மற்ற எந்த விஷத்தாலும் பிராண பயமில்லை . ஆயாசம் தணியும் மேனி அழகுண்டாகும் நேத்திரம் பிரகாசிக்கும் .
FOLLOWING IS FROM WIKIPEDIA
சிறியா நங்கை (Andrographis alata)
கசப்பு சுவை உடையதாக இருக்கும். இலைகள் சிறியதாக இருப்பதால், சிறியா நங்கை என பெயர் பெறுகிறது. இலைகள் பெரியதாக இருப்பதால், மற்றொரு தாவரம் பெரியா நங்கை (Andrographis lineata ) எனப் பெயர் பெறுகிறது. குருதியின் சர்க்கரைச் சத்து அளவை வெகுவாகக் குறைப்பதாக அறியப்படுகிறது.
சித்தர் பாடல்
சிறியாநங்கைத் தழையைச் சேவித்த பேரைப்
பிரியார் மடந்தையர்கள் பின்னும் அறியதில்
டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்
திங்கள் முக மாதே தெளி
XXXX
நீர் கட்ட
சிறுகட்டுக்கொடி யிலைய அதிகாலையில் எழுந்து ஒரு பிடியெடுத்து வாய்கொண்டமட்டும் மென்றுதின்றால் , நீர் ஓழு க்கு- நீர்தாரைகிருச்சினம் வெள்ளை இவை தீரும்
சிவதை வேர் – திரிகடுகு சரியிடை கொண்டு சூரணித்து சக்கரை சமன் கலந்து திருகடியளவு இருவேளையும் தின்று வந்தால் நிவர்த்தியாகும்..
XXXXX
இரத்த பித்தத்திற்கு
சிறுகீரை வேரை பச்சரிசி கழுவிய நீரின் மட்டி விட்டு விட்டு அரைத்து தேனில் குழப்பிக்கொடுக்கத் தீரும்.
XXXX
சகல வாதத்திற்கும்
சித்திர மூலம் – மிளகருணை – நொச்சி- இவைகளின் வேர் பட்டை வகைக்கு 5 பலம் எடுத்து இடித்து சூரணித்து திருகடியளவு குளுந்த தண்ணீரில் கொடுக்கத் தீரும்
XXXX
விஷ சுரத்திற்கு கஷாயம்
சிறுவழுதலை – சீந்தில்- தாமரை வளையம் — கோணக்கிழங்கு — சுக்கு இவை வகைக்கு ஒரு பலம் எடுத்து சிதைத்து 2 படி தண்ணீர் விட்டு கால் படியாக வடித்து மூன்று வேளைக்கு கொடுக்க நிவர்த்தியாகும்
XXXX
அதிசார சுரத்திற்கு
சித்தாமுட்டி வேர் — வில்வக் காய் – சீந்தில் தண்டு — நில வேம்பு — சுக்கு — கோரைக் கிழங்கு — கஞ்சா விரை — வகைக்கு பலம் கால் — நாலு க்கொரு பங்காய் கிஷாயம் காய்ச்சிக்கொடுக்க தீரும்.
XXXX
325. கண்ணில் வியாதி வராதிருக்க
சித்தாமண க்கின் வேரை அரைத்து பசும்பாலில் காய்ச்சிக் கலக்கி புரை குத்திக் கடைந்து வெண்ணை எடுத்து அந்த வெண்ணையை கண்ணில் தீட்டி வந்தால் கண்ணில் யாதொரு வியாதியும் வராது. கண் குளிர்ச்சியாக இருக்கும் .
தொடரும் ………………………
Tags-
முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள்- 29, சித்தாமுட்டி, சிறுவழுதலை, சிறியா நங்கை
கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிகார்டில் அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர் என்று பதிவு செய்யப்பட்ட யோஷிரோ நகாமட்சு, தாமஸ் ஆல்வா எடிஸனை விட மூன்று மடங்கு அதிகமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவராகத் திகழ்கிறார் –
அறிவியல் தகவல்
3500 கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர்!
உலகின் ஆகப் பெரும் கண்டுபிடிப்பாளர் யார் தெரியுமா? சுமார் 3500 கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து ‘பேடண்ட் கிங்’ என்ற அடைமொழியைக் கொண்டிருக்கும் ஜப்பானைச் சேர்ந்த யோஷிரோ நகாமட்சு என்பவர் தான்.
அமெரிக்க ஸயின்ஸ் அகாடமிக் சொஸைடியினால் ஆர்க்கிமிடிஸ், மைக்கேல் பாரடே, மேரி க்யூரி, நிகோலா டெஸ்லா ஆகிய பெரும் கண்டுபிடிப்பாளர்களுடன் ஐந்தாவதாக இவரது பெயரையும் சேர்த்துள்ளது ஒன்றே இவர் எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பாளர் என்பதைச் சுட்டிக் காட்டும்!
144 வயது வரை வாழ உறுதி பூண்டிருக்கும் இவருக்கு இப்போது
வயது 95.
பிறப்பும் இளமையும்
ஜப்பானில் வங்கியர் (பேங்கர்) ஆக இருந்த ஹஜிமே நகாமட்சு என்பவருக்கும் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்த ஷினோ நகாமட்சு என்பவருக்கும் 26-6-1928-ல் பிறந்தார் யோஷிரோ நகாமட்சு.
இவரது தாயார் இவரை படிப்பில் நன்கு ஊக்குவித்தார். இவரது முதல் கண்டுபிடிப்பே இவரது தாயார் மீது இவருக்குள்ள் அன்பின் அடையாளமாகக் கண்டுபிடிக்கப்பட்ட கெரோஸின் பம்ப் தான்!
டோக்கியோ பல்கலைக் கழகத்தில் எஞ்ஜினியரிங் படிப்பை முடித்த இவர் தானே தேர்ந்தெடுத்த ஒரு கம்பெனியில் சேர்ந்தார்..
ஹிடாசி நிறுவனத்தில் கிடைத்த நல்ல வேலையை வேண்டாம் என்று சொல்லி விட்டு மிட்சுயி என்ற நிறுவனத்தில் இவர் வேலைக்குச் சேர்ந்தார்.
அந்தக் கம்பெனியை இவர் தேர்ந்தெடுத்த காரண,ம் கண்டுபிடிப்புகளை யார் கண்டுபிடித்தாலும் ஜப்பானில் அந்தக் கம்பெனியே அதற்கு உரிமை கொண்டாடும். ஆனால் மிட்சுயி மட்டும் யார் கண்டுபிடித்தாரோ அவருக்கே உரிமையை வழங்கும்..
கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பது எப்படி?
இவர் தான் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் விதத்தை விரிவாக விளக்கியுள்ளார்.
