மார்ச் 2023 காலண்டர்; ரமண மகரிஷி பொன்மொழிகள் (Post No.11,769)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,769

Date uploaded in London – –  4 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்த மாத நற்சிந்தனைக் காலண்டரில் ரமண மஹரிஷியின் புனித மொழிகள் இடம்பெறுகின்றன

xxx

பண்டிகை நாட்கள் – மார்ச்  6- மாசி மகம் 8-ஹோலி 15- காரடையான் நோன்பு 22- யுகாதி தெலுங்கு வருஷப் பிறப்பு 30 – ஸ்ரீ ராம நவமி

பெளர்ணமி  -7அமாவாசை  – 21ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்  – 318சுப முகூர்த்த தினங்கள் – 91013172327

xxx

மார்ச்  1 புதன் கிழமை

சத்சங்கம், மனதை இதயத்தில் மூழ்கச் செய்யும்

xxx

மார்ச்  2 வியாழக்கிழமை

ஸ்தூல இதயம் இடது பக்கத்தில் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது .ஆனால் நான் பேசும் இதயம் வலப்பக்கத்தில் இருக்கிறது . இது எனது அனுபவம் . இதற்கு வேறு சான்று எதுவும் தேவை இல்லை .இருப்பினும் மலையாள நூல் அஷ்டாங்க ஹ்ருதயத்திலும் , சீதா உபநிஷத்திலும் இது உறுதிபடக் கூறியிருப்பதைக் காணலாம் .

xxx

மார்ச்  3 வெள்ளிக்கிழமை

இதய குகையின் நடுவே பிரம்மம் மட்டுமே ஒளிர்கிறது .நான் – நான் என்ற நேரிடையான ஆன்ம அனுபவமே இது.ஆன்ம விசாரத்தினாலோ அல்லது மூச்சடக்கத்தினாலோ இதயத்தில் நுழைந்து அதாகவே இரு.

xxx

மார்ச்  4  சனிக்கிழமை

பிரபஞ்சம் முழுவதும் உடலில் இருக்கிறது. உடல் முழுவதும் இதயத்தில் அடங்குகிறது .எனவே பிரபஞ்சமே இதயத்தில் அடக்கம்.

xxx

மார்ச்  5 ஞாயிற்றுக்கிழமை

உலகத்தில் சூரியனைப் போன்று உடலுக்கு இதயம் . சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவது போல இதயம் மனதிற்கு ஒளி தருகிறது .

xxx

மார்ச்  6 திங்கட் கிழமை

சுருக்கமாகச் சொன்னால் நான் என்ற எண்ணமே எல்லாவற்றிற்கும் மூலம் . அது உதிக்கும் இடம் இதயம்.

xxx

மார்ச்  7   செவ்வாய்க் கிழமை

இந்த இதயம் ரத்தம் சுத்திகரிக்கும் அங்கம் அல்ல. ‘ஹிருதயம்’ என்பதற்கு இதுவே மையம் என்று பொருள. ஆகவே அது ஆன்மாவைக் குறிக்கிறது .

Xxx

மார்ச்  8 புதன் கிழமை

முயற்சி செய்து மனதை எண்ணங்களிலிருந்து விடுவிக்க வேண்டும். அந்நிலையில் நாம் தொடர்ந்து இருப்போமானால் அதுவே சஹஜ நிலை (இயல்பு நிலை)

xxx

மார்ச்  9 வியாழக்கிழமை

மனத்தின் இயல்பான நிலை ஆத்மாவில் நிலைத்து இருப்பதே. ஆனால் அதற்குப் பதிலாக நம் நம் மனம் வெளிப்பொருள்களைப் பற்றி நிற்கிறது .

xxx

மார்ச்  10 வெள்ளிக்கிழமை

நமது ஆரம்ப நிலையிலிருந்து தவறுவதால் உடம்பாகவே நம்மைப் பார்க்கும் தவறான போக்கு ஏற்படுகிறது. தவறான எண்ணங்ககளை விட்டுவிட்டு நமது மூலத்தைத் தேடிப்பிடித்து  நமது இயல்பான நிலையில் இருப்பது அவசியம் .

xxx

மார்ச்  11  சனிக்கிழமை

நமது சொரூபத்தை மறப்பதே உண்மைச்  சாவு. அதை நினைவுகொள்ளுதல் உண்மைப் பிறப்பு. தொடர்ந்து வரும் பிறப்புகளுக்கு அது முற்றுப்புள்ளி வைக்கிறது .

xxx

மார்ச்  12 ஞாயிற்றுக்கிழமை

நாம் ஆனந்தத்தைப் புதிதாகச் சேர்ப்பதில்லை .நம் சொரூபமே ஆனந்தம்தான் . செய்யவேண்டியதெல்லாம் மகிழ்ச்சியின்மையை நீக்குவதே . இந்த வழிகள் அவ்வாறு செய்கின்றன .

Xxx

மார்ச்  13 திங்கட் கிழமை

மனம் என்பது என்ன? தேடிக்கண்டு பிடித்தால் மனம் என்று தனியாக ஒரு பொருள் இல்லை என்பது தெரிய வரும் .

xxx

மார்ச்  14  செவ்வாய்க் கிழமை

மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பே. அவை நான் என்ற எண்ணத்தையே சார்ந்து இருக்கின்றன . நான் என்ற எண்ணமே மனம் என்று அறி

xxx

மார்ச்  15 புதன் கிழமை

மனம் என்று ஒன்றுமில்லை. எண்ணங்கள் உதயமாவதால் , அவை தொடங்கும் இடத்தை வைத்து ஏதோ ஒன்றை மனம் என்கிறோம் .

xxx

மார்ச்  16 வியாழக்கிழமை

உள் திரும்பிய மனமே ஆன்மா . வெளிப்புறம் திரும்பினால் அதுவே அகந்தையாகவும் உலகமாகவும் மாறுகிறது .

xxx

மார்ச்  17 வெள்ளிக்கிழமை

எந்த எண்ணமும் வீணாவதில்லை. ஒவ்வொரு எண்ணமும் எப்பொழுதாவது ஒரு பயனை விளைவிக்கும் . எண்ணத்தின் ஆற்றல் ஒருபோதும் வீண் போகாது .

xxx

மார்ச்  18  சனிக்கிழமை

நீ எண்ணத்திலிருந்து வேறானவனா ? அவை இல்லாமல் நீ இருக்கிறாயா ? ஆனால் நீ இல்லாமல் எண்ணங்கள் இருக்க முடியுமா ?

Xxxx

மார்ச்  19 ஞாயிற்றுக்கிழமை

வலிமையாகச் சிந்திக்கும்போதுதான் மனம் வலிமை பெறுகிறது எனப்து பொதுவான எண்ணம். ஆனால் எண்ணங்களிலிருந்து விடுதலைப் பட்ட மனமே வலிமையானது .

Xxx

மார்ச் 20 திங்கட் கிழமை

தன்னைப் பற்றிய அறிவை ஒதுக்கிவிட்டு , வெளி விஷய அறிவையே எப்போதும் நாடுகிறது மனம் .

xxx

மார்ச் 21  செவ்வாய்க் கிழமை

மனம் அலைபாயும்போது , சக்தி எண்ணத்தினால் சிதறிப்போய் , பலவீனமடைகிறது.  மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போது , சக்தி சேமிக்கப்படுகிறது.  மனம் வலிமை பெறுகிறது

Xxx

மார்ச்  22 புதன் கிழமை

நமது நோக்கு ஞான வழியில் அமையுமானால் , உலகமே கடவுளாகத் தெரியும்

xxx

மார்ச்  23 வியாழக்கிழமை

தேடினால் அகந்தை ஓட்டம் பிடிக்கும் . எஞ்சி நிற்பது ஆத்மாவே .

xxx

மார்ச்  24 வெள்ளிக்கிழமை

நான் யார் என்று விசாரித்து இதயத்தில் நுழைந்தால் , அகந்தை வேரோடு சாயும் .

xxx

மார்ச்  25 சனிக்கிழமை

அகந்தை  உண்டாயின் எல்லாம் உண்டாகும். அது அடங்கினால் எல்லாம் அடங்கும். எனவே அகந்தையே எல்லாம்.  அது என்ன என்று நாடுதலே எல்லாவற்றிலும் வெற்றியைத் தரும்

Xxx

மார்ச்  26 ஞாயிற்றுக்கிழமை

மூச்சைக் கட்டுப்படுத்தி வலிமையற்ற மனத்தை அடக்கவேண்டும். பின், அது கட்டப்பட்ட மிருகத்தைப் போல அலையாது நிற்கும் .

xxx

மார்ச் 27  திங்கட் கிழமை

மூச்சை நெறிப்படுத்துவதால் எண்ணங்கள் ஒழுங்கு செய்யப்படும். பின் அவற்றின் மூலத்தில்  வசிக்கலாம் .

xxx

மார்ச் 28  செவ்வாய்க் கிழமை

ஒரு மடங்கு வெளி விடுதல் ,ஒரு மடங்கு உள்ளிழுத்தல் , நான்கு மடங்கு உள்ளடக்குதல் என்ற நெறியில் செல்லும்போது மூச்சுக் காற்று செல்லும் நாடிகள் தூய்மை அடைகின்றன .

