மஹேஸ்வரன், குரு பத்னிகளிடத்தில் மயங்கலாமா?!?!! (Post No.11,720)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,720

Date uploaded in London –  28 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

மஹேஸ்வரன் காம மயக்கத்தினாலும் மோஹத்தினாலும் குரு பத்னிகளிடத்தில் மயங்கலாமா?!?!! 

ச.நாகராஜன் 

மஹேஸ்வரன் காம மயக்கத்தினாலும் மோஹத்தினாலும் குரு பத்னிகளிடத்தில் மயங்கியதாக புராணம் கூறுகிறது.

இப்படி மஹேஸ்வரன் செய்யலாமா? இது கேள்வி.

ஒரு சின்ன விளக்கத்தை முதலிலேயே சுலபமாகக் கூறி விடலாம்.

இப்படி எல்லாம் கேள்விகள் பின்னொரு காலத்தில் எழக்கூடும் என்பதை, அறிவும் ஞானமும் கொண்ட முனிவர்கள் அறிய மாட்டார்களா, என்ன?

சுலபமாக இப்படி ஒரு சரித்திரத்தை எழுதாமலேயே விட்டிருக்கலாமே.

கேள்விகள் எழ சந்தர்ப்பமே கொடுக்காமல் இருந்திருக்கலாமே!

ஆனால் இப்படி ஒரு விவரம் இருக்கிறது. அப்படியானால் கேள்வி எழும்.

அதற்கான பதிலும் அவர்களிடம் இருக்க வேண்டும். இருக்கிறது.

சரி, நிகழ்வுக்குள் செல்வோம்.

***                                                        

முன்னொரு காலத்தில் தேவதாரு வனத்தில் உள்ள முனிவர்கள் தங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

இந்த உலகத்தின் காரியத்தை – ஜகத்கார்யத்தை – நிர்வகிப்பது – கர்மமே, கர்மம் மட்டுமே தான் என்பது அவர்கள் முடிவு.

அதாவது செயல்களினால் மட்டுமே உலகம் இயங்குகிறது.

இந்த கர்மங்களுக்கு அப்பாலும் ஒரு ஈஸ்வரன் – மேலதிகாரி- இருக்க முடியாது என்பது திண்ணம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

அத்தோடு ஈஸ்வரன் என்ற ஒரு கொள்கையை நம்ப வேண்டாம் என்று திடமாகப் பிரசாரமும் செய்தனர்.

வெறும் கர்மங்களே போதும் என்ற அவர்களின் கொள்கையும் செயலும் பூவுலகை அல்லல் படுத்திக் கொண்டிருந்தது – அவர்களின் அதீத செய்கையினால்!

தேவதாரு வனத்தில் இல்லாத முனிவர்கள், ஈஸ்வர பக்தர்கள், இதனால் திகைத்தனர். ஈஸ்வரனுக்கே ஒரு சங்கடமா? அவர்கள் பிரமித்தனர்.

*** 

தேவர்கள் தவித்தனர். அவர்களுடன் ஈஸ்வர பக்தர்களான முனிவர்களும் சேர்ந்தனர்.

தங்கள் தவத்தின் சக்தியினால் அவர்கள் பரமேஸ்வரனிடம் நேரடியாகச் சென்றனர். முறையிட்டனர்.

பரமேஸ்வரன் அவர்கள் மீது கருணை கொண்டார்.

கர்மம் மட்டுமே தான் எல்லாம் என்று நினைக்கும் முனிவர் கூட்டத்திடம் உபதேசம் எடுபடாது.  கர்மத்திற்கு அப்பாலும் ஒரு சக்தி உள்ளது என்பதை அவர்களே உணர வேண்டும் என்று அவர் திருவுள்ளம் கொண்டார்.

உடனே நாராயணனிடம் ஜகத்திலுள்ளோரை மயக்கும் சுந்தர ரூபம் கொண்ட சுந்தரியாக மாறச் சொன்னார்.

பரமேஸ்வரனின் லீலையைத் தெரிந்து கொண்ட நாராயணன் உலகை மயக்கும் அபூர்வ மோஹினியாக ஆனார்.

இருவரும் அனைவரையும் மயக்கும் யௌவன பருவம் கொண்டு தாருகா வனம் வந்தனர்.

முனிவர்கள் அசந்தனர்; முனிபத்னிகள் பிரமித்தனர்.

என்ன ஒரு லாவண்யம்!

என்ன ஒரு அழகு!!

கர்மபடர்களாக இதுவரை இருந்த முனிவர்கள் காமவசப்பட்டனர்.

அனைவரும் மோஹினியின் பின்னால் ஓட ஆரம்பித்தனர்.

யாகமாவது, கர்மமாவது அனைத்தையும் கை விட்டு விட்டு மோஹினி எந்தப் பக்கம் இருக்கிறாள் என்று தேடி அவளைப் பின் தொடர்ந்தனர்.

ரிஷிகளின் பத்னிகளின் கதையோ வேறு.

அவர்கள் அனைவரும் சுந்தர ரூபனாக விளங்கிய ஈஸ்வரன் பின்னால் காம வசப்பட்டு சென்றனர்.

இப்படி மோஹினியின் பின்னால் முனிவர்களும். ஈஸ்வரனின் பின்னால் ரிஷி பத்னிகளும் திரிய ரிஷிகளின் பிரமசர்ய மஹிமை போனது; பத்னிகளின் பதிவிரதா தர்மம் கெட்டது.

ஒரு க்ஷணத்தில் ஹரியும் ஹரனும் மறையவே ரிஷிகளும் ரிஷி பத்னிகளும் தன் உணர்வு பெற்றனர்.

அடடா, நமது பிரமசர்யம் கெட்டதோடு, ரிஷி பத்னிகளின் பதிவிரதா தர்மமும் பங்கப்பட்டு விட்டதே என்று அவர்கள் வருந்தினர்.

தம்மை இப்படி வருத்தத்திற்குள்ளாக்கிய சுந்தரனையும் சுந்தரனையும் கொன்று விட வேண்டுமென்று என்று எண்ணிய அவர்கள் கடுமையான ஆபிசார ஹோமத்தை மேற்கொண்டனர்.

பலன் இல்லை. பின்னர் அஸ்திர சஸ்திரங்களை ஏவினர். பலன் இல்லை.

‘அட, கர்மாவே, பரம் என்று எண்ணி இருந்தோமே, ஈஸ்வரன் என்று யாருமே இல்லை என்று எண்ணினோமே, நமது கர்மங்கள் பலன் அளிக்கவில்லையே. மந்திரம், அஸ்திரம், சஸ்திரம் எதுவும் பயன் அளிக்கவில்லையே” என்று ஆச்சரியப்பட்டனர்.

கர்மம் பலன் உள்ளது என்றாலும் கூட, அதற்கு அப்பாற்பட்ட மேலான ஒரு சக்தி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

சுந்தரனே பரம்பொருளாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவர்கள் பரமேஸ்வரனைத் தொழுது வணங்கினர்.

பரமேஸ்வரன் அவர்கள் முன் தோன்றி அருள் பாலித்து தன் திரு நடனத்தை ஆடினார். திரு நடனம் அகிலாண்டகோடி பிரம்மாண்டத்தை இயக்கும் தெய்வீக சக்தி என்பது பொருள்.

அதனால் பிரம்மானந்த அனுபவத்தை ரிஷிகள் பெற்றனர்.

பதிவிரதைகள் அனைவரும் ஈஸ்வரனின் மஹிமையை எண்ணி வியந்து அவனைப் போற்றித் துதித்தனர்.

சரி, இதைக் கேட்டாயிற்று, நாமும் ஈஸ்வரனைப் போல சுந்தர ரூபம் எடுத்து (மேக் அப் போட்டுக் கொண்டு)

வனிதைகளைக் கவரலாம் என்று எண்ணி அதை வாதமாக முன் வைப்பவர்களுக்கும் ஒரு பதில் உண்டு.

நீங்கள் ஹாலாஹல விஷத்தை அருந்தி அதைத் தொண்டையில் நிறுத்தி விட்டு உங்கள் ஜாலங்களைச் செய்யுங்கள் என்பதே பதில்!

ஆகவே தெய்வத்தன்மை பொருந்திய ஆன்றோர்கள் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை அறிவதோடு அதை நாமும் ஏன் செய்யக்கூடாது என்ற சந்தேகத்தையும் எழுப்பக் கூடாது.

இதுவே வ்யதிரேக திருஷ்டாந்தத்தின் கருத்து ஆகும்!

***

ராவணனுடன் வாலி ஒப்பந்தம்: உறவினில் 50- 50; உதட்டினில் 50- 50 (Post No.11,719)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,719

Date uploaded in London – –  27 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அரக்கன் என்று சங்க இலக்கிய நூலான புறநானூறு வருணிக்கும் இராக்ஷச ராவணன் பெண் பித்தன். சீதையைக் கடத்தும் முன்னரே பல பெண்களைக் கவர்ந்து அவர்களிடம் சாபமும் வாங்கி அழிந்தான் இமய மலையில் சிவ பெருமானிடம் அடி வாங்கிய ராவணன், நர்மதை நதிக்கரையில் கார்த்த வீர்ய அர்ஜுனனிடம் அடி வாங்கி, இனிமேல் அந்தப்பக்கம் வரவே மாட்டேன் என்று ஓடினான். வேதவதி என்னும் மலைவாழ் பழங்குடிப் பெண்ணின் molested tribal girl Vedavathi கூந்தலைப் பிடித்து இழுத்து சாபம் வா ங்ககினான் . அவள் சீதையாகப் பிறந்து அவனை ஒழித்தாள் . இதே போல கிஷ்கிந்தையில் மன்னன் ஆகக் கொலு வீற்றிருந்த வாலியிடமும் வால் ஆட்டினான் ராவணன். இது பற்றிய சுவையான விஷயங்கள் அனைத்தும் வால்மீகி ராமாயணத்தின் உத்தர காண்டத்தில் உள்ளது.

வாலியிடம் அடிவாங்கிய இராவணன் ஒரு வினோத ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேரிட்டது. இனி எதுவானாலும் உனக்குப் பாதி, எனக்குப்பாதி அதாவது உறவினில்  50–50 உதட்டினில் 50–50 . இதில் பெண்களை அனுபவிப்பதும் அடக்கம். இதில் அதிகம் இழந்தவன் ராவணன்தான். அவன்தான் அதிகமான பெண்களைக் கவர்ந்து வந்தவன். இதைக்கூறும் ராமாயண ஸ்லோகங்கள் வாலி, நாற்கடலில் நீராடி சந்தியாவந்தனம் செய்த சுவையான செய்தியையும் கூறுகிறது.

xxx

என்னுடைய  ஆராய்ச்சி

இது என்னுடைய  ஆராய்ச்சி முடிவுகளையும் உறுதி செய்கிறது .

