My Visit to Bhuvanagiri and Mantralaya of Sri Raghavendra Swami (Post No.15,475)

Temple at Bhuvanagiri

Written by London Swaminathan

Post No. 15,475

Date uploaded in Sydney, Australia –  8 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Pujyaya Raghavendraya Sathya Dharma Rathayacha
Bajatham Kalpa Vrukshaya Namatham Kamadehnave

Picture of London Swaminathan on the banks of River Tungabhadra in Mantralaya.

Shri  Raghavendra Swami (1595–1671) 

Bhuvanagiri is the birthplace of the saint of South India, Raghavendra Swami.  The town is also close to the famous Siva / Nataraja temple at Chidambaram. it is just 12 kilometres from the holy city.

I visited Bhuvanagiri on 4th March 2026. The temple of Sri Raghavendra Swami in Bhuvanagiri  is a small and beautiful temple. One needs just 10 minutes to go round the temple. But one can spend more time praying to the great saint. Behind the figure of Swamiji is the divine wish fulfilling cow Kamadhenu symbolizing his grace. One’s prayers are answered and receive whatever one prayed for.

About 30 years ago, I was lucky to visit Mantralaya, where Swami’s Samadhi is located. Mantralayam (or Mantralaya) is a well-known pilgrimage town located on the banks of the Tungabhadra River in the Kurnool district of Andhra Pradesh,  near the Karnataka border. It is famous for the Jeeva Samadhi (holy tomb) of the saint Sri Raghavendra Swami.

( Situated on the border of Andhra Pradesh and Karnataka, roughly 74 km from Kurnool and 43 km from Raichur).

Every time I passed Chidambaram in the past, I thought of visiting Bhuvanagiri, but missed the golden opportunities. So, this time I planned to go to Bhuvanagiri only and reached it in five and half hours from Chennai. I spent half hour praying and talking to the priest. There were not many devotees. The priest gives mantra Akshata (red coloured rice) which one puts on head. And Teertham (holy water) to drink.

It is a wonder that a person born in a small village became famous and worshipful and travelled all the way to a remote place in Andhra via Karnataka. He followed and preached Dvaita philosophy of Madhva. Born as Venkatanathan 400 years ago to Thimmanna and Gopikambal, he studied Shastras in Madurai and Kumbakonam.  He taught them to the students in Kumbakonam.

He married a woman by name Sarasvathi and had a son named Letchuminarayanan. He advocated Vaishnavism and Shri Madhvacharya’s Dvaita philosophy. He ascended Brindavana at Mantralayam in present day Andhra Pradesh in 1671.

Venkatanathan took Sanyasa from Sumatheendra Tirtha and received the name Sri Raghavendra.

He wrote many books in Kannada , on Rig Veda, Brahmasutra, Bhagavad Gita and Upanishads. He interpreted them based on Dvaita of Madhvacharya.

Swamiji performed several miracles during his lifetime and even after his death/Samadhi.

Known as an avatar of Prahlada, he spent 50 years leading Mathas and performing miracles, famously entering jeeva samadhi (living entombment) at Mantralayam on the Tungabhadra river. 

He was a staunch follower and propagator of Sri Madhvacharya’s Dvaita (dualism) philosophy. He was highly proficient in Logic, Mimamsa, Music, Yoga, and Shastras, and mastered many arts. He was also a prolific author who simplified complex philosophies.

Miracles

Once Thanjavur area was under a great drought. Raghavendra Swami made the ruler perform appropriate rituals and fire ceremonies. Soon afterwards, rain fell upon the lands. The king, to show his gratitude offered Raghavendra Swami a priceless necklace, which Raghavendra Swami in turn put into the Yajna fire as an offering to Lord Vishnu. The king grew angry at what he thought was an insult. Raghavendra Swami immediately brought back the necklace intact from the fire.

Raghavendra Swami visited Bijapur, where the scorching heat was unbearable. One Brahmin was overcome by the heat and fell down, unable to get up. Raghavendra Swami recited a mantra, and water sprung up from the scorching sands, which saved the Brahmin’s life. In another instance, a child was traveling with an entourage, through a desert. The heat was so unbearable that the child started to cry. Raghavendra Swami threw his upper cloth towards the child. Flying over his head, it gave shade to the child for the rest of the journey.

Incident in Mantralaya

When Sir Thomas Munroe was the Collector of Bellary in 1800, the Madras Government ordered him to procure the entire income from the Math and Manthralaya village. When the Revenue officials were unable to comply with this order, Sir Thomas Munroe visited the Math for investigation. Someone appeared before him near the Samadhi and spoke to him in English explaining the stand of the Mutt in this issue. Later Munroe cancelled the order and Mantralaya remained exempt from any tax collections.

This notification was published in the Madras Government Gazette in Chapter XI and page 213, with the caption “Manchali Adoni Taluka. This order is still preserved in Fort St. George and Manthralayam.

Once while he was touring Kumbakonam along with his wife, Shri Venkatanatha and his family were invited to attend a function. Unfortunately, the hosts did not treat him well .He was asked  to make some sandalwood paste for all the invitees. When the guests applied this paste, it gave a burning sensation all over their bodies. When the hosts asked the reason for it, he replied that the burning sensation was due to the Agni Suktam hymn for the worship of Agni, God of Fire that he was chanting while preparing it. Upon realizing his power, the host apologized profusely to Shri Venkatanatha.

On a hot summer day, Shri Raghavendra Swami was on his way home from a pilgrimage. And he saw the Nawab (Muslim king) walking towards him, with a sad face. He stated that his young son had died from a poisonous snakebite and been buried in a tomb close by. He asked the king to take the body out of the tomb. When the puzzled Nawab did as he was asked, Swami sprinkled holy water from his kamandala and the young boy woke up as though he was getting up from sleep.

Shri Raghavendra Swami got an opportunity to meet the Nawab of Adoni face-to-face. Nawab decided to test his spiritual skills and placed before the Swamiji, a plate of non-vegetarian delicacies completely covered with a piece of cloth.

Swamiji took some water from his Kamandala, meditated and sprinkled it on the covered plate, as part of his regular practice of purifying any food before consumption. He then opened the plate. It contained fresh fruits. The Nawab immediately became remorseful and then became an ardent devotee of  Swamiji. When he was ready to offer any gift, Swamiji asked that the land where Mantralayam is located now.

Raghavendra openly announced on such and such day he is going to enter Jeeva Samadhi. A lot of crowd came there to watch it. On Dwitiya Day of Sravana Krishna Paksha in 1671, Raghavendra Swami gave a soul-stirring speech to hundreds of devotees who had gathered to watch the event. Some quotes from that speech are as follows –

1. Without right living, right thinking will never come.

2. Social work done for the good of worthy people should also be considered as the Lord’s worship.

3. Always keep away from people who merely perform miracles.

4. Right knowledge is greater than any miracle.

5. Have devotion to the Lord. This devotion should never be blind faith.

Shri Raghavendra Swami attained Jeeva samadhi after delivering his final sermon.. Mantralaya housing his Samadhi  is visited by thousands of devotees every month.

—Subham—

Tags– Raghavendra Swami, Mantralaya, Bhuvanagiri, Miracles, Samadhi, birth place, Sir Thomas Munroe, last speech, pictures

புவனகிரி ராகவேந்திரர் கோவிலுக்கு விஜயம் (Post.15,474)

Written by London Swaminathan

Post No. 15,474

Date uploaded in Sydney, Australia –  8 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் துங்கபத்ரா நதிக்கரை மீதுள்ள மந்த்ராலயத்துக்குச் சென்று ராகவேந்திர சுவாமிகளின் சமாதியைத் தரிசித்த்தேன் . அப்போது, அங்கு தையல் இலையில் உணவு சாப்பிட்டதும் நினைவில் இருக்கிறது. நுழைவாயிலில் பெரிய எழுத்துக்களில் பொறித்த மந்திரத்தையும் மனப்பாடம் செய்து இன்றுவரை சொல்லி வருகிறேன் .

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாய  ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே

— என்பது நான் தினமும் சொல்லும் மந்திரம் .

அப்போதுமுதல் ராகவேந்திரர் பிறந்த ஊரான புவனகிரிக்குச் சென்று கோவிலில் அவரது உருவத்தைத் தரிசிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன் . ஒவ்வொரு முறை சென்னையிலிருந்து எங்கள் குலதெய்வமான வைத்தீஸ்வரனைத் தரிசிக்க வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் செல்லும்போதும், சிதம்பரம் வரும்போது புவனகிரிக்குச் செல்லும் வழி  என்ற ‘போர்டி’னைக் காண்பேன். ஆயினும் இறங்க நேரம் இல்லாததால் அதைக் கடந்து போய் விடுவேன் . சிதம்பரத்திலிருந்து புவனகிரி, சுமார் பத்து கிலோமீட்டர்தான். சிதம்பரத்துக்கு நடராஜரைத் தரிசிக்க வந்தபோதும்கூட வாய்ப்பினை நழுவவிட்டேன் . இந்த முறை புவனகிரி யாத்திரையை மனத்தில் வைத்துக்கொண்டு வாடகைக் காரில் புவனகிரிக்கு சுமார் ஐந்தரை மணி நேரத்தில் போய்ச் சேர்ந்தேன் . நல்ல தரிசனம் கிடைத்தது .

ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் மிகவும் சிறிய கோவில். ஒரு அழகான மண்டபம் என்றும் கூடச் சொல்லிவிடலாம். நான் சென்ற மாலை நேரத்தில் கூட்டம் இல்லை. அங்குள்ள அர்ச்சகரிடம் தீர்த்தமும் மந்திர அட்சதையும் வாங்கிக்கொண்டு அட்சதையைத் தலையில் போட்டுக்கொண்டேன். கோவிலுக்கு வெளியே சென்று புகைப்படங்களை எடுத்தேன். மறுநாள் சிதம்பரத்திலிருந்து கோவிந்தராஜப்பெருமாள் அங்கே எழுந்தருளப் போகிறார் என்ற செய்தியைச் சொல்லி என்னையும் வருமாறு கேட்டுக்கொண்டார் பட்டர். 

சிறிய கோவிலாக இருந்தாலும் வண்ணமிகு கோவில். அவரது சந்நிதியைச் சுற்றி வருவதற்குப் பிரகாரமும் உள்ளது உண்டியலில் காணிக்கையை செலுத்திவிட்டு கும்பகோணம் நோக்கி விரைந்தேன்

***

ஸ்ரீ ராகவேந்திரரின்  (1595–1671) அற்புதம் நிறைந்த வாழ்க்கை

தமிழ்நாட்டின் ஏதோ ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து கர்நாடகம் ஆந்திரம் வழியாகப் பயணம் செய்து இறுதியில் துங்கபத்ரா நதிக்கரையில் ஆந்திரத்தில் அவர் சமாதி அடைந்தது ஏன் என்று எண்ணி எண்ணி நாம் வியப்போம். மஹான்கள் பிறக்கும் இடமும் சமாதி அடையும் இடமும் நம்மால் விளங்கிக்கொள்ள  முடியாத விஷயம் . பல மஹான்களின், சாது சந்யாசிகளின் வாழ்க்கையில் இதைக் காணலாம் .

பொதுவாக மத்வ சப்ரதாயத்தினர் மட்டும் வணங்கிவந்த ஸ்ரீ ராகவேந்திரர், நடிகர் ரஜினி காந்த் மற்றும் திரைப்படம் மூலம் எல்லோருடைய வழிபாட்டுக்கும் உரியவர் ஆனார். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் அவதரித்தார் . மத்வரின் த்வைத சமய போதனைகளைப் பின்பற்றும் சுதீந்திர தீர்த்தர் என்பவரைக் குருவாக ஏற்றார். இவர் ஜீவ சமாதி அடைந்தபோதும் இன்றும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பதால் இவருக்குப் பின்னால் எப்போதும் காமதேனு உருவம் இருக்கும் . இவரைப் பிரஹலாதரின் அவதாரமாகவே பக்தர்கள் வழிபடுகின்றனர் .

