Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!
அத்தியாயம் 19
தவறான மொழிபெயர்ப்பால் போடப்பட்ட அணுகுண்டு!
ச.நாகராஜன்
பகுதி 22
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகர்களின் மீது போடப்பட்ட அணுகுண்டால்!
லக்ஷக்கணக்கான மக்கள் அழிந்து பட்டனர்; அதன் பின் விளைவுகளால் லக்ஷக்கணக்கான மக்கள் அவதியுற்றனர்.
உலகம் தாங்க முடியாத அணுகுண்டை அமெரிக்கா ஜப்பானிய நகர்களின் மீது வீசியது ஒரு தவறான மொழிபெயர்ப்பால் தான் என்றால் ஆச்சரியமாக இல்லை?
உண்மை அது தான்!
மொகுசட்சு (mokusatsu) இந்த ஒரே ஒரு வார்த்தை தவறாக மொழிபெயர்க்கப்பட்டதால் அணுகுண்டு போடப்பட்டது. 1945இல் ஜப்பான் மிகவும் பலஹீனமாகி விட்டது. அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், சோவியத் யூனியன், சைனா ஆகிய ஐந்து பெரும் சக்திகளும் ஒன்றாக இணைந்து கொண்டன. இவை அனைத்தும் ஜப்பானிய பிரதம மந்திரியாக இருந்த கண்டாரோ சுசுகிக்கு (Kantaro Suzuki) மிகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தன.
ஜப்பான் நிபந்தனைகளுக்கு உட்படாவிடில் “ தகுந்த கடுமையான அழிவை” (prompt and utter destruction) அது சந்திக்க நேரிடும் என்று சொல்லப்பட்டது.
இதற்கான தகுந்த பதிலை அமெரிக்கா எதிர்பார்த்துக் காத்திருந்தது.
பத்திரிகையாளர்கள் ஜப்பானிய பிரதம மந்திரியை இது. குறித்துக் கேட்ட போது அவர், “இன்னும் ஒரு இறுதி முடிவுக்கு தான் வரவில்லை” என்றார். “இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை” என்றார். மொகுசட்சு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார். இந்த வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் உண்டு. ‘இப்போதைக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை’ என்று ஒரு அர்த்தம்; “கமெண்டை நிறுத்தி வைத்திருக்கிறேன்” என்று இன்னொரு அர்த்தம். அதாவது இது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன் என்பது தான் உண்மையான அர்த்தம். இந்த வார்த்தை ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களிடம் அனுப்பப்பட்டபோது அவர்கள், “இதை அவமதித்து ஒதுக்குகிறேன்” என்று ஜப்பானிய பிரதம மந்திரி சொல்வதாக மொழிபெயர்த்தனர்.
இந்த வார்த்தைகளை அப்படியே அமெரிக்க ஊடகங்கள் பிரசுரித்தன. அமெரிக்கா முழுவதும் பொங்கியது. பத்து நாட்கள் கழித்து ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டது.
அணுகுண்டு போட்டு அழிவை உண்டாக்கி உலகப்போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவை முடிவெடுக்க வைத்தது மொகுசட்சு.
ஸ்டாலின், சர்ச்சில், ட்ரூமன், சியாங் கே ஷெய்க் ஆகியோர் ஜப்பான் சரணாகதி அடைந்து விடும் என்றே நம்பினார் ஆனால் அவரது பதிலால அவர்கள் வெகுண்டனர். அணுகுண்டு வீசப்பட வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.
ஒரே ஒரு வார்த்தை தவறாக மொழிபெயர்க்கப்பட்டதே அணுகுண்டு போடப்பட்டு சுமார் 80,000 பேர்கள் ஒரு க்ஷணத்தில் அழிவதற்கான காரணமாக அமைந்தது!
London Swaminathan spoke in a Book Review Meeting at WEMBLEY Ealing Road Libray in London on 25-11-2023 (I am with poets Raja Manoharan, Ms Navajothy, Poet Amalan etc)
காந்திஜி சொற்பொழிவுகளில் தீவிரம் காட்டினாலும் சம்பாஷணைகளில்/ உரையாடல்களில் ஜோக் Joke அடிப்பார்; வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பேசி கிண்டல் செய்வார்.
காந்திஜி சென்ற பாதையெல்லாம் அவரைக்காண பிரமாண்ட கூட்டம் கூடி விடும்; இதனால் அவருக்கு தூக்கம் என்பது கூட கிடையாது
1937 ஜனவரி, சங்கரன்கோவில்
ரயில் நிற்காத ஸ்டேஷன்களிலும் கூட ரயில் பாதையை ஒட்டி ஏராளமான மக்கள் நிற்பார்கள்; இதனால் ரயில் மெதுவாகச் செல்லும். இதற்கு இரண்டு காரணங்கள்; 1.தேசபக்திக்கனல் நாடு முழுதும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது 2 பாரதி பாடியதை அவர் இறந்த பின்னர் காந்திஜி நடைமுறைக்கு கொண்டுவந்தார். பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை, பறவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை என்று பாடிய சுப்பிரமணிய பாரதி 1921ம் ஆண்டில் இறந்துவிட்டார். அந்த ஆண்டுதான் வைக்கம் போராட்டம் துவங்கியது. 1936ம் ஆண்டு நவம்பரில் 2200 கோவில்களை திருவாங்கூர் மஹாராஜா எல்லா ஜாதியினருக்கும் திறந்து விட்டதால் வைக்கம் சத்தியாக்கிரக புரட்சி வீரர் காந்திஜியின் மீது கீழ்ஜாதி மக்களுக்கு பேரார்வமும் பேரன்பும் ஏற்பட்டது.
சங்கரநாராயணார் கோவில் ஸ்டேஷனில் ரயில் சில நிமிடங்களுக்கு நின்றது. ஹரியும் சிவனும் ஒன்று என்று அறிவிக்கும் புகழ்பெற்ற கோவிலை ஸ்டேஷனிலிருந்தே பார்க்க முடியும்.
கூட்டத்தைப் பார்த்து காந்திஜி கேட்டார்:
இதோ நான் பார்க்கும் கோவிலை எப்போது ஹரிஜனங்களுக்குத் திறந்து விடப்போகிறீர்கள்?
உடனே கூட்டத்தினர் உற்சாகமாக வெகு சீக்கிரத்தில் என்று பதில் குரல் கொடுத்தார்கள் .
அப்படியா ! நான் திருவாங்ங்கூரிலிருந்து திரும்பி வருகையில் என்னை கோவில் திறப்பு விழாவுக்கு அழைப்பீர்கள் இல்லையா? சரி தானே !
உடனே கூட்டத்தில் பெரும் சிரிப்பும் பேரார்வமும் கூச்சலும் கிளம்பியது
ஆமாம், ஆமாம்
ஆனால் எங்கு மிருகங்கள் பலியிடப்படுகின்றனவோ அந்தக் கோவிலுக்கு நான் வரமாட்டேன். ஒரு பாவமும் செய்யாத பிராணிகளை நம்முடைய பாவத்தைக் கழுவ பலியிடக்கூடாது; இந்து மத்தில் எந்த சட்ட புஸ்தகமும் அப்படிச் செய்ய சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் அது ஸ்மிருதியே (இந்து சட்டப்புஸ்தகம் ) இல்லை; அப்படி பலி இட்டால் அதை நிறுத்தி விடுங்கள் .