தண்ணீருக்கடியில் ஒரு வித கவசமும் இன்றி மூழ்கி ஆக்ஸிஜனுக்காகத் திணறுவார். இன்னும் அரை நொடியில் மரணம் சம்பவிக்கும் என்ற நிலையில் பாதுகாப்பாக மீள்வார். அந்தக் கடைசி நேரத்தில் அவர் மூளையில் பல புதிய எண்ணங்கள் தோன்றும்.
அவற்றை நீருக்கு அடியிலேயே இருந்து அதற்காகவே உள்ள ஒரு குறிப்பேட்டில் குறிப்புகளை எடுத்துக் கொள்வார்.
சில கண்டுபிடிப்புகள்
ஃபிளாப்பி டிஸ்கை தானே முதலில் கண்டுபிடித்ததாக இவர் சொல்கிறார். அடுத்து அதற்கான பாதுகாப்பான உறை ஒன்றையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.
பறக்கும் செருப்புகள் என்ற காலணிகளை ஸ்பிரிங்குகள் அமைத்து இவர் கண்டு பிடித்துள்ளார்.
செரிப்ரக்ஸ் சேர் என்னும் நாற்காலியில் உட்கார்ந்தால் போதும், ஒருவரின் படைப்பாற்றல் திறன் கூடும் காலை வெதுவெதுப்பாக்கி மூளையைக் குளிர வைத்து அதன் திறனைக் கூட்டும் அந்த நாற்காலியையும் இவர் கண்டு பிடித்துள்ளார்.
பாலியல் உறவில் இன்பம் காண இவரது கண்டுபிடிப்புகள் பல உண்டு.
செக்ஸ் திறனை அதிகமாக்கும் சிடி இவரது கண்டுபிடிப்புகளுள் ஒன்று.
இவரது கண்டுபிடிப்புகள் பிரபலமாகி அவற்றை உலகெங்கிலுமுள்ள மக்கள் இன்றும் வாங்கி வருகின்றனர். லவ்ஜெட் என்ற இவரது செக்ஸ் படைப்புக்கு சீனா உள்ளிட்ட நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. இது ஒரு ஸ்ப்ரே. இதை 50000 பேரிடம் தந்து அபிப்ராயத்தைக் கேட்ட அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் அவர்கள் அனைவரும் இது பயனளிக்கும் ஒன்று என்று கூறியதைச் சுட்டிக் காட்டுகிறார்.
கண்ணாடி அணிந்திருப்பது போலவே தோன்றாமல் இருக்கும்படி கண் போன்ற அமைப்பில் உள்ள கண்ணாடி இவரது பிரபலமான படைப்பில் ஒன்று.
‘ப்யான் ப்யான் பூட்’ என்ற இவரது இன்னொரு படைப்பையும் வெகுவாக உலகெங்கும் உள்ள விற்பனை நிறுவனங்கள் வாங்கி விற்கின்றன.
இவரது படைப்புகள் அனைத்தும் இவரது நூலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இக்நோபல் பரிசு
இவருக்கு 2005-ம் ஆண்டிற்கான இக்நோபல் பரிசு வழங்கப்பட்டது. வேடிக்கையான சாதனைகளை செய்பவருக்கு இக்நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். சுமார் நாற்பது ஆண்டுகளாக தான் உண்ணும் உணவை, உண்பதற்கு முன் போட்டோக்கள் எடுத்து வநதார் இவர். ஊட்டச்சத்து பற்றி அறிவதற்காகவே அவர் இந்த போட்டோக்களை எடுத்து வந்தார்.
இந்த சாதனைக்காகவே இவருக்கு இக்நோபல் பரிசு வழங்கப்பட்டது. இக்நோபல் பரிசு வாங்க நேரில் வந்து விழாவில் இவர் கலந்து கொண்டார். அங்கு தனது மருத்துவ நிலை பற்றி ஒரு கவிதையை வேறு இயற்றிப் பாடினார்.
சுமார் 55 வகை உணவு வகைகளை சுழற்சி முறையில் மாற்றி மாற்றித் தீர்மானித்து உண்ணுவது இவர் வழக்கம்.
Or both Sanskrit and Tamil have come from different sides of Lord Shiva’s kettle drum. That is what Tamil saints say.
The meaning of word 232 according to Adi Shankara is,
The Lord who, as the sun, regulates the succession of day and night.
Sun is the biggest source of energy for earth.
xxxx
jahnuh- word number 244
One who dissolves all beings in Oneself at the time of dissolution. Or one who abandons the evil doers and leads the devotees to salvation.
My Comments
Western scientists have not yet confirmed Dissolution/ Big Crunch. According to them, TIME is linear; according to Hindus, TIME is cyclical; Big Bangs and Big Crunches happen again and again. When Biblical scholars said Earh appeared in 4004 BCE, No Max Muller, No Keith and Mc Donald, No Griffith, in short no half baked westerner opened his mouth against it. But Hindu scriptures repeatedly said Sahasra Koti Yugadharine- Oh God you carry in You, 1000 million YUGAS ( 432,000 years). An unimaginable number.
Was the Earth created in 4004 BC?
4004 BC: On 23 October 4004 BC, the world was created, according to Archbishop James Ussher of Armagh (1581-1656). Ussher was highly regarded in his day as a churchman and a scholar.
xxxxx
Vaayuvaahanah- Word No.331
Adi Shankara interpreted it as follows,
One who vibrates the SEVEN Vaayus or atmospheres beginning with Aavaha.
My Comments:
Meteorology as science is studied for the last 150 years or so and they divided atmospheric layers from Troposphere to Exosphere. But all Tamil and Sanskrit poems talk about seven types of clouds and seven types of gases or atmospheres.
Is it not amazing to know they even thought about gases, atmospheres, different layers up and down? (7 Lokas up, Seven lokas down!)
Tamil and Sanskrit Inscriptions praised kings as Tri Bhuvana Chakravarti. To cut it short , they always thought beyond earth entities.
(The atmosphere is comprised of layers based on temperature. These layers are the troposphere, stratosphere, mesosphere and thermosphere. A further region at about 500 km above the Earth’s surface is called the exosphere).
Soma plant is referred to thousands of times in Four Vedas. It is a mystery plant that gave the elixir of life. But 200 years ago, two half- baked white men identified it with two hallucinate drug plants. It is in the very first page of Griffith’s Rig Veda translation which is on my table along with Bhagavad Gita and Tamil Tirukkural.
According to Shankara
One who as the Moon invigorates the plants. Or one who is with Uma
(God Shiva is also Soma; Sa+Uma= He who is with Uma)
My Comments
Soma has three meanings:
1.Moon
2.Shiva (ne who is with Uma; in all Tamil Temple we have Somaskandar idols; Shiva+Uma+ Skanda)
3.Mystery Plant; Rig Veda has one big chapter exclusively for this mysterious tonic. Unfortunately, we lost Soma like Dodo.
The moon’s link to plants is not yet established by any modern scientist. They say Lotus blooms when the sun rises; Lily blooms when the sun sets. That is all.
