Prince of Wales Visit to Eastern Countries: Part two (Post No.12,571)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,571

Date uploaded in London – –  –  10 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I posted rare pictures of Prince of Wales visit to Eastern Countries yesterday; here is the second and last part .

–subham—

மட்டக்களப்பில் அதிசய சிவன் கோவில்- இலங்கை ஆலயங்கள்-23 (Post No.12,570)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,570

Date uploaded in London – –  –  10 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 23

48.கொக்கட்டிச்சோலை சிவன் கோவில்

புல்லுண்ட கல் நந்தி” இக்கோவிலின் பெருமைகளில் ஒன்றாக விளங்குகின்றது.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் மட்டக்களப்பு நகருக்குக்கருகில் கொக்கட்டிச்சோலை  தான்தோன்றிய ஈஸ்வரன் கோவில் இருக்கிறது  கிறிஸ்தவ மதவெறியர்களிடம் இருந்து தப்பிக்க இறைவன் இங்கு ஒரு அதிசயம் நடத்தினார். மதுரையில் திருவிளையாடல் புராணம் சொல்லும் 64 திருவிளையாடல்களில் ஒன்று கல்யானை  கரும்பு தின்ன கதை ஆகும்;  அதே போல கல் நந்தி,  புல் தின்ற அதிசயத்தைக் கண்ட  போர்ச்சுக்கீசிய மத வெறியர்கள் கோவிலில் கை வைக்காமல் சென்று விட்டனர்.

இதே போல பல நிகழ்ச்சிகள் உண்டு. முஸ்லீம் மத வெறியர்கள் தென்னாட்டிலுள்ள எல்லா கோவில்களையும் இடித்துத் தரைமட்டமாக்கி வந்தனர். திருப்பரங்குன்றம் கோவிலை இடிக்கவந்த போது சிற்பி, கோவில் கோபுரத்தில் நின்று குதித்து தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்த மத வெறியர்கள் ஓடிவிட்டனர்

கொக்கட்டிச்சோலை கதையைக் காண்போம்

மட்டக்கிளப்பிலிருந்து பத்து மைல் தொலைவில் கொக்கட்டிச்சோலை இருக்கிறது ; இங்குள்ள சிவன் கோவிலில் ‘தான் தோன்றிய/ ஸ்வயம்பூ  லிங்கம்’ (தான்தோன்றீஸ்வரம்) இருக்கிறது. கோவிலை இடிக்க வந்தவர்கள் முதலில் நந்தி சிலையை உடைக்க வந்தனர். குருக்களும் பக்கதர்களும் சேர்ந்து இடிக்காதீர்கள்; இது உயிருள்ள காளை ; புல்லையும் தின்னும் என்று சொன்னார்கள்; அப்படியா? புல்லைத் தின்னட்டும்! என்றனர். கோவில் குருக்கள் புல்லைக் கொடுக்கவே அது அழகாக சாப்பிட்டது; அதைப்  பார்த்த அவர்கள் பயந்தனர்; வியந்தனர்; கோவிலை இடிக்காமல் ஓடி விட்டார்கள்.

ஏன் சில இடங்களில் மட்டும் இப்படி அற்புதங்கள் நிகழ்கின்றன? என்று வாசகர்கள் வியக்கலாம். பக்தர்களின் நம்பிக்கை, அங்குள்ள கோவிலின் சக்தி, அர்ச்சகரின் சக்தி மூன்றும் கூடினால் அற்புதம் நிகழும். முத்துசுவாமி தீட்சிதர் மனம் உருகி அமிர்தவர்ஷனி ராகத்தைப்  பாடியபோது மழை பெய்தது; நாம் பாடினால் மழை பெய்வதில்லை. ஆதி சங்கரர் ஏழைப் பெண்மணி வீட்டின் வாசலில் நின்று கனக தாரா ஸ்தோத்திரம் சொன்னபோது தங்க நெல்லிக்காய் மழை பெய்தது; நாமும் நம்பிக்கையுடன், தூய்மையுடன், சுய நல நோக்கு இல்லாமல் பாடினால் அற்புதங்கள் நிகழும் .

இந்தக் கதைகளில்  எல்லாம் இழையோடும் ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா ? தனக்கு என வேண்டாமல் பிறருக்காக வேண்டிய சம்பவங்கள் இவை.

இனி சுயம்பூ லிங்கம் கிடைத்த கதையைக் காண்போம். குண சிங்கம் என்பவர், கலிங்க நாட்டு இளவரசி உலக நாச்சி அம்மையார் / லோக நாயகி தேவி என்பவரை மணந்து கொண்டு ஆட்சி புரிந்தார். அக்காலத்தில் திலதன்  என்பவன் காட்டின் வழியாக வருகையில் ஒரு மரத்திலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டே  இருக்கும் அற்புதத்தைக் கண்டு மன்னரிடம் சொன்னான்.அவனும் அங்கே  சென்று மரத்துக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதைத் தோண்டிப் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டான் ; எவ்வளவோ முயற்சி செத்தும் லிங்கத்தை பெயர்த்து எடுக்க முடியாததால்  கொக்கு நெட்டி மரத்தைச் சுற்றிக் கோவில் எழுப்பினான்.

இதை இன்று உலகின் 100 அதிசயங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்ட மதுரை மீனாட்சி கோவிலுடன் ஒப்பிட்டுப்பார்த்ததால் இந்தக் கதையின் உண்மை தெள்ளிதின் விளங்கும்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தனபதி என்ற பெயருள்ள வணிகர்/ செட்டியார் அடுத்த ஊரில் பிஸினஸ் Business  விஷயங்களை முடித்துவிட்டு கடம்பவனக்  காட்டின் வழியாக மதுரைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். காட்டின் நடுவே இரவு நேரத்தில் பேரொளி வீசுவதைக் கண்டு அருகில் சென்று பார்த்தபோது இந்திராதி தேவர்கள், ஒரு சிவலிங்கத்தைப்  பூஜிப்பதைக் கண்டார். மறு நாள் பாண்டிய மன்னரிடம் இதைச் சொன்னவுடன், அவரும் மந்திரிகள் புடை சூழ காட்டிற்குள் வந்து பார்த்த போது சிவலிங்கத்தைக் கண்டு ஆனந்தித்து கோவில் எழுப்பினார். இன்றும் உலகப் புகழ்பெற மதுரை மீனாட்சி கோவிலில் துர்க்கை சந்நிதிக்கு முன்னர் ஒரு கடம்ப மரம் வெள்ளிக்கவசத்துடன் இருப்பதைக் காணலாம். கோவிலுக்கு வரும் மதுரை மக்கள் அந்த மரத்தை வலம் வந்தே அடுத்த சந்நிதிக்குப் போவார்கள் .