உடனே ரயில் விசிலை ஊதிக்கொண்டு புறப்பட்டது.
xxxxx
இதையெல்லாம் தேதிவாரியாக காந்திஜியின் அந்தரங்க செயலர் மஹாதேவ தேசாய் , திருவாங்க்கூர் இதிகாசம் என்ற நூலில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்
xxxx
திருவாங்கூர் சமஸ்தானத்தில் 24 கோவில்களை தரிசித்துவிட்டு திரும்பிய காந்திஜியை பலரும் பேட்டி எடுத்தார்கள்.அதற்கு காந்திஜி அழைத்த பதில்:
“புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷத்தோடு திருவாங்கூரிலிருந்து திரும்பிவந்துள்ளேன். நான் அங்கே கண்டவை என் கற்பனைக்கு அப்பாற்பட்டவை;அவை என் இதயத்தைத் தொட்டுவிட்டன. கோவில்கள் பற்றியும் கோவில்வழிபாடு பற்றியும் உயர்ந்த , மதிப்புமிக்க எண்ணங்களை அவை என் மனதில் பதித்துவிட்டன ; நான் இதற்கு முன்னர் வட இந்தியாவிலும் பல கோவில்களுக்குச் சென்றேன்; ஆனால் அவை என் உள்ளத்தில் பக்தியை ஏற்படுத்தவில்லை; என்னைத் தட்டி எழுப்பவும் இல்லை.ஆனால் பிரமிக்க வைக்கும் திருவாங்கூர் கோவில்கள் என்னுடன் பேசின. அங்குள்ள ஒவ்வொரு படமும், சிற்பமும், சிறிய எண்ணெய் தீபமும் எனக்கு ஒவ்வொன்றைக் கற்பித்தன; அதற்காக அங்கு கண்ட எல்லாம் எனக்கு திருப்தி அளி த்ததாகவும் சொல்லமாட்டேன். நான் என்னுடைய புரட்சிகரமான திட்டத்தை மகாராஜாவுக்கு முன் வைத்தேன். மகாராஜா செய்த பிரகடனத்தை புரட்சி என்றே சொல்லுவேன்.
xxxx
ஹரிஜன்
தாழ்த்தப்பட்ட மக்களை நான் ஹரிஜன் = இறைவனின் புதல்வர்கள் என்று அழைக்கிறேன். இது நான் உருவாக்கிய சொல் அல்ல. ஒரு ஹரிஜன்தான் இந்த சொல்லை உருவாக்கினார். நான் தென் ஆப்பிரிக்க நாட்டில் வக்கீலாக தொழில் செய்தபோது என்னை கூலி வக்கீல் என்று அழைத்தனர். நாம் இங்குள்ள கீழ்ஜாதிக்காரர்களை தீண்டத்தகாதவர்கள் என்று சொன்னது போல. தென் ஆப்பிரிக்க ஆட்சியாளர் பாஷையில் கூலி என்றால் இந்தியர்; நான் அதை ஆட்சேபித்தேன். நான் இந்தியன்; என்னை இந்திய வக்கீல் என்று சொல்லுங்கள் என்று அறிவுறுத்தினேன்.
திராவிட கன்னட நாயக்கர் கடவுளையும் அவரைக் கும்பிடுவோரையும் அயோக்கியன், காட்டுமிராண்டி என்று சொன்னதை கோவில் வாசலில் வைத்தவர்கள் அயோக்கியர்கள் என்பதை காந்திஜியின் சொற்பொழிவு தெளிவாக்குகிறது; அந்த சிலைகளை தமிழர்கள் அகற்றாத வரை காந்திஜியின் பெயரைச் சொல்லவோ படத்தை வைத்துக்கொள்ளுவதோ மஹா பாவம்; சுத்த நடிப்பு; பித்தலாட்டம் என்றும் சொல்லலாம். மனச் சாட்சி உள்ளவர்கள் அவற்றை அமைதியாக அகற்ற வேண்டும். மலையாளி இந்துக்கள் இந்த வாசகங்களை பொறிக்க வைக்கத்தில் கூட அனுமதிக்கவில்லை.
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 23
கோவில் எண்கள்- 24, 25
மேலும் 2 வைணவ தலங்கள்: திருநாவாய், திருவிதாங்கோடு கோவில்கள்
108 வைணவ தலங்களில் கேரளத்தில் உள்ள மேலும் இரண்டு கோவில்கள் திருநாவாய், திருவிதாங்கோடு ஆகும்..
திருநாவாய்
சென்னை- கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு ) ரயில் மார்க்கத்தில் திருநாவாய் ஸ்டேஷன் அமைந்துள்ளது . ஸ்டேஷனிலிருந்து 2 கி.மீ. நடந்தால் கோவிலை அடையலாம். ஷோரனூரிலிருந்து பஸ்ஸில் வரலாம். திரூர் நகரில் இருந்து தெற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்திருக்கிறது.
மூலவர் – நாவாய் முகுந்தன் , நின்ற திருக்கோலம், கிழக்கு நோக்கிய கருவறை ; முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில் வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார்.
தாயார் – மலர் மங்கை நாச்சியார், சிறு தேவி
தீர்த்தம் செங்கமல சரஸ்
விமானம்- வேத விமானம்
பிராத்தியட்சமானது – லக்ஷ்மி , கஜேந்திரன், நவ யோகிகள் முன்னிலையில்
மங்களாசாசனம் – திருமங்கை ஆழ்வார் , நம்மாழ்வார்
வரலாறு- 1200 ஆண்டுகளுக்கும் முந்தைய கோவில்
சிறப்பு அம்சங்கள்
பரதப்புழை (பொன்னானி ஆறு) ஒரு புனித நதி. அந்த நதியை ஒட்டி கோவில் இருக்கிறது .
எதிர்க்கரையில் சிவனுக்கும் பிரம்மாவுக்கும் கோவில்கள் இருப்பதால் மும்மூர்த்திகளையும் ஒரே மூச்சில் தரிசிக்கலாம்..
இந்த இடத்தைக் காசிக்கு சமமாகக் கருதி நீத்தாருக்கு நீர்க்கடன் செய்யும் சம்பிரதாயமும் உளது
மலையாளத்தில் லட்சுமி சந்நிதி இங்கே இருப்பது ஒரு சிறப்பாகும் .
9 யோகிகள்
இந்த ஸ்தலத்தில் 9 யோகிகள் யாகம் செய்ததால் திரு நவ யோகி என்று அழைத்தனர். அது காலப்போக்கில் மருவி திரு நாவாய் ஆகிவிட்டது .
மகாலட்சுமியும் கஜேந்திரனும் ஒரே குளத்திலிருந்து தாமரை மலர்களைப் பறித்து விஷ்ணுவைப் பூஜித்ததாகவும், லெட்சுமி முன் கூட்டியே வந்து தாமரைகளைப் பறித்துவிடுவதால் கஜேந்திரனுக்கு பூ கிடைக்காததால் அவர் விஷ்ணுவிடம் முறையிட்டததாகவும் தலவரலாறு செப்பும். உடனே விஷ்ணுவே லெட்சுமி, மலர் பறிப்பதைத் தடுத்து, தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் — ஒரே ஆசனத்தில்- அமர்த்திக்கொண்டதாகவும் தல வரலாறு பகரும்.
திருநாவாயில் மாமாங்கம் திருவிழா போல 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படுகிறது.