Xxx

மார்ச்  29 புதன் கிழமை

தினமும் ஞானிகள் சங்கத்தில் இருப்பதால் , நம் மனம் அதன் மூலத்தில் கலந்துவிடும்.

xxx

மார்ச்  30 வியாழக்கிழமை

மூச்சை நெறிப்படுத்தினால் , வலையில் பிடிபடும் பறவை போல மனம் அமைதியாகும். மனத்தை அடக்க இது ஒரு வழி .

மந்திரங்களைச் சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு எல்லாம் ஒன்றாகிப் போகும்.

xxx

மார்ச்  31 வெள்ளிக்கிழமை

எண்ணங்களை அடக்கும்போது விழிப்புணர்வு தேவை. இல்லையேல் தூக்கம் உண்டாகும் .

Xxx

பயன்படுத்திய நூல்- ரமணரின் தெய்வ வாக்கு, தொகுப்பு ஏ ஆர் நடராசன், தமிழாக்கம், பிரணாதார்த் திஹரன்

Xxx subham xxx

Tags- மார்ச் 2023, காலண்டர், நற்சிந்தனை, ரமண மகரிஷி , பொன்மொழிகள்

பார்ப்பதெல்லாம் நிஜமல்ல! – 1 (Post no.11,768)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,768

Date uploaded in London –   4 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பார்ப்பதெல்லாம் நிஜமல்ல! – 1

ச.நாகராஜன்

பார்ப்பதெல்லாம் நிஜமல்ல என்று நமது பாரத தேச மஹான்கள் கூறினால் பகுத்தறிவுவாதிகள் சிரிப்பார்கள்!

கண்ணெதிரே தோன்றுவதெல்லாம், ஐம்புலன்களால் உணர்வதெல்லாம் பொய் என்று சொல்பவர்கள் பைத்தியக்காரர்கள் என்று சொல்வார்கள் இதே பகுத்தறிவுவாதிகள்.

சரி, அறிவியலுக்குள்ளேயே புகுவோம்.

பல நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு பொருளின் எடை எப்போதும் எந்த இடத்திலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் என்று அனைவரும் எண்ணி வந்தனர்.

சர் ஐஸக் நியூட்டன் வந்தார். பிரபல விஞ்ஞானியாகத் திகழ்ந்தார். பல ஆய்வுகளை நடத்தினார். ஆப்பிள் மரத்தின் மேலிருந்து ஒரு ஆப்பிள் கீழே விழுந்தது.

சிந்திக்க ஆரம்பித்தார். புவி ஈர்ப்பு விசை பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு பொருளின் எடை கடல் மட்டத்தில் இருப்பதை விட மலை மீது குறைவாக இருக்கும்.

உயரத்தில் ஏற ஏற எடை குறையும்; இதற்குக் காரணம் புவி ஈர்ப்பு விசை என்றார்.

அனைவரும் அளந்து பார்த்தனர்; அதில் இருக்கும் உண்மையைக் கண்டு மலைத்தனர்.

எடை என்பதானது புவி ஈர்ப்பு விசையின் சக்தி ஒரு பொருளின் மீது பட்டு அதை நெருக்கும் போது ஏற்படுவது என்பது தெரிய வந்தது.

உடனே எடை என்பதோடு மாஸ் (Mass) எனப்படும் பொருள்திணிவு அல்லது பொருண்மை என்ற சொல் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.

உயரத்தில் ஏற ஏற எடை குறையலாம், மாறலாம். ஆனால் ஒரு பொருளின் பொருண்மை அதாவது Mass எப்போதுமே மாறாது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது நிலையானது என்று சொல்லப்பட்டது.

இந்தக் கொள்கையை அனைவரும் நம்ப ஆரம்பித்தனர். அதை அப்படியே கடைப்பிடித்தும் வந்தனர்.

அப்புறம் ஐன்ஸ்டீன் வந்தார். புதிய கொள்கையான ரிலேடிவிடி என்னும் ஒப்புமத் தத்துவத்தை உலகின் முன் வைத்தார். பொருண்மை அல்லது பொருள்திணிவு அல்லது மாஸ் என்பது எப்போதும் நிலையானது என்று கருதப்பட்டு வந்ததைத் தன் கொள்கை மூலம் உடைத்தார்; நிராகரித்தார்.

அவர் கூறினார் : “ஒரு பொருளின் பொருண்மை (Mass) என்பது எப்போதுமே நிலையானது என்று கூறுவது தவறு. அது வேகத்தைப் பொறுத்து மாறும்”.

பொருண்மை வேகத்தைப் பொறுத்து மாறும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார். ஒரு பொருளின் பொருண்மை ஒளியின் வேகத்திற்கு நெருங்க நெருங்க அதன் அளவு பெரிதாகிக் கொண்டே போகும் என்றார் அவர்.

ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 1,86,000 மைல்கள்.

ஒரு பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை அடையும் போது அதன் எடையானது எல்லையற்ற அளவைக் கொண்டிருக்கும். அதுமட்டுமல்லாமல் அதன் மீது எல்லையற்ற விசையின் தாக்கம் இருப்பதால் அதை விட திடமான ஒன்று ஒளியின் வேகத்தை விஞ்ச முடியாது. (When it reaches the speed of light its mass becomes infinite and as it would take an infinite force to accelerate an infinite mass then nothing solid can exceed the speed of light.)

பொருண்மை முன்னாலேயே எடையை விட முக்கியமானதாக ஆகி இருந்தது.

இந்த புதிய கொள்கையினால் வேகம் என்பது பொருண்மையை விட முக்கியமானதாக ஆனது.

இது மட்டுமல்லாமல், ஐன்ஸ்டீன் இன்னொரு அதிசயிக்கத் தக்க விஷயத்தையும் கூறினார். ஒரு பொருளானது ஒளியின் வேகத்தை எட்டும் போது காலமானது ‘ஸ்லோ’. (Slow) மெதுவாகிறது.

எடுத்துக்காட்டாக விண்வெளியில் பயணம் செய்யும் ஒரு விண்வெளி வீரர் சந்திரனுக்குச் சென்று திரும்பி பூமிக்கு வந்தால் அவர் விநாடியில் ஒரு சிறிய பங்கு பூமியில் வாழ்பவரை விடக் குறைந்த வயது உடையவராக ஆகிறார்.

இதையே சற்று அதிகமாக்கிப் பார்ப்போம். ஒரு விண்வெளி வீரர் விண்வெளியில் ஒளியின் வேகத்தில் ஐந்து வருடங்கள் பயணம் செய்து பின்னர் பூமிக்கு அதே வேகத்தில் திரும்பி வந்தால் அவர் பத்து வருடம் வயதில் கூடுதலாக ஆகி இருப்பார்; அதே சமயம் பூமியில் வாழ்பவர்கள் சுமார் 50 முதல் 100 வருடங்கள் கூடுதல் வயது ஆகி இருப்பர்.

ஆகவே ஐன்ஸ்டீனின் தத்துவத்தின் படி வேகம் என்பது மிகவும் முக்கியம் என்று ஆனது. பொருண்மையும் காலமும் வேகத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது உண்மையானது.

ஆக உலகில் நாம் காண்பதெல்லாம் பார்ப்பது போல இருப்பதில்லை என்பது தெரிய வருகிறது.

ஆம் பார்ப்பதெல்லாம் நிஜமல்ல!

விஞ்ஞானம் நாளுக்கு நாள் புதுமைகளைக் கண்டுபிடித்துச் சொல்கிறது; பழைய கண்டுபிடிப்புகளில் தவறு இருந்தால் அதையும் சுட்டிக் காட்டுகிறது!

நியூட்டனையும் ஐன்ஸ்டீனையும் ஒப்பிட்டு ஒரு வேடிக்கையான ஒப்புமை கூட ஒன்று உண்டு.

Two Lines in Two Centuries என்ற தலைப்பிட்டு தரப்பட்ட அந்த ஒப்புமை இது தான்:

Nature and Nature’s laws lay hid in night                         God said, Let Newton be, and all was light

–    Alexander Pope in the Eighteenth Century

It did not last. The Devil, howling Ho!                              Let Einstein be, restored the status Quo.

