பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 7 (Post No.13,205)

அவுரி அல்லது நீலி Indigofera

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,205

Date uploaded in London – –   4 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் 7

91. Albizia amara (Roxb.) Boivin

அல்பிஸியா அமரா / உசிலை

திருநெல்வேலி ஜில்லா மலை ஜாதி மக்கள் உசிலை மரப்பட்டை,  இலை ஆகியவற்றை மசித்து வேப்பெண்ணெயில் வேறு இரண்டு தாவரங்களுடன் வதக்கி பாம்பு கடித்த இடங்களில் பத்து நாளைக்கு அப்புகிறார்கள் இத் துதட ன் பயன்படுத்தும் வேறு இரண்டு தாவரங்கள் –கோரைக்கிழங்கு, வன மல்லிகா/கட்டு மல்லிகை.

xxxx

92. Albizia lebbeck (L.) Benth.

அல்பிஸியா லேப்பெக்

பாகிஸ்தானிலும் உத்தரப் பிரதேசத்திலும் பயன்படும் மூலிகை இது.

xxxxx

93. Bauhinia variegata L.

பெள ஹினியா வேரி கேடா

பாகிஸ்தானிலும் நேபாளத்திலும் பயன்படும் மூலிகை இது.

xxxxx

94. Butea monosperma (Lam.) Taub.

பூட்டியா மானொஸ்பெர்மா / புரசு /பலாச

புரசு (butea monosperma) என்பது பலாச (butea) வகையைச் சேர்ந்த ஒரு மரமாகும். இதற்கு பலாசு, பொரசு, புரசை, என்ற வேறு பெயர்கள் உண்டு

பாகிஸ்தானிலும் கர்நாடக மாநில சிக்மகளூரிலும் மத்திய இந்தியாவில் பில் பழ ங்குடி மக்களும் இதன் இலைச்  சாற்றையோ அல்லது பட்டையின் கஷாயத்தையோ கொடுக்கிறார்கள் .

xxxx

95. Butea superba Roxb.

பூட்டியா சுபர்பா

கொடிப்பலாசம் /கொடிமுருக்கன் / பலாச லதா

குஜராத்தில் இந்தத் தாவர சாற்றைப் பயன்படுத்தி சிகிச்சை தருகிறார்கள் .

xxxxx

96. Caesalpinia bonduc (L.) Roxb.

சீசல்பினியா பாண்டுக் / கழற்சி

உத்தர பிரதேசத்தில் விதைகளைப் பொடிசெய்து தருகிறார்கள்

கழற்சி (Guilandina bonduc,)  பொதுவாக grey nicker, nicker bean [2] fever nut [3] அல்லது knicker nut என்றும் அழைக்கப்படுகிறது)

வேறு பெயர்கள்

Caesalpinia bonduc (L.) Roxb.

Caesalpinia bonducella (L.) FlemingN J J

Caesalpinia crista auct. Amer.

Guilandina bonducella L.

xxxx

97. Cassia fistula L. சரக்கொன்றைசரக்கொன்னை

கேசியா பிஸ்டுலா

கர்நாடகத்திலும் தமிழ்நாட்டில் சேர்வராயன் மலைகளிலும் உத்தரப்பிர தேசத்திலும் மக்க ள் இதன் பழ த்தையும் விதைகளையும் பொடி செய்து பயன்படுத்துகின்றனர் .

xxxxx

98. Cassia hirsuta L.

கேசியா ஹிர்சூதா / மலையாவாரம்

வங்கதேச சக்மா பழங்குடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

commonly known as: hairy senna, woolly senna • Kannada: ಅಡವಿ ತಂಗಡಿ adavi thangadi • Malayalam: പൊന്നാവീരം ponnaaveeram • Manipuri: থৌনম thounam • Tamil: மலையாவாரை malaiyavarai, மலையாவாரம் malaiyavaram, மலையாவிரை malaiyavirai • Telugu: నూగు తంగేడు nugu tangedu • Tulu: ಕಾಟ್ಟು ತಜಂಕ್ kattu thajanku.

xxxxx

99. Cassia occidentalis L. பொன் ஆவாரை

கேசியா ஆக்சிடெண்டாலிஸ்

வங்க தேசம், பாகிஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் பாம்பு கடித்தால் கொடுக்கின்றார்கள் .

xxxx

100. Cassia tora L.

கேசியா தோரா /தகரை , ஊசித் தகரை

ஹிமாசலப் பிரதேச, உத்தரப் பிரதேச மக்கள் மத்திய இந்தியாவின் கோண்ட் இனமக்கள் இதன் வேரையும் விதைகளையும், இலைகளையும்  பயன்படுத்தி  பாம்புக் கடிக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

xxxx

101. Clitoria ternatea L.

கிளைட்டோரியா டெர்னாடியா/ கருவிளம் /செரு விளை / அபராஜித

சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் கருவிளை மலரை இக்காலத்தில் சங்குப்பூ என்கின்றனர். காக்கணாம் கொடி. இலங்கையில் இதனை நீல காக்கணை பூ என்ற பெயரால் அழைப்பர். மேகாலயா முதல் மத்திய பிரதேசம் வரை இதன் வேரைப்பொடிசெய்து பாம்புக்கடி மருந்தாகக் கொடுக்கின்றனர் .

xxxx

102. Crotalaria pallida Aiton

க்ரோட லேரியா பல்லிடா

மத்திய அந்தமான் தீவுகளில் பழங்குடி மக்கள் இதை உபயோகிக்கிறார்கள் .xxxxx

103. Crotalaria prostrata Rottler ex Willd.

கிலுகிலுப்பை தாவர வகை

க்ரோடலேரியா ப்ராஸ்ட்ரேட்டா

கர்நாடக பிடார்  ஜில்லா மக்கள் இதன் இலைகளை ,அசித்து தண்ணீரில் கலந்து குடிப்பதற்குத் தருகிறார்கள் . அவள் இதை பீலி குல்குலி என்று அழைப்பர்.

xxxxx

104. Derris scandens (Roxb.) Benth.

டெரிஸ் ஸ்கேண்டென்ஸ்

குஜராத்தில் மரப்பட்டையைப் பயன்படுத்தி சிகிச்சை தருகின்றனர்.

XXXX

105. Desmodium gangeticum (L.) DC.

டெஸ்மோடியம் காஞ்செடிகம்

மூவிலை (DESMODIUM GANGETICUM) இத்தாவரம் பூக்கும் வகையைச் சார்ந்த, பபேசியே குடும்பம்பத் தாவரம் ஆகும். இத்தாவரத்தின் பாகங்கள் மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது.சம்ஸ்க்ருதத்தில் சால் பர்ணி என்று சொல்லுவர்.

செடியின் வேரை உத்தரப் பிரதேச மக்கள் உபயோகிக்கின்றனர் .

XXXX

106. Entada rheedei Spreng.

எண்டாடா ரீடை ஸ்ப்ரங் / இரிக்கி

ஒரிஸ்ஸா மக்கள் இதை ஹனுமான் லோடா என்பார்கள்.

விதைகளை மசித்து பாம்புக் கடித்த இடங்களில் அப்புகிறார்கள்.

commonly known as: African dream herb, nicker bean, sea bean, St.Thomas bean • Hindi: barabi, chian, घीला ghila, गीला gila • Kannada: ganape kaayi • Malayalam: perim-kaku-valli • Marathi: गारभी garabhi, गारबी garabi, गारंबी garambi, गरूडवेल garudwel • Tamil: இரிக்கி irikki • Telugu: gilla teega, tikka tivva

XXXX

107. Erythrina indica Lam.

எரித்ரைனா இண்டிகா /கல்யாண முருங்கை (Kalyana murungai) Indian Coral Tree

கல்யாண முருங்கை,முள் முருங்கை,முருக்க மரம், கல்யாண முருக்கு, முள் முருக்கு, என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

மிஜோரம் முதல் கர்நாடகா சிக்மகளூர் வரை இதன் பட்டை யையோ வேரையோ வைத்து சிகிச்சை தருகிறார்கள்.

XXXXX

108. Erythrina variegata L.

எரித்ரைனா வேரிகேடா

இந்து மஹா சமுத்திரத் தீவுகளில் இலைகளை பயன்படுத்தி சிகிச்சை தருகிறார்கள்.