கார்கடக அமாவாசை அன்று, வட கேரளத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்துக்கள் கோயிலுக்குச் சென்று, தங்கள் மூதாதையர்களுக்கு மோட்சத்தைத் அளிக்குமாறு பித்ருகிரியைகளை (பலி தர்பணம்) செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதற்காக வருகிறார்கள் .
இக்கோவில் வளாகத்தில் கணபதி, ஐயப்பன் ஆகியோருக்கும் தனிச் சந்நிதி கள் இருக்கின்றன.
கும்பம் (மாசி) மாதத்தில் வரும் ஏகாதசி நாளை நவமுகுந்த ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். மேஷம் (சித்திரை) மாதம் தொடக்கத்திலிருந்து பத்து நாட்கள் சிறப்பு விழா நடைபெறும் .
18 ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானாலும் 1921 இல் மாப்பிள்ளைக் கலகம் நடந்த போதும் இக்கோவில் தாக்குதலுக்கு உள்ளானது.
1520.
தூ வாய புள் ஊர்ந்து வந்து* துறை வேழம்*
மூவாமை நல்கி* முதலை துணித்தானை*
தேவாதிதேவனை* செங் கமலக் கண்ணானை*
நாவாய் உளானை* நறையூரில் கண்டேனே.
3758.
தேவர் முனிவர்க்குஎன்றும்* காண்டற்குஅரியன்*
மூவர் முதல்வன்* ஒருமூவுலகுஆளி*
தேவன் விரும்பிஉறையும்* திருநாவாய்*
யாவர் அணுகப்பெறுவார்* இனிஅந்தோ!— , நம்மாழ்வார்
xxxxxx
திருவித்துவக்கோடு
பாலக்காடு மாவட்டத்தில் பட்டாம்பி என்னும் ஊருக்கு அருகில் திருவித்துவக்கோடு இருக்கிறது; ‘திருமிற்றக்கோடு’, ‘திருவீக்கோடு’, ‘ஐந்து மூர்த்தி திருக்கோவில்’ என்றும் இதனை வழங்குவர்.
இங்குள்ள விஷ்ணு கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்று; குல சேகர ஆழ்வாரால் பாடப்பெற்றது ஆகையால் 1200 ஆண்டுக்கும் மேலாக பழமை உடையது .
மூலவர்- உய்யவந்த பெருமாள் , அபயப் ரதன் ;
நின்ற திருக்கோலம்; தெற்கு நோக்கிய சந்நிதி
தாயார் – வித்துவக்கோட்டு வல்லி , பத்மாசனி
தீர்த்தம் – சக்ர தீர்த்தம்
விமானம் – தத்துவ காஞ்சன விமானம்
பிராத்தியட்சம் ஆனது- அம்பரீஷன் முன்னால்
மங்களாசாசனம் –குலசேகர ஆழ்வார்
சிறப்பு அம்சங்கள்
சிவன் சந்நிதியும் விஷ்ணு சந்நிதியும் ஒரே கோவிலில் இருக்கின்றன. இது போல 108 வைணவ ஸ்தலங்களில் பத்து ஊர்களில் இருக்கின்றன.
கோவிலுக்குள் சென்றவுடன் முதலில் காட்சி தருவது சிவ பெருமான். அதற்குப் பின்னாலுள்ள சந்நிதியில் பெருமாளை சேவிக்கலாம். பெருமாளை வ்யூஹ அவதாரத்தில் காணவிரும்புவதாக அம்பரீஷன் வேண்டியதால் இங்கு பகவான் 4 அவதாரங்களில் தோன்றியதாக ஐதீகம். எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும், மகாவிஷ்ணுவே தெரிந்திட வேண்டுமென்று வேண்டினான். விஷ்ணுவும் அவன் விரும்பியபடி, வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன்,அநிருத்தன் எனும் நான்கு வடிவங்களில் காட்சிதன்தா ர்.
தண்டிபட்லா விஸ்வநாத சாஸ்திரி எப்போதுமே எதையும் விஞ்ஞான ரீதியாகச் சிந்தித்துக் கொண்டிருப்பார். உலக சிந்தனையில் அவர் ஆழ்ந்திருப்பதே கிடையாது. தன்னைப் பார்க்க வருவோரிடம் இந்த ரீதியிலேயே அவர் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். ஒரு நாள் அவர் விசாகப்பட்டினம் அருகே உள்ள கோட்டவலசா என்ற கிராமத்திற்குச் சென்றிருந்தார். பயணத்தின் போது ஹிட்லர் அனுப்பிய பிரதிநிதிகள் அவரைச் சந்தித்தனர். முதலில் விசாகப்பட்டினம் சென்ற அவர் அங்கிருந்து ஹிட்லரின் பிரதிநிதிகளுடன் கல்கத்தா சென்றார்.
அவருடன் நயமாகப் பேசிய பிரதிநிதிகள் அவரைத் தங்களுடன் ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தான் இரண்டாம் உலக மகா யுத்தம் தொடங்கி இருந்தது.
யஜுர் வேதத்திற்கு நான்கு அம்சங்கள் உண்டு. இவற்றை நான்கு விதமாகப் பொருள் கொள்ளலாம். இந்த மந்திரங்களில் வல்லவர் விஸ்வநாத சாஸ்திரி. இவற்றை விஞ்ஞான ரீதியில் அர்த்தம் காண்பதில் அவர் நிபுணர்.
விண்ணில் ஏவும் கணைகளுக்கான மந்திரங்களுக்கு உரிய அர்த்தத்தைச் சொல்லுமாறு அவர் வேண்டப்பட்டார். அதை வைத்தே முதல் ராக்கட்டை ஜெர்மானியர் உருவாக்கினர்.
வெடி குண்டுகளை எப்படி பத்திரமாக ஓரிடத்தில் சேமித்து வைப்பது என்பது நாஜி வீரர்களுக்குத் தெரியவில்லை.
அதற்கான தீர்வை யஜுர்வேதத்தில் கண்டுபிடித்து அதை எடுத்து விஸ்வநாத சாஸ்திரி கூறினார்.
பட்டோஜி தீக்ஷிதர் எழுதிய இலக்கண நூலான சித்தாந்த கௌமுதி பற்றி அவர் எழுதிய ஒரே நூல் மட்டும் இன்று கிடைக்கிறது. இதற்கு நாகேசபட்டரின் சிறு விளக்கவுரை ஹைதராபாத் ஓரியண்டல் நூலகத்தில் இன்று உள்ளது.
இரண்டாம் உலக மகாயுத்தத்திற்குப் பின்னர் அவர் இந்தியா திரும்பவில்லை.
அவரது மனைவிக்கு மாதாந்திர தொகையாக ரூ 300ஐ ஜெர்மானிய அரசு வழங்கி வந்தது. பின்னர் மாதந்தோறும் 90ரூபாய் அவர் உயிருடன் இருக்கும் வரை வழங்கப்பட்டது. சாஸ்திரியின் மறைவுக்குப் பின்னர் இது பென்ஷன் தொகையாக அவருக்கு வழங்கப்பட்டு வந்திருக்கலாம்.
இந்தியா அவரை மறந்தே விட்டது!
இந்திரா காந்தி பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் ஜெர்மனியில் இருந்த இந்திய தூதரிடம் ஒரு இந்தியரின் படம் காண்பிக்கப்பட்டது.
அது யார் என்று தனக்குத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.
அப்போது தான் விஸ்வநாத சாஸ்திரி பற்றி அவருக்கு விளக்கப்பட்டது.
