1.தீபாவளிக்கும் எந்த அசுரனுக்கும் தொடர்பு படுத்தும் கதை உள்ளது? அவன் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் ? அவனைக் கொன்றது யார்?
XXX
2.தீபாவளியை சமண மதத் த்தினர் ஏன் கொண்டாடுகிறார்கள்?
XXX
3.தீபாவளி அன்று கங்கா ஸ்னானம் ஆச்சா என்று கேட்பது ஏன் ?
XXX
4. தீபாவளியை சீக்கியர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் ?
xxxx
5.தீபாவளி என்பதைப் பேச்சு வழக்கில் DIWALI திவாளி என்பர். இந்தச் சொல்லின் பொருள் என்ன ?
xxx
6.தீபாவளி அன்று காசியில் என்ன விசேஷம்?
xxx
7.தீபாவளி மருந்து என்றால் என்ன ?
xxxx
8.அன்ன கூட விழா என்றால் என்ன ?
XXX
9.அயோத்திக்கும் தீபாவளிக்கும் என்ன தொடர்பு?
XXXX
10.குஜராத்தில் எத்தனை நாட்களுக்கு தீபாவளி கொண்டாடப்படுகிறது?
XXX
ANSWERS
1.தீபாவளிக்கும் நரகாசுரன் என்ற அசுரனுக்கும் தொடர்புள்ள கதை தென்னாட்டில் வழங்கி வருகிறது. அவனை ,கிருஷ்ண பரமாத்மா கொன்றார். காம ரூபத்திலுள்ள ப்ரகஜோதிஷ நகரிலிருந்து அவன் ஆண்டான். இப்போது அதை அருணாசல பிரதேசம் அஸ்ஸாம் என்று பிரித்துள்ளோம்.
XXX
2.சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர்; அவர் முக்தி அடைந்தது தீபாவளி தினத்தில்தான். மேலும் சமணர்களின் ஆண்டு நிறைவடைவதும் அன்றுதான்.
xxxx
3.நரகாசுரனின் தாயின் வேண்டுகோளின்படி அன்று எந்த நீரில் குளித்தாலும் அதில் கங்கை பிரவேசிக்கிறாள்; ஆகையால் கங்கை யில் குளித்து விட்டீ ர்களா என்று கேட்பது சம்பிரதாயம்
XXXX
4.சீக்கிய மதத்தின் ஆறாவது குரு ஹரி கோவிந்த சிங்; அவரை ஜஹாங்கீர் சிறை வைத்தியிருந்தான்.தீ பாவளி தினத்தன்று அவரையும் 52 சீக்கியர்களையும் அவன் விடுதலை செய்தான். அவர் திரும்பி வந்ததைக் கொண்டாட அன்றைய தினம் சீக்கியர்களும் விளக்கு ஏற்றி பட்டாசு வெடித்தனர். இன்றும் அவ்வாறே கொண்டாடுகின்றனர்.
.xxx
5.தீப +ஆவலி / ஆவளி என்றால் விளக்கு வரிசை என்று பொருள்; அன்றைய தினம் வட இந்தியாவில் , கார்த்திகை அன்று தமிழர்கள் விளக்கு ஏற்றுவது போல விளக்கு ஏற்றுவார்கள் .
xxxx
6.அன்று அன்னபூரணியின் தங்க விக்ரகம் தரிசனத்துக்கு வைக்கப்படும். மற்ற நாட்களில் அது, ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. .xxx
7.தீபாவளி அன்று பலவகை பலகாரங்களையும் இனிப்புகளையும் சாப்பிடுவதால் வயிற்றுக்கு கோளாறு, அஜீரணம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஜீரண சக்தியை அதிகரிக்க, தீபாவளி மருந்து என்னும் ஸ்பெஷல் லேகியத்தை அன்று உண்ணுவது வழக்கம்; அது அரிசித் திப்பிலி, கண்ட ந் திப்பிலி , சுக்கு, ஜீரகம், வெல்லம், மிளகு, கிராம்பு, ஓமம், தேன் , வெண்ணெய் ஆகியவற்றால் ஆகிய லேகியம் ஆகும்;. அதை ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிடுவார்கள் . அது சாப்பிட ருசியாக இருக்கும்.
XXXX
8.தீபாவளியின் நாலாவது நாளன்று கிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிக்க ஏராளமான இனிப்புகளையும் பல காரங்களையும் கோவிலில் வந்து மலைபோலக் குவிப்பார்கள்.அன்றுதான் பெரிய மழையிலிருந்து இடைச் சிறுவர்களை கிருஷ்ணன்,காப்பாற்றினான். கோவர்த்தன மலையைக் குட்டையாகப் பிடித்து தோழர்களைக் காப்பாற்றியதால் அந்த நாளுக்கு கோவர்த்தன பூஜை என்று பெயர்.
XXXX
9.ராம பிரான், இலங்கையில் ராவணனனைக் கொன்றுவிட்டு அன்று அயோத்திக்குத் திரும்பியதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆகையால் அன்று அயோத்தியில் உலகம் வியக்கும் எண்ணிக்கையில் தீபங்களை ஏற்றி வழி படுவர்.
XXXX
10. குஜராத்தில் ஐந்து நாட்களுக்குத் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் .தீபாவளிக்கு முன்னரே இந்தப் பண்டிகை துவங்கிவிடுகிறது. உணவு வகைக்களை தயாரிப்பார்கள். பசுக்களை வழிபடுவார்கள்;பழைய கணக்குகளை முடித்து புதுக்கணக்கு துவங்குவர். லெட்சுமி பூஜை செய்வார்கள் . காளி பூஜை, அனுமான் வழிபாடு நடக்கும் ; அன்ன கூட விழா ஆகியனவும் நடைபெறும். கேரளத்தில் ஓணம் பண்டிகையின்போது மகாபலியை வரவேற்பது போல வரவேற்பார்கள் ; மலையாளிகள் போலவே கிராமப்புறங்களில் புலி வேஷம் போட்டு ஆடுவார்கள் பட்டாசு வெடித்தல், விளக்கு ஏற்றுதல், அந்தக் கரியில் கண்ணுக்கு மை தயாரித்தல், இனிப்புகளைப் பரிமாறிக்கொள்ளல் , புத்தாடை அணிதல் எல்லாம் நடக்கும்; புத்தாண்டு வாழ்த்தும் தெரிவிப்பார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஓணம் , பொங்கல், புத்தாண்டு தினம், அன்னாபிஷேகம், தீபாவளி ஆகிய அனைத்தையும் 5 அல்லது 6 நாட்களில் கொண்டாடிவிடுவார்கள்.
மகாராஷ்டிரம், கர்நாடகம், இலங்கை ஆகிய இடங்களில் உள்ள 108 கோவில்கள் பற்றி மூன்று புஸ்தகங்களை எழுதி முடித்துவிட்டேன். இப்பொழுது, இந்தத் தீபாவளித் திருநாளில் (12-11-2023), காலடி ஆதிசங்கரனையும், குருவாயூரில் குடிகொண்ட கிருஷ்ணனையும், உலகிலேயே பிரம்மாண்ட பொக்கிஷமுள்ள திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியையையும் திருச்சூர் வடக்கு நாதனையும், , செங்கானூர் பகவதியையும் , கொட்டாரக்கரை கணபதியையும், சபரிமலை சாஸ்தாவையும் வணங்கி கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற இந்து ஆலயங்கள் பற்றி எழுதத் துவங்குகிறேன் ; இதை முடித்தவுடன் ஆந்திர மாநில கோவில்களையும் தரிசிப்போம்
கேரளம் என்று சொன்னவுடன் சபரிமலையும் , குருவாயூரப்பனும் , திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியும், பல பகவதி அம்மன் கோவில்களும் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் . ஆயினும் வெளி மாநிலங்களில் மிகவும் பிரசித்தமாகாத நூற்றுக்கும் மேலான கோவில்கள் இருக்கின்றன. பட்டியலைப் பார்த்தால் நன்றாகப் புரியும் முதலில் முக்கியக் கோவில்களை எடுத்துக்கொள்வோம்.
கேரளத்தில் உள்ள பாடல்பெற்ற தலங்கள்
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் கேரள வைணவ ஸ்தலங்கள் பற்றிக் கூறுவதை படியுங்கள் :–
“108 வைணவத் திருத்தலங்களில் 11 தலங்கள் கேரளத்தில் இருக்கின்றன. நம்மாழ்வார் பாடல்பெற்ற தலம் திருவட்டாறு. அவருடைய அன்னை பிறந்த ஊர் திருவெண்பரிசாரம். இவை அன்றைய கேரளமாகிய (தற்போதைய ) குமரிமாவட்டத்தில் உள்ளன.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxxx
மாலைமலர் தீபாவளித் திருநாள் சிறப்புக் கட்டுரை. 10-11-23 அன்று வெளியான கட்டுரை இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
இதுபோல் ஏதொரு நாள் புவி மேலே!