இதிலும் சில பல விஷயங்கள் இழையோடிச் செல்லுவதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். கிழக்கு இலங்கையில் கலிங்க நாட்டு ராணி இருந்ததை கொக்கட்டிச்சோலை நிரூபிக்கிறது.விஜயன் காலத்தில் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் – கலிங்கர் (விஜயன்) கலப்பு மணம் நடந்த தை மஹாவம்சம் காட்டுகிறது. அது மட்டக்களப்பு மன்னர் ஆட்சியிலும் நீடித்ததைக் காண்கிறோம். மற்றும் ஒரு விஷயம்  ஸ்வயம்பூ  லிங்கங்கள் இமயம் முதல் கண்டி- கதிர்காமம் வரை பூஜிக்கப்பட்டதையும் அறிகிறோம். மதுரையைப் பொறுத்தமட்டில் குறைந்தது 2300 ஆண்டு வரலாறு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக சிவலிங்க வழிபாடு இந்திய- இலங்கை நிலப்பரப்பில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருவதையும் இது காட்டுகிறது.

யாழ்ப்பாண  ராஜ்யம் பற்றி புஸ்தகம் எழுதிய எஸ். பத்மநாதன் எழுதிய விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அவர் சொல்கிறார் ,

“இந்த ஆலயத்தின் விமானம், ஸ்தூபி, செங்கல் கட்டிடம்  ஆகியவற்றின்  அமைப்பு 13-ஆம் நூற்றாண்டு  பாண்டியர்கால பாணியில் அமைந்துள்ளது”.

கலிங்க மஹா 1215-1255 என்ற மன்னன், தீவிர சைவன் என்பதையும் வரலாற்றிலிருந்து அறிகிறோம்.

தற்போது  பூஜைகள், விழாக்கள் ஆகியன முறையாக நடக்கின்றன உள்ளூர் மக்கள், தான் தோன்றி அப்பன் என்று இறைவனை அன்போடு அழைக்கின்றனர். ஆகஸ்ட்/ ஆவணி பெளர்ணமியில்  15 நாள் உற்சவம் நிறைவு பெறுகிறது தேர்த் திருவிழா நாளில் 2 பெரிய ரதங்கள் பவனி வருகின்றன மறுநாள் தீர்த்தத் திருவிழா, வேட்டைத் திருவிழா நடைபெறுகிறது .விழாக்காலத்தில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

–சுபம் — 

TAGS- கொக்கட்டிச் சோலை, சிவன் கோவில், தான் தோன்றி ஈஸ்வரன் , மட்டக்களப்பு , தான்தோன்றீஸ்வரம்

நள வெண்பா -கவின் மிகு சொற்றொடர்கள் (Post No.12,569)

Nala and Damayanti

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,569

Date uploaded in London –  10 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(புகழேந்திப் புலவர் இயற்றியது)

ச.நாகராஜன் 

கவின் மிகு சொற்றொடர்கள்

மொத்தப் பாடல்கள் : 405

(சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

Damayanti

 1. பைந்தொடையிற் தேன் பாடும் தார் (பாடல் எண் 2)

 2.. மொழி முறையே கோத்த முனி (5)

 3. தோளிரண்டும் அன்றோ துணை (9)

 4. மேதினியில் வேறுண்டோ என் போல் உழந்தார் இடர் (12)

 5. பண்டு கலியால் விளைந்த கதை (13)

 6. ஞானக் கலைவாழ் நகர் (15)

 7. வென்றி மதவேடன் வில்லெடுப்ப வீதியெலாம் தென்றல் மதுநீர்

    தெளித்து வர (23)

 8. செந்தேன் மொழியாள் (37)

 9. அறங்கிடந்த நெஞ்சு  மருளொழுகு கண்ணும் (48)

10. பேரழகு சோர்கின்ற தென்னப் பிறைநுதன் மேல் நீரரும்ப (55)

11. பா வேய்ந்த செந்தமிழாமென்னப் பரந்ததே (57)

12. புள்ளுறையுஞ் சோலைகளும் பூங்கமல வாவிகளும் (58)

13. வழி மேல் விழி வைத்து வாள்நுதலாள் நாம மொழி மேற் செவி வைத்து (59)

14. தேனாடுந் தெய்வத் தருவுந் திருமணியும் (68)

15. குலத்துக்கோர் மெய்த்தீபம் (71)

16. வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்ப (95)

17. நீணிலா வென்னும் நெருப்பு (̀100)

18. ஆழ்துயரம் ஏதென்றறிகிலேன் (116)

19. நித்திலத்தின் பொற்றோடு நீலமணித் தோடாக (127)

20. பேதை மடமயிலைச் சூழும் பிணைமான் போல் (128)

21. ஊசலாடுற்றாள் உளம் (147)

22. ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி இருவரென்னும் தோற்ற,மின்றி (164)

23. கொங்கை முகங்குழைய கூந்தல் மழை குலையச் (167)

24. சில்லரிக் கிண்கிணிமென் தெய்வமலர்ச் சீறடி (190)

25. கடப்பார் எவரே கடு வினையை (220)

26. இன்றிருந்து நாளை யெழுந்தருள்க (223)

27. சூழ்கின்ற மாய விதியின் வலி நோக்கி (230)

27. பொய்ம்மை விலக்கினான் நெஞ்சத்தை வேறாக்கி நின்று கலக்கினான் வஞ்சக் கலி (266)

28. ஐயகோ என்னப் போய் வீழ்ந்தாள் (277)

29. வான் முகிலும் மின்னும் வறுநிலத்து வீழ்ந்தது போல் (279)

30. பொய்யடையாச் சிந்தைப் புரவலனை (339)

31. மேலாடை வீழ்ந்ததெடுவென்றானவ்வளவில் நாலாறுகாதம் கடந்ததே (357)