பூர்வஜன்மத்தில் இவரது பெயர் வியாஸராயர்; இந்த ஜென்மத்தில் பெற்றோர்கள் சூட்டிய பெயர் வேங்கடநாதன் . மதுரை, கும்பகோணம் முதலிய இடங்களில் சாஸ்திரங்களைக் கற்ற பின்னர், அதை ஏனையோருக்கும் போதித்தார். சரஸ்வதி என்ற பெண்ணை கல்யாணம் செய்துகொண்டார். அவர்களுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் லெட்சுமிநாராயணன் . ராகவேந்திரரின் தாய் தந்தையின் பெயர் கோபிகாம்பாள், திம்மண்ணா பட்டர் .

மூன்று அற்புதங்கள்

  கும்பகோணத்தில் இவரது மஹிமை தெரியாதோர் இவரை சந்தனம் அரைக்கும் பணியில் ஈடுபடுத்தினர். அந்த சந்தனத்தை உடலில் பூசிக்கொண்டிருந்தோருக்கு குளுமைக்குப் பதிலாக மிளகாயைப் பூசிக்கொண்டது போல எரிச்சல் ஏற்பட்டது . இதற்கு காரணம் அவர் அக்னி சூக்த மந்திரத்தை ஜபித்துக்கொண்டே சந்தனம் அரைத்ததே . பின்னர் அவரை மரியாதையுடன் நடத்தி மன்னிப்புக் கேட்கவே, அவர் வருண மந்திரத்தை ஜபித்து எரிச்ச லை அகற்றினார் இப்படி நிறைய அற்புதங்கள் நிறைந்தது இவரது வாழ்க்கை .

ஒரு முறை இவர் கானகம் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது , அவருடைய சீடர்களில் ஒருவனை பாம்பு கடிக்கவே  அந்த இடத்திலேயே அவன் மாண்டான். உடனே ராகவேந்திரர் கருட மந்திரத்தை ஜபித்து விஷத்தை அகற்றவே சீடன் உயிர் பிழைத்தான்.

இன்னொரு முறை இவருக்கு விருந்து கொடுக்கவிருந்தவரின் மகன் இறக்கவே அவனை ராம மந்திரம் ஜபித்து உயிர்ப்பித்தார் . இப்படி பல அற்புதங்களைச் செய்தார் . வாதங்கள் செய்து மாற்று சமயத்தினரையும் துவைதத்தைப் பின்பற்றவைத்தார் .

வேங்கடநாதர், தஞ்சாவூரில் 1621 ஆம் ஆண்டு துறவறம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார்.

இறந்த பின்னரும் இவர் அற்புதங்களைச் செய்தார்; மடத்திற்குத் தானமாக வழங்கப்பட நிலத்தை பிரிட்டீஷார் புதிய சட்டத்தை க் காட்டிக் கையகப்படுத்தினர்; பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பெல்லாரி மாவட்ட கலெக்டர் தாமஸ் மன்றோ நேரில் விசாரணை செய்ய வந்தார்; மரியாதைடன் ராகவேந்திரர் சமா தியில் நுழையும்போது அவருக்கு முன்னர் ஒரு உருவம் தோன்றி ஆங்கிலத்தில் உரையாடி வெற்றி கண்டது. அந்த உருவம் யார் என்பது எவருக்கும் தெரியாது; இதை அவரே மெட்ராஸ் கெஜெட்டில் ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார் .

ராகவேந்திரர் நிறைய நூல்களையும் கன்னட மொழியில்  எழுதியுள்ளார் . அவை பிரம்மசூத்ரம், பகவத் கீதை, உபநிஷதங்கள் பற்றியவை. த்வைத  சமய அணுகுமுறையில் சாஸ்திரங்களை விளக்கும் நூல்கள் அவை .

எப்போதும் கற்பக விருட்சமாகவும் காமதேனுவாகவும் அருள் சுரக்கும் அவரது புனிதத்தலங்களான புவனகிரி கோவிலுக்கும் மந்த்ராலயம் ஜீவ சமாதி உள்ள பிருந்தாவனத்துக்கும் எல்லோரும் சென்று தரிசிக்க வேண்டும்; இயலாதவர்கள் மேலே கண்ட பூஜ்யாய ……… மந்திரத்தை தினமும் சொல்லிவரலாம்; அவரது அருள் கிட்டும் என்பதில் ஐயமில்லை

சிதம்பரத்துப் போவோர் அரைமணி நேரத்தில் புவனகிரியை அடையலாம் .மந்திராலயம் ஆந்திரத்தின் கடைக்கோடியில் நல்ல போக்குவரத்து இணைப்புகளுடன் உள்ளது . ரெய்ச்சூர் அல்லது கர்நூலிலிருந்து செல்வது எளிது.

Mantralayam (or Mantralaya) is a well-known pilgrimage town located on the banks of the Tungabhadra River in the Kurnool district of Andhra Pradesh, India, near the Karnataka border. It is famous for the Jeeva Samadhi (holy tomb) of the 17th-century saint Sri Raghavendra Swami.

Location: Situated on the border of Andhra Pradesh and Karnataka, roughly 74 km from Kurnool and 43 km from Raichur.

–subham—

Tags- புவனகிரி, ராகவேந்திரர்,  மந்த்ராலயம், சமாதி,

பூஜ்யாய ராகவேந்த்ராய , பிறந்த ஊர், அற்புதங்கள்

எவையெல்லாம் நற்குணங்கள் ? பர்த்ருஹரியின் பட்டியல் இதோ! (Post.15,472)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,472

Date uploaded in London – 8 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம்

எவையெல்லாம் நற்குணங்கள்? பர்த்ருஹரியின் பட்டியல் இதோ! 

ச. நாகராஜன்

 நல்லவர்களுடன் பழகினால் நாளும் நலமும் வளமும் பெருகும்.

ஆனால் அவர்களிடம் உள்ள குணங்கள் யாவை?

அதை எப்படி அறிவது/

 கவலையே வேண்டாம், கவிஞர் பர்த்ருஹரி ஒரு பட்டியலையே தருகிறார்- தனது சுபாஷித த்ரிசதியில்!

அதைப் பார்த்தால் போதும், நல்லவர்கள் யார் என்று இனம் கண்டு விடலாம்.

வாஞ்சா ஸஜ்ஜன சங்கதௌ

    பரகுணே ப்ரீதி குரௌ நம்ரதா

வித்யாயாம் வ்யஸனம் ஸ்வயோஷிதி

     ரதி: லோகாபவாதாத் பயம் |

பக்தி: சூலிநி சக்தி ராத்ம தமநே

     ஸம்ஸர்க முக்தி: கலை:

ஏதே யேஷு வஸந்தி நிர்மல குணா:

     தேப்யோ மஹத்ம்யோ நம: |\

    சுபாஷித த்ரிசதி – நீதி சதகம் – 51ம் ஸ்லோகம்

இதன் பொருளை விரிவாகப் பார்ப்போமா? 

ஸஜ்ஜன சங்கதௌ – நல்லவர்களுடன் சேர்க்கையில்

வாஞ்சா – ஆசையும்

பரகுணே – பிறர் குணத்தில்

ப்ரீதி – நட்பும்

குரௌ – குருவிடத்தில்

நம்ரதா – வணக்கமும்

வித்யாயாம் – கல்வியில்

வ்யஸநம் – ஆஸக்தியும்

ஸ்வயோஷிதி – தான் உரிமை கொண்ட பெண்ணிடத்தில் (மட்டும்)

ரதி – காமமும்

லோகாபவாதாத் – உலகின் அபவாதத்தில்

பயம் – பயமும்

சூலினி – ஈஸ்வரனிடத்தில்

பக்தி: – பக்தியும்

ஆத்ம தமனே – தன்னை அடக்கிக் கொள்வதில்

சக்தி: – சாமர்த்தியமும்

கலை: – துஷ்டர்களுடன்

ஸம்ஸர்க்க முக்தி: – பழகுவதை விடுவதும்

நிர்மல குணா: – ஆகிய இந்த அழுக்கற்ற குணங்களானவை

யேஷு – எவர்களிடம் இருக்கின்றனவோ

தேப்ய: மஹத்ப்ய: – அந்தப் பெரியோர்களின் பொருட்டு

நம: – நமஸ்காரம்.

நல்லவர்களின் சேர்க்கையில் ஈடுபாடு,

பிறருடைய குணங்களை மதிக்கும் குணம்,

குருவிடத்தில் விநயம்,

தன் மனைவியிடத்தில் காமம், (செக்ஸ் உறவு)

லோக அபவாதத்தில் பயம்,

ஈஸ்வரனிடத்தில் பக்தி,

தன்னை அடக்கிக் காத்துக் கொள்ளும் சக்தி,

கெட்டவர்களுடனான பழக்கத்தை விடுதல்,

ஆகிய இந்த குணங்கள் அனைத்தும் எவரிடம் இருக்கின்றனவோ அந்த மஹான்களுக்கு (நமது) நமஸ்காரம்!

வாழ்க்கையில் யாருடன் பழக வேண்டும், யாருடன் பழகக் கூடாது, இல்லறத்தை எப்படி நடத்த வேண்டும், கடவுளிடம் பக்தி, குருவிடம் மரியாதை என்று இன்ன பிற நல்ல குணங்கள் அனைத்தையும் சுட்டிக் காட்டி விடுகிறா கவிஞர் பர்த்ருஹரி!

அவருக்கு முதலில் நமது நமஸ்காரம் உரித்தாகுக!

**

திருப்புகழில் ராகங்கள்! ஆதிஷேனுக்கு ஆயிரம் தலைகள் உண்டான கதை- Part 38 (Post.15,473)

Written by London Swaminathan

Post No. 15,473

Date uploaded in Sydney, Australia –  8 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 38

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 38

மதுரையில் நடராஜர் கால் மாறி ஆடிய கதை 

ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும்

இறையவர் … அழகு நிறைந்த மாட கூடங்கள் உள்ள மதுரையில்,

வெள்ளி அம்பலத்தில் நடன மேடையில் கால் மாறி* ஆடிய இறைவராகிய சிவ பெருமான் (இயற்றிய ‘இறையனார் அகப் பொருள்’ என்ற நூலுக்கு),

ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் …

நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் பொருள் கூறிய பொருள்

அதிகாரத்தின் உண்மைப் பொருள் இதுதான் என்று கூறுவதற்காக,

ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி … தகுதி உள்ள ஊமைப்

பிள்ளை** போல செட்டி குலத்தில் தோன்றி விளையாடி,

ஆலவாயில் விதி செய்த லீலா விசார தீர வரதர குருநாதா …

ஆலவாய் என்னும் மதுரையில் உண்மைப் பொருளை நிலை நிறுத்திக் காட்டிய திருவிளையாடலைப் புரிந்த தீரனே, வரங்களைக்

கொடுப்பவனே, குரு நாதனே,

முன் வீய நினைபவன் ஈடேறுமாறு கூர் ஆழியால் பாநு

மறைவு செய் … முன்பு (பாரதப் போர் நடந்தபோது) இறந்து போவதற்கு

எண்ணித் துணிந்த அர்ச்சுனன் உய்யுமாறு கூர்மையான சக்கரத்தால்

சூரியனை மறைத்து வைத்த

கோபாலராய நேயம் உள திரு மருகோனே … கோபாலர்களுக்கு

அரசனாகிய கிருஷ்ணன் அன்பு வைத்த அழகிய மருகனே,

கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும்

வயலியில் … தவறுதல் இன்றி பேரொலியுடன் அலைகளை வீசி வரும் காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும்,

கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே. …

கோனாடு*** என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலி மலையிலும்

வீற்றிருக்கும் பெருமாளே.