(இரண்டாம் பகுதி)
ச.நாகராஜன்
வாரணாசியிலோ (காசி) கங்கா ஆரத்தி என்ற பெயரில் கங்கை நீரில் தீப வழிபாடு நடக்கிறது. ஆயிரக்கணக்கில் தீபங்கள் கங்கா நதியில் ஜொலிக்க தூய்மையான கங்கை நீர் அனைவருக்கும் வளத்தையும் நலத்தையும் தூய்மையையும் அளிக்கிறது.
சிந்தி சமூகத்தினரோ சோடீ தீபாவளி என்ற பெயரில் தீபாவளிக்கு முதல் நாளே அகல் விளக்குகளை ஏற்றி மகிழ்கின்றனர்.
ஒரிஸாவில் கார்த்திகை பூர்ணிமா என்ற பெயரில் சிவ-பார்வதி வழிபாடு நடைபெறுகிறது.
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் ‘மோக்ரா மாதா சேவா’ என்ற பெயரில் மல்லிகை மலர்மாலைகள் தேவிக்குச் சூட்டப்படுகின்றன.
கோவாவில் நரகாசுர ராத்ரி என்ற பெயரில் நரகாசுரனின் பெரிய அளவு உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு மறம் அழிந்து அறம் ஓங்க மகிழ்ச்சி பொங்குவதைச் சுட்டிக்காட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கோவா உள்ளிட்ட பல பகுதிகளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்குத் திலகமிட்டு ஆரத்தி எடுத்து தங்கள் நலத்தையும் பாதுகாப்பையும் கோரும் விழாவாக இது அமைகிறது.
வங்கத்தில் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு காளி வழிபாடு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
பல நாடுகளிலும் தீபாவளி
இந்திய நாகரிகத்தின் உச்ச கட்ட பண்டிகையாக அமையும் இது, பல நாடுகளிலும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுவது, தீபாவளியின் இன்னொரு சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது.
நேபாளத்தில் திஹார் என்ற பெயரில் இது கொண்டாடப்படுவதோடு, பசுக்கள் உள்ளிட்ட அனைத்து விலங்கு மற்றும் பறவைகளை வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் நேபாள மக்கள்.
இந்தியாவில் இது தேசிய விடுமுறை தினம் என்பது போல டிரினிடா & டுபாகோ, மயன்மார், மரிஷியஸ், கயானா, சுரிநாம், நேபாளம், மலாசியா, சிங்கப்பூர், ஶ்ரீ லங்கா, பிஜி உள்ளிட்ட 12 நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அமைகிறது. மக்கள் உற்சாகமாக தீபாவளியை இங்கு கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானிலோ இது விருப்பத் தேர்வு விடுமுறை தினம்!
இங்கிலாந்து பிரதமர் இங்கிலாந்திலும் அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்காவிலும் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடியதும் மேற்கத்திய லீசெஸ்டர் நகரம் வண்ண விளக்குமயமாக தீபாவளி அலங்காரம் செய்யப்படுவதும் உலகளாவிய பண்டிகை இது என்பதற்கான சான்றுகளாகும்.
சிவகாசியின் சிறப்பு
தீபாவளி அன்று வெடி வெடித்து மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெடியைத் தயாரிக்க ஏற்படும் அதிகத் தயாரிப்புச் செலவினால் செல்வந்தர்கள், பிரபுக்கள், அரசர்கள் ஆகியோரால் மட்டுமே வெடி வெடிக்க முடிந்தது. ஆனால் இதை அனைவரும் கொண்டாட வழி வகை செய்ய முன்வந்தது தமிழகத்தில் உள்ள சிவகாசி. விதவிதமான பட்டாஸ் வகைகள் மிக மலிவான விலையில் அளிக்கப்படவே உலகெங்குமுள்ள மக்கள் சிவகாசி வெடிகளை வாங்கி வெடித்து வருகின்றனர். இன்று நமது நாட்டில் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமான அளவில் அனைவரது எதிர்பார்ப்பையும் தேவையையும் பூர்த்தி செய்கிறது சிவகாசி என்பதால் தமிழகம் தீபாவளி வணிகத்தில் தனி இடத்தைப் பெறுகிறது.
இசைக் கலைஞர்கள் புது வித மெட்டுகளில் இசைப் பாடல்களை வெளியிட தீபாவளி ரிலீஸ் என்று மிகுந்த எதிர்பார்ப்பைத் தரும் சிறந்த கலைஞர்களின் திரைப்படங்கள் தியேட்டர்களை அலங்கரிக்க ரசிகர்கள் அங்கு முற்றுகை இடும் நாளாகவும் இது அமைகிறது. ஓவியர்கள் தீபாவளியை மையப்படுத்தி ஏராளமான ஓவியங்களை வெளியிடும் நாளும் இதுவே தான்.
பத்திரிகைகளோ தீபாவளி மலர்களை வெளியிட்டு வாசகர்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன!
பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான உற்சாகப் பண்டிகை இது. ரங்கோலி கோலங்கள் வண்ண மயமாக வீடுதோறும் திகழ, புதிய பட்டாடைகள், விதவிதமான டிஸைன் துணிகள் என குழந்தைகளை அலங்கரிக்க இனிப்பு வகைகள் ஏராளமாக விதவிதமாகக் கிடைக்க இதுபோல் ஒரு பண்டிகை இன்னொன்று இல்லை என்ற பெயரைப் பெற்று முதலிடத்தை வகிக்கிறது தீபாவளி.
பாரதியாரின் தேசபக்தியூட்டும் தீபாவளிக் கட்டுரை
பாரதியார் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-இல் அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக தீபாவளி நன்னாள் பற்றி மகாகவி பாரதியார் குறிப்பிடுகிறார் இப்படி;-
“நம் நேயர்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம். சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவர்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம்
தற்காலத்திலே இந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்று போய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை.
நமது நாட்டைப் பற்றிய நரகாசுரன் இறந்து போய்விட்டான். பகவானுடைய சக்தியும் எல்லா ஐசுவரியங்களுக்கும் ஆதாரமும் ஆகிய லட்சுமிதேவி நம்மீது கருணை கொண்டவளாகி நரகாசுரனை வதைத்துவிட்டாள்.
நாமெல்லோரும் அது பற்றிச் சந்தோஷமடைந்து மங்கள ஸ்நானம் செய்து, நல்லாடைகள் புனைந்து ஆனந்தவசமாகி இருக்கின்றோம்.
ஆனால் சிறுகுழந்தைகளைப் போல் விளையாட்டுக்கு ஸ்நானம் செய்தும், தீபங்கள் கொளுத்தியும் சும்மா இருந்துவிடாமல் நாம் செய்யும் செய்கையினது பொருளை நன்றாக அறிந்து காரியங்கள் செய்ய வேண்டும்.”
இதைத் தொடர்ந்து “தீபாவளி தினத்திலே கூட அந்நியத் துணிகளை வாங்கும் ஈஸ்வர துரோகிகளை” கண்டித்து தேசபக்தியை ஊட்டி ‘வந்தேமாதரம்’ என்று முடிக்கிறார் அவர் தனது தீபாவளி தலையங்கத்தை!
வாழ்த்துக்கள்
இந்த நன்னாளில் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்
ஆயுள், ஆரோக்கியம், செல்வ வளம், மன திருப்தி, குடும்ப ஒற்றுமை, தைரியம், வீரம், மறத்தை ஒழித்து அறத்தை வெல்லச் செய்யும் வலிமை,உற்சாகம், சமுதாய மேன்மை ஆகியவற்றைப் பெறச் செய்யும் தீபாவளி நன்னாளில் அனைவரும் அனைத்து நலன்களையும் பெற மாலைமலருடன் இணைந்து அனைவரையும் வாழ்த்துகிறேன்.
47. O Eminent cloud! Who does not know that you are the sole life-support of the Chataka birds? Why then do you wait for our pitiful entreaties?
ஓடும் மேகங்களே! சாதகப் பறவைகளுக்கு ஆதாரமாக இருப்பது நீ ஒன்றுதான் என்பது எல்லோருக்கும் தெரியும்.அப்படியிருந்தும் எங்கள் தாக்கத்தைத் தணிக்க மழை கொட்டட்டும் என்று நாங்கள் வேண்டவும் தேவையா ?
48. O Chataka, my friend! Listen attentively for a moment. There are many clouds in the sky, yet not all of them are such (worthy of asking). Some drench the earth with showers, some simply roar in vain. Do not utter pitiful words before everyone you see.