ராமாயணத்தில் வரும் கழுகு (ஜடாயு), கரடி (ஜாம்பவான்), வாலி (குரங்கு) என்பனவெல்லாம் உடலில் அணியும் அடையாளங்கள் TOTEM SYMBOLS. உண்மையில் குரங்கோ கழுகோ கரடியோ இல்லை. வாலி இறந்த பின்னர் அவனது உடல் இந்து முறையில் தகனம் CREMATION செய்யப்பட்டது. ஆனால் வேறு சில ராக்கதர்கள் உடல் புதைக்கப்பட்டது BURIAL. மேலும் அனுமன் தன் உருவை மாற்றிக்கொண்டு ஒரு பிரம்மச்சாரி மாணவன் போல வந்தான் என்று கம்பனும் ஒரு பிக்ஷுவாக வந்தான் என்று வால்மீகியும் சொல் வதிலிருந்து அனுமன் குரங்கு முகமூடி வேஷத்தை மாற்றிவிட்டு சாதாரண மனிதன் போல வந்தான் என்பது புலனாகிறது. ராமாயணம் பல ஆயிரம் ஆண்டுப் பழமையானதால் இப்படி உருமாறி , உண்மையியலேயே அவர்கள் குரங்குகள் என்று நம்பவைத்தது . இன்றும் கூட பூடான் நாட்டில் (பூத ஸ்தானம் BHUT+ SHAAN= BHUTAN ) நாட்டில் முகமூடி அணிந்து விழாக் கொண்டாடுகிறார்கள். இலங்கையர் அணிந்த முகமூடிகள் இப்பொழுதும் காட்சிசாலைகளில் உள்ளன.

சுருங்கச் சொல்லின், நவ வியாகரணம் அறிந்த அனுமனும் நாற்கடலில் நீராடி சந்தியாவந்தனம் செய்த வாலியும் சாதாரண இந்துக்கள். ஆனால் தமிழ்நாட்டில் இப்போதும் பல்வேறு ஜாதிகள் பல திருமண, இறுதிச் சடங்கு விதிகளை வை த்திருப்பது போல குரங்கின் அடையாளம் பூண்ட ஒரு இனத்திடையே வினோத வழக்கங்கள் இருந்தன.

நாற்கடல் நீராடியது என்பது தமிழ்க் கல்வெட்டுகளிலும் வருகிறது. இது பற்றிய என்னுடைய பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் சுவையான விஷயங்களைத் தந்துள்ளேன்.

XXXX

இதோ ராமாயண ஸ்லோகங்கள் :

க்ருஹீது காமம் தம் க்ருஹ்ய  ராக்ஷஸாமீச்வரம் ஹரிஹி

சதுஷ்வபி ஸமுத்ரேஷு ஸந்த்யா மன்வாஸ்ய வாநரஹ

ராவணம் து முமோசாத  கக்ஷாத் கபி ஸத்தமஹ

பொருள்

வா நரனான அந்த வாலி , தன்னைக் கட்டிப்பிடிக்க விரும்பிய ராவணனை அக்குளில் அமுக்கிப் பிடித்தவண்ணமே நான்கு மா கடல்களிலும் சந்தியாவந்தனத்தைச் செய்த பின் அக்குளிலிருந்து விடுவித்து ராவணனனைக் கீழே போட்டான் .

(வா நரன் = நரர் கள் / மனிதர்கள் ஆனால் வனத்தில் வசிக்கும் மனிதர்கள்; ஆகையால் வன நரர்கள் = வாநரம் TRIBAL COMMUNITY; FOLLOWING THEIR OWN RULES[ VAA NARA= JUNGLE MAN, FORESTER)

ராக்ஷஸேந்த்ரோ  ஹரீந்த்ரம் தமிதம் வசனம் அப்ரவீத்

தாராஹா புத்ராஹா புரம்  ராஷ்ட்ரம் போகாச் சாதன  பாஜனம்

ஸர்வ மேவா விபக்தம் நெள பவிஷ்யதி ஹரீச்வர

பொருள்

ராவணன், ” வானர வீரனே ! மனைவியர் , மக்கள், நகரம் , ராஜ்யம் , சுகபோகத்துக்குரிய பொருள்கள் , உடைகள், பாண்டங்கள், இவையாவும் நம் இருவருக்கும் பொதுவாக இருக்கக்கடவது” என்ற இந்த ஒப்பந்த வார்த்தையை வாலியிடம் சொல்லிக்கொண்டான்.

வாங்கிய அடியில் அலறிப்போன இராவணன், தன்னிடம் உள்ள பெண்கள், நாடு, நகரம் அனைத்திலும் 50 பெர்சென்ட் FIFTY PERCENT வாலிக்கே என்று சொல்லிவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனான்.

இந்தக் கதைகளை அகஸ்தியர் சொன்னதாக உத்தர காண்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

உறவினில் 50- 50; உதட்டினில் 50- 50  என்று வாலி ஆடிப்பாடி கூத்தாடி இருப்பான் என்பதை நாம் மனக்கண்களில் காணலாம்.

பாண்டியனுக்கும் ராவணனுக்கும் இடையே ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையை பழைய உரை ஆசிரியர் நச்சினார்க்கினியர் சொன்னதை பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு கொடுத்து இருக்கிறேன்.

Picture- Ravana in Sanyasi disguise

ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை

https://tamilandvedas.com › ராவ…

24 Jun 2014 — “ஒரு பாண்டியன் இராவணனைச் சமாதானம் செய்துகொள்ளும்படிச் செய்தான் என்று சாசனம் …

Missing: ஒப்பந்தம் ‎| Must include: ஒப்பந்தம்

இலங்கை அரக்கன் மீது ஞான சம்பந்தர் கடும் …

https://tamilandvedas.com › இலங…

·

18 Nov 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை.

நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல்?

https://tamilandvedas.com › நால…

6 Jun 2012 — நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல்? சமுத்திர குப்தன் என்ற மாபெரும் குப்தப் …

–SUBHAM—tags- ராவணன் ,வாலி , ஒப்பந்தம், : உறவினில் 50- 50; உதட்டினில் 50- 50 , 

PROTEST AGAINST ANTI HINDU BBC DOCUMENTARY IN LONDON ON SUNDAY 29-1-2023

PROTEST AGAINST ANTI HINDU BBC DOCUMENTARY IN LONDON ON SUNDAY 29-1-2023

PLEASE JOIN THE PROTEST TO SAVE HINDUS AND INDIA

Posted by London swaminathan, former BBC Broadcaster and Ex Senior Sub Editor, Indian Express Group Ltd.

Please see the above attachment–subham—

சிவனின் 25, விஷ்ணுவின் 10 வடிவங்கள் (Post.11,718)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,718

Date uploaded in London – –  27 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

முதல் பாடலில் அம்பலவாண கவிராயரை ஆதரித்த மதனவேளின் அருங்குணங்களை வருணித்து நன்றி செலுத்துகிறார் ; வீரம், புகழ், கல்வி, கொடை , செல்வம் முதலியன அவரிடம் உள்ளதை பல உவமைகள் மூலம் எடுத்துரைக்கிறார். வாடாத தாமரை, காட்டில் உலவாத சிங்கம், முழு மதி, மேகம் என்ற உவமைகள் ரசிக்கத்தக்கவை.

அடுத்த பாடலில் திருமாலின் 10 அவதாரங்களை விளம்புகிறார். இறுதியில் சிவ பெருமானின் 25 வடிவங்களை மொழிகிறார்.

விஷ்ணுவின் 10 அவதாரங்களை எல்லோரும் அறிவர் . அதில் பலராமனுக்குப் பதில் புத்தரைச் சேர்த்து அஷ்டபதி செய்தார் ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயதேவர் ; அதைக் கவிராயர் விரும்பவில்லை. ஆகையால் புத்தர் இடம்பெறவில்லை. இருப்பினும் கிருஷ்ண பக்தர்கள் இன்றும் சம்பிரதாய பஜனைகளில் புத்தர் அவதாரமடங்கிய அஷ்டபதி பாட்டைப் பாடுகின்றனர். புத்த மதத்தை இந்துமதம் விழுங்கி “சுவாஹா” செய்ததை  சம்ஸ்க்ருத அஷ்டபதி காட்டுகிறது.

சிவனின் 25 வடிவங்களை அவதாரம் என்று சொல்லுவதில்லை; அவர் “பிறவா யாக்கைப் பெரியோன்”. அம்பலவாணர் போல ஒரே பாட்டில் அழகுபட 25 வடிவங்களையும் யாரும் கொடுத்ததில்லை. இது சிவ பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் .

அறப்பளீசுர சதகப் பாடல் எண் 97

            97. புகழ்ச்சி

பருகாத அமுதொருவர் பண்ணாத பூடணம்,

     பாரில்மறை யாத நிதியம்,

  பரிதிகண் டலராத நிலவுகண் டுலராத

     பண்புடைய பங்கே ருகம்

கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்

     கானில் உறை யாத சீயம்;

  கருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்

     காசினியில் அருமை யாகும்!

தெரியவுரை செய்யின்மொழி, கீர்த்தி, வரு கல்வியொடு,

     சீரிதயம், ஈகை, வதனம்,

  திடமான வீரம், இவை யென்றறிகு வார்கள்! இச்

     செகமெலாம் கொண்டா டவே

அருள் கற்ப தருஎன்ன ஓங்கிடும் தான துரை

     ஆகும்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) இச் செகம் எலாம் கொண்டாட – இவ்வுலகெங்கும் புகழ,

அருள் கற்ப தரு என்ன – அருள் மிகுந்த கற்பகத் தருவைப்போல,

ஓங்கிடும் தானதுரைஆகும் – உயர்ந்த கொடைத்தலைவன் ஆகிய, எமது அருமை தேவனே!,

பருகாத அமுது – உண்ணாத அமுதம், ஒருவர் பண்ணாத பூடணம் –

ஒருவராற் செய்யப்படாத அணிகலம்; பாரில் மறையாத நிதியம் – உலகில் அழியாத செல்வம், பரிதிகண்டு அலராத நிலவு கண்டு உலராத பண்புடைய பங்கேருகம் – ஞாயிற்றைக் கண்டு மலராததும் திங்களைக் கண்டு வாடாததும் ஆகிய தன்மையுடைய தாமரை, கருகாத புயல் – கருநிறம் பெறாது பெய்யும் முகில், கலைகள் அருகாத திங்கள் – கலைகள் குறையாத திங்கள், வெங்கானில் உறையாத சீயம் – கொடிய காட்டில் வாழாத சிங்கம்கருத அரிய இக்குணம் அனைத்தும் உண்டானபேர் காசினியில் அருமையாகும் – நினைவிற்கு எட்டாத இப்பண்புகள் யாவும் உடையவர் இவ்வுலகிற் கிடைப்பது அருமையாகும், (எனினும், இவைகட்கு ஒப்பாக) தெரிய உரை செய்யின் – விளங்க எடுத்துக் கூறினால் (முறையே), மொழி, கீர்த்தி, வருகல்வியொடு, சீர்இதயம், ஈகை, வதனம், திடமான வீரம் இவை என்று அறிகுவார்கள் – உரையும்புகழும், வளரும் கல்வியும், சிறப்புள்ள உள்ளமும், கொடையும், முகமும், அசையாத வீரமும் ஆகிய இவை என்று தெரிந்துகொள்வார்கள்.