XXXXX

109. Indigofera tinctoria L.

இண்டிகோபெரா டிங்க்டோரியா / அவுரி அல்லது நீலி 

கேரளத்தில் வயநாட்டில் வேரின் சாற்றையோ இலையின் சாற்றையோ குடிக்கக் கொடுக்கின்றனர்.

அவுரி  அல்லது நீலி  (true indigo). இச்செடியில் இருந்து முன்னர் நீல நிறம் (ஊதாநிறம்) கொண்ட சாயம் எடுத்தனர்.

XXXXX

110. Mimosa pudica L.

மைமோசா பியூடிகா / தொட்டாற் சிணுங்கி

தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டாற் சிணுங்கி அல்லது தொட்டால் வாடி  மைமோசா பியூடிகா (Mimosa pudica)

நாகலாந்து முதல் தமிழ் நாட்டின் விழுப்புரம் வட்டாரம் வரை பாம்புக்கடிக்கு இதன் வேரை பயன்படுத்துகின்றனர்.

XXXXX

TO BE CONTINUED………………………………

tags– பாம்புக் கடி,  200  மூலிகைகள் , Part 7 , தொட்டாற் சிணுங்கி, அவுரி 

அதிசய தாவரங்கள்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள்—2 (Post No.13,204)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,204

Date uploaded in London – –   4 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part 2

வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது

புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது

தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்

முழுதும் பழுத்தது வாழைக் கனியே.”

இதை அப்படியே பொருள் கொண்டால்” தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன்.அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது. அதில் பூசணி பூத்தது. அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,  தொழுது கொண்டு ஓடினார்கள்.  அதன் பின் அக்கொடியில் வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது”

இந்தப் பாடலுக்கு பல விளக்கங்கள் தரப்படுகின்றன.அனைத்துப் பாடல்களும் வேதம் போல மறைவாகப் பேசுகின்றன. அதாவது உண்மைப்பொருளை மறைத்துப் பேசுகின்றன.

இதோ ஒரு விளக்கம் ,

வழுதலை  விதை= யோகப் பயிற்சி ,

பாகற்காய் – வைராக்கியம்,

புழுதியைத் தூண்டினேன் – தத்துவ ஆராய்ச்சி செய்தேன் ,

பூ சணி பூத்தது –  சிவம் வெளிப்பட்டது ,

தோட்டக்  குடிகள் – புலன் இன்ப வேட்கை ,

வாழைக்கனி – ஆன்ம லாபம்

சுருக்கமாகச் சொன்னால் யோகப் பயிற்சி மூலம் ஆன்மீக முன்னேற்றம் கண்டேன் .

இதற்கு குண்டலிணி சக்தியை எழுப்புதல் போன்ற விளக்கங்களும் உண்டு.

I sowed the seed of brinjal

And the shoot of bitter gourd arose;

I dug up the dust;

And the pumpkin blossomed;

The gardner-gang prayed and ran;

Full well ripened the fruit of plantain.

xxxx

யஜுர் வேதத்தில் ருத்ரம் என்றது துதியில் வரும் ம்ருத்யுஞ்ஜய மந்திரம் மிகவும் பிரபலமானது சக்தி வாய்ந்ததுமரண பயத்தை நீக்குவது முக்தி என்னும்  மோட்சத்தைத் தரவல்லது .

இந்த மந்திரத்தை திருமூலர் அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அந்த மந்திரத்தில் வரும் வெள்ளரிப் பழ உவமையை திருமூலரும் ஒரு பாடலில் பயன் படுத்திக்கிறார்.

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம்

உர்வாருகம் இவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

 त्र्यम्बकं यजामहे
सुगन्धिं पुष्टिवर्धनम् 
उर्वारुकमिव बन्धनान्
मृत्योर्मुक्षीय मामृतात् 


Om Try-Ambakam Yajaamahe
Sugandhim Pushtti-Vardhanam
Urvaarukam-Iva Bandhanaan
Mrtyor-Mukssiiya Maa-[A]mrtaat ||

இதன் பொருள்

ஓம் முக்கட் பெருமானே ! உன்னை வணங்குகிறோம் (முக்கட்= 3 கண்கள்);

நறுமணம் (ஆன்மீக) படைத்தோய் ! உடல் ஆரோக்கியத்தை (ஆன்மீக வலு) தருவோயே!

வெள்ளரிப்பழம் போல பல பந்தங்களிலிருந்து என்னை விடுவிப்பாயாக;

மரணத்திலிருந்து விடுவித்து மோட்சத்தினை அருள்வாயாக

இதில் முக்கியமான உவமை உருவாருகம் இவ =  வெள்ளரிப் பழம் போல .

உலகில்  இந்துக்களைப் போல இயற்கையை ரசித்தவரும் இல்லை; மதித்தவரும் இல்லை ;

வெள்ளரிப்பழம் தரையில்தான் இருக்கும்; கொடியின் உச்சியில் இராது; பழம் முற்றியவுடன் அதைப் பிடித்திருக்கும் பந்தம்/ காம்பு தானாக விலகிவிடும் ; இது போல அமைதியாக பழம் தனித்து விலகுவது வெள்ளரி ஒன்றில்தான். அது போல நம்மைச் சுற்றியுள்ள பந்த பாசங்களிலிருந்து நாமும் ஸ்மூத் smooth தாக விடுதலை பெறவேண்டும் என்று இந்த ருத்திர மந்திரம் வேண்டுகிறது .

இதைத் திருமூலர் எப்படிச் சொல்லுகிறார் என்று காண்போம் :

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனித்

திரிக்கின்ற ஓட்டம் சிக்கெனக் கட்டி

வரிக்கின்ற நல் ஆன் கறவையைப் பூட்டினேன்

விரிக்கின்ற வெள்ளரி வித்தும்வித் தாமே.

பொருள்

சுவாசப் பயிற்சி மூலம் முக்தி / விடுதலை/ மோட்சம் பெறலாம் .

நாற்றங்கால் நிறைந்த கழனி / வயல் போன்றது இந்த உடல்; இதில் ஓடுகின்ற சுவாசத்தை பிராணாயாமப் பயிற்சி மூலம் வசப்படுத்தினால் ,மனம் என்னும் மாட்டினைப் பூட்டினால் , வெள்ளரி கிடைக்கும்

வெள்ளரி என்பதைத் தாவரம் என்று கொள்ளாமல் சுக்கிலம் என்று பொருள் சொல்லுவாரும் உண்டு. அதாவது வெண்மை நிற சுக்கிலம் புலன் இன்பத்தில் வீணாகாமல் மோட்சம் பெறுவதற்கு வித்து/ விதையாக அமையும் .

ஆனால் நான் சொல்லும் பொருள் — சுவாசத்தைப் பயிற்சி மூலம் மனம் என்னும் மாட்டினைப் பூட்டி வசமாக்கினால் உர்வாருகம் இவ == வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விலகுவது போல முக்தி கிடைக்கும் .

திரயம்பக மந்திரத்தின் பொருளையும் திருமந்திரப் பாடலின் பொருளையும் பலமுறை மீண்டும் மீண்டும் படித்தால் நான் சொல்லுவதே சரியென்றுபடும்.