(Soma Rasa is rejuvenating, refreshing, life lengthening , health giving etc. I have written several articles on it)
xxxx
More SOMA words
Somapah – word No.503 in VS
Soma occurs as 503, 505 and in 974
For 503 Shankara says,
One who drinks the Soma in all Yajnaas in the form of Devataa (deity). Or one who takes the Somas as the master of sacrifice for the sake of Dharma.
And in 974 (Yajnaangah) Harivamsa Slokas are quoted where it says The Soma juice is His blood)
My comments
If we believe that Soma is a hallucinate drug, then we accept Hindus are pukka drug users, Hindu Gods are pukka drunkards, Hindu Gods blood is nothing but Soma drugs. Christian interpreters of Vedas (the Max Muller Gang) wanted to show Hindus and Hindu Gods as Drug users and destroy Hinduism. But they did not succeed. Then they showed Krishna as a womaniser with 60,000 Gopis. Swami Vivekananda blasted them and explained who the Gopis women were and now we see those things only in 100 year old British Library books ( I have facebooked and blogged those booklets)
If our forefathers were pukka drug users we would not be here today. Our race would have died long before, like Dinosaurs or Dodos.
The Rig Vedic translators repeatedly tried to destroy Hinduism and failed miserably. Then they used girls and money for conversion and succeeded ten percent.
xxxx
ATOM and the huge
brhat (836), Krsah (837), Sthuulah (838)
Shankara shows God as BIG, HUGE, GIGANTIC in all the three words. He quoted Katha Upanishad 1-2-20
Mahato Mahiyaan
My Comments
In the Katha Upanishad (1.2.20) it is said:
anor aniyan mahato mahiyan
atmasya jantor nihitah guhayam
tam akratuh pasyati vita-soko
dhatuh prasadan mahimanam atmanah.
Aṇor aṇīyān mahato mahīyān: “The Lord is smaller than the smallest and greater than the greatest.
Hindus knew that ANU is the smallest particle. Tamils also used the Sanskrit word; later Tamil poets like Avvaiyar and Tirumular speaks about it more elaborately.
Tamil Poetess says in praise of Tamil Veda Tirukkural,
‘He has put so much into this book as if one pierces an atom and puts Seven Oceans into it’.
Tiruvasagam of Manikkavasagar also depicts Anu as the smallest particle.
Tirumular also talks about dividing a hair into 100 or 1000pieces.
Acharya Kanada, also known as Kashyapa, an ancient Indian natural scientist and philosopher, formulated the theory of atoms 2500 years before John Dalton’s discovery. He founded the Vaisheshika school of Indian philosophy that epitomized the earliest Indian physics.
Later Greek philosopher named Democritus (around 400 B.C.), used the Greek word atomos, which means uncuttable. And so as he explained, all matter was eventually reducible to discrete, small particles or atomos. The word atom arrived from this Greek word. My research shows it is derived from Adhama in Sanskrit which means lowest, meanest.
Aṇu (अणु).—a. (ṇu-ṇvīf.) [अण्-उन् (aṇ-un)] Minute, small, little, atomic (opp. sthūla, mahat); अणोरणीयान् (aṇoraṇīyān) Bhagavadgītā (Bombay) 8.9; सर्वोप्ययं नन्वणुः (sarvopyayaṃ nanvaṇuḥ) Bhartṛhari 3.26. insignificantly small; अण्वपि भयम् (aṇvapi bhayam) Manusmṛti 6. 4; अण्वपि याच्यमानः (aṇvapi yācyamānaḥ) Pañcatantra (Bombay) 4.26 asked but an atom, a very small quantity, न कन्यायाः पिता विद्वान् गृह्णीयात् शुल्कमण्वपि (na kanyāyāḥ pitā vidvān gṛhṇīyāt śulkamaṇvapi) Manusmṛti 3.51.
-ṇuḥ 1 An atom, a very small particle (an exceedingly small measure); the mote in a sunbeam, the smallest perceptible quantity; अस्थूलमनण्वह्रस्वमदीर्घं ब्रह्म (asthūlamanaṇvahrasvamadīrghaṃ brahma); अणुं पर्वतीकृ (aṇuṃ parvatīkṛ) Bhartṛhari 2.78. to magnify; cf. also ‘To make mountains of molehills.’
2) An atom of time (vyañjanamardha- mātrā tadardham aṇu); it is said to be 54,675, th part of a Muhūrta (48 minutes).
3) Name of Śiva.
4) Name of very small grain such as सर्षप, चीनक (sarṣapa, cīnaka) &c., अनणुषु दशमांशोऽणुष्वथैकादशांशः (anaṇuṣu daśamāṃśo’ṇuṣvathaikādaśāṃśaḥ) Līlā.
—subham—
TAGS- More ( Science ) Secrets from Vishnu Sahasranama –6, Atom, Anu, Soma, 7 clouds, 7 atmospheres, 7 layers
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
புத்தக அறிமுகம்
திரு கணேஷ் ராஜா அவர்களின் THE JAMBU ISLAND
ச. நாகராஜன்
1
“தொன்று நிகழ்ந்த தனைத்தும்
உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்”
என்று மகாகவி பாரதியார் பாரத தேசம் பற்றிப் பாடியுள்ளார்.
இவள் என்று பிறந்தவள்? இவள் என்று பிறந்தவள் என்று கேள்வி கேட்ட அறிஞர்கள் எல்லோரும் திகைத்துப் போனார்களே தவிர பதில் கண்டவர்கள் இல்லை!
இந்த வகையில் நம் மனதில் தோன்றும் கேள்விகள் பல.
நம்முடைய இதிஹாஸ, புராணங்கள், மற்றும் இலக்கியங்கள் கோடிக் கணக்கில் உள்ளன. உலகெங்கும் உள்ள நமது இலக்கியம் நான்கு கோடி சுவடிகளில் உள்ளது என்று கூறப்படுகிறது. இதை நமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி கால வரிசைப்படி தொகுக்க முடியுமா? அப்படி தொகுக்கும் போது அதை அறிவியல் வடிகட்டியில் சற்று வடிகட்ட முடியுமா?
ஆயிரக்கணக்கான அரசர்கள், ரிஷிகள் பெயர்கள், சரிதங்கள் உள்ளன. மக்களின் வாழ்க்கை முறை, நமது அபூர்வமான கலைகள், இலக்கியப் படைப்புகள், அறிவியல் முன்னேற்றங்கள் இவற்றை உள்ளது உள்ளபடி நடந்தது நடந்தபடி யாரேனும் தொகுப்பார்களா?
இந்தத் தொகுப்பும் அறிவியல் ரீதியாகவும் ஆதாரங்களுடனும் மிக மிக உண்மை என்பதன் அடிப்படையிலும் தொகுக்கப்படுமா?
இப்படித் தொகுத்ததை அனைவரும் படிக்கும் படி சுவைபடத் தர முடியுமா?