     (வி-ரை.) அமுது மொழி, அணிகலம் கீர்த்தி, நிதியம் கல்வி,

பங்கேருகம் இதயம், புயல் ஈகை திங்கள் வதனம், சீயம் வீரம் என ஒப்பிடுக. இங்கு மதவேளின் ஈகைச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது.

xxxxxxxxxxxxxx

       98. திருமால் அவதாரம்

சோமுகா சுரனை முன் வதைத்தமரர் துயர்கெடச்

     சுருதிதந் ததுமச் சம்ஆம்;

  சுரர்தமக் கமுதுஈந்த தாமையாம்; பாய்போற்

     சுருட்டிமா நிலம்எ டுத்தே

போமிரணி யாக்கதனை உயிருண்ட தேனமாம்;

     பொல்லாத கனகன் உயிரைப்

  போக்கியது நரசிங்கம்; உலகளந் தோங்கியது

     புனிதவா மனமூர்த் திஆம்;

ஏமுறும் இராவணனை வென்றவன் இராகவன்;

     இரவிகுலம் வேர றுத்தோன்

  ஏர்பர சிராமன்; வரு கண்ணனொடு பலராமன்

     இப்புவி பயந்த விர்த்தோர்

ஆமினிய கற்கிஇனி மேல்வருவ திவைபத்தும்

     அரிவடிவம்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருமை ………. தேவனே!, முன் சோமுக அசுரனை வதைத்து

அமரர் துயர் கெடச் சுருதி தந்தது மச்சம் ஆம் – முற்காலத்தில் சோமுகன்

என்னும் அசுரனைக் கொன்று வானவர் துன்பங் கெடும்படி செய்து

மறைகளைக் கொண்டுவந்தது மீன் தோற்றம் ஆகும், சுரர் தமக்கு அமுது

ஈந்தது ஆமைஆம் – வானவர்க்கு அமுதளிக்கக் கொண்ட தோற்றம் ஆமை ஆகும், மாநிலம் பாய்போற் சுருட்டி எடுத்தே போம் இரணியாக்கதனை உயிர் உண்டது ஏனம் ஆம் – பெரிய நிலத்தைப் பாயைப் போற் சுருட்டி எடுத்துச் செல்லும் இரணியாக்கன் உயிரைப் பருகியது பன்றி ஆகும், பொல்லாத

கனகன் உயிரைப் போக்கியது நரசிங்கம் – கொடிய இரணியன் உயிரை

ஒழித்தது நரசிங்கம் ஆகும், உலகு அளந்து ஓங்கியது புனித வாமன மூர்த்தி

ஆம் – உலகத்தை (மாவலியிடம் தானம் பெற்று) அளக்க நெடிய

உருக்கொண்டது வாமன வடிவம் ஆகும், இரவிகுலம் வேர் அறுத்தோன் ஏர்

பரசு இராமன் – கதிரவன் மரபை அடியுடன் ஒழித்தவன் அழகிய கோடரி

ஏந்திய பரசுராமன் ஆவான், ஏம் உறும் இராவணனை வென்றவன் இராகவன்

– செருக்கு அடைந்திருந்த இராவணனை வெற்றிகொண்டவன் இரகுமரபிற்

பிறந்த இராமன் ஆவான், இப் புவி பயம் தவிர்த்தோர் வரு பலராமனொடு

கண்ணன் – இவ்வுலகின் அச்சத்தை நீக்கப் பிறந்துவந்தோர் பலராமனும்

கண்ணனும் ஆவர், இனிமேல் வருவது இனிய கற்கி ஆம் – இனிமேல் தோன்றக்கூடியதுஇனிய கற்கி ஆகும், இவை பத்தும் அரிவடிவம் – இவை பத்தும் திருமாலின் உருவங்கள்.

xxxxxx

           99. சிவமூர்த்தி

பிறைசூடி, உமைநேசன், விடையூர்தி, நடமிடும்

     பெரியன், உயர் வதுவை வடிவன்

  பிச் சாடனன்,காம தகனன்,மற லியைவென்ற

     பெம்மான், புரந் தகித்தோன்,

மறமலி சலந்தரனை மாய்த்தவன், பிரமன்முடி

     வௌவினோன், வீரே சுரன்,

  மருவுநர சிங்கத்தை வென்றஅரன், உமைபாகன்

     வனசரன்,கங்கா ளனே,

விறல்மேவு சண்டேச ரட்சகன், கடுமாந்தி

     மிக்கசக் கரம்உதவி னோன்,

  விநாயகற் கருள்செய்தோன் குகன்உமை யுடன்கூடி

     மிளிர்ஏக பாதன், சுகன்,

அறிவரிய தட்சிணா மூர்த்தியொ டிலிங்கம்ஆம்

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) பிறைசூடி – பிறையணிந்தோன், உமைநேசன் – உமையின்

காதலன் (உமாமகேசன்), விடை ஊர்தி – சேக்கிழான் (இடபவூர்தி),

நடம்இடும் பெரியன் – நடனம் இடும் அண்ணல், உயர் வதுவை வடிவன் –

உயர்ந்த திருமணக் கோலத்தான், பிச்சாடனன் – பிச்சை யெடுப்

போன், காமதகனன் – மாரனை எரித்தோன், மறலியை வென்ற பெம்மான் –

காலனை உதைத்த பெரியோன் புரம் தகித்தோன் – முப்புரத்தை எரித்தவன்,

மறம் மலி சலந்தரனை மாய்த்தவன் – வீரம் நிறைந்த சலந்தரனைக்

கொன்றவன், பிரமன் முடி வௌவினோன் – பிரமன் தலையைக்

கிள்ளினோன், வீரேசுரன் – (வீரபத்திரன்), மருவும் நரசிங்கத்தை மாய்த்த

அரன் (சரபேசுரன்), உமை பாகன் – உமை பங்கன் (அர்த்தநாரீசன்)

வனசரன் – வேடன், கங்காளன் – என்பு அணிந்தோன், விறல் மேவு

சண்டேச ரட்சகன் – வலிமை பொருந்திய சண்டேசருக்கு அருளியவன்,

கடுமாந்தி – நஞ்சுண்டவன், மிக்க சக்கரம் உதவினோன் – (திருமாலுக்கு)

உயர்ந்த சக்கரத்தைக் கொடுத்தவன், விநாயகற்கு அருள்செய்தோன்- மூத்த

பிள்ளையாருக்கு அருளியவன், குகன் உமையுடன் கூடி – முருகன் உமை

ஆகிய இருவருடன் கூடியவன் (சோமாஸ்கந்தமூர்த்தி) மிளிர் ஏக பாதன் –

விளங்கும் ஒற்றைத் திருவடியான், சுகன் – இன்ப வடிவமானவன், அறிவு

அரிய தட்சிணாமூர்த்தியொடு – அறிய இயலாத தக்கிணா மூர்த்தியுடன்,

இலிங்கம் ஆம் – இலிங்கம் ஆகிய ஐயனே – தலைவனே!, அருமை ……..

தேவனே!,

     (வி-ரை.) சிவபெருமான் கொண்டருளிய 25 மூர்த்தி (வடிவம்)

எண்ணிக் காண்க.

To be continued………………………………………….

 tags—சிவன், விஷ்ணு, வடிவங்கள், அவதாரங்கள், சதகம் 

மூக்குப்பொடி மகிமை- part 2 (Post No.11,717)

WRITTEN BY B .Kannan, New Delhi

Post No. 11,717

Date uploaded in London – –  27 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

WRITTEN BY B.KANNAN, NEW DELHI 

இங்கு மற்றொரு கவிஞர் சீனிசக்கரைப் புலவரைப் பற்றிச் சொல்ல வேண்டியுள்ளது. இவர் பழநி முருகன் மீது புகையிலை விடு தூது பாடியுள்ளார். அதில் மூக்குப்பொடி பற்றி இருகண்ணிகள் இயற்றியுள்ளார். முதலில் பீங்கான் ஜாடியில்அடைத்திருந்தும் மணம் பரப்பும் நுகட்காரத்தைச் சிலாகிக்கிறார்.

  வாடைப்பொடி கதம்பமான வெல்லா முன்னுடைய

 சாடிப் பொடிக்குச் சரியுண்டோ?

 வாசனைப் பரப்பும் ஜவ்வாது, அத்தர் போன்ற பொருள்களும் கதம்பம் எனில் எல்லா நறுமணமும் கலந்த சுகந்த மணம் வீசும் பொடியும், ஜாடியில் இருக்கும் மூக்குப் பொடிக்கு இணையாகுமோ? என்பது இதன் பொருள்.

 அடுத்தக் கண்ணியில் நக்கலடிக்கிறார்.

  சொற்காட்டு நல்ல துடிகார ராரை

  பற்காட்ட விட்ட பழிகாரா!

 ஓரு சிட்டிகைப் பொடிக்காகத் தம் நிலையையும் மறந்து, பிறரைக் கெஞ்சும் மனிதர் பலரைப் பார்க்கிறோம். அதைத்தான் புலவரும் சுட்டிக் காட்டுகிறார்.