திருமூலர் சுமார் 60 பாடல்களில் தாவரங்கள் மூலம் இந்துமத தத்துவங்களை எடுத்தியம்பும் பின்னணியில் இதை பார்க்க வேண்டும் .

xxxx

to be continued……………………………………

tags-  வெள்ளரிப்பழம் ம்ருத்யுஞ்ஜய மந்திரம்த்ரயம்பகம் யஜாமஹேவழுதலை வித்திடப் பாகல் முளைத்தது, அதிசய

 தாவரங்கள்,  திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள் 2 

S.Nagarajan  Article Index for  APRIL  2024 (Post No.13,204)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.203

Date uploaded in London – — 4 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

SNR Article Index: APRIL  2024

APARIL  2024

From 25-3-24 to 9-4-2024 Break

10-4-2024 13125 கீச்சிரோ டொயோடா – புதிய மேம்பாடுகளைச்            செய்யுங்கள்;  முன்னேறுங்கள்! – மாலைமலர் 27-3-2024  இதழில் பிரசுரமான  கட்டுரை                                                                                                            11-4-2024 13128 கீச்சிரோ டொயோடா – புதிய மேம்பாடுகளைச்            செய்யுங்கள்;  முன்னேறுங்கள்! – மாலைமலர் 27-3-2024  இதழில் பிரசுரமான  கட்டுரை                                                                                                                12-4-2024 13131 SNR Article Index: MARCH  2024                                                                    13-4-2024 13135 கீதை தீர்க்கும் நோய்கள்! – ஏப்ரல் 2024 ஹெல்த்கேர் இதழில் பிரசுரமாகியிருக்கும் கட்டுரை                                                               14-4-2024 13138 சுற்றுப்புறச் சூழலுக்கு மனிதன் செய்யும் கேடுகள்!            15-4-2024 13141 கங்கை  மீது அணை – சரியா                                                              16-4-2024 13144 சிவபிரகாச சுவாமிகளின் சிவ பார்வதி புதிர்ப் பாடல்!                                                                                                                                                                17-4-2024 13147 யாருக்கு ஓட்டு போடுவது?                                                                      18-4-2024 13150 முருகன் மீது விநாயகனின் புகார்! (சிவபிரகாச சுவாமிகள்)                                                                                                                                       19-4-2024 13154 புராணத் துளிகள்! – 1                                                                               20-4-2024 13158 உழுது பயிரிடுதல் நன்று : அனைத்து தெய்வங்களும் உதவிக்கு வரும்! (சிவபிரகாச சுவாமிகள்)                                                                      21-4-2024 13162 மேரி கே ஆஷ் – பெண்களே அழகுடன் முன்னேறுங்கள்சமுதாயத்தை முன்னேற்றுங்கள்! – 1 மாலைமலரில் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை.                                                                                    22-4-2024 13166 மேரி கே ஆஷ் – பெண்களே அழகுடன் முன்னேறுங்கள்சமுதாயத்தை முன்னேற்றுங்கள்! –  மாலைமலரில் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை.                                                                                  23-4-2024 13169 ஹென்றி போர்டு  –  ஆர்வம்உழைப்புபொறுமை இருந்தால் வெற்றி நிச்சயம்! – 1 (மாலைமலர் கட்டுரை)

24-4-2024 13172 ஹென்றி போர்டு  –  ஆர்வம்உழைப்புபொறுமை இருந்தால் வெற்றி நிச்சயம்! – 2 (மாலை மலர் கட்டுரை)                                   25-4-2024 13175 மலைமகள் – திருமகள் வேடிக்கையான உரையாடல்! (சிவபிரகாச சுவாமிகள்)                                                                                                                                          26-4-2024 13178 சர் சி.வி.ராமன் தோல்வி மனப்பான்மையை உதறுங்கள்! – 1 (மாலைமலர் கட்டுரை)                                                                                                                             27-4-2024 13181 சர் சி.வி.ராமன் தோல்வி மனப்பான்மையை உதறுங்கள்! – 2 (மாலைமலர் கட்டுரை)                                                                                                                           28-4-2024 13185 ஏசு கிறிஸ்து இந்தியாவில்! –                                                          29-4-2024 13187 ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 2                                                                     30-4-2024 13191 சிவப்பிரகாச சுவாமிகளின் சாபம்!

**************

More ( Science ) Secrets from Vishnu Sahasranama – 3 (Post No.13,202)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,202

Date uploaded in London – –   3 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part- 3

All must read Adi Shankaras’ commentary on Vishnu Sahasranama (VS). He gives amazing scientific interpretation of VS. We looked at Big Bang theory and here is more from  Adi Shankara.

Word in VS- Ksobanah

One who at the time of creation entered into Purana and Prakrti (Nature) and caused AGITATION (Big Bang explosion 1400 million years ago). Says Vishnu Purana (1-2-29)

Prakrtim Pura m caiva pravisyatatmecchayaa Harih

Pravisya ksobhayaamaasa sarga-kaale vyayaavyayau

(The Eternal Lord Hari, at the time of creation entered at His own will the changeful Prakrti and the changeless Purusa and created AGITATION in them)

Till this day no scientist could say what caused the Big Bang. But Hindus knew about Big Bang and say who caused the ‘agitation’.

Shankara has explained it in two other word names in VS (Aatma yoni, Swayam jaatah).

xxxx

Viswa, Vishnu= space; Vishnu/Krishna=Black.

Another Amazing Interpretation

Sanaat (word No.896 in VS)

The word SANAAT indicates a great length of Time. Time is also the manifestation of the Supreme Being;

 Vishnu Purana says (1-2-15)

Parasya brahmano ruupam purusha prathamam dvija

Vyaktaavyakte thathaivaanye ruupe kaalas tathaapuram

O Holy men! The first manifestation of the Supreme Being is Purusa, the Indiscreet, the Discreet and the Great Entity (Mahaatattva) and others are its manifestations. Time is also a manifestation of His.

Einstein said it thousands of years later!

According to Einstein , you need to describe where you are not only in three-dimensional space —length, width and height—but also in time. Time is the fourth dimension. So to know where you are, you have to know what time it is.

xxxx

kaalah

word number 418

one who measures and sets a limit to everything. The Gita says 10-30

Kaalahkalayataam aham

Among measures I am TIME.

xxxx

Wonderful interpretation of Kesavah

The word Kesavah occurs twice in VS; 23rd and 648th.

In 23 Shankara says, one whose kesa/hair or locks are beautiful. Or one who is Himself is three-

Kah – Brahma ; ah- Vishnu; isa – Siva= Kesavah

Or one who destroyed the Asura Kesi in the Krishna incarnation.

But in 648, Shankara interprets the same word as follows,

By Kesa is meant the rays of light spreading within the orbit of the sun. one who is endowed with this is Kesava.

Mahabharata Santi Parva 341-48 says,

Amsavo ye prakaasante mama te kesa- samjnitah

Sarvajnah  Kesavam tasmaan maam aahur dvijasattamaah

— whatever rays of Mine are shining, they are called Kesas. So all the holy men call me Kesava.

Or Brahma, Vishnu, and Siva are divine powers and therefore called Kesas. One who is endowed with these Saktis is Keshava. 

The Sruti (Veda) says,

Trayah Kesinah- the three are with Kesa.

Vishnu purana says 5-1-61

Mat kesau vasudhaatale meaning my two Kesas or Saktis are in the world. In the light of this, Kesa is a synonym of Sakti/power.

Harivamsa says,

Ko brahmeti samaakhyaataiisoham  sarvadehinaam

Aavaam tavaamsa sambhuutau tasmaat kesava naamavaan

Ka means Brahma and Isa means lord of all. We two are born of your parts, so Thou art known as Kesava.

Shankara’s wide and in depth of knowledge of Hindu scriptures throw more light on VS.

(I wonder how Shakara quoted from one lakh Mahabharat couplets, 8 lakh Purana couplets and several thousand Vedic Hymns without google or computer or internet websites!!!)

To be continued………………………

Tags- Kesava, Kala, Time, Big Bang, cause, Science , Secrets, Vishnu Sahasranama

அதிசய தாவரங்கள்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள்—1 (Post.13,201)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,201

Date uploaded in London – –   3 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நான் 1997, 1998 ஆம் ஆண்டுகளில் திருமந்திரத்திலுள்ள 3000 பாடல்களையும் படித்து நோட்ஸ் / குறிப்புகள் எடுத்தேன். புஸ்தகத்தின்  மார்ஜினிலும் நிறைய குறிப்புகளை எழுதினேன் . அவைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள நேரம் கனிந்துவிட்டது ; இதற்குமுன் திருவாசகத்தேனும் திருமந்திர ஜுசும் என்ற தலைப்பில் ஒரு புஸ்தகமும் பிரசுரித்ததுவிட்டேன் ; புதிய விஷயங்களை இப்போது சப்ஜெக்ட்வாரியாகக் காண்போம். முதலில் நான் பி.எஸ்சி (B Sc Botany, Madurai University) பட்டம் பெற்ற தாவரவியலை எடுத்துக் கொள்கிறேன்.