ஆர்வமும் ஊக்கமும் உடைய ஒருவர் இவரைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால் ஜெர்மனியிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இவரைப் பற்றிய பல உண்மை விவரங்களை நம்மால் அறிய முடியும்.
கூடவே வேதத்தில் புதைந்திருக்கும் விஞ்ஞான உண்மைகளையும் கூட, ஒருவேளை, கண்டறிய முடியும்!
காந்திஜி மஹா நக்கல் பேர்வழி; அவர் கேட்கும் கேள்விகளை சீரியஸாக எடுத்துக்கொண்டு அன்பர்கள் பதில் சொல்லுவார்கள். அவரோ பொக்கை வாயால் ஒரு சிரிப்பு சிரித்த பின்னரே அவர் கிண்டல் செயகிறார் என்பது புரியும்.
காந்தியின் பெர்சனல் செக்ரடரி / அந்தரங்க செயலாளர் மஹாதேவ தேசாய். காந்தியின் எல்லா சொற்பொழிவுகளையும் புஸ்தகமாக வெளியிட்டவர். இவர் 1937ல் வெளியிட்ட திருவாங்கூர் இதிகாசம் என்ற நூல் திராவிட, கன்னட ராமசாமி நாயக்கரின் முகத்திரையை கிழித்துவிட்டது; 251 பக்க நூலில் 20 பேருக்கு மேல் பாராட்டப்பட்டுள்ளனர். இந்த வைக்கம் சத்திய கிரகத்துக்கு புரட்சி என்ற மொழியை சூட்டியவரும் காந்திதான் . அந்தப் புஸ்தகத்திலோ காந்திஜியின் சொற்பொழிவிலோ திராவிட நாயக்கர் பெயர் மருந்துக்கும் இல்லை
எல்லா இந்துக்களும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்குச் சொந்தமான 2000 க்கும் மேலான கோவில்களில் செல்லலாம் என்ற பிரகடனத்தை திருவாங்கூர் மகாராஜா 12-11- 1936-ல் வெளியிட்டார். அந்த வெற்றி விழாவில் பேசுவதற்கு காந்திஜி அழைக்கப்பட்டார். கேரளத்துக்கு இந்த முறை வருவதை அவர் ஒரு சமய யாத்திரை என்றே கருதினார். 24 கேரள கோவில்களுக்குச் காந்திஜி சென்றார்..
தில்ரூபா கொண்டுவா !
1937 ஜனவரி 10ஆம் தேதி புனே நகரிலிருந்து காந்தி, தேசாய் குழு புறப்பட்டது .காந்தியின் உறவினர் கனு காந்தி என்னும் இளைஞரை காந்தி அழைத்து ,
ஏய் காந்தி, எப்பவும் வேண்டாத விஷயங்களைக் கொண்டு வராதே என்று எங்களை கண்டிப்பாய். நான் ஏற்கனவே ராட்டை முதலிய நூல் நிற்கும் விஷயங்களை பாக்PACK செய்துவிட்டேன். தில்ரூபா எதுக்கு ? என்றார்
உடனே காந்தி சொன்னார் ,
அப்படியா , என்று கேட்டு சிரித்துவிட்டு, அந்த நூல் சம்பந்தமான கட்டைத்தறிகளை எல்லாம் கீழே போட விரும்பினால் போடு;. ஆனால் தில்ரூபா கட்டாயம் வேணும் . இப்போது திருவாங்கூருக்குச் செல்லும் பயணமொரு சமய யாத்திரை . நாம் எல்லா இடமும் துளசி ராமாயணம் பாராயணம் செய்ய வேண்டும்; ஒரு வேளை , கடவுள் சித்தம் அதுவானால் , பொது இடங்களிலும் இராமாயண பாராயணம் நடக்கக்கூடும். அங்கு தில்ரூபா கிடைக்காமல் போகக்கூடும் என்றார் .
இதைக்கேட்டதும் மஹாதேவ தேசாய் மெளனம் ஆகிவிட்டார்..
மனத்தளவில் அவர் என்ன செய்ய வேண்டும் என்று காந்திஜி முன்னரே திட்டமிட்டுவிட்டது இதில் தெரிகிறது அப்படித் திட்டம் போட்ட வாறே 24 கோவில்களுக்குச் சென்று அவற்றை வானளாவ புகழ்ந்தும் பேசினார்
XXXXX
காந்தி, 2 பசு மாடுகள் வேணும் !
திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப சுவாமி கோவிலில் பிரம்மாண்ட மான பொக்கிஷங்களை பார்த்துவிட்டு காந்திஜி ஹரிஜன பையன்கள் ஹாஸ்ட லுக்கு வந்தார். கோவிலில் எல்லாம் தங்கக் குடங்கள்!!!
அப்போது வைக்கம் போரட்டத்தில் முக்கியப்பு ள்ளியான கோவிந்தன் சொன்னார்:
காந்திஜி எங்களுக்கு 2 பசுமாடுகள் மிகவும் தேவைப்படுகிறது; குஜராத்திலிருந்து அனுப்புங்களேன் .
காந்திஜி, சிரித்துக்கொண்டே, அதுக்கென்ன அனுப்புகிறேன்; பணத்தை முதலில் கொடு .
எங்ககிட்ட பணமே இல்லையே என்றார் கோவிந்தன்.
அட திருவந்திபுரம் கோவில் முழுக்க தங்கக்குடங்களைப் பார்த்தேன் ; ஒன்றைத் திருடிக்கொண்டு வா என மேலும் பலமாக சிரித்துக் கொண்டே சொன்னார்.
திருவாங்கூர் போன்ற இந்து சமஸ்தானத்தில் திருட்டு என்பதே கிடையாது . பிராமணர்களுக்குத் தங்கக் குடங்களில் இருந்து பால் வார்க்கிறார்கள்; எங்களைப் போன்ற ஏழை எளிசுக்கு பித்தளைக் குடங்களில் இருந்து நீர் மோராவது ஊத்தச் சொல்லக் கூடாதா ? இப்போதுதான் தீண்டாமை போய்விட்டதே என்கிறார் கோவிந்தன்.
காந்திஜி அப்படியே விஷயத்தை மழுப்பிவிட்டார்.
XXXXXX
உலகிலேயே பெரிய யானையா !!!
ஜனவரி 13, 1937ல். திருவானந்தபுர வெற்றிவிழா பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கண க்கான ஈழவ ஜாதி மக்கள் கூடி பெரிய ஊர்வலம் நடத்தினர்; பெரிய முகப்படாம் போர்த்திய யானைகள் ஊர்வலத்தில் வந்தன .
முன்னாள் நீதிபதியும் ஈழவ ஜாதித் தலைவருமான எம். கோவிந்தன், காந்திஜியை சந்திக்க வந்தார்.
காந்திஜி — ஊர்வலம் எப்படி இருந்தது ?
கோவிந்தன் – மிகப் பிரமாதமாகப் போனது; ஊர்வலத்தின் நீளம் ஒரு மைல் ; சமஸ்தான யானைகள் அனைத்தும் ஊர்வலத்தில் வந்தன.; அவைகளில் ஒன்றுதான் உலகிலேயே பெரிய யானை.
காந்திஜி — கண்களை சிமிட்டிக்கொண்டே , உலகிலேயே பெரிய யானையா?, திருவாங்கூர் ராஜ்யத்திலேயே பெரிய யானையா?
கோவிந்தன் – இல்லை, மஹாத்மாஜி; அதுதான் உலகிலேயே பெரிய யானை.