–    J.C. Squire in the Twentieth Century

இதை Arthur Mee தொகுத்த One Thousand Famous Things நூலில் காணலாம்.

***      தொடரும்

Golden Sayings from Ramana Maharishi; March 2023 Calendar ( Post No.11,767)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,767

Date uploaded in London – –  3 MARCH 2023                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

March  2023 Good Thoughts Calendar

This month Our Good Thoughts Calendar contains 31 quotations from Bhagavan Ramana Maharishi’s talks and writings

Festival Days- March 6- Masi Makam; 8-Holi; 15- Kaaradaiyaan Nonbu; 22- Ugadhi; Telungu New Year; 30 – Sri Rama Navami

Full Moon Day -7; New Moon Day – 21; Ekadasi Fasting Days – 3, 18

Auspicious Days- 9, 10, 13, 17, 23, 27

xxx

March 1 Wednesday

Happiness

All beings desire happiness always, happiness without a tinge of sorrow. At the same time everybody loves himself best. The cause for love is only happiness. So that happiness must lie within oneself.

Xxxx

March 2 Thursday 

That happiness is daily experienced by everyone in sleep when there is no mind. To attain that natural happiness one must know oneself. For that self enquiry,Who am I ? Is the chief means.

Xxxx

March 3 Friday 

There is no happiness in worldly objects. Because of our ignorance we imagine we derive happiness from them.

Xxxx

March 4 Saturday

 Everyone desires to sleep soundly. The conclusion therefore is that happiness is inherent in man and not due to external causes.

Xxxx

March 5 Sunday

Contact with Jnanis is good. They will work through silence.

Xxxx

March 6 Monday

 A guru is not the physical form . Hence his contact remains even after the physical form of the Guru vanishes.

Xxxx

March 7 Tuesday

 No one can be out of sight of the Supreme Presence. Since you identify one body with Bhagavan and another body with yourself, you find two separate entities and speak of going away from here.

Xxxx

 March 8 Wednesday

No thought will go in vain. Every thought will produce its effect sometime or other.

Xxxx

 March 9 Thursday

 Some have maintained that the body can be made immortal and they give recipes, medical or other for perfecting this body and making it defy death. But all people, after writing long treatises on the indestructibility of the body and keep it alive for ever, pass away one day

Xxxx

March 10 Friday

Name of god and god are not different.

Xxxx

March 11 Saturday

 In the name Rama , Ra stands for the self and ma for the ego. As one goes on repeating Rama, Rama, the ma disappears, getting merged in the Ra and then Ra alone remains . In that state there is no conscious effort at dhyana, but dhyana is always there, for dhyanais our real nature.

Xxxx

March 12 Sunday 

Avoid desire and aversion. Do not engage the mind much in the affairs of the world. As far as possible do not get entangled in the affairs of others. Giving to others is is really giving to oneself. Of one knows this truth, would one ever remain without giving?

Xxxx

March 13 Monday

If ego rises, all will rise. If ego merges, all will merge. The more we are humble, the better it is for us.

Xxxx

March 14 Tuesday

 The best and most potent diksha ( initiation) is by silence, which was practised by Lord Dakshinamurti. Those y touch, look, etc., are of a lower order. Mouna can change all hearts.

Xxxx

March 15 Wednesday

 The sun illumines the universe,whereas the Sun of Arunachalais so dazzling, that in It the universe is not seen; there remains only an unbroken brilliance.

Xxxx

 March 16 Thursday

 It is not true that birth as a man necessarily the highest, that one must attain Self Realizatdion while only being a man. Even an animal cal attain Self Realisation.

Xxxx

March 17 Friday

 There is no need for anyone to start reforming the country or the nation before reforming himself. Ea h man’s first duty is to realise his true nature. If after doing this he feels like reforming the country or nation, by all means let him take up such reform.

Xxxx

March 18 Saturday

 Swami Ram Tirtha advertised: Wanter Reformers- but reformers who will reform themselves first.

Xxxx

March 19 Sunday

 No two persons in the world can be alike or can act alike. External differences are bound to persist, however hard we may try to eliminate them. The only solution is for each man to realise his True Nature .

Xxxx

March 20 Monday

From silence came thought, from thought the ego, from ego speech. So, if speech is effective, how much more so must be it’s source?

Xxxx

March 21 Tuesday

Karpura arathi is symbolic of burning away the mind by the light of illumination. Vibhuti is Siva/ Absolute Being and Kumkum is Sakti/ consciousness.

Xxxx

March 22 Wednesday

 If we concentrate on any thought and go to sleep in that state, immediately on waking up the same thought will continue in our minds. People who are given chloroform are asked to count one, two etc., A man who goes under after saying six, , for instance, will, when he comes round again, start saying seven, eight etc.

Xxxx

March 23 Thursday

 No want is the greatest bliss. It can be realised only by experience. Even an emperor is so much for a man with no wants.

Xxxx

 March 24 Friday 

God illumines the mind and shines within it. One cannot know God by means of the mind. One can but turn the mind inwards and merge it in God.

Xxxx

March 25 Saturday

 For all thoughts the source is the I thought. The mind will merge only by Self enquiry. Who am I ? The thought Who am I ?will destroy all other thoughts and finally kill itself also.

Xxxx

March 26 Sunday

 What is Gayatri ? It really means

Let me concentrate on That which illumines all.

Xxxxx

March 27 Monday

 I have not said that Guru is not necessary. But a Guru need not always be in human form.

One can go to another Guru after one’s Guru passes away. But after all ,Gurus are one, as none of them are the form. Mental contact is always  the best.

Xxxx

March 28 Tuesday

A Jnani has attained liberation/ Mukti even while alive, hee and now. I is immaterial to Him as to how, where and when he leave the body. Some Jnanis may appear to suffer, others may be in Samadhi, some others may disappear from sight before death. But that makes no difference to their Jnana.

Xxxx

March 29 Wednesday

Sat sangh means association with Sat or Reality. One who knows or has realised Sat is also regarded as Sat. such association is absolutely necessary for all. Shankara has said,

In all the three worlds there is  no boat like Sat sangh to carry one safely across the ocean of births and deaths.

Xxxx

March 30 Thursday

 In the centre of the cavity of the heart, the sole Brahman shines by itself as the Atman (Self) in the feeling of I, I. Reach the Heart by diving within yourself , by control of breath or with thought concentrated on the quest of the self. You will thus get fixed in the Self.

Xxxx

 March 31 Friday 

Free will and destiny are ever existent. Destiny is the result of past action.it concerns the body.  Let the body act as may suit it.  Why are you concerned about it? Why do you pay attention to it? Freewill and setiny last as long as the body lasts. But Jnana transcends both.

Xxxx subham xxxxx

 tags- March 2023, Calendar, Ramana Maharishi, Golden sayings

இருபது நாட்களில் 40++ கோவில்கள் , ஆஸ்ரமங்களில் தரிசனம் (Post No.11,766)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,766

Date uploaded in London – –  3 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பிப்ரவரி 10 ஆம்  தேதி (2023) லண்டனிலிருந்து சென்னைக்குச் சென்றேன்  நேற்று மார்ச் 2ம் தேதி லண்டனுக்குத் திரும்பினேன் . சுமார் 20 நாட்களில் நாற்பது +++ கோவில்கள், ஆஸ்ரமங்கள் , அதிஷ்டானங்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்து.

xxx

நான் சென்ற இடங்கள் :-

12-2-2023 வைத்தீஸ்வரன் கோவில் (இரவு தங்கினோம்; 13-ம் தேதியும் சுவாமி தரிசனம் செய்தோம் )

xxxx

15–2-2023  காஞ்சீபுரம்  காமாட்சி அம்மன் கோவில் ( பலமுறை தரிசித்த புகழ்மிகு கோவில்),

காஞ்சீ மடத்தில் மஹா சுவாமிகள் அதிஷ்டானம்

ஓரிருக்கையில் காஞ்சீ மஹா சுவாமிகள் மணி மண்டபம்.

காமாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ள வைணவ திவ்ய தேசம் –திருக்கள்வனூர்

16-2-23 – சென்னை சேலையூரில் உள்ள கந்தாஸ்ரமம் (புவனேஸ்வரி, மஹா மேரு, பிரத்யங்கரா தேவி , சரபேசர் , சுவாமி சாந்தானந்தா சிலை

18-2-23 சிவராத்திரி அன்று இரவில் சென்னை கே கே நகர் பிள்ளையார் கோவிலில் சிவனுக்கு பால், தேன் அபிஷேகம்

xxxx

19-2-23 கும்ப கோணம்

ஆதி கும்பேஸ்வரர் கோவில் , மகா மக குளம்

கும்ப முனி சந்நிதி

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் சந்நிதி

நாகேஸ்வரர் கோவில்

சக்ரபாணி கோவில்

சாரங்கபாணி கோவில்

ராமசுவாமி கோவில்

கரும்பாயிரம் பிள்ளையார் கோவில்

xxxx

20-2-2023

பட்டீஸ்வரம் சிவன் கோவில் , துர்கா கோவில்

திருவலஞ்சுழி பிள்ளையார் கோவில்

கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானம், ஆஞ்சனேயர் கோவில்

கோவிந்தபுரம் விட்டல் மந்திர் , ஆயிரம் பசுக்களை உடைய கோசாலா

காஞ்சி மஹாசுவாமிகள் மணி மண்டபம்

திருமீஞ்சூர் லலிதாம்பிகை கோவில்

திருபாம்புரம் கோவில் (ராகு-கேது தலம்)

திருவிடை மருதூர் கோவில்

xxxx

21-2-2023

திரு நாகேச்வரம் கோவில் (ராகு தலம்)

ஒப்பிலியப்பன் கோவில்

நாச்சியார் கோவில்

திருச்சேறை கோவில் (சிவன், பெருமாள் கோவில்கள்)

திருநறையூர் கோவில்

திருவிசைநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் வீடு, கிணறு

திருமங்கலக்குடி கோவில்

சூரியனார் கோவில் ( நவக்கிரக சந்நிதிகள் )

கஞ்சனூர் சுக்கிரன் கோவில்

ஸ்ரீவத்சம் முதியோர் குடியிருப்பில் உள்ள 2 கோவில்கள்

xxxx

22-2-23

பரிக்கல் நரசிம்மர் கோவில்

xxxx

24-2-23

சிறுவாபுரி பால சுப்ரமண்ய சுவாமி கோவில்

பெரிய பாளையம் பவானி அம்மன் கோவில்

27-2-2023

திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோவில்

ரமணாஸ்ரமம்

சேஷாத்ரி  சுவாமிகள் ஆஸ்ரமம்

அருணகிரி நாதர் முக்தி பெற்ற இடம்

Xxxx

முக்கியக் கோவில்கள் பற்றித் தனித்தனியே கட்டுரைகள் எழுதுவேன்..

 —-subham—

tags-இருபது நாட்கள் , ஆஸ்ரமங்கள், 40 கோவில்கள் ,  தரிசனம்

விடக் கூடாத மூன்று விஷயங்கள்! (Post No.11,765)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,765

Date uploaded in London –   3 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

விடக் கூடாத மூன்று விஷயங்கள்!

ச.நாகராஜன்

விடக்கூடாதவை மூன்று!

மூன்று காரியங்கள் செய்வதை ஒரு போதும் விடக்கூடாது.

அவையாவன:

1) யாகம் 2) தானம் 3) தபஸ்

யாகத்தைச் செய்வதை நிறுத்தாதே.

தானம் கொடுப்பதை நிறுத்தாதே.

தவம் செய்வதை நிறுத்தாதே.

பகவத் கீதையின் 18ஆம் அத்தியாயமான மோக்ஷசந்யாஸ யோகம் இதைத் தெளிவாகக் கூறுகிறது.

யக்ஞ தான தப: கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் |

Actions based upon sacrifice, charity, and penance should never be abandoned; they must certainly be performed. Indeed, acts of sacrifice, charity, and penance are purifying even for those who are wise.

ஆகமங்கள் மூன்று!

மூன்று ஆகமங்கள் நம்மிடம் உள்ளன.

1) வைஷ்ணவாகமம் 2) சிவாகமம் 3) சாக்தாகமம்

கவிதைக்குத் தேவையான மூன்று!

ஒரு நல்ல கவிதைக்குத் தேவையானவை மூன்று குணங்கள்.

1) மாதுர்யம் – இனிமை

2) ஓஜஸ் – கம்பீரம், பிரம்மாண்டம்

3) ப்ரஸாதம் –  தெளிவு

பண்டிதருக்குத் தேவையான மூன்று குணங்கள்!

ஒரு நல்ல பண்டிதருக்கு மூன்று குணங்கள் இன்றியமையாதவை.

1) க்ரந்தார்த்த பரிஞானம் – நூலைப் பற்றிய முழு அறிவு தேவை

2) தாத்பர்யார்த்த நிரூபணம் – நூலில் சொல்லப்பட்டதை நிரூபிக்கும் திறமை வேண்டும்.

3) ஆத்யந்தமத்ய வ்யாக்யானசக்தி –  முழு நூலையும் திறம்பட விளக்கும் சக்தி

க்ரந்தார்தஸ்ய பரிஞானம் தாத்பர்யார்த்தநிரூபணம் |

ஆத்யந்தமத்ய வ்யாக்யானசக்தி: சாஸ்த்ரவிதோ குணா: ||

கிடைத்தற்கரிய மூன்று பேறுகள்!

மூன்று பேறுகள் கிடைப்பதற்கு தெய்வ அனுக்ரஹம் வேண்டும்.

அவையாவன:

1) மனுஷ்யத்வம் – மனிதப் பிறவி

2) முமுக்ஷத்வம்

3) மஹாபுருஷ சம்சர்கம் – பெரியோரின் தொடர்பு

இப்படி விவேக சூடாமணியில் ஆதி சங்கரர் அருளியிருக்கிறார்

துர்லபம் த்ரயமேவைத்தைவானுக்ர: ஹேதுகம் |

மனுஷ்யத்வம் முமுக்ஷத்வம் மஹாபுருஷ சம்ஸ்ரய: ||

 மூன்று ரத்னங்கள்!

மஹாமாயாவின் மூன்று ரத்தினங்கள் என்று சொல்லப்படுபவர்கள் இதோ:

1) சிவன் 2) சக்தி 3) விஷ்ணு.

இவர்கள் ‘ரத்ன த்ரி’ அல்லது ‘த்ரி ரத்ன’ என்று சொல்லப்படுகின்றனர்.

வீரர்கள் மூவர்!

வீரர்கள் மூன்று வகை உண்டு

1) ரண வீர் (போர்க்களத்தில் சண்டையிடுபவர்)

2) வித்யா வீர் (கல்வியில் சிறந்து விளங்குபவர்)

3) தான வீர் (தானங்களில் சிறந்து விளங்குபவர்)

தூரத்திலிருந்து சந்தோஷப்பட மூன்று!

தூரத்திலிருந்து சந்தோஷம் அடைய உள்ளவை மூன்று.

1) பர்வதம் – மலை

2) முகமண்டன வேஷ்யா – முகப்பூச்சு அலங்காரம் செய்து கொண்டவள்

3) யுத்தாவர்தா – யுத்தம் பற்றிய செய்தி

மலையை எங்கிருந்து பார்த்தாலும் ரம்யமே.

அலங்காரம் செய்து கொண்ட வனிதை காண்பதற்கு மகிழ்ச்சிக்கு அளிப்பவள்.

யுத்தம் பற்றிய சுவாரஸ்யமான செய்தி கேட்பதற்கு சுவை தான் ( நாம் கலந்து கொள்ளாமல் இருந்தோமானால் – அல்லது நம் சுற்றமும் நட்பும் பாதிக்கப்படவில்லை என்றால்!)

தூரஸ்தா: பர்வதா ரம்யா” வேஷ்யா ச முகமண்டனே |

யுத்தஸ்ய வார்தா ச த்ரீணி ரம்யாணி தூரத: |

 இப்படி சுபாஷித ரத்ன பாண்டாகாரத்தில் உள்ள சுபாஷித ஸ்லோகம் கூறுகிறது.

                           சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 158/218

***

SEE YOU ALL IN A FEW WEEKS

—subham—

Quotations from Ayodhya Kanda (Post No.11,764)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,764

Date uploaded in London – –  10 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Ayodhya Kanda—Valmiki Ramayana

Oratorical Skills

नाऽऽश्रेयसि रतो विद्वान्नविरुद्धकथारुचिः।
उत्तरोत्तरयुक्तौ च वक्ता वाचस्पतिर्यथा।।2.1.17।।


अश्रेयसि pursuits not conducive to one’s welfare, रतः न not interested, विद्वान् learned, विरुद्धकथारुचिः न not interested in speaking against others, उत्तरोत्तरयुक्तौ in debates, वाचस्पति: यथा like Brihaspati, वक्ता an orator


A learned man, he evinced no interest in pursuits that did not contribute to one’s welfare or had he any liking for speaking against others. But in debates his oratorical flourish was comparable to Brihaspati’s.

Xxxx

Similes – Yama, Indra, Brihaspati

यमशक्रसमो वीर्ये बृहस्पतिसमो मतौ।।2.1.38।।

महीधरसमो धृत्यां मत्तश्च गुणवत्तरः।


वीर्ये in prowess, यमशक्रसमः equal to Yama and Indra, मतौ in wisdom, बृहस्पति समः equal to Brihaspati, धृत्याम् in firmness, महीधरसमः equal to a mountain, मत्तः च than me also, गुणवत्तरः a man of greater virtues.