ஒருமுறை பாண்டியன் ராஜசேகரன் நடராஜப் பெருமான் எப்போதும் இடது திருவடியைத் தூக்கி நடனமாடுவது அவருக்கு எவ்வளவு அயர்ச்சி தரும் என்று எண்ணி வருந்தி, இறைவனை கால் மாறி வலது பாதத்தைத் தூக்கி ஆடும்படி வேண்டினான். அதற்கு இணங்கி மதுரையில் சிவபிரான் கால் மாறி ஆடினார்–

– திருவிளையாடல் புராணம்.

** மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரஜன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக்

கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர்.— திருவிளையாடல் புராணம்.

*** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது..

***

திருப்புகழில் ராகங்கள்

மறை வேள்வி சோமாசிமார் சிவாய நம என மா மாய வீர

கோரமுடன் இகல் சூர் மாள வேலை ஏவும் வயலியில்

இளையோனே … வேத வேள்விகள், சோம யாகம் செய்யும் பெரியோர்கள் பஞ்சாக்ஷரத்தை ஓதித் துதித்து நிற்கவும், பெரிய மாயங்களும் வீரமும் கோரமும் பொருந்தி போர் செய்த சூரன் இறக்கும்படி வேலாயுதத்தைச் செலுத்திய, வயலூரில் வீற்றிருக்கும் இளையோனே,

கூதாள நீப நாக மலர் மிசை சாதாரி தேசி நாமக்ரியை முதல்

கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை … கூதாளப் பூ,

கடப்ப மலர், சுரபுன்னை மலர் இவைகளின் மீது சாதாரி (பந்துவராளி), தேசி (தேஷ்), நாமக்ரியை (நாதநாமக்கிரியை) முதலான ஆடம்பரமான ராக இசைகளைப் பாடும் வண்டுகள் நிறைந்த சோலைகளும்,

கூர் ஆரல் தேரு(ம்) நாரை மருவிய கான் ஆறு பாயும் ஏரி

வயல் பயில் கோனாடு சூழ் விராலி மலை உறை

பெருமாளே. … நிரம்ப ஆரல் மீன்களைக் கொத்தும் நாரைகள்

பொருந்திய காட்டாறுகள் பாய்கின்றனவும், ஏரிகளும் வயல்களும்

நெருங்கியுள்ள கோனாடு* என்னும் நாட்டில் உள்ள விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

***

ஆதிஷேனுக்கு ஆயிரம் தலைகள் உண்டான கதை

நிலாவிரி நிலாமதி நிலாத அநில அசன … சந்திரிகை விரிந்து

ஒளி செய்யும் பிறைமதியையும், நில்லாது அலைகின்ற காற்றைப் புசிக்கும் சர்ப்பமாகி

நியாயப ரிபாலஅர … தர்மத்தைப் காப்பவனான ஆதிசேஷனையும்*

நதிசூடி … கங்கைநதியையும் சூடியவரும்,

நிசாசர குலாதிபதி ராவண புயாரிட … அரக்கர் குலத்துக்கு

அதிபதியாகிய ராவணனுடைய தோள்கள் வருந்துமாறு*3 செய்தவரும்,

நிராமய சரோருக அரன் அருள்பாலா … நோயற்றவரும்,

தாமரையின் மீது அமர்ந்தவருமான சிவனார் அருளிய பாலனே,

வில் ஆசுகம் வலாரெனும் உலாச இத ஆகவ … வில்லையும்

அம்பையும் வைத்துப் போர் புரிவதில் வல்லவர்கள் தாம் என்ற மகிழ்ச்சியில் போர் செய்யும்

வியாதர்கள் விநோதமகள் மணவாளா … வேடர்களின் அற்புதப்

புதல்வியாகிய வள்ளியின் மணவாளனே,

விராவு வயலார்புரி சிராமலை பிரான்மலை … மேன்மைமிகு

வயலூர், திரிசிராப்பள்ளி, பிரான்மலை என்னும் கொடுங்குன்றம், மற்றும்

விராலிமலைமீதிலுறை பெருமாளே. … விராலிமலையிலும்*4

வாழ்கின்ற பெருமாளே.

 ஆதிசேஷன் சிவபிரானின் ஜடாமுடியில் ஆபரணமாக உள்ளார். அவர் சர்ப்பங்களின் அரசன். நீதியைப் பரிபாலிப்பவர். தனது நீதிவழுவாமை குறித்து  கர்வம் ஏற்பட்டதால் சிவபிரான் ஆதிசேஷனை ஜடையிலிருந்து உருவி தரையில் அடிக்க பாம்பின் தலை ஆயிரம் துண்டங்களாக உடைந்தது. தன் தவறுக்கு வருந்தி சிவனைத் தொழ, ஆதிசேஷன் ஆயிரம் தலைகளுடன்

தோன்றினார் – சிவபுராணம்.

***

திருமால்  சக்ராயுதம்  பெற்ற கதை

 இராகவ இராமன் முன் … ரகுவின் மரபிலே வந்த இராம பிரான் முன்னொருநாளில்

இராவண இராவண இராவண இராஜன் … அழுகுரலுற்றவனும், இரவின் வண்ணமாகிய கரிய நிறம் படைத்தவனும் ஆகிய இராவணன் என்ற அரசன்

உட்குடன்மாய் வென்ற … அச்சப்பட்டு மாயும்படியாக வெற்றி கொண்ட இராகன்மலர் ஆள் … அன்பு நிறைந்தவனாகிய திருமாலின் கண்ணையே மலராகக் கொண்டருளிய

நிஜ புராணர் குமரா … உண்மை வரலாற்றை* உடைய

சிவபெருமானின் திருக்குமரா,

இராவண இராவண இராவண இராஜன் … அழுகுரல் உடையவனும் , இரவின் வண்ணமாகிய கரிய நிறம் படைத்தவனும் ஆகிய இராவணன் என்ற அரசன்

திருவீழிமிழலையில் திருமால் சிவனை நாள்தோறும் 1000 தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தார். திருமாலின் அன்பைச் சோதிக்க, சிவன் ஒருநாள் ஒரு மலரை ஒளித்து மறைக்க, திருமால் குறைந்த மலருக்கு பதிலாக, தாமரை போன்ற தம் கண்ணையே மலராக அர்ச்சித்தபோது, சிவன் திருமாலின் அன்பை மெச்சி சக்ராயுதத்தைப் பரிசாக வழங்கினார் என்பது வரலாறு.

ராவண என்றால் அழும் குரலை உடையவன் என்று பொருள்.

*** 

பத்து வகை தோல் வாத்தியங்கள் !

விராலிமலைக்கு அருணகிரியை முருகனே அழைத்த கதை !

தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத ச(ல்)லிகை

தவில் முரசு கரடிகை மத்தளி தவண்டை அறவைத் தகுணி

துந்துமிகள் மொகுமொகு மொகு என அலற … தபேலா என்ற

ஒரு மத்தள வகை, குடவடிவுள்ள முழவு வாத்திய வகை, திமிலை என்ற ஒருவகைப் பறை, சிறு பறை வகை, முன் இல்லாததான புது வகையான சல்லென்ற ஓசை உடைய சல்லிகை என்னும் பெரும் பறை, தவில் வகை. முரசு, கரடி கத்தினாற் போல் ஓசை உடைய பறை வகை, மத்தள வாத்தியவகை, பேருடுக்கை, நிரம்ப இருந்த தகுணிச்சம் என்ற துந்துமிகள் பேரொலி எழுப்ப,

………………………………………

திருவயலியில் அடிமைய குடிமை இ(ன்)னல் அற மயலொடு

மலம் அற அரிய பெரிய திருப்புகழ் விளம்பு என் முன்

அற்புதம் எழுந்தருள் குக … திரு வயலூரில் (அடியேனுடைய) குடிப் பிறப்பின் துன்பங்கள் நீங்க, மயக்கமும் மும்மலங்களும் அகல, அருமையான பெரிய திருப்புகழைச் சொன்ன என் கண்களின் முன்னே அற்புதக் காட்சியுடன் எழுந்தருளிய குகனே*,

விராலி மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி

விதரண முருக சரவண உற்பவ க்ரவுஞ்ச கிரி நிக்ரக அகண்ட

மய நிருப விமல சுக சொருப பரசிவ குருபர …

…………………..

* ‘ விகட பரிமள ‘ எனத் துவங்கும் ( 917 ) திருப்புகழ் பாடலை அருணகிரியார் வயலூரில் பாட, இறைவன் உவந்து அவர் முன் அற்புதக் கோலத்தோடு எழுந்தருளி அவரது இன்னலை ஒழித்து, ஞானோபதேசம் செய்து விராலி மலைக்கு வா என்று அழைத்தார். இதை, ‘விராலி மாலையில் நிற்பம், நீ கருதி உற்று வா, என அழைத்து என் மனதாசை மாசினை அறுத்து ஞானமுதளித்த வாரம் இனி நித்தம் மறவேனே’ என்று வரும் ‘ தாமரையின் மட்டு ‘ ( 911 ) திருப்புகழ் பாடலில் காணலாம்.

விராலிமலை, திருச்சியில் இருந்து  20 மைலில் உள்ளது.

***

திருப்புகழில் விதுரன்

விதுரன் நெடும் த்ரோணம் ஏற்று எதிர் பொரும் அம்பு ஆதி

ஏற்றி விரகின் எழுந்து ஓய நூற்றுவரு(ம்) மாள விரவு ஜெயன்

காளி காட்டில் வரு தருமன் தூதன் நீற்ற விஜயன் நெடும்

பாக தீர்த்தன் மருகோனே … விதுரன் பெரிய வில்லை எடுத்து,

எதிரியுடன் போர் செய்ய அம்பு முதலிய பாணங்களை அதில் ஏற்றி சாமர்த்தியத்துடன் எழுந்து போர் புரிதல் ஓயுமாறு, துரியோதனன் ஆகிய நூறு பேரும் இறக்க உபாயம் செய்த வெற்றி வீரன், துர்க்கை வாழும் இடும்பை வனத்தில் வாசம் செய்த தருமருடைய தூதுவன், திருநீறு இட்டுத் தவம் செய்த அருச்சுனனுடைய பெரிய தேரின் பாகனாகிய பரிசுத்த மூர்த்தி திருமாலின் மருகனே,

***

51 எழுத்துக்களும் (சம்ஸ்க்ருதம்), 18 புராணங்களும்,  அஜபா மந்திரமும்

ஐந்து பூதமும் … மண், நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐந்து பூதங்களும்,

ஆறு சமயமு … சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், சாக்தம்,செளரம் என்ற ஆறு சமயங்களும்,

மந்த்ர வேத புராண கலைகளும் … மந்திரங்களும், வேதங்களும்,

புராணங்களும்*, கலைகளும்,

ஐம்பதோர்விதமான லிபிகளும் … ஐம்பத்தொரு விதமான

எழுத்துக்களும்,

வெகுரூப அண்டர் ஆதி சராசரமும் … அனேக உருவங்களுடன்

கூடிய தேவர்கள் முதல் அசைகின்ற, அசையாத உயிர்கள் யாவும்,

உயர் புண்டரீகனு மேக நிறவனும் … உயர்ந்த பிரமனும், கார்மேக

நிறத்துத் திருமாலும்,

அந்தி போலுருவானு … அந்தி வானம் போன்ற செம்மேனியை

உடைய ருத்திரனும்,

நிலவொடு வெயில்காலும் … நிலவோடு வெயிலை வீசுகின்ற

சந்த்ர சூரியர் தாமும் … சந்திரனும், சூரியனும்,

அசபையும் … அம்ச மந்திரமும்**

விந்து நாதமும் … சுக்கில சுரோணிதமாக விளங்கும் சிவ சக்தியும்,

ஏக வடிவம் … இவை அனைத்தும் கலந்து இருப்பது ஒரே வடிவமாகும்.