முதலில் 3 அதிசய விஷயங்களை , சுவையான செய்திகளைத் தருகிறேன்

1. விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் குறிப்பிடப்படும் மூன்று தெய் வீக மரங்களை ஒரே பாட்டில் திருமூலரும் தனது திருமந்திரத்தில் கூறுகிறார்

2.இன்னும் ஒரு பாட்டில் சிவனுக்குரிய 14 புஷ்பங்களைக் கூறுகிறார். உடனே கபிலர் என்ற பிராமணப் புலவர் எழுதிய சங்க கால குறிஞ்சிப் பாட்டு நமக்கு நினைவுக்கு வந்து விடுகிறது

3. ரிக்வேதம் போலவே திருமந்திரம் பல செய்திகளை (Symbolism) அடையாளக் குறியீடுகளால் , சங்கேத மொழியால் (coded language)  சொல்கிறது.  உரைகள்/ பாஷ்யங்கள் இல்லாவிடில் நாம் அவைகளை மாஜிக் என்ற வகையில் சேர்த்துவிடுவோம். கதத்தரிக்காய் விதை போட்டேன்; பாகற்காய் முளைத்தது என்று அவர் ஏன் சொல்கிறார் என்று காண்போம்.

xxxx

விஷ்ணு ஸஹஸ்ர நாமமும் திருமந்திரமும்

நைஸ சாக , ந்யக்ரோத என்ற இரண்டு சம்ஸ்க்ருத சொற்கள் கீழ் நோக்கி வளரும் மரம் என்பதாம்.

ஸூலப: ஸூவ்ரத: ஸித்த: ஸத்ருஜிச்சத்ருதாபன:

ந்யக்ரோதோ தும்பரோ அஸ்வத்தஸ்  சாணூராந்த்ர நிஷூதன:88-விஷ்ணு சஹஸ்ரநாமம் –shloka-88

Sulabhah Su-Vratah Siddhah Shatru-jit Shatru-tapanah         

Nyag-rodhodumbaro’Svatthah ChanurAndhra-Nishudanah ||V.S.88||

Nyagrodha – Ficus indica (Banyan Tree)

Udumbarah-Ficus glomerata (Aththi in Tamil)

Asvatthah- Ficus religiosa (Arasu in Tamil)

இதில் ந்யக்ரோத அவுதும்பர , அஸ்வத்த  என்பன ஆல் , அத்தி, அரச மரங்களைக் குறிக்கும் சம்ஸ்க்ருத பதங்கள் ஆகும்

இதில் குறிப்பிடப்படும் ஆல் , அரசு, அத்தி; இவை மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் ; அதில் ஒரே உட்பிரிவைச் சேர்ந்தவை

குடும்பம் மோரேசி ; உட்பிரிவு – பைகஸ் ; 200 ஆண்டுகளுக்கு முன்னர்தான் தாவரவியலாளர் இதை ஒரே குடும்பமாக, ஒரே உட்பிரிவாக அறிவித்தனர். ஆனால் விஷ்ணு சஹஸ்ரநாமத்திலேயே (மஹாபாரத்தின் ஒரு பகுதி) இந்த மூன்றையும் தெய்வீக மரங்கள் என்று வியாசர் எழுதிவிட்டார் . அதை திருமூலர் ஒரே பாட்டில் சொல்லி பூடகமாக வேறு கருத்தை விளக்குகிறார் . திருமூலருக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் அத்துபடி!

ரிக்வேதத்தில் மஹா வ்ருக்ஷம் என்ற பெயரில் ஆலமரம் குறிப்பிடப்படுகிறது; உலகிலேயே பெரிய மரம் இதுதான் (பரப்பளவில்).

பகவத் கீதையில் ‘மரங்களில் நான் அஸ்வத்தம் என்னும் அரச மரம்’ என்கிறான் கண்ணன். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஆலமரம் (ந்யக்ரோத), அரச மரம் (அஸ்வத்தம்), அத்திமரம் ஆகிய மூன்றும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன. அதாவது மரமே கடவுள். மௌனத்தின் மூலம் மாபெரும் தத்துவத்தை உபதேசம் செய்யும் தட்சிணாமுர்த்தியொவெனில் ஆலமரத்தின் கீழே அமர்ந்திருக்கிறார். (இது குறித்து ‘இந்திய அதிசயம்:ஆலமரம்’ Indian Wonder: The Banyan Tree என்ற நீண்ட கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்).

தாவரவியல் என்பதும் மரங்களை இனம் வாரியாக, குடும்பம் வாரியாகப் பிரிப்பதும் 1735ஆம் ஆண்டு முதல்தான் லின்னேயஸ் என்பவரால் உண்டாக்கப்பட்டது. ஆனால் விஷ்ணு சஹஸ்ரநாமம் (மஹாபரதத்தின் ஒருபகுதி) 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இதைப் பின்பற்றிவிட்டது. விஷ்ணுவின் பெயராக வரும் ஆல், அரசு, அத்தி மூன்றும் மோரேசி என்னும் குடும்பத்தையும் பைகஸ் என்ற ஜீனஸ்—ஐயும் சேர்ந்தவை!! (Family Moraceae, Genus: Ficus)

புத்த கயாவில் புத்தர் நின்று போதித்த அரச மரம் உள்ளது. இதை போதி மரம் என்று அழைப்பர். கயாவில் அக்ஷய வடம் எனப்படும் அழியாத ஆலமரம் ஒன்றும் இருக்கிறது. இவ்விரு மரங்களையும் பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கிச் செல்வது வழக்கம்.

1667 அரசுட னாலத்தி யாகும்அக் காரம்

விரவுகனலில் வியனுரு மாறி

நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்

உருவம் பிரமன் உயர்குலம் ஆமே. 3 திருநீறு ,திருமந்திரம்

ஆறாம் தந்திரத்தில் திருநீறு என்ற தலைப்பின் கீழ் வரும் பாடல் இது.

திருமூலர் சொல்லும் கருத்து

வேத கால யாக யக்ஞங்களில் ஆலம் , அரசம், அத்தி ஸமித்துக்களை (குச்சிகளை) போட்டு எரிப்பார்கள்; அதன் சாம்பலை நெற்றியில் இட்டுக்கொள்ளுவார்கள் இதுவே விபூதி எனப்படும் .இவ்வாறு திரு வெண்ணீறு அணிபவரே உண்மையான சிவனடியார்.

அவ்வையாரும்

மேதினியில் இட்டார் உயர்ந்தோர், இடாதார் இழிகுலத்தோர் , பட்டாங்கில் உள்ளபடி என்று சொல்கிறார்

பட்டாங்கு என்றால் சாஸ்திரம் மெய்ப்பொருள், உண்மை என்று தமிழ் அகராதி சொல்லும். விபூதி இட்டவர்கள் பெரியவர்கள்; விபூதி இடாதவர்கள் கீழ்ஜாதி மக்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதையே திருமூலரும் சொல்கிறார்

பிச்சை இடுவோர் பெரியார் (தானம் செய்பவர்கள்) ; தானம் செய்யாத கருமிகள் கீழார் என்ற கருத்தும் பொருந்தும். அதுவும் பகவத் கீதையிலும் அதற்கு முன்னர் வேதத்திலும் உள்ள கருத்தே .

ஆயினும் மூன்று மரக்குச்சிகளை எரிப்பதை திருநீறு என்ற அத்தியாயத்தில் சொல்லுவதால் விபூதியையே திருமூலர் சொல்கிறார் . திருமூலர் வாழ்ந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே. லின்னேயஸ் மூன்று தாவரங்களையும் ஒரே குடும்பமாக வகுத்தது 200 ஆண்டுகளுக்கு முன்னரே. ஆனால் வேத வியாசரோ இதை விஷ்ணுவின் அம்சமாக பாடியிருப்பது 5000 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதிலிருந்து இந்துக்கள் உலக மஹா தாவர இயல் (Great Botanists) அறிஞர்கள் என்பது விளங்கும் .

xxxx

சிவபெருமானுக்கு உகந்த 14 புஷ்பங்கள்

உலகில் பூவையும் பழத்தையும் காயையும் இலையயையும் புல்லையும் தினமும் க டவுளுக்கு அர்ப்பணிப்பவர்கள் இந்துக்கள் மட்டுமே; இதை இந்தியாவிலுள்ள இரண்டு லட்சம் கோவில்களில் தினமும் காணலாம். இதை பகவத் கீதையில் கண்ணனும் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் என்ற ஸ்லோஅகத்தில் சொல்லிவிட்ட்டார். அதை புறநானுற்று பிராமணப் புலவர் கபிலரும் அப்படியே மொழிபெயர்த்துவிட்டார் (காண்க புறம்.106)

திருமூலர் சொல்லும் 14 பூக்கள்

தாமரை, கருங்குவளை, செங்கழுநீர், நெய்தல், பலா, மாதவி, மந்தாரம், தும்பை, மகிழ், சுரபுன்னை, மல்லிகை, செண்பகம், பாதிரி, செவ்வந்தி ஆகிய 14 பூக்களைக் கொண்டு சிவனை வழிபட வேண்டும்.