 கடைசியாக மறுபடியும் தமிழ்த் தாத்தா உ.வே.சாவை அணுகுவோம்….அவரது என் சரிதம் கட்டுரை ஒன்றில் சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

 உ.வே.சாவுக்கு கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியப் பணி கிடைக்க உதவியவர் வித்துவான் தியாகராசச் செட்டியார். அவர் ஒரு தீவிரப் பொடி பக்தர். அவரிடம் பயின்ற மாணவர் சோமசுந்தரம் பிள்ளை என்பவர் திருவானைக்காவில் ஒரு பொடிக் கடை நடத்திவந்தார். அங்கு, பொடி வாங்கக் கூட்டம் அலைமோதும். சுடச்சுடப் புதுப் பொடியை வாங்கி சூடு ஆறுவதற்குள் மூக்கில் ஏற்றிக்கொள்ள முண்டியடித்துப் பலர் அங்கே கூடிவிடுவர். வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும். அது தரும் லாபத்தின் ஒரு பகுதியைச் (அட,பீரங்கி மூக்குகள் அவ்வளவா இருந்திருக்கும்!) சிவாலயத்தர்மப்பணி களுக்காகச் செலவிட்டு வந்தார்.

 தினமும் காவிரியில் குளித்துவிட்டு, கோயில் தரிசனத்தையும் முடித்துக் கொண்டுத் திரும்பும் செட்டியார், பிள்ளயின் பொடிக்கடைக்குத் தான் நேராக வருவார். குறிப்ப றிந்த வேலையாள் பொடிப்பட்டை ஒன்றை இவரருகில் வைத்துவிட்டு, போட்டுப் பார்ப்பதற்காக வேறொரு பட்டையிலும் கொண்டுவந்து கொடுப்பான். செட்டியார் அதையும் மூக்கில் திணித்தவாறு பேசாமல் சிறிது நேரம் இருப்பார். பொடியின் இனி மையைத் தடையேதுமின்றிச் சுகமாக அனுபவிக்கத்தான் அந்த மௌனம். இப்படிப்பட்டச் சூழலில் ஒருநாள் அவரைச் சந்திக்க வந்தார் உ,வே.சா. அது சமயம் நடந்தக் காட்சியை அவர் விளக்குவதைப் பாருங்கள்….

“செட்டியார் சோமசுந்தரம் பிள்ளையின் கடையில் உட்கார்ந்தார். நானும் அவரருகே அமர்ந்தேன். பொடியின் மணம் எங்கும் பரவி மூக்கைத் துளைத்தது. வழக்கம் போல் வேலையாள் ஒரு பொடிப்பட்டையைச் செட்டியாரிடம் பவ்யமாகக் கொடுத்தான். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஏனெனில், அப்பட்டையைப் பக்குவப் படுத்துவ தற்கே ஒரு தனித்திறமை வேண்டும் போல் தோன்றியது. அதனுள்ளே இருந்தப் பொடியின் மணம் சிறிதளவும் வெளியே போகாதபடி, வெண்மை வாழை நாரால் இறுக அடி முதல் நுனி வரையிலும் நெருக்கமாகச் சுற்றப்பட்டிருந்தது. அதிலிலும் ஓர் ஒழுங்கு காணப்பட்டது. அதன் அழகை உத்தேசித்து அதைப் பொக்கிஷமாக வைத்துக் கொள்ளலாம் எனத் தோன்றும்.

 புதுப்பொடியைச் செட்டியாரிடம் அளித்த வேலையாள் எனக்கும் கொடுக்க வந்தான். 

அதன் அருமையைச் சிறிதும் அறியாத நான் வழக்கமில்லை எனச் சொன்னேன். உரையாடலின் நடுவே,”பொடியின் இனிமையை நுகர்ந்த ஒரு புலவர் முன்பு ஒரு பாடல் இயற்றி இருக்கிறார் எனக் கூறிய நான் அப்பாடலைப் பாடிக் காட்டினேன்.

   “ஊசிக் கழகு முனைமுறி யாமைஉயர்ந்த பர

  தேசிக் கழகுஇந் திரியம் அடக்கல்திரள்நகில்சேர்

  வேசிக் கழகு தன் மேனி மினுக்கல்மிகப் பெருத்த

  நாசிக் கழகு பொடியென்று சொல்லுவர் நாவலரே!”

(ஊசிக்கு அழகு முனை உடையாமலிருப்பது; சாதுக்களுக்கு அழகு இந்திரியங்களை அடக்கி ஆள்வது; திரண்ட மார்பகம்-நகில்-கொண்ட வேசிக்கு அழகு மேனியைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது; பெருத்த மூக்குக்கு அழகு பொடி என்று சொல்லுவர் நாவலரே)

சோமசுந்தரம் பிள்ளை அப்பாடலைத் திரும்பப் பாடச் சொல்லிக் கேட்டு மிகவும் பாராட்டினார். செட்டியாரோ,” இச் செய்யுள் பொத்தாம் பொதுவாக அல்லவோ இருக் கிறது? இதேமாதிரி நம் சோமசுந்தரத்தையும், அவர் கடைப் பொடியையும் சிறப்பித்து ஒரு பாடல் செய்யலாமே!” என்றார். உடனே தியாகேசரும், உவேசாவும் இணைந்து, கீழ்கண்ட பாடலை இயற்றினர். 

  “கொடியணி மாடம் ஓங்கிக் குலவுசீர் ஆனைக்காவில்

   படியினில் உள்ளார் செய்த பாக்கியம் அனையான் செங்கைத்

   தொடியினர் மதனன் சோமசுந்தரன் கடையில் செய்த

   பொடியினைப் போடாமூக்குப் புண்ணியம் செய்யா மூக்கே!”

 (சைவச் சின்னம் கொடி கட்டி உயர்ந்தோங்கி நிற்கும் மாடங்கள் நிரம்பிய திருவானைக்காப் பதியில் வாழும் பாக்கியம் பெற்றோர் நன்றாக அறிவார், பொடி கலக்கி எடுத்துச் சிவந்தக் கைகளை உடையவரும், மங்கையர் காமுறும் மன்ம தனை ஒத்த சோமசுந்தரன் கடையில் தயாரித்த மூக்குப்பொடியைப் போடாத மூக்கு  புண்ணியம் செய்யாத மூக்கு என்றே!)

 என்பதாக அமைகிறது மூக்குப்பொடி விளம்பரப் பாடல், ஆம், பிள்ளை அவர்கள் இப்பாட்டைத் தனியே அச்சிட்டு ஊர் முழுதும் ஒட்டச் செய்ததோடு அனைவருக்கும் விநியோகித்தும் வந்தார். வியாபாரம் மேல்மேலும் பெருகிற்று என்பதைச்சொல்லவா, வேண்டும்! பொடியின் மகிமை அப்படிப் பட்டதாயிற்றே!

— subham— 

 tags- மூக்குப்பொடி,  மகிமை – part 2, ஊசிக் கழகு முனைமுறி யாமை, கொடியணி மாடம்

சப்தரிஷிகளைப் பற்றி குழப்பமா! குழப்பமே இல்லை! (Post 11,716)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,716

Date uploaded in London –  27 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

சப்தரிஷிகளைப் பற்றி குழப்பமா! குழப்பமே இல்லை!

ச.நாகராஜன் 

நண்பர் ஒருவர் என்னைக் கேட்டார் :”சார்! சப்தரிஷிகள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள புத்தகங்களை நாடினேன். ஒவ்வொரு புத்தகத்தில் ஒவ்வொரு பட்டியல் இருக்கிறது. ஏன் இந்தக் குழப்பம். ரிஷிகளின் பெயர்களைச் சொல்வதில் கூடவா குழப்பம்?”

அவர் கேள்வி நியாயமானது தான்.

பட்டியல்கள் வெவ்வேறு  மாதிரி தான் உள்ளன.

அவரிடம் நான் சொன்னேன்:

“இதில் ஒருவிதக் குழப்பமும் இல்லை. ஒவ்வொரு மன்வந்தரத்திலும் வேறு வேறு ஏழு ரிஷிகள் சப்தரிஷிகள் என அழைக்கப்படுகின்றனர். ஆகவே நீங்கள் பார்க்கும் பட்டியல் எந்த கல்பத்திற்கு உரியது என்பதைக் கவனிக்க வேண்டும்.”

இந்த பதில் அவருக்குப் புதிதாக இருந்தது. அவர் தெளிந்தார்.

விஷ்ணு புராணத்தை எடுத்துக் கொள்வோம். இதில் மிகத் தெளிவாக இந்த உண்மை எடுத்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் பிரத்யேகமாக சப்தரிஷிகள் உள்ளனர் என்று.

7வது மன்வந்தரமாகிய வைவஸ்வத மன்வந்தரம் இப்போது நடக்கிறது. இந்த மன்வந்தரத்தில் உள்ள ரிஷிகளைப் பற்றி சதபதப்ராஹ்மணம் (14.5.2.6 இல்) தெளிவாகக் கூறுகிறது.

இப்போது சப்தரிஷி மண்டலத்தில் உள்ள ஏழு ரிஷிகள் : கஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்ரர், கௌதமர், ஜமதக்னி, வசிஷ்டர்.

இதில் மிகப் பெரிய வானவியல் உண்மையும் ஒளிந்திருக்கிறது. கோடானு கோடி ஆண்டுகளில் நக்ஷத்திரமண்டலங்கள், கிரகங்கள், கிரக மண்டலங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன, சுழன்று கொண்டே இருக்கின்றன.

ஆகவே ஒவ்வொரு மன்வந்தரத்திலும் அப்போது யார் வானவியல் ரீதிப்படி இருக்கிறார்களோ அவர்களையே அந்தந்த மன்வந்தரத்திற்கு உரிய ரிஷிகளாகச் சொல்கிறோம்.

மஹாபாரதத்தில் சாந்திபர்வத்தில் (201/26) சப்த ரிஷிகளைப் பற்றிச் சொல்லப்படும் போது அவர்கள் நான்கு திசைகளுக்குமான அதிபதி என உரைக்கப்படுகிறது.

மரீசி, அத்ரி, புலகர், புலஸ்யர், க்ரது, ஆங்கிரஸ், வசிஷ்டர்  ஆகிய ஏழு ரிஷிகள் நான்கு திசைகளுக்குமான அதிபதிகள்.

புராணங்களை எடுத்துப் பார்த்தால் இவர்கள் த்வாபர யுகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வரும்.

இவர்கள் சனி கிரகத்திலிருந்து ஒரு லக்ஷம் யோஜனை தூரத்தில் இருப்பதாக விவரம் தரப்படுகிறது.

புராணங்களில் இன்னொரு விவரத்தையும் காண்கிறோம். இவர்கள் ஏழு குணங்களுக்கு (அல்லது துறைகளுக்கு அல்லது விஷயங்களுக்கு) அதிபதிகள் என்பதை புராணங்கள் கூறுகின்றன.