அதன்சொரூபம் அதாக வுறைவது சிவயோகம் … வேறு வேறாகப்

பிரிக்காமல் அதன் ஸ்வரூபமாகவே அகண்டாகாரமாக இருக்கும்

சிவத்தை அறிந்து அதில் நிலையாக நிற்பதுவே சிவ யோகம் ஆகும்.

…………………………………

விராலி மலையுறை பெருமாளே. … விராலி மலையில்

வீற்றிருக்கும் பெருமாளே.

புராணங்கள் 18 – சைவம், பெளஷ்யம், மார்க்கண்டேயம், லிங்கம், ஸ்காந்தம்,வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரம்மாண்டம், கருடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், பிரமம், பத்மம், ஆக்னேயம், பிரமகைவர்த்தம்.

** அசபை என்ற அம்ச மந்திரம் வடமொழியில் ஸோஹம் என்பது. ஸ + அஹம்,, அதாவது அவனே நான் என்ற, பரமாத்மா – ஜீவாத்மா ஐக்கியத்தைக் குறிப்பிடும் மந்திரம்.

51 எழுத்துக்கள் சம்ஸ்க்ருத   மொழியில் உள்ளன.

சமஸ்கிருத மொழியில் 51 அட்சரங்கள் (வர்ணங்கள்) , அவை அ முதல் க்ஷ வரை அமைந்துள்ளன. இந்த 51 எழுத்துக்களும் 51 சக்தி பீடங்களை மையமாகக் கொண்ட அட்சர சக்திகளாகவும்,  

இவை மாத்ருகா அட்சரம் (தாயைப் போன்ற எழுத்துக்கள்) என்றும் அழைக்கப்படுகின்றன.

16 உயிரெழுத்துக்கள், 25+5+5 மெய்யெழுத்துக்கள் மற்றும் அஹ், அம் போன்ற இதர எழுத்துக்களை உள்ளடக்கியது.

இந்த எழுத்துக்கள் மந்திர சக்தியைக் கொண்டவை ; உடலின் பல்வேறு சக்தி சக்கரங்களுடன் தொடர்புடையவை .

5 short vowels (hrasva), 9 long vowels (dIrgha) and 2 support vowels (pluta) making it total of 16 vowels (3).

5 semi-vowels/antastha (Sometimes ळ is not included and hence 4

25 consonants and 5 sibilants called vyaJjanam.

—SUBHAM—

TAGS-– சக்ராயுதம் 51 எழுத்து (சம்ஸ்க்ருதம்), 18 புராணம்,  அஜபா மந்திரம், விதுரன்,  ராகங்கள் , கால் மாறி ஆடிய கதை ,  அருணகிரிநாதர் அரிய செய்திகள்Part 38, ஆதிசேஷன்

London Swaminathan declares Holiday!

Saptamatas, Pictures by A Narayanan, Sydney, Australia.

London Swaminathan declares Holiday!

Tamil and English articles won’t be posted by me in my blogs

For a week or so.

Let us travel Far and Wide.

Posted  on March 2, 2026

***

Ulysses Poem by Alfred Tennyson

‘T is not too late to seek a newer world.

Push off, and sitting well in order smite

The sounding furrows; for my purpose holds

To sail beyond the sunset, and the baths

Of all the western stars, until I die.

It may be that the gulfs will wash us down:

It may be we shall touch the Happy Isles,

And see the great Achilles, whom we knew.

Tho’ much is taken, much abides; and tho’

We are not now that strength which in old days

Moved earth and heaven, that which we are, we are;

One equal temper of heroic hearts,

Made weak by time and fate, but strong in will

To strive, to seek, to find, and not to yield.

 Ashtadikpalas

Sivaganas.

—subham—

Tags- Holiday, March 2, 2026

முருகனுக்கே முதல் பரிசு! பார்வதி முடிவு! திருப்புகழில் அரிய செய்திகள் -Part 36 (Post.15,471)

Written by London Swaminathan

Post No. 15,471

Date uploaded in Sydney, Australia –  2 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 36

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 36

முருகனுக்கே முதல் பரிசு! பார்வதி முடிவு!

Picture by A Narayanan, Sydney, Australia.

கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட

புலவோனே … (இமய) மலை மகளான பார்வதி அளவு இல்லாத கல்விப் போட்டியில் தலை இடம் பெற்ற சகல கலா வல்லவன் நீதான்* என்னும்படி விளங்கிய புலவனே,

கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற

ஒன்றை அருள்வோனே … தேன் ஒழுகும் கொன்றையைச் சடையில்

சூடிய வள்ளலாகிய சிவபெருமான் அன்று வணங்கி நிற்க, ஐயம்

இல்லாதபடி ஒப்பற்ற பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே,

வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில்

வீரா … வன்மை வாய்ந்த அசுரர்கள் பயப்பட, நற்குணம் படைத்த

தேவர்கள் மகிழ்ச்சி அடைய, உனது சாமர்த்தியத்தைக் காட்டிய மயில் வீரனே.

வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த

பெருமாளே. … வள்ளிக் கொடிகள் படர்கின்ற வள்ளி மலைக்குப்**

போய், வள்ளி நாயகியை அங்கு மணம் புரிந்த பெருமாளே.

பெரியோருக்குச் செய்யும் முதல் மரியாதை (வித்வத் தாம்பூலம்) யாருக்குக் கொடுப்பது என்ற வாதத்தில் ஔவையார், இந்திரன், சரஸ்வதி, அகத்தியர், ஆகியோர் தமக்கு அப்பரிசு பெற தகுதி இல்லை என மறுத்ததும், தேவர்களும் முனிவர்களும் பார்வதியை அணுகினர். தேவி புன்னகை புரிந்து, நான் வாழைப் பழத்தின் தோல் போன்றவள். எனக்குள் இருக்கும் கனி, முத்துக் குமரனே இப்பரிசுக்குத் தக்கவன் என்று கூறினாள் – கந்த புராணம்.

** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராயவேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

***

சிவபெருமானைத் தொழும் கழுகுகளின் பெயர்கள்

கழுகுதொழு … கழுகுகள்* தொழுகின்ற

வேதகிரி சிகரி வீறு … வேதமலையின் உச்சியில் விளங்கும்,

கதிருலவு வாசல் நிறைவானோர் … ஒளிவீசும் வாசலில் நிறைந்த

தேவர்கள்

கடலொலிய தான … கடலின் அலை ஓசை போன்று ஓம் என்று

மறைதமிழ்க ளோது … வேதமந்திரங்களையும் தமிழ் மறைகளையும்

ஓதுகின்ற,

கதலிவனம் மேவு பெருமாளே. … கதலிவனம்** (என்ற

திருக்கழுக்குன்றத்தில்) வாழுகின்ற பெருமாளே.

எல்லா யுகங்களிலும் கீழ்க்கண்ட இரண்டு கழுகுகள் இந்த வேதமலையை பூஜித்தன:

கிருத யுகம் – சண்டன், பிரசண்டன்,

திரேதா யுகம் – ஜம்பாதி, ஜடாயு,

துவாபர யுகம் – சம்புகுத்தன், மாகுத்தன்,

கலி யுகம் – சம்பு, ஆதி.

** திருக்கழுக்குன்றத்தின் தலவிருட்சம் வாழையாதலால் இதற்கு ‘கதலிவனம்’ என்றும் பெயர்.

***

சிவன்ஊர்த்வதாண்டவம் ஆடியது என் ?

Lord Siva pacifying angry Parvati;  pictures by A Narayanan, Sydney, Australia.

காதும் உக்ர வீர பத்ர காளி … வெகுண்டு வந்த வீரபத்திரரின்

துணைவியான காளி

வெட்க மகுடத்தை ஆகாச முட்ட வீசி விட்ட காலர் … நாணம்

அடையும்படி தமது கிரீடத்தை வானில் முட்டும்படி உயரமாக வீசி விட்டு (ஊர்த்துவ தாண்டவம்) ஆடிய பாதத்தை உடைய பரமசிவன்,*

பத்தி இமையோரை … பக்தியுள்ள தேவர்களுக்கு

ஓது வித்த நாதர் கற்க … கற்பித்த நாதராகிய சிவபெருமான்,

உன்னிடம் பாடம் கேட்கவும்,

ஓது வித்த முநிநாண … சிவனால் ஓதுவிக்கப்பட்ட பிரமன்

வெட்கமடையவும்,

ஓரெழுத்தில் ஆறெழுத்தை … ஓரெழுத்தாகிய ஒப்பற்ற ஓம்கார

ப்ரணவத்தில், ஆறெழுத்தாகிய ஓம்நமசிவாய அல்லது சரவணபவ

மந்திரமே அடங்கியுள்ள தன்மையை விளக்கி

ஓது வித்த பெருமாளே. … அந்தச் சிவனுக்கே உபதேசித்த

பெருமாளே.

* திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.

** தக்ஷ யாகத்தை அழிக்க சிவனும் உமையும் வீரபத்திரராகவும் காளியாகவும் வந்தனர். காளி நாணும்படி சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடியது இங்கு குறிப்பிடப்படுகிறது.

****

போட்டியில் அருணகிரி வெற்றி

சயிலம் எறிந்த கை வேல் கொடு மயிலினில் வந்து எனை

ஆட்கொளல் சகம் அறியும்படி காட்டிய குருநாதா … கிரெளஞ்ச

மலை பொடிபடச் செலுத்திய கை வேலை விளங்க ஏந்தி மயில் மீது வந்து என்னை ஆட்கொண்ட திருவருளை உலகம் முழுவதும் அறியும் வண்ணம் காட்டிய குரு நாதனே**,

திரி புவனம் தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள்

தெருவில் விளங்குச் சிராப் ப(ள்)ளி மலைமீதே தெரிய

இருந்த பராக்ரம … மூன்று உலகங்களும் வணங்கும் பல்லவ

அரசனால் கட்டப்பட்ட மண்டபங்களும் கோபுரங்களும் தெருவிலே

தோற்றம் தரும் திரிசிராப்பள்ளி மலையின் மேல் விளக்கமுற வீற்றிருந்த vவீரனே,

உரு வளர் குன்று உடையார்க்கு ஒரு திலதம் எனும் படி

தோற்றிய பெருமாளே. … அழகிய உருவுடன் திரிசிராமலைக் குன்று

உடையவராகிய தாயுமானவரான சிவபெருமானின் நெற்றிப் பொட்டுப் போலச் சிறந்து விளங்கிய பெருமாளே.

** திருவண்ணாமலையில் சம்பந்தாண்டானோடு அருணகிரியார் வாது செய்த போது தேவியைச் சபையில் வரவழைப்பேன் என்ற சம்பந்தாண்டான் அங்ஙனம் செய்ய இயலாது தோல்வி அடைந்தான். அருணகிரியார் ‘அதல சேடனார் ஆட’ என்னும் திருப்புகழைப் பாட முருகன் கைவேலுடன் கம்பத்தினின்று வெளிவந்து மயில் வாகனனாக காட்சி அளித்தான்.