32. பாவலன் பால் நின்ற பசி போல நீங்கிற்றே காவலன் பால் நின்ற கலி (360)

33. செந்தமிழோர் நா வேந்த சொல்லாளென்று போற்றிசைக்கும் (402)

34. கார் பெற்ற தோகையோ கண் பெற்ற வாண் முகமோ நீர் பெற்றுயர்ந்த நிறைபுலமோ (404)

**

நளவெண்பா நூலை பல இணையதளங்களில் பார்க்கலாம்.

www.projectmadurai.org இணையதளத்தில் உள்ள தொடர் எண் 15

Prince of Wales Visit to India and other Eastern Countries (Post No.12,568)- Part 1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,568

Date uploaded in London – –  –  9 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Prince of Wales toured 41,000 miles in 1921 and 1922. He visited India where several Maharajahs welcomed him honouring him with parties. One Maharaja named his children after the prince and princes of Britain. One arranged dance on swords. Tibetan Lamas welcomed him with music from long pipes. In Malaya and Singapore tribal dances were arranged for him. He saw huge decorated Indian elephants. Like David Attenborough he also entered forests, surrounded by 100 people with guns, to hunt a few animals. In BBC we see only Attenborough and animals and they hide 100 people with guns protecting him. But here there is no cheating like that. The Prince was shown with 20 elephants, protecting him. Pictures will tell you more stories; here are the pictures from 100 year old book.

to be continued………………………………

tags- Prince of Wales, Indian Maharajas

பனங்காமம் சிவன் கோவில்- இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற…… PART 22 (Post No.12,567)

Oddisuttan Temple, Sri Lanka

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,567

Date uploaded in London – –  –  9 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

PICTURES ARE FROM FACEBOOK.

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 22

45 பனங்காமம் சிவன் கோவில்

வடக்கு வன்னி பகுதியில் பனங்காமம் என்ற கிராமம் உள்ளது. ஒரு காலத்தில் இது வன்னி சிற்றரசர்களின் ஆட்சிபீடமாக இருந்தது  இங்கிருந்துதான் கயிலாய வன்னியன் (1644-1678) படை எடுத்து வந்த

பறங்கித்தலையர்களை –போர்ச்சிகீசிய, மற்றும் டச்சுக்காரர்களை –எதிர்த்து நின்றான். போர்ச்சுகீசியர்களால் இந்த இடத்தைப் பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர்களை அடுத்துவந்த டச்சுக்கார அழிவுப்படைகள்,  நல்ல மாப்பாண வன்னியனை தேசத்துரோக குற்றத்தின் கீழ் சிறையில் தள்ளியது . பின்னர் டச்சுக்காரர்களிடம் செல்வாக்கு பெற்ற செட்டியார் அவரை விடுவித்தார்..

இங்கு காட்டுப் பகுதிக்குள் பழைய சிவன் கோவில் இருக்கிறது ; கர்ப்பக்கிரகத்தில் அழகான சிவலிங்கம் இருக்கிறது  வாசலில் ஞான தேவர் விநாயகர் தரிசனம் தருகிறார். பிரகாரத்தில் 3 சிவலிங்கங்கள், நந்தி தேவர் ஆகியோரையும் காணலாம் .

1970ம் ஆண்டு இந்தக் கோவிலுக்கு வழிபடச் சென்ற சார்ட்டர்ட் சிவில் என்ஜினீயரும்  ,நூலாசிரியருமான திரு. சண்முகம் ஆறுமுகம் தனது ஆங்கில நூலில்  கோவில்  படங்களை வெளியிட்டுள்ளார் .

XXX

46.ஒட்டிசுட்டான் தான்தோன்றிய ஈஸ்வரன் கோவில்  Oddusuddan Thanthonreeswarar Hindu Temple

தான்தோன்றி என்பது ஸ்வயம்பூ என்பதன் அழகான தமிழாக்கம். எங்கெல்லாம் சிவலிங்க வடிவக் கல் கிடைத்ததோ அங்கெல்லாம் இத்தகைய தான்தோன்றி/ ஸ்வயம்பூ  லிங்கக் கோவில்களைக் காணலாம்

ஒட்டிசுட்டான் / ஒட்டு சுட்டான் கிராமத்தில் ஒரு விவசாயி நிலத்தை உழுதபோது, இந்த லிங்கம் கிடைத்தது . கோவில் இருக்கும் இடமெல்லாம் குளமும் இருக்கும்; இதை அறிந்த Chartered Civil Engineer சண்முகம் ஆறுமுகம், கிராமத்தினர் உதவியுடன் புராதன முத்துராயன் கட்டு குளத்தின் வரப்பைக் கண்டுபிடித்தார். குளக்கோடன் , வன்னி ஆட்சிக்காலத்தில் கோவில் குளங்கள் நிறைந்த சிவ பூமியாக இது இருந்திருக்க வேண்டும். 

யாழ்ப்பாணத்திலுள்ள 5 மாவட்டங்களில் ஒன்றான முல்லைத்த தீவில் இந்த கிராமம் இடம்பெறுகிறது.

இங்கும் ஒரு சுவையான கதை , செவிவழியாக சொல்லப்பட்டு வரும் கதை,  கிடைக்கிறது. முன்னொரு காலத்தில் இந்தியாவிலிருந்து தாண்டவராயன், முத்துலிங்கர், திருக்கோணேர் , குமார சூரியர் ஆகிய நான்கு மஹான்கள், புண்ய சீலர்கள் வந்து 4 இடங்களில் 4  ஆஸ்ரமங்களை அமைத்தனர். அவர்களில் குமார சூரியர் தங்கிய இடம் ஒட்டுசுட்டான் ஆகும். விவசாயி கண்டெடுத்த லிங்கத்தையும் மனக்கண் களில் இணைத்துப் பார்த்தால் அக்கால கோவில் நம் கண் முன்னே தெரியும்.