1) தீர்க்க ஆயுள் சம்பன்னம் 2) மந்த்ர கர்த்தா 3) ஐஸ்வர்யவான் 4) திவ்ய த்ருஷ்டி சம்பன்னம் 5) குணம் 6) வித்யா 7) ஆயுளில் விருத்த மற்றும் ப்ரத்யக்ஷ தர்ம பராயணம் மற்றும் கோத்ர ப்ரவர்தகர்கள்.

ஆகவே பல்வேறு புராணங்களையும் இதிஹாஸங்களையும் முற்றும் கற்று உணர்ந்தவர்களே சிக்கலான கேள்விகளுக்குப் பதிலைச் சொல்ல முடியும்.

ரிக்வேதத்தில் சர்வானுக்ரமணியில் ஏழு ரிஷிகள் ஏழு சூக்தங்களை த்ருஷ்டியில் கண்டவர்கள் என்று சொல்லப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

1) பரத்வாஜர் 2) கஸ்யபர் 3) கௌதமர் 4) அத்ரி 5) விஸ்வாமித்ரர் 6) ஜமதக்னி 7) வசிஷ்டர் ஆகியோர் இதனால் சப்தரிஷிகள் என்று சொல்லப்படுகின்றனர்.

அதர்வ வேதத்திலும் (6/40/1) சப்தரிஷி மண்டலம் பற்றிய தெளிவான வர்ணனையும் விவரத்தையும் பார்க்கலாம்.

இவை ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

வானவியல் மர்மங்களையும் அனைத்துப் புராணங்களில் வரும் கால மாறுதல்கள் பற்றியும் நன்கு அறிந்தவர்கள் இந்தக் கூற்றுக்கள் அனைத்தும் உண்மையானவையே என்று அறிந்து பிரமிக்கலாம்.

அமரகோசத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் சப்தரிஷிகளைப் பற்றிச் சொல்லப்படுவதைக் காணலாம்.

ரத்னகோசத்திலும் சப்தரிஷிகளைப் பற்றிப் பார்க்க முடிகிறது.

ப்ரம்ஹ ரிஷி – வசிஷ்டர் முதலியவர்கள்

தேவ ரிஷி – நாரதர் முதலியவர்கள்

மஹரிஷி – வியாஸர் முதலியவர்கள்

பரமரிஷி – முனிமேலப்ரப்ருதர்,

காண்டரிஷி – வேத காண்டங்களில் உபதேசம் தருவோர்

ஸ்ருத ரிஷி – பவித்ரமான கதைகளைக் கூறுவோர்

ராஜ ரிஷி – விஸ்வாமித்ரர் உள்ளிட்டவர்கள்

ஸப்த ப்ரம்ஹரிஷி தேவரிஷி, மஹரிஷி, பரம்ர்ஷய: |

காண்டர்ஷிஸ்ச ஸ்ருதர்ஷிஸ்ச ராஜர்ஷிஸ்ச க்ரமாவரா: ||

அடுத்து பத்ம புராணத்தில் (ஸ்வர்க காண்டம் அத்யாயம் 11இல்) மரீசி ப்ர்யா சம்பூதி, அத்ரி ப்ரியா- அனுசூயா, புலஹ ப்ரியா-க்ஷமா, புலஸ்ய ப்ரியா- ப்ரீதி,  க்ரது ப்ரியா-சன்னதி, ஆங்கீரஸ் ப்ரியா- லஜ்ஜா, வசிஷ்ட ப்ர்யா-அருந்ததி என ரிஷிபத்னிகள் பற்றிய விவரத்தைக் காணலாம்.

இவர்கள் ‘லோக மாதா’ என அழைக்கப்படுகின்றனர். 

இன்னும் ஏராளமான ரிஷிகள், ரிஷி பத்னிகள் பற்றிய பிரமிக்கும் வரலாறுகளை நமது வேத, இதிஹாஸ, புராணங்களில் காணலாம்.**

Old articles in this blog

சப்தரிஷி – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › சப…

சப்த ரிஷிகளின் ஒரு வருடமானது தேவர்களின் ஏழு வருடங்களுக்குச் சமமாகும் என்று மத்ஸ்ய …

இந்து ரிஷிகள் வெளி நாட்டில் கரடி ஆன கதை! (Post …

https://tamilandvedas.com › இந்த…

2 Sept 2019 — இந்து ரிஷிகள் வெளி நாட்டில் கரடி ஆன கதை! (Post No.6968). Written by London Swaminathan. swami_48@yahoo.com.

·         நாம் எல்லோரும் நட்சத்திரங்கள் – Tamil and Vedas

·         https://tamilandvedas.com › நாம…

·          

·19 Aug 2014 — வானில் தெரியும் ஏழு நட்சத்திரங்களான சப்த ரிஷி மண்டலத்தை “கை தொழு எழுவர்” …

·         எகிப்திய அதிசயம்- 11 | Tamil and Vedas

·         https://tamilandvedas.com › tag › எ…

·          

·         27 Feb 2017 — வானில் தெரியும் ஏழு நட்சத்திரங்களான சப்த ரிஷி மண்டலத்தை “கை தொழு எழுவர்” …

சப்த ரிஷி மண்டல அதிசயங்கள்! – Tamil and Vedas

https://tamilandvedas.com › சப்த-…

8 Aug 2012 — இதையே பண்டைய காலம் தொட்டு சப்தரிஷி மண்டலம் என அழைக்கிறோம்.மேற்கில் உள்ள …

Saptarishi mandalam – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › saptarishi-mandalam

2 Aug 2013 — Saptarishi constellation (other names: Big Dipper, Ursa Major, Great Bear constellation). All South Indian Temples have special places for …


Saptarishi – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › sap…

28 Sept 2017 — Satapata Brahmana, part of Shukla Yajur Veda, says that women are stars. They mean that women become stars in the sky and lead their husbands to …—subham—

Divine Virtues: Gems from Bala Kanda of Valmiki Ramayana (Post No.11,715)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,715

Date uploaded in London – –  26 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Hindus’ greatest treasures are in the Four Vedas, Ten Main Upanishads, Two Great Epics and 18 Puranas. They run in to millions of pages and billions of words with commentaries. It is not easy to dive deep into the ocean of Sanskrit books and recover pearls, corals and amber. So, I will just give some gems from one of the two epics known as Valmiki Ramayana. It has got seven sections called Bala, Ayodhya, Aranya, Kishkinda, Sundara , Yudhdha and Uttara Kandas.

Just a word about pronunciation_

Valmiki – Vaalmiiki; Bala Kanda- Baala Kaanda

Let us delve deep into the first section called Baala Kaanda:

Ascetic Valmiki asked Narada (Naarada) the following questions?

कोन्वस्मिन्साम्प्रतं लोके गुणवान्कश्च वीर्यवान् ।
धर्मज्ञश्च कृतज्ञश्च सत्यवाक्यो दृढव्रत:।।1.1.2।।


“Who in this world lives today endowed with excellent qualities, prowess, righteousness, gratitude, truthfulness and firmness in his vows?

चारित्रेण च को युक्तस्सर्वभूतेषु को हित: ।
विद्वान्क: कस्समर्थश्च कश्चैकप्रियदर्शन: ।।1.1.3।।

Who is that one gifted with good conduct, given to the wellbeing of all living creatures, learned in the lore (knowledge of all things that is known), capable of doing things which others can not do and singularly handsome?

आत्मवान्को जितक्रोधो द्युतिमान्कोऽनसूयक: ।
कस्य बिभ्यति देवाश्च जातरोषस्य संयुगे ।।1.1.4।।

Who (among men) is self restrained? Who has conquered anger? Who is endowed with brilliance and free from envy? Who is that when excited to wrath even the devatas, are afraid of (let alone foes)?

Xxx

My comments

These three couplets list the good qualities valued by Hindus. What are they? If  one goes through the Tamil Veda known as Tirukkural written by Tiru Valluvar, each of the above qualities is discussed by the poet Valluvar.

Prowess- 67, 68 Tirukkural

Righteousness- chapter 4

gratitude -chapter 11

truthfulness – 30

 firmness- 47

good conduct- 14

wellbeing of all living creatures- 25,32

learned in the lore -40,42

capable of doing things which others can not do – 67,68

singularly handsome– 97 to 100

self restrained- 13,16

conquered anger-31

Who is endowed with brilliance –24

free from envy- 17

afraid of none -78

since Tirukkural is available on websites, I am not quoting them verbatim.

Xxxx

Mahabharata which came after Ramayana contains some matters which are older than Valmiki’s. Vyasa in a great hurry, gathered all the older materials available at that time and put is as Mahabharata with 100,000 couplets. It has the Bhagavad Gita, the gist of Hinduism, in just 1400 lines. Lord Krishna also lists these qualities as divine qualities in chapters 16, 14 and 12  .

BG 16: 1-3 slokas list the following qualities

The Supreme Divine Personality said: O scion of Bharat, these are the saintly virtues of those endowed with a divine nature—fearlessness, purity of mind, steadfastness in spiritual knowledge, charity, control of the senses, sacrifice, study of the sacred books, austerity, and straightforwardness; non-violence, truthfulness, absence of anger, renunciation, peacefulness, restraint from fault-finding, compassion toward all living beings, absence of covetousness, gentleness, modesty, and lack of fickleness; vigor, forgiveness, fortitude, cleanliness, bearing enmity toward none, and absence of vanity.

श्रीभगवानुवाच

अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः ।

दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् ॥१६- १॥BG 16-1

अहिंसा सत्यमक्रोधस्त्यागः शान्तिरपैशुनम् ।

दया भूतेष्वलोलुप्त्वं मार्दवं ह्रीरचापलम् ॥१६- २॥

तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता ।

भवन्ति संपदं दैवीमभिजातस्य भारत ॥१६- ३॥

Look at the amazing coincidence in Valmiki Ramayana, Tamil Veda Tirukkural and  Mahabharata. Each one is from different Yuga (era) and different area.

From Himalayas to Kanyakumari, Hindu values have been same for thousands of years.