பீஹார் மாநிலத்திலுள்ள சோன்பூரில் ஆண்டுதோறும் நடக்கும் யானைச் சந்தைக்கு ஆயிரக்கணக்கான யானைகள் வரும். பார்த்ததுண்டா ?
இல்லை ; ஆனால் இதுதான் எங்களுக்குத் தெரிந்த பெரிய யானை.
கோவிந்தனுக்கு வேறு மாநில யானைகள் பற்றிய அறிவு இல்லை; ஆயினும் அவர் மனதைப் புண்படுத்தாதபடி காந்திஜீ யே பட்டாசு வெடிகள் பற்றிக் கேட்டு பேச்சை திசை திரும்பிவிட்டார் !!
காந்திஜி – போகட்டும்; வாண வேடிக்கைகள் எப்படி இருந்தன
கோவிந்தன்– மிகப் பிரமாதம்; பல மைல்களுக்கு அப்பாலுள்ள கிராமங்களிலும் பட்டாசு, மத்தாப்புகள் தெரிந்தன.
காந்திஜி — மஹாராஜா தரிசனம் கிடைத்ததா ? அவர் பார்த்தாரா ?
கோவிந்தன்- என்ன ஜி, இப்படிக் கேக்கிறீங்க; அவர் ஊர்வலத்தை பார்த்தார்; பாதி தூரத்துக்கு எங்களுடனே வந்தார் .
காந்திஜி – முன்னாளைய நீதிபதிக்கே இவ்வளவு சந்தோஷம் என்றால் பாமர மக்களுக்குள்ள சந்தோஷத்தின் அளவைப் புரிந்து கொள்ள முடிகிறது.
Xxxxx
சங்கரன் கோவில் சம்பவத்தை அடுத்த கட்டுரையில் காண்போம்
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 22
கோவில் எண்கள்- 22, 23
பாடல் பெற்ற வைணவ தலங்கள் திருவல்லா, திருக்கடித்தானம் கோவில்கள்
இவை இரண்டும் 108 வைணவ தலங்களின் பட்டியலில் உள்ளன
இரண்டு ஸ்தலங்களையும் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்துள்ளார்.
திருவல்லா க்ஷேத்திரத்தை நம்மாழ்வாரும் பாடியதால் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கோவில் என்பது உறுதியாகிறது.
ஒவ்வொரு கோவிலையும் தனித் தனியே சேவிப்போம்
XXXX
திருவல்லா
திருவல்லா திருவாழ் மார்பன் கோவில்
கொல்லம்- எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் திருவல்லா ரயில் நிலையம் இருக்கிறது அங்கிருந்து 5 கி.மீ உள்ளே சென்றால் கோவிலை அடையலாம்.
திருவல்லா அல்லது செங்கன்னூரில் தங்கினால் குறைந்தது 6 வைணவ திருக்கோவில்களில் பெருமாளை சேவித்து விடலாம். . கோட்டயத்திலிருந்து 25 கி.மீ; செங்கனூரிலிருந்து 10 கி.மீ .
ஸ்ரீ வல்லப க்ஷேத்ரம் என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்லுவார்கள்
திருவாழ் மார்பன் கோவில் என்பது சுருங்கி பேச்சு வழக்கில் திருவல்லா ஆகிவிட்டது
மூலவர் – கோலப் பிரான் , திருவாழ் மார்பன் ஸ்ரீ வல்லபன்
எட்டு அடி உயரத்தில்நின்ற திருக்கோலம், கிழக்கு நோக்கிய பெருமாள்
தாயார் – செல்வக்கொழுந்து நாச்சியார் , வாத்சல்ய தேவி
பெருமாள் பெயரும், தாயார் பெயரும் அழகான தமிழ் சொற்கள்
தீர்த்தம்- பம்பா நதி, கண்டாகர்ண தீர்த்தம்
விமானம் – சதுரங்க கோல விமானம்
XXXXX
சிறப்பு அம்சங்கள்
சுதர்சன சக்ரம் ஸ்தாபிக்கப்பட்டதால் மந்திர சக்தி அதிகமுள்ள இடம் .
பொன் தகடு போர்த்திய ஜொலிக்கும் த்வஜ ஸ்தம்பம் / கொடி மரம் நம்மை வரவேற்கும் .
கோவிலைப் பற்றிய 2 கதைகள்
1.கண்டாகர்ணன் என்பவன் தீவிர சிவ பக்தன். தன் காதுகளில் சிவ நாமம் தவிர வேறு எதுவும் விழாமல் இருக்க இரண்டு TWO BLUE TOOTHS ப்ளூ டூத்களை காதில் மாட்டி இருந்தான். அதாவது இரண்டு மணிகள் ; கண்டா என்றால் ஒலி எழுப்பும் BELL மணி; கர்ணன் என்றால் காது EAR . சிவ நாமம் தவிர வேறு இறைவன் பெயர் கேட்கும் இடங்களைக் கடந்து செல்லுகையில் தலையை அசைப்பான். அது மணி ஒலியை எழுப்பும் .
இவனது குருட்டுத்தனமான பக்தியைக் கண்ட இறைவன் அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு என்பதை உபதேசித்தார் ; சிவ பெருமானே அவனுக்கு எட்டெழுத்து மந் திரமான ஓம் நமோ நாராயணாய என்ற அஷ்டாக்ஷரத்தை ( 8 எழுத்து) உபதேசம் செய்தார் . அவன் இங்கு வந்து பெருமாளை வழிபட்டு முக்தி அடைந்தான் என்பது முதல் சம்பவம் .
சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்பதை உணர்த்த சிவனே, சங்கர நாராயணன் ஆகவும் ஹரிஹரன் ஆகவும் தோன்றினார்
(கண்டா கர்ணன் என்ற பெயரில் கேரள காவுகளில் ஒரு தெய்வம் வணங்கப்படுகிறது. அது வேறு)
2. சங்கர மங்கலத்தமை என்னும் பெண்ம ணி அருந்ததி போல பத்தினி; அந்த பதிவிரதை ஏகாதசி விரதம் இருந்து துவாதசி பாரணை செய்யும் விஷ்ணு பக்தை ; துவாதசியன்று ஒரு பிரம்மசாரியை அழைத்து விருந்தும் படைப்பாள் ; இதற்கு தோலகாசுரன் என்பவன் இடையூறு செய்து வந்தான் . ஒருமுறை பகவானே பாரணைக்கு வரும் பிரம்மச்சாரி போல வந்து அசுரனை வீழ்த்தினார் அப்போது விஷ்ணு அந்த பெண்ணுக்கு முழு தரிசனம் கிடைக்காதபடி மான் தோல் ஆடை (கிருஷ்ணாஜினம் ) போர்த்தி இருந்தார். பதிவ்ரதையின் வேண்டுகோளின் படி மார்பில் உறையும் லட்சுமியையும் தரிசிக்க அருள்புரிந்தார். அந்தப்பெண்ணும் பெருமாளையும் தாயாரையும் ஒரு சேரக் கண்டு பரவசம் அடைந்தார். இந்தக் காட்சியை அருளிய தலம் ஆதலால் இதை திருவல்லா (திரு வாழ் மார்பன் ) என்பார்கள் .