ஊர்ப்பெயர் பர்றியுமொரு சுவையான கர்ண பரம்பரைக் கதை இருக்கிறது . யாழ்ப்பாண இடைக்காடு பகுதியிலிருந்து இங்கே குடியேறிய வீரபத்திரர் என்பவர் காடழித்து  நாடாக்கும்  பணியில் இறங்கி குரக்கன் (கேழ்வரகு) தாவர அடிக்கட்டைகளை எரித்து வந்தாராம். ஓரிடத்தில் இருந்த தாவரம் மட்டும் எரியவே இல்லையாம். அங்கு அவர் ஒரு தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்து , பிள்ளையார் சிலையை வைத்து வழிபடவே அந்த இடமும் கோவில் ஆகியது இதனால் ஒட்டி சுட்டான் என்ற பெயர் அந்த ஊருக்கும், அங்குள்ள சிவலிங்கத்துக்கு வேகா வன (எரியாத) ஈஸ்வரன் என்ற பெயரும் ஏற்பட்டது .

தான்தோன்றி ஈஸ்வரருக்கு  வன்னிய மன்னன் கோவில் கட்டியதாக இந்துமத சுருக்க வரலாறு SHORT HISTORY OF HINDUISM , NAVARATNAM எழுதிய நவரட்ணம் குறிப்பிடுகிறார்.

இந்தக் கோவிலின் வருடாந்திர விழா ஆனி மாத அமாவாசையில் துவங்கி 15 நாள் நடை பெறும். 13ம் நாள்நடக்கும் வே ட்டைத் திருவிழா குறிப்பிடத்தக்கது. நூற்றுக் கணக்கான இளைஞர்கள் வேட்டைக்காரர் வேடம் தாங்கி வீரத்தைக் காட்டுவர். பெளர்ணமி அன்று நடக்கும் தேர்த் திருவிழாவுக்கும் ,  தீர்த்த திருவிழாவுக்கும் , பக்கத்திலுள்ள கிராமங்களிலிருந்து  பெருந்திரளான மக்கள் வருகிறார்கள்.

இந்தக்கோவில் மீது பாமாலை புனைந்த புலவர்கள் –

குகதாசர் சபாரத்ன முதலியார், 1883

பண்டிதர் ஏ. எஸ், நாகலிங்கம்

XXXX

47. அகஸ்தியர் ஸ்தாபித்த கங்குவேலி சிவன் கோவில்

திருகோணமலை வட்டாரத்தில்  கங்குவேலி கிராமத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள காட்டில் அகஸ்திய ஸ்தாபனம் சிவன் கோயில் இருக்கிறது .

சிவபெருமானின் திருக்கல்யாணத்தின்போது பக்தர்கள் அனைவரும் வடக்கே செல்ல பூபாரம் அதிகரித்து வடக்கு தாழ்ந்தது . உடனே தென்னாட்டிற்கு அகஸ்தியரை சிவபெருமான் அனுப்பினார் என்பது புராணக்கதை. உலகில் முதல் முதலில் POPULATION EXPLOSION & MIGRATION பாபுலேஷன் எக்ஸ்ப் லோசன் பற்றியும் மைகிரேஷன் பற்றியும் இந்துக்கள் எழுதிய  கதை  இது. தென்னாடு வந்த அகஸ்தியர், விந்திய மலை வழியாக சாலை  அமைத்தார்; தமிழுக்கு இலக்கணம் எழுதினார். அவர் கோத்திரத்தில் உதித்தவர்கள் , பாண்டியர்களை வியட்நாமுக்கு அழைத்துச் சென்று திருமாறன்/ ஸ்ரீமாறன் தலைமையில் ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவி  தென்கிழக்கு ஆசியநாடுகளை வசப்படுத்தினார் . இது 1500 ஆண்டுகளுக்கு நீடித்தது . அக்காலத்தில் அகஸ்தியர் , இலங்கைக்கும் வந்த செய்தியையும் லிங்கம் நிறுவிய செய்தியையும் தட்சிண கைலாச புராணம் நமக்கு அளிக்கிறது.

பிற்காலத்தில் எழுதப்பட்ட  திருக்கரசை புராணம் என்ற நூலும் இதை உறுதி செய்கிறது இந்தப் புராணத்தில் 170 பாடல்கள் உள்ளன  இதை அகிலேச பிள்ளை 1893-ல் வெளியிட்டார்.

கங்குவேலி (திருக்கரைசையம்பதி) கிராமத்தில் ஆதி சிவன் கோவில் காணப்படுகின்றது. அங்கிருந்து ஆறு கிலோமீட்டர்  தொலைவில் அகத்தியர் ஸ்தாபன கோவில், மகாவலி கங்கைக் கரையில் இருக்கிறது

பிற்காலத்தில் சிங்க பூதன் என்னும் மன்னன் திருமங்கை என்ற பெண்ணை மணந்து இந்தக் கோவிலைப் பராமரித்தான். ராணி திருமங்கையின் பேரில்  ஒரு கட்டிடமும் உள்ளது இதை திருமங்கை ஆலயம் என்பர்.

ஆடி அமாவாசை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.  ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்கள்  வந்து கூடுகின்றனர். இங்கு முதல் நாள்,  திருக்கரைசை புராணம் பாடப்பட்டு பொருளும் சொல்லபடும்.

மகாவலி கங்கை நதியை எல்லையாகக்கொண்டதால் இந்த ஊர் கங்கை வேலி எனப்பட்டது. காலப்போக்கில் நதியின் போக்கும் மாறியது ஊரின் பெயரும் மருவியது.

தற்போதைய கோவிலில் கர்ப்பக்கிரகம் , அர்த்த மண்டமபம், மஹா மண்டபம் உள்ளன. எல்லா பரிவார மூர்த்திகளும் இருக்கின்றன.

சுவாமி பெயர் கமலேஸ்வரன் , அம்பாள் பெயர் கமலேஸ்வரி . ஆடி அமாவாசையன்று தீர்த்தமாட  மகாவலி கங்கைக்குச் செல்வர்

இங்கு ஒரு பெரிய கல்வெட்டும் இருக்கிறது . அதில் இரு பக்கங்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில் த்ரிசூலக்  குறியும் இடப்பட்டுள்ளது

கோணை நாதருக்கு வழங்கப்பட்ட நிலதானம் பற்றிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது . கங்குவேலி கிராமத்தலைவர்களும் திருகோணமலை வன்னியர்களும் வயல்களை தானம் செய்ததைக் குறிப்பிட்டு, இதற்கு ஊறு செய்வோர் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாபத்துக்கு ஆளாவர் என்றும் சபிக்கிறது..