படித்தவுடன் ஒரு உத்வேகத்தையும் நல்ல உணர்வையும் பெருமிதத்தையும் அடையும்படியான தொகுப்பை உருவாக்க முடியுமா?
2
இந்தக் கேள்விகள் நம்மில் பலருக்கும் எழுவதுண்டு.
இதை மனதில் எழுப்பிக் கொண்ட ஆர்வலர்களுள் ஒருவர் எட்டு வருடங்களுக்கும் மேலாக கடின உழைப்பை மேற்கொண்டு தேவையான ஆதாரங்களைச் சேர்த்துத் தொகுத்து உத்வேகம் மேலிட சுவை பட ஒரு நூலை எழுதி உள்ளார்.
அவர் தான் திரு N. கணேஷ் ராஜா.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர் 2003இல் தனது பொறியியல் படிப்பை முடித்தார். மென்பொருள் துறையில் இருபது வருட அனுபவத்தைப் பெற்றார்.
ஒரு பத்திரிகையில் “வழக்கம் போல” இந்தியாவைப் பற்றி இழிவாக எழுதிய ஒரு கட்டுரையைக் கண்டார். இந்த இழிநிலைக் கட்டுரைகளுக்கு ஒரு முடிவைத் தர தனது சம்ஸ்கிருத, தமிழ் அறிவைப் பயன்படுத்தி இலக்கிய பூர்வமான
ஆதாரங்களுடன் கூடிய ஒரு படைப்பை உருவாக்கத் தீர்மானித்தார்.
அது தான் THE JAMBU ISLAND.
89 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூல் 239 பக்கங்களைக் கொண்டுள்ளது.
நமது பாராட்டுக்குரிய நூலாக இது அமைகிறது.
கி.மு. 6000-லிருந்து கி.மு, 3102 முடிய உள்ள பாரத தேச வரலாற்றை இதில் காண முடிகிறது.
3
உலகின் ஆகப் பெரும் அற்புதமான நூலான ரிக் வேத ரிஷிகளை முதலில் அறிமுகப் படுத்துகிறார் நூலாசிரியர்.
மந்த்ர த்ருஷ்டாக்களின் மகிமையைச் சொல்லி அவை அபௌருஷேயம் – மனிதர்களால் இயற்றப்படாதவை – என்பதைக் குறிப்பிடுகிறார்.
6000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை இவை என்பதை பாலகங்காதர திலகரும் எஸ். பாலகிருஷ்ண தீக்ஷிதரும் வானவியல் அடிப்படையில் ஆய்ந்து குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.
நூலில் தரப்படும் கருத்துக்களும் நாம் அறிந்து கொள்வதும் இதோ:-
சாம வேதம் இந்திய சங்கீதத்திற்கு அடிப்படையாக அமைகிறது.
மனுஸ்மிருதி,, அர்த்த சாஸ்திரம்,, ப்ரஹ்மாவர்த்த ரிஸர்ச் ஃபவுண்டேஷன் பற்றி அறிகிறோம்.
சப்த சிந்து நதிகளைப் பற்றி அறிவதோடு சிந்து நதிக் கரை நாகரிகம் பற்றி அறிகிறோம்.
அத்ரி, அனசூயா, தத்தாத்ரேயர், துர்வாஸர் ஆகியோர் பற்றி விளக்கத்மாக அறிவதுடன், கண்வர் பற்றி அறிகிறோம்.
இன்று கன்னோஜ் என்று புகழ் பெற்று விளங்கும் நகரத்தின் பழைய பெயர் கன்யாகுப்ஜம். அற்புதமான அதன் வரலாறு சொல்லுக்கு அப்பாற்பட்டது. கன்யாகுப்ஜம் பற்றி அறிகிறோம்.
இக்ஷ்வாகு மற்றும் யாதவ வம்சங்கள் தோற்றத்தைப் பற்றி இங்கு விளக்கப்படுகிறது.
வரிசையாக மன்னர்களின் பெயர்கள் கால வரிசைப்படி தரப்படுகிறது.
கார்த்த வீர்யார்ஜுனன் பற்றிய ரிக் வேதக் குறிப்புகளைக் காண்கிறோம்.
பரசுராமர், ஜமதக்னி வரலாறு சுவைபட தரப்படுகிறது.
கண்பார்வையற்ற ரிஷி தீர்க்கதமஸ் பற்றிய வரலாறு நம்மை நெகிழ வைக்கிறது.
பக்கம் 156 – இங்கு நூலாசிரியர் இந்த நூலுக்காகத் தான் கொண்ட அடிப்படையை விளக்குகிறார். அதாவது மனிதனின் பூரண ஆயுள் 125. அதற்கு மேல் சொல்லப்பட்டிருந்தால் அது கட்டுக்கதை. அதை அறிவியல் வடிகட்டியில் வடிகட்ட வேண்டும்.
இதன் அடிப்படையில் விஸ்வாமித்திரர் I, II, III, IV, V வசிஷ்டர் I, II, III, IV என்றும் ஆங்காங்கே குறிப்பிடப்படுகின்றனர்.
ஜொராஸ்டரின் வரலாறு பற்றி சுவைபடத் தரப்படுகிறது. ஜொராஸ்டிரிய கொள்கைகளுக்கும் வேதக் கொள்கைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அட்டவணையாகக் கண்டு வியக்கிறோம்.
இன்றைய பாகிஸ்தானில் அமைந்துள்ள சிபிஸ்தான் மன்னர் சிபியைக் குறிக்கிறது.
இந்த சிபியின் மகன்கள் சைபியா என்று சம்ஸ்கிருதத்தில் குறிப்பிடப்பட்டனர். இதுவே சோழ நாட்டில் செம்பியன் என்று குறிப்பிடப்பட்டு சோழ மன்னர்கள் செம்பியன் என்ற பட்டப் பெயரைப் பெற்றனர்.
சரளமாக ஆங்காங்கே நூலில் அகநானூறு, புற நானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் உள்ளிட்ட நூல்களிலிருந்து மேற்கோள்களையும் குறிப்புகளையும் காண்கிறோம். அழுத்தமான ஆதாரங்கள் தரப்படுகினறன.
பலியின் குமாரர்களின் பெயர்கள் அங்க தேசத்தின் பகுதிகளுக்குச் சூட்டப்படுகின்றன. அங்க தேசத்தின் தலைநகரமாக மாலினி அமைகிறது.
மனுவின் சரித்திரத்தை நன்கு அறிந்து கொண்ட நாம் இப்போது பகீரதனின் சரித்திரத்தையும் கங்கை வந்த வரலாற்றையும் பார்க்கிறோம்.
பின்னர் ராமாயணமும், மஹாபாரதமும் சுருக்கமாக தரப்படுகிறது.
