பலாப்பழமும் ஈச்சம் பழமும்- திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை- 3 (Post No.13,208)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,208

Date uploaded in London – –   5 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

வீட்டில் பலாச்சுளை இருக்க வெளியே ஈச்சம்பழத்தை நாடுவது ஏன்?

பிறன்மனை பற்றி திருமந்திரம்

தன்னுடைய மனைவி இருக்கும்போது அடுத்தவன் பெண்டாட்டியை நாடுபவனை திருமூலர் அழகாகக்  கண்டிக்கிறார்.. தமிழிலுள்ள நீதி நூல்கள் அனைத்திலும் இது கண்டிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவரும் பிறன்மனை நோக்காதவனை மகா வீரன் என்கிறார்.பிறன்மனை நோக்காதவனை பேராண்மையுடையவன் என்கிறார். இந்துக்கள் புஸ்தகப்படி இரண்டு மாவீரன்கள்தான் உள்ளனர். அனுமன், பீஷ்மன் இருவரும் பெண்களையே நோக்காத பெரு வீரர்கள். சமண மதத்தில் 24ஆவது தீர்த்தங்கரரின் பெயரே மஹாவீரர்  . அவருடைய உருவத்தைப் பார்த்தாலே புலனடக்கம் என்னும் மஹாவீரம் வந்துவிடும்.

xxx

திருமூலரோ காய்கள் பழங்களை உவமித்துக் கிண்டல் செய்கிறார் ;  இதோ சில பாடல்கள்

பிறன்மனை நயவாமை

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே

காத்த மனையாளைக் காமுறுங் காளையர்

காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்

ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.        

பொருள்

கல்யாணம் கட்டிய மனைவி வீட்டில் இருக்கிறாள் அவள் பலாப்பழம் போல இனிப்பானவள் மற்றவருடைய மனைவி , இவரைப் பொருத்தமட்டில் பேரீச்சம் பழம். பிறருடைய மனைவியை விரும்புவோன்  பலாப்பழத்தை விட்டுவிட்டு ஈச்சம்  பழத்தை நாடுவோனுக்கு சமம்.

xxxxxx

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை

அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்

பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்

கருத்தறி யாதவர் காலற்ற வாறே.  

இன்னொரு பாட்டில் மாம்பழம் , புளியம்பழம் மூலம் இதே கருத்தை வலியுறுத்துகிறார் ; இந்தப் பாட்டில் கூடவே ஒரு கருத்தையும் சொல்கிறார்.

சிறப்பான  ஒட்டு மாங்கனியை உரமிட்டு வளர்த்து நல்ல மாம்பழம் பழுத்துவிட்டது.அதைப்  பறித்துப் புதைத்துவிட்டு புளியம்பழத்தைப்  பறிக்க  மரமேறி கீழே விழுந்து காலை யும் ஒடித்துக்கொள்ளுவது போன்றதே  அடுத்தவன் பெண்டாட்டியை நாடுவதாகும்

மாம்பழம் – தன்  மனைவி;  புளியம் பழம் – அடுத்தவன் மனைவி

காலை ஒடித்துக்கொள்ளுதல் என்பது சமுதாயத்தில் அவமானப்படுத்தல் என்ற பொருளது தருவதாகும் .

xxxxx

மகளிர் இழிவு

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்

குலைநல வாங்கனி கொண்டுண லாகா

முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்

விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.     

எட்டி மரம் = பொது மகளிர், வேசிகள்

எட்டி மரமும் காய்த்து பழங்களுடன் இருக்கும்போது பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கின்றன. இலை , பூ , வேர் , காய் , பழம் ஆகிய அத்தனை தகவர லக்ஷ்ணங்களும் அதற்குண்டு . அதைச் சாப்பிட்டால் பின்னர் என்னவாகும் என்று தெரிந்த மக்கள் அதைத் தொடுவதில்லை அதே போல அழகான முலைகளையும் அருமையான புண் சிரிப்பையும் உடைய பொய்மை மாதரிடம் செல்லாமல் நன்னெறியை நாடுக.

Nux vomica நக்ஸ் வாமிகா, விஷம் கொட்டை, சிமேன் ஸ்ட்ரைகோனஸ் மற்றும் குவாக்கர் பொத்தான்கள் என்றும் அழைக்கப்படும் ஸ்ட்ரைகோனஸ் மரம் (Strychnos nux-vomica L.)

எட்டி காய்த்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன” -பழமொழி.

இதை காஞ்சிர மரம் என்றும் அழைப்பார்கள்.

xxxxx

விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர்

கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்

அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்

கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே.        

அன்ன நடை , சின்ன இடை மாதர்கள் இளமைப் பருவத்தில் இளைஞர்களை விரும்புவது கரும்புச் சாற்றின் மேல் உள்ள விருப்பதைப் போன்றது என்று இன்னுமொரு பாட்டில் செப்புவார். மென் முலை, அழகிய அணிகலன்களை பூண்ட அதே மாதர், முதுமை வந்துவிட்டால் காஞ் சிரங்காய் போல ஒதுக்கி விடுவார்கள் என்று முடிக்கிறார்.

xxxx

எட்டி பழுத்த, இருங்கனி வீழ்ந்தன்ன

ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்

வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்

பட்டிப் பதகர் பயன்அறி யாரே.

எட்டிபழம் பழுத்து கீழே விழுந்தாலும் பயன் பாடாது அது போல  நல்ல அறம் செய்யாதவரின் செல்வமும் பயன் அற்றது; வட்டி வாங்கி இந்த உலகில் பொருள் ஈட்டும் வஞ்சனை உடைய பாதகர்,  செல்வத்தின் பயனை அறியார். நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று என்று இதை ஆன்றோர் சொல்லுவர்.

xxxxx

அத்திப் பழம் அறைக்கீரை

அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்

கொத்தி உலைபெய்து கூழட்டு வைத்தனர்

அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்

கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.       

திருமூலர் ஒவ்வொரு தாவரத்தையும் வைத்து பல செய்திகளை சொல்ல வருவது தனிச் சிறப்புடையது. ஏனெனில் அவர் ஒவ்வொரு செடி, மரம் , கொடிக்கு தரும் பொருள் வேறு எங்கும் காண முடியாதது

அத்திப்  பழம் = உடல்;

அறைக்கீரை = உயிர்

உவமையாகுபெயர்

பொருள்

அத்திப்பழமாகிய உடலும் அறைக்கீரை வித்தாகிய உயிரும் இருவினைப் பயனாகிய இன்பத்துன்பக் கூறுபாடுகளை அவ்வுயிர்க்கு உணவாகிய ஊழாகச் சமைத்து உலகிடைப் பிறப்பித்தனன். அத்திப் பழமாகிய ஊழ்ப்பயனை அறைக்கீரை வித்தாகிய உயிர் உண்டு கழித்தது. எனவே உயிர் நீங்கிய உடம்பினைச் சுடத் துணிந்தனர். கத்துதலாகிய அழுகை யொலியுடன் சுடுகாட்டுக்குக் கொண்டு போயினர்.

உலைப்பெய்து – உலையிலிட்டுச் சமைத்து.

கூழ் இட்டு – சோறுடன் பரிகலத்திலிட்டு.

கத்தி – கத்திபோன்ற கூர்மையுடைய பல்.

அத்திப்பழம் – உடல்.

அறைக்கீரை நல் வித்து – உயிர்.

உலை – கருப்பாசயம். கூழ் – ஊழ்.

To be continued……………………………………

Tags- எட்டிமரம் , பலா, அத்தி, அறைக்கீரை, ஈச்சம் பழம்,  திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 3

Leave a comment

Leave a comment