ஓஒ சாதகப்பறவையே ! கத்தித் தீர்ப்பதை நிறுத்திவிட்டு நான் சொல்வதைக் கேள் வானத்தில் எவ்வளவ் மேகங்கள் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் ஒன்றேயல்ல சில மேகங்கள் பூமி முழுதும் நனையுமாறு கொட்டித்தீர்க்கின்றன. இன்னும் சில வெற்று இடியோசை செய்துவிட்டு ஒரு சொட்டுத் தண்ணீர் விடாமல் போய்விடும். ஆகையால் நண்பனே! நீ எல்லா மேகங்களுக்கு முன்பாக வும் தண்ணீருக்காக கூவாதே
சாதகப் பறவை வானத்தில் பற ந்தவாறே மழை நீரை மட்டுமே உண்ணும் என்பது ஸம்ஸ்க்ருத , தமிழ் செய்யுட்களில் வரும் விஷயம் ஆகும். இங்கே பர்த்ரு ஹரி இரண்டு விஷயங்களை நம் முன் வைக்கிறார்.
உண்மையான கொடையாளி, ஒ ருவன் கேட்கும் வரை காத்திருக்கத் தேவை இல்லை; வறுமை உள்ளவனுக்கு வாரி வழ ங்குவது அவன் கடமை;
இரண்டாவது பாடலில் கொடாதோரை இடித்துரைக்கிறார். சிலர் வெறும் வாய்ச் சவடால் அடிப்பார்கள்; பைசா காசு கூட கொடுக்கமாட்டார்கள்; இன்னும் சிலர் கர்ணன் போல, பாரி போல அனைத்தையும் கொடுப்பார்கள்
49. Ignorance is ascribed to a modest man, deceit in an austere man, hypocrisy to a pure man, ruthlessness to a brave one and lack of intelligence to an ascetic. Poverty or need is attributed to one who speaks sweetly, arrogance to a powerful one, garrulity to an eloquent speaker and incompetence to a strong, calm man. Which virtue of good people is not maligned by the wicked?
அடக்கமாக இருப்பவனுக்கு ஒன்றுமே தெரியாதவன் எளிமையாக இருப்பவனுக்கு அகந்தைப் பேர்வழி , தூயவனுக்கு கபட வேஷதாரி கருணையே இல்லாதவனுக்கு துணிச்சல்காரன் அறிவே இல்லாதவனுக்கு ஞானி என்ற பெயரை தீயோர் சூட்டுவர்; இனிமையாகப் பேசினால் ஏதோ எதிர்பார்க்கிறான் என்றும் வீரா ப்புடன் பேசினால் திமிறு பிடித்தவன் என்றும் நன்றாகப் பேசினால் வாயாடி என்றும் அமைதியாக இருந்தால் கையாலாகாதவன் என்றும் கெட்டவர்கள் சொல்லுவார்கள். அவர்கள் திட்டாத ஆளும் உண்டோ !
Before continuing with C S Navartnam’s pages to show Brahmin’s role in Sri Lanka, I want to add what Mudaliyar C Rasanayagam says in his book ANCIENT JAFFNA (Year 1926).
He says that Arya Chakravarti Dynasty which ruled Northern Sri Lanka for 400 years had Brahminical origin. They were the one who established Hindu Samrajya in Sri Lanka like Shivaji in India. But the great Vijayanagara Hindu Empire and Veera Sivaji’s Hindu Samrajya wiped out Muslim invaders; in Sri Lanka it was quite opposite; Portuguese, Dutch (Holland) and British demolished all Hindu Temples and converted a lot of Hindus after killing the last Arya Chakravarti. They were Christian fanatics. Then Hindu Renaissance happened in the nineteenth century and Saivite saint Arumuga Navalar and Tamil Nagarathar Chettiyars helped to re construct Hindu temples.
Arya Chakravarti has two Sanskrit words. This Arya has nothing to do with the wrong interpretation of Max Muller gang. They said that Aryans came from outside India. But Tamil and Sanskrit scriptures never gave an ethnic connotation to the word or attributed outside origin. They used ARYA for Himalayan saints, speakers of refined language, and civilized and cultured people in general.
Rasanayagam says there was another Malava Chakravarti as commander and this Arya Chakravarti was a minister cum commander in Rameswaram. At that time, that is 800 years ago, Rameswaram was under Sri Lankan kings. Interpreting an inscription at Tiruppullani near Rameswaram, he said that this Arya Chakravarti married a Kalinga princess living in Jaffna. His descendants were called Arya Chakravarti and he used both her and his royal titles and symbols. Singai Aryan or a handicapped king known as Koolangai Chakravarti was the first king.
First let me give Rasanayakam’s page and then continue with Navaratnam pages:
சிவாஜி மஹராஜ், இந்தியாவில் ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவியது போல இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்து ஆட்சியை நிறுவியவர்கள் ஆரிய சக்கரவர்த்திகள்; 400 ஆண்டுகளுக்குக் கொடி கட்டிப் பறந்தார்கள் . போர்ச்சுகீசிய , டச்சு (ஹாலந்து நாடு), பிரிட்டிஷ் பறங்கியர்கள்கள் இலங்கையை ஆக்ரமித்து இந்து மதத்தை எள்ளி நகையாடும் வரை, ஆரிய சக்கரவர்த்திகள் இடிபட்ட 500 கோவில்களையும் புனர் நிர்மாணித்தார்கள் . இந்த சக்ரவர்த்திகளின் தோற்றம் பிராமண தொடர்புடையது. இவர்கள் ராமேஸ்வர பகுதியிலிருந்து வந்தவர்கள். முதல் சக்ரவர்த்தி 50 சதவிகித பிராமணன்; ராவணனைப் போல 50 சதவிகித பிராமணன்.
ஆரிய சக்ரவர்த்தி என்று ஏன் பெயர் வைத்துக் கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய வேண்டும். இரண்டு ஸம்ஸ்க்ருதச் சொற்களும் இந்திய மன்னர்களின் பெயர்களில் கூட கிடையாது. ஆரிய என்றால் இனம் அல்ல.பண்பாட்டின் உயர்மட்டத்தை அடைந்தவர்கள் என்று பொருள். அதாவது ஆங்கிலத்தில் CIVILIZED சிவிலைஸ்டு, CULTURED கல்ச்சர்ட் என்று சொல்லுவார்கள்; மாக்ஸ்முல்லர் கும்பல் இதை மாற்றி இவர்கள் இந்தியாவுக்கு வெளியே உள்ள பல நாடுகளைக்காட்டி அங்கிருந்து வந்தவர்கள் என்று சொல்லி வரலாற்றையே தலைகீழாக மாற்றியது. இந்திய பூமியில் உதித்து ஈரான் வரை சென்றவர்கள் ஆரியர்கள் என்பதை பாரசீக மதத்தினரின் வேத புஸ்தகம் ZEND AVESTA சென்ட் அவஸ்தா காட்டுகிறது
யாழ்ப்பாண ஆரிய சக்ரவர்த்திகளுக்கும் பாண்டியர்களுக்கும் உள்ள தொடர்பில் எவருக்கும் சந்தேகம் இல்லை; யாழ்ப்பாண சக்கரவர்த்திகள் முதலாமவர் சேதுக்கரை என்னும் ராமேஸ்வரம் , திருப்புல்லாணிப் பகுதியி லிருந்து வந்தவர்கள் என்பதிலும் ஐயப்பாடு இல்லை. யாழ்ப்பாண மன்னர்களே ராமேஸ்வரம், திருப்புல்லாணியில் செய்த கோவில் திருப்பணிகளையும் அவ்விரு இடங்களில் உள்ள கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. முதலாவது ஆரிய சக்ரவர்த்தி பிராமண க்ஷத்ரியருக்கும் பிறந்தவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர் .
யாராவது ஒரு மன்னனுக்கு அங்கஹீனம் இருந்தால், அதை வைத்தே மக்கள் அவனை அடையாளம் காண்பர்; நின்ற சீர் நெடுமாறன் முதலில் கூன் பாண்டியனாக இருந்தான்; அவனை மஹேந்திர பல்லவன் காலத்தில் வாழ்ந்த சின்னப்பையன் விபூதி தடவி வழுதி கூனை நிமிர்த்தினான். அந்தச் சின்னப்பையன் திருஞான சம்பந்தன் இல்லாவிடில் இந்தியாவிலும் இலங்கையிலும் சைவ சமயம் இருந்திராது. அவனுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் , கீரந்தை என்னும் பிராமணன் வீட்டைக் காப்பதற்காக தனது கையையே வெட்டிக்கொண்டான் . பின்னர் சித்த, ஆயுர் வேத நிபுணர்கள் வந்து அவனுக்கு ஆபரேஷன் செய்து தங்கக் கையைப் பொருத்தினர் . அந்த மன்னன் பெயரே நமக்குத் தெரியாது ஆனால் பொற்கைப் பாண்டியன் என்றால் நமக்கு உடனே தெரியும். அவன் கதை பழைய காப்பியங்களில் வருவதால் அவன் சங்க கால மன்னன் என்று நமக்குத் தெரிகிறது.