ஆங்காங்கே ரிஷிகள், தவம் புரிந்த இடங்கள், அவர்கள் வாழ்ந்த குகைகள், அரசர்கள் ஆண்ட பிரதேசங்கள் பற்றி அறிய முடிகிறது.
இதிஹாஸ புராண சரித்திரத்துடன் தொடர்பு கொண்ட தலங்கள் இன்று எங்கு உள்ளன என்பதை ஆங்காங்கே கண்டு மகிழ்வதோடு அவை இன்றும் பிரசித்தி பெற்ற இடங்களாக இருப்பதை உணர்கிறோம்.
மொத்தத்தில் நூற்றுக்கணக்கான விஷயங்களை ஆதார பூர்வமாக கால வரிசைப்படி சுவைபடத் தரும் ஒரு நூல் இது.
இதை வழங்கியுள்ள திரு கணேஷ் ராஜா பாராட்டுக்குரியவர்.
நமது பண்டைய சரித்திரத்தை அறிய விரும்புவோர் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
4
நூலைப் பற்றிய பாராட்டுக்களை மேலே கூறியாகி விட்டது.
ஆனால் அடிப்படையான ஒரு விஷயம், நம்பிக்கையின் அடிப்படையில் நமது கோடிக்கணக்கான ஹிந்துக்கள் இதிஹாஸ, மஹாபாரத, புராண, இலக்கிய விஷயங்களை அப்படியே நம்பி வருகிறோம்.
அந்த நம்பிக்கையை ஆழமாகக் கொண்டுள்ளவர்கள் இந்த நூலின் சில கருத்துக்களை ஏற்க சங்கடப்படுவர்.
அகத்தியர் ராம பிரானை சந்தித்து ஆதித்திய ஹிருதயம் உபதேசித்தார்.
ஆனால் நூலாசிரியர் கருத்துப்படி இது சாத்தியமில்லை.
பல விஸ்வாமித்திரர்கள், வசிஷ்டர்கள் இருந்திருக்க வேண்டும் என்பது நூலாசிரியர் கருத்து.
நாமோ எல்லையற்ற கால வெள்ளத்தைத் தாண்டியவர்கள் நமது விஸ்வாமித்திர, வசிஷ்ட ரிஷிகள் என்கிறோம் – நம்பிக்கையின் அடிப்படையில்.
சிரஞ்சீவிகள் ஏழு பேர்
அஸ்வத்தாமோ பலிர் வியாஸோ ஹனுமான் ச விபீஷண:
க்ருப பரசுராமஸ் ச சப்தைதே சிரஞ்சீவின:
என்பதை இன்றும் நம்புவோர் கோடிக் கணக்கான ஹிந்துக்கள்.
இவர்களைப் பல மகான்கள் தற்போதைய காலத்தில் கண்டதாக சரித்திரமும் உண்டு.
ஆக அறிவியல் வடிகட்டியைத் தாண்டிய பல விஷயங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் உண்டு.
இந்த விஷயங்கள் நூலின் சுவையைக் குறைக்கவில்லை என்பது உண்மை.
ஒரு புதிய நோக்குடன் நூலை அணுக வேண்டியதாக இருக்கிறது.
5
இந்த நூல் ஒரு ஆரம்பம் தான் என்கிறார் நூலாசிரியர் திரு N. கணேஷ் ராஜா. வரவேற்கிறோம் அவரது இதர படைப்புகளை.
There are more words in Vishnu Sahasranama (VS) which are interpreted beautifully by Adi Shankara in his commentary.
I am O2
Pavanah- 291st word in VS
One who is the purifier. Says the Gita 10-31
Pavanah pavataam asmi – I am Pavana or wind among purifying agents.
My comments
Pavana /wind means Oxygen here . O2 is oxygen molecule.
xxxx
I am Black hole
Sankarsano’cyutah – 552nd word in VS
Sankarsana is one who attracts to oneself all beings at the time of cosmic dissolution and Acyuta is one who knows no fall from His real nature. They form one word with the first as the qualification- Acyuta who is Sankarsana.
My comments
On 8-8-2016, I wrote about Black hole in Bhagavad Gita and Manu Smrti. Hindus knew about Big Crunch and Black hole long ago. The very name of Krishna is Mr Black.
·8 Aug 2016 — What is a Black Hole? Black holes are found in space, whose gravity is so great that nothing can escape from it, not even light. Thought to form …
Hindus knew about ETs, UFOs, Time Travel and Nuclear Weapons (Post No.11,518)
7 December 2022
xxxx
Beyond Time
Bhuuta – Bhavya – Bhavan naathah 290th word in VS
This is repetition of the very first line in VS.
God is time and he is beyond time. Einstein said that TIME is fourth dimenstion and nothing can be thought of without time. But he never knew there is one thing beyond time.
xxxx
Bhanuh -284th word or naama in VS
One who shines. Says katha Upanishad
Tam eva bhaantam anubhaati sarvam 2-5-15 – when it shines everything else shines.
Sun light reaches earth within 9 minutes. If sun disappears earth will die in few hours.
xxxx
Scientists don’t know Moon
Sasabinduh – 285th word or naama in VS
The word means one who has the mark of hare, that is, the moon. The lord is called so because, like the moon He augments all creatures. The Gita says ,
Pusnaami c’ausadhih sarvaah som bhuutvaa rasaatmakah – as the watery moon I nourish all herbs.
My comments
Till this day no scientist in any part of the world linked moon and plants. But all through Sanskrit and Tamil scriptures , we read moon only sustains plants. Water in the moon also debated everyday in astronomy magazines. But Hindus are dead sure that WATERY MOON helps the plants to survive.
When , in future, scientists confirm it, we can boast that it is said already in our Vedas.
xxxx
Star names in VS
Jyesthah (word 67), Punarvasuh (150) Dhruva (388) (Pole star)and Mahamakham (439) are some of the Star names found in VS. Adi Shankara gave different meanings, not stars.
xxxx
Hiranya -garbhah (Word 70)
The luminous globe that contains the whole universe in seminal form, says Adi Shnakara.
(I have already explained it as the Pre Big Bang condition)
xxxx
Jagadaadijah (word 145)
One who manifested as Hiranya -garbha by Himself at the beginning of creation.
(Adi Shankara knew very well that there was a Pre Big Bang time. He rightly called Big Bang as the Creation, which scientists also confirm now.
To be continued…………………………
Tags- Sun, Moon, Oxygen, part 5, Vishnu Sahsranamaa, science, More ( Science ) Secrets from Vishnu Sahasranama –5
வீட்டில் பலாச்சுளை இருக்க வெளியே ஈச்சம்பழத்தை நாடுவது ஏன்?