மாதவி= குருக்கத்தி; வகுளம் = மகிழ்;

1003 அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்

வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்

தும்பை வகுளம் சுரபுனனை மல்லிகை

செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. 1

தேவாரமும், திருவாசகமும் பல இடங்களில் இந்தப் பூக்களைக் குறிப்பிடுகின்றன. குறிஞ்சிப் பாட்டில் 99 தமிநாட்டு மலர்களைக் காண்கிறோம். அதற்கு முன்பாக காளிதாசனும், வால் மீகியும் பூக்களை பட்டியலிட்டாலும் கபிலரைப் போலவோ திருமூலரைப் போலவோ ஒருசேர சொல்லவில்லை. திருமாலைஃப் பொரு த்தமட்டில் துளசி மட்டுமே போற்றப்படுகிறது . சைவர்கள் மலர்ப் பிரியர்கள் !

xxxx

கத்தரிக்காய் பாகற்காய் ஆக மாறிய மாஜிக்

திருமந்திரத்தின் ஒன்பதாவது தந்திரத்தில்,’சூனிய சம்பாஷணை என்ற அத்தியாயத்தில் எளிதில் பொருள் விளங்காத குறியீட்டு மொழியில் பாடல்கள் கிடைக்கின்றன . பரம்பரை பரம்பரையாக வந்த உரைகளை சிலர் எழுதி வைத்துள்ளதால் நாம் பொருள்கொள்ள முடிகிறது. மதுரை நகர பாரத்துவாஜ கோத்திர பார்ப்பனன் நச்சினார்க்கினியன் உரை இல்லாவிடில் சங்க இலக்கியப் பாடல்களை நாம் புரிந்துகொள்ள இயலாது; அதே போல திருமந்திரத்துக்கும் பழைய உரைகள் உள்ளன.

வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது

புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது

தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்

முழுதும் பழுத்தது வாழைக் கனியே.” 2868.

To be continued……………………………………………….

tags- விஷ்ணு ஸஹஸ்ர நாமம்,  திருமந்திரம் , திருமூலர் , 14 பூக்கள், அதிசய தாவரங்கள், திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள்

அர்தேஷிர் கோத்ரெஜ் – அனைத்தையும் பாதுகாக்க வணிக நிறுவனம் தந்தவர்! – 2 (Post 13,200)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.200

Date uploaded in London – — 3 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

24-4-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.

அர்தேஷிர் கோத்ரெஜ் – அனைத்தையும் பத்திரமாய் பாதுகாக்க நன்னெறி நடைமுறைகளுடன் கூடிய வணிக நிறுவனம் தந்தவர்! – 2 

ச. நாகராஜன் 

சேஃப் தயாரிப்பு

1901-ல் கோத்ரெஜ்  பாதுகாப்பான ‘சேஃப்’  (SAFE) பக்கம் தன் பார்வையைத் திருப்பினார்.

அப்போது சான்ஃபிரான்ஸிஸ்கோவில் ஒரு பூகம்பம் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு பெரிய தீ விபத்தும் ஏற்பட்டது. அனைத்து சேஃப்களும் அழிந்து போயின.

இதைக் கவனத்தில் கொண்ட கோத்ரெஜ் அருமையான ஒரு சேஃபை வடிவமைத்தார்.

இந்த அனைத்திலும் அவருக்கு உதவி செய்தது அவரது சகோதரரான பிரோஜ் ஷா.

தொழிலில் நன்கு புதிய உத்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 1910-இல் அவர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றார். புதிய உத்திகளைப் பார்த்தறிந்தார்.

.கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ்

ஒருநாள் அவருக்கு மெர்வான்ஜியிடம் தான் வாங்கிய கடன் தொகை 3000 ரூபாய் ஞாபத்திற்கு வரவே ஓடோடிச் சென்று அவரிடம் தொகையைத் திருப்பித் தந்தார். நோய்வாய் படுக்கையில் இருந்த அவர் அதை வாங்க மறுத்தார். ஆனால், ‘ஒரு உதவி செய்ய முடியுமா?’ என்று கேட்டார்.

‘எது வேண்டுமானாலும் செய்கிறேன்’ என்று வாக்களித்தார் கோத்ரெஜ்.

எனது உறவினாரான பாய்ஸிற்கு ஒரு வேலை போட்டுத் தர முடியுமா என்பதே அவர் கேட்ட உதவி.

நெகிழ்ந்து போன கோத்ரெஜ். அவ்ரை எனது நிறுவனத்தில் கூட்டாளியாகவே ஆக்குகிறேன் என்றார்.

அப்படித் தோன்றியது தான கோத்ரெஜ் .அண்ட் பாய்ஸ் (GODREJ & BOYCE) கம்பெனி.

 ஆனால் சிறிது காலத்தில் ஆர்வமின்றி நிறுவனத்திலிருந்து விலகி விட்டார் பாய்ஸ். என்றாலும் பெயர் தொடர்ந்தது.

 சோப் தயாரிப்பு

1928 மே முதல் நாள் தனது நிறுவனத்தை தனது தம்பி பெயருக்கு மாற்றினார் கோத்ரெஜ். நேராக நாசிக்கிற்குச் சென்று அங்கு விவசாயத்தை மேற்கொண்டார்.

ஆனால் இயல்பான அவரது “எதையாவது புதிதாகக் கண்டுபிடிக்கும் ஆர்வம்” அவரை உந்த அவர் சோப் தயாரிப்பதில் ஈடுபட்டார். சோப்பை மிருகக் கொழுப்பின்றி சைவ முறையில் தயாரிப்பதே அவர் எண்ணம். தாவர எண்ணெய்களை வைத்து மிருகக் கொழுப்புகளைத் தவிர்த்து அவர் தயாரித்த சோப்புகள் பிரபலமாயின. நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த சோப்பை நோபல் பரிசு பெற்ற கவிஞரான ரவீந்திரநாத் தாகூரும் அன்னிபெஸண்ட் அம்மையாரும் பெரிதும் போற்றி வரவேற்றனர்.

 இந்திய விடுதலை இயக்கம் கோத்ரெஜை ஈர்க்கவே அவர் தாதாபாய் நௌரோஜியின் உரையால் ஈர்க்கப்பட்டார். நம் நாடு எதிலும் தனித்து சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பதே அவரது கருத்து.

ஆனால் சுதேசித் தயார்ப்புகள் நிச்சயமாக உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டும் என்பதையும் அவர் வளியுறுத்தினார்.

 சாதாரண 215 சதுர அடி ஷெட்டில் ஆரம்பிக்கப்பட்ட் கோத்ரெஜ்.

 நிறுவனம் இன்று 28000 பணியாளர்களைக் கொண்டு பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. 5.7 பில்லியன் கோடி ரூபாய் வருமானத்தைக் கொண்டுள்ளது. (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி)

எலிஸபத் மகாராணியாரே ஒரு முறை கோத்ரெஜ் தயாரிப்புகளைப் பகிரங்கமாகப் போற்றிப் புகழ்ந்தார்.

மறைவு

1936-ல் கோத்ரெஜ் மறைந்தார். 

ஆதி கோத்ரெஜ்

இன்று இந்த நிறுவனத்தின் தலைமையில் இருப்பவர்  ஆதி கோத்ரெஜ்.

அவருக்கு வயது 82 (பிறப்பு 3-4-1942)

 இப்போது இந்த நிறுவனம் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து இந்தியாவின் பெருமையை உலககெங்கும் பறை சாற்றி வருகிறது.