இஃதே போல யாழ்ப்பாணத்தை ஆண்ட முதல் மன்னனுக்கு Polio Attack போலியோ தாக்குதல் காரணமாக குறுகிய கை இருந்தது. அவனை கூழங்கை சக்ரவர்த்தி என்று அழைத்தனர்.
சரி, முதல் சக்ரவர்த்தி, ராவணனைப்போல 50 சதவிகித பிராமணன்.
என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ?
முதலியார் சி ராஜநாயகம் புராதன யாழ்ப்பாணம்ANCIENT JAFFNA, MUDAIYAR C. RASANAYAGAM, 1926 என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதில் திருப்புல்லாணி க் கல்வெட்டையும் மஹா வம்சக் குறிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு பின் வருமாறு கூறுகிறார் மாளவ சக்ரவர்த்தி என்பவர் முன்னர் இலங்கையுடன் சண்டையிட்டதையும் குறிப்பிட்டுவிட்டு அவர் சொல்வதாவது–
ராமேஸ்வரத்திலுள்ள ஒரு பிராமணர் யாழ்ப்பாணத்தில் இருந்த கலிங்க வம்சத்து உக்ர சிங்கனின் இளவரசி ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, தந்தை வழி பெயரான ஆர்ய என்பதையும் வைத்துக்கொண்டார் பெண்வழி வம்சப் பெயரான கலிங்கத்தையும் வைத்துக்கொண்டார் என்பது தெரிய வருகிறது . சேது என்ற பெயரையும் கலிங்க வம்ச சின்னங்களையும்( ராஜ முத்திரை ) வைத்துக்கொண்டனர் .
ஆர்ய சக்ரவர்த்தி என்பது ஒரு படைத்தளபதியின் பெயர் ;
மஹாபாரத துரோணர் , அஸ்வத்தாமன் காலத்திலிருந்தே பிராமணர்கள் படைத் தளபதிகளாகவும் இருந்ததை அறிகிறோம். இதனால் முதல் மன்னர் 50 சதவிகித பிராமணர் என்பதில் வியப்பதற்கொன்றுமில்லை.. ஆயினும் ஆட்சி என்று வருகையில் அ வர்கள் க்ஷத்ரியனாகவே (கலிங்க வம்சம்) காட்டிக்கொள்வார்கள்.
உலக வரலாற்றில் சிங்கமே இல்லாத, சிங்கத்தையே பார்த்திராத சிங்கபுரி (சிங்கப்பூர்), இலங்கை, ஈரான் ஆகிய நாடுகளின் கொடி அல்லது சின்னத்தில் சிங்கம் இருப்பதற்குக் காரணம் இந்துக்கள் உலகம் முழுதும் வீறு நடை போட்டதே.
இந்துக்களின் ஆதிக்கம் ஐரோப்பா வரை பரவியதால், சிங்கமே இல்லாத ஐரோப்பாவில் ஜுவலியஸ் சீசர்/CAESAR அகஸ்டஸ் சீசர் என்று சிங்கத்தின் அடைமொழியை சேர்த்து க்கொண்டனர். கேசரி ( கேச + அரி = மயிர் மிருகம் ) என்பதை ரோமன் லிபியில் எழுதுகையில் கேசர்= சீசர் ஆகிவிடும் ; இன்றும் நான் சார்ல்ஸ் CHARLES என்றும் கேரக்டர் CHARACTER என்றும் C சி எழுத்தை மாறி மாறி பயன்படுத்துவது இந்த சி குழப்பத்தால்தான்.
இதை எதற்காக இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்கை நகர், சிங்கை ஆரியன் ஆகிய எல்லாம் இந்தியத் தொடர்புள்ள கலிங்க வம்சம் என்பதைக்காட்டவே.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆரிய சக்கரவர்த்திகள் என்பது பாண்டிய + கலிங்க கலப்பு ரத்தம் உடையவர்கள். மஹா வம்சமும் ஓரிடத்தில் இவர்களில் ஒருவரைக் குறிப்பிடுகையில் ஆரியன் அல்லாத என்ற சொற்றோடரைப் பயன்படுத்தக் காரணம் அந்த இளவரசி யாழ்ப்பாணத்தில் இருந்த கலிங்க வம்ச அரசி என்பதால்தான்.
இவ்வளவையும் படிக்கையில் இலங்கையின் முதல் மன்னனே கலிங்க வம்சத்தவன் எனபதையும் மறந்துவிடக்கூடாது ; கலிங்கம், வங்கம் என்பன அடுத்தடுத்தது உள்ள பிரதேசங்கள்; அவனைக் கப்பல் ஏற்றி நாடு கடத்தி விரட்டிவிட்ட இடம் வாங்க மாநில துறைமுகம்; வங்கம் என்றால் கப்பல்; அது புறப்பட்ட மாநிலத்துக்கே இப்போது வங்கம் என்று ஆகிவிட்டது. பழைய தமிழ் பாடல்களில் வங்கம் என்ற சொல் கப்பல் என்ற பொருளில் பயன் படுத்தப்பட்டுள்ளது கப்பல் கீழைக்கடலை நாம் இன்றும் வங்காள விரிகுடா என்றே அழைக்கிறோம் ; வளைந்த (BANGA/ BEND/ VANTHANA/ VANANGUTHAL are cognate words) எல்லாப் பொருளும் வங்கம் ஆகும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மாலைமலர் தீபாவளித் திருநாள் சிறப்புக் கட்டுரை. 10-11-23 அன்று வெளியான கட்டுரை இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
இதுபோல் ஏதொரு நாள் புவி மேலே!
(முதல் பகுதி)
ச.நாகராஜன்
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே
– தீப ரகசியம் பற்றி திருமூலர் ஏழாம் தந்திரம் – 10
உன்னைக் கண்டு நானாட, என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
உறவாடும் நேரமடா ஆ ஆ ஆ ஆ
உறவாடும் நேரமடா!
-கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
அறம் வெல்லும் திருநாள்
உலகின் பல நாடுகளிலும் இப்போது தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.
அறத்திற்கும் மறத்திற்குமான போரில் அறம் வென்ற நாள் இது.
மலர்ச்சி, மகிழ்ச்சி, நம்பிக்கை, ஒளி, செல்வம், ஆரோக்கியம், ஆயுள், மேன்மை உள்ளிட்ட ஏராளமான நலன்களை தீப ஒளி போல வரிசையாகத் தருவதால் இது தீபாவளி ஆகிறது. தீபம் + ஆவளி = தீப வரிசை)
லட்சுமி தேவி பாற்கடலில் அவதரித்த நாள் இதுவே.
இந்த நன்னாளில் லட்சுமி தேவி சர்வ அலங்காரபூஷிதையாக பூமியில் வருகிறாள். அவளை இல்லந்தோறும் வரவேற்கும் வண்ணம் வீட்டில் இருக்கும் அழுக்குகளையும் குப்பைகளையும் போக்கி, வீட்டை, தீப ஒளி ஏற்றி, பிரகாசமாக வைத்து புத்தாடை புனைந்து தம்மை நன்கு அலங்கரித்துக் கொண்டு பெண்டிரும் ஆண்களும் குழந்தைகளும் வெடி வெடித்து இனிப்பு வழங்கி லட்சுமியை வரவேற்கத் தயாராக இருக்கின்றனர்.
லட்சுமி பூஜை செய்வது இந்த நாளின் சிறப்பு அம்சம்.
ஐந்து தினக் கொண்டாட்டம்
தீபாவளியை ஐந்து தினங்களாக வடக்கே கொண்டாடுகின்றனர்.
முதல் நாள் ‘தன் தேரஸ்’ என்று அழைக்கப்படுகிறது. தன் என்றால் பணம் அல்லது செல்வம் தேரஸ் என்றால் திரயோதசி திதியைக் குறிக்கிறது. செல்வத்தை வரவேற்கத் தயாராகும் நாள் இது. தன்வந்திரி பாற்கடலிலிருந்து வெளிவந்து அவதரித்த தினம்.துளசி செடியின் அருகில் இருந்து யமனை வழிபடும் தினமாக இது அமைகிறது.
அடுத்த நாள் நரக சதுர்தசி. இது கண்ணபிரான் நரகாசுரனை வதம் செய்த நாள்.
அடுத்த நாள் அமாவாசை – தீபாவளித் திருநாள். லட்சுமி பூஜை தினம்.
அதற்கடுத்த நாள் கோவர்தன் பூஜை தினம்.
கடைசியாக பாய் துஜ் என அழைக்கப்படுகிறது. இந்த நாள் யமன் தனது சகோதரியான யமுனையை சென்று பார்த்த நாள். இந்த நாளில் எந்த சகோதரன் தனது சகோதரியைச் சென்று பார்க்கிறானோ அவனுக்கு அனைத்துப் பாவங்களும் போய்விடும் என்று யமன் அனுக்ரஹித்தான்.