மங்களா சாசனம்
திருமங்கை ஆழ்வார் – 1808-1817, 2674
நம்மாழ்வார் – 3205-15
XXXXX
திருக்கடித்தானம் அற்புத/ அம்ருத நாராயணன் கோவில்
இந்தக் கோவில் கோட்டயம்- திருவல்லா சாலையில் இருக்கிறது ; ரயிலில் சென்றால் செங்கணாச் சசேரியில் இறங்கி உள்ளே இரண்டு மைல்கள் பயணம் செய்தால் கோவிலை அடையலாம்.
மஹாபாரத கால பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கோவிலைப் புதுப்பித்ததை நாம் அறிவோம். அவ்வகையில் சகாதேவனால் திருப்பணி செய்யப்பட் ட கோவில் இது .
1.தருமன் திருப்பணி செய்த கோவில் –திருச் சிற்றாறு / திருச்செங்குன்றூர்
2.பீமன் திருப்பணி செய்த கோவில்- திருப்புலியூர்
3.அர்ஜுனன் திருப்பணி செய்த கோவில்- ஆரண்முழா / திருவாறன் விளை
4.நகுலன் திருப்பணி செய்த கோவில் — திருவண் வண்டூர்
5.சகாதேவன் திருப்பணி செய்த கோவில்–திருக்கடித்தானம்
மூலவர் பெயர் – அற்புத/ அம்ருத நாராயணன்
தாயார் – கற்பகவல்லி
தீர்த்தம் – பூமி தீர்த்தம்
விமானம் – புண்யகோடி விமானம்
ப்ரத்தியட்சம் ஆனது – ருக்மாங்கதன் முன்னிலையில்
தல வரலாறு
STORY OF SPACE TRAVEL
ருக்மாங்கதன் என்பவன் சூரிய வம்சத்து அரசன்; ஏகாதசி விரத த்தை நாட்டு மக்களுக்கு கட்டாய சேவை ஆக்கி வரலாற்றில் இடம்பெற்றவன் ஒரு கடிகை நேரத்தில் (24 நிமிடங்கள்) தவம் செய்தாலே விஷ்ணுவை அடையலாம் என்பதைக் காட்டிய மன்னன்.
மன்னர் அரண்மனை தோட்டத்தில் இருந்த மலர்களை தேவர்கள் திருடி இறைவனுக்கு அர்ப்பணித்தனர். இதை அறிந்த மன்னர் அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டான். திருடியவர்கள் தேவ லோகத்துப் பிரஜைகள் என்று அறிந்தவுடன் திரும்பிப்போங்கள் என்று கட்டளையிட்டான் தேவ லோகத்திலிருந்து இங்கு வந்த தேவர்கள், திரும்பிச் செல்ல முடியாமல் தவித்தனர். அப்பொழுது கடிகை நேரத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள 3 இடங்கள்தான் ROCKET LAUNCH CENTRES பாரத நாட்டில் உள்ளன என்பதை அறிந்தனர் ; ஆயினும் விண் வெளிப்பயணம் INTER GALACIC TRAVEL மேற் கொள்ள எரிபொருள் FUEL வேண்டுமே என்று தவித்தனர். அப்பொழுது ருக்மாங்கதன் என்பவன் ஏகாதசி விரதம் இருந்து ஏராளமான தபோ சக்தியை வைத்துள்ளான். அதனை நீங்கள் கெஞ்சிக் கதறி வாங்குங்கள் என்று அசரீரி கேட்டது. ருக்மாங்கதன் பெரிய தியாகி. தேவர்கள் கேட்டதைக் கொடுத்தான்; இதனால் தேவர்கள் எளிதில் விண் வெளியில் ஏகி , தேவ லோகத்தை அடைந்தனர். அந்த ராக்கெட் தளம் இது என்பதால் ருக் மாங்கதன் என்ற மன்னனின் பெயர் இந்த தலத்துடன் சம் ப்ந்தப்பட்டுள்ளது
நொடிப் பொழுதில் அல்லாவிடிலும் ஒரு கடிகைப் பொழுதில் தியானம் செய்தால் பலன் கொடுக்கும் தலம் இது .
STORY OF PUNCTUALITY
திருக்கடித்தானம் பற்றிய இன்னும் ஒரு கதை; கடிகைப் பொழுது என்று பெயருள்ள கோவிலில் ஒரு கோவில் சிப்பந்தி கோவில் கதவைத் திறக்க தாமதம்ஸ் செய்தான் ; அவனைக் கல்லாகப் போகும்படி சபித்தனர்; அவனுடைய கல் உருவத்தையும் கோவில் வாசலில் காணலாம். எல்லா நற்குணங்களையும் மக்கள் அறிய இப்படி ஒவ்வொரு கோவிலிலும் ஒரு கதை இருக்கும். பங்க்சுவாலிட்டி PUNCTUALITY என்னும் நேரம் தவறாமையைக் கற்பிக்க சிறுவர்களுக்கு இதைக் காட்ட வேண்டும் .
கழுவெட்டிக் கல்லு கதை ANTI CORRUPTION STONE
செம்பகசேரியை ஒரு குறு நில மன்னர் ஆண்டு வந்தார் ; அவர் ஒரு பிராமணர்/ நம்பூதிரி ; அவர் படாடோபமும் அகந்தையும் மிக்கவர்; தான் பெரிய ஆள் என்பதைக் காட்ட, வேண்டுமென்றே விதிகளை மீறுவார் ; ஒரு முறை கோவில் மூடிய பின்னர் வந்தார்; கோவில் சேவகன் மீண்டும் கதைவத் திறக்க தயங்கி நின்றான்; மன்னர் அவனுக்கு பணம் கொடுத்து கோவிலைத் திறக்கச் சொன்னார்; இதை அறிந்த பெரிய மன்னர் சேவகன் தலையை வெட்ட உத்தரவிட்டார் . குறுநில மன்னனும் இறந்தான். அந்த விஷயத்தை நினைவுபடுத்த , மக்களை எச்சரிக்க மன்னரின் கழுத்துவெட்டிய சிலை உள்ளது.
இந்தக் கோவிலில் நரசிம்மன், கிருஷ்ணன் சந்திரன், சந்நிதிகளும் இருக்கின்றன .
கருவறையின் தெற்குப்பகுதியில் உள்ள தட்சிணாமூர்த்தியையும் விநாயகரையும்சிறிய ஜன்னல் மூலமாகத்தான் தரிசிக்க முடியும்.
நரசிம்மரின் உக்கிரத்தைக் குறைக்க பால் பாயாசம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. நரசிம்மருக்கு பூஜைகள் நடைபெறும்போது ‘நாராயணீயம்’ சொல்லப்படுகிறது.
கேரள பாணி கட்டிடக் கலை ; 108 வைணவ தலங்களில் ஒன்று.
இக்கோவிலைச் சுற்றி சிதலமடைந்த மண்டபம், மற்றும் வெளிப்புற வாயிற் கதவருகேயுள்ள சுவர்ச் சிற்பங்களில் பெண்கள் குடைபிடித்து நடன மிடுதல் போல சிற்பங்கள் இருக்கின்றன .
திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் – 3502- 12
—சுபம்—-
TAGS பாடல் பெற்ற, வைணவ தலங்கள், திருவல்லா, திருக்கடித்தானம்
கேரள மாநிலத்தின், புகழ்பெற்ற 108 கோவில்கள், PART 22
நிறைகுடம் தளும்பாது. ஆனால் அரைகுறையாக நிரப்பப்பட்ட குடமோ கடகடவென சத்தமிட்டுக் கொண்டே இருக்கும்.