சமீபத்தில் விண்ணில் பறந்த சாடலைட்டில் விகாஸ் எஞ்ஜினை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தது கோத்ரெஜ் நிறுவனம்

 வீட்டில் உபயோகிக்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் உலகில் பெரும்பகுதியில் வசிக்கும் நாடுகளின் மக்கள் ஏதோ ஒரு கோத்ரெஜ்

தயாரிப்பைப் பயன்படுத்துகிறார் என்பதே உண்மை.

 இந்தியாவிலோ கேட்கவே வேண்டாம் – சிந்தால் சோப், ஹிட், குட் க்னைட்,, நூபுர் ஹென்னா, ஹேர் கேர், காட்ரஜ் பர்னீச்சர், காட்ரஜ் கட்டும் வீடுகள், சிசிடிவி, ரெப்ரிஜரேட்டர், குளிர்சாதனப்பெட்டிகள், எலக்ட்ரிக் ஓவன்,-   மிக மிக நீண்ட கோத்ரெஜ் தொழில்துறையின் பட்டியல் தொடரும்.

 வெற்றிக்கான தாரக மந்திரம்

கோத்ரெஜ் நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன?

மிக சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் அது விளக்கப்படுகிறது.

 ENTERPRISE AND ETHICS 

 – THE TWO PILLARS OF THE EMPIRE! 

வணிகம் – நன்னெறி நடைமுறைகளுடன் 

சாம்ராஜ்யத்தின் இரு தூண்கள்!

***

More ( Botanical ) Secrets from Vishnu Sahasranama- 2 (Post No.13,199)

Mighty Banyan Tree (Nyagrodha/ Vata/ Mahavrksha/ Bania tree)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,199

Date uploaded in London – –   2 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Long before Swedish botanist Carl Linnaeus classified plants, Hindus studied all plants and classified them in their own way. In Vishnu Sahasranama (VS) we see three plants of the same family are called divine trees.

shloka-88

Sulabhah Su-Vratah Siddhah Shatru-jit Shatru-tapanah         

Nyag-rodhodumbaro’Svatthah ChanurAndhra-Nishudanah ||88||

Nyagrodha – Ficus indica (Banyan Tree)

Udumbarah-Ficus glomerata

Asvatthah- Ficus religiosa

All these Ficus trees come under same family Moraceae. 5000 years before Carl Linnaeus, Vyasa classified them correctly.

These three trees are divine trees representing Lord Vishnu. Adi Shankara says in his commentary:

Nyagrodha- That which remains above all and grows downward. That is He is the source of everything that is manifest.

Udumbarah – one who as the supreme cause is above the sky, that is superior to all.

Asvattah – That which does not last for the next day. Krishna also quoted this tree in 15-1. Elsewhere he says He is Asvattah among the trees.

All these trees are worshipped from the days of Rig Veda. Krishna spoke to Arjuna only under the banyan tree in Kurukshetra.Rig Veda described banyan tree as Maha Vrksha. In another place Tree growing downward.

Buddha attained wisdom only under Asvatta tree.

Sticks of all these trees are used in Yaga-Yajna fire.

xxxx

Lord Krishna gave Bhagavad Gita lectures under this banyan tree in Kurukshetra

Tamil Tirumular used the same trees!

5000 years ago Vyasa did a botanical wonder. 1000 years ago Tamil Siddha Tirumular, A Saivite migrant from Kashmir, composed 3000 poems and the book is known as Tirumanthiram. He is praising the Vibhuti (holy ash found on the foreheads of Saivites) in one of his poems as follows, Here Tirumular also pointed out that the sticks of these trees burnt in Yaga fire and made into holy ash (Vibhuti-Tiruneeru) gives one the status of brahmins and they belong to high caste. Famous Tamil poetess also supported Tirumular by saying (மேதினியில் இட்டார் உயர்ந்தோர், இடாதார் இழிகுலத்தோர் , பட்டாங்கில் உள்ளபடி) those who smear holy ash on forehead are high caste people and those who don’t are of low caste according to scriptures.

Holy Ashes elevate to Brahma Status

asvatta nyagroda udumbara

They that are in its fire purified

Shall in truth be transformed divine;

Reaching the Feet of the Eternal, the Immaculate

They shall attain Brahma’s form

And ever be of Order Divine.

அரசுட னாலத்தி யாகும்அக் காரம்

விரவுகனலில் வியனுரு மாறி

நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்

உருவம் பிரமன் உயர்குலம் ஆமே.

ஆறாம் தந்திரம்/  3 திருநீறு / திருமந்திரம்

Vata/ Banyan Tree Savitri Vrata

It is interesting to see the same three trees are venerated all over India from the south of the country to the northern Himalayas from Vedic days until this day. Even today orthodox Brahmin boys do Samithaadhaanam every day with the sticks of Asvatta tree and smear the ash on his body. This is the origin of Vibhuti , that is holy ash.

—subham—

Tags- Holy ash, Vibhuti, Tiruneeru, Tirumanthiram, Tirumular, Vishnu sahasranamam, three Ficus trees

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 28 (Post No.13,198)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,198

Date uploaded in London – –   2 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 28

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 28

xxxx

297.பிரமியத்திற்கு

சரக்கொன்னை பூவையும் கொழுந்தையும் அரைத்துப் பாலில் கலக்கி உண்டுவந்தால்  பிரமியம்- வெட்டை – பாண்டு- காமாலை  இவைகள் சாந்தியாகும்.

xxxx

கிருமிகள் நீங்க

சரக்கொன்னை  கொழுந்தை வைத்துப் பிளந்த சாற்றில் சீனி சக்கரை கலந்து சுமார் அரைக்கால் படி உள்ளுக்குக்  கொடுத்தால் கிருமிகள் திமிர் பூச்சிகள் நீங்கும்.

xxxx

திமிருக்கு

சங்கம் இலைச்சாறும் வெள்ளாட்டுப் பாலும் ஒன்ராய்க்  கலந்து

ஒரு வேளைக்கு கால்  படி வீதம் மூன்று நாள் கொடுக்கத்  தீரும்

xxxx

பொது மருந்து

சதுரக் கள்ளியை துண்டு துண்டாய் நறுக்கி பானை யில் ஒரு படி துண்டு வரை போட்டு 4 படி தண்ணீர் விட்டு வாய்ப்புறம் துணியினால் ஏடு கட்டி அடுப்பேற்றி கரும் குருவை அரிசி மாவை துணியின் மேல் பரப்பி புட்டவியல் செய்தெடுத்து மூன்று நாள் கொடுக்க சகலமும் சாந்தியாகும் .

xxxx

சா

வெள்ளை நீர் சுருக்கு

சார பருப்பை பால் விட்டரைத்து ஜாலாமிசரியூறி ய தண்ணீரில் கலந்து அதற்குத் தகுந்த பால் விட்டு சாப்பிடவும். இப்படி 4-5 வேளை சாப்பிட நீர்க்கடுப்பு, வெள்ளை விழுதல் நீங்கும்.

xxxx

பேதியைக் கட்ட

சாதிக்காய் ஒன்றை சிறு துண்டுகளாக நுணிக்கி நெய்யில் வறுத்து புளிப்பு மாதுளம் பழத்தோல் அடுப்பிலிட்டு வதக்கிக்கொண்டு அபினி 1 விராகனிடை ஜாதிக்காய் 4  விராகனிடை மாதுளம் தோல் 5  விராகனிடைஇதுகளை கல்வத்திலிட்டு தேன்விட்டு பதமாய் அரைத்து கடலையளவு உருட்டி பேதிக்குத் தக்கபடி முலைப்பாலிலாவது வாழைப் பூ கிஷாயத்திலாவது  இரண்டு மூன்று வேளை கொடுக்கவும்

xxxx

ஆரோக்கியத்திற்கு

சாதிக்காயை தாம்பூலத்துடன் கடலையளவு உபயோகித்துவந்தால் தாப  சுரம் போகும் தாது புஷ்டியுண்டாகும் . ஆனால் பித்தத்தையுண்டாக்குமாதலால்  பசும்பால் சாப்பிடவேண்டியது .