குபேர பூஜையை அனைத்து இல்லங்களும் சிறப்பாகச் செய்து செல்வ வளத்தைப் பெற வழி வகுப்பது தீபாவளி பண்டிகை தினங்களே!
நரகாசுரனின் வதமும் இராமன் அயோத்தி திரும்புதலும்
நரகாசுரன் தனது தாயான பூமிதேவி மட்டுமே தனக்கு மரணத்தைத் தர முடியும் என்ற வரத்தை வாங்கிக் கொண்டான். அகங்காரம் தலைக்கு ஏற அட்டகாசம் செய்து அனைவரையும் அவன் கொடுமைப்படுத்த தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் இறைவனை வேண்ட சத்யபாமை பூமிதேவியின் அம்சமாகத் தோன்றி கண்ணபிரானுடன் சென்று அவனுடன் போரிடுகிறாள். நரகன் எய்த அம்பு கண்ணபிரானை மார்பில் தாக்க, சத்யபாமை கண்ணனைக் காப்பாற்றித் தானே நரகாசுரனை வதம் செய்ய உதவுகிறாள். நரகாசுரன் தனது பிழையை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு தான் இறந்த இந்த நாளை புவியில் உள்ளோர் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய நாளாக அமைய வரம் வேண்ட கண்ணன் அப்படியே அருள்கிறான். அதிலிருந்து தீபங்களை ஏற்றி ஒளிமயமாக இந்த நாளை மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
இராமபிரான் இராவணனை வதம் செய்து அயோத்தி மீண்டு அரியணை ஏறிய நாள் தீபாவளி நன்னாளே. ஆகவே நாடு முழுவதும் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அயோத்தியில் பல லட்சம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
பாண்டவர்கள் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய நாள் தீபாவளி என்பதால் மக்கள் அவர்களை தீபங்களை ஏற்றி நகரத்தை ஒளிரச் செய்து வரவேற்றதும் தீபாவளி நன்னாளிலேயே!
விக்ரமாதித்தன் சிம்மாசனம் ஏறி அமர்ந்த நாள் தீபாவளியே.
ஜைன, புத்தம், சீக்கியம் கொண்டாடும் தீபாவளி
ஜைன மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மஹாவீரர் நிர்வாணம் அடைந்த நாள் தீபாவளி தினமே. ஆகவே ஜைனர்கள் இந்த தினத்தை புனித நாளாக அனுஷ்டிப்பதோடு தமது முன்னோர்களையும் இந்த நாளில் நினைவு கூர்கின்றனர்.
முகலாய மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சீக்கிய குருவான குரு ஹர்கோவிந்த சிங் இந்த நாளில் தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆகவே சீக்கியர்கள் இதை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். இதே நாளில் அவருடன் 52 மன்னர்களும் விடுவிக்கப்பட்டனர். ஆகவே அந்தந்த மன்னர் ஆண்ட பிரதேசங்களிலும் இது வழிவழியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கலிங்கத்துப் போரினால் மனம் மாறி அஹிம்சையை வலியுறுத்தும் புத்தமதத்தை அசோகன் தழுவியது இந்த நாளில் தான். ஆகவே புத்தமதத்தினர் இதைக் கொண்டாடுகின்றனர்.
கந்தபுராணத்தின் படி சக்தி தேவியானவள் 21 நாள் விரதம் அனுஷ்டித்து தனது கேதாரகௌரி விரதத்தை முடித்த நாள் இதுவே.
அன்றே சிவபிரான் தேவியை தனது தேகத்தில் பாதியாக ஏற்று அர்த்தநாரீசுவரர் ஆனார். ஆகவே பெண்கள் அனைவரும் இந்த நாளைப் போற்றித் துதிக்கின்றனர்.
விவேகானந்தரால் உத்வேகம் பெற்று கணிதப் பேராசிரியராக இருந்த ஸ்வாமி ராமதீர்த்தர் சந்யாசம் பெற்றது (1899இல்) தீபாவளித் திருநாளிலேயே. இவர் பிறந்ததும் தீபாவளித் திருநாளில் தான் (22-10-1873). ஜலசமாதி அடைந்ததும் ஒரு தீபாவளி நாளில் தான் (17-10-1906)! இப்படி பல மகான்களுடன் தீபாவளி நாளின் அதிசயிக்கத் தக்க தொடர்பு உண்டு!
ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு சிறப்பு அம்சம்
நாட்டில் உள்ள பல பகுதிகளும் இதைப் பலவிதமாகக் கொண்டாடுவது ஒரு வியப்பான சிறப்பான செய்தியாகும்.
தமிழகத்தில் தலையில் எண்ணெய் வைத்து நீராடி வெடிகளை வெடித்து அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களைக் கூறி மகிழ்வது தமிழர் மரபு. அன்று இல்லத்தில் கங்கை வருவதாக ஐதீகம். ஆகவே ‘கங்கா ஸ்நானம் ஆயிற்றா?’ என்று ஒருவரை ஒருவர் விசாரித்து மகிழ்வர்.
கர்நாடகத்தில் நரகாசுரனை கண்ணபிரான் வெற்றி கொண்டதைக் கொண்டாடும் விதமாக நரக சதுர்த்தசி அல்லது சோடி தீபாவளி என்று இது அழைக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.
மஹராஷ்டிரத்தில் வசு பரஸ் என்று அழைக்கப்பட்டு மணமான மங்கையர் பசுக்களையும் கன்றுகளையும் சிறப்பாக இந்த தினத்தில் வழிபடுகின்றனர்.
குஜராத்திலோ ‘சோப்டா பூஜன்’ என்ற பெயரில் எல்லா வணிகர்களும் தங்களது வணிகம் வளமுற இந்த நாளில் சிறப்பு வழிபாடு நிகழ்த்துகின்றனர். புதுக்கணக்கு தொடங்க உகந்த நாள் இது. ஸ்டாக் மார்க்கெட் கூட சிறப்பு வணிகத்தை இந்த நாளில் அறிமுகப்படுத்துகிறது.
“ஒருவனுடைய நெற்றியில் பிரம்மா எழுதிவைத்த அளவே அவனுக்கு செல்வம் கிடைக்கும். அவன் பாலைவனத்தில் வசித்தாலும் இது கிடைக்கும். மேரு மலையில் வசித்தாலும் இதைவிடக் கூடுதலாக எதுவும் கிடைக்காது. ஆகையால் பொறுமையுடன் இரு. பணக்காரர்களிடம் சென்று அடிபணிந்து முகத்துதி செய்யாதே. ஒரு குடத்தைக் கடலில் முக்கினாலும், கிணற்றில் முக்கினாலும் குடத்தின் அளவுக்கே தண்ணீர் கிடைக்கும்”.
44. Whatever is the wealth written on one’s forehead, a little or lots, one will attain that even in a desert, and not more even on the golden mountain, Meru. Therefore, be fearless and do not grovel before the rich. Know that a pitcher takes in the same quantity of water from a well as from the ocean.
கிட்டத்திலுள்ள கிணற்றில் முகத்தாலும்
எட்டி கடலில் எடுத்தாலும் — ஒட்டுநீர்
ஒன்றேயா மேருவினும் ஊழின் படியன்றி
இன்றேயாம் பொன் எண் –44
தலைவிதிப்படியே செல்வம் கிட்டும் என்பதை விளக்க ஒரு கதை, இந்து சமய நூல்களில் உள்ளது:–
வித்யாரண்யர் என்பவர் தென்னாட்டில் துலுக்கர்களின் ஆட்சிக்கு சாவு மணி அடித்த பெரிய மஹான். அவர் இளம் வயதில் செல்வம் வேண்டி தவம் இருந்தார். இவரது தவத்தை மெச்சிய தேவி, அவர் முன் தோன்றி,
அன்பனே! உன் தவத்தை மெச்சுகிறோம் ஆனால் இந்த நற்பிறப்பில் உமக்கு செல்வம் கிடைக்க வழியில்லை. உமது தலைவிதி அப்படி.
ஆயினும் வேறு ஏதாவது ஒரு வரம் கேள்; அதைத் தருகிறேன் என்றாள்.
வித்யாரண்யர் யோசித்தார். தேவியயையே மடக்கி விடுவோம் என்று ஒரு கிடுக்கிப் பிடி போட்டார். நான் ஸந்யாஸம் வாங்கினால் அது அடுத்த பிறவிதானே. இப்போதே ஸந்யாஸி ஆகிறேன். அடுத்த பிறவிக்கான செல்வத்தைக் கொடு என்று கேட்டார்.