—subham —–

Divine qualities, virtues, gems, Bala kanda, Ramayana, BG 16-1/3

புராணங்கள் பற்றி அம்பலவாணர் (Post No.11,714)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,714

Date uploaded in London – –  26 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

முதல் பாடலில் இல்லறம் என்பதற்கு இலக்கணம் கற்பிக்கிறார் கவிராயர்.; மாதா, பிதா, குரு , உறவினர்கள், சகோதர்கள், நல்ல விருந்தினர்கள் , உபசரிக்க வேண்டிய அந்தணர்கள், எல்லாம் அடங்கியது ஒரு பேமிலி; Family அதாவது குடும்பம். இப்படி நடப்பதே இல்லறம். இது துவறத்துக்கும் மேலானது என்று முடிக்கிறார். மனு, வள்ளுவன் ஆகியோரும் அதையே செப்பினர். அதற்கு காரணத்தையும் சொல்லிப் போந்தனர்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை- குறள் 41

பிரம்மச்சாரி, வானப்ரஸ்தர், சந்நியாசி ஆகிய மூன்று வகை மக்களுக்கும் உதவுவதால் இல்லறம் நடத்துவோர்தான் அவர்களைவிடச் சிறந்தவர் என்று பரிமேல் அழகர், மண க்குடவர் முதலியோர் உரை கூறுகிறது. அடுத்த இரண்டாவது குறளிலேயே தென்புலத்தார், தெய்வம், விருந்து , ஒக்கல் , தான் என்ற ஐவருக்கும் உதவும் பஞ்சயக்ஞம் பற்றியும் மனுவும் வள்ளுவரும் கூறுவர். இல்லறம் அல்லது நல்லறம் அல்ல என்று அவ்வையார் கூறியதற்கும் இதுவே காரணம் . அதாவது இல்லறத்தார் இல்லாவிடில் நான்கு பிரிவினர் என்ற இந்து தர்மம் இல்லாமல் போய்விடும். 4 பிரிவினர் – மாணவர்/ பிரம்மச்சாரி, கிரஹஸ்தன்/ இல்லறத்தான், வானப்ரஸ்தன்/ பென்ஷனர் அல்லது ஓல்ட் ஏஜ் மக்களுக்கான முதியோர் இல்லத்தில் Pensioners or Residents of Old Age Homes வசிக்கும் பெற்றோர், நாலாவது வகை- சன்யாசிகள் Ascetics. இவர்கள் நால்வருக்கும் உணவு கொடுப்பதோடு தினமும் பஞ்ச யக்ஞமும் செய்கிறான் என்பார் வள்ளுவர் .

Xxxxx

அடுத்த பாடலில் சைவ, வைணவ, பிரம்மா தொடர்பான புராணங்கள் எவை எவை என்று வகைப்படுத்துகிறார் புலவர். அந்தப் பாடல்களை படிப்பதற்கு முன்னர் புராணம் பற்றிய செய்திகள் இதோ:

18 புராணங்கள்

வேத வியாசர் தொகுத்த புராணங்கள்:- அக்னி, பாகவத, பிரம்ம, பிரம்மாண்ட, பிரம்மவைவர்த்த, கருட, ஹரிவம்ச, கூர்ம, லிங்க, மார்க்கண்டேய, மத்ஸ்ய, நாரத, பத்ம, சிவ, ஸ்கந்த, வாமன, வராஹ, விஷ்ணு (வாயு=சிவ புராணம்) ஆகிய 18 புராணங்கள்

18 உபபுராணங்கள்

சிறிய, முக்கியமற்ற புராணங்களை 18 ஆகத் தொகுத்தனர்:-சநத்குமார, நரசிம்ம, பிருஹந்நாரதீய,சிவரஹஸ்ய, துர்வாச, கபில, வருண, காலிக, சம்பா, நந்தி, சௌர, பராசர, மஹேச்வர, பார்கவ, வசிட்ட, தேவிபாகவத, முத்கள, கணேச என்பன 18 உப புராணங்கள். சிலர் இதில் வேறு சில பெயர்களைச் சேர்த்து சிலவற்றை விடுப்பர்.

புராணங்கள் பெரிய கலைக் களஞ்சியங்கள்; உலகிலேயே மாபெரும் இலக்கியம்; பல லட்சம் பாக்களை   கொண்டவை; வராலாறும் பூகோளமும் பாடுபவை ஆராய வேண்டிய அற்புத பொக்கிஷம். தாவரவியல் அறிவியல்,விலங்கியல் , வறட்சி, பூகம்பம் முதலியன பற்றி அவற்றில் உள. பல லட்சம் பாக்களை  ஆராய நமக்கு ஒரு 100 ஆண்டு ஆயுள்  போதாதே! என்ன செய்வது!

புராணங்கள் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தவை என்பதால் காலப் போக்கில் குழப்பங்கள் ஏற்பட்டன. ஒரே மன்னனின் தம்பிகள் அண்ணன்கள், தாயாதிகள் ஆண்டதையும் குழப்பிக்கொண்டு ஆண்டுகளை மாற்றி எழுதினர். பாண்டியர்களில் ஒரே நேரத்தில் ஆண்ட சஹோதரர்கள் உண்டு. சேர மன்னர்களில் இரண்டு வம்சங்கள் ஒரே நேரத்தில் ஆண்டதும் உண்டு. இவை பிற்காலத்தியவை; ஆகையால் குழப்பம் மிகக் குறைவு. பழங்கால விஷயங்களில் இது அதிகம்

மக்களைக் கவர்வதற்காக மிகைப்பட்ட கூற்றுகளைப் புராணம் சொல்லுவோர் மொழிந்தனர். தசரதனுக்கு 60,000 மனைவியர், காசி மன்னன் அலார்கா 36, 000 ஆண்டுகள் ஆண்டான்; ராமன் 24,000 ஆண்டுகள் ஆண்டான் என்றெல்லாம் கதை விட்டனர். ஆனால் வேதங்களோ மனிதனின் ஆயுள் 100 ஆண்டுகளே என்று திரும்பத் திரும்ப பாடுகின்றன. தீர்க தமஸ் 100 ஆண்டு வாழ்ந்ததையும், மஹீதாஸ ஐதரேயர் 116 வயது வரை இருந்ததையும் குறிப்பிடத் தவறவில்லை. உண்மையில் ஆயிரம் என்பதில் மூன்று பூஜ்யங்களை நீக்கி விட வேண்டும்; ஏனெனில் இது போன்ற ‘கப்ஸா’க்கள் சுமேரியாவிலும் உண்டு; மூன்று தமிழ்ச்சங்கங்கள் வரலாற்றிலும் உண்டு. ஆதிகால மக்கள் இப்படி ஆயிரம் என்பதைச் சேர்த்துச் சொல்லுவர். மஹாபாஷ்யம் யாத்த பதஞ்சலி முனிவர் மட்டும் அறிவியல் முறையில் கணக்கிட்டு ராமன் 24 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் என்று அறுதியிட்டுக் கூறினார்.

ஆக மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் புராணங்களுக்கு புளுகு மூட்டைகள் என்ற அவப்பெயரை சம்பாத்தித்துத் தந்தன.

ஆதிகாலத்தில் வரலாற்றை வாய் மொழியாக, பாடல் வாயிலாக, பாமர மக்களுக்கு என படைக்கப்பட்டவை புராணங்கள். இதற்கு ஐந்து லட்சணங்கள் உண்டு. அதில் வரலாறும், பூகோளமும் அடக்கம். ஆயினும் இந்துக்கள் மஹா புத்திசாலிகள், ‘ரொம்ப அட்வான்ஸ்ட்’ (far advanced) என்பதால் அவ்வப்பொழுது புது வரலாற்றைப் (updating) புகுத்தினர். இப்படி உலகில் அவ்வப்பொழுது புது வரலாற்றை எழுதியோர் இந்துக்கள் மட்டுமே. வெளிநாட்டுப் பேதைகள் கடைசி தேதியைப் பார்த்துவிட்டு புராணங்கள் பிற்காலத்தியவை என்று முத்திரை குத்திவிட்டனர். பெயரிலேயே புராண (பழையவை) என்ற சொல் இருக்கையில் புதியவை என்று அரை வேக்காடுகள் செப்பியது ‘சூடான ஐஸ்க்ரீம்’ (Hot Icecream!!!) என்று சொல்லுவதற்கு இணையானது. குப்தர் காலம் வரை பிற்சேர்க்கை இருந்ததால் புராணங்கள் குப்தர் காலத்தியவை என்பது காமாலைக் கண்ணர்களின் வாதம்.

புராணங்களில் ஐந்து பகுதிகள் இருக்கவேண்டும் என்பது மரபு:

1.சர்கம்: பிரபஞ்சத்தின் தோற்றம்

2.பிரதி சர்கம்: மற்ற உயிர்களின் தோற்றமும் மறைவும்

3.வம்சம்: ரிஷிகள், தேவர்களின் சரிதம்

4.மன்வந்தரம்: 14 மனுக்களின் காலம்

5.வம்சானுசரிதம்: சூரிய, சந்திர குல அரசர்களின் வரலாறு

xxxxx

அறப்பளீசுர சதகப் பாடல் எண் 95

           95. இல்லறம்

தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்

     சன்மார்க்கம் உளமனை வியைத்

  தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்

     தனைநம்பி வருவோர் களைச்

சிந்தைமகிழ் வெய்தவே பணிவிடைசெய் வோர்களைத்

     தென்புலத் தோர் வறிஞரைத்

  தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்

     தேனுவைப் பூசுரர் தமைச்

சந்ததம் செய்கடனை யென்றும்இவை பிழையாது

     தான்புரிந் திடல்இல் லறம்;

  சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்

     தம்முடன் சரியா யிடார்!

அந்தரி உயிர்க்கெலாந் தாய்தனினும் நல்லவட்

     கன்பனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அந்தரி உயிர்க்கு எலாம் தாய் தனினும் நல்லவட்கு

அன்பனே – பார்வதியும் எவ்வுயிர்க்கும் அன்னையினும் நல்லவளுமான

உமையம்மைக்குக் காதலனே!, அருமை ……. தேவனே!, தந்தைதாய்

சற்குருவை – தந்தை தாயரையும் நல்லாசிரியனையும்இட்ட தெய்வங்களை

– வழிபாடு தெய்வங்களையும், சன்மார்க்கம்உள மனைவியை –

நல்லொழுக்கமுடைய இல்லாளையும், தவறாத சுற்றத்தை – நீங்காத

உறவினரையும், ஏவாத மக்களை – குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகளையும்,

தனைநம்பி வருவோர்களை – தன்னை நம்பிப் புகலடைந்தோர்களையும்,

சிந்தை மகிழ்வு எய்தவே பணிவிடை செய்வோர்களை – மனம் மகிழத்

தொண்டு புரிவோர்களையும், தென்புலத்தோர் வறிஞரை –

தென்புலத்தாரையும் ஏழைகளையும், தீது இலா அதிதியை – குற்றமற்ற

விருந்தினரையும், பரிவு உடைய துணைவரை – அன்புமிக்க

உடன்பிறப்பாளர்களையும், தேனுவை – பசுக்களையும், பூசுரர்தமை –

அந்தணர்களையும், (ஆதரித்தலும்) சந்ததம் செய்கடனை – எப்போதும்

செய்யும் கடமைகளையும், இவை – (ஆகிய) இவற்றை, சந்ததம் பிழையாது

– எப்போதும் தவறாமல், தான் புரிந்திடல் இல்லறம் – ஒருவன் இயற்றுவது

இல்லறம் எனப்படும், சாரும் நலம் உடையர் ஆம் துறவறத்தோரும் இவர்

தம்முடன் சரிஆயிடார் – பொருந்திய நன்மையையுடையராகிய துறவு

நெறியிலே தவறாது நிற்போரும் இவர்களுடன் ஒப்பாகமாட்டார்.

