இலங்கையில் பிராமணர் ஆட்சி-Part 3 (Post No12,700)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,700

Date uploaded in London – –  –  11 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

இலங்கையில் பிராமணர் ஆட்சி – Part 3 (Final Part) 

சிவாஜி மஹராஜ், இந்தியாவில் ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவியது போல இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்து ஆட்சியை நிறுவியவர்கள் ஆரிய சக்கரவர்த்திகள்;  400 ஆண்டுகளுக்குக் கொடி கட்டிப் பறந்தார்கள் . போர்ச்சுகீசிய , டச்சு (ஹாலந்து நாடு), பிரிட்டிஷ் பறங்கியர்கள்கள் இலங்கையை ஆக்ரமித்து இந்து மதத்தை எள்ளி நகையாடும் வரை, ஆரிய சக்கரவர்த்திகள் இடிபட்ட 500 கோவில்களையும் புனர் நிர்மாணித்தார்கள் . இந்த சக்ரவர்த்திகளின் தோற்றம் பிராமண தொடர்புடையது. இவர்கள் ராமேஸ்வர பகுதியிலிருந்து வந்தவர்கள். முதல் சக்ரவர்த்தி 50 சதவிகித பிராமணன்; ராவணனைப் போல 50 சதவிகித பிராமணன்.

ஆரிய சக்ரவர்த்தி என்று ஏன் பெயர் வைத்துக் கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய வேண்டும். இரண்டு ஸம்ஸ்க்ருதச் சொற்களும்  இந்திய மன்னர்களின் பெயர்களில் கூட கிடையாது. ஆரிய என்றால் இனம் அல்ல. பண்பாட்டின் உயர்மட்டத்தை அடைந்தவர்கள் என்று பொருள். அதாவது ஆங்கிலத்தில் CIVILIZED சிவிலைஸ்டு, CULTURED கல்ச்சர்ட் என்று சொல்லுவார்கள்;  மாக்ஸ்முல்லர் கும்பல் இதை மாற்றி இவர்கள் இந்தியாவுக்கு வெளியே உள்ள பல  நாடுகளைக்காட்டி அங்கிருந்து வந்தவர்கள் என்று சொல்லி வரலாற்றையே தலைகீழாக மாற்றியது. இந்திய பூமியில் உதித்து ஈரான் வரை சென்றவர்கள் ஆரியர்கள் என்பதை பாரசீக மதத்தினரின் வேத புஸ்தகம் ZEND AVESTA  சென்ட் அவஸ்தா காட்டுகிறது 

யாழ்ப்பாண ஆரிய சக்ரவர்த்திகளுக்கும் பாண்டியர்களுக்கும் உள்ள தொடர்பில் எவருக்கும் சந்தேகம் இல்லை; யாழ்ப்பாண சக்கரவர்த்திகள் முதலாமவர் சேதுக்கரை என்னும் ராமேஸ்வரம் , திருப்புல்லாணிப் பகுதியி லிருந்து வந்தவர்கள் என்பதிலும் ஐயப்பாடு இல்லை. யாழ்ப்பாண மன்னர்களே ராமேஸ்வரம், திருப்புல்லாணியில் செய்த கோவில் திருப்பணிகளையும் அவ்விரு இடங்களில் உள்ள கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. முதலாவது ஆரிய சக்ரவர்த்தி பிராமண க்ஷத்ரியருக்கும் பிறந்தவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர் .

யாராவது ஒரு மன்னனுக்கு அங்கஹீனம் இருந்தால், அதை வைத்தே மக்கள் அவனை அடையாளம் காண்பர்நின்ற சீர் நெடுமாறன் முதலில் கூன் பாண்டியனாக இருந்தான்; அவனை மஹேந்திர பல்லவன் காலத்தில் வாழ்ந்த சின்னப்பையன் விபூதி தடவி வழுதி கூனை நிமிர்த்தினான். அந்தச் சின்னப்பையன் திருஞான சம்பந்தன் இல்லாவிடில் இந்தியாவிலும் இலங்கையிலும் சைவ சமயம் இருந்திராது. அவனுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் ,  கீரந்தை என்னும் பிராமணன் வீட்டைக்  காப்பதற்காக தனது கையையே வெட்டிக்கொண்டான் . பின்னர் சித்த, ஆயுர் வேத நிபுணர்கள் வந்து அவனுக்கு ஆபரேஷன் செய்து தங்கக்  கையைப் பொருத்தினர் . அந்த மன்னன் பெயரே நமக்குத் தெரியாது ஆனால் பொற்கைப் பாண்டியன் என்றால் நமக்கு உடனே தெரியும். அவன் கதை பழைய காப்பியங்களில் வருவதால் அவன் சங்க கால மன்னன் என்று நமக்குத் தெரிகிறது.

இஃதே போல யாழ்ப்பாணத்தை ஆண்ட முதல் மன்னனுக்கு Polio Attack போலியோ தாக்குதல் காரணமாக குறுகிய கை இருந்தது. அவனை கூழங்கை சக்ரவர்த்தி என்று அழைத்தனர்.

சரி, முதல் சக்ரவர்த்தி, ராவணனைப்போல  50 சதவிகித பிராமணன்.

என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ?