xxxx

பிள்ளைகள் நீராமை கணத்திற்கு

சாரணைக்காய்  மூக்குரொ ட்டக்காய் பொடுதலைக்காய் சீரகம் துளசி ஓர்நிரையாய் தட்டிப்போட்டு கிஷாயம் செய்து வார்க்கவும் சாந்தியாகும்

xxxx

வாதவலி பிரமேகத்திற்கு

சாரடைக்கிழங்கைப் பாலில் அரைத்துக்கலக்கியுண்டுவந்தால் சீதளம் நீரேற்றம் தடிப்புகுன்மம்  வாதவலி  சிரங்கு பிரமேகம் இவை தீரும் .xxxx

சி

கண்நோய் உள் மூலத்திற்கு

சிறுகொண்ணை மூலத்தை அரைத்துப் பாலில் கலக்கி யுண் டு வந்தால் கண்நோய், உஷ்ணம்,  உள் மூலம் இவை தீரும் .

xxxx

கீல் வாய்வுக்கு

சித்துழாப்பட்டை கொண்டுவந்து அதற்குச் சரியிடை சுக்கு திப்பிலி மிளகு மோடி சன்னராஷ்டம் – தும்பராஷ்டம்- வாய்விளங்கம்  இதுகள் போட்டு யிடித்து காரசாரம் சேர்ந்த பச்சைக் கருவாடு குழம்பு கூட்டி மேற்படி வஸ்துவை போட்டு குழம்பு செய்து ரசத்தைப் போல மிச்சமாய் விட்டுக்கொண்டு சாப்பிடவும் . இரண்டுவிசை மலம் கழியும் .  கீல் வாய்வு உடனே  தீரும் . 2-3 வேளை சாப்பிட வேண்டியது..

xxxx

கால் பிளவுக்கு

சிவன் வேம்பு மூலத்தை பால் விட்டரைத்து  பாலில் கலக்கியுண்டுவந்தால் சில்லறை விஷங்கள் கால் வெடிப்பு கரப்பான் ரிண ங்கள் யாவும் தீரும் .

xxxx

309. அனேக ரோகத்திற்கு

சிவன் வேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தியிடித்து சூரணித்து வஸ்திரகாயம் செய்து  சமனிடை சீனிசக்கரை கலந்து  சீசாவில் வைத்துக்கொண்டு ஒருவேளைக்கு திருகடிப் பிரமாணம் தின்றுவந்தால் 18 விதமான குஷ்ட உற்பத்தி  பாத த்திலுண்டாகும் வெடிப்பு தேகத்திலுண்டாகும் தடிப்பு – படர் தாமரை – நமை – அரிப்பு-  தேகத்தில் முள்ளுக்குத்துவது போல் குத்தல் – திமிர் – தலை நோய் –  இவைகள் தீரும். இச்சாபத்தியம் .

தொடரும் …………..

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 28 ,

அர்தேஷிர் கோத்ரெஜ் – அனைத்தையும் பாதுகாக்க வணிக நிறுவனம் தந்தவர்! – 1 (Post No.13,197)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.197

Date uploaded in London – — 2 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

24-4-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.

அர்தேஷிர் கோத்ரெஜ் – அனைத்தையும் பத்திரமாய் பாதுகாக்க நன்னெறி நடைமுறைகளுடன் கூடிய வணிக நிறுவனம் தந்தவர்! – 1 

ச. நாகராஜன்

என்ன வீட்டை பத்திரமா பூட்டியாச்சா? 

வீட்டை விட்டு வெளியூர் செல்லும் போது குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உறுதி செய்தி கொள்வது “வீட்டை நல்லா பூட்டியாச்சா?”, கோத்ரெஜ் பூட்டு தானே? என்பது தான்! 

பாடுபட்டு உழைத்து நகைகளை வாங்கி திருமணம் நடத்தத் தயாராக இருக்கும் குடும்பத்தினர், “நகையெல்லாம் பத்திரமா ?”, கோத்ரெஜ் லாக்கரில் தானே வச்சிருக்கே?” என்று கேட்கும் போது, பெருமையுடன் பதில் இப்படி வரும்: “கவலையே பட வேண்டாம். கோத்ரெஜ் லாக்கர் தான், சுவரோடு பதிக்கப்பட்டது, யாரும் தூக்கிக் கொண்டு போக மூடியாது. டிஜிடல் லாக் கொண்டது” என்று பதில் வரும்.

 ஆம். நமது சொத்துக்களையும் பத்திரங்களையும் விலை உயர்ந்ததாக நாம் கருதுபவையையும் பத்திரமாகப் பாதுகாப்பது கோத்ரெஜ் நிறுவனத்தின் தயாரிப்புகளே.

இதை நிறுவியவர் வணிக நிறுவனத்தில் உயர்ந்த நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உயரிய கோட்ப்பாட்டைக் கொண்ட சிறந்த தேசபக்தி கொண்ட தேசபக்தரான அர்தேஷிர் கோத்ரெஜ் ஆவார்.

பிறப்பும் இளமையும்

 பாரம்பரியம் மிக்க பார்ஸி குடும்பத்தில் 1868-ம் ஆண்டு புரியோர்ஜிக்கும் தோஷிபாய் கூத்தராஜிக்கும் ஆறு குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தார் அர்தேஷிர் கோத்ரெஜ். அவரது தந்தையார் வீடு, நில உடைமைகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

1871-ல் அவர் குடும்பப் பெயரை கோத்ரெஜ் என்று மாற்றிக் கொண்டார்.

 திருமணமும் பேரிழப்பும்

1890-ல் பதினெட்டே வயதான ஆர்தேஷிருக்கும் பச்சுபாய் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்தைத் தொடர்ந்து ஒரு பெரிய சோக நிகழ்வு அவர் வாழ்வில் நடைபெற்றது.

 1891, ஏப்ரல் மாதம் 25-ம் நாள் பச்சுபாயும் அவரது நெருங்கிய உறவினரான பிரோஜ்பாய் ஷொராப்ஜி கம்டினும் ராஜாபாய் கோபுரத்தில் ஏறிப் பார்ப்பது என்று தீர்மானித்தனர். அந்த கோபுரம் 279 அடி உயரம் கொண்ட பெரிய கோபுரம். அதில் இருவரும் ஏறி உச்சிக்குச் சென்ற போது இரண்டு பொல்லாத போக்கிரிகள் அழகிகளான அவர்களை அணுகி தவறாக நடக்க முயற்சித்தனர்.

உடனே இருவரும் அந்த கோபுரத்திலிருந்து கீழே குதித்தனர். மரணமடைந்தனர்.

இது பெரிய அதிர்ச்சியையும் இழப்பையும் அர்தேஷிர் கோத்ரெஜுக்குத் தந்தது.

தன் வாழ்நாள் முழுவதும் அவர் மறுமணம் செய்து கொள்ளவே இல்லை.

 வக்கீல் படிப்பு

1894-ல் வக்கீல் படிப்பை முடித்த அவருக்கு நல்ல கேஸ்கள் வந்தன. ஜான்ஜிபாரில் ஒருவருக்கு வக்காலத்து வாங்க ஒத்துக்கொண்ட கோத்ரெஜ் அந்த கேஸில் உண்மைக்கு அல்லாதவற்றைச் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார். இது அவருக்குப் பிடிக்கவில்லை. தனது மனசாட்சியின் படி நடந்து கொள்ளத் தீர்மானித்த அவர் கேஸிலிருந்து விலகினார். “கேஸில் எனது பக்கத்தை மட்டும் நான் பார்க்கவில்லை, இரண்டு பக்க உண்மைகளையும் பார்த்தேன், விலகினேன்” என்று பின்னால் அவர் கூறினார்.

 மருந்து தயாரிப்புகள்

அடுத்து என்ன செய்வது?

மெர்வான்ஜி முன்செஞ்சர்ஜி என்பவர் ஒரு சிறந்த வணிகர். அவரிடம் சென்ற கோத்ரெஜ்  தொழில் தொடங்க 3000ரூபாய் கடனாகக் கேட்டார். இதனால் வியந்து போன அவர் எதற்காக என்று கேட்டார். சர்ஜிகல் கருவிகள் செய்வதற்காக என்று பதில் வந்தது.

“இதை உங்கள் தந்தையாரே சந்தோஷமாகத் தருவாரே, என்னிடம் எதற்கு வர வேண்டும்” என்று வியப்புடன் அவர் கேட்டார்.

