON SWAMINATHAN FROM NEWSPAER

Date uploaded in London – –   24 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

MAY 24,2024, JANAMTAMIL.COM

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பூரி கோயில் கருவூலம் தொடர்பான நிகழ்வுகளைப் பார்த்து ஒடிசா மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பூரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூல அறையின் சாவி தமிழகத்துக்குச் சென்று விட்டதாக மக்கள் கூறுகின்றனர். சாவியைத் தமிழகத்துக்கு அனுப்பியவர்கள் யார்? கொண்டு போனவர்கள் யார் ? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஒடிசாவின் ஆளும் பிஜு ஜனதா தளத்தில் சக்திமிக்க மனிதராக உருவெடுத்துள்ள முதல்வர் நவீன் பட்நாயக் க்கு மிகவும் நெருக்கமான முன்னாள் IAS அதிகாரியுமான தமிழகத்தைச் சேர்ந்த விகே பாண்டியனைத் தான் பிரதமர் மோடி மறைமுகமாக குறிப்பிட்டார் என்று ஊடகங்கள் எழுத தொடங்கின.

ஒடிசா முதல்வர், தமிழக முதல்வர் உட்பட பலர் பிரதமரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பூரி ஜெகன்னாதர் கோயில் பொக்கிஷ அறையின் காணாமல் போன சாவி குறித்த விவாதம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

என்ன தான் நடக்கிறது அந்த கோயிலில்? கோயில் பொக்கிஷ அறையில் என்னஎன்ன நகைகள் உள்ளது ? உண்மையில் அந்த அறையின் சாவி எங்கே?

திராவிடர்கள் திருட்டு அம்பலம்???

அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு…

ஒடிசாவின் கிழக்கு கடற்கரையில் பூரி மாவட்டத்தில் உலகப் புகழ்ப் பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் அமைந்திருக்கிறது.

இந்த கோயில், 12ம் நூற்றாண்டில் தமிழகத்தைச் சேர்ந்த சோழ மன்னன் அனந்த வர்மன் சோதங்க தேவனால் கட்டப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணர், பலராமர், சுபத்ரை ஆகியோர் தெய்வங்களாக இக்கோயிலில் பூஜிக்கப்படுகிறார்கள்.

இந்தத் தெய்வங்களுக்கு பல ஆண்டுகளாக பல மன்னர்கள் பல்வேறு தரப்பட்ட தங்க, வெள்ளி நகைகளையும் மற்றும் விலை உயர்ந்த ரத்ன கற்களையும் தானமாக கொடுத்துள்ளனர்.
பூரி ஜெகந்நாதர் மீது தீராத அன்பு கொண்ட பக்தர்களும் பல்வேறு நகைகளைத் தானமாக கொடுத்துள்ளனர்.

இவை அனைத்தும், இக்கோயிலில் உள்ள ரத்ன கருவூலம் எனப்படும் பொக்கிஷ அறையில் பாதுகாக்கப்பட்டுவந்தன. இந்த ரத்ன கருவூலம் இரண்டு அறைகளைக் கொண்டது. ஒன்று வெளியறை மற்றொன்று உள் அறை .

ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் ஒரு முறை, கோயிலில் உள்ள தங்கம், வெள்ளி உட்பட சுவாமியின் நகைகள் மற்றும் பிற ஆபரணங்களைக் கணக்கெடுக்க வேண்டும் என்று 1958ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஸ்ரீ ஜெகன்னாத் கோயில் சட்ட விதி சொல்கிறது .

ஆவணங்களின் படி பார்த்தால் 1978ம் ஆண்டு தான் கடைசி முறையாக பூரி ஜெகன்னாத் கோயிலில் உள்ள ரத்ன பண்டாரி எனப்படும் ‘ரத்ன கருவூலம்’ திறக்கப்பட்டுக் கணக்கெடுக்கப் பட்டிருக்கிறது. அப்போதும் கோயிலின் நகைகள் கணக்கெடுக்கப்படவில்லை.