‘In prowess he is equal to Yama and Indra,in wisdom to Brihaspati and in firmness to a mountain and in virtues greater than me’.

Xxxx

Even Villagers ! Grass Root Democracy!!

नानानगरवास्तव्यान्पृथग्जानपदानपि।।2.1.45।।

समानिनाय मेदिन्याः प्रधानान्पृथिवीपतीन्।
 


नानानगरवास्तव्यान् residents of various cities, जानपदानपि villagers also, मेदिन्याः of this earth, प्रधानान् important persons exercising authority, पृथिवीपतीन् kings, पृथक् separately, समानिनाय summoned.


He summoned individually kings and all important citizens residing in various cities and villages of this earth.

Xxxx

Dasaratha’s Voice

दुन्दुभिस्वनकल्पेन गम्भीरेणानुनादिना।

स्वरेण महता राजा जीमूत इव नादयन्।।2.2.2।।

राजलक्षणयुक्तेन कान्तेनानुपमेन च।

उवाच रसयुक्तेन स्वरेण नृपतिर्नृपान्।।2.2.3।।


नृपति: lord of men, राजा king (Dasaratha), दुन्दुभिस्वनकल्पेन resonant as the sound of a kettledrum, गम्भीरेण with a deep (voice), अनुनादिना echoing, महता great, स्वरेण with voice, जीमूत: इव like the cloud, नादयन् thundering, राजलक्षणयुक्तेन having traits of royalty, कान्तेन
with an attractive voice, अनुपमेन च and with an incomparable, रसयुक्तेन delightful, स्वरेण with voice, नृपान् addressing kings, उवाच said.


Lord of men (king Dasaratha) addressed the feudatory kings with words deep, resonant, loud like the kettledrum or the rumbling cloud, in a delightful, incomparable and attractive voice that carried all the dignity of royalty:

Xxx

Democratic Consultation

यदिदं मेऽनुरूपार्थं मया साधु सुमन्त्रितम्।

भवन्तो मेऽनुमन्यन्तां कथं वा करवाण्यहम्।।2.2.15।।


मया by me, सुमन्त्रितम् well thoughtover, इदम् this word, साधु proper, मे my, अनुरूपार्थं यदि if worthy of me, भवन्त: you, मे to me, अनुमन्यन्ताम् your consent shall be given, अहम् I, कथं वा how else, करवाणि I shall do?


Although it (this decision) is personally favourable to me and I have decided after seeking good counsel, you should also give me your consent and tell me what I should do.

Xxx

Even Asuras were invited

बलमारोग्यमायुश्च रामस्य विदितात्मनः।

देवासुरमनुष्येषु सगन्धर्वोरगेषु च।।2.2.50।।

आशंसते जनस्सर्वो राष्ट्रे पुरवरे तथा।

आभ्यन्तरश्च बाह्यश्च पौरजानपदो जनः।।2.2.51।।


सगन्धर्वोरगेषु along with gandharvas, uragas, देवासुरमनुष्येषु among devas, asuras and men, विदितात्मन: wellknown, रामस्य Rama’s, बलम् strength, आरोग्यम् health, आयुश्च long life, राष्ट्रे in the country, तथा also, पुरवरे in the foremost of towns, सर्व: जन: all men, आभ्यन्तर: च in the neighbourhood, बाह्यश्च or distant, पौरजानपद: जन: inhabitants of towns and
villages, आशंसते are wishing for.


Gandharvas, uragas, devas, asuras, the inhabitants of towns and villages, all men living in neighbouring or distant regions are wish the illustrious Rama strength, health and long life.

Xxxx

Folded Hands- Namaste practised until Today-  After COVID, world follows Hindus

[Dasaratha requests Vasistha and Vamadeva to make preparations for installation of Rama– Orders for procurement of necessary materials–Sumantra brings Rama to the assembly–Dasaratha counsels Rama.]

तेषामञ्जलिपद्मानि प्रगृहीतानि सर्वशः।

प्रतिगृह्याब्रवीद्राजा तेभ्यः प्रियहितं वचः।।2.3.1।।


राजा king, सर्वशः in all ways, प्रगृहीतानि held out, तेषाम् their, अञ्जलिपद्मानि palms folded like lotuses, प्रतिगृह्य having received, तेभ्यः for them, प्रियहितम् pleasing and beneficial, वचः words, अब्रवीत् spoke.


The citizens held out their palms folded like lotuses in reverence and urged king Dasaratha in all possible ways (to coronate Rama). He reciprocated their respect with words preasing and beneficial to them:

Xxxx

Bull with Gold Plated Horns & Tiger Skin

चतुरङ्गबलं चैव गजं च शुभलक्षणम्।

चामरव्यजने श्वेते ध्वजं छत्रं च पाण्डुरम्।।2.3.10।।

शतं च शातकुम्भानां कुम्भानाग्निवर्चसाम्।

हिरण्यशृङ्गमृषभं समग्रं व्याघ्रचर्म च।।2.3.11।।

उपस्थापयत प्रातरग्न्यगारं महीपतेः।


सुवर्णादीनि gold and other metals, रत्नानि gems, बलीन् offerings, सर्वौषधीः अपि herbs also, शुक्लमाल्यान् च garlands of white flowers, लाजान् च roasted corn, पृथक् separately, मधुसर्पिषी honey and clarified butter, अहतानि वासांसि च fresh clothes, रथम् chariot, सर्वायुधान्यपि weapons of every kind, चतुरङ्गबलं चैव army of four divisions also, शुभलक्षणम् possessing auspicious qualities, गजं च elephant, श्वेते white, चामरव्यजने fans made of Yak’s hair, ध्वजम् a standard, पाण्डुरम् white, छत्रं च parasol, शातकुम्भानाम् golden, अग्निवर्चसाम् shining like fire, कुम्भानाम् of vessels, शतं च a hundred, हिरण्यशृङ्गम् goldplated horns, ऋषभम् a bull, समग्रम् complete, व्याघ्रचर्म च tiger skin, प्रातः early morning, महीपतेः king’s, अग्न्यगारे in the place set aside for sacred fire, उपस्थापयत assemble.


By tomorrow early morning arrange in the place set aside for sacred fire in the king’s palace gold and other metals, gems, articles of worship, also herbs, garlands. of white flowers, roasted corn, honey and clarified butter in separate containers, fresh clothes, chariot, weapons of every kind, army of four divisions, an elephant possessing auspicious marks, white fans made of Yak’s hair, a standard, white parasol, a hundred golden vessels shining like fire, a bull with gold plated horns and a tiger skin.

Xxxx

Brahmin Food- all Vegetarian

सत्कृत्य द्विजमुख्यानां श्वःप्रभाते प्रदीयताम्।
घृतं दधि च लाजाश्च दक्षिणाश्चापि पुष्कलाः।।2.3.15।।


श्वः tomorrow, प्रभाते early morning, द्विजमुख्यानाम् to the best of brahmins, सत्कृत्य having honoured them, प्रदीयताम् give, घृतम् clarified butter, दधि च curd also, लाजाः च roasted corn, पुष्कलाः in abundance, दक्षिणाश्चापि also gifts (be given).


At dawn tomorrow the best of brahmins be honoured with cooked rice clarified butter, curd, roasted corn and gifts in abundance.

Xxxx

Swasti Vachana in the Morning

सूर्येऽभ्युदितमात्रे श्वो भविता स्वस्तिवाचनम्।

ब्राह्मणाश्च निमन्त्र्यन्तां कल्प्यन्तामासनानि च।।2.3.16।।


श्वः tomorrow, सूर्ये when the Sun, अभ्युदितमात्रे as soon as he rises, स्वस्तिवाचनम् swastivachana (a benedictory utterance), भविता should be made, ब्राह्मणाः च brahmins, निमन्त्र्यन्ताम् be invited, आसनानि च seats also, कल्प्यन्ताम् be arranged.


As soon as the Sun rises tomorrow, arrangements be made for Swastivachana (a benedictory utterance). Brahmins be invited and seats provided to them.

Xxx

Even Foreign Mlechas were there!

अथ तत्र समासीना स्तदा दशरथं नृपम्।।2.3.24।।

प्राच्योदीच्याः प्रतीच्याश्च दाक्षिणात्याश्च भूमिपाः।

म्लेच्छाश्चार्याश्च ये चान्ये वनशैलान्तवासिनः।।2.3.25।।

उपासाञ्चक्रिरे सर्वे तं देवा इव वासवम्।


अथ afterwards, प्राच्योदीच्याः relating to eastern and northern countries, प्रतीच्याः च relating to west, दाक्षिणात्याः च relating to south, भूमिपाः kings, म्लेच्छाः च foreign MLECHAs, आर्याः च Aryan, वने in forest, अन्ये other, ये whosoever, शैलान्तवासिनः inhabiting the mountains, सर्वे all, तदा then, तत्र there, समासीनाः had seated, तम् दशरथं नृपम् that king Dasaratha, देवाः devatas, वासवमिव like Indra, उपासाञ्चक्रिरे paid homage.