  (வி-ரை.) ‘அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை, அஃதும் பிறன்பழிப்ப

தில்லாயின் நன்று’ என்னும் வள்ளுவர் வாய்மொழியை ஒப்புநோக்குக.

Xxxxxxxxxxxxxxxxxxxxxx

அறப்பளீசுர சதகப் பாடல் எண் 96

                96. புராணம்

தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்

     சாரும்வா மனம், மச் சமே,

  சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்த

     சரிதமே, பிரமாண் டமும்,

தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;

     நெடியமால் கதை;வை ணவம்

  நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,

     நீடிய புராணம் நான்காம்;

கலைவளர்சொல் பதுமமொடு, கிரமகை வர்த்தமே,

     கமலா லயன்கா தைஆம்;

  கதிரவன் காதையே சூரிய புராணமாம்;

     கனல் காதை ஆக்கி னேயம்;

அலைகொண்ட நதியும்வெண் மதியும்அறு கும்புனையும்

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அலைகொண்ட நதியும் வெண்மதியும் அறுகும் புனையும்

அத்தனே – திரையெறியும் கங்கையாற்றையும் வெண்திங்களையும்

அறுகையும் மிலைந்த தலைவனே!, அருமை …….. தேவனே!, தலைமைசேர்

பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்சாரும் வாமனம், மச்சம், சைவம்,

பெருங்கூர்மம், வருவராகம், கந்தசரிதம், பிரமாண்டமும் – நிலைமைசேர்

இப்பத்தும் உயர் சிவபுராணம் ஆம் – நிலையான இவை பத்தும் உயர்ந்த

சிவபுராணங்கள் ஆகும், நெடிய மால் கதை – நெடியவனான திருமாலின்

கதைகள், வைணவம், நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம், நீடிய

புராணம் நான்கு ஆம் – பெருமையுடைய புராணங்கள் நான்கும் ஆம்,

கலைவளர் சொல் பதுமமொடு பிரமகை வர்த்தமே கமலாலயன் காதை ஆம்

– கலைவல்லார்கூறும் பதுமபுராணமும் பிரமகைவர்த்த புராணமும் தாமரை

மலரவன் காதைகள் ஆகும், கதிரவன் காதையே சூரிய புராணம் ஆம் -,

கனல் காதை ஆக்கினேயம் – அக்கினியின் கதை ஆக்கினேய புராணம்.

     (வி-ரை.) சைவபுராணம் பத்து; வைணவபுராணம் நான்கு; பிரமபுராணம்

இரண்டு, கதிரவன் புராணம் ஒன்று; ஆக்கினேய புராணம் ஒன்று; ஆகப்

பதினெண் புராணங்கள்.

To be continued……………………………………………………..

 மூக்குப்பொடி மகிமை-1 (Post No.11,713)

 WRITTEN BY B .Kannan, New Delhi

Post No. 11,713

Date uploaded in London – –  26 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

WRITTEN BY B.KANNAN, NEW DELHI

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் பல.

மூக்குப்பொடிப் பிரியர்களுக்கு இக் கட்டுரை சமர்ப்பணம்…

இன்றைக்கு நாம் பார்க்கப் போவது ஒரு சாதாரண சின்னப் ‘பொடி’ விஷயமே! ஆம்,

‘ஸ்நஃப் பவுடர்’, நுகட்காரம், நாசிப்பொடி, மூக்குப் பொடி எனத் தென்னிந்தியாவிலும், நாஸ்,சுங்கனீ, நஸ்வார் என்றெல்லாம் வட இந்தியாவிலும் அழைக்கப்படும் விநோத பழக்க வழக்கத்தைப் பற்றிதான். இது பரவலாக மேட்டுக்குடி மக்களிடமும், புலவர் கள், கலஞர்களிடமும் அவர்களின் அந்தஸ்துக்கு ஒரு முக்கிய அடையாளமாக 70, 80-ம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளது. பின்பு அப்பழக்கத்துக்குச் சாதாரண பொது ஜனங்களும் அடிமையாகி விட்டனர். அந்தக் காலத்து தமிழ் வாரஇதழ்களில் டிஏஎஸ்

ரத்தினம் பட்டணம் பொடி விளம்பரம் நிச்சயம் இடம் பெற்றிருந்ததை மறக்க முடி யுமா? அப்பொடியை அதற்கென்றே பிரம்மதேவன் விசேஷமாக சிருஷ்டித்திருக்கும் வாயகல அண்டா அல்லது பீரங்கி போன்ற மூக்குத் துவாரத்தில் “சொர்..ர்” என்று இழுத்து ஏற்றிக் கொள்ளாவிட்டால் மற்ற காரியங்கள் எதுவும் சுறுசுறுப்பாகவும் சுமு கமாகவும் நடந்தேறாது என்றிருந்தது அக்கால நிலை!

அருகில் இருப்பவருக்குச் தர்மசங்கடம் கலந்த அருவருப்பு, துணி துவைப்போர்க்கு அவஸ்தை என்பதை இப்பிரியர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். கடைக்காரர் பிரத் தியேகமான பொடி ஜாடியிலிருந்து, போதை தருவதற்குப் புகையிலை, காரத்துக்குச் சுண்ணாம்பு, மணத்திற்கு நெய் சேர்க்கப்பட்டுள்ளச் சன்னமானத் துகளை, மிகவும் மெலிதான, நீண்ட, தலைப் பகுதியில் சின்னக் குழியுடனிருக்கும் கரண்டியால் தட் டித்தட்டி (விழும் ஆனால் அதிகம் விழாத மாதிரியும் இருக்கும்!) அதில் கலந்துள் ளப் பொருட்களின். சேர்மானத்தைப் பொறுத்து, பொடிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்”  அதை மட்டைநார் இலையில் போட்டு, பாந்தமாக மடித்து, வாழை நார் கொண்டு கட்டிக் கொடுக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

“பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன், ஐயகோ!” என்கிறார் வள்ள

லார் (திரு அருட்பா,அவா அறுத்தல், பாடல் 12). “சோமசுந்தரன் கடையில் செய்த

பொடியினைப் போடா மூக்குப் புண்ணியம் செய்யா மூக்கு” என்று தமிழ்த் தாத்தா

உ.வே.சா. அவர்கள் ஒரு கவிதையே பாடியுள்ளார். சாதாரணமானவர்களுக்குத் தும்

மலைத் தரும்பொடி இங்கு புலவர் மூலம் புதிர் வெண்பாவைக் கொடுத்துள்ளதை

ரசிக்கலாம்….

கண்பார்வை இழந்தும் கல்வி-கேள்விகளில் வல்லுநராய், கலைச் சிறப்புடையவராய், வளமானக் கற்பனை நிறைந்தக் கவிச்சிங்கங்களாகத் திகழ்ந்தவர் பலருண்டு. இரட் டையருள் ஒருவரான இளஞ்சூரியர், வீரராகவ முதலியார், செட்டிநாட்டு வன்றோண் டச் செட்டியார், வங்காளத்தின் கவிஞர் சுபோத சந்திரர், சூர்தாசர்,ஆங்கிலக் கவிஞன் ஜான்மில்டன், கிரேக்க கவி ஹோமர், இன்றும் நம்மை வழி நடத்திக் கொண்டிருக் கும் வேதசாஸ்திர விற்பன்னர் பூஜ்யஶ்ரீ ராமபத்ராசார்யா ஆகியோரைப் போன்றே பழநி கவிச்சிங்க நாவலர் (மாம்பழக் கவிராயர்) அவர்கள், முகக்கண்களை இழந்த வராக இருந்தாலும் அகக் கண்ணொளிப் பெற்று அரும்பெருங் கவிஞராய் விளங்கிய வர். நையாண்டி, கேலி, பரிகாசம் தொனிக்கும் பாக்களை இயற்றி அனைவரையும் மகிழ்வித்தவர். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு அவரது கீழ்வரும் பாடல்.                                                                

  “மேலாடை யின்றிச் சபை புகுந்தால் இந்த மேதினியோர்

  நூலாயிரம் படித்தாலும் எண்ணார் நுவல் பாற்கடலோ

  மாலானவன் அணி பொன்னாடை கண்டு மகளைத் தந்தே

  ஆலாலம் ஈந்தது தோலாடை சுற்றும் அரன் தனக்கே”

( உடுப்பு நெறி-DRESS CODE-விதி இருக்கிறது, அல்லவா? சிலவிடங்களில் நல்ல ஆடைகளை அணிந்திருப்பவர்களுக்கு வரவேற்பும், அப்படி இல்லாதவர்களுக்கு அவ மரியாதையும் ஏற்படுவதை நாம் பார்த்திருப்போம்.அவர்கள் எவ்வளவு நூல்கள் படித் திருந்தாலும் ஆசானாக- நுவல்- ஏற்கமாட்டார்கள். தெய்வங்களில் கூட இந்தப் பாகு பாடு இருக்கிறதே! திருமால் அலங்காரப் பிரியராகப் பட்டாடை அணிந்திருந்ததால்  பாற்கடல் அவருக்குத் திருமகளைக் கொடுத்ததாம். சிவபெருமான் புலித்தோலை உடுத்தியிருந்ததால் தான் அதே பாற்கடல் ஆலகால விஷத்தை அவருக்குக் கொடுத் ததாம். ஆடையின் பெருமையை நையாண்டித் தொனியில் இந்த அழகியப் பாடலில் உணர்த்தியிருக்கிறார் புலவர்).

அப்படிப்பட்டவர் இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, பொன்னுச்சாமி தேவர் ராஜசபையை அலங்கரித்தவர். அப்போது நடந்த ஒரு சுவாரசியமானப் “பொடி” சம்பவம்…….