இது எதைக் குறிக்கிறது. நன்கு படித்த ஒருவன் அதிகம் படிக்காதவரைப் பார்த்து கர்வப்பட மாட்டான். ஆனால் அரைகுறையாகப் படித்தவனோ தன்னைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்வான். (தனக்குத் தெரியாததே இல்லை என்பான்.)
சம்பூர்ண கும்போ ந கரோதி சப்தமர்தோ கடோ
கோஷமுபைதி நூனம் |
வித்வான்குலீனோ ந கரோதி கர்வம்
குணைர்விஹீனா பஹூ ஜல்பயந்தி ||
பாம்பைக் காட்டிலும் கொடியவன் வில்லன்!
ஒரு அழகிய சுபாஷிதம். பாம்பையும் வில்லனையும் ஒப்பிடுகிறது.
பாம்பு கொடியது. வில்லனும் கொடியவன். ஆனால் வில்லனோ பாம்பை விட சற்று அதிகம் கொடியவன். எப்படி? பாம்போ ஒருவனை மட்டுமே கொல்கிறது. ஆனால் வில்லனோ அநேகம் பேரைக் கொல்கிறான்.
இதை விளக்கும் சுபாஷித ஸ்லோகம் இது:
சர்ப: க்ரூர: கல: க்ரூர: சர்பாத் க்ரூரதர: கல: |
சர்ப ஏகாகினம் ஹந்தி கல: சர்வவிசாஷக: ||
வீடு வீடாவது இல்லத்தரசியாலேயே!
ஒரு வீடை வீடு என்று எப்போது சொல்ல முடியும். அது வெறும் கட்டிடமாக இருக்கும் போது அதை வீடு என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த வீட்டில் இருக்கும் இல்லத்தரசியே அதை வீடாக ஆக்குகிறாள். அப்படி ஒரு இல்லத்தரசி இல்லாத வீடு காட்டிற்குச் சமானம்.
ந க்ருஹம் க்ருஹமித்யாஹ்ர்க்ருஹிணி க்ருஹமுச்யதே |
க்ருஹம் து க்ருஹிணிஹீனம் காந்தாரமிதி மன்யதே ||
வளத்திற்கான எரிபொருள்கள் ஏழு
வளத்தை ஊக்குவிக்கும் எரிபொருள்கள் ஏழு.
அவையாவன : 1) உறுதி 2) பொறுமை 3) தயை 4) சுத்தம் 5) காருண்யம் 6) மிருதுவான பேச்சு 7) நண்பர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருக்கும் தன்மை
இந்த ஏழும் வளத்தை ஊக்குவிக்கும் எரிபொருள்களாகும்.
த்ருதி: க்ஷமா தயா சௌசம் காருண்யம் வாக்நிஷ்டூரா |
மித்ராணாம் சானபித்ரோஹ: சப்தைதா: சமித: ச்ரிய: ||
மனிதனை உயர்த்தும் எட்டு குணங்கள்
மனிதர்களின் குணாதிசயத்தை உயர்த்த எட்டு குணங்கள் உள்ளன.
அவையாவன: அறிவு, உயர்ந்த குலம், கட்டுப்பாடு, கல்வி, வீரம்,
வார்த்தையில் கட்டுப்பாடு, தனது தகுதிக்குத் தக்கபடி தானம், நன்றி.
ஆக இந்த எட்டுக் குணங்கள் இருந்தால் ஒரு மனிதன் உயர்ந்தவனாக ஆகி விடலாம்.
அஷ்டௌ குணா: புருஷம் தீபயந்தி ப்ரக்ஞா ச
கௌல்யம் ச தப: ச்ருதம் ச |
பராக்ரமச்சாபஹுபாஷிதா ச தானம் யதாசக்தி
க்ருதக்ஞதா ச ||
ரகசியமாகக் காக்க வேண்டிய விஷயங்கள் ஒன்பது
ஆயுர்வித்தம் க்ருஹசித்ரம் ரஹஸ்யம் மந்த்ரமோஷதம் |
தபோ தானாவமானௌ ச நவ கோப்யானி காரயேத் ||
ஒன்பது விஷயங்களை ஒருவன் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவையாவன : 1) ஒருவனின் ஆயுள் 2) செல்வம் 3) வீட்டின் நிலைமை (ஏதேனும் சொல்லக்கூடியதாக இல்லாமல் இருந்தால் சொல்லக் கூடாது) 4) ரகசியம் 5) மந்த்ர (உபதேசம்)
6) மருந்து (எடுத்துக் கொள்ளும் சிகிச்சை மற்றும் மருந்து) 7) தவம் 8) தானம் 9) தான் பட்ட அவமானம்
I am delighted to address for the first time in during my pilgrimage a women’s meeting. I should therefore have given you much longer time and tried to make fuller acquaintance of you who have gathered together in such a large number, and , where for the first time a sister has made her reception speech in Hindi. I thank you both for the welcome and for the Hindi address.
I have often said that untouchability is a great blot on Hinduism and it threatened the very life of Hinduism. The Proclamation (allowing all Hindus into temples) has come in very good time to enable us to wipe out the blot. But by itself it cannot do so. The Maharajah’s work was finished with the proclamation. It is for you to root out untouchability by carrying the proclamation in full effect. This work of carrying through the process of purification devolves principally on Savarna Hindus (caste Hindus). I have often said that it is women alone who can be protectors of religion inasmuch as they are the custodians of the purity of the people. It is particularly women’s work, because the purification of religion is ultimately a matter purification of ones heart.
Gandhiji took inspiration from the fact that Travancore Maharaj goes to the Thiruvananthapuram Anatha Padmanabha Swami temple before leaving the state and comes to the temple on return, before taking up his work again.
Gandhiji praised King Marthanda Varma and said that the idea of dedication did not originate with Marthanda Varma. Lithic records show as early as 14th century the Maharajhs of Travancore called themselves,
Shri Padmanabha- Padakamala- Paramaradhaks.
Padmanabadas is only a beautiful abbreviation of this older appellation.
xxxx
Gandhiji after returning from Travancore answered a believer in an interview,
“I certainly left Travancore with spiritual treasures that I had newly discovered. For what I saw there was beyond my expectations and more than delighted my hear . the temples gave me a loftier and nobler idea of temples and temple worship. I had visited temples before in North India but I had not done so in devout spirit, and they had failed to stir me. But the majestic Travancore temples spoke to me. Every carving, every little image, every little oil lamp had a meaning for me. But that does not mean that I am satisfied with everything. I put my revolutionary plan before His Highness in my last speech, for I took upon the Proclamation itself as revolutionary”.
xxx
Temples – Link with Gods (13-1-1937 Trivandrum Speech)
I must mention what I saw at the great Padmanabha Temple. It will perhaps best illustrate what I am saying about the purely religious and spiritual revival. In the days of my youth, I went to many temples with the faith and devotion with which my parents had fired me. I have refrained from going to temples unless they were opened to everyone called untouchables.
In the Trivandrum temple there were thousands awaiting arrival of my party . but there was no noise no bustle. Untouchables of yesterday were in the silent concourse, perhaps equal numbers. I could not distinguish between the two. All had almost the same caste marks on their bodies, all had the same kind of garments.