After Sumantra had gone, the kings from eastern, northern, western, southern Mlecha countries and Aryan countries, rulers from forests and mountains paid homage to king Dasaratha, as devatas do to Indra.

Xxx

Mount Kailash is mentioned by Valmiki in many slokas

स तं कैलासशृङ्गाभं प्रासादं नरपुङ्गवः।।2.3.31।।

आरुरोह नृपं द्रष्टुं सह सूतेन राघवः।


नरपुङ्गवः best among men, सः that, राघवः Rama, नृपम् the king, द्रष्टुम् to see, सूतेन सह accompanied by charioteer Sumantra, कैलासशृङ्गाभम् as lofty as the peak of Kailasa, तम्
प्रासादम् that palace, आरुरोह ascended.


Best among men, Rama accompanied by charioteer Sumantra ascended that palace that was lofty as the peak of Kailasa mountain in order to see the king.

Xxxx

Mount Meru Simile

तदासनवरं प्राप्य व्यदीपयत राघवः।।2.3.35।।

स्वयैव प्रभया मेरुमुदये विमलो रविः।


राघवः son of the Raghus (Rama), तत् आसनवरम् that lofty seat, प्राप्य having received, उदये in the morning, विमलः translucent, रविः sun, मेरुमिव like Meru (mountain), स्वया of his own, प्रभया with his rays, व्यदीपयत shone.


The lofty seat Rama occupied was illuminated by him resplendence like mount Meru in the translucent rays of the morning Sun.

तेन विभ्राजता तत्र सा सभाऽभिव्यरोचत।।2.3.36।।
विमलग्रहनक्षत्रा शारदी द्यौरिवेन्दुना।


तत्र there, विभ्राजता while illumining, तेन by Rama, सा सभा that assembly, विमलग्रहनक्षत्रा with clear planets and stars, शारदी autumnal, द्यौः sky, इन्दुना इव like moon, अभिव्यरोचत dazzled.


That assembly was illumined by (the presence of) Rama like the Moon dazzling the clear autumnal sky bespangled with sparkling planets and stars.

Xxx

Gold and Gems for Messengers

सा हिरण्यं च गाश्चैव रत्नानि विविधानि च।।2.3.47।।

व्यादिदेश प्रियाख्येभ्यः कौशल्या प्रमदोत्तमा।


प्रमदोत्तमा the foremost of women, सा कौशल्या that Kausalya, हिरण्यं च gold, गाः चैव and also cows, विविधानि various kinds of, रत्नानि च gems as well, प्रियाख्येभ्यः (सह) messengers of these good tidings, व्यादिदेश ordered.


The foremost of women, Kausalya ordered gifts of gold, cows and various kinds of gems to be given to the messengers who brought this good news.

Xxx

—subham–Tags- Ayodhya Kanda, Quotations, Valmiki, Ramayana, Mlecha, Asura

ஆக்சிஜன் Oxygen என்னும் உயிர்வளி- 2 (Post No.11,763)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,763

Date uploaded in London – –  10 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

ஆக்சிஜன் பற்றி மேலும் சுவையான செய்திகள் உண்டு.

வணிக ரீதியில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் அரைவாசி எஃகு  (Steel) தயாரிப்பிலும் , கால் வாசி ரசாயனத் தொழிற்சாலைகளிலும் (Chemical Industries) , மீதி மருத்துவ மனை, ராக்கெட் ஏவுதல், தண்ணீரை சுத்திகரித்தல் , உலோகங்களை வெட்டுதல் (Metal Cutting)  முதலியவற்றிலும் பயன்படுகிறது ரசாயன  தொழிற்சாலைகளில் இதனால் எத்திலீன் ஆக்ஸைடை உற்பத்தி செய்து அதன் மூலம் பாலியஸ்டர் பாட்டில்கள், துணிகள் வரை  ஏராளமான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன .

xxxx

ரசாயன குணங்கள்

குறியீடு – O

அணு எண் 8

கொதி நிலை – மைனஸ் 229 டிகிரி C

உ ருகு நிலை – மைனஸ் 183 டிகிரி C

xxx

பொருளாதார உபயோகம்

தொழிற்சாலைகளில்தான் அதிகம் இது பயன்படுகிறது.  ஆண்டுக்கு 10 கோடி டன் ஆக்சிஜனை காற்றிலிருந்தே கறந்துவிடுகிறார்கள் . காற்றினை மிகக்குளிர்ந்த நிலையில் திரவம் ஆக்கிவிட்டால். ஒரே கல்லில் இரண்டு  மாங்காய் அடிக்கலாம். முதலில் நைட்ரஜனை எடுத்துவிட்டால் பின்னர் ஆக்சிஜன் எஞ்சி நிற்கும். மருத்துவத்திலும் வெல்டிங்,  உலோகத்தை வெட்டும் தொழில்களிலும் பயன்படுத்த இதை சிலிண்டரில் வைத்திருப் பார்கள். பெரிய அளவு திரவ ஆக்சிஜன்,  பாதுகாப்பு  செய்யப்பட்ட  பெட்டகங்களில் வைக்கப்படும். ஒரு லிட்டர் திரவ ஆக்சிஜன் 840 லிட்டர் வாயுவை அளிக்கும்

காற்றிலிருந்து ஆக்சிஜன் எடுக்கவும் பலமுறைகள் இருக்கின்றன

நமது பூமியில் பூமியின் மேல் ஓட்டில் 47 சதவீதமும் காற்றில் 21 சதவீதமும் ஏனைய பகுதி கடல் நீர், தாதுப் பொருட்களிலும் (Minerals)  இருக்கிறது .

பெரும்பாலான தாதுப் பொருட்கள் ஆக்சைட் வடிவில் கிடைக்கின்றன. ஏதாவது ஒரு பொருளுடன் ஆக்சிஜன் கிரியையில் ஈடுபட்டால் அந்தப் பொருட்களின் ஆக்சைட் OXIDE உண்டாகும்.

ஆக்சிஜன் வாயுவுக்கு நிறமோ மணமோ கிடையாது. திரவம் ஆக்கினால் லேசான நீல நிற திரவம் ஆகிறது. அப்போது காந்த சக்தியும் ஏற்படும்  இது ஒரு வினோதமான குணம். 4 அபூர்வ வாயுக்களைத் தவிர மற்ற தனிமங்களுடன் செயல்பட்டு ஆக்சைட் உப்புக்களை உண்டாக்கும்; தண்ணீரில் கரையும்,

xxxx

வியப்பான ஐசடோப்புகள்

இதற்கு மூன்று ஐசடோப்புகள் ISOTOPES  இருக்கின்றன .

கடந்த காலத்தில் பூமியில் எத்தகைய வானிலை/ காலநிலை இருந்தது என்பதை அறிய இந்த  ஐசடோப்புகள் பயன்படுகின்றன. ஆக்சிஜன் 18, ஆக்சிஜன் 16 ஐசடோப்புகள் மூலம்  எந்தெந்தக் காலத்தில எவ்வாறான பருவ நிலை இருந்தது என்று அறிய முடிகிறது .

வியப்பான விஷயம் என்னவென்றால் பழங்கால  எலும்புக்கூடுகள் கிடைத்தால் அவற்றின் பற்களில் இருக்கும் ஆக்சிஜன் ஐசடோப்புகள் அ வர்கள் குளிர்ப்பிரதேசத்தில் வாழ்ந்தார்களா இல்லையா என்று காட்டிவிடும். பூமத்திய ரேகைக்கு அருகில் வசித்தால் அவர்களுக்கு பற்களில் ஆக்சிஜன் 18 அதிகம் இருக்கும்.

xxx

ஓசோன் மண்டலம்

நமது காற்று மண்டலத்தில் பல அடுக்குகள் உள்ளன. அங்கு ஓசோன் OZONE என்னும் வகை ஆக்சிஜன் இருக்கிறது இதை ஓ 3 என்று சொல்லுவார்கள். ஆக்சிஜனின் 3 அணுக்கள் V  வடிவத்தில் அமைந்திருக்கும். ஓஸோன் என்றால் மணம் / வாசனை என்று பொருள். முதலில் இதைக் கண்டுபிடித்தவர் இதை புது தனிமம் என்று கருதினார். பின்னர் இது ஆக்சிஜனின் மறு  வடிவம் என்று தெரிந்தது.இதற்கு காற்று மண்டலத்தில் இரண்டு பங்கு பணிகள் உண்டு. கீழ்மட்டத்தில் இது புறச் சூழலை கெடுக்கும் ஆனால் பூமிக்கு 20 முதல் 40 கிலோமீட்டர் உயரத்திற்கு வியாபித்திருக்கும் ஸ்ட்ராடோஸ்பியர் (Stratosphere) என்னும் மண்டலத்தில் இது பூமியைக் காக்கும் கேடயமாக செயல்படுகிறது. சூரியனிடமிருந்து வரும் புற  ஊதாக்கதிர்கள் (Ultra Violet Rays) மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அந்தக் கதிர்களை பூமிக்கு வரவொட்டாமல் வடிகட்டும் வேலையை ஓசோன் செய்கிறது.