நாவலர் பொடி போடும் பழக்கமுடையவர். எப்போதும் பொடி டப்பி ஒன்றைப் பக்கத் திலேயே வைத்திருப்பார். மூக்கு துறுதுறுக்கும் சமயத்தில் அரசரோ அவையினரோ அறியாதவாறு குனிந்து மரியாதை நிமித்தம்,மேல் உத்தரீயத்தால் முகத்தை மறைத் தபடி பயன்படுத்துவது வழக்கம் (‘சொர்..ர்’ என்ற சத்தம் கேட்டுத் தொலைக்கும்,என்ன செய்வது!). ஒருநாள் சொற்பொழிவின் நடுவில் மூக்கு அவசர சமிக்ஞை கொடுத்து விட, பக்கத்தில் பொடி டப்பியைத் தடவித் தேடியும் கிடைக்கவில்லை. அதைத்தான் தேவர் அவர்கள் விளையாட்டாக நாவலர் அறியாதவாறு முன்பே எடுத்துத் தன்வசம் வைத்துக் கொண்டுவிட்டாரே! சலிப்படைந்துவிட்டப் புலவரை நோக்கி ஏதும் தெரியா தவர் மாதிரி மன்னர் கேட்டார், “தாங்கள் ஏதோ ஒரு வஸ்துவை மறந்து தேடுவது போல் தோன்றுகிறதே! அது யாதோ? என்று

அதற்கு நாவலர், “வள்ளல் பெருமானே! தங்கள் அருமைச் சமூகத்தின் முன்னர் அஞ் சாது அறிவிக்கும் அளவிற்கு அது அத்துணைப் பெரிய காரியமில்லை!” எனவிநயமா கப் பதிலளித்தார்.

“அப்படியாயின் அது ஒரு பொடிக் காரியமாக இருக்குமோ?” என்றார் அரசர்.

புலவர் சங்கடத்துடன் நெளிந்தவாறு, “ஆம்,அரசே!” என்றார்

“தவறியப் பொருள் மீண்டும் கிடைக்க வேண்டுமாயின் ஒன்று செய்ய வேண்டியிருக் கும். அதாவது ஒரு வெண்பாவில் ஐந்து இடங்களில் பொடி என்ற சொல்வருமாறும் அதுவே முருகன் துதியாகவும் அமைந்திருக்குமாறுப் பாடிக் கொடுத்தால்,தங்களிடம் பொடி டப்பியை வரவழைத்துத் தருகிறோம், சம்மதமா?”

மூக்குப்பொடி மீது வைத்துள்ள அதீத வேட்கையால் உந்தப்பட்ட நாவலர் அக்கணமே ஒரு வெண்பாவைப் பாடினார். அப் ‘பொடி’ப் பாடல் இதோ…

“கரும்பொடி மாவஞ்ச வெறிகைப்பொடி சில்விற்பர்

தருங்கொம் பொடிசை தெய்வத்தையல்-விரும்புபுய

வான்பொடியா நின்ற கதிர்மானு மயிலோ எனையாள்

தேன்பொடியார் பூம்பதந் தந்தே”

(கரும்பொடி, கைப்பொடி, தருங்கொம்பொடி, வான்பொடி, தேன்பொடி என ஐந்து பொடிகள் அடங்கியப் பாடலின் பொருள்: கரும்பை ஒடித்துத் தின்னும் யானைகள் (மா) அஞ்சும்படியாக வீசும் பொடிசில் எனும் கையாயுதத்தைக் கொண்ட மலைக் குறவர் தரும் கொம்பு போன்ற வள்ளிதேவியுடன்,இசைந்த தெய்வகுஞ்சரி விரும்பும் பன்னிரு கரங்களைக் கொண்டவரே, வானில் சுடுகின்ற சூரியனைப் போன்ற வடிவே லரே, தேனின் மகரந்தப்பொடி பொருந்தும் உமது தாமரைப் பூம்பாதம் தந்து என்னை அருள்வாயாக! )

இப்பாடலைக் கேட்டு மனம் குளிர்ந்துபோன அரசர் தேவரவர்கள் தங்கத்தால் செய்து நவரத்தினங்கள் பதித்த விலையுயர்ந்தப் பொடி டப்பி ஒன்றை நாவலருக்குப் பரிசா கத் தந்து மகிழ்ந்தார்.

To be continued……………………………………..

tags – மூக்குப்பொடி

இந்தியாவின் வளர்ச்சி : வெளியுறவுத் துறை அமைச்சர் உரை! (Post.11,712)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,712

Date uploaded in London –  26 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

வெல்க பாரதம்!

இந்தியாவின் வளர்ச்சி : வெளியுறவுத் துறை அமைச்சர் திரு எஸ். ஜெயசங்கரின் உரை!

ச.நாகராஜன்

ஒரு குறிப்பிடத்தக்க உரையை நமது வெளியுறவுத் துறை அமைச்சர் திரு எஸ். ஜெயசங்கர்  பங்களூரில் நிகழ்த்தியுள்ளார்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மானேஜ்மெண்ட் (Indian Institute of Management)  மாணவர்கள் மற்றும் ஆசிரியர் குழாமிடையே அவர் 2022 ஜூன் 10ஆம் தேதி  இந்த அருமையான உரையை நிகழ்த்தியுள்ளார்.

உரையின் சாராம்சமாவது:

“நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களோ, இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் அனைவரும் ஒரு மாபெரும் புரட்சி நடக்கும் போது வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.  ஆனால் இது ஒரு புரட்சி என்பதை நீங்கள் உணராமல் இருக்கக்கூடியதற்கான காரணம் இது ஜனநாயக ரீதியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு விதங்களில் நடந்து கொண்டிருப்பதால் தான்.

‘ஆகவே, உங்களைச் சுற்றியும் நிஜமாக, வாழ்க்கையானது நாடக பாணியில் ஆழ்ந்து வியக்கத்தகும் விதத்தில் மிகப் பெரும் மாறுதலை அடைந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இந்த கல்வி நிலையத்தில் நுழைந்திருக்கும் சமயத்தை விட இப்போது பணியை ஏற்கும் நிலையில் நீங்கள் வெளியேறும் போது அடிப்படையிலேயே மாறுதலை அடைந்துள்ள ஒரு இந்தியாவில் காலடி எடுத்து வைக்கப் போகிறீர்கள்.

கடந்த 8 வருடங்களில் ஜன தான் யோஜனா திட்டத்தின் மூலமாக அமெரிக்காவின் 80 சதவிகித ஜனத்தொகை என்று சொல்லக்கூடிய அளவிலான 30 கோடி பேர்கள் வங்கிக் கணக்கைக் கொண்டிருக்கின்றனர்; இந்தக் கணக்கில் தேவைப்படும் மக்களுக்காக பணத்தை அரசு சேர்ப்பிக்கிறது.

ஹர் கர் ஜல்’ என்ற திட்டமானது சுத்தமான குடிநீரை 45 கோடி மக்களுக்கு கடந்த 8 வருடங்களில் கொடுத்து வருகிறது.  இந்த எண்ணிக்கை முழு ஐரோப்பிய யூனியன் பிரதேசத்தின் ஜனத்தொகையாகும். இவர்கள் அனைவருக்கும் இது வரை குழாய் இணைப்பு இல்லாமல் இருந்தது; இப்போது கிடைத்திருக்கிறது.

ஜெர்மனியின் ஜனத்தொகை அளவிலான 8 கோடி பேர்கள் இதுவரை சமையலுக்கு விறகைப் பயன்படுத்தி வந்தவர்கள், இப்போது எல்பிஜி இணைப்பைப் பெற்று சமையலுக்கு சமையல் வாயுவைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

ப்ரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக  ஏறக்குறைய ஜப்பானின் ஜனத்தொகை என்று சொல்லக்கூடிய அளவிலான 11.5 கோடி மக்களுக்கு வீடுகள் (நகரங்களிலும் நகர்ப்புறங்களிலும்) கட்ட நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

கோவிட் காலம் கடுமையான காலம். அப்போது தேவைப்பட்ட ரேஷன் கார்ட் வைத்திருக்கும் எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது; இன்னும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் 81 கோடி பேர்கள் இதனால் பயனடைந்து வருகின்றனர்.  இந்த எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் ஜனத்தொகைக்குச் சமம்.

கடந்த 8 வருடங்களில் சௌபாக்யா என்ற திட்டத்தின் மூலமாக 13 கோடி பேர்கள் நாம் சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் முதல் முறையாக மின் இணைப்பை பெற்றுள்ளனர். இந்த 13 கோடி என்ற எண்ணிக்கை ரஷியாவின் ஜனத்தொகை அளவாகும்.

ஜன் ஆரோக்ய யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக 17 கோடி பேர்கள் உடல்நல பாதிப்பின் போது உதவியைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை மெக்ஸிகோவின் ஜனத்தொகையைப் போல 125 % (125 சதவிகிதம்) ஆகும்.

நாம் எவ்வளவு பெரிய மாறுதலை புரட்சி என்று சொல்லும் அளவில் கொண்டு வந்திருக்கிறோம் என்பதை அறிய (இளைய தலைமுறையினராகிய) நீங்கள் இந்த எண்ணிக்கையை மனதிலே ஏற்றிக் கொள்ள வேண்டும்.

நான் ஏன் இந்த எண்ணிக்கைகளை உங்களிடம் சொல்கிறென் என்றால்  நீங்கள் இந்தியாவானது மாபெரும் சமூக -பொருளாதார மாறுதல்களை அடைந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தின் நடுவில் நீங்கள் இருப்பதால் தான். நமது சமூகத்தின் கீழ் மட்டத்தில் நாம் உண்மையிலேயே ஒரு சமூக பத்திரத்தன்மையை, பாதுகாப்பைஉருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

 ஆகவே தான் அடிப்படையான எதிர்பார்ப்பு இப்போது வேறு ஒரு மட்டத்தில் இருக்கிறது. 

இந்த உரையை ஒவ்வொரு இந்தியனும் மனதிலே ஏற்றிக் கொண்டு இளைஞர்களுக்கும் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அவர்கள் மனதில் ஏற்றிக்கொள்ளும் படியாகச் சொல்ல வேண்டும்.

வாழிய பாரத மணித் திருநாடு! 

***

நன்றி : ஜெய்சங்கர் அவர்களின் ஆங்கில உரையைப் பிரசுரித்துள்ளது  கல்கத்தாவிலிருந்து வெளிவரும் வார இதழான ட்ரூத் (TRUTH) Volume 90 Issue 38 Dated 13th January 2023)