—- subham—

Tags– முருகனுக்கே முதல் பரிசு! பார்வதி முடிவு! திருப்புகழில் அரிய செய்திகள் -Part 36 ,சிவபெருமானைத் தொழும், கழுகுகளின் பெயர்கள்

London Swaminathan’s Article Index for February 2026; Index No.159 (Post No.15,470)

Written by London Swaminathan

Post No. 15,470

Date uploaded in Sydney, Australia –  2 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Tamil and English Articles

அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 7 (Post.15,382)1/2/2026

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் -Part 8 (Post No.15,385)

நோய்கள், காசு பறிக்கும்  டாக்டர்கள் பற்றி அருணகிரிநாதர்!-9 (Post.15,388)

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்- Part 10 (Post.15,393)

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 11 (Post.15,396)

அருணகிரி நாதர் பாடலில் முஸ்லீம் ஸலாமும் ஆதி சங்கரரின் அத்வைதமும்!-Part 12 (Post.15,398)

கனவுகள், எட்டுவகைப் பறவைகள், முருகன் கொடிகள் பற்றி முக்கிய செய்திகள்-13 (Post.15,401)

மூளையின் கலர் என்ன?  செட்டியார் வடிவில் முருகன்!- Part 14 (Post.15,404)

திருப்புகழில் பங்களாதேஷ் கோவில்;  காகத்துக்கு ஏன் ஒரு கண்? Part-15 (Post.15,407)

திருப்புகழில் வாளை மீன் ! யாதவர்கள் அழிந்த கதை – Part 16 (Post.15,410)

முருகனைப் பழித்தவர்கள் அழிவார்கள் ! திருத்தணி என்ற பெயர் எப்படி வந்தது ?- 17 (Post.15,413)

அளவிட முடியாதவை எவை? அருணகிரி தரும் பட்டியல்! – Part 18 (Post No.15,416)

திருப்புகழில் புஸ்தகப் பித்தர்கள் மீது தாக்குதல்! எட்டு அபூர்வ சக்திகளை அடைய உதவும் துதி!—Part 19 (Post.15,419)

பறவை ஞானிகள் ‘பரமஹம்சர்’ பற்றி அருணகிரிநாதர் (Post.15,423)

சரஸ்வதியின் சகோதரன் முருகன்!  திருப்புகழில் மேலும் ஒரு புதிர்!- Part 21(Post No.15,425)

திருப்புகழில் திருமால் அவதாரங்கள்! விஷ்ணுவை விநாயகர் அடக்கிய கதை! -22 (Post No.15,428)

முருகனின் யானை வாகனம்- திருமால்! திருப்புகழில் பஞ்ச பாண்டவர்கள்!- Part 23 (Post No.15,430)

அருணகிரி நாதர் சொன்ன நான்கு கதைகள்! ஐந்து கோசம்!காந்த ஊசி!– 24 (Post No.15,433)

முருகன் ஒரு மாலுமி! அவன் ஓட்டும் கப்பல் பற்றி அருணகிரிநாதர்!-Part 25 (Post.15,436)

திருமாலை முருகன் அடக்கிய கதை! வேதத்தின் ஆறங்கம்! மதுரையின் பெருமை- Part 26(Post.15,438)

20 ரி ரி ரி ரி ரி தேவியர் நாமங்கள்; திருப்புகழில் சொல் அழகும் பொருள் அழகும்! -27 (Post No.15,442)

திருப்புகழில் ஐம்படைத் தாலி, பாற்கடலைக் கடைந்த காட்சி, ஏழுவகை நரகம்- Part 28 (Post.15,445) 22/2/26

திருப்புகழில் சிவாய நம மந்திர விளக்கம்;

சரப பட்சி கதை;அணு விஞ்ஞானம் – 29 (Post.15,448) 23/2/26

நான் ஒரு முட்டாளுங்க! அருணகிரிநாதரின் அவலக்குரல்- PART 30 (Post No.15,451)24/2/26

ஆறுமுறை ‘எட்டு இரண்டு’- அருணகிரியின் சொற்சிலம்பம்! 4 வகை ஜீவன் முக்தர்கள்- Part 31 (Post.15,454) 25/2/26

வள்ளி, தேவயானையின் முற்பிறப்பு! ‘சீவன்’ சிவன் ஆக வேண்டும்! தில்லை மூவாயிரர் புகழ் – Part 32, 26-2-2026

பச்சிலைக்கும், எச்சிலுக்கும் மயங்கியவன் சிவன் ! ஞான சம்பந்தரின் ஞான வாள்! – Part 33 (Post.15,459) 27/2

திருப்புகழில் ஐந்து கலைகள், ஐந்துஎழுத்து, பஞ்ச பூதங்கள் விளக்கம்- Part 34 (Post.15,463) 28/2/26

கிரீன்லாந்து உருகுகிறது! உலகத்துக்கு ஆபத்து ! (Post No.15,408) 9/2/2026

சிட்னி நகரில் வள்ளுவர் சிலை, இளங்கோ சிலைகளுடன் தமிழ்க்கோவில்! (Post No.15,383) 1-2-2026

மார்ச் 2026 காலண்டர்- குமரேச சதகம் பொன்மொழிகள் (Post No.15,464)28/2/26

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-31; இந்துமத கலைச்சொல் அகராதி-31 (Post.15,391) 4/2/2026

Parts 32,33,34,35,36, 37, 38, 39

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 40; இந்து மத கலைச்சொல் அகராதி-40 (Post No.15,460) 27/2

Hinduism through 500 Pictures in Tamil and English 39; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-39 23/2/26 Post No. 15,405, 8 February 2026

***

English Articles

Purananuru Wonders 8- Ancient Tamil Encyclopaedia Part 48  (Post No.15,395) 5/2/26

Sanskrit Bhubuk (earth eater) and Sakunam  in Tamil Purananuru!-49 (Post no.15,402)

Purananuru Wonders 10; Ancient Tamil Encyclopaedia – Part 50  (Post No.15,411)

Purananuru Wonders 11; Ancient Tamil Encyclopaedia  Part- 51  (Post No.15,422)

Dharma Artha Kama Moksha in Sangam Literature and Tolkappiam- Part 52

Tamil Barter Trade, Puppets, Similes; Purananuru Wonders 13; Ancient Tamil Encyclopaedia – Part 53  (Post No.15,439) 20/2/26

London Swaminathan’s Article Index for January 2026; Index No.158 (Post No.15,389)

Two more Beautiful Temples in Sydney that I Visited (Post No.15,386) 2/2/26

Why did Christians burn Women alive in Europe?  (Post.15,399) 6/2/26

Valmiki Ramayana sloka in Sangam Literature; Purananuru Wonders 14- Part 54 (15,452) 24/2

March 2026 Calendar with Golden Sayings from Kumaresa Satakam (Post.15,465) 28/2/26

***

Lifted Items

HISTORY FLASH — NEW TAMIL INSCRIPTION DISCOVERED IN ENGYPT 13/2/26

–Subham—

Tags- London Swaminathan, Tamil, English Articles, Index for February 2026, Index No. 159

S Nagarajan Articles index for FEBRUARY 2026(Post.15,469)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,469

Date uploaded in London – 1 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

S Nagarajan Articles index FEBRUARY 2026 

1-2-26 15384 S Nagarajan Articles Index January 2026

2-2-26 15387 எந்தச் செயலையும் யோசித்துச் செய்! (சுபாஷிதச் செல்வம்)

3-2-26 15390 மறையப் போகும் தேசங்களும் நகரங்களும்! 24-11-25

           கல்கிஆன்லைனில் பிரசுரமான கட்டுரை!

4-2-26 15394 எல்லாவற்றிற்கும் காரணம் தங்கம் தான்! (சுபாஷிதம்)

5-2-26 15397 NEW BOOK ‘SHARANAGATI- SURRENDER’

6-2-26 15400 பங்களா தேஷில் ஹிந்துக்கள் படும் பாடு!

7-2-26 15403 ராமாயணத்தில் வரங்கள் – 34 மைநாகத்திற்கு இந்திரன்

           வரம் அருளியது!

8-2-26 15406 ராமாயணத்தில் வரங்கள் (35) சுரஸா தேவிக்கு பிரம்மா

           வரம் அருளியது!

9-2-26 15409 ராமாயணத்தில் வரங்கள் (36) லங்கா தேவிக்கு பிரம்மா

           வரம் அருளியது!

10-2-26 15412 கோடி காரியங்களை ஒதுக்கி விட்டு ஹரி பஜனை செய்க   

            (சுபாஷிதம்)

11-2-26 15415 தூக்கத்தின் ஐந்து வகைகள்! (18-11-25 கல்கிஆன்லைன்

            கட்டுரை)

12-2-26 15418 சிவ ரகசியம்!

13-2-26 15421 ராமாயணத்தில் வரங்கள் (37) ஹனுமானுக்கு பிரம்மா வரம்

           அருளியது!

14-2-26 15424 யாருக்கு எது விஷம்? (சுபாஷிதம்)

15-2-26 15426 ராமாயணத்தில் வரங்கள் (38) அச்வினீகுமாரர்களான   

            மைந்தன் மற்றும் த்விவிதனுக்கு பிரம்மா வரம்

             அருளியது

16-2-26 15429 உலகால் போற்றப்படுவது எப்படி? (சுபாஷிதம்)

17-2-26 15432 ராமாயணத்தில் வரங்கள் (39) காலகேயனை ராவணன்

            வென்றது!

18-2-26 15435 தமிழுக்குப் புத்துயிர் தந்தவர்!

19-2-26 15437 குருஜி ஶ்ரீ மாதவ் சதாசிவராவ் கோல்வால்கர்

20-2-26 15440 ராமாயணத்தில் வரங்கள் (40) இந்திரஜித் சிவபிரானிடம்

            வரம் பெற்றது!

21-2-26 15444 யமன் நிஜம் தான்! மரண தேவதைகளைச் சந்தித்த ஶ்ரீ            அன்னை!

22-2-26 15447 உலகின் மிக ஆழமான ஏரி – பைகால்! (கல்கிஆன்லைன்

            இதழ் கட்டுரை)

23-2-26 15450 உண்மையான பந்து யார்? (சுபாஷிதம்)

24-2-26 15453 ராமாயணத்தில் வரங்கள் (41) மருகாந்தாரத்திற்கு ராமர்

            வரம் அளித்தது!

25-2-26 15455 ராமாயணத்தில் வரங்கள் (42)  விஸ்வகர்மா நளனுக்கு

            வரம் அளித்தது!

26-2-26 15458 நிகழ் காலத்தில் கவனம் செலுத்துக! (சுபாஷிதம்)

27-2-26 15461 பக்தியினால் திருப்பிக் கிடைத்த  மோதிரம்: ஷீர்டி

             சாயியாக இருந்த போது நடந்த சம்பவத்தை ஶ்ரீ சத்ய

             சாயிபாபா விவரித்த ரகசியம்! (22-11-25 கல்கிஆன்லைன்

             இதழ் கட்டுரை)

28-2-26 15466 கண்ணபிரானை மடக்கிய கோபிகை! (சுபாஷிதம்)

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL- 41; இந்து மத கலைச்சொல் அகராதி-41(Post.15,468)


Written by London Swaminathan

Post No. 15,468

Date uploaded in Sydney, Australia –  1 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Kabir

Kasbir was born in 1440 CE. He was found lying as a child in the lake called Lahar Talao near Kashi on a leaf of lotus. Here he was found by Niru, a childless Mohammedan weaver who was going with his wife Nima to attend a function in a neighbouring village. They took compassion on the forsaken baby. They took him to their home and there they brought him up as their own child. A Kazi was called in to give the child a name. The Kazi told Niru that the child was a demon and should be killed immediately. A miracle happened. The knife was plunged into the heart of the child. No drop of blood came out. Kabir uttered a verse which made them understand that he was not ordinary flesh and blood. Then the name ‘Kabir’ was given to the child. The word ‘Kabir’ means ‘great’ in the Arabic language.

It is said that he was born of a Brahmin girl-widow, who, to hide her shame, left the child in the lake. But in a stanza, Kabir denies his own conception in a womb. 

The life of Kabir is shrouded in mystery. Beyond the facts that he was a weaver, born of poverty-stricken parents, that he lived at Kashi during the reign of Sikander Lodi, that he was the disciple of the great religious reformer Ramananda, and that he himself was the Guru of several distinguished disciples, we know positively nothing about Kabir.

The name of Kabir’s wife was Loi. Kamal was his son. Dharam Das was his chief disciple. Jhali, queen of Chitore, was his royal disciple. Kabir used to live with his wife in a hut in a solitary place outside the city. He used to feed the Sadhus or ascetics who went to his place.  He did not observe the rules of caste. The probable date of his death is 1519 CE.  Kabir died at Maghar near Gorakhpur

Kabir says, “I am the child of Allah and of Ram.” The Hindus take him as a Brahmin saint, the Mohammedans regard him as a Sufi. A sect known as ‘Kabir-panth’, to which some lakhs of Hindus of Northern India still belong, was founded by Kabir’s followers. But Kabir himself was above all sects, cults and creeds.