நம் பயன்படுத்தும் ரெப்ரிஜிரேட்டர் என்னும் குளிர்ப்பதன பெட்டிகள், ஏரோ சால்கள் (aerosols) , பிளாஸ்டிக் போம் (Plastic Foam) – கள் ஆகியன இந்த ஓஸோன் மண்டலத்தைக் கரைத்து விடும் ரசாயனங்களைப்  (CFC = Chlorofluorocarbon) பயன்படுத்துவதால்  அண்மைக்காலத்தில் இந்த சாதனங்கள் வேறு விதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன .

இந்த வாயு, நீச்சல் குளம் முதலியவற்றை சுத்தப்படுத்தப் பயன்படுகிறது. இதை நீல நிற திரவமாகவோ, வயலெட் நிறக் கட்டியாகவோ குளிர வைக்கலாம். ஆனால் இரண்டும் பயங்கரமான (Explosives) வெடிப்பொருட்கள்

மனித குலம் ஓசோன் மண்டலத்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. அதைத் தேய்க்கும் (CFC) சாதனங்களை நாம் பயன்படுத்தக்கூடாது. இப்போது பல நாட்டு சட்டங்களே அத்தகைய ரசாயனங்களை  (CFC) பயன்படுத்த தடை விதித்துள்ளது நற்செய்தியாகும்

–சுபம்—

Tags-  ஓஸோன் ,ஐசடோப்புகள் , ஆக்சிஜன், CFC

மறுபிறவி எடுத்த ஒரு குழந்தையின் விசித்திரக் கதை! (Post No.11,762)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,762

Date uploaded in London –  10 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

மறுபிறவி எடுத்த ஒரு குழந்தையின் விசித்திரக் கதை!

ச.நாகராஜன் 

மறுபிறவி உண்டா, உண்டு என்றால் அதில் கர்ம பலன் எப்படி இருக்கும்? சென்ற ஜன்மத்தில் செய்த பாவ, புண்ணியம் இந்த ஜன்மத்தில் எப்படி வரும், வருமானால் அதற்கு ஆதாரங்கள் உண்டா?

பகுத்தறிவுவாதிகளின் கேள்விகள் பல.

இதற்கு ஆதாரபூர்வமாக எட்கர் கேஸ் (பிறப்பு 1877 மறைவு 3-1-1945) உள்ளிட்டோர் பதில் கூறியுள்ளனர்.

எட்கர் கேஸ் 2500 பேர்களைப் பற்றி கூறியுள்ளார். அவரது ‘ரீடிங்ஸ்’ எனப்படும் முந்தைய ஜன்மங்களைப் பற்றிய குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முற்பிறவிகளைப் பற்றிய அவர் கூற்று சரிதானா என்றும் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் மறுபிறப்பு உண்டு என்பதை உறுதி செய்த போது உலகமே வியந்தது.

இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் ஆங்காங்கே அவ்வப்பொழுது நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

அவற்றில் ஒன்று இது:

1908ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது.

பழைய கால பிரிட்டிஷ் இந்தியாவில் க்வாலியர் ராஜதானியில் காசிராம் என்று பெயர் கொண்ட காயஸ்த பிரிவைச் சேர்ந்த ஒருவர் நன்ஹுதா கிராமத்தில் பட்வாரி எனப்படும் தலைமைப் பொறுப்பை வகித்து வசித்து வந்தார்.

அவர் தாகூர் சோடி லால் என்பவரின் ஆவணத்தில் அவரது சொத்து பற்றிய தவறான பதிவுகளை இட்டு விடவே சோடி லாலின் சொத்துரிமை பாதிக்கப்பட்டது.

1908ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி தாகூர் பட்வாரியை ஓரிடத்தில் பிடித்துக் கொண்டார். அவரது வலது கையில் உள்ள விரல்களை வெட்டியதோடு துப்பாக்கியால் அவரை மார்பில் சுட்டார். பட்வாரி காசிராம் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

விரல்களை வெட்டும் போது, “இந்த விரல்கள் தானே தவறான பதிவை இட்டன?” என்று வேறு கேட்டு தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டார் தாகூர்.

சரியாக இரண்டு மாதங்கள் 25 நாட்கள் கழிந்தன.

கொலை நடந்த இடத்திலிருந்து 14 மைல்கள் தள்ளி இருந்த பிலாஸ்பூரில் மிஹிர் லாலா என்பவர் வசித்து வந்தார். அவருக்கு 1909 ஜனவரி மாதம் 31ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

பிறக்கும் போது துரதிர்ஷ்டவசமாக குழந்தையில் கட்டைவிரல் மற்ற குழந்தைகளுக்கு சாதாரணமாக இருப்பதில் கால் பங்கே இருந்தது.

வலது கையில் மற்ற விரல்கள் இல்லவே இல்லை.

மார்பில் துப்பாக்கி சூடுபட்ட குறி ஒன்று தென்பட்டது. அந்த இடத்தில் இருந்த எலும்புகள் வளைந்து உட்குவிந்து இருந்தன.

குழந்தைக்கு சுக்லால் என்று பெயரிடப்பட்டது. அது வளர்ந்தது. பேசும் பருவமும் வந்தது.

ஒரு நாள் பாதி சோகத்துடனும் பாதி வேடிக்கையாகவும் மிஹிர் லாலா தன் குழந்தை சுக்லாலைப் பார்த்து, “ கடவுள் உனக்கு விரல்களை வைக்க மறந்து விட்டானோ?” என்று கேட்டார்.

தந்தை ஆச்சரியப்படும் படி குழந்தை பேச ஆரம்பித்தது :” நன்ஹுதா கிராமத்தைச் சேர்ந்த சோடிலால் தாகூர் என்னை மார்பில் பார்த்து சுட்டார். எனது விரல்களை வேறு வெட்டினார். இந்த விரல்கள் தானே தவறான பதிவை இட்டன என்று வேறு கூறினார்” என்று குழந்தை பழைய கால சம்பவத்தின் முழுவிவரத்தையும் கூறியது.

மிஹிர்லாலா பிரமித்துப் போனார்.

குழந்தையின் பிறந்த தேதி தவறோ என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில் 1908 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி காசிராம் கொலையுண்டார். குழந்தையின் பிறந்த தேதியோ 1909 ஜனவரி 31 என்று தரப்பட்டிருக்கிறது.

பத்து மாதம் குழந்தை கருவில் வளர வேண்டும் என்ற கருத்தை எடுத்துக் கொண்டு பார்க்கையில், ஒரு ஜீவன் எப்படி இரு இடங்களில் இருக்க முடியும் என்ற குழப்பம் ஏற்படுகிறது.

ஒரு ஜீவன் ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருக்க முடியாது என்பதால் இந்த பிறந்த தேதி  இதை வெளியிட்ட தர்மராஜ்யா என்ற இதழின் 26-3-1936 தேதியிட்ட இதழில் தவறாகத் தரப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது.

இப்படி ஏராளமான சம்பவங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில் நடந்துள்ளன. அவை ஆவணங்களாகப் பதிவும் செய்யப்பட்டுள்ளன.

மறுஜன்மம் உண்மையே என்பதும் கர்ம பலன் அடுத்த ஜன்மங்களில் தொடரும் என்பதும் இதனால் உறுதிப்படுத்தப்படுகிறது.

***

Source Truth Weekly Vol 4 Issue 2  dated 24-4-1936 ; Reprinted in Truth Vol 76 Issue 46 dated 27-2-2009

நன்றி : ட்ரூத் (Truth)  ஆங்கில வார இதழ்

குறிப்பு : எட்கர் கேஸ் பற்றிய மேலதிக விவரங்களை நான் எழுதியுள்ள ‘விந்தை மனிதர்கள்! விந்தைப் பெண்மணிகள்!!’ என்ற நூலில் காணலாம்.