பிறன்மனை பற்றி திருமந்திரம்
தன்னுடைய மனைவி இருக்கும்போது அடுத்தவன் பெண்டாட்டியை நாடுபவனை திருமூலர் அழகாகக் கண்டிக்கிறார்.. தமிழிலுள்ள நீதி நூல்கள் அனைத்திலும் இது கண்டிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவரும் பிறன்மனை நோக்காதவனை மகா வீரன் என்கிறார்.பிறன்மனை நோக்காதவனை பேராண்மையுடையவன் என்கிறார். இந்துக்கள் புஸ்தகப்படி இரண்டு மாவீரன்கள்தான் உள்ளனர். அனுமன், பீஷ்மன் இருவரும் பெண்களையே நோக்காத பெரு வீரர்கள். சமண மதத்தில் 24ஆவது தீர்த்தங்கரரின் பெயரே மஹாவீரர் . அவருடைய உருவத்தைப் பார்த்தாலே புலனடக்கம் என்னும் மஹாவீரம் வந்துவிடும்.
xxx
திருமூலரோ காய்கள் பழங்களை உவமித்துக் கிண்டல் செய்கிறார் ; இதோ சில பாடல்கள்
பிறன்மனை நயவாமை
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.
பொருள்
கல்யாணம் கட்டிய மனைவி வீட்டில் இருக்கிறாள் அவள் பலாப்பழம் போல இனிப்பானவள் மற்றவருடைய மனைவி , இவரைப் பொருத்தமட்டில் பேரீச்சம் பழம். பிறருடைய மனைவியை விரும்புவோன் பலாப்பழத்தை விட்டுவிட்டு ஈச்சம் பழத்தை நாடுவோனுக்கு சமம்.
xxxxxx
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே.
இன்னொரு பாட்டில் மாம்பழம் , புளியம்பழம் மூலம் இதே கருத்தை வலியுறுத்துகிறார் ; இந்தப் பாட்டில் கூடவே ஒரு கருத்தையும் சொல்கிறார்.
சிறப்பான ஒட்டு மாங்கனியை உரமிட்டு வளர்த்து நல்ல மாம்பழம் பழுத்துவிட்டது.அதைப் பறித்துப் புதைத்துவிட்டு புளியம்பழத்தைப் பறிக்க மரமேறி கீழே விழுந்து காலை யும் ஒடித்துக்கொள்ளுவது போன்றதே அடுத்தவன் பெண்டாட்டியை நாடுவதாகும்
மாம்பழம் – தன் மனைவி; புளியம் பழம் – அடுத்தவன் மனைவி
காலை ஒடித்துக்கொள்ளுதல் என்பது சமுதாயத்தில் அவமானப்படுத்தல் என்ற பொருளது தருவதாகும் .
xxxxx
மகளிர் இழிவு
இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.
எட்டி மரம் = பொது மகளிர், வேசிகள்
எட்டி மரமும் காய்த்து பழங்களுடன் இருக்கும்போது பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கின்றன. இலை , பூ , வேர் , காய் , பழம் ஆகிய அத்தனை தகவர லக்ஷ்ணங்களும் அதற்குண்டு . அதைச் சாப்பிட்டால் பின்னர் என்னவாகும் என்று தெரிந்த மக்கள் அதைத் தொடுவதில்லை அதே போல அழகான முலைகளையும் அருமையான புண் சிரிப்பையும் உடைய பொய்மை மாதரிடம் செல்லாமல் நன்னெறியை நாடுக.
Nux vomica நக்ஸ் வாமிகா, விஷம் கொட்டை, சிமேன் ஸ்ட்ரைகோனஸ் மற்றும் குவாக்கர் பொத்தான்கள் என்றும் அழைக்கப்படும் ஸ்ட்ரைகோனஸ் மரம் (Strychnos nux-vomica L.)
“எட்டி காய்த்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன” -பழமொழி.
இதை காஞ்சிர மரம் என்றும் அழைப்பார்கள்.
xxxxx
விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே.
அன்ன நடை , சின்ன இடை மாதர்கள் இளமைப் பருவத்தில் இளைஞர்களை விரும்புவது கரும்புச் சாற்றின் மேல் உள்ள விருப்பதைப் போன்றது என்று இன்னுமொரு பாட்டில் செப்புவார். மென் முலை, அழகிய அணிகலன்களை பூண்ட அதே மாதர், முதுமை வந்துவிட்டால் காஞ் சிரங்காய் போல ஒதுக்கி விடுவார்கள் என்று முடிக்கிறார்.
xxxx
எட்டி பழுத்த, இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே.
எட்டிபழம் பழுத்து கீழே விழுந்தாலும் பயன் பாடாது அது போல நல்ல அறம் செய்யாதவரின் செல்வமும் பயன் அற்றது; வட்டி வாங்கி இந்த உலகில் பொருள் ஈட்டும் வஞ்சனை உடைய பாதகர், செல்வத்தின் பயனை அறியார். நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று என்று இதை ஆன்றோர் சொல்லுவர்.
xxxxx
அத்திப் பழம் அறைக்கீரை
அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைபெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.
திருமூலர் ஒவ்வொரு தாவரத்தையும் வைத்து பல செய்திகளை சொல்ல வருவது தனிச் சிறப்புடையது. ஏனெனில் அவர் ஒவ்வொரு செடி, மரம் , கொடிக்கு தரும் பொருள் வேறு எங்கும் காண முடியாதது
அத்திப் பழம் = உடல்;
அறைக்கீரை = உயிர்
உவமையாகுபெயர்
பொருள்
அத்திப்பழமாகிய உடலும் அறைக்கீரை வித்தாகிய உயிரும் இருவினைப் பயனாகிய இன்பத்துன்பக் கூறுபாடுகளை அவ்வுயிர்க்கு உணவாகிய ஊழாகச் சமைத்து உலகிடைப் பிறப்பித்தனன். அத்திப் பழமாகிய ஊழ்ப்பயனை அறைக்கீரை வித்தாகிய உயிர் உண்டு கழித்தது. எனவே உயிர் நீங்கிய உடம்பினைச் சுடத் துணிந்தனர். கத்துதலாகிய அழுகை யொலியுடன் சுடுகாட்டுக்குக் கொண்டு போயினர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிவபிரானின் ஊர், வஸ்திரம், வாகனம் அடங்கிய ஒரு பாட்டு!
ச.நாகராஜன்
ஒரு முறை சிவப்பிரகாச சுவாமிகள் தர்மபுர மடத்திற்குச் சென்றார்.
அங்கு இருந்த வெள்ளியம்பலத் தம்பிரான் சிவப்பிரகாச சுவாமிகளின் புலமைத் திறத்தை அறிய ஆவல் கொண்டார்.
ஆகவே அவரிடம் சிவபெருமானின் ஊர், அவர் அணியும் வஸ்திரம், வாகனம் ஆகிய இந்த மூன்றையும் ஒரு பாடலில் அமைத்துப் பாடல் பாட வேண்டும் என்று கூறினார்.