முதலியார் சி ராஜநாயகம் புராதன யாழ்ப்பாணம் ANCIENT JAFFNA, MUDAIYAR C. RASANAYAGAM, 1926 என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதில் திருப்புல்லாணி க் கல்வெட்டையும் மஹா வம்சக் குறிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு பின் வருமாறு கூறுகிறார் மாளவ சக்ரவர்த்தி என்பவர்  முன்னர் இலங்கையுடன்  சண்டையிட்டதையும் குறிப்பிட்டுவிட்டு அவர் சொல்வதாவது–

ராமேஸ்வரத்திலுள்ள ஒரு பிராமணர் யாழ்ப்பாணத்தில் இருந்த கலிங்க வம்சத்து உக்ர சிங்கனின் இளவரசி  ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, தந்தை வழி  பெயரான ஆர்ய என்பதையும் வைத்துக்கொண்டார் பெண்வழி வம்சப் பெயரான கலிங்கத்தையும் வைத்துக்கொண்டார் என்பது தெரிய வருகிறது . சேது என்ற பெயரையும் கலிங்க வம்ச சின்னங்களையும்( ராஜ முத்திரை ) வைத்துக்கொண்டனர் .

ஆர்ய சக்ரவர்த்தி  என்பது ஒரு படைத்தளபதியின் பெயர் ;

மஹாபாரத துரோணர் , அஸ்வத்தாமன் காலத்திலிருந்தே  பிராமணர்கள் படைத் தளபதிகளாகவும் இருந்ததை  அறிகிறோம். இதனால் முதல் மன்னர் 50 சதவிகித பிராமணர் என்பதில் வியப்பதற்கொன்றுமில்லை.. ஆயினும் ஆட்சி என்று வருகையில் அ வர்கள் க்ஷத்ரியனாகவே (கலிங்க வம்சம்) காட்டிக்கொள்வார்கள்.

உலக வரலாற்றில் சிங்கமே இல்லாத, சிங்கத்தையே பார்த்திராத  சிங்கபுரி (சிங்கப்பூர்), இலங்கை, ஈரான் ஆகிய நாடுகளின் கொடி அல்லது சின்னத்தில் சிங்கம் இருப்பதற்குக் காரணம் இந்துக்கள் உலகம் முழுதும் வீறு நடை போட்டதே.

இந்துக்களின் ஆதிக்கம் ஐரோப்பா வரை பரவியதால், சிங்கமே இல்லாத ஐரோப்பாவில்  ஜுவலியஸ் சீசர்/CAESAR  அகஸ்டஸ் சீசர் என்று சிங்கத்தின் அடைமொழியை சேர்த்து க்கொண்டனர். கேசரி ( கேச + அரி = மயிர் மிருகம் ) என்பதை ரோமன் லிபியில் எழுதுகையில் கேசர்=  சீசர் ஆகிவிடும் ; இன்றும் நான் சார்ல்ஸ் CHARLES  என்றும் கேரக்டர் CHARACTER  என்றும் C சி எழுத்தை மாறி மாறி பயன்படுத்துவது இந்த சி குழப்பத்தால்தான்.

இதை எதற்காக இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்கை நகர்சிங்கை ஆரியன் ஆகிய எல்லாம் இந்தியத் தொடர்புள்ள கலிங்க வம்சம் என்பதைக்காட்டவே.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆரிய சக்கரவர்த்திகள் என்பது பாண்டிய  + கலிங்க கலப்பு ரத்தம் உடையவர்கள்.  மஹா வம்சமும் ஓரிடத்தில் இவர்களில் ஒருவரைக் குறிப்பிடுகையில் ஆரியன் அல்லாத  என்ற சொற்றோடரைப் பயன்படுத்தக் காரணம் அந்த இளவரசி யாழ்ப்பாணத்தில் இருந்த கலிங்க வம்ச அரசி என்பதால்தான்.

இவ்வளவையும் படிக்கையில் இலங்கையின் முதல் மன்னனே கலிங்க வம்சத்தவன் எனபதையும் மறந்துவிடக்கூடாது ; கலிங்கம், வங்கம் என்பன அடுத்தடுத்தது உள்ள பிரதேசங்கள்; அவனைக் கப்பல் ஏற்றி நாடு கடத்தி விரட்டிவிட்ட இடம் வாங்க மாநில துறைமுகம்; வங்கம் என்றால் கப்பல்; அது புறப்பட்ட மாநிலத்துக்கே இப்போது வங்கம் என்று ஆகிவிட்டது. பழைய தமிழ் பாடல்களில் வங்கம் என்ற சொல் கப்பல் என்ற பொருளில் பயன் படுத்தப்பட்டுள்ளது கப்பல் கீழைக்கடலை நாம் இன்றும் வங்காள விரிகுடா என்றே அழைக்கிறோம்  ; வளைந்த (BANGA/ BEND/ VANTHANA/ VANANGUTHAL are cognate words) எல்லாப்  பொருளும் வங்கம் ஆகும்.

–SUBHAM —

Tags- இலங்கையில், பிராமணர் ஆட்சி, Part 3, ஆரிய சக்ரவர்த்தி, கலிங்க வம்ச, இளவரசி கூழங்கைசக்ரவர்த்தி

Leave a comment

Leave a comment