He was an illustrious philosopher-poet. He was a skilled musician and a poet as well. His verses are repeated, even today, in almost every household in Uttar Pradesh and Punjab.

Kabir’s works are mostly collections of songs composed in the various metres of old Hindi. There are seventy-two works. The most important and famous works are: the Kabir Bijak, the Suknidhan, Sabdas, Sakhis, Rekhtas, Mangal, Vasant and Holy Agams. The Kabir Bijak is the great authority on all religious matters and doctrines of the Kabir-panthis.

கபீர்தாசர்

சுமார் (Kasbir 1440 CE)  600  ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெரிய ஞானி, கவிஞர், பாடகர். இன்றும் இந்துக்களாலும், முஸ்லீம்களின் சூபி பிரிவினாலும்  போற்றப்படுகிறார். இவருடைய தோகா பாடல்களை  தமிழ் நாட்டில் சுவாமி ஹரிதாஸின்  குரலில் கேட்டு மகிழலாம். சம்பிரதாய பஜனைப் பாடகர்களும் இவரது பாடல்களை இந்தியில் பாடுவார்கள் ஒரு பிராமண விதவை, கபீரின் குழந்தைப் பருவத்தில் அவரை விட்டுச் செல்லவே , அதைக் கண்ட முஸ்லீம் தம்பதிகள் இவரை வளர்த்தனர் ; அவர்கள் ஏழை நெசவாளர்கள்  இரு மதத்தினரும் உரிமை கொண்டாடும்போது, நானே  ராமன் நானே அல்லா என்றும் இவர் பாடினார். ஜாதி மத சடங்குகளைப் புற க்கனித்தார் . பிறந்தது முதல் இறந்தது வரை பல அற்புதங்களைச்  செய்ததாக வாய்மொழிக் கதைகள் கூறுகின்றன ; எதற்கும் ஆதாரமில்லை. சிக்கந்தர் லோதி என்ற மன்னர் காலத்தில் இவர், காசியில் வாழ்ந்தார். ராமா நந்தர்  என்ற ஹிந்துவை குருவாக ஏற்றார்.இவரது பொன்மொழிகள் அடங்கிய தோகா பாடல்கள் தத்துவங்களை விளக்கும்  :-

கபீரின் அழுகை!

இந்தப் பாட்டில் கபீர்தாசரின் ஒரு கவிதை இடம் பெற்றிருக்கிறது. அதன் கருத்தைப் பார்ப்போம்.

रंगी को नारंगी कहे , बने दूध को खोया

 चलती को गाड़ी कहे , देख कबीरा रोया

ரங்கீ கோ நாரங்கீ கஹே, பனே தூத் கோ கோயா

சல்தீ கோ காடீ கஹே, தேக் கபீரா ரோயா.

இங்கு வார்த்தை ஜாலம் செய்கிறார் கபிர் தாசர்!

ரங்கீ என்றால் நல்ல  கலர் உள்ளது.  நா-ரங்கீ என்றால் கலர் இல்லாதது. ஆனால் நாரங்கீ என்பது ஆரஞ்சுப் பழத்தின் ஹிந்திப் பெயர். நல்ல வண்ணமுள்ள ஆரஞ்சுப் பழத்தை நாரங்கீ- கலர் இல்லாதது என்கிறார்கள்.

பாலை சுண்டக்காய்ச்சினால் வருவது கோவா- இதை ஹிந்தியில் கோயா என்பார்கள். ஆனால் கோயா என்றால் தொலைந்துபோய்விட்டது  என்றும் பொருள்!  எனவே பாலை இல்லாததாக்கி விட்டார்கள்!

சல்தீ என்றால் வண்டி- சல்= செல்வது  இதை காடி என்பார்கள் ஹிந்தியில் ஆனால் கபீர் தாசர் இருந்த வட்டாரத்தில் இந்தச் சொல்லுக்கு ‘நிற்பது’ என்பதும் பொருள். ஆக, செல்லும் வண்டியை நிற்பது என்று சொல்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்து கபீருக்கு அழுகை வருகிறது என்று பாடுகிறார் கபீர்தாசர் இறந்த வருடம்  1519  CE  !

இந்திய அரசு இவருக்கு இருமுறை தபால் தலைகளை வெளியிட்டுள்ளது.

****

காளி

ராம கிருஷ்ண பரமஹம்ஸர், பாரதியார்  முதலிய பெரியோர்களால் தினமும்  வணங்கப்பட்ட ஹிந்து தெய்வம் காளி . அஸ்ஸாமிலும் வங்கத்திலும் மக்கள் பெரிய அளவில் வழிபடுகிறார்கள் . சிவனின் மனைவியின் உக்கிர ரூபம் காளிமாதா . அதே நேரத்தில் கருணையுடன் பக்தர்களுக்கும் அருள் புரியும் அன்னை . காளி என்றால் கருப்பு ; தமிழில் உள்ள கரி ஆங்கிலத்திலுள்ள கார்பன் முதலியன இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்தன . பாரதியார் பாடலில் சில வரிகள் –

யாதுமாகி நின்றாய் -காளி – எங்கும் நீ நிறைந்தாய்

தீது நன்மையெல்லாம் – காளி – தெய்வலீலை அன்றோ?

பூதம் ஐந்தும் ஆனாய் -காளி – பொறிகள் ஐந்தும் ஆனாய்

போதமாகி நின்றாய் – காளி – பொறியை விஞ்சி நின்றாய்

மஹாகவி பாரதியார்.

காளி என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் வருவது கல்கத்தா/ தக்ஷிணேஸ்வரத்தில் அமைந்துள்ள காளி கோவில் ஆகும்.

கருப்பு அல்லது நீல நிறத்தில்  சித்தரிக்கப்படும் காளிமாதா கழுத்தில் கபாலம் என்னும் மண்டை ஓடுகளை அணிந்திருப்பாள்; கையில் வாளினை ஏந்தி நிற்பாள் . மரணம் என்பதை நினைவுபடுத்தும் உருவம் மது கைடபன், ரக்த பீஜன் முதலிய அரக்கர்களை அழிப்பதற்காக இந்த உருவினை எடுத்தாள் . ரக்த பீஜன் கதை மூலம் இந்துக்கள் உலகத்திற்கு க்ளோனிங் உத்தியைக் கற்பித்தார்கள் . First report of cloning in the world. Each drop of blood creates another demon… goes the story. காளிகாட் அல்லது காளிகட்டா என்பதிலிருந்தே தான், கல்கத்தா என்ற பெயர் அமைந்தது.

காளியின் இடது மேற்கரத்தில் மகா பத்ராத்மஜன் என்னும் வாள் உள்ளது. கீழ்க்கையில் இரத்தம் சொட்டும் அசுரனின் தலை உள்ளது. வலது மேற்கரத்தில் அபய முத்திரையும் கீழ்க் கரத்தில் வர முத்திரையும் தாங்கி நிற்கிறாள்.

KALI- KAALI

Kali (kaali ) is the embodiment of time. Kali is fierce and complex, she’s the mother who nurtures, but also the warrior who destroys.

Kali is shown in blue or black colour with a garland of skeletons.

Kālī appears as early as the Atharva Veda, Kaali means Black. Tamil word KARI and English word CARBON are derived from this Sanskrit word.

Kali is the feminine form of Kala, encapsulating concepts of time and duality, such as good and evil. She tears down the old, destroys the ego, and makes way for the new. Yet, beneath her terrifying appearance lies a heart brimming with love and compassion, ready to embrace those who surrender to her divine will.

Kali represents the cyclical nature of existence, birth, life, death, and rebirth.

The world was threatened by the demons Madhu and Kaitabha, who symbolized the forces of chaos and ignorance. In response to this threat, Durga, the great warrior goddess, summoned forth Kali from her own brow, a gesture that symbolizes the unleashing of pure, unbridled power. She destroyed those demons. She also destroyed Raktabhija, which describes cloning. First report of cloning in the world. Each drop of blood creates another demon… goes the story.

Her worship is particularly prominent in regions like Bengal, Assam, South India, and Nepal. Sri Ramakrishna Paramahamsa was her great devotee. He worshipped her at Dakshineswar temple in Kolkata. Tamil poet Bharati also sang praising her.

Calcutta/Kolkata is derived from Kaalighat.

***


கலியுகம்

நான்கு யுகங்களில் கடைசி யுகம் கலி. இதன் பொருள் கரி/ கருப்பு. 

கலியுகம் 3102 BCE ல் தோன்றியதாக புராணங்களும் இரண்டு கல்வெட்டுகளும் சொல்கின்றன.

மிகவும் பழைய ஸ்ம்ருதியான – அதாவது சட்டப்புத்தகமான– மனு ஸ்ம்ருதியில் முதல் அத்தியாயத்தில் க்ருத யுகம் முதல் கலியுகம் வரை 4000, 3000, 2000, 1000 ஆண்டுகள் என்ற கணக்கில் நடக்கும் . ஒவ்வொரு யுகத்துக்கு இடையே ‘யுக சந்தி’ என்னும் இடைவெளி பத்து +பத்து = 20 சதவிகிதம் இருக்கும் என்கிறார். ஆக மொத்தம் 12000 ஆண்டுகள்தான் மொத்தம் 4 யுகங்களுக்கும்./

இந்துக்கள் உலகத்தின் வயதை நான்காகப் பிரித்துள்ளனர்: கிருத யுகம்(4), த்ரேதா யுக (3), த்வாபர யுகம் (2), கலியுகம் (1). ஏன் இப்படி தலைகீழ் வரிசையில் 4,3,2,1 என்று யுகத்திற்குப் பெயரிட்டார்கள்?

ஏன் என்றால் சத்திய யுகமான கிருத யுகத்தில் தர்மம் என்னும் பசு மாடு நான்கு கால்களில் நிற்குமாம். த்ரேதா யுகத்தில் அதற்கு மூன்று கால்கள்தான். அதவது தர்மம் 25 விழுக்காட்டை இழந்துவீட்டது. அப்போது ராம பிரான் தோன்றினார். த்வாபர யுகத்தில் தர்மம் என்னும் மாடு இரண்டு கால்களை – அதவது 50 விழுக்காட்டை இழந்து விட்டது. அப்போதுதான் கிருஷ்ணன் தோன்றினார். யுகத்தின் முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்தது. கலியுகத்தில் தர்மப் பசுவுக்கு இன்னும் ஒரு காலும் போய், ஒற்றைக் காலில் 25 சதவிகித புண்ய கர்மாவுடன் தள்ளாடிக் கொண்டிருக்கும். கலியுக முடிவில் அந்தக் காலும் போய் உலகமே அழியும். பிறகு மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

புராணம் கூறும் இன்னும் ஒரு கணக்கு

கிருத யுகம் – 1728 ,000000 ஆண்டுகள்
த்ரேதாயுகம் – 1296000000 ஆண்டுகள்
த்வாபரயுகம் – 864,000 ஆண்டுகள்
கலியுகம் – 432000 ஆண்டுகள்

இந்த நாலு யுகங்களையும் சேர்த்து சதுர்யுகம் என்பார்கள். 8,640,000,000 ஆண்டுகள் ஒரு கல்பம் எனப்படும். அதுதான் பிரம்மாவின் ஒரு நாள். அதுபோல அவர் நூறு ஆண்டுகள் வாழ்வார். அவருக்குப் பின்னால் வேறு ஒரு பிரம்மா வருவார். இந்தக் காலச் சுழற்சிக்கு முடிவே இல்லை.

அறப்பளீசுர சதகம் பாடிய அம்பலவாணரும் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரும் கலி யுகத்தில் மக்கள் எப்படி தீய வழிகளில் நடப்பார்கள் என்று பாடியுள்ளனர் .

