
Post No. 12,702
Date uploaded in London – – – 11 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 47,48,49
SLOKA 47
त्वमेव चातकाधार इति केषां न गोचरः ।
किमम्भोद वदास्माकं कार्पण्योक्तिं प्रतीक्षसे ॥ 47॥
த்வமேவ சாதகதார இதி கேஷாம் ந கோசரஹ
கிமம்போத வதாஸ்மாகம் கார்ப்பண் யோக்திம் ப்ரதீக்ஷஸே
47. O Eminent cloud! Who does not know that you are the sole life-support of the Chataka birds? Why then do you wait for our pitiful entreaties?
ஓடும் மேகங்களே! சாதகப் பறவைகளுக்கு ஆதாரமாக இருப்பது நீ ஒன்றுதான் என்பது எல்லோருக்கும் தெரியும்.அப்படியிருந்தும் எங்கள் தாக்கத்தைத் தணிக்க மழை கொட்டட்டும் என்று நாங்கள் வேண்டவும் தேவையா ?
XXXXX
SLOKA 48
रे रे चातक सावधानमनसा मित्र क्षणं श्रूयताम्
अम्भोदा बहवो वसन्ति गगने सर्वेऽपि नैकादृशाः ।
केचिद्वृष्टिभिरार्द्रयन्ति धरणीं गर्जन्ति केचिद्वृथा
यं यं पश्यसि तस्य तस्य पुरतो मा ब्रूहि दीनं वचः ॥48॥
ரே ரே சாதக சாவதான மனஸா மித்ர க்ஷணம் ச்ரூயாதாம்
அம்போதா பகவோ வசந்தி ககனே சர்வே அபி நைகாத்ருஸாஹா
கேசித் வ்ருஷ்டி பிரார்த் தயந்தி வஸுதாம் கர்ஜந்தி கேசித் வ்ருதா
யம் யம் பஸ்யசி தஸ்ய தஸ்ய புரதோ மா ப்ரூஹி தீனம் வசஹ
48. O Chataka, my friend! Listen attentively for a moment. There are many clouds in the sky, yet not all of them are such (worthy of asking). Some drench the earth with showers, some simply roar in vain. Do not utter pitiful words before everyone you see.
ஓஒ சாதகப்பறவையே ! கத்தித் தீர்ப்பதை நிறுத்திவிட்டு நான் சொல்வதைக் கேள் வானத்தில் எவ்வளவ் மேகங்கள் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் ஒன்றேயல்ல சில மேகங்கள் பூமி முழுதும் நனையுமாறு கொட்டித்தீர்க்கின்றன. இன்னும் சில வெற்று இடியோசை செய்துவிட்டு ஒரு சொட்டுத் தண்ணீர் விடாமல் போய்விடும். ஆகையால் நண்பனே! நீ எல்லா மேகங்களுக்கு முன்பாக வும் தண்ணீருக்காக கூவாதே
சாதகப் பறவை வானத்தில் பற ந்தவாறே மழை நீரை மட்டுமே உண்ணும் என்பது ஸம்ஸ்க்ருத , தமிழ் செய்யுட்களில் வரும் விஷயம் ஆகும். இங்கே பர்த்ரு ஹரி இரண்டு விஷயங்களை நம் முன் வைக்கிறார்.
உண்மையான கொடையாளி, ஒ ருவன் கேட்கும் வரை காத்திருக்கத் தேவை இல்லை; வறுமை உள்ளவனுக்கு வாரி வழ ங்குவது அவன் கடமை;
இரண்டாவது பாடலில் கொடாதோரை இடித்துரைக்கிறார். சிலர் வெறும் வாய்ச் சவடால் அடிப்பார்கள்; பைசா காசு கூட கொடுக்கமாட்டார்கள்; இன்னும் சிலர் கர்ணன் போல, பாரி போல அனைத்தையும் கொடுப்பார்கள்
XXXX

SLOKA 49
जाड्यं ह्रीमति गण्यते व्रतरुचौ दम्भः शुचौ कैतवं
शूरे निर्घृणता मुनौ विमतिता दैन्यं प्रियालापिनि । (निर्घ्ऱ्६इणता ऋजो)
तेजस्विन्यवलिप्तता मुखरता वक्तर्यशक्तिः स्थिरे
तत्को नाम गुणो भवेत्स गुणिनां यो दुर्जनैर्नाङ्कितः ॥49॥ (भवेत्सुगुणिनां)
ஜாட்யம் ஹ்ரீமதி கண்யதே வ்ரதருசௌ தம்பஃ ஶுசௌ கைதவம்
ஶூரே நிர்க்ருணதா முனௌ விமதிதா தைன்யம் ப்ரியாலாபினி |
தேஜஸ்வின்யவலிப்ததா முகரதா வக்தர்யஶக்திஃ ஸ்திரே
தத்கோ நாம குணோ பவேத்ஸ குணினாம் யோ துர்ஜனைர்னாங்கிதஃ || 1.49 ||
49. Ignorance is ascribed to a modest man, deceit in an austere man, hypocrisy to a pure man, ruthlessness to a brave one and lack of intelligence to an ascetic. Poverty or need is attributed to one who speaks sweetly, arrogance to a powerful one, garrulity to an eloquent speaker and incompetence to a strong, calm man. Which virtue of good people is not maligned by the wicked?
அடக்கமாக இருப்பவனுக்கு ஒன்றுமே தெரியாதவன் எளிமையாக இருப்பவனுக்கு அகந்தைப் பேர்வழி , தூயவனுக்கு கபட வேஷதாரி கருணையே இல்லாதவனுக்கு துணிச்சல்காரன் அறிவே இல்லாதவனுக்கு ஞானி என்ற பெயரை தீயோர் சூட்டுவர்; இனிமையாகப் பேசினால் ஏதோ எதிர்பார்க்கிறான் என்றும் வீரா ப்புடன் பேசினால் திமிறு பிடித்தவன் என்றும் நன்றாகப் பேசினால் வாயாடி என்றும் அமைதியாக இருந்தால் கையாலாகாதவன் என்றும் கெட்டவர்கள் சொல்லுவார்கள். அவர்கள் திட்டாத ஆளும் உண்டோ !
மானியை மந்தனென்றும் மாதவனை டம்பனென்
ஆன பிறப்பொழுக்கம் ஆதரிப்போனை
கருணையிலான் என்று மின்சொல் காட்டுவோன் தன்னைத்
திருணனென்றும் ஏசுவர் தீயார் — 49
பேசாதிருந்தால் பெருமூமையென்று நன்றாய்ப்
பேசினால் வாயாடிப் பேதை என்றும் — ஆசையுடன்
ஒட்டியிருந்தாலச்சம் உட்பயமில்லானென்றும்
எட்டியிருந்தால் எதற்கும் இல்லாத – மட்டியென்றும்
நெஞ்சம் பொறுத்தால் நிலைத்த முரடனென்றும்
கொஞ்சம் பொறானேல் — குலவீனன் வஞ்சநென்றும்
பேரார் துறைகளென்றும் பேசுவர் தஞ்ச சேவகனை
ஆராயுங்காலவர்பால் யாராலும் –சீராகச்
சேவித்தலாகா சிறந்ததவ மாதவ ர்க்கும்
பாவிக்கலாகாதாம் பண்பு
To be continued……………………
Tags- பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 47,48,49, Nitisataka, Bhartruhari-16