Priest was interpreting each figure in his own choice. But without giving me that particular interpretation he made me realise that these temples were so many bridges between the Unseen,, Invisible and Indefinable God and ourselves who were infinitesimal drops in the Infinite Ocean. we the human family are not all philosophers we are of the earth very earthy, and we have not satisfied with contemplating on the Invisible God. Somehow or other we want something which we want to touch, something which we can see, something before which we can kneel down. It does not matter whether it is a book , or an empty stone building or a stone building inhabited by numerous figures. A book will satisfy some, an empty building will satisfy some, an empty building will satisfy others and many others will not be satisfied unless they see something inhabiting these empty buildings. Then I ask you to approach these temples not as if they represented a body of superstitions. If you will approach these temples with faith in them, you will know each time you visit them you will come away from them purified, and with faith more and more in the living god.
In another address Gandhiji said that he had never visited so many temples in his life. It was a pilgrimage.
–subham—
Tags- Temples, women, link with gods, untouchability , abolished, Kerala
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 21
PICTURES ARE TAKEN FROM WEBSITES; THANKS FOR UR GREAT PICTURES.
கோவில் எண்கள்- 20, 21
திருப்புலியூர், திருச்செங்குன்றூர் கோவில்கள்
மலை நாட்டு 13 விஷ்ணு தலங்களில் திருப்புலியூரும் திருச்செங்குன்றூரும் பாடல் பெற்ற (மங்களாசாசனம் செய்த) தலங்கள் ஆகும்.
108 வைணவ தலங்களில் ஒன்று
செங்கன்னூர்தான் திருச்செங்குன்றூர் என்ற கருத்தும் உள்ளது. ஆயினும் வைணவ நூல்களில் காணப்படும் விஷயங்கள் பெருமாளைப் பற்றி மட்டுமே பேசுகின்றன; கண்ணகியோ பகவதியோ, சிவனோ அங்கு பேசப்படுவதில்லை.
திருவல்லாவிலிருந்து 10 கிலோ மீட்டர் .
திருச்செங்குன்றூர் சிறப்புகள்
திருச் சிற்றாறு என்ற பெயரும் உண்டு .
மூலவர் – இமையவரப்பன், நின்ற திருக்கோலம்,மேற்கே திருமுக மண்டலம்
தாயார்- செங்கமலவல்லி
தீர்த்தம் – சங்க தீர்த்தம் , திருச் சிற்றாறு
விமானம் – ஜகஜ்ஜோதி விமானம்
ப்ரத்தியட்சம் ஆனது – ருத்த்ரன்/ சிவன் முன்னால் .
நான்கு அடி உயர பெருமாளின் நான்கு கைகளில் சங்கு, சக்கரம், தாமரை உளது; ஒரு கையில் ஒன்றும் இல்லை.
திருவோணம், வைகுண்ட ஏகாதசி ஆகியன முக்கிய பண்டிகைகளாக கொண்டாடப்படுகின்றன .
கேரள பாணியில் அமைந்த கோவில் இது.
கோவிலின் பிற சந்நிதிகளில் சாஸ்தா, நாகர், யக்ஷி, பகவதி ஆகியோரை தரிசிக்கலாம்
கோவிலில் பிற்கால சேர மன்னர் கல்வெட்டு உளது
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாடிய 108 திருப்பதி அந்தாதியிலும் இந்த ஸ்தலம் இடம்பெறுகிறது .
கோவிலின் தோற்றம்
இதை தர்மபுத்திரர் பிரபலப்படுத்தியதாக ஐதீகம் . தருமன், மஹாபாரத யுத்தத்தில் , ஒரு பொய் சொன்னார்; கிருஷ்ணன் சொன்னபடி, அஸ்வத்தாமா ஹதஹ என்று உரத்த குரலில் சொல்லிவிட்டு, குஞ்சரஹ (யானை) என்பதை தாழ்ந்த குரலில் சொன்னார். உண்மையில் அஸ்வத்தாமா என்ற பெயர் யானைக்கும் உண்டு; துரோணர் மகனுக்கும் அதே பெயர்; மகன் மீது பேரன்பு கொண்ட துரோணருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு வில்லைக் கீழே போட்டார் ; தர்மன், அந்த பிராமணனைக் கொன்றார். இது தர்மரின் மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. ஆகையால் வனவாச காலத்தில் இங்கு வந்து ஆலயத்துக்கு திருப்பணி செய்து , நதியில் குளித்து பூஜைகளையும் செய்தார் என்பது நம்பிக்கை.
பெருமாளை தேவாதி தேவன் என்பர்; அதாவது கண் இமைக்காத தேவர்களுக்கு இறைவன் என்பதால் இமையவர் அப்பன் என்று பெருமாளுக்குத் திருநாமம்.
நம்மாழ்வார் பாடிய கோவில் என்பதால் இது 1200 ஆண்டுகளுக்கு முன்னரே புகழ்பெற்று விளங்கியதை அறிய முடிகிறது
கேரளத்தில் செங்கன்னூரிலும் அருகிலும் நிறைய புகழ்பெற்ற கோவில்கள் இருப்பதால் அது புண்யபூமி என்பதை விளக்கத் தேவை இல்லை .
நம்மாழ்வார் பாடிய பாசுரத்திலிருந்து சில பாடல்கள்
3596.
வார்கடா அருவி யானை மாமலையின்* மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி*
ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து* அரங்கின் மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*
போர்கடா அரசர் புறக்கிட* மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த*
சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே
3597.
எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்* இமையவர் அப்பன் என்அப்பன்*
நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் பாடிப்பரவிய (மங்களாசாசனம் செய்த) கோவில் இது.
மூலவர் – மாயப்பிரான் , நின்ற திருக்கோலம், கிழக்கு நோக்கிய கர்ப்பக்கிரகம்
தாயார் – பொற்கொடி நாச்சியார் (ஸ்வர்ணலதா என்பதன் அருமையான தமிழ் மொழிபெயர்ப்பு)
தீர்த்தம் – பூஞ்சுனை தீர்த்தம், ப்ராக்ஞா சரஸ்
விமானம் – புருஷோத்தம விமானம்
பிரத்தியட்ச மானது – சப்த ரிஷிகள் முன்னால்
கோவிலின் வரலாறு
கேரளத்தில் உள்ள ஐந்து தலங்கள் பஞ்ச (5) பாண்டவர்களால் திருப்பணி செய்யப்பட்டதை அறிகிறோம். அவ்வகையில் இது பீம சேனனால் திருப்பணி செய்யப்பட இடம் ஆகும்.
சிபி என்ற மன்னனின் மகன் பெயரை விருஷாதர்பி.அவன் அரசா ண்டபோது பஞ்சம் ஏற்பட்டது அப்போது அங்கு வந்த சப்த ரிஷிகளுக்கு அவன் தானம் செய்ய வந்த போது அவர்கள் அதை ஏற்க மறுத்தனர். கோணல் புத்திகொண்ட மந்திரிகள் , பழங்களுக்குள் தங்க காசுகளை வைத்து ரிஷிகளிடம் கொடுக்க, அதை ரிஷிகள் ஞான திருஷ்டியால் அறிந்தனர். அவர்கள் அதை ஏற்கவில்லை.
பின்னர் மன்னன் ஒரு யாகம் செய்து க்ருத்யை என்ற மாயப்பெண்ணை உண்டாக்கி முனிவர்களை அழிக்க ஏவினான். அவர்களை இந்திரன் புலி உருவத்தில் வந்து வீழ்த்தினான் . அப்போது 7 ரிஷிகளும் இறைவனைப் பாடித் துதித்தனர் நாராயணனும் மாயப்பிரானாக வந்து காட்சி கொடுத்தார்.