46 ஆண்டுகளுக்கு முன், இந்த கருவூலத்தில் 100 கிலோவுக்கு மேலான தங்கம், 200 கிலோவுக்கு மேலான வெள்ளி மற்றும் ஏராளமான தங்க, வெள்ளி நகைகள், சிகப்புத் துணியில் கட்டப்பட்டு மரப்பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை தவிர, கோயில் நித்திய பூஜைகள் ,சடங்குகளில் கணிசமான அளவு தங்க, வெள்ளி நகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையில் , கடந்த 2018ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத்தில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த , மாநில சட்ட அமைச்சர் பிரதாப் ஜெனா , 1978 ஆம் ஆண்டு கணக்குப் படி, 12,831 பரி தங்க நகைகளும் , 22,153 பரி வெள்ளி நகைகளும் உள்ளதாக தெரிவித்திருந்தார். ஒரு பரி என்பது 11.66 கிராமாகும் . அதாவது , 149.609 கிலோ தங்க நகைகளும், 258 கிலோ வெள்ளி பொருளும் இருந்ததாக தெரிய வருகிறது.

இதன் பிறகு தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கருவூலத்தில் உள் அறையைத் திறக்க அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

இரண்டு அறைகள் உள்ள இந்த ரத்ன கருவூலத்தைத் திறப்பதற்கு, ஒடிசா மாநில அரசு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு முயற்சியை மேற்கொண்டது. அதன்படி, இந்திய தொல்லியல் துறை சார்ந்த அறிஞர்கள் உட்பட 16 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

ரத்ன கருவூலத்தின் வெளி அறையை மட்டுமே அவர்களால் திறந்து ஆய்வு செய்ய முடிந்தது. தங்கம், வெள்ளி நகைகள் உட்பட சுவாமியின் பிற ஆபரணங்கள் பாதுகாக்கப் படும் ரத்ன கருவூலத்தில் உள்ளறையின் சாவி கிடைக்கவில்லை என்பதால் அந்த முக்கியமான அறையை ஆய்வுக் குழுவினரால் திறக்க முடியவில்லை.

மாற்று சாவி மாவட்ட ஆட்சியரிடம் தான் இருக்கவேண்டும் என்பதால், நீதிமன்ற விசாரணை நடத்தியதில் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரத்ன கருவூல உள் அறையின் மாற்று சாவி என எழுதப்பட்ட ஒரு கவர் மட்டும் கிடைத்ததாக என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

தொலைந்த சாவியைத் தேடிக் கண்டுப்பிடிக்க நீதித்துறை அமைத்த ஆணையமும் 300 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்து விட்டது. ஆனாலும் ரத்ன கருவூலத்தின் சாவி என்ன ஆனது என்று சொல்லும் ஆணையத்தின் இறுதி அறிக்கையை இன்னமும் ஒடிசா மாநில அரசு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யாமல் வைத்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து, ஒடிசா மாநில முன்னாள் பாஜக தலைவர் சமீர் மொகந்தி ஒடிசா உயர்நீதிமன்றத்தில் , மீண்டும் ரத்ன கருவூலத்தைத் திறக்க வேண்டும் என்றும், கருவூலத்தின் இரண்டாவது சாவி என்ன ஆனது? என்பது பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த விசாரணையில், மீண்டும் பூரி ஸ்ரீ ஜெகன்னாதர் கோயிலின் ரத்ன கருவூலத்தைத் திறந்து ஆய்வு செய்ய ஒடிசா உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு மேலும் பரபரப்பைக் கூட்டியது.

ஆண்டுதோறும் ஆடி மாதம் நடத்தப் படும் பிரம்மாண்ட ரத யாத்திரையின் போது ராஜராஜேஸ்வர அலங்காரமாக சுனா பேஷா என்ற பெயரில், தெய்வங்களுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்காக பொக்கிஷ அறையில் இருந்து சுவாமிக்கு கவசங்கள் அணிவிப்பது வழக்கம். வழக்கமாக 138 வகையான ஆபரணங்கள் சார்த்தும் நிலை மாறி இப்போதெல்லாம் 35 வகையான ஆபரணங்களே அணிவிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

இந்த பின்னணியில் தான் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த கருவூலத்தின் சாவி யாரிடம் உள்ளது என்று மக்கள் கேட்பதாக பிரதமர் மோடி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

—SUBHAM—

TAGS- திராவிடர்கள் ,திருட்டு ,அம்பலம், பூரி ஜெகநாதர் கோவில் , ரத்ன கருவூல சாவி, எங்கே?