இந்த சாபம், இந்தியக் கல்வெட்டுகளில் வழக்கமாக பொறிக்கப்படும் சாபம் ஆகும்

கங்கைவேலி என்ற நூல்,  நூலகம் வெப்சைட்டில் உள்ளது. அதில் மேல் விவரங்களைக் காணலாம் 

—–SUBHAM—-

TAGS- திருக்கரசை புராணம் , கங்குவேலி, அகஸ்தியர் ஸ்தாபித்த ,ஒட்டிசுட்டான், தான்தோன்றிய ஈஸ்வரன், கோவில்  ,பனங்காமம் ,சிவன் கோவில்

கந்தர் அலங்காரம்- கவின் மிகு சொற்றொடர்கள் (Post No.12,566)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,566

Date uploaded in London –  9 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

கந்தர் அலங்காரம்

(அருணகிரிநாதர் அருளியது)

ச. நாகராஜன்

கவின் மிகு சொற்றொடர்கள்

(சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது) 

மொத்தப் பாடல்கள் காப்பு 1 பாடல்கள் 107 

 1. அயில்வேலன் கவியை யன்பால் எழுத்துப் பிழையறக்

    கற்கின்றிலீர் (பாடல் எண் 2)

 2. கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே (6)

  3. முகமாறுடைத் தேசிகனே (8)

  4.  வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று (9)

  5.  வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறு நிழல் போல் (18)

 6. கையிற் பொருளும் உதவாது காணுங் கடைவழிக்கே (18)

  7. மரண ப்ரமாத நமக்கில்லை (21)

  8.  முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன் (22)

  9.  ஞானச் சுடர் வடிவாள் (25)

10. எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான் (26)

11. காலத்தை வென்றிருப்பார் (26)

12. மனமே எங்ஙனம் முத்தி காண்பதுவே (30)

13. அடியார்க்கு நல்ல பெருமாள் (33)

14. அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள் (33)

15. நாளென் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள்   

   என் செயும் (38)

16. கொடுங்கூற்று என் செயும்? (38)

17. மயில் ஏறிய மாணிக்கமே (39)

18. அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன்

    கையெழுத்தே (40)

19. நீயான ஞான விநோதந்தனையென்று நீ அருள்வாய் (46)

20. படிக்கும் திருப்புகழ் போற்றுவன் (50)

21. பாசத்தினாற் பிடிக்கும் பொழுத் வந்தஞ்சலென்பாய் (50)

22. இடிக்கும் கலாபத் தனி மயில் ஏறும் இராவுத்தனே (50)

23. தேவேந்த்ர லோக சிகாமணியே (58)

24. பட்டிக் கடாவில் வரும் அந்தகா உனைப் பாரறிய வெட்டிப்

  புறங்கண்டலாது விடேன் (64)

25. வெங்கூற்றன் விடுங் கயிற்றார் கட்டும் பொழுது விடுவிக்க

   வேண்டும் (65(

26. நீர்க்குமிஉக்கு நிகரென்பர் யாக்கை நில்லாது செல்வம் (66)

27. பெறுதற்கரிய பிறவையைப் பெற்று (67)

28. விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் (70)

29. மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகாவெனும்

   நாமங்கள்  (70)

30. முன்பு செய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் (70)

31. பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலுஞ்ச செங்கோடம்

  மயூரமுமே (70)

32. மயில்வாகனனைச் சாந்துணைப் போது மறவாதவர்க்கொரு

   தாழ்வில்லையே (72)

33. படிக்கின்றிலை பழநித் திருநாமம் படிப்பவர் தாள்       

   முடிக்கின்றிலை (75)

34. முருகாவென்கிலை (75)

35. தொழாத கையும் பாடாத நாவும் (76)

36. ஐவரும் கைவிட்டு மெய் விடும் போதுன்னடைக்கலமே (84)

37. குமரா சரணம் சரணம் (87)

38. வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை (90)

39. நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே (90)

40. இராப்பகலற்ற இடம் காட்டி யான் இருந்தே துதிக்க (103)

41. ஆவிக்கு மோசம் வருமாறறிந்துன் அருட்பதங்கள் சேவிக்க என்று

   நினைக்கின்றிலேன் வினை தீர்த்தருள்வாய் (105)

42. கொள்ளி தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்

   உள்ளம் (106)

43. நமக்கொரு மெய்த்துணையே (107)

***

கந்தர் அலங்காரத்தை மூலம் மற்றும் விரிவுரையுடன் பல இணைய தளங்களில் பார்க்கலாம்.

அதில் ஒன்று

www.projectmadurai.org

இந்த இணையதளத்தில் உள்ள தொடர் எண் 23இல் கந்தர் அலங்காரம் உள்ளது.

வட்டுக்கோட்டை கண்ணகி கோவில்- இலங்கைத் தீவின் 108 ஆலயங்கள்  – Part 21 (Post No.12,565)

Vattukkottai Sivan Temple; from Facebook

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,565

Date uploaded in London – –  –  8 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 21

42.வட்டுக்கோட்டை கண்ணகாம்பிகா சமேத கண்ணலிங்கேஸ்வரப் பெருமான் ஆலயம்

யாழ்ப்பாண வட்டுக்கோட்டை கண்ணலிங்கேஸ்வரப் பெருமான் ஆலயத்தை சுருக்கமாக கண்ணகி கோவில் என்று சொல்லுவார்கள் .ஆதிகாலத்தில் இங்கு அம்மன் சிலை மட்டும் இருந்து, பின்னர் லிங்கம் பிரதிஷ்டை செய்ததே இதற்குக் காரணம்.

யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை  – மூலாய்  சாலையில் கண்ணகாம்பிகா கோவில் இருக்கிறது ஆரிய சக்கரவர்த்திகள் காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த ராமநாத பட்டர் இங்கு முறையான வழிபாட்டை ஏற்படுத்தினார். இது 500 ஆண்டு பழமையான தலம்  1513-ம் ஆண்டில் வேங்கடேச குருக்கள் இந்தக் கோவிலை நிறுவினார். மதவெறியர்கள் இந்தக் கோவிலை இடிக்க வந்த போது இது மாதா கோவில் என்று சொல்லவே அவர்கள் இடிக்கவில்லையாம் . பத்தினி தேவி சிலை என்ற பொருளில் அவர்கள் இப்படிக்கூறினர்.