தேவியும் சிரித்துக் கொண்டே ‘டன்’ கணக்கில் அவர் முன் தங்கப் பாளங்களை வைத்துவிட்டு மறைந்து விட்டாள்
வித்யாரண்யரோ ஸத்யம் தவறாத மஹா யோகி. ஸந்யாஸம் எடுத்த அடுத்த நிமிடமே அவருக்குப் புரிந்தது; எதிலும் பற்று இருக்கக் கூடாது என்பது.
அடடா! தேவியிடம் ஏமாந்துவிட்டோமே. ஸந்யாசமும் செல்வமும் ‘சூடான ஐஸ்க்ரீம் என்பது போல ஆயிற்றே’ என்று உணர்ந்தார். அந்தக் காலத்தில் துலுக்கர்களின் அட்டஹாசம் பெருகிக்கொண்டே வந்தது; இந்து தர்மம் அழிபட்டு வந்தது. அவர் கண் முன்னால் இரண்டு ஆட்டு இடையர்கள் தென்பட்டனர். அவர்களிடம் பிரம்மாண்டமான செல்வத்தைக் கொடுத்து படை திரட்டச் சொன்னார். அவர்களும் உரிய பயிற்சி பெற்று மாபெரும் படை திரட்டி விஜய நகரப் பேரரசை நிறுவி தென்னாட்டில் புகுந்த துலுக்கப் படைகளை விரட்டி அடித்தார் கள்.
விதிப்படி செல்வம் கிட்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. பர்த்ருஹரி சொல்லுவது போல, பாலைவனத்தில் இருந்தாலும் செல்வம் கிட்டும் என்பதற்கிணங்க ஹரிஹரன், புக்கன் என்ற இருவருக்குச் செல்வம் போய் சேர்ந்து விஜய நகரப் பேரரசு உதயமானது.
விதியே வலியது என்னும் வள்ளுவன் கருத்து
திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் மிகத் தீவிரமாக விதியின் வலிமையை விளக்குகிறார்.
கர்ம வினை என்பதுதான் இந்துமத்தின் சிறப்புக் கொள்கை. இந்து மதத்தைத் தொடர்ந்து பாரதத்தில் எழுந்த பிற மதங்களான சமணம், பவுத்தம்,
சீக்கியம் ஆகியனவும் கர்மவினைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளன.
இதோ விதியை வலியுறுத்தும் முக்கியக் குறள்கள்
வள்ளுவனும் விதியின் காரணமாகவே ஒருவனுக்கு செல்வம் கிடைக்கிறது என்னும் பர்த்ருஹரி கருத்தை ஆதரிக்கிறான்:
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி- 371
பொருள்
ஒருவனுக்கு பணம் வரக்கூடிய தலைவிதி இருக்குமானால் அவனுக்கு முயற்சி தோன்றும்;அவன் தலைவிதி பணம் வரக்கூடாது என்றால் அவனை சோம்பல் ஆட்கொள்ளும்
பிரம்மாதான் நெற்றியில் எழுதுகிறான் என்பதை வள்ளுவனும் ஒப்புக்கொள்கிறான்
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது- 377
கோடி கோடியாகப் பொருள் சேர்த்து இருந்தாலும் நம் விதியை வகுக்கும் இறைவன் எழுதியபடியே நடக்கும்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்- 380
தலை விதியை விட, வேறு வலி மையானது ஏதேனும் இருக்கிறதா?
அவ்வையார்
ஒரு குடத்தை எவ்வளவு தண்ணீரில் முக்கினாலும், குடத்தின் கொள் அளவுக்கே தண்ணீர் மிஞ்சும் உள்ளே தங்கும் என்பதை பர்த்ருஹரியிடமிருந்து அவ்வையாரும் எடுத்தாண்டுள்ளார்.
இதோ அந்தப் பாடல்
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி – தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.
18.Though you dip the measure deep in the deep sea water, it will not contain four measures. O Maid ! Though riches and husband are choice, the happiness of the couple hangs on fate or destiny.
மூதுரைப் பாடல் இது. இதை எழுதிய அவ்வையார் சங்க கால அவ்வையார் அல்ல. பர்த்ருஹரிக்குப் பல நூறு நூற்றாண்டுகள் பிறப்பட்டவர். பர்த்ருஹரி சொன்ன பல கருத்துக்கள் அவருக்குப் பின்னர் தோன்றிய பதினென் கீழக்கணக்கு நூல்களிலும் உள.
இன்னொரு சிறப்பு- பிரம்மாதான் ஒருவனுடைய தலையில் அல்லது நெற்றியில் எல்லாவற்றையும் எழுதிவைக்கிறான் என்பதாகும்.
எழுத்துமுறையைக் கண்டுபிடித்தது இந்தியாதான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. கல்வி, எழுத்து, படைப்பு, விதி ஆகியவற்றுக்குப் பிரம்மாவும், அவருடைய மனைவி ஸரஸ்வதியுமே அதிதேவதைகள் என்பது இமயம் முதல் குமரி வரையுள்ள நம்பிக்கை.
XXX
SLOKA 45
अकरुणत्वम् अकारणविग्रहः
परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता
प्रकृतिसिद्धम् इदं हि दुरात्मनाम् ॥ 1.45 ॥
Ruthlessness, unfounded hostility, desire for another’s wealth and wife, envy towards good people and relatives – these are naturally found in the wicked–45
எல்லா ராக்ஷசர்களும், நல்லோரைத் துன்புறுத்தியதால்தான் விஷ்ணு பல அவதாரங்களை எடுக்க நேரிட்டது.
திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் கயவர்களின் குணத்தை வருணிக்கிறார்
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ் -குறள் 1079
பிறர் நன்றாக உடுப்பதையோ உண்பதையோ கண்டால்,கயவர்கள், பொறாமை கொண்டு அதற்கும் குற்றம் காண வல்லவர் ஆவார்கள்.
ஈசாப் கதையில் வரும் ஆடு- ஓநாய் கதை போலத்தான். வலிய சண்டைக்கு இழுத்து ஆட்களைக் கொல்லுவர். ரிஷி முனிவர்கள் காடுகளில் பழங்களையும் தேனையும் சேகரித்து உண்டு அமைதியான வாழ்க்கை நடத்தியபோதும் அவர்களுடன் வம்புச் சண்டைக்குப் போனவர்கள் அரக்கர்கள்.
பிறன் மனை நோக்காத பேராண்மை
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்- குறள் 146
பிறருடைய மனிவியை நாடிச் செல்பவனுக்கு நான்கு கெடுதிகள் எப்போதும் வரும்/ இருக்கும்:–
பகைமை, பாவம், பயம், உலகமே பழித்துரைக்கும் வசவுகள் இவை நான்கும் நீங்காமல் நிற்கும்.
Xxx
picture of a snake charmer
பாம்பு நீர் குடித்தால் விஷமாகும்; பசு நீர் குடித்தால் பால் ஆகும்!
SLOKA 46
दुर्जनः परिहर्तव्यो
विद्ययाஉलकृतोஉपि सन् ।
मणिना भूषितः सर्पः
किम् असौ न भयङ्करः ॥ 1.46 ॥
துர்ஜனஹ பரிஹர்தவ்யோ வித்யயாஅலக்ருதோ அபிஸன்
மணினா பூஷிதஹ ஸர்பஹகிம் அஸௌ ந பயங்கரஹ- 1-46
கற்றவர்களாயினும் தீய குணம் இருந்தால் அவர்களைத் தவிர்க்க வேண்டும். பாம்பின் தலையில் மாணிக்கம் இருந்தாலும் அது ஆபத்தானதல்லவா? –பாடல் 46
46. An evil person is to be avoided, even if adorned with learning. Is the cobra, despite being decorated with a gem, not fearsome?
அரவின் தலையில் அருமணி உண்டேனும்
விரவும் பயத்தால் விலக்க — விரைகுவ போல்
தீயவர்பாற் கல்வி சிறந்தாலும் மற்றவரை
நீயகன்று தூரத்தில் நில்
XXXXX
தீயவர்பால் கல்வி சிறந்தாலு மற்றவரைத்
தூயவரென்றெண்ணியே துன்னற்க– சேயிழையே!
தண்ணொளிய மாணிக்க சர்ப்பந் தரித்தாலும்
நண்ணுவரோ மற்றதனை நாடு– நீதிவெண்பா
பொருள்
பாம்பிடம் ஒளிமிக்க மாணிக்கக் கல் இர்ந்தாலும் யாராவது அதை நெருங்குவார்களா? அதே போல கெட்டவர்களிடம் கல்வி அறிவு இருந்தாலும் நாடக் கூடாது.