கலியுகத்தில் என்ன, என்ன நடக்கும் என்று சம்ஸ்க்ருத புராணங்களில் நிறைய எழுதி வைத்துள்ளனர்; அதன் சுருக்கத்தை மட்டுமே பாடல் வடிவில் நமக்கு அம்பலவாணர் சொல்கிறார்.

 “தேவனே!,எல்லோரும் தீய விகடக் கவிஞனைப் புகழ்வார்கள்,  நல்ல கவிஞனைப் புகழமாட்டார்கள்,  தீயவரை மனமகிழ்ச்சியுடன் ஆதரிப்பார்கள்; நல்லோரை ஆதரிக்கமாட்டார்கள்,   தெய்வத்தை நினையார், பேய் போன்றவர்களை  வணங்குவர், பெற்றோர்களைச்

சிறிதும் மதிக்கமாட்டார், நடிகை நடிகையர் காலில் விழுந்து வணங்குவார், இன்பதுன்பங்களுக்கு உட்பட்ட உறவினர் வந்தால் மனம் விட்டுப் பேசமாட்டார், ஒப்புக்கு வந்த புதிய உறவினர்க்கு எப்போதும் பலவகை நலங்களும் புரிவர், (இவை) எட்டுத் திக்குகள் சூழ்ந்த உலகில் கலியுகத்தின் தன்மை ஆகும்”

ஒப்புநோக்குக-

கலியுகம் பற்றி அருணகிரிநாதரும் இதையே சொல்கிறார் :-

கோழையா ணவமி குத்த வீரமே புகல்வர் அற்பர்

     கோதுசே ரிழிகு லத்தர் …… குலமேன்மை

கூறியே நடுவி ருப்பர் சோறிடார் தரும புத்ர

     கோவுநா னெனஇ சைப்பர் …… மிடியூடே

ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மெனஇ சைப்பர்

     ஆசுசேர் கலியு கத்தி …… னெறியீதே

ஆயுநூ லறிவு கெட்ட நானும்வே றலஅ தற்கு

     ளாகையா லவைய டக்க …… வுரையீதே

ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ர

     ஈசன்மேல் வெயிலெ றிக்க …… மதிவேணி

ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில்

     ஏறியே யினிதி ருக்க …… வருவோனே

வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து

     வேதனா ரையும் விடுத்து …… முடிசூடி

வீரசூ ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்த

     வீறுசேர் சிலை யெடுத்த …… பெருமாளே.

“பயந்தவராய் இருப்பினும் அகங்காரம் மிக்க வீரப் பேச்சைப் பேசுவார்கள் சிலர். கீழ் மக்களாகவும் குற்றம் உள்ள இழி குலத்தவராகவும் இருப்பினும், சிலர் தங்கள் குலத்தின் பெருமையே பேசி சபை நடுவே வீற்றிருப்பர்.(பசித்தவருக்குச்) சோறு இடாத பேர்வழிகள் தரும புத்ர அரசனே நான்தான் என்று தம்மைப் புகழ்ந்து பேசுவர்.  தரித்திர நிலையில் ஆழ்ந்து கிடப்பவர் செல்வம் மிக்க குபேரன் நான் என்று தம்மைத் தாமே புகழ்வர். குற்றம் நிறைந்த கலி யுகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கிறது.

Kali Yuga

One of the four Yugas (eras) in Hindu Puranas. Two Hindu inscriptions date the beginning of Kali as 3101  BCE.

According to Hindu scriptures there are four Yugas/eras. They are cyclical.

Krta Yuga or Satya Yuga = Golden Age

Treat Yuga = Silver Age

Dwapara Yuga = Bronze Age

Kaliyuga = Iron Age

Another description is Dharma (Righteousness or Moral Code) is imagined as a holy cow which had four legs in Krta Yuga, three legs in Treta Yuga, two legs in Dwapara Yuga and only one leg in Kaliyuga!

There are lots of stories in our Puranas and epics about the bad behaviour of people in the Kaliyuga.

According to Puranas, Four Yugas is One Day in Brahma’s life of 100 years

Krta – 1728 ,000, 000 years
Treta – 1296, 000, 000
Dwapara– 864,000
Kaliyuga– 432, 000

But Manu Smritis gives 12,00 years only for Four Yugas.

***

கம்பர்

தமிழில் அழியாத புகழுடைடைய ராமாயணத்தைப் பாடினார்.

கவிச் சக்ரவர்த்தி என்று தமிழர்கள் புகழ்பாடும் கவிஞன் இவன் . சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ நாட்டில் தேரழுந்தூரில் பிறந்தார் . சடையப்ப வள்ளலால்  ஆதரிக்கப்பட்டார் .புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று மகாகவி பாரதியாரால் போற்றிப் புகழப்பட்டார் .

சில வரலாற்றுச் செய்திகள் மூலம் கம்பர் வாழ்ந்த காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்பது பெறப்படுகிறது. சம்ஸ்க்ருத மொழியில் வால்மீகி முனிவர் எழுதிய ஆதி காவியத்தை பெரும்பாலும் பின்பற்றினாலும் பல இடங்களில் தன்னுடைய தனித்துவத்தைக் காட்டும் தகவல்களையும் சேர்த்துள்ளார்;  சொல்  நயமும் பொருள்நயமும் மிக்க கவிதைகளைப்  பாடி தமிழ் உள்ளங்களைக்  கொள்ளை கொண்டார்.  உத்தரகாண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களைக் கம்ப ராமாயணம் கொண்டுள்ளது. இதில் 116 படலங்கள் உள்ளன. பாடல்கள் 10500 முதல் 10569 அல்லது 10576 வரை உள்ளன.

KAMBAN /KAMBAR/ KAMBA RAMAYANA

Kamban, the Tamil poet who lived one thousand years ago, is considered one of the greatest of poets of India. He gave us the Valmiki Ramayana in Tamil verses. Though he himself said that he followed Valmiki, he deviated from Valmiki in several anecdotes.

He is dated between ninth and 11th centuries CE.

Kamban was well-versed in both Tamil and Sanskrit, incorporating concepts of the Vedas, Upanishads, and the Hindu Trinity (Brahma, Vishnu, Shiva) into his work.

 His work is marked by a deep faith, often emphasizing the oneness of God, a view summarized by the perspective: “To those who say He is one, He is one. To those who say He is many, He is many”.

While he respected the Trinity, Kamban was a devout Vaishnavite who wrote in praise of Vishnu and his avatars (including Sadakopar Andhathi on Nammaazhvar).

He lived during the reign of the Chola dynasty, and was supported by a patron named Sadayappa Vallal. His birth place was Therazhundur (also spelled Therizhandur), a village in the Mayiladuthurai district of present-day Tamil Nadu, India.

***

கர்மயோகம்

பலன்களை எதிர்பார்க்காமல், அதாவது அதில் பற்று வைக்காமல் எதையும் செய்வது கர்ம யோகம் ஆகும்

பகவத் கீதையின் இரண்டாவது,  மூன்றாவது அத்தியாயம் இதை மிகவும் விரிவாக எடுத்துரைக்கிறது

கர்மயோகம் என்பது பக்தி, ஞான யோகங்களுடன் கூடிய கடமைகளைச் சரியாகச் செய்வதையும், பயனை எதிர்பாராமல் செயல்படுவதையும் குறிக்கிறது. இது மனச் சமநிலையுடன் செயல்களைச் செய்வதன் மூலம் கர்ம பந்தத்தைத் தடுத்து, ஞானயோகத்திற்குத் தயாராவதற்கான ஒரு வழியாகக் கருதப்படுகிறது.

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசனா |

மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோஸ்த்வகர்மணி ||

இது பகவத் கீதையின் (அத்தியாயம் 2ஸ்லோகம் 47) மிக முக்கியமான ஸ்லோகமாகும்.

பொருள்:

“உன் கடமையைச் (செயலை) செய்வதில் மட்டுமே உனக்கு உரிமை உண்டு; அதன் பலன்களில் ஒருபோதும் இல்லை. எனவேசெயல்களின் பலனை எண்ணிச் செயலைச் செய்பவனாக ஆகிவிடாதே; அதே சமயம்கடமையைச் செய்யாமல் சும்மா இருப்பதிலும் உனக்கு விருப்பம் இருக்கக்கூடாது.

Karma Yoga

Karma Yoga is the path of ‘action’, of putting in 100 percent effort, without being attached to the outcome When action is performed selflessly, with full focus and attention, it brings fulfillment and freedom. Acting without being attached to the fruits of one’s deeds – this alone can lead to union with the Self, which is the goal of yoga.

Karma Yoga, detailed in Chapter 2 and 3 of the Bhagavad Gita, is the spiritual path of selfless action, or Nishkama Karma, where one performs their duty (dharma) without attachment to the results or personal gain. It transforms daily work into worship by offering the fruits of action to the Divine, purifying the mind, and fostering equanimity.

“Karmanye vadhikaraste ma phaleshu kadachana” is a famous verse (Chapter 2, Verse 47) from the Bhagavad Gita where Lord Krishna tells Arjuna that

You have the right to perform your prescribed duties, but not to the results of your actions. Do not be motivated by the fruits of your actions, and do not be attached to inaction.

This philosophy emphasizes focusing entirely on the effort and duty (Karma Yoga) rather than worrying about success or failure, which are beyond one’s control- Swami Vivekananda

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।

मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥

Karmanye vadhikaraste ma phaleshu kadachana

Ma karma-phala-hetur bhur ma te sangostvakarmani

***

கர்ம காண்டம்

வேதம் கற்ற அறிஞர்கள் அதைக் கர்ம காண்டம் , ஞான காண்டம் என இரண்டாகப் பிரிக்கிறார்கள்;  நல்ல கர்மங்களைச் செய்தல் மற்றும் ஈமக்கிரியைகள், மறுபிறப்பு, யாக யக்ஞங்கள் செய்தல் கர்ம காண்டம் ஆகும் . கர்ம வினை கொள்கையின் அடிப்படையில் மனித வாழ்வின் முக்கியத்துவம்  குறித்து இது விளக்குகிறது. இதைச் செய்வதன் மூலம் அடுத்ததாகவுள்ள ஞானகாண்டத்துக்குச் செல்லலாம்; அதில் உபநிஷத தத்துவங்கள் பேசப்படுகின்றன .

Karma Kanda (kaanda)

Karma Kanda is the ritualistic section of the Vedas, focusing on performing sacrifices, ceremonies, and actions to achieve specific worldly benefits (such as wealth, prosperity, and health) or to accumulate merit. It forms the first part of the Vedas, dealing with the three modes of nature and regulated living.

It consists of Samhitas and Brahmanas, which focus on rituals, and is considered the “feet” of the Vedas, supporting the subsequent Knowledge (Jñāna-kāṇḍa) and Worship (Upāsanā-kāṇḍa) sections.

It is often described as the “preparatory stage” that qualifies a seeker for higher knowledge (Jñāna-kāṇḍa). The Jnana Kanda, or knowledge section of the Vedas, focuses on the philosophical teachings of the Upanishads, aiming for liberation (Moksha) through the understanding of Brahman and the Atman

***


கர்ணன்

கொடைக்கு கர்ணன் என்பது பொன்மொழி . மஹாபாரதத்தில் மிகவும் பெருமைகளையும் அவமானங்களையும் சந்தித்த மாமன்னன் ; குந்தி தேவிக்கு சூரிய தேவன் மூலம் பிறந்த கர்ணனை, அவள் உலகத்திற்குப் பயந்து, ஆற்றில் விடுகிறாள்; கர்ணன் கவச குண்டலங்களுடன் பிறந்தான்; அவனை தேரோட்டி எடுத்து வளர்க்கிறான்.  துரியோதனனின் அரிய நண்பன் ஆகிறான்   . ஒரு போட்டியில் அவன் ராஜ வம்சத்தில் பிறந்தவன்  இல்லை, தேரோட்டி மகன் என்று சொன்னவுடன் அவனை உடனே அங்கதேச மன்னனாக துரியோதனன் அறிவிக்கிறான்  ; அவ்வளவு நட்பு! பின்னர் மஹாபாரதப் போரில் தேர்ச் சக்கரம் புதையுண்ட நேரத்தில் அவனை அர்ஜுனன் கொன்றுவிட்டான். அதற்கு முன்னர் அவனிடமிருந்த கவச குண்டலங்களை இந்திரன் பிராமண வடிவில் வந்து கொடையாகப் பெற்றதால் அவன் சக்தியை இழக்கிறான் கடைசி  காலத்தில்  அவனைத் தன் மகன் என்று அவனிடம் குந்தி கூறியபோதும் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற பொன்பொழிக்கிணங்க கெளரவர் தரப்பில் நின்று உயிர் நீத்தான்; நட்புக்கும், கொடைக்கும், தியாகத்துக்கும்,  வீரத்துக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தான் ;அழியாத புகழ் பெற்றான் . ஆயினும் தீயோர் சேர்க்கை அவனை வீழ்த்தியது .