நாவலர் காலத்தில் இந்து மறுமலர்ச்சி ஏற்ப்பட்டபோது , 1882ம் ஆண்டில் தமிழ் அறிஞர் சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் குமபிஷேகத்தை நடத்தினார். அப்போது கோவில் ஆகம முறைப்படி அமைக்கப்பட்டு முறையான பூஜைகள் துவக்கப்பட்டன  பின்னர் அவரது வம்சத்தினர் தொடர்ந்து சேவை ஆற்றினார்கள் .

மலாயாவில் வசித்த இந்துக்கள் பொருளுதவி செய்யவே 1978 ஜூலை 12-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது . விநாயகர் முதலிய மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஜூன் மாதத்தில் ஆண்டு உற்சவம் நடைபெறுகிறது.

XXXX

43.காரைநகர் சிவன் கோவில், ஈழத்து சிதம்பரம் , யாழ்ப்பாணம்

Karainagar Sivan Temple; picture from Wikipedia

ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் கோவில்  யாழ்ப்பாண…………..PLEASE CONTINUE IN……………………………… swamiindology.blogspot.com

முட்டாள்களின் உளறல்! (Post  No.12,564)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,564

Date uploaded in London –  8 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

முட்டாள்களின் உளறல்!

ச.நாகராஜன்

சனாதனத்தை ஒழிப்போம் என்று கூக்குரலிடுபவர்களை என்னவென்று சொல்வது?

முட்டாள்கள் என்றா திமிர் பிடித்தவர்கள் என்றா ஒன்றும் அறியா அறிவிலிகள் என்றா?

சனாதனம் என்ற வார்த்தைக்கே என்ன பொருள் என்று அறியாதவர்கள் இவர்கள்.

சனாதனம் என்றால் என்றும் உள்ளது என்று பொருள்.

ஆதி அந்தம் இல்லாமல் நிலைத்து இருப்பது என்று பொருள்.

விநாச காலே விபரீத புத்தி என்பார்கள்.

தனக்கு விநாச காலம் வரும் போது புத்தி விபரீதமாகுமாம்!

இப்படி அரசியல் அரங்கில் ஒரு புறம் கூக்குரலைக் காண்கிறோம்.

இன்னொரு புறம் திவ்யா திரிவேதி என்ற ஒரு அம்மணி எதிர்கால

 இந்தியா இந்துமதம் இல்லாமல் இருக்கும் என்று அண்மையில் கூறி இருக்கிறார்.

இவர் ஒரு உதவிப் பேராசிரியர். ஹ்யூமானிடீஸ் அண்ட் சோஷியல் ஸயின்ஸஸ் துறையில் பணியாற்றுபவர். இவர் டெல்லியில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பணிபுரிபவர்!

இவருடைய அறிவு இப்படி இருந்தால் இவரிடம் பாடம் படிக்கும் மாணவ மாணவியரின் அறிவு எப்படி இருக்கும்! ஊகித்துக் கொள்ளலாம்!!

“இரண்டு இந்தியாக்கள் இருக்கிறது. ஜாதி உள்ள பழைய இந்தியா ஒன்றாம். ஜாதி இல்லாத எதிர்கால இந்தியா இன்னொன்றாம்.”

இது இவரது கண்டுபிடிப்பு (ஆதாரம் : 9-9-2023 டைம்ஸ் நௌ செய்தி)

இந்த புத்திசாலியை மீடியாக்காரர்கள் விடவில்லை.

“அம்மணீ! இந்தியா பொருளாதாரத்தில் சிறந்து விளங்கி உயரத்தில் போய்க் கொண்டே இருக்கிறதே” என்று யதார்த்த நிலையை ஒரு ஊடகக்காரர் சொல்லி அதை விளக்கவும் செய்தார்.

ரிக்‌ஷா இழுக்கும் ஒருவர் தொழில்துறை நுட்பத்தின் மேம்பாட்டால் இப்போது மிகவும் பயனடைந்துள்ளதை நாம் பார்க்கவில்லையா என்ன என்றார் அவர்.

உடனே அது “மீடியாத்தனம்” – மீடியாக்காரர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றார் அம்மணி.

அனைவரும் சிரித்தனர் அம்மணியின் அறிவைக் கண்டு.

வடமொழியில் வேடிக்கையான அற்புதமான ஸ்லோகம் ஒன்று உண்டு.

வானரஸ்ய சுராபானம் மத்யே வ்ருஷிச்சக்தம்சனம் |

தன்மத்யே பூதசஞ்சார: யத்தா தத்தா பவிஷ்யதி ||

இதன் பொருள்:

ஒரு குரங்கு சாராயத்தை ‘புல்’லாகக் குடித்து விட்டது.

போதை ஏறிய ஒரு குரங்கை நினைத்துப் பார்த்துக் கொள்வோம். அதை ஒரு தேள் கொட்டி விட்டது. சாதாரணமாகவே ஆடும் குரங்கு சாராய ஆட்டத்தோடு தேள் கடியால் வேறு ஆட ஆரம்பித்தது. அப்போது அதில் ஒரு பூதம் வேறு புகுந்து கொண்டது.

இப்போது குரங்கு எப்படி இருக்கும்?

அம்மணியின் ஆட்டம் அப்படி இருக்கிறது!

மக்காலே தனது கல்வித் திட்டத்தை நுழைக்கப் பார்த்தான். கம்யூனிஸ்டுகள் தங்கள் விலை போகாத தங்கள் சித்தாந்தத்தை நுழைக்கப் பார்த்தார்கள்.

முகலாயர்கள் மதம் மாற்றப்பார்த்தார்கள். ஜஸியா விதித்துப் பார்த்தார்கள்.

ஆங்கிலேயர்கள் மதம் மாற்றப் பார்த்தார்கள். பலவித ஆசைகளைக் காட்டினார்கள்.

அசைந்ததா சனாதனம்.

முகலாயர்கள் ஒழிந்தார்கள். அந்த வம்சத்தையே காணோம்.