பசுவுக்கு நீர்–பால்; பாம்புக்கு நீர் – விஷம்
பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட
தேம்படு ஹெண்ணீர் அமுதமாம் – ஓம்பற்கு
ஒளிஆய்ம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோற்
களியாம் கடையாயார் மாட்டு– –அறநெறிச்சாரம்
பொருள்
பாம்புகள் குடிக்கும் நீர் எல்லாம் விஷமாக மாறுகிறது;
கயவர்கள் கற்கும் ஞன நூல்கள் அவர் மாட்டு மயக்கத்தையே விளைவிக்கும்;
பசு மாடுகள் குடிக்கும் தண்ணீர் இனிய பாலாக மாறும்;
உயர்ந்தோர் கற்கும் ஞான நூல்கள் அவர்கள் மாட்டு அறிவினை வளர்க்கும்.
தீயோர்கள் கற்றாலும் கற்றதையெல்லாம் தவறாக வியாக்கியானம் செய்வர்.
It is amazing to read that Brahmins ruled Sri Lanka for 50 years in the very early stage of its history. They ruled Sri Lanka 2400 years ago, before Devanampiya Tissa introduced Buddhism in the country. C S Navaratnam in his book A Short History of Hindusim in Ceylon (1964) has beautifully summarised it.
My reading of seven other 100 year old books available in London British Library and SOAS (University of London ) library shows that Brahmins lived there from Northern Jaffna to Southern Galle; and they were not just temple priests but they held high positions in government. They were living in Lanka even during Tamil Elara rule ; Sri Lankan Cleopatra , notorious Anula , married a palace Brahmin as well. She murdered her husband and married a lot of men like Elizabeth Taylor and Henry VIII.
Many people now have a wrong notion that only Jaffna area bought Brahmin priests from India and they were the only Brahmins. But Buddhists themselves can’t avoid mentioning Brahmins in all their books from earlier period. Devanampiya Tissa and other early kings gave Brahmins first place like Asoka who in all his inscriptions mentioned Brahmins first. Asokan inscriptions are worded as ‘Brahmana Sramana’ giving priority to Brahmins. Buddha himself praised Brahmins in a whole chapter in Dhammapada and in two other slokas say that even murders by Brahmins and throwing out kings are justified.
Sri Lankan Brahmins were authors as well. They wrote astrology books and created Panchangas (almanacs) for Hindus. Even Sri Lankan kings followed all that is said in Hindu scriptures and when they died, they were cremated with Vedic mantras.
In another book, the Arya chakravartis are shown having Brahminical origin. A lot of research is required to collect all Brahmin references in Mahavamsa, Choola vamsa, Rajavali, Inscriptions, Pali and Sinhalese books.
It is also interesting to see that Sri Lankan authors were so influenced by Kalidasa, who lived in the first century BCE. Following Kalidasa’s Raghu VAMSA, they wrote Maha VAMSA and Chula VAMSA. Following Megha Sandesa, they wrote several Sandesa (Messenger Poems) kavyas. A comparative study would bring out more truths.
Please see the attachments from C S Navaratnam’s book below,
to be continued………………………………………..
tags– Brahmin rule, in Sri Lanka, Ceylon, Brahmin Kings of Sri Lanka, C S Navaratnam
மட்டக் களப்பில் ராம நாதன் என்ற பிராமணனுக்கு முதலாவது ராஜ சிம்மன் அளித்த சாசனம் நமக்குக் கிடைக்கிறது. பல நாட்டுப் பகைவர்களை முறியடித்து மன்னர்களைவென்ற ராஜ சிம்ம மஹாராஜா
ராமநாத பிராமணனுக்கு , பின் வரும் நிலங்களை தானம் செய்கிறான் .
……….. …..இந்த சாசனத்துக்கு ஊறு விளைவிப்பவன் , காசி ராமேஸ்வரம், கதிர்காமம், மாணிக்க கங்கை ஆகிய இடங்களில் பாவம் செய்வதால் கிடைக்கும் பலன்களுக்குச் சமமான துன்பத்தை அனுபவிக்கக்கடவது என்று சாசனம் முடிகிறது.
xxxx
கண்டி மன்னன் இரண்டாவது ராஜசிம்மன்
இலங்கை மன்னர்களின் ராஜ சபையில் பிராமண வேத பண்டிதர்கள் இருந்து வேத மந்திரங்களை ஓதி வாழ்த்தியதை சேவுள் சந்தேசய (அழகையா வண்ண Thotagamuwe Sri Rahula Thera (1408 – 1491) என்ற காவியமே பாராட்டுகிறது. ராஜ சிம்மன் அரசவையில் சேர, சோழ , பாண்டியர்கள் மற்றும் தோல்வி அடைந்த மன்னர்கள் வணங்கி நிற்க, வேத மந்திரங்களை பிராமணர்கள் உச்சரிக்க , அரசன் தெய்வம் போல் வீற்றிருந்தான் என்கிறது ஒரு செய்யுள் .
xxxx
இது ஒரு புறமிருக்க 1640ம் ஆண்டில், இரண்டாவது ராஜ சிம்மன் படேவியாவுக்கு பிராமண அமைச்சரை தூது அனுப்பிய செய்தியும் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பல பிராமண குடும்பங்கள் ஹாலந்து நாட்டுக்குக் குடியேறி கல்வி கற்று, பெரிய பதவி வகித்ததும் தெரிகிறது. 400 ஆண்டுகளுக்கு முன்னரே இப்படிப் பிராமணர்கள் வெளிநாட்டுகுச் சென்று கல்வி கற்றதை வேறு எங்கும் காணமுடியவில்லை..
படேவியா – இந்தோனேஷியாவின் ஜாகர்த்தா
Batavia was the capital of the Dutch East Indies. The area corresponds to present-day Jakarta, Indonesia. Batavia can refer to the city proper or its suburbs and hinterland, the Ommelanden, which included the much larger area of the Residency of Batavia in the present-day Indonesian provinces of Jakarta, Banten and West Java.
அசோக மாமன்னன், எப்படி பிராமணர்களை கல்வெட்டுகளில் முதலில் குறிப்பிட்டு மதிப்பு கொடுத்தானோ அவ் வாறே இலங்கையின் சமகால மன்னனான தேவநாம்பி(ரி)ய திஸ்ஸவும் பிராமண ர்களுக்கு மதிப்பு கொடுத்தான். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்புகோளத்தில் (சம்பந்துறை ), புனித அரசமரம் / போ தி மரம் வந்து இறங்கியபோது அங்கு இரண்டாவது ஸ்தானம், திவக்க (திவாகரன்) என்ற பிராமணருக்கு அளிக்கப்பட்டது . அசோகன் மகள் சங்கமித்திரா, தேரர் மஹிந்தர், பிராமணர் திவாக ஆகிய மூவர் தான் அரசமர வரவேற்பு விழாவை முன்னின்று நடத்தினர்.
பதித்யாவின் (Batitya) ஆட்சிக்காலத்தில் வினய நூல் பற்றி பிக்குகளிடையே மோதல் ஏற்பட்டது. அதற்கான வியாக்கியானத்தை இரண்டு கோஷ்டிகள் வெவ்வேறுவிதமாக விளக்கியது. உடனே மன்னன் , சகல கலா வல்லவனான ஆன ஒரு பிராமண மேதாவியை நடுவராக நியமித்தான். அவர் சொன்னதை எல்லோரும் ஏற்றார்கள் . அந்த அளவுக்கு மன்னரும், பெளத்தர்களும் பிராமணர்களை மதித்தார்கள்.
xxx
சோதிட நூல் சரஜோதி மாலை
இலங்கையில் மிகவும் பிரபலமான ஜோதிட நூல் சரஜோதி மாலை. இதை 700 ஆண்டுகளுக்கு முன்னர் , 1310ல் போஜ ராஜன் என்ற பிராமணர் இயற்றினார்.இன்றும் தமிழ் ஜோதிடர்கள் இதை பயன்படுத்துகின்றனர்.அவர் மூன்றாம் பராக்கிரம பாஹு காலத்தில் வாழ்ந்தவர்.
பின்னர் யாழ்ப்பாண மன்னர் ஒருவர் காலத்தில் செகராஜசேகரமாலை என்ற இன்னும் ஒரு சோதிட நூல் , சோமன் என்ற பிராமணரால் இயற்றப்பட்டது வடக்கு வன்னி பிரதேச வரலாற்றைக் கூறும் வையா பாடல் என்பதை வையாபுரி அய்யர் இயற்றினார்.
ஆறாம் பராக்கிரம பாஹு காலத்தில் வாழ்ந்தவர்..ஸ்ரீ ராமச்சந்திர கவி பாரதி இந்தியத் தமிழரான அவர் , இலங்கையில் வாழ்ந்துவந்தார்; அவர் புத்தர் மீது சம்ஸ்க்ருத மொழியில் 100 பாடல்களை பக்தி சதகம் என்ற பெயரில் பாடினார்..
அராலி ராமலிங்க ஐயர், முதல் பஞ்சாங்கத்தை 1667-ல் இலங்கை இந்துக்களுக்காக கணித்தார்;. 400 ஆண்டுகளாக அதைத் தமிழர்கள் பின்பற்றிவருகிறார்கள் .