 “என் தந்தையாரிடம் நான் கேட்டால் அவர் அதை இனாமாகத் தந்து விடுவார். எனக்குத் திருப்பிக் கொடுக்கும்படியான கடன் தான் வேண்டும்” என்றார் கோத்ரெஜ்..

மனம் மகிழ்ந்த மெர்வான்ஜி 3000 ரூபாயைக் கொடுத்தார். மருத்துவக் கருவிகளைத் தயாரிக்க ஆரம்பித்தார் கோத்ரெஜ். தயாரிப்புகள் தரத்துடன் பிரமாதமாக அமைந்தன. அவர் தான் வேலை பார்த்த கம்பெனி உரிமையாளரிடம் அவற்றைக் காட்டவே அவர் பிரமித்தார். ஆனால் அவர், “இதை ‘மேட் இன் இண்டியா’ என்று போடக் கூடாது என்று நிபந்தனை விதித்தார்.

இதை உடனே மறுத்த தேசபக்தரான கோத்ரெஜ் இந்தத் தொழிலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார்.

 அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் அவர் ஆழ்ந்தார்.

போலீஸ் கமிஷனரின் அறிவிப்பு

 அப்போது பம்பாய் போலீஸ் கமிஷனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.  ஏராளமான வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருட்டுப் போகின்றன. நல்ல பாதுகாப்பை அளிக்க அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்பதே அவர் அறிவிப்பு.

சிந்தனையில் ஆழ்ந்தார் கோத்ரெஜ்.

 நேராக மெர்வான்ஜியிடம் சென்றார். தனக்கு நல்ல பாதுகாப்பான பூட்டைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருப்பதாகக் கூறினார்.

‘இதற்கு முன்னர் யாருமே பூட்டு செய்யவில்லையா என்ன?’ என்று கேட்டார் மெர்வான்ஜி.

அதற்கு பதிலாக, “நான் சிறந்த நல்ல பூட்டைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார் அவர்.

உடனே தேவையான பண உதவியைச் செய்தார் மெர்வான்ஜி.

215 சதுர அடியே கொண்ட ஒரு சிறிய ஷெட்டில் தன் தொழிற்சாலையை ஆரம்பித்தார் கோத்ரெஜ்.

\மிகுந்த உழைப்பின் பேரில் தினசரி ஆராய்ச்சி செய்து யாரும் திறக்க முடியாத நான்கு லீவர் கொண்ட பூட்டு ஒன்றை அவர் தயாரித்தார்.

சந்தையில் அது நல்ல வரவேற்பைப் பெற்றது. உடனே அடுத்தபடியாக இரண்டு சாவிகள் கொண்ட ஒரு பூட்டைத் தயாரித்த அவர் இரண்டாவது சாவி தேவையான மாற்றங்களை பூட்டின் உள்ளே செய்யக் கூடிய வகையில் புதுமையாக வடிவமைப்பைச் செய்தார்.

 இதைத் தொடர்ந்து யாருமே எளிதில் திறக்க முடியாத பாதுகாப்பைக் கொண்ட பல வடிவமைப்புகளைக் கொண்ட பூட்டுகளை அவர் தயாரிக்க ஆரம்பித்தார்,

ஒவ்வொரு பூட்டுக்கும் ஒரு சிறப்பான பெயர் சூட்டப்பட்டது. ஒன்றின் பெயர் கார்டியன் லாக். இன்னொன்றின் பெயர் டிடெக்டர் லாக்.

 நிறுவனம் படிப்படியாக உயர்ந்தது. பலர் வேலையில் அமர்த்தப்பட்டனர்

to be continued…………………………………..

More Secrets from Vishnu Sahasranama! – Part 1 (Post.13,196)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,196

Date uploaded in London – –   1 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

I wrote three research articles on VS here from 2012. This is the fourth one.

Sahasra means 1000; praising God with 1008 names is unique to Hinduism. It has been there for more than 2000 years ; this we know from Tamil references to 1000 names very often in its literature. The very word 1000 occurs many times in the Rig Veda, the oldest book in the world. Because of Hindus’ discovery of ZERO and decimal system, we are able to launch space shuttles and satellites ; without Hindu numerals no country in the world could have achieved anything.

Tamil word for 1000, AAYIRAM, also came from Sanskrit SAHASRA, according to all linguists.

Vishnu Sahasranaama (V.S.) is the oldest available sahasranaama; later other sahasranaamams were composed.

In V.S. we find Botany, Big Bang Theory, Number Symbolism, History, Zoology, Invention of Flags, Stars, Mysterious Soma plant, Medicine, Magical cures, Sound Effect, Concept of Time, Metals, Linguistics (Metaphors, similes), colours, names of all Hindu Gods etc.

If one reads Adi Shankara’s commentary on V.S, one could discover more wonders.

Tamil Veda Tirukkural echoes many points found in VS.

Tamil Tirumanthiram (3000 hymns) followed it in many places.

xxxx

BIG BANG THEORY

The big bang is how astronomers explain the way the universe began. It is the idea that the universe began as just a single point, then expanded and stretched to grow as large as it is right now—and it is still stretching!

How long did all of this take? Well, we now know that the universe is 13,800,000,000 years old—that’s 13.8 billion. That is a very long time.

When the universe began, it was just hot, tiny particles mixed with light and energy. It was nothing like what we see now. As everything expanded and took up more space, it cooled down.

The tiny particles grouped together. They formed atoms. Then those atoms grouped together. Over lots of time, atoms came together to form stars and galaxies.

The first stars created bigger atoms and groups of atoms. That led to more stars being born. At the same time, galaxies were crashing and grouping together. As new stars were being born and dying, then things like asteroids, comets, planets, and black holes formed!

The above piece of information is from NASA.

xxxx

My comments

All the above words are found in VS or its ancient commentaries.

No encyclopaedias say WHY it happened. Only VS gives the answer.

1.ATMA YONI, and  2.SWAYAM JATO in VS.

Adi Shankara explains,

Aatmayonih – one who is the source of all; that is there is no material cause other than Himself for the universe.

Swayaam – jaatah- He is also the Instrumental cause. Shankara quotes Brahma Sutra 1-4-39. This Sutra (formula) establishes that Sri Hari Himself is the material and instrumental cause of the world.

Now let us forget Hari and look at it.

Hindus were the first to think about How the Universe began. It is in the Rig Veda, which is at least 4000 years old according to Prof.Wilson (He beats Max Muller in translation).

Rig Veda explains it beautifully in RV. 10-129, 10-121, 10-90 etc. There are thousands of articles on these hymns. We can’t find any such hymn in Sumerian or Egyptian or Mayan or Greek.

One may wonder whether the ancient seers knew the modern meaning of words like Time, Universe, Atom etc, we get the answers from other hymns.

God is described as SAHASRA KOTI YUGADHARINE.

Koti in Hindu mathematics is Ten Million.

One sloka in the appendix Benefits Section of VS described God as He is the one who bears 1000 Ten Million Yugas. Yuga is 432000 years.

Even in Children’s hymns of Hindus we come across SAHASRA KOTI (1000 Ten Millions) as God’s attribute.

In short, no scientist gave the reason for Big Bang; but VS says it is God who did this. Even if you forget Hindu God, Hindus were the one who thought about it and found an answer.

This  is supported by the very first sloka/couplet of VS, which describes  GOD as beyond Time.

BHUTA, BHAVYA, BHAVAT Prabuh.

The Meaning  He is The Master of the Past, Future and Present. As He is beyond the sway of Time in its three aspects, He is eternal being, and that His Majesty is undecaying.

Vedas said that he is Kaalathrayaathetah- Beyond Time

Wo in the world thought about Time other than Hindus?

We see past,  present,  future (tenses) only in grammar books of other cultures.

(in my other articles, I have shown that Hindus believed in Time Travel which showed Einstein is only part right).

xxxx

My Old Articles on VS

Secrets of Vishnu Sahasranama (July 13, 2012)

xxxx

INFLUENCE OF VISHNU SAHASRANAMA ON WORLD HISTORY (Post No.7372)22 December 2019

xxxx

Three Books on a ‘Deity with a Thousand Names’: Vishnu Sahasranama (17 April 2015)

xxxx

Vishnu Seal in Indus Valley Civilization (October 9, 2011)

To be continued…………………….

Tags- More secrets, Vishnu Sahasranama, Big Bang Theory, Concept of Time