ஆங்கிலேய அரசு ஒழிந்தது. அதன் கடைசி ஆசையும் அழிந்தது.

இப்போது காசு கொடுத்து விலைக்கு வாங்கிய இந்த அம்மணிகளும் சில ஊடகங்களும் அதிகார வெறி பிடித்த ஏராளமான ஊழல் பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் சனாதனத்தை அழித்து விடுவோம் என்கிறார்கள்.

அழிந்து போகப் போவது  யார்?

விரைவிலேயே பார்க்கப் போகிறோம்!

ஹிந்துக்கள் அனைவரும் எழுந்து ஓரிணையில் இணைந்து இந்த ராவணக் கூட்டத்தைப் பார்க்கும் போதே அது அழிந்து விடும்!

காலம் வேகமாக நகர்ந்து இந்தக் கட்டத்தை அடைந்து விட்டது.

என்றுமுள்ள சனாதனம் தனது வலிமையைக் காட்டப் போகிறது.

சனாதன சேனையில் இணைவோம். சேது பாலம் கட்ட அணில் உதவியது போல நம்மால் முடிந்ததைச் செய்வோம்.

வெல்க இந்து மதம்! வாழ்க பாரதம்! என்றும் இருக்கும் சனாதனம்!!!

****

சென்னை ஜன்மாஷ்டமிக் காட்சிகள் (Post No.12,563)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,563

Date uploaded in London – –  –  7 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஜன்மாஷ்டமிக்கு முன்  தினம் சென்னையில் இருந்தேன் (செப்டம்பர் 2023); சென்னை அயோத்யா மண்டப ம் அருகில் வெங்கடேஸ்வரா போளி கடையில் காப்பி குடித்துவிட்டு தேங்காய் போளி , முறுக்கு, சீடை , வெல்லச் சீடை , வடை, போண்டா ஆகியன வாங்கிக்கொண்டு. மண் டபம் முன்னால்,   தெருவில் கடை வை த்திருக்கும் பிராமணனிடம் பூணுல், நோன்புக் கயிறு,  தர்ப்பண  செட்டுகளை வாங்கிக் கொண்டு அக்கம் பக்கம் பார்த்தேன் . கிருஷ்ணன் பிறப்பைக் கொண்டாடத் தேவைப்படும் தோரணம், மாவிலை, வாழைக்குருத்து , கிருஷ்ணன் பொம்மைகளைக் கண்டேன்; ஒரே கூட்டம்;

உறவினர் வீட்டுக்கு வந்தால் மறுதினம் அவர்கள் கிருஷ்ணனின் கால் சுவடுகளை வீட்டின் வாசல்படி முதல் , சுவாமி அறை வரை வரைந்திருந்தனர் . அவர்கள் வாங்கி வர சொன்ன பசு வெண்ணெயையும் மறக்காமல் வாங்கி வந்தேன். அங்கே ஏற்கனவே மலை போல சீடை , முறுக்கு வகையறா குவித்து இருந்தது.

—subham—

Tags- தோரணம், மாவிலை, வாலைக் குருத்து, ஜன்மாஷ்டமி , முறுக்கு, சீடை

கொழும்பு மியூசியத்தில் இந்துசமயம் (Post No.12,562)


Picture- Agate Necklace in Colombo Museum, 18th Century 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,562

Date uploaded in London – –  –  7 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

எந்த நாட்டுக்குப் போனாலும் எந்த ஊருக்குப்போனாலும் நான் காண விரும்புவது அங்குள்ள மியூஸியம்தான் . கிரேக்க நாட்டுத் தலை நகர் ஏதென்ஸுக்குச்(Athens in Greece) சென்ற போது மியூசியத்துக்கே  முதலிடம் தந்தேன் . இலங்கைத் தலைநகர் கொழும்பு நகருக்குச் சென்றபோதும் முதல் நாள் சென்றது மியூசியத்துக்குத்தான். . ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் (Vienna in Austria)  முக்கிய மியூஸியத்தைக் குடும்பத்துடன் பார்த்தபோதிலும் எனது பட்டியலில் எழுதியிருந்த மியூஸியத்தை பார்க்காமல் விட்டது என்னவோ போல் இருந்தது. ஒரு கட்டிடத்தில் மூன்றே மாடிகளில் உள்ள சின்ன மியூசியம்தான் . போன் செய்தபோது இன்னும் மூன்று மணி நேரம் திறந்திருக்கும் என்று அறிந்தவுடன் நானும் என் மகனும் டிராம் (Tram) இல் ஏறிக்குதித்து காட்சியகத்தை அடைந்தோம். அறிவுப் பசி உள்ளவர்களுக்கு அவை விருந்தளிக்கும் ; அவ்வா றே அங்கே நிறைய விஷயங்களை அறிந்தோம். மாடிப்படி ஏறும்போதே  அவை ஸரி கமபதநிஸ போன்ற இசை நோட்ஸ்களை வாசிக்கும். அங்கு வரும் இசை ரசிகர்கள் படிகளில் ஏறியும் இறங்கியும் கூத்தாடியும் மெதுவாக மியூசியத்துக்குள் நுழைவார்கள்!

Goddess Parvati, 12th Century 

கொழும்பு மியூசியத்தில் உள்ள சைவப் பெரியார்கள் ஏற்கனவே இலங்கைத் தபால்தலைகளில் இருப்பதாலும் , மியூசியம் கேட்டலாக் லண்டன் யுனிவர்சிட்டி லைப்ரரியில் இருப்பதாலும், என்ன பார்க்க வேண்டும் என்று முன்னரே திட்டமிட்டிருந்தேன் . லண்டனில் நான் பார்க்காத மியூசியம் இல்லை. ஆகையால் இயற்கை வரலாறு பகுதியைத் தவிர்த்துவிட்டு இலங்கை வரலாறு பகுதிக்கு மட்டும் டிக்கெட் வாங்கினேன்; மூன்று மணி நேரத்துக்கு கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல விருந்து கிடைத்தது.

சென்னைக்குச் செல்வோரும் மெட்ராஸ் மியூஸியம் பார்க்காமல் வரக்கூடாது; அங்குள்ள ஒவ்வொரு ஐம்பொன் விக்கிரகமும் வெளிநாடுகளில் பல லட்சத்துக்கு விலைபோகும்!!.