Karna

Karna was the embodiment of generosity. Karna was the abandoned son of Princess Kunti and the Sun God, Surya, raised by a charioteer. Known as Radheya or Anga-raja, he was a warrior of unmatched skill and immense generosity, and unwavering loyalty to his friend, Duryodhana. His story is in Mahabharata.

Born with divine Kavacha (armor) and Kundala (earrings), Kunti abandoned him to avoid societal disgrace.

Despite his innate Kshatriya skills, he was mocked as Sutaputra (son of a charioteer) and rejected. When humiliated, only Duryodhana offered him respect and the throne of Anga, leading to Karna’s lifelong, blind loyalty to the Kaurava side.

Before the war, Indra (disguised as a Brahmin) tricked him into giving up his divine armor, and curses regarding his knowledge weakened him. He was eventually killed by Arjuna on the 17th day of the Kurukshetra war while unarmed and trying to lift his chariot wheel.

–subham—

Tags- Kabir, Kali, Kanya, Kanyakumari, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 41; இந்து மத கலைச்சொல் அகராதி-41, கர்ணன், கம்பர், கபீர்தாசர்

பாரதியும் அருணகிரியும்!  திருப்புகழில் துரியோதனன்- பீமன் கதை – Part 35 (Post No.15,467)

Written by London Swaminathan

Post No. 15,467

Date uploaded in Sydney, Australia –  1 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part35

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 35

எல்லா உயிரும் இன்பமாக வாழ பாரதியும் அருணகிரியும் வேண்டுதல்

மண்ணில் வாழும் அனைத்து உயிரினங்களும் இன்பமாக வாழ அருள்புரிவாயாகுக என்று பல அடியார்கள் வேண்டுகின்றனர்

சரவணபவ நிதி அறுமுக குருபர … சரவணபவனே நிதியே,

ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,

சரவணபவ நிதி அறுமுக குருபர … சரவணபவனே, நிதியே,

ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,

சரவணபவ நிதி அறுமுக குருபர … சரவணபவனே, நிதியே,

ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,

எனவோதித் தமிழினி லுருகிய … என்று பல முறை தமிழினில்

ஓதிப் புகழ்ந்து உள்ளம் உருகுகின்ற

அடியவரிடமுறு … உன் அடியார்களுக்கு உற்ற

சனனமரணமதை யொழிவுற சிவமுற … பிறப்பு, இறப்பு என்பவை

நீங்கவும், சிவப்பேறு அடையவும்,

தருபிணி து(ள்)ள … வினைகள் தருகின்ற நோய்கள் துள்ளி ஓடவும்,

வரம் எமதுயிர் சுகமுற அருள்வாயே … வரத்தினை நீ எங்கள் உயிர்

இன்பம் அடையுமாறு தந்தருள்வாயாக.

கருணைய விழிபொழி … கண்களினின்றும் பொழிகின்ற கருணையை உடையவனே,

ஒருதனி முதலென வருகரி திருமுகர் … ஒப்பற்ற தனிப் பெரும்

தலைவனென வந்த யானைமுகக் கணபதியை

துணைகொளு மிளையவ … துணையாகக் கொண்ட இளையவனே,

கவிதை யமுதமொழி தருபவர் … கவிதைகளாகிய அமுத

மொழிகளை வழங்குபவருடைய

உயிர்பெற அருள்நேயா … உயிர் நற்கதியைப் பெறுமாறு அருள்

புரியும் நேசம் உடையவனே,

கடலுலகினில்வரும் உயிர்படும் அவதிகள் … கடல் சூழ்ந்த

இவ்வுலகில் உயிர்கள் படுகின்ற துன்பங்களும்,

கலகம் இனையதுள கழியவும் … கலக்கங்களும்இன்னும்

இத்தகையதாக உள்ள வேதனைகள் நீங்கும்படியும்,

நிலைபெறகதியும் … நிலைத்திருக்குமாறு நற்கதி பெறுதலையும்,

உனதுதிருவடிநிழல் தருவது ஒருநாளே … உனது திருவடி நிழல்

அருளக்கூடிய ஒருநாள் எனக்கும் உண்டோ?

***

இதோ பாரதி பாடல்

“பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்

மண் மீதுள்ள மக்கள், பறவைகள்

விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;

யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே

இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும், தேவ தேவா!”

–பாரதியின் விநாயகர் நான் மணிமாலை

***

இல்லை என்ற கொடுமை—உலகில்

இல்லையாக வைப்பேன்

தனக்கு வரும் அஷ்ட ஐச்வர்யங்களையும் உலகில் இல்லை என்ற கொடுமை போகப் பயன்படுத்துவானாம்.

இன்னொரு இடத்தில்

“மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன்

வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்கிறான்.

கடவுளை அவன் வேண்டியதெல்லாம் பிறருக்காக வாழத்தான்!

“வல்லமை தாராயோ, இந்த மாநிலம்

பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி—நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”

***

“எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே”- தாயுமானவர்

வாழ்க அந்தணர், வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல்லாம், அரன் நாமமே

சூழ்க, வையகமும் துயர் தீர்கவே!

சம்பந்தர் தேவாரம்

அந்தணர் முதலாவுள்ள நான்கு ஜாதி மக்களும் பசு முதலான எல்லா பிராணிகளும் வாழ வேண்டும் என்பதே பெருள்.

வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்

கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க

நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

கந்த புராணம்

***

துரியோதனன் – பீமன் கதை

நச்சுத் துச் சொப்பிச்சுக் குட்டத்துள் தக்க அட்டத்து

அசிகாண நடத்தி … விஷத்தை உண்ட (பீமன், அந்த விஷம்

தாக்காமல்) சோபித்து விளங்கவும், நீர் நிலையுள் தங்கும்படி குறுக்கே வைத்திருந்த வாள் முனைகள் இருக்கும் இடத்தைத் தெரியும்படி (அந்த பீமனுக்குக்) காட்டியும்*

விடத்தை யுடைத்த படத்தினில் நட(ம்) நவில் கடலிடை

அடுபடை தொடுமுகில் … விஷம் உடையும்படி (காளிங்கன் என்னும் பாம்பின்) பணாமுடியின் மீது நின்று நர்த்தனம் செய்தும், கடல் மீது கொல்லத் தக்க தமது பாணத்தை (ராமனாகச்) செலுத்தியும் (ஆடல் புரிந்த) மேக நிறத்துத் திருமால்,

நகைமுக திருவுறை மணிமார்பன் நத்தத்தைச் சக்ரத்தைப்

பத்மத்தைக் கைப் பற்றிப் பொரு மாயன் … சிரித்த முகத்தை

உடைய லக்ஷ்மி உறையும் அழகிய மார்பை உடையவன், சங்கையும் சக்கரத்தையும் தாமரை போன்ற கையில் பற்றி சண்டை செய்யும் மாயவனாகிய திருமால்,

நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற நசிதரு நிசிசரர் உட

குடல் இடல் செய்த நரகரி ஒரு திரு மருகோனே … நரிக்கும்,

வாளுக்கும், நெருப்புக்கும் விருப்பம் உண்டாகும்படி, அழிந்து போகின்ற அசுரர்களின் குடலை இடுதலைச் செய்தவனும், நரகாசுரனுக்குப்பகைவனுமான திருமாலுக்கும் ஒப்பற்ற திருமகளுக்கும் மருகனே,

இரண்டு சம்பவங்கள்

பீமன் மீது வெறுப்பும் பொறாமையும் கொண்டவன் துரியோதனன் ஒரு முறை அவனுக்கு  விஷத்தைக் கொடுத்து பாம்புகள் உள்ள ஆற்றில் தள்ளிவிட்டான் . அங்குள்ள விஷப் பாம்புகள் அவனைக் கடிக்கவே உடலில் உள்ள விஷம் முறிந்தது.  இன்னும் ஒரு முறை ஆற்றுக்குள் ஈட்டிகளை நட்டு அந்தக் குளத்தில் தள்ளிவிட்டான் அப்போது கண்ணன் அவனுக்கு வண்டுகள் மூலம் அதைக் குறிப்பால் உணர்த்தி அவனைக் காப்பாற்றினான்

ஆற்றில் கழு முனைகளை மறைவாக நிறுத்தி, அங்கே பீமனைக் குதித்து விளையாடச் செய்தான் துரியோதனன். அந்த ஆபத்தான இடத்தை வண்டுகளால் காட்டிப் பீமனைக் கண்ணன் காப்பாற்றினார்.

***

மீண்டும் சொல்கிறார் – திருப்பதியில் இருப்பது முருகனே !

வட வேங்கட மாமலையில் உறைவோனே … வட எல்லையில்

உள்ள திருவேங்கட மாமலையில் வாழ்பவனே,

வேண்டிய போதடியர் … உன் அடியார்கள் விரும்பிய போதெல்லாம்

வேண்டிய போகமது வேண்ட … அவர்கள் விரும்பிக் கேட்ட போக

பாக்கியங்களை உன்னிடம் விண்ணப்பிக்க,

வெறாது உதவு பெருமாளே. … வெறுக்காமல் அவர்களுக்குத்

தந்து அருள் புரிகின்ற பெருமாளே.

***

களமாண்டிடவே யொரு பாரதம் அதிலேகி … போர்க்களத்தில்

இறந்தழிய, ஒரு பாரதப் போர்க்களத்தில் சென்று,

கனபாண்டவர் தேர்தனி லே … பெருமைவாய்ந்த பாண்டவர்களின்

தேரிலே,

எழுபரிதூண்டிய சாரதி யாகிய … கிளம்பிப் பாயும் குதிரைகளைச்

செலுத்திய தேரோட்டி ஆனவனும்,

கதிரோங்கிய நேமியனாம் … ஒளி மிகுந்த சுதர் ன சக்கரத்தை

உடையவனுமான

அரி ரகுராமன் … ஹரி, ரகுராமன், ஆகிய திருமாலும்,

திரைநீண்டிரை வாரியும் வாலியும் … அலைகள் ஓங்கி ஒலிக்கும்

கடலையும், வாலியையும்,

நெடிதோங்குமராமரம் ஏழொடு … நீண்டு உயர்ந்த ஏழு

மராமரங்களையும்,

தெசமாஞ்சிர ராவணனார்முடி பொடியாக … பத்துத்

தலைகளையுடைய ராவணனின் சிரங்களையும் பொடிபடும்படி

சிலைவாங்கிய நாரணனார் மருமகனாங் குகனே … கோதண்ட

வில்லை வளைத்த (ராமனாக வந்த) நாராயணனின் மருகனான குகனே,

பொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய

பெருமாளே. … சோலைகள் சூழ்ந்த திருவேங்கடமாம் திருமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

_–subham—

Tags–திருப்புகழில் ,அருணகிரிநாதர், அரிய செய்திகள் ,Part35, பாரதியும் அருணகிரியும், துரியோதனன் – பீமன் கதைதிருப்பதியில் முருகன்