கடந்த சில நூற்றாண்டுகளில் வாழ்ந்த புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் பிராமணர்கள் :–
வட்டுக்கோட்டை கணபதி ஐயர் 1709-1784
இணுவில் நடராஜ ஐயர் 1854-1905
வண்ணார் பண்ணை சுவாமிகள் பெரியதம்பி ஐயர் ; அவர் 120 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து சேவை ஆற்றினார்..
xxx
அரசவையில் பிராமணர்கள் ; இலங்கை கிளியோபாட்ரா
இலங்கை வரலாற்றில் மிகவும் கெட்ட பெயர் எடுத்த அரசி Anulka அனுலா. அவள் CLEOPATRA கிளியோபாட்ரா போன்ற்வள் .சோர நாகனின் மனைவி; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தாள் BCE 12-16 . அவள் கணவனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு , அடுத்தடுத்துப் பலரை மணந்தாள் . நெளியா என்ற பிராமண புரோகிதரையும் மணந்தாள் .
xxxx
ஆறாம் பராக்கிரம பாஹு ஆண்ட காலத்தில் பிரமணர்களுக்குக் கிடைத்த சலுகைகள் குறித்து கோகில சந்தேச (குயில்விடு தூது )விரிவாகவே பேசுகிறது.
சங்க காலத்துக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞன் காளிதாசன் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வாழ்ந்தான். அவன் ரகுவம்சம் இயற்றியதை அறிந்த இலங்கை அறிஞர்கள் மஹாவம்சம், சூள வம்சம் என்ற பெயர்களில் வம்ச வரலாறுகளை எழுதினர்க;ள். காளிதாசன் எழுதிய மேக சந்தேசம் உலகப் புகழ்பெற்ற தூத காவியம் ஆகும். இதைப் பார்த்து இலங்கை எழுத்தாளர்கள் ஏராளமான சந்தேச (தூத்து ) காவியங்களை எழுதினார்கள் .
xxx
பிராமணர்களுக்கு கிடைத்த நில தானம், ஸ்வர்ண / gold தானம் முதலியன பற்றி எழுதினால் அது நீண்ட பட்டியல் ஆகிவிடும் . தமிழ்நாட்டில் மங்கலம் ஏ நிற பெயரில் முடியும் கிராமங்கள் அனைத்தும் பிராமணர்களுக்கு மன்னர்கள் கொடுத்த ஊர்கள் ஆகும். இதை பிரம்மதேயம் என்பார்கள்; இறைவனுக்காக கொடுத்தால் அதை தேவதானம் என்பார்கள் .
இலங்கையில் பிராமணர்களுக்கு கிடைத்த தானங்கள் பற்றித் தனியாக எழுதுகிறேன்.
வேத சடங்குகள்
இலங்கை மன்னர்கள் பெளத்தர்களாக இருந்தாலும் பலரும் வேத கால பட்டாபிஷேக சடங்குகளைப் பின்பற்றினார்கள் . இன்னும் பல இடங்களில் பெளாத்தர்களே வேத மாடலில் Vedic Model புதிய சடங்குகளை உண்டாக்கி மன்னர்களைத் திருப்திப்படுத்தினர்
ஆறாவது பராக்கிரம பாஹு அளித்த நில தானம் , குடுமுரி ராசா கல்வெட்டில் விரிவாக உள்ளது. பெயர்களை பார்க்கையில் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதும் தெரிகிறது . இந்த மன்னனின் தகனச் சடங்குகள் வேத மந்திரங்கள் ஒலிக்க நடந்தது.
xxxxx
கரிகாலன் காலத்து பிராமணர்கள்
2000 ஆண்டுகளுக்கு முன்னர் சோழநாட்டை ஆண்ட கரிகாலன் பருந்து (எருவை) வடிவ யாக குண்டம் அமைத்து பெரும் யாகம் செய்தது சங்க இலக்கியத்தில் பாடப்பட்டுள்ளது. அவன் ரிக் வேதத்தில் சொன்னபடி ஏழு அடிகள் நடந்து சென்று விருந்தினருக்கு குட் பை Good Bye சொன்ன செய்தியையும் பாவலர்கள் பாடிச்சென்றனர். அவன்தான் இலங்கை ஏழாரன் என்றும் இல்லை அவன் சமகாலத்தில் ஆண்டவன் ஏலாரன் (7 மன்னர்களை வென்று ஏழு ஆரம் /மாலை அணிந்தவன்) என்றும் பேசுவர் பலர். பெளத்த மத நூல்களே அவனை மிகவும் புகழ்ந்து பேசும். அவன் காலத்தில் த்வார மண்டல என்னும் கிராமத்தில் வாழ்ந்த குண்டலி என்ற பிராமணன் மூலமாக துத்தகாமினி பல பொருட்களை பெற்றான் என்ற செய்தியும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.
xxxx
பிராமண புரட்சியும் தமிழர் ஆட்சியும்
2000 ஆண்டுகளுக்கு முன்னர் வல கம்பாவின் (29-17 BCE ) முதல் ஆட்சி ஆண்டில் மஹாகாமத்தில் திஸ்ஸ என்ற பிராமணன் மன்னருக்கு எதிராக, சாணக்கியன் போல புரட்சிக்கொடி உயர்த்தினான். அப்போது பெரும் குழப்பம் ஏற்பட்டது தமிழ் நாட்டிலிருந்த 7 தமிழ்த் தலைவர்கள் பெரும் படைகளுடன் வந்து ஆட்சியைக் கைப்பற்றினர் .
மஹாசேனன் என்ற மன்னன் இந்துக்கோவில்களை இடித்து பெளத்த விஹாரங்களை எழுப்பிய செய்தி மகாவம்ச நூலில் உள்ளது. அவன் அப்படி புத்த விஹாரை கட்டிய ஊர்களில் ஒன்று காலந்த என்ற பிராமணன் ஊராகும். அவன் பெயரைக் குறிப்பிட்டு அந்த ஊரிலும் மஹாசேனன் புத்த விஹாரம் எழுப்பினான் என்று சொல்லுவதால் அந்தப் பிராமணன் எவ்வளவு புகழ்பெற்றவன் என்பதும் புலனாகிறது.
இந்தியாவில் புத்தர் காலத்தில் மிகப்புகழ்பெற்ற பிராமணர்கள் பெளத்த மதத்தை தழுவினார்கள்; ஏனெனில் புத்தருக்கு பிராமணர்கள் மீது அபார மதிப்பு; பிராமணர்கள் படுகொலை செய்தாலும், அவர்கள் ஆட்ச்சியைக் கவிழ்த்தாலும் அவர்கள் செய்தது சரியே என்றும், அவர்களைத் தண்டிக்கக்கூடாது என்றும் தம்மபதம் என்னும் வேதப் புஸ்தகத்தில் இரண்டு ஸ்லோகங்களில் பாடியுள்ளார் (முழு விவரம் எனது பழைய கட்டுரையில் உள்ளது)
தம்மபதம் என்னும் புஸ்தகம் பெளத்தர்கள் வேத புஸ்தகம். . அதில் கடைசி அத்தியாயம் முழுவதும் பிராமணர்களின் புகழ்பாடுகிறது. அதில் பிராமணர்கள் யார் என்று மனு ஸ்ம்ருதி போலவே வரையறையும் செய்துள்ளார். இலங்கையில் புத்தரைப் பின்பற்றிய காம தேவ என்ற பிராமணன் சபரகமுவவில் சமன் தேவாலயத்தை நிறுவினான்
இலங்கையில் உள்ள பாலி மத நூல்களை படிக்கையில் ஒரு விஷயம் தெளிவாகிறது. ஏதோ யாழ்ப்பாணத்திலுள்ள இந்துக்கோவில்களுக்கு வந்த தமிழ் நாட்டுப் பிராமணர்தான் இலங்கையில் வசித்தனர் என்று கருதி விடக்கூடாது விஜயன் காலத்துக்கு முன்னரே, அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் வடகோடி யாழ்ப்பாணம் முதல் தென் கோடி கதிர் காமம், காலி Galle நகர்வரை பிராமணர்கள் இருந்ததையும் அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே 50 ஆண்டுகள் இலங்கையை ஆண்டதையும் பெளத்த மத நூல்கள்தான் நமக்குச் செப்புகின்றன. அமைசர்களாகவும் புரோகிதர்களாகவும், அரசர்களாகவும், தூதர்களாகவும், நூலாசிரியர்களாகவும் பிராமணர்கள் இருந்தனர் .
அடுத்து இந்து சாம்ராஜ்யத்தை இலங்கையில் நிறுவிய ஆரிய சக்கரவர்த்திகள் பிராமணர்களா ? என்பதை ஆராய்வோம்