கொழும்பு மியூசியத்தில் விளக்குகள் , பூஜைப் பொருட்கள், மாலைகள் , ஆபரணங்கள் முதலிய பார்க்க வேண்டியவை . மன்னர்கள் பயன்படுத்திய பொருட்களுடன் அவர்களுடைய கொடிகளும் அல்லது அவற்றின் படங்களும் உள்ளன . அவற்றில் இந்து தெய்வங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன .

உள்ளே நுழையும்,  போதே பெரிய துர்கா கற்சிலையும், சூரிய தேவன் சிலையும் உள்ளன . நல்லவேலையாக புகைப்படம் எடுக்க அனுமதி உண்டு. ஆகையால் நூற்றுக்கணக்கில் படங்கள் எடுத்தேன் (பேஸ்புக்கில் எல்லாம் பதிவிடப்படும் ).

Nataraja, 12th century bronze

இதில் என்னை ஏமாற்றம் அடைய வைத்த இத்தாலி நகர்ச் செய்தியைக் கூறுகிறேன். இரண்டு மூன்று முறை இத்தாலியின் தலைநகருக்கு  , (ரோமாபுரிக்கு, Rome in Italy)  சென்று இருக்கிறேன் . நான் எட்ருஸ்கன் கலாசாரம் (Etruscan Civilization) பற்றி ஆராய்ந்து பல கட்டுரைகளை இங்கே எழுதியுள்ளேன் . ஒரு ட்ரிப் Trip பில் எட்ருஸ்கன் மியூசியத்தையும் (Etruscan Museum)  சேர்த்துக்கொண்டேன். குடும்பத்தினர் அனைவரையும் ஹோட்டல் அறையில் விட்டுவிட்டு விரைந்தேன் ; பெரிய ஏமாற்றம்! புகைப்படம் எடுக்கத்  தடை ; நான் ஆராய்ச்சி நோக்கில் சில படங்களை மட்டும் எடுக்கிறேன் என்றேன்.

இத்தாலிய மொழி மட்டுமே  பேசும் ‘அது’களுக்குப் புரியவில்லை. நோ NO, No என்று மட்டுமே சொன்னார்கள். இருந்தபோதிலும் ஸ்வஸ்திகா சின்னம் பொறித்த சில பெரிய ஜாடிகளைப் புகைப்படம் எடுத்தேன் .

வெளிநாட்டில் எல்லா மியூசியங்களின் எக்சிட் EXIT வழியும் புஸ்தகக்கடை , கலைப்பொருட்கள் விற்கும் கடை வழியாகவே செல்லும் ; சரி, சில புஸ்தகங்களை வாங்குவோம் ; அதிலுள்ள படங்களை பயன்படுத்தலாம் என்று எண்ணினால், அதிலும் ஏமாற்றமே ; ஒரு புஸ்தகமும் ஆங்கிலத்தில் இல்லை !

இந்த விஷயத்தில் கொழும்பு காட்சியகத்தைப் பாராட்டவேண்டும் ; சின்ன புஸ்தக்கடையில் நல்ல படங்களையும் நூல்களையும் கண்ணாடி ஷோ கேஸில் வைத்துள்ளார்கள் . கொழும்பு மியூசியத்தில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் என்ற ஆங்கிலப் புஸ்தகத்தை வாங்க்கிக்கொண்டு ஆறு இந்து சமய படங்களையும் வாங்கினேன். ஒவ்வொரு போஸ்ட்காரர்ட் வண்ணப்படமும் இந்திய ரூபாய்க் கணக்கில் ஆறு ரூபாய்தான் ; கொள்ளை மலிவு!

Shiva and Parvati, 12th century bronze

நடராஜர், பார்வதி, சூர்ய தேவன் ,  சிவன்-பார்வதி விக்கிரகங்கள் அவற்றில் சில; நால்வரில் உந்தரமூர்த்தி விக்கிரகம் உளது .

விளக்குகளில் இந்தனை வகைகளை ஒரே இடத்தில் காண்பது அரிது  (இந்தியாவில் தனி விளக்கு மியூசியமும் உளது). மன்னர்கள் பயன்படுத்திய வாட்கள், கத்திகள், ஈட்டிகள் முதலியன பழங்ககால போர்க்கள காட்சிகளை நம் கண் முன் கொண்டு வருகின்றன.

இலங்கை நாட்டுப்புற நடனத்தை ஒரு LIVE SHOW லைவ் நிகழ்ச்சியாக  அமைத்துள்ளனர் ; நாம் அங்கே போய் நின்றவுடன் நடனக்காட்சி துவங்கும் ; சில நிமிடங்களுக்கு அது நீடிக்கும்

இறுதியில் இலங்கை விவசாய வரலாறு உள்ளது.

வரலாற்றறு ஆய்வாளர்களுக்கு அங்குள்ள கல்வெட்டுகளும் நாணயங்களும் ஆதார பூர்வ விஷயங்களை நமக்குத் தெரிவிக்கின்றன. சம்ஸ்க்ருத  மொழியில் எழுதப்பட்ட அனுராதபுரம் தங்கத் தகடுகள், வல்லிபுரம் பிராமி எழுத்து தங்கக் (Gold Plate) கல்வெட்டு முதலியன குறப்பிடத்தக்கவை . பல பொருட்களை பாதுகாப்பின் பொருட்டு நேரில் வைக்காமல் படங்களை மட்டும் வைத்திருக்கிறார்கள்

புத்த மத வரலாறு, புத்தர் சிலைகள் அதிகம் உள்ளன.. வருங்காலத்தில் ராமாயண இலங்கையைக் காட்டும் இடங்களையும் படங்களையும் வைத்தால் இலங்கை வரலாறு பூர்த்தியாகும். அதே போல சோழர், பாண்டியர் ஆகிய வம்ச மன்னர்களின் பங்கு பணி பற்றிய பிரிவும் தனியே அமைய வேண்டும்.

God Surya 12th century bronze in Colombo Museum

—-subham—-

Tags-  கொழும்பு மியூசியம், இலங்கை வரலாறு, சோழர் கால சிலைகள், தங்க கல்வெட்டுகள், சாசனங்கள், இந்துசமயம், Colombo Museum Bronze