ஆக்சிஜன் Oxygen என்னும் உயிர்வளி- 1 (Post No.11761)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,761

Date uploaded in London – –  9 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இதுவரை பிரியாடிக் டேபிள் (Periodic Table) எனப்படும் மூலக அட்டவணையிலுள்ள 118 தனிமங்களில் 46 மூலகங்களின் (elements) சுவையான கதைகளைக் கண்டோம். இன்று 47ஆவது தனிமத்தைக் காண்போம்.

கோவிட் என்னும் சீன வைரஸ் பல லட்சம் உயிர்களைக் காவு கொள்ளும் முன்பு, ஆக்சிஜன் என்றால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே தெரியும். பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டவுடன் பட்டி தொட்டிகளிலும் கூட ஆக்சிஜன் பெயர் அடிபட ஆரம்பித்துவிட்டது. முன்னர் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர்களில் மட்டும் இருந்த ஆக்சிஜன்  சிலிண்டர் இப்போது பல வீடுகளிலும் இடத்தைப் பிடித்துவிட்டது. ஏன் ?

ஆக்சிஜன்

நாம் உயிர்வாழ ஒவ்வொரு வினாடியும் ஆக்சிஜனை சுவாசித்துக் கொன்டு இருக்கிறோம். பொதுவாக சித்தர் பாடல்களிலும் பக்திப்  பாடல்களிலும்  காற்று என்று குறிப்பிட்டாலும் காற்றில் பல வாயுக்கள் உண்டு. அதிலுள்ள ஆக்சிஜனைப் பிரித்து எடுத்து, ரத்தத்தை சுத்திகரிக்க நுரையீரலும்  இருதயமும் நமக்கு உ தவுகிறது . இந்த விதியைத் தலை கீழாகச் செய்கின்றன தாவரங்கள். நாம்  வெளியிடும் அசுத்தக் காற்றான  கார்பன் டை ஆக்ஸைடை Carbon Dioxide அவைகள் சுவாசித்து நமக்கு சுத்தமான ஆக்சிஜனைத் தருகிறது. கடவுளோ, இயற்கையோ செய்த அற்புதமான ஏற்பாடு இது.

ஆக்சிஜன் என்ற சொல்லுக்கு, கிரேக்க மொழியில் அமிலத்தை உண்டாக்கும் என்று பொருள். இந்த பிரபஞ்சத்தில் ஹீலியம், ஹைட்ரஜன் என்ற இரண்டு மூலகங்களுக்கு அடுத்தபடியாக காணப்படுவது ஆக்சிஜன் .

ஒவ்வொரு நட்சத்திரமும் ஹைட்ரஜனை எரித்து ஹீலியம் வாயுவை உண்டாக்கும். பின்னர் ஹீலியம் எரிந்து கருகி கார்பன் உண்டாகும் . பின்னர் அந்த கார்பன் எரிந்து ஆக்சிஜன் வாயுவை உண்டாக்கும். ஒரு நட்சத்திரம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது, அதன் உள்ளே எவ்வளவு வெப்பமுள்ளது என்பதைப் பொறுத்து ஆக்சிஜன் உற்பத்தியாகும் ; அதிக வெப்பம், அதிக ஆக்சிஜன் தரும் .

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் பூமியிதான் அதிகம் ஆக்சிஜன் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக செவ்வாய், சுக்கிரன் கிரகங்களில் மிகச் சிறிதளவு காணப்படுகிறது

நீரின்றி அமையாது உலகு; நீரின்றி அமையாது நமது உடலும் ; அந்தத் தண்ணீர் என்பது ஆக்சிஜன்—ஹைட்ரஜன் கூட்டுப்பொருள் . நமது ரத்தம், எலும்பு, திசு எல்லாவற்றிலும் ஆக்சிஜன் இருக்கிறது.

ஆக்சிஜன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஏனெனில் இது DNA டிஎன்ஏ முதலிய பொருள்களிலும் உளது. காற்று மண்டலத்தில் 17 சதவீதத்துக்குக் குறைந்தால் நம்மால் சுவாசிக்க முடியாது. 25 சதவீதத்துக்கு மேல் போனால் அருகிலுள்ள, எரியக்கூடிய பொருட்களை, எரித்துவிடும். முதல் முதலில் 1967 ஜனவரி 27ல் அமெரிக்கா மூன்று மனிதர்களை அப்பலோ விண் கலத்தில்  ஏற்றி  பூமிக்கு மேலே அனுப்பியது. அவர்கள் இருந்த கூட்டில் ஆக்சிஜன் .எரிந்து மூவரும் கருகி இறந்தார்கள்

அமெரிக்கா ஒரு ஆராய்ச்சி செய்தது. மனிதர்கள் நிலவு அல்லது செவ்வாய்க் கிரகத்தில் ஒரு BIO SPHERE பயோ   ஸ் பியர் கூண்டுக்குள் வசிக்க முடியுமா என்பது அந்த ஆய்வு. எட்டுப் பேர் அந்த கண்ணாடிக் கூண்டில் வசித்தனர். 30 டன் ஆக்சிஜன் .அதற்குள் செலுத்தப்பட்டது ; ஒரே மாதத்தில் அவர்களுக்கு மூச்சுத் திணறல் வந்தவுடன் வெளியே வந்தனர். விஞ்ஞானிகள் போட்ட கணக்கு தப்புக்கு கணக்கு. எப்படி ஆக்சிஜன் .மாயமாய் மறைந்தது என்பதை ஆராய்ந்தபோது அங்கே மண்ணிலுள்ள இரும்புச் சத்து ஆக்சிஜன் .வாயுவுடன் கூடி அதைக் கபளீகரம் செய்துவிட்டது!!

ஆக்சிஜன் வாயு நமது காற்று மண்டலத்தில் ஐந்தில் ஒரு பகுதிதான். இது தண்ணீரில் எளிதில் கரையக்கூடியதால் ஆறு, குளம், ஏரி , கடல் ஆகியவற்றிலும், நாம் உயிரினங்களைக் காண முடிகிறது .

xxxx

மருத்துவத்தில் ஆக்சிஜன்

மூளை செயல்பட ஆக்சிஜன் தேவை. ஆனால் துவக்க காலத்தில் எவ்வளவு ஆக்சிஜன் தேவை என்பது தெரியாததால் பலர் உயிரிழந்தனர். இப்போதெல்லாம்  நீருக்கு அடியில் செல்வோர் அணியும் முகமூடி, ஆஸ்பத்தியில் நோயாளிகள் அணியும் முகமூடி, குழந்தைகள் சிகிச்சைக்கான இன்குபேட்டர்கள் INCUBATORS  எல்லாவற்றிலும் சுமார் 30 சதவிகிதம் ஆக்சிஜன் கலந்த வாயு பயன்படுத்தப்படுகிறது.

xxxx

கண்டுபிடித்தது யார் ?

பலரும் இந்த வாயு குறித்து ஆராய்ச்சி செய்தனர். இப்ப்போது ஜோசப் ப்ரீஸ்ட்லி , கார்ல் வில்லியம் ஷீல், அந்தோணி லவாய்ச்சியர் ஆகிய மூவரும் இதைக் கண்டுபிடித்ததாக உலகம் ஒப்புக்கொள்கிறது . இவர்களுக்கு இடையே தொழில் முறை போட்டாபோட்டி, பொறாமை உண்டு. ஆகையால் ஒருவர் எழுதிய கடிதத்தை மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. பதில் போட்டால் யார் முதலில் சரியான விடை சொன்னார்கள் என்று தெரிந்துவிடுமே!!

லண்டனில் 2000 ஆவது ஆண்டில் ஒரு சுவையான நாடகம் மேடை ஏறியது. இம்மூவரில்  யார் உண்மையான கண்டுபிடிப்பாளர், அவர்க்கு நோபல் பரிசு கொடுப்போம் என்று அறிஞர் குழு விவாதிக்கும் நாடகம் அது

இதற்கு முன்னர் ஆக்சிஜன் பற்றி 1791-ல் ஒரு கவிதை வெளியானது . அது மற்றொரு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது . பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  லவாய்ஸியர் ஆக்சிஜன் என்று பெயர் சூட்டியது ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை அதற்கு அமிலம் உண்டாக்கும் பொருள் என்று அர்த்தம். ஆனால் எதிரும் புதிருமாக எல்லோரும் சூடாக விவாதித்த நேரத்தில் சார்ல்ஸ் டார்விவினின் தாத்தா எராஸ்மஸ் டார்வின் ஆக்சிஜன் கவிதையை பொடானிக் கார்ட்டன் BOTANIC GARDEN என்ற புஸ்தகத்தில் வெயிட்டவுடன் எல்லா விவாதங்களும் அடங்கின.

To be continued………………………………..

 tags- ஆக்சிஜன் , உயிர்வளி,