இதில் இன்னொரு நிபந்தனையையும் அவர் விதித்தார். பாடுவது வெண்பாவாக இருத்தல் வேண்டும் அதில் முதலிலும் இறுதியிலும் “டுகரம்’ வரும்படி வெண்பாவை அமைக்க வேண்டும்.
இதைக் கேட்ட சிவப்பிரகாச சுவாமிகள் உடனே ஒரு வெண்பாவை இயற்றினார்.
அதில் முதலிலும் இறுதியிலும் ‘டுகரம்’ வந்தது. சிவபெருமானின் ஊர், அவரது வஸ்திரம், அவரது வாகனம் ஆகிய மூன்றும் இறுதியில் வந்தது.
அப்படிப்பட்ட பாடலைப் பாடிய அவரை அனைவரும் போற்றினர்.
கேழல் முடக்கோடு முன்னம் அணிவார்க்கு – பன்றியின் வளைவான கொம்பை முற்காலத்தில் அணிந்தவருக்கு
வடக்கு ஓடு தேர் உடையான் தெவ்வுக்கு – வட திசையை நோக்கிப் போகின்ற தென்றலாகிய தேரை உடையவனாகிய மன்மதனது பகைவர்க்கு
தில்லை ஊர் – தில்லை நகரம் ஊராகும்
தோல் உடை – யானைத் தோல், புலித் தோல்கள் வஸ்திரமாகும்
மேற்கொள்ளல் ஆன் – ஊர்தல் இடபமாகும்
என்னும் உலகு – என்று உலகத்தார் சொல்வர்
சூரியனின் பற்களை சிவபிரான் தகர்த்தது தக்கன் யாகத்தின் போது – அதை இங்கு குறிப்பிடுகிறார் சுவாமிகள். அடுத்து கேழல் முழக்கோடு அணிந்தது திருமால் எடுத்த வராகம் அழித்த போது.
**
சிவப்பிரகாச சுவாமிகள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்திப் பாடிய பாடல் இது.
சேய்கொண்டா ருங்கமலச் செம்மலுடனேயரவப்
பாய்கொண்டா னும்பணியும் பட்டீச்சு ரத்தானே
நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய தாமளவும்
பேய்கொண்டா லுங்கொளலாம் பெண்கொள்ள லாகாதே
பாடலின் பொருள் :
சேய் கொண்டு ஆரும் – செந்நிறத்தைக் கொண்டிருக்கின்றா
Here are more scientific facts from Vishnu Sahasranama (VS):
From Adi Shankara’s commentary:
Hiranyagrabhah- 411th name
He who was the cause of golden coloured egg out of which Brahma was born .
Agrajah –891st word
One who was born before everything else, that is HIRANYAGARBAH.
Rig Veda 10-121-1 says, Hiranyagrabhah samavartataagre- Hiranyagrabhah came into being first. This is the stage before Big Bang.
The universe, the earth, the planets are round or oval in shape. All Sanskrit words such as Andam, Mandalam, Golam show only round shape. Without Hubble telescope or Galileo’s Telescope Rig Veda described Universe, Galaxies, Plants as round/oval shaped.
xxxx
Svadhrtah- 843rd word
The very word Graha -used for planets or any heavenly object means attraction, grip, gravity, grab.
All English words such as grip, grab, gravity are derived from Sanskrit word ‘graha’.
Hindus knew the heavenly objects have gravity which maintains order in the space. So, gravity was not discovered by Tom Dick and Harry.
Svadhrtah means one supported by oneself.
If He is not supported by any, how does He stand? By way of answer it is said: Supported by oneself.
Chandogya Upanishad says,
Sa bhagavah kasmin pratishthita iti? Sve Mahimni—O Master! Where can it be established? In its greatness alone.
So, all the universal forces are known to Hindus and they named God for all such forces.
Heavenly bodies like moon and sun along with all Nakshatras and Taarakas (STARS) are tied to Dhruva with bonds constituted by of air.
According to this statement all these heavenly bodies are included in the tail of Dhruva or Sisumaara Cakra. In the heart of the Sisumaara Cakra, the lord dwells as its operator. The Veda says describing Sisumaara
Vishnur hrdayam – Vishnu is its heart.
My comments
Here Dhruva is not just Pole star. It means centre of attraction. Like our Milky Way there are billions of galaxies .
It wasn’t until the 1920s when it was confirmed that many of these nebulous stars were in fact completely different galaxies, whole other sets of billions of stars like the Milky Way, far beyond our own. We now know the Milky Way is but one of the billions of galaxies in the universe.
Note the word Cakra/ wheel/ circle. Hindus knew that these heavenly galaxies are round or oval.
Sisumaara Cakra may be galaxies or Milky Way galaxy.
xxx
Vaikunthah – 405th name/word
The bringing together of the diversified categories is Vikuntha. He who is the agent of it is Vaikunthah.
There is the following verse,
Mayaa samslesitaa bhuumir adhbir vyoma ca vaayunaa
Vaayus ca tejasa saardham vaikunthatvam tato mama
I united earth with water, the sky with air and the air with fire. So I have got the status of Vaikuntha.
The word can also mean one who is without any limitation or opposing factor.
My comments
We, laymen, are taught Vaikuntha is the heavenly realm of Lord Vishnu. But Shankara’s above commentary shows the development of earth from its rocky origin: Earth/rock—water—oxygen- atmosphere – fire for Yaga, Cooking, Heating, Energy production etc.
This sequence is repeated in many poems in Sanskrit and Sangam Tamil literature.
Dasaavataar also explains the development-
Earth taken from water by Varaha- Fish Avatar- Amphibian/Tortoise Avatar- Half animal Half man/ Narasimha avatar- Rama, Krishna (Full Man), Kalki (Super man with laser and nuclear bombs)etc.
We must learn to read between the lines.
xxx
Sahasraamsuh – 483rd nama /word
Sahasra literally means 1000. But it stands for huge or big number in Sanskrit scriptures.
Sahasraamsuh- one with numerous rays, that is the sun. but as these rays of light really belongs to the Lord, this epithet indicates Him.
Taittitiri Brahmana 3-12-79-7 says,
Yena suuryas tapati tejaseddhah – lighted by whose brilliance, sun shines.
The Gitaa says
Yad aaditya gatam tejah- whatever brilliance there is in the sun that belongs to the Paamaatman
My comments
According to modern science Sun is a moderate yellow star. There are huge stars which may be equal to 1000 or 10000 suns. But as far as earth is concerned, sun is the biggest source of energy. If it goes out, earth will die within a few days. So Hindus showed Sun and Moon as gods. If I want to explain how big is a sea to a child who has never seen it, I can only show the child a lake in my town and say sea is 1000 or 10000 times bigger than it. Yet the child could not get a real picture of ocean. We are like children; so saints show us sun and moon as god and tell us God is as powerful as these heavenly objects.
xxxxx
Aadidevah – 490th word/ naama
He who is the first of all beings. Or He who draws all beings to Himself.
My comments
This is what astronomers call Big Crunch. In science it is only hypothesis. But Hindus repeated it 1000 times and said it will start again with Big Bang- it is cyclical.
The Big Crunch is a hypothetical scenario for the ultimate fate of the universe, in which the expansion of the universe eventually reverses and the universe recollapses, ultimately causing the cosmic scale factor to reach zero, an event potentially followed by a reformation of the universe starting with another Big Bang.
What is a hypothesis for astronomers is a certainty for Hindus and the amazing thing is they said it thousands of years before our modern astronomers.
The Upanishads compared it with spider which draws its own spin inside.
பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200 மூலிகை மருந்துகள் 7
91. Albizia amara (Roxb.) Boivin
அல்பிஸியா அமரா / உசிலை
திருநெல்வேலி ஜில்லா மலை ஜாதி மக்கள் உசிலை மரப்பட்டை, இலை ஆகியவற்றை மசித்து வேப்பெண்ணெயில் வேறு இரண்டு தாவரங்களுடன் வதக்கி பாம்பு கடித்த இடங்களில் பத்து நாளைக்கு அப்புகிறார்கள் இத் துதட ன் பயன்படுத்தும் வேறு இரண்டு தாவரங்கள் –கோரைக்கிழங்கு, வன மல்லிகா/கட்டு மல்லிகை.
xxxx
92. Albizia lebbeck (L.) Benth.
அல்பிஸியா லேப்பெக்
பாகிஸ்தானிலும் உத்தரப் பிரதேசத்திலும் பயன்படும் மூலிகை இது.
xxxxx
93. Bauhinia variegata L.
பெள ஹினியா வேரி கேடா
பாகிஸ்தானிலும் நேபாளத்திலும் பயன்படும் மூலிகை இது.
xxxxx
94. Butea monosperma (Lam.) Taub.
பூட்டியா மானொஸ்பெர்மா / புரசு /பலாச
புரசு (butea monosperma) என்பது பலாச (butea) வகையைச் சேர்ந்த ஒரு மரமாகும். இதற்கு பலாசு, பொரசு, புரசை, என்ற வேறு பெயர்கள் உண்டு
பாகிஸ்தானிலும் கர்நாடக மாநில சிக்மகளூரிலும் மத்திய இந்தியாவில் பில் பழ ங்குடி மக்களும் இதன் இலைச் சாற்றையோ அல்லது பட்டையின் கஷாயத்தையோ கொடுக்கிறார்கள் .
xxxx
95. Butea superba Roxb.
பூட்டியா சுபர்பா
கொடிப்பலாசம் /கொடிமுருக்கன் / பலாச லதா
குஜராத்தில் இந்தத் தாவர சாற்றைப் பயன்படுத்தி சிகிச்சை தருகிறார்கள் .
xxxxx
96. Caesalpinia bonduc (L.) Roxb.
சீசல்பினியா பாண்டுக் / கழற்சி
உத்தர பிரதேசத்தில் விதைகளைப் பொடிசெய்து தருகிறார்கள்
கழற்சி (Guilandina bonduc,) பொதுவாக grey nicker, nicker bean [2] fever nut [3] அல்லது knicker nut என்றும் அழைக்கப்படுகிறது)
வேறு பெயர்கள்
Caesalpinia bonduc (L.) Roxb.
Caesalpinia bonducella (L.) FlemingN J J
Caesalpinia crista auct. Amer.
Guilandina bonducella L.
xxxx
97. Cassia fistula L.சரக்கொன்றை, சரக்கொன்னை
கேசியா பிஸ்டுலா
கர்நாடகத்திலும் தமிழ்நாட்டில் சேர்வராயன் மலைகளிலும் உத்தரப்பிர தேசத்திலும் மக்க ள் இதன் பழ த்தையும் விதைகளையும் பொடி செய்து பயன்படுத்துகின்றனர் .
xxxxx
98. Cassia hirsuta L.
கேசியா ஹிர்சூதா / மலையாவாரம்
வங்கதேச சக்மா பழங்குடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
வங்க தேசம், பாகிஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் பாம்பு கடித்தால் கொடுக்கின்றார்கள் .
xxxx
100. Cassia tora L.
கேசியா தோரா /தகரை , ஊசித் தகரை
ஹிமாசலப் பிரதேச, உத்தரப் பிரதேச மக்கள் மத்திய இந்தியாவின் கோண்ட் இனமக்கள் இதன் வேரையும் விதைகளையும், இலைகளையும் பயன்படுத்தி பாம்புக் கடிக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் கருவிளை மலரை இக்காலத்தில் சங்குப்பூ என்கின்றனர். காக்கணாம் கொடி. இலங்கையில் இதனை நீல காக்கணை பூ என்ற பெயரால் அழைப்பர். மேகாலயா முதல் மத்திய பிரதேசம் வரை இதன் வேரைப்பொடிசெய்து பாம்புக்கடி மருந்தாகக் கொடுக்கின்றனர் .
xxxx
102. Crotalaria pallida Aiton
க்ரோட லேரியா பல்லிடா
மத்திய அந்தமான் தீவுகளில் பழங்குடி மக்கள் இதை உபயோகிக்கிறார்கள் .xxxxx
103. Crotalaria prostrata Rottler ex Willd.
கிலுகிலுப்பை தாவர வகை
க்ரோடலேரியா ப்ராஸ்ட்ரேட்டா
கர்நாடக பிடார் ஜில்லா மக்கள் இதன் இலைகளை ,அசித்து தண்ணீரில் கலந்து குடிப்பதற்குத் தருகிறார்கள் . அவள் இதை பீலி குல்குலி என்று அழைப்பர்.
xxxxx
104. Derris scandens (Roxb.) Benth.
டெரிஸ் ஸ்கேண்டென்ஸ்
குஜராத்தில் மரப்பட்டையைப் பயன்படுத்தி சிகிச்சை தருகின்றனர்.
XXXX
105. Desmodium gangeticum (L.) DC.
டெஸ்மோடியம் காஞ்செடிகம்
மூவிலை (DESMODIUM GANGETICUM) இத்தாவரம் பூக்கும் வகையைச் சார்ந்த, பபேசியே குடும்பம்பத் தாவரம் ஆகும். இத்தாவரத்தின் பாகங்கள் மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது.சம்ஸ்க்ருதத்தில் சால் பர்ணி என்று சொல்லுவர்.
செடியின் வேரை உத்தரப் பிரதேச மக்கள் உபயோகிக்கின்றனர் .
XXXX
106. Entada rheedei Spreng.
எண்டாடா ரீடை ஸ்ப்ரங் / இரிக்கி
ஒரிஸ்ஸா மக்கள் இதை ஹனுமான் லோடா என்பார்கள்.
விதைகளை மசித்து பாம்புக் கடித்த இடங்களில் அப